அத்தியாயம் – 15
மன்னர் பிரியவிரதனின்
சந்ததியினரின் பெருமைகள்
பதம் 5.15.1
ஸ்ரீ-ஸுக உவாச
பரதஸ்யாத்மஜ: ஸுமதிர் நாமாபிஹிதோ யம் உ ஹ வாவ கேசித்
பாகண்டின ருஷப-பதவீம் அனுவர்தமானம் சானார்யா அவேத
ஸாமாம்னாதாம் தேவதாம் ஸ்வ- மனீஷயா பாபீயஸ்யா கலௌ
கல்பயிஷ்யந்தி
ஸ்ரீ ஸுக-உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்; பரதஸ்ய—பரத மகாராஜாவின்; ஆத்ம-ஜ:—புதல்வன்; ஸுமதி:-நாம-அபிஹித:—சுமதி என்னும் பெயருடையவர்; யம்—அவருக்கு; உ ஹ வாவ—உண்மையில்; கேசித்—சில; பாகண்டின:—அறிவில்லாத நாத்திகர்கள்; ருஷப-பதவீம்—மன்னர் ரிஷப தேவரின் பாதை; அனுவர்தமானம்—பின்பற்றி; ச—மேலும்; அனார்யா:—வேதநெறிகளைக் கடுமையாகப் பின்பற்றும் ஆரியர்களைச் சேர்ந்தவர்கள் அல்லர்; அவேத-ஸமாம்னாதாம்—வேதங்களில் கணக்கிடப்படாத; தேவதாம்—பகவான் புத்தர் அல்லது அதுபோன்ற பௌத்தசிலை; ஸ்வ-மனீஷயா—அவர்களது சுய மனயூகத்தினால்; பபீயஸ்யா—மிகுந்த பாவம் நிறைந்த; கலௌ—இக்கலியுகத்தில்; கல்பயிஷ்யந்தி—கற்பனை செய்தல்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: மகாராஜா பரதரின் மைந்தர் சுமதி என்பவர் ரிஷப தேவரின் பாதையைப் பின்பற்றினார். ஆனால் சில கொள்கையற்ற மனிதர்கள் அவரை பகவான் புத்தர் என்று கற்பனையாகப் பாவித்தனர். உண்மையிலேயே கெட்ட நடத்தையுள்ள இந்நாத்திகர்கள் தங்கள் செயல்களுக்கு ஆதரவாக வேதநெறிகளை கற்பனையாகவும், கீர்த்தியற்ற வழியிலும் எடுத்துக் கொண்டனர். இப்பாவிகள் சுமதியைப் பகவான் புத்ததேவராக ஏற்றுக் கொண்டு எல்லோரும் சுமதியின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டுமென்று அவற்றைப் பரப்பினர். இவ்வாறு அவர்கள் தங்கள் மனயூகத்தினால் சுமந்து செல்லப்பட்டனர்.
பதம் 5.15.2
தஸ்மாத் வ்ருத்த ஸேனாயாம் தேவதாஜின்-நாம புத்ரோ ‘பவத்
தஸ்மாத்—சுமதியிடமிருந்து; வ்ருத்த-ஸேனாயாம்—அவரது மனைவி வித்தசேனாவின் கருப்பையிலிருந்து; தேவதாஜித்-நாம—தேவதாஜித் என்றும் பெயரில்; புத்ர:—ஒரு புத்திரன்; அபவத்—பிறந்தான்.
சுமதிக்கு அவர் மனைவி விருத்தசேனா என்பவளின் வயிற்றிலிருந்து தேவதாஜித் என்றொரு புதல்வன் பிறந்தான்.
பதம் 5.15.3
அதாஸுர்யாம் தத-தனயோ தேவத்யும்நஸ் ததோ தேனுமத்யாம் ஸுத:
பரமமேஷ்டீ தஸ்ய ஸுவர்சலயொம் ப்ரதீஹ உபஜாத:
அத—அதன்பிறகு; அஸுர்யாம்—அவர் மனைவி ஆஸுரீ என்பவள் வயிற்றில்; தத்-தயை:—தேவதாஜிதின் ஒரு மைந்தன்; தேவ-த்யும்ஜ:—தேவத்யும்நன் என்னும் பெயரில்; தத:—தேவத்யும்நனிடமிருந்து; தேனு-மத்யாம்—தேவத்யும்நனின் மனைவி தேனுமதியின் வயிற்றில்; ஸுத:—ஒரு புதல்வன்; பரமேஷ்டீ—பரமேஷ்டீ என்றும் பெயரில்; தஸ்ய—பரமேஷ்டியின்; ஸுவர்சலாயாம்—சுவர்சலா என்னும் பெயருடைய அவர் மனைவியின் வயிற்றில்; பத்ரீஹ:—பிரதீஹன் என்றும் பெயருடைய ஒரு புதல்வன்; உபஜாத:—தோன்றினான்.
அதன்பின்னர் தேவதர்ஜித்தின் மனைவி ஆஸுரியின் வயிற்றிலிருந்து தேவத்யும்நன் என்னும் பெயருடைய ஒரு புதல்வன் பிறந்தார். தேவத்யும்நன் தன் மனைவி தேனுமதியின் வயிற்றிலிருந்து பரமேஷ்டி என்னும் புதல்வனைப் பெற்றெடுத்தார். பரமேஷ்டி தன் மனைவி ஸுவர்சலாவிடம் இருந்து பிரதீஹன் என்றும் புதல்வனைப் பெற்றெடுத்தார்.
பதம் 5.15.4
ய ஆத்ம-வித்யாம் ஆக்யாய ஸ்வயம் ஸும்ஸுத்தோ மஹா-புருஷம்
அனுஸஸ்மார
ய:—இவர் (மன்னர் பிரதீஹன்); ஆத்ம-வித்யாம்-ஆக்யாய—தன்னுணர்வு பெறுவது பற்றிப் பலருக்கு உபதேசித்தப் பின்னர்; ஸ்வயம்—சுயமாக; ஸம்ஸுத்த:—தன்னுணர்வு பெறுவதில் தூய்மையும் மிக்க வளர்ச்சியும் பெற்று; மஹா-புருஷம்—முழுமுதற் கடவுளான விஷ்ணு; அனுஸஸ்மார—சரியாகப் புரிந்து கொண்டு எப்போதும் நினைத்திருந்தார்.
மன்னர் பிரதீஹன் தானாகவே தன்னுணர்வுக் கொள்கைகளைப் பரப்பிவந்தார். இதன் மூலம் அவர் தூய்மையடைந்ததோடு மட்டுமல்லாது பரமபுருஷ பகவான் விஷ்ணுவின் சிறந்த பக்தராகி அவரை நேரில் உணர்ந்து கொண்டார்.
பதம் 5.15.5
ப்ரதீஹாத் ஸுவர்சலாயாம் ப்ரதிஹர்த்ராதயஸ் த்ரய ஆஸன்ன
இஜ்யா-கோவிதா ஸுனவ: ப்ரதிஹந்து; ஸ்துத்யாம் அஜ-பூமானாவ்
அஜனிஷாதாம்
ப்ரதீஹாத்—மன்னர் பிரதீஹனிடமிருந்து; ஸுவர்சலாயாம்—அவர் மனைவி சுவர்சலாவின் வயிற்றிலிருந்து; ப்ரதிஹர்த்ரு-ஆத்ய: த்ரய:—பிரதீஹர்தரன், பிரஸ்தோதான், உத்காதான் என்று மூன்று புதல்வர்கள்; ஆஸன்—பிறந்தனர்; இஜ்யா-கோவிதா—வேதங்களின் சடங்கு சம்பிரதாயங்களில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவர்கள்; ஸுனவ:—மகன்கள்; ப்ரதிஹர்து:—பிரதிஹர்தானிடமிருந்து; ஸ்துத்யாம்—ஸ்துதியின் வயிற்றிலிருந்து; அஜ-பூமானௌ—அஜன் மற்றும் பூமான் என்று இரண்டு புதல்வர்கள்; அஜனிஷாதாம்—பிறந்தனர்.
பிரதீஹன் தன் மனைவி சுவர்சலாவிடமிருந்து மூன்று புதல்வர்களைப் பெற்றெடுத்தார். அவர்களது பெயர்கள் பிரதிஹர்தான், பிரஸ்தோதான், உத்காதான் என்பவையாகும். இம்மூவரும் வேதச்சடங்குகளைச் செய்வதில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர். பிரதிஹர்தான் தன் மனைவி ஸ்துதியின் வயிற்றிலிருந்து அஜன், பூமான் என்னும் இரு புதல்வர்களைப் பெற்றெடுத்தார்.
பதம் 5.15.6
பூம்ன ருஷிகுல்யாயாம் உத்கீதஸ் தத: ப்ரஸ்தாவோ தேவகுல்யாயாம்
ப்ரஸ்தாவான் நியுத்ஸாயாம் ஹ்ருதயஜ ஆஸீத் விபுர் விபோ ரத்யாம்
ச ப்ருதுஷேணஸ் தஸ்மான் நக்த ஆகூத்யாம் ஜஜ்ஞே நக்தாத் த்ருதி-
புத்ரோ கயோ ராஜர்ஷி-ப்ரவர உதாரஸ்ரவா அஜாயத ஸாக்ஷாத் பகவதோ
விஷ்ணோர் ஜகத்-ரிரக்ஷிஷயா க்ருஹீத ஸத்த்வஸ்ய கலாத்மவத்த்வாதி-
லக்ஷணேன மஹா-புருஷதாம் ப்ராப்த:
பூம்ன:—மன்னர் பூமானிடமிருந்து; ருஷி-குல்யாயாம்—அவர் மனைவி ரிஷிகுல்யா என்பவள் வயிற்றிலிருந்து; உத்கீத:—உத்கீதன் என்ற பெயருடைய புதல்வன்; தத:—மீண்டும் மன்னர் உத்கீதனிடமிருந்து; ப்ரஸ்தாவ:—பிரஸ்தாவன் என்றும் பெயருடைய புதல்வன்; தேவகுல்யாயாம்—அவர் மனைவி தேவகுல்யா; ப்ரஸ்தாவாத்—மன்னர் பிரஸ்தாவனிடமிருந்து; நியுத்ஸாயாம்—அவர் மனைவி நியுத்ஸாவிடமிருந்து; ஹ்ருதய-ஜ:—புதல்வன்; ஆஸீத்—பெற்றெடுக்கப்பட்டான்; விபு:—விபு என்னும் பெயரினன்; விபோ:—மன்னர் விபுவிடமிருந்து; ரத்யாம்—அவர் மனைவி ரதி என்னும் பெயரினள்; ச—மேலும்; ப்ருது-க்ஷேண:—பிருதுஷேணன் என்னும் பெயரினன்; தஸ்மாத்—அவரிடமிருந்து (மன்னர் பிருதுஷேணனிடமிருந்து); நக்த:—நக்தன் என்னும் பெயருடைய ஒரு புதல்வன்; ஆகூத்யாம்—அவர் மனைவி ஆகூதீயிடமிருந்து; ஜஜ்ஞே—பெற்றெடுக்கப்பட்டான்; நக்தாத்—மன்னர் நக்தனிடமிருந்து; த்ருதி புத்ர:—திருதியின் வயிற்றிலிருந்து ஒரு புதல்வன்; கய:—மன்னர் கயன் என்னும் பெயரில்; ராஜ-ருஷி-ப்ரவர:—ராஜரிஷிகளில் மிகச் சிறந்தவர்; உதார-ஸ்ரவா:—புண்ணிய மன்னராகப் புகழ்பெற்றவர்; அஜாயத—பிறந்தார்; ஸாக்ஷாத் பகவத:—முழுமுதற் கடவுளின் நேரடியான; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; ஜகத்-ரிரக்ஷிஷயா—உலகம் முழுவதற்கும் பாதுகாப்புக் கொடுக்கும் நோக்கத்திற்காக; க்ருஹீத—அவர் கருவாக்கப்பட்டார்; ஸத்த்வஸ்ய—சுத்த சத்துவக் குணங்களில்; கலா-ஆத்ம-வத்த்வ-ஆதி—பகவானின் நேரடி அவதாரமாக; லக்ஷணேன—அடையாளங்களினால்; மஹ-புருஷதாம்—மனித சமுதாயத்தின் தலைவருக்குள்ள உயர்ந்த குணம்; (உயிர்வாழிகள் அனைத்திற்கும் தலைவராக விளங்கும் பகவான் விஷ்ணுவைப் போன்ற); ப்ராப்த:—எய்தினார்.
மன்னர் பூமான் தன் மனைவி ரிஷிகுல்யாவிடமிருந்து உத்கீதன் என்றொரு புதல்வனை ஈன்றெடுத்தார். உத்கீதனின் மனைவி தேவகுல்யாவிற்கு பிரஸ்தாவன் என்றொரு புதல்வன் பிறந்தார். பிரஸ்தாவன் தன் மனைவி நியுத்ஸாவின் மூலம் விபு என்றும் புதல்வனை ஈன்றெடுத்தார். விபு தன் மனைவி ரதி என்பவளிடமிருந்து பிருதுஷேணன் என்றொரு புதல்வனைப் பெற்றெடுத்தார். பிருதுஷேணன் தன் மனைவி ஆகூதீயிடமிருந்து நக்தன் என்னும் பெயருடைய புதல்வனை ஈன்றெடுத்தார். நக்தனின் மனைவி திருதி என்பாள் ஆவாள், அவள் தன் வயிற்றிலிருந்து மாமன்னர் கயன் என்பவரைப் பெற்றெடுத்தாள். கயன் புகழ் மிக்கவராகவும், புண்ணிய மன்னராகவும் விளங்கினார், அவர் ராஜரிஷிகளில் மிகச் சிறந்தவராவார். பகவான் விஷ்ணுவும், பிரபஞ்சத்தைப் பாதுகாப்பவர்களான அவரது அவதாரங்களும் எப்போதும் “விசுத்த சத்துவம்” என்றறியப்படும் உன்னத சத்துவக் குணத்திலேயே வீற்றிருப்பர். பகவான் விஷ்ணுவின் நேரடி விரிவான மன்னர் கயனும் விசுத்த சத்துவத்திலேயே வீற்றிருந்தார். இதன் காரணமாக மகாராஜா கயன் முற்றிலும் உன்னத ஞானம் நிரம்பப் பெற்றவராக விளங்கினார். இதனால் அவர் மகாபுருஷர் என்று அழைக்கப்பட்டார்.
பதம் 5.15.7
ஸ வை ஸ்வ-தர்மேண ப்ரஜா-பாலன-போஷண-ப்ரீணனோ-
பலாலனானு ஸாஸனலக்ஷணேணேஜ்யாதினா ச பகவதி மஹா-
புருஷே ப்ராவரே ப்ரஹ்மணி ஸர்வாத்மனார்பித-பரமார்த-லக்ஷணேன
ப்ரஹ்மவிச் சரணானுஸேவயாபாதித-பகவத்-பக்தி-யோகேன சாபீ
க்ஷணஸ பரிபாவிதாதி-ஸுத்த-மதிர் உபரதா-னாத்ம்ய ஆத்மணி ஸ்வயம்
உபலப்யமான ப்ரஹ்மாத்மானு-பவோ ‘பி நிரபிமான ஏவாவனிம்
அஜுகுபத்
ஸ:—அம்மன்னர் கயன்; வை—உண்மையில்; ஸ்வ-தர்மேண—அவரது சுயதர்மத்தினால்; ப்ரஜா-பலான—பிரஜைகளைப் பாதுகாப்பதின்; போஷண—அவர்களைக் காப்பது; ப்ரீணன—எல்லா வழிகளிலும் அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருத்தல்; உபலாலன—தம் புதல்வர்களைப் போல் அவர்களை நடத்துதல்; அனுஸாஸன—சில சமயம் அவர்கள் தவறுதளுக்காகத் தண்டிப்பது; லக்ஷணேன—ஓர் அரசரின் அடையாளமாகும்; இஜயா-ஆதினா—வேதங்கள் பரிந்துரைக்கும் சமயச் சடங்குகளைச் செய்தல்; ச—மேலும்; பகவதி—முழுமுதற் கடவுளான விஷ்ணுவிற்கு; மஹா-புருஷே—உயிர்வாழிகள் அனைவரின் தலைவர்; பர-அவரே—பிரம்மதேவன் தொடங்கி எறும்பு வரையுள்ள அனைத்து உயிர்வாழிகளுக்கும் மூலம்; ப்ரஹ்மணி—முழுமுதற் கடவுளும் பரப்பிரம்மனுமான வாசுதேவருக்கு; ஸர்வ-ஆத்மனா—எல்லா வழிகளிலும்; அர்பித—சரணடைந்து; பரம-அர்த-லக்ஷணேன—ஆன்மீக அடையாளங்களுடன்; ப்ரஹ்ம- வித்—தன்னுணர்வு பெற்ற தெய்வீகப் பக்தர்களின்; சரண-அனஸோயா தாமரைத் திருவடிகளின் தொண்டினால்; ஆபாதித—எய்தப் பெற்றார்; பகவத்-பக்தி-யோகேன—பகவானுக்குச் செய்யும் பக்தித் தொண்டுப் பயிற்சியினால்; ச—மேலும்; அபீக்ஷ்ணஸ:—தொடர்ந்து; பரிபாவித—தோய்ந்து; அதி-ஸுத்த-மதி:—அவருடைய முற்றிலும் தூய்மையான உணர்வு; (உடல் மற்றும் மனம் இரண்டும். ஆத்மாவிலிருந்து வேறானவை என்றும் முழு உணர்வில்); உபரத அனாத்ம்யே—அங்கு பௌதீகப் பொருட்களுடனான அடையாளம் நிறுத்தப்படுகிறது; ஆத்மனி—அவரது சுயத்தில்; ஸ்வயம்—சுயமாக; உபலப்யமான—உணர்ந்து; ப்ரஹ்ம-ஆத்ம-அனுபவ:—தனது சுயநிலையைப் பரமாத்மாத்மாவாக உணர்தல்; அபி—இருந்தபோதிலும்; நிரபிமான:—போலிக் கர்வமின்றி; ஏவ—இவ்வாறு; அவனிம்—முழு உலகமும்; அஜுகுபத்—வேதநெறிகளுக்கு ஏற்ப கடுமையாக ஆண்டார்.
மன்னர் கயன் தனது குடிமக்களுக்கு முழுப்பாதுகாப்பும் உத்தரவாதமும் அளித்திருந்தார். அதனால் அவர்களது சொந்த சொத்துக்களுக்கு தீய சக்திகளினால் எந்தவிதமான இடையூறும் ஏற்படவில்லை. குடிமக்களுக்குத் தேவையானப் போதிய உணவு இருக்கிறதா என்றும் அவர் பார்த்துக் கொண்டார் (இதுவே போஷணம் என்றழைக்கப்படுகிறது). சில சமயம் குடிமக்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவர் வெகுமதிகள் அளிப்பார். (இதுவே ப்ரீணனம் என்றழைக்கப்படுகிறது). சிலசமயம் அவர் குடிமக்களை அழைத்துக் கூட்டங்கள் போட்டு அவர்களிடம் இனிமையாகப் பேசுவார். (இது உபலாலனம் எனப்படும்). அவர் அவர்களுக்கு முதல்தரக் குடிமக்களாக எவ்வாறு வருவது என்று உபதேசிப்பார். (அது அனுஸாஸானம் எனப்படும்). இவையெல்லாம் மன்னர் கயனின் ராஜநீதியின் தன்மைகளாகும். இவை போக மன்னர் கயன் ஓர் இல்லறவாசியாக இருந்து இல்லறத்தின் ஒழுங்குமுறை விதிகளைக் கடுமையாகப் பின்பற்றி வந்தார். அவர் வேள்விகள் செய்தார். முழுமுதற் கடவுளின் மாசற்றத் தூயப் பக்தனாக விளங்கினார். அவர் மகாபுருஷர் என்றழைக்கப்பட்டார். காரணம் அவர் மன்னராக இருந்து குடிமக்களுக்கு அனைத்து வசதிகளையும் அளித்தார். இல்லறத்தானாக இருந்து தனது கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றினார். இதன் காரணமாக இறுதியில் அவர் பரமபுருஷ பகவானின் சிறந்த பக்தன் ஆனார். ஒரு பக்தனாக அவர் எப்போதும் பிற பக்தர்களுக்கு மரியாதை அளிக்கத் தயாராகவே இருந்தார். இதுவே பக்தி யோக செயல்முறை. மன்னர் கயன் எப்போதும் உடற்கருத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்றவராக விளங்கினார். அவர் பிரம்ம உணர்வு நிரம்பப் பெற்றவராக இருந்தார். இதனை தொடர்ந்து அவர் எப்போதும் போற்றப்பட்டார். பௌதீகச் சோகத்தை அவர் அனுபவித்ததே இல்லை. அவர் எல்லா வழிகளிலும் நிறைவுடையவராக விளங்கிய போதிலும் அவர் ஒருபோதும் கர்வம் கொண்டதே இல்லை. அதுபோல் அவர் தனது இராஜ்ஜியத்தை ஆள்வதில் ஆர்வம் காட்டியதுமில்லை.
பதம் 5.15.8
தஸ்யே மாம் காதாம் பாண்டவேய புராவித உபகாயந்தி.
தஸ்ய—மன்னர் கயனின்; இமாம்—இலை; காதாம்—புகழ் பாடும் கவிதைகள்; பாண்டவேய—ஒ, மகாராஜா பரீக்ஷித்துவே; புரா-வித:—புராணங்களில் உள்ள சரித்திரச் சம்பவங்களைக் கற்றவர்கள்; உபகாயந்தி—பாடுகின்றனர்.
அன்பிற்குரிய பரீக்ஷித்து மன்னனே! புராணங்களில் உள்ள சரித்திரங்களை நன்கு கற்றவர்கள் பின்வரும் பாடல்களினால் மன்னர் கயனின் புகழைப் பாடுகின்றனர்.
பதம் 5.15.9
கயம் ந்ருப: க: ப்ரதியாதி கர்மபிர்
யஜ்வாபிமாணீ பஹுவித் தர்ம-கோப்தா
ஸமாகத-ஸ்ரீ: ஸதஸ்ய-பதி: ஸதாம்
ஸத்-ஸேவகோ ‘ன்யோ பகவத்-கலாம்ருதே
கயம்—மன்னர் கயன்; ந்ருப:—அரசர்; க—யார்; ப்ரதியாதி—இணையாவார்; கர்மபி:—சமயச்சடங்குகளை அவர் நிறைவேற்றுவதினால்; யஜ்வா—யார் அனைத்து வேள்விகளையும் செய்வார்; அபிமானீ—அதனால் உலகமெங்கும் அவர் மதிக்கப்பட்டார்; பஹு-வித்—வேதங்களின் முடிவை நன்கறிந்தவர்; தர்ம-கோப்தா—அனைவரின் சுதர்மத்திற்கும் பாதுகாப்பாக விளங்கினார்; ஸமாகத-ஸ்ரீ:—எல்லா வகையான வளங்களும் உடையவர்; ஸதஸ:-பதி:-ஸதாம்—சிறந்த மனிதர்கள் சபையின் தலைவர்; ஸத்-ஸேவக:—பக்தர்களின் தொண்டர்; அன்ய:—எவரேனும்; பகவத்-கலாம்—முழுமுதற் கடவுளின் அம்ச அவதாரம்; ருதே—தவிர.
மாமன்னர் கயன் எல்லாவிதமான வேள்விச் சடங்குகளையும் தவறாது செய்பவர் ஆவார். வேத இலக்கியங்களைக் கற்பதில் அவர் தேர்ந்தவராகவும் சிறந்த புத்திமானாகவும் விளங்கினார். சமய அறநெறிகளைப் பாதுகாப்பவராகவும், அனைத்து வளங்களும் நிரம்பியவராகவும் இருந்தார். நேர்மையாளர்களின் தலைவராகவும் பக்தர்களின் தொண்டனாகவும் விளங்கினார். முழுமுதற் கடவுளின் அம்ச அவதாரத்திற்கான அனைத்துத் தகுதிகளும் உடையவராக இருந்தார். ஆகையினால் மிகப்பெரிய சமயச் சடங்குகளைச் செய்வதில் அவருக்கு இணையாக யார் இருக்க முடியும்?
பதம் 5.15.10
யம் அப்யஷிஞ்சன் பரயா முதா ஸதீ:
ஸாத்யாஸிஷோ தக்ஷ-கன்யா: ஸரித்பி:
யஸ்ய ப்ரஜானாம் துதுஹே தராஸிஷோ
நிராஸிஷோ குண-வத்ஸ-ஸ்னுதோதா:
யம்—யாருடையது; அப்யஷிஞ்சன்—நீராட்டுதல்; பரயா—மிகச் சிறந்த; முதா—திருப்தி; ஸதீ:—தங்கள் கணவர்களிடம் பக்தியும், கற்புமிக்கவர்கள்; ஸத்ய—உண்மை; ஆஸிஷ:—அவர்களது ஆசிகள்; தக்ஷ-கன்யா:—தக்ஷனின் புதல்வியர்; ஸரித்பி:—புனிதநீருடன்; யஸ்ய—அவரது; ப்ரஜானாம்—குடிமக்களின்; துதுஹே—நிறைவேறியது; தார—பூமிக்கோளம்; ஆஸிஷ:—எல்லா ஆசைகளும்; நிராஸிஷ:—தனிப்பட்டு அவருக்கு எந்தவிதமான ஆசையும் இல்லாத போதும்; குண-வத்ஸஸ்னுத-உதா:—குடிமக்களை ஆளும் கயனின் குணங்களைக் கண்டு பூமி ஒரு பசுவாக மாறி அதன் மடியிலிருந்து பால் சுரந்து கொண்டே இருந்தது.
ஸ்ரத்தா, மைத்ரீ, தயா போன்ற கற்பும், நேர்மையும் நிறைந்த தக்ஷனின் புதல்விகள் அனைவரின் ஆசியும் மிகவும் சக்தி வாய்ந்தவையாகும். அவை மகாராஜா கயனைப் புனித நீரினால் நீராட்டியது, உண்மையில் அவர்கள் மகாராஜா கயன் மீது மிகுந்த திருப்தி கொண்டிருந்தனர். பூமிக்கோளத்தின் வடிவம் ஒரு பசுவாக வந்தது, அது தன் கன்றினைப் பார்த்தது போல் மகாராஜா கயனின் நற்குணங்களைக் கண்டபொழுது அளவின்றி பாலை சுரந்தது. அதாவது மகாராஜா கயன் பூமியிலிருந்து அனைத்து நலன்களையும் பெறக்கூடியத் திறனுடையவராக விளங்கினார். அதன் மூலம் அவர் தன் குடிமக்களின் ஆசைகளைத் திருப்திப்படுத்தினார் என்றும் கூறலாம். ஆயினும் அவருக்கென்று தனியான ஆசைகள் எதுவுமில்லை.
பதம் 5.15.11
சந்தாம்ஸி அகாம்ஸ்ய ச யஸ்ய காமான்
துதூஹுஸி அஜாஹ்ருர் அதோ பலிம் ந்ருபி:
ப்ரத்யஞ்சிதா யுதி தர்மேண விப்ரா
யதாஸிஷாம் ஷஷ்டம் அம்ஸம் பரேத்ய
சந்தாம்ஸி—வேதங்களின் பல்வேறு பகுதிகள் அனைத்தும்; அகாம்ஸ்ய—புலனுகர்ச்சிக்கான தனிப்பட்ட ஆசை எதுவுமில்லாதவர்; ச—மேலும்; யஸ்ய—அவரது; காமான்—விருப்பத்திற்குரிய அனைத்தும்; துதூஹு:—பெறப்பட்டது; ஆஜஹ்ரு:—அளிக்கப்பட்டது; அதோ—இவ்வாறு; பலிம்—பரிசுகள்; ந்ருபா:—எல்லா அரசர்களும்; ப்ரத்யாஞ்சிதா:—எதிர்த்துப் போரிடுவதினால் திருப்தியுற்று; யுதி—யுத்தத்தில்; தர்மேண—மதக்கொள்கைகளால்; விப்ரா—அனைத்து பிராமணர்களும்; யதா—எப்பொழுது; ஆஸிஷாம்—ஆசிகளின்; ஷஷ்டம்-அம்ஸம்—ஆறில் ஒரு பங்கு; பரேத்ய—மறு பிறவியில்.
மன்னர் கயனிடம் புலனுகர்ச்சிக்கானத் தனிப்பட்ட ஆசை எதுவுமில்லையென்ற போதிலும், அவர் செய்த வேதச் சடங்குகளின் சக்தியின் காரணமாக அவரது ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. மகாராஜா கயன் போரிட்ட எல்லா அரசர்களும் சமய நெறிகளின் மீதே போரிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் அவரது பேராற்றலில் திருப்தியுற்று அவருக்கு அனேக பரிசுகள் வழங்கினர். அதுபோல் அவரது நாட்டிலுள்ள அந்தணர்கள் அனைவரும் அவரது வாரி வழங்கும் வள்ளல் தன்மையில் பெரிதும் திருப்தியுற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து அந்தணர்கள் தமது புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கினை மன்னர் கயன் தன் மறு பிறவியில் நன்மை பெறும் பொருட்டு அளித்தனர்.
பதம் 5.15.12
யஸ்யாத்வரே பகவான் அத்வராத்மா
மகோனி மாத்யதி உரு-ஸோம-பீதே
ஸ்ரத்தா-விஸுத்தாச்சல-பக்தி-யோக
ஸமர்பிதேஜ்யா-பலம் ஆஜஹார
யஸ்ய—இவரின் (மன்னர் கயன்); அத்வரே—பல்வேறு யக்ஞங்களில்; பகவான்—முழுமுதற் கடவுள்; அத்வர-ஆத்மா—யக்ஞபுருஷர் அதாவது வேள்விகள் அனைத்தையும் அனுபவிப்பவர்; மகோனி—தேவேந்திரன்; மாத்யதி—போதையுற்று; உரு—மிகவும்; ஸோம-பீதே—சோமபாணம் என்னும் மதுவை அருந்தி; ஸ்ரத்தா—பக்தியினால்; விஸுத்த—தூய்மை பெற்று; அசல—நிலையாக; பக்தி-யோக—பக்தித் தொண்டினால்; ஸமர்பித—சமர்ப்பித்து; இஜ்யா—வழிபட்டு; பலம்—பலன்; அஜஹார—தனிப்பட்ட முறையில் ஏற்றுக் கொள்ளுதல்.
மகாராஜா கயனின் வேள்வியில் சோமரஸம் என்னும் மதுபானம் அதிக அளவில் வழங்கப்படும் தேவேந்திரன் வழக்கமாக வந்து சோமரஸத்தினை அளவில்லாது பருகி போதைக்கு ஆளாவார். முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணுவும் (யக்ஞ புருஷர்) அங்கு வந்து அவ்வேள்விச் சாலையில் தூய்மையுடனும் உறுதியான பக்தியுடனும் அர்ப்பணிக்கப்படும் அனைத்து வேள்விகளையும் ஏற்றுக் கொள்வார்.
பதம் 5.15.13
யத்-ப்ரீணானாத் பர்ஹிஷி தேவ-த்ரியங்
மனுஷ்ய-வீருத்-த்ருணம் ஆவிரிஞ்சாத்
ப்ரீயேத ஸத்ய: ஸ ஹ விஸ்வ-ஜீவ:
ப்ரீத: ஸ்வயம் ப்ரீதம் அகாத் கயஸ்ய
யத்-ப்ரீணணாத்—முழுமுதற் கடவுள் மகிழ்ச்சிடையும் காரணத்தினால்; பர்ஹிஷி—வேள்விச் சாலையில்; தேவ-திர்யக்—தேவர்களும் கீழான விலங்குகளும்; மனுஸ்ய—மனித சமுதாயம்; வீருத்—மரம் செடிகள்; த்ருணம்—புற்கள்; ஆ-விரிஞ்சாத்—பிரம்மதேவன் தொடங்கி; ப்ரீயேத—திருப்தியடைதல்; ஸத்ய:—உடனடியாக; ஸ:—முழுமுதற் கடவுள்; ஹ—உண்மையில்; விஸ்வ-ஜீவ:—பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்வாழிகளையும் காப்பவர்; ப்ரீத:—இயற்கையாகத் திருப்தியடைந்த போதிலும்; ஸ்வயம்—சுயமாக; ப்ரீதிம்—திருப்தி; அகாத்—அவர் அடைந்தார்; கயஸ்ய—மகாராஜா கயனின்.
முழுமுதற் கடவுள் ஒரு மனிதனின் செயலில் இனிமையுறும் பொழுது பிரம்மதேவன் தொடங்கி அனைத்துத் தேவர்களும், மனிதர்களும், விலங்குகளும், பறவைகளும், தும்பிகளும், கொடிகளும், மரங்களும், புற்களும் போன்ற உயிர்வாழிகள் அனைத்தும் இனிமையுறுகின்றன. முழுமுதற் கடவுளே அனைவரின் பரமாத்மாவாக விளங்குகின்றார். இயற்கையாகவே அவர் முற்றிலும் இனிமையுடையவராவார். இருந்தும் அவர் மகாராஜா கயனின் வேள்விச் சாலைக்கு வந்து “நான் முற்றிலும் இனிமையடைகிறேன்” என்று கூறினார்.
பதங்கள் 5.15.14 – 5.15.15
கயாத் கயந்த்யாம் சித்ரரத: ஸுகதிர் அவரோதன இதி த்ரய: புத்ரா
பபூவுஸ் சித்ரரதாத் ஊர்ணயாம் ஸம்ராத் அஜனிஷ்ட தத உத்கலாயாம்
மரீசிர் மரீசேர்
பிந்துமத்யாம் பிந்தும் ஆனுதபத்யத தஸ்மாத் ஸரகாயாம் மதுர்
நாமாபவன் மதோ: ஸுமனஸி வீரவ்ரதஸ் ததோ போஜாயாம் மந்து
ப்ரமந்தூ ஜஜ்ஞாதே மந்தோ: ஸத்யாயாம் பௌவனஸ் ததோ தூஷனாயாம்
த்வஷ்டாஜனிஷ்ட த்வஷ்டூர் விரோ சனாயாம் விரஜோ விரஜஸ் ய ஸதஜித்
ப்ரவரம் புத்ர-ஸதம் கன்யா ச விஷுச்யாம் கில ஜாதம்.
கயாத்—மகாராஜா கயனிடமிருந்து; கயந்த்யாம்—கயந்தீ என்னும் அவர் மனைவி; சித்ர-ரத:—சித்ரரதன்; ஸுகதி:—சுகதி; அவரோதன:—அவரோதனன்; இதி—இவ்வாறு; த்ரய:—மூன்று; புத்ரா:—புத்திரர்கள்; பபூவு:—பிறந்தனர்; சித்ரரதாத்—சித்திரரதனிடமிருந்து; ஊர்ணாயாம்—ஊர்வின் வயிற்றில்; ஸம்ராட்—சம்ராம் என்னும் பெயருடைய; அஜனிஷ்ட—பிறந்தார்; தத:—அவரிடமிருந்து; உத்கல்யாம்—உத்கலா என்னும் அவர் மனைவியினிடத்தில்; மரீசி:—மரீசி என்னும் பெயருடைய புதல்வன்; மரீசேர்—மரீசியிலிருந்து; பிந்து-மத்யாம்—அவன் மனைவி பிந்துமதியின் வயிற்றில்; பிந்தும்—பிந்து என்ற மகன்; அனுதபத்யத—பிறந்தார்; தஸ்மாத்—அவரிடமிருந்து; ஸரகாயாம்—அவர் மனைவி சரகாவினிடத்தில்; மது:—மது; நாம—பெயரில்; அபவத்—பிறந்தார்; மதோ:—மதுவிடமிருந்து; ஸுமனஸ—அவர் மனைவி சுமனாவின் வயிற்றில்; வீர-வ்ரத:—வீரவிரதன் என்னும் பெயருடைய புதல்வன்; தத:—வீரவிரதனிடமிருந்து; போஜாயாம்—அவர் மனைவி போஜாவின் வயிற்றில்; மந்து-பிரமந்தூ—மந்து, பிரமந்து என்னும் இரு புதல்வர்கள்; ஜஜ்ஞாதே—பிறந்தனர்; மந்தோ:—மந்துவிடமிருந்து; ஸத்யாயாம்—அவர் மனைவி சத்தியாவினிடத்தில்; பௌவன:—பெளவனன் என்றும் பெயருடைய புதல்வன்; தத:—அவரிடமிருந்து; துஷ்ணாயாம்—அவர் மனைவி துஷ்ணாவின் வயிற்றில்; த்வஷ்டா—திவஷ்டா என்னும் பெயருடைய ஒரு புதல்வன்; அஜனிஷ்ட—பிறந்தார்; த்வஷ்டு:—திவஷ்டாவிடமிருந்து; விரோசனாயாம்—விரோசனா என்னும் பெயருடைய அவர் மனைவியினிடத்தில்; விரஜ:—விரஜன் என்றும் பெயருடைய புதல்வன்; விரஜஸ்ய—மன்னர் விரஜனின்; ஸதஜித்-ப்ரவரம்—சதஜித் என்பவர் தலைமையில்; புத்ர-ஸதம்—நூறு புதல்வர்கள்; கன்யா—ஒரு புதல்வி; ச—மேலும்; விஸுச்யாம்—அவர் மனைவி விஸுசியினிடத்தில்; கில—உண்மையில்; ஜாதம்—பிறந்தனர்.
கயந்தீயின் வயிற்றில் மகாராஜா கயன் மூன்று புதல்வர்களைப் பெற்றெடுத்தார். அவர்கள் சித்திரரான், சுகதி, அவரோதனன் ஆவர். சித்திரரதன் தன் மனைவி ஊர்ணாவினிடத்தில் சம்ராட் என்னும் பெயருடைய புதல்வனை ஈன்றெடுத்தார். சம்ராட்டின் மனைவி உத்கலா தன் வயிற்றிலிருந்து மரீசி என்றொரு புதல்வனை ஈன்றெடுத்தார். மரீசி தன் மனைவி பிந்துமதி என்பவனிடத்தில் பிந்து என்னும் பெயருடைய புதல்வனைப் பெற்றெடுத்தார். பிந்துவின் மனைவி சரகாவினிடத்தில் மது என்னும் புதல்வனைப் பெற்றெடுத்தார். மது தன் மனைவி சுமனா என்பவளிடம் வீரவிரதன் என்னும் புதல்வனைப் பெற்றெடுத்தார். வீரவிரதன் தன் மனைவி போஜா என்பவளிடம் மந்து, பிரமந்து என்னும் பெயருடைய இரு புதல்வர்களைப் பெற்றெடுத்தார். மந்து தன் மனைவி சத்தியாவினிடத்தில் பௌவனன் என்னும் பெயருடைய புதல்வனைப் பெற்றெடுத்தார். பௌவனன் தன் மனைவி தூஷணாவிடம் திவஷ்டா என்றொரு புதல்வனை ஈன்றெடுத்தார். திவஷ்டா தன் மனைவி விரோசனாவிடம் விரஜன் என்னும் பெயருடைய புதல்வனைப் பெற்றெடுத்தார். விரஜனின் மனைவி விஷுசி என்பவள் தன் வயிற்றிலிருந்து நூறு புதல்வர்களை ஈன்றெடுத்தாள். இவர்கள் அனைவருக்கும் தலைவராக சதஜித் என்பவர் விளங்கினார்.
பதம் 5.15.16
த்ராயம் ஸ்லோக
ப்ரையவ்ரதம் வம்ஸம் இமம் விரஜஸ் சரமோத்பவ:
அகரோத் அதி-அலம் கீர்த்யா விஷ்ணு: ஸுர-கணம் யதா
தத்ர—இது தொடர்பாக; அயம் ஸ்லோக:—ஒரு புகழ்மிக்கப் பாடல்; ப்ரையவ்ரதம்—மன்னர் பிரியவிரதனிடமிருந்து; வம்ஸம்—வம்சம்; இமம்—இந்த; விரஜ:—மன்னர் விரஜன்; சரம-உத்பவ:—நூறு புதல்வர்களுக்கு ஆதியானவர் (சதஜித் தலைமையில்); அகாரத்—அலங்கரிக்கப்பட்டு; அதி-அலம்—மிகச் சிறப்பாக; கீர்த்யா—அவர் கீர்த்தியினால்; விஷ்ணு:—முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணு; ஸுர-கணம்—தேவர்கள்; யதா—போன்று.
மன்னர் விரஜனைப் பற்றி ஒர் புகழ்மிக்கப் பாடல் உள்ளது “தனது நற்குணங்களினாலும், கீர்த்தியினாலும் மன்னர் விரஜன் பகவான் விஷ்ணுவைப் போன்று மன்னர் பிரியவிரதனின் குலத்தில் ஒளிமிக்க மணியாகத் திகழ்ந்தார். பகவான் விஷ்ணு தனது உன்னதச் சக்தியினால் தேவர்களை ஆசிர்வதித்து அழகு செய்கிறார்.
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “மன்னர் பிரியவிரதனின் சந்ததியினரின் பெருமைகள்” எனும் தலைப்பை கொண்ட பதினைந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது. .