அத்தியாயம் – 3
தன் தூதர்களுக்கு யமராஜனின் உபதேசம்
பதம் 6.3.1
ஸ்ரீ-ராஜோவாச
நிசம்ய தேவ: ஸ்வ-படோபவர்ணிதம்
ப்ரத்யாஹ கிம் தான் அபி தர்மராஜ:
ஏவம் ஹதாக்ஞோ விஹதான் முராரேர்
நைதேசிகைர் யஸ்ய வசே ஜனோ ‘யம்
ஸ்ரீ-ராஜா உவாச—அரசர் கூறினார்; நிசம்ய—கேட்ட பிறகு; தேவ:—யமராஜன்; ஸ்வ—பட—தன் சேவகர்களின்; உபவர்ணிதம்—கூற்றுகளை; ப்ரத்யாஹ—பதிலளித்தார்; கிம்—என்ன; தான்—அவர்களுக்கு; அபி—கூட; தர்ம-ராஜ:—மரண தேவரும், பாவ புண்ணியச் செயல்களுக்கு தீர்ப்பு வழங்குபவருமான யமதர்மராஜன்; ஏவம்—இவ்வாறு; ஹத-ஆக்ஞ:—எவருடைய கட்டளை செயற்படுத்தப்படவில்லையோ; விஹதான்—தோற்கடிக்கப்பட்டவர்கள்; முராரே: நைதேசிகை:—முராரி என்ற ஸ்ரீ கிருஷ்ணரின் தூதர்கள்; யஸ்ய—எவரின்; வசே—ஆட்சியின் கீழ்; ஜன: அயம்—உலக மக்களனைவரும் உள்ளனரோ.
பரீட்சித்து மகாராஜன் கூறினார்: என் பிரபுவே, சுகதேவ கோஸ்வாமியே, யமராஜன்தான் பாவ, புண்ணியங்களுக்கேற்ப அனைத்து ஜீவ ராசிகளையும் ஆள்கிறார். ஆனால் அவருடைய கட்டளையும் முறியடிக்கப்பட்டதே அஜாமிளனைக் கைது செய்வதிலிருந்து தங்களைத் தடுத்துவிட விஷ்ணுதூதர்களால் தாங்கள் தோற்கடிக்கப்பட்டதை யமதூதர்கள் யமராஜனிடம் கூறிய பொழுது அவர் என்ன பதிலளித்தார்.
பதம் 6.3.2
யமஸ்ய தேவஸ்ய ந தண்ட-பங்க:
குதஸ்சனர்ஷே ஸ்ருத-பூர்வ ஆஸீத்
ஏதன் முனே வ்ருஸ்சதி லோக-ஸம்சயம்
ந ஹி த்வத்-அன்ய இதி மே வினிஸ்சிதம்
யமஸ்ய—யமராஜனின்; தேவஸ்ய—நீதி தேவரான; ந—இல்லை; தண்ட-பங்க:—கட்டளை மீறப்பட்டது; குதஸ்சன—எங்கிருந்தும்; ரிஷே—மாமுனிவரே; ஸ்ருத-பூர்வ:—இதுவரை கேள்விப்பட்டது; ஆஸீத்—இருந்தது; ஏதத்—இது; முனே—மாமுனிவரே; வ்ருஸ்சதி—போக்கமுடியும்; லோக-ஸம்சயம்—மக்களின் சந்தேகத்தை; ந—இல்லை; ஹி—உண்மையில்; த்வத்-அன்ய:—தங்களைத் தவிர வேறுயாரும்; இதி—என்று; மே—என்றால்; வினிஸ்சிதம்—முடிவு செய்யப்படுகிறது.
மாமுனிவரே, யமராஜனின் ஒரு கட்டளை மீறப்பட்டதை இதுவரை நான் எங்குமே கேள்விப்பட்டதில்லை. எனவே இது குறித்து மக்களுக்கு ஏற்படப்போகும் சந்தேகங்களை, உங்களைத் தவிர வேறுயாரும் போக்க முடியாது. இதுதான் எனது உறுதியான நம்பிக்கை என்பதால், இச்சம்பவங்களுக்கான காரணங்களை விளக்கியருள வேண்டுகிறேன்.
பதம் 6.3.3
ஸ்ரீ-சுக உவாச
பகவத்-புருஷை ராஜன் யாம்யா: ப்ரதிஹதோத்யமா:
பதிம் விக்ஞாபயாம் ஆஸுர் யமம் ஸம்யமணீ-பதிம்
ஸ்ரீ-சுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பகவத் புருஷை:—பகவானின் சேவகர்களான விஷ்ணுதூதர்களால்; ராஜன்—அரசே; யாம்யா:—யமதூதர்கள்; ப்ரதிஹத-உத்யமா:—தங்கள் முயற்சி தடுக்கப்பெற்ற; பதிம்—தங்கம் எஜமானருமான; விக்ஞா பயாம் ஆஸு:—தெரிவித்தார்; யமம்—யமராஜனிடம்; ஸமயமனீ-பதிம்—சம்யமனீபுரியின் தலைவரும்.
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி பதிலளித்தார்: அரசே, விஷ்ணு தூதர்களால் தங்கள் முயற்சி தடுக்கப்பெற்ற யமதூதர்கள், தங்கள் எஜமானரும், சம்யமனீபுரியின் தலைவரும், பாவிகளைத் தண்டிப்பவருமான யமராஜனிடம் இச்சம்பவத்தை விவரிக்கச் சென்றனர்.
பதம் 6.3.4
யமதூதா ஊசு:
கதி ஸந்தீஹ சாஸ்தாரோ ஜீவ லோகஸ்ய வை ப்ரபோ
த்ரை-வித்யம் குர்வத: கர்ம ஃபலாபிவ்யக்தி-ஹேதவ:
யமதூதா: ஊசு:—யமதூதர்கள் கூறினர்; கதி—எத்தனை; ஸந்தி—இருக்கிறார்கள்; இஹ—இவ்வுலகில்; சாஸ்தார:—ஆளுனர்கள்; ஜீவ-லோகஸ்ய—இந்த ஜட உலகின்; வை—உண்மையில்; ப்ரபோ—பிரபுவே; த்ரை-வித்யம்—மூன்று ஜட இயற்கைக் குணங்களின் கீழ்; குர்வத:—செய்பவர்கள்; கர்ம—செயல்களை; ஃபல—பலன்களின்; அபிவ்யக்தி—தோற்றங்களுக்கு; ஹேதவ:—காரணங்கள்.
யமதூதர்கள் கூறினர்: பிரபுவே, இந்த ஜட உலகில் எத்தனை ஆளுனர்கள் உள்ளனர்? மூன்று ஜட இயற்கைக் குணங்களின் கீழ் (ஸத்வ-குண, ரஜோ-குண மற்றும் தமோ-குண) செய்யப்படும் செயல்களின் பல்வேறு பலன்களைத் தோற்றுவிப்பதற்குக் காரணமாக உள்ளவர்கள் எத்தனை பேர்?
பதம் 6.3.5
யதி ஸ்யுர் பஹவோ லோகே சாஸ்தாரோ தண்ட-தாரின:
கஸ்ய ஸ்யாதாம் ந வா கஸ்ய ம்ருத்யுஸ் சாம்ருதம் ஏவ வா
யதி—என்றால்; ஸ்யு:—இருக்கிறார்கள்; பஹவ:—பலர்; லோகே—இவ்வுலகில்; சாஸ்தார:—ஆளுனர்கள்; தண்ட-தாரின:—பாவிகளைத் தண்டிப்பவர்கள்; கஸ்ய—எவருடைய; ஸ்யாதாம்—இருக்கக்கூடும்; ந—இல்லை; வா—அல்லது; கஸ்ய—எவரின்; ம்ருத்யு:—கஷ்டம் அல்லது வருத்தம்; ச—மேலும்; அம்ருதம்—மகிழ்ச்சி; ஏவ—நிச்சயமாக; வா—அல்லது.
இப்பிரபஞ்சத்தில் கருத்து வேறுபாடுகள் உள்ள பல ஆளுனர்களும், நீதிபதிகளும் இருப்பார்களானால், அவர்களுடைய தண்டனையும், வெகுமதியும் வெவ்வேறாக இருக்கும். இவ்வாறாக அவர்களுடைய தீர்ப்புகள் ஒன்றையொன்று எதிர்த்து, ஒன்றை மற்றொன்று பயனில்லாமல் செய்துவிடும். இதனால் ஒருவருமே தண்டிக்கப்படவோ அல்லது வெகுமதி அளிக்கப்படவோமாட்டார்கள். ஒருவேளை கருத்துவேறுபாடுள்ள அவர்களது செயல்கள் ஒன்றையொன்று நிஷ்பலமாக்கவில்லை என்றால், எல்லோருமே தண்டனைக்கும், வெகுமதிக்கும் ஆளாவார்கள்.
பதம் 6.3.6
கிந்து சாஸ்த்ரு-பஹுத்வே ஸ்யாத் பஹூனாம் இஹ கர்மிணாம் சாஸ்த்ருத்வம் உபசாரோ ஹி யதா மண்டல-வர்த்தினாம்
கிந்து—ஆனால்; ஸாஸ்த்ரு—ஆளுனர்கள் அல்லது நீதிபதிகள்; பஹுத்வே—பலர்; ஸ்யாத்—இருக்கக்கூடும்; பஹூணாம்—பலருடைய; இஹ—இவ்வுலகில்; கர்மிணாம்—செயலாற்றுபவர்கள்; சாஸ்த்ருத்வம்—நிர்வாக இலாக்கா; உபசார:—நிர்வாகம்; ஹி—உண்மையில்; யதா—அதுபோல்; மண்டல-வர்தினாம்—இலாக்காக்களின் தலைவர்களுடைய.
யமதூதர்கள் தொடர்ந்து கூறினர்: பலதரப்பட்ட கருமிகள், அல்லது செயல் புரிபவர்கள் இருப்பதால், அவர்களுக்கு நியாயம் வழங்க வெவ்வேறு நீதிபதிகள் அல்லது தலைவர்கள் இருக்கக்கூடும். ஆனால் ஒரு மத்திய பெருந்தலைவர் வெவ்வேறு இலாக்காக்களின் தலைவர்களைக் கட்டுப்படுத்துவது போல், எல்லா நீதிபதிகளுக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு பரம ஆளுனர் இருந்தாக வேண்டும்.
பதம் 6.3.7
அதஸ் த்வம் ஏகோ பூதானாம் ஸேஸ்வராணாம் அதீஸ்வர:
சாஸ்தா தண்ட-தரோ ந்ரூணாம் சுபாசுப-விவேசன:
அத:—அதனால்; த்வம்—தாங்கள்; ஏக:—ஒருவரே; பூதானாம்—அனைத்து ஜீவராசிகளுக்கும்; ஸ-ஈஸ்வராணாம்—அனைத்து தேவர்களும் உட்பட; அதீஸ்வர:—மிகவுயர்ந்த தலைவர்; சாஸ்தா—பரம ஆளுனர்; தண்ட-தர:—தண்டனையளிக்கும் உயர்அதிகாரி; ந்ரூணாம்—மனித சமுதாயத்தில்; சுப-அசுப-விவேசன:—புண்ணியங்களையும், பாவங்களையும் பகுத்தறிபவர்.
தலைமை நீதிபதி ஒருவராகத்தான் இருக்க வேண்டும், பலர் அல்ல. தாங்கள்தான் அந்த தலைமை நீதிபதி என்றும், தேவர்கள் மீதும் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும் நாங்கள் நினைத்திருந்தோம். மேலும் தாங்களே அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைவர் என்றும், மனிதர்களின் பாவங்களையும், புண்ணியங்களையும் பகுத்துணர்ந்து அவர்களைத் தண்டிக்கும் பரம அதிகாரி என்றும் நினைத்தோம்.
பதம் 6.3.8
தஸ்ய தே விஹிதோ தண்டோ ந லோகே வர்ததே ‘துனா
சதுர்பிர் அத்புதை: ஸித்தைர் ஆக்ஞா தே விப்ரலம்பிதா
தஸ்ய—செல்வாக்கின்; தே—உங்களால்; விஹித:—உத்தரவிடப்பட்ட; தண்ட:—தண்டனை; ந—இல்லை; லோகே—இவ்வுலகில்; வர்ததே—இருக்கிறது; அதுனா—இப்பொழுது; சதுர்பி:—நான்கு; அத்புதை:—அதியற்புதமான; ஸித்தை:—சித்தர்களால்; ஆக்ஞா—கட்டளை; தே—உங்களுடைய; விப்ரலம்பிதா—மீறப்பட்டது.
ஆனால் தங்களுடைய கட்டளை அற்புதமான நான்கு சித்தர்களால் மீறப்பட்டுவிட்டதால், தங்களால் உத்தரவிடப்பட்ட தண்டனை இப்பொழுது உலகில் செல்லவில்லை என்பதை நாங்கள் காண்கிறோம்.
பதம் 6.3.9
நீயமானம் தவாதேசாத் அஸ்மாபிர் யாதனா-க்ருஹான்
வ்யாமோசயன் பாதகினம் சித்வா பாசான் ப்ரஸஹ்ய தே
நீயமானம்—கொண்டுவரப்பட்ட; தவ ஆதேசாத்—தங்கள் கட்டளைப்படி; அஸ்மாபி:—எங்களால்; யாதனா-க்ருஹான்—சித்திரவதை அறைகளான நரக லோகங்களுக்கே; வ்யாமோசயன்—விடுவித்துவிட்டனர்; பாதகினம்—பாவியான அஜாமிளனை; சித்வா—அறுத்து; பாசான்—பாசக்கயிறுகளை; ப்ரஸஹ்ய—பலாத்காரமாக; தே—அவர்கள்.
தங்கள் கட்டளைப்படி, மகாபாவியான அஜாமிளனை நரக லோகங்களுக்குக் கொண்டுவர, பாசக் கயிறுகளால் அவனை நாங்கள் கட்டியிருந்தோம். அப்பொழுது சித்தலோகத்திலிருந்து வந்த அந்த அழகிய புருஷர்கள் பலாத்காரமாக அப்பாசக் கயிறுகளைக் கட்டவிழ்ந்து அவனை விடுவித்து விட்டனர்.
பதம் 6.3.10
தாம்ஸ் தே வேதிதும் இச்சாமோ யதி நோ மன்யஸே க்ஷமம்
நாராயணேதி அபிஹிதே மா பைர் இதி ஆயயுர் த்ருதம்
தான்—அவர்களைப் பற்றி; தே—தங்களிடமிருந்து; வேதிதும்—அறிய; இச்சாம:—நாங்கள் விரும்புகிறோம்; யதி—என்றால்; ந:—எங்களுக்கு; மன்யஸே—தாங்கள் நினைத்தீர்கள்; க்ஷமம்—தகுதியுடையவர்கள்; நாராயண—நாராயணா; இதி—என்று; அபிஹிதே—உச்சரித்ததும்; மா—வேண்டாம்; பை:—பயப்பட; இதி—இவ்வாறு; ஆயயு:—அவர்கள் வந்து விட்டனர்; த்ருதம்—விரைவில்.
பாவியான அஜாமிளன் நாராயணா என்று உச்சரித்த உடனேயே, இந்நான்கு சுந்தர புருஷர்களும், “பயப்படாதே” என்று கூறிக் கொண்டு உடனடியாக அங்கு வந்துவிட்டனர். அவர்களைப் பற்றி உங்களிடமிருந்து அறிய நாங்கள் விரும்புகிறோம். எங்களால் அவர்களைப் புரிந்துகொள்ள முடியும் என்று தாங்கள் எண்ணினால், அவர்கள் யார் என்பதை விவரிக்க வேண்டுகிறோம்.
பதம் 6.3.11
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
இதி தேவ: ஸ ஆப்ருஷ்ட: ப்ரஜா-ஸம்யமனோ யம:
ப்ரீத: ஸ்வ-தூதான் ப்ரத்யாஹ ஸ்மரன் பாதாம்புஜம் ஹரே:
ஸ்ரீ-பாதராயணி: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; தேவ:—தேவர்; ஸ:—அவர்; ஆப்ருஷ்ட:—கேட்கப்பட்ட; ப்ரஜா-ஸம்யமன: யம:—ஜீவராசிகளை ஆள்பவரான யமராஜன்; ப்ரீத:—சந்தோஷமடைந்து; ஸ்வ-தூதான்—அவரது சேவகர்களுக்கு; ப்ரத்யாஹ—பதிலளித்தார்; ஸ்மரன்—நினைந்து; பாத-அம்புஜம்—தாமரைப் பாதங்களை; ஹரே:—பரமபுருஷரான ஸ்ரீ ஹரியின்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஜீவராசிகளின் பரம ஆளுனரான யமராஜன் இவ்வாறு கேட்கப்பட்டவுடன், நாராயணரின் புனித நாமத்தை உச்சரித்ததால் தம் சேவகர்களிடம் மிகவும் மகிழ்ந்த, அவர் பகவானின் தாமரைப் பாதங்களை மனதில் தியானித்து, பதிலளிக்கத் துவங்கினர்.
பதம் 6.3.12
யம உவாச
பரோ மத்-அன்யோ ஜகதஸ் தஸ்துஷஸ் ச
ஓதம் ப்ரோதம் படவத் யத்ர விஸ்வம்
யத்-அம்சதோ ‘ஸ்ய ஸ்திதி-ஜன்ம-நாச
நஸி ஓதவத் யஸ்ய வசே ச லோக:
யம: உவாச—யமராஜன் பதிலளித்தார்; பர:—உயர்ந்தவர்; மத்—என்னைவிட; அன்ய:—வேறொருவர்; ஜகத:—அசையும் பொருள்களின்; தஸ்துஷ:—அசையாத பொருள்களின்; ச—மற்றும்; ஓதம்—குறுக்கும்; ப்ரோதம்—நெடுக்கும்; படவத்—நெய்யப்பட்ட ஒரு துணியைப் போல்; யத்ர—எவரிடத்து; விஸ்வம்—இப்பிரபஞ்சத் தோற்றம்; யத்—எவருடைய; அம்சத:—அம்சங்களிலிருந்து; அஸ்ய—பிரபஞ்சத்தின்; ஸ்திதி—காத்தல்; ஜன்ம—படைத்தல்; நாசா:—அழித்தல்; நஸி—மூக்கிலுள்ள; ஓத-வத்—கயிறு போல்; யஸ்ய—யாருடைய; வசே—கட்டுப்பாட்டின் கீழ்; ச—மேலும்; லோக:—சிருஷ்டி முழுவதும்.
யமராஜன் கூறினார்: என் அருமை சேவகர்களே, உண்மையில் நீங்கள் நினைப்பது போல் நான் பரமனல்ல. எனக்கும் மேலாக, இந்திரன் சந்திரன் உட்பட மற்றெல்லா தேவர்களுக்கும் மேலாக, பரம ஆளுனரும், பெருந்தலைவருமான ஒருவர் இருக்கிறார். பிரபஞ்சத்தின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலுக்குப் பொறுப்பேற்றுள்ள பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோர் அவரது பூரணமற்ற அம்சங்களாவர். அவர், நெய்யப்பட்டுள்ள ஒரு துணியில் குறுக்கும், நெடுக்கும் செல்லும் இரு நூல்களைப் போன்றவராவார். ஒரு காளை அதன் மூக்கணாங்கயிற்றால் ஆளப்படுவது போல், உலகம் முழுவதுமே அவரால்தான் ஆளப்படுகிறது.
பதம் 6.3.13
யோ நாமபிர் வாசி ஜனம் நிஜாயாம்
பத்னாதி தந்த்ரியாம் இவ தாமபிர் கா:
யஸ்மை பலிம் த இமே நாம-கர்ம-
நிபந்த-பத்தாஸ் சகிதா வஹந்தி
ய:—எவனொருவன்; நாமபி:—வெவ்வேறு பெயர்களால்; வாசி—வேத வாக்கியங்களுக்கே; ஜனம்—எல்லா ஜனங்களும்; நிஜாயாம்—அவரிலிருந்து வெளிப்பட்டுள்ள; பத்னாதி—கட்டுகிறார்; தந்த்ரியாம்—ஒரு கயிற்றால்; இவ—போன்று; தாமபி:—கயிற்றால்; கா:—காளை மாடுகள்; யஸ்மை—யாருக்கு; பலிம்—வரியாக செலுத்தப்படும் சிறு பாகம்; தே—அவர்களனைவரும்; இமே—இந்த; நாம-கர்ம—வெவ்வேறு பெயர்களும், செயல்களும் உடைய; நிபந்த—நிபந்தனைகளால்; பத்தா:—கட்டுண்டு; சகிதா:—அச்சத்தால்; வஹந்தி—எடுத்துச் செல்கின்றனர்.
மாட்டு வண்டிக்காரன் எப்படி தன் காளைமாடுகளை அடக்க அவற்றின் மூக்குகளில் முக்கணாங்கயிறுகளைப் பொருத்துகிறானோ, அப்படியே பரம புருஷரும், மனித சமுதாயத்தின் (பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய) வெவ்வேறு பிரிவுகளின் பெயர்களையும், செயல்களையும் நிர்ணயிக்கும் வேத வாக்கியங்களெனும் கயிறுகளின் மூலமாக அனைவரையும் கட்டுகிறார். வெவ்வேறு வர்ணங்களைச் சேர்ந்த இவர்கள் பயத்தினால் உந்தப்பட்டு, அவரவர் செயல்களுக்குத் தக்கவாறு பரமபுருஷருக்கு காணிக்கைகளைச் செலுத்தி அவரை வழிபடுகின்றனர்.
பதங்கள் 6.3.14 – 6.3.15
அஹம் மஹேந்ரோ நிர்ருதி: ப்ரசேதா:
ஸோமோ ‘க்னிர் ஈச: பவனோ விரிஞ்சி:
ஆதித்ய விஸ்வே வஸவோ ‘த ஸாத்யா
மருத்-கணா ருத்ர-கணா: ஸஸித்தா:
அன்யே ச யே விஸ்வ-ஸ்ருஜோ ‘மரேசா
ப்ருகு-ஆதயோ ‘ஸ்ப்ருஷ்ட-ரஜஸ்-தமஸ்கா:
யஸ்யேஹிதம் ந விது: ஸ்ப்ருஷ்ட-மாயா:
ஸத்வ-ப்ரதானா அபி கிம் ததோ ‘ன்யே
அஹம்—நான்; (யமராஜன்); மஹேந்ர:—அவர்கள் ராஜனான இந்திரன்; நிர்ருதி:—நிர்ருதி; ப்ரசேதா:—தண்ணீருக்கு அதிதேவதையான வருணன்; ஸோம:—சந்திரன்; அக்னி:—அக்னி; ஈச:—சிவபெருமான்; பவன:—காற்று தேவன்; விரிஞ்சி:—பிரம்ம தேவர்; ஆதித்ய—சூரியன்; விஸ்வே—விஸ்வாசு; வஸவ:—எட்டு வஸுக்கள்; அத—மேலும்; ஸாத்யா:—தேவர்கள்; மருத்-கணா:—காற்றின் தலைவர்கள்; ருத்ர-கணா:—சில கணங்கள்; ஸ-ஸித்தா:—சித்த லோக வாசிகளுடன்; அன்யே—மற்றவர்கள்; ச—மேலும்; யே—யார்; விஸ்வ-ஸ்ருஜ்:—பிரபஞ்சத்தின் சிருஷ்டி வேலைகளைக் கவனிக்கும் மரீசி முதலானவர்கள்; அமர-ஈசா:—பிருஹஸ்பதி போன்ற தேவர்கள்; ப்ருகு-ஆதய:—பிருகு முதலான மாமுனிவர்கள்; அஸ்ப்ருஷ்ட—களங்கப்படாதவர்கள்; ரஜ:-தமஸ்கா:—தாழ்ந்த ஜட இயற்கைக் குணங்களால் (ரஜோ குணம் மற்றும் தமோ குணம்); யஸ்ய—யாருடைய; ஈஹதம்—நடவடிக்கை; ந-விது:—அறிந்திருக்கவில்லை; ஸ்ப்ருஷ்ட மாயா:—மாயா சக்தியால் மயக்கப்பட்டுள்ளவர்கள்; ஸத்வ-ப்ரதானா:—சத்வகுணம் மேலோங்கியிருந்த; அபி—போதிலும்; கிம்—என்னென்றும் சொல்வது; தத:—அவர்களைவிட; அன்யே—மற்றவர்களை.
நான் (யமராஜன்); இந்திரன்; நிர்ருதி; வருணன்; சந்திரன்; அக்னி; சிவபெருமான்; பவனர்; பிரம்ம தேவர்; சூரிய தேவன்; விஸ்வாசு; எட்டு வசுக்கள்; சாத்யர்கள்; மருத்கள்; ருத்திரர்கள்; சித்தர்கள்; பிரபஞ்ச விவகாரங்களை நடத்துவதில் ஈடுபட்டுள்ள மரீசி முதலான மற்ற மகரிஷிகள்; பிருகஸ்பதி முதலான தேவோத்தமர்கள் மற்றும் பிருகு முதலான மாமுனிவர்கள் ஆகிய நாங்களனைவரும் ரஜோ மற்றும் தமோ என்ற இரு கீழான ஜட இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுள்ளோம் என்பதில் ஐயமில்லை. ஆயினும், சத்வ குணத்திலுள்ள எங்களால் கூட பரமபுருஷரின் செயல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படியிருக்க, இறைவனை அறிந்துவிட்டதாக மனப்பால் குடிக்கும், மாயையின் வசப்பட்டுள்ள மற்றவர்களைப் பற்றி என்னென்று சொல்வது?
பதம் 6.3.16
யம் வை ந கோபிர் மனஸாஸுபிர் வா
ஹ்ருதா கிரா வாஸு-ப்ருதோ விசக்ஷதே
ஆத்மானம் அந்தர்-ஹ்ருதி ஸந்தம் ஆத்மானாம்
சக்ஷுர் யதைவாக்ருதயஸ் தத: பரம்
யம்—யாரை; வை—உண்மையில்; ந—இல்லை; கோபி—புலன்களால்; மனஸா—மனதால்; அஸுபி:—உயிர் மூச்சினால்; வா—அல்லது; ஹ்ருதா—எண்ணங்களினால்; கிரா—வார்த்தைகளால்; வா—அல்லது; அஸு-ப்ருத:—ஜீவராசிகள்; விசக்ஷதே—பார்க்கிறார்கள் அல்லது அறிகிறார்கள்; ஆத்மானம்—பரமாத்மாவை; அந்த: ஹ்ருதி—அந்தராத்மாவில்; ஸந்தம்—உறையும்: ஆத்மனாம்—ஜீவராசிகளின்; சக்ஷு—கண்கள்; யதா—போல்; ஏவ—உண்மையில்; ஆக்ருதய:—உடலின் வெவ்வேறு பாகங்கள்; தத:—அவைகளை விட; பரம்—உயர்ந்த.
எப்படி உடலின் வெவ்வேறு பகுதிகளால் கண்களைக் காண முடியாதோ, அப்படியே எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக உறையும் பரமபுருஷரை ஜீவராசிகளால் காண முடியாது. புலன்களாலோ, உயிர்மூச்சினாலோ, இதயத்தில் தோன்றும் எண்ணங்களாலோ, அல்லது வார்த்தைகளின் அதிர்வினாலோ பரமபுருஷரின் உண்மை நிலையை ஜீவராசிகளால் ஆராய்ந்தறிய முடியாது.
பதம் 6.3.17
தஸ்யாத்ம-தந்த்ரஸ்ய ஹரேர் அதீசிது:
பரஸ்ய மாயாதிபதேர் மஹாத்மன:
ப்ராயேண தூதா இஹ வை மனோஹராஸ்
சரந்தி தத்-ரூப-குண-ஸ்வபாவா:
தஸ்ய—அவருடைய; ஆத்ம-தந்த்ரஸ்ய—வேறெவரையும் நம்பியிராமல், சுயதேவை பூர்த்தியுடைய; ஹரே:—பரமபுருஷர்; அதீசிது:—அனைத்திற்கும் தலைவரான; பரஸ்ய—பரமானவர்; மாயா-அதிபதே:—மாயா சக்தியின் எஜமானர்; மஹா-ஆத்மன:—பரமாத்மாவின்; ப்ராயேண—கிட்டத்தட்ட; தூதா:—தூதர்கள்; இஹ—இவ்வுலகில்; வை—உண்மையில்; மனோஹரா:—நடவடிக்கைகளிலும், தேக அம்சங்களிலும் இன்பமூட்டுபவர்களாய்; சரந்தி—அவர்கள் நடமாடுகிறார்கள்; தத்—அவருடைய; ரூப—தேக அம்சங்களைப் பெற்று; குண—உன்னத குணங்களையும்; ஸ்வ-பாவா:—சுபாவத்தையும்.
பரமபுருஷர் தன்னிறைவு உடையவரும், பூரண சுதந்திரமுள்ளவருமாவார். அவரே மாயா சக்தி உட்பட அனைத்திற்கும், அனைவருக்கும் எஜமானராவார். அவருக்கு ரூபம், குணங்கள் மற்றும் அம்சங்கள் ஆகியவை உண்டு; அதுபோலவே அவரது தூதர்களும், சுந்தர புருஷர்களுமாகிய வைஷ்ணவர்களும் கிட்டத்தட்ட பகவானுடையதைப் போன்ற தேக அம்சங்களையும், உன்னத குணங்களையும், உன்னத சுபாவத்தையும் பெற்றுள்ளனர். அவர்கள் இவ்வுலகில் எப்பொழுதும் பூரண சுதந்திரத்துடன் சஞ்சரிக்கின்றனர்.
பதம் 6.3.18
பூதானி விஷ்ணோ: ஸுர-பூஜிதானி
துர்தர்-லிங்கானி மஹாத்புதானி
ரக்ஷந்தி தத்-பக்திமத: பரேப்யோ
மத்தஸ் ச மர்த்யான் அத ஸர்வதஸ் ச
பூதானி—ஜீவராசிகள் அல்லது சேவகர்கள்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; ஸுர-பூஜிதானி—தேவர்களாலும் பூஜிக்கப்படும்; துர்தர்ச-லிங்கானி—எளிதில் காணப்படாத ரூபங்களை உடைய; மஹா-அத்புதானி—மிகவும் அற்புதமான; ரக்ஷந்தி—அவர்கள் காக்கிறார்கள்; தத்-பக்தி-மத:—பகவத் பக்தர்கள்; பரேப்ய:—பகைமை கொண்ட மற்றவர்களிடமிருந்து; மத்த:—என்னிடமிருந்தும் (யமராஜன்), என் தூதர்களிடமிருந்தும்; ச—மேலும்; மர்த்யான்—மனிதர்கள்; அத—இவ்வாறு; ஸர்வத:—அனைத்திலிருந்தும்; ச—மற்றும்.
தேவர்களாலும் பூஜிக்கப்படுபவர்களான பகவான் விஷ்ணுவின் தூதர்கள், விஷ்ணுவினுடையதைப் போன்ற அற்புதமான தேக அம்சங்களைப் பெற்றுள்ளனர். அவர்களைக் காண்பது மிகவும் அரிது. விஷ்ணுதூதர்கள் பக்தர்களைப் பகைவர்களிடமிருந்தும், பொறாமை கொண்டவர்களிடமிருந்தும், இயற்கையின் தொல்லைகளிலிருந்தும், என் ஆதிக்கத்திலிருந்தும் கூட காப்பாற்றுகின்றனர்.
பதம் 6.3.19
தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம்
ந வை விதுர் ரிஷயோ நாபி தேவா:
ந ஸித்த-முக்யா அஸுரா மனுஷ்யா:
குதோ நு வித்யாதர-சாரணாதய:
தர்மம்—உண்மையான மதக் கோட்பாடுகள்; து—ஆனால்; ஸாக்ஷாத்—நேரடியாக; பகவத்—பரமபுருஷரால்; ப்ரணீதம்—சட்டமாக்கப்பட்டவையாகும்; ந—இல்லை; வை—உண்மையில்; விது:—அவர்கள் அறிவார்கள்; ரிஷய:—பிருகு போன்ற மகாரிஷிகள்; ந—இல்லை; அபி—கூட: தேவா:—தேவர்களோ; ந—அல்லது; ஸித்த-முக்யா:—சித்த லோகத்திலுள்ள முக்கிய தலைவர்களோ; அஸுரா:—அசுரர்களோ; மனுஷ்யா:—பூர்லோக வாசிகளான மனிதர்களோ; குத:—எங்கு; நு—உண்மையில்; வித்யாதர—சிறிய தேவர்களான வித்யாதரர்களோ; சாரண—இயற்கையாகவே இசை ஞானமுள்ள சாரணலோக வாசிகள்; ஆதய:—முதலானவர்கள்.
உண்மையான மதக் கோட்பாடுகள் நேரடியாக பரமபுருஷரால் இயற்றப்படுபவையாகும். முழுமையாக சத்வ குணத்தில் உள்ளவர்களும், மிகவுயர்ந்த கிரகங்களில் வாழ்பவர்களுமான சிறந்த ரிஷிகளால் கூட உண்மையான சமயக் கோட்பாடுகளை ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாது. தேவர்களாலும், சித்தலோகத் தலைவர்களாலும் முடியாது. அசுரர்களோ, சாதாரண மனிதர்களோ, வித்யாதரர்களோ, சாரணர்களோ எங்கனம் அதை அறிவர்?
பதங்கள் 6.3.20 – 6.3.21
ஸ்வாயம்பூர் நாரத: சம்பு: குமார: கபிலோ மனு:
ப்ரஹ்லாதோ ஜனகோ பீஷ்மோ பலிர் வையாஸகிர் வயம்
த்வாதசைதே விஜானீமோ தர்மம் பாகவதம் படா:
குஹ்யம் விசுத்தம் துர்போதம் யம் ஞாத்வாம்ருதம் அஸ்னுதே
ஸவயம்பூ:—பிரம்மதேவர்; நாரத:—மாமுனிவரான நாரதர்; சம்பு:—சிவ பெருமான்; குமார:—நான்கு குமாரர்கள்; கபில:—பகவான் கபிலர்; மனு:—சுயம்புவ மனு; ப்ரஹ்லாத:—பிரகலாத மகாராஜன்; ஜனக:—ஜனக மகாராஜன்; பீஷ்ம:—பாட்டனார் பீஷ்மர்; வையாஸகிர்—வியாசதேவரின் மகன் சுகதேவர்; வயம்—யாம்; த்வாதச—பன்னிருவரும்; ஏதே—இந்த; விஜானீம:—அறிவோம்; தர்மம்—உண்மையான சமயக் கோட்பாடுகளை; பாகவதம்—பரமபுருஷரை நேசிப்பதெப்படி என்பதை போதிக்கும்; படா:—அன்பிற்குரிய சேவகர்களே; குஹ்யம்—மிகவும் இரகசியமானதும்; விசுத்தம்—ஜட இயற்கைக் குணங்களால் களங்கப்படாத உன்னதமானதும்; துர்போதம்—எளிதில் புரிந்துகொள்ள முடியாததுமான; யம்—எதை; ஞாத்வா—அறிந்து கொண்டால்; அம்ருதம்—நித்திய வாழ்வை; அஸ்னுதே—அவன் அனுபவிக்கிறானோ.
பிரம்ம தேவர், நாரதர், சிவ பெருமான், நான்கு குமாரர்கள், பகவான் கபிலர் (தேவஹூதியின் மகன்), சுயம்புவ மனு, பிரகலாத மகாராஜன், ஜனக மகாராஜன், பாட்டனார் பீஷ்மர், பலி மகாராஜன், சுகதேவ கோஸ்வாமி மற்றும் நான் ஆகிய பன்னிருவரும் உண்மையான சமயக் கோட்பாட்டை அறிந்தவர்களாவோம். அன்பிற்குரிய சேவகர்களே, பாகவத-தர்மம் அல்லது பரமபுருஷரிடம் அன்பு கொண்டு அவரிடம் சரணாகதியடைதல் எனப்படும் இந்த உன்னதமான சமயக் கோட்பாடு, ஜட இயற்கைக் குணங்களால் கறைப்படுத்தப்படாததாகும். இது மிகவும் இரகசியமானதும், சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்வதற்குக் கடினமானதுமாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இதை ஒருவன் புரிந்து கொண்டுவிட்டால், அவன் உடனே முக்தியடைந்து பரமபதத்திற்கு பகவானின் இராஜ்ஜியத்திற்குச் சென்று விடுகிறான்.
பதம் 6.3.22
ஏதாவான் ஏவ லோகே ‘ஸ்மின் பும்ஸாம் தர்ம: பர: ஸ்ம்ருத:
பக்தி-யோகோ பவகதி தன் நாம க்ரஹணாதிபி:
ஏதாவான்—இவ்வளவு; ஏவ—உண்மையில்; லேகே அஸ்மின்—இவ்வுலகில்; பும்ஸாம்—ஜீவராசிகளின்; தர்ம:—சமயக் கோட்பாடுகள்; பர:—உன்னதமான; ஸ்ம்ருத:—அறியப்படுகிறது; பக்தி-யோக:—பக்தித் தொண்டு; பகவதி—பரமபுருஷருக்கு (தேவர்களுக்கல்ல); தத்—அவருடைய; நாம—புனித நாமத்தை; க்ரஹண-ஆதிபி:—ஜபித்தல் முதலான.
பகவானின் புனித நாம ஜபத்திலிருந்து துவங்கும் பக்தித் தொண்டுதான், மனித சமுதாயத்திலுள்ள ஜீவராசிக்கு முடிவான சமயக் கோட்பாடாகும்.
பதம் 6.3.23
நாமோச்சாரண-மாஹாத்ம்யம் ஹரே: பஸ்யத புத்ரகா:
அஜாமிளோ ‘பி யேனைவ மருத்யு-பாசாத் அமுச்யத
நாம—புனித நாமத்தை; உச்சாரண—உச்சரிப்பதன்; மாஹாத்ம்யம்—மகத்துவத்தை; ஹரே:—பரமபுருஷரின்; பஸ்யத—பாருங்கள்; புத்ரகா:—என் புத்திரர்களைப் போன்ற பிரியமுள்ள எனது சேவகர்களே; அஜாமிளா:-அபி—(மகா பாவி என்று கருதப்பட்ட) அஜாமிளன் கூட; யேன—எந்த நாமத்தை உச்சரித்ததால்; ஏவ—நிச்சயமாக; மருத்யு-பாசாத்—மரணத்தின் கயிறுகளிலிருந்து; அமுச்யத—விடுதலை அடைந்தான்.
என் மகன்களுக்கு நிகரான பிரியமுள்ள சேவகர்களே, பகவானுடைய புனித நாம ஜபத்தின் மகத்துவத்தைப் பாருங்கள். மகாபாவியான அஜாமிளன், பகவான் புனித நாமத்தை உச்சரிக்கிறோம் என்பதை அறியாமைலேயே, பகவானின் நாமத்தைச் சொல்லி தன் மகனை அழைத்தான். ஆயினும், பகவானின், புனித நாமத்தை ஜபித்ததால் பகவான் நாராயணரை அவன் நினைத்துக் கொண்டான். இவ்வாறாக மரணத்தின் கயிறுகளிலிருந்து அவன் உடனே காப்பாற்றப்பட்டான்.
பதம் 6.3.24
ஏதாவதாலம் அக-நிர்ஹரணாய பும்ஸாம்
ஸங்கீர்த்தனம் பகவதோ குண-கர்ம-நாம்னாம்
விக்ருஸ்ய புத்ரம் அகவான் யத் அஜாமிளோ ‘பி
நாராயணேதி ம்ரியமாண இயாய முக்திம்
ஏதாவதா—இவ்வளவே; அலம்—போதும்; அக-நிர்ஹரணாய—பாவ விளைவுகளை அகற்றுவதற்கு; பும்ஸாம்—மனிதர்களின்; ஸங்கீர்த்தனம்—கூட்டுப் பிரார்த்தனை; பகவத:—பரமபுருஷரின்; குண—உன்னத குணங்களின்; கர்ம-நாம்னாம்—மற்றும் அவரது செயல்களுக்கும், லீலைகளுக்கும் ஏற்ப உள்ள அவரது நாமங்களின்; விக்ருஸ்ய—குற்றமில்லாமல் கதறியழைத்து; புத்ரம்—தன் மகனை; அகவான்—பாவியான; யத்—என்பதால்; அஜாமிள: அபி—அஜாமிளன் கூட; நாராயண—நாராயணா என்ற பகவானின் நாமத்தை; இதி—இவ்வாறு; ம்ரியமாண:—சாகும் பொழுது; இயாய—அடைந்தான்; முக்திம்—முக்தியை.
எனவே, பகவானின் புனித நாம ஜபத்தினாலும், அவரது குணங்கள் மற்றும் செயல்களைப் பாடுவதாலும், ஒருவன் எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் எளிதில் விடுபடுகிறான் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். பாவ விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கு இந்த ஒரு வழிமுறைதான் சிபாரிசு செய்யப்படுகிறது. பகவானின் புனித நாமத்தைப் பிழையான உச்சரிப்புடன் ஒருவன் ஜபித்தாலும், அது குற்றமின்றி ஜபிக்கப்படுமானால், பெளதிக பந்தத்திலிருந்து அவன் விடுதலையடைவான். உதாரணமாக, அஜாமிளன் மகா பாவியாக இருந்த போதிலும், இறக்கும் தறுவாயில் அவன் புனித நாமத்தை உச்சரித்தான். உண்மையில் அவன் தன் மகனைத்தான் அழைத்தான் என்றாலும், நாராயணரின் திருநாமத்தை நினைத்த காரணத்தால் அவன் பரிபூரண முக்தியடைந்தான்.
பதம் 6.3.25
ப்ராயேண வேத தத் இதம் ந மஹாஜனோ ‘யம்
தேவ்யா விமோஹித-மதிர் பத மாயயாலம்
த்ரய்யாம் ஜடீ-க்ருத-மதிர் மது-புஷ்பிதாயாம்
வைதானிகே மஹதி கர்மணி யுஜ்யமான:
ப்ராயேண—கிட்டத்தட்ட எப்பொழுதும்; வேத—தெரிந்து கொள்வது; தத்—இதை; ந—இல்லை; மஹாஜன:—சுயம்பு, சம்பு, மற்ற பத்து பேர் ஆகியோரைத் தவிர வேறு மகா புருஷர்கள்; அயம்—இது; தேவ்யா—பரமபுருஷரின் சக்தியால்; விமோஹித மதி:—மதிமயங்கியுள்ள; பத—உண்மையில்; மாயயா—மாயா சக்தியால்; அலம்—மிகவும்; த்ரய்யாம்—மூன்று வேதங்களில்; ஜடீ-க்ருத-மதி:—எவருடைய புத்தி மந்தமாகிவிட்டதோ; மது-புஷ்பிதாயாம்—வேதக் கிரியைகளின் பலன்களை விவரிக்கும் வேதங்களின் மலர்ச் சொற்களில்; வைதாணிகே—வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளில்; மஹதி—மிகவும் அதிகமான; கர்மணி—பலன் கருதும் செயல்களில்; யுஜ்யமான:—ஈடுபட்டு.
சமய சாஸ்திரங்களைத் தொகுத்தவர்களான யாக்ஞவல்கியரும், ஜைமினியும், மற்றவர்களும் பரமபுருஷரின் மாயா சக்தியால் மதிமயங்கியவர்களாக இருப்பதால், அவர்களால் பன்னிரண்டு மகாஜனங்களின் இரகசியமான சமய முறையை அறிய முடியவில்லை. பக்தித் தொண்டைச் செய்வதின் அல்லது ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பதின் உன்னதமான மகத்துவத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுடைய மனங்கள் குறிப்பாக யஜூர், சாம, மற்றும் ரிக் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வேதக் கிரியைகளால் கவரப்பட்டுள்ளதால், அவர்களது புத்தி மழுங்கிவிட்டது. இவ்வாறாக அவர்கள், பெளதிக இன்பத்திற்காக சுவர்க்கலோகத்திற்க்கு ஏற்றம் பெறுவதைப் போன்ற, தற்காலிகமான நன்மைகளை மட்டுமே அளிக்கும் வேதக் கிரியைகளுக்கு உரிய பொருள்களைச் சேகரிப்பதிலேயே சுறுசுறுப்பாக உள்ளனர். சங்கீர்த்தன இயக்கத்திடம் அவர்களுக்குக் கவர்ச்சி ஏற்படவில்லை மாறாக, தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சத்தில் அவர்கள் நாட்டம் கொண்டுள்ளனர்.
பதம் 6.3.26
ஏவம் விம்ருஸ்ய ஸுதியோ பகவதி அனந்தே
ஸர்வாத்மனா விதததே கலு பாவ-யோகம்
தே மே ந தண்டம் அர்ஹந்தி அத யதி அமீஷாம்
ஸ்யாத் பாதகம் தத் அபி ஹத்தி உருகாய வாத:
ஏவம்—இவ்வாறு; விம்ருஸ்ய—கருத்திற் கொண்டு; ஸுதிய:—கூர்மையான புத்தியுடையவர்கள்; பகவதி—பரமபுருஷரிடம்; அனந்தே—எல்லையற்ற; ஸர்வ-ஆத்மனா—இதயபூர்வமாக; விதததே—மேற்கொள்கிறார்களோ; கலு—உண்மையில்; பாவ-யோகம்—பக்தித் தொண்டு முறையை; தே—அப்படிப்பட்டவர்கள்; மே—எனது; ந—இல்லை; தண்டம்—தண்டனைக்கு; அர்ஹந்தி—தகுதியுடையவர்கள்; அத—ஆகவே; யதி—என்றால்; அமீஷாம்—அவர்களுடைய; ஸயாத்—இருந்தாலும்; பாதகம்—ஏதேனும் பாவம்; தத்—அது; அபி—கூட; ஹத்தி—அழிக்கிறது; உருகாய-வாத:—பரமபுருஷரின் புனித நாம ஜபம்.
ஆகவே, இவ்விஷயங்களையெல்லாம் கருத்திற் கொண்டுதான், புத்திசாலிகள், தங்களுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில், எல்லோருடைய இதயங்களிலும் உறைபவரும், எல்லாக் கல்யாண குணங்களுக்கும் உறைவிடமான பகவானின் புனித நாமத்தை ஜபிப்பதெனும் பக்தித்தொண்டைப் பின்பற்றுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தண்டனைக்குரிய என் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களல்ல. பொதுவாக அவர்கள் பாவங்கள் புரிவதில்லை. ஆனால் தவறுதலாகவோ அல்லது பிரமையினாலோ சில சமயங்களில் அவர்கள் பாவம் செய்ய நேரிட்டாலும், அவர்கள் எப்பொழுதும் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பதால், பாவ விளைவுகளிலிருந்து காப்பாற்றப்படுகின்றனர்.
பதம் 6.3.27
தே-தேவ-ஸித்த-பரிகீத-பவித்ர-காதா
யே ஸாதவ: ஸமத்ருசோ பகவத்-ப்ரபன்னா:
தான் நோபஸீதத ஹரேர் கதயாபிகுப்தான்
நைஷாம் வயம் ந ச வய: ப்ரபவாம தண்டே
தே—அவர்கள்; தேவ—தேவர்களாலும்; ஸித்த—சித்தலோகவாசிகளாலும்; பரிகீத—புகழ்ந்து பாடப்படுகிறார்கள்; பவித்ர-காதா:—புனிதமான கதைகள்; யே—எவர்; ஸாதவ:—பக்தர்கள்; ஸமத்ருச:—அனைவரையும் சமமாகக் காணும்; பகவத் ப்ரபன்னா:—பரமபுருஷரிடம் சரணடைந்திருப்பதால்; தான்—அவர்களை; ந—இல்லை (கூடாது); உபஸீதத—கிட்ட நெருங்க வேண்டும்; ஹரே:—பரமபுருஷரின்; கதயா—கதையால்; அபிகுப்தான்—முழுமையாக பாதுகாப்பு அளிக்கப்படுவதால்; ந—இல்லை; ஏஷாம்—இவர்களுடைய; வயம்—நாங்கள்; நச—கூட இல்லை; வய:—எல்லையற்ற காலம்; ப்ரபவாம—தகுதியுடையவர்கள்; தண்டே—தண்டிப்பதில்.
எனது பிரிய சேவகர்களே, இத்தகைய பக்தர்கள் பரமபுருஷரின் தாமரைப் பாதங்களில் பூரண சரணாகதி அடைந்துள்ளனர் என்பதால், அவர்களின் அருகில்கூட நெருங்காதீர்கள். அவர்கள் சமதரிசிகள்; தேவர்களாலும், சித்தர்களாலும் பாடப்படும் புனிதமான சரித்திரத்தை உடையவர்கள். நீங்கள் அவர்களை நெருங்கவும் வேண்டாம். அவர்கள் பரமபுருஷரின் கதையால் எப்பொழுதும் பாதுகாக்கப்படுகின்றனர். எனவே பிரம்மதேவரும், நானும், காலமும் கூட அவர்களைத் தண்டிக்கும் தகுதியுடையவர்களல்ல.
பதம் 6.3.28
தான் ஆனயத்வம் அஸதோ விமுகான் முகுந்த-
பாதாரவிந்த-மகரந்த-ரஸாத் அஜஸ்ரம்
நிஷ்கிஞ்சனை: பரமஹம்ஸ-குலைர் அஸங்கைர்
ஜுஷ்டாத் க்ருஹே நிரய-வர்த்மனி பத்த-த்ருஷ்ணான்
தான்—அவர்களை; ஆனயத்வம்—என்முன் கொண்டு வாருங்கள்; அஸத:—(கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொள்ளாத) பக்தரல்லாதவர்களை; விமுகான்—மதிக்காதவர்களை; முகுந்த—பரமபுருஷராண முகுந்தனின்; பாத-அரவிந்த—தாமரைப் பாதங்களின்; மகரந்த—தேனின்; ரஸாத்—சுவையை; அஜஸ்ரம்—தொடர்ந்து; நிஷ்கிஞ்சனை:—பெளதிக பற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களால்; பரமஹம்ஸ-குலை:—மேண்மக்களாகிய பரமஹம்சர்களால்; அஸங்கை:—பெளதிக பற்றற்ற; ஜூஷ்டாத்—அனுபவிக்கப்படும்; க்ருஹே—இல்வாழ்க்கையில்; நிரய-வர்த்மனி—நரகத்தை நோக்கிச் செல்லும் பாதை; பத்த-த்ருஷ்ணான்—யாருடைய ஆசைகள் கட்டுப்பட்டுள்ளனவோ.
பரமஹம்சர்கள், பெளதிக சுகபோகங்களில் பற்றில்லாதவர்களும், பகவானுடைய தாமரைப் பாதங்களின் தேனைப் பருகுபவர்களுமான மேன்மக்களாவர். எனது அன்பார்ந்த சேவகர்களே, அந்த தேனின் சுவையை வெறுப்பவர்களும், பரமஹம்சர்களுடன் சகவாசம் கொள்ளாதவர்களும், குடும்ப வாழ்விலும், நரகத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பெளதிக சுகபோகங்களிலும் பற்றுக் கொண்டவர்களுமான மனிதர்களை மட்டுமே, தண்டிப்பதற்கு என்னிடம் கொண்டு வாருங்கள்.
பதம் 6.3.29
ஜிஹ்வா ந வக்தி பகவத்-குண-நாமதேயம்
சேதஸ் ச ந ஸ்மரதி தச்-சரணாவிந்தம்
க்ருஷ்ணாய நோ நமதி யச்-சிர ஏகதாபி
தான் ஆனயத்வம் அஸதோ ‘க்ருத விஷ்ணு க்ருத்யான்
ஜிஹ்வா—நாக்கு; ந—இல்லை; வக்தி—உச்சரிக்கும்; பகவத்—பரமபுருஷரின்; குண—உன்னத குணங்களை; நாம—மற்றும் புனித நாமத்தை; தேயம்—புகட்டும்; சேத:—இதயம்; ச—கூட; ந—இல்லை; ஸ்மரதி—நினைக்கிறான்; தத்—அவரது; சரண-அரவிந்தம்—தாமரைப் பாதங்களை; க்ருஷ்ணாய—பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு (ஆலய விக்கிரகத்தின் மூலமாக); ந—இல்லை; நமதி—வணங்குகிறது; யத்—யாருடைய; சிர:—தலை; ஏகதா-அபி—ஒரு முறையேனும்; தான்—அவர்களை; ஆனயத்வம்—என் முன் கொண்டு வாருங்கள்; அஸத:—பக்தரல்லாதவர்களை; அக்ருத—செய்யாத; விஷ்ணு-க்ருதயான்—பகவான் விஷ்ணுவுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை.
அன்புத் தொண்டர்களே, எந்த பாவிகள் ஸ்ரீ கிருஷ்ணரின் புனித நாமத்தையும், குணங்களையும் பாட தங்கள் நாவை உபயோகிப்பதில்லையோ, யாருடைய இதயங்கள் ஒரு முறையேனும் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை நினைக்கவில்லையோ, மேலும் யாருடைய தலைகள் ஒரு முறையேனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முன் வணங்கவில்லையோ அவர்களை மட்டும் என்னிடம் கொண்டு வாருங்கள். பகவான் விஷ்ணுவுக்குச் செய்ய வேண்டிய மனித வாழ்வின் ஒரே கடமையைச் செய்யாதவர்களை என்னிடம் அனுப்புங்கள். இத்தகைய மூடர்களையும், அயோக்கியர்களையும் என்னிடம் அழைத்து வாருங்கள்.
பதம் 6.3.30
தத் க்ஷம்யதாம் ஸ பகவான் புருஷ: புராணோ
நாராயண: ஸ்வ-புருஷைர் யத் அஸத் க்ருதம் ந:
ஸ்வானாம் அஹோ ந விதுஷாம் ரசிதாஞ்ஜலீனாம்
க்ஷாந்திர் கரீயஸி நம: புருஷாய பூம்னே
தத்—அதை; க்ஷம்யதாம்—மன்னித்து விடுவீராக; ஸ:—அவர்; பகவான்—பரமபுருஷ பகவான்; புருஷ:—பரமபுருஷர்; புராண:—புராதனமானவர்; நாராயண:—பகவான் நாராயணர்; ஸ்வ-புருஷை:—என்னுடைய சேவகர்களால்; யத்—எந்த; அஸத்—தவறு; க்ருதம்—செய்யப்பட்டதோ; ந—எங்களுடைய; ஸ்வானாம்—சொந்த ஆட்களின்; அஹோ—ஐயகோ; ந விதுஷாம்—அறியாமல்; ரசித-அஞ்ஜலீனாம்—கரம் குவித்து தங்களிடம் மன்னிப்புக் கோரும்; க்ஷாந்தி:—மன்னிப்பு; கரீயஸி—பெருமையுடைய; நம:—மரியாதை கலந்த வணக்கங்கள்; புருஷாய—புருஷருக்கு; பூம்னே—எங்கும் நிறைந்த பரமனுக்கு.
(பிறகு யமராஜன் தம்மையும், தம் சேவகர்களையும் குற்றம் புரிந்தவர்களாகக் கருதி, பகவானிடம் மன்னிப்புக் கோரி பின்வருமாறு பேசினார்.) எம்பெருமானே, என் சேவர்கள் அஜாமிளனைப் போன்ற ஒரு வைஷ்ணவனைக் கைது செய்து நிச்சயம் பெருங்குற்றத்தைச் செய்துவிட்டனர். நாராயணா, பரமபுருஷரே, ஆதி புருஷரே தயவுகூர்ந்து எங்களை மன்னித்தருளுங்கள். எங்களுடைய அறியாமையின் காரணத்தால், அஜாமிளன் தங்களுடைய ஒரு சேவகன் என்பதை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை. இவ்விதமாக நாங்கள் பெருங்குற்றத்தைச் செய்துவிட்டோம். எனவே நாங்கள் கூப்பிய கரங்களுடன் தங்களிடம் மன்னிப்புக் கோருகிறோம். பெருமானே தாங்கள் பரம கருணாமூர்த்தியும், நற்குணங்கள் நிரம்பியவரும் ஆவீர். ஆகவே எங்களை மன்னித்தருளுங்கள். தங்களுக்கு எங்களுடைய மரியாதை கலந்த வணக்கங்களை நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.
பதம் 6.3.31
தஸ்மாத் ஸங்கீர்த்தனம் விஷ்ணோர் ஜகன் மங்கலம் அம்ஹஸாம்
மஹதாம் அபி கெளரவ்ய வித்தி ஜகாந்திக-நிஷ்க்ருதம்
தஸ்மாத்—ஆகவே; ஸங்கீர்த்தனம்—இந்த புனித நாம சங்கீர்த்தனம்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; ஜகத்-மங்கலம்—இந்த ஜட உலகிலேயே மிகவுயர்ந்த சுப காரியமான; அம்ஹஸாம்—பாவச் செயல்களுக்கு; மஹதாம் அபி—மிகப் பெரியது என்றாலும்; கௌரவ்ய—குரு வம்சத்தவரே; வித்தி—என்பதைப் புரிந்து கொள்ளும்; ஜகாந்திக—முடிவான; நிஷ்க்ருதம்—பிராயச்சித்தம்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, பகவானின் புனித நாம ஜபமானது, கொடிய பாவங்களின் விளைவுகளைக் கூட வேரறுக்க வல்லது. ஆகவே, சங்கீர்த்தன இயக்கத்தின் நாம சங்கீர்த்தனமே முழு பிரபஞ்சத்திலும் மிகவும் மங்களகரமான செயலாகும். இதை நீர் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் மற்றவர்களும் இதை முக்கியமாக எடுத்துக் கொள்வார்கள்.
பதம் 6.3.32
ஸ்ருண்வதாம் க்ருணதாம் வீர்யாணி உத்தாமானி ஹரேர் முஹு:
யதா ஸுஜாதயா பக்த்யா சுத்யேன் நாத்மா வ்ரதாதிபி:
ஸ்ருண்வதாம்—கேட்பவர்களின்; க்ருணதாம்—மற்றும் ஜபிப்பவர்களின்; வீர்யாணி—அற்புதச் செயல்களை; உத்தாமானி—பாவத்தைத் தடுக்கவல்ல; ஹரே:—பரமபுருஷரின்; முஹு:—எப்பொழுதும்; யதா—போன்று; ஸு-ஜாதயா—எளிதில் ஏற்படும்; பக்த்யா—பக்தித் தொண்டால்; சுத்யேத்—தூய்மையடையக் கூடும்; ந—இல்லை; ஆத்மா—உயிரும், ஆத்மாவும்; வ்ரத-ஆதிபி:—விரதங்கள் முதலான சடங்குகளை அனுஷ்டிப்பதால்.
பகவானின் புனித நாமத்தையும், அவரது செயல்களைப் பற்றியும் இடைவிடாது கேட்டுக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பவனால், இதயத்திலுள்ள அழுக்கை அகற்றிவிடக்கூடிய தூய பக்தித் தொண்டின் படித்தரத்தைச் சுலபமாக அடைந்துவிட முடியும். விரதங்களை அனுஷ்டிப்பதாலும், வேதச் சடங்குகளை நிறைவேற்றுவதாலும் மட்டுமே இத்தகைய தூய்மையை ஒருவனால் அடைய முடியாது.
பதம் 6.3.33
க்ருஷ்ணாங்ரி-பத்ம-மது லிண் ந புனர் விஸ்ருஷ்ட
மாயா-குணேஷு ரமதே வ்ருஜினாவஹேஷு
அன்யஸ் து காம-ஹத ஆத்ம-ரஜ: ப்ரமார்ஷ்டும்
ஈஹேத கர்ம யத ஏவ ரஜ: புன ஸ்யாத்
க்ருஷ்ண-அங்ரி-பத்ம—பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய தாமரைப் பாதங்களின்; மது—தேனை; ஸிட்—பருகுபவன்; ந—இல்லை; புன:—மீண்டும்; விஸ்ருஷ்ட—துறந்துவிட்டவனாவான்; மாயா-குணேஷு—ஜட இயற்கைக் குணங்களில்; ரமதே—அனுபவிக்க விரும்புகிறான்; வ்ருஜின-அவஹேஷு—துன்பத்தைக் கொண்டு வரும்; அன்ய:—மற்றொருவன்; து—ஆனால்; காம-ஹத:—காமத்தால் மதி மயங்கி; ஆத்ம-ரஜ:—இதயத்தில் பாவச் சுமை ஏற்பட்டு; ப்ரமார்ஷ்டும்—தூய்மைப்படுத்தி; ஈஹேத—செய்யக்கூடும்: கர்ம—செயல்களை; யத:—எதன் பிறகு; ஏவ—உண்மையில்; ரஜ:—பாவச் செயல்; புன:—மீண்டும்; ஸ்யாத்—தோன்றுகிறது.
எப்பொழுதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களிலுள்ள தேனைப் பருகும் பக்தர்கள், ஜட இயற்கையின் முக்குணங்களின் கீழ் செய்யப்படுபவையும், துன்பத்தை மட்டுமே தருபவையுமான பெளதிக செயல்களை சிறிதும் விரும்புவதில்லை. உண்மையில், பக்தர்கள் பகவானின் தாமரைப் பாதங்களை விட்டுவிட்டு பெளதிக செயல்களுக்குத் திரும்புவதேயில்லை. ஆனால் பகவானின் திருவடித் தொண்டை அலட்சியம் செய்து, வேதச் சடங்குகளில் பற்றுக் கொண்டுள்ளவர்களும், காம இச்சைகளால் மதி மயங்கியிருப்பவர்களுமான மற்றவர்கள், சில சமயங்களில் பிராயச்சித்தங்களைச் செய்கின்றனர். ஆயினும், முற்றிலும் தூய்மையடையாத காரணத்தால், அவர்கள் திரும்பத் திரும்ப பாவச் செயல்களுக்குத் திரும்புகின்றனர்.
பதம் 6.3.34
இத்தம் ஸ்வபர்த்ரு-கதிதம் பகவன்-மஹித்வம்
ஸம்ஸ்ம்ருத்ய விஸ்மித-தியோ யம-கிங்கராஸ் தே
நைவாச்யுதாஸ்ரய-ஜனம் ப்ரதிசங்கமானா
த்ரஷ்டும் ச பிப்யதி தத: ப்ரப்ருதி ஸ்மராஜன்
இத்தம்—இத்தகைய சக்தியைப் பற்றி; ஸ்வ-பர்த்ரு-கதிதம்—தங்களுடைய எஜமானரால் (யமராஜன்) விவரிக்கப்பட்ட; பகவத்-மஹித்வம்—பரமபுருஷரின் அசாதாரணமான மகிமை, நாமம், புகழ், ரூபம் மற்றும் குணங்களை; ஸம்ஸ்ம்ருத்ய—நினைந்து; விஸ்மித-திய:—ஆச்சரியத்தில் ஆழ்ந்தவர்களால்; யம-கிங்கரா:—யமராஜனின் எல்லா சேவகர்களும்; தே—அவர்கள்; ந—இல்லை; ஏவ—உண்மையில்; அச்யுத-ஆஸ்ரய-ஜனம்—அச்சுதனாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் சரணடைந்த ஒருவர்; ப்ரதிசங்கமானா:—எப்பொழுதும் பயந்தவர்களாய்; த்ரஷ்டும்—காண; ச—கூட; பிப்யதி—அஞ்சுகின்றனர்; தத:-ப்ரப்ருதி—அன்றிலிருந்து; ஸ்ம—உண்மையில்; ராஜன்—அரசே.
பகவானுடைய அசாதாரணமான மகிமைகள், நாமம், புகழ் மற்றும் குணங்கள் ஆகியவற்றைப் பற்றி தங்கள் எஜமானரின் வாயிலிருந்து கேட்ட யமதூதர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அன்று முதல் அவர்கள் பக்தர்களைக் கண்டதும், அவர்களிடம் அச்சம் கொண்டு, மீண்டும் அவர்களைப் பார்க்கவும் துணிவதில்லை.
பதம் 6.3.35
இதிஹாஸம் இமம் குஹ்யம் பகவான் கும்ப-ஸம்பவ:
கதயாம் ஆஸ மலய ஆஸீனோ ஹரிம் அர்ச்சயன்
இதிஹாஸம்—வரலாற்றை; இமம்—இந்த: குஹ்ய—மிகவும் இரகசியமான; பகவான்—மிகவும் சக்திவாய்ந்தவரான; கும்ப-ஸம்பவ:—கும்ப புத்திரரான அகஸ்திய முனிவர்; கதயாம் ஆஸ—விளக்கினார்; மலயே—மலய பர்வத்தில்; ஆஸீன:—வாழ்ந்து வந்த; ஹரிம் அர்ச்சயன்—பரமபுருஷரை பூஜித்துக் கொண்டு.
கும்ப புத்திரரும், மாமுனிவருமான அகஸ்தியர், பரமபுருஷரை பூஜித்துக் கொண்டு, மலய பர்வதத்தில் வாழ்ந்து வந்தபொழுது நான் அவரை அணுகினேன். அவரும் மிகவும் இரகசியமான இந்த வரலாற்றை எனக்கு விவரித்தார்.
ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “தன் தூதர்களுக்கு யமராஜனின் உபதேசம்” எனும் தலைப்பை கொண்ட மூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.