அத்தியாயம் – 15
மன்னர் பிரியவிரதனின்
சந்ததியினரின் பெருமைகள்
பதம் 5.15.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: மகாராஜா பரதரின் மைந்தர் சுமதி என்பவர் ரிஷப தேவரின் பாதையைப் பின்பற்றினார். ஆனால் சில கொள்கையற்ற மனிதர்கள் அவரை பகவான் புத்தர் என்று கற்பனையாகப் பாவித்தனர். உண்மையிலேயே கெட்ட நடத்தையுள்ள இந்நாத்திகர்கள் தங்கள் செயல்களுக்கு ஆதரவாக வேதநெறிகளை கற்பனையாகவும், கீர்த்தியற்ற வழியிலும் எடுத்துக் கொண்டனர். இப்பாவிகள் சுமதியைப் பகவான் புத்ததேவராக ஏற்றுக் கொண்டு எல்லோரும் சுமதியின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டுமென்று அவற்றைப் பரப்பினர். இவ்வாறு அவர்கள் தங்கள் மனயூகத்தினால் சுமந்து செல்லப்பட்டனர்.
பதம் 5.15.2 : சுமதிக்கு அவர் மனைவி விருத்தசேனா என்பவளின் வயிற்றிலிருந்து தேவதாஜித் என்றொரு புதல்வன் பிறந்தான்.
பதம் 5.15.3 : அதன்பின்னர் தேவதர்ஜித்தின் மனைவி ஆஸுரியின் வயிற்றிலிருந்து தேவத்யும்நன் என்னும் பெயருடைய ஒரு புதல்வன் பிறந்தார். தேவத்யும்நன் தன் மனைவி தேனுமதியின் வயிற்றிலிருந்து பரமேஷ்டி என்னும் புதல்வனைப் பெற்றெடுத்தார். பரமேஷ்டி தன் மனைவி ஸுவர்சலாவிடம் இருந்து பிரதீஹன் என்றும் புதல்வனைப் பெற்றெடுத்தார்.
பதம் 5.15.4 : மன்னர் பிரதீஹன் தானாகவே தன்னுணர்வுக் கொள்கைகளைப் பரப்பிவந்தார். இதன் மூலம் அவர் தூய்மையடைந்ததோடு மட்டுமல்லாது பரமபுருஷ பகவான் விஷ்ணுவின் சிறந்த பக்தராகி அவரை நேரில் உணர்ந்து கொண்டார்.
பதம் 5.15.5 : பிரதீஹன் தன் மனைவி சுவர்சலாவிடமிருந்து மூன்று புதல்வர்களைப் பெற்றெடுத்தார். அவர்களது பெயர்கள் பிரதிஹர்தான், பிரஸ்தோதான், உத்காதான் என்பவையாகும். இம்மூவரும் வேதச்சடங்குகளைச் செய்வதில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர். பிரதிஹர்தான் தன் மனைவி ஸ்துதியின் வயிற்றிலிருந்து அஜன், பூமான் என்னும் இரு புதல்வர்களைப் பெற்றெடுத்தார்.
பதம் 5.15.6 : மன்னர் பூமான் தன் மனைவி ரிஷிகுல்யாவிடமிருந்து உத்கீதன் என்றொரு புதல்வனை ஈன்றெடுத்தார். உத்கீதனின் மனைவி தேவகுல்யாவிற்கு பிரஸ்தாவன் என்றொரு புதல்வன் பிறந்தார். பிரஸ்தாவன் தன் மனைவி நியுத்ஸாவின் மூலம் விபு என்றும் புதல்வனை ஈன்றெடுத்தார். விபு தன் மனைவி ரதி என்பவளிடமிருந்து பிருதுஷேணன் என்றொரு புதல்வனைப் பெற்றெடுத்தார். பிருதுஷேணன் தன் மனைவி ஆகூதீயிடமிருந்து நக்தன் என்னும் பெயருடைய புதல்வனை ஈன்றெடுத்தார். நக்தனின் மனைவி திருதி என்பாள் ஆவாள், அவள் தன் வயிற்றிலிருந்து மாமன்னர் கயன் என்பவரைப் பெற்றெடுத்தாள். கயன் புகழ் மிக்கவராகவும், புண்ணிய மன்னராகவும் விளங்கினார், அவர் ராஜரிஷிகளில் மிகச் சிறந்தவராவார். பகவான் விஷ்ணுவும், பிரபஞ்சத்தைப் பாதுகாப்பவர்களான அவரது அவதாரங்களும் எப்போதும் “விசுத்த சத்துவம்” என்றறியப்படும் உன்னத சத்துவக் குணத்திலேயே வீற்றிருப்பர். பகவான் விஷ்ணுவின் நேரடி விரிவான மன்னர் கயனும் விசுத்த சத்துவத்திலேயே வீற்றிருந்தார். இதன் காரணமாக மகாராஜா கயன் முற்றிலும் உன்னத ஞானம் நிரம்பப் பெற்றவராக விளங்கினார். இதனால் அவர் மகாபுருஷர் என்று அழைக்கப்பட்டார்.
பதம் 5.15.7 : மன்னர் கயன் தனது குடிமக்களுக்கு முழுப்பாதுகாப்பும் உத்தரவாதமும் அளித்திருந்தார். அதனால் அவர்களது சொந்த சொத்துக்களுக்கு தீய சக்திகளினால் எந்தவிதமான இடையூறும் ஏற்படவில்லை. குடிமக்களுக்குத் தேவையானப் போதிய உணவு இருக்கிறதா என்றும் அவர் பார்த்துக் கொண்டார் (இதுவே போஷணம் என்றழைக்கப்படுகிறது). சில சமயம் குடிமக்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவர் வெகுமதிகள் அளிப்பார். (இதுவே ப்ரீணனம் என்றழைக்கப்படுகிறது). சிலசமயம் அவர் குடிமக்களை அழைத்துக் கூட்டங்கள் போட்டு அவர்களிடம் இனிமையாகப் பேசுவார். (இது உபலாலனம் எனப்படும்). அவர் அவர்களுக்கு முதல்தரக் குடிமக்களாக எவ்வாறு வருவது என்று உபதேசிப்பார். (அது அனுஸாஸானம் எனப்படும்). இவையெல்லாம் மன்னர் கயனின் ராஜநீதியின் தன்மைகளாகும். இவை போக மன்னர் கயன் ஓர் இல்லறவாசியாக இருந்து இல்லறத்தின் ஒழுங்குமுறை விதிகளைக் கடுமையாகப் பின்பற்றி வந்தார். அவர் வேள்விகள் செய்தார். முழுமுதற் கடவுளின் மாசற்றத் தூயப் பக்தனாக விளங்கினார். அவர் மகாபுருஷர் என்றழைக்கப்பட்டார். காரணம் அவர் மன்னராக இருந்து குடிமக்களுக்கு அனைத்து வசதிகளையும் அளித்தார். இல்லறத்தானாக இருந்து தனது கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றினார். இதன் காரணமாக இறுதியில் அவர் பரமபுருஷ பகவானின் சிறந்த பக்தன் ஆனார். ஒரு பக்தனாக அவர் எப்போதும் பிற பக்தர்களுக்கு மரியாதை அளிக்கத் தயாராகவே இருந்தார். இதுவே பக்தி யோக செயல்முறை. மன்னர் கயன் எப்போதும் உடற்கருத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்றவராக விளங்கினார். அவர் பிரம்ம உணர்வு நிரம்பப் பெற்றவராக இருந்தார். இதனை தொடர்ந்து அவர் எப்போதும் போற்றப்பட்டார். பௌதீகச் சோகத்தை அவர் அனுபவித்ததே இல்லை. அவர் எல்லா வழிகளிலும் நிறைவுடையவராக விளங்கிய போதிலும் அவர் ஒருபோதும் கர்வம் கொண்டதே இல்லை. அதுபோல் அவர் தனது இராஜ்ஜியத்தை ஆள்வதில் ஆர்வம் காட்டியதுமில்லை.
பதம் 5.15.8 : அன்பிற்குரிய பரீக்ஷித்து மன்னனே! புராணங்களில் உள்ள சரித்திரங்களை நன்கு கற்றவர்கள் பின்வரும் பாடல்களினால் மன்னர் கயனின் புகழைப் பாடுகின்றனர்.
பதம் 5.15.9 : மாமன்னர் கயன் எல்லாவிதமான வேள்விச் சடங்குகளையும் தவறாது செய்பவர் ஆவார். வேத இலக்கியங்களைக் கற்பதில் அவர் தேர்ந்தவராகவும் சிறந்த புத்திமானாகவும் விளங்கினார். சமய அறநெறிகளைப் பாதுகாப்பவராகவும், அனைத்து வளங்களும் நிரம்பியவராகவும் இருந்தார். நேர்மையாளர்களின் தலைவராகவும் பக்தர்களின் தொண்டனாகவும் விளங்கினார். முழுமுதற் கடவுளின் அம்ச அவதாரத்திற்கான அனைத்துத் தகுதிகளும் உடையவராக இருந்தார். ஆகையினால் மிகப்பெரிய சமயச் சடங்குகளைச் செய்வதில் அவருக்கு இணையாக யார் இருக்க முடியும்?
பதம் 5.15.10 : ஸ்ரத்தா, மைத்ரீ, தயா போன்ற கற்பும், நேர்மையும் நிறைந்த தக்ஷனின் புதல்விகள் அனைவரின் ஆசியும் மிகவும் சக்தி வாய்ந்தவையாகும். அவை மகாராஜா கயனைப் புனித நீரினால் நீராட்டியது, உண்மையில் அவர்கள் மகாராஜா கயன் மீது மிகுந்த திருப்தி கொண்டிருந்தனர். பூமிக்கோளத்தின் வடிவம் ஒரு பசுவாக வந்தது, அது தன் கன்றினைப் பார்த்தது போல் மகாராஜா கயனின் நற்குணங்களைக் கண்டபொழுது அளவின்றி பாலை சுரந்தது. அதாவது மகாராஜா கயன் பூமியிலிருந்து அனைத்து நலன்களையும் பெறக்கூடியத் திறனுடையவராக விளங்கினார். அதன் மூலம் அவர் தன் குடிமக்களின் ஆசைகளைத் திருப்திப்படுத்தினார் என்றும் கூறலாம். ஆயினும் அவருக்கென்று தனியான ஆசைகள் எதுவுமில்லை.
பதம் 5.15.11 : மன்னர் கயனிடம் புலனுகர்ச்சிக்கானத் தனிப்பட்ட ஆசை எதுவுமில்லையென்ற போதிலும், அவர் செய்த வேதச் சடங்குகளின் சக்தியின் காரணமாக அவரது ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. மகாராஜா கயன் போரிட்ட எல்லா அரசர்களும் சமய நெறிகளின் மீதே போரிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் அவரது பேராற்றலில் திருப்தியுற்று அவருக்கு அனேக பரிசுகள் வழங்கினர். அதுபோல் அவரது நாட்டிலுள்ள அந்தணர்கள் அனைவரும் அவரது வாரி வழங்கும் வள்ளல் தன்மையில் பெரிதும் திருப்தியுற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து அந்தணர்கள் தமது புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கினை மன்னர் கயன் தன் மறு பிறவியில் நன்மை பெறும் பொருட்டு அளித்தனர்.
பதம் 5.15.12 : மகாராஜா கயனின் வேள்வியில் சோமரஸம் என்னும் மதுபானம் அதிக அளவில் வழங்கப்படும் தேவேந்திரன் வழக்கமாக வந்து சோமரஸத்தினை அளவில்லாது பருகி போதைக்கு ஆளாவார். முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணுவும் (யக்ஞ புருஷர்) அங்கு வந்து அவ்வேள்விச் சாலையில் தூய்மையுடனும் உறுதியான பக்தியுடனும் அர்ப்பணிக்கப்படும் அனைத்து வேள்விகளையும் ஏற்றுக் கொள்வார்.
பதம் 5.15.13 : முழுமுதற் கடவுள் ஒரு மனிதனின் செயலில் இனிமையுறும் பொழுது பிரம்மதேவன் தொடங்கி அனைத்துத் தேவர்களும், மனிதர்களும், விலங்குகளும், பறவைகளும், தும்பிகளும், கொடிகளும், மரங்களும், புற்களும் போன்ற உயிர்வாழிகள் அனைத்தும் இனிமையுறுகின்றன. முழுமுதற் கடவுளே அனைவரின் பரமாத்மாவாக விளங்குகின்றார். இயற்கையாகவே அவர் முற்றிலும் இனிமையுடையவராவார். இருந்தும் அவர் மகாராஜா கயனின் வேள்விச் சாலைக்கு வந்து “நான் முற்றிலும் இனிமையடைகிறேன்” என்று கூறினார்.
பதங்கள் 5.15.14 – 5.15.15 : கயந்தீயின் வயிற்றில் மகாராஜா கயன் மூன்று புதல்வர்களைப் பெற்றெடுத்தார். அவர்கள் சித்திரரான், சுகதி, அவரோதனன் ஆவர். சித்திரரதன் தன் மனைவி ஊர்ணாவினிடத்தில் சம்ராட் என்னும் பெயருடைய புதல்வனை ஈன்றெடுத்தார். சம்ராட்டின் மனைவி உத்கலா தன் வயிற்றிலிருந்து மரீசி என்றொரு புதல்வனை ஈன்றெடுத்தார். மரீசி தன் மனைவி பிந்துமதி என்பவனிடத்தில் பிந்து என்னும் பெயருடைய புதல்வனைப் பெற்றெடுத்தார். பிந்துவின் மனைவி சரகாவினிடத்தில் மது என்னும் புதல்வனைப் பெற்றெடுத்தார். மது தன் மனைவி சுமனா என்பவளிடம் வீரவிரதன் என்னும் புதல்வனைப் பெற்றெடுத்தார். வீரவிரதன் தன் மனைவி போஜா என்பவளிடம் மந்து, பிரமந்து என்னும் பெயருடைய இரு புதல்வர்களைப் பெற்றெடுத்தார். மந்து தன் மனைவி சத்தியாவினிடத்தில் பௌவனன் என்னும் பெயருடைய புதல்வனைப் பெற்றெடுத்தார். பௌவனன் தன் மனைவி தூஷணாவிடம் திவஷ்டா என்றொரு புதல்வனை ஈன்றெடுத்தார். திவஷ்டா தன் மனைவி விரோசனாவிடம் விரஜன் என்னும் பெயருடைய புதல்வனைப் பெற்றெடுத்தார். விரஜனின் மனைவி விஷுசி என்பவள் தன் வயிற்றிலிருந்து நூறு புதல்வர்களை ஈன்றெடுத்தாள். இவர்கள் அனைவருக்கும் தலைவராக சதஜித் என்பவர் விளங்கினார்.
பதம் 5.15.16 : மன்னர் விரஜனைப் பற்றி ஒர் புகழ்மிக்கப் பாடல் உள்ளது “தனது நற்குணங்களினாலும், கீர்த்தியினாலும் மன்னர் விரஜன் பகவான் விஷ்ணுவைப் போன்று மன்னர் பிரியவிரதனின் குலத்தில் ஒளிமிக்க மணியாகத் திகழ்ந்தார். பகவான் விஷ்ணு தனது உன்னதச் சக்தியினால் தேவர்களை ஆசிர்வதித்து அழகு செய்கிறார்.