அத்தியாயம் – 5
பிரஜாபதி தட்சன் நாரதரைச் சபித்தல்
பதம் 6.5.1
ஸ்ரீ-சுக உவாச
தஸ்யாம் ஸ பாஞ்சஜன்யாம் வை விஷ்ணு-மாயோபப்ரும்ஹித:
ஹர்யஸ்வ-ஸம்க்ஞான் அயுதம் புத்ரான் அஜனயத் விபு:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தஸ்யாம்—அவளில்; ஸ:—பிரஜாபதி தட்சன்; பாஞ்சஜன்யாம்—பாஞ்ஜசனி என்ற அவரது மனைவி; வை—உண்மையில்; விஷ்ணு-மாயா-உபப்ரும்ஹித:—பகவான் விஷ்ணுவின் மாயாசக்தியால் திறமைசாலியாக மாற்றப்பட்ட; ஹர்யஸ்வ-ஸம்க்ஞான்—ஹர்யஸ்வர்கள் என்ற பெயருடைய; அயுதம்—பத்தாயிரம்; புத்ரான்—மகன்களை; அஜனயத்—பெற்றார்; விபு:—புத்திசாலி என்பதால்.
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பகவான் விஷ்ணுவின் மாயா சக்தியால் தூண்டப்பட்ட பிரஜாபதி தட்சன், பாஞ்சஜனியின் (அஸிக்னீ) கர்ப்பத்தில் பத்தாயிரம் மகன்களைப் பெற்றார். அரசே, இம்மகன்கள் ஹர்யஸ்வர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
பதம் 6.5.2
அப்ருதக்-தர்ம-சீலாஸ் தே ஸர்வே தாக்ஷாயணா ந்ருப
பித்ரா ப்ரோக்தா: ப்ரஜா-ஸர்கே ப்ரதீசீம் ப்ரயயுர் திசம்
அப்ருதக்—ஒரே மாதிரியாக; தர்ம-சீலா:—நல்ல ஒழுக்கத்திலும்; நன்னடத்தையிலும்; தே—அவர்கள்; ஸர்வே—அனைவரும்; தாக்ஷாயணா:—தட்சனின் மகன்கள்; ந்ருப—அரசே; பித்ரா—அவர்களது தந்தையால்; ப்ரோக்தா:—கட்டளையிடப்பட்டு; ப்ரஜா-ஸர்கே—ஜனத்தொகையை அதிகரிக்கும்படி; ப்ரதீசீம்—மேற்கு; ப்ரயயு:—நோக்கிச் சென்றனர்; திசம்—திசையை.
அரசே, பிரஜாபதி தட்சனின் மகன்களனைவரும் சாந்தமான குணத்திலும், தந்தையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதிலும் ஒரே மாதிரியாக இருந்தனர். தங்கள் தந்தையால் குழந்தைகள் பெறும்படி கட்டளையிடப்பட்ட அவர்களனைவரும் மேற்குத் திசையை நோக்கிச் சென்றனர்.
பதம் 6.5.3
தத்ர-நாராயண-ஸரஸ் தீர்த்தம் ஸிந்து-ஸமுத்ரயோ:
ஸங்கமோ யத்ர ஸுமஹன் முனி-ஸித்த-நிஷேவிதம்
தத்ர—அந்த திசையில்; நாராயண-ஸர:—நாராயண ஸரஸ் என்ற பெயருடைய ஏரி; தீர்த்தம்—மிகவும் புண்ணியமான ஸ்தலம்; ஸிந்து-ஸமுத்ரயோ:—சிந்து நதி, கடல் ஆகிய இரண்டின்; ஸங்கம:—சங்கமம்; யத்ர—எங்கு; ஸு-மஹத்—மிகச்சிறந்த; முனி—முனிவர்களால்; ஸித்த—சித்தர்களாலும்; நிஷேவிதம்—அடிக்கடி செய்யப்பட்ட.
மேற்கில், சிந்துநதி கடலில் சங்கமிக்கும் இடத்தில், நாராயண-ஸரஸ் என்ற மிகச்சிறந்த தீர்த்த யாத்திரை ஸ்தலம் ஒன்றுள்ளது. அங்கு, ஆன்ம உணர்வில் முன்னேறிய பல முனிவர்களும், மற்றவர்களும் வாழ்ந்து வந்தனர்.
பதங்கள் 6.5.4 – 6.5.5
தத்-உபஸ்பர்சனாத் ஏவ வினிர்தூத-மலாசயா:
தர்மே பாரமஹம்ஸ்யே ச ப்ரோத்பன்ன-மதயோ ‘பி உத
தேபிரே தப ஏவோக்ரம் பித்ராதேசேன யந்த்ரிதா:
ப்ரஜா-விவ்ருத்தயே யத்தான் தேவர்ஷிஸ் தான் ததர்ச ஹ
தத்—அப்புண்ணிய ஸ்தலத்தில்; உபஸ்பர்சனாத்—அந்த நீரில் நீராடுவதிலிருந்து அல்லது அதைத் தொடுவதிலிருந்து; ஏவ—மட்டுமே; வினிர்தூத—முற்றிலும் கழுவப்பட்டுவிட்ட; மல-ஆசயா:—அவர்களது அசுத்தமான ஆசைகள்; தர்மே—அனுஷ்டானங்களிடம்; பாரமஹம்ஸ்யே—மிகவுயர்ந்த துறவிகளால் மேற்கொள்ளப்படும்; ச—கூட; ப்ரோத்பன்ன—மிகவும் விரும்பின; மதய:—யாருடைய மனங்கள்; அபி உத—என்றாலும்; தேபிரே—அவர்கள் நிறைவேற்றினர்; தப:—தவங்களை; ஏவ—நிச்சயமாக; உக்ரம்—கடுமையான; பித்ரு-ஆதேசேன—அவர்களது தந்தையின் கட்டளையினால்; யந்த்ரிதா:—ஈடுபட்டனர்; ப்ரஜா-விவ்ருத்தயே—ஜனத்தொகையைப் பெருக்கும் நோக்கத்திற்காக; யத்தான்—ஆயத்தம்; தேவர்ஷி:—மாமுனிவரான நாரதர்; தான்—அவர்களை; ததர்ச—காணச் சென்றார்; ஹ—உண்மையில்.
ஹர்யஸ்வர்கள், அப்புண்ணிய ஸ்தலத்திலுள்ள ஏரியின் நீரைத் தினந்தோறும் தொட்டும், அதில் நீராடியும் வந்தனர். படிப்படியாகத் தூய்மையடைந்த அவர்கள், பரமஹம்ஸர்களுக்குரிய செயல்களில் நாட்டம் கொண்டனர். ஆயினும், அவர்களது தந்தை ஜனத்தொகையைப் பெருக்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டிருந்ததால், அவரது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அவர்கள் கடுந்தவங்களை மேற்கொண்டனர். ஒரு நாள், ஜனத்தொகை பெருக்கத்திற்காக அவர்கள் கடுந்தவங்கள் புரிவதைக் கண்ட நாரதர் அவர்களை அணுகினார்.
பதங்கள் 6.5.6 – 6.5.8
உவாச சாத ஹர்யஸ்வா: கதம் ஸ்ரக்ஷ்யத வை ப்ரஜா:
அத்ருஷ்ட்வாந்தம் புவோ யூயம் பாலிசா பத பாலகா:
ததைக-புருஷம் ராஷ்ட்ரம் பிலம் சாத்ருஷ்ட-நிர்கமம்
பஹு-ரூபாம் ஸ்த்ரியம் சாபி புமாம்ஸம் பும்ஸ்சலீ-பதிம்
நதீம் உபயதோ வாஹாம் பஞ்ச-பஞ்சாத்புதம் க்ருஹம் க்வசித் தம்ஸம் சித்ர-கதம் க்ஷெளர-பவ்யம் ஸ்வயம் ப்ரமி
உவாச—அவர் கூறினார்; ச—கூட; அத—இவ்வாறு; ஹர்யஸ்வா:—ஹர்யஸ்வர்களே; கதம்—ஏன்; ஸ்ரக்ஷ்யத—நீங்கள் பெற்றெடுப்பீர்கள்; வை—உண்மையில்; ப்ரஜா:—குழந்தைகளை; அதிருஷ்ட்வா—காணாமல்; அந்தம்—முடிவை; புவ:—இந்த மண்ணுலகின்; யூயம்—நீங்களனைவரும்; பாலிசா:—அனுபவமற்ற; பத—ஐயோ பாவம்; பாலகா:—அரசாளும் அரசகுமாரர்களாக இருப்பினும்; ததா—அவ்வாறே; ஏக—ஒரு; புருஷம்—மனிதன்; ராஷ்ட்ரம்—இராஜ்யம்; பிலம்—துவாரம்; ச—கூட; அதிருஷ்ட-நிர்கமம்—பிரவேசித்தால் மீண்டும் வெளியே வரமுடியாது; பஹு ரூபாம்—பல ரூபங்களை ஏற்கும்; ஸ்த்ரியம்—அப்பெண்; ச—மேலும்; அபி—கூட; புமாம்ஸம்—அம்மனிதன்; பும்ஸ்சலீ-பதிம்—ஒரு விபச்சாரியின் கணவனான; நதிம்—ஒரு நதி; உபயத:—இரு வழிகளிலும்; வாஹாம்—ஓடும்; பஞ்ச-பஞ்ச—ஐந்து பெருக்கல் ஐந்தின் (இருபத்தைந்து); அத்புதம்—அற்புதமான; கிருஹம்—வீடு; க்வசித்—எங்கோ ஓரிடத்தில்; ஹம்ஸம்—ஓர் அன்னம்; சித்ர-கதம்—யாருடைய கதை அற்புதமானதோ; க்ஷெளர-பவ்யம்—கூர்மையான கத்திகளாலும், வஜ்ரங்களாலும் ஆன; ஸ்வயம்—தானாகவே; ப்ரமி—சுழலும்.
மாமுனிவரான நாரதர் கூறினார்: ஹர்யஸ்வர்களே, பூமியின் முடிவை இன்னும் நீங்கள் காணவில்லை. ஒரே ஒரு மனிதன் மட்டும் வாழும் இராஜ்யம் ஒன்றுள்ளது. அங்கு ஒரு துவாரம் உள்ளது. அதில் புகுந்தவன் எவனும் வெளியில் வந்ததில்லை. மிகவும் நெறிதவறிய ஒரு பெண் அங்கிருக்கிறாள். அவள் பல்வேறு கவர்ச்சியான ஆடைகளால் தன்னை அலங்கரித்துக் கொள்வாள். அங்கு வாழும் மனிதன் அவளுடைய கணவனாவான். அந்த இராஜ்யத்தில் இரு திசைகளிலும் ஒடும் ஒரு நதியும், இருபத்தைந்து பொருட்களாலான ஒரு வீடும், பல்வேறு ஓசைகளை எழுப்பும் ஓர் அன்னமும், கூர்மையான கத்திகளாலும், வஜ்ரங்களாலும் ஆனதும், தானாகச் சுழல்வதுமான ஒரு பொருளும் உள்ளன. இவைகளையெல்லாம் நீங்கள் இன்னும் காணவில்லை. எனவே நீங்கள் முதிர்ந்த அறிவில்லாத அனுபவமற்ற பையன்களாவீர். அப்படியிருக்க, உங்களால் எப்படி சந்ததியை உண்டாக்க முடியும்?
பதம் 6.5.9
கதம் ஸ்வ-பிதுர் ஆதேசம் அவித்வாம்ஸோ விபஸ்சித:
அனுரூபம் அவிக்ஞாய அஹோ ஸர்கம் கரிஷ்யத
கதம்—எவ்வாறு; ஸ்வ-பிது:—உங்களுடைய தந்தையின்; ஆதேசம்—உத்தரவை; அவித்வாம்ஸ:—அறியாத; விபஸ்சித:—எல்லாம் அறிந்தவரான; அனு-ரூபம்—உங்களுக்குப் பொருத்தமாக; அவிக்ஞாய—அறியாமல்; அஹோ—ஐயோ பாவம்; ஸர்கம்—சிருஷ்டியை; கரிஷ்யத—நீங்கள் செய்வீர்கள்.
ஐயோ பாவம்! உங்கள் தந்தை எல்லாம் அறிந்தவர். ஆனால் அவரது உண்மையான உத்தரவு என்னவென்பதை நீங்கள் அறியவில்லை. உங்களுடைய தந்தையின் உண்மையான நோக்கத்தைத் தெரிந்து கொள்ளாமல் நீங்கள் எப்படி சந்ததியை உண்டாக்குவீர்கள்.
பதம் 6.5.10
ஸ்ரீ-சுக உவாச
தன் நிசயம்யாத ஹர்யஸ்வா ஒளத்பத்திக-மாநிஷயா
வாச: கூடம் து தேவர்ஷே: ஸ்வயம் விமம்ருசுர் தியா
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தத்—அதை; நிசம்ய—கேட்டு; அத—அதன்பின்; ஹர்யஸ்வா:—பிரஜாபதி தட்சனின் எல்லா மகன்களும்; ஒளத்பத்திக—இயல்பாகவே விழிப்படைந்தனர்; மனீஷயா—பகுத்தறியும் சக்தியைப் பெற்றிருந்ததால்; வாச:—பேச்சின்; கூடம்—புதிரை; து—ஆனால்; தேவர்ஷே:—நாரத முனிவரின்; ஸ்வயம்—தாங்களாகவே; விமம்ருசு:—ஆராய்ந்தனர்; தியா—முழு புத்தியுடன்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: நாரத முனிவரின் புதிரான இவ்வார்த்தையைக் கேட்ட ஹர்யஸ்வர்கள், பிறருடைய உதவியின்றி, தங்களுடைய இயல்பான மதி நுட்பத்தினால் தாங்களாகவே அவற்றை ஆராயத் துவங்கினர்.
பதம் 6.5.11
பூ: க்ஷேத்ரம் ஜீவ-ஸம்க்ஞம் யத் அனாதி நிஜ-பந்தனம்
அத்ருஷ்டவா தஸ்ய நிர்வாணம் கிம் அஸத்-கர்மபிர் பவேத்
பூ—பூமி; க்ஷேத்ரம்—செயற்களம்; ஜீவ-ஸம்க்ஞம்—வெவ்வேறு கர்ம பலன்களால் கட்டப்பட்டுள்ள ஆன்மீக ஜீவராசியின் பெயர்; யத்—எது; அனாதி—அனாதி காலமாக உள்ள; நிஜ-பந்தனம்—தன் சொந்த பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு; அத்ருஷ்ட்வா—பார்க்காமல்; தஸ்ய—அதன்; நிர்வாணம்—நிறுத்தம்; கிம்—என்ன பயன்; அஸத்-கர்மபி:—நிலையற்ற பலன் கருதும் செயல்களால்; பவேத்—இருக்க முடியும்.
(ஹர்யஸ்வர்கள் நாரதருடைய வார்த்தைகளைப் பின்வருமாறு புரிந்துகொண்டனர்:) “பூ” (பூமி) என்ற சொல் செயற்களத்தைக் குறிக்கிறது. ஜீவராசியின் கர்மபலனாகக் கிடைத்துள்ள ஜட உடல் தான் அவனது செயற்களமாகும். அது அவனுக்கு பொய்யான பெயர்களைப் பெற்றுத் தருகிறது. அவன் அனாதிகாலமாக பலவகையான ஜட உடல்களைப் பெற்றுள்ளான். அந்த ஜட உடல்களே, ஜட உலகுடன் அவனைப் பிணைக்கும் வேர்களாகும். முட்டாள்தனமாக, நிலையற்ற பலன்நோக்குக் கருமங்களில் ஈடுபடும் ஒருவன், இந்த பிணைப்பை நிறுத்த முயலவில்லையென்றால், அவனது செயல்களால் என்ன பயன்?
பதம் 6.5.12
ஏக ஏவேஸ்வரஸ் துர்யோ பகவான் ஸ்வாஸ்ரய: பர:
தம் அத்ருஷ்ட்வாபவம் பும்ஸ: கிம் அஸத்-கர்மபிர் பவேத்
ஏக:—ஒருவர்; ஏவ—மட்டுமே; ஈஸ்வர:—பரமபுருஷர்; துர்ய:—நான்காவதான உன்னத பிரிவினை; பகவான்—பரமபுருஷர்; ஸ்வ-ஆஸ்ரய:—தமக்குத்தாமே புகலிடமென்பதால் சுதந்திரமானவரான; பர:—இந்த பெளதிக சிருஷ்டிக்கு அப்பாற்பட்ட; தம்—அவரை; அத்ருஷ்ட்வா—காணாமல்; அபவம்—பிறப்பற்றவர் அல்லது சிருஷ்டிக்கப்படாதவர்; பும்ஸ:—ஒரு மனிதனால்; கிம்—என்ன நன்மை; அஸத்-கர்மபி:—நிலையற்ற பலன்கருதும் செயல்களால்; பவேத்—இருக்க முடியும்.
(நாரத முனிவர், ஒரு இராஜ்யத்தில் ஒரே ஒரு ஆண்தான் இருக்கிறார் என்று கூறினார். ஹர்யஸ்வர்கள் இக்கூற்றின் பொருளைப் பின்வருமாறு புரிந்து கொண்டனர்) எல்லா இடங்களிலுமுள்ள அனைத்தையும் கண்காணிப்பவரான பரமபுருஷர் ஒருவரே அனைத்தையும் அனுபவிப்பவராவார். அவர் ஆறு கல்யாண குணங்களைப் பூரணமாக உடையவரும், முற்றிலும் சுதந்திரமானவருமாவார். அவர் மூன்று ஜட இயற்கைக் குணங்களுக்கு உட்பட்டவரல்ல. ஏனெனில், அவர் இந்த ஜட சிருஷ்டிக்கு எப்பொழுதும் அப்பாற்ப்பட்டவராக உள்ளார். மனித சமூகத்தினர், தங்களுடைய அறிவு மற்றும் செயல்கள் ஆகியவற்றில் ஏற்படும் முன்னேற்றத்தின் மூலமாக பரமபுருஷரைப் புரிந்து கொள்ளாமல், நிலையற்ற இன்பத்திற்காக அல்லும்பகலும் நாய் பூனைகளைப் போல் மிகவும் கடினமாக உழைக்கின்றனர். இத்தகைய செயல்களால் என்ன பயன்?
பதம் 6.5.13
புமான் நைவைதி யத் கத்வா பில-ஸ்வர்கம் கதோ யதா
ப்ரத்யக்-தாமாவித இஹ கிம் அஸத்-கர்மபிர் பவேத்
புமான்—ஒரு மனிதன்; ந—இல்லை; ஏவ—உண்மையில்; ஏதி—திரும்பி வருகிறான்; யத்—எங்கு; கத்வா—சென்று விட்டால்; பில-ஸ்வர்கம்—பாதாள லோகத்திற்கு; கத:—சென்றவன்; யதா—போல; ப்ரத்யக்-தாம—பிரகாசமான ஆன்மீக உலகம்; அவித:—புத்தியற்ற மனிதனின்; இஹ—இந்த ஜட உலகில்; கிம்—என்ன பயன்; அஸத்-கர்மபி:—நிலையற்ற பலன்கருதும் செயல்களுடன் கூடிய; பவேத்—இருக்க முடியும்.
(நாரத முனிவர், ஒரு துவாரம் (பில) இருக்கிறதென்றும், அதில் நுழைந்தவன் திரும்பி வருவதேயில்லை என்றும் விவரித்தார். இந்த புதிரின் பொருளையும் ஹர்யஸ்வர்கள் புரிந்து கொண்டனர்) பாதாளம் என்ற கீழான கிரக அமைப்பில் புகுந்தவன் ஒரு முறையேனும் திரும்பி வந்திருப்பதை எவரும் கண்டதில்லை. அதுபோலவே, வைகுண்ட லோகத்தில் (ப்ரத்யக்-தாம) ஒருவன் பிரவேசித்துவிட்டால் அவன் இந்த ஜட உலகிற்குத் திரும்பி வருவதில்லை. எங்கு சென்றுவிட்டால். துன்பகரமான இந்த பெளதிக சூழ்நிலைக்கு ஒருவன் திரும்பி வருவதில்லையோ, அத்தகைய ஓரிடம் இருக்குமானால், அந்த இடத்தைக் காணாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் நிலையற்ற இந்த ஜட உலகில் குரங்குகளைப் போல் குதித்துக் கொண்டிருப்பதால் என்ன பலன்? இதனால் இலாபமென்ன?
பதம் 6.5.14
நானா-ரூபாத்மனோ புத்தி: ஸ்வைரிணீவ குணான்விதா
தன்-நிஷ்டாம் அகதஸ்யேஹ கிம் அஸத்-கர்மபிர் பவேத்
நானா—வெவ்வேறு; ரூபா—ரூபங்களை அல்லது உடைகளைத் தரிக்கும்; ஆத்மன:—ஜீவராசியினுடைய; புத்தி:—புத்தி; ஸ்வைரிணீ—வெவ்வேறு வகையான ஆடையாபரணங்களால் விருப்பம் போல் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஒரு விலைமகள்; இவ—போல்; குண-அன்விதா—ரஜோகுணம் முதலியவைகளுடன் கூடிய; தத்-நிஷ்டாம்—அதன் நிறுத்தத்தை; அகதஸ்ய—அடையாதவரின்; இஹ—இந்த ஜட உலகில்; கிம்-அஸத் கர்மபி:-பவேத்—நிலையற்ற பலன் கருதும் செயல்களைச் செய்வதால் என்ன பயன்.
(நாரத முனிவர், வேசித்தனத்தையே தொழிலாகக் கொண்ட ஒரு பெண்ணை விவரித்தார். இப்பெண்ணின் சுய ரூபத்தை ஹர்யஸ்வர்கள் புரிந்து கொண்டனர்) ஒவ்வொரு ஜீவனின் நிலையற்ற புத்தியும், ரஜோ குணத்துடன் கலந்து, பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக உடைகளை மாற்றும் ஒரு வேசியைப் போலாகிவிடுகிறது. ஒருவன் நிலையற்ற பலன் கருதும் செயல்களில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் வேளையில், இது எப்படி நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாதிருப்பானாயின், உண்மையில் அதனால் அவனுக்கு என்ன இலாபம்?
பதம் 6.5.15
தத்-ஸங்க-ப்ரம்சிதைஸ்வர்யம் ஸம்ஸரந்தம் குபார்யவத்
தத்-கதீர் அபுதஸ்யேஹ கிம் அஸத்-கர்மபிர் பவேத்
தத்-ஸங்க—புத்தி என்ற வேசியுடனான தொடர்பினால்; ப்ரம்சித—பறிக்கப்பட்டு; ஐஸ்வர்யம்—சுதந்திரம் என்ற ஐசுவரியம்; ஸம்ஸரந்தம்—பௌதிக வாழ்வு முறையை மேற்கொண்டு; கு-பார்ய-வத்—கெட்டுப்போன ஒரு மனைவியை உடையவனைப் போல்; தத்-கதீ—கெட்டுப்போன புத்தியின் அசைவுகள்; அபுதஸ்ய—அறியாதவரின்; இஹ—இவ்வுலகில்; கிம் அஸத்—கர்மபி: பவேத்—நிலையற்ற பலன் கருதும் செயல்களால் என்ன பயன்.
(நாரத முனிவர் அந்த வேசியின் கணவனான ஒரு மனிதனைப் பற்றியும் பேசினார். இதை ஹர்யஸ்வர்கள் பின்வருமாறு புரிந்து கொண்டனர்) ஒருவன் ஒரு வேசியின் கணவனாகும் பொழுது முழு சுதந்திரத்தையும் இழந்து விடுகிறான். அதுபோலவே ஒரு ஜீவராசி கெட்டுப்போன புத்தியுடையவனாக இருந்தால், அவனது பௌதிக வாழ்வை அவன் நீடிக்கச் செய்கிறான். ஜட இயற்கையால் வஞ்சிக்கப்படும் அவன், இன்பதுன்பங்களடங்கிய பல்வேறு சூழ்நிலைகளைக் கொண்டுவரும் புத்தியின் அசைவுகளைப் பின்பற்றியாக வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் ஒருவன் பலன் கருதும் செயல்களைச் செய்வானாயின், அதனால் என்ன பயன்?
பதம் 6.5.16
ஸ்ருஷ்டி-அப்யய-கரீம் மாயாம் வேலா-கூலாந்த-வேகிதாம்
மத்தஸ்ய தாம் அவிக்ஞஸ்ய கிம் அஸத்-கர்மபிர் பவேத்
ஸ்ருஷ்டி—சிருஷ்டி: அப்யய—அழிவு; கரீம்—செய்பவளான மாயாம்—மாயா சக்தி; வேலா-கூல—அந்த கரைகளுக்கருகில்; வேகிதாம்—வேகமதிகம் என்பதால்; மத்தஸ்ய—பைத்தியக்காரனின்; தாம்—அந்த ஜட இயற்கை; அவிக்ஞஸ்ய—அறியாதவனாக; கிம் அஸத்—கர்மபி: பவேத்—நிலையற்ற பலன் கருதும் செயல்களைச் செய்வதால் என்ன பயன் விளையக் கூடும்.
(நாரத முனிவர், இருபுறமும் ஓடும் நதி இருப்பதாகக் கூறினார். ஹர்யஸ்வர்கள் இக்கூற்றின் பொருளைப் புரிந்து கொண்டனர்.) ஜட இயற்கை இரு வழிகளில் செயற்படுகிறது. ஒன்று படைத்தல், இரண்டு அழித்தல். இவ்வாறாக ஜட இயற்கை என்ற நதி இருபுறமும் ஓடுகிறது. இதையறியாது இந்நதிக்குள் விழும் ஜீவராசி இதன் அலைகளில் மூழ்கி விடுகிறான். மேலும் நதியின் கரைக்கருகில் நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருப்பதால், அவனால் அதிலிருந்து வெளியேற முடிவதில்லை. மாயை என்ற அந்த நதியில் செய்யப்படும் பலன் கருதும் செயல்களால் என்ன பயன்?
பதம் 6.5.17
பஞ்ச-விம்சதி-தத்வானாம் புருஷோ ‘த்புத-தர்பண:
அத்யாத்மம் அபுதஸ்யேஹ கிம் அஸத்-கர்மபிர் பவேத்
பஞ்ச-விம்சதி—இருபத்தைந்து; தத்வானாம்—மூலப் பொருட்களாலான; புருஷ:—பரமபுருஷர்; அத்புத-தர்பண:—அற்புத தோற்றுவிப்பாளர்; அத்யாத்மம்—எல்லாக் காரண விளைவுகளின் கண்காணிப்பாளர்; அபுதஸ்ய—அறியாதவனின்; இஹ—இவ்வுலகில்; கிம் அஸத்-கர்மபி: பவேத்—நிலையற்ற பலன் கருதும் செயல்களில் ஈடுபடுவதால் என்ன பயன்.
(நாரத முனிவர், இருபத்தைந்து மூலப் பொருட்களாலான ஒரு வீடு இருப்பதாகக் கூறினார். ஹர்யஸ்வர்கள் இந்த உவமையைப் புரிந்துகொண்டனர்.) பரமபுருஷர் இருபத்தைந்து மூலப் பொருட்களுக்கும் களஞ்சியமாவார். மேலும் பரம ஜீவன் என்ற முறையில் காரண விளைவுகளை நடத்தும் அவர், அவைகளின் தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அப்பரமபுருஷரை அறியாது, நிலையற்ற பலன் கருதும் செயல்களில் ஒருவன் ஈடுபடுவானாயின், அதனால் அவன் என்ன பயனடைவான்?
பதம் 6.5.18
ஐஸ்வரம் சாஸ்த்ரம் உத்ஸ்ருஜ்ய பந்த-மோக்ஷானுதர்சனம்
விவிக்த-பதம் அக்ஞாய கிம் அஸத்-கர்மபிர் பவேத்
ஐஸ்வரம்—பகவானைப் பற்றிய புரிந்துணர்வை, அல்லது கிருஷ்ண உணர்வைக் கொண்டு வருதல்; சாஸ்த்ரம்—வேத இலக்கியம்; உத்ஸ்ருஜ்ய—விட்டுவிட்டு; பந்த—பந்தத்தையும்; மோக்ஷ—மோட்சத்தையும்; அனுதர்சனம்—பற்றிய வழிமுறைகளைக் கூறும்; விவித்த-பதம்—சேதனத்தை ஜடத்திலிருந்து பிரித்தறிதல்; அக்ஞாய—அறியாது; கிம் அஸத்-கர்மபி: பவேத்—நிலையற்ற பலன் கருதும் செயல்களால் என்ன பயன்.
(நாரத முனிவர் ஓர் அன்னத்தைப் பற்றி கூறினார். அந்த அன்னம் இச்சுலோகத்தில் விவரிக்கப்படுகிறது) ஜட, ஆன்மீக சக்திகளுக்கெல்லாம் பிறப்பிடமான பரமபுருஷரைப் புரிந்துகொள்வதெப்படி என்பதை வேத சாஸ்திரங்கள் தெளிவாக விளக்குகின்றன. உண்மையில், அவை இவ்விருசக்திகளையும் விவரமாக விளக்குகின்றன. எவனொருவன் ஜடம், சேதனம் இரண்டுக்குமிடையில் வித்தியாசம் காண்கிறானோ, எவன் அனைத்திலுமுள்ள சாரம்சத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறானோ, எவன் பந்தம் மற்றும் மோட்சத்திற்கான வழிமுறைகளை விளக்குகிறானோ, அவனே அன்னம் (ஹம்ஸ) எனப்படுகிறான். வேத வாக்கியங்கள் பலவகைப்பட்ட ஒலி அதிர்வுகளைக் கொண்டுள்ளன. மூடனும் அயோக்கியனுமான ஒருவன் இந்த சாஸ்திரக் கல்வியை விட்டுவிட்டு, நிலையற்ற செயல்களில் ஈடுபடுவதால் என்ன பயன்?
பதம் 6.5.19
கால-சக்ரம் ப்ரமி தீக்ஷ்ணம் ஸர்வம் நிஷ்கர்ஷயஜ் ஜகத்
ஸ்வதந்த்ரம் அபுதஸ்யேஹ கிம் அஸத்-கர்மபிர் பவேத்
கால-சக்ரம்—நித்தியமான காலச் சக்கரம்; ப்ரமி—தானாகவே சுழன்று கொண்டிருக்கும்; தீக்ஷணம்—மிகவும் கூர்மையான; ஸர்வம்—எல்லா; நிஷ்கர்ஷயத்—இயக்குகிறது; ஜகத்—உலகை; ஸ்வ-தந்த்ரம்—பெயரளவேயான விஞ்ஞானிகளையும், தத்துவவாதிகளையும் பொருட்படுத்தாமல், சுதந்திரமாக; அபுதஸ்ய—(காலத்தின் இத்தன்மையை) அறியாதவனின்; இஹ—இந்த ஜட உலகில்; கிம் அஸத்-கர்மபி: பவேத்—நிலையற்ற பலன் கருதும் செயல்களில் ஈடுபடுவதால் என்ன பயன்.
(நாரத முனிவர், கூர்மையான கத்திகளாலும், வஜ்ரங்களாலும் ஆன ஒரு பெளதிகப் பொருளைப் பற்றி கூறினார். ஹர்யஸ்வர்கள் இவ்வுவமையைப் பின்வருமாறு புரிந்து கொண்டனர்.) நித்தியமான காலம், மிகவும் கூர்மையான கத்திகளாலும், வஜ்ரங்களாலும் செய்யப்பட்ட சக்கரம் போல் சுழன்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்காலச் சக்கரம், முழு சுதந்திரத்துடன், ஓயாமல், உலகின் அனைத்துச் செயல்களையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. நித்தியமான இந்த காலத் தத்துவத்தைக் கற்றறிய ஒருவன் முயலவில்லையென்றால், நிலையற்ற பெளதிக செயல்களைச் செய்வதால் அவன் என்ன நன்மையை அடையப் போகிறான்?
பதம் 6.5.20
சாஸ்த்ரஸ்ய பிதுர் ஆதேசம் யோ ந வேத நிவர்தகம்
கதம் தத்-அனுரூபாய குண-விஸ்ரம்பி உபக்ரமேத்
சாஸ்த்ரஸ்ய—சாஸ்திரங்களின்; பிது:—தந்தையின்; ஆதேசம்—கட்டளை; ய:—எவனொருவன்; ந—இல்லை; வேத—புரிந்துகொள்ள; நிவர்தகம்—பெளதிக வாழ்விலிருந்து விடுதலையளிப்பது; கதம்—எவ்வாறு; தத்-அனுரூபாய—சாஸ்திரங்களின் கட்டளையைப் பின்பற்ற; குண-விஸ்ரம்பீ—ஜட இயற்கையின் முக்குணங்களில் சிக்கிக் கொண்டிருப்பவன்; உபக்ரமேத்—சந்ததி உற்பத்தியில் ஈடுபட முடியும்.
(நாரத முனிவர், எவ்வாறு ஒருவன் அறியாமையினால் தன் சொந்த தந்தையின் கட்டளைகளை எதிர்க்க முடியும் என்று கேட்டார். ஹர்யஸ்வர்கள் இக்கேள்வியின் பொருளைப் புரிந்து கொண்டனர்) ஒருவன் சாஸ்திரங்களின் மூல உபதேசங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். வேத நாகரீகத்தின்படி, இரண்டாவது பிறப்பின் அறிகுறியாக ஒருவனுக்கு பூனூல் அணிவிக்கப்படுகிறது. ஓர் உண்மையான ஆன்மீக குருவிடமிருந்து சாஸ்திர உபதேசங்களைப் பெற்றுள்ள ஒருவன் இரண்டாவது பிறப்பை எடுத்தவனாகிறான். எனவே, சாஸ்திரம்தான் உண்மையான தந்தையாகும். ஒருவன் பெளதிக வாழ்வு முறையை முடித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் எல்லா சாஸ்திரங்களும் உபதேசிக்கின்றன. தந்தையினுடைய (சாஸ்திரம்) கட்டளைகளின் நோக்கத்தை அறியாதவன் அறிவிலியாவான். தன் மகனை பெளதிக செயல்களில் ஈடுபடுத்த முயலும் ஒரு பெளதிக தந்தை உண்மையான தந்தையல்ல. அவரது உபதேசங்களும் உண்மையான தந்தையின் உபதேசங்களல்ல.
பதம் 6.5.21
இதி வ்யவஸிதா ராஜன் ஹர்யஸ்வா ஏக-சேதஸ:
ப்ரயயுஸ் தம் பரிக்ரம்ய பந்தானம் அனிவர்தனம்
இதி—இவ்வாறு; வ்யவஸிதா:—நாரதரின் உபதேசங்களில் முழு நம்பிக்கைக் கொண்டவர்களாய்; ராஜன்—அரசே; ஹர்யஸ்வா:—பிரஜபதி தட்சனின் மகன்கள்; ஏக-சேதஸ:—ஒரே கருத்துடையவர்களாய்; ப்ரயயு:—அங்கிருந்து அகன்றனர்; தம்—நாரத முனிவரை; பரிக்ரம்ய—வலம் வந்து; பந்தானம்—வழியில்; அனிவர்தனம்—இந்த ஜட உலகிற்கு ஒருவனைத் திரும்ப அழைத்து வராத.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, பிரஜாபதி தட்சனின் மகன்களான ஹர்யஸ்வர்கள், நாரதரின் உபதேசங்களைக் கேட்டு அதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டனர். அவர்களனைவரும் அவரது உபதேசங்களில் நம்பிக்கை வைத்து ஒரே முடிவுக்கு வந்தனர். அவர்கள் அந்த மாமுனிவரைத் தங்களது ஆன்மீக குருவாக ஏற்று அவரை வலம் வந்து, எந்த வழியில் சென்றால், மீண்டும் இவ்வுலகிற்கு வரவேண்டியதில்லையோ, அந்த வழியைப் பின்பற்றினர்.
பதம் 6.5.22
ஸ்வர-ப்ரஹ்மணி நிர்பாத-ஹ்ரிஷீகே-பதாம்புஜே
அகண்டம் சித்தம் ஆவேஸ்ய லோகான் அனுசரன் முனி:
ஸ்வர-ப்ரஹ்மணி—ஆன்மீக சப்தத்தில்; நிர்பாத—மனதின் முன் தெளிவாக நிறுத்தி; ஹ்ரிஷீகேச—புலன்களின் நாயகரும், பரமபுருஷருமான ஸ்ரீ கிருஷ்ணரின்; பதாம்புஜே—தாமரைப் பாதங்கள்; அகண்டம்—விடுபட்டுப் போகாதபடி; சித்தம்—உணர்வை; ஆவேஸ்ய—ஈடுபடுத்தி; லோகான்—எல்லாக் கிரக அமைப்புக்களிலும்; அனுசரத்—சுற்றிவந்தார்; முனி:—மாமுனிவரான நாரதர்.
இசையின் ஏழு சப்த ஸ்வரங்களான ஸ,ரி,க,ம,ப,த,நி என்பவை இசைக் கருவிகளில் உபயோகிக்கப்படுகின்றன. ஆனால் சாம வேதத்திலிருந்து தான் முதன்முதலாக அவை வந்தன. மாமுனிவரான நாரதர் பரமபுருஷரின் லீலைகளை விவரித்து சப்தங்களை எழுப்புகிறார். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்பது போன்ற திவ்யமான ஓசைகளின் மூலமாக, அவர் தமது மனதை பகவானின் தாமரைப் பாதங்களில் பதியச் செய்கிறார். இவ்விதமாக அவர் புலன்களின் நாயகரான ரிஷிகேசரை நேருக்கு நேராக தரிசிக்கிறார். ஹர்யஸ்வர்களைக் கடைத்தேற்றிய பிறகு, நாரத முனிவர், பகவானின் தாமரைப் பாதங்களில் எப்பொழுதும் மனதைப் பதித்தவராய், எல்லாக் கிரக அமைப்புக்களிலும் தொடர்ந்து சஞ்சரிக்கலானார்.
பதம் 6.5.23
நாசம் நிசம்ய புத்ராணாம் நாரதாச் சீல-சாலினாம்
அன்வதப்யத க: சோசன் ஸுப்ரஜஸ்த்வம் சுசாம் பதம்
நாசம்—இழப்பை; நிசம்ய—பற்றி கேள்விப்பட்டு; புத்ராணாம்—அவரது மகன்களின்; நாரதாத்—நாரதரிடமிருந்து; சீல-சாலினாம்—குண சீலர்களிலேயே சிறந்தவர்களான; அன்வதப்பத—வருந்தினார்; க:—பிரஜாபதி தட்சன்; சோசன்—புலம்பியபடி; ஸு-ப்ரஜஸ்த்வம்—பத்தாயிரம் சத்புத்திரர்களைப் பெற்றும்; சுசாம்—வருந்தத்தக்க; பதம்—நிலையை அடைந்து.
பிரஜாபதி தட்சனின் மகன்களான ஹர்யஸ்வர்கள் பண்புமிக்க குணசீலர்களாவர். ஆனால் நாரத முனிவரின் உபதேசங்களைக் கேட்டு, அவர்கள் தங்கள் தந்தையின் உத்தரவை நிறைவேற்றத் தவறிவிட்டனர். இது பற்றி தட்சன் நாதரிடமிருந்து கேள்விப்பட்டதும், அவர் வருத்தப்படத் துவங்கினார். இத்தகைய நல்ல மகன்களுக்குத் தந்தையாக இருந்தும், அவர்களையெல்லாம் அவர் இழந்து விட்டார். நிச்சயமாக இது வருந்தத்தக்க விஷயம்தான்.
பதம் 6.5.24
ஸ பூய: பாஞ்சஜன்யாயாம் அஜேன பரிஸாந்த்வித:
புத்ரான் அஜனயத் தக்ஷ: ஸவலாஸ்வான் ஸஹஸ்ரிண:
ஸ:—பிரஜாபதி தட்சன்; பூய:—மீண்டும்; பாஞ்சஜன்யாயாம்—அவரது மனைவியான அஸிக்னீ, அல்லது பாஞ்சஜனியின் கர்ப்பத்தில்; அஜேன—பிரம்ம தேவரால்; பரிஸாந்த்வித:—சமாதானப்படுத்தப்பட்டு; புத்ரான்—மகன்களை; அஜனயத்—பெற்றார்; தக்ஷ:—பிரஜாபதி தட்சன்; ஸவலாஸ்வான்—சவலாஸ்வர்கள் என்ற பெயருடைய; ஸஹஸ்ரிண—ஆயிரம்.
பிரஜாபதி தட்சன் தான் இழந்துவிட்ட குழந்தைகளுக்காக வருந்திக் கொண்டிருந்தார். அப்பொழுது பிரம்ம தேவர் சில அறிவுரைகளைக் கூறி அவரை சமாதானப்படுத்தினார். அதன் பிறகு தட்சன் தன் மனைவி பாஞ்சஜனியின் கர்ப்பத்தில் மேலும் ஆயிரம் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இம்முறை அவரது மகன்கள், சாவலாஸ்வர்கள் என்று அறியப்பட்டனர்.
பதம் 6.5.25
தே ச பித்ரா ஸமாதிஷ்டா: ப்ரஜா-ஸர்கே த்ருத-வ்ரதா:
நாராயண-ஸரோ ஜக்முர் யத்ர ஸித்தா: ஸ்வ-பூர்வஜா:
தே—இம் மகன்கள் (சாவலாஸ்வர்கள்); ச—கூட; பித்ரா—அவர்களது தந்தையால்; ஸமாதிஷ்டா:—கட்டளையிடப்பட்டு; ப்ரஜா-ஸர்கே—ஜனத்தொகை உற்பத்தியில்; த்ருத்-வ்ரதா:—விரதங்களை மேற்கொண்டு; நாராயண-ஸர:—நாராயண ஸரஸ் என்ற புண்ணிய தீர்த்தத்திற்கு; ஜக்மு:—சென்றனர்; யத்ர—எங்கு; ஸித்தா:—பூரணத்துவம் அடைந்தனரோ; ஸ்வ-பூர்வ-ஜா:—முன்பு அங்கு சென்ற அவர்களது தமையன்கள்.
தங்களுடைய தந்தையின் கட்டளைப்படி, குழந்தைகள் பெறுவதற்காக, இரண்டாவதாக பெற்றெடுக்கப்பட்ட மகன்களும் நாராயண-ஸரஸ் என்ற புண்ணிய தீர்த்தத்திற்குச் சென்றனர். அங்குதான் அவர்களுடைய தமையன்கள் முன்பு நாரதரின் உபதேசங்களைப் பின்பற்றி பூரணத்துவம் அடைந்தனர். சாவலாஸ்வர்கள் கடுந்தவங்களை மேற்கொண்டபடி அப்புண்ணிய தீர்த்தத்தில் வாழ்ந்து வந்தனர்.
பதம் 6.5.26
தத்-உபஸ்பர்சனாத் ஏவ வினிர் தூத-மலாசயா:
ஜபந்தோ ப்ரஹ்ம பரமம் தேபுஸ் தத்ர மஹத் தப:
தத்—அப்புண்ணிய ஸ்தலத்தின்; உபஸ்பர்சனாத்—தினமும் அந்த நீரில் குளித்ததால்; ஏவ—உண்மையாகவே; வினிர்தூத—முற்றிலும் தூய்மையடைந்து; மல-ஆசயா:—இதயத்திலுள்ள எல்லா அழுக்குகளிலிருந்தும்; ஜபந்த:—ஜபித்து அல்லது உச்சரித்து; ப்ரஹ்ம—ஓம்காரத்துடன் துவங்கும் மந்திரங்களை (உதாரணமாக, ஓம் தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய: என்பது போன்ற மந்திரங்களை); பரமம்—முடிவான இலக்கு; தேபு:—செய்தனர்; தத்ர—அங்கு; மஹத்—சிறந்த; தப:—தவங்களை.
நாராயண ஸரஸ் என்ற ஸ்தலத்தில், முதல் பிரிவினரைப் போலவே இரண்டாவது பிரிவைச் சேர்ந்த மகன்களும் தவம் புரிந்தனர். அப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடிய அவர்கள், அதன் ஸ்பரிசத்தினால், தங்களுடைய இதயங்களிலிருந்த அசுத்தமான பெளதிக ஆசைகளெல்லாம் அகலப் பெற்றனர். அவர்கள், ஓம்காரத்துடன் துவங்கும் மந்திரங்களை உச்சரித்து, கடுந்தவங்களை மேற்கொண்டனர்.
பதங்கள் 6.5.27 – 6.5.28
அப்-பக்ஷா: கதிசின் மாஸான் கதிசித் வாயு-போஜனா:
ஆராதயன் மந்த்ரம் இமம் அப்யஸ்யந்த இடஸ்பதிம்
ஓம் நமோ நாராயணாய புருஷாய மஹாத்மனே
விசுத்த-ஸத்வ-திஷ்ண்யாய மஹா-ஹம்ஸாய தீமஹி
அப்-பக்ஷா:—நீரை மட்டுமே பருகிக் கொண்டு; கதிசித் மாஸான்—சில மாதங்களுக்கு; கதிசித்—சில; வாயு-போஜனா:—வெறும் காற்றை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அல்லது சுவாசித்துக் கொண்டு; ஆராதயன்—வழிபட்டனர்; மந்த்ரம் இமம்—நாராயணரிலிருந்து வேறுபடாததான இந்த மந்திரத்தை; அப்யஸ்யந்த:—அப்பியாசம் செய்து; இட:-பதிம்—எல்லா மந்திரங்களுக்கும் தலைவரான பகவான் விஷ்ணுவை; ஓம்—பகவானே; நம:—பணிவான வணக்கங்கள்; நாராயணாய—பகவான் நாராயணருக்கு; புருஷாய—பரமபுருஷரும்; மஹா-ஆத்மனே—மேன்மையுடைய பரமாத்மாவும்; விசுத்த-ஸத்வ-திஷ்ண்யாய—எப்பொழுதும் திவ்யமான லோகத்தில் இருப்பவருமான; மஹா-ஹம்ஸாய—சிறப்புடைய, அன்னம் போன்ற பரமபுருஷருக்கு; தீமஹி—எப்பொழுதும் நாங்கள் செலுத்துகிறோம்.
ஒரு சில மாதங்களுக்கு பிரஜாபதி தட்சனின் மகன்கள், நீரை மட்டுமே பருகி, காற்றை மட்டுமே உண்டனர். இவ்வாறு கடுந்தவங்களை மேற்கொண்ட அவர்கள், “தமது திவ்ய லோகத்திலேயே எப்பொழுதும் வீற்றிருக்கும் பரமபுருஷராகிய ஸ்ரீமன் நாராயணருக்கு எங்களது பணிவான வணக்கங்கள். அவர் பரமபுருஷர் (பரமஹம்ஸ) என்பதால், அவருக்கு எங்களது பணிவான வணக்கங்களை நாங்கள் சமர்ப்பிக்கிறோம்” என்ற இந்த மந்திரத்தை உச்சரித்தனர்.
பதம் 6.5.29
இதி தான் அபி ராஜேந்திர ப்ரஜா-ஸர்க-தியோ முனி:
உபேத்ய நாரத: ப்ராஹ வாச: கூடானி பூர்வவத்
இதி—இவ்வாறு; தான்—அவர்களிடமும் (சவலாஸ்வர்கள் என்ற தட்சனின் புத்திரர்கள்); அபி—கூட; ராஜேந்திர—பரீட்சித்து மகாராஜனே; ப்ரஜா-ஸர்க-திய:—குழந்தைகளைப் பெற்றெடுப்பது தான் மிகவும் முக்கியமான கடமை என்ற எண்ணத்திலிருந்த; முனி:—மாமுனிவர்; உபேத்ய—அணுகி; நாரத:—நாரதர்; ப்ராஹ—கூறினார்; வாச:—வார்த்தைகளை; கூடானி—புதிரான; பூர்வ-வத்—முன்பு அவர் செய்தது போலவே.
பரீட்சித்து மகாராஜனே, நாரத் முனிவர், குழந்தைகளைப் பெறுவதற்காக தவத்தில் ஈடுபட்டிருந்த தட்சனின் மகன்களை அணுகி, அவர்களது தமையன்களிடம் முன்பு கூறியது போலவே புதிரான வார்த்தைகளைக் கூறினார்.
பதம் 6.5.30
தாக்ஷாயணா: ஸம்ஸ்ருணுத கததோ நிகமம் மம
அன்விச்சதானுபதவீம் ப்ராத்ரூணாம் ப்ராத்ரு-வத்ஸலா:
தாக்ஷாயணா:—பிரஜாபதி தட்சனின் மகன்களே; ஸம்ஸ்ருணுத—கவனமாகக் கேளுங்கள்; கதத:—பேசுகின்ற; நிகமம்—உபதேசம்; மம—எனது; அன்விச்சத—பின்பற்றுங்கள்; அனுபதவீம்—வழியை; ப்ராத்ரூணாம்—உங்கள் தமையன்களின்; ப்ராத்ரு-வத்ஸலா:—உங்கள் தமையன்களிடம் மிகவும் அன்பு கொண்டவர்களே.
தட்சனின் மகன்களே, எனது உபதேச மொழிகளைக் கவனமாகக் கேளுங்கள். நீங்களெல்லோரும் உங்கள் தமையன்களான ஹர்யஸ்வர்களிடம் மிகவும் அன்பு கொண்டவர்கள் என்பதால், நீங்கள் அவர்களுடைய வழியைப் பின்பற்ற வேண்டும்.
பதம் 6.5.31
ப்ராத்ரூணாம் ப்ராயணம் ப்ராதா யோ ‘நுதிஷ்டதி தர்மவித்
ஸ புண்ய-பந்து: புருஷோ மருத்பி: ஸஹ மோததே
ப்ராத்ரூணாம்—தமையன்களின்; ப்ராயணம்—வழியை; ப்ராதா—விசுவாசமுள்ள ஒரு சகோதரன்; ய:—யார்; அநுதிஷ்டதி:—பின்பற்றுகிறானோ; தர்ம-வித்—தர்ம விதிகளை அறிந்துள்ள; ஸ:—அந்த; புண்ய-பந்து:—மிகவும் புண்ணியவானாகிய; புருஷ:—ஒருவன்; மருத்பி:—காற்றுத் தேவர்கள்; ஸஹ—உடன்; மோததே—வாழ்வை அனுபவிக்கிறான்.
தர்ம விதிகளை அறிந்துள்ள ஒரு சகோதரன், தன் தமையன்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறான். மிகவும் முன்னேறியுள்ள காரணத்தால், இத்தகைய புண்ணியமுள்ள ஒரு சகோதரன், தங்கள் சகோதரர்களிடம் அன்பாக உள்ள மருத்துக்களைப் போன்ற தேவர்களின் சகவாசத்தில் இன்புறும் வாய்ப்பைப் பெறுகிறான்.
பதம் 6.5.32
ஏதாவத் உக்த்வா ப்ரயயௌ நாரதோ ‘மோக-தர்சன:
தே ‘பி சான்வகமன் மார்கம் ப்ராத்ரூணாம் ஏவ மாரிஷ
ஏதாவத்—இவ்வளவு; உக்த்வா—கூறிவிட்டு; ப்ரயயௌ—அங்கிருந்து சென்று விட்டார்; நாரத:—மாமுனிவரான நாரதர்; அமோக-தர்சன:—யாருடைய பார்வை மங்களகரமானதோ; தே—அவர்கள்; அபி—கூட; ச—மற்றும்; அன்வகமன்—பின்பற்றினர்; மார்க்கம்—வழியை; ப்ராத்ரூணாம்—அவர்களது தமையன்களின்; ஏவ—உண்மையில்; மாரிஷ—சிறந்த ஆரிய மன்னனே.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சிறந்த ஆரிய மன்னனே, யாருடைய கருணைபொழியும் பார்வை வீண் போவதில்லையோ, அந்த நாரத முனிவர், பிரஜாபதி தட்சனின் மகன்களிடம் இவ்வளவு கூறியபின், தாம் திட்டமிட்டபடி அங்கிருந்து சென்றுவிட்டார். தட்சனின் மகன்களும் தங்கள் தமையன்களையே பின்பற்றினர். அவர்கள் குழந்தைகளை உற்பத்தி செய்யும் முயற்சியைக் கைவிட்டு, தங்களைக் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுத்திக் கொண்டனர்.
பதம் 6.5.33
ஸத்ரீசீனம் ப்ரதீசீனம் பரஸ்யானுபதம் கதா:
நாத்யாபி தே நிவர்தந்தே பஸ்சிமா யாமினீர் இவ
ஸத்ரீசீனம்—முற்றிலும் சரியான; ப்ரதீசீனம்—மிகவுயர்ந்த இலட்சியமாகிய பக்தித் தொண்டை நோக்கமாகக் கொண்ட ஒரு வாழ்வை ஏற்பதால் அடையக்கூடிய; பரஸ்ய—பரமபுருஷரின்; அனுபதம்—வழி; கதா:—பின்பற்றி; ந—இல்லை; அத்ய அபி—இன்று வரை கூட; தே—அவர்கள் (பிரஜாபதி தட்சனின் மகன்கள்); நிவர்தந்தே—திரும்பிவர; பஸ்சிமா:—(கழிந்துபோன) மேற்குத்திசை; யாமினீ:—இரவுகள்; இவ—போல்.
சாவலாஸ்வர்கள், பக்தித் தொண்டை, அல்லது பரமபுருஷரின் அருளைப் பெற்றுத்தரக்கூடிய சரியான வழியை மேற்கொண்டனர். மேல் திசைக்குச் சென்று கழிந்துபோன இரவுகள்போல், அவர்கள் இன்றுவரை திரும்பி வரவேயில்லை.
பதம் 6.5.34
ஏதஸ்மின் கால உத்பாதான் பஹூன் பஸ்யன் ப்ரஜாபதி:
பூர்வவன் நாரத-க்ருதம் புத்ர-நாசம் உபாஸ்ருணோத்
ஏதஸ்மின்—இந்த; காலே—சமயத்தில்; உத்பாதான்—தொல்லைகள்; பஹூன்—பல; பஸ்யன்—கண்டு; ப்ரஜாபதி:—பிரஜாபதி தட்சன்; பூர்வ வத்—முன்போலவே; நாரத—மாமுனிவர் நாரதரால்; க்ருதம்—செய்யப்பட்ட; புத்ர-நாசம்—புத்திரர்களின் இழப்பை; உபாஸ்ருணோத்—பற்றி கேள்விப்பட்டார்.
இச்சமயத்தில் பல கெட்ட சகுணங்களைக் கண்ட தட்சன், தன் இரண்டாவது பிரிவைச் சேர்ந்த மகன்களான சாவலாஸ்வரர்களும், நாரதரின் உபதேசங்களின்படி, தங்கள் தமையன்கள் சென்ற வழியிலேயே சென்றுவிட்டதைப் பற்றி கேள்விப்பட்டார்.
பதம் 6.5.35
சுக்ரோத நாரதாயாஸௌ புத்ர-சோக-விமூர்ச்சித:
தேவர்ஷிம் உபலப்யாஹ ரோஷாத் விஸ்ஃபுரிதாதர:
சுக்ரோத—மிகவும் கோபமடைந்தார்; நாரதாய—மாமுனிவர் நாரதரிடம்; அஸௌ—அவர் (தட்சன்); புத்ர-சோக—தன் புத்திரர்களை இழந்த துயரத்தினால்; விமூர்ச்சித:—மூர்ச்சையடையும் நிலையில்; தேவர்ஷிம்—மாமுனிவரான தேவரிஷி நாரதரை; உபலப்ய—பார்த்து; ஆஹ—கூறினார்; ரோஷாத்—கோபத்தால்; விஸ்ஃபுரித—நடுங்க; அதர:—உதடுகள்.
பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்காக, சாவலாஸ்வர்களும் இவ்வுலகபற்றைத் துறந்து சென்றுவிட்டதைக் கேள்விப்பட்ட தட்சன் நாரதரிடம் கோபங்கொண்டு, புத்திர சோகத்தினால் மூர்ச்சையடையும் நிலைக்கு வந்துவிட்டார். தட்சன் நாரதரைச் சந்தித்த பொழுது, அவரது உதடுகள் கோபத்தால் நடுநடுங்க பின்வருமாறு கூறலானார்.
பதம் 6.5.36
ஸ்ரீ-தக்ஷ உவாச
அஹோ அஸாதோ ஸாதூனாம் ஸாது-லிங்கேன நஸ் த்வயா
அஸாது அகாரி அர்பகாணாம் பிக்ஷோர் மார்க்க: ப்ரதர்சித:
ஸ்ரீ தக்ஷ: உவாச—பிரஜாபதி தட்சன் கூறினார்; அஹோ அஸாதோ—நேர்மையும், பக்தியும் சிறிதும் இல்லாதவரே; ஸாதூணாம்—சிறந்த முனிவர்கள் மற்றும் பக்தர்களின் சமூகத்தில்; ஸாது-லிங்கேன—ஒரு சாதுவின் உடையை அணிந்து கொண்டு; ந:—எங்களுக்கு; த்வயா—உம்மால்; அஸாது—ஒரு துரோகம்; அகாரி—செய்யப்பட்டது; அர்பகாணாம்—மிகவும் அனுபவமற்ற சிறுவர்களுக்கு; பிக்ஷோ: மார்க்க:—ஒரு பிட்சுவின் அல்லது துறவியின் வழி; ப்ரதர்சித—காட்டப்பட்டது.
பிரஜாபதி தட்சன் கூறினார்: ஐயகோ, நாரத முனிவரே, நீர் ஒரு சாதுபோல் உடையணிந்திருக்கிறீர். ஆனால் உண்மையில் நீர் சாதுவல்ல. இப்பொழுது நான் இல்லற வாழ்வில் இருந்தபோதிலும், உண்மையில் நான்தான் ஒரு சாது. என் மகன்களுக்குத் துறவு வழியைக் காட்டி, வெறுக்கத்தக்க அநீதியை அவர்களுக்கு நீர் செய்துவிட்டீர்.
பதம் 6.5.37
ரிணைஸ் த்ரிபிர் அமுக்தானாம் அமீமாம்ஸித-கர்மணாம்
விகாத: ஸ்ரேயஸ: பாப லோகயோர் உபயோ: க்ருத:
ரிணை:—கடன்களிலிருந்து; த்ரிபி:—மூன்று; அமுக்தானாம்—விடுபடாதவர்களின்; அமீமாம்ஸித—யோசித்தும் பார்க்காமல்; கர்மணாம்—கடமை வழியை; விகாத:—அழிவு; ஸ்ரேயஸ:—நல்லதிர்ஷ்டமுள்ள வழியின்; பாப—பாவம் நிறைந்தவரே (நாரத முனி); லோகயோ:—உலகங்களின்; உபயோ:—இரண்டு; க்ருத:—செய்யப்பட்ட.
பிரஜாபதி தட்சன் கூறினார்: என் மகன்கள் அவர்களது மூன்று கடன்களிலிருந்து சிறிதும் விடுபடவில்லை. உண்மையில், தங்கள் கடமைகளைப் பற்றி அவர்கள் சரிவர யோசிக்கக்கூட இல்லை. பாவம் நிறைந்த நாரத முனிவரே, அவர்கள் சாதுக்களுக்கும், தேவர்களுக்கும், அவர்களது தந்தைக்கும் இன்னும் கடன்பட்டவர்களாகவே இருப்பதால், இவ்வுலகிலும், அடுத்ததிலும் அவர்கள் நல்லதிர்ஷ்டத்தை நோக்கி முன்னேறுவதை நீர் தடுத்துவிட்டீர்.
பதம் 6.5.38
ஏவம் த்வம் நிரனுக்ரோசோ பாலானாம் மதி-பித் ஹரே:
பார்ஷத-மத்யே சரஸி யசோ-ஹா நிரபத்ரப:
ஏவம்—இவ்வாறு; த்வம்—நீர் (நாரதர்); நிரனுக்ரோச:—இரக்கமில்லாத; பாலானாம்—அறியாத, அனுபவமற்ற சிறுவர்களின்; மதி-பித்—உணர்வை களங்கப்படுத்தி; ஹரே:—பரமபுருஷரின்; பார்ஷத-மத்யே—அந்தரங்க சகாக்களுக்கு மத்தியில்; சரஸி—சஞ்சரிக்கிறீர்; யச:-ஹா—பரமபுருஷரின் கீர்த்திக்குக் களங்கம் விளைவித்துக் கொண்டு; நிரபத்ரப:—(நீர், என்ன செய்கிறீர் என்றறியாமலேயே, பாவங்களைச் செய்து கொண்டிருக்கிறீர்) வெட்கமின்றி.
பிரஜாபதி தட்சன் தொடர்ந்து கூறினார்: இவ்வாறு பிற ஜீவராசிகளுக்குத் தீங்கிழைக்கும் அதேசமயம், பகவான் விஷ்ணுவின் ஒரு சகா என்றும் கூறிக் கொள்ளும் நீர் பரமபுருஷரின் கீர்த்திக்குக் களங்கம் விளைவித்துக் கொண்டிருக்கிறீர். நீர் அநாவசியமாக அறியாத சிறுவர்களின் மனதில் துறவு மனப்பான்மையை எற்படுத்தியுள்ளீர். எனவே நீர் வெட்கமற்றவரும், இரக்கமற்றவருமாவீர். உம்மால் எவ்வாறு பரமபுருஷரின் அந்தரங்க சகாக்களுடன் சஞ்சரிக்க இயலும்?
பதம் 6.5.39
நனு பாகவதா நித்யம் பூதானுக்ரஹ-காதரா:
ருதே த்வாம் ஸௌஹ்ருத-க்னம் வை வைராங்கரம் அவைரிணாம்
நனு—இப்பொழுது; பாகவதா:—பரமபுருஷரின் பக்தர்கள்; நித்யம்—நித்தியமாக; பூத-அனுக்ரஹ-காதரா:—இழிவடைந்த பந்தபட்ட ஆத்மாக்களுக்கு உதவுவதில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ள; ருதே—தவிர; த்வாம்—உம்மை; ஸௌஹ்ருத-க்னம்—நட்பை முறித்தவர் (எனவே பாகவதர்களான பகவத் பக்தர்களுக்குள் ஒருவராக கருதப்பட முடியாதவர்); வை—உண்மையில்; வைரம்-கரம்—நீர் பகையை ஏற்படுத்துகிறீர்; அவைரிணாம்—பகையற்றவர்களிடம்.
உம்மைத் தவிர மற்றெல்லா பகவத் பக்தர்களும் பந்தப்பட்ட ஆத்மாக்களிடம் மிகவும் கருணை கொண்டு, அவர்களுக்கு நன்மை செய்ய ஆவலாக உள்ளனர். நீர் ஒரு பக்தனின் உடையை அணிந்திருப்பினும், உம்மிடம் பகையற்றவர்களிடம் நீர் பகையை ஏற்படுத்துகிறீர், அல்லது நீர் நட்பை முறித்து நண்பர்களுக்கிடையில் பகையை மூட்டுகிறீர். வெறுக்கத்தக்க இச்செயல்களைச் செய்யும் அதேசமயம், ஒரு பக்தரைப் போல் பாசாங்கு செய்ய உமக்கு வெட்கமாக இல்லையா?
பதம் 6.5.40
நேத்தம் பும்ஸாம் விராக: ஸ்யாத் த்வயா கேவலினா ம்ருஷா
மன்யஸே யதி உபசமம் ஸ்நேஹ-பாச-நிக்ருந்தனம்
ந—இல்லை; இத்தம்—இவ்விதமாக; பும்ஸாம்—மனிதர்களின்; விராக:—துறவு; ஸ்யாத்—சாத்தியமாகும்; த்வயா—உம்மால்; கேவலினா ம்ருஷா—பொய்யான அறிவுடைய; மன்யஸே—நீர் நினைக்கிறீர்; யதி—என்றால்; உபசமம்—பெளதிக சுகத்தைத் துறப்பது; ஸ்நேஹ-பாச—பாசப் பிணைப்புகள்; நிக்ருந்தனம்—துண்டிக்கப்படுவது.
பிரஜபாதி தட்சன் தொடர்ந்து கூறினார்: துறவு மனப்பான்மையை எழச்செய்வதாலேயே, ஜட உலகிலிருந்து ஒருவன் தன்னை விலக்கிக் கொள்ள முடியும் என்று நீர் எண்ணினால், நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். பூரண அறிவை எழச் செய்யாமல், நீர் செய்துள்ளது போல் உடையை மட்டும் மாற்றிக் கொள்வதால் துறவு மனப்பான்மையைக் கொண்டுவருவது சாத்தியமல்ல.
பதம் 6.5.41
நானுபூய ந ஜானாதி புமான் விஷய-தீக்ஷணதாம்
நிர்வித்யதே ஸ்வயம் தஸ்மான் ந ததா பின்ன-தீ: பரை:
ந—இல்லை; அனுபூய—அனுபவிக்க; ந—இல்லை; ஜானாதி—அறிகிறான்; புமான்—ஒருவன்; விஷய-தீக்ஷணதாம்—பௌதிக சுகத்தின் கூர்மையை; நிர்வித்யதே—விலக்கிக் கொள்கிறான்; ஸ்வயம்—தன்னை; தஸ்மாத்—அதிலிருந்து; ந ததா—அது போலல்ல; பின்ன-தீ:—புத்தி மாற்றப்பட்டவர்கள்; பரை:—மற்றவர்களால்.
உண்மையில் பெளதிக சுகம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். ஆனால் அது எவ்வளவு துன்பம் தரக்கூடியது என்பதைச் சுயமாக ஒருவன் அனுபவித்தாலன்றி, ஒருவனால் அவற்றை விட முடியாது. எனவே ஒருவன் அறிவில் முன்னேற்றமடையும் அதே சமயம், பெயரளவேயான பெளதிக சுகத்தில் ஈடுபட்டிருக்கவும் அனுமதிக்க வேண்டும். இதனால் இப்பொய்யான பெளதிக சுகத்திலுள்ள துன்பத்தை அவனால் உணரமுடியும். பிறகு, மற்றவர்களின் உதவியில்லாமலேயே, பெளதிக சுகம் எவ்வளவு வெறுக்கத்தக்கது என்பதை ஒருவன் உணர்ந்து கொள்வான். மற்றவர்களால் மனம் மாற்றப்பட்டு துறவை ஏற்பவர்கள், சுய அனுபவத்திற்குப் பிறகு துறவை ஏற்பவர்களைப் போல் அவ்வளவு சிறந்த துறவிகளாக இருப்பதில்லை.
பதம் 6.5.42
யன் நஸ் த்வம் கர்ம-ஸந்தானாம் ஸாதூனாம் க்ருஹமேதினம்
க்ருதவான் அஸி துர்மர்ஷம் விப்ரியம் தவ மர்ஷிதம்
யத்—எது; ந:—எங்களுக்கு; தவம்—நீர்; கர்ம-ஸந்தானாம்—வேத விதிகளுக்கேற்ப பலன் கருதும் கிரியைகளை உறுதியாகப் பின்பற்றும்; ஸாதூனாம்—நேர்மையானவர்கள் (ஏனெனில் நாங்கள் நேர்மையான முறையில் உயர்ந்த சமூக அந்தஸ்தையும், உடல் சௌகரியத்தையும் தேடிச் செல்கிறோம்); க்ருஹ-மேதினாம்—ஒரு மனைவியுடனும், குழந்தைகளுடனும் இருந்த போதிலும்; க்ருதவான் அஸி—ஏற்படுத்தியுள்ளீர்; துர்மர்ஷம்—சகிக்க முடியாத; விப்ரியம்—தீமை; தவ—உம்முடைய; மர்ஷிதம்—மன்னிக்கப்பட்டது.
நான் குடும்ப வாழ்வில் மனைவி, மக்களுடன் வாழ்ந்த போதிலும், வேத விதிகளுக்கேற்ப பலன்தரும் கருமங்களைச் செய்து, பாவ விளைவுகள் இல்லாத ஒரு வாழ்வை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நான் தேவ-யக்ஞம், ரிஷி-யக்ஞம், பித்ரு-யக்ஞம், ந்ரு-யக்ஞம் உட்பட எல்லா வகையான யக்ஞங்களையும் செய்திருக்கிறேன். இந்த யக்ஞங்கள் ‘விரதம்’ என்று அழைக்கப்படுவதால், நான் க்ருஹவ்ரதன் என்று அழைக்கப்படுகிறேன். துரதிர்ஷ்டவசமாக, நீர் காரணமின்றி என் மகன்களைத் துறவு மார்க்கத்திற்கு தவறாக வழிநடத்திச் சென்று பெரும் அதிருப்தியை எனக்கு அளித்துவிட்டீர். ஒருமுறை இதைப் பொறுத்துக் கொள்ளலாம்.
பதம் 6.5.43
தந்து-க்ருந்தன யன் நஸ் த்வம் அபத்ரம் அசர: புன:
தஸ்மால் லோகேஷு தே மூட ந பவேத் ப்ரமத: பதம்
தந்து-க்ருந்தன—இரக்கமின்றி என் மகன்களை என்னிடமிருந்து பிரித்த குழப்பக்காரரே; யத்—எந்த; ந:—எங்களுக்கு; தவம்—நீர்; அபத்ரம்—அமங்களமான ஒரு விஷயத்தை; அசர:—செய்திருக்கிறீர்; புன:—மீண்டும்; தஸ்மாத்—எனவே; லோகேஷு—பிரபஞ்சத்திலுள்ள எல்லாக் கிரக அமைப்புக்களிலும்; தே—உமக்கு; மூட—செயற்படத் தெரியாத மூடரே; ந—இல்லாமல்; பவேத்—இருக்கட்டும்; ப்ரமத:—சஞ்சரிக்கும் உமக்கு; பதம்—ஒரு வசிப்பிடம்.
நீர், ஒருமுறை என் மகன்களை நான் இழக்கும்படி செய்தீர். இப்பொழுது அதே அமங்களச் செயலை மீண்டும் செய்துள்ளீர். எனவே நீர் பிறரிடம் எப்படி நடந்து கொள்வது என்பதையறியாத வஞ்சகராவீர், நீர் இப்பிரபஞ்சம் முழுவதிலும் சஞ்சரிக்கக் கூடும் என்றாலும், எங்குமே உமக்கு வசிப்பிடம் இல்லாமல் போகட்டும் என்று நான் சபிக்கிறேன்.
பதம் 6.5.44
ஸ்ரீ-சுக உவாச
ப்ரதிஜக்ராஹ தத் பாடம் நாரத: ஸாது-ஸம்மத:
ஏதாவான் ஸாது-வாதோ ஹி திதிக்ஷேதேஸ்வர: ஸ்வயம்
ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ப்ரதிஜக்ராஹ—ஏற்றுக்கொண்டார்; தத்—அதை; பாடம்—அப்படியே ஆகட்டும் என்று; நாரத:—நாரத முனிவர்; ஸாது-ஸம்மத:—அங்கீகரிக்கப்பட்ட ஒரு சாதுவான; ஏதாவான்—இவ்வளவு; ஸாது-வாத:—ஒரு சாதுவுக்கு ஏற்ற; ஹி—உண்மையில்; திதிக்ஷேத—அவர் பொறுத்துக் கொள்ள முடியும்; ஈஸ்வர:—பிரஜாபதி தட்சனை சபிக்க முடியும் என்றாலும்; ஸ்வயம்—தானே .
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, நாரத முனிவர் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சாது என்பதால், அவர் பிரஜாபதி தட்சனால் சபிக்கப்பட்ட பொழுது, தத் பாடம்: “ஆம் உமது வாக்கு நல்லதாயிற்று. இச்சாபத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று பதிலளித்தார். பதிலுக்கு பிரஜாபதி தட்சனை அவர் சபித்திருக்கக் கூடும். ஆனால் அவர் பொறுமையும், கருணையும் மிக்க ஒரு சாது என்பதால், ஒன்றும் செய்யவில்லை.
ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “பிரஜாபதி தட்சன் நாரதரைச் சபித்தல்” எனும் தலைப்பை கொண்ட ஐந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.