அத்தியாயம் – 2
மகாராஜா ஆக்னீதரனின் செயல்கள்
பதம் 5.2.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மன்னர் ஆக்னீதரனின் தந்தையான பிரியவிரதன் தவங்களை மேற்கொள்வதன் மூலம் ஆன்மீக வாழ்க்கைப் பாதையில் பயணம் செல்லப் புறப்பட்டுச் சென்ற பின்னர் மன்னர் ஆக்னீதரன் தன் தந்தையின் கட்டளைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். சமய தர்மங்களைக் கடுமையாகப் பின்பற்றி ஜம்பூத்வீபத்திலுள்ள தனது குடிமக்கள் அனைவரையும் தான் பெற்றெடுத்தக் குழந்தைகளைப் போல் பாதுகாத்தார்.
பதம் 5.2.2 : ஒரு நன்மகனைப் பெற்று அதன் மூலம் பித்ருலோக வாசியாக விரும்பி ஆக்னீதர மன்னன் ஒருமுறை உலகப் படைப்பின் தலைவரான பிரம்மதேவனை வழிபட்டார். அவர் தேவமங்கையர் வந்து விளையாடும் மந்தார மலையின் அடிப்பகுதிக்குச் சென்றார். அங்கே இருந்த நந்தவனத்திலிருந்து மலர்களையும், பூஜைக்கான பொருட்களையும் சேகரித்துக் கொண்டு அவர் கடுமையான தவ வழிபாட்டில் ஈடுபட்டார்.
பதம் 5.2.3 : ஆக்னீதர மன்னனின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட பிரம்மதேவன் தனது அவைக்களத்தில் நடனமாடும் அழகு மங்கையருள் மிகச்சிறந்த பூர்வசித்தி என்பவனை மன்னரிடம் அனுப்பி வைத்தார்.
பதம் 5.2.4 : பிரம்மதேவனால் அனுப்பி வைக்கப்பட்ட அழகு மங்கை மன்னர் தவம் செய்து கொண்டிருந்த இடத்தின் அருகேயுள்ள நந்தவனத்தில் அன்னநடை பயின்று கொண்டிருந்தாள். அந்த நந்தவனம் எழில் மிக்கது. அங்கே அடர்த்தியான மரங்களும் பொன்மயமான கொடிகளும் எங்கும் நிறைந்திருந்தன. அங்கே மயில்கள் போன்ற பறவைகள் இணையோடு சேர்ந்து திரிந்தன. குளத்தில் அன்னங்களும், வாத்துக்களும் அழகாக நீந்திக் கொண்டிருந்தன. இவையெல்லாம் தங்கள் குரல் ஒலியால் இனிய இசை எழுப்பிக் கொண்டிருந்தன. இவ்வாறு அந்த நந்தவனம் மரங்கள், தெளிந்த நீருடைய குளம், தாமரை மலர்கள், மற்றும் இனிய ஓசை எழுப்பும் பல்வேறு வகையான வண்ணப் பறவைகளினால் கண்ணைக் கவரும் வண்ணம் எழில் மிக்கதாக இருந்தது.
பதம் 5.2.5 : மிக்க மகிழ்வோடு பூர்வசித்தி ஒயிலாக நந்தவனப் பாதையில் நடந்து சென்ற பொழுது அவளது காற்சலங்கைகள் மிக இனிமையான ஒலி எழுப்பின. இளவரசர் தனது புலன்களை அடக்குவதற்காக அரைவிழி திறந்து யோகத்தில் அமர்ந்திருந்த போதிலும், அவர் தனது தாமரை மொட்டுக்களைப் போன்ற விழிகளினால் அவளைக் காண முடிந்தது. மேலும் அவள் நடந்துவரும் பொழுது சலங்கைகள் எழுப்பிய இனிய ஓசையினைக் கேட்ட இளவரசர் தன் கண்களைத் திறந்து பார்த்தபொழுது அவள் அவர் அருகே நின்று கொண்டிருந்தாள்.
பதம் 5.2.6 : தேன் உண்ணும் வண்டினைப் போல் அந்த அப்சரஸ் மங்கை அழகிய கவர்ச்சிமிகு மலர்களை முகர்ந்தாள். அவள் தனது அடக்கத்தினாலும், பார்வையினாலும், அங்க அசைவுகளினாலும், நாணத்தினாலும், அவள் வாய் திறந்து பேசும்போது வரும் இனிய வார்த்தைகளின் ஒலியினாலும் தேவர்கள் மற்றும் மனிதர்களின் மனங்களையும், விழிகளையும் கொள்ளையடிப்பவளாக இருந்தாள். இக்குணங்களினால், அவன் தனது கையில் மலரம்பு வைத்திருக்கும் மன்மத உணர்வினை ஆண்களில் உள்ளத்தில் கிளர்ந்து எழ வைத்தாள். அவள் வாய் திறந்த பொழுது வார்த்தைகள் அமுதமெனப் பிரவகித்தன. அவள் மூச்சு விட்டபொழுது அம்மூச்சின் நறுமணத்தில் மயங்கிய தும்பிகள் அவள் செந்தாமரை விழிகளின் மேல் பறக்க முயன்றன. தும்பிகளினால் துன்புறுத்தப்பட்ட அவள் அங்கிருந்து விரைந்து செல்வதற்காகத் தன் கால்களை தூக்கி முன்னே வைத்தாள். அப்போது அவள் இடையில் அணிந்திருந்த மேகலையும், பொற்கலசங்கள் போன்றிருந்த மார்பகங்களும் அசைந்து அவளது அழகையும், கவர்ச்சியையும் மேலும் அதிகரித்தன. உண்மையில் அவள் சக்தி மிக்க மன்மதனுக்குப் பாதையினைத் திறந்து வைப்பவள் போன்றே தோன்றினாள். அவள் எழில் கோலத்தைக் கண்டு தன்னை முற்றிலும் இழந்த இளவரசர் அவளிடம் பின்வருமாறு கூறினார்.
பதம் 5.2.7 : அழகிய மங்கையைத் தவறாகப் புரிந்து கொண்டு இளவரசர் கூறினார்: ஒ, முனிவர்களிற் சிறந்தோரே யார் நீவீர்? இம்மலைக்கு வந்த காரணம் என்ன? என்ன செய்ய விரும்புகின்றீர்? நீர் முழுமுதற் கடவுளின் மாயா சக்திகளுள் ஒருவரா? நாண் இல்லாத வில் இரண்டு நீர் வைத்திருக்கின்றீர். இவ்விரண்டை வைத்திருப்பதின் காரணம் என்ன? இது உமது நன்மைக்காகவா அல்லது உமது நண்பனின் நன்மைக்காகவா? ஒருக்கால் இக்காட்டிலுள்ள வெறிபிடித்த மிருகங்களைக் கொல்வதற்காக நீர் வைத்திருக்கின்றீர் போலும்.
பதம் 5.2.8 : பின்னர் ஆக்னீதரன் பூர்வசித்தியின் விழிகளைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் கூறினார்: அன்பிற்குரிய நண்பரே, உம்மிடம் விழிகள் எனும் இரண்டு கூரிய அம்புகள் இருக்கின்றன. அவற்றிலுள்ள துவிகளோ தாமரை மலரின் மெல்லிதழ்கள் போன்று இருக்கின்றன. அம்பிற்கான தண்டு இல்லையென்ற போதிலும் அவை மிகவும் அழகாகவும், கூர்மையான நுனிகளை உடையனவாகவும் உள்ளன. அவை மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதினால், யார் மீதும் எய்யப்படப் போவதில்லை என்று தெரிகிறது. யார் மீதோ இந்த அம்புகளைப் போடுவதற்காக நீர் அலைந்து கொண்டிருத்தல் வேண்டும். ஆனால் அது யார் என்று என் மந்த மதிக்கு எட்டவில்லை. மேலும் என்னாலும் உம்மோடு போரிட முடியாது. வீரத்தில் உமக்கு நிகரானவர் எவருமிலர். ஆகையினால் உமது வீரம் எனக்கு நன்மையளிப்பதாக என்று நான் வணங்குகிறேன்.
பதம் 5.2.9 : தேன் உண்ணும் வண்டுகள் பூர்வசித்தியைத் தொடர்ந்து வருவதைக் கண்ட ஆக்னீதர மன்னன் கூறினார்: போற்றுதற்குரிய பகவானே, வணங்குதற்குரிய உமது உடலைச் சுற்றிப் பக்தர்களைப் போல் தும்பிகள் சூழ்த்துள்ளன. அவை சாம வேதத்திலிருந்தும் உபநிஷத்துக்களிலிருந்தும் மந்திரங்களைத் தொடர்ந்து இசைப்பதின் மூலம் உமக்கு வழிபாட்டைச் செய்கின்றன. மாமுனிவர்கள் வேத இலக்கியத்தின் பிரிவுகளைத் தஞ்சமடைவது போல், உமது கூந்தலிலிருந்து உதிரும் மலர்களைத் தும்பிகள் தஞ்சமடைந்து மகிழ்கின்றன.
பதம் 5.2.10 : ஒ, அந்தணரே, உமது பாதங்களின் சலங்கை ஒலியினை மட்டுமே நான் கேட்டேன். அவ்வொலி உண்மையில் தித்திரிப் பறவைகளின் கீச்சொலி போன்று இருந்தது. நான் அப்பறவைகளை நேரில் பார்க்கவில்லை என்றாலும் அவை எழுப்பும் ஒலி எவ்வாறு இருக்கும் என்பதை நான் கேட்டிருக்கிறேன். நூலிழை போல் வளைந்திருக்கும் உமது மெல்லிய இடையினைக் காணும்பொழுது, மனதை மயக்கும் கதம்ப மலர்களின் வண்ணங்களையே நான் காண்கிறேன். அதன் மீது நீர் அணிந்திருக்கும் மேகலை நெருப்புத் துண்டங்களைப் போல் மின்னுகின்றன. உண்மையில் நீர் ஆடையணிய மறந்தவர் போன்றே தோன்றுகின்றீர்.
பதம் 5.2.11 : ஆக்னீதரன் அதன்பின்னர் பூர்வசித்தியின் மார்பகங்களைப் புகழத் தொடங்கினார்: அன்பிற்குரிய அந்தணரே, உமது இடையோ மிகவும் மெலிந்திருக்கிறது. அவை மிகுந்த சிரமத்துடன் இரண்டு கொம்புகளைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன, அவைகளே எனது விழிகளை மிகவும் அதிகமாகக் கவர்கின்றன. அக்கொம்புகள் எதனால் நிரப்பப்பட்டிருக்கின்றன? அவற்றின் மேல் நீர் சிவப்பு நிற நறுமணப் பொடியினைப் பூசியிருக்கின்றீர். அப்பொடி காலையிளஞ் சூரியனைப் போல் சிவந்த நிறமுடையதாக இருக்கிறது. ஓ, நல்லதிர்ஷ்டம் வாய்ந்தவரே நீர் இந்த நறுமணப் பொடியினை எங்கு பெற்றீர், அதன் நறுமணம் எனது ஆஸ்ரமம் முழுவதும் நிறைந்திருக்கிறது.
பதம் 5.2.12 : ஓ,சிறந்த நண்பரே, நீர் இருக்கும் இடம் எதுவென்று கூற மாட்டீரா? உமது மார்பகங்கள் போன்ற மயங்க வைக்கும் உடல் உறுப்புகளை அவர்கள் எவ்வாறு பெற்றனர் என்று என்னால் யூகிக்க முடியவில்லை? என்னைப் போன்ற மனிதர்கள் அவற்றைப் பார்க்கும் போது அவர்களின் மனமும் விழிகளும் கிளர்ச்சியடைகின்றன. அங்கிருப்பவர்களின் இனிய மொழி, அன்புப் புன்னகை போன்றவற்றை எண்ணும் பொழுது அவர்களது வாயில் அமிர்தம் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
பதம் 5.2.13 : அன்பு நண்பரே, உமது உடலை இவ்வாறு கன கச்சிதமாக வைத்திருப்பதற்காக நீர் என்ன உணவு உண்கிறீர்? நீர் தளிர் வெற்றிலைகளை மெல்லுவதினால் போலும் உமது வாயிலிருந்து இனிய நறுமணம் வந்து கொண்டிருக்கிறது! இதிலிருந்து விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கும் நிவேதனங்களையே நீர் எப்போதும் உண்கின்றீர் என்பது வெளிப்படை. உண்மையில் நீர் விஷ்ணுவின் இயல்புகளைப் பெற்றவரே ஆவீர். உமது முகம் இனிய குளத்தைப் போன்று எழில் மிக்கதாக விளங்குகிறது. உமது காதணிகள் விஷ்ணுவின் மூடாத விழிகளைப் போன்றிருக்கும் ஒளிமிக்க இரு சுறாமீன்களை ஒத்திருக்கின்றன. உமது விழிகளோ ஒய்வின்றி அங்குமிங்கும் தாவும் மீன்களைப் போன்றிருக்கின்றன. ஆகையினால் இரு சுறாமீன்கள் மற்றும் இரு விழி மீன்கள் உமது முகக்குளத்தில் ஒரே சமயத்தில் நீந்திக் கொண்டிருக்கின்றன. மேலும் உமது ஒளிரும் பல்வரிசை அக்குளத்தில் நீந்தும் அழகிய அன்னங்களின் வரிசையைப் போன்றுள்ளன. அவை பாயும் உமது கூந்தலோ உமது எழில் முகத்தைச் சுற்றி வட்டமிடும் தும்பிகளின் கூட்டத்தைப் போன்றிருக்கிறது.
பதம் 5.2.14 : என் மனம் ஏற்கனவே தவியாய் தவிக்கிறது. நீரோ உமது தாமரைக் கரத்திலுள்ள பந்தினைத் திசைகள்தோறும் வீசியடித்து விளையாடி என் விழிகளை மேலும் கிளர்ச்சியடையச் செய்கின்றீர். உமது சுருண்ட கார் குழல்கள் காற்றில் அலைபாய்கின்றன. ஆனால் அவற்றைச் சரிப்படுத்துவதற்கு நீர் கவனம் செலுத்துவதில்லை. நீர் அவற்றை ஒன்று சேர்த்து முடிக்க மாட்டீரா? பெண்கள் மீது பற்றுடைய ஆணைப் போல் குறும்புமிக்க இக்காற்று கால்களை மூடியிருக்கும் உமது ஆடையினை விலக்க முயல்கிறது. இதை நீர் கவனிக்கவில்லையா?
பதம் 5.2.15 : ஒ, தவம் செய்வோரில் சிறந்தவரே, பிறர் செய்யும் தவத்தைக் குலைக்கச் செய்யும் இந்த அழகினை நீர் எங்கிருந்து பெற்றீர்? இக்கலையினை எங்கு கற்றீர்? இந்த அழகினை எய்துவதற்கு நீர் என்ன தவம் செய்தீர்! என் இனிய நண்பரே? நீர் என்னோடு இணைந்து தவமும்,
துறவறமும் மேற்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பிரபஞ்சத்தைப் படைத்தப் பிரம்மதேவன் என் தவத்தினை மெச்சி எனது மனைவியாவதற்காக உம்மை இங்கு அனுப்பியிருக்கிறார் போலும்.
பதம் 5.2.16 : அந்தணர்களால் வணங்கப்படும் பிரம்மதேவன் மிகுந்த கருணை கொண்டு என்னிடத்தில் உன்னை அனுப்பி வைத்திருக்கின்றார் போலும். அதனால்தான் உன்னை நான் சந்திக்க முடிந்தது. எனது விழிகளும், மனமும் உன்னை விட்டு விலகா. உன்னைப் பிரிய ஒருபோதும் நான் ஒப்பேன். விம்மிய மார்பகங்ளையுடைய எழில் மங்கையே! நான் உனது அடியவன். நீ எங்கே சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்லலாம். உனது நண்பர்கள் கூட என்னைத் தொடர்ந்து வரலாம்.
பதம் 5.2.17 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: தேவர்களைப் போல் அறிவுடைய ஆக்னீதர மன்னர் புகழ்ந்து பேசுவதின் மூலம் பெண்களைக் கவரும் வித்தையில் கைதேர்ந்தவர் ஆவார். ஆகையினால் அவர் தனது காமமிக்க வார்த்தைகளினால் அவளை மகிழச் செய்து அவள் சம்மதத்தினைப் பெற்றார்.
பதம் 5.2.18 : வீரர்களின் தலைவரும், நாவலந்தீவின் அரசருமான ஆக்னீதரனின் அறிவு, கல்வி, இளமை, குணம், செல்வம், பெருந்தன்மையால் கவரப்பட்ட பூர்வசித்தி அவருடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து, பூமி மற்றும் சொர்க்கத்திலுள்ள இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து மகிழ்ந்தாள்.
பதம் 5.2.19 : அரசர்களிற் சிறந்த மகாராஜா ஆக்னீதரன் பூர்வசித்தியிடம் நாபி, கிம்புருஷன், ஹரிவர்ஷன், இலாவ்குதன், ரம்யகன், இரண்மயன், குரு, பத்ராஷ்வன், கேதுமாலன் என்னும் பெயர்களையுடைய ஒன்பது புத்திரர்களைப் பெற்றெடுத்தார்.
பதம் 5.2.20 : பூர்வசித்தி இவ்வொன்பது மைந்தர்களையும் ஒவ்வொரு வருடமாக ஈன்றெடுத்து அவர்கள் வளர்ந்த பின்னர் தன் வீட்டைத் துறந்து, பிரம்மதேவனை வழிபடுவதற்காக மீண்டும் அவரை அடைந்தாள்.
பதம் 5.2.21 : தங்கள் அன்னையிடம் தாய்ப்பால் உண்டு வளர்ந்ததினால் ஆக்னீதரனின் ஒன்பது புதல்வர்களும் இயற்கையிலேயே வலிமையும் உறுதியுமிக்க உடல் அமையப் பெற்றிருந்தனர். அவர்களுக்கு அவர்களின் தந்தை ஜம்பூத்வீபத்தின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்வதற்காகப் பிரித்துக் கொடுத்தார். அந்நாடுகள் அப்புதல்வர்களின் பெயரிலேயே அழைக்கப்பட்டன. இவ்வாறு ஆக்னீதரனின் புதல்வர்கள் தங்கள் தந்தையினால் அளிக்கப்பட்ட நாடுகளை ஆண்டு வந்தனர்.
பதம் 5.2.22 : பூர்வசித்தி பிரிந்து சென்றபிறகு மன்னர் ஆக்னீதரன் அவள் மீது கொண்ட காம இச்சை தீராத காரணத்தினால் எப்போதும் அவளையே நினைத்துக் கொண்டிருந்தார். ஆகையினால் வேத நெறிகளுக்கேற்ப அவர் மரணமடைந்தவுடன் அவர் மனைவி வாழும் தேவலோகத்தினையே அடைந்தார். அவ்வுலகம் பித்ருலோகம் என்றழைக்கப்படுகிறது. அங்கே தான் மூதாதையர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.
பதம் 5.2.23 : தங்கள் தந்தை மறைந்த பின்னர் ஒன்பது சகோதரர்களும், மேருவின் ஒன்பது புதல்விகளான மேரு தேவி, பிரதிரூபா, உக்ரதம்ஷ்ட்ரீ, லதா, ரம்யா, ஷ்யாமா, நாரீ, பத்ரா மற்றும் தேவவீதி என்போரை மணம் செய்தனர்.