அத்தியாயம் – 29
நாரதருக்கும் பிராசீனபர்ஹிக்கும் இடையிலான உரையாடல்
பதம் 4.29.1
ப்ராசீனபர்ஹிர் உவாச
பகவம்ஸ் தே வசோ ‘ஸ்மாபிர் ந ஸம்யக் அவகம்யதே
கவயஸ் தத் விஜாநந்தி ந வயம் கர்ம-மோஹிதா:

ப்ராசீனபர்ஹி: உவாச—மன்னர் ப்ராசீனபர்ஹி கூறினார்; பகவன்—ஓ, போற்றுதலுக்குரியவரே; தே—உமது; வச:—வார்த்தைகள்; அஸ்மாபி:—எம்மால்; ந—இல்லை; ஸம்யக்—சரியாக; அவகம்யதே—புரிந்துகொள்ளப்படுவதற்கு; கவய:—தேர்ச்சியுடையோர்; தத்—அந்த; விஜாநந்தி—புரிந்து கொள்ளக்கூடும்; ந—இல்லை; வயம்—நாங்கள்; கர்ம—பலன்தரும் செயல்களினால்; மோஹிதா:— மோகமுடையோர்.

மன்னர் பிராசீனபர்ஹி பதில் கூறினார்: போற்றுதலுக்குாிய மகானே, மன்னர் புரஞ்ஜனனின் கதை என்று நீர் உருவகமாகக் கூறிய கதையின் உட்பொருளை எங்களால் முழுதும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆன்மீக ஞானமுடையவர்களினால் அதனை அறிந்து கொள்ள முடியும் ஆனால் எங்களைப்போன்ற காரியவாதிகளுக்கு உமது கதையின் நோக்கத்தைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாகும்.

பதம் 4.29.2
நாரத உவாச
புருஷம் புரஞ்ஜனம் வித்யார் யத் வ்யனக்தி ஆத்மன: புரம்
ஏக-த்வி-த்ரி-சதுஸ்-பாதம் பஹீ பாதம் அபாதகம்

நாரத: உவாச—நாரதர் கூறினார்; புருஷம்—இன்பம் அனுபவிப்பவன் ஆகிய உயிர்; புரஞ்ஜனம்—மன்னர் புரஞ்சனன்; வித்யாத்—ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டாம்; யத்—எவ்வளவுக் கெவ்வளவு; வ்யனக்தி—அவன் உண்டுபண்ணுகிறான்; ஆத்மன:—அவனது; புரம்—இருப்பிடம்; ஏக—ஒன்று; த்வி—இரண்டு; த்ரி—மூன்று; சது:-பாதம்—நான்கு கால்களுடன்; பஹீ-பாதம்—பல கால்களுடன்; அபாதகம்—கால்களின்றி்.

மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: புரஞ்ஜனன் எனும் உயிர்ப்பொருள் அவனும் விளைகளுக்கேற்ப ஒரு கால் உடையன; இருகால்கள் உடையன; மூன்று கால்கள் உடையன; நான்கு கால்கள் உடையன; பல கால்கள் உடையன அல்லது கால்களை இல்லாதன போன்ற பல்வேறு உடல்களில் இடம்பெயர்ந்து குடியேறுகிறான். பல்வேறு உடல்களில் குடியேறி இன்பம் அனுபவிப்பவன் என்றழைக்கப்படும் உயிர்ப்பொருளே புரஞ்சனன் ஆவான்.

பதம் 4.29.3
யோ ‘விஜ்ஞாதாஹ்ருதஸ் தஸ்ய புரஷஸ்ய ஸகேஸ்வர:
யன் ந விஜ்ஞாயதே பும்பிர் நாமபிர் வா க்ரியா-குணை:

ய:—யார்; அவிஜ்ஞாத—அறியாமல்; ஆஹ்ருத:—விளக்கப்பட்டு; தஸ்ய—அவரது; புருஷஸ்ய—உயிர்ப்பொருளின்; ஸகா—நித்திய நண்பன்; ஆஸ்வர:—தலைவர்; யத்—ஏனென்றால்; ந—இல்லை; விஜ்ஞாயதே—புரிந்துகொள்ளப்படுதல்; பும்பி:—உயிர்களினால்; நாமபி:—பெயர்களினால்; வா—அல்லது; க்ரியா-குணை:—செயல்களினால் அல்லது குணங்களினால்.

என்னால் விளக்கப்பட்டவர் அறிவதற்கரியவரும், உயிர்களின் தலைவரும், நித்திய நண்பருமான முழுமுதற் கடவுளேயாவார். மேலும் உயிர்கள் முழுமுதற் கடவுள் உலகத்து நாமங்களினாலும், செயல்களினாலும், குணங்களினாலும் அறிய முடியாது. அவர் கட்டுண்ட ஆத்மாக்களுக்கு எப்போதும் அறிவதற்கரியவராகவே இருக்கின்றார்.

பதம் 4.29.4
யதா ஜிக்ருக்ஷன் புருஷ: கார்த்ஸ்ன்யேன ப்ரக்ருதேர் குணான்
நவ த்வாரம் த்வி-ஹஸ்தாங்க்ரி தத்ராமனுத ஸாத்வ இதி

யதா—எப்பொழுது; ஜிக்ருக்ஷன்—அனுபவித்து மகிழும் ஆசையில்; புருஷ:—உயிர்ப்பொருள்; கார்த்ஸ்ன்யேன—மொத்தத்தில்; ப்ரக்ருதே—ஜட இயற்கையின்; குணான்—குணங்கள்; நவ-த்வாரம்—ஒன்பது வாயில்களையுடைய; த்வி—இரண்டு; ஹஸ்த—கரங்கள்; அங்க்ரி—கால்கள்; தத்ர—அங்கே; அமனுத—அவன் நினைத்தான்; ஸாது—மிக நன்று; இதி—இவ்வாறு.

ஜட இயற்கையின் குணங்களை மொத்தமாக அனுபவித்து மகிழவேண்டும் என்று உயிர்ப்பொருள் விரும்பும்பொழுது பல்வேறு உடல்களில், ஒன்பது வாயில்கள், இருகரங்கள், இருகால்கள் உடைய உடலையே ஏற்றுக் கொள்ள விழைகிறான். அதாவது அவன் மனிதன் அல்லது தேவன் ஆக விரும்புகிறான்.

பதம் 4.29.5
புத்திம் து ப்ரமதாம் வித்யான்
மமாஹம் இதி யத்-க்ருதம்
யாம் அதிஷ்டாய தேஹே ‘ஸ்மின்
புமான் புங்க்தே ‘க்ஷபிர் குணான்

புத்திம்—புத்தி; து—பிறகு; ப்ரமதான்—இளம் பெண் (புரஞ்சனீ); வித்யாத்—ஒருவன் அறிய வேண்டும்; மம—எனது; அஹம்—நான்; இதி—இவ்வாறு; யத்-க்ருதம்—புத்தியினால் செய்யப்படுதல்; யாம்—எப்புத்தி; அதிஷ்டாய—அடைக்கலம் புகுதல்; தேஹே—உடலினுள்; அஸ்மின்—இந்த; புமான்—உயிர்வாழி; புங்க்தே—துன்புறுதல் மற்றும் இன்புறுதல்; அக்ஷபி:—புலன்களினால்; குணான்—இயற்கைக் குணங்கள்.

மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: இது தொடர்பாக பயன்படுத்தப்பட்டிருக்கும் “ப்ரமதா” என்னும் சொல் புத்தி அல்லது அறியாமையைக் குறிக்கின்றது, அது இவ்வாறே புரிந்து கொள்ளப்படுகிறது. இதுபோன்ற புத்தியைச் சரண் புகுபவன் தன்னை பௌதீக உடல் என்றே அடையாளம் காண்கிறான். “நான்” “எனது” என்னும் உணர்வின் பாதிப்பால் அவன் தன் புலன்களின் மூலம் இன்பமோ, துன்பமோ அடைகிறான். இவ்வாறு உயிர் சிறைப்படுகிறது.

பதம் 4.29.6
ஸகாய இந்த்ரிய-கணா ஜ்ஞானம் கர்மச யத் க்ருதம்
ஸக்யஸ் தத்-வ்ருத்தய: ப்ராண: பஞ்ச-வ்ருத்திர் யதோரக:

ஸகாய:—ஆண் நண்பர்கள்; இந்த்ரியகணா:—புலன்கள்; ஜ்ஞானம்—ஞானம்; கர்ம—செயல்; ச—மேலும்; யத்-க்ருதம்—புலன்களினால் செய்யப்பட்ட; ஸக்ய:—பெண் நண்பர்கள்; தத்—புலன்களின்; வ்ருத்தய:—ஈடுபாடுகள்; ப்ராண:—உயிர்க்காற்று; பஞ்ச-வ்ருத்தி—ஐந்து முறைகளையடைதல்; யதா—போன்று; உரக:—பாம்பு.

செயற்புலன்கள் ஐந்தும், அறிபுலன்கள் ஐந்தும் புரஞ்சனீயின் ஆண் நண்பர்களாவர். புலன்களினால் ஒருவன் ஞானத்தைப் பெற்று செயலில் ஈடுபடுகின்றான். புலன்களின் செயல்பாடுகள் பெண் நண்பர்களாவர். ஐந்து தலைகளுடன் இருந்த பாம்பு என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஐந்து சுழல் முறைகளில் செயல்படும் உயிர்மூச்சாகும்.

பதம் 4.29.7
ப்ருஹத் -பலம் மனோ வித்யாத் உபயேந்த்ரிய-நாயகம்
பஞ்சாலா: பஞ்ச விஷயா யன்-மத்யே நவ-கம் புரம்

ப்ருஹத்-பலம்—ஆற்றல்மிக்க; மன:—மனம்; வித்யாத்—ஒருவன் அறிய வேண்டும்; உபய-இந்த்ரிய—புலன்களில் இரண்டு பிரிவுகளின்; நாயகம்—நாயகனாக; பஞ்சாலா:—பஞ்சால தேசம்; பஞ்ச—ஐந்து; விஷயா:—புலன் பொருட்கள்; யத்—எதன்; மத்யே—மத்தியில்; நவகம்—ஒன்பது துவாரங்கள்; புரம்—நகரம்.

மற்றவர்களுக்குத் தளபதியாக இருக்கும் பதினோராவது பணியாள் “மனம்” ஆகும். அவனே செயற் புலன்கள், மற்றும் அறிபுலன்கள் என்ற அனைத்துப் புலன்களுக்கும் தலைவன் ஆவான். பஞ்சால இராஜ்ஜியம் என்பது ஐம்புலன்களின் நுகர்ச்சிப் பொருட்கள் தாம் அனுபவித்து மகிழப்படும் சூழலாகும். பஞ்சால இராஜ்ஜியத்தினுள் இருப்பது உடல் என்றும் நகரமாகும். அதற்கு ஒன்பது வாயில்கள் இருக்கின்றன.

பதம் 4.29.8
அக்ஷிணீ நாஸிகே கர்ணௌ முகம் ஸிஸ்ன-குதாவ் இதி
த்வே த்வே த்வாரௌ பஹிர் யாதி யஸ் தத்-இந்த்ரிய-ஸம்யுத:

அக்ஷிணி—இருவிழிகள்; நாஸிகே—இருநாசித்துவாரங்கள்; கர்ணௌ—இரண்டு காதுகள்; முகம்—வாய்; ஸிஸ்ன—கருவாய்; குதெள—எருவாய்; இதி—இவ்வாறு; த்வே—இரண்டு; த்வே—இரண்டு; த்வாரெள—துவாரங்கள்; பஹி:—வெளியே; யாதி—செல்லுதல்; ய:—யார்; தத்—வாயில்களின் மூலம்; இந்த்ரிய—புலன்களினால்; ஸம்யுத:—துணையுடன்.

இருவிழிகள், இரு நாசித்துவாரங்கள் மற்றும் இரு செவிகள் போன்றவை ஒரே இடத்தில் இருக்கும் வாயில்களாகும். வாய், கருவாய், எருவாய் போன்றவை வேறு சிலவாயில்களாகும். இவ்வாறு ஒன்பது வாயில்களையுடைய உடலில் இடப்பட்டிருப்பதினால் உயிர் பருஉலகில் வெளிப்புறமாகச் செயல்படுவதோடு, உருவம், சுவை போன்ற புலனுகர்ச்சிப் பொருட்களையும் அனுபவித்து மகிழ்கிறான்.

பதம் 4.29.9
அக்ஷிணீ நாஸிகே ஆஸ்யம் இதி பஞ்ச புர: க்ருதா:
தக்ஷிணா தக்ஷிண: கர்ண உத்தரா சோத்தர: ஸ்ம்ருத:
பஸ்சிமே இதி அதோ த்வாரௌ குதம் ஸிஸ்னம் இஹோச்யதே

அக்ஷிணீ—இருவிழிகள்; நாஸிகே—இருநாசிகள்; ஆஸ்யம்—வாய்; இதி—இவ்வாறு; பஞ்ச—ஐந்து; புர:—முன்பகுதியில்; க்ருதா:—செய்யப்பட்ட; தக்ஷிணா—தெற்கு வாயில்; தக்ஷிண:—வலது; கர்ண:—காது; உத்தரா—வடக்கு வாயில்; ச—மேலும்; உத்தர:—இடது காது; ஸ்ம்ருத:—புரிந்துகொள்ளப்படுதல்; பஸ்சிமே—மேற்குப்பகுதியில்; இதி—இவ்வாறு; அத:—கீழ்நோக்கி; த்வாரௌ—இரண்டுவாயில்கள்; குதம்—எருவாய்; ஸிஸ்னம்—கருவாய்; இஹ—இங்கே; உச்யதே—சொல்லப்பட்டிருக்கிறது.

இருவிழிகள், இரு நாசிகள், ஒருவாய் இவை ஐந்தும் சேர்ந்து முன்பகுதியில் இருக்கின்றன. வலது காது தெற்கு வாயிலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இடது காது வடக்கு வாயிலாக இருக்கிறது. மேற்குப் பகுதியில் உள்ள இரண்டு துவாரங்கள் அல்லது வாயில்கள் எருவாய் அல்லது கருவாய் எனப்படுகின்றன.

பதம் 4.29.10
கத்யோதாவிர்முகீ சாத்ர நேத்ரே ஏகத்ர நிர்மிதே
ரூபம் விப்ராஜிதம் தாப்யாம் விசஷ்டே சக்ஷுஷேஸ்வர:

கத்யோதா—கத்யோதா என்னும் பெயரில்; ஆவிர்முகீ—ஆவிர்முகி என்னும் பெயரில்; ச—மேலும்; அத்ர—இங்கே; நேத்ரே—இருவிழிகள்; ஏதத்ர—ஓரிடத்தில்; நிர்மிதே—படைத்தல்; ரூபம்—வடிவம்; விப்ராஜிதாம்—விப்ராஜிதம் என்ற பெயரில் (ஒளிமயமாக); தாப்யாம்—விழிகளின் மூலம்; விசஷ்டே—உணர்தல்; சக்ஷுஷா—பார்வைப் புலனுடன்; ஈஸ்வர:—தலைவர்.

கத்யோதா மற்றும் ஆவிர்முகீ என்ற பெயரில் அழைக்கப்படும் இருவிழிகளும் ஒரே இடத்தில் அருகருகே இருக்கின்றன. விப்ராஜிதம் என்றழைக்கப்படும் நகரத்தினை வடிவம் என்று புரிந்து கொள்ளப்படுதல் வேண்டும். இவ்வழியில் அந்த இரு விழிகளும் பல்வேறு வகையான வடிவங்களைப் பார்ப்பதில் எப்போதும் ஈடுபட்டிருக்கின்றன.

பதம் 4.29.11
நளினீ நாளினீ நாஸே கந்த: ஸௌரப உச்யதே
க்ராணோ ‘வதூதோ முக்யாஸ்யம் விபணோ வாக் ரஸவித் ரஸ:

நளினீ—நளினீ என்ற பெயரில்; நாளினீ—நாளினீ என்ற பெயரில்; நாஸே—இருநாசித் துவாரங்கள்; கந்த:—நறுமணம்; ஸௌரப:—ஸௌரபம் (நறுமணம்); உச்யதே—அழைக்கப்படுகிறது; க்ராண:—நாற்றத்திற்கானபுலன்; அவதூதோ—அவதூத எனப்படும்; முக்யா—முக்கியா (முதல்வர்) என்றழைக்கப்படுகிறார்; ஆஸ்யம்—வாய்; விபண:—விபண என்ற பெயரில்; வாக்—பேச்சிற்கான துறை; ரஸ-வித்—ரஸஜ்ஞ (சுவையுணர்ச்சியில் தேர்ந்தவர்); ரஸ:—சுவைப்புலன்.

நளினீ, நாளினீ என்றழைக்கப்படும் இருவாயில்கள் நாசித்துவாரங்கள் ஆகும். ஸௌரப என்னும் நகரம் நறுமணம் ஆகும். “அவதூத” என்று பேசப்படுவது நாற்றத்திற்கானப் புலனாகும். முக்யத என்றழைக்கப்படுவது வாய் ஆகும். விபண எனப்படுவது பேச்சுப்புலனாகும் ரஸஜ்ஞ என்பது சுவைப்புலன் ஆகும்.

பதம் 4.29.12
ஆபணோ வ்யவஹாரோ ‘த்ர சித்ரம் அந்தோ பஹுதனம்
பித்ருஹுர் தக்ஷிண: கர்ண உத்தரோ தேவஹு: ஸ்ம்ருத:

ஆபண:—ஆபண என்ற பெயரில்; வ்யவஹார:—நாக்கின் வேலை; அத்ர—இங்கே; சித்ரம்—எல்லா வகையான; அந்த:—உணவுப் பொருட்கள்; பஹுதனம்—பகூதனம் என்ற பெயரில்; பித்ரு-ஹு:—பித்ரூ என்ற பெயரில்; தக்ஷிண:—வலது; கர்ண:—காது; உத்தர:—இடது; தேவ-ஹு:—தேவஹு; ஸ்ம்ருத:—அழைக்கப்படுகிறது.

ஆபண என்ற பெயரில் அழைக்கப்படும் நகரம் பேச்சில் ஈடுபடும் நாக்கின் செயலைக்குறிப்பிடுகிறது. பஹுதன என்பது பல்வகை உணவுகளாகும். வலதுகாது பித்ரூ என்னும் வாயிலாகும். இடதுகாது தேவஹு என்னும் வாயிலாகும்.

பதம் 4.29.13
ப்ரவ்ருத்தம் ச நிவ்ருத்தம் ச ஸாஸ்த்ரம் பஞ்சால-ஸம்ஜ்ஞிதம்
பித்ரு-யானம் தேவ-யானம் ஸ்ரோத்ராச் ச்ருத-தராத் வ்ரஜேத்

ப்ரவ்ருத்தம்—புலனின்பத்திற்கான முறை; ச—மேலும்; நிவ்ருத்தம்—பற்றற்றமுறை; ச—மேலும்; ஸாஸ்த்ரம்—சாத்திரம்; பஞ்சால—பஞ்சாலம்; ஸம்ஜ்ஞிதம்—குறிப்பிடப்பட்டிருக்கிறது; பித்ரு-யானம்—பித்ருலோகம் செல்வது; தேவ-யானம்—தேவலோகம் செல்வது; ஸ்ரோத்ராத்—கேட்பதினால்; ஸ்ருத—தராத்—ஸ்ருததரன் என்னும் பெயருடைய துணைவன்; வ்ரஜேத்—ஒருவன் உயர்த்தப்படக்கூடும்.

நாரதமுனிவர் தொடர்ந்து கூறினார் தக்ஷிண பஞ்சாலம் என்னும் நகரம், பிரவ்ருத்தியை வழிநடத்தும் சாத்திரங்களைக் குறிப்பிடுகின்றது. பிரவ்ருத்தி என்பது பலன்தரும் செயல்களுக்கானப் புலனின்ப முறைகளாகும். மற்றொரு நகரமான உத்தர பஞ்சாலம் என்பது பலன் தரும் செயல்களில் பற்றறுத்து ஞானத்தை அதிகரிப்பதற்கான சாத்திரங்களைக் குறிப்பிடுகின்றது. உயிர் இருசெவிகளின் வழியே பல்வேறு வகையான அறிவினைப் பெறுகின்றது. சில உயிர்கள் பித்ரு லோகத்திற்கு உயர்த்தப்படுகின்றனர், சிலர் தேவலோகத்திற்கு உயர்த்தப்படுகின்றனர். இவையனைத்தும் இருசெவிகளினாலேயே சாத்தியமாகின்றன.

பதம் 4.29.14
ஆஸுரீ மேட்ரம் ஆர்வாக் த்வார் வ்யவாயோ க்ராமிணாம் ரதி:
உபஸ்தோ துர்மத: ப்ரோக்தோ நிர்ருதிர் குட உச்யதே

ஆஸீரீ—ஆஸீரீ எனப்படுவது; மேட்ரம்—பிறப்புறுப்பு; அர்வாக்—மூடர்கள் மற்றும் துஷ்டர்களின்; த்வா:—வாயில், வ்யவாய:—பாலுறவுச் செயல்களைச் செய்வது; க்ராமிணாம்—சாதாரண மனிதர்களின்; ரதி:—கவர்ச்சி; உபஸ்த:—இனப்பெருக்கத்திற்கான முறை; துர்மத:—துர்மதம்; ப்ரோகத:—அழைக்கப்படுகிறது; நிர்ருதிர்—நிருதி; குட—மலக்குடல்; உச்யதே—என்றழைக்கப்படுகிறது.

கிராகம் என்றழைக்கப்படும் நகரம் ஆஸீரீ (பிறப்புறுப்பு) என்னும் கீழ்ப்புற வாயிலின் மூலம் அணுகப்படுகிறது. இது பாலுறவிற்கானது. இது மூடர்கள் தீயோர்கள் என்னும் சாதாரண மனிதர்களுக்கு மிகவும் இன்பம் அளிப்பதாக இருக்கின்றது. இனப்பெருக்கத்திற்கானப் புலன் துர்மதம் எனப்படும். எருவாய் எனப்படும் குதம் நிர்ருதி என்றழைக்கப்படுகிறது.

பதம் 4.29.15
வைஸஸம் நரகம் பாயுர்லுப்தகோ ‘ந்தௌ துமே ஸ்ருணு
ஹஸ்த- பாதௌ புமாம்ஸ் தாப்யாம் யுக்தோ யாதி கரோதி ச

வைஸஸம்—வைஸஸம் என்ற பெயரில்; நரகம்—நரகம்; பாயு:—எருவாயில் செயல்படும் புலன்; லுப்தக:—லுப்தகன் என்ற பெயரில்; (பேராசையுடைய); அந்தௌ—குருடன்; து—பிறகு; மே—எனக்கு; ஸ்ருணு—கவனிப்பாயாக; ஹஸ்த-பாதௌ—கைகளும்; கால்களும்; புமான்—உயிர்வாழி; தாப்யாம்—அவைகளுடன்; யுக்த:—ஈடுபடுதல்; யாதி— செல்கிறான்; கரோதி—செயல்கள்; ச—மேலும்;

புரஞ்சனன் வைஸஸம் என்னும் இடத்திற்குச் செல்கிறார் எனும் போது அவர் நரகத்திற்குப் போகிறார் என்று பொருள். அவர் ஒப்தகன் அதாவது எருவாயில் செயல்படும் புலனோடு செல்கிறார். நான் முன்பே இரண்டு குருட்டுத்துணைவர்களைப் பற்றிக் கூறியிருக்கிறேன். இத்துணைவர்கள் கைகள் மற்றும் கால்கள் ஆகும். கைகள் மற்றும் கால்களின் உதவியினால் உயிர் எல்லாவிதமன வேலைகளையும் செய்கிறான். அத்தோடு இங்குமங்கும் உலவவும் செய்கிறான்.

பதம் 4.29.16
அந்த:-புரம் ச ஹ்ருதயம் விஷுசிர் மன உச்யதே
தத்ர மோஹம் ப்ரஸாதம் வா ஹர்ஷம் ப்ராப்னோதி தத்-குணை:

அந்த:-புரம்—அந்தப்புரம்; ச—மேலும்; ஹ்ருதயம்—இதயம்; விஷுசி:—விஷுசினன் என்னும் பெயருடைய பணியாள்; மன—மனம்; உச்யதே—என்று சொல்லப்பட்டிருக்கிறது; தத்ர—அங்கே; மோஹம்—மோகம்; ப்ரஸாதம்—திருப்தி; வா—அல்லது; ஹர்ஷம்—மகிழ்ச்சி; ப்ராப்னோதி—கிடைத்தல்; தத்—மனதின்; குணை—ஜட இயற்கைக் குணங்களினால்.

“அந்த புரம்” என்னும் வார்த்தை இதயத்தைக் குறிக்கிறது. விஸீசினன் என்னும் பெயர் “எல்லா இடங்களுக்கும் செல்கிறது” என்னும் பொருளில் மனதைக் குறிப்பிடுகிறது. மனிதனுள் உயிர் ஜட இயற்கைக் குணங்களின் விளைவுகளை அனுபவித்து மகிழ்கிறது. இவ்விளைவுகள் சிலநேரம் மோகத்திற்கும், சிலநேரம், திருப்திக்கும், சிலநேரம் மகிழ்ச்சிக்கும் காரணமாகின்றன.

பதம் 4.29.17
யதா யதா விக்ரியதே குணாதோ விகரோதி வா
ததா ததோபத்ரஷ்டாத்மா தத்-வ்ருத்தீர் அனுகார்யதே

யதா யதா—அதுபோல்; விக்ரியதே—கிளர்ச்சியடைதல்; குண-அக்த:—ஜடஇயற்கை குணங்களுடன் தொடர்பு கொள்கிறது; விகரோதி—செய்கின்றாற்போல்; வா—அல்லது; ததா ததா—அது போன்று; உபத்ரஷ்டா—கவனிப்பவர்; ஆத்மா—ஆத்மா; தத்—புத்தியின்; வ்ருத்தீ:—தொழில்கள்; அனுகார்யதே—பாவனை செய்தல்.

முன்பே ஒருவனுடைய புத்தி என்பது அரசி என்று கூறப்பட்டுள்ளது. ஒருவன் விழித்திருக்கும் பொழுதும், உறங்கும் பொழுதும் புத்தி பல்வேறு சூழ்நிலைகளை உண்டாக்குகிறது. மாசடைந்த புத்தியினால் பாதிக்கப்படும் பொழுது உயிர் சில காட்சிகளைக் காண்கிறது. மேலும் அவன் புத்தியின் செயல்கள் மற்றும் எதிர்செயல்களைப் பாவனை செய்கிறான்.

பதங்கள் 4.29.18 – 4.29.20
தேஹோ ரதஸ்து இந்த்ரியாஸ்வ: ஸம்வத்ஸர ரயோ ‘கதி:
த்வி-கர்ம-சக்ரஸ் த்ரி-குண-த்வஜ: பஞ்சாஸு-பந்துர:

மனோ-ரஸ்மிர் புத்தி-ஸுதோ ஹ்ருன் நீடோ த்வந்த்வ-கூபர:
பஞ்சேந்த்ரியார்த-ப்ரக்ஷேப: ஸப்த-தாது-வரூதக:

ஆகூதிர் விக்ரமோ பாஹ்யோ ம்ருக-த்ருஷ்ணாம் ப்ரதாவதி
ஏகாதஸேந்த்ரிய-சமூ: பஞ்ச-ஸீனா-விநோத க்ருத்

தேஹ:—உடல்; ரத:—இரதம்; து—ஆனால்; இந்த்ரிய—அறிவுப்புலன்கள்; அஸ்வ:—குதிரைகள்; ஸம்வத்ஸர—மொத்த வருடங்கள்; ரய:—வாழ்நாள்; அகதி:—முன்னேற்றமின்றி; த்வி—இரண்டு; கர்ம—செயல்கள்; சக்ர:—சக்கரங்கள்; த்ரி—மூன்று; குண—ஜட இயற்கைக் குணங்கள்; த்வஜ:—கொடிகள்; பஞ்ச—ஐந்து; அஸீ—உயிர்க்காற்றுக்கள்; பந்துர:—கட்டு; மன:—மனம்; ரஸ்மி:—கயிறு; புத்தி—புத்தி; ஸுத:—ரத சாரதி; ஹ்ருத்—இதயம்; நீட:—உட்காருமிடம்; த்வந்த்வ—இருமை; கூபர:—கம்பங்கள்; பஞ்ச—ஐந்து; இந்த்ரிய-அர்த—புலன் பொருட்கள்; ப்ரக்ஷேப:—ஆயுதங்கள்; ஸப்த—ஏழு; தாது—தாதுக்கள்; வரூதக:—மூடுபவைகள்; ஆகூதி:—செயற்புலன்கள் ஐந்தின் முயற்சிகள்; விக்ரம்:—வீரம் அல்லது செயல்முறைகள்; பாஹ்ய:—புறம்; ம்ருக-த்ருஷ்ணாம்—தவறான விருப்பம்; ப்ரதாவதி—பின்னால் ஓடி; ஏகாதஸ—பதினோரு; இந்த்ரிய—புலன்கள்; சமூ:—வீரர்கள்; பஞ்ச—ஐந்து; ஸீனா—காழ்ப்பு; விநோத—இன்பம்; க்ருத்—செய்தல்.

நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: ரதம் என்று நான் குறிப்பிட்டது உண்மையில் உடலேயாகும். ரதத்தை இழுக்கும் குதிரைகளே புலன்களாகும். ஒவ்வொரு வருடமாக ஓடுவதுபோல், குதிரைகளும் எந்தவிதத் தடங்கலுமின்றி ஓடுகின்றன ஆயினும் அவை எந்தவிதமான முன்னேற்றமும் இன்றி ஆரம்ப இடத்திலேயே நிற்கின்றன. பாவம் மற்றும் புண்ணிய செயல்கள் ரதத்தின் இரண்டு சக்கரங்களாகும். இயற்கையின் முக்குணங்கள் ரதத்தின் மீது பறக்கும் கொடிகள் ஆகும். ஐந்து வகையான உயிர்க்காற்றுக்கள் உயிர்வாழியின் கட்டுக்களாகும், மனமே கயிறாகக் கருதப்படுகிறது. புத்தியே ரத சாரதி ஆகும். இதயமே ரதத்தில் உட்காரும் பலகையாகும். வாழ்க்கையின் இருமைகளான இன்பம், துன்பம் என்பவையே கட்டுமிடங்களாகும். ஏழு தாதுப் பொருட்கள் ரதத்தின் மேலே போர்த்தப்பட்டிருப்பவையாகும். செயற்புலன்கள் ஐந்தும் புறச்செயல் முறைகளாகும். பதினோரு புலன்களும் வீரர்களாவர். புலனின்பத்தில் தன் கவனம் முழுவதும் இருப்பதினால் உயிர் ரதத்தில் ஏறி அமர்ந்து கொண்டு தனது தவறான ஆசைகளை நிறைவேற்றுவதற்காக அவற்றின்பின் அலைவதோடு புலனின்பத்திற்காக பிறவிகள் தோறும் ஓடிக் கொண்டேயிருக்கிறான்.

பதம் 4.29.21
ஸம்வத்ஸரஸ் சண்டவேக: காலோ யேனோபலக்ஷித:
தஸ்யாஹானீஹ கந்தர்வா கந்தர்வ்யோ ராத்ரய: ஸ்ம்ருதா:
ஹரந்தி ஆயு: பரிக்ராந்த்யா ஷஷ்டி-உத்தர-ஸத-த்ரயம்

ஸம்வத்ஸர:—வருடம்; சண்ட-வேக:—சண்டவேகம் என்றழைக்கப்படுகிறது; கால:—காலம்; யேன—எதனால்; உபலக்ஷித:—குறிக்கப்படுகிறது; தஸ்ய—ஆயுட்காலம்; அஹானி—நாட்கள்; இஹ—இகத்தில்; கந்தர்வா:—கந்தர்வர்கள்; கந்தர்வ்ய:—கந்தர்வீக்கள்; ராத்ரய:—இரவுகள்; ஸ்ம்ருதா:—புரிந்து கொள்ளப்படுகின்றன; ஹரந்தி—அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர்; ஆயு:—ஆயுட்காலத்தை; பரிக்ராந்த்யா—பயணம் செய்வதினால்; ஷஷ்டி—அறுபது; உத்தர—மேலே; ஸத—நூறு; த்ரயம்—மூன்று.

முன்னரே குறிப்பிட்டுள்ளபடி சண்டலோகம் என்பது சக்திமிக்க காலமாகும். மேலும் அது கந்தர்வர்கள் என்றும் கந்தர்வீக்கள் என்றும் அழைக்கப்படும் பகற்பொழுதுகள் மற்றும் இரவுப்பொழுதுகளினால் மூடப்பட்டிருக்கின்றது. உடலின் ஆயுட்காலம் என்பது 360 பகல் மற்றும் இரவுகளையுடைய பாதையினால் படிப்படியாகக் குறைக்கப்படுகிறது.

பதம் 4.29.22
கால-கன்யா ஜரா ஸாக்ஷால் லோகஸ் தாம் நாபினந்ததி
ஸ்வஸாரம் ஜக்ருஹே ம்ருத்யு: க்ஷயாய யவனேஸ்வர:

கால-கன்யா—காலமகள்; ஜரா—முதுமை; ஸாக்ஷாத்—நேரடியாக; லோக:—எல்லா உயிர்களும்; தாம்—அவனை; ந—இல்லை; அபினந்ததி—வரவேற்பது; ஸ்வஸாரம்—தனது சகோதரியாக; ஜக்ருஹே—ஏற்றுக் கொண்டமான; ம்ருத்யு:—மரணம்; க்ஷயயா—அழிப்பதற்காக; யவன-ஈஸ்வர:—யவனர்களின் மன்னன்.

காலகன்யா என்று குறிப்பிடப்பட்டிருப்பவர் முதுமை (வயோதிகம்) என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரும் முதிர்ச்சியினை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை ஆனால் மரணதேவனான யவனேஷ்வரன் (யவன ராஜா) ஜராவினை (முதுமையினை) தன் சகோதரியாக ஏற்றுக் கொண்டான்.

பதங்கள் 4.29.23 – 4.29.25
ஆதயோ வ்யாதயஸ் தஸ்ய ஸைனிகா யவனாஸ் சரா: பூதோபஸர்காஸு-ரய: ப்ரஜ்வாரோ த்வி விதோ ஜ்வர:

ஏவம் பஹு-விதைர் து: கைர் தைவ-பூதாத்ம-ஸம்பவை:
க்லிஸ்யமான: ஸதம் வர்ஷம் தேஹே தேஹீ தமோ-வ்ருத:

ப்ராணேந்த்ரிய-மனோ-தர்மான் ஆத்மனி அத்யஸ்ய நிர்குண:
ஸேதே காம-வவான் த்யாயன் மமாஹம் இதி கர்ம-க்ருத்

ஆதய:—மனதின் இடையூறுகள்; வ்யாதய:—உடலின் இடையூறுகள் அல்லது நோய்கள்; தஸ்ய—யவனேஸ்வரனின்; ஸைனிகா:—வீரர்கள்; யவனா:—யவனர்கள்; சரா:—பின்பற்றுவோர்; பூத—உயிர் வாழிகளின்; உபஸர்க—துன்புறு நேரம்; ஆஸு—மிகவிரைவில்; ரய:—சக்திமிக்க; ப்ரஜ்வார:—பிரஜ்வாரம் என்ற பெயரில்; த்வி-வித:—இரண்டுவகையான; ஜ்வர:—ஜுரங்கள்; ஏவம்—இவ்வாறு; பஹு-விதை:—பல்வேறு வேறுபாடுகளின்; து: கை:—துக்கங்களினால்; தைவ:—விதியினால்; பூத—பிற உயிர்களினால்; ஆத்ம—உடல் மற்றும் மனதினால் உண்டாக்கப்பட்ட; ஸம்பவை—உற்பத்தி செய்யப்பட்டது; க்விஸ்யமான:—துன்பத்திற்காளாதல்; ஸதம்—நூறு; வர்ஷம்—வருடங்கள்; தேஹே—உடலில்; தேஹீ—உடலைக்கொண்டுள்ள; தம:-வ்ருத:—பௌதீகத் தோற்றத்தினால் மூடப்பட்டு; ப்ராண—உயிரின்; இந்த்ரிய—புலன்களின்; மன:—மனதின்; தர்மான்—தர்மங்கள்; ஆத்மனி—ஆத்மாவிற்கு; அத்யஸ்ய—தவறாக எண்ணிக் கொண்டு; நிர்குண:—உன்னதமாக இருந்த போதிலும்; ஸேதே—கீழே இடது; காம—புலனின்பத்தின்; வவான்—கூறுகளின்; த்யாயன்—தியானித்து; மம—எனது; அஹம்—நான்; இதி—இவ்வாறு; கர்ம-க்ருத்—செயல்படுவேன்.

யவனேஷ்வரனின் (யமராஜனின்) தொண்டர்கள் மரணவீரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் உடல் மற்றும் மனதிற்குரிய பல்வேறு வகையான இடையூறுகள் என்று அறியப்படுகின்றனர். ப்ரஜ்வாரம் என்பது இருவகை காய்ச்சல் ஆகும். அவை கடுமையான உஷ்ணம் மற்றும் கடுமையான குளிர் போன்ற டைஃபாயிடு மற்றும் நிமோனியாவாகும். உடலினுள் இருக்கும் உயிர் தெய்வச்செயல், பிறஉயிர், அவனது உடல் மற்றும் மனம் போன்றவற்றினால் பெருந்துன்பத்திற்கு ஆளாகிறது. இத்துன்பங்களைத் தவிர, புத்தி, மனம், உடல் போன்றவற்றின் தேவைகளுக்கு ஆட்பட்டும், பல்வேறு வகையான நோய்களினால் பாதிக்கப்பட்டும் கூட உலகினை அனுபவித்து மகிழ வேண்டும் என்னும் பேராசையின் நிமித்தம் அந்த உயிரைப் பெற்றுள்ளவன் பல்வேறு திட்டங்களினால் இழுத்துச் செல்லப்படுகிறான். இப்பௌதீகத் தோற்றத்தினைக் கடந்தவனாக இருந்தபோதிலும் உயிருள்ள ஒருவன் அறியாமையின் காரணமாகத் தவறான ஆணவத்தின்கீழ் (“நான்” “எனது” என்பது) உலகத் துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறான். இவ்வாறு அவன் உடலினுள் நூறு வருடங்கள் வாழ்கிறான்.

பதங்கள் 4.29.26 – 4.29.27
யதாத்மானம் அவிஜ்ஞாய பகவந்தம் பரம் குரும்
புருஷஸ் விஷஜ்ஜேத குணேஷு ப்ரக்ருதே: ஸ்வ-த்ருக்

குணாபிமானீ ஸ ததா கர்மாணி குருதே ‘வஸ:
ஸுக்லம் க்ருஷ்ணம் லோஹிதம் வா யதா-கர்மாபிஜாயதே

யதா—எப்பொழுது; ஆத்மானம்—பரமாத்மா; அவிஜ்ஞாய—மறந்து; பகவந்தம்—முழுமுதற் கடவுள்; பரம்—உயர்ந்த; குரும்—குரு; புருஷ—உயிர்; து—பிறகு; விஷஜ்ஜேத—ஒப்படைத்தல்; குணேஷு—குணங்களுக்கு; ப்ரக்ருதே:—ஜடஇயற்கையின்; ஸ்வ-த்ருக்—தன்னுடைய சுய நலத்தை மட்டும் பார்ப்பவன்; குண-அபிமானீ—ஜட இயற்கைக் குணங்களுடன் அடையாளம் கண்டு; ஸ:—அவன்; ததா—அந்த நேரம்; கர்மாணி—பலன்தரும் செயல்கள்; குருதே—செய்தல்; அவஸ:—தானாகவே; சுக்லம்—வெண்மை; க்ருஷ்ணம்—கருமை; லோஹிதம்—சிகப்பு; வா—அல்லது; யதா—அதற்கேற்ப: கர்ம—செயல்; அபிஜாயதே—பிறப்பெடுத்தல்.

உயிரோடிருப்பவன் தனது நல்லதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டத்தினைத் தேர்வு செய்வதற்கு இயற்கையினால் ஒரு துளியளவு சுதந்திரமே அளிக்கப்படுகிறது. ஆனால் அவன் தன்னுடைய பரம நாயகனான முழுமுதற் கடவுளை மறந்துவிட்ட காரணத்தினால் தன்னை இயற்கையின் குணங்களிலும் ஒப்படைத்துக் கொள்கிறான். இயற்கைக் குணங்களின் பாதிப்பினால் அவன் தன்னை உடல் என்று அடையாளம் காண்கிறான் அதோடு உடலின் நன்மைக்காக அவன் பல்வேறு செயல்களில் பற்றுடையவனாகிறான். அவன் சிலநேரம் தமோகுணத்தின் பாதிப்பின் கீழும், சிலநேரம் ரஜோ குணத்தின் பாதிப்பின்கீழும், சிலநேரம் சத்துவ குணத்தின் பாதிப்பின்கீழும் இருக்கிறான். உயிரோடிருப்பவன் இங்ஙனம் இயற்கைக் குணங்களின் கீழ் பல்வேறு வகையான உடல்களை அடைகிறான்.

பதம் 4.29.28
சுக்லாத் ப்ரகாஸ-பூயிஷ்டால் லோகான் ஆப்னோதி கர்ஹிசித்
து:கோதர்கான் க்ரியாயாஸாம்ஸ் தம:- ஸோகோத்கடான் க்வசித்

சுக்லாத்—நற்குணத்தினால்; ப்ரகாஸ—பிரகாசத்தினால்; பூயிஷ்டான்—தனிச்சிறப்புடைய; லோகான்—உலகங்கள்; ஆப்னோதி—எய்துகிறான்; கர்ஹிசித்—சில நேரங்களில்; து:க—துக்கம்; உதர்கான்—முடிவில் பெறும் பலன்; க்ரியா-ஆயாஸான்—கடின உழைப்புடைய செயல்கள்; தம:—இருள்; ஸோக—சோகத்தில்; உத்கடான்—நிறைந்திருத்தல்; க்வசித்—சில நேரங்களில்.

சத்துவ குணம் நிரம்பப் பெற்றவர்கள் வேதநெறிகளுக்கேற்ப புண்ணியச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனால் அவர்கள் தேவர்கள் வாழும் தேவலோகத்தை அடைகின்றனர். இரஜோகுணத்தினால் பாதிக்கப்பட்டவரகள் மனிதர்கள் வாழும் உலகங்களில் பல்வேறு வகையான பலன்தரும் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதுபோல் தமோ குணத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பலவகையான துன்பத்திற்காளாகி விலங்குகளோடு ஒத்து வாழ்கின்றனர்.

பதம் 4.29.29
க்வசித் புமான் க்வசித் ச ஸ்த்ரீ க்வசின் நோபயம் அந்த-தீ:
தேவோ மனுஷ்யஸ் திர்யக் வா யதா-கர்ம-குணம் பவ:

க்வசித்—சிலநேரங்களில்; புமான்—ஆண்; க்வசித்—சிலநேரங்களில், ச—மேலும்; ஸ்த்ரீ—பெண்; க்வசித்—சிலநேரங்களில்; ந—இல்லை; உபயம்—இரண்டும்; அந்த—குருடு; தீ:—அவனது புத்தி; தேவ:—தேவர்; மனுஷ்ய:—மனிதன்; திர்யக்—விலங்கு, பறவை, போன்றவை; வா—அல்லது; யதா—அதைப் பொருத்து; கர்ம—செயல்களின்; குணம்—குணங்கள்; பவ:—பிறப்பு.

இயற்கையின் தமோ குணத்தினால் மூடப்பட்டிருப்பதினால் உயிர்ப் பொருள் சிலநேரங்களில் ஆணாகவும், சில நேரங்களில் பெண்ணாகவும், சில நேரங்களில் இரண்டுமில்லாத அலியாகவும், சில நேரங்களில் மனிதானாகவும், சில நேரங்களில் தேவனாகவும், சில நேரங்களில் பறவைகளாகவும், மிருகமாகவும் இருக்கிறான். இந்நிலையில் அவன் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். இயற்கைக் குணங்களின் பாதிப்பின் கீழுள்ள செயல்களினாலேயே பல்வேறு வகையான உடல்களை அவன் ஏற்பதும் நடைபெறுகிறது.

பதங்கள் 4.29.30 – 4.29.31
க்ஷுத்-பரீதோ யதா தீன: ஸாரமேயோ க்ருஹம் க்ருஹம்
சரன் விந்ததி யத்-திஷ்டம் தண்டம் ஓதனம் ஏவ வா

ததா காமாஸயோ ஜீவ உச்சாவச-பதா ப்ரமன்
உபரி அதோ வா மத்யே வா யாதி திஷ்டம் ப்ரியாப்ரியம்

க்ஷுத்—பரீதா:—பசியினால் வெல்லப்பட்டு; யதா—போன்று; தீன:—ஏழை; ஸாரமே:—ஒரு நாய்; க்ருஹம்—ஒரு வீட்டிலிருந்து; க்ருஹம்—மற்றொரு வீட்டிற்கு; சரன்—அலைதல்; விந்ததி—பெறுகிறது; யத்—எதனுடைய; திஷ்டம்—விதிக்கேற்ப; தண்டம்—தண்டனை; ஓதனம்—உணவு; ஏவ—உறுதியாக; வா—அல்லது; ததா—அது போல்; காம-ஆஸய:—பல்வேறு வகையான ஆசைகளைப் பின்பற்றி; ஜீவ:—உயிர்வாழி; உச்ச—உயர்ந்த; அவச—தாழ்ந்த; பதா—பாதையில்; ப்ரமன்—அலைதல்; உபரி—உயர்ந்த; அத:—தாழ்ந்த; வா—அல்லது; மத்யே—நடுவில்; வா—அல்லது; யாதி—நோக்கிச் செல்லுதல்; திஷ்டம்—விதிக்கேற்ப; ப்ரிய—மகிழ்ந்து; அப்ரியம்—மகிழ்ச்சியின்றி.

உயிர்ப்பொருள் உண்மையில் பசியினால் வருந்தும் ஓர் நாயைப் போன்றவன். அந்நாய் உணவிற்காக ஒவ்வொரு வீடாகச் சென்று கொண்டிருக்கிறது. அது சில நேரங்களில் தண்டிக்கப்படுவதும், சில நேரங்களில் துரத்தப்படுவதும் உண்டு; சிலநேரங்களில் சிறிதளவு உணவும் பெறுவதுண்டு. அதுபோல் பல்வேறு ஆசைகளினால் பாதிக்கப்பட்ட ஓர் உயிர்ப்பொருளானவன் அவன் விதிக்கேற்ப பல்வேறு வகை உயிரினங்களில் அலைந்து கொண்டிருக்கிறான். சில நேரங்களில் அவன் உயர்ந்தும் சிலநேரங்களில் தாழ்ந்தும் இருக்கிறான். சிலநேரங்களில் அவன் தேவலோகத்திற்கும், சிலநேரங்களில் நரகத்திற்கும் சில நேரங்களில் நடு உலகங்களுக்கும் செல்கிறான்.

பதம் 4.29.32
து: கேஷ்கூ ஏகதரேணாபி தைவ-பூதாத்ம-ஹேதுஹு
ஜீவஸ்ய ந வ்யவச்சேத: ஸ்யாச் சேத் தத்-தத்-ப்ரதிக்ரியா

து: கேஷு—துக்கம்; ஏகதரேண—ஒன்றிலிருந்து; அபி—கூட; தைவ—தெய்வ அருள்; பூத—பிற உயிர்கள்; ஆத்ம—உடல் மற்றும் மனம்; ஹேதுஷு—இதன்பொருட்டு; ஜீவஸ்ய—உயிர்கள்; ந—இல்லை; வ்யவச்சேத:—நிறுத்துதல்; ஸ்யாத்—சாத்தியமாகிறது; சேத்—இருந்தாலும்; தத்-தத்—அத்துன்பங்களின்; ப்ரதிக்ரியா—எதிர்செயல்.

உயிர்கள், தெய்வச் செயலினாலும், பிறஉயிர்வாழிகளினாலும் அல்லது உடல் மற்றும் மனதினாலும் வரும் துன்ப நிலைகளை எதிர்த்துப் போராடவே முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இயற்கை விதிகளுக்கு எதிராக அவன் என்னதான் முயற்சி செய்தபோதிலும் அவன் அவற்றிற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டியதிருக்கிறது.

பதம் 4.29.33
யதா ஹி புருஷோ பாரம் ஸிரஸா குரும் உத்வஹன்
தம் ஸ்கந்தேன ஸ ஆதத்தே ததா ஸர்வா: ப்ரதிக்ரியா:

யதா—போன்று; ஹி—உறுதியாக; புருஷ:—ஒரு மனிதன்; பாரம்—ஒரு சுமை; ஸிரஸா—தலைமீது; குரும்—பாரம்; உத்வஹன்—சுமந்துகொண்டு; தம்—அந்த; ஸ்கந்தேன—தோள்மீது; ஸ:—அவன்; ஆதத்தே—வைக்கிறான்; ததா—அதுபோல்; ஸர்வா:—எல்லாம்; ப்ரதிக்ரியா:—எதிர்செயல்கள்.

ஒரு மனிதனின் தலைச்சுமைப்பாரம் தாங்க முடியவில்லையென்றால் சுமையினைத் தோளுக்கு மாற்றிக் கொள்கிறான். இவ்வாறு சுமையின் துன்பத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயல்கிறான். சுமைக்கு எதிராக அவன் எம்முறையினைக் கையாண்ட போதிலும், தலையிலுள்ள சுமையினைத் தோளுக்கு இடம்மாற்றிக் கொள்ளலாமே ஒழிய வேறொன்றும் நடக்கப் போவதில்லை.

பதம் 4.29.34
நைகாந்த: ப்ரதீகார: கர்மணா கர்ம கேவலம்
த்வயம் ஹி அவித்யோபஸ்ருதம் ஸ்வப்னே ஸ்வப்ன இவானக:

ந—இல்லை; ஏகாந்தத:—இறுதியாக; ப்ரதீகார:—எதிர்ச்செயல்; கர்மணா—பல்வேறு செயல்களின்; கர்ம—மற்றொரு செயல்; கேவலம்—மட்டும்; த்வயம்—இரண்டும்; ஹி—ஏனென்றால்; அவித்யா—மாயையின் காரணம்; உபஸ்ருதம்—ஏற்றுக் கொள்ளுதல்; ஸ்வப்பேன—கனவில்; ஸ்வப்ன:—ஒரு கனவு; இவ—போன்று; அனக—ஓ, பாவச் செயல்களில் இருந்து விடுதலை பெற்றவனே.

நாரதர் தொடர்ந்து கூறினார்: ஓ, அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுதலை பெற்றவனே! கிருஷ்ண உணர்வில்லாத எந்தவொரு செயலாலும் உலகியல் செயல்களை எதிர்த்து ஒருவனால் பரிகாரம் காணமுடியாது. கிருஷ்ண உணர்வற்ற செயல்கள் அனைத்தும் நமது அறியாமையின் விளைவுகளாகும். கனவில் காணும் துன்பத்தினைக் கனவின் மூலமே நீக்கிவிடமுடியாது. அதனை நீக்க வேண்டுமென்றால், நாம் நித்திரையிலிருந்து விழித்தெழுதல் வேண்டும். இதுபோல் நமது இம்மைத்தோற்றத்திற்கு நமது அறியாமையும் மயக்கமும் காரணமாகும். நாம் கிருஷ்ண உணர்வுநிலைக்கு விழித்தெழவில்லையென்றால் இக்கனவுகளிலிருந்து நம்மால் மீள முடியாது. கிருஷ்ண உணர்வே நமது துன்பங்கள் அனைத்திற்கும் இறுதித்தீர்வாக இருப்பதாகும்.

பதம் 4.29.35
அர்தே ஹி அவித்யமானே ‘பி ஸம்ஸ்ருதிர் ந நிவர்ததே
மனஸா லிங்க-ரூபேண ஸ்வப்னே விசரதோ யதா

அர்தே—உண்மைக் காரணம்; ஹி—உறுதியாக; அவித்யமானே—தோன்றவில்லை; அபி—இருந்தபோதிலும்; ஸம்ஸ்ருதி:—பௌதீகத் தோற்றம்; ந—இல்லை; நிவர்ததே—மறைதல்; மனஸா—மனதினால்; லிங்க-ரூபேண—நுண்ணியவடிவத்தினால்; ஸ்வப்னே—கனவில்; விசரத:—செயல்படுகிறது; யதா—போன்று.

சில நேரங்களில் கனவில் நாம் புலியையோ அல்லது பாம்பையோ பார்க்கும் பொழுது மிகவும் துன்பமடைகிறோம். ஆனால் உண்மையில் அங்கு புலியும் இல்லை பாம்பும் இல்லை. இவ்வாறு நாம் நுண்ணிய வடிவத்தில் சில காட்சிகளைக் கற்பனை செய்கிறோம் அதனைத் தொடர்ந்து துன்பமடைகிறோம். இத்துன்பங்கள் நாம் கனவிலிருந்து விழித்தெழாத வரை நம்மைவிட்டு நீங்காது.

பதங்கள் 4.29.36 – 4.29.37
அதாத்மனோ ‘ர்த-பூதஸ் யதோ ‘னர்த பரம்பரா
ஸம்ஸ்ருதிஸ் தத்-வ்யவச்சேதோ பக்த்யா பரமயா குரௌ

வாஸுதேவே பகவதி பக்தி-யோக: ஸமாஹித:
ஸதரீசீனேன வைராக்யம் ஜ்ஞானம் ச ஜனயிஷ்யதி

அத—அதனால்; ஆத்மன:—உயிர்ப்பொருளின்; அர்த-பூதஸ்ய—அவனது உண்மையான விருப்பம்; யத:—எதிலிருந்து; அனர்த—தேவையில்லாத அனைத்தும்; பரம்-பரா—பரம்பரையாக; ஸம்ஸ்ரித:—உலகத்தோற்றம்; தத்—அதன்; வ்யவச்சேத:—நிறுத்தல்; பக்த்யா—பக்தித்தொண்டினால்; பரமயா—கலப்பில்லாத; குரௌ—முழுமுதற் கடவுளுக்கு அல்லது அவரது பிரதிநிதிக்கு; வாஸுதேவே—வாசுதேவர்; பகவதி—முழுமுதற் கடவுள்; பக்தி-யோக:—பக்தித்தொண்டு; ஸமாஹித:—பொருந்துதல்; ஸத்ரீசீனேன—முற்றிலும்; வைராக்யம்—பற்றின்மை; ஜ்ஞானம்—ஞானம்; ச—மேலும்; ஜனயிஷ்யதி—தோன்றுவதற்குக் காரணமாகும்.

மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பில் கிடந்து உழலச் செய்யும் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும் என்பதே ஓர் உயிர்ப் பொருளின் உண்மையான விருப்பமாக இருக்கிறது. இதற்கு ஒரே வழி முழுமுதற் கடவுளை அவரது அடியவரின் மூலம் சரணடைவதேயாகும். முழுமுதற் கடவுளாகிய வாசுதேவருக்குப் பக்தித் தொண்டு செய்யாமல் ஒருவனால் உலகிலிருந்து முற்றிலும் விடுதலை பெறவும் முடியாது அவனால் உண்மை ஞானத்தை வெளிப்படுத்தவும் முடியாது.

பதம் 4.29.38
ஸோ’ சிராத் ஏவ ராஜர்ஷே ஸ்யாத் அச்யுத-கதாஷ்ரய:
ஸ்ருண்வத: ஸ்ரத்தானஸ்ய நித்யதா ஸ்யாத் அதீயத:

ஸ:—அந்த; அசிராத்—மிகவிரைவில்; ஏவ—உறுதியாக; ராஜ-ர்ஷே—அரசர்களிற் சிறந்தவனே; ஸ்யாத்—ஆகிறான்; அச்யுத—முழுமுதற் கடவுள்; கதா—சரிதம்; ஆஷ்ரய:—சார்ந்திருத்தல்; ஸ்ருண்வத:—கேட்கின்ற ஒருவன்; ஸ்ரத்த-தானஸ்ய—நம்பிக்கையுடன்; நித்யதா—எப்போதும்; ஸ்யாத்—ஆகிறான்; அதீயத:—வளர்ச்சியினால்.

அரசர்களிற்சிறந்த ராஜரிஷியே, நம்பிக்கை, முழுமுதற் கடவுளின் பெருமைகளை எப்போதும் கேட்டல், கிருஷ்ண உணர்வில் எப்போதும் ஈடுபடல், பகவானின் செயல்களைக் கேட்டல் போன்ற தன்மைகளையுடையவன் முழுமுதற் கடவுளை நேருக்கு நேர் காணும் தகுதியினை மிகவிரைவில் பெறுகிறான்.

பதங்கள் 4.29.39 – 4.29.40
யத்ர-பாகவதா ராஜன் ஸாதவோ விஷதாஸயா:
பகவத் குணானுகதன-ஸ்ரவண-வ்யக்ர-சேதஸ:

தஸ்மின் மஹன்-முகரிதா மதுபிச்-சரித்ர
பீயூஷ்-ஸேஷ-ஸரித: பரித: ஸ்ரவந்தி
தா யே பிபந்தி அவித்ருஷோ ந்ருப காட-கர்ணைஸ்
தான் ந ஸ்ப்ருஸந்தி அஸன-த்ருத்-பய-ஸோக-மோஹா:

யத்ர—எங்கே; பாகவதா:—சிறந்த பக்தர்கள்; ராஜன்—ஓ, மன்னனே; ஸாதவ:—முனிவர்கள்; விஷத-ஆஸயா:—பெரிய மனமுடையோர்; பகவத்—முழுமுதற் கடவுளின்; குண—குணங்கள்; அனுகதன—தொடர்ந்து பாடுதல்; ஸ்ரவண—கேட்டல்; வ்யக்ர—ஆர்வம்; சேதஸ:—அவர் உணர்வு; தஸ்மின்—அங்கே; மஹத்—சிறந்த முனிவர்களின்; முகரிதா:—வாய்களிலிருந்து வருகின்ற; மது-பித்—மது என்னும் அசுரனை அழித்தவரின்; சரித்ர—சரித்திரத்தை; பீயூஷ—அமிர்த்தத்தின்; ஸேஷ—மிகுதியினை; ஸரித:—நதிகள்; பரித:—சுற்றிலும்; ஸ்ரவந்தி—பெருகுதல்; தா:—அவையனைத்தும்; யே—எவர்கள்; பிபந்தி—பருகி; அவித்ருஷ:—திருப்தியடைதலின்றி; ந்ருப—ஓ, அரசனே; காட—கவனமுடன்; கர்ணை:—தங்கள் காதுகளில்; தான்—அவர்கள்; ந—இல்லை; ஸ்ப்ருஸேந்தி—தொடுவது; அஸன—பசி; த்ருத்—தாகம்; பய—பயம்; ஸோக—சோகம்; மோஹா:—மோகம்.

அன்பார்ந்த மன்னனே, எந்த இடத்தில், தூய பக்தர்கள் ஒழுங்குமுறை விதிகளைக் கடைப்பிடித்தும், தூய உணர்வு பெற்றும் முழுமுதற் கடவுளின் பெருமைகளைக் கேட்டல் மற்றும் ஓதுதல் என்பவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டும் வாழ்கின்றனரோ அந்த இடத்தில் ஆற்றின் அலைகளைப் போல் தொடர்ந்து பெருகிவிடும் அவர்களின் இனிய மொழிகளைக் கேட்கும் வாய்ப்பு ஒருவனுக்குக் கிடைத்ததென்றால் அவன் பசி, தாகம் என்னும் வாழ்க்கையின் இன்றியமையாத் தேவைகளை மறந்து விடுவதோடு அனைத்து வகையான அச்சம், சோகம், மோகம் போன்றவற்றினால் பாதிக்கப்படாதவனாகவும் ஆகிறான்.

பதம் 4.29.41
ஏதைர் உபத்ருதோ நித்யம் ஜீவ-லோக: ஸ்வபாவஜை:
ந கரோதி ஹரேர் நூனம் கதாம்ருத-நிதௌ ரதிம்

ஏதை:—இவற்றினால்; உபத்ருத:—துன்புறுதல்; நித்யம்—எப்போதும்; ஜீவ-லோக:—உலகின் கட்டுண்ட ஆத்மா; ஸ்வ-பாவ-ஜை:—இயற்கையாக; நகரோதி—செய்வதில்லை; ஹரே:—முழுமுதற் கடவுளின்; நூனம்—உறுதியாக; கதா—வார்த்தைகளின்; அம்ருத—அமிர்தத்தின்; நிதௌ—கடலில்; ரதிம்—பற்றுவைத்தல்;

பசி தாகம் என்னும் உடல் தேவைகளினால் எப்போதும் துன்பத்திற்காளாகின்ற காரணத்தினால் ஓர்கட்டுண்ட ஆத்மாவிற்கு முழுமுதற் கடவுளைப் பற்றிய அமிர்த மொழிகளைக் கேட்பதில் பற்றற்றவனாக இருக்கிறான்.

பதங்கள் 4.29.42 – 4.29.44
ப்ரஜாபதி-பதி: ஸாக்ஷாத் பகவான் கிரிஸோ மனு:
தக்ஷாதய: ப்ரஜாத்யக்ஷ நைஷ்டிகா: ஸனகாதய:

மரீசிர் அத்ரி-அங்கிரஸௌ புலஸ்த்ய: புலஹ: க்ரது:
ப்ருகுர் வஸிஷ்ட இதி ஏதே மத்-அந்தா ப்ரஹ்ம-வாதின:

அத்யாபி வாசஸ்-பதயஸ் தபோ-வித்யா-ஸமாதிபி:
பஸ்யந்தோ ‘பி ந பஸ்யந்தி பஸ்யந்தம் பரமேஸ்வரம்

ப்ரஜாபதி-பதி:—பிரம்மதேவன் பிரஜாபதிகள் அனைவர்க்கும் தந்தை; ஸாக்ஷாத்—நேரடியாக; பகவான்—ஆற்றல்மிக்க; கிரிஸ:—சிவபெருமான்; மனு:—மனு; தக்ஷ-ஆதய:—மன்னர் தக்ஷனால் தலைமை தாங்கப்பட்ட; ப்ரஜா அத்யக்ஷா:—மனித இனத்தை ஆட்சி செய்வோர்; நைஷ்டிகா:—உறுதிமிக்க பிரம்மச்சாரிகள்; ஸனக-ஆதய:—சனகரின் தலைமையின்கீழ்; மரீசி:—மரீசி; அத்ரி-அங்கிரஸேன—அத்திரி மற்றும் அங்கிரசு; புலஸ்த்ய:—புலஹர்; க்ரது:—கிரது; ப்ருகு:—பிருகு; வஸிஷ்ட:—வசிஷ்டர்; இதி—இவ்வாறு; ஏதே—அவர்கள் அனைவரும்; மத்-அந்தா:—என்னோடு சேர்த்து; ப்ரஹ்ம-வாதின:—அந்தணர்கள் வேதங்களை நண்குணர்ந்தோர்; அத்ய-அபி—இன்றுவரை; வாச:-பதய:—எடுத்துச் சொல்வதில் தேர்ந்தவர்கள்; தப:—தவம்; வித்யா—அறிவு; ஸமாதிபி:—தியானத்தினால்; பஸ்யந்த:—கண்டு உணர்ந்து; அபி—இருந்த போதிலும்; ந பஸ்யந்தி—அறியமுடியாத; பஸ்யந்தம்—காண்பவர்; பரம-ஈஸ்வரம்—முழுமுதற் கடவுள்.

பிரஜாபதிகள் அனைவரின் தந்தையான ஆற்றல்மிக்க பிரம்மதேவன்; சிவபெருமான், மனு, தக்ஷன், மற்றும் மனிதகுலத்தினை ஆளும்பிறர்; சனகர்; சநாதனர் உள்ளிட்ட நான்கு பிரம்மச்சாரி முனிவர்கள்; மாமுனிவர்களான மரீசி, அத்திரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது, பிருது மற்றும் வசிஷ்டர்; நாரதர் உள்ளிட்ட இவர்கள் அனைவரும் உயர்ந்த அந்தணர்கள் என்பதோடு, நாங்கள் அனைவரும் வேத இலக்கியங்களை ஆதாரப்பூர்வமாக எடுத்துரைக்கும் வல்லமை பெற்றவர்களும் ஆவோம். நாங்கள் ஆற்றல்மிக்கவர்களாக இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் எங்களது தவமும், தியானமும், கல்வியுமே ஆகும். நாங்கள் அடிக்கடி காணும் முழுமுதற் கடவுளைப் பற்றி பல வழிகளில் வினவி அறிந்தும் கூட அவரைப் பற்றி மிகச் சரியாக எங்களால் இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை.

பதம் 4.29.45
ஸப்த-ப்ரஹ்மணி துஷ்பாரே சரந்த உரு-விஸ்தரே
மந்த்ர-லிங்கைர் வ்யவச்சின்னம் பஜந்தோ ந விது: பரம்

ஸப்த-ப்ரஹ்மணி—வேத இலக்கியத்தில்; துஷ்பாரே—அளவற்ற; சரந்த:—ஈடுபடுதல்; உரு—சிறந்த; விஸ்தரே—பரந்து விரிந்த; மந்த்ர—வேத மந்திரங்களின்; லிங்கை:—அறிகுறிகளினால்; வ்யவச்சின்னம்—அரைகுறைச் சக்தியுடைய (தேவர்கள்); பஜந்த:—வழிபட்டு; ந விது:—அவர்கள் அறியார்; பரம்—பரம்பொருள்.

அளவற்ற வேத அறிவில் வளர்ச்சிபெற்று வேதமந்திரங்களினால் பல்வேறு தேவர்களை வழிபட்ட போதிலும், தேவவழிபாடு ஆற்றல் மிக்க முழுமுதற் கடவுளை அறிவதற்கு எந்தவித உதவியும் செய்யாது.

பதம் 4.29.46
யதா யஸ்யானுக்ருஹ்ணாதி பகவான் ஆத்ம-பாவித
ஸ ஜஹாதி மதிம் லோகே வேதே ச பரிநிஷ்டிதாம்

யதா—எப்பொழுது; யஸ்ய—எவருடைய; அனுக்ருஹ்ணாதி—அளவற்றக் கருணையினால் ஆசி வழங்கப்பட்டு; பகவான்—முழுமுதற் கடவுள்; ஆத்ம-பாவித:—பக்தனால் உணர்ந்து கொள்ளப்படும்; ஸ:—அந்தப்பக்தன்; ஜஹாதி—விட்டுவிடுதல்; மதிம்—உணர்வினை; லோகே—உலகில்; வேதே—வேதச்சடங்குகள்; ச—மேலும்; பரிநிஷ்டிதாம்—நிலை நிற்றல்.

ஒரு மனிதன் முழுமூச்சுடன் பக்தித் தொண்டு செய்வானாகில் தனது அளவற்றக் கருணையினால் பகவான் அவனுக்கு அருள் பாவிக்கின்றார். அந்த நேரம் உணர்வு பெற்ற அப்பக்தன் எல்லா உலகச் செயல்களையும் வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேதச் சடங்குகள் அனைத்தையும் விட்டுவிடுகின்றான்.

பதம் 4.29.47
தஸ்மாத் கர்மஸு பர்ஹிஷ்மன்
அஜ்ஞானாத் அர்த-காஸிஷு
மார்த-த்ருஷ்டிம் க்ருதா: ஸ்ரோத்ர
ஸ்பர்ஹிஷ்வ அஸ்ப்ருஷ்ட-வஸ்துஷு

தஸ்மாத்—ஆகையினால்; கர்மஸு—பலன்தரும் செயல்களில்; பர்ஹிஷ்மன்—ஓ, மன்னன் பிராசீனபர்ஹியே; அஜ்ஞானாத்—அஞ்ஞானத்தினால்; அர்த—காஸிஷு—கண்ணைப் பறிக்கும் பலன்தரும் விளைவு; மா—இல்லை; அர்த-த்ருஷ்டிம்—வாழ்க்கை இலட்சியமாகக் கருதுதல்; க்ருதா:—செய்வது; ஸ்ரோத்ர-ஸபர்சிஷ்வ—காதுக்கு இனிமையளிக்கும்; அஸ்ப்ருஷ்ட—தொடுதல் இன்றி; வஸ்துஷு—உண்மை விருப்பம்.

ஆகையினால், அன்பிற்குரிய மன்னன் பர்ஹிஷ்மானே, அஞ்ஞானத்தினால், கேட்பதற்கு இனிமையாகவும், நன்மையளிக்கும் இலட்சியமாகவும் காட்சியளிக்கும் வேதச்சடங்குகள் அல்லது பலன் தரும் செயல்களில் ஒருநாளும் ஈடுபடாதே. இவற்றை வாழ்வின் இறுதி இலட்சியமாக ஒரு நாளும் ஏற்றுக் கொள்ளாதே.

பதம் 4.29.48
ஸ்வம் லோகம் ந விதுஸ் தே வை யத்ர தேவோ ஜனார்தன:
ஆஹுர் தூம்ர-தியோ வேதம் ஸகர்மகம் அதத்-வித:

ஸ்வம்—சுயம்; லோகம்:—உலகம்; ந—இல்லை; விது:—அறிதல்; தே—இம்மனிதர்கள்; வை—உறுதியாக; யத்ர—எங்கே; தேவ:—முழுமுதற் கடவுள்; ஜனார்தன:—கிருஷ்ணர் அல்லது விஷ்ணு; ஆஹு:—சொல்வது; தூம்ர-திய:—மதிகுறைந்த மனிதர்கள்; வேதம்—நான்கு வேதங்கள்; ஸ-கர்மகம்—முழுதும் சமயச் சடங்குகள்; அ-தத்-வித:—அறியாத மனிதர்கள்.

மதிகுறைவுடையோர், வேதங்களில் உள்ள சமயச் சடங்குகளே எல்லாம் என்று ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள், வேதங்களின் முக்கியமான குறிக்கோள், முழுமுதற் கடவுள் உறைகின்ற இடமே தமது உண்மையான இருப்பிடம் என்பதை அறிந்து கொள்ளுதலேயாகும் என்பதை அறியாதிருக்கின்றனர். தங்களது உண்மையான வீட்டின் மீது பற்றில்லாது மாயையினால் அவர்கள் அடுத்த வீடுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

பதம் 4.29.49
ஆஸ்தீர்ய தர்பை: ப்ராக்-அக்ரை: கார்த்ஸ்ன்யேன க்ஷிதி-மண்டலம்
ஸ்தப்தோ ப்ருஹத்-வதான் மானீ கர்ம நாவைஷி யத் பரம்
தத் கர்ம ஹரி-தோஷம் யத் ஸா வித்யா தன்-மதிர் யயா

ஆஸ்தீர்ய—மூடப்பட்டு; தர்பை:—தர்ப்பைப்புல்லினால்; ப்ராக்-அக்ரை:—கிழக்குத் திசையை நோக்கியிருக்கும் நுனிகளுடன்; கார்த்ஸ்ன்யேன—எல்லாம் ஒருங்கிணைந்து; க்ஷிதி மண்டலம்—பூமியின் மேற்பகுதி; ஸ்தப்த:—புதுப்பெருமையர்; ப்ருஹத்—சிறந்த; வதாத்—கொள்வதினால்; மானீ—உன்னை மிகவும் உயர்ந்தவனாகக்கருதி; கர்ம—செயல்; நாவைஷி—நீ அறியவில்லை; யத்—எந்த; பரம்—உயர்ந்த; தத்—அது; கர்ம—செயல்; ஹரிதோஷம்—பரமபுருஷ பகவானை திருப்திப்படுத்துதல்; யத்—எது; ஸா—அந்த; வித்யா—கல்வி; தத்—பகவானுக்கு; மதி:—உணர்வு; யயா—எதன் மூலம்.

அன்பிற்குரிய அரசனே, இவ்வுலகம் முழுவதும் கூர்மையான நுனிகளையுடைய தர்ப்பைப் புற்களினால் மூடப்பட்டிருக்கின்றது. இதன் வலிமையினால் நீ மிகவும் பெருமையுடையவனாக இருக்கின்றாய்! ஏனெனில் நீ பல்வேறுவகையான விலங்குகளை வேள்விகளில் பலியிட்டிருக்கின்றாய். உன்னுடைய மூடத்தனத்தினால் முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்குரிய ஒரே வழி பக்தித் தொண்டேயாகும் என்பதனை நீ அறியவில்லை. இவ்வுண்மையினை உன்னால் புரிந்து கொள்ளவும் முடியாது. உனது செயல்கள் அனைத்தும் முழுமுதற் கடவுளை மகிழ்ச்சிப்படுத்துவதற்குரியதாக மட்டுமே இருத்தல் வேண்டும். நமது கல்விமுறைகூட நாம் கிருஷ்ண உணர்வினைப் பெறுவதற்குரியதாகவே இருத்தல் வேண்டும்.

பதம் 4.29.50
ஹரிர் தேஹ-ப்ருதாம் ஆத்மா ஸ்வயம் ப்ரக்ருதிர் ஈஸ்வர:
தத்-பாத-மூலம் ஸரணம் யத: க்ஷேமோ ந்ருணாம் இஹ

ஹரி:—ஸ்ரீஹரி; தேஹ-ப்ருதாம்—பரு உடல்களைப் பெற்றிருக்கும் உயிர்களின்; ஆத்மா—பரமாத்மா; ஸ்வயம்—அவரேயாவார்; ப்ரக்ருதி:—ஜட இயற்கை; ஈஸ்வர:—கட்டுப்படுத்துபவர்; தத்—அவருடைய; பாத-மூலம்—திருவடி; ஸரணம்—சரணடைதல்; யத:—எதிலிருந்து; க்ஷேம:—நல்யோகம்; ந்ருணாம்—மனிதர்களின்; இஹ—இவ்வுலகில்;

இவ்வுலகில் பருஉடல்களையுடைய அனைத்து உயிர்களுக்கும் பரமாத்மாவாகவும், வழிகாட்டியாகவும் விளங்குபவர் முழுமுதற் கடவுளான ஸ்ரீ ஹரியே ஆவார். அவரே ஜடஇயற்கையின் அனைத்துச் செயல்களுக்கும் பரம நெறியாளராக விளங்குகின்றார். அவரே நம் சிறந்த நண்பர். ஆகையினால் நாம் அனைவரும் அவரது திருவடித் தாமரைகளைச் சரணடைய வேண்டும். இதைச் செய்வதின் மூலம் ஒருவரது வாழ்க்கை மங்கலகரமாக விளங்கும்.

பதம் 4.29.51
ஸ வை ப்ரியதமஸ் சாத்மா யதோ ந பயம் அண்வபி
இதி வேத ஸ வை வித்வான் யோ வித்வான் ஸ குருர் ஹரி:

ஸ:—அவர்; வை—உறுதியாக; ப்ரிய-தம:—மிகுந்த பிரியத்திற்குரிய; ச—மேலும்; ஆத்மா—பரமாத்மா; யத:—யாரிடமிருந்து; ந—இல்லை; பயம்—பயம்; அணு—அணுவளவு; அபி—கூட; இதி—இவ்வாறு; வேத—அறிகின்ற (ஒருவன்); ஸ:—அவன்; வை—உறுதியாக; வித்வான்—கற்றறிந்தவன்; ய:—எவன்; வித்வான்—கற்றறிந்தவன்; ஸ:—அவன்; குரு:—ஆன்மீகக்குரு; ஹரி:—பகவானிடமிருந்து வேறானவன் அல்லன்.

பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவனுக்கு உலக வாழ்வில் அச்சம் அணுவளவும் இருப்பதில்லை. ஏனெனில் முழுமுதற் கடவுளே பரமாத்மாவாகவும் அனைவரின் நண்பனாகவும் விளங்குகிறார். இந்த ரகசியத்தினை அறிந்து கொண்டவனே உண்மையில் கல்விமான் ஆவான். இவ்வழியே கல்விகற்றவன் உலகிற்கே ஆன்மீக குருவாகத் திகழ்வான். உண்மையில் தேர்ந்த ஆன்மீக குருவாகவும் கிருஷ்ணரின் பிரதிநிதியாகவும் விளங்கினான் என்றால் அவன் கிருஷ்ணரிலிருந்து வேறானவன் அல்லன்.

பதம் 4.29.52
நாரத உவாச
ப்ரஸ்ன ஏவம் ஹி ஸஞ்சின்னோ பவத: புருஷர்ஷப
அத்ர மே வததோ குஹ்யம் நிஸாமய ஸுஸ்சிதம்

நாரத: உவாச—நாரதர் கூறினார்: ப்ரஸ்ன:—வேள்வி; ஏவம்—இவ்வாறு; ஹு—உறுதியாக; ஸஞ்சின்ன:—பதில் அளித்தல்; பவத:—உன்னுடைய; புருஷர்ஷப—ஓ, மனிதரில் சிறந்தோனே; அத்ர—இங்கே; மேவதத:—நான் கூறுகின்ற; குஹ்யம்—ரகசியமான; நிஸாமய—கேட்பாயாக; ஸு-நிஸ்சிதம்—நிச்சயமாக அறியப்பட்ட.

மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: ஓ, மனிதரில் சிறந்தோனே, நீ கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் மிகச் சரியாக பதிலை நான் கூறிவிட்டேன். இப்போது தெய்வீக முனிவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மிகவும் ரகசியமான மற்றொரு சரிதத்தினைக் கேட்பாயாக.

பதம் 4.29.53
க்ஷுத்ரம்சரங்ம ஸுமநஸாம் ஸரணே மிதித்வா
ரக்தம் ஷடங்க்ரி-கண-ஸாமஸு லுப்த-கர்ணம்
அக்ரே வ்ருகான் அஸீ-த்ருபோ ‘விகணய்ய யாந்தம்
ப்ருஷ்டே ம்ருகம் ம்ருகய லுப்தக-பாண-பின்னம்

க்ஷுத்ரம்—புல்லின் மேல்; சரம்—மேய்வதற்காக; ஸீம-நஸாம்—ஒரு அழகிய பூங்காவனத்தில்; ஸரணே—பாதுகாப்பின் கீழ்; மிதித்வா—ஒரு பெண்மானுடன் சேர்ந்த; ரக்தம்—பற்றுக் கொண்டு; ஷட்-அங்க்ரி—தும்பிகளின்; கண—கூட்டங்கள்; ஸாமஸீ—பாடிக்கொண்டு; லுப்த-கர்ணம்—அதன் காதுகள் கவரப்பட்டு; அக்ரே—முன்னால்; வ்ருகான்—புலிகள்; அஸீ-த்ருப:—பிறஉயிரைக் கொன்று உயிர்வாழும்; அவிகணய்ய—புறக்கணித்து; யாந்தம்—அசைந்து கொண்டு; ப்ருஷ்டே—பின்புறத்தில்; ம்ருகம்—மான்; ம்ருகய—தேடிக் கொண்டு; லுப்தக—ஓர் வேடன்; பாண—அம்புகளினால்; பின்னம்—துளைக்கும் எண்ணத்துடன்.

அன்பிற்குரிய மன்னனே, ஒரு பூங்காவனத்தில் ஓர் ஆண்மான் தன் இணையானப் பெண்மானுடன் புல்லை மேய்ந்து கொண்டிருக்கின்றது அதனை அருள் கூர்ந்து தேடிக் காண்பாயாக அம்மான் புல்லைத்தின்று கொண்டும், தும்பிகள் கூட்டங் கூட்டமாக ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த இனிய இசையைக் கேட்டுத் தன்னை மறந்த மகிழ்ச்சியில் இருக்கின்றது. அதன் நிலைமையினை ஒரு கணம் எண்ணிப்பார். பிற உயிர்களைக் கொன்று அதன் மாமிசத்தைத் தின்றுவாழும் புலி ஒன்று அதன் எதிரில் நிற்பதை அந்த மான் கவனிக்கவில்லை. கூர்மையான அம்புகளினால் குத்திக் கொல்வதற்கு ஒரு வேடன் பின்னால் நின்று கொண்டிருக்கின்றான் இவ்வாறு அம்மானின் மரணம் இரு புறத்திலும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

பதம் 4.29.54
ஸீமன:-ஸம-தர்மணாம் ஸ்த்ரீணாம் ஸரண ஆஸ்ரமேபுஷ்ப மது கந்தர்வத் க்ஷுத்ரதமம் காம்ய-கர்ம-விபாகஜம்-
காம-ஸுக-லவம் ஜைஹ்வ்யௌபஸ்த்யாதி விசின்வந்தம் மிதுனீ-பூய தத்-அபிநிவேஸி தமனஸம் ஷடங்க்ரி-கண-ஸாம-
கீதவத் அதிமனோஹர-வனிதாதி ஜனாலாபேஷ்வ அதிதராம் அதிப்ர-லோமித-கர்ணம் அக்ரே வ்ருக யூதவத் ஆத்மன ஆயுர் ஹரதோ ‘ஹோ-
ராத்ரான் தான் கால-லவ- விஸேஷான் அவிகணய்ய-க்ருஹேஷு விஹரந்தம் ப்ருஷ்டாத ஏவ பரோக்ஷம் அனுப்ரவ்ருத்தோ லுப்தக: க்ருதாந்தோ ‘ந்த:
ஸரேண யம் இஹ பராவித்யதிகம் இமம் ஆத்மானம் ஆஹோ ராஜன் பின்னஹ்ருதயம் தரஷ்டம் அர்ஹஸீதி

ஸுமன:—மலர்கள்; ஸம-தர்மணாம்—போன்றது; ஸ்த்ரீணாம்—பெண்களின்; ஸரணே—சரணடைதல்; ஆஸ்ரமே—இல்லறவாழ்க்கை; புஷ்ப—மலர்களின்; மது—தேன்; கந்த—நறுமணம்; வத்—போன்ற; க்ஷுத்ரதமம்—முக்கியமற்றதாகும்; காம்ய—ஆசை; கர்ம—செயல்களின்; விபாக-ஜம்—பெற்றதின் பலனாக; காம-ஸுக—புலனுகர்ச்சியின்; வலம்—ஒருதுண்டு; ஜைஹவ்ய—நாக்கின்சுவை; ஔபஸ்த்ய—பாலுறவு இன்பம்; ஆதி—ஆதியில்; விசின்வந்தம்—எப்போதும் நினைத்துக் கொண்டு; மிதுனீ-பூய—பாலுறவு வாழ்க்கையில் ஈடுபட்டு; தத்—அவன் மனைவியினிடத்தில்; அபிநிவேஸித—எப்போதும் ஆழ்ந்து; மனஸம்—அவன் மனம்; ஷட்-அங்க்ரி—தும்பிகளின்; கண—கூட்டங்களின்; ஸாம்—அருமையான; கீத—கீதத்தில்; வத்—போன்ற; அதி—மிகுந்த; மனோஹர—கவரப்பட்டு; வானிதா-ஆதி—மனைவியுடன் தொடங்கி; ஜன—மக்களின்; ஆலோபேஷு—பேச்சுக்களுக்கு; அதிதராம்—அதிகமாக; அதி—மிகவும்; ப்ரலோபித—கவரப்பட்டு; கர்ணம்—அவனது செவிகள்; அக்ரே—முன்னால்; வ்ருக-யூத—புலிக்கூட்டங்கள்; வத்—போன்று; ஆத்மன:—ஒருவனது சுயம்; ஆயு:—ஆயுள்; ஹரத:—எடுத்துச் செல்வதை; அஹ: அஹ: ராத்ரான்—பகலும், இரவும்; தான்—அவர்கள் அனைவரும்; கால-லவ-விஸேஷான்—காலத்தின் கணங்கள்; அவிகணய்ய—கருத்தில் கொள்ளாது; க்ருஹேஷு—இல்லற வாழ்க்கையில்; விஹரந்தம்—மகிழ்ந்து கொண்டு; ப்ருஷ்டத:—பின்னாலிருந்து; ஏவ—உறுதியாக; பரோக்ஷம்—கண்டு கொள்ளலாம்; அனுப்ரவ்ருத்த:—பின் தொடர்ந்து; ருப்தக:—வேடன்; க்ருத-அந்த:—காலதேவன் (மரணதேவன்); அந்த:—இதயத்தில்; ஸரேண—ஓர் அம்பினால்; யம்—எவனுக்கு; இஹ—இவ்வுலகத்தில்; பராவித்யதி—துளைத்தல்; தம்—அந்த; இமம்—இந்த; ஆத்மானம்—உனக்குரிய; அஹோ—ராஜன் ஓ, மன்னனே; பின்ன-ஹ்ருதயம்—அவன் இதயம் துளைக்கப்பட்டு; த்ரஷ்டும்—காண்பதற்கு; அர்ஹஸி—நீ வேண்டும்; இதி—இவ்வாறு.

அன்பார்ந்த மன்னனே, ஒரு பூ மலர்ந்தபின் அணியப்பட்டு வாடியபிறகு ஒதுக்கப்படுவது போல் பெண்ணும் முதலில் கவர்ச்சிக்குரியவளாகவும் இறுதியில் துன்பத்திற்குரியவளாகவும் இருக்கிறாள். மலரின் நறுமணத்தினை ஒருவன் மகிழ்ந்து அனுபவிப்பது போல், பெண்களுடன் கூடி உயிர் காம இச்சைகளில் சிக்கி, பாலுறவினை அனுபவித்து மகிழ்கிறான். அவன் இவ்வாறு புலனுகர்ச்சி வாழ்வினை நாவிலிருந்து பிறப்புறுப்புவரை அனுபவித்து மகிழ்கிறான். இவ்வழியே உயிர்தான் இல்லற வாழ்வில் மகிழ்ந்திருப்பதாகத் தனக்குத்தானே கருதிக் கொள்கிறான். மனைவியோடு இணைந்து அவன் எப்போதும் இதுபோன்ற நினைவுகளிலேயே ஆழ்ந்திருக்கின்றான். மலரிலுள்ள தேனை எடுக்கும் பொழுது தும்பிகள் ரீங்கரிப்பதைப் போன்ற மிகுந்த மகிழ்ச்சியடைகிறான். அவன் தன் முன்னே இரவு, பகலாக தன் ஆயுட்காலத்தைக் குறைத்துக் கொண்டிருக்கும் காலம் என்பதை மறந்துவிடுகிறான். வாழ்நாள் படிப்படியாகக் குறைந்து கொண்டிருப்பதைப் பற்றியும் அறிவதில்லை. அதுபோல் தன் பின்னாலிருந்து தன்னைக் கொல்ல வருகின்ற மரண தேவனைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. இதனை முதலில் புரிந்து கொள்வாயாக! நீ இவ்வாறு நிலையில்லாமலும், அனைத்துப் பக்கங்களில் இருந்து அச்சுறுத்தப்பட்டும் நீ வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்.

பதம் 4.29.55
ஸத்வம் விசய ம்ருக-சேஷ்டிதம் ஆத்மனோ ‘ந்தஸ்
சித்தம் நியச்ச ஹ்ருதி கர்ண-துனீம் ச சித்தே
ஜஹி அங்கனாஸ்ரமம் அஸத்தம-யூத-காதம்
ப்ரீணீஹி ஹம்ஸ-ஸரணம் விரம க்ரமேண

ஸ:—அந்த மனிதன்; த்வம்—நீ; விசக்ஷ்ய—கருதுதல்; ம்ருக-சேஷ்டிதம்—மானின் செயல்கள்; ஆத்மன:—தனது; அந்த:—அகத்தினுள்; சித்தம்—உணர்வு; நியச்ச-ஹ்ருதி—இதயத்தில்; கர்ண-துனீம்—செவிவழியே கேட்டு; ச—மேலும்; சித்தே—உணர்விற்கு; ஜஹி—விட்டுவிடுதல்; அங்கனா-ஆஸ்ரமம்—இல்லற வாழ்க்கை; அஸத்-தம—மிகவும் வெறுக்கத்தக்க; யூத-காதம்—ஆண், பெண் பற்றிய கதைகள் நிறைந்தது; ப்ரீணீஹி—ஏற்றுக்கொள்; ஹம்ஸ-ஸரணம்—முக்தியடைந்த ஆத்மாக்களை சரணடைதல்; விரம—பற்றற்றவனாகி; க்ரமேண—படிப்படியாக.

அன்பார்ந்த மன்னனே, மானின் உருவக நிலையினைச் சற்றுப் புரிந்து கொள்ள முயல்வாயாக உன்னைப் பற்றிய முழு உணர்வுடையவனாகி, பலன் தரும் செயலினால் தேவலோகத்திற்கு உயர்வு பெறலாம் என்பது பற்றிக் கேட்பதினால் உண்டாகும் மகிழ்ச்சியினைத் துறந்துவிடுவாயாக. முற்றிலும் பாலுறவு நிறைந்ததும், அது தொடர்புடைய கதைகள் நிறைந்ததுமான இல்லறவாழ்வினைத் துறந்துவிடுவாயாக. விடுதலை பெற்ற ஆத்மாக்களின் கருணையின் மூலம் முழுமுதற் கடவுளைச் சரணடைவாயாக. இவ்வழியே அருள்கூர்ந்து உலக வாழ்வில் உனக்கிருக்கும் கவர்ச்சியினை விட்டுவிடுவாயாக.

பதம் 4.29.56
ராஜோவாச
ஸ்ருதம் அன்வீக்ஷிதம் ப்ரஹ்மன் பகவான் யத் அபாஷத
நைதஜ் ஜானந்தி உபாத்யாயா: கிம் ந ப்ரூயுர் விதுர்யதி

ராஜா உவாச—அரசர் கூறினார்; ஸ்ருதம்—கேட்டது; அன்வீக்ஷிதம்—கருதப்படுதல்; ப்ரஹ்மன்—ஓ, அந்தணரே; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்த; யத்—எது; அபாஷத—நீர் கூறியது; ந—இல்லை; ஏதத்—இந்த; ஜானந்தி—அறிதல்; உபாத்யாயா:—பலன்தரும் செயல்களின் ஆச்சாரியர்கள்; கிம்—ஏன்; ந ப்ரூயு:—அவர்கள் உபதேசிக்கவில்லை; விது:—அவர்கள் அறிந்தது; யதி—இருந்தும்.

மன்னர் பதில் கூறினார்: போற்றுதலுக்குரிய அந்தணரே, நீர் கூறிய அனைத்தையும் நான் கவனமுடன் கேட்டு ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்ததில், என்னைப் பலன்தரும் செயலில் ஈடுபடுத்திய ஆச்சாரியர்கள் அனைவரும் இந்த ரகசிய ஞானத்தினைப் பற்றி ஏதும் அறியாதவர்கள் என்று கருதுகிறேன். அன்றி அறிந்தவர்களாயின், ஏன் அவர்கள் எனக்கு அதனை விளக்கவில்லை?

பதம் 4.29.57
ஸம்ஸயோ ‘த்ர து மே விப்ர ஸஞ்சின்னஸ் தத்-க்ருதோ மஹான்
ருஷயோ ‘பி ஹி முஹ்யந்தி யத்ர நேந்த்ரிய-வ்ருத்தய:

ஸம்ஸய:—சந்தேகம்; அத்ர—இங்கே; து—ஆனால்; மே—எனது; விப்ர—ஓ, அந்தணரே; ஸஞ்சின்ன:—தெளிவாகிறது; தத்-க்ருத:—அதனால் செய்யப்பட்ட; மஹான்—மிகச்சிறந்த; ருஷய:—மாமுனிவர்கள்; அபி—கூட; ஹி—உறுதியாக; முஹ்யந்தி—குழப்பமடைகின்றனர்; யத்ர—எங்கே; ந—இல்லை; இந்த்ரிய—புலன்களின்; வ்ருத்தய:—செயல்கள்.

போற்றுதலுக்குரிய அந்தணரே, உமது உபதேசங்களுக்கும் என்னை உலகச் செயல்களில் ஈடுபடச் செய்த ஆன்மீக குருக்களின் உபதேசங்களுக்கும் இடையே பல முரண்பாடுகள் இருக்கின்றன. பக்தித் தொண்டு, ஞானம், துறவு போன்றவற்றிற்கிடையேயுள்ள வேற்றுமைகள் என்னவென்று இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இவற்றைப் பற்றிய சில சந்தேகங்கள் எனக்கிருந்தன. ஆனால் அவற்றை இப்போது நீர் மிகுந்த கருணையுடன் தெளிவாக்கி வீட்டீர். மேலும் வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் என்னவென்பது பற்றி மாமுனிவர்கள் கூடக்குழப்பமடைகின்றனர் என்பதையும் என்னால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையில் புலனுகர்ச்சி என்ற கேள்விக்கே இப்போது இடமில்லை.

பதம் 4.29.58
கர்மாணி ஆரபதே யேன புமான் இஹ விஹாயதம்
அமுத்ரான்யேன தேஹேன ஜுஷ்டானி ஸ யத் அஸ்னுதே

கர்மாணி—பலன்தரும் செயல்கள்; ஆரபதே—செய்யத் தொடங்குதல்; யேன—எதன் மூலம்; புமான்—ஓர் உயிர்; இஹ—இந்தப் பிறவியில்; விஹாய—துறத்தல்; தம்—அந்த; அமுத்ர—அடுத்தப் பிறவியில்; அன்யேன—மற்றொரு; தேஹேன—ஓர் உடலினால்; ஜீஷ்டானி—விளைவுகள்; ஸ:—அவன்; யத்—எந்த; அஸ்னுதே—அனுபவிக்கிறான்.

இப்பிறவியில் ஓர் உயிர் செய்யும் செயல்களின் பலாபலன்களை அவனது அடுத்தப்பிறவியில் அனுபவிக்கிறான்.

பதம் 4.29.59
இதி வேத-விதாம் வாத: ஸ்ரூயதே தத்ர தத்ர ஹ
கர்ம யத் க்ரியதே ப்ரோக்தம் பரோக்ஷம் ந ப்ரகாஸதே

இதி—இவ்வாறு; வேத-விதாம்—வேத விற்பன்னர்கள்; வாத:—கோட்பாடு; ஸ்ரூயதே—கேட்கப்படுகிறது; தத்ர-தத்ர—இங்குமங்கும்; ஹ—உறுதியாக; கர்ம—செயல்; யத்—என்ன; க்ரியதே—செய்யப்பட்ட; ப்ரோக்தம்—சொல்லப்பட்டவாறு; பரோக்ஷம்—தெரியாத; ந-ப்ரகாஸதே—நேரடியாக வெளிப்படவில்லை.

ஒருவன் அவனது கடந்த காலச் செயல்களுக்கேற்ப இன்பமோ துன்பமோ அனுபவிக்கிறான் என்று வேத பண்டிதர் கூறுகின்றனர். ஆனால் நடைமுறையில் சென்ற பிறவியில் செயல்களைச் செய்த உடல் சென்ற பிறவியிலேயே மறைந்துவிட்டது. ஆயினும், அச்செயல்களின் இன்ப துன்பப் பலன்களை மற்றொரு உடல் அனுபவிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?

பதம் 4.29.60
நாரத உவாச
யேனைவாரபதே கர்ம தேனைவாமுத்ர தத் புமான்
புங்க்தே ஹி அவ்யவதானேன லிங்கேன மனஸா ஸ்வயம்

நாரத: உவாச—நாரதர் கூறினார்; யேன—எதன்மூலம்; ஏவ—உறுதியாக; ஆரபதே—தொடங்குகிறது; கர்ம—பலன்தரும் செயல்கள்; தேன—அந்த உடலினால்; ஏவ—உறுதியாக; அமுத்ர—மறபிறவியில்; தத்—அந்த; புமான்—உயிர்வாழி; புங்க்தே—அனுபவிக்கிறான்; ஹி—ஏனென்றால்; அவ்யவதானேன—எந்தவிதமாற்றமுமின்றி; லிங்கேன—நுண்ணுடலினால்; மனஸா—மனதினால்; ஸ்வயம்—சுயமாக.

மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: உயிர் ஒரு பூதவுடலில் இப்பிறவியில் செயல்படுகிறது. இப்பூதவுடல் மனம், புத்தி, ஆணவம் என்பவற்றலான நுண்ணுடலினால் பலவந்தமாச் செயல்பட வைக்கப்படுகிறது. பூதவுடல் மறைந்த பிறகு செயல்பட வைக்கப்படுகிறது. பூதவுடல் மறைந்த பிறகு இன்ப, துன்பத்தினை அனுபவிப்பதற்கு நுண்ணுடல் அங்கே இருக்கிறது. அதனால் இதில் மாற்றமென்று எதுவுமில்லை.

பதம் 4.29.61
ஸயானம் இமம் உத்ஸ்ருஜ்ய ஸ்வஸந்தம் புருஷோ யதா
கர்மாத்மனி ஆஹிதம் புங்க்தே தாத்ருஸேனதரேண வா

ஸயானம்—நித்திரை கொள்ளும் பொழுது; இமம்—இந்தவுடல்; உத்ஸ்ருஜ்ய—துறந்தபின்னர்; ஸ்வஸந்தம்—சுவாசித்துக் கொண்டு; புருஷ:—ஆண்தன்மையன்; யதா—இருப்பதுபோன்று; கர்ம—செயல்; ஆத்மனி—மனதில்; ஆஹிதம்—செய்யப்பட்டு; புங்க்தே—அனுபவிக்கிறான்; தாத்ருஸேன—இதுபோன்ற உடலினால்; இதரேண—மற்றொரு உடலினால்; வா—அல்லது.

கரை காணும் பொழுது உயிர்ப்பாருளானவன் உண்மையான உடலைத் துறந்துவிடுகின்றான். அவனது மனம் மற்றும் புத்தியினால் அவன் மற்றொரு உடலில், ஒரு தேவனாக அல்லது நாயாகவோ செயல்படுகிறான். இப்பூதவுடலை நீங்கிய பின்னர் உயிர்வாழி ஒரு விலங்கின் உடலிலோ, அல்லது வேறொரு உலகிலோ வாழ்கிறான். இவ்வாறு அவன் தனது முற்பிறவியின் வினைப்பயன்களைத் தொடர்ந்து அனுபவிக்கின்றான்.

பதம் 4.29.62
மமைதே மனஸா யத்யத் அஸாவ் அஹம் இதி ப்ருவன்
க்ருஹ்ணீயாத் தத் புமாம் ராத்தம் கர்ம யேன புனர் பவ:

மம—மனது; ஏதே—இவையெல்லாம்; மனஸா—மனதினால்; யத்யத்—எதுவாயினும்; அஸௌ—அந்த; அஹம்—நான்; இதி—இவ்வாறு; ப்ருவன்—ஏற்றுக்கொண்டு; க்ருஹ்ணீயாத்—தன்னோடு எடுத்துக் கொள்கிறான்; தத—அந்த; புமான்—உயிர்; ராத்தம்—நிறைவான; கர்ம—செயல்; யேன—எதனால்; புன:—மீண்டும்; பவ:—பௌதீகத்தோற்றம்.

உயிர், நான் இது, நான் அது, எனது கடமை இது, ஆகையினால் இதனை நான் செய்வேன் என்னும் உடற்கருத்தின்கீழ் செயல்படுகிறான். இவையனைத்தும் மனத்தில் அழுத்தமாகப் பதிந்திருப்பவையாகும். மேலும் இச்செயல்கள் அனைத்தும் தற்காலிகமானவையேயாகும்; இருந்தும் முழுமுதற் கடவுளின் கருணையினால் உயிர் அவனது மனயூகங்கள் அனைத்தையும் செயல்படுத்துவதற்கான வாய்ப்பினைப் பெறுகிறான். இவ்வாறு அவன் மற்றொரு உடலைப் பெறுகிறான்.

பதம் 4.29.63
யதானுமீயதே சித்தம் உபயைர் இந்த்ரியேஹிதை:
ஏவம் ப்ராக்-தேஹஜம் கர்ம லக்ஷ்யதே சித்த-வ்ருத்திபி:

யதா—போன்ற; அனுமீயதே—கற்பனை செய்யக்கூடிய; சித்தம்—ஒருவனது உணர்வு அல்லது மனநிலை; உபயை:—இரண்டும்; இந்த்ரிய—புலன்களின்; ஈஹிதை:—செயல்களினால்; ஏவம்—அதுபோல்; ப்ராக்—முன்னாள்; தேஹஜம்—உடலினால் செய்யப்பட்ட; கர்ம—செயல்கள்; லக்ஷ்யதே—உணரக்கூடும்; சித்த—உணர்வு; வ்ருத்திபி:—தொழில்களினால்.

ஒருவன் உயிரின் மனநிலை அல்லது உணர்வு நிலையினை அறிபுலன், செயற்புலன் எனும் இருவகைப் புலன்களினால் அறிந்து கொள்ளலாம். அதுபோல் ஒரு மனிதனின் மனநிலை அல்லது அவனது உணர்வு நிலையினால் அவன் தனது முற்பிறவி நிலையினை அறிந்து கொள்ளலாம்.

பதம் 4.29.64
நானுபூதம் க்வ சானேன தேஹேனாத்ருஷ்டம் அஸ்ருதம்
கதாசித் உபலப்யேத யத் ரூபம் யாத்ருக் ஆத்மனி

ந—இல்லை; அனுபூதம்—அனுபவித்தல்; க்வ—எந்த நேரமும்; ச—மேலும்; அனேன-தேஹேன—இவ்வுடலினால்; அத்ருஷ்டம்—காண்பதில்லை; அஸ்ருதம்—கேட்டதில்லை; கதசித்—சில நேரங்களில்; உபலப்யேத—அனுபவிக்கப்படலாம்; யத்—எது; ரூபம்—வடிவம்; யாத்ருக்—எந்தவகையானும்; ஆத்மனி—மனதினில்.

சில நேரங்களில் நாம் திடீரென்று இப்போதிருக்கும் நமது உடலினால் உணரப்படாத, கேட்கப்படாத, பார்க்கப்படாத ஏதோ ஒன்றினை அனுபவிக்கிறோம். சில நேரங்களில் அவற்றை நமது கனவுகளில் காண்கிறோம்.

பதம் 4.29.65
தேனாஸ்ய தாத்ருஷம் ராஜன்லுலிங்கினோ தேஹ-ஸம்பவம்
ஸ்ரத்தத்ஸவானனுபூதோ ‘ர்தோ ந மன: ஸ்ப்ரஷ்டும் அர்ஹதி

தேன—ஆகையினால்; அஸ்ய—உயிர்வாழியின்; தாத்ருஷம்—அது போன்று; ராஜன்—ஓ, மன்னனே; லுலிங்கின:—அவனிடம் நுண் மனம் ஆகிய ஆடை இருக்கிறது; தேஹ-ஸம்பவம்—முந்தைய உடலினால் உருவாக்கப்பட்ட; ஸ்ரத்தத்ஸ்வ—உண்மை என்று ஏற்றுக் கொள்; அனனு-பூத:—உணரவில்லை; அர்த:—ஒன்றினை; ந—இல்லை; மன:—மனதினில்; ஸ்ப்ரஷ்டும்—வெளிப்படுத்துவதற்கு; அர்ஹதி—இயல்கிறது.

ஆகையினால் அன்பு மன்னனே, நுண்மன மூடப்பட்டிருக்கும் உயிர் பல்வேறு வகையான சிந்தனைகளையும் நிழல் ஆடையினால் உருவங்களையும் வளர்க்கிறது என்றால் அதற்கு அவனது முந்தைய உடலே காரணமாகும். எனது இந்த வார்த்தைகள் சத்தியம் என்று ஏற்றுக் கொள்வாயாக. முந்தைய உடல் அனுபவித்தறியாத ஒன்றினை இப்போது நம் மனம் கற்பனைகளாகக் காண்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை.

பதம் 4.29.66
மன ஏவ மனுஷ்யஸ்ய பூர்வ-ரூபாணி ஸம்ஸதி
பவிஷ்யதஸ் ச பத்ரம் தே ததைவ ந பவிஷ்யத:

மன:—மனம்; ஏவ—உறுதியாக; மனுஷ்யஸ்ய—ஒரு மனிதனின்; பூர்வ—முந்தைய; ரூபாணி—வடிவங்கள்; ஸம்ஸதி—குறிப்பிடுகிறது; பவிஷ்யத:—ஒருவன் அடுத்து எடுக்கப் போகும் பிறவி; ச—மேலும்; பத்ரம்—நல்லதிர்ஷ்டம்; தே—உனக்கு; ததா—இவ்வாறு; ஏவ—உறுதியாக; ந—இல்லை; பவிஷ்யத:—எதிர்காலத்தில் உள்ள ஒருவனது பிறப்பு.

ஓ, மன்னனே, உனக்கு அனைத்து மங்கலங்களும் உண்டாவதாக! இயற்கையுடன் ஒரு உயிர்ப்பொருள் கொள்ளும் தொடர்பினால் உருவாகின்ற உடலுக்கு மனமே காரணமாகும். ஒருவனது மன இயல்பினைப் பொருத்து ஓர் உயிர் சென்ற பிறவியில் என்னவாக இருந்தான்? அடுத்த பிறவியில் எந்தவகையான உடலைப் பெறுவான் என்று ஒருவனால் புரிந்து கொள்ள முடியும். எனவே ஒருவனது மனமே அவனது கடந்தகால மற்றும் எதிர்கால உடல்கள் எத்தகையன என்று குறிப்பிடுகின்றது.

பதம் 4.29.67
அத்ருஷ்டம் அஸ்ருதம் சாத்ர க்வசின் மனஸி த்ருஸ்யதே
யதா ததானுமந்தவ்யம் தேஸ-கால-க்ரியாஸ்ரயம்

அத்ருஷ்டம்—அனுபவப்படாதது; அஸ்ருதம்—கேட்காதது; ச—மேலும்; அத்ர—இந்தப்பிறவியில்; க்வசித்—சில நேரத்தில்; மனஸி—மனதினில்; த்ருஸ்யதே—காணப்படுகிறது; யதா—போன்று; ததா—அதற்கேற்ப; அனுமந்தவ்-யம்—புரிந்துகொள்வதற்கு; தேஸ—இடம்; கால—நேரம்; க்ரியா—செயல்; ஆஸ்ரயம்—சார்ந்திருத்தல்.

சிலநேரங்களில் நாம் இப்பிறவியில் அனுபவித்தறியாத, கேட்டறியாதவற்றையெல்லாம் கனவினில் காண்கிறோம். ஆயினும் இவை அனைத்தும் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் பல்வேறு நிலைகளில் அனுபவிக்கப்பட்டவையாகும்.

பதம் 4.29.68
ஸர்வே க்ரமானுரோதேன மனஸீந்த்ரிய-கோசரா:
ஆயாந்தி பஹுஸோ யாந்தி ஸர்வே ஸமநஸோ ஜனா:

ஸர்வே—அனைத்தும்; க்ரம-அனுரோதேன—காலக்கணிப்பு முறையின்படி; மனஸி—மனதினில்; இந்த்ரிய—புலன்களினால்; கோசரா:—அனுபவிக்கப்பட்டு; ஆயாந்தி—வருகிறது; பஹூஸ:—பல்வேறு வழிகளில்; யாந்தி—போகிறது; ஸர்வே—எல்லாம்; ஸமனஸ:—ஒரு மனதுடன்; ஜனா:—உயிர்கள்.

உயிரின் மனது பல்வேறு பூதவுடல்களில் தொடர்ந்து இருக்கிறது, மேலும் புலனுகர்ச்சிக்கான ஒருவனது ஆசைகளுக்கேற்ப மனம் பல்வேறு நினைவுகளைப் பதிந்து கொள்கிறது. மனதில் இவை பல்வேறு கலவைகளில் இணைந்து தோன்றுகின்றன; ஆகையினாலேயே இதற்கு முன்பு நாம் கேட்டறியாத, பார்த்தறியாத நிழல் உருவங்கள் சில நேரங்களில் தோன்றுகின்றன.

பதம் 4.29.69
ஸத்த்வைக-நிஷ்டே மனஸி பகவத்-பார்ஸ்வ-வர்தினி
தமஸ் சந்த்மஸீவேதம் உபரஜ்யாவபாஸதே

ஸத்த்வ-ஏக-நிஷ்டே—முழுக்கிருஷ்ண உணர்வினில்; மனஸி—ஒரு மனதில்; பகவத்—முழுமுதற் கடவுளுடன்; பார்ஸ்வ-வர்தினி—தொடர்ந்து கொள்ளும் தொடர்பு; தம:—கறுப்புக்கோளம்; சந்த்ரமஸி—நிலாவெளிச்சத்தில்; இவ—போன்று; இதம்—பருஉலகத்தோற்றம்; உபரஜ்ய—இணைக்கப்படுகிறது; அவபாஸதே—வெளிப்படுகிறது.

கிருஷ்ண உணர்வு என்பதற்கு இப்பிரபஞ்சத்தை முழுமுதற் கடவுளாகப் பார்க்க கூடிய மனநிலையில் முழுமுதற் கடவுளுடன் இணையான தொடர்பு கொண்டிருத்தல் என்று பொருளாகும். இதுபோன்ற பார்வை எப்போதும் சாத்தியமாகக் கூடியதல்ல ஆயினும் பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் கறுப்புக் கோளமான ராகு கிரஹம் புலனாவது போல் இக்கவனிப்பும் வெளிப்படுகிறது.

பதம் 4.29.70
நாஹம் மமேதி பாவோ ‘யம் புருஷே வ்யவதீயதே
யாவத் புத்தி—மனோ—‘க்ஷார்த—குண—வ்யூஹோ ஹி அநாதிமான்

ந—இல்லை; அஹம்—நான்; மம—எனது; இதி—இவ்வாறு; பாவ:—உணர்வு; அயம்—இந்த; புருஷே—உயிர்வாழியினிடத்தில்; வ்யவதீயதே—பிரிக்கப்பட்ட; யாவத்—நீண்டகாலமாக; புத்தி—புத்தி; மன:—மனம்; அக்ஷ—புலன்கள்; அர்த—புலனுகர்ச்சிப்பொருட்கள்; குண—பௌதீகக் குணங்கள்; வ்யூஹ:—ஒரு தோற்றம்; ஹி—உறுதியாக; அநாதி-மான்—நுண்ணுடல் (ஆதியில் தோன்றியது).

புத்தி, மனம், புலன்கள், புலனுகர்ச்சிப் பொருட்களினால் ஆன நுண்ணுடலும், உலகியல் குணங்களின் பலன்களும் இருக்கும் வரையில் பொய்ம்மை உணர்வும் அதற்குத் தொடர்புடைய பொருளாகிய பருஉடலும் இருக்கும்.

பதம் 4.29.71
ஸூப்தி—மூர்ச்சோபதாபேஷு ப்ராணாயன-விகாதத:
நேஹதே ‘ஹம் இதி ஜ்ஞானம் ம்ருத்ய-ரஜ்வாரயோர் அபி

ஸூப்தி—சூழ்ந்த நித்திரையில்; மூர்ச்ச—மூர்ச்சையடைதல்; உபதாபேஷு—அல்லது பெரிய அதிர்ச்சியில்; ப்ராண-அயன—உயிர்க்காற்றின் போக்குவரத்து; விகாதத—தடுப்பிலிருந்து; ந—இல்லை; ஈஹதே—நினைத்தல்; அஹம்—நான்; இதி—இவ்வாறு; ஜ்ஞானம்—ஞானம்; ம்ருத்யு—மரிக்கும் பொழுது; ப்ரஜ்வாரயோ:—கடுமையான காய்ச்சலின் போது; அபி—மேலும்.

உயிர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுதோ, மூர்ச்சையடையும் பொழுதோ, பெரிய நஷ்டத்தினால் அதிர்ச்சிக்கு ஆளாகும் பொழுதோ, மரண வேளையிலோ, கடுமையான காய்ச்சல் இருக்கும் பொழுதோ, உயிர்க்காற்றின் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. அச்சமயம் உயிர் உடலோடு சேர்த்துத் தன்னை அடையாளம் காணும் ஞானத்தினை இழக்கிறான்.

பதம் 4.29.72
கர்பே பால்யே ‘பி அபௌஷ்கல்யாத் ஏகாதஸ-விதம் ததா
லிங்கம் ந த்ருஸ்யதே யூன: குஹ்வாம் சந்த்ரமஸோ யதா

கர்பே—கர்பத்தில்; பால்யே—குழந்தைப்பருவத்தில்; அபி—மேலும்; அபௌஷ்கல்யாத்—முதிராத காரணத்தினால்; ஏகாதஸ—பத்துப்புலன்களும் மனமும்; விதம்—வடிவத்தில்; ததா—அந்த சமயத்தில்; லிங்கம்—நுண்ணுடல் அல்லது தவறான ஆணவம்; ந—இல்லை; த்ருஸ்யதே—தெரிகின்றது; யூன:—இளைஞனின்; குஹ்வாம்—அமாவாசை இருளில்; சந்த்ரமஸ:—சந்திரன்; யதா—போன்று.

ஒருவன் இளைஞனாக இருக்கும்பொழுது அவனது பத்துப் புலன்களும் மனமும் முழுதுமாக இயங்குகின்றன. ஆயினும் தாயின் கருப்பையில் இருக்கும் பொழுதோ அல்லது குழந்தையாக இருக்கும் பொழுதோ அமாவாசை இருளினால் முழுநிலவு மறைக்கப்பட்டிருப்பது போல் உணர்வுப் புலன்களும், மனமும் மூடப்பட்டிருக்கின்றன.

பதம் 4.29.73
அர்தே ஹி அவித்யமானே ’பி ஸம்ஷ்ருதிர் ந நிவர்ததே
த்யாயதோ விஷயான் அஸ்ய ஸ்வப்னே ‘னர்தாகமோ யதா

அர்தே—புலனுணர்வுப் பொருட்கள்; ஹி—உறுதியாக; அவித்யமானே—இல்லாதிருந்தும்; அபி—இருந்தபோதிலும்; ஸம்ஸ்ருதி:—பௌதீகத்தோற்றம்; ந—இல்லை; நிவர்ததே—முடிவுறுதல்; த்யாயத:—தியானித்தல்; விஷயான்—புலனுணர்வுப் பொருட்கள்; அஸ்ய—உயிர்களின்; ஸ்வப்னே—கனவில்; அனர்த—தேவையில்லாத விஷயங்களின்; ஆகம:—தோற்றம்; யதா—போன்று.

உயிர்ப்பொருள் கனவு காணும் பொழுது புலனுணுரும் பொருட்கள் உண்மையில் அங்கே இருப்பதில்லை. ஆயினும் ஒருவனுக்குப் புலனுணர்வுப் பொருட்களோடு தொடர்பிருக்கின்ற காரணத்தினால் அவை வெளிப்படையாகத் தோன்றுகின்றன. அதுபோல் வளர்ச்சியடையாத புலன்களையுடைய உயிர்பொருள் புலனுணர்வுப் பொருட்களுடன் சரியாகத் தொடர்பு கொள்ளாமல் இருந்தபோதிலும் வெளிப்பாட்டினை அவன் நிறுத்துவதில்லை.

பதம் 4.29.74
ஏவம் பஞ்ச-விதம் லிங்கம் த்ரி வ்ருட் ஷோடஸ-விஸ்ருதம்
ஏஷ சேதனயா யுக்தோ ஜீவ இதி அபிதீயதே

ஏவம்—இவ்வாறு; பஞ்சவிதம்—ஐந்து புலனுகர்ச்சி பொருட்கள்; லிங்கம்—நுண்ணுடல்; த்ரி-வ்ருத்—முக்குணங்களினால் பாதிக்கப்பட்டு; ஷோடஸ—பதினாறு; விஸ்த்ருதம்—விரிவடைந்து; ஏஷ:—இந்த; சேதனயா—உயிருடன்; யுக்த:—இணைந்து; ஜீவ:—பந்தப்பட்ட ஆத்மா; இதி—இவ்வாறு; அபிதீயதே—அறிந்து கொள்ளப்படுகிறது.

ஐந்து புலனுகர்ச்சிப் பொருட்கள், ஐந்து புலனுணர்வு உறுப்புக்கள், ஐந்து அறிவுப்புலன்கள் மற்றும் மனம் ஒன்று என்று உடற்கூற்றின் விரிவுகள் பதினாறாகும். இவை உயிருடன் இணைந்து இயற்கையின் முக்குணங்களினால் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு கட்டுண்ட ஆத்மாவின் தோற்றம் புரிந்து கொள்ளப்படுகிறது.

பதம் 4.29.75
அனேன புருஷோ தேஹான் உபாதத்தே விமுஞ்சதி
ஹர்ஷம் ஸோகம் பயத் து:கம் ஸுகம் சானேன விந்ததி

அனேன—இச்செயல்முறையினால்; புருஷ:—உயிர்வாழி; தேஹான்—பூதவுடல்கள்; உபாதத்தே—எய்துகிறான்; விமுஞ்சதி—துறக்கிறான்; ஹர்ஷம்—இன்பம்; ஸோகம்—சோகம்; பயம்—பயம்; து:கம்—துக்கம்; ஸுகம்—சுகம்; ச—மேலும்; அனேன—பூதவுடலினால்; விந்ததி—அனுபவிக்கிறான்.

நுண்ணுடலின் சிறப்பான செயல்முறையினால் உயிர் பருவுடல்களைப் பெறுகிறான் மீண்டும் துறக்கிறான். இதனையே ஆத்மா ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடம் மாறுகிறது என்கிறோம். இவ்வாறு ஆத்மா பல்வேறு வகையான இன்பம், சோகம், பயம், சுகம், துக்கம் போன்றவற்றிற்கு ஆளாகிறான்.

பதங்கள் 4.29.76 – 4.29.77
யதா த்ருண-ஜலூகேயம் நாபயாதி அபயாதி ச
ந த்யஜேன் மரியமாணோ ‘பி ப்ராக்-தேஹாபிமதிம் ஜன:

யாவத் அன்யம் ந விந்தேத வ்யவதானேன கர்மணாம்
மன ஏவ மனுஷ்யேந்த்ர பூதானாம் பவ-பாவனம்

யதா—போன்று; த்ருண-ஜலூகா—கம்பளிப்பூச்சி, இயம்—இந்த; ந அபயாதி—செல்வதில்லை; அபயாதி—செல்கிறது; ச—மேலும்; ந—இல்லை; த்யஜேத்—விட்டுவிடுவது; மரியமாண:—மரணத்தின் முனையில்; அபி—கூட; ப்ராக்—முன்னர்; தேஹ—உடலுடன்; அபியதிம்—அடையாளம்; ஜன:—ஒருவன்; யாவத்—நீண்ட காலமாக; அன்யம்—மற்றொரு; ந—இல்லை; விந்தேத—பெறுவது; வ்யவதானேன—முடிவினால்; கர்மணாம்—பலன்தரும் செயல்களின்; மன:—மனம்; ஏவ—நிச்சயமாக; மனுஷ்ய-இந்த்ர—ஓ, மனிதர்களை ஆள்வோனே; பூதானாம்—அனைத்து உயிர்களின்; பவ—பௌதீக வாழ்வின்; பாவனம்—காரணம்.

கம்பளிப்பூச்சி ஓர் இலையிலிருந்து மற்றோர் இலைக்கு ஊர்ந்து செல்லும் பொழுது, ஓர் இலையைப் பற்றிக் கொண்டபிறகே மற்றோர் இலையினை விட்டுவிடும். அதுபோல் அவனது முந்தைய கர்ம வினைக்கேற்ப உயிர் தானிருக்கும் உடலைத் துறப்பதற்கு முன் மற்றோர் உடலை பற்றிக் கொள்ள வேண்டியவனாகிறான். மனமே அனைத்து ஆசைகளின் உறைவிடமாகத் திகழ்கிறது என்பதுவே இதற்குரிய காரணமாகும்.

பதம் 4.29.78
யதாக்ஷைஸ் சரிதான் த்யாயன் கர்மாணி ஆஸ்னுதே ‘ஸக்ருத்
ஸதி கர்மணி அவித்யாயாம் பந்த: கர்மணி அநாத்மன:

யதா—எப்பொழுது; அக்ஷை:—புலன்களினால்; சரிதான்—இன்பம் அனுபவிக்கப்படுகிறது; த்யாயன்—நினைப்பது; கர்மாணி—செயல்கள்; ஆஸ்னதே—செய்தல்; அஸக்ருத்—எப்போதும்; ஸதி-கர்மணி—பௌதீகச் செயல்கள் தொடரும் பொழுது; அவித்யாயாம்—மாயையின் கீழ்; பந்த:—பந்தப்படுதல்; கர்மணி—செயலில்; அநாத்மன:—பௌதீக உடலின்.

புலனுகர்ச்சி இன்பத்தினை அனுபவிக்கும் ஆசை நம்மிடம் இருக்கும்வரை நாம் உலகியற் செயல்களை உருவாக்குகிறோம். உயிர் மண்ணுலகில் செயல்படும் பொழுது அவன் புலன்களை அனுபவிக்கிறான். இப்படி அனுபவிக்கும் பொழுது அவன் தொடர்ந்து உலகியற் செயல்களை உருவாக்குகிறான். இவ்வாறு உயிர் ஒரு கட்டுண்ட ஆத்மாவாக கூண்டில் அடைபடுகிறது.

பதம் 4.29.79
அதஸ் தத் அபவாதார்தம் பஜ ஸர்வாத்மனா ஹரிம்
பஸ்யம்ஸ் தத்-ஆத்மகம் விஸ்வம் ஸ்திதி-உத்பத்தி–அப்யயா யத:

அத—அதனால்; தத்—அந்த; அபவாத-அர்தம்—எதிர்வினை புரிவதற்கு; பஜ—பக்தித் தொண்டில் ஈடுபடுவது; ஸர்வ-ஆத்மனா—உனது அனைத்துப் புலன்களுடன்; ஹரிம்—முழுமுதற் கடவுளுக்கு; பஸ்யன்—காண்கின்ற; தத்—பகவானின்; ஆத்மகம்—கட்டுப்பாட்டின் கீழ்; விஸ்வம்—பிரபஞ்சம்; ஸ்திதி—காத்தல்; உத்பத்தி—படைத்தல்; அப்யயா:—அழித்தல்; யத:—அவரிடமிருந்து.

இப்பிரபஞ்சத் தோற்றமானது முழுமுதற் கடவுளின் விருப்பத்தின் பேரில் படைக்கவும், காக்கவும் அழிக்கவும்படுகிறது என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து இந்த உலகிலுள்ள அனைத்தும் பகவானின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றன. இவ்வுயர்ந்த ஞானத்தினால் மெய்யறிவு பெறுவதற்கு ஒருவன் தன்னை எப்போதும் பகவானின் வழிபாட்டுத்தொண்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பதம் 4.29.80
மைத்ரேய உவாச
பாகவத-முக்யோ பகவான் நாரதோ ஹம்ஸயோர் கதிம்
ப்ரதர்ஸ்ய ஹி அமும் ஆமந்த்ரிய ஸித்த-லோகம் ததோ ‘கமத்

மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; பாகவத—பக்தர்களின்; முக்ய:—தலைவர்; பகவான்—ஆற்றல்மிக்க; நாரத:—நாரத முனிவர்; ஹம்ஸயோ:—உயிர் மற்றும் பகவானின்; கதிம்—சட்டப்பூர்வ நிலை; ப்ரதர்ஸ்ய—காண்பிக்கப்பட்டு; ஹி—உறுதியாக; அமும்—அவரை; (மன்னரை); ஆமந்த்ரிய—வருமாறு அழைத்த பின்னர்; ஸித்த-லோகம்—சித்த லோகத்திற்கு; தத:—அதன்பிறகு; அகமத்—புறப்புட்டுச் சென்றார்.

மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: முழுமுதற் கடவுள் மற்றும் உயிர்களின் உண்மை நிலையினை பரம பக்தரும் மாமுனிவருமான நாரதர் மன்னர் பிராசீனபர்ஹிக்கு இவ்வாறு விளக்கியருளினார். பின்னர் அவர் மன்னராக சித்தலோகத்திற்கு வருமாறு அழைத்துவிட்டு அங்கு புறப்பட்டுச் சென்றார்.

பதம் 4.29.81
ப்ராசீனபர்ஹீ ராஜருஷி: ப்ரஜா-ஸர்காபிக்ஷணே
ஆதிஸ்ய புத்ரான்அகமத் தப்ஸே கபிலாஸ்ரமம்

ப்ராசீனபர்ஹி:—மன்னர் பிராசீனபர்ஹி; ராஜ-ருஷி:—ராஜரிஷி; ப்ரஜா-ஸர்க—குடிமக்கள்; அபிரக்ஷணே—காப்பதற்கு; ஆதிஸ்ய—கட்டளையிட்ட பிறகு; புத்ரான்—அவருடைய புதல்வர்களுக்கு; அகமத்—புறப்பட்டார்; தபஸே—தவம் செய்வதற்காக; கபில-ஆஸ்ரமம்—கபிலாஸ்ரமம் என்னும் புனித இடத்திற்கு.

அமைச்சர்களிடம் ராஜரிஷி பிராசீனபர்ஹி, குடிமக்களைப் பாதுகாக்கும்படி தன் மைந்தர்களுக்குத் தான் கட்டளையிட்டதாக அவர்களிடம் கூறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் தமது அரண்மனையைத் துறந்து தவம் செய்வதற்காக கபிலாஸ்ரமம் என்னும் புனித இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

பதம் 4.29.82
தத்ரைகாக்ர—மனாதீரோ கோவிந்த-சரணாம்புஜம்
விமுக்த-ஸங்கோ ‘னுபஜன் பக்த்யா தத்-ஸாம்யதாம் அகாத்

தத்ர—அங்கே; ஏக-அக்ர-மனா:—முழு கவனத்துடன்; தீர—தீரத்துடன்; கோவிந்த—கிருஷ்ணரின்; சரண-அம்புஜம்—தாமரைத் திருவடிகளுக்கு; விமுக்த—இருந்து விடுதலைபெற; ஸங்க:—பௌதீகத் தொடர்பு; அனுபஜன்—பக்தித்தொண்டில் தொடர்ந்து ஈடுபடுதல்; பக்த்யா—தூய பக்தியினால்; தத்—பகவானுடன்; ஸாம்யதாம்—சமமான தன்மையில்; அகாத்—எய்துதல்.

மன்னர் பிராசீனபர்ஹி கவிலாஸ்ரமத்தில் துறவுகளும், தவங்களும் மேற்கொண்டதினால் உலோகாயதப்பணிகள் அனைத்திலுமிருந்து முழு விடுதலையடைந்தார். அவர் பகவானின் உன்னத அன்புத் தொண்டில் தொடர்ந்து ஈடுபட்டு முழுமுதற் கடவுளின் நிலைக்கு இணையான ஆன்மீக நிலையினை எய்தினார்.

பதம் 4.29.83
ஏதத் அத்யாத்ம-பரோக்ஷயம் கீதம் தேவர்ஷிணா கை:
ய: ஸ்ராவயேத் ய: ஸ்ருணுயாத் ஸ லிங்கேன விமுச்யதே

ஏதத்—இந்த; அத்யாத்ம—ஆன்மீக; பரோக்ஷயம்—ஆதாரபூர்வமான விளக்கத்தினை; கீதம்—சொல்லப்பட்ட; தேவ-ருஷிணா—மாமுனிவர் நாரதரால்; அகை:—ஓ, குற்றமற்ற விதுரனே; ய:—யாரேனும் ஒருவர்; ஸ்ராவயேத்—எடுத்துரைக்கலாம்; ய:—யாரேனும் ஒருவர்; ஸ்ருணுயாத்—கேட்கலாம்; ஸ:—அவன்; லிங்கேன—உடல்கருத்துடைய வாழ்க்கையிலிருந்து; விமுச்யதே—விடுவிக்கப்படுகிறான்.

அன்பார்ந்த விதுரனே, உயிர்ப்பொருளின் ஆன்மீகத் தோற்றத்தினைப் பற்றி மாமுனிவர் நாரதர் விளக்கியருளியுள்ள இச்சரிதத்தினை ஒருவர் கேட்டாலும், அவ்வாறு கேட்டதைப் பிறர்க்கு எடுத்துரைத்தாலும் அவர் உடற்கருத்துடைய வாழ்க்கையிலிருந்து நிச்சயம் விடுதலை பெறுவார்.

பதம் 4.29.84
ஏதன் முகுந்த-யஸஸா புவனம் புனானம்
தேவருஷி-வர்ய-முக-நி: ஸ்ருதம் ஆத்ம-ஸெளசம்
ய: கீர்த்யமானம் அதிகசக்தி பாரமேஷ்ட்யம்
நாஸ்மின் பவே ப்ரமதி முக்த-ஸமஸ்த-பந்த:

ஏதத்—இச்சரிதம்; முகுந்த-யஸஸா—பகவான் கிருஷ்ணரின் புகழுடன்; புவனம்—இந்த உலகம்; புனானம்—புனிதப்படுத்துகின்றது; தேவ-ருஷி—மாமுனிவர்களின்; வர்ய—தலைவரின்; முக—வாயிலிருந்து; நி: ஸ்ருதம்—கூறப்பட்ட; ஆத்ம-ஸெளசம்—இதயத்தினை தூய்மை செய்கின்றது; ய:—யாரேனும் ஒருவர்; கீர்த்யமானம்—ஓதப்பட்டால்; அதிகசக்தி—திரும்பிச் செல்லுதல்; பாரமேஷ்ட்யம்—ஆன்மீக உலகிற்கு; ந—இல்லை; அஸ்மின்—இந்த; பவே—பௌதீக உலகில்; ப்ரமதி—அலைதல்; முக்த—விடுதலை பெற்று; ஸமஸ்த—எல்லாவற்றிலுமிருந்து; பந்த:—கட்டுக்கள்.

சிறந்த மாமுனிவர் நாரதரால் முழுமுதற் கடவுளின் உன்னதப்புகழ் நிறைந்த இச்சரிதம் எடுத்துரைக்கப்பட்டதாகும். இதனைத் தொடர்ந்து இச்சரிதம் உரைக்கப்படும்பொழுது அது நிச்சயம் இந்த உலகினைத் தூய்மை செய்கிறது. இது ஒருவனது இதயத்தைத் தூய்மை செய்து அவன் தனது ஆன்மீக அடையாளத்தினைப் பெறுவதற்கு உதவுகிறது. இவ்வுன்னதச் சரிதத்தினை உரைக்கும் ஒருவன் அனைத்துப் பௌதீகக் கட்டுக்களிலிருந்தும் விடுதலை பெறுவதோடு இந்த உலகில் நீண்ட காலம் அலைய வேண்டிய அவசியமில்லாதவனும் ஆகிறான்.

பதம் 4.29.85
அத்யாத்ம-பாரோக்ஷ்யம் இதம் மயாதிகதம் அத்புதம்
ஏவம் ஸ்த்ரியாஸ்ரம: பும்ஸஸ் சின்னோ ‘முத்ர ச ஸம்ஸய:

அத்யாத்ம—ஆன்மீகமான; பாரோக்ஷ்யம்—அதிகாரமுடையோரால் விளக்கப்பட்ட; இதம்—இந்த; மயா—என்னால்; அதிகதம்—கேட்கப்பட்டது; அத்புதம்—அற்புதம்; ஏவம்—இவ்வாறு; ஸ்த்ரியா—ஒரு மனைவியுடன்; ஆஸ்ரம:—அடைக்கலம்; பும்ஸ:—உயிர்ப்பொருளின்; சின்ன:—முடிவுறுதல்; அமுத்ர—மரணத்தின் பின்வரும் வாழ்க்கை; ச—மேலும்; ஸம்ஸய:—ஐயம்.

அதிகாரப்பூர்வமாக இங்கே மன்னர் புரஞ்சனனைப் பற்றி விளக்கப்பட்டிருக்கும் உருவகக் கதையானது என்னால் எனது ஆன்மீகக்குருவிடமிருந்து கேட்கப்பட்டது. இது முற்றிலும் ஆன்மீக ஞானம் நிறைந்ததாகும். இவ்வுருவகக் கதையின் நோக்கத்தினை ஒருவன் அறிந்துகொண்டானென்றால் அவன் நிச்சயமாக உடற்கருத்துடைய வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதோடு மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வான். ஆத்மா கூடுவிட்டுக் கூடு பாய்வதை உண்மையில் ஒருவன் அறியவில்லையென்ற போதிலும் அவன் இச்சரிதத்தினைப் படிப்பதின் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

முக்கியக் குறிப்பு:

மத்வாச்சாரிய சம்பிரதாயத்தைச் சேர்ந்த விஜயத்வஜ தீர்த்தர் அவர்களின் கருத்தின்படி பின்வரும் முதலிரண்டு சுலோகங்கள் இந்த அத்தியாத்தில் 45வது சுலோகத்திற்குப் பிறகு இருப்பதாகவும், மீதியுள்ள இரண்டு சுலோகங்கள் 79வது சுலோகத்திற்குப் பிறகு இருப்பதாகவும் தெரிகிறது.

பதம் 4.29.1அ – 4.29.2அ
ஸர்வேஷாம் ஏவ-ஜந்தூனாம் ஸததம் தேஹ-போஷணே
அஸ்தி ப்ரஜ்ஞா ஸமாயத்தா கோ விஸேஷஸ் ததா ந்ருணாம்

லப்த்வேஹாந்தே மனுஷ்யத்வம் ஹித்வா தேஹாதி-அஸத்-க்ரஹம்
ஆத்ம-ஸ்த்ரியா விஹாயேதம் ஜீவாத்மா ஸ விஸ்ஷ்யதே

ஸர்வேஷாம்—எல்லாம்; ஏவ—உறுதியாக; ஜந்தூனாம்—ஜந்துக்களின்; ஸததம்—எப்போதும்; தேஹ-போஷணே—உடலைப் பேணுவதில்; அஸ்தி—இருக்கின்ற; ப்ரஜ்ஞா—புத்தி; ஸமாயத்தா—மீதமர்ந்து; க:—என்ன; விஸேஷ:—வேறுபாடு; ததா—பின்னர்; ந்ருணாம்——மனிதர்களின்; லப்த்வா—அடையபெற்றது; இஹ—இங்கே; அந்தே—பலபிறப்புகளின் இறுதியில்; மனுஷ்யத்வம்—ஒரு மானிட வாழ்க்கை; ஹித்வா—துறந்தபிறகு; தேஹ-ஆதி—பூத மற்றும் நுண்ணுடல்; அஸத்-க்ரஹம்—வாழ்க்கையின் தவறான கருத்து; ஆத்ம—ஆன்மீக ஞானத்தின்; ஸ்த்ரியா—பாதையினால்; விஹாய—அழிக்கப்பட்டு; இதம்—இந்த உடல்; ஜீவ-ஆத்மா—ஜீவாத்மா; ஸ:—அது; விஸிஷ்யதே—முக்கியமானதாகிறது.

தன்னுடைய உடல், மனைவி, மக்கள், முதலியவற்றைப் பாதுகாக்கும் ஆசை விலங்குகளிடம் கூட இருக்கிறது. இவற்றை முறையாகக் கவனிப்பதில் விலங்குகள் அறிவோடு செயல்படுகின்றன. மனிதனும் இதில் மட்டும் முன்னேறினான் என்றால் பிறகு அவனுக்கும், விலங்கிற்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது? இம்மானிட வாழ்க்கை பரிணாம வளர்ச்சியின்படி ஏராளமான பிறப்புக்களுக்குப் பிறகு கிடைத்த ஒன்று என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். கற்றறிந்த ஒருவன் ஆன்மீக ஞானத்தினால் உடல் சார்ந்த வாழ்க்கையினைத் துறந்துவிடுகிறான் என்றால் பரமபுருஷ பகவானைப் போன்று அவனும் மிக முக்கியமான தனிப்பட்ட ஜீவாத்மாவாகிறான்.

பதம் 4.29.1ஆ
பக்தி: க்ருஷ்ணே தயா ஜீவேஷ்வ அகுண்ட-அஜ்ஞானம் ஆத்மனி
யதி ஸ்யாத் ஆம்னோ பூயாத் அபவர்கஸ் து ஸம்ஸ்ருதே:

பக்தி:—பக்தித்தொண்டு; க்ருஷ்ணே—கிருஷ்ணருக்கு; தயா—தயை; ஜீவேஷு—பிற உயிர்களுக்கு; அகுண்ட-ஜ்ஞானம்—உயர்ந்த ஞானம்; ஆத்மனி—சுயத்தின்; யதி—இவ்வாறு; ஸ்யாத்—ஆகிறது; ஆத்மன:—ஒருவனது சுயத்தில்; பூயாத்—இருத்தல் வேண்டும்; அபவர்க:—விடுதலை; து—பிறகு; ஸம்ஸ்ருதே:—உலக வாழ்வின் பிடிப்பிலிருந்து.

ஓர் உயிர் கிருஷ்ண உணர்வில் வளர்ச்சி பெற்றவனாகவும், பிற உயிர்களிடத்துக் கருணையுடையவனாகவும், தன்னுணர்வு பெறுவதற்கான அவனது ஆன்மீக ஞானம் நிறைவுடையதாகவும் இருந்ததென்றால் அவன் உடனடியாக உலக வாழ்வின் கட்டிலிருந்து விடுதலை பெறுகிறான்.

பதம் 4.29.2ஆ
அதிருஷ்டம் த்ருஷ்டவன் நங்க்ஷேத் பூதம் ஸ்வப்னவத் அன்யதா
பூதம் பவத்பவிஷ்யச் ச ஸுப்தம் ஸர்வ ரஹோ-ரஹ:

அத்ருஷ்டம்—எதிர்கால மகிழ்ச்சி; த்ருஷ்ட-வத்—நேரடி அனுபவம் போன்று; நங்க்ஷேத்—வெல்லப்படுகிறது; பூதம்—உலக வாழ்க்கை; ஸ்வப்னவத்—ஒரு கனவினைப் போல்; அன்யதா—மாறாக; பூதம்—கடந்த காலத்தில் நிகழ்ந்தது; பவத்—நிகழ்காலம்; பவிஷ்யத்—எதிர்காலம்; ச—மேலும்; ஸுப்தம்—ஓர் கனவு; ஸர்வ—எல்லாம்; ரஹ: ரஹ:—ரகசியமான முடிவு.

கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் மூன்று பிரிவுகளையுடைய காலத்தினுள் நடக்கும் அனைத்தும் கனவேயாகும். இதுவே வேத இலக்கியங்கள் அனைத்திலும் அடித்தளமாக இருக்கும் மறை பொருளாகும்.


ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “நாரதருக்கும் பிராசீனபர்ஹிக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தொன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare