அத்தியாயம் – 21
சூரியனின் இயக்கம்
பதம் 5.21.1
ஸ்ரீ-ஸுக உவாச
ஏதாவான் ஏவ பூ-வலயஸ்ய ஸன்னிவேஸ: ப்ரமாண லக்ஷணதோ
வ்யாக்யாத:
ஸ்ரீ-ஸுக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏதாவான்—அவ்வளவு; ஏவ—உறுதியாக; பூ-வலயஸ்ய ஸன்னிவேஸ:—பிரபஞ்சத்தின் முழுஏற்பாடும்; ப்ரமாண-லக்ஷணத—அளவு (ஐம்பது கோடி யோஜனங்கள் அல்லது நானூறு கோடி மைல்கள் அகலம் மற்றும் நீளம்) மற்றும் தன்மைகள்; வ்யாக்யாத:—கணக்கிடப்பட்டது.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பார்ந்த மன்னனே, நான் இவ்வாறு, இதுவரை பிரபஞ்சத்தின் பரப்பளவு (ஐம்பது கோடி யோஜனங்கள் அல்லது நானூறு கோடி மைல்கள்) மற்றும் பொதுத் தன்மைகளை கற்றறிந்த அறிஞர்களின் கணிதப்படி விளக்கியிருக்கிறேன்.
பதம் 5.21.2
ஏதேன ஹி தி வோ மண்டல-மானம் தத்- வித உபதி-ஸந்தி யதா த்வி
தலயோர் நிஷ்பாவாதீனாம் தே அந்தரேணாந்தரிக்ஷம் தத்-உபய-ஸந்திதம்
ஏதேன—இக்கணக்கினால்; ஹி—உண்மையில்; திவ—மேலுலகங்கள்; மண்டல-மானம்—பூமியின் அளவு; தத்-வித—இதனைப் பற்றி தேர்ந்த அறிவுடையோர்; உபதிஸந்தி—உபதேசித்து; யதா—போன்று; த்வி-தல-யோ—இரண்டு அரைப்பகுதிகள்; நிஷ்பாவ-ஆதினாம்—கோதுமை போன்ற தானியத்தின்; தே—இருபிரிவுகளின்; அந்தரேண—இடைவெளியில்; அந்தரிக்ஷம்—வானம் அல்லது வான்வெளி; தத்—இரண்டினால்; உபய—இரு பக்கங்களிலும்; ஸந்திதம்—இருபகுதிகளும் இணையும் இடம்.
கோதுமை தானியத்தை இரண்டாகப் பிரித்தால், கீழிருக்கும் பகுதியைக் கொண்டு மேலிருக்கும் பகுதியை ஒருவனால் அளவிட முடிவது போல் தேர்ந்த பூகோள நூல் வல்லுநர்கள் பிரபஞ்சத்தின் கீழ்ப்பகுதியினை அறிந்து கொள்வதின் மூலம் ஒருவனால் அதன் மேற்பகுதியினை அளவிடமுடியும் என்று அறிவுறுத்துகின்றார். மேல் உலகிற்கும், பூவுலகிற்கும் இடையிலுள்ள வானம் அல்லது வெளியானது அந்தரிக்ஷம் என்றழைக்கப்படுகின்றது. இது பூமியின் மேற்பகுதியினை அடுத்து மேல் உலகிற்குக் கீழாக இருக்கின்றது.
பதம் 5.21.3
யன்-மத்ய-கதோ பகவாம்ஸ் தபதாம் பதிஸ் தபன ஆதபேன
த்ரி-லோகீம் ப்ரதபதி அவபாஸயதி ஆத்ம பாஸா ஸ ஏஷ உதகயன-
தக்ஷிணாயன வைஷுவத-ஸம்ஜ்ஞாபிர் மாந்த்ய-ஸைக்ருய-ஸமானாபிர்
கதிபிர் ஆரோஹணாவரோஹண-ஸமான-ஸ்தானேஷு யதா ஸவனம்
அபிபத்யமானோ மகராதிஸு ராஸிஷு அஹோராத்ராணி தீர்க-ஹ்ரஸ்வ-
ஸமானானி விதத்தே
யத்—இதன் (இடைவெளி); மத்ய-கத—மத்தியில் இருக்கின்றது; பகவான்—மிகவும் சக்தியுடைய; தபதாம்-பதி:—இப்பிரபஞ்சம் முழுவதும் வெம்மைப்படுத்துபவரின் தலைவர்; தபன—சூரியன்; ஆதபேன—வெம்மையினால்; த்ரி-லோகீம்—மூவுலகங்கள்; ப்ரதபதி—வெம்மைப்படுத்துகிறது; அவபாஸயதி—விளக்குகள்; ஆத்ம-பாஸா—அதன் சுய ஒளிக் கதிர்களினால்; ஸ—அது; ஏஷ—சூரியக் கோளம்; உதகயன—பூமத்திய ரேகைக்கு வட பகுதியில் செல்லும் பொழுது; தக்ஷிணாயன—பூமத்திய ரேகையில் தென்பகுதியில் செல்லும் பொழுது; வைஷீவத—அல்லது பூமத்திய ரேகை வழியாக செல்வது; ஸம்ஜ்ஞாபி—பல்வேறு பெயர்களினால்; மாந்த்ய—மெதுவானத் தன்மையினால்; ஸைக்ருய—வேகமாக; ஸமானாபி—சமமாக; கதிபி—இயக்கத்தினால்; ஆரோஹண—ஏறுதல்; அவரோஹண—இறங்குதல்; ஸமான—அல்லது மத்தியில் இருத்தல்; ஸ்தானேஷு—நிலைகளில்; யதா-ஸவனம்—முழுமுதற் கடவுளின் கட்டளைக்கேற்ப; அபிபத்யமான—செல்வது; மகர-ஆதிஷு—மகர ராசியின் கீழ்; ராஸிஷு—பல்வேறு இராசிகள்; அஹ-ராத்ராணி—இராப்பொழுதுகள் மற்றும் பகற்பொழுதுகள்; தீர்க—நீண்ட; ஹ்ரஸவ—குறுகிய; ஸமானானி—சமம்; விதத்தே—செய்கிறார்.
விண்வெளியின் மத்தியில் (அந்ததிக்ஷம்) மிக வளம் உடையதும், சந்திரனைப் போன்று வெம்மை உண்டாக்கும் கோளங்கள் அனைத்திற்கும் அரசரான சூரியன் இருக்கிறார். அதன் கதிர்களின் செல்வாக்கினால் சூரியன் இப்பிரபஞ்சத்தைக் காப்பதோடு அதனை முறையாகவும் வைத்திருக்கின்றது. அனைத்து உயிர்வாழிகளும் காண்பதற்கு உதவும் பொருட்டு அது ஒளிவழங்குகிறது. முழுமுதற் கடவுளின் கட்டளைக்கேற்ப அது தென்திசை, வடதிசை அல்லது மத்தியில் பயணம் செய்யும் பொழுது, மெதுவாக, வேகமாக, சமநிலையில் செல்வதாகக் கூறப்படுகிறது. அதன் இயக்கம் உயர்ந்தோ, தாழ்ந்தோ அல்லது மத்தியில் செல்வதற்கேற்பவும் மகர ராசியின் கீழுள்ளப் பல்வேறு இராசிக் கூட்டங்களுடன் தொடர்பு கொள்வதற்கேற்பவும் இரவு பகல் குறுகியும், நீண்டும், சமமாகவும் இருக்கின்றன.
பதம் 5.21.4
யதா மேஷ – துலயோர் வர்ததே ததாஹோ-ராத்ராணி ஸமனானி
பவந்தி யதா வ்ருஷபாதிஷு பஞ்சஸு ச ராஸிஷு சரதி ததாஹானி ஏவ
வர்தந்தே ஹ்ரஸதி ச மாஸி மாஸி ஏகைக கடிகா ராத்ரிஷு
யதா—எப்பொழுது; மேஷ-துலயோ—மேஷம் மற்றும் துலாம் ராசிகள்; வர்ததே—சூரியன் வெளிப்படுதல்; ததா—அக்காலத்தில்; அஹ-ராத்ராணி—இரவு மற்றும் பகற்பொழுதுகள்; ஸமானானி—சமகாலம் ஆகும்; பவந்தி—இருக்கின்றன; யதா—எப்பொழுது; வ்ருஷப-ஆதிஷு—ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளின் தலைமையின் கீழ்; பஞ்சஸு—ஐந்து ராசிகளில்; ச—மேலும்; ராஸிஷு—இராசிகள்; சரதி—செல்கிறது; ததா—அக்காலத்தில்; அஹானி—பகற்பொழுதுகள்; ஏவ—உறுதியாக; வர்தந்தே—அதிகரிக்கின்றது; ஹ்ரஸதி—குறைகின்றது; ச—மேலும்; மாஸி-மாஸி—ஒவ்வொரு மாதமும்; ஏக-ஏக—ஒரு; கடிகா—அரைமணி நேரம்; ராத்ரிஷு—இரவு பொழுதுகள்.
மேஷ இராசி மற்றும் துலா இராசியில் சூரியன் செல்லும் பொழுது பகற்பொழுதும், இராப்பொழுதும் சமமாக இருக்கின்றன. அது ரிஷபராசியின் கீழுள்ள ஐந்து இராசிகளில் செல்லும்பொழுது பகற் பொழுதுகள் அதிகரிக்கின்றன. (கர்க்கடக இராசிவரை) பின்னர் அது, இரவும் பகலும் சமமாகும் வரை (துலா இராசியில்) ஒவ்வொரு மாதமும் அரைமணி அளவில் படிப்படியாக குறைகிறது.
பதம் 5.21.5
யதா வ்ருசிகாதிஷு பஞ்சஸு வர்ததே ததாஹோ-ராத்ராணி
விபர்யயாணி பவந்தி
யதா—எப்பொழுது; வ்ருசிக-ஆதிஷு—விருச்சிக இராசியினால் தலைமை தாங்கப்பட்டு; பஞ்சஸு—ஐந்து; வர்ததே—இருக்கிறது; ததா—அக்காலத்தில்; அஹ-ராத்ராணி—இரவு மற்றும் பகற்பொழுதுகள்; விபர்யயாணி—நேர்மாறாக; (பகற்பொழுது குறைந்தும் இராப்பொழுது அதிகரிக்கவும் செய்கிறது); பவந்தி—இருக்கின்றன.
சூரியன் விருச்சிக இராசி தொடங்கி ஐந்து இராசி மண்டலங்களில் பயணம் செய்யும்பொழுது (மகராசி வரை) பகற்பொழுது குறைகிறது பின்னர் அது இரவும் பகலும் சமமாகும் வரை (மேஷ இராசி வரும் வரை) ஒவ்வொரு மாதமும் படிப்படியாக அதிகரிக்கின்றது.
பதம் 5.21.6
யாவத் தக்ஷிணாயனம் அஹானி வர்தந்தே யாவத் உதக யனம் ராத்ரய
யாவத்—அதுவரை; தக்ஷிண-அயனம்—தென்திசையில் சூரியன் செல்லுதல்; அஹானி—பகற்பொழுதுகள்; வர்தந்தே—அதிகரிக்கிறது; யாவத்—அதுவரை; உதகயனம்—வடதிசையில் சூரியன் செல்லுதல்; ராத்ரய—இரவுப் பொழுதுகள்.
தென்திசையில் சூரியன் பயணம் செய்யும்வரை பகற்பொழுதுகள் நீண்டதாகவும், அது வடதிசையில் பயணம் செய்யும்வரை இரவுகள் நீண்டதாகவும் இருக்கின்றன.
பதம் 5.21.7
ஏவம் நவ கோடய ஏக—பஞ்சாஸல்-லக்ஷாணி யோஜனானாம்
மானஸோத்தர கிரி- பரிவர்தனஸ்யோபதிஸந்தி தஸ்மின்ன ஐந்த்ரீம் புரீம்
பூர்வஸ்மான் மேரோர் தேவதானீம் நாம தக்ஷிணதோ யாம்யாம் ஸம்யமானீம்
நாம பஸ்சாத் வாருணீம் நிம்லோசனீம் நாம உத்தரத: ஸௌம்யாம்
விபாவரிம் நாம தாஸுதய-மத்யாஹ்னாஸ்தமய நிஸுதானீதி பூதானம்
ப்ரவ்ருத்தி-நிவ்ருத்தி நிமித்தானி ஸமய-விஸேஷேண மேரோஸ் சதுர்-
திஸம்
ஏவம்—இவ்வாறு; நவ—ஒன்பது; கோடய—கோடி; ஏக-பஞ்சாஸத்—ஐம்பத்தியோரு; லக்ஷாணி—லட்சங்கள்; யோஜனானாம்—யோஜனங்களின்; மானஸோத்தர-கிரி—மானஸோத்தரம் என்னும் மலை; பரிவர்தனஸ்ய—சுற்றிவருதலின்; உபதிஸந்தி—அவர்கள் (கற்றறிந்த அறிஞர்கள்) போதிக்கின்றனர்; தஸ்மின்—அதன்மீது (மானஸோத்ர மலை); ஐந்த்ரீம்—இந்திரனின்; புரீம்—நகரம்; பூர்வஸ்மாத்—கிழக்குப்பகுதியில்; மேரோ—சுமேரு மலை; தேவதானீம்—தேவதானீ; நாம—பெயரில்; தக்ஷிணத—தெற்குப் பகுதியில்; யாம்யாம்—யமராஜனின்; ஸமயமனீம்—சம்யமனி; நாம—பெயரிடப்பட்ட; பஸ்சாத்—மேற்குப் பக்கத்தில்; வாருணீம்—வருணனின்; நிம்லோசனீம்—நிம்லோசனீ; நாம—பெயரில்; உத்தரத:—வடக்குப் பக்கத்தில்; ஸௌம்யாம்—சந்திரனின்; விபாவரிம்—விபாவரி; நாம—பெயரில்; தாஸு—இவை அனைத்திலும்; உதய—உதயம்; மத்யாஹ்ன—மதியம்; அஸ்தமய—அஸ்தமனம்; நிஸுதானி—நடு இரவு; இதி—இவ்வாறு; பூதானாம்—உயிர்வாழிகளின்; ப்ரவ்ருத்தி—செயலின்; நிவ்ருத்தி—செயல் நிறுத்தம்; நிமித்தானி—காரணங்கள்; மைய-விஸேஷேண—குறிப்பிட்டக் காலங்களில்; மேரோ—சுமேரு மலையின்; சது-திஸம்—நான்கு பக்கங்கள்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய மன்னனே முன்பு குறிப்பிட்டதுபோல் கற்றறிந்த அறிஞர்கள் சூரியன் மானஸோத்தர மலையினை வட்டமாகச் சுற்றிவருகிறான் என்றும் அதன் நீளம் 95,100,000 யோஜனங்கள் (760,800,000 மைல்கள்) என்றும் கூறுகின்றார். மானஸோத்தானீ என்றோர் நகரம் இருக்கிறது. இது இந்திரனால் ஆளப்படுகின்றது. அதுபோல் தென்திசையில் யமராஜன் வாழும் ஸம்யமனீ என்னும் நகரம் இருக்கின்றது. மேற்குத் திசையில் வருணதேவன் வாழும் நிம்லோசனீ என்னும் நகரம் இருக்கின்றது. மேலும் அதன் வடதிசையில் சந்திரதேவன் வாழும் விபாவரீ என்னும் நகரமும் இருக்கின்றது. சூரிய உதயம், நண்பகல், சூரிய அஸ்தமனம் மற்றும் நள்ளிரவு போன்றவை இவ்விடங்கள் அனைத்திலும் குறிப்பிட்டக் காலங்களில் நிகழ்கின்றன. இதன்மூலம் அனைத்து உயிர்வாழிகளையும் அவர்களுக்குரிய தொழில் தர்மங்களில் ஈடுபடுத்தி, அத்தொழில் தர்மங்களிலிருந்து அவர்களை விடுவிக்கின்ற செயலையும் சூரியன் செய்கிறான்.
பதங்கள் 5.21.8 – 5.12.9
தத்ரத்யானாம் திவஸ-மத்யங்கத ஏவ ஸதாதித்யஸ் தபதி
ஸவ்யேனாசலம் தக்ஷிணேன கரோதி யத்ரோதி தஸ்ய ஹ ஸமான-
ஸுத்ர – நிபாதே நிம்லோசதி யத்ர க்வசன ஸ்யந்தேனாபிதபதி தஸ்ய ஹை
ஸ ஸமான- ஸுர-நிபாதே ப்ரஸ்வாபயதி தத்ர கதம் நோ பஸ்யந்தி யே
தம் ஸமனுபஸ்யேரன்
தத்ரத்யானாம்—மேருமலையில் வாழும் உயிர்வாழிகளுக்காக; திவஸ-மத்யங்கத—நண்பகலில் இருக்கும் பொழுது; ஏவ—உண்மையில்; ஸதா—எப்போதும்; ஆதித்ய—சூரியன்; தபதி—வெம்மையளிக்கிறான்; ஸவ்யேன—இடது பக்கத்தில்; அசலம்—சுமேரு மலை; தக்ஷிணேன—வலப்புறம் (வலது பக்கத்தில் காற்றின் வேகத்தினால் சூரியன் வலது பக்கத்தில் செல்கிறது); கரோதி—இயங்குகிறது; யத்ர—எங்கே; உதேதி—அது எழுகிறது; தஸ்ய—அந்த நிலையின்; ஹ—உறுதியாக; ஸமான-ஸுத்ர-நிபாதே—நேர் எதிர் முனையில்; நிம்லோசதி—சூரியன் மறைகிறது; யத்ர—எங்கே; க்வசன—ஓரிடத்தில்; ஸ்யந்தேன—வியர்வையுடன்; அபிதபதி—வெம்மை செய்கிறான் (நண்பகலில்); தஸ்ய—அதன்; ஹ—உறுதியாக; ஏஷ—இந்த; ஸமான-ஸுத்ர-நிபாதே—நேர் எதிர் முனையில்; ப்ரஸ்வாபயதி—நித்திரைக்கும் சூரியனே காரணமாகிறான் (நள்ளிரவில்); தத்ர—அங்கே; கதம்—சென்றது; ந-பஸ்யந்தி—காண்பதில்லை; யே—இவர்கள்; தம்—சூரிய அஸ்தமனத்தினை; ஸமனுபஸ்யேரன்—காண்பது.
சுமேரு மலையில் வாழும் உயிர்வாழிகள் நண்பகலில் இருப்பது போல் எப்போதும் மிகுந்த வெப்பத்திற்க்காளாகின்றனர். காரணம் சூரியன் எப்போதும் அங்கே உச்சிச் சூரியனாகவே இருக்கிறான். சூரியன் சுமேருமலைக்கு இடதுபுறத்திலிருந்து விண்மீன் கூட்டத்தைப் பார்த்த வண்ணம் வலமாகச் சென்ற போதிலும் அது இடமாகவும் செல்வதின் மூலம் மலை தனக்கு வலது புறத்தில் இருப்பது போன்றும் தோன்றுகிறது ஏனென்றால் அது தக்ஷிணாவர்த காற்றின் பாதிப்பிற்கு ஆளாகிறது. சூரியன் முதலில் உதிக்கின்ற நாடுகளுக்கு நேர் எதிர் திசையில் இருப்பவர்கள் அப்போது அங்கே சூரிய அஸ்தமனத்தினைக் காண்கின்றனர். அதுபோல் சூரியன் தமது தலைக்கு நேராக உச்சியில் இருக்கும் நாட்டில் உள்ளவர்களுக்கு நேர் எதிர் திசையில் உள்ள நாட்டினர்க்கு அப்போது நள்ளிரவாக இருக்கும். அதுபோல் சூரியன் அஸ்தமிக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமக்கு நேர் எதிர்கோட்டில் இருக்கும் நாட்டிற்குச் சென்று பார்த்தால் அங்கே அந்த சமயத்தில் சூரிய அஸ்தமனத்தைக் காணமுடியாது.
பதம் 5.21.10
யதா சைந்ருயா: புர்யா ப்ரசலதே பஞ்சதஸ-கடிகாபிர் யாம்யாம் ஸபாத
கோடி-த்வயம் யோஜனானாம் ஸார்த-த்வாதஸ-லக்ஷாணி ஸாதிகானி
சோபயாதி
யதா—எப்பொழுது; ச—மேலும்; ஐந்த்ருயா—இந்திரனின்; புர்யா—இருப்பிடத்திலிருந்து; ப்ரசலதே—அது செல்கிறது; பஞ்சதஸ—பதினைந்து; கடிகாபி—அரைமணிநேரம் (உண்மையில் இருபத்து நான்கு நிமிடங்கள்); யாம்யாம்—யமராஜனின் இருப்பிடத்திற்கு; ஸபாத—கோடி; த்வயம்—இரண்டே கால் கோடி (22,500,000); யோஜனானாம்—யோஜனங்களின்; ஸார்த—ஒன்றரை; த்வாதஸ-லக்ஷாணி—பன்னிரெண்டு லட்சம்; ஸாதிகானி—இருபத்தையாயிரம் அதிகமாக; ச—மேலும்; உபயாதி—அவன் கடந்து செல்கிறான்.
இந்திரனின் இருப்பிடமான தேதானீயிலிருந்து யமராஜனின் இருப்பிடமான சம்யமணீ என்னும் இடத்திற்குச் சூரியன் பயணம் செய்யும் பொழுது அது 23,775,000 யோஜனங்கள் (190,200,000 மைல்கள்) பதினைந்து கடிகைகளில் (ஆறுமணி நேரங்கள்) கடந்து செல்கிறது.
பதம் 5.21.11
ஏவம் ததோ வாருணீம் ஸெம்யாம் ஐந்த்ரீம் ச புனஸ் ததான்யே ச
க்ரஹா: ஸோமாதயோ நக்ஷத்ரை: ஸஹ ஜ்யோதிஸ் சக்ரே ஸமப்யுத்யந்தி
ஸஹ வா நிம்லோ சந்தி
ஏவம்—இவ்வழியே; தத—அங்கிருந்து; வாருணீம்—வருணதேவன் வாழும் இடத்திற்கு; ஸம்யாம்—சந்திரனின் இருப்பிடத்திற்கு; ஐந்த்ரீம் ச—இந்திரனின் இருப்பிடத்திற்கு; புன—மீண்டும்; ததா—மேலும்; அன்யே—பிறர்; ச—மேலும்; க்ரஹா—கோளங்கள்; ஸோம-ஆதய—சந்திரனால் தலைமை தாங்கப்பட்ட; நக்ஷத்ரை—நட்சத்திரங்கள் அனைத்தும்; ஸஹ—உடன்; ஜ்யோதி-சக்ரே—ஜோதி சக்கரத்தில்; ஸமப்யுத்யந்தி—தோன்றுகின்றன; ஸஹ—உடன் சேர்ந்து; வா—அல்லது; நிம்லோசந்தி—மறைகின்றன.
யமராஜனின் இருப்பிடத்திலிருந்து சூரியன் வருணதேவனின் இருப்பிடமான நிம்லோசனீ என்னும் இடத்திற்கு பயணம் செய்கிறது. பின்னர் அங்கிருந்து சந்திரதேவனின் இருப்பிடமான விபாவரீ என்னும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் இந்திரனின் இருப்பிடத்திற்குச் செல்கிறது. இதேபோன்றுதான் சந்திரன், நட்சத்திரங்கள், பிற கோளங்கள் எல்லாம் விண்வெளியில் தோன்றுகின்றன. பிறகு மறைகின்றன, மீண்டும் தோன்றுகின்றன.
பதம் 5.21.12
ஏவம் முஹுர்தேன சதுஸ்-த்ரிம்ஸல்-லக்ஷ-யோஜனானி அஷ்ட-
ஸதாதிகானி ஸௌரோ ரதஸ் த்ரயீமயோ ‘ஸௌ சதஸ்ருஷு பரிவர்ததே
புரிஷு
ஏவம்—இவ்வாறு; முஹுர்தேன—ஒரு முகூர்த்தத்தில் (நாற்பத்தெட்டு நிமிடங்கள்); சது:-ரிம்ஸத்—முப்பத்திநான்கு; லக்ஷ—லட்சங்கள்; யோஜனானி—யோஜனங்கள்; அஷ்ட-ஸத-திகானி—எண்ணூறினால் அதிகரித்து; ஸௌர: ரத:—சூரியதேவனின் இரதம்; த்ரயீ-மய:—காயத்ரீ மந்திரத்தினால் வணங்கப்படுகிறது (ஒம் பூர் புவ: ஸ்வ: தத் ஸவிதுர் போன்ற); அஸௌ—அது; சதஸ்ருஷு—நான்கிற்கு; பரிவர்ததே—அவன் செல்கிறான்; புரீஷு—பல்வேறு இருப்பிடங்களின் வழியாக.
போற்றுதற்குரிய பகவானே, தடுமாற்றம், பசி, தவறி வீழ்தல், வாயினால் சுவாசித்தல் அல்லது மரண வேளையில் ஏற்படும் கடுமையான காய்ச்சலில் வீழ்தல் போன்றவற்றினால் உமது பெயர், தோற்றம், குணம் முதலியவற்றை எம்மால் நினைக்க முடியாது போகலாம். ஆகையினால் பக்தர்கள் மீது அளவற்ற அன்புடைய பகவானே, உம்மை நாங்கள் வழிபடுகிறோம். எங்களது பாவச் செயல்கள் அனைத்தையும் நீக்கவல்ல உமது புனித நாமங்கள், குணங்கள் மற்றும் செயல்களை எப்போதும் நாங்கள் நினைத்திருக்க எங்களுக்கு உதவுவீராக.
பதம் 5.21.13
யஸ்யைகம் சக்ரம் த்வாதஸாரம் ஷண் -நேமி த்ரி நாபி ஸம்வத்
ஸராத்மகம் ஸமாமனந்தி தஸ்யாக்ஷோ மேரோர் மூர்தனி க்ருதோ-மான
ஸோத்தரே க்ருதேதர பாகோ யத்ர ப்ரோதம் ரவி-ரத-சக்ரம் தைல யந்த்ர
சக்ரவத் ப்ரமன் மானஸோத்ர-கிரௌ பரிப்ரமதி
யஸ்ய—இதன்; ஏகம்—ஒன்று; சக்ரம்—சக்கரம்; த்வாதஸ—பன்னிரெண்டு; அரம்—ஆரங்கள்; ஷட்—ஆறு; நேமி—வளையத்தின் கூறுகள்; த்ரி-நாபி—சக்கரத்திலுள்ள குடத்தின் மூன்று துண்டுகள்; ஸம்வத்ஸர-ஆத்மகம்—அதன் இயற்கை ஒரு சம்வத்ஸரம் ஆகும்; ஸமாமனந்தி—அவை முற்றிலும் விளக்கப்பட்டு; தஸ்ய—சூரியதேவனின் இரதம்; அக்ஷ—அச்சு; மேரோ—சுமேரு மலை; மூர்தனி—உச்சியில்; க்ருத—நிலைநிறுத்தப்பட்டு; மானஸோத்தரே—மானஸோத்தரம் எனப்படும் மலை; க்ருத—நிலைநிறுத்தப்பட்டு; இதர-பாக—மற்றொரு முனை; யத்ர—இங்கே; ப்ரோதம்—மேல் இணைந்து; ரவி-ரத-சக்ரம்—சூரியதேவனின் இரதச்சக்கரம்; தைல-யந்தர-சக்கரவத்—எண்ணெய் எடுக்கும் யந்திரத்தின் சக்கரத்தைப் போன்று; ப்ரமத்—இயங்கி; மானஸோத்தர-கிரௌ—மானஸோத்தர மலை; பரிப்ரமதி—திரும்புகிறது.
சூரிய தேவனின் இரதத்திற்கு சம்வத்ஸரம் எனப்படும் ஒரே ஒரு சக்கரம் மட்டுமே உண்டு. பன்னிரெண்டு மாதங்களும் அதன் பன்னிரெண்டு ஆரங்களாகும். ஆறு பருவகாலங்களும் வளையத்தின் ஆறு கூறுகளாகும், மூன்று சாதுர்மாஸ்யக் காலங்களும் சக்கரத்திலுள்ள குடத்தின் மூன்று பகுதிகளாகும். சக்கரத்தின் ஒரு பக்க அச்சு சுமேரு மலையில் பொருத்தப்பட்டிருக்கிறது. மற்றொரு அச்சு மானஸோத்தர மலையின் உச்சியில் பொருத்தப்பட்டிருக்கிறது. அச்சின் மறுமுனை பொருத்தப்பட்டிருப்பதினால் சக்கரம், எண்ணெய் எடுக்கும் இயந்திரத்தின் சக்கரத்தைப் போல் தொடர்ந்து மானஸோத்தர மலையின் மீது சுழல்கின்றது.
பதம் 5.21.14
தஸ்மின்ன அக்ஷே க்ருதமூலோ த்விதீயோ ‘ க்ஷஸ் துர்யமானே
ஸம்மிதஸ் தைல யந்த்ராக்ஷவத் த்ருவே க்ருதோபரி-பாக:
தஸ்மின் அக்ஷே—அந்த அச்சில்; க்ருத-மூல—அதன் அடிப்பகுதி பொருத்தப்பட்டிருக்கிறது; த்விதீய—இரண்டாவது; அக்ஷ—அச்சு; துர்யமானேன—நான்கில் ஒரு பகுதி; ஸம்மித—அளவு; தைல-யந்த்ர-அக்ஷ-வத்—எண்ணெய் எடுக்கும் எந்திரத்தின் அச்சினைப் போன்று; த்ருவே—துருவலோகத்திற்கு; க்ருத—பொருத்தப்பட்டது; உபரிபாக—மேல்பகுதி.
எண்ணெய் எடுக்கும் எந்திரத்தில் இருப்பதைப் போன்று முதல் அச்சு, இரண்டாவது அச்சுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இது நீளத்தில் நான்கில் ஒரு பகுதியாகும் (3,937,500 யோஜனங்கள் அல்லது 31,500,000 மைல்கள்). இந்த இரண்டாம் அச்சின் மேல் பகுதி காற்றுக் கயிற்றினால் துருவ லோகத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றது.
பதம் 5.21.15
ரத-நீடஸ் து ஷட்-த்ரிம்ஸல்-லக்ஷ-யோஜனாயதஸ் தத்-துரீய பாக-
விஸாலஸ் தாவான் ரவி-ரத-யுகோ யத்ர ஹயாஸ் சந்தோ நாமான:
ஸப்தாருண-யோஜிதா வஹந்தி தேவம் ஆதித்யம்
ரத-நீட:—இரதத்தின் உட்பகுதி; து—ஆனால்; ஷட்-த்ரிம்ஸத்-லக்ஷ-யோஜன—ஆயுத 3,600,000 யோஜனங்கள் நீளமுடையது; தத்-துரீய-பாக—அதில் நான்கில் ஒரு பகுதி (900,000 யோஜனங்கள்); விஸால—அகலமுடன்; தாவான்—அத்துடன் கூட; ரவி-ரத-யுக—குதிரைகளுக்கான நுகத்தடி; யத்ர—இங்கே; ஹயா—குதிரைகள்; சந்த-நாமான—வேத அளவுகளின் பல்வேறு பெயர்களைக் கொண்டு; ஸப்த—ஏழு; அருண-யோஜித—அருணதேவனால் பூட்டப்பட்டு; வஹந்தி—சுமந்து செல்கின்றது; தேவம்—தேவர்; ஆதித்யம்—சூரியதேவன்.
அன்புக்குரிய அரசனே, சூரிய தேவன் அமர்ந்திருக்கும் இரதத்தட்டு 3,600,000 யோஜனங்கள் (28,800,000 மைல்கள்) நீளமும் அதில் நான்கில் ஒருபகுதி (900,000 யோஜனங்கள் அல்லது 7,200,000 மைல்கள்) அகலமும் உடையதாகும். காயத்திரி மற்றும் பிற வேத அளவுகளின் பெயர்களைக் கொண்ட குதிரைகள் அருணதேவனால் 900,000 யோஜனங்கள் அகலமுடைய நுகத்தடியில் பூட்டப்பட்டிருக்கின்றன. இந்த இரதம் தொடர்ந்து சூரிய தேவனைச் சுமந்து செல்கின்றது.
பதம் 5.21.16
புரஸ்தாத் ஸவிதுர் அருண: பஸ்சாச் ச நியுக்த: ஸௌத்யே கர்மணி
கிலாஸ்தே
புரஸ்தாத்—முன்புறம்; ஸவிது:—சூரியதேவனின்; அருண—அருண தேவன்; பஸ்சாத்—பின்புறம் பார்க்கின்றார்; ச—மேலும்; நியக்த—ஈடுபடுகிறார்; ஸௌத்யே—ஒரு இரத சாரதியின்; கர்மணி—வேலையில்; கில—நிச்சயமாக; ஆஸ்தே—இருக்கிறார்.
அருணதேவன், சூரியதேவனுக்கு முன்புறம் அமர்ந்து இரதத்தினை ஒட்டியும், குதிரைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டும் இருக்கின்றார் என்றபோதிலும் அவர் சூரியதேவனைப் பார்த்த வண்ணம் பின்புறம் நோக்குகின்றார்.
பதம் 5.21.17
ததா வாலிகில்யா ருஷயோ ‘ங்குஷ்ட பர்வ மாத்ரா ஷஷ்டி ஸஹஸ்ராணி
புருத: ஸுரயம் ஸுக்த-வாகாய நியுக்தா: ஸம்ஸ்துவந்தி
ததா—அங்கே; வாலிகில்யா:—வாலிகில்யர்கள்; ருஷய—மாமுனிவர்கள்; அங்குஷ்ட-பர்வ-மாத்ரா—அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கட்டைவிரல் அளவுடையவர் ஆவார்; ஷஷ்டி-ஸஹஸ்ராணி—அறுபதினாயிரம்; புருத—முன்புறம்; ஸுர்யம்—சூரிய தேவன்; ஸு-உக்த-வாகாய—நாவன்மையுடன் பேசுவதற்காக; நியுக்தா—ஈடுபடுகின்றனர்; ஸம்ஸ்துவந்தி—பிரார்த்தனைகளை அர்ப்பணிக்கின்றனர்.
கட்டைவிரல் அளவுடைய வாலிகில்யர்கள் என்னும் அறுபதினாயிரம் முனிவர்கள் சூரிய தேவனின் முன்பு அமர்ந்து அவரது புகழின் நனிசிறந்த பிரார்த்தனைகளை அவருக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர்.
பதம் 5.21.18
ததான்யே ச ருஷயோ கந்தர் வாப்ஸரஸோ நாகா க்ராமண் யோ
யாதுதானா தேவா இதி ஏகைகஸோ கணா:
ஸப்த சதுர்தஸ மாஸி மாஸி பகவந்தம்
ஸுர்யம் ஆத்மானம் நானா-நாமானம் ப்ருதன்- நானா-நாமான:
ப்ருதக்- கர்மபிர் த்வந்த்வஸ உபாஸதே
ததா—அதுபோல்; அன்யே—பிறர்; ச—மேலும்; ருஷய—முனிவர்கள்; கந்தர்வ-அப்ஸரஸ:—கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸுகள்; நாகா—நாகங்கள்; க்ராமண்ய:—யக்ஷர்கள்; யாதுதானா:—இராட்சதர்கள்; தேவா—தேவர்கள்; இதி—இவ்வாறு; ஏக-ஏகஸ—ஒருவர்பின் ஒருவராக; கணா—கணங்கள்; ஸப்த—ஏழு; சதுர்தஸ—பதினான்கு; மாஸி மாஸி—ஒவ்வொரு மாதத்திலும்; பகவந்தம்—மிகச் சக்திவாய்ந்த தேவருக்கு; ஸுர்யம்—சூரியதேவன்; ஆத்மானம்—பிரபஞ்சத்தின் உயிர்; நானா—பல்வேறு; நாமானம்—பெயர்களை உடையவர்; ப்ருதக்—தனியே; நானா-நாமான—பல்வேறு பெயர்கள் உடையவராக; ப்ருதக்—தனியே; கர்மபி—சமயச் சடங்குகளினால்; த்வந்த்வஸ—இரண்டு பிரிவுகளாக; உபாஸதே—வழிபடுகின்றனர்.
அதுபோல் பதினான்கு பிற முனிவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸுகள், நாகர்கள், யக்ஷர்கள், இராட்சதர்கள், தேவர்கள், இரண்டு பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு மாதமும் பல்வேறு பெயர்களைப் பெற்று, மிகச் சக்தி வாய்ந்த சூரிய தேவனாகவும், பல்வேறு நாமங்களை உடையவராகவும் விளங்கும் பரமபுருஷப் பகவானை வழிபடுவதற்காகத் தொடர்ந்து பல்வேறு சமயச் சடங்குகளைச் செய்கின்றனர்.
பதம் 5.21.19
லக்ஷோத்தரம் ஸார்த-நவ–கோடி-யோஜன-பரிமண்டலம் பூ-
வலயஸ்ய க்ஷணேன ஸகவ்யூதி-உத்தரம் த்வி-ஸஹஸ்ர-யோஜனானி ஸ
புங்க்தே
லக்ஷ-உத்தரம்—லட்சத்தினால் அதிகரிக்கப்பட்டு; ஸார்த—5,000,000; நவ-கோடி-யோஜன—90,000,000 யோஜனங்களின்; பரிமண்டலம்—சுற்று; பூ-வல-யஸ்ய—பூ மண்டலம்; க்ஷணேன—ஒரு கணத்தில்; ஸகவ்யூதி—உத்தரம் இரண்டு குரோஸங்கள் அதிகரித்து (நான்கு மைல்கள்); த்வி-ஸஹஸ்ர-யோஜனானி—2,000 யோஜனங்கள்; ஸ:—சூரிய தேவன்; புங்க்தே—பயணம் செய்கிறார்.
அன்பார்ந்த மன்னனே, பூ மண்டலத்தைச் சுற்றியுள்ளக் கோளப் பாதையில் சூரியதேவன் 95,100,000 யோஜனங்கள் (760,800,000 மைல்கள்) தூரத்தே ஒரு கணக்கில் 2000 யோஜனங்கள் இரண்டு குரோஸங்கள் (16,004 மைல்கள்) வேகத்தில் பயணம் செய்கின்றார்.
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “சூரியனின் இயக்கம்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

