அத்தியாயம் – 16
ஜம்புத்வீபம் பற்றிய விளக்கம்
பதம் 5.16.1
ராஜோவாச
உக்தஸ் த்வயா பூ-மண்டலாயாம-விஸேஷோ யாவத் ஆதித்யஸ் தபதி
யத்ர சாஸௌ ஜ்யோதிஷாம் கனணஸ் சந்த்ரமா வா ஸஹ த்ருஸ்யதே
ராஜா உவாச—பரீக்ஷித்து மகாராஜா கூறினார்; உக்த:—ஏற்கனவே உரைக்கப்பட்டது; த்வயா—உம்மால்; பூ-மண்டல—பூமண்டலம் என்னும் உலகம்; ஆயாம-விஸேஷ:—அரைவிட்டத்தின் குறிப்பிட்ட நீளமானது; யாவத்—அதுவரை; ஆதித்ய:—சூரியன்; தபதி—வெம்மை; யத்ர—எங்கெங்கு; ச—மேலும்; அஸௌ—அது; ஜ்யோதிஷாம்—ஒளியின்; கணை:—கூட்டத்துடன்; சந்த்ரமா—சந்திரன்; வா—அல்லது; ஸஹ—உடன்; த்ருஸ்யதே—காணப்படுகிறது.
பரீக்ஷித்து மகாராஜா சுகதேவ கோஸ்வாமியிடம் கூறினார்: ஒ அந்தணரே, பூமண்டலத்தின் அரைவிட்டமானது சூரியனின் ஒளியும் வெம்மையும் பரவி இருக்கின்ற தூரம் வரையிலும், நிலவும், விண்மீன்களும் காணக் கூடியத் தூரம் வரையிலும் விரிவடைந்திருந்தாக ஏற்கனவே நீர் விளக்கியிருக்கின்றீர்.
பதம் 5.16.2
தத்ராபி ப்ரியவ்ரத-ரத-சரண-பரிகாதை: ஸப்தபி: ஸப்த ஸிந்தவ
உபக்லுபிதா யத ஏதஸ்யா: ஸப்த-த்வீப-விஸேஷ-விகல்பஸ் த்வயா
பகவன் கலு ஸுசித ஏதத் ஏவாகிலம் அஹம் மானதோ லக்ஷணதஸ் ச
ஸர்வம் விஜிஜ்ஞாஸாமி
தத்ர அபி—பூமண்டலத்தில்; ப்ரியவ்ரத-ரத-சரண-பாரிகாதை:—மகாராஜா பிரியவிரதன் தனது தேரில் சூரியனின் பின்னால் சுமேரு மலையைச் சுற்றிவரும் பொழுது தேர்ச்சக்கரங்களினால் ஏற்பட்டப் பள்ளங்களினால் ஆனது; ஸப்தபி:—ஏழு; ஸப்த—ஏழு; ஸிந்தவ:—கடல்கள்; உபக்லுப்தா:—உண்டாக்கப்பட்டது; யத:—இதன் காரணமாக; ஏதஸ்யா:—இப்பூமண்டலத்தின்; ஸப்த-த்வீப—ஏழு தீவுகளின்; விஸேஷ-விகல்ப:—கட்டப்பட்டதின் விகற்பம்; த்வயா—உம்மால்; பகவன்—ஒ, மாமுனிவரே; கலு—உண்மையில்; ஸுசித—விவரிக்கப்பட்டது; ஏதத்—இது; ஏவ—நிச்சயமாக; அகிலம்—அகிலம்; அஹம்—நான்; மாதை:—அளவின் நோக்கிலிருந்து; லக்ஷணத:—அடையாளங்களில் இருந்தும்; ச—மேலும்; ஸர்வம்—எல்லாம்; விஜிஜ்ஞாஸாமி—அறிய விரும்புகிறேன்.
போற்றுதற்குரிய ஐயனே, மகாராஜா பிரியவிரதனின் தேர்ச்சக்கரங்களினால் ஏற்பட்டப் பள்ளங்களிலேயே ஏழு கடல்கள் தோன்றின. இவ்வேழு கடல்களின் காரணமாகவே பூமண்டலம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவற்றின் பெயர், அளவு, தன்மை பற்றிப் பொதுவாகவே நீர் குறிப்பிட்டிருக்கின்றீர். அவற்றைப் பற்றி நான் விரிவாக அறிய விரும்புறேன். அருள் கூர்ந்து எனது விருப்பத்தினை நிறைவேற்றுவீராக.
பதம் 5.16.3
பகவதோ குணமயே ஸ்தூல-ரூப ஆவேஸிதம் மனோ ஹி
அகுணே ‘பி ஸுக்ஷ்மதம ஆத்ம-ஜ்யோதிஷி பரே ப்ரஹ்மணி பகவதி
வாஸுதேவாக்யே க்ஷமம் ஆவேஸிதும் தத் உ ஹைதத் குரோ ‘ர்ஹஸி
அனுவர்ணாயிதும் இதி
பகவத:—முழுமுதற் கடவுளின்; குண-மயே—முக்குணங்களினால் கட்டப்பட்ட புறத்தன்மைகளினுள்; ஸ்தூல-ரூபே—ஸ்தூல வடிவம்; ஆவேஸிதம்—புகுதல்; மன:—மனம்; ஹி—உண்மையில்; அகுணே—உன்னதமான; அபி—இருந்தபோதிலும்; ஸுக்ஷ்மதமே—இதயத்தில் வீற்றிருக்கும் அவரது சிறிய பரமாத்மா வடிவம்; ஆத்ம-ஜ்யோதிஷி—அவர் முற்றிலும் பிரம்ம ஒளி நிறைந்தவர்; பரே—உயர்ந்த; ப்ரஹ்மணி—ஆன்மீக உயிர்; பகவதி—முழுமுதற் கடவுள்; வாஸுதேவ-ஆக்யே—பகவான் வாசுதேவர் என்றறியப்படுபவர்; க்ஷமம்—பொருத்தமான; ஆவேஸிதும்—கிரஹித்துக் கொள்வதற்கு; தத்—அது; உ ஹ—உண்மையில்; ஏதத்—இந்த; குரோ—ஒ, எந்தன் ஆன்மீக குருவே; அர்ஹஸி அனுவர்ணயிலும்—உண்மையில் விளக்கி அருள்வீராக; இதி—இவ்வாறு.
மனமானது ஜட இயற்கையின் முக்குணங்களினாலான முழுமுதற் கடவுளின் புறத்தன்மையில் ஸ்தூல வடிவத்தில் நிலை நிறுத்தப்படும் பொழுது, அது சத்துவ குணத் தளமேடைக்குக் கொண்டுவரப்படுகிறது. இந்த உன்னத நிலையில் ஒருவன் தனது ஆன்மீக வடிவத்தில் சுய ஒளி பெற்றவராகவும், ஜட இயற்கைக் குணங்களைக் கடந்தவராகவும் விளங்கும் முழுமுதற் கடவுளான வாசுதேவரை அறிந்து கொள்ள முடியும். ஒ, எந்தன் தலைவரே, இப்பிரபஞ்சம் முழுவதையும் மூடியிருக்கும் அந்த வடிவம் எவ்வாறு உணரப்படுகிறது என்பதை விளக்கி அருள்வீராக.
பதம் 5.16.4
ருஷிர் உவாச
ந வை மஹாராஜ பகவதோ மாயா-குண-விபுதே காஸ்டாம்
மனஸா வசஸா வாதிகந்தும் அலம் விபுதாயுஷாபி புருஷஸ் தஸ்மாத்
ப்ராதான்யேனவை பூ-கோலக-விஸேஷம் நாம-ரூப-மான-லக்ஷணதோ
வ்யாக்யாஸ்யாம:
ருஷி: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்; ந—இல்லை; வை—உண்மையில்; மஹா-ராஜ—ஒ, மகாராஜாவே; பகவத:—முழுமுதற் கடவுளின்; மாயா-குண-விபூதே:—பௌதீகச் சக்தியின் குணங்களின் மாற்றத்தின்; காஸ்டாம்—முடிவு; மனஸா—மனத்தால்; வசஸா—வார்த்தைகளினால்; வா—அல்லது; அதிகஞ்தும்—முற்றிலும் அறிந்து கொள்வதற்கு; அலம்—திறனுடையவனாதல்; விபுத-ஆயுஷா—பிரம்ம தேவனைப் போல் நீண்ட ஆயுளுடையவனாக இருந்தபோதிலும்; அபி—கூட; புருஷ:—ஒருவன்; தஸ்மாத்—ஆகையினால்; ப்ரதான்-யேன—தலைமை இடங்களின் பொதுவான விளக்கங்களினால்; ஏவ—நிச்சயமாக; பூ-கோலோக-விஸேஷம்—பூலோக கருத்தைப் பற்றியக் குறிப்பிட்ட விளக்கம்; நாம-ரூப—நாமங்களும் ரூபங்களும்; மான—அளவுகள்; லக்ஷணத:—அடையாளங்களுக்கேற்ப; வ்யாக்யாஸ் யாம:—நான் விளக்க முயற்சிக்கிறேன்.
மகரிஷி சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பிற்குரியமன்னனே, முழுமுதற் கடவுளின் பௌதீகச் சக்தியின் விரிவிற்கு எந்தவொரு வரைமுறையும் கிடையாது. இப்பௌதீக உலகமானது பௌதீகக் குணங்களின் (சத்துவகுணம், இரஜோகுணம், தமோகுணம்) ஒரு மாற்றமாகும். இருந்தபோதிலும் இதனை, ஒருவன் பிரம்ம தேவனைப் போல் நீண்ட ஆயுளை உடையவனாக இருந்தாலும் மிகச் சரியாக விளக்கமுடியாது. இப்பௌநீக உலகில் ஒருவனும் நிறையுடையவன் அல்ல. மேலும் குறைவுடைய மனிதன் தொடர்ந்து யூகித்தலுக்குப் பின்னரும் கூட இப்பௌதீகப் பிரபஞ்சத்தைச் சரியாக விளக்கிவிட முடியாது.ஒ, மன்னனே, இருந்தும் நான் பூ கோலகம் (பூலோகம்) போன்ற தலையாய இடங்களை அவற்றின் பெயர்கள், வடிவங்கள், அளவுகள் மற்றும் பல்வேறு அடையாளங்களுடன் உனக்கு விளக்க முயற்சிக்கிறேன்.
பதம் 5.16.5
யோவாயம் த்வீப: குவலய-கமல-கோஸாப்யந்தர-கோஸேத நியுத-
யோஜன விஸால ஸமவர்துலோ யதா புஷ்கர-பத்ரம்
ய:—இது; வா—அல்லது; ஏவம்—இந்த; த்வீப:—தீவு; குவலய—பூலோகம்; கமல-கோஸ—தாமரைமலரின் இதழ்கள்; அப்யந்தர—உள்ளே; கோஸ:—இதழ்; நியுத-யோஜன-விஸால:—பத்துலட்சம் யோஜனம் (எண்பது லட்சம் மைல்கள்) அகலமானது; ஸமவர்துல:—வட்டவடிவமானது அல்லது ஒரே அளவு நீள அகலமுடையவது; யதா—போன்று; புஷ்கர-பத்ரம்—ஒரு தாமரை இலை.
பூமண்டலம் என்னும் கிரஹமானது ஒரு தாமரை மலரைப் போன்றதாகும். அதன் ஏழு தீவுகளும் தாமரை மலரின் ஏழு இதழ்களை போன்றிருக்கின்றன. அதன் மையத்தில் அமைந்திருக்கும் ஜம்புத்வீபத்தின் நீளமும், அகலமும் பத்து லட்சம் யோஜனம் (எண்பது லட்சம் மைல்கள்) ஆகும். ஜம்புத்வீபமானது தாமரை மலரின் இலையைப் போன்று வட்டவடிவமாக இருக்கிறது.
பதம் 5.16.6
யஸ்மின் நவ வர்ஷாணி நவ-யோஜன-ஸஹஸ்ராயா- மனி அஷ்டபிர்
மர்யாதாஜிரிபி ஸுவிபக்தானி பவந்தி
யஸ்மின்—இந்த ஜம்புத்வீபத்தில்; நவ—ஒன்பது; வர்ஷாணி—நிலப்பிரிவுகள்; நவ-யோஜன-ஸஹஸ்ர—72,000 மைல்கள் நீளத்தில்; ஆயாமானி—அளவில்; அஷ்டபி:—எட்டு; மர்யாதா—எல்லைகளைக் குறிப்பிடுகின்ற; ஜிரிபி:—மலைகளினால்; ஸுவிபக்தானி—ஒன்றிலிருந்து மற்றொன்ரு நன்கு பிரிக்கப்பட்டு; பவந்தி—இருக்கின்றன.
ஜம்புத்வீபத்தில் ஒன்பது நிலப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றும் 9000 யோஜனம் (72,000 மைல்கள்) நீளமுடையனவாகும். இவற்றிற்கு எல்லையாக எட்டு மலைகள் இருக்கின்றன அவை இவற்றை நன்கு பிரித்திருக்கின்றன.
பதம் 5.16.7
ஏஷாம் மத்யே இலாவ்ருதம் நாமாப்யந்தர வர்ஷம் யஸ்ய நாப்யாம்
அவஸ்தித: ஸர்வத: ஸௌவர்ண: குல-கிரி-ராஜோ மேருர் த்வீபாயாமஸ
முன்னாஹ: கர்ணிகா-பூத: குவலய-கமலஸ்ய மூர்தனி த்வாத்ரிம்ஸத்
ஸஹஸ்ர-யோஜன-விததோ மூலே ஷோடஸ-ஸஹஸ்ரம் தாவத்
ஆந்தர்பூம்யாம் ப்ரவிஷ்ட:
ஏஷாம்—ஜம்புத்வீபத்தின் இப்பிரிவுகள் எல்லாம்; மத்யே—நடுவில்; இலாவ்ருதம் நாம—இலாவ்ருத வர்ஷம் என்ற பெயரில்; அப்யந்தர-வர்ஷம்—உட்பிரிவு; யஸ்ய—இதனில்; நாப்யாம்—உந்திச் சுழியில்; அவஸ்தித:—அமைந்தது; ஸர்வத:—முழுவதும்; ஸௌவர்ண:—பொன்னால் ஆனது; குல-கிரி-ராஜ:—புகழ் மிக்க மலைகளுக்கெல்லாம் புகழ்மிக்கது; மேரு—மேருமலை; த்வீப-ஆயாம-ஸமுன்னாஹ:—இதன் உயரமானது ஜம்புத்வீபத்தின் அகலத்திற்குச் சமமானது; கர்ணிகா-பூத:—மேலுளவு போன்றது; குவலய—இந்த கிரஹத்தில்; கமலஸ்ய—ஒரு தாமரை மலர் போல்; மூர்தனி—உச்சியின் மீது; த்வா-த்ரிம்-ஸத்—முப்பத்திரெண்டு; ஸஹஸ்ர—ஆயிரம்; யோஜன—யோஜனம் (ஒரு யோஜனம் எட்டுமலைகள் ஆகும்); விதத:—விரிந்து; மூலே—அடிப்பகுதியில்; ஷோடஸ ஸஹஸ்ரம்—பதினாறாயிரம் யோஜனம்; தாவத்—அவ்வளவு; ஆந்த:—பூம்யாம்—பூமியினுள்; ப்ரவிஷ்ட:—புகுந்தது.
இப்பிரிவுகள் அல்லது வர்ஷங்களுக்கு மத்தியில் இலாவ்ருதம் என்னும் பெயருடைய வர்ஷம் ஒன்று உள்ளது. இது தாமரை மலரின் இதழ்களின் நடுஇதழாக அமைந்துள்ளது. இலாவ்ருத வர்ஷத்தின் நடுவில் பொன்னாலான சுமேரு மலை இருக்கிறது. தாமரை மலர் போன்ற பூமண்டலத்தின் மேலுறைபோல் சுமேரு மலை திகழ்கிறது. இம்மலையின் உயரம் ஜம்புத்வீபத்தின் அகலத்திற்குச் சமமானது அல்லது 100,000 யோஜனங்கள் (800,000 மைல்கள்) உடையதாகும். இதில் 16000 யோஜனங்கள் (128,000 மைல்கள்) பூமியினுள் புதையுண்டிருக்கிறது. அதனால் பூமியின் மேற்பரப்பிலிருந்து இம்மலையின் உயரம் 84,000 யோஜனங்கள் (672,000 மைல்கள்) ஆகும். இம்மலையின் அகலம், உயரத்தில் 32000 யோஜனங்களும் (256,000 மைல்கள்) அடிப்பகுதியில் 16000 யோஜனங்களும் ஆகும்.
பதம் 5.16.8
உத்தரோத்தரேணேவாவ்ருதம் நீல: ஸ்வேத: ஸ்ருங்க வான் இதி த்ரயோ
ரம்யகஹிரண்மய -குருணாம் வர்ஷாணாம் மர்யாதா-கிரய: ப்ராக்-ஆயுதா
உபயத: க்ஷரோதாவதயோ த்வி-ஸஸ்ர-ப்ருதவ ஏகைகஸ பூர்வஸ்மாத் பூர்வஸ்மாத்
உத்தர உத்தரோ தஸாம்ஸாதிகாம்ஸேன் தைர்க்ய ஏவ
ஹ்ரஸந்தி
உத்தர-உத்தரேண இலாவ்ருதம்—இலாவ்ருதவர்ஷத்தின் வட திசையில்; நீல:—நீலம்; ஸ்வேத—ஸ்வேதம்; ஸ்ருங்கவான்—சிருங்கவான்; இதி—இவ்வாறு; த்ரய:—மூன்று மலைகள்; ரம்யக—ரம்யகம்; ஹிரண்மய—இரண்மயம்; குரூணாம்—குரு பிரிவின்; வர்ஷாணாம்—வர்ஷங்களின்; மர்யாதா கிரய:—எல்லைகளைச் சுட்டும் மலைகள்; ப்ராக்-ஆயுதா:—கிழக்குதிசையில் விரித்திருக்கிறது; உபயத:—கிழக்கு மற்றும் மேற்கிற்கு; க்ஷாரோத—உப்பு நீர்க்கடல்; அவதய:—விரிந்திருக்கிறது; த்வி-ஸஹஸ்ர-ப்ருதவ:—இவையெல்லாம் இரண்டாயிரம் யோஜனங்கள் அகலமுடையவை; ஏக-ஏகஸ:—ஒன்றன் பின் மற்றொன்று; பூர்வஸ்மாத்—முன்னதைவிட; பூர்வஸ்மாத்—முன்னதைவிட; உத்தர:—மேலும் வடதிசையில்; உத்தர:—மேலும் வடதிசையில்; தஸ-அம்ஸ-அதிக-அம்ஸேன—முன்னதை விட பத்தில் ஒரு பகுதியினால்; தைர்க்ய—நீளத்தில்; ஏவ—உண்மையில்; ஹ்ரஸந்தி—குட்டையானது.
இலாவ்ருத வர்ஷத்தின் வடபால் மேலும் வடதிசையில் ஒன்றை அடுத்து மற்றொன்றாக மூன்று மலைகள் உள்ளன அவை நீலம், சுவேதம், சிருங்கவான் ஆகும். இவை ரம்யகம், இரண்மயம், குரு என்னும் மூன்று வர்ஷங்களின் எல்லைகளைக் குறிப்பவையாகும். இம்மலைகளின் அகலம் 2000 யோஜனங்கள் (16,000 மைல்கள்) ஆகும். நீளவாக்கில் அவை கிழக்கிலும் மேற்கிலும் உப்பு நீர்க்கடலின் கரைகள் வரை விரிந்திருக்கின்றன. தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் ஒவ்வொரு மலையின் நீளமும் முந்தைய மலையின் பத்தில் ஒரு பகுதியாகும் அவற்றின் உயரம் எல்லாம் ஒன்றேயாகும்.
பதம் 5.16.9
ஏவம் தக்ஷிணேனேலாவ்ருதம் நிஷதோ ஹேமகூடோ ஸிமாலய இதி
ப்ராக்-ஆயதா யதா நீலாதயோ ‘யுத யோஜனோத்ஸேதா ஹரி-வர்ஷ-
கிம்புருஷ – பாரதானாம் யதா-ஸங்க்யம்
ஏவம்—இவ்வாறு; தக்ஷிணேன—தென்திசைப் பகுதியின் கோணங்களினால்; இலாவ்ருதம்—இலாவ்ருத வர்ஷத்தின்; நிஷத:-ஹேம-கூட: ஹிமாலய—நிஷதம், ஏமகூடம், இமயம் என்னும் மூன்று மலைகள்; இதி—இவ்வாறு; ப்ராக்-ஆயதா:—கீழ்த்திசையில் பரவியிருக்கிறது; யதா—அதுபோன்று; நீல-ஆதய:—நீல மலையின் தலைமையின் கீழுள்ள மலைகள்; அயுத-யோஜன-உத்ஸேதா:—பத்தாயிரம் யோஜனங்கள் உயரம்; ஹரிவர்ஷ—ஹரிவர்ஷம் எனப்படும் பிரிவு; கிம்புருஷ—கிம்புருடம் என்னும் பிரிவு; பாரதானாம்—பாரத வர்ஷம் என்னும் பிரிவு; யதாஸங்க்யம்—எண்ணிக்கைக்கேற்ப.
அதுபோல் இலாவ்ருத—வர்ஷத்தின் தென்பகுதியில் கிழக்கிலும் மேற்கிலும் மூன்று பெரியமலைகள் (வடக்கிலிருந்து தெற்காக நிஷதம், ஏமகூடம், இமாலயம் என்று இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் 10,000 யோஜனம் (80,000 மைல்கள்) உயரமுடையனவாகும். இவை ஹரி—வர்ஷம், கிம்புருட—வர்ஷம், பாரத—வர்ஷத்தின் (இந்தியா) எல்லைகளைக் குறிப்பிடுவனவாகும்.
பதம் 5.16.10
ததைவேலாவ்ருதம் அபரேண பூர்வேண ச மால்யவத்-கந்தமாதனௌ
ஆனீல நிஷதாயதௌ த்வி-ஸஹஸ்ரம் பப்ரதது: கேதுமால-பத்ராஸ்
வயோ: ஸீமானம் விததாதே
ததா ஏவ—அதனைப் போன்றே; இலாவ்ருதம் அபரேண—இலாவ்ருத வர்ஷத்தின் மேற்றிசையில்; பூர்வேண ச—கீழ்த்திசையிலும்; மால்யவத்கந்த-மாதனௌ—மேற்கில் மால்யவான் மலையும், கிழக்கில் கந்தமாதனம் மலையும் எல்லைகளைக் குறிப்பிடுகின்றன; ஆ-நீல-நிஷத-ஆயதௌ—வடதிசையில் நீலம் என்னும் மலையும் தென்திசையில் நிஷதம் என்னும் மலையும் உள்ளன; த்வி-ஸஹஸ்ரம்—இரண்டாயிரம் யோஜனங்கள்; பப்ரதது:—அவை பரந்திருக்கின்றன; கேதுமால-பத்ராஸ்வயோ:—கேதுமாலம் மற்றும் பத்ராஸ்வம் என்னும் இரண்டு வர்ஷங்கள்; ஸமீனாம்—எல்லை; விததாதே—நிறுவுகின்றன.
அதேபோல் இலாவ்ருத வர்ஷத்தின் மேற்கிலும் கிழக்கிலும் மால்யவான், கந்தமாதனம் என்னும் இரண்டு பெரிய மலைகள் இருக்கின்றன. இவ்விரண்டு மலைகளும் 2000 யோஜனங்கள் (16000 மைல்கள்) உயரமும், வடக்கில் நீலமலை மற்றும் தெற்கில் நிஷதமலை வரை பரந்திருந்தது. இவை இலாவ்ருத—வர்ஷம், கேதுமாரவர்ஷம் மற்றும் பத்ராஸ்வ வர்ஷம் போன்றவற்றின் எல்லைகளைக் குறிப்பிடுகின்றன.
பதம் 5.16.11
மந்தரோ மேடுமந்தர: ஸுபார்ஸ்வ: குமுத இதி அயுத யோஜன
விஸ்தாரோன்னாஹா மேரோஸ் சதுர்-திஸம் அவஷ்டம்ப-கிரய
உபக்லுப்தா:
மந்தர:—மந்தரம் என்னும் மலை; மேரு-மந்தர:—மேருமந்தரம் என்னும் மலை; ஸுபார்ஸ்வ:—சுபார்ஸுவம் என்னும் மலை; குமுத—குமுதம் என்னும் மலை; இதி—இவ்வாறு; அயுத-யோஜன-விஸ்தார-உன்னாஹா:—இவை பத்தாயிரம் யோஜனங்கள் உயரமும் அகலமும் உடையன; மேரோ:—சுமேருவின்; சது:-திஸம்—நான்கு திசைகள்; அவஷ்டம்ப-கிரய:—சுமேருமலையின் அரைக்கச்சு போன்றவை; உபக்லுப்தா:—அமைந்திருக்கின்றன.
மிகப்பெரிய சுமேரு மலையின் நான்கு திசைகளிலும் மந்தரம், மேருமந்தரம், சுபார்ஸுவம், குமுதம் என்னும் மலைகள் இருக்கின்றன. இவை அதன் அரைக் கச்சுப்போல் அமைந்திருக்கின்றன. இம்மலைகளின் உயரமும், நீளமும் 10,000 யோஜனங்கள் (80,000 மைல்கள்) ஆகும்.
பதம் 5.16.12
சதுர்ஷ்வ ஏதேஷு சூத-ஐம்பூ-கதம்ப ந்யக்ரோதாஸ் சத்வார:
பாதபப்வரா: ப்ரவத-கேதவ இவாதி-ஸஹஸ்ர-யோஜனோனாஹாஸ்
தாவத் விடபவிததய: ஸத-யோஜன-பரிணாஹா:
சதுர்ஷு—நான்கின் மீதும்; ஏதேஷு—மந்தரமலை தொடங்கி இம்மலைகளின் மேல்; சூத-ஜம்பூ-கதம்ப—மா, நாவல், கதம்பம் போன்ற மரங்கள்; ந்யக்ரோதா:—மற்றும் ஓர் ஆலமரம்; சத்வார:—நான்கு வகையான; பாதப-ப்ரவரா:—மரங்களில் சிறந்தவை; ப்ரவத-கேதவ:—மலை உச்சியில் உள்ள கொடிக்கம்பங்களைப் போல்; இவ—போன்று; அதி—அதிகமான; ஸஹஸ்ர-யோஜன-உன்னாஹா:—ஓராயிரம் யோஜனங்கள் உயரம்; தாவத்—அவ்வளவு; விடபவிததய:—கிளைகளின் நீளம்; ஸத-யோஜன—நூறுயோஜனம்; பரிணாஹா:—அகலம்.
இந்நான்கு மலைகளின் மேல் உச்சியில் கொடிக்கம்பங்களைப் போல் ஒரு மாமரம், ஒரு நாவல்மரம், ஒரு கதம்பமரம், ஒர் ஆலமரம் இருக்கின்றன. இம்மரங்களின் அகலம் 100 யோஜனமும், (800 மைல்கள்) 1,100 யோஜனம் (8,800 மைல்கள்) உயரமும் உடையனவாகும். இவற்றின் விட்டம் 1100 யோஜனங்கள் ஆகும்.
பதங்கள் 5.16.13 – 5.16.14
ஹ்ரதாஸ் சத்வார: பயோ-மத்வ-இக்ஷுரஸ-ம்ருஷ்ட-ஜலா யத்-
உபஸ்பர்ஸின உபதேவ-கணா யோகைஸ்வர்யாணி ஸ்வாபாவிகானி
பரதர்ஷப தாரயந்தி தேவோத்யானானி ச பவந்தி சத்வாரி நந்தனம்
சைத்ரரதம் வைப்ராஜகம் ஸர்வதோ பத்ரம் இதி
ஹ்ரத:—குணங்கள்; சத்வார:—நான்கு; பய:—பால்; மது—தேன்; இக்ஷு-ரஸ—கரும்புச்சாறு; ம்ருஷ்ட-ஜலா:—தூய நீரினால் நிரப்பப்பட்டு; யத்—இவற்றை; உபஸ்பர்ஸின:—இந்நீரை பயன்படுத்துவோர்; உபதேவ-கணா:—தேவர்கள்; யோக-ஐஸ்வர்யாணி—யோக ஸித்தியின் அனைத்து நிறைவுகளும்; ஸ்வாபாவிகானி—முயற்சி ஏதுமின்றி; பரத-ருஷப:—ஒ, பரதகுலத்தோனே; தாரயந்தி—பெற்றிருத்தல்; தேவ-உத்யானானி—தேவ நந்தவனங்கள்; ச—மேலும்; பவந்தி—இருக்கின்றன; சத்வாரி—நான்கு; நந்தனம்—நந்தவனம்; சைத்ரரதம்—சைத்ரரதம் நந்தவனம்; வைப்ராஜகம்—வைப்ராஜக நந்தவனம்; ஸர்வத:-ப்தரம்—சர்வதோ பத்ர நந்தவனம்; இதி—இவ்வாறு.
ஒ, பரீக்ஷித்து மகாராஜாவே, பரதகுலத்திற் சிறந்ததோனே, இந்நான்கு மலைகளுக்கும் இடையில் நான்கு குளங்கள் உள்ளன. முதல் குளத்தின் நீர் பாலைப்போன்று சுவையுடையதாகும். இரண்டாவது குளத்தின் நீர் தேனைப்போன்று சுவையுடையதாகும். மூன்றாவது குளத்தின் நீர் கரும்புச் சாற்றின் சுவையுடையதாகும். நான்காவது குளம் தூய நீர் நிரம்பியதாகும். தேவர்கள் எனப்படும் சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள் எல்லாம் இக்குளங்களின் வசதிகளை அனுபவித்து மகிழ்வர். இதனைத் தொடர்ந்து அவர்கள் சிறிதினும் சிறியதாகவும், பெரிதினும் மிகப் பெரியதாகவும் யோகஸித்திகளை இயற்கையிலேயேப் பெற்றிருந்தனர். அங்கே நந்தனம், சைத்ரரதம், வைப்ராஜகம் மற்றும் ஸர்வதோபத்ரம் என்னும் நான்கு தெய்வீக நந்தவனங்கள் இருக்கின்றன.
பதம் 5.16.15
யேஷ்வ அமர-பரிவ்ருதோ: ஸஹஸுர-லலனா-லலமா-யூத-பதய
உபதேவ-கனணர் உபகீயமான-மஹிமான கில விஹரந்தி
யேஷு—இவற்றில்; அமர-பரிவ்ருதா:—தேவர்களிற் சிறந்த; ஸஹ—உடன்; ஸுர-லலனா—அனைத்துத் தேவர்களும் தங்கள் மனைவியருடன்; லலாம—ஆபரணங்களைப் போன்று அழகுடைய அம்மகளிர்; யூதபதய:—கணவன்மார்; உபதேவ-கணை:—தேவர்களில் சற்றுக்குறைந்தவர்களினால் (கந்தர்வர்களினால்); உபகீயமான—ஒதி; மஹிமான:—அவர்களது பெருமைகள்; கில—உண்மையில்; விஹரந்தி—விளையாடி மகிழ்வர்.
தேவர்களில் மிகச் சிறந்தோர் ஆபரணங்கள் போன்று தெய்வீக அழகுடைய தங்கள் மனைவியருடன் இணைந்து வந்து அந்த நந்தவனங்களில் விளையாடி மகிழ்வர். அப்போது அவர்களைவிடச் சற்றுத் தாழ்ந்த கந்தர்வர்கள் அவர்கள் பெருமைகளை பாடிக்கொண்டிருப்பர்.
பதம் 5.16.16
மந்தரோத்ஸங்க ஏகாதஸ-ஸத-யோஜனாத்துங்க-தேவ-சூத-ஸிர
ஸோ கிரிஸிகர-ஸ்தூலானிபலானி அம்ருத-கல்பானி பதந்தி
மந்தர-உத்ஸங்கே—மந்தரமலையின் தாழ்ந்த சரிவுகளின் மேல்; ஏகாதஸ-ஸத-யோஜன-உத்துங்க—1100 யோஜனம் உயரம்; தேவ சூத-ஸிரஸ:—தேவசூதம் என்னும் ஒரு மாமரத்தின் மேலிருந்து; கிரி-ஸிகர-ஸ்தூலானி—அவை மலைச் சிகரங்கள் போன்று பெரியன; பலானி—கனி; அம்ருத-கல்பானி—அமிர்தம் போன்று இனியன; பதந்தி—கீழே வீழும்.
மந்தர மலையின் தாழ்ந்த சரிவுகளின் மேல் தேவசூதம் என்னும் ஒரு மாமரம் இருக்கிறது. அதன் கனிகள் மலைச் சிகரங்களைப் போன்று பெரியன என்பதோடு தேவலோகத்தில் உள்ளோர் அனுபவித்து மகிழ்வதற்காக மரத்தின் மேலிருந்து அமிர்தம் ஒழுகுவது போன்று இனிய சுவையுடையதுமாகும்.
பதம் 5.16.17
தேஷாம் விஸீர்யமாணானாம் அதி-மதுர-ஸுரபி-ஸுகந்தி-பஹுலாரு
ணஸைரேதேனாருணோதா நாம நதீ மந்தர-கிரி-ஸிகரான் நிபதந்தீ
பூர்வேணேலாவ்ருதம் உபப்லாவயதி
தேஷாம்—இம்மாங்கனிகள் அனைத்தும்; விஸீர்யமாணானாம்—மேலிருந்து கீழே வீழ்வதினால் உடைந்து; அதி-மதுர—மிகவும் இனிய; ஸுரபி—நறுமணம்; ஸுகந்தி—பிற நறுமணங்களுடன் கலந்து; பஹுல—பெரிய அளவு; அருண-ரஸ-உதேன—சிவந்த சாற்றினால்; அருணோதா—அருணோதா; நாம—பெயரில்; நதீ—நதி; மந்தர-கிரி-ஸிகராத்—மந்தரமலையின் உச்சியில்; நிபதந்தீ—கீழே வீழ்ந்து; பூர்வேண—கிழக்குப்பகுதியில்; இலாவ்ருதம்—இலாவ்ருத வர்ஷத்தின் மூலம்; உபப்லாவயதி—ஒடுகிறது.
கனிந்த மாங்கனிகள் அவ்வளவு உயரத்திலிருந்து விழும்பொழுது அவை உடைந்து, சிதைந்து அதனுள்ளிருந்து நறுமணமிக்க இன்சுவைச்சாறு பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் மணம் பிற நறுமணங்களுடன் கலந்து அதிக நறுமணத்தை வீசச்செய்யும். அச்சாறு மலையிலிருந்து அருவியென வீழ்ந்து அருணோதா என்னும் நதியாகப் பெருக்கெடுத்து ஒடுகிறது. இந்நதி இலாவ்ருத வர்ஷத்தின் கீழ்த்திசையில் இனிமையாக ஒடிக்கொண்டிருக்கிறது.
பதம் 5.16.18
யத்-உப்ஜோஷணாத் பவான்யா அனுசரீணாம் புண்ய-ஜன-
வதூனாம் அவயவ-ஸ்பர்ஸ-ஸுகந்த-வா தோ தஸ-யோஜனம் ஸமந்தாத்
அனுவாஸயதி
யத்—இதன்; உபஜோஷணாத்—நறுமணமிக்க நீரைப் பயன்படுத்துவதினால்; பவான்யா:—சிவபெருமானின் மனைவியான பவானியின்; அனுசரீணாம்—பணிப்பெண்களின்; புண்ய-ஜன-வதூனாம்—அவர்கள் புண்ணியமிக்க யட்சர்களின் மனைவியர் ஆவர்; அவயவ—அவயவங்களின்; ஸ்பர்ஸ—தொடர்பிலிருந்து; ஸுகந்த-வாத:—காற்றும் நறுமணம் உடையதாகிறது; தஸ-யோஜனம்—பத்து யோஜன தூரத்திற்கு (எண்பது மைல் தூரம்); ஸமந்தாத்—எங்கும்; அனுவாஸயதி—நறுமணம் கமழச் செய்யும்.
யட்சர்களின் புண்ணியமிக்க மனைவியர், சிவபெருமானின் மனைவி பவானிக்குப் பணிப்பெண்களாவர், அருணோதயா நதியின் நீரைப் பருகிய காரணத்தால் அவர்களது உடல்கள் நறுமணம் வீசும், காற்று அந்நறுமணத்தைச் சுமந்துகொண்டு எண்பது மைல் சுற்றளவிற்கு நறுமணம் கமழச் செய்யும்.
பதம் 5.16.19
ஏவம் ஜம்பூ-பலானாம் அத்யுச்ச-நிபாத-விஸீர்ணானாம் அனஸ்தி-
ப்ராயாணாம் இப-காய-நிபானாம் ரஜேன ஜம்பூ நாம நதீ மேரு-மந்தர-
ஸிகராத் அயுத-யோஜனாத் அவனி-தலே நிபதந்தீ தக்ஷிணேனாத்மானம்
யாவத் இலாவ்ருதம் உபஸ்யந்தயதி
ஏவம்—அதுபோல்; ஜம்பூ-பலானாம்—ஜம்பூ எனப்படும் பழங்கள் (நாவல் பழம்); அதி-உச்ச-நிபாத—மிகுந்த உயரத்திலிருந்து வீழ்வதினால்; விஸீர்ணானாம்—சுக்குநூறாக உடைந்து சிதறி; அனஸ்தி-ப்ராயாணாம்—சிறு கொட்டைகளை உடையது; இப-காய-நிபானாம்—அவை யானையின் உடலைப்போன்று பெரியவையாகும்; ரஸேன—சாற்றினால்; ஜம்பூ நாம நதீ—ஜம்பூ நதி என்னும் ஆறு; மேரு-மந்தர-ஸிகராத்—மேரு மந்தரமலையின் உச்சியிலிருந்து; அயுத-யோஜனாத்—பத்தாயிரம் யோஜனம் உயரம்; அவனிதலே—நிலத்தின் மீது; நிபதந்தீ—வீழ்ந்து; தக்ஷிணேன—தென் பகுதியில்; ஆத்மானம்—தனது; யாவத்—முழுவதும்; இலாவ்ருதம்—இலாவ்ருத வர்ஷம்; உபஸ்யந்தயதி—மூலம் பாய்ந்தோடுகிறது.
அதுபோல் ஜம்பு மரத்தின் கனிகள், சதைப்பற்றுமிக்கும், சிறிய கொட்டைகளை உடையதாகும். மிகுந்த உயரத்திலிருந்து வீழ்ந்து துண்டு துண்டாகச் சிதறிப்போகும். இக்கனிகள் ஒவ்வொன்றும் ஒரு யானையினைப் போல் பெரியதாகும். இவற்றின் சாறு ஆறாக ஜம்பூ நதி என்னும் பெயரில் ஒடுகிறது. இந்நதி மேரு மந்தர மலையின் சிகரத்திலிருந்து 10,000 யோஜனம் தூரத்தில் இலாவ்ருதத்தின் தென்பகுதியில் வீழ்கிறது. இது இலாவ்ருதத்தின் நிலப்பரப்பு முழுவதும் இனியசாற்றுடன் பாய்ந்தோடுகிறது.
பதங்கள் 5.16.20 – 5.16.21
தாவத் உபயோர் அபி ரோதஸோர் யா ம்ருத்திகா தத்-
ரஸேனானுவித்யமானா வாய்வ-அர்க-ஸம்யோக-விபாகேன ஸதாமர-
லோகாபரணம் ஜாம்பூ-நதம் நாம ஸுவர்ணம் பவதி யத் உ ஹ வாவ
விபுதாதய: ஸஹ யுவதிபிர் முகுட –கடக-கடி-ஸுத்ராதி-ஆபரண-
ரூபேண கலு தாரயந்தி
தாவத்—முற்றிலும்; உபயோ: அபி—இரண்டின்; ரோதஸோ:—கரைகளின்; யா—இது; ம்ருத்திகா—மண்; தத் ரஸேன—ஆறாக ஓடிவரும் ஜம்பூகனிகளின் சாறுடன்; அனுவித்யமானா—நனைந்து; வாயு-அர்க-ஸம்யோக-விபாகேன—சூரியஒளி, மற்றும் காற்றின் வேதியியல் மாற்றத்தினால்; ஸதா—எப்போதும்; அமர-லோக-ஆபரணம்—தேவலோகத்தைச் சேர்ந்த தேவர்களினால் ஆபரணங்களாகப் பயன்படுத்தப்படுகிறது; ஜம்பூ-நதம்-நாம—ஜம்பூநதம் என்னும் பெயரில்; ஸுவர்ணம்—பொன்; பவதி—ஆகிறது; யத்—இது; உ ஹ வாவ—உண்மையில்; விபுத-ஆதய:—பெரிய தேவர்கள்; ஸஹ—உடன்; யுவதிபி:—அவர்களது என்றும் இளமையுடன் இருக்கும் மனைவியர்; முகுட—மகுடங்கள்; கடக—வளையல்கள்; கடி-ஸுத்ர—ஒட்டியாணங்கள்; ஆதி—போன்றவை; ஆபரண—எல்லாவிதமான ஆபரணங்களின்; ரூபேண—ரூபத்தில்; கலு—உண்மையில்; தாரயந்தி—அவர்கள் வைத்துக் கொள்கின்றனர்.
ஜம்பூ—நதியின் இருகரைகளிலுமுள்ள மண் பாய்ந்து பெருகிவரும் சாற்றில் நனைந்து காற்று மற்றும் சூரிய ஒளியில் உயர்ந்து ஏராளமான தங்கத்தை உருவாக்குகிறது. இத்தங்கம் ஜம்பூ—நதம் என்றழைக்கப்படுகிறது. தேலோகத்தைச் சேர்ந்தவர்கள் இத்தங்கத்தை பல்வேறு ஆபரணங்கள் செய்யப் பயன்படுத்துகின்றனர். அதனால் தேவலோகத்தைச் சேர்ந்த ஆடவரும் அவர்களது என்றும் இளமை மாறாத மனைவியரும் பொன்னாலான கிரீடங்கள், கைவளைகள், ஒட்டியாணங்கள், போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு வாழ்வினை அனுபவித்து மகிழ்கின்றனர்.
பதம் 5.16.22
யஸ் து மஹா-கதம்ப ஸுபார்ஸ்வ-நிரூடேத யாஸ் கோடரேப்யோ
விநி: ஸ்ருதா பஞ்சாயாம-பரிணாஹ பஞ்சு மது தாரா: ஸுபார்ஸ்வ
ஸிகராத் பதந்த்யோ ‘பரேணாத்மானம இலாவ்ருதம் அனுமோதயந்தி
ய:—இது; து—ஆனால்; மஹா-கடம்ப:—மகா கடம்பமரம்; ஸுபார்ஸ்வ-நிரூட:—இம்மரம் சுபார்ஸுவ மலையின் ஒரு பக்கத்தில் உள்ளது; யா:—இது; தஸ்ய—இதன்; கோடரேப்ய:—பொந்துக்களில் இருந்து; விஞி: ஸ்ருதா:—பொங்கிவழியும்; பஞ்ச—ஐந்து; ஆயாம—வியாமம் அதாவது எட்டடி அளவுடையது; பரிணாஹா:—இதன் அளவு; பஞ்ச—ஐந்து; மது-தாரா:—தேன் பொங்கி வழியும்; ஸுபார்ஸ்வ-சிகராத்—ஸுபார்ஸ்வ மலையின் உச்சியிலிருந்து; பதந்த்ய:—கீழே வழிந்து; அபரேண—சுமேடு மலையின் மேற்குத் திசையில்; ஆத்மானம்—முழுவதும்; இலாவ்ருதம்—இலாவ்ருத வர்ஷம்; அனுமோதயந்தி—இனிய நறுமணம் வீசும்.
அபார்ஸுவ மலையின் ஒரு பக்கத்தில் மிகவும் போற்றப்படும் மகா கடம்பம் என்றொரு மரம் இருக்கிறது. இம்மரத்தின் பொந்துக்களிலிருந்து ஐந்து தேனாறுகள் பாய்கின்றன. ஒவ்வொன்றும் ஐந்து வியாமங்கள் அகலமுடையன. பொங்கிவரும் இத்தேன் ஸுபார்ஸ்வ மலையின் உச்சியிலிருந்து இடைவிடாதுப் பிரவாகித்து, இலாவ்ருத வர்ஷத்தின் மேற்குப் பகுதியில் தொடங்கி அதைச் சுற்றிலும் ஒடுகிறது. இதனால் அந்நிலப்பகுதி முழுவதும் இனிமையான நறுமணத்தினால் நனைக்கப்பட்டிருக்கிறது.
பதம் 5.16.23
யா ஹி உபயுஞ்ஜானானாம் முக-நிர்வாஸிதோ வாயு: ஸமந்தாச் சத-
யோஜனம் அனுவாஸயதி
யா:—இவை (தேன்பெருகி ஓடுபவை); ஹி—உண்மையில்; உபயுஞ்ஜானானம்—குடிப்பவர்கள்; முக-நிர்வாஸித:-வாயு:—வாயிலிருந்து வரும் காற்று; ஸமந்தாத்—நாலா புறமும்; ஸத-யோஜனம்—நூறு யோஜனங்கள் வரை; (எண்ணூறு மைல்கள்); அனுவாஸயதி—இனிய நறுமணத்தை உண்டுபண்ணும்.
இத்தேனைக் குடிப்பவர்களின் வாயிலிருந்து வரும் நறுமணத்தைக் காற்று சுமந்து கொண்டு நூறு யோஜனங்கள் தூரம் வரை நறுமணம் வீசச்செய்யும்.
பதம் 5.16.24
ஏவம் குமுத நிரூடேத ய: ஸதவல்ஸோ நாம வடஸ்தஸ்ய
ஸ்கஞ்தேப்யோ நீசீனா: பயோ-ததி-மது-க்ருத-குடான்னாதி-அம்பர-
ஸய்யாஸனாகபரணாதய ஸர்வ ஏவ காம-துகா நதா: குமுதாக்ராத் பதந்தஸ்
தம் உத்த-ரேணேலாவ்ருதம் உபயோஜயந்தி
ஏவம்—இவ்வாறு; குமுத-நிரூட:—குமுதமலையின்மேல் வளர்ந்திருக்கும்; ய:—இது; ஸத-வல்ஸ: நாம—ஸத வல்ஸம் என்னும் பெயருடைய மரம் (ஏனென்றால் நூற்றுக் கணக்கான அடிமரங்களை உடையது); வட:—ஓர்ஆலமரம்; தஸ்ய—அதன்; ஸ்கஞ்தேப்ய:—பருத்தக் கிளைகளிலிருந்து; நீசீனா:—கீழே பெருகி ஒடும்; பய:—பால்; ததி—தயிர்; மது—தேன்; க்ருத—நெய்; குட—சாறு; அன்ன—தானியங்கள்; ஆதி—போன்றவை; அம்பர—உடை; ஸய்யா—படுக்கை; ஆஸன—இருப்பிடம்; ஆபரண-ஆதய:—ஆபரணங்கள் போன்றவற்றைச் சுமந்துகொண்டு; ஸர்வே—எல்லாம்; ஏவ—நிச்சயமாக; காம-துகா:—எல்லா விருப்பங்களையும் பூர்த்திசெய்து; நதா:—பெரிய நதிகள்; குமுத-அக்ராத்—குமுதமலையின் உச்சியிலிருந்து; பதந்த:—பெருகி; தம்—அதற்கு; உத்தரேண—வட பகுதியில்; இலாவ்ருதேம்—இலாவ்ருத வருஷம் எனப்படும் நிலப்பகுதி; உபயோஜயந்தி—மகிழ்ச்சியளிக்கிறது.
அதுபோல் குமுதமலையின் மேல் ஒர் ஆலமரம் இருக்கிறது. இதற்கு சதவல்ஸம் என்று பெயர். காரணம் இதற்கு நூறு பெரிய கிளைகள் உண்டு. இக்கிளைகளிலிருந்து பல விழுதுகள் வளர்ந்திருக்கின்றன. அவற்றிலிருந்து பல ஆறுகள் பெருகி ஓடுகின்றன. இந்த ஆறுகள் மலை உச்சியிலிருந்து இலாவ்ருத வர்ஷத்தின் வடபகுதியில் அங்கு வாழ்பவர்களின் நன்மைக்காகப் பெருகி ஒடுகின்றன. இவ்வாறுகள் ஓடும் காரணத்தினால் மக்கள் அனைவரும் ஏராளமான பால், தயிர், தேன், நெய், சாறு, தானியங்கள், ஆடைகள், படுக்கைகள், இருக்கைகள், ஆபரணங்கள் போன்றவை கிடைக்கப்பெறுகின்றனர். அவர்கள் விரும்பும் பொருட்கள் அனைத்தும் போதுமான அளவு கிடைப்பதினால் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடனிருக்கின்றனர்.
பதம் 5.16.25
யான் உபஜுஷாணானாம் ந கதாசித் அபி ப்ரஜானாம் வலீ- பலித-
க்லம-ஸ்வேதா தௌர்கந்த்ய-ஜராமய-ம்ருத்யு-ஸீதோஷ்ண-வைவர்ண்
யோபஸர்காதயஸ் தாபவிஸேஷ பவந்தி யாவஜ் ஜுவம் ஸுகம் நிரதிஸயம்
ஏவ
யான்—இவை (மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நதிகளின் ஒட்டத்தின் காரணமாக உருவாகும் எல்லாப் பொருட்களும்); உபஜுஷாணானாம்—அதை முற்றிலும் பயன்படுத்துபவர்கள்; ந—இல்லை; கதாசித்—எந்த நேரத்திலும்; அபி—உறுதியாக; ப்ரஜானாம்—குடிமக்களின்; வலீ—திரை; பலித—நரை; க்லம்—சோர்வு; ஸ்வேத—வியர்வை; தௌர்கந்த்ய—வியர்வை காரணமாக எழும் துர்நாற்றம்; ஜர—முதுமை; ஆமய—பிணி; ம்ருத்யு—மரணம்; ஸீத—கடுமையானக் குளிர்; உஷ்ண—உஷ்ணம்; வைவர்ண்ய—உடலின் பளபளப்பு குறைதல்; உபஸர்க—இன்னல்கள்; ஆதய:—போன்றவை; தாப—துன்பங்களின்; விஸேஷா:—பலவிதமான; பவந்தி—இருக்கின்ற; யாவத்—அதுவரை; ஜீவம்—உயிர்; ஸுகம்—சுகம்; நிரதிஸயம்—அளவின்றி; ஏவ—மட்டும்.
இந்நதிகளில் இருந்து உருவாகும் பொருட்களை அனுபவிக்கும் பௌதீக உலக மக்களுக்கு உடலில் நரை, திரை என்பது தோன்றுவதே இல்லை. அவர்களிடம் சோர்வு என்பதே ஏற்படுவதில்லை. வியர்வையினால் அவர்கள் உடலில் துர்நாற்றம் வீசுவதில்லை. அவர்கள் நரை, திரை, பிணி, மூப்பு, காலமற்ற காலத்தில் மரணம் போன்றவற்றிற்கு ஆளாவதில்லை. அவர்கள் கடுமையானக் குளிர் உஷ்ணம் போன்றவற்றினால் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் உடலின் மினுமினுப்பு என்றும் குறைவதில்லை. அவர்கள் எந்த விதமானக் கவலையுமின்றி மரணமடையும்வரை மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.
பதம் 5.16.26
குரங்க-குரா-குஸும்ப-வைகங்க-த்ரிகூட-ஸிஸிர-பதங்க-
ருசகநிஷத-ஸினீவாஸ-கபில-ஸங்க-வைடூர்ய-ஜாருதி-ஹம்ஸ-ருஷப –
நாக-காலஞ்ஜர-நாரதாதயோ விம்ஸதி-கிரயோ மேரோ: கர்ணிகாயா
இவ கேஸரபூதா மூல தேஸே பரித உபகல்ப்தா:
குரங்க—குரங்கம்; குரர—குரரம்; குஸும்ப-வைகங்க-த்ரிகூட-ஸிஸிர-பதங்க-ருசக-நிஷத- ஸினீவாஸ-கபில-ஸங்க-வைடூர்ய-ஜாருதி-ஹம்ஸருஷப -நாக-காலாஞ்ஜர-நாரத- மலைகளின் பெயர்கள்; ஆதய:—போன்றவை; விம்ஸதி-கிரய:—இருபது மலைகள்; மேரோ:—சுமேரு மலையின்; கர்ணிகாயா:—தாமரை மலரின் இதழ்களின்; இவ—போன்று; கேஸர-பூதா:—நூலிழைபோல்; மூல-தேஸே—அடிப்பகுதியில்; பரித:—சுற்றிலும்; உபகல்ப்தா:—முழுமுதற் கடவுளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேருமலையின் அடிப்பகுதியைச் சுற்றிலும், தாமரை மலரின் இதழ்களைச் சுற்றியுள்ள நூலிழை போல் பிற மலைகள் மிகவும் எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் பெயர்கள், குரங்கம், குரரம், குஸும்பம், வைகங்கம், திரிகூடம், சிஸிரம், பதங்கம், ருசகம், நிஷதம், சினீவாஸம், கபிலம், சங்கம், வைடூர்யம், ஜாருதி, ஹம்ஸம், ரிஷபம், நாகம், காலாஜ்ஞாரம், நாரதம் என்பவையாகும்.
பதம் 5.16.27
ஜடர-தேவகூடடௌ மேரும் பூர்வேணாஷ்டாதஸ-யோஜன ஸஹ
ஸ்ரம் உதகாயதெள த்வி- ஸஹஸ்ரம் ப்ருது-துங்கேள பவத: ஏவம்
அபரேண பவன-பாரியாத்ரௌ தக்ஷிணேன கைலாஸ-கரவீரௌ
ப்ராக்-ஆயதாவ் ஏவம் உத்தரதஸ் த்ரிஸ்ருங்க-மகாராவ் அஷ்டபிர் ஏதை:
பரிஸ்ருதோ ‘க்னிர் இவ பரிதஸ் சகாஸ்தி காஞ்சன-கிரி:
ஜடர-தேவகூடடௌ—ஜடரம், தேவகூடம் என்னும் இரண்டு மலைகள்; மேரு—சுமேரு மலை; பூர்வேண—கிழக்குப்பக்கத்தில்; அஷ்டாதஸ-யோஜன-ஸஹஸ்ரம்—பதினெட்டாயிரம் யோஜனங்கள்; உதகாயதௌ—வடக்கிலிருந்து தெற்காக நீண்டிருக்கிறது; த்வி-ஸஹஸ்ரம்—இரண்டாயிரம் யோஜனங்கள்; ப்ருது-துங்கௌ—அகலத்திலும் உயரத்திலும்; பவத:—இருக்கின்றன; ஏவம்—அதுபோல்; அபரேண—மேற்குப் பக்கத்தில்; பவன-பாரியாத்ரௌ—பவனம் மற்றும் பாரியாத்ரம் என்னும் இரண்டு மலைகள்; தக்ஷிணேன—தெற்குப் பக்கத்தில்; கைலாஸ-கரவீரௌ—கைலாசம், கரவீரம் என்னும் இரண்டு மலைகள்; ப்ராக-யதௌ—கிழக்கிலும் மேற்கிலும் விரிந்து; ஏவம்—அதுபோல்; உத்தரத:—வடபகுதியில்; த்ரிஸ்ருங்க-மகரௌ—திரிஸ்ருங்கம், மகரம் என்றும் இரண்டு மலைகள்; அஷ்டபி:-ஏதை:—இந்த எட்டு மலைகளினால்; பரிஸ்ருத:—சூழப்பட்டு; அக்னி: இவ—அக்கினியைப் போன்று; பரித:—எங்கும்; சகாஸ்தி—பளப்பளப்புடன் ஒளிரும்; காஞ்சன-கிரி:—சுமேரு அல்லது மேரு என்னும் பொன்மலை.
சுமேரு மலையின் கிழக்குப் பக்கத்தில் ஜடரம், தேவகூடம் என்னும் இரண்டு மலைகள் உள்ளன. இவை வடக்கிலிருந்து தெற்காக 18000 யோஜனங்கள் (144,000 மைல்கள்) நீண்டிருக்கின்றன. அதுபோல் சுமேரு மலையின் மேற்குப் பக்கத்தில் பவனம், பாரியாத்திரம் என்னும் இரண்டு மலைகள் இருக்கின்றன இவையும் வடக்கிலிருந்து தெற்காக அதே அளவு விரிந்திருக்கின்றன. சுமேரு மலையின் தென்பகுதியில் கைலாசம் மற்றும் கரவீரம் என்னும் இரண்டு மலைகள் இருக்கின்றன இவை கிழக்கிலிருந்து மேற்காக 18,000 யோஜனங்கள் விரிந்திருக்கின்றன. மேலும் சுமேரு மலையின் வடபகுதியில் கிழக்கிலிருந்து மேற்காக அதே அளவு நீண்டிருக்கும் திரிசங்கம் மற்றும் மகரம் என்னும் இரண்டு மலைகள் இருக்கின்றன. இம்மலைகள் அனைத்தின் அகலமும், உயரமும் 2000 யோஜனங்கள் (16000 மைல்கள்) ஆகும். நெருப்பைப் போல் ஒளிவீசும் கட்டித் தங்கத்தினாலான சுமேரு மலையைச் சுற்றி இந்த எட்டு மலைகளும் இருக்கின்றன.
பதம் 5.16.28
மேரோர் மூர்தனி பகவத ஆத்ம-யோனேர் மத்யத உபக்லுப்தாம்
பூரிம் அயுத-யோஜன-ஸாஹஸ்ரீம் ஸம-சதுரஸ்ராம் ஸாதகெளம்பீம்
வதந்தி
மேரோ:—சுமேரு மலையின்; மூர்தனி—உச்சியின் மீது; பகவத:—மிகச்சக்தி வாய்ந்த; ஆத்ம-யோனே:—பிரம்மதேவன்; மத்யத:—மத்தியில்; உபக்லுப்தாம்—அமைந்திருக்கிறது; புரீம்—பெரிய நகரம்; அயுத-யோஜன—பத்தாயிரம் யோஜனங்கள்; ஸாஹஸ்ரீம்—ஓராயிரம்; ஸம-சதுரஸ்ராம்—எல்லாப் பக்கங்களிலும் ஒரே அளவு நீளமுடையன; ஸாதகெளம்பீம்—முழுவதும் தங்கத்தால் ஆனது; வதந்தி—கற்றறிந்த மாமுனிவர்கள் கூறுகின்றனர்.
மேருமலையின் உச்சிச்சிகரத்தின் நடுவில் பிரம்மதேவனின் நகரம் அமைந்திருக்கின்றது. அதன் நான்கு பக்கங்களில் ஒவ்வொரு பக்கமும் ஒரு கோடி யோஜனங்கள் (எட்டு கோடி மைல்கள்) நீளமுடையன. இது முற்றிலும் பொன்னாலானதாகும். அதனால் கற்றறிந்த அறிஞர்களும், முனிவர்களும் இந்நகர்த்தை சாதகெளம்பி என்று அழைக்கின்றனர்.
பதம் 5.16.29
தாம் அனுபரிதோ லோக-பாலானாம் அஷ்டானாம் யதா-திஸம்
யதா-ரூபம் துரீய மானேன புரோ ‘ஷ்டாவ் உபக்லுப்தா
தாம்—பிரம்மாபுரி என்னும் பெரிய நகரம்; அனுபரித:—சுற்றிலும்; லோக-பாலானாம்—உலக ஆளுநர்களின்; அஷ்டானாம் எட்டு; யதா-திஸம்—திசைகளுக்கேற்ப; யதா-ருபம்—பிரம்மாபுரியைப் போன்றவையே; துரீய-மானேன்—அளவில் நான்கில் ஒரு பகுதியுடையது; புர:—நகரங்கள்; அஷ்டௌ—எட்டு; உபக்லுப்தா:—அமைந்திருக்கின்றன.
பிரம்மாபுரியைச் சுற்றிலும் தேவேந்திரன் தொடங்கி பல்வேறு உலகங்களின் எட்டு தலைமை ஆளுநர்களின் உறைவிடங்கள் உள்ளன. இந்நகரங்களும் பிரம்மா புரியைப் போன்றவையே ஆனால் அதில் நான்கில் ஒரு பங்கு அளவுடையனவாகும்.
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “ஜம்புத்வீபம் பற்றிய விளக்கம்” எனும் தலைப்பை கொண்ட பதினாறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.