அத்தியாயம் – 7
பரத மன்னரின் செயல்கள்
பதம் 5.7.1 : பரீட்சித்து மன்னரிடம் சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் அன்பார்ந்த மன்னனே! பரத மகாராஜா ஓர் சிறந்த பக்தர். தன்னை அரியணையில் அமர்த்தத் தீர்மானித்த தன் தந்தையின் கட்டளைகளைப் பின்பற்றி அவர் இவ்வுலகினை ஆட்சி செய்யத் தொடங்கினார். பரத மகாராஜா அவ்வுலகினை ஆண்டபொழுது தன் தந்தையின் கட்டளைக்கிணங்க நடந்து கொண்டதோடு விஸ்வரூபனின் மகள் பஞ்சஜனீ என்பவளையும் மணம் புரிந்து கொண்டார்.
பதம் 5.7.2 : வீண் ஆணவம் சூட்சுமப் புலனுகர்ச்சிப் பொருட்களை உருவாக்குவதுபோல் மகாராஜா பரதன் தன் மனைவி பஞ்சஜனீயின் வயிற்றிலிருந்து ஐந்து புதல்வர்களைப் பெற்றெடுத்தார். இப்புதல்வர்களின் பெயர்கள் சுமதி, ராஷ்ட்ரப்ரதன், சுதர்ஸனன், ஆவரணன், மற்றும் தூம்ரகேது என்பவை.
பதம் 5.7.3 : முற்காலத்தில் இப்பூமி அஜநாப வர்ஷம் எனப்பட்டது. பின் பரத மன்னர் காலந்தொட்டு அது பாரத வர்ஷம் எனப்படுகிறது.
பதம் 5.7.4 : பரத மன்னர் இப்பூமியில் கல்வி கற்ற அறிஞராகவும் அனுபவம் மிக்க அரசராகவும் விளங்கினார். அவர் தனக்குரிய அறச்செயல்களைச் செய்து கொண்டு குடிமக்களை நன்முறையில் ஆட்சி செய்தார். தனது தந்தை மற்றும் தாத்தாவைப் போன்று குடிமக்கள் மீது மிக்க அன்புடையவராகவும் விளங்கினார். குடிமக்களையும் அறச் செயல்களில் ஈடுபடுத்தி அவர் இப்பூவியினை ஆட்சி செய்தார்.
பதம் 5.7.5 : முழு நம்பிக்கையுடன் பரத மன்னர் பல்வேறு வகையான வேள்விகளைச் செய்தார். அவர் அக்னி ஹோத்ரம், தர்ஷம், பூர்ணமாஸம், சாதுர் மாஸ்யம், பஸு யக்ஞம் (இதில் ஒரு குதிரை பலியிடப்படுகிறது); மற்றும் ஸோம யக்ஞம் (இதில் ஒருவகையான மதுபானம் அர்ப்பணிக்கப்படுகிறது). இவ்வேள்விகள் சில நேரங்களில் முழுமையாகவும் சில நேரங்களில் ஒரு பகுதி மட்டும் செய்யப்படுகின்றன. எனினும் அனைத்து வேள்விகளிலும் சாதுர் ஹோத்ரம் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு பரத மகாராஜா முழுமுதற் கடவுளை வழிபட்டு வந்தார்.
பதம் 5.7.6 : பல்வேறு வேள்விகளுக்கானச் சடங்குகள் அனைத்தையும் செய்து, பரத மன்னர் அறத்தின் பெயரால் அவற்றின் பலன்களை முழுமுதற் கடவுளுக்குப் படைத்தார் அல்லது வாசுதேவ கிருஷ்ணருக்கே அர்ப்பணித்தார் என்றும் கூறலாம். தேவர்கள் வாசுதேவரின் உடலின் பல்வேறு பாகங்கள் ஆகையினால் தேவ மந்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அவர்களை வாசுதேவரே கட்டுப்படுத்துகிறார். இவ்வாறு எண்ணியதினால் பரத மகாராஜா பற்று, காம, குரோதம் போன்ற மாசுக்களில் இருந்தும் விடுதலை பெற்றார். புரோகிதர்கள் வேள்வித் தீயில் அவிர்பாகங்களை அர்ப்பணிக்கும் பொழுது, பரத மகாராஜா, பல்வேறு தேவர்களுக்கும் அர்ப்பணிக்கப்படும் அந்த அவிர் பாகங்கள் உண்மையில் பகவானின் உடலின் பல்வேறு பாகங்களுக்கு எவ்வாறு அர்ப்பணிக்கப்படுகிறது என்று தேர்ந்த ஞானத்துடன் புரிந்து கொண்டார். சான்றாக இந்திரன் முழுமுதற் கடவுளின் கரமாக இருக்கிறான். சூரியன் அவரது விழிகளாக விளங்குகிறான். இவ்வாறு பரத மகாராஜா பல்வேறு தேவர்களுக்கும் வேள்வியில் அளிக்கப்படும் அவிர்பாகம் உண்மையில் பகவான் வாசுதேவரின் பல்வேறு அங்கங்களுக்கே அளிக்கப்படுகின்றது என்று கருதினார்.
பதம் 5.7.7 : இவ்வாறு வேள்விச் சடங்குகளினால் தூய்மை பெற்றவராக விளங்கிய பரத மகாராஜாவின் மனம் முற்றிலும் மாசற்றதாக இருந்தது. பகவான் வாசுதேவ கிருஷ்ணருக்கான அவரது பக்தித் தொண்டு நாள்தோறும் வளர்ந்து கொண்டே இருந்தது. வசுதேவரின் மைந்தனரான பகவான் கிருஷ்ணரே ஆதி முழுமுதற் கடவுளாகவும், பரமாத்மாவாகவும், பரப்பிரம்மமாகவும் இருக்கின்றார். யோகிகள் இதயத்தில் வீற்றிருக்கும் பரமாத்மாவை தியானிக்கின்றனர். ஞானியர் பரம மெய்ப்பொருளாக அருவப்பிரம்மத்தை வழிபடுகின்றனர். அவரது உன்னத உடல் பற்றி சாத்திரங்களில் விளக்கப்பட்டிருக்கின்றது. அவரது உடல் ஸ்ரீ வத்ஸ சின்னம். கௌத்துப மணி மற்றும் மலர் மாலையினால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அவரது கரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலர் இருக்கின்றன. நாரதர் போன்ற பக்தர்கள் எப்போதும் அவரைத் தமது இதயத்தில் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
பதம் 5.7.8 : மகாராஜா பரதர் உலகச் செல்வங்களைப் பத்தாயிரம் வருடங்கள் ஆயிரம் மடங்கு அனுபவித்து மகிழ வேண்டும் என்பது விதி நிர்ணயித்தக் காலமாகும். அக்காலக் கெடு முடிந்தவுடன் அவர் குடும்ப வாழ்க்கையிலிருந்து ஒய்வு பெற்று தனது முன்னோர்களிடமிருந்து பெற்றச் செல்வத்தை தன் மைந்தர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அனைத்துச் செல்வங்களுக்கும் உறைவிடமாகத் திகழ்ந்த தன் பிறந்த வீட்டைத் துறந்து ஹரித்துவாரத்தில் உள்ள புலஹாஸ்ரமம் என்னும் இடத்திற்கு அவர் புறப்பட்டுச் சென்றார். அங்குதான் சாளக்ரம சிலைகள் கிடைக்கின்றன.
பதம் 5.7.9 : புலஹாஸ்ரமத்தில் முழுமுதற் கடவுளான ஹரி, தனது பக்தர்களின் மீது கொண்ட அன்பின் காரணத்தினால், தனது பக்தனுக்குக் காட்சி தந்து, அப்பக்தனின் விருப்பத்தினை நிறைவேற்றுகின்றார்.
பதம் 5.7.10 : புலஹ—ஆஸ்ரமத்தில், எல்லாநதிகளிலும் சிறந்த கண்டகீ நதி ஒடிக் கொண்டிருக்கின்றது. சாளக்கிரம சிலைகள் என்னும் படிக்கற்கள் அந்த இடம் முழுவதையும் புனிதப்படுத்தகின்றன. ஒவ்வொரு படிக்கல்லிலும் உந்திச் சுழியினைப் போன்ற வளைந்த கோடுகள் காணப்படுகின்றன.
பதம் 5.7.11 : புலஹ ஆஸ்ரமத்திலுள்ள நந்தவனத்தில் பரத மன்னர் பல்வேறு வண்ண மலர்கள் துளசி இலைகள் காம்புகள் போன்றவற்றைச் சேகரித்துக் கொண்டு தனியே வாழ்ந்து வந்தார். அவர் மேலும் கண்டகீ நதியின் நீர், பல்வேறு வகையான வேர்கள், கிழங்குகள் போன்றவற்றையும் சேகரித்தார். இவற்றையெல்லாம் அவர் முழு முதற் கடவுளான வாசுதேவருக்கு உணவாகப் படைத்து அவரை வழிபட்டுத் திருப்திடைந்தார். இவ்வழியே அவரது இதயம் முற்றிலும் துளியளவு ஆசைகூட இல்லாதிருந்தது. எல்லாவிதமான ஆசைகளும் மறைந்தொழிந்தன. இந்த உறுதியான நிலையில் அவர் முழுத்திருப்தியடைந்து பக்தித் தொண்டில் நிலைபெற்றிருந்தார்.
பதம் 5.7.12 : மிகவும் உயர்ந்த பக்தரான பரத மன்னர் இவ்வாறு தொடர்ந்து பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபட்டு வந்தார். இயற்கையாகவே வாசுதேவ கிருஷ்ணர் மீது அவர் வைத்திருந்த அன்பு மேலும் மேலும் அதிகரித்தது. அதனால் அவர் இதயம் உருகியது. இதனைத் தொடர்ந்து அவர் படிப்படியாக ஒழுங்குமுறை விதிக்குட்பட்ட அறத்தின் மீதான அனைத்துப் பற்றுக்களையும் இழந்தார். அவர் உடலில் மயிர்க்கூச்செறிந்து மெய்ம்மறத்தலினால் உண்டாகும் அடையாளங்கள் உடலெங்கும் தோன்றின. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகப் பெருக்கெடுத்ததினால் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. அச்சமயம் அவரது இதயம் என்னும் குளம் தன்னை மறந்த அன்பு வெள்ளத்தினால் நிரம்பியிருந்தது. அவரது மனம் அக்குணத்தினுள் மூழ்கி இருந்ததினால் அவர் பகவானுக்குச் செய்யும் ஒழுங்குமுறைத் தொண்டினைக் கூட மறந்திருந்தார்.
பதம் 5.7.13 : பரத மன்னர் மிகவும் அழகாகக் காட்சியளித்தார். அவரது தலைமுடி சுருண்டு அலை அலையாக இருந்தது. தினமும் மும்முரை நீராடியதினால் அது ஈரமாகவும் இருந்தது. அவர் மான் தோலினாலான ஆடை அணிந்திருந்தார். அவர் பகவான் நாராயணரை வழிபட்டார். அவரது உடல் பொன்னொளி வீசியது. அவர் சூரிய மண்டலத்தில் இருந்தார். பரத மகாராஜா பகவான் நாராயணரை ரிக்வேத மந்திரங்களினால் துதித்தார். அவர் சூரிய உதயத்தில் பின்வரும் சுலோகத்தினை ஓதினார்.
பதம் 5.7.14 : “முழுமுதற்கடவுள் தூய சத்துவக் குணத்தில் வீற்றிருக்கின்றார். அவர் இப்பிரபஞ்சம் முழுவதையும் ஒளிமயமாக்கித் தனது பக்தர்களுக்கு அனைத்து நல்வரங்களையும் அருள்கின்றார். பகவான் இப்பிரபஞ்சத்தினை அவரது ஆன்மீகச் சக்தியிலிருந்தே உருவாக்கினார். பகவான் தனது விருப்பத்திற்கேற்ப பரமாத்மாவாக இப்பிரபஞ்சத்தினுள் புகுந்தார். மேலும் அவர் தனது பல்வேறு சக்திகளின் ஆற்றலினால் அவர் உலக இன்பம் நாடும் அனைத்து உயிர்களையும் காக்கின்றார். நற்புத்தியளிக்கும் பகவானுக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிப்பேனாக.