அத்தியாயம் – 5
ரிஷபர் தமது மைந்தர்களுக்கு அருளிய உபதேசங்கள்
பதம் 5.5.1 : பகவான் ரிஷப தேவர் தன் மைந்தர்களிடம் கூறினார் அன்பு மைந்தர்களே! பல உடல்களைப் பெற்றிருக்கும் இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களிலும், மனித உடல் பெற்றவன் கேவலமான புலனுகர்ச்சிக்காக இரவும் பகலும் கிடந்து கடினமாக உழைக்கக்கூடாது. இப்புலனுகர்ச்சி மலத்தைத் தின்னும் நாய்களுக்கும், பன்றிகளுக்கும் கூட இருப்பதே. பக்தித் தொண்டின் தெய்வீக நிலையினை அடைவதற்காக ஒருவன் தவத்திலும், துறவு நெறிகளிலும் ஈடுபட வேண்டும். இச் செயல்களினால் ஒருவனது உள்ளம் தூய்மையடைகிறது. மேலும் ஒருவன் இந்நிலையினை அடையும்பொழுது அவன் பௌதிக இன்பத்திற்கு மேலானதும் என்றும் தொடர்ந்திருப்பதுமாகிய நிரந்தரமான ஆனந்த வாழ்வினை எய்துகிறான்.
பதம் 5.5.2 : உலகப் பிடிப்பிலிருந்து ஆன்மீகத்தில் உயர்வு பெற்ற மகான்களுக்குத் தொண்டு செய்வதின் மூலமே விடுதலைக்கானப் பாதையினை ஒருவன் அடைய முடியும். இம் மகான்கள் அருவவாதிகள் மற்றும் பக்தர்கள் ஆவர். பகவானது தோற்றத்தில், தான் இணைய வேண்டுமென்று ஒருவன் விரும்பினாலோ அல்லது முழுமுதற் கடவுளுடன் தொடர்பு கொள்ள விரும்பினாலோ, அவன் மகாத்மாக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். இச்செயலில் ஆர்வமின்றி பெண்கள் மற்றும் பாலியல் விருப்பமுடையோர்க்கு நரகத்தின் பாதை அகலமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மகாத்மாக்கள் சம நோக்குடையவர்களாகவும், பக்தித் தொண்டில் முற்றிலும் ஈடுபட்டவர்களாகவும், அவர்கள் சினத்தினைத் தவிர்த்து அனைவரின் நலனுக்காக உழைப்பவர்களுமாவர். அவர்கள் பிறர் வெறுக்கத் தக்க முறையில் நடப்பதும் இல்லை. இப்படிப்பட்டவர்களே மகாத்மாக்கள் ஆவர்.
பதம் 5.5.3 : கிருஷ்ண சிந்தனையைப் புதுப்பித்துக் கொள்வதில் ஆர்வமும் முழுமுதற் கடவுளின் மீது பேரன்பும் உடையவர்கள் கிருஷ்ணருடன் தொடர்பில்லாத எதனையும் செய்ய விரும்புவதில்லை. உண்பது, உறங்குவது, புணர்வது, தற்காத்துக் கொள்வது மூலம் உடலைப் பேணுபவர்களுடன் அவர்கள் கலந்துறவாடுவதில்லை. இல்லறவாசிகளாக இருப்பினும், குடும்பத்தின் மீதும், மனைவி, மக்கள், செல்வம், நண்பர் என்று எவர் மீதும் பற்று வைப்பதில்லை. ஆயினும் தங்கள் கடமைகளை ஆற்றுவதில் எந்தவிதமான எந்தவிதமான வேறுபாடும் காட்டுவதில்லை. உடல் ஆத்மா எனும் இவையிரண்டினையும் காத்துக் கொள்வதற்கு மட்டுமே அவர்கள் பொருள் ஈட்டுவர்.
பதம் 5.5.4 : புலன் நுகர்ச்சியே வாழ்க்கை லட்சியம் என்று ஒருவன் கருதும் பொழுது அவன் நிச்சயம் மானுட வாழ்வில் வெறியுடையவனாகி பல்வேறு பாவச் செயல்களில் ஈடுபடுகிறான். முன்வினைப் பயனால் அழியக் கூடியதாக இருப்பினும், தான் பெற்றிருக்கும் உடலே தனது துன்பத்திற்குக் காரணம் என்பதை அவன் அறிவதில்லை. உண்மையில் ஒர் உயிர் பரு உடலினை எய்தக் கூடாது. ஆயினும் புலனுகர்ச்சிக்காக அவனுக்குப் பரு உடல் அளிக்கப்படுகிறது. ஆகையினால் பிறவிகள் தோறும் உடல்களை மாறி மாறித் தரவல்ல புலனுகர்ச்சிச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது ஒரு புத்திமானுக்குப் பொருந்தாது என்று நான் கருதுகிறேன்.
பதம் 5.5.5 : வாழ்வின் ஆன்மீக மதிப்புக்களைப் பற்றி ஒருவன் கேட்டு அறியாத வகையில் தோற்கடிக்கப்பட்டு அறியாமையிலிருந்து வரும் துன்பங்களுக்கு ஆளாகிறான். அது பாவமோ, புண்ணியமோ கர்மத்திற்கென்று உரிய பலன்கள் உண்டு. கர்மத்தில் ஈடுபடும் பொழுது ஒருவன் மனம் கர்மாத்மகம் எனப்படுகிறது. இதன் பொருள் பலன் தரும் செயலின் கறையுடையது என்பதாகும். மனம் அழுக்காக இருக்கும்வரை உணர்வு தெளிவாக இருக்காது. பலன் தரும் செயலில் ஒருவன் அமிழ்ந்திருக்கும் வரை அவன் ஒரு பரு உடலினை ஏற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது.
பதம் 5.5.6 : உயிரானது அறியாமை என்னும் தமோ குணத்தினால் மூடப்படும்பொழுது அவன் தனிப்பட்ட உயிர் அல்லது பரம உயிரைப் பற்றி அறிந்து கொள்ளாததோடு அவன் மனமும் பலன் தரும் செயலின் வசப்படுகிறது. ஆகையினால் என்னையன்றி வேறு யாருமில்லாத பகவான் வாசுதேவர் மீது ஒருவன் அன்பு கொள்ளாத வரை அவன் மீண்டும் பரு உடல்களை ஏற்றுக்கொள்வதிலிருந்து விடுதலை பெறுவதில்லை.
பதம் 5.5.7 : ஒருவன் கற்று அறிவுடையவனாக இருப்பினும், புலனுகர்ச்சிக்கான முயற்சி பயனற்றது என்பதை அறிந்து கொள்ளவில்லையென்றால் அவன் புத்தி இல்லாதவனேயாவான். வாழ்க்கையின் துன்பங்களுக்குக் காரணமானதும், பாலியல் உறவினை அடிப்படையாககக் கொண்டதுமான தன் குடும்பத்தின் மீது பற்றுடையவனாகி, உலகியல் மகிழ்ச்சி பெற முயல்கிறான். அந்நிலையில் அவன் மூட விலங்கினைக் காட்டிலும் கீழானவனே ஆவான்.
பதம் 5.5.8 : ஆண், பெண் இருவருக்கும் இடையில் இருக்கும் கவர்ச்சியே உலக வாழ்வின் அடிப்படைக் கொள்கையாக உள்ளது. இவ்வாறு ஆண், பெண் இதயங்களை இணைக்கும் இத்தவறான கருத்தின் அடிப்படையில்தான் ஒருவன் தனது உடல், குடும்பம், ஆஸ்தி, குழந்தை, சுற்றம், செல்வம் என்பவற்றின் மீது கவர்ச்சியுடையவனாகிறான். இவ்வாறு இப்படி ஒருவன் வாழ்க்கையின் மீதான மோகத்தினை அதிகரித்துக் கொள்வதோடு “நான்” மற்றும் “எனது” என்றே எப்போதும் சிந்திக்கிறான்.
பதம் 5.5.9 : முன்வினைப் பயனால் உலக வாழ்வில் சிக்கிக் கொண்டவனுடைய இதயம் தளர்ச்சியடையும் பொழுது அவனது மனைவி, மக்கள், குடும்பம் என்பவற்றின் மீதான பற்றிலிருந்து திசை மாறுகிறான். இவ்வழியே அவன் மாயையின் அடிப்படைக் கொள்கையினை (“நான்” “எனது”) துறந்து விடுதலை பெறுகிறான். இவ்வாறு ஒருவன் மனவாசகம் கடந்த உலகிற்குச் செல்கிறான்.
பதங்கள் 5.5.10 – 5.5.13 : ஓ, எந்தன் மைந்தர்களே! நீங்கள் மேன்மை மிக்க ஆன்மீக குரு ஒருவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நீங்கள், முழுமுதற் கடவுளான என்னிடத்தில் உங்கள் நம்பிக்கை மற்றும் அன்பினை வைத்தல் வேண்டும். புலனுகர்ச்சியை விட்டுவிட்டு, மழை, வெயில் என்பதான பருவமாற்றங்களைப் போன்ற இன்ப, துன்பம் என்னும் இருமை மயக்கத்தினைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். உயிர்களின் துன்ப நிலைக்கான காரணத்தை அறிந்து கொள்ள முயலுங்கள். அவர்கள் தேவ லோகத்தில் கூடத் துன்பம் அனுபவிக்கின்றனர். உண்மையினைப் பற்றித் தத்துவார்த்தமாக வினவுங்கள். பின்னர் பக்தித் தொண்டின் பொருட்டு அனைத்து வகையான தவங்களையும், துறவறங்களையும் மேற்கொள்ளுங்கள். புலனின்பத்திற்கான முயற்சிகளைக் கைவிட்டு பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுங்கள். முழுமுதற் கடவுளைப் பற்றியக் கலந்துரையாடல்களைக் கவனமாகக் கேளுங்கள். எப்போதும் பக்தர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். பரம புருஷ பகவானைப் பற்றி ஓதுங்கள், புகழுங்கள். ஆன்மீக உணர்வு நிலையில் அனைவரையும் சமமாக நோக்குங்கள். பகைமையினை விட்டொழியுங்கள். சினத்தையும், துக்கத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள். தன்னை உடலுடனும், குடும்பத்துடனும் அடையாளம் காண்பதைத் தவிருங்கள். வேதசாத்திரங்களைக் கற்பதில் பயிற்சி பெறுங்கள். தனிமையான இடத்தில் வாழ்ந்து உங்களது உயிர், மூச்சு, மனம், புலன்களைக் கட்டுப்படுத்தும் முறையினைப் பயிற்சி செய்யுங்கள். வேத இலக்கியங்களிலும், சாத்திரங்களிலும் முழு நம்பிக்கை வையுங்கள். எப்போதும் பிரம்மச்சாரியத்தினை மேற்கொள்ளுங்கள். உங்களது சுதர்மத்தினைச் செய்யுங்கள், வீண் பேச்சுக்களைத் தவிருங்கள். முழுமுதற் கடவுளை எப்போதும் சிந்தித்து சரியான இடத்திலிருந்து அறிவினைப் பெறுங்கள். இவ்வாறு பக்தி யோகத்தினை அமைதியாகவும், பொறுமையாகவும் பயிற்சி செய்தால் நீங்கள் ஞானத்தில் உயர்நிலை பெறுவதோடு தவறான ஆணவத்தினை விட்டுவிடும் திறனையும் பெறுவீர்கள்.
பதம் 5.5.14 : நான் உங்களுக்கு அறிவுறுத்தியுள்ளபடி அன்பு மைந்தர்களே செயல்படுவீராக. மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள். இவ்வழியே நீங்கள் பலன் தரும் செயலின் மீதுள்ள ஆசையின் அறியாமையிலிருந்து விடுதலை பெறுவீர். மேலும் உங்களது உளமார்ந்த முடிச்சும் முற்றிலும் துண்டிக்கப்படும். மேலும் வளர்ச்சி பெறுவதற்காக நீங்கள் இந்த வழிகளையும் துறத்தல் வேண்டும். அதாவது நீங்கள் விடுதலைக்கான முறையின் மீதும் பற்றுடையவர்களாக கூடாது.
பதம் 5.5.15 : ஒருவன் வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடையும் உண்மையான விருப்பமுடையவனாக இருந்தானென்றால் அவன் தன் வாழ்வின் உயர் நோக்கமாகவும், இறுதி லட்சியமாகவும் முழுமுதற் கடவுளின் கருணை ஒன்றினை மட்டுமே கொள்ள வேண்டும். தந்தை மகனுக்கும், ஆன்மீக குரு சீடனுக்கும், ஒர் அரசன் தன் குடி மக்களுக்கும் உபதேசிக்கும் பொழுது நான் உங்களுக்கு உபதேசித்தது போலவே செய்தல் வேண்டும். தனது மைந்தனோ, அல்லது சீடனோ அல்லது குடிமகனோ தனது கட்டளைகளை சில நேரங்களில் பின்பற்ற முடியாது. இருப்பினும் அவர்கள் மீது எந்தவிதமான சினமும் கொள்ளாது அவன் தொடர்ந்து அவர்களுக்கு உபதேசித்தல் வேண்டும். பாவ புண்ணியச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் அறியாமை மிக்கவர்கள் கூட எல்லாவழிகளிலும் பக்தித் தொண்டில் ஈடுபட வேண்டும். அவர்கள் எப்போதும் சுயச் சார்பான செயலைத் தவிர்த்தல் வேண்டும். ஒருவன் ஏற்கனவே மெய்யுணர்வுப் பார்வையினை இழந்திருக்கும் தன் சீடனையோ அல்லது குடிமகனையோ கர்ம வினையின் கட்டுக்குள் வைத்தானென்றால் ஒருவன் அதனால் அடையக் கூடிய நன்மை என்ன? இது கண்ணிழந்த குருடனை அழைத்துக் கொண்டுபோய் பாழுங்கிணற்றில் தள்ளுவது போன்றதாகும்.
பதம் 5.5.16 : அறியாமை காரணமாக லோகாயத மனிதன் தனது வாழ்க்கையின் மங்கலப் பாதையான தன் நலத்தினைப் பற்றி ஏதும் அறியாதவனாக இருக்கின்றான். காம இச்சைகளினால் அவன் மிக எளிதாக உலக இன்பத்தில் பிணைக்கப்பட்டுவிடுகிறான். மேலும் அவன் திட்டங்கள் அனைத்தும் இந்நோக்கத்திற்காகவே தீட்டப்படுகின்றன. நிரந்தரமற்றப் புலனுகர்ச்சிக்காக இம்மனிதன் காழ்ப்புணர்ச்சியுடைய சமுதாயத்தினை உருவாக்குகின்றான். இம் மனநிலையினால் அவன் துன்பக் கடலில் வீழ்கிறான். இம்மூட மனிதனால் இதனை அறிந்து கொள்ளவும் இயன்றிலது.
பதம் 5.5.17 : அறியாமை மற்றும் சம்சாரப் பாதையின் மீது பற்றுடையவனாக இருக்கும் ஒருவனை, உண்மையான கல்வியறிவு, கருணை மற்றும் ஆன்மீக ஞானத்தில் வளர்ச்சியுடையவர் எவ்வாறு பலன் தரும் செயலில் ஈடுபடுத்தி அவனை மேலும் உலக வாழ்வின் சிக்கலில் அமிழ்த்துவான்? விழியற்றக் குருடன் ஒருவன் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றான். ஆபத்தினை நோக்கி அவன் மேலும் முன்னேறுவதை மேன்மை மிக்க ஒருவன் எவ்வாறு அனுமதிப்பான்? இம்முறையினை எவ்வாறு அவனால் அங்கீகரிக்க முடியும்? புத்திமான் அல்லது அன்புடைய ஒருவன் இதனை அனுமதிப்பதில்லை.
பதம் 5.5.18 : தன்னைச் சார்ந்திருப்போரை பிறப்பு இறப்புச் சுழற்சியில் மீண்டும், மீண்டும் சிக்கவைக்கும் பாதையிலிருந்து மீட்க முடியாதவன் ஒர் ஆன்மீக குருவாகவோ, ஒரு தந்தையாகவோ, தாயகவோ, வணங்குதற்குரியத் தேவனாகவோ ஆதல் கூடாது.
பதம் 5.5.19 : எனது உன்னத உடலான சச் சித் ஆனந்த விக்ரஹம் ஒர் மானுட வடிவினைப் போலவே தோன்றும். ஆயினும் இது பெளதீக மானுட உடல் அல்ல. இது கற்பனைக்கெட்டாதது. ஒரு குறிப்பிட்ட உடலை ஏற்றுக் கொள்வதற்கு ஜட இயற்கையினால் நான் பலவந்தப்படுத்தப்படுவதில்லை; நான் எனது இனிமையான விருப்பத்தினாலேயே ஓர் உடலினை ஏற்றுக் கொள்கிறேன். எனது இதயமும் கூட ஆன்மீகமானதே, மேலும் நான் எப்போதும் எனது பக்தர்களின் நலனைப் பற்றியே சிந்திக்கின்றேன். எனவே எனது இதயத்தினுள் பக்தர்களுக்கானப் பக்தித் தொண்டினைக் காண முடியும். எனது இதயத்திலிருந்து வெகு தொலைவில் நான் அதர்மங்களையும் பக்தியல்லாத செயல்களையும் அழித்திருக்கிறேன். அவை எனக்குப் பொருந்தவில்லை. இவ்வுன்னதக் குணங்களின் காரணமாகவே மக்கள் பொதுவாக என்னை உயிர்கள் அனைவரினும் சிறந்த, முழுமுதற் கடவுள் தேவர் என்று வழிபடுகின்றனர்.
பதம் 5.5.20 : அன்பு மைந்தர்களே, ஆன்மீகக் குணங்கள் அனைத்திற்கும் உறைவிடமான எனது இதயத்திலிருந்து நீங்கள் அனைவரும் பிறந்தீர்கள். ஆகையினால் நீங்கள் லோகாயதவாதிகளாகவும், காழ்ப்புணர்ச்சி உடையவர்களாகவும் இருத்தல் கூடாது. நீங்கள் அனைவரும் பக்தித் தொண்டில் மிக்குயர்ந்த உங்கள் மூத்த சகோதரன் பரதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். பரதனின் தொண்டில் நீங்கள் ஈடுபட்டால், அவனுக்குச் செய்யும் அத்தொண்டில் எனது தொண்டும் உள்ளடங்கியதாகும். மேலும் குடிமக்களை நீங்களே ஆட்சி செய்யவும் தொடங்குவீர்கள்.
பதங்கள் 5.5.21 – 5.5.22 : உயிருடைய மற்றும் உயிரற்ற என்னும் இரண்டு விதமான சக்திகள் வெளிப்படும்பொழுது உயிரிருந்தும் அசையாதவை மரம், செடி, கொடிகள் போன்ற பொருட்கள் அசையாத பிண்டங்களாகிய கல், மண் போன்றவற்றைக் காட்டிலும் உயர்ந்தவையே ஆகும். அசையாத மரம், செடி, கொடிகளைக் காட்டிலும் அசையும் உயிர்கள் மற்றும் ஊர்வன போன்ற பூச்சிகள், பாம்புகள், புழுக்கள் உயர்ந்தவையாகும். புழு, பூச்சி, பாம்புகளைக் காட்டிலும் ஐந்தறிவுடைய விலங்குகள் உயர்ந்தவையாகும். ஐந்தறிவுடைய விலங்குகளைக் காட்டிலும் ஆறறிவுடைய மனிதர்கள் உயர்ந்தவர்கள், இம் மனிதர்களைக் காட்டிலும் பேய், பிசாசுகள் உயர்ந்தவையாகும். ஏனெனில் இவற்றிற்குப் பரு உடல்கள் கிடையா. பேய்களைக் காட்டிலும் கந்தர்வர்களும், கந்தர்வர்களை விட சித்தர்களும், சித்தர்களைவிடக் கின்னரர்களும், கின்னரர்களைவிட அசுரர்களும், அசுரர்களைவிட தேவர்களும், தேவர்களைவிட இந்திரனும், இந்திரனை விட பிரம்ம தேவனுக்குப் பிறந்த தக்ஷன் போன்றவர்களும், பிரம்ம தேவனின் புதல்வர்களுள் சிவபெருமானும், சிவபெருமானின் தந்தை ஆதலினால் பிரம்ம தேவனும் உயர்ந்தவர் ஆவார். அப்பிரம்ம தேவனும் முழுமுதற் கடவுளான எனக்குக் கீழானவரே. அந்தணர்கள் மீது நான் பெரிதும் நாட்டமுடையவன் ஆதலினால், அந்தணர்களே அனைவரினும் சிறந்தவர்கள் ஆவர்.
பதம் 5.5.23 : ஒ, மரியாதைக்குரிய அந்தணர்களே! என்னைப் பொருத்தவரை அந்தணர்களுக்கு இணையாகவோ அல்லது உயர்வாகவோ இவ்வுலகில் எவருமிலர். அவர்களோடு ஒப்பிடக் கூடியவர்களை இதுவரை நான் யாரையும் காணவில்லை. எனது நோக்கத்தினை அறிந்து கொண்டிருப்போர், வேத நெறிகளுக்கேற்பச் சடங்குகளைச் செய்து முடித்த பின்னர் ஒர் அந்தணின் வாயின் மூலமாக பக்தியுடனும், அன்புடனும் எனக்கு உணவுப் பொருட்களை நிவேதனம் செய்கின்றனர். இவ்வாறு உணவு அளிக்கப்படும்பொழுது நான் அதனை முழுத்திருப்தியுடன் உண்கிறேன். உண்மையில் வேள்வித் தீயில் அர்ப்பணிக்கப்படும் உணவுப் பொருளைக் காட்டிலும் இவ்வழியில் அளிக்கப்படும் உணவிலிருந்தே நான் மிகுந்த இன்பமடைகிறேன்.
பதம் 5.5.24 : வேதங்கள் எனது உன்னதமான ஒலி அவதாரங்களாகும். எனவே வேதங்கள் “சப்த பிரம்மம்” எனப்படுகின்றன. இவ்வுலகில் அந்தணர்கள் வேதங்களை முழுதும் கற்று வேத முடிவுகளோடு ஒன்றியிருக்கும் காரணத்தினால் அவர்களும் கூட வேதங்களின் வடிவமாகவே கருதப்படுகின்றனர். அந்தணர்கள் ஜட இயற்கையின் உன்னதக் குணமான சத்துவக் குணத்தில் நிலை பெற்றிருக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் மனவடக்கம் (ஸம), புலனடக்கம் (தம), வாய்மையுடைமை (ஸத்ய) நிறைந்தவர்களாக இருக்கின்றனர். வேதங்களை அவர்கள் அவற்றின் உண்மை உருவில் விளக்குகின்றனர். மேலும் கருணையினால் (அனுக்ரஹத்தினால்) அவர்கள் அனைத்துப் பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கும் வேதங்களை எடுத்தோதுகின்றனர். அவர்கள் தவம் (தபஸ்ய) மற்றும் பொறுமையினைப் (திதிக்ஷா) பயில்கின்றனர். இவையே அந்தணர்களுக்கான எட்டுத் தகுதிகள் ஆகும். ஆகையினால் உயிர்களுள் அந்தணர்களை விட உயர்ந்தவர் என்று யாரும் இல்லை.
பதம் 5.5.25 : நான் பிரம்மதேவன் மற்றும் தேவர்களின் தலைவனான தேவேந்திரன் போன்றவர்களை விட செல்வம், செயல்திறன் போன்றவற்றில் உயர்ந்தவனாவேன். மறுமைப்பயன் அடைவதினாலும் வீடுபேறு பெறுவதினாலும் உண்டாகும் அனைத்து மகிழ்ச்சிக்கான வரம் அருள்பவனும் நானேயாவேன். இருந்தும் அந்தணர்கள் பௌதீக சுகங்களை என்னிடம் எப்போதும் விழைவதில்லை. அவர்கள் தூய்மை மிக்கவர்கள் என்பதோடு எதையும் தம்மிடம் வைத்துக் கொள்ளவும் விரும்புவதில்லை. அவர்கள் எனது பக்தித் தொண்டு ஒன்றில் மட்டுமே ஈடுபடுகின்றனர். அதனால் எவரிடமிருந்தும் உலக சுகங்களைக் கேட்டுப் பெறும் தேவை அவர்களுக்கு என்ன இருக்கிறது?
பதம் 5.5.26 : அன்பார்ந்த மைந்தர்களே, அசையும், அசையாத எந்த உயிரிடத்தும் நீங்கள் காழ்ப்புணர்ச்சிக் கொள்ளக் கூடாது. அவைகளிடமெல்லாம் நான் இருக்கின்றேன் ஆதலினால் நீங்கள் அனைவரும் அவற்றிற்கு ஒவ்வொரு கணமும் மரியாதை அளித்தல் வேண்டும்.
பதம் 5.5.27 : புலனேந்திரியங்களின் உண்மைச் செயலானது மனம், வாக்கு, நோக்கு என்னும் அறிவுப் புலன்கள் மற்றும் செயற்புலன்கள் முற்றிலும் எனது தொண்டிலேயே ஈடுபடுத்தப்படுகின்றது. புலன்கள் அவ்வாறு ஈடுபடுத்தப்படவில்லையென்றால் யமராஜானின் உறுதிமிக்க கயிற்றைப் போன்றே உலக வாழ்வின் சிக்கலிலிருந்து எந்த உயிரும் வெளியே வர முடியாது.
பதம் 5.5.28 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு அனைவரின் நலனை விரும்பும் பகவான் ரிஷபதேவர் தன்னுடைய மைந்தர்களுக்கு உபதேசித்தார். அவர்கள் அனைவரும் உயர்கல்வியும் நற்பண்பும் உடையவர்களாயினும் ஒரு தந்தை இல்வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறும்பொழுது தன் மைந்தர்களுக்கு எவ்வாறு உபதேசிக்க வேண்டும் என்பதற்கு பகவான் ரிஷப தேவர் மிகச் சிறந்த சான்றாகும். பலன் தரும் செயலினால் பந்தப்படாது, தங்கள் இச்சைகளை வென்று பக்தித் தொண்டில் ஈடுபட்டிருக்கும் துறவிகளும் கூட இவ்வுபதேசத்தினைப் பின்பற்ற வேண்டும். பகவான் ரிஷப தேவர் உபதேசித்த அவரது நூறு மைந்தர்களுள் மூத்தவரான பரதன் சிறந்த பக்தரும், வைணவர்களின் அடியவரும் ஆவார். இவ்வுலகினை ஆளவேண்டும் என்பதற்காக பகவான் தனது மூத்த மைந்தனை, தனது இல்லத்தில் ஆடை உடுத்தாமலும், ஜடை விழுந்த முடியுடனும் ஒரு உன்மத்தம் பிடித்தவனைப் போல் வளர்த்து வந்தார். பின்னர் பகவான் வேள்வித் தீயினைத் தானே எடுத்துக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றிவருவதற்காக பிரம்மா விரதம் என்னும் இடத்திற்குச் சென்றார்.
பதம் 5.5.29 : அவதூதர் எனப்படும் மிகச் சிறந்த மகானாக மாறி உலகியற்கவலைகள் எதுவுமின்றி பகவான் ரிஷப தேவர் மக்கள் மத்தியில் குருடரைப் போல், செவிடு மற்றும் ஊமை மனிதனைப் போல், ஒரு பேய் அல்லது புத்தி நிதானம் இல்லாத மனிதரைப் போல் திரிந்து வந்தார். மக்கள் அவரை இப்படிக் கருதிய போதிலும், யாரிடத்தும் பேசாது அவர் மிக்க அமைதியுடன் இருந்தார்.
பதம் 5.5.30 : ரிஷப தேவர் நகரங்கள், கிராமங்கள், சுரங்கங்கள், நகர்ப்புறங்கள், பள்ளத்தாக்குகள், நத்தவனங்கள், இல்லங்கள், சத்திரங்கள், மலைகள், வனங்கள், மற்றும் ஆஸ்ரமங்கள் எல்லாம் சுற்றி வந்தார். வனத்திலிருந்து வரும் யானையினை ஈக்கள் மொய்த்துக் கொள்வது போல் அவர் எங்கு சென்றாலும் தீய சக்திகள் அவரைச் சூழ்ந்து கொள்ளும். அவர் எப்போதும் மிரட்டப்பட்டார், உதைக்கப்பட்டார், சிறுநீர் தெளிக்கப்பட்டார், காறி உமிழப்பட்டார். சில நேரங்களில் மக்கள் அவர்மீது கற்களையும், புழுதியினையும், மலத்தினையும் வாரி இறைத்தனர். சில நேரம் அவர் முன்னர் அபாண வாயுவைக் கழித்தனர். இவ்வாறு மக்கள் அவரைப் பல கெட்டப் பெயர்களிலும் அழைத்து அவருக்கு மிகுந்த தொல்லை கொடுத்தனர். ஆனால் அவரோ, இதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படவில்லை. இவ்வுடலுக்கு இம்முடிவுதான் ஏற்படும் என்பதை அவர் நன்றாக அறிந்தே இருந்தார். அவர் ஆன்மீக சிந்தனையில் நிலைபெற்றிருந்தார். மேலும் அவர் தனது ஆன்மீக மகிமையினால் உலகினரின் அவமதிப்புக்களைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருந்தார். அதாவது உயிரும் உடலும் தனித்தனியானவை என்பதை அவர் முற்றிலும் உணர்ந்திருந்தார். அவரிடம் உடலைப் பற்றிய சிந்தனை கிடையாது. இவ்வாறு அவர் எவர் மீதும் சினம் கொள்ளாது உலகளாவிய நிலையில் தனியே வாழ்ந்து வந்தார்.
பதம் 5.5.31 : பகவான் ரிஷப தேவரின் மார்பு மிகவிரிந்தும் கரங்களும் கால்களும் நீண்டு உயரமாகவும் இருந்தன. அவரது தோள்களும், முகமும் அவயங்களும் மிகவும் எழிலுடனும், அளவாகச் செதுக்கி வைத்தாற் போன்றும் இருந்தன. அவரது வாய் அவரது இயற்கையான புன்னகையினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலையில் மலரும் செந்தாமரை மலரின் பனித்துளி படர்ந்த செவ்விதழைப் போன்ற சிவந்த விழிகளுடன் அவர் மிகவும் கவர்ச்சிகரமாகத் தோன்றினார். அவரது விழிகளின் கருமணிகள் மிகவும் இனிமையுடனும் அவற்றைப் பார்ப்போரின் துன்பங்கள் அனைத்தையும் நீக்குபவையாகவும் விளங்கின. அவரது நெற்றி, செவிகள், கழுத்து, நாசி போன்ற உறுப்புக்கள் அனைத்தும் மிக்க எழிலுடன் திகழ்ந்தன. அவரது கவர்ச்சி மிகுந்த புன்னகை அவரது முகத்திற்கு மேலும் அழகூட்டி மணம் முடித்த மங்கையரின் உள்ளங்களைக்கூட ஆட்கொண்டன. அவர்கள் அனைவரும் மன்மதனின் மலரம்புகளால் துளைக்கப்பட்டனர். அவரது தலைமுடி அடர்த்தியாகவும் இருந்தது. மேலும் அவை அங்குமிங்கும் தொங்கிக் கொண்டிருந்தன. ஏனெனில் அவரது உடல் அழுக்குடனும், பேணப்படாமலும் பேய்க்கு ஆட்பட்டது போலும் காணப்பட்டது.
பதம் 5.5.32 : பகவான் ரிஷபதேவர் தனது யோகஸித்திக்கு எதிராகப் பொது மக்கள் இருப்பதைக் கண்டவுடன் அவர்களது எதிர்ப்புக்கு எதிர் செய்வதற்காக ஒரு மலைப் பாம்பின் மனோபாவத்தை மேற்கொண்டார். அதாவது அவர் ஒரே இடத்தில் கீழே படுத்துக் கொண்டார். அங்கேயே அந்த நிலையிலேயே அவர் உண்டார், பருகினார், மலமும் சிறுநீரும் கழித்து அவற்றின் மீதே புரண்டார். உண்மையில் அவர் தன் உடல் முழுவதும் மலத்தினையும் சிறுநீரையும் பூசிக் கொண்டார். அப்போதுதானே அவருக்கு எதிரானவர்கள் அவர் அருகே வந்து தொல்லை தர மாட்டார்கள்!
பதம் 5.5.33 : துய்மையற்ற நிலையில் இருந்தபோதிலும் ரிஷப தேவரை பொதுமக்கள் துன்புறுத்தவில்லை. ஏனெனில் அவரது மலஜலத்திலிருந்து தூர்நாற்றம் வீசவில்லை. மாறாக அதனிலிருந்து விசிய இனிய நறுமணம் எட்டு மைல் அளவில் சுற்று வட்டாரமெங்கும் பரவியது.
பதம் 5.5.34 : இவ்வாறாக பகவான் ரிஷபதேவர் பசு, மான், காக்கை போன்றவற்றின் தன்மைகளைப் பின்பற்றினார். அவர் நகர்வார், நடப்பார், சில நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பார். சில நேரம் பசு, மான், காக்கையினைப் போல நடந்து கொள்வார். இவ்வாறு அவர் உண்டு, பருகி, மலஜலம் கழித்து மக்களை ஏமாற்றினார்.
பதம் 5.5.35 : ஓ, பரீட்சித்து மன்னனே, அனைத்து யோகிகளுக்கும் யோக ஸித்தி முறையினை எடுத்துக்காட்டவே பகவான் கிருஷ்ணரின் இயல்புகளை ஏற்றுக் கொண்ட பகவான் ரிஷப தேவர் அதிசயிக்கத்தக்கச் செயல்களைச் செய்து காட்டினார். உண்மையில் அவர் விடுதலையின் நாயகர் என்பது மட்டுமல்ல. ஆயிரம் மடங்குள்ள மனவாசகம் கடந்த மெய்யுணர்வில் முற்றிலும் ஆழ்ந்திருந்தார். வசுதேவரின் மைந்தரான வாசுதேவ கிருஷ்ணரே பகவான் ரிஷப தேவரின் மூலாதாரமாவார். அவர்களது தோற்றத்தில் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. இதனைத் தொடர்ந்து பகவான் ரிஷப தேவர் அழுதல், சிரித்தல், நடுங்குதல் போன்ற அன்பின் அடையாளங்களை வெளிப்படுத்தினார். அவர் எப்போதும் உன்னத மெய்யுணர்வில் ஆழ்ந்திருந்தார். இதன் காரணமாக மனோ வேகத்தில் வானில் பறப்பது, தோன்றுவது, மறைவது, பிறர் உடலினுள் புகுவது, வெகு தொலைவில் உள்ளப் பொருட்களை காண்பது போன்ற யோகச் சக்திகள் அனைத்தும் அவரைத் தாமே அடைந்தன. இவை அனைத்தையும் செய்யக் கூடியவராக அவர் இருந்தபோதிலும், இச்சக்திகளை அவர் பயன்படுத்தியதே இல்லை.