அத்தியாயம் – 9
மானுடப் பிறப்பில் பரதரின் சிறந்த இயல்புகள்
பதங்கள் 5.9.1 – 5.9.2
ஸ்ரீ ஸுக உவாச
அத கஸ்யசித் த்விஜ-வரஸ்யாங்கிர-ப்ரவர்ஸ்ய ஸம-தம-தப
ஸ்வாத்யாயாத்யயன-த்யாக-ஸந்தோஷ-திதிக்ஷா-ப்ரஸ்ரய-வித்யான
ஸுயாத்மஜ்ஞானானந்த-யுக்தஸ்யாத்ம-ஸத்ருஸ-ஸ்ருத-ஸீலாசார
ரூபௌதார்ய-குணா நவ ஸோதர்யா அங்கஜா பபூவுர் மிதுனம் ச
யவீயஸ்யாம் பார்-யாயாம் யஸ் துதத்ர புமாம்ஸ் தம் பரம-பாகவதம்
ராஜர்ஷி-ப்ரவரம் பரதம் உத்ஸ்ருஷ்ட-ம்ருக-ஸரீரம் சரம-ஸரீரேண
விப்ரத்வம் கதம் ஆஹு:
ஸ்ரீ—ஸுக உவாச—சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்; அத—அதன்பின்னர்; கஸ்யசித்—சில; த்விஜ-வரஸ்ய—அந்தணர்; அங்கிர-ப்ரவரஸ்ய—மாமுனிவர் அங்கிராவின் குலத்தில் பிறந்தவர்; ஸம—மன அடக்கம்; தம—புலனடக்கம்; தப—தவங்கள், விரதங்கள் போன்றவற்றில் பயிற்சி; ஸ்வாத்யாய—வேதமந்திரங்களை ஒதுதல்: அத்யயன—கற்பது; த்யாக—துறவறம்; ஸந்தோஷ—திருப்தி; திதிக்ஷா—பொறுமை; ப்ரஸ்ரய—மிகவும் நேர்மையான; வித்யா—அறிவு: அனஸுய—காழ்ப்புணர்ச்சியின்றி; ஆத்ம-ஜ்ஞான-ஆனந்த—தன்னுணர்வில் திருப்தியுற்று; யுக்தஸ்ய—தகுதியுடன்; ஆத்ம-ஸத்ருஸ—தன்னைப் போலவே; ஸ்ருத—கல்வியில்; ஸீல—சீலம்; ஆசார—நடத்தையில்; ரூப—அழகில்; ஔதார்ய—பெருந்தன்மையில்; நவ ஸ-உதர்யா—ஒன்பது சகோதரர்கள் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்தனர்; அங்க-ஜா—புதல்வர்கள்; பபூஷ—பிறந்தனர்; மிதுனம்—இரட்டைச் சகோதர சகோதரி; ச—மேலும்; யவீயஸ்யாம்—இளைய; பார்யாயாம்—மனைவி; ய—அவள்; து—ஆனால்; தத்ர—அங்கே; புமான்—ஆண் குழந்தை; தம்—அவரது; பரம-பாகவதம்:—மிகச் சிறந்த பக்தர்; ராஜ-ர்ஷி—ராஜரிஷிகளின்; ப்ரவரம்—மிகுந்த மதிப்பிற்குரிய; பரதம்—பரத மகாராஜா; உத்ஸ்ருஷ்ட—துறந்து; ம்ருக-ஸரீரம்—ஒரு மானின் உடலில்; சரம-ஸரீரேண—இறுதி உடலுடன்; விப்ரதவம்—ஓர் அந்தணராக; கதம்—அடைந்தனர்; ஆஹு—அவர்கள் கூறினார்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார். அன்பார்ந்த மன்னனே, மானின் உடலைத் துறந்த பின் பரதர் ஒரு தூய அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். அங்கிராவின் குலத்தில் வந்த அந்தணர் ஒருவர் அந்தணத் தகுதிகள் அனைத்தும் நிரம்பியவர். மனம் மற்றும் புலன்களை அடக்கி வேதங்களையும், சாத்திரங்களையும் நன்கு கற்றவராக அவர் விளங்கினார். தானம் வழங்குவதில் தேர்ந்தவராகவும், எப்போதும் திருப்தியுடையவராகவும், கற்றறிந்தவராகவும், காழ்ப்புணர்ச்சியற்றவராகவும் இருந்தார். தன்னுணர்வு பெற்று பகவானின் பக்தித் தொண்டில் அவர் ஈடுபட்டிருந்தார். எப்போதும் சமாதி நிலையிலேயே இருந்தார். அவரது முதல் மனைவியிடம் ஒன்பது புதல்வர்களையும் இரண்டாம் மனைவியிடம் இரட்டையராகப் பிறந்த ஒரு புதல்வன் மற்றும் ஒரு புதல்வியையும் பெற்றெடுத்தார். இப்புதல்வனே மிகச் சிறந்த பக்தரும், உயர்ந்த ராஜ ரிஷியுமான பரத மகாராஜா ஆவார். மானின் உடலைத் துறந்தபிறகு அவர் பிறந்த கதை இதுவேயாகும்.
பதம் 5.9.3
தத்ராபி ஸ்வஜன-ஸங்காச் ச ப்ருஸம் உத்விஜமானோ பகவத கர்ம
பந்த-வித்வம் ஸன-ஸ்ரவண-ஸ்மரண- குண-விவரண சரணாரவிந்த –
யுகவம் மனஸா விததத் ஆத்மன ப்ரதிகாதம் ஆஸங்கமானோ பகவத்-
அனுக்ரஹேணானுஸ் ம்ருத-ஸ்வ-பூர்வ-ஜன்மாவலிர் ஆன்மானம்
உன்மத்த-ஜடாந்த-பதிர-ஸ்வரூபேண தர்ஸயாம் ஆஸ் லோகஸ்ய
தத்ர அபி—இவ்வாறு அந்தணக் குடும்பத்தில் பிறந்த போதிலும்; ஸ்வ-ஜன-ஸங்காத்—உற்றார் உறவினர்களுக்கிடமுள்ள தொடர்பிலிருந்து; ச—மற்றும்; ப்ருஸம்—பொிதும்; உத்விஜமான—எங்கே மீண்டும் தவறி வீழ்ந்து விடுவோமோ என்று எப்போதும் அஞ்சினார்; பகவத—முழுமுதற் கடவுளின்; கர்ம-பந்த—பலன்தரும் செயல்களின் விளைவில் பந்தப்பட்டு; வித்வம்ஸன—அது வெல்லுதல்; ஸ்ரவண—கேட்டல்; ஸ்மரண—நினைத்தல்; குண-விவரண—பகவானின் குணங்களைப் பற்றிய விளக்கங்களைக் கேட்டல்; சரண-அரவிந்த—தாமரைத் திருவடி; யுகவம்—இரண்டு; மனஸா—மனதுடன்; விததத்—எப்போதும் சிந்தித்து; ஆத்மன—அவரது ஆத்மாவின்; ப்ரதிகாதம்—பக்தித் தொண்டுப் பாதையில் தடையாக; ஆஸங்கமான—எப்போதும் அஞ்சி; பகவத்-அனுக்ரஹேண—முழுமுதற் கடவுளின் விசேஷ கருணையினால்; அனுஸ் தீம்ருத—நினைந்து; ஸ்வ-பூர்வ—அவரது முந்தைய; ஜன்ம-ஆவலி—பிறப்புக்களின் கயிற்றில்; ஆத்மானம்—அவரது; உன்மத்த—உன்மத்தம்; ஜட—ஜடம்; அந்த—குருடராக; பதிர—செவிடராக; ஸ்வரூபேண—இத்தன்மைகளுடன்; தர்ஸயாம்-ஆஸ—அவர் வெளிப்படுத்தினார்; லோகஸ்ய—பொதுமக்களிடம்.
பகவானின் கருணையினை விசேஷமாகப் பெற்றிருந்தாலும் பரத மன்னருக்கு அவரது முற்பிறப்பு சம்பவங்கள் அனைத்தும் நன்றாக நினைவில் இருந்தன. அவர் அந்த உடலைப் பெற்று அந்தணக் குடும்பத்தில் வாழ்ந்தபோதிலும் பக்தரல்லாத தனது உற்றார் உறவினர்களைக் கண்டு மிகவும் அஞ்சினார். இவர்களோடு தொடர்பு கொள்வதில் அவர் எப்போதும் மிகவும் எச்சரிக்கையுடனேயே இருந்தார். ஏனெனில் எங்கே தான் மீண்டும் தவநெறி பிறழ்ந்து விடுவோமோ என்று அவர் அஞ்சினார். இதனைத் தொடர்ந்தே அவர் பொதுமக்களின் கண்களுக்குத் தன்னை ஓர் உன்மத்தம் பிடித்தவராக முட்டாள் போன்றும், குருடு மற்றும் செவிடராகவும் காண்பித்துக் கொண்டார். அப்போதுதானே அவரிடம் பிறர்பேசவும் தொடர்பு கொள்ளவும் முயல மாட்டார்கள். இவ்வாறு அவர் தன்னைத் தீயத் தொடர்புகளிலிருந்து காத்துக் கொண்டார். மேலும் அவர் எப்போதும் தனக்குள் பலன் தரும் செயலிலிருந்து ஒருவரைக் காத்தருளும் பகவானின் தாமரைத் திருவடிகளையே சிந்தித்து, அவரது பெருமைகளையே தொடர்பின் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொண்டார்.
பதம் 5.9.4
தஸ்யாபி ஹ வா ஆத்ஜஸ்ய விப்ர: புத்ர-ஸ்நேஹானுபத்த-மனா
ஆஸமாவர்தனாத் ஸம்ஸ்காரான் யதோபதேஸம் விததான உதனீதஸ்ய
ச புன: ஸொசாசமனாதீன் கர்ம—நியமான் அனபிப்ரேதான் அபி ஸம்
ஸீக்ஷயத் அனுஸிஷ்டேன ஹி பாவ்யம் பிது: புத்ரேணேதி
தஸ்ய—அவரது; அபி ஹ வா—உறுதியாக; ஆத்ம-ஜஸ்ய—அவர் புதல்வரின்; விப்ர—மானுட பரதரின் (உன்மத்த, புத்திசுவாதீனமற்ற பரதன்) அந்தணத்தந்தை; புத்ர ஸ்நேக-அனுபத்த-மனா—தன் புதல்வன் மீது கொண்ட பாசத்தினால் கட்டுப்பட்டு; ஆ-ஸம-ஆவர்தனாத்—இறுதிவரை “பிரம்மச்சரிய—ஆஸ்ரமத்தில்”; ஸம்ஸ்காரன்—துய்மை செய்யும் முறை; யதா-உபதேஸம்—சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி; விததான—செய்து; உபனீதஸ்ய—முப்புரி நூலுடைய ஒருவர்; ச—மேலும்; புன—மீண்டும்; ஸெளச-ஆசமன-ஆதின்—வாய், கை, கால் போன்றவற்றைச் சுத்தப்படுத்துவதற்கான ஆசமனம் செய்தல்; கர்ம-நியமான்—பலன்தரும் செயல்களின் ஒழுங்குமுறை விதிகள்; அனபிப்ரேதான் அபி—மானுட பரதரால் விரும்பப்படாவிட்டாலும்; ஸமஸீக்ஷயத்—கற்பித்து; அனுஸிஷ்டேன—ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றுவதற்கு கற்பித்தல்; ஹி—உண்மையில்; பாவ்யம்—இருத்தல் வேண்டும்; பிது—தந்தையிடமிருந்து; புத்ரேண—புத்திரன்; இதி—இவ்வாறு.
மானுட பரதரின் அந்தணத் தந்தை எப்போதும் தன் புதல்வன் (பரத மகாராஜா) மீது பாசம் கொண்டிருந்தார். கிரஹஸ்த ஆஸ்ரமம் என்னும் இல்வாழ்க்கைக்கு மானுட பரதர் பொருத்தமானவராக இல்லையெனவே அவர் இறுதிவரையில் பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தில் இருப்பதற்கானத் தூய்மை செய்யும் முறையினைச் செய்து வைத்தார். பரதருக்குத் தன் தந்தையின் உபதேசங்களை ஏற்றுக் கொள்வதற்கு விருப்பமில்லாவிட்டாலும் கூட தந்தை மகனுக்குச் செய்யும் கடமையின் காரணமாக அந்த அந்தணர் அவருக்கு எவ்வாறு கை, வாய் போன்றவற்றைக் கழுவித் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதைக் கற்பித்தார்.
பதம் 5.9.5
ஸ சாபி தத் உஹ பித்ரு-ஸன்னிதாவ் ஏவாஸத்ரீசீனம் இவ ஸ்ம
கரோதி சத்மாம்ஸி அத்யாபயிஷ்யன் ஸஹ வ்யா ஹ்ருதிபி ஸப்ரணவ
ஸிரஸ் த்ரிபதீம் ஸாவித்ரீம் க்ரைஷ்ம-வாஸந்திகான் மாஸான் அதீயான ம்
அபி அஸமவேத—ரூபம் க்ராஹயாம்-ஆஸ
ஸ—அவர் (ஜட பரதர்); ச—மேலும்; அபி—உண்மையில்; தத் உஹ—அவர் தந்தையினால் உபதேசிக்கப்பட்டது; பித்ரு ஸன்னிதௌ—தன் தந்தையின் முன்னிலையில்; ஏவ—கூட; அஸத்ரீசீனம் இவ—எதனையும் புரிந்துகொள்ள முடியாதவரைப் போன்று; ஸ்ம-கரோதி—வழக்கமாகச் செய்வதற்கு; சந்தாம்ஸி-அத்மயாபயிஷ்யன்—ஸ்ரவண மாதத் தொடக்கம் அல்லது சாதுர்மாஸ்ய கால கட்டத்தில் வேத மந்திரங்களை அவருக்கு உபதேசிக்கும் விருப்பத்துடன்; ஸஹ—அத்துடன்; வ்யா ஹ்ருதிபி—தேவ லோகங்களின் நாமங்களை (பூ:புவ:ஸ்வ) உச்சரித்தல்; ஸ-ப்ரணவ-ஸிர—ஒம்காரத்தின் தலைமையில்; த்ரீ-பதீம்—மூன்று அடிகள்; ஸாவித்ரீம்—காயத்ரி மந்திரம்; க்ரைஷ்ம-வாஸந்திகான்—சைத்ர மாதம் அதாவது மே பதினைந்து தொடங்கி நான்கு மாதங்களுக்கு; மாஸான்—மாதங்கள்; அதீயானம் அபி—முற்றிலும் கற்றிருந்தும்; அஸம-வேத-ரூபம்—அரைகுறை வடிவத்தில்; க்ராஹயாம் ஆஸ—அவர் கற்கச் செய்தார்.
அவரது தந்தை அவருக்கு வேத மந்திரத்தில் போதிய பயிற்சி அளித்திருந்தபோதிலும், மானுட பரதர் தன் தந்தையின் முன்பு ஒரு மூடனைப் போன்றே நடந்து கொண்டார். அப்படிச் செய்தால்தானே மானுட பரதர் உபதேசிப்பதற்குப் பயனற்றவர் என்று கருதி அவர் தந்தை அவருக்கு மேலும் உபதேசிப்பதை நிறுத்துவார். அவர் எதிலும் நேருக்கு மாறாகவே நடந்து கொள்வார். மலங்கழித்துவிட்டுக் கால் கழுவ வேண்டுமென்றால், அவர் முதலிலேயே கால் கழுவுவார். இருப்பினும் அவர் தந்தை அவருக்கு வசந்த காலத்திலும், கோடைக் காலத்திலும் வேதங்களை உபதேசிக்க விரும்பினார். அவர் அவருக்கு ஒம்காரத்துடன் கூடிய காயத்ரி மந்திரம் மற்றும் வியாஹ்ருதியினை கற்றுக்கொடுக்க முயன்றார். ஆனால் நான்கு மாதங்கள் கடந்த பிறகும்கூட அவர் தந்தையால் தன் முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை.
பதம் 5.9.6
ஏவம் ஸ்வ-தனுஜ ஆத்மனி அனுராகாவேஷித-சித்த: ஸௌசாத்யயன-
வ்ரத நியம-குர்வ்-அனவ-ஸுஸரூஷனாதி-ஔபகுர்வாணககர்மாணி
அனபியுக்தானி அபி ஸமனுஸிஷ்டேன் பாவ்யம் இதி அஸத்
ஆக்ரஹ: புத்ரம் அனுஸாஸ்ய ஸ்வயம் தாவத் அனதிகத—மனோரத:
காலேனாப்ரமத்தேன ஸ்வயம் க்ருஹ ஏவ ப்ரமத்த உபஸம் ஹ்ருத:
ஏவம்—இவ்வாறு; ஸ்வ—தனது; தனு-ஜே—தனது மகன் மானுட பரதனின்; ஆத்மனி—அவர் தன்னை யாராகக் கருதியிருந்தாரோ; அனுராக-ஆவேஸித-சித்த:—தன் மைந்தன் மீது ஆழ்ந்த அன்புடைய அந்த அந்தணர்; ஸௌச—தூய்மை; ஆத்யயன—வேத இலக்கியத்தைக் கற்றல்; வ்ரத—எல்லா விரதங்களையும் ஏற்றுக் கொள்ளுதல்; நியம—ஒழுங்குமுறை விதிகள்; குரு—ஆன்மீக குருவின்; அனல—நெருப்பின்; ஸுஸ்ரூஷண-ஆதி—தொண்டு போன்றவை; ஔபகுர்வாணக—பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தின்; கர்மாணி—எல்லாச் செயல்களும்; அனபியுக்தானி அபி—தன் மகனால் விடுவிக்கப்படாத போதும்; ஸமனுஸிஷ்டேன—முற்றிலும் உபதேசித்து; பாவ்யம்—இருத்தல் வேண்டும்; இதி—இவ்வாறு; அஸத் ஆக்ரஸ—பொருந்தாத பிடிவாதம் உடையவராக; புத்ரம்—அவர் தனயன்; அனுஸாஸ்ய—உபதேசித்தல்; ஸ்வயம்—அவரது; தாவத்—இவ்வழியில்; அனதிகத-மனோரத:—அவரது ஆசைகள் நிறைவேறாது; காலேன—காலத்தின் பாதிப்பினால்; அப்ரமத்தேன—அது மறதி இல்லாதது; ஸ்வயம்—அவர் தனது; க்ருஹே—இல்லத்திற்கு; ஏவ—உறுதியாக; ப்ரமத்த—வெறிகொண்ட பற்றுடையவர்; உபஸம் ஹ்ருத—இறந்தார்.
மானுட பரதரின் அந்தணத் தந்தை தன் மகனைத் தனது இதயமும் ஆத்மாவாகவும் கருதினார். ஆகையினால் அவர், மகன் மீது அதிகப் பற்றுடையவராக இருந்தார். தனது மைந்தனுக்கு முறையான கல்வியளிப்பதே நன்று எனக் கருதினார். வெற்றி தராத இம்முயற்சியில் அவர் ஆழ்ந்து தனது மைந்தனுக்கு பிரம்மச்சரிய நெறிகளை —வேத விரதங்களை மேற்கொள்ளல், வேதங்களைக் கற்றல், ஒழுங்கு முறை விதிகளைக் கடைப்பிடித்தல், ஆன்மீக குருவிற்கு சேவை செய்தல், நெருப்பு வேள்வியினை அர்ப்பணித்தல் போன்றவை அடங்கியது கற்பிக்க முயற்சித்தார். தன் மைந்தனுக்கு அனைத்தையும் கற்பிக்க முயன்றாலும், தனது முயற்சிகள் அனைத்திலும் அவர் தோல்வியே கண்டார். தன் மைந்தன் ஒர் கற்றறிந்த அறிஞனாக வருவான் என்று அவர் கொண்ட நம்பிக்கை பொய்த்துவிட்டது. எல்லோரையும் போல் அந்த அந்தணரும் தன் குடும்பத்தின் மீது அதிக பாசமுடையவராக இருந்தார். ஒரு நாள் தான் இறந்து போவோம் என்பதை அவர் எண்ணவில்லை. ஆனால் மரணமோ மறக்கும் தன்மை உடையதல்ல. சரியான நேரத்தில் மரணம் அவரை அள்ளிக் கொண்டு போயிற்று.
பதம் 5.9.7
அத யவீயஸீ த்விஜ-ஸதீஸ்வ-கர்ப-ஜாதம் மிதுனம் ஸபத்ன்யா
உபன்யஸ்ய ஸ்வயம் அனுஸம்ஸ்தயா பதிலோகம் அகாத்
அத—அதன்பிறகு; யவீயஸீ—இளைய; த்விஜ-ஸதீ—அந்தணனின் மனைவி; ஸ்வ-கர்ப-ஜாதம்—அவன் வயிற்றில் பிறந்த; மிதுனம்—இரட்டையர்கள்; ஸபத்ன்யை—தன் சக கிழத்தியிடம்; உபன்யஸ்ய—ஒப்படைத்து; ஸ்வயம்—சுயமாக; அனுஸம்ஸ்தயா—தன் கணவனைப் பின் தொடர்ந்து; பதி-லோகம்—பதிலோகத்திற்கு; அகாத்—சென்றாள்.
அதன் பிறகு அந்த அந்தணரின் இளைய மனைவி தன் இரட்டைக் குழந்தைகளான ஆணையும், பெண்ணையும் தனது சக கிழத்தியிடம் ஒப்படைத்துவிட்டு தன் கணவனுடன் உடன்கட்டை ஏறி பதிலோகம் சென்றாள்.
பதம் 5.9.8
பிதரி உபரேத ப்ராதர ஏனம் அதத்-ப்ராபவ-விதஸ்த்ரய்-யாம்
வித்யாயாம் ஏவ பர்யவஸித-மதயோ ந பர-வித்யாயாம் ஜட-மதிர் இதி
ப்ராதுர் அனுஸாஸன—நிர்பந்தான் ந்யவ்குத்ஸந்த
பிதரி உபரதே—தந்தை இறந்த பிறகு; ப்ராதர—மாற்றாந்தாய்க்குப் பிறந்த சகோதரர்கள்; ஏனம்—பரதருக்கு (ஜட பரதர்); அ-தத்-ப்ரபாவவித:—அவரது மேன்மை நிலை அறியாது; த்ரய்யாம்—மூன்று வேதங்களின்; வித்யாயாம்—பெளதீகச் சடங்குகள் சம்பந்தமான அறிவு; ஏவ—உண்மையில்; பர்யவஸித—நிலைபெற்று; மதய—அவர்கள் மனம்; ந—இல்லை; பர-வித்யாயாம்—ஆன்மீக வாழ்வின் உன்னத அறிவில் (பக்தித் தொண்டு); ஜட-மதி:—மந்த மதியில்; இதி—இவ்வாறு; ப்ராது—அவர்கள் சகோதரர் (ஜட பரதர்); அனுஸாஸன-நிர்பந்தாத்—கற்பிப்பதற்கான முயற்சியினை; நியவ்ருத் ஸந்த—நிறுத்தினர்.
தந்தை இறந்த பிறகு தந்தையின் மூத்த மனைவிக்குப் பிறந்த ஒன்பது மைந்தர்களும் மானுட பரதரை முறையற்ற மந்த மதியுடையவர் என்று கருதி தங்கள் தந்தை அவருக்குக் கல்வியளிக்க வேண்டும் என்று செய்திருந்த அனைத்து முயற்சிகளையும் உடனே நிறுத்தினர். மானுட பரதரின் மாற்றாந்தாய் மக்கள் ஒன்பது பேர்களும் ரிக் வேதம், யஸுர் வேதம், சாம வேதம் என்னும் மூன்று வேதங்களையும் கற்றிருந்தனர். இவை பலன் தரும் செயல்களைச் செய்ய அதிக ஊக்கமளிப்பவையாகும். அவ்வொன்பது சகோதரர்களும் பகவானின் பக்தித் தொண்டில் அத்துணை ஒளிமிக்கவர்கள் அல்லர். இதனைத் தொடர்ந்து அவர்களால் மானுட பரதரின் மேன்மை நிலையினைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
பதங்கள் 5.9.9 – 5.9.10
ஸ ச சபராக்ருனதர் த்விபத-பஸுபிர் உன்மத்த-ஜட-பதிர-மூகேதி
அபிபாஷ்யமாணோ யதா தத்-அனுரூபாணி ப்ரபாஷதே கர்மாணி ச
கார்யமாண பரேச்சயா கரோதி விஷ்திதோ லா யாச்னயா யத்ருக்சயா
வோபஸாதிதம் அல்பம் பஹு ம்ருஷ்டம் கதன்னம் வாப்யவஹரதி
பரம் மேந்த்ரிய-ப்ரீதி-நிமித்தம், நித்ய-நிவ்ருத்த-நிமித்த-ஸ்வ-ஸித்த
விஸுத்தா-னுபவானந்த-ஸ்வாத்ம- லாபாதிகம ஸுக-து கயோர்
த்வந்த-நிமித்தயோர் அஸம்பாவித- தேஹாபிமான ஸீதோஷ்ண
வாத—வர்ஷேஷு விருஷ இவானாவ்ருதாங்க-பீன ஸம்ஹனனாங்க:
ஸ்தஹனணடிலஸம் வேஸனானுன்மர்தனாமஜ்ஜன-ரஜஸா மஹாமணிர்
இவானபிவ்யக்தப்ரஹ்ம-வர்சஸ குபதாவ்ருதே-கடிர் உபவீ-தேனோரு-
மஷிணா த்விஜாதிர் இதி ப்ரஹ்ம-பந்துர் இதி ஸம்ஜ்ஞயாதஜ்-
ஜ்ஞஜனாவமதோ விசசார
ஸ ச—அவரும்கூட; ப்ராக்ருதை—ஆன்மீக ஞானமில்லாத சாதாரண மனிதர்களினால்; த்வி-பத-பஸுபி—அவர்கள் இரண்டு கால்களையுடைய விலங்குகளைத் தவிர வேறல்லர்; உன்மத்த—உன்மத்தம்; ஜட—ஜடம் (மந்தமான); பதிர—செவிடு; மூக—ஊமை; இதி—இவ்வாறு; அபிபாஷ்யமாண—அழைக்கப்பட்டு; யதா—அப்பொழுது; தத்-அனுரூபாணி—அவர்களுக்குப் பதிலுரைக்கப் பேசுவது; ப்ரபாஷதே—அவர் பேசுவார்; கர்மாணி—செயல்கள்; ச—மேலும்; கார்யமாண—நிறைவேற்றுவதற்குக் காரணமாகி; பர-இச்சயா—மற்றவர்களின் கட்டளைக்கேற்ப; கரோதி—அவர் செயல்படும் வழக்கமுடையவர்; விஷ்டித—கட்டாயத்தினால்; வேதநாத—கூலிக்காக; வா—அல்லது; யாச்னயா—இரப்பதினால்; யத்ருச்சயா—இயல்பாக; வா—அல்லது; உபஸாதிதம்—பெற்று; அல்பம்—மிகச் சிறிய அளவு; பஹு—மிகப் பெரிய அளவு; ம்ருஷ்டம்—மிகச் சுவையான; கத் அன்னம்—பழைய, சுவையற்ற உணவு; வா—அல்லது; அப்யவஹரதி—அவர் வழக்கமாக உண்பார்; பரம்—மட்டும்; ந—இல்லை; இந்திரிய-ப்ரீதி-நிமித்தம்—புலன்களின் திருப்திக்காக; நித்ய—நித்தியமாக; நிவ்ருத்த—நிறுத்துதல்; நிமித்த—பலன்தரும் செயல்கள்; ஸ்வ-ஸித்த—சுய சித்தத்தினால்; விஸுத்த—உன்னதமான; அனுபவ-ஆனந்த—ஆனந்த உணர்வு; ஸ்வ-ஆத்ம-லாப-அதிகம்—அவர் தன்னைப் பற்றிய அறிவினை எய்தினார்; ஸுக-து:கயோ:—இன்பத்திலும், துன்பத்திலும்; த்வந்த்வ-நிமித்தயோ—இருமையின் காரணங்களில்: அஸம்பாவித தேஹஅபிமான:—உடலுடன் அடையாளம் காண்பதில்லை; ஸுத—குளிர்ச்சியில்; உஷ்ண—உஷ்ணத்தில்; வாத—காற்றில்; வர்ஷேஷு—மழையில்; வ்ருஷ—ஒரு காளை மாடு; இவ—போன்று; அனாவ்ருத அங்க—திறந்த மேனியுடன்; பீன—மிக வலிமையான; ஸம்-ஹனன-அங்க:—அவரது அங்கங்கள் உறுதியானவை; ஸ்தண்டில ஸம்வேஸன—மண்ணில்படுத்து; அனுன்மர்தன—தேய்த்தல் எதுவும் இன்றி; அமஜ்ஜன—குளித்தல் இன்றி; ரஜஸா—அழுக்கினால்; மஹா மணி:—விலைமதிப்பற்ற இரத்தினம்; இவ—போன்று; அனபில்யக்த—வெளிக்காட்டாது; ப்ரஹ்ம-வர்சஸ—ஆன்மீக ஒளியினை; கு-பட-ஆவ்ருத—அழுக்கடைந்த கந்தைத் துணியால் மூடி; கடி—அவரது கோவணம்; உபவீதேன—முப்புரி நூலுடன்; உரு-மஷிணா—அது அழுக்கடைந்து அறுப்பாக இருந்தது; த்வி-ஜதி—அந்தணக் குடும்பத்தில் பிறந்தவர்; இதி—இவ்வாறு (ஏளனம் பேசுதல்); ப்ரஹ்ம-பந்து—அந்தணரின் நண்பன்; இதி—இவ்வாறு; ஸம்-ஜ்ஞயா—இது போன்ற செயல்களினால்; அ-தத்-ஜ்ஞ-ஜன—அவரது உண்மை நிலை அறியாதவர்கள்; அவமத—அவமரியாதை செய்தனர்; விசசார—அவர் அலைந்து திரிந்தார்.
இழிந்த மனிதர்கள் விலங்குகளை விடச் சிறந்தவர்கள் அல்லர். ஒரே வேறுபாடு யாதெனில் கால்கள் அவ்வளவுதான். இந்த இரண்டு கால் மிருக மனிதர்கள் மானுட பரதரை பைத்தியம், ஜடம், செவிடு, ஊமை என்றெல்லாம் கூறினார். அவரைத் துன்புறுத்தினர். அவரும் அவர்களிடம் செவிடு, ஊமை, குருடு பைத்தியக்காரனைப் போலவே நடந்து கொண்டார். அவர் அம்மனிதர்களிடம் தான் அப்படிப்பட்டவன் அல்ல என்றோ அல்லது அவர்களது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோ இல்லை. சிலர் அவர் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டுமென்று கூறினால் அவர்கள் விருப்படி அவர் செய்வார். இரப்பதினலோ அல்லது கூலியாகவோ அல்லது தானாகவோ கிடைக்கும் உணவு சிறிதளவாயினும், சுவையுடையதோ அல்லது சுவையற்றதோ, பழையதோ எதுவாயினும் ஏற்றுக்கொண்டு உண்பார். அவர் புலனுகர்ச்சிக்காக எதையும் உண்பதில்லை. ஏனெனில் ஏற்கனவே அவர் உடற் கருத்திலிருந்து விடுதலை பெற்றவர் ஆவார். உடற் கருத்தே, ஒருவனை சுவையுடைய அல்லது சுவையற்ற உணவினை ஏற்றுக் கொள்ளச் செய்யும். அவர் எப்போதும் பக்தித் தொண்டின் ஆன்மீக மெய்யுணர்வு நிரம்பப் பெற்றவராகவே இருந்தார். ஆகையினால் உடற்கருத்திலிருந்து தோன்றும் இருமைகளினால் அவர் பாதிக்கப்பட்டதே இல்லை. உண்மையில் அவரது உடல் ஒரு காளை மாட்டினைப் போல் உறுதியுடையதாகவும், அவரது அங்கங்கள் ஆண்மை மிக்கவையாகவும் இருந்தன. குளிரோ கோடையோ, காற்றோ, மழையோ அவர் எப்போதும், எந்த நேரமும் தன் உடலை மூடிக் கொண்டதே இல்லை. அவர் தரையில்தான் படுத்தார். உடலுக்கு எண்ணெய் தேய்ப்பதோ, குளிப்பதோ கிடையாது. அவரது உடல் அழுக்காக இருந்த காரணத்தினால் அவரது ஆன்மீக ஒளி மற்றும் விலைமதிப்பில்லா இரத்தினக் கல்லின் ஒளியினை அழுக்கு மூடியிருப்பதுபோல், மூடப்பட்டிருந்தன. அரையில் கோவணமும், மார்பில் அழுக்கினால் கறுப்பாகிப்போன முப்புரி நூலும் அணிந்திருந்தார். அவர் பிரம்மண குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அறிந்திருந்த மக்கள் அவரை பிரம்ம பந்து என்னும் பிற பெயர்களினாலும் அழைத்தனர். இவ்வாறு மனிதர்களின் அவமதிப்பு மற்றும் புறக்கணிப்பிற்கு ஆளாகி அவர் அங்கு மிங்கும் திரிந்து கொண்டிருந்தார்.
பதம் 5.9.11
யதா து பரத ஆஹாம் கர்ம-வேதந்த ஈகாமான: ஸ்வ-ப்ராம்ருபில்
அபி கேதார-கர்மாணி நிரூபிதஸ் தத் அபி கரோதி கிந்து ந ஸமம்
விஷமம் ந்யூனம் அதிகம் இதி வேத கண-பிண்யாக-பலீ-கரண-
குல்மாஷஸ்தாலீபுரீ-ஷாதினி அபி அம்ருதவத் அப்யவஹரதி
யதா—அப்பொழுது; து—ஆனால்; பரத—பிறரிடமிருந்து; ஆஹாரம்—உணவு; கர்ம-தேவதை:—கூலிக்காக வேலை செய்தல்; ஈஹமாண—தேடுதல்; ஸ்வ-ப்ராத்ருபி-அபி—அவரது மாற்றாந்தாய் புதல்வர்கள்; கேதார-கர்மணி—வயல்களில் வேலை பார்த்து விவசாயப் பணிகளைச் சரி செய்வது; நிரூபித—ஈடுபட்டார்; தத்-அபி—அச்சமயம் கூட; கரோதி—அவர் வழக்கமாகச் செய்தல்; கிந்து—ஆனால்; ந—இல்லை; ஸமம்—சமமாக; விஷமம்—சமமற்ற; ந்யூனம்—குறைவு; அதிகம்—அதிகமாக; இதி—இவ்வாறு; வேத—அவர் அறிந்தது; கண—நொய் அரிசி; பிண்யாக—எண்ணெய்ப் பிண்ணாக்கு; பலீ-கரண—உமி; குல்மாஷ—பூச்சி அரித்த தானியங்கள்; ஸ்தலீ-புரிஷ-ஆதினி—பானையில் உள்ள கருகிய அரிசி போன்றவை; அபி—கூட; அம்ருதவத்—அமிர்தம் போன்று; அப்யவ ஹரதி—வழக்கமாக உண்பார்.
மானுட பரதர் உணவு ஒன்றிற்காக மட்டுமே உழைத்தார். அவரது மாற்றாந்தாய் மக்கள் இதனைப் பயன்படுத்தி கொண்டு வேலை வாங்கினர். ஆனால் வயல் வெளியில் எவ்வாறு வேலை பார்ப்பது என்பது அவருக்கு உண்மையில் தெரியாது. கழிவு மண்ணை எங்கே பரப்புவது, நிலத்தை மேடாக்குவது, பள்ளமாக்குவது அல்லது நிலத்தை எங்கே சமமாக்குவது என்பது பற்றியெல்லாம் அவர் ஒன்றும் அறியார். அவர் சகோதரர்கள் அவருக்கு நொய்யரிசி, எண்ணெய் பிண்ணாக்கு, புழுத்த அரிசி, பானையில் இருக்கும் கருகிய அரிசி, உமி, போன்றவற்றை உண்பதற்குக் கொடுத்தனர். ஆயினும் அவர் அவற்றையெல்லாம் அமிர்தம் போன்று மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அவர் எந்த விரோதமும் இன்றி அனைத்தையும் மகிழ்ச்சியுடன் உண்டார்.
பதம் 5.9.12
அத கதாசித் கஸ்சித் வ்ருஷல-பதிர் பத்ர-கால்யை புருஷ-பஸும்
ஆலபதாபத்ய காம:
அத—அதன்பிறகு; கதாசித்—சில காலங்களுக்குப் பின்; கஸ்சித்—சில; வ்ருஷல-பதி—பிறர் செல்வத்தைக் கொள்ளையடிக்கும் சூத்திரர்களின் தலைவன்; பத்ர-கால்யை—பத்திரகாளி என்னும் தேவதைக்கு; புருஷ பஸும்—மனித வடிவிலிருந்த மிருகம்; ஆலபத—பலியிடுவதற்காக; அபத்ய-காம—ஒரு புதல்வனை வேண்டி.
அச்சமயம், சூத்திரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த கொள்ளைக் கூட்டத் தலைவன் ஒருவன், ஒரு புதல்வனைப் பெற வேண்டி தான் வழிபடும் பத்திரகாளிக்கு மிருகத்தை விட மேலானவனாக இல்லாத ஒரு மந்த மனிதனை பலி கொடுக்க வேண்டுமென்று விரும்பினான்.
பதம் 5.9.13
தஸ்ய ஹ தைவ-முக்தஸ்ய பஸோ: பதவீம் தத்-அனுசார:
பரிதாவந்தோ நிஸி நிஸுத-ஸமயே தமஸாவ்ருதாயாம் அனதிகத-பஸவ
ஆகஸ்மிகேன விதினா கேதாரான் வீராஸனேன ம்ருக-வராஹாதிபய:
ஸம்ரக்ஷமாணம் அங்கிர:-ப்ரவர-ஸுதம் அபஸ்யன்.
தஸ்ய—கொள்ளையர்களின் தலைவன்; ஹ—உறுதியாக; தைவ-முக்தஸ்ய—ஒரு சந்தர்ப்பத்தில் தப்பி ஓடியதினால்; பஸோ—மனித மிருகத்தின்; பதவீம்—பாதை; தத்-அனு-சரா—அவனது துணைவர்கள்; பரிதாவத்த—இங்கும் அங்கும் தேடிக் கண்டு பிடிப்பதற்கு; நிஸி—நடு நிசியில்; நிஸீத-ஸமயே—நடு இரவில்; தமஸா-ஆவ்ருதாயாம்—இருளால் மூடப்பட்டு; அனதிகதபவை:—மனித மிருகத்தைப் பிடிக்காது; ஆகஸ்மிகேன-விதினா—தெய்வத்தின் எதிர்பாராத விதியினால்; கேதாரான்—வயல்களில்; வீர-ஆஸனேன—ஒரு மேட்டில் அமர்ந்திருந்த; ம்ருக-வராஹ-ஆதிப்ய—மான், காட்டுப் பன்றி போன்றவை; ஸம்ரக்ஷமாணம்—பாதுகாத்தல்; அங்கிர-ப்ரவர-ஸுதம்—அங்கிராவின் குலத்தில் வந்த அந்தணரின் புதல்வர்கள்; அபஸ்யன்—அவர்கள் கண்டனர்.
கொள்னைக் கூட்டத் தலைவன் ஒரு மனித மிருகத்தைப் பலி கொடுப்பதற்காகப் பிடித்து வைத்திருந்தான். ஆனால் அம்மனித மிருகம் தப்பி ஓடிவிட்டது. மனித மிருகத்தைத் தேடுமாறு தனது பணியாட்களுக்கு அவன் கட்டளையிட்டான். அவர்கள் நாலா திசைகளில் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அவர்கள் இருள் மூடிய நடு இரவில் தேடிக்கொண்டே ஒரு வயல் வெளியை அடைந்தனர். அங்கே மான், காட்டுப்பன்றி வராமல் பயிர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு மேடான இடத்தில் அமர்ந்திருந்த அங்கிராவின் குடும்பத்தைச் சேர்ந்த தவப்புதல்வனை (மானுட பரதர்) அவர்கள் கண்டனர்.
பதம் 5.9.14
அத த ஏனம் அனவத்ய-லஷணம் அவம்ருஸ்ய பர்த்ரு-கர்ம-
நிஷ்பத்திம் மன்யமானா பத்த்வா ரஸனயா சண்டிகா-க்ருஹம் உபனின்யுர்
முதா விகஸித வதனா:
அத—அதன்பின்னர்; தே—அவர்கள் (கொள்ளையர்கள்); ஏனம்—இந்த (ஜட பரதர்); அனவத்ய-லஷணம்—ஒரு மந்த மிருகத்தைப் போன்றிருந்தார்; ஏனென்றால் காளை மாட்டினைப் போன்ற பருத்த உடல் மற்றும் செவிட்டு ஊமையாகவும் இருந்ததினால்; அவம்ருஸ்ய—அங்கீகரித்து; பர்த்ரு-கர்ம-நிஷ்பத்திம்—தங்களின் தலைவனின் வேளைக்குப் பொருத்தமான; மன்யமானா—புரிந்து கொண்டு; பத்த்வா—நன்றாகக் கயிற்றினால் பிணைத்து; ரஸனயா—கயிற்றினால்; சண்டிகா-க்ருஹம்—காளிதேவியின் ஆலயத்திற்கு; உபனின்யு—கொணர்ந்தனர்; முதா—மிக்க மகிழ்ச்சியுடன்; விகஸித-வதனா—மலர்ந்த முகத்துடன்.
கொள்ளையர்கள் மானுட பரதரிடம் மனித மிருகத்திற்கான அனைத்து குணங்களும் இருப்பதாகக் கருதினர். எனவே பலி கொடுப்பதற்கு இவரே சரியான தகுதியுடையவர் என்று அவர்கள் தீர்மானித்தனர். அவர்கள் முகம் மகிழ்ச்சியினால் மலர்ந்தது. அவரை ஒரு கயிற்றினால் கட்டி காளிதேவியின் கோயிலுக்குச் கொணர்ந்தனர்.
பதம் 5.9.15
அத பணயஸ் தம் ஸ்வ-விதினாபிஷிச்யா ஹதேன வாஸஸாச்சாத்ய
பூஷணாலேப-ஸ்ரக்-திலகாதிபிர் உபஸ்-க்ருதம் புக்தவந்தம் தூப-
தீபமால்ய-லாஜ-கிஸலயாங்குர-பழோபஹாரோபேதயா வைஸஸ-
ஸம்ஸ்தயா மஹதா கீத-ஸ்துதி-ம்ருதங்க பணவ-கோஷேண ச புருஷ-
பஸும் பத்ர கால்யா: புரத உபவேஸயாம் ஆஸு:
அத—அதன்பிறகு; பணய—கொள்ளையர்கள் அனைவரும்; தம்—அவரை (மானுட பரதரை); ஸ்வ-விதினா—தங்கள் சடங்கு நெறிகளுக்கேற்ப; அபிஹிச்ய—நீராட்டி; அஹதேன—புதிய; வாஸஸா—ஆடை உடுத்தி; ஆச்சாத்ய—மூடி; பூஷண—அணிகலன்கள்; ஆலேப—உடலெங்கும் சந்தனம் பூசி; ஸ்ரக்—ஒரு பூமாலை அணிவித்து; திலக-ஆதிபி—உடலெங்கும் திலகம் இட்டு; உபஸ்க்ருதம்—முற்றிலும் அலங்கரித்தனர்; புக்தவந்தம்—உண்ணச் செய்து; தூப—தூபம்; தீப—தீபம்; மால்ய—மாலை; லாக—வறுத்த தானியம்; கிஸலய—அங்குர மிலார்களும், தளிர்களும்; பழ—பழங்கள்; உபஹார—பிற பொருட்கள்; உபேதயா—முழு ஏற்பாடுகள் செய்து; வைஸஸ ஸம்ஸ்தயா—வேள்விக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளுடன்; மஹதா—சிறந்த; கீத-ஸ்துதி—கீதம் மற்றும் பிரார்த்தனைகள்; ம்ருதங்க—மிருதங்கத்தின்; பணவ—கொம்புகள் ஊதி; கோஷேண—ஒலியினால்; ச—மேலும்; புருஷ-பஸும்—மனித மிருகம்; பத்ர-கால்யா—காளிதேவி; புரத—முன்பு; உபவேஷயாம் ஆஸு—அவரை அமரச் செய்தனர்.
இதன்பிறகு திருடர்கள் அனைவரும் மனித மிருகத்தைப் பலியிடுவதற்கானத் தமது கற்பனைச் சடங்கிற்கேற்ப மானுட பரதரை நீராட்டி, புத்தாடை அணிவித்து, மிருகத்திற்குப் பொருத்தமான அணிகலன்களை அணியச் செய்து அவர் உடலெங்கும் நறுமணத் தைலம் பூசி, சந்தனம் பூசி, திலகமிட்டு, மாலை போட்டு அலங்காரம் செய்தனர். பின்னர் அவரை நன்கு உண்ணச் செய்து காளிதேவியின் முன்பு கொணர்ந்தனர். காளிதேவிக்கும் தூப தீபம் காட்டி மாலை சாற்றி, தளிர்கள், மிலார்கள், பழங்கள் பூக்களைப் படைத்தனர். பலியிடுவதற்கு முன்பு காளிதேவியை வழிபட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் பாடி, வழிபட்டு, மிருதங்கம், கொம்புகள் போன்ற இசைக் கருவிகளை இசைத்தனர். மானுட பரதரை அச்சிலையின் முன்பு அமரச் செய்தனர்.
பதம் 5.9.16
அத வ்ருஷல-ராஜ-பணி: புருஷ-பஸோர் அஸ்ருக்-ஆஸவேன
தேவீம் பத்ர-காளீம் யக்ஷயமாணஸ் தத்-அபிமந்த்ரிதம்-அஸிம் அதி-
கரால-நிஸிதம் உபாததே
அத—அதன்பிறகு; வ்ருஷல-ராஜ-பணி:—கொள்ளைக் கூட்டத் தலைவனின் பூசாரி (கொள்ளையின் ஒரு தலைவன்); புருஷ-பஸோ—பலியிடுவதற்குரிய மனித மிருகம் (பரத மன்னர்); அஸ்ருக் ஆஸவேன—இரத்தத்தினால் ஆன மது; தேவீம்—தேவிக்கு; பத்ர-காளீம்—காளிதேவி; யக்ஷயமாண—அர்ப்பணிக்க விரும்பி; தத்-அபிமந்த்ரிதம்—பத்திரகாளியின் மந்திரத்தினால் புனிதப்படுத்தி; அஸிம்—வெட்டரிவாள்; அதி-கரால—மிகவும் அஞ்சத்தக்க; நிஸிதம்—நன்கு கூர்மையான; உபாததே—அவன் எடுத்தான்.
அச்சமயம், அக்கொள்ளையர்களுள் ஒருவனான தலைமைப் பூசாரி மனித மிருகமாகத் தாங்கள் கருதும் மானுடப் பரதரின் இரத்தத்தினை மதுவாக காளிதேவிக்கு அளிப்பதற்குத் தயாரானான். அதனால் அவன் அச்சம் தரும், மிகக் கூர்மையான, பத்திரகாளியின் மந்திரத்தினால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு அரிவாளை எடுத்து மானுட பரதரை வெட்டுவதற்கு உயர்த்தினான்.
பதம் 5.9.17
இதி தோஷாம் வ்ருஷலானாம் ரஜஸ்-தம-ப்ரக்ருதீனாம் தன-
மத-ரஜஉத்ஸித்த-மனஸாம் பகவத்-கலா-வீர-குலம் கதர்தீ-க்ருத்
யோத்பதேன ஸ்வைரம் விஹ ரதாம் ஹிம்ஸா-விஹாராணம் கர்மாதி-
தாருணம் யத்ப்ரஹ்ம-பூதஸ்ய ஸாக்ஷாத் ப்ரஹ்மர்ஷி-ஸுதஸ்ய
நிர்வைரஸ்ய ஸர்வ-பூத-ஸுஹ்ருதே: ஸுனாயாம் அபி அனனுமதம்
ஆலம்பனம் தத் உபலப்ய ப்ரஹ்ம தேஜஸாதி-துர்விஷ ஹேண தன
தஹ்ய-மானேன வபுஷா ஸஹஸோச்சசாட னஸவ தேவீ பத்ர காளீ
இதி—இவ்வாறு; தேஷாம்—அவர்களின்; வ்ருஷவானாம்—சூத்திரர்கள்; அவர்களால் சமய அறநெறிகள் அழிக்கப்படுகின்றன; ரஜ—இரஜோ குணம்; தம—தமோ குணம்; ப்ரக்ருதீனாம்—இயற்கையாகவே; தன-மத—பௌதீகச் செல்வத்தினால் வசப்பட்டிருப்பவர்கள்; ரஜ—இரஜோ குணம்; உத்ஸிக்த—கர்வம் கொண்டு; மனஸாம்—அவர்கள் மனம்; பகவத்-கலா—முழுமுதற் கடவுளின் அம்ச விரிவு; வீர-குலம்—மிகச் சிறந்த மனிதர்களின் பிரிவு (அந்தணர்கள்); கத் அர்தீ க்ருத்ய—அவமரியாதை; உத்பதேன—தவறான வழியினால்; ஸ்வைரம்—சுதந்திரமாக; விஹரதம்—அவர்கள் செயல்படுவதற்கு; ஹிம்ஸா-விஹாராணாம்—அவர்கள் தொழில் பிறருக்கு எதிராக வன்முறையை பயன்படுத்துவது; கர்ம—செயல்; அதிதாருணம்—மிகவும் அஞ்சத்தக்க; யத்—அது; ப்ரஹ்ம பூதஸ்ய—அந்தணர் குடும்பத்தில் பிறந்து தன்னுணர்வு பெற்றவர்; ஸாக்ஷாத்—நேரடியாக; ப்ரஹ்ம-ருஷிதஸ்ய—ஆன்மீக உணர்வில் மேன்மை மிக்க அந்தணருக்குப் பிறந்த மைத்தரின்; நிர்வைரஸ்ய—எதிரிகள் இல்லாதவர்; ஸர்வ-பூத-ஸுஹ்ருத—அனைவரின் நலன் விரும்புபவர்; ஸுனாயாம்—கடைசி நேரத்தில்; அபி—இருந்த போதிலும்; அனனுமதம்—சட்டத்தினால் அனுமதிக்கப்படாத; ஆலம்பனம்—பகவானின் விருப்பத்திற்கெதிராக; தத்—அந்த; உவலப்ய——உணர்ந்து; ப்ரஹ்ம-தேஜஸா—ஆன்மீக ஆனந்தத்தின் ஒளியுடன்; அதி-துர்விஷ ஹேண—கண்ணைக் கூசச் செய்யும் ஏராளமான ஒளியுடன்; தந்தஹ்யமாணே—ஒளிர்கின்ற; வபுஷா——உடலுடன்; ஸஹஸா—திடீரென்று; உச்சாட—உடைந்து (சிலை); ஸா—அவன்; ஏவ—உண்மையில்; தேவீ—தேவி; பத்ர-காளீ—பத்திரகாளி.
காளிதேவியை வழிபடுவதற்கு வந்த அனைத்துக் கயவர்களும், திருடர்களும் இழிகுணமுடையவர்கள் என்பதோடு இரஜோ மற்றும் தமோ குணத்தினால் பிணிக்கப்பட்டவர்களுமாவர். அவர்கள் செல்வந்தர்களாகும் ஆசையினால் பாதிக்கப்பட்டவர்கள். வேதக்கட்டளைகளுக்குப் பணியக் கூடாது என்னும் உறுதியோடு இருப்பவர்கள். எனவேதான் அந்தண குடும்பத்தில் பிறந்து தன்னுணர்வு பெற்ற ஜட பரதரையேக் கொல்வதற்குத் தயாராக அவர்கள் இருந்தனர். அவர்களது துஷ்டத்தனத்தினாலேயே அவர்கள் மானுட பரதரைக் காளிதேவியின் முன்பு பலியிடுவதற்காகக் கொண்டு வந்தனர். இம்மனிதர்கள் எப்போதும் தீய செயல்களிலேயே பற்றுடையவர்களாவர். எனவேதான் அவர்கள் மானுட பரதனையே கொல்வதற்கு முயற்சித்தனர். பரதர் உயிர்கள் அனைவரின் மிகச் சிறந்த நண்பராவார். அவருக்கு எதிரி என யாருமிலர். அவர் எப்போதும் முழுமுதற் கடவுளைப் பற்றியே சிந்திப்பார். அவர் ஒரு நல்ல அந்தணரின் மகனாகப் பிறந்ததினால் அவர் பகைவராக இருந்தாலும் மோசமானவராக இருந்தபோதிலும் கூட அவரைக் கொல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது. மானுட பரதரைக் கொல்வதற்கு எந்தக் காரணமுமில்லை. அதனால் காளிதேவியினால் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இத்தீயக் கொள்ளையர்கள் பகவானின் மிகச் சிறந்த பக்தனைக் கொல்லப் போகின்றனர் என்பதைக் காளியால் புரிந்துகொள்ள முடிந்தது, திடீரென்று காளிதேவியின் சிலை இரண்டாகப் பிளந்தது. அதனுள்ளிருந்து தாங்க முடியாத கண்ணைக் கூசச் செய்யும் ஒளியுடன் காளிதேவி வெளிப்பட்டாள்.
பதம் 5.9.18
ப்ருஸம் அமர்ஷ-ரோஷாவேஸ-ரஸப-விலஸித-ப்ரு-குடி-விடப
குடில தம்ஷ்ட்ராருணேக்ஷணாடோபாதி-பயானக-வதனா ஹந்து-காம
வேதம் மஹாட்ட- ஹாஸாம் அதி-ஸம்ரம்பேண விழுஞ்சந்தீ தத உத்பத்ய
பாபீயஸாம் துஷ்டானாம்தேனைவா-ஸினா விவ்ருக்ண-ஸீர்ஷ்ணாம்
கலாத் ஸ்ரவந்தம் அஸ்ருக்-ஆஸவம் அத்யுஷ்ணம் ஸஹ கணேன
நிபீயாதி-பான-மத-விஹ்வலோச்சைஸ்தராம் ஸ்வபார் ஷதை: ஸஹ
ஜகௌ நனர்த ச விஜஹார ச ஸிர:-கந்துக லீலயா
ப்ருஸம்—மிகவுயர்ந்த; அமர்ஷ—குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளாது; ரோஷ—சினத்தில்; ஆவேஸ—ஆவேசமாக; ரபஸ-விலஸித—சக்தியினால் விரிந்த; ப்ரு-குடி—அவனது புருவங்களின்; விடப—பிரிவுகள்; குடில—வளைந்த; தம்ஷ்ட்ர—பற்கள்; அருண ஈஷண—சிவந்த விழிகள்; ஆடோப—கொந்தளிப்பினால்; அதி—அதிகமாக; பயானக—அச்சந்தரும்; வதனா—முகமுடையவள்; ஹந்து-காமா—அழிப்பதற்கான விருப்பம்; இவ—போன்று; இதம்—இப்பிரபஞ்சம்; மஹா-கட்ட-ஹாஸம்—அச்சந்தரும் அட்டகாசமானச் சிரிப்புடன்; அதி—அதிகமான; ஸம்ரம்பேண—கோபத்தின் காரணமாக; விழுஞ்சந்தீ—விடுவித்து; தத—அப்பலிபீடத்திலிருந்து; உத்பத்ய—முன்வந்து; பாபீயஸாம்—அனைத்துப் பாவங்கள்; துஷ்டானாம்—துஷ்டர்கள்; தேன ஏவ அஸினா—அதே வெட்டரிவாளினால்; விவ்ருக்ண—தனியே பிரித்தல்; ஸீர்ஷ்ணாம்—அவர்கள் தலைகளை; கலாத்—கழுத்திலிருந்து; ஸ்ரவந்தம்—பொங்கிவரும்; அஸ்ருக் ஆஸவம்—இரத்தம்; மதுவோடு ஒப்பிடப்பட்டிருக்கிறது; அதி-உஷ்ணம்—மிகவும் சூடான; ஸஹ—உடன்; கணேன—அவனது உதவியாளர்கள்; நிபீய—குடித்து; அதிபான—அதிகமாகக் குடித்து; மத—வெறியினால்; விஹ்வலா—மூழ்கித் திளைத்தனர்; உச்சை-தராம்—மிகவும் ஒசையுடன்; ஸ்வ-பார்ஷதை—அவனது உதவியாளர்கள்; ஸஹ—உடன்; ஜகௌ—பாடினார்; நனர்த—ஆடினர்; ச—மேலும்; விஜஹார—விளையாடினர்; ச—மேலும்; ஸிர-கந்துக—தலைகளைப் பந்தாகப் பயன்படுத்தி; லீலயா—விளையாடினர்.
செய்த குற்றங்களைத் தாங்கமுடியாது சீற்றங்கொண்ட காளிதேவி தனது ஒளிமிக்க கண்களையும், வளைந்த கூர்மையான பற்களையும் வெளிப்படுத்தினாள். அவளது சிவந்த விழிகள் தீப்பந்தம் போல் எரிந்தன. தனது அச்சந்தரும் வடிவத்தோடு இப்பிரபஞ்சத்தையே அழித்துவிடுவதற்கு ஏற்ற உடலோடு அவள் தோன்றினாள். பீடத்திலிருந்து ஆவேசமாகப் பாய்ந்து, அவர்கள் மானுட பரதனைக் கொல்வதற்காக வைத்திருந்த அதே வெட்டரிவாளால் துஷ்டர்களையும், திருடர்களையும் கொன்று குவித்தாள். தலை துண்டிக்கப்பட்ட உடல்களிலிருந்து பொங்கி வரும் உதிரத்தை மதுவெனக் கருதி சூனியக்காரிகள் மற்றும் பெண் பேய்களான தனது உதவியாளர்களுடன் சேர்ந்தே பருகினாள். உதிரம் குடித்த வெறியில், இப்பிரபஞ்சத்தையே அழிப்பதற்குத் தயாராக இருப்பது போன்ற உரத்த குரலில் திருடர்களின் துண்டிக்கப்பட்ட தலைகளை பந்தைப் போல் உயரே தூக்கி எறிந்து விளையாடவும் தொடங்கினர்.
பதம் 5.9.19
ஏவம் ஏவ கலு மஹத்-அபிசாரதி க்ரம கார்த்ஸ்ன்யே-னாத்மனே பலதி.
ஏவம் ஏவ—இவ்வழியே; கலு—உண்மையில்; மஹத்—உயர்ந்த மகான்களுக்கு; அபிசார—துவேஷம் என்னும் வடிவில்; அதி-க்ரம—குற்றத்தின் வரையரை; கார்த்ஸ்ன்யேன—எப்போதும்; ஆத்மன—ஒருவன் தனக்கு; பலதி—இப்பலனை அளிக்கும்.
ஓர் உயர்ந்த மகானுக்கு எதிராக விரோத உணர்வுடைய ஒருவன் குற்றம் இழைக்கும்பொழுது மேலே குறிப்பிட்டுள்ளபடி எப்போதும் தண்டிக்கப்படுகிறான்.
பதம் 5.9.20
ந வா ஏதத் விஷ்ணுதத்த மஹத்-அத்புதம் யத் அஸம்ப்ரம:
ஸ்வ-ஸிரஸ்சேதன ஆபிதிருத ‘பி விமுக்த-தேஹாதி-ஆத்ம-பாவ-
ஸுத்டே-ஹ்ருதய க்ரந்தீனாம் ஸர்வ-ஸத்த்வ-ஸுஹ்ருத்-ஆத்மனாம்
நிர்வைராணாம் ஸாக்ஷாத் பகவதானி மிஷாரி-வராயுதேனாப்ரமத்தேன
தஸ் தர் பாவை: பரிரக்ஷ்யமாணானாம் தத்-பாத-மூலம் அருதஸ்சித்-
பயம் உபஸ்தோனாம் பாகவத-பரமஹம்ஸானாம்
ந—இல்லை; வா—அல்லது; ஏதத்—இந்த; விஷ்ணு தத்த—பகவான் விஷ்ணுவினால் பாதுகாக்கப்படும் ஒ, மகாராஜா பரீட்சித்துவே; மஹத்—உயர்ந்த; அத்புதம்—அற்புதம்; யத்—அது; அஸம்ப்ரம—குழப்பமின்மை; ஸ்வ-ஸிர-சேதனே—தலையினைத் துண்டிக்கும்பொழுது; ஆபதிதே—அவ்வாறு நிகழ்தல்; அபி—இருந்தபோதிலும்; விமுக்த—இருந்து முற்றிலும் விடுதலை; தேஹ-ஆதி-ஆத்ம-பவ—தவறான உடல் கருத்துடைய வாழ்க்கை; ஸு-த்ருட—வலிமை மற்றும் இறுக்கமாக; ஹ்ருதய க்ரந்தீனாம்—இதயத்தினுள் முடிச்சு போடப்பட்டிருப்பவர்கள்; ஸர்வ-ஸத்த்வ-ஸுஹ்ருத்-ஆத்மனாம்—அனைத்து உயிர்வாழிகளின் நலத்தையும் தங்கள் இதயங்களில் விரும்புவோர்; பகவதா—முழுமுதற்கடவுளின்; அனிமிஷ—கண்ணுக்குப் புலனாகா காலம்; அரி-வர—ஆயுதங்களின் சிறந்த சுதர்சனச் சக்கரம்; ஆயுதேன—இவ்வாயுதத்தினை வைத்திருப்பவரின்; அப்ரமத்தேன—எந்த நேரத்திலும் கிளர்ச்சியடைவதில்லை; தை:தை:—தனித்தனி உரிமைப்படி; பாவை—முழுமுதற் கடவுளின் மனநிலை; பரிரக்ஷத்யமாணானாம்—பாதுகாக்கப்பட்ட மனிதர்களின்; தத்-பாத-மூலம்—முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளிடத்து; அகு-தஸ்கித்—எவ்விடத்திலுமின்றி; பயம்—பயம்; உபஸ்தேனாம்—முற்றிலும் சரணடைந்தவர்களின்; பாகவத—பகவானின் பக்தர்கள்; பரம-ஹம்ஸானாம்—முக்தியடைந்த உயர்ந்த மகான்களின்.
சுகதேவ கோஸ்வாமி பின்னர் பரீட்சித்து மன்னரிடம் கூறினார் ஒ, விஷ்ணு தத்தனே, உடலிலிருந்து ஆத்மா வேறுபட்டது என்பதை முன்னமையே அறிந்தவர்களும், தங்கள் இதயத்தின் ஆழ்ந்த பிடிப்பிலிருந்து விடுதலை பெற்றவர்களும், எப்போதும் அனைத்து உயிர்களின் நலனில் ஈடுபடுபவர்களும் ஒருவருக்கும் சிறிதும் துன்பம் இழைக்காதவர்களும் இறைவனால் காக்கப்படுவர். அவரே தமது கரத்தில் சுதர்சனச் சக்கரம் ஏந்தி, துஷ்டர்களை அழித்துப் பக்தர்கனைக் காப்பதில் நெடுங்காலமாகச் செயல்படும் முழுமுதற் கடவுள் ஆவார். பக்தர்கள் எப்போதும் பகவானின் தாமரைத் திருவடிகளையே சரணடைகின்றனர். ஆகையினால் அவர்கள், தங்கள் தலை துண்டிக்கப்படப் போவதாக அச்சுறுத்தப்படினும், எல்லாக் காலங்களிலும் அமைதியுடனேயே இருக்கின்றனர். அவர்களுக்கு இவையெல்லாம் ஒன்றும் ஆச்சரியமானதல்ல.
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “மானுடப் பிறப்பில் பரதரின் சிறந்த இயல்புகள்” எனும் தலைப்பை கொண்ட ஒன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.