அத்தியாயம் – 5
ரிஷபர் தமது மைந்தர்களுக்கு அருளிய உபதேசங்கள்
பதம் 5.5.1
ருஷப உவாச
நாயம் தேஹோ தேஹ-பாஜாம் நிருலோகே
கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே
தபோ திவ்யம் புத்ரகா யேன ஸத்த்வம்
ஷுத்த்யேத் யஸ்மாத் ப்ரஹ்ம-ஸௌக்யம் த்வ அனந்தம்
ருஷப உவாச—பகவான் ரிஷப தேவர் கூறினார்; ந—இல்லை; அயம்—இந்த; தேஹ—உடல்; தேஹ-பாஜாம்—பௌதிக உடல்களைப் பெற்றிருக்கும் அனைத்து உயிர்களின்; ந்ரு-லோகே—இந்த உலகில்; கஷ்டான்—கஷ்டம்; காமான்—புலனுகர்ச்சி; அர்ஹதே—உரியவனாகிறான்; விட்-புஜாம்—மலம் உண்போர்; யே—அது; தப:—தவங்களும், துறவுகளும்; திவ்யம்—திவ்வியமான; புத்ரகா—அன்பார்ந்த மைந்தர்களே; யேன—அதனால்; ஸத்த்வம்—இதயம்; ஷுத்த்யேத்—தூய்மையடைதல்; யஸ்மாத்—அதிலிருந்து; ப்ரஹ்ம-ஸௌக்யம்—ஆன்மீக சுகம்; து—உறுதியாக; அனந்தம்—முடிவில்லாத.
பகவான் ரிஷப தேவர் தன் மைந்தர்களிடம் கூறினார் அன்பு மைந்தர்களே! பல உடல்களைப் பெற்றிருக்கும் இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களிலும், மனித உடல் பெற்றவன் கேவலமான புலனுகர்ச்சிக்காக இரவும் பகலும் கிடந்து கடினமாக உழைக்கக்கூடாது. இப்புலனுகர்ச்சி மலத்தைத் தின்னும் நாய்களுக்கும், பன்றிகளுக்கும் கூட இருப்பதே. பக்தித் தொண்டின் தெய்வீக நிலையினை அடைவதற்காக ஒருவன் தவத்திலும், துறவு நெறிகளிலும் ஈடுபட வேண்டும். இச் செயல்களினால் ஒருவனது உள்ளம் தூய்மையடைகிறது. மேலும் ஒருவன் இந்நிலையினை அடையும்பொழுது அவன் பௌதிக இன்பத்திற்கு மேலானதும் என்றும் தொடர்ந்திருப்பதுமாகிய நிரந்தரமான ஆனந்த வாழ்வினை எய்துகிறான்.
பதம் 5.5.2
மஹத்-ஸேவாம் த்வாரம் ஆஹுர் விமுக்ருதேஸ்
தமோ-த்வாரம் யோஷிதாம் ஸங்கி-ஸங்கம்
மஹாந்தஸ் தே ஸம-சித்தா: ப்ரஷாந்தா
விமன்யவ: ஸுஹ்ருத: ஸாதவோ யே
மஹத்-ஸேவாம்—ஆன்மீக வளர்ச்சி பெற்ற மகாத்மாக்களுக்குத் தொண்டு செய்தல்; த்வாரம்—இவ்வாறு; ஆஹு—அவர்கள் கூறுகின்றனர்; விமுக்ருதே—விடுதலையின்; தம:-த்வாரம்—இருட்டறைக்குச் செல்லும் வழி, நரக வாழ்க்கை; யோஷிதாம்—பெண்களின்; ஸங்கி—துணைவர்களின்; ஸங்கம்—தொடர்பு; மஹாந்த:—ஆன்மீக உணர்வில் நன்கு முன்னேறியவர்கள்; தே—அவர்கள்; ஸம-சித்தா:—ஆன்மீக அடையாளத்துடன் அனைவரையும் பார்ப்பவர்கள்; ப்ரஷாந்தா—பிரம்மம் அல்லது பகவானில் மிகவும் அமைதியாக இருத்தல்; விமன்யவ—ஆத்திரமின்றி (கிருஷ்ண சிந்தனையை பகைவர்க்குக் கூட அவர்கள் மீது ஆத்திரம் கொள்ளாது ஒருவன் வழங்க வேண்டும்); ஸுஹ்ருதே:—அனைவரின் நலன் விரும்புவோர்; ஸாதவ:—அறுவருக்கத்தக்க நடத்தையில்லாத உயர்ந்த பக்தர்கள்; யே—அவர்கள்.
உலகப் பிடிப்பிலிருந்து ஆன்மீகத்தில் உயர்வு பெற்ற மகான்களுக்குத் தொண்டு செய்வதின் மூலமே விடுதலைக்கானப் பாதையினை ஒருவன் அடைய முடியும். இம் மகான்கள் அருவவாதிகள் மற்றும் பக்தர்கள் ஆவர். பகவானது தோற்றத்தில், தான் இணைய வேண்டுமென்று ஒருவன் விரும்பினாலோ அல்லது முழுமுதற் கடவுளுடன் தொடர்பு கொள்ள விரும்பினாலோ, அவன் மகாத்மாக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். இச்செயலில் ஆர்வமின்றி பெண்கள் மற்றும் பாலியல் விருப்பமுடையோர்க்கு நரகத்தின் பாதை அகலமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மகாத்மாக்கள் சம நோக்குடையவர்களாகவும், பக்தித் தொண்டில் முற்றிலும் ஈடுபட்டவர்களாகவும், அவர்கள் சினத்தினைத் தவிர்த்து அனைவரின் நலனுக்காக உழைப்பவர்களுமாவர். அவர்கள் பிறர் வெறுக்கத் தக்க முறையில் நடப்பதும் இல்லை. இப்படிப்பட்டவர்களே மகாத்மாக்கள் ஆவர்.
பதம் 5.5.3
யே வா மயீஷே க்ருத-ஸெஹ்ருதார்தா
ஜனேஷு தேஹம்பர-வார்திகேஷு
க்ருஹேஷு ஜாயாத்மஜ-ராதிமத்ஸு
ந ப்ரீதி-யுக்தா யாவத்-அர்தாஷ் ச லோக
யே—அவர்கள்; வா—அல்லது; மயி—எனக்கு; ஈஷே—முழுமுதற் கடவுள்; க்ருத-ஸெஹ்ருத-அர்தா:—அன்பினை வளர்த்துக் கொள்வதில் மிக்க ஆர்வம் (தாஸ்ய, ஸக்ய, வாத்ஸல்ய அல்லது மாதுர்ய ரஸ உறவுகள்); ஜனேஷு—மக்களுக்கு; தேஹம்பர-வார்திகேஷு—ஆன்மீக முக்தி அடைவதில் விருப்பமின்றி உடலைப் பேணுபவர்கள்; க்ருஹேஷு—இல்லத்திற்கு; ஜாயா—மனைவி; ஆத்ம-ஜ—குழந்தைகள்; ராதி—செல்வம் அல்லது நண்பர்கள்; மத்ஸு—கட்டப்பட்ட; ந—இல்லை; ப்ரீதி-யுக்த:—மிகவும் பற்றுக் கொண்டு; யாவத்-அர்தா:—தேவைப்படும் அளவிற்கு மட்டும் சேகரித்து வாழ்பவர்கள்; ச—மேலும்; லோகே—இந்த உலகில்;
கிருஷ்ண சிந்தனையைப் புதுப்பித்துக் கொள்வதில் ஆர்வமும் முழுமுதற் கடவுளின் மீது பேரன்பும் உடையவர்கள் கிருஷ்ணருடன் தொடர்பில்லாத எதனையும் செய்ய விரும்புவதில்லை. உண்பது, உறங்குவது, புணர்வது, தற்காத்துக் கொள்வது மூலம் உடலைப் பேணுபவர்களுடன் அவர்கள் கலந்துறவாடுவதில்லை. இல்லறவாசிகளாக இருப்பினும், குடும்பத்தின் மீதும், மனைவி, மக்கள், செல்வம், நண்பர் என்று எவர் மீதும் பற்று வைப்பதில்லை. ஆயினும் தங்கள் கடமைகளை ஆற்றுவதில் எந்தவிதமான எந்தவிதமான வேறுபாடும் காட்டுவதில்லை. உடல் ஆத்மா எனும் இவையிரண்டினையும் காத்துக் கொள்வதற்கு மட்டுமே அவர்கள் பொருள் ஈட்டுவர்.
பதம் 5.5.4
நூனம் ப்ரமத்த: குருதே விகர்ம
யத் இந்த்ரிய-பிதாய ஆப்ருணோதி
ந ஸாது மன்யே யத ஆத்மனோ ‘யம்
அஸன்ன் அபி க்வேஷத ஆஸ தேஹ:
நூனம்—உண்மையில்; ப்ரமத்த:—வெறி; குருதே—செய்தல்; விகர்ம—வேதங்களில் தடைசெய்யப்பட்டிருக்கும் பாவச் செயல்கள்; யத்—அப்பொழுது; இந்த்ரியா-ப்ரீதயே—புலனுகர்ச்சிக்காக; ஆப்ருணோதி—ஈடுபடுகிறார்; ந—இல்லை; ஸாது—பொருத்தமான; மன்யே—நான் கருதுகிறேன்; யத—அதன் மூலம்; ஆத்மன:—ஆத்மா; அயம்—இந்த; அஸன்—தற்காலிகமான; அபி—இருந்தபோதிலும்; க்வேஷத:—துன்பமளிக்கும்; ஆஸ—சாத்தியமாதல்; தேஹ—உடல்.
புலன் நுகர்ச்சியே வாழ்க்கை லட்சியம் என்று ஒருவன் கருதும் பொழுது அவன் நிச்சயம் மானுட வாழ்வில் வெறியுடையவனாகி பல்வேறு பாவச் செயல்களில் ஈடுபடுகிறான். முன்வினைப் பயனால் அழியக் கூடியதாக இருப்பினும், தான் பெற்றிருக்கும் உடலே தனது துன்பத்திற்குக் காரணம் என்பதை அவன் அறிவதில்லை. உண்மையில் ஒர் உயிர் பரு உடலினை எய்தக் கூடாது. ஆயினும் புலனுகர்ச்சிக்காக அவனுக்குப் பரு உடல் அளிக்கப்படுகிறது. ஆகையினால் பிறவிகள் தோறும் உடல்களை மாறி மாறித் தரவல்ல புலனுகர்ச்சிச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது ஒரு புத்திமானுக்குப் பொருந்தாது என்று நான் கருதுகிறேன்.
பதம் 5.5.5
பராபவஸ் தாவத் அபோத-ஜாதோ
யாவன் ந ஜிஜ்ஞாஸத ஆத்ம-தத்த்வம்
யாவத் க்ரியாஸ் தாவத் இதம் மனோ வை
கர்மாத்மகம் யேன ஷரீர-பந்த:
பராபவ:—தோல்வி, துன்பம்; தாவத்—நீண்ட காலமாக; அபோத-ஜாத:—அறியாமையிலிருந்து தோன்றுவது; யாவத்—அதுவரை; ந—இல்லை; ஜிஜ்ஞாஸதே—கேள்விகள்; ஆத்ம-தத்த்வம்—தன்னைப் பற்றிய உண்மை; யாவத்—அதுவரை; க்ரியா—பலன்தரும் செயல்கள்; தாவத்—நீண்ட காலமாக; இதம்—இந்த; மன—மனம்; வை—உண்மையில்; கர்ம-ஆத்மகம்—பௌதீகச் செயல்களில் அமிழ்ந்து; யேன—அதன் மூலம்; ஷரிர-பந்த—பௌதீக உடலின் பந்தம்.
வாழ்வின் ஆன்மீக மதிப்புக்களைப் பற்றி ஒருவன் கேட்டு அறியாத வகையில் தோற்கடிக்கப்பட்டு அறியாமையிலிருந்து வரும் துன்பங்களுக்கு ஆளாகிறான். அது பாவமோ, புண்ணியமோ கர்மத்திற்கென்று உரிய பலன்கள் உண்டு. கர்மத்தில் ஈடுபடும் பொழுது ஒருவன் மனம் கர்மாத்மகம் எனப்படுகிறது. இதன் பொருள் பலன் தரும் செயலின் கறையுடையது என்பதாகும். மனம் அழுக்காக இருக்கும்வரை உணர்வு தெளிவாக இருக்காது. பலன் தரும் செயலில் ஒருவன் அமிழ்ந்திருக்கும் வரை அவன் ஒரு பரு உடலினை ஏற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது.
பதம் 5.5.6
ஏவம் மன: கர்ம-வஷம் ப்ரயுங்க்தே
அவித்யயாத்மணி உபதீயமானே
ப்ரதிர் ந யாவன் மயி வாஸுதேவே
ந முச்யதே தேஹ-யோகேன தாவத்
ஏவம்—இவ்வாறு; மன:—மனம்; கர்ம-வஷம்—பலன்தரும் செயல்களின் வசம்; ப்ரயுங்க்தே—செயல்படுதல்; அவித்யயா—அறியாமையினால்; ஆத்மனி—உயிர்ப்பொருள்; உபதீயமானே—மூடப்படும்பொழுது; ப்ரீதி—அன்பு; ந—இல்லை; யாவத்—அதுவரை; மயி—எனக்கு; வாஸுதேவே—வாசுதேவர் கிருஷ்ணர்; ந—இல்லை; முக்தயே—மீட்சி பெறுதல்; தேஹ-யோகேன—உடலுடன் கூடிய தொடர்பிலிருந்து; தாவத்—நீண்ட காலமாக.
உயிரானது அறியாமை என்னும் தமோ குணத்தினால் மூடப்படும்பொழுது அவன் தனிப்பட்ட உயிர் அல்லது பரம உயிரைப் பற்றி அறிந்து கொள்ளாததோடு அவன் மனமும் பலன் தரும் செயலின் வசப்படுகிறது. ஆகையினால் என்னையன்றி வேறு யாருமில்லாத பகவான் வாசுதேவர் மீது ஒருவன் அன்பு கொள்ளாத வரை அவன் மீண்டும் பரு உடல்களை ஏற்றுக்கொள்வதிலிருந்து விடுதலை பெறுவதில்லை.
பதம் 5.5.7
யதாந பஷ்யதி அயதா குணேஹாம்
ஸ்வார்தே ப்ரமத்த: ஸஹஸா விபஷ்சித்
கத-ஸ்மிருதிர் விந்ததி தத்ர தாபான்
ஆஸாத்ய மைதுன்யம் அகாரம் அஜ்ஞ:
யதா—அப்பொழுது; ந—இல்லை; பஷ்யதி—காண்பது; அயதா—தேவையின்றி; குண-ஈஹாம்—புலன்களைத் திருப்திப்படுத்துவதற்கான முயற்சி; ஸ்வ-அர்தே—சுயநலத்தில்; ப்ரமத்த—வெறி; ஸஹஸா—மிகவிரைவில்; விபஷ்சித்—ஒருவன் அறிவு வளர்ச்சியுடையவனாக இருந்தபோதிலும்; கத-ஸ்மிருதி:—மறந்தால்; விந்ததி—பெறுகிறான்; தத்ர—அங்கே; தாபான்—பௌதீகத் துன்பங்கள்; ஆஸாத்ய—அடைதல்; மைதுன்யம்—பாலியல் அடிப்படையில்; அகாரம்—ஓர் இல்லம்; அஜ்ஞ:—மூடனாக.
ஒருவன் கற்று அறிவுடையவனாக இருப்பினும், புலனுகர்ச்சிக்கான முயற்சி பயனற்றது என்பதை அறிந்து கொள்ளவில்லையென்றால் அவன் புத்தி இல்லாதவனேயாவான். வாழ்க்கையின் துன்பங்களுக்குக் காரணமானதும், பாலியல் உறவினை அடிப்படையாககக் கொண்டதுமான தன் குடும்பத்தின் மீது பற்றுடையவனாகி, உலகியல் மகிழ்ச்சி பெற முயல்கிறான். அந்நிலையில் அவன் மூட விலங்கினைக் காட்டிலும் கீழானவனே ஆவான்.
பதம் 5.5.8
பும்ஸ: ஸ்த்ரியா மிதுனீ-பாவம் ஏதம்
தயோர் மிதோ ஹ்ருதய-க்ரந்திம் ஆஹு:
அதோ க்ருஹ-க்ஷேத்ர-ஸுதாப்த-வித்தைர்
ஜனஸ்ய மோஹோ ‘யம் அஹம் மமேதி
பும்ஸ:—ஒரு மனிதனின்; ஸ்த்ரியா:—ஒரு பெண்ணின்; மிதுனீ-பாவம்—பாலியல் வாழ்க்கையின் மீதானக் கவர்ச்சி; ஏதம்—இந்த; தயோ:—இருவரும்; மித:—இருவருக்கும் இடையில்; ஹ்ருதய-க்ரந்திம்—இதயங்களின் முடிச்சு; ஆஹு—அவர்கள் அழைக்கின்றனர்; அத—அதன்பிறகு; க்ருஹ—இல்லறத்தினால்; க்ஷேத்ர—களம்; ஸுத—குழந்தைகள்; ஆப்த—உறவினர்கள்; வித்தை—செல்வத்தினால்; ஜனஸ்ய—உயிர்களின்; மோஹ—மோகம்; அயம்—இந்த; அஹம்—நான்; மம—எனது; இதி—இவ்வாறு.
ஆண், பெண் இருவருக்கும் இடையில் இருக்கும் கவர்ச்சியே உலக வாழ்வின் அடிப்படைக் கொள்கையாக உள்ளது. இவ்வாறு ஆண், பெண் இதயங்களை இணைக்கும் இத்தவறான கருத்தின் அடிப்படையில்தான் ஒருவன் தனது உடல், குடும்பம், ஆஸ்தி, குழந்தை, சுற்றம், செல்வம் என்பவற்றின் மீது கவர்ச்சியுடையவனாகிறான். இவ்வாறு இப்படி ஒருவன் வாழ்க்கையின் மீதான மோகத்தினை அதிகரித்துக் கொள்வதோடு “நான்” மற்றும் “எனது” என்றே எப்போதும் சிந்திக்கிறான்.
பதம் 5.5.9
யதா மனோ-ஹ்ருதய-க்ரந்திர் அஸ்ய
கர்மானுபத்தோ த்ருத ஆஸ்லே தத
ததா ஜன: ஸம்பரிவர்ததே ‘ஸ்மாத்
முக்த: பரம் யாதி அதிஹாய ஹேதும்
யதா—அப்பொழுது; மன—மனம்; ஹ்ருதய-க்ரந்தி—இதயத்தின் முடிச்சு; அஸ்ய—இம்மனிதன்; கர்ம-அனுபந்த—அவனது முன்வினைப் பயனால் கட்டப்பட்டு; த்ருட—மிக உறுதியாக; ஆஸ்ல தேத—தளர்கிறது; ததா—அச்சமயம்; ஜன—பந்தப்பட்ட ஆத்மா; ஸம்பரிவர்ததே—திசைமாறி; அஸ்மாத்—பாலியல் வாழ்வின் பற்றிலிருந்து; முக்த—விடுதலை பெற்று; பரம்—உன்னத உலகிற்கு; யாதி—செல்கிறான்; அதிஹாய—துறந்து; ஹேதும்—உண்மையானக் காரணம்.
முன்வினைப் பயனால் உலக வாழ்வில் சிக்கிக் கொண்டவனுடைய இதயம் தளர்ச்சியடையும் பொழுது அவனது மனைவி, மக்கள், குடும்பம் என்பவற்றின் மீதான பற்றிலிருந்து திசை மாறுகிறான். இவ்வழியே அவன் மாயையின் அடிப்படைக் கொள்கையினை (“நான்” “எனது”) துறந்து விடுதலை பெறுகிறான். இவ்வாறு ஒருவன் மனவாசகம் கடந்த உலகிற்குச் செல்கிறான்.
பதங்கள் 5.5.10 – 5.5.13
ஹம் ஸே குரெள மயி பக்த்யானுவ்ருத்யா
வித்ருஷ்ணயா த்வந் த்வ-திதிக்ஷயா ச
ஸர்வத்ர ஜந்தோர் வ்யஸனாவகத்யா
ஜிஜ்ஞாஸயா தபஸேஹா-நிவ்ருத்த்யா
மத்-கர்மபிர் மத்-கௌதயா ச நித்யம்
மத்-தேவ-ஸங்காத் குண-கீர்தனான் மே
நிர்வைர-ஸாம் யோப ஸ்மேன புத்ரா
ஜிஹாஸயா தேஹ-கேஹாத்ம-புத்தே:
அத்யாத்ம-யோகேன விவித்க-ஸேவயா
ப்ரா ணேந்த்ரியாத்மபி ஜ யேன ஸத்ருயக்
ஸச்-ச்ரத்த்யா ப்ரஹ்மச்சர்யேண ஸஸ்வத்
அஸம்ப்ரமாதேன யமேன வாசாம்
ஸர்வத்ர மத்-பாவ-விசக்ஷணேன
ஜ்ஞானேன விஜ்ஞான-விராஜிதேன
யோகேன த்ருதி-உத்யம-ஸத்த்வ-யுக்தோ
லிங்கம் வ்ரபோஹேத் குஸலோ ‘ஹம்-ஆக்யம்
ஹம்ஸே—பரம ஹம்ஸர் அல்லது மிகவுயர்ந்த ஆன்மீக வளர்ச்சியடைந்தவர்; குரௌ—குரு; மயி—எனக்கு;—முழுமுதற் கடவுளுக்கு; பக்த்யா—பக்தித் தொண்டினால்; அனுவ்ருத்யா—பின்பற்றுவதினால்; வித்ருஷ்ணயா—புலனுகர்ச்சியிலிருந்து பற்றறுப்பதினால்; த்வத்த்வ—பௌதீக உலகின் இருமைகளின்; திதிக்ஷயா—பொறுமையினால்; ச—மேலும்; ஸர்வத்ர—எங்கும்; ஜந்தோ—உயிர் வாழியின்; வ்யஸன—வாழ்வின் துன்ப நிலை; அவகத்யா—உணர்வினால்; ஜிஜ்ஞாஸயா—உண்மையைப் பற்றி வினவுவதினால்; தபஸா—தவம் துறவு போன்றவற்றை மேற்கொள்வதினால்; ஈஹா-நிவ்ருத்த்யா—புலனின்பத்திற்கான முயற்சியினைத் துறப்பதினால்; மத்-கர்மபி:—எனக்காக உழைத்து; மத-கதயா—உன்னைப் பற்றியச் செய்திகளைக் கேட்டு; ச—மேலும்; நித்யம்—எப்போதும்; மத்-தேவ ஸங்காத்—எனது பக்தர்களுடன் கொள்ளும் தொடர்பினால்; குண-கீர்தனாத்-மே—எனது உன்னதக் குணங்களைப் போற்றிப் புகழ்வதினாலும் ஓதுவதினாலும்; நிர்வைர—பகையின்றி; ஸாம்ய—ஆன்மீக உணர்வினால் அனைவரையும் ஒரே நோக்கில் பார்ப்பது; உபஸமேன—சினம், துக்கம் போன்றவற்றைக் குறைப்பதினால்; புத்ரா:—ஓ, புதர்வர்களே; ஜிஹாஸயா—துறப்பதற்குரிய விருப்பத்தினால்; தேஹ—உடலுடன்; கேஹ—குடும்பத்துடன்; ஆத்ம-புத்தே:—தனது அடையாளம்; அத்யாத்ம யோகேன—வேதங்களைக் கற்பதினால்; விவிக்த-ஸேவயா—தனிமையான இடத்தில் வாழ்வதினால்; ப்ராண—உயிர்க்காற்று; இந்த்ரிய—புலன்கள்; ஆத்ம—மனம்; அபிஜயேன—கட்டுப்படுத்துவதினால்; ஸத்ருயக்—முற்றிலும்; ஸத்-ஸ்ரத்தயா—வேதங்களின் மீதுள்ள நம்பிக்கை வளர்ச்சியினால்; ப்ரஹ்மக்கர்யேண—பிரம்மச்சரியத்தினால்; ஸஸ்வத்—எப்போதும்; அஸம்ப்ரமாதேன—குழப்பமடையாதிருப்பதினால்; ய-மேன—பொறுமையினால்; வாசாம்—வார்த்தைகளின்; ஸர்வத்ர—எங்கும்; மத-பாவ—என்னை நினைத்து; விசக்ஷணேன—அமிழ்வதினால்; ஞானேன—அறிவு வளர்ச்சியினால்; விஜ்ஞான—அறிவினை நடைமுறைப் படுத்துவதினால்; வ்ராஜிதேன—ஒளி பெற்று; யோகேன—பக்தி யோகத்தினைப் பயில்வதினால்; த்ருதி—பொறுமை; உத்யம—பேரார்வம்; ஸத்த்வ—தன் விருப்பு உரிமை; யுக்த—விட்டுவிடுதல்; லிங்கம்—உலகப் பிடிப்பின் காரணம்; வ்யபோ ஹேத்—ஒருவனால் துறக்க முடியும்; குஷவ—முற்றிலும் மங்களகரமானதில்; அஹம்-ஆக்யம்—தவறான ஆணவம்; பௌதீக உலகுடன் கூடிய தவறான அடையாளம்.
ஓ, எந்தன் மைந்தர்களே! நீங்கள் மேன்மை மிக்க ஆன்மீக குரு ஒருவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நீங்கள், முழுமுதற் கடவுளான என்னிடத்தில் உங்கள் நம்பிக்கை மற்றும் அன்பினை வைத்தல் வேண்டும். புலனுகர்ச்சியை விட்டுவிட்டு, மழை, வெயில் என்பதான பருவமாற்றங்களைப் போன்ற இன்ப, துன்பம் என்னும் இருமை மயக்கத்தினைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். உயிர்களின் துன்ப நிலைக்கான காரணத்தை அறிந்து கொள்ள முயலுங்கள். அவர்கள் தேவ லோகத்தில் கூடத் துன்பம் அனுபவிக்கின்றனர். உண்மையினைப் பற்றித் தத்துவார்த்தமாக வினவுங்கள். பின்னர் பக்தித் தொண்டின் பொருட்டு அனைத்து வகையான தவங்களையும், துறவறங்களையும் மேற்கொள்ளுங்கள். புலனின்பத்திற்கான முயற்சிகளைக் கைவிட்டு பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுங்கள். முழுமுதற் கடவுளைப் பற்றியக் கலந்துரையாடல்களைக் கவனமாகக் கேளுங்கள். எப்போதும் பக்தர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். பரம புருஷ பகவானைப் பற்றி ஓதுங்கள், புகழுங்கள். ஆன்மீக உணர்வு நிலையில் அனைவரையும் சமமாக நோக்குங்கள். பகைமையினை விட்டொழியுங்கள். சினத்தையும், துக்கத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள். தன்னை உடலுடனும், குடும்பத்துடனும் அடையாளம் காண்பதைத் தவிருங்கள். வேதசாத்திரங்களைக் கற்பதில் பயிற்சி பெறுங்கள். தனிமையான இடத்தில் வாழ்ந்து உங்களது உயிர், மூச்சு, மனம், புலன்களைக் கட்டுப்படுத்தும் முறையினைப் பயிற்சி செய்யுங்கள். வேத இலக்கியங்களிலும், சாத்திரங்களிலும் முழு நம்பிக்கை வையுங்கள். எப்போதும் பிரம்மச்சாரியத்தினை மேற்கொள்ளுங்கள். உங்களது சுதர்மத்தினைச் செய்யுங்கள், வீண் பேச்சுக்களைத் தவிருங்கள். முழுமுதற் கடவுளை எப்போதும் சிந்தித்து சரியான இடத்திலிருந்து அறிவினைப் பெறுங்கள். இவ்வாறு பக்தி யோகத்தினை அமைதியாகவும், பொறுமையாகவும் பயிற்சி செய்தால் நீங்கள் ஞானத்தில் உயர்நிலை பெறுவதோடு தவறான ஆணவத்தினை விட்டுவிடும் திறனையும் பெறுவீர்கள்.
பதம் 5.5.14
கர்மாஸயம் ஹ்ருதய-க்ரந்தி-பந்தம்
அவித்யயாஸாதிதம் அப்ரமத்த:
அனேன யோகேன யதோபதேஸம்
ஸம்யக் வ்யபோஹ்யோபரமேத யோகாத்
கர்ம ஆஸயம்—பலன் தரும் செயல்களின் மீதான ஆசை; ஹ்ருதய-க்ரந்தி—இதயத்திலுள்ள முடிச்சு; பந்தம்—பந்தம்; அவித்யயா—அறியாமையின் காரணமாக; ஆஸாதிதம்—வருவது; அப்ரமத்த—அறியாமை மற்றும் மாயையினால் மூடப்படாது மிகவும் எச்சரிக்கையாக; அனேன—இதன் மூலம்; யோகேன—யோகப் பயிற்சியினால்; யதா-உபதேஷம்—அறிவுறுத்தப்பட்டிருக்கின்றபடி; ஸம்ய—முற்றிலும்; வ்யபோஹ்ய—இருந்து விடுதலை பெறுதல்; உபரமேத—ஒருவன் தவிர்த்தல் வேண்டும்; யோகாத்—விடுதலையின் பாதையான யோகப்பயிற்சியிலிருந்து.
நான் உங்களுக்கு அறிவுறுத்தியுள்ளபடி அன்பு மைந்தர்களே செயல்படுவீராக. மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள். இவ்வழியே நீங்கள் பலன் தரும் செயலின் மீதுள்ள ஆசையின் அறியாமையிலிருந்து விடுதலை பெறுவீர். மேலும் உங்களது உளமார்ந்த முடிச்சும் முற்றிலும் துண்டிக்கப்படும். மேலும் வளர்ச்சி பெறுவதற்காக நீங்கள் இந்த வழிகளையும் துறத்தல் வேண்டும். அதாவது நீங்கள் விடுதலைக்கான முறையின் மீதும் பற்றுடையவர்களாக கூடாது.
பதம் 5.5.15
புத்ராம்ஸ ச ஸிஷ்யாம் ச ந்ருபோ குருர் வா
மல்-லோக-காமோ மத்-அனுக்ரஹார்த:
இத்தம் விமன்யுர் அனுஸிஷ்யாத் அதஜ்-ஜ்ஞான்
ந யோஜயேத் கர்மஸு கர்ம-மூடான்
கம் யோஜயன் மனுஜோ ‘ர்தம் லபதே
நிபாதயன் நஷ்ட-த்ருஸம் ஹி கர்தே
புத்ரான்—மைந்தர்கள்; ச—மேலும்; ஸிஷ்யான்—சீடர்கள்; ச—மேலும்; ந்ருப—மன்னர்; குரு—ஆன்மீகக் குரு; வா—அல்லது; மத்-லோக-காம—எனது இருப்பிடத்திற்குச் செல்லும் விருப்பம்; மத்-அனுக்ரஹ-அர்த—எனது கருணையினை அடைவதே வாழ்க்கை லட்சியமாக நினைத்தல்; இத்தம்—இந்தப் பாணியில்; விமன்யு—சினத்திலிருந்து விடுதலை; அனுஸிஷ்யாத்—உபதேசித்தல் வேண்டும்; அ-தத்-ஜ்ஞான்—ஆன்மீக ஞானத்தினை இழந்து; ந—இல்லை; யோஜயேத்—ஈடுபட வேண்டும்; கர்மஸு—பலன் தரும் செயல்களில்; கர்ம-மூடான்—வெறுமனே பக்தி அல்லது இழிவான செயல்களில் ஈடுபடுதல்; கம்—என்ன; யோஜயன்—ஈடுபடுதல்; மனு-ஜ:—ஓர் மனிதன்; அர்தம்—பலன்; லபேத—எய்தக் கூடும்; நிபாத்யன்—வீழ்வதற்குக் காரணம்; நஷ்ட-த்ருஷம்—தனது உன்னதப் பார்வையினை ஏற்கனவே தொலைத்தவர்; ஹி—உண்மையில்; கர்தே—குழியினுள்.
ஒருவன் வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடையும் உண்மையான விருப்பமுடையவனாக இருந்தானென்றால் அவன் தன் வாழ்வின் உயர் நோக்கமாகவும், இறுதி லட்சியமாகவும் முழுமுதற் கடவுளின் கருணை ஒன்றினை மட்டுமே கொள்ள வேண்டும். தந்தை மகனுக்கும், ஆன்மீக குரு சீடனுக்கும், ஒர் அரசன் தன் குடி மக்களுக்கும் உபதேசிக்கும் பொழுது நான் உங்களுக்கு உபதேசித்தது போலவே செய்தல் வேண்டும். தனது மைந்தனோ, அல்லது சீடனோ அல்லது குடிமகனோ தனது கட்டளைகளை சில நேரங்களில் பின்பற்ற முடியாது. இருப்பினும் அவர்கள் மீது எந்தவிதமான சினமும் கொள்ளாது அவன் தொடர்ந்து அவர்களுக்கு உபதேசித்தல் வேண்டும். பாவ புண்ணியச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் அறியாமை மிக்கவர்கள் கூட எல்லாவழிகளிலும் பக்தித் தொண்டில் ஈடுபட வேண்டும். அவர்கள் எப்போதும் சுயச் சார்பான செயலைத் தவிர்த்தல் வேண்டும். ஒருவன் ஏற்கனவே மெய்யுணர்வுப் பார்வையினை இழந்திருக்கும் தன் சீடனையோ அல்லது குடிமகனையோ கர்ம வினையின் கட்டுக்குள் வைத்தானென்றால் ஒருவன் அதனால் அடையக் கூடிய நன்மை என்ன? இது கண்ணிழந்த குருடனை அழைத்துக் கொண்டுபோய் பாழுங்கிணற்றில் தள்ளுவது போன்றதாகும்.
பதம் 5.5.16
லோக: ஸ்வயம் ஷ்ரேயஸி நஷ்ட-த்ருஷ்டிர்
யோ ‘ர்தான் ஸமீஹேத நிகாம-காம:
அன்யோன்ய-வைர: ஸுக-லேஸ- ஹேதோர்
அனந்த-து:கம் ச ந வேத மூட:
லோக—மக்கள்; ஸ்வயம்—சுயமாக; ஷ்ரயேஸி—மங்களகரமானப் பாதையின்; நஷ்ட-த்ருஷ்டி—பார்வையினை இழந்தோர்; ய—அவர்; அர்தான்—புலனுகர்ச்சிக்கானப் பொருட்கள்; ஸமீஹேத—ஆசை; நிகாம-காம—புலனின்பத்திற்குரிய காம இச்சைகள்; அன்யோன்ய-வைர—ஒருவர் மற்றொருவர் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டு; ஸுக-லேஸ-ஹோதோ—நிரந்தரமில்லாத பௌதீக இன்பத்திற்காக; அனந்த து:கம்—அளவில்லாத துக்கம்; ச—மேலும்; ந—இல்லை; வேத—அறிதல்; மூட—மூடர்கள்.
அறியாமை காரணமாக லோகாயத மனிதன் தனது வாழ்க்கையின் மங்கலப் பாதையான தன் நலத்தினைப் பற்றி ஏதும் அறியாதவனாக இருக்கின்றான். காம இச்சைகளினால் அவன் மிக எளிதாக உலக இன்பத்தில் பிணைக்கப்பட்டுவிடுகிறான். மேலும் அவன் திட்டங்கள் அனைத்தும் இந்நோக்கத்திற்காகவே தீட்டப்படுகின்றன. நிரந்தரமற்றப் புலனுகர்ச்சிக்காக இம்மனிதன் காழ்ப்புணர்ச்சியுடைய சமுதாயத்தினை உருவாக்குகின்றான். இம் மனநிலையினால் அவன் துன்பக் கடலில் வீழ்கிறான். இம்மூட மனிதனால் இதனை அறிந்து கொள்ளவும் இயன்றிலது.
பதம் 5.5.17
கஸ் தம் ஸ்வயம் தத்-அபிஜ்ஞோ விபஸ்சித்
அவ்தியாயாம் அந்தரே வர்த்தமானம்
த்ருஷ்ட்வா புனஸ் தம் ஸக்ருண: குபுத்திம்
ப்ரயோஜயேத் உத்பதகம் யதாந்தம்
க:—யார் அந்த மனிதன்; தம்—அவனது; ஸ்வயம்—சுயமான; தத் அபிஜ்ஞ:—ஆன்மீக ஞானத்தினை அறிதல்; விபஸ்சித்—ஓர் கற்றறிந்த அறிஞன்; அவித்யாயாம் அந்தரே—அறியாமையில்; வர்த்தமானம்—வாழ்தல்; திருஷ்ட்வா—கண்டு; புன:—மீண்டும்; தம்—அவனது; ஸ கருண:—மிகுந்த கருணையுடன்; குபுத்திம்—”ஸம்ஸார” பாதையின் மீது பற்றுடையவன்; ப்ரயோஜயேத்—ஈடுபடுதல்; உத்பதகம்—தவறானப் பாதையில் செல்பவன்; யதா—போன்று; அந்தம்—ஒரு குருடன்.
அறியாமை மற்றும் சம்சாரப் பாதையின் மீது பற்றுடையவனாக இருக்கும் ஒருவனை, உண்மையான கல்வியறிவு, கருணை மற்றும் ஆன்மீக ஞானத்தில் வளர்ச்சியுடையவர் எவ்வாறு பலன் தரும் செயலில் ஈடுபடுத்தி அவனை மேலும் உலக வாழ்வின் சிக்கலில் அமிழ்த்துவான்? விழியற்றக் குருடன் ஒருவன் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றான். ஆபத்தினை நோக்கி அவன் மேலும் முன்னேறுவதை மேன்மை மிக்க ஒருவன் எவ்வாறு அனுமதிப்பான்? இம்முறையினை எவ்வாறு அவனால் அங்கீகரிக்க முடியும்? புத்திமான் அல்லது அன்புடைய ஒருவன் இதனை அனுமதிப்பதில்லை.
பதம் 5.5.18
குருர் ந ஸ ஸ்யாத் ஸ்வ-ஜனோ ந ஸ ஸ்யாத்
பிதா ந ஸ ஸ்யாஜ் ஜனனீ ந ஸா ஸ்யாத்
தைவம் ந தத் ஸ்யான் ந பதிஷ் ச ஸ ஸ்யான்
ந மோசயேத் ய: ஸமுபேத-ம்ருத்யும்
குரு:—ஆன்மீக குரு; ந—இல்லை; ஸ:—அவர்; ஸ்யாத்—ஆவது; ஆஸவ-ஜன:—ஒரு உறவினர்; ந—இல்லை; ஸ:—அம் மனிதன்; ஸ்யாத்—ஆவது; பிதா—ஓர் தந்தை; ந—இல்லை; ஸ—அவர்; ஸ்யாத்—ஆவது; ஜனனீ—ஓர் அன்னை; ந—இல்லை; ஸா—அவன்; ஸ்யாத்—ஆவது; தைவம்—வணங்கும் தெய்வம்; ந—இல்லை; தத்—அந்த; ஸ்யாத்—ஆவது; பதி—ஓர் கணவன்; ச—மேலும்; ஸ—அவர்; ஸ்யாத்—ஆவது; ந—இல்லை; மோசயேத்—மீட்பது; ய—அவர்; ஸமுபேத-ம்ருத்யும்—ஜனன, மரண சுழற்சியில் மீண்டும், மீண்டும் சிக்க வைக்கும் பாதையில் செல்பவன்.
தன்னைச் சார்ந்திருப்போரை பிறப்பு இறப்புச் சுழற்சியில் மீண்டும், மீண்டும் சிக்கவைக்கும் பாதையிலிருந்து மீட்க முடியாதவன் ஒர் ஆன்மீக குருவாகவோ, ஒரு தந்தையாகவோ, தாயகவோ, வணங்குதற்குரியத் தேவனாகவோ ஆதல் கூடாது.
பதம் 5.5.19
இதம் ஸரீரம் மம துர்விபாவ்யம்
ஸத்த்வம் ஹி மே ஹ்ருதயம் யத்ர தர்ம:
ப்ருஷ்டே க்ருதோ மே யத் அதர்ம ஆராத்
அதோ ஹி மாம் ருஷபம் ப்ராஹுர் ஆர்யா:
இதம்—இந்த; ஸரீரம்—உன்னத உடல், ஸச் சித்-ஆனந்த- விக்ரஹம்; மம—எனது; துர்விபாவ்யம்—கற்பனைக்கும் எட்டாதது; ஸத்த்வம்—ஜட இயற்கைக் குணங்களின் கறைபடியாதது; ஹி—உண்மையில்; மே—எனது; ஹ்ருதயம்—இதயம்; யத்ர—அங்கே; தர்ம:—தர்மத்தின் உண்மைத் தளமேடை, பக்தி-யோகம்; ப்ருஷ்டே—பிருஷ்டத்தில்; க்ருத:—செய்யப்பட்டது; மே—என்னால்; யத்—ஏனெனில்; அதர்ம—அதர்மம்; ஆராத்—வெகு தொலைவில்; அத:—ஆகையினால்; ஹி—உண்மையில்; மாம்—எனது; ருஷபம்—உயிர்களில் மிகச் சிறந்த; ப்ராஹு:—அழைத்தல்; ஆர்யா:—ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறியவர்கள் அல்லது மரியாதைக்குரிய மூத்தோர்கள்.
எனது உன்னத உடலான சச் சித் ஆனந்த விக்ரஹம் ஒர் மானுட வடிவினைப் போலவே தோன்றும். ஆயினும் இது பெளதீக மானுட உடல் அல்ல. இது கற்பனைக்கெட்டாதது. ஒரு குறிப்பிட்ட உடலை ஏற்றுக் கொள்வதற்கு ஜட இயற்கையினால் நான் பலவந்தப்படுத்தப்படுவதில்லை; நான் எனது இனிமையான விருப்பத்தினாலேயே ஓர் உடலினை ஏற்றுக் கொள்கிறேன். எனது இதயமும் கூட ஆன்மீகமானதே, மேலும் நான் எப்போதும் எனது பக்தர்களின் நலனைப் பற்றியே சிந்திக்கின்றேன். எனவே எனது இதயத்தினுள் பக்தர்களுக்கானப் பக்தித் தொண்டினைக் காண முடியும். எனது இதயத்திலிருந்து வெகு தொலைவில் நான் அதர்மங்களையும் பக்தியல்லாத செயல்களையும் அழித்திருக்கிறேன். அவை எனக்குப் பொருந்தவில்லை. இவ்வுன்னதக் குணங்களின் காரணமாகவே மக்கள் பொதுவாக என்னை உயிர்கள் அனைவரினும் சிறந்த, முழுமுதற் கடவுள் தேவர் என்று வழிபடுகின்றனர்.
பதம் 5.5.20
தஸ்மாத் பவந்தோ ஹ்ருதயேன ஜாதா:
ஸர்வே மஹீயாம்ஸம் அமும் ஸநாபம்
அக்லிஷ்ட-புத்த்யா பரதம் பஜத்வம்
ஸுஷ்ருணம் தத் பரணம் ப்ரஜானாம்
தஸ்மாத்—ஆகையினால் (நானே பரம்பொருள் என்ற காரணத்தினால்); பவந்த்:—நீவிர்; ஹ்ருதயேன—எனது இதயத்திலிருந்து; ஜாதா:—பிறந்தது; ஸர்வே—அனைவரும்; மஹீயாம்ஸம்—மிகச் சிறந்த; அமும்—அந்த; ஸ-நாபம்—சகோதரன்; அக்லிஷ்ட-புத்த்யா—உமது புத்தியுடன், பௌதீக மாசு இன்றி; பரதம்—பரதன்; பஜத்வம்—தொண்டு செய்ய முயலுங்கள்; ஸுஷ்ருஷணம்—தொண்டு; தத்—அந்த; பரணம் ப்ரஜானாம்—மக்களை ஆள்வது.
அன்பு மைந்தர்களே, ஆன்மீகக் குணங்கள் அனைத்திற்கும் உறைவிடமான எனது இதயத்திலிருந்து நீங்கள் அனைவரும் பிறந்தீர்கள். ஆகையினால் நீங்கள் லோகாயதவாதிகளாகவும், காழ்ப்புணர்ச்சி உடையவர்களாகவும் இருத்தல் கூடாது. நீங்கள் அனைவரும் பக்தித் தொண்டில் மிக்குயர்ந்த உங்கள் மூத்த சகோதரன் பரதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். பரதனின் தொண்டில் நீங்கள் ஈடுபட்டால், அவனுக்குச் செய்யும் அத்தொண்டில் எனது தொண்டும் உள்ளடங்கியதாகும். மேலும் குடிமக்களை நீங்களே ஆட்சி செய்யவும் தொடங்குவீர்கள்.
பதங்கள் 5.5.21 – 5.5.22
பூதேஷு வீருத்ப்ய உதுத்தமாயே
ஸரீஸ்ருபாஸ் தேஷு ஸபோத-நிஷ்டா:
ததோ மனுஷ்யா ப்ரமதாஸ் ததோ ‘பி
கந்தர்வ-ஸித்தா விபுதானுகா யே
தேவாஸுரேப்யோ மகவத்-ப்ரதானா
தக்ஷாதயோ ப்ரஹ்ம-ஸுதாஸ் து தேஷாம்
பவ: பர: ஸோ ‘த விரிஞ்ச வீர்ய:
ஸ மத்-பரோ ‘ஹம் த்விஜ-தேவ-தேவ:
பூதேஷு—தோன்றும் உயிர்கள்; (உயிரின் அடையாளம் உடைய மற்றும், அடையாளமற்ற); வீருத்ப்ய—செடிகளைவிட; உதுத்தமா—மேலானவை; யே—அவை; ஸரீஸ்ருபா—புழு மற்றும் பாம்புகளைப் போல் ஊர்வன; தேஷு—அவற்றின்; ஸ-போத-நிஷ்டா—புத்தி வளர்ச்சியுடையவர்கள்; தத:—அவற்றை விட; மனுஷ்யா:—மனிதர்கள் ஆவர்; ப்ரமதா:—பேய்ப் பிசாசுகள்; தத: அபி—அவற்றைவிட; கந்தர்வ—கந்தர்வ லோகத்தைச் சேர்ந்தவர்கள் (தேவருலகின் இசைக்கலைஞர்களாக நியமிக்கப்பட்டவர்கள்); ஸித்தா:—யோக ஸித்திகளையுடைய ஸித்த லோகத்தைச் சேர்ந்தவர்கள்; விபுத-அனுகா:—கின்னரர்கள்; யே—அவர்கள்; தேவ—தேவர்கள்; அஸுரேப்ய:—அசுரர்களை விட; மகவத்-ப்ரதானா—தலைவன் இந்திரன்; தக்ஷ-ஆதய:—தக்ஷனில் தொடங்கி; ப்ரஹ்ம-ஸுதா:—பிரம்ம தேவனின் நேரடிப் புதல்வர்கள்; து—பின்னர்; தேஷாம்—அவர்களின்; பவ—சிவபெருமான்; பர:—மிகச்சிறந்த; ஸ—அவர் (சிவபெருமான்); அத—மேலும்; விரிஞ்ச வீர்ய—பிரம்ம தேவனிடமிருந்து தோன்றிய; ஸ—அவர் (பிரம்ம தேவன்); மத்-பர:—எனது பக்தன்; அஹம்—நான்; த்விஜ-தேவ-தேவ:—அந்தணர்களால் வழிபடப்படுபவர்; அல்லது அந்தணர்களின் பகவான்.
உயிருடைய மற்றும் உயிரற்ற என்னும் இரண்டு விதமான சக்திகள் வெளிப்படும்பொழுது உயிரிருந்தும் அசையாதவை மரம், செடி, கொடிகள் போன்ற பொருட்கள் அசையாத பிண்டங்களாகிய கல், மண் போன்றவற்றைக் காட்டிலும் உயர்ந்தவையே ஆகும். அசையாத மரம், செடி, கொடிகளைக் காட்டிலும் அசையும் உயிர்கள் மற்றும் ஊர்வன போன்ற பூச்சிகள், பாம்புகள், புழுக்கள் உயர்ந்தவையாகும். புழு, பூச்சி, பாம்புகளைக் காட்டிலும் ஐந்தறிவுடைய விலங்குகள் உயர்ந்தவையாகும். ஐந்தறிவுடைய விலங்குகளைக் காட்டிலும் ஆறறிவுடைய மனிதர்கள் உயர்ந்தவர்கள், இம் மனிதர்களைக் காட்டிலும் பேய், பிசாசுகள் உயர்ந்தவையாகும். ஏனெனில் இவற்றிற்குப் பரு உடல்கள் கிடையா. பேய்களைக் காட்டிலும் கந்தர்வர்களும், கந்தர்வர்களை விட சித்தர்களும், சித்தர்களைவிடக் கின்னரர்களும், கின்னரர்களைவிட அசுரர்களும், அசுரர்களைவிட தேவர்களும், தேவர்களைவிட இந்திரனும், இந்திரனை விட பிரம்ம தேவனுக்குப் பிறந்த தக்ஷன் போன்றவர்களும், பிரம்ம தேவனின் புதல்வர்களுள் சிவபெருமானும், சிவபெருமானின் தந்தை ஆதலினால் பிரம்ம தேவனும் உயர்ந்தவர் ஆவார். அப்பிரம்ம தேவனும் முழுமுதற் கடவுளான எனக்குக் கீழானவரே. அந்தணர்கள் மீது நான் பெரிதும் நாட்டமுடையவன் ஆதலினால், அந்தணர்களே அனைவரினும் சிறந்தவர்கள் ஆவர்.
பதம் 5.5.23
ந ப்ராஹ்மணைஸ் துலயே பூதம் அன்யத்
பஸ்யாமி விப்ராஹி கிம் அத: பரம் து
யஸ்மின் ந்ரூபி: ப்ரஹுதம் ஸ்ரத்தயாஹம்
அஸ்நாமி காமம் ந ததாக்னி-ஹோத்ரே
ந—இல்லை; ப்ராஹ்மண:—அந்தணர்களுடன்; துலேய—இணையாகக் கருதுகிறேன்; பூதம்—உயிர்வாழி; அன்யத்—அடுத்தவர்; பஸ்யாமி—நான் காண்கிறேன்; விப்ரா:—ஓ, கூடியிருக்கும் அந்தணர்களே; கிம்—ஏதேனும்; அத:—அந்தணர்களுக்கு; பரம்—உயர்ந்த; து—நிச்சயமாக; யஸ்மின்—அவர் மூலம்; ந்ருபி:—மக்களினால்; ப்ரஹுதம்—முறைப்படி செய்யப்பட்ட வேள்விகளில் நிவேதனமாக அர்ப்பணிக்கப்படும் உணவு; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடனும், அன்புடனும்; அஹம்—நான்; அஸ்நாமி—உண்கிறேன்; காமம்—முழு திருப்தியுடன்; ந—இல்லை; ததா—இவ்வழியில்; அக்னி-ஹோத்ரே—அக்னி வேள்வியில்.
ஒ, மரியாதைக்குரிய அந்தணர்களே! என்னைப் பொருத்தவரை அந்தணர்களுக்கு இணையாகவோ அல்லது உயர்வாகவோ இவ்வுலகில் எவருமிலர். அவர்களோடு ஒப்பிடக் கூடியவர்களை இதுவரை நான் யாரையும் காணவில்லை. எனது நோக்கத்தினை அறிந்து கொண்டிருப்போர், வேத நெறிகளுக்கேற்பச் சடங்குகளைச் செய்து முடித்த பின்னர் ஒர் அந்தணின் வாயின் மூலமாக பக்தியுடனும், அன்புடனும் எனக்கு உணவுப் பொருட்களை நிவேதனம் செய்கின்றனர். இவ்வாறு உணவு அளிக்கப்படும்பொழுது நான் அதனை முழுத்திருப்தியுடன் உண்கிறேன். உண்மையில் வேள்வித் தீயில் அர்ப்பணிக்கப்படும் உணவுப் பொருளைக் காட்டிலும் இவ்வழியில் அளிக்கப்படும் உணவிலிருந்தே நான் மிகுந்த இன்பமடைகிறேன்.
பதம் 5.5.24
த்ருதா தனூர் உஸதீ மே புராணீ
யேனேஹ ஸத்த்வம் பரமம் பவித்ரம்
ஸமோ தம: ஸத்யம் அனுக்ரஹஸ் ச
தபஸ் திதிக்ஷானுபவஸ் ச யத்ர
த்ருதா—உன்னதக் கல்வியினால் பேணப்பட்டு; தனூ:—உடல்; உஸதி—பௌதீக மாசிலிருந்து விடுதலை பெற்று; மே—எனது; புராணீ—நித்திய; யேன—அவர்களினால்; இஹ—இப்பௌதீக உலகில்; ஸத்த்வம்—சத்துவக் குணம்; பரமம்—உயர்ந்த; பவித்ரம்—தூய்மையான; ஸம:—மனக்கட்டுப்பாடு; தம:—புலனடக்கம்; ஸத்யம்—வாய்மையுடைய; அனுக்ரஹ:—கருணை; ச—மேலும்; தப:—தவம்; திதிக்ஷா—பொறுமை; அனுபவ:—கடவுள் மற்றும் உயிர்வாழியினை உணர்தல்; ச—மேலும்; யத்ர—இங்கே.
வேதங்கள் எனது உன்னதமான ஒலி அவதாரங்களாகும். எனவே வேதங்கள் “சப்த பிரம்மம்” எனப்படுகின்றன. இவ்வுலகில் அந்தணர்கள் வேதங்களை முழுதும் கற்று வேத முடிவுகளோடு ஒன்றியிருக்கும் காரணத்தினால் அவர்களும் கூட வேதங்களின் வடிவமாகவே கருதப்படுகின்றனர். அந்தணர்கள் ஜட இயற்கையின் உன்னதக் குணமான சத்துவக் குணத்தில் நிலை பெற்றிருக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் மனவடக்கம் (ஸம), புலனடக்கம் (தம), வாய்மையுடைமை (ஸத்ய) நிறைந்தவர்களாக இருக்கின்றனர். வேதங்களை அவர்கள் அவற்றின் உண்மை உருவில் விளக்குகின்றனர். மேலும் கருணையினால் (அனுக்ரஹத்தினால்) அவர்கள் அனைத்துப் பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கும் வேதங்களை எடுத்தோதுகின்றனர். அவர்கள் தவம் (தபஸ்ய) மற்றும் பொறுமையினைப் (திதிக்ஷா) பயில்கின்றனர். இவையே அந்தணர்களுக்கான எட்டுத் தகுதிகள் ஆகும். ஆகையினால் உயிர்களுள் அந்தணர்களை விட உயர்ந்தவர் என்று யாரும் இல்லை.
பதம் 5.5.25
மத்தோ ‘பி அனந்தாத் பரத: பரஸ்மாத்
ஸ்வர்காபவர்காதிபதேர் ந கிஞ்சித்
யேஷாம் கிம் உ ஸ்யாத் இதரேண தேஷாம்
அகிஞ்சனானாம் மயி பக்தி-பாஜாம்
மத்த:—என்னிடமிருந்து; அபி—கூட; அனந்தாத்—வலிமையிலும், செல்வத்திலும் அளவற்ற; பரத:-பரஸ்மாத்—பெரிதினும் பெரிய; ஸ்வர்க-அபவர்க-அதிபதே:—சொர்க்கத்தில் இருப்பதினாலும், விடுதலையினாலும் மகிழ்ச்சியினை அடையச் செய்வதற்கான வரம் தரும் திறனுடையவர் அல்லது உலக சுகங்களை அனுமதிப்பதினாலும் பின்னர் விடுதலையினாலும் மகிழ்ச்சியடையச் செய்யும் திறனுடையவர்; ந—இல்லை; கிஞ்சித்—ஏதேனும்; யேஷாம்—அவரது; கிம்—என்ன தேவை; உ—ஒ; ஸ்யாத்—இருக்கக் கூடும்; இதரேண—மற்ற எவருடனும்; தேஷாம்—அவர்களின்; அகிஞ்சனானாம்—தேவைகளோ அல்லது உடைமைகளோ இன்றி; மயி—எனக்கு; பக்தி-பாஜாம்—பக்தித் தொண்டு செய்வது.
நான் பிரம்மதேவன் மற்றும் தேவர்களின் தலைவனான தேவேந்திரன் போன்றவர்களை விட செல்வம், செயல்திறன் போன்றவற்றில் உயர்ந்தவனாவேன். மறுமைப்பயன் அடைவதினாலும் வீடுபேறு பெறுவதினாலும் உண்டாகும் அனைத்து மகிழ்ச்சிக்கான வரம் அருள்பவனும் நானேயாவேன். இருந்தும் அந்தணர்கள் பௌதீக சுகங்களை என்னிடம் எப்போதும் விழைவதில்லை. அவர்கள் தூய்மை மிக்கவர்கள் என்பதோடு எதையும் தம்மிடம் வைத்துக் கொள்ளவும் விரும்புவதில்லை. அவர்கள் எனது பக்தித் தொண்டு ஒன்றில் மட்டுமே ஈடுபடுகின்றனர். அதனால் எவரிடமிருந்தும் உலக சுகங்களைக் கேட்டுப் பெறும் தேவை அவர்களுக்கு என்ன இருக்கிறது?
பதம் 5.5.26
ஸர்வாணி மத்-திஷ்ணுயதயா பவத்பிஸ்
சராணி பூதாணி ஸீதா த்ருவாணி
ஸம்பாவிதவ்யானி பதே பதே வோ
விவிந்த-த்ருக்பிஸ் ததி உ ஹார்ஹணம் மே
ஸர்வாணி—அனைத்தும்; மத்—திஷ்ணுயதயா என்னுடைய இருப்பிடமானதினால்; பவத்பி:—உங்களால்; சராணி—அசையும்; பூதானி—உயிர்ப் பொருட்கள்; ஸுதா—அன்பு மைந்தர்களே; த்ருவாணி—அசையாதவை; ஸம்பாவிதவ்யாளி—மதிக்கப்பட வேண்டும்; பதே பதே—ஒவ்வொரு கணமும்; வோ—உங்களால்; விவிந்த-த்ருக்பி—சீரிய பார்வையும், உணர்வும் உடையவர்களாக (முழுமுதற் கடவுள் பரமாத்மா வடிவில் எங்கும் இருக்கின்றனர்); தத் உ—அது மறை முகமாக; ஹ—உறுதியாக; அர்ஹணம்—மரியாதை அளித்து; மே—எனக்கு.
அன்பார்ந்த மைந்தர்களே, அசையும், அசையாத எந்த உயிரிடத்தும் நீங்கள் காழ்ப்புணர்ச்சிக் கொள்ளக் கூடாது. அவைகளிடமெல்லாம் நான் இருக்கின்றேன் ஆதலினால் நீங்கள் அனைவரும் அவற்றிற்கு ஒவ்வொரு கணமும் மரியாதை அளித்தல் வேண்டும்.
பதம் 5.5.27
மனோ-வசோ-த்ருக்-கரணேஹிதஸ்ய
ஸாக்ஷாத்-க்ருதம் மே பரிபர்ஹணம் ஹி
விநா புமான் யேன மஹா-விமோஹாத்
க்ருதாந்த-பாஸான் ந விமோக்தும் ஈஸேத்
மன:—மனம்; வச:—வாக்கு; திருக்—நோக்கு; கரண—புலன்கள்; திதஸ்ய—எல்லாச் செயல்களையும் (உடல், சமுதாயம், நட்பு போன்றவற்றைக் கவனித்தலுக்காக); ஸாக்ஷாத்-க்ருதம்—நேரடியாக அர்ப்பணித்து; மே—எனது; பரிபர்ஹணம்—வழிபடுதல்; ஹி—ஏனென்றால்; விநா—இன்றி; புமான்—எவரேனும்; யேன—அதன்; மஹா-விமோஹாத்—மகா மாயையிலிருந்து; க்ருதாந்த-பாஸாத்—யமராஜனின் உறுதிமிக்கக்கயிறு போன்று; ந—இல்லை; விமோக்தும்—விடுதலையடைதல்; ஈஸேத்—கூடும்.
புலனேந்திரியங்களின் உண்மைச் செயலானது மனம், வாக்கு, நோக்கு என்னும் அறிவுப் புலன்கள் மற்றும் செயற்புலன்கள் முற்றிலும் எனது தொண்டிலேயே ஈடுபடுத்தப்படுகின்றது. புலன்கள் அவ்வாறு ஈடுபடுத்தப்படவில்லையென்றால் யமராஜானின் உறுதிமிக்க கயிற்றைப் போன்றே உலக வாழ்வின் சிக்கலிலிருந்து எந்த உயிரும் வெளியே வர முடியாது.
பதம் 5.5.28
ஸ்ரீ ஸுக உவாச
ஏவம் அனுஸாஸ்யாத்மஜான் ஸ்வயம் அனுஸிஷ்டான் அபி லோகானு
ஸாஸனார்தம் மதானுபாவ: பரம-ஸுஹ்ருத் பகவான் ருஷபாபதேஸ
உபஸம ஸீலானாம் உபரத-கர்மணாம் மஹா-முனீனாம் பக்தி-
ஜ்ஞான-வைராக்யலக்ஷணம் பாரமஹம்ஸ்ய தர்மம்-உபஸிக்ஷமாண:
ஸ்வ-தனய-ஸதஜ்யேஷ்டம் பரம-பாகவதம் பகவஜ்-ஜன-பராயணம்
பரதம் தரணி- பாவனா-யாபிஷிச்ய ஸ்வயம் பவன ஏவோர்வரித-ஸரீர
மாத்ர-பரிக்ரஹ உன்மத்த இவ ககன-பரிதான: ப்ரகீர்ண-கேஸ ஆத்மனி
ஆரோபிதாஹவனீயோ ப்ரஹ்மாவர்தாத் ப்ரவவ்ராஜ
ஸ்ரீ ஸூக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வழியில்; அனுஸாஸ்ய—உபதேசித்த பின்னர்; ஆத்ம-ஜான்—அவரது புதல்வர்கள்; ஸ்வயம்—சுயமாக; அனுஸிஷ்டான்—கலாச்சாரத்தின் உயர்ந்த கல்வி; அபி—இருந்தபோதிலும்; லோக-அனுஸாஸன-அர்தம்—மக்களுக்கு உபதேசிப்பதற்கு; மஹா அனு பாவ:—மகானுபாவர்; பரம-ஸுஹ்ருத்—அனைவரின் மேதகு நலன் விரும்பி; பகவான்—முழுமுதற் கடவுள்; ருஷப-அபதேஸ:—ரிஷப தேவர் என்றறியப்பட்டுப் போற்றப்படுபவர்; உபஸம-ஸீலானாம்—உலக இன்பத்தில் பற்றில்லாதவர்கள்; உபரத-கர்மணாம்:—பலன் தரும் செயல்களில் நீண்ட நாள் விருப்பம் வைக்காதவர்; மஹாமுனீனாம்—மாமுனிவர்கள்; பக்தி—பக்தித் தொண்டு; ஜ்ஞான—ஞானம்; வைராக்ய—பற்றின்மை; லக்ஷணம்—லட்சணம்; பாரமஹம்ஸ்ய—மனிதரில் சிறந்தவர்; தர்மம்—கடமைகள்; உபஸி க்ஷமாண:—உபதேசிக்கின்ற; ஸ்வ தனய—அவரது புதல்வர்களின்; ஸத—நூறு; ஜ்யேஷ்டம்—மூத்தவர்; பரம-பாகவதம்—பகவானின் மிக உயர்ந்த பக்தர்; அந்தணர்கள் மற்றும் வைணவர்கள்; பகவஜ்-ஜன-பராயணம்—இறைவன், பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்களின் பக்தர்களைப் பின்பற்றுபவர்; பரதம்—மகாராஜா; தரணி-பாலனாய—உலகினை ஆளும் நோக்குடன்; அபிஷ்ச்ய—அரியணையின் மீது அமர்த்துதல்; ஸ்வயம்—சுயமாக; பவனே—இல்லத்தில்; ஏவ—இருந்த போதிலும்; உர்பரித—இருந்து கொண்டு; ஸரீர-மாத்ர—உடல் மட்டும்; பரிக்ரஹ—ஏற்றுக் கொண்டு; உன்மத்த—உன்மத்தம் பிடித்தவர் போல; இவ—போன்று; ககன-பரிதான—விண்ணையே ஆடையாக உடுத்து; ப்ரகீர்ண கேஸ—ஜடையிலிருந்து திரிந்த தலை முடியுடன்; ஆத்மனி—அவருக்குள்; ஆரோபித—வைத்துக் கொண்டு; ஆஹவனீய—வேள்வித் தீ; ப்ராஹ்மாத்வர்தாத்—பிரம்மாவர்தம் என்னும் இடத்திற்கு; பிரவவ்ராஜ—உலகமெங்கணும் பயணம் செய்யத் தொடங்கினார்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு அனைவரின் நலனை விரும்பும் பகவான் ரிஷபதேவர் தன்னுடைய மைந்தர்களுக்கு உபதேசித்தார். அவர்கள் அனைவரும் உயர்கல்வியும் நற்பண்பும் உடையவர்களாயினும் ஒரு தந்தை இல்வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறும்பொழுது தன் மைந்தர்களுக்கு எவ்வாறு உபதேசிக்க வேண்டும் என்பதற்கு பகவான் ரிஷப தேவர் மிகச் சிறந்த சான்றாகும். பலன் தரும் செயலினால் பந்தப்படாது, தங்கள் இச்சைகளை வென்று பக்தித் தொண்டில் ஈடுபட்டிருக்கும் துறவிகளும் கூட இவ்வுபதேசத்தினைப் பின்பற்ற வேண்டும். பகவான் ரிஷப தேவர் உபதேசித்த அவரது நூறு மைந்தர்களுள் மூத்தவரான பரதன் சிறந்த பக்தரும், வைணவர்களின் அடியவரும் ஆவார். இவ்வுலகினை ஆளவேண்டும் என்பதற்காக பகவான் தனது மூத்த மைந்தனை, தனது இல்லத்தில் ஆடை உடுத்தாமலும், ஜடை விழுந்த முடியுடனும் ஒரு உன்மத்தம் பிடித்தவனைப் போல் வளர்த்து வந்தார். பின்னர் பகவான் வேள்வித் தீயினைத் தானே எடுத்துக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றிவருவதற்காக பிரம்மா விரதம் என்னும் இடத்திற்குச் சென்றார்.
பதம் 5.5.29
ஜடாந்த- மூக-பதிர-பிஸாசோன்மாதகவத்-அவதூத- வேஷோ
‘பிபாஷ்ய மாணோ ‘பிஜனானாம் க்ருஹீத-மௌன-வ்ரதஸ் தூஷ்ணீம் பபூவ.
ஜட—ஜடமாக; அந்த—குருடராக; மூக—ஊமையாக; பதிர—செவிடாக; பிஸாச—பிசாசு; உன்மாதக—உன்மத்தராக; வித்—போன்று; அவதூத-வேஷ:—ஓர் அவதூதரைப் போன்று (பௌதீக உலகுடன் தொடர்பில்லாதவர் போல்); அபிபாஷ்யமாண:—இவ்வாறு அழைக்கப்பட்டு (செவிடாக, ஊமையாக, குருடாக); அபி—இருந்தபோதிலும்; ஜனானாம்—மக்களால்; கிருஹீத—அனுஷ்டித்தல்; மௌன—மௌனமாக; வ்ரத—விரதம்; தூஷ்ணிம்-பபூவ—அவர் மௌனமாக இருந்தார்.
அவதூதர் எனப்படும் மிகச் சிறந்த மகானாக மாறி உலகியற்கவலைகள் எதுவுமின்றி பகவான் ரிஷப தேவர் மக்கள் மத்தியில் குருடரைப் போல், செவிடு மற்றும் ஊமை மனிதனைப் போல், ஒரு பேய் அல்லது புத்தி நிதானம் இல்லாத மனிதரைப் போல் திரிந்து வந்தார். மக்கள் அவரை இப்படிக் கருதிய போதிலும், யாரிடத்தும் பேசாது அவர் மிக்க அமைதியுடன் இருந்தார்.
பதம் 5.5.30
தத்ர தத்ர புர-க்ராமாகர-கேட-வாட-கர்வட-ஸிபிர-வ்ரஜ-
கோஷஸார்த-கிர-வனாஷ்ரமாதஷ்வ அனுபதம் அவனிசராபஸதை:
பரிபூயமானோ மக்ஷிகாபிர் இவ-வன-கஜஸ் தர்ஜன-தாடனாவம
ஹேனஷ்டீவன-க்ராவ-ஸக்ருத்-ரஜ:-ப்ரக்ஷேப-பூதி-வாத-துருக்தைஸ்
தத் அவிகணயன்ன் ஏவாஸத்-ஸ்த்ஸ்தான ஏதஸ்மின்
தேஹோபலக்ஷணே
ஸத் -அபதேஷ உபயானுபவ ஸ்வரூபேண ஸ்வ-மஸிமா வஸ்தா- னேனாஸமாரோபிதாஹம் மமாபிமானத்வாத் அவிகண்டித-மனா: ப்ருத்வீம் ஏக-சர: பரிபப்ராம
தத்ர தத்ர—இங்கும் அங்கும்; புர—நகரங்கள்; க்ராம—கிராமங்கள்; ஆகர—சுரங்கங்கள்; கேட—விவசாய நிலங்கள்; வாட—நந்தவனங்கள்; கர்வட—பள்ளத்தாக்கிலுள்ள கிராமங்கள்; ஸிபிர—படைவீரர்களின் தங்குமிடங்கள்; வ்ரஜ—மாட்டுத் தொழுவம்; கோஷ—இடையர்களின் இல்லங்கள்; ஸார்த—யாத்ரிகர்கள் தங்கும் இடங்கள்; கிரி—மலைகள்; வன—வனங்கள்; ஆஷ்ரம—தபசிகளின் ஆஸ்ரமங்கள்; ஆதிஷு—போன்றவை; அனுபதம்—அவர் செல்லும் போது; அவனிசர அபஸதை:— விரும்பத்தாகதவர்களினால், துஷ்டர்களினால்; பரிபூயமான:—சூழப்பட்டு; மக்ஷிகாபி:—ஈக்களினால்; இவ—போன்று; வன-கஜ:—வனத்திலிருந்து வரும் ஓர் யானை; தர்கன—அச்சுறுத்தல்களினால்; தாதண—அடித்தல்; அவமேஹன—உடலின் மீது சிறுநீர் தெளித்து; ஷ்டீவன—உடலின் மீது காறி உமிழ்தல்; க்ராவ ஸக்ருத்—கல் மற்றும் மலம்; ரஜ:—புழுதி; ப்ரக்ஷேப—எறிதல்; பூதி-வாத—உடலின் மீது “அபாண வாயுவைச் செலுத்துதல்”; துருக்தை:—கெட்ட வார்த்தைகளினால்; தத்—அது; அவிகணயன்—எதைப்பற்றியும் கவனியாது; ஏவ—இவ்வாறு; அஸத்-ஸம்ஸ்தானே—பண்புள்ள மனிதனுக்குப் பொருந்தாத; ஏதஸ்மின்—இதில்; தேஹ-உபலக்ஷணே—பௌதீக உடலின் வடிவில்; ஸத்-அபதேஷே—உண்மை என அழைத்தல்; உபய அனுபவ ஸ்வரூபேண—உடல் மற்றும் ஆத்மாவின் இருப்பினைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்வதின் மூலம்; ஸ்வ-மஹிம—சுய மகிமை; அவஸ்தானேன—இருப்பதினால்; அஸமாரோபித அஹம்- மம-அபிமானத்வாத்—”நான் எனது” என்னும் தவறான கருத்தினை ஏற்றுக் கொள்ளாது; அவி கண்டித மனா:—மனதில் பாதிப்பின்றி; ப்ருதிவீம்—உலகமெங்கணும்; திர ஏக-சர:—தனியே; ப்ரியப்ராம—அவர் அலைந்தார்.
ரிஷப தேவர் நகரங்கள், கிராமங்கள், சுரங்கங்கள், நகர்ப்புறங்கள், பள்ளத்தாக்குகள், நத்தவனங்கள், இல்லங்கள், சத்திரங்கள், மலைகள், வனங்கள், மற்றும் ஆஸ்ரமங்கள் எல்லாம் சுற்றி வந்தார். வனத்திலிருந்து வரும் யானையினை ஈக்கள் மொய்த்துக் கொள்வது போல் அவர் எங்கு சென்றாலும் தீய சக்திகள் அவரைச் சூழ்ந்து கொள்ளும். அவர் எப்போதும் மிரட்டப்பட்டார், உதைக்கப்பட்டார், சிறுநீர் தெளிக்கப்பட்டார், காறி உமிழப்பட்டார். சில நேரங்களில் மக்கள் அவர்மீது கற்களையும், புழுதியினையும், மலத்தினையும் வாரி இறைத்தனர். சில நேரம் அவர் முன்னர் அபாண வாயுவைக் கழித்தனர். இவ்வாறு மக்கள் அவரைப் பல கெட்டப் பெயர்களிலும் அழைத்து அவருக்கு மிகுந்த தொல்லை கொடுத்தனர். ஆனால் அவரோ, இதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படவில்லை. இவ்வுடலுக்கு இம்முடிவுதான் ஏற்படும் என்பதை அவர் நன்றாக அறிந்தே இருந்தார். அவர் ஆன்மீக சிந்தனையில் நிலைபெற்றிருந்தார். மேலும் அவர் தனது ஆன்மீக மகிமையினால் உலகினரின் அவமதிப்புக்களைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருந்தார். அதாவது உயிரும் உடலும் தனித்தனியானவை என்பதை அவர் முற்றிலும் உணர்ந்திருந்தார். அவரிடம் உடலைப் பற்றிய சிந்தனை கிடையாது. இவ்வாறு அவர் எவர் மீதும் சினம் கொள்ளாது உலகளாவிய நிலையில் தனியே வாழ்ந்து வந்தார்.
பதம் 5.5.31
அதி-ஸுகுமார-கர-சரணோர:-ஸ்தல-விஷல-பாஹ்வ-அம்ஸ-கலவதனாதி-அவயவ-வின்யாஸ: ப்ரக்ருதி-ஸுந்தர-ஸ்வபாவ-ஹாஸ -ஸுமுகோ நவ-நளின-தாலாயமான-ஸிஸிர-தாராருணாயத-நயன- ருசிர: ஸத்ருஷஸுபக-கபோல-கர்ண-கண்ட-நாஸோ விக்ஷட – ஸ்மித வதன மஹோத்ஸவேன புர-வனிதானாம் மனஸி குஸும-ஸராஸனம் உபததான: பராக் -அவலம்பமான குடில-ஜடில-கவிஸ-கேஸ-பூரிபாரோ ‘வதூத-மலின-நிஜ-ஸரீரேண க்ரஹ-க்ருஹீத இவாத்ருஷ்யத
அதி-ஸு-குமார—மிக இனிய; கர—கரங்கள்; சரண—பாதங்கள்; உர:-ஸ்தல—மார்பு; விடில—நீண்ட; பாஹு—கரங்கள்; அம்ஸ—தோள்கள்; கல—கழுத்து; வதன—முகம்; ஆதி—போன்றவை; அவயவ—அவயங்கள்; வினயாஸ:—முறைப்படி அமைந்து; ப்ரக்ருதி—இயற்கையினால்; ஸுந்தர—சுந்தரமான; ஸ்வ-பாவ—இயற்கை சுபாவம்; ஹாஸ—புன்னகையுடன்; ஸு-முக:—அவரது அழகிய வாய்; நவ-நளின-துலாயமான—அன்றலர்ந்த தாமரையின் இதழ்கள் போன்ற; ஸிஸிர—அனைத்துத் துன்பங்களையும் போக்கும்; தார—கருமணிகள்; அருண—சிவந்த; ஆயத—அகல விரிந்த; நயன—விழிகளுடன்; ருசிர:—கவர்ச்சிகரமாக; ஸ்த்ருஷ—அவற்றின்; ஸுபக—எழில்; கபோல—நெற்றி; கர்ண—காதுகள்; கண்ட—கழுத்து; நாஸ:—நாசி; விக்ஷட ஸ்மித—ஆழமானப் புன்னகையினால்; வதன—அவரது முகம்; மஹா-உத்ஸவேன—மகா உத்ஸவம் போன்று (விழா); புர வனிதானாம்—இல்லறத்தில் உள்ள பெண்களின்; மனஸி—மனதில்; குஸுமஸராஸனம்:—மன்மதன்; உபததான:—விழிப்புற்று; பராக்—எங்கும்; அவலம்பமான—விரிந்து; குடில—சுருண்ட; ஐடில—சடையாகிவிட்ட; கபிஸ—பழுப்புவண்ணம்; கேஸ—கேசம் (தலைமுடி); பூரி-பார:—அதிக அளவில் கொண்டு; அவதூத—புறக்கணித்தல்; மலின—அழுக்கு; நிஜ-ஸரீரேண—அவரது உடலினால்; க்ரஹ-க்ருஹீத:—பேயினால் சூழப்பட்ட; இவ—போன்று; அத்ருஷ்யத—அவர் தோன்றினார்.
பகவான் ரிஷப தேவரின் மார்பு மிகவிரிந்தும் கரங்களும் கால்களும் நீண்டு உயரமாகவும் இருந்தன. அவரது தோள்களும், முகமும் அவயங்களும் மிகவும் எழிலுடனும், அளவாகச் செதுக்கி வைத்தாற் போன்றும் இருந்தன. அவரது வாய் அவரது இயற்கையான புன்னகையினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலையில் மலரும் செந்தாமரை மலரின் பனித்துளி படர்ந்த செவ்விதழைப் போன்ற சிவந்த விழிகளுடன் அவர் மிகவும் கவர்ச்சிகரமாகத் தோன்றினார். அவரது விழிகளின் கருமணிகள் மிகவும் இனிமையுடனும் அவற்றைப் பார்ப்போரின் துன்பங்கள் அனைத்தையும் நீக்குபவையாகவும் விளங்கின. அவரது நெற்றி, செவிகள், கழுத்து, நாசி போன்ற உறுப்புக்கள் அனைத்தும் மிக்க எழிலுடன் திகழ்ந்தன. அவரது கவர்ச்சி மிகுந்த புன்னகை அவரது முகத்திற்கு மேலும் அழகூட்டி மணம் முடித்த மங்கையரின் உள்ளங்களைக்கூட ஆட்கொண்டன. அவர்கள் அனைவரும் மன்மதனின் மலரம்புகளால் துளைக்கப்பட்டனர். அவரது தலைமுடி அடர்த்தியாகவும் இருந்தது. மேலும் அவை அங்குமிங்கும் தொங்கிக் கொண்டிருந்தன. ஏனெனில் அவரது உடல் அழுக்குடனும், பேணப்படாமலும் பேய்க்கு ஆட்பட்டது போலும் காணப்பட்டது.
பதம் 5.5.32
யர்ஹி வாவ ஸ பகவான் லோகம் இமம் யோகஸ்யாத்தா ப்ரதீம் இவாசக்ஷாணஸ் தத்-ப்ரதிக்ரியா-கர்ம பீப்த்ஸிதம் இதி வ்ரதம் ஆஜகரம் ஆஸ்தித: ஸயான ஏவாஸ்நாதி பிபதி காததி அவமேஹதி ஹததி ஸ்ம சேஷ்டமான உச்சரித ஆதிக்தோத்தேஷ
யர்ஹி வாவ்—அப்பொழுது; ஸ—அவர்; பகவான்—முழுமுதற் கடவுள்; லோகம்—பொதுமக்கள்; இதம்—இந்த; யோகஸ்ய—யோகத்தினைச் செய்வதற்கு, அத்தா—நேரடியாக; ப்ரதீபம்—எதிரான; இவ—போன்று; ஆசக்ஷாண:—கவனித்து; தத்—அதன்; ப்ரதக்ரியா:—எதிர் செயலிற்காக, கர்ம—செயல்; பீபத்ஸிதம்:—வெறுக்கத்தக்க; இதி—இவ்வாறு; வ்ரதம்—நடத்தை; ஆஜகரம்—ஒரு மலைப் பாம்பின் (ஒரே இடத்தில் வசித்தல்); ஆஸ்தித:—ஏற்றுக் கொண்டு; ஸயான—கீழே படுத்து; ஏவ—உண்மையில்; அஸ்நாதி—உண்டு; பிபதி—பருகி; காதகி—மென்று; அவமேஹதி—சிறுநீர் கழித்து; ஹததி—மலம் கழித்து; ஸ்ம—இவ்வாறு; சேஷ்டமான:—உருண்டு; உச்சரிதே—மலத்திலும், சிறுநீரிலும்; ஆதிக்த-உத்தேஷ்:—அவரது உடலெங்கும் பூசப்பட்டது.
பகவான் ரிஷபதேவர் தனது யோகஸித்திக்கு எதிராகப் பொது மக்கள் இருப்பதைக் கண்டவுடன் அவர்களது எதிர்ப்புக்கு எதிர் செய்வதற்காக ஒரு மலைப் பாம்பின் மனோபாவத்தை மேற்கொண்டார். அதாவது அவர் ஒரே இடத்தில் கீழே படுத்துக் கொண்டார். அங்கேயே அந்த நிலையிலேயே அவர் உண்டார், பருகினார், மலமும் சிறுநீரும் கழித்து அவற்றின் மீதே புரண்டார். உண்மையில் அவர் தன் உடல் முழுவதும் மலத்தினையும் சிறுநீரையும் பூசிக் கொண்டார். அப்போதுதானே அவருக்கு எதிரானவர்கள் அவர் அருகே வந்து தொல்லை தர மாட்டார்கள்!
பதம் 5.5.33
தஸ்ய ஹ ய: புரீஷ-ஸுரபி-ஸௌகந்திய- வாயுஸ் தம் தேஷம் தஷ யோஜனம் ஸமந்தாத் ஸுரபிம் சகார
தஸ்ய—அவரது; ஹ—உண்மையில்; ய:—அது; புரீஷ—மனத்தின்; ஸுரபி—நாற்றத்தினால்; ஸெளகந்த்ய—நறுமணம் உடையதாக; வாயு:—காற்றில்; தம்—அது; தேஷம்—நாடு; தஷ—பத்து: யோஜனம்—யோஜனம் (யோசனம் எனில் எட்டு மைல் தூரம்); ஸமந்தாத்—நாற்புறமும்; ஸுரபிம்—நறுமணம்; சகார—செய்தது.
துய்மையற்ற நிலையில் இருந்தபோதிலும் ரிஷப தேவரை பொதுமக்கள் துன்புறுத்தவில்லை. ஏனெனில் அவரது மலஜலத்திலிருந்து தூர்நாற்றம் வீசவில்லை. மாறாக அதனிலிருந்து விசிய இனிய நறுமணம் எட்டு மைல் அளவில் சுற்று வட்டாரமெங்கும் பரவியது.
பதம் 5.5.34
ஏவம் கோ-ம்ருக-காக-சர்யயா வ்ரஜம்ஸ் திஷ்டன்ன் ஆஸீன:
ஸயான: காக ம்ருக-கோ-சரித: பிபதி காததி அவமே ஹதி ஸ்ம
ஏவம்—இவ்வாறு; கோ—பசு; ம்ருக—மான்; காக—காகம்; சர்யயா—செயல்களினால்; வ்ரஜன்—செல்வது; திஷ்டன்—நிற்பது; ஆஸீன—அமர்ந்திருத்தல்; ஸயன:—படுத்திருத்தல்; காக ம்ருக-கோ- சரித:—காக்கை, மான், பசுக்கள் போன்று நடத்தையுடையவராக இருந்தார்; பிபதி—பருகுதல்; காததி—உண்பது; அவமேஹதி—சிறுநீர் கழித்தல்; ஸ்ம—அவர் நடந்து கொண்டார்.
இவ்வாறாக பகவான் ரிஷபதேவர் பசு, மான், காக்கை போன்றவற்றின் தன்மைகளைப் பின்பற்றினார். அவர் நகர்வார், நடப்பார், சில நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பார். சில நேரம் பசு, மான், காக்கையினைப் போல நடந்து கொள்வார். இவ்வாறு அவர் உண்டு, பருகி, மலஜலம் கழித்து மக்களை ஏமாற்றினார்.
பதம் 5.5.35
இதி நானா-யோக-சர்யாசரணோ பகவான் கைவல்ய-பதிர் ருஷபோ ‘விரத
பரம மஹானந்தானுபவ ஆத்மனி ஸர்வேஷாம் பூதானாம் ஆத்ம-பூதே
பகவதி வாஸுதேவ ஆத்மனோ’வ்யவதானானந்த-ரோதர-பாவேன
ஸித்த ஸமஸ்தார்த-பரிபூர்ணோ யோகைஸ் வர்யாணி வைஹாயஸ-
மனோ-ஜவாந்தர்தான பரகாய-ப்ரவேஷ-தூர-க்ரஹணாதீனி யத்ருச்ச
யோபகதானி நாஞ்ஜஸா ந்ருப ஹ்ருத யேனாப்யனந்தத்.
இதி—இவ்வாறு; நானா—பல்வேறு; யோக—யோக ஸித்தியின்; சர்யா—செயல்கள்; ஆசரண:—பயிற்சி செய்து; பகவான்—முழுமுதற் கடவுள்; கைவல்ய பதி:—கைவல்ய நாயகன், ஒன்றாதல் அல்லது “ஸாயுஜ்ய முக்தி அளிப்பவர்”; ருஷப—பகவான் ரிஷப தேவர்; அவிரத—தொடர்ந்து; பரம—உயர்ந்த; மஹா—சிறந்த; ஆனந்த அனுபவ:—பரமானந்தத்தினை அனுபவித்து; ஆத்மனி—பரமாத்மாவில்; ஸர்வேஷாம்—அனைவரின்; பூதானாம்—உயிர்வாழிகள்; ஆத்ம-பூதே—இதயத்தில் இருந்து; பகவதி—முழுமுதற் கடவுளுக்கு; வாஸுதேவ—கிருஷ்ணர், வசுதேவரின் புதல்வர்; ஆத்மன:—அவரது; அவ்யவதான—சட்டப் பூர்வ நிலையின் வேறுபாடின்மையினால்; அனந்த—அளவற்ற; ரோதர—அழுதல், சிரித்தல், நடுங்குதல்; பாவேன—அன்பின் அறிகுறிகளால்; ஸித்த—முற்றிலும் சரியான; ஸமஸ்த—அனைத்தும்; அர்த—விரும்பிய வளங்களுடன்; பரிபூர்ன:—முழுவதும்; யோக ஜஸ்வரியாணி—யோக சக்தி; வைஹாயஸ—வானில் பறந்து; மன: ஜவ—மனோவேகத்தில் பயணித்து; அந்தாதான—மறைவதற்குரிய திறமை; பரகாய-ப்ரவேஷ—மற்றொருவரின் உடலினுள் புகும் திறமை; தூர கிரஹன—வெகுதூரத்திலுள்ளப் பொருட்களை உணரும் திறன்; ஆகினி—மற்றும் பிறர்; யத்ருச்சயா—இடையூறின்றி, தானாகவே; உபகதானி—எய்துதல்; ந—இல்லை; அஞ்ஜஸா—நேரடியாக; ந்ருப—ஓ, மன்னன் பரீக்ஷித்துவே; ஹ்ருதயேன—இதயத்தினுள்; அப்யனந்தத்—ஏற்றுக் கொள்ளல்.
ஓ, பரீட்சித்து மன்னனே, அனைத்து யோகிகளுக்கும் யோக ஸித்தி முறையினை எடுத்துக்காட்டவே பகவான் கிருஷ்ணரின் இயல்புகளை ஏற்றுக் கொண்ட பகவான் ரிஷப தேவர் அதிசயிக்கத்தக்கச் செயல்களைச் செய்து காட்டினார். உண்மையில் அவர் விடுதலையின் நாயகர் என்பது மட்டுமல்ல. ஆயிரம் மடங்குள்ள மனவாசகம் கடந்த மெய்யுணர்வில் முற்றிலும் ஆழ்ந்திருந்தார். வசுதேவரின் மைந்தரான வாசுதேவ கிருஷ்ணரே பகவான் ரிஷப தேவரின் மூலாதாரமாவார். அவர்களது தோற்றத்தில் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. இதனைத் தொடர்ந்து பகவான் ரிஷப தேவர் அழுதல், சிரித்தல், நடுங்குதல் போன்ற அன்பின் அடையாளங்களை வெளிப்படுத்தினார். அவர் எப்போதும் உன்னத மெய்யுணர்வில் ஆழ்ந்திருந்தார். இதன் காரணமாக மனோ வேகத்தில் வானில் பறப்பது, தோன்றுவது, மறைவது, பிறர் உடலினுள் புகுவது, வெகு தொலைவில் உள்ளப் பொருட்களை காண்பது போன்ற யோகச் சக்திகள் அனைத்தும் அவரைத் தாமே அடைந்தன. இவை அனைத்தையும் செய்யக் கூடியவராக அவர் இருந்தபோதிலும், இச்சக்திகளை அவர் பயன்படுத்தியதே இல்லை.
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “பகவான் ரிஷப தேவர் தம் மைந்தர்களுக்கு அருளிய உபதேசங்கள்” எனும் தலைப்பை கொண்ட ஐந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.