அத்தியாயம் – 28
அடுத்த பிறப்பில் புரஞ்ஜனன் பெண்ணாகப் பிறத்தல்
பதம் 4.28.1
நாரத உவாச
ஸைனிகா பய-நாம்னோ யே பர்ஹிஷ்மன் திஷ்ட-காரிண:
ப்ரஜ்வார-கால-கன்யாப்யாம் விசேருர் அவனீம் இமாம்
நாரத: உவாச—மாமுனிவர் நாரதர் கூறினார்; ஸைனிகா:—வீரர்கள்: பய-நாம்ன:—பயம் (அச்சம்); யே—எவர்கள் அனைவரும்; பர்ஹிஷ்மன்—ஓ, பிராசீனபர்ஹிஷத் மன்னனே; திஷ்ட-காரிண:—மரணத்தின் ஆணைகளைச் சுமப்பவர்கள்; ப்ரஜ்வார—பிரஜ்வாரனுடன்; கால கன்யாப்யாம்—காலகன்யாவுடன்; விசேரு:—பயணித்து; அவனீம்—பூமியில்; இமாம்—இந்த.
மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய மன்னன் பிராசீனபர்ஹிஷத்தே, பயம் என்னும் பெயருடைய யவன மன்னர், பிரஜ்வாரன் என்பார் காலகன்யா உடன்வர அவனது வீரர்களுடன் இவ்வுலகம் முழுவதும் பயணம் செய்யத் தொடங்கினார்.
பதம் 4.28.2
த ஏகதா து ரபஸன புரஞ்ஜா-ந்ருப
ருருதுர் பௌம-போகாட்யாம் ஜரத்-பன்னக பாலிதாம்
தே—அவர்கள்; ஏகதா—முன்னொரு காலத்தில்; து—பிறகு; ரபஸா—மிகுந்த வேகத்துடன்; புரஞ்ஜன-புரீம்—புரஞ்சனனின் நகரத்தை; ந்ருப—ஓ, மன்னனே; ருருது:—சூழ்ந்துகொண்டு; பௌம்-போக-ஆட்யாம்—முற்றிலும் புலனின்பத்தில்; ஜரத்—முதுமை; பன்னக—நாகத்தினால்; பாலிதாம்—பாதுகாக்கப்பட்ட.
இந்த ஆபத்தான வீரர்கள் முன்னொரு காலத்தில் புரஞ்ஜனனின் நகரத்தை மிகுந்த பலத்துடன் தாக்கினர். இந்நகரம் புலனுகர்ச்சிப் பொருட்களால் நிரப்பப்பட்டிருந்தாலும் இதனை ஒரு வயதான பாம்பு காவல் புரிந்து கொண்டிருந்தது.
பதம் 4.28.3
கால-கன்யாபி புபுஜே புரஞ்ஜன-புரம் பலாத்
யயாபிபூத: புருஷ: ஸத்யோ நி: ஸாரதாம் இயாத்
கால-கன்யா—காலமகள்; அபி—கூட; புபுஜே—எடுத்துக் கொண்டாள்; புரஞ்ஜன-புரம்—புரஞ்சனனின் நகரத்தை; பலாத்—பலத்தினால்; யயா—யாரால்; அபியூத:—வெல்லப்பட்டு; புருஷ:—ஒரு மனிதன்; ஸத்ய—உடனடியாக; நி: ஸாரதாம்—பயனின்றி; இயாத்—ஆகின.
காலகன்யா, அபாயகரமான வீரர்களின் உதவியுடன் புரஞ்சனனின் நகரவாசிகள் அனைவரையும் படிப்படியாகத் தாக்கி அவர்கள் அனைவரையும் ஒன்றுக்கும் பயனற்றவர்களாக ஆக்கினாள்.
பதம் 4.28.4
தயோபபூஜ்யமானாம் வை யவனா: ஸர்வதோ-திஸம்
த்வார்பி: ப்ரவிஸ்ய ஸுப்ருஸம் ப்ரார்தயன் ஸகலாம் புரீம்
தயா—காலகன்யாவினால்; உபபுஜ்யமானாம்—ஆக்கிரமிக்கப்பட்டவுடன்; வை—உறுதியாக; யவனா:—யவனர்கள்; ஸர்வத:-திஸம்—எல்லாத்திசைகளில் இருந்தும்; த்வார்பி:—வாயில்களின் வழியாக; ப்ரவிஸ்ய—நுழைந்தனர்; ஸீ-ப்ருஸம்—மிகவும்; ப்ரார்தயன்—துன்பமிழைத்தனர்; ஸகலாம்—எல்லாப் பக்கங்களிலும்; புரீம்—நகரத்தின்.
காலமகளான, காலகன்யா உடலைத் தாக்கிய பொழுது யவன மன்னனின் ஆபத்தான வீரர்கள் பல்வேறு வாயில்களின் வழியாக உடலாகிய அந்நகரினுள் நுழைந்தனர். பின் குடிமக்கள் அனைவருக்கும் பெருந்துன்பம் இழைத்தனர்.
பதம் 4.28.5
தஸ்யாம் ப்ரபீட்யமானாயாம் அபிமானீ புரஞ்ஜன:
அவாபோரு -விதாம்ஸ் தாபான் குடும்பீ மமதாகுல:
தஸ்யாம்—நகரம்; ப்ரபீட்யமானாயாம்—பல்வேறு துன்பங்களுக்கு ஆளான பொழுது; அபிமானீ—மிகுந்த பற்றுக்கொண்டு; புரஞ்ஜன—மன்னர் புரஞ்ஜனன்; அவாப—எய்தினார்; உரு—அனேக; விதான்—வகைகள்; தாபான்—வேதனைகள்; குடும்பீ—குடும்பஸ்தன்; மமதா-ஆகுல:— குடும்பப் பற்றினால் அதிகமாகப் பாதிக்கப்படுதல்.
இவ்வாறு அந்நகரம், காலகன்யா மற்றும் அவளது வீரர்களினால் ஆபத்திற்குள்ளானபோது, தன்குடும்பத்தின் மீது ஆழ்ந்த பற்று வைத்திருந்த மன்னர் புரஞ்ஜனன், யவனராஜன் மற்றும் காலகன்யாவினால் பெருந்துன்பத்திற்கு ஆளானார்.
பதம் 4.28.6
கன்யாபகூடோ நஷ்ட-ஸ்ரீ: க்ருபணோ விஷயாத்மக:
நஷ்ட-ப்ரஜ்ஞோ ஹ்ருதைஸ்வர்யோ கந்தர்வ-யவனைர் பலாத்
கன்யா—காலமகளினால்; உபகூட:—தழுவப்பட்டு; நஷ்ட-ஸ்ரீ:—எல்லா எழிலும் இழந்து; க்ருபண:—உலோபி (கஞ்சன்); விஷய-ஆத்மக:—புலனுகர்ச்சிக்கு அடிமையாகி; நஷ்ட-ப்ரஜ்ஞ:—புத்தியைத் தொலைத்து; ஹ்ருத-ஐஸ்வர்ய:—ஐஸ்வர்யத்தினை இழந்து; கந்தர்வ—கந்தர்வர்களினால்; யவனை:—யவனர்களினாலும்; பலாத்—பலாத்காரத்தினால்.
காலகன்யாவினால் தழுவப்பட்டதினால் மன்னர் புரஞ்ஜனன் படிப்படியாக அழகிழந்தவரானார். பாலுறவில் அளவுக்கு மீறியதால் தமது சிந்திக்கும் திறமையையும், செல்வமனைத்தையும் இழந்தார். இவ்வாறு உடைமைகளைத் தொலைத்துவிட்டதினால் அவர் கந்தர்வர்கள் மற்றும் யவனர்களால் பலாத்காரமாக வெல்லப்பட்டார்.
பதம் 4.28.7
விசீர்ணாம் ஸ்வ-புரீம் வீக்ஷ்ய
ப்ரதிகூலான் அநாத்ருதான்
புத்ரான் பௌத்ரானுகாமாத்யான்
ஜாயாம் ச கத- ஸௌஹ்ருதாம்
விசீர்ணம்—சிதறியது; ஸ்வ-புரீம்—அவரது சொந்த நகரம்; வீக்ஷ்ய—கண்டு; பிரதிகூலான்—எதிர்க்கும் சக்திகள்; அநாத்ருதான்—மரியாதையின்றி; புத்ரான்—புத்திரர்கள்; பௌத்ர—பேரப்பிள்ளைகள்; அனுக—பணியாளர்கள்; அமாத்யான்—அமைச்சர்கள்; ஜாயாம்—மனைவி; ச—மேலும்; கத-ஸௌஹ்ருதாம்—மிகவும் மோசமாக.
மன்னர் புரஞ்ஜனன் தம் நகரத்திலுள்ள அனைத்துப் பொருள்களும் சிதறடிக்கப்படுவதையும், தம் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், பணியாளர்களும், அமைச்சர்களும் படிப்படியாகத் தன்னை எதிர்ப்பதையும் கண்டார். மேலும் அவரது மனைவி கூட அவரிடம் கண்டிப்புடனும், மோசமாகவும் நடந்து கொள்வதை அவர் கண்டார்.
பதம் 4.28.8
ஆத்மானம் கன்யயா க்ரஸ்தம் பஞ்சாலான் அரி-தூஷிதான்
துரந்த-சிந்தாம் ஆபன்னோ ந லேபே தத்-ப்ரதிக்ரியாம்
ஆத்மானம்—அவரது; கன்யயா—காலகன்யாவினால்; க்ரஸ்தம்—தழுவப்பட்டு; பஞ்சாலான்—பஞ்சாவம்; அரி-தூஷிதான்—பகைவர்களினால் சூழப்பட்டு; துரந்த—கடக்கமுடியாத; சிந்தாம்—கவலை; ஆபன்ன:—எய்தப்பெற்றார்; ந—இல்லை; லேபே—எய்துதல்; தத்—அந்த; ப்ரதிக்ரியாம்—எதிர்செயல்கள்.
புரஞ்ஜனமன்னன், தமது குடும்பத்தினர், உறவினர்கள், கீழுள்ளவர்கள், பணியாளர்கள், செயலர்கள் போன்ற அனைவரும் தமக்கு எதிராக மாறியதைக் கண்டு மிகுந்த மனவருத்தமுற்றார். ஆயினும் அவரால் அச்சூழ்நிலையினை எதிர்த்துப் போரிடமுடியவில்லை. ஏனெனில் அவர் முற்றிலும் காலகன்யாவினால் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.
பதம் 4.28.9
காமான் அபிலஷன் தீனோ யாத-யாமாம்ஸ் ச கன்யயா
விகதாத்ம-கதி-ஸ்நேஹ: புத்ர-தாராம்ஸ் ச லாலயன்
காமான்—இன்ப நுகர்ச்சிக்கானப் பொருட்கள்; அபிலஷன்—எப்போதும் அதன்மீது ஆசைகொண்டு; தீன:—அந்த ஏழைமனிதன்; யாத-யாமான்—சீர்கெட்டது; ச—மேலும்; கன்யயா—காலகன்யாவின் பாதிப்பினால்; விகத—இழந்தார்; ஆத்ம-கதி—வாழ்க்கையின் உண்மை இலட்சியத்தை; ஸ்நேஹ:—பற்றுவைத்தல்; புத்ர—புத்திரர்கள்; தாரான்—மனைவி; ச—மேலும்; லாலயன்—பாசத்துடன் பாதுகாத்தல்.
காலகன்யாவினால் இன்ப நுகர்ச்சிக்களாகப் பொருட்கள் அனைத்தும் சீர்கெட்டன. காம இச்சைகள் தொடர்ந்து அவரிடம் இருந்த காரணத்தினால் மன்னர் புரஞ்ஜனன் எல்லாவற்றிலும் ஏழையானார் இவ்வாறு அவர் வாழ்க்கையின் இலட்சியம் என்னவென்று அறியாதவரானார். இந்த நிலையிலும் அவர் தம் மனைவி மற்றும் மக்களிடத்து மிகுந்த பாசமுடையவராகவும் அவர்களைக் காக்கின்றன கவலையுடையவராகவும் விளங்கினார்.
பதம் 4.28.10
கந்தர்வ-யவனாக்ராந்தாம் கால-கன்யோபமர்திதாம்
ஹாதும் ப்ரசக்ரமே ராஜா தாம் புரீம் அனிகாமத:
கந்தர்வ-கந்தர்வ வீரர்களினால்; யவன—யவன வீரர்களினால்; ஆக்ராந்தாம்—வெல்லப்பட்டு; கால-கன்யா—கால கன்யாவினால் (காலமகள்); உபமர்திதாம்—அழிக்கப்பட்டு; ஹாதும்—விட்டுவிட; ப்ரசக்ரமே—செல்லுதல்; ராஜா—மன்னர் புரஞ்ஜனன்; தாம்—அந்த; புரீம்—நகரம்; அனிகாமத:—விருப்பமின்றி.
கந்தர்வ மற்றும் யவன வீரர்களினால் மன்னர் புரஞ்ஜனனின் நகரம் வீழ்த்தப்பட்டது. மன்னருக்கு நகரத்தை விட்டு நீங்க மனமில்லை. எனினும் கட்டாயத்தின் சூழ்நிலையினால் அவர் அவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று ஏனெனில் காலகன்யாவினால் அது அழிக்கப்பட்டிருந்தது.
பதம் 4.28.11
பய-நாம்னோ ‘க்ரஜோ ப்ராதா ப்ரஜ்வார: ப்ரத்யுபஸ்தித:
ததாஹ தாம் புரீம் க்ருத்ஸ்னாம் ப்ராது: ப்ரிய-சிகீர்ஷயா
பய-நாம்ன:—பயத்தின்; அக்ர-ஜ:—மூத்த; ப்ராதா—சகோதரன்; ப்ரஜ்வார:—பிரஜ்வாரன் என்ற பெயரில்; ப்ரத்யுபஸ்சித:—அங்கே இருந்த; ததாஹ:—தீவைத்தான்; தாம்—அதற்கு; புரீம்—நகரம்; க்ருதஸ்னாம்—ஒட்டுமொத்தமாக; ப்ராது:—அவனது சகோதரன்; ப்ரிய-சிகீர்ஷயா—மகிழ்விப்பதற்காக.
இச்சூழ்நிலைகளின் கீழ் பயம் என்ற மற்றொரு பெயருடைய யவனராஜனின் மூத்த சகோதரன் பிரஜ்வாரன் என்பவன் தன் தம்பியின் மகிழ்ச்சிக்காக அந்நகரத்தைத் தீக்கிரையாக்கினான்.
பதம் 4.28.12
தஸ்யாம் ஸந்தஹ்யமானாயாம் ஸபௌர: ஸபரிச்சத:
கெளடும்பிக: குடும்பின்யா உபாதப்யத ஸான்வய:
தஸ்யாம்—அந்த நகரம்; ஸந்தஹ்யமானாயாம்—எரிக்கப்பட்ட பொழுது; ஸபெளர:—அனைத்து குடிமக்களுடனும்; ஸ-பரிச்சத:—அனைத்துத் தொண்டர்கள் மற்றும் பணியாளர்கள்; கெளடும்பிக:—பல்வேறு உறவினர்களையுடைய, மன்னர்; குடும்பின்யா—தம் மனைவியுடன்; உதாப்யத—தீயின் வெம்மையினால் வருந்தத் தொடங்கினர்; ஸ-அன்வய:—அவர் சந்ததியினருடன்.
இவ்வாறு அந்த நகரம் தீக்கிரையான பொழுது அங்குள்ள அனைத்துக் குடிமக்கள், மன்னரின் பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், புத்திரர்கள், பேரப்பிள்ளைகள், மனைவி மற்றும் உறவினர்கள் அனைவரும் நெருப்பிற்கிடையில் சிக்கிக் கொண்டதைக் கண்டு மன்னர் புரஞ்ஜனன் மகிழ்ச்சி இழந்தவரானார்.
பதம் 4.28.13
யவனோ பருத்தாயதனோ க்ரஸ்தாயாம் கால-கன்யயா
புர்யாம் ப்ரஜ்வார-ஸம்ஸ்ருஷ்ட: புர பாலோ ‘ன்வதப்யத
யவன—யவனர்களால்; அபருத்த—தாக்கப்படுதல்; ஆயதன:—அதன் இருப்பிடம்; க்ரஸ்தாயாம்—கைப்பற்றப்பட்ட பொழுது; கால-கன்யயா—கால கன்யாவினால்; புரம்—நகரம்; ப்ரஜ்வார-ஸம்ஸ் ருஷ்ட:—பிரஜ்வாரனால் அணுகப்பட்டு; புர-பால:—நகரத்தின் கண்காணிப்பாளன் (காவல்காரன்); அன்வதப்யத—மிகுந்த துன்பத்திற்குள்ளானது.
அந்நகரத்தின் பாதுகாவலைக் கண்காணிக்கும் பாம்பு காலகன்யாவினால் தனது குடிமக்கள் தாக்கப்படுவதைக் கண்டது. யவனர்களால் தாக்கப்பட்டுத் தனது இருப்பிடம் தீக்கிரையாக்கப்பட்டது கண்டு அப்பாம்பு மிகவும் மனம் வருந்தியது.
பதம் 4.28.14
ந ஸேகே ஸோ ‘விதும் தத்ர புரு-க்ருச்ச்ரோரு-வேபது:
கந்தும் ஐச்சத் ததோ விருக்ஷ-கோடராத் இவ ஸானலாத்
ந—இல்லை; ஸேகே—இயல்வது; ஸ—அவன்; அவிதும்—காப்பதற்கு; தத்ர—அங்கே; புரு—மிகவும்; க்ருச்ச்ர—கடினமாகும்; உரு—மிகுந்த; வேபது:—துன்புறுதல்; கந்தும்—வெளியே செல்ல; ஐச்சத்—விரும்புதல்; தத:—அங்கிருந்து; விருக்ஷ—மரத்தின்; கோடராத்—பொந்திலிருந்து; இவ—போன்று; ஸ அனலாத்—தீப்பற்றும் போது.
காடு தீப்பற்றி எரியும்பொழுது ஒரு மரப்பொந்தினுள் இருக்கும் பாம்பு அம்மரத்தை விட்டுச் செல்லவே விரும்பும். அதுபோல் நகரத்தைக் காத்து வந்த பாம்பு தீயின் வெம்மை தாங்காமல் அந்நகரத்தை விட்டுப் பிரிந்து செல்ல விரும்பியது.
பதம் 4.28.15
ஸிதிலாவயவோ யர்ஹி கந்தர்வைர் ஹ்ருத-பௌருஷ:
யவனைர் அரிபீ ராஜன்ன் உபருத்தோ ருரோத ஹ
ஸிதில—சிதிலமடைதல்; அவயவ:—அவன் உறுப்புக்கள்; யர்ஹி—அப்பொழுது; கந்தர்வை:—கந்தர்வர்களினால்; ஹ்ருத—தோற்கடிக்கப்பட்டு; பௌருஷ:—அவன் உடல் வலிமை; யவனை:—யவனர்களால்; அரிபி:—எதிரிகளால்; ராஜன்—ஓ, மன்னன் பிராசீன பர்ஹிஷத்தே; உபருத்த:—தடுக்கப்பட்டு; ருரோத—வாய்விட்டு அழுதான்; ஹ—உண்மையில்.
கந்தர்வர்களாலும், யவனர்களாலும் பாம்பின் உடல் சிதிலமாக்கப்பட்டது, அவர்கள் பாம்பின் உடல் வலிமையினை முற்றிலும் தோற்கடித்திருந்தனர். அப்பாம்பு நகரத்தை விட்டு நீங்க நினைத்த பொழுது, அதன் எதிரிகளினால் தடுக்கப்பட்டது. இவ்வாறு தன் முயற்சியில் தோற்றவுடன் அது வாய்விட்டு அழுதது.
பதம் 4.28.16
துஹித்ரு: புத்ர-பௌத்ராம்ஸ் ச ஜாமி-ஜாமாத்ரு-பார்ஷதான்
ஸ்வத்வாவஸிஷ்டம் யத் கிஞ்சித் க்ருஹ-கோஸ-பரிச்சதம்
துஹித்ரு:—புதல்விகள்; புத்ர—புதல்வர்கள்; பௌத்ரான்—பேரக் குழந்தைகள்; ச—மேலும்; ஜாமி—மருமகள்கள்; ஜாமாத்ரூ—மகன்கள்; பார்ஷதான்—துணைவர்கள்; ஸ்வத்வ—சொத்துக்கள்; அவஸிஷ்டம்—மீதமிருக்கும்; யத்-கிஞ்சித்—எதுவாயினும்; க்ருஹ—இல்லத்தில்; கோவு—சேர்த்து வைத்த செல்வம்; பரிச்சதம்—வீட்டிற்கான உபகரணங்கள்.
மன்னர் புரஞ்ஜனன் பின்னர், தமது புதல்விகளையும், புதல்வர்களையும், பேரக் குழந்தைகளையும், மருமகள்களையும், மருமகன்களையும், வேலைக்காரர்களையும், துணைவர்களையும் அது போல் வீட்டையும், வீட்டிலுள்ள பொருள்களையும், தாம் சேர்த்து வைத்திருக்கும் சிறிது செல்வத்தையும் நினைக்கத் தொடங்கினார்.
பதம் 4.28.17
அஹம் மமேதி ஸ்வீக்ருத்ய க்ருஹேஷு குமதிர் க்ருஹீ
தத்யௌ ப்ரமதயா தீனோ விப்ரயோக உபஸ்திதே
அஹம்—நான்; மம—எனது; ஸ்வீ-க்ருத்ய—ஏற்றுக்கொண்டும்; க்ருஹேஷு—இல்லறத்தில்; கு-மதி:—அவன் மனம் அருவருக்கும் எண்ணங்களையுடையது; க்ருஹீ—இல்லறத்தான்; தத்யெள—தனது கவனத்தைத் திருப்புவதற்கு; ப்ரமதயா—தனது மனைவியுடன்; தீன—மிக்க ஏழையாகி; விப்ரயோக—பிரியும் பொழுது; உபஸ்திதே—நேரிடுகிறது.
மன்னர் புரஞ்ஜனன் தமது குடும்பத்தின் மீதும், ‘நான்’ ‘எனது’ என்றும் கருத்தின் மீதும் ஆழமான பற்றுடையவராக இருந்தார். அவர் தமது மனைவியின் மீது அதிகப் பற்றுவைத்திருந்ததினால் முன்னமேயே ஏழையாகியிருந்தார். அவளை விட்டுப் பிரியும் போது அவர் மிகவும் மனம் வருந்தினார்.
பதம் 4.28.18
லோகாந்தரம் கதவதி மய்ய அநாதா குடும்பினீ
வர்திஷ்யதே கதம் தீவ ஏஷா பாலகான் அனுஷோசதீ
லோக-அந்தரம்—வித்தியாசமான வாழ்க்கையினுள்; கதவதி மயி—நான் செல்லும் பொழுது; அநாதா—கணவனை இழந்து; குடும்பினீ—குடும்ப உறுப்பினர்களினால் சூழப்பட்டு; வர்திஷ்யதே—வாழ்வது; கதம்—எவ்வாறு; து—பிறகு; ஏஷா—இந்தப் பெண்; பாலகான்—குழந்தைகள்; அனுஷோசதீ—துக்கமுறுதல்.
மன்னர் புரஞ்ஜனன் மிக்கக் கவலையுடன், “அந்தோ! என் மனைவி ஏராளமானக் குழந்தைகளுடன் இருக்கிறாள். நான் இவ்வுடலை விட்டுச் செல்லும் பொழுது இவர்களையெல்லாம் அவளால் எவ்வாறு காப்பாற்ற முடியும்? ஐயோ குடும்பத்தைக் காப்பாற்றும் கவலையினால் அவள் அதிக இன்னலுக்கு ஆளாவாள்” என்று நினைந்தார்.
பதம் 4.28.19
ந மய்ய அநாஸிதே புங்க்தே நாஸ்னாதே ஸ்நாதி மத்-பரா
மயி ருஷ்டே ஸுஸுந்த்ரஸ்தா பர்த்ஸிதே யத-வாக் பயாத்
ந—இல்லை; மயி—நான் அப்பொழுது; அநாஸிதே—உண்ணவில்லையென்றால்; புங்க்தே—அவள் உண்பது; ந—இல்லை; அஸ்நாதே—நீராடாதிருந்தால்; ஸ்நாதி—அவள் நீராடுவது; மத்-பரா—எப்போதும் என்னிடம் பக்தியுடைவள்; மயி—நான் அப்பொழுது; ருஷ்டே—ஆத்திரமுற்றால்; ஸு-ஸந்த்ரஸ்தா—மிகவும் அச்சமடைவாள்; பர்த்ஸிதே—நான் கடிந்து கொண்டால்; யத-வாக்—வார்த்தைகளை முழுதும் கட்டுப்படுத்துவாள்; பயாத்—பயத்தினால்.
மன்னர் புரஞ்ஜனன் பின்னர், தம் மனைவியிடம் தாம் முன்பு நடந்து கொண்டவிதம் பற்றி நினைக்கத் தொடங்கினார். அவர் உணவு உண்ணும் வரை அவள் உண்ணமாட்டாள், அவர் நீராடும் வரை அவள் நீராடமாட்டாள். அவள் அவர் மீது அதிக அன்புடையவள். ஆதலினால் அவர் அவள் மீது ஆத்திரங் கொண்டு, கண்டித்தாரென்றால், அவள் அவரது தவறான நடத்தையினைப் பொறுத்துக் கொண்டு மிக்க அமைதியுடன் இருப்பாள்.
பதம் 4.28.20
ப்ரபோதயதி மாவிஜ்ஞம் வ்யுஷிதே ஸோக-கர்ஸிதா
வர்த்மைதத் க்ருஹ-மேதீயம் வீர-ஸுர் அபி நேஷ்யதி
ப்ரபோத்யதி—நல்ல அறிவுரைகள் கூறி; மா—எனக்கு; அவிஜ்ஞம்—அறிவின்றி; வ்யுஷிதே—நான் வெளியே சென்றிருக்கும் வேளை; ஸோக—கவலையினால்; கர்ஸிதா—கவலையினால் வாடியிருப்பாள்; வர்த்ம—பாதை; ஏதத்—இந்த; க்ருஹ-மேதீயம்—குடும்பப் பொறுப்புக்களில்; வீர-ஸு:—சிறந்த வீரர்களின் அன்னை; அபி—இருந்தபோதிலும்; நேஷ்யதி—நிறைவேற்றுவதற்கு அவளால் இயலும்.
மன்னர் புரஞ்ஜனன் மேலும் சிந்தித்தார், தான் குழப்ப நிலையில் தவிக்கும் பொழுது அவளே நல்ல அறிவுரைகளைக் கூறித்தன்னை ஆற்றுப்படுத்துவாள், தான் வெளியே சென்றால் தன் பிரிவை நினைந்து கவலைப்படுவாள். என்னதான் அவள் சிறந்த வீரர்களுக்கு அன்னையாக இருந்த போதிலும், குடும்பப் பொறுப்புக்களை அவளால் எப்படி சமாளிக்க முடியும் என்று மன்னர் மிகவும் அஞ்சினார்.
பதம் 4.28.21
கதம் நு தாரகா தீனா தாரகீர் வாபராயணா:
வர்திஷ்யந்தே மயி கதே பின்ன-நாவ இவோததௌ
கதம்—எவ்வாறு; நு—உண்மையில்; தாரகா:—புதல்வர்கள்; தீனா—ஏழை; தாரகீ—புதல்விகள்; வா—அல்லது; அபராயணா:—சார்ந்திருப்பதற்கு ஒருவருமின்றி; வர்திஷ்யந்தே—வாழ்வது; மயி—நான் அப்பொழுது; கதே—இவ்வுலகிலிருந்து சென்றவுடன்; பின்ன—உடையும்; நாவ:—படகு; இவ—போன்று; உததௌ—கடலில்.
மன்னர் புரஞ்சனன் தொடர்ந்து இவ்வாறு கலைப்பட்டார்: நான் இவ்வுலகைவிட்டுச் சென்ற பிறகு இப்போது என்னையே நம்பியிருக்கும் என் புதல்வர்களும், புதல்விகளும் எவ்வாறு இங்கே தொடர்ந்து வாழ்வர்? நடுக்கடலில் படகு உடைந்தால் பயணம் செய்பவர்களின் நிலைமை என்னவாகுமோ அது போன்றல்லவா இவர்களின் நிலையும் ஆகும்!
பதம் 4.28.22
ஏவம் க்ருபணயா புத்த்யா ஸோசந்தம் அதத்-அர்ஹணம்
க்ரஹீதும் க்ருத-தீர் ஏனம் பய-நாமாப்யபத்யத
ஏவம்:—இவ்வாறு; க்ருபணயா—கஞ்சத்தனத்தினால்; புத்த்யா—புத்தி; ஸோசந்தம்—துக்கமடைதல்; அ-தத்-அர்ஹணம்—அவர் புலம்பியிருக்கக் கூடாது; க்ரஹீதும்-கைது செய்வதற்கு; க்ருத—தீ:—யவனர்களின் உறுதிமிக்க அரசன்; ஏனம்—அவனது; பய-நாம—அவன் பெயர் பயம் என்பதாகும்; அப்யபத்யத—விரைந்து அங்கே வந்தான்.
மன்னர் புரஞ்ஜனன் தம் மனைவி மக்களின் விதியைப் பற்றி துக்கமடையக்கூடாது. எனினும் அவரது புத்திக்குறைவினால் அவர் அவ்வாறே கவலைப்பட்டார். இதற்கிடையே பயம் என்னும் பெயருடைய யவனராஜன் அவரைக் கைது செய்வதற்காக அவர் அருகே விரைந்து வந்தான்.
பதம் 4.28.23
பஸுவத் யவனைர் ஏஷ நீயமான: ஸ்வகம் க்ஷயம்
அன்வத்ரவன்ன அனுபதா: ஸோசந்தோ ப்ருஸம் ஆதுரா:
பஸு-வத்—ஓர்விலங்கைப்போல்; யவனை:—யவனர்களினால்; ஏஷ:—புரஞ்ஜனன்; நீயமான:—கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்; ஸ்வகம்—அவர்களுக்குரிய; க்ஷயம்—இருப்பிடம்; அன்வத்ரவன்—பின் தொடர்ந்து; அனுபதா:—அவரது பணியாளர்கள்; ஸோசந்த:—சோகத்துடன்; ப்ருஸம்—மிகவும்; ஆதுரா:—கவலையடைந்தனர்.
யவனர்கள் மன்னர் புரஞ்ஜனனை ஒரு விலங்கைப்போல் கட்டி தங்கள் இருப்பிடத்திற்கு இழுத்துச் சென்றனர், மக்களின் பணியாளர்கள் அதனால் மிகுந்த துயரத்திற்காளாகினர். அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்திருந்த பொழுது அவர்களும் அவருடன் செல்வதற்குப் பலவந்தப்படுத்தப்பட்டனர்.
பதம் 4.28.24
புரீம் விஹாயோபகத உபருத்தோ புஜங்கம:
யதா தம் ஏவானு புரீ விஷீர்ணா ப்ரக்ருதிம் கதா
புரீம்—நகரம்; விஸாய—நீங்கியவுடன்; உபகத:—வெளியேறி; உபருத்த:—கைதுசெய்யப்பட்டு; புஜங்கம:—பாம்பு; யதா—எப்பொழுது; தம்—அவரது; ஏவ—உறுதியாக; அனு—பிறகு; புரீ—நகரம்; விஷீர்ணா—நொறுங்கியது; ப்ரக்ருதீம்—விஷயம்; கதா—உள்ளாகியது.
ஏற்கெனவே யவன வீரர்களால் கைது செய்யப்பட்டு நகருக்கு வெளியேயிருந்த பாம்பும் பிறரோடு சேர்ந்து தன் எஜமானனைத் தொடர்ந்து சென்றது. இவர்கள் அனைவரும் நகரிலிருந்து வெளியேறியவுடன் அந்த நகரம் உடனே துண்டு துண்டாக உடைந்து பொடியாகிப் போனது.
பதம் 4.28.25
விக்ருஷ்யமாண: ப்ரஸபம் யவனேன பலீயஸா
நாவிந்தத் தமஸாவிஷ்ட: ஸகாயம் ஸுஹ்ருதம் புர:
விக்ருஷ்யமாண:—இழுத்துச் செல்லப்படுதல்; ப்ரஸபம்—பலவந்தமாக; யவனேன—யவனனால்; பலீயஸா—சக்திமிக்கவன்; ந அவிந்தத்—நினைவு கூர முடியவில்லை; தமஸா—அறியாமை இருளினால்; ஆவிஷ்ட:—மூடப்பட்டு; ஸகாயம்—அவர் நண்பர்; ஸுஹ்ருதம்—எப்போதும் நலன் விரும்புபவர்; புர:—ஆரம்பத்திலிருந்து.
ஆற்றல்மிக்க யவனனால் மன்னர் புரஞ்ஜனன் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட பொழுதும் கூட அவரது ஒட்டு மொத்த அறியாமையினால் அவரது நண்பரும், நலன் விரும்பியான பரமாத்மாவைப் பற்றி அவரால் அப்போதும் நினைக்க முடியவில்லை.
பதம் 4.28.26
தம் யஜ்ஞ-பசவோ ‘னேன ஸம்ஜ்ஞப்தா யே ‘தயாலுனா
குடாரைஸ் சிச்சிது: க்ருத்தா: ஸ்மரந்தோ ‘மீவம் அஸ்ய தத்
தம்—அவரை; யஜ்ஞ-பஸவ:—வேள்வியிலிடப்பட்ட விலங்குகள்; அனேன—அவரால்; ஸம்ஜ்ஞப்தா:—கொல்லப்பட்ட; யே—எவையனைத்தும்; அதயாலுனா—அன்பு என்பதே சிறிதுமற்ற; குடாரை:—கோடரிகளினால்; சிச்சிது:—துண்டுதுண்டாகக் கிழிப்பது; க்ருத்தா:—மிகுந்த ஆத்திரத்துடன்; ஸ்மரந்த:—நினைத்து; அமீவம்—பாவச் செயல்; அஸ்ய—அவரது; தத்—அந்த.
அன்பு என்பது சிறிதுமில்லாத மன்னர் புரஞ்ஜனன் பல்வேறு வேள்விகளில் ஏராளமான விலங்குகளைக் கொன்றிருக்கிறார். இப்போது இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட அவ்விலங்குகள் தமது கூர்மையான கொம்புகளினால் அவரைக் குத்திக் கிழிக்கத் தொடங்கின. இச்செயல் அவரைக் கோடரிகளினால் துண்டுதுண்டாக வெட்டுவது போலிருந்தது.
பதம் 4.28.27
அனந்த—பாரே தமஸி மக்னோ நஷ்ட-ஸ்ம்ருதி: ஸமா:
ஸாஸ்வதீர் அனுபூயார்திம் ப்ரமதா-ஸங்க-தூஷித:
அனந்த-பாரே—அளவற்று விரிதல்; தமஸி—இருள் நிறைந்த உலக வாழ்வில்; மக்ன:—இணைந்து; நஷ்ட-ஸ்ம்ருதி:—அனைத்துப் புத்தியும் இழந்து; ஸமா:—அனேக வருடங்கள்; ஸாஸ்வதீ:—நடை முறையில் நித்தியமாக; அனுபூய—அனுபவித்து; ஆர்திம்—மூவகைத் துன்பங்கள்; ப்ரமதா—பெண்களின்; ஸங்க—தொடர்பினால்; தூஷித:—மாசடைகிறது.
பெண்களுடன் கொண்ட மாசுடைய தொடர்பினால், மன்னர் புரஞ்ஜனனைப் போன்ற ஓர் உயிர் பௌதீக உலக வாழ்வின் எல்லா வேதனைகளையும் நித்தியமாக, அனுபவித்து, கோடான கோடி வருடங்கள் எல்லா நிறைவுகளையும் இழந்து வாழ்வின் இருண்ட பகுதியில் இருக்கிறான்.
பதம் 4.28.28
தாம் ஏவ மனஸா க்ருஹ்ணன் பபூவ ப்ரமதோத்தமா
அனந்தரம் விதர்பஸ்ய ராஜ-ஸிம்ஹஸ்ய வேஸ்மனி
தாம்—அவள்; ஏவ—உறுதியாக; மனஸா—மனதினால்; க்ருஹ்ணன்—ஏற்றுக்கொள்ளல்; பபூவ—ஆனார்; ப்ரமதா—பெண்; உத்தமா—உயர்ந்த நிலையில்; அனந்தரம்—மரணத்திற்குப்பிறகு; விதர்பஸ்ய—விதர்பனின்; ராஜ-ஸிம்ஹஸ்ய—மிக்க வலிமையுடைய மன்னரின்; வேஸ்மனி—அரண்மனையில்.
மன்னர் புரஞ்சனன் தன் மனைவியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே உடலை நீத்த காரணத்தினால் அவரது மறுபிறவியில் அவர் அழகிய உயர்ந்த இடத்துப் பெண்ணாகப் பிறந்தார். அடுத்த பிறவியில் அவர் விதர்ப மன்னனுக்கு மகளாக அவர் அரண்மனையிலேயே பிறந்தார்.
பதம் 4.28.29
உபயேமே வீர்ய-பணாம் வைதர்பீம் மலயத்வஜ:
யுதி நிர்ஜித்ய ராஜன்யான் பாண்ட்ய: பர-புரஞ்ஜய:
உபயேமே—மணமுடித்தல்; வீர்ய—வீர்யமிக்க; பணாம்—பரிசு; வைதர்பீம்—விதர்பனின் புதல்வி; மலய-த்வஜ—மலயத்துவஜன்; யுதி—யுத்தத்தில்; நிர்ஜித்ய—வெற்றிகொண்டு; ராஜன்யான்—பிற மன்னர்களை; பாண்ட்ய:—கல்வியிற் சிறந்தோன்; அல்லது பாண்டு என்றறியப்படும் நாட்டில் பிறந்தவர்; பர—உன்னதமான; புரம்—நகரம்; ஜய:—வெற்றி கொண்டவர்.
பாண்டு நாட்டைச் சேர்ந்த மலயத்துவஜன் என்னும் ஆற்றல்மிக்க மன்னருக்கு மன்னர் விதர்பனின் மகளான விதர்பீயை மணமுடித்துக் கொடுப்பதற்கு உறுதி செய்யப்பட்டது. மலத்துவஜன் பல்வேறு அரசர்களை யுத்தத்தில் வென்ற பிறகு மன்னர் விதர்பனின் புதல்வியை மணந்தார்.
பதம் 4.28.30
தஸ்யாம் ஸ ஜனயாம் சக்ர ஆத்மஜாம் அஸிதேக்ஷணாம்
யவீயஸ: ஸப்த ஸுதான் ஸப்த-த்ரவிட-பூப்ருத:
தஸ்யாம்—அவன் மூலம்; ஸ:—மன்னர்; ஜனயாம்-சக்ரே—பெற்றெடுத்தார்; ஆத்மஜாம்—புதல்வி; அஸித—கருநீலம் அல்லது கருமை; ஈக்ஷணாம்—அவனது கண்கள்; யவீயஸ:—இளமை, ஆற்றல்மிக்க; ஸப்த—ஏழு; ஸீதான்—புதல்வர்கள்; ஸப்த—ஏழு; த்ரவிட—திராவிட நாடு; தென்னிந்தியா; பூ—நாட்டின்; ப்ருத:—அரசர்கள்.
மன்னர் மலயத்துவஜன், கருமைநிறக் கண்களையுடைய ஒரு மகளுக்குத் தந்தையானார். அவருக்கு ஏழு ஆண்குழந்தைகளும் பிறந்தனர் பின்னர் அவர்கள் திராவிட நாட்டின் மன்னர்கள் ஆயினர் இவ்வாறு அப்பகுதியில் ஏழு மன்னர்கள் இருந்தனர்.
பதம் 4.28.31
ஏகைகஸ்யாபவத் தேஷாம் ராஜன்ன அர்புதம் அர்புதம்
போக்ஷ்யதே யத்-வம்ஸ-தரைர் மஹீ மன்வந்தரம் பரம்
ஏக-ஏகஸ்ய—இவர்கள் ஒவ்வொருவரும்; அபவத்—ஆயினர்; தேஷாம்—அவர்களின்; ராஜன்—ஓ, மன்னனே; அர்புதம்—ஒரு கோடி; அர்புதம்—ஒரு கோடி; போக்ஷ்யதே—ஆட்சிசெய்தனர்; யத்—அவர்களது; வம்ஸ-தரை—வம்சத்தினரால்; மஹீ—இவ்வுலகம் முழுவதையும்; மனு-அந்தரம்—ஒரு மனவந்தரம் (ஒரு மனுவனின் காலம்); பரம்—அதன்பிறகு.
அன்பிற்குரிய மன்னன் பிராசீனபர்ஹிஷதே, மலயத்துவஜனின் மைந்தர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான மைந்தர்களைப் பெற்றெடுத்தனர். இவர்கள் அனைவரும் இவ்வுலகம் முழுதையும் ஒரு மனுவின் ஆயுட்காலம் வரையும் அதன்பின்னரும் கூடப் பாதுகாத்தனர்.
பதம் 4.28.32
அகஸ்த்ய: ப்ராக் துஹிதரம் உபயேமே த்ருத-வ்ரதாம்
யஸ்யாம் திருடச்யுதோ ஜாத இத்ம வாஹாத்மஜோ முனி:
அகஸ்த்ய:—மாமுனிவர் அகஸ்தியர்; ப்ராக்—முதல்; துஹிதரம்—புதல்வி; உபயேமே—மணந்தார்; த்ருத-வ்ரதாம்—விரதம் பூண்டவர்; யஸ்யாம்—அவள் மூலம்; த்ருதச்யுத:—திருதச்யுதன் என்ற பெயரில்; ஜாத:—பிறந்தார்; இத்மவாஹ—இத்மவாஹன் என்ற பெயரில்; ஆத்ம-ஐ:—புதல்வன்; முனி:—மாமுனிவர்.
மாமுனிவர் அகஸ்தியர், பகவான் கிருஷ்ணரின் உறுதிமிக்க பக்தரான மலயதுவஜனின் மூத்தமகளை மணந்தார். அவளுக்கு திருடச்யுதன் என்றொரு மைந்தன் பிறந்தான். இத்திருடச்யுதனுக்கு இத்மவாஹன் என்றொரு புதல்வன் பிறந்தான்.
பதம் 4.28.33
விபஜ்ய தனயேப்ய: க்ஷ்மாம் ராஜருஷிர் மலயத்வஜ:
ஆரிராதயிஷு: க்ருஷ்ணம் ஸ ஜகாம குலாசலம்
விபஜ்ய—பிரித்து; தனயேப்ய:—அவரது தனயர்களுக்கு; க்ஷ்மாம்—முழுஉலகையும்; ராஜ-ருஷி:—ராஜரிஷி; மலயத்வஜ:—மலயத்துவஜன்; ஆரிராதயிஷு:—வழிபடுவதற்கு விரும்பி; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர்; ஸ:—அவர்; ஜகாம—சென்றார்; குலாசலம்—குலாசலம் என்னும் இடத்திற்கு.
இதன் பின்னர் மலயத்துவஜன் தம் நாட்டைத் தமது மைந்தர்களுக்குப் பகிர்ந்தளித்தார். பகவான் கிருஷ்ணரை முழுமனதுடன் வழிபடுவதற்காக அவர் குலாசலம் என்னும் தனிமையான இடத்திற்குச் சென்றார்.
பதம் 4.28.34
ஹித்வா க்ருஹான் ஸுதான் போகான் வைதர்பீ மதிரேக்ஷணா
அன்வதாவத பரண்ட்யேஷம் ஜ்யோத்ஸ்னேவ ரஜனீ கரம்
ஹித்வா—விட்டுவிட்டு; க்ருஹான்—வீட்டை; ஸுதான்—குழந்தைகள்; போகான்—பௌதீக இன்பம்; வைதர்பீ—விதர்ப மன்னனின் மகள்; மதிர-ஈக்ஷணா—மயக்கும் விழிகளுடன்; அன்வதாவத—பின்பற்றி; பாண்ட்யா-ஈஷம்—மன்னன் மலயத்வஜன்; ஜ்யோத்ஸ்னா—இவ நிலவொளியைப் போல; ரஜனீ-கரம்—நிலவு.
நிலவின் ஒளி எவ்வாறு நிலவைப் பின் தொடர்கிறதோ அதுபோல் மலயத்துவ மன்னன் குலஜாலத்திற்குப் புறப்பட்டுச் சென்றவுடன், அவர்மீது பக்தியுடைய, மயக்கும் விழிகளையுடைய அவர் மனைவியும் அவரைப் பின்பற்றி, குழந்தைகள், குடும்பம் போன்ற அனைத்து இல்லற இன்பங்களையும் துறந்தாள்.
பதங்கள் 4.28.35 – 4.28.36
தத்ர சந்த்ரவஸா நாம தாம்ப்ரபர்ணீ வடோதகா
தத்-புண்ய-ஸலிலைர் நித்யம் உபயத்ராத்மனோ ம்ருஜன்
கந்தாஷ்டிபிர் மூல-பலை: புஷ்ப-பர்ணைஸ் த்ருணோதகை:
வர்தமான: ஸனைர் காத்ர-கர்ஸனம தப ஆஸ்தித:
தத்ர—அங்கே; சந்த்ரவஸா—சந்திரவஸா என்னும் ஆறு; நாம—பெயரில்; தாம்ரபர்ணி—தாம்பிரபரணி என்றும் ஆறு; வடோதகா—வடோதகா என்னும் ஆறு; தத்—இந்த நதிகளின்; ஸலிலை:—தண்ணீரில்; நித்யம்—தினமும்; உபயத்ர—இரண்டு வழிகளில்; ஆத்மன:—அவர்தமது; ம்ருஜன்—கழுவி; கந்த—கந்தமூலங்கள்; அஷ்டிபி:—கொட்டைகள்; மூல—வேர்கள்; பலை:—பழங்கள்; புஷ்ப—மலர்கள்; பர்ணை:—இலைகள்; த்ருணா—புற்கள்; உதகை:—நீரினால்; வர்தமான:—வாழ்ந்திருந்தார்; ஸனை:—படிப்படியாக; காத்ர—அவரது உடல்; கர்ஸனம்—மெலிந்தது; தப:—தவம்; ஆஸ்தித:—அவர்மேற்கொண்டார்.
குலாசலப் பகுதியில் சந்திரவாஸா, தாம்பிரபரணி, வடோதகா என்று மூன்று நதிகள் ஓடின. மன்னர் மலயத்துவஜன் இப்புண்ணிய நதிகளில் தினமும் நீராடுவார். இதனால் அவர் தமது உடலையும், உள்ளத்தையும் தூய்மை செய்து கொண்டார். நீராடி முடிந்தபின்னர் அவர் கிழங்குகள், கொட்டைகள், இலைகள், மலர்கள், வேர்கள், பழங்கள், புற்கள் போன்றவற்றை உண்டு, வாழ்ந்து வந்தார். இவ்வாறு கடுமையாகத் தவங்களை மேற்கொண்டதனால் அவர் மிகவும் உடல் மெலிந்தவராக ஆனார்.
பதம் 4.28.37
ஸீதோஷ்ண-வாத-வர்ஷாணி க்ஷுத்-பிபாஸே ப்ரியாப்ரியே
ஸுக-து:கே இதி த்வந்த்வானி அஜயத் ஸம-தர்ஸன:
ஸீத—குளிர்ச்சி; உஷ்ண—உஷ்ணம்; வாத—காற்று; வர்ஷாணி—மழை; க்ஷுத்—பசி; பிபாஸே—தாகம்; ப்ரிய—இன்பம்; அப்ரியே—துன்பம்; ஸுக—சுகம்; து:கே—துக்கம்; இதி—இவ்வாறு; த்வந்த்வானி—இருமை நிலைகள்; அஜயத்—அவர் வென்றார்; ஸம-தர்ஸன:—சமநோக்கு.
தவத்தின் மூலம் மலயத்துவஜனின் உடலும் மனமும், குளிர்ச்சி, வெப்பம், சுகம், துக்கம், காற்று, மழை, பசி, தாகம், இன்பம், துன்பம் என்னும் இருமை நிலைகளை சமநோக்கில் காணும் திறன் பெற்றன. இவ்வாறு அவர் எல்லா இருமைநிலைகளையும் வெற்றிகொண்டார்.
பதம் 4.28.38
தபஸா வித்யயா பக்வ கஷாயோ நியமைர் யமை:
யுயுஜே ப்ரஹ்மணி ஆத்மானம் விஜிதாக்ஷானிலாஸய:
தபஸா—தவத்தினால்; வித்யயா—கல்வியினால்; பக்வ—எரித்து; கஷாய:—எல்லா அழுக்குகளையும்; நியமை:—ஒழுங்குமுறை விதிகளினால்; யமை:—சுயக்கட்டுப்பாட்டினால்; யுயுஜே—அவர் நிலை நின்றார்; ப்ரஹ்மணி—ஆன்மீக உணர்வினில்; ஆத்மானம்—அவரது சுயம்; விஜித—முற்றிலும் கட்டுப்பட்டது; அக்ஷ—புலன்கள்; அனில—உயிர்; ஆஸய:—உணர்வு.
வழிபாட்டினாலும், தவங்களைச் செய்வதினாலும், ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றியதினாலும் மன்னர் மலயத்துவஜன் தனது புலன்களையும், உயிரையையும், உணர்வையும் வெற்றி கொண்டார். இவ்வாறு அவர் எல்லாவற்றையும் பரம்பிரம்மத்தின் (கிருஷ்ணர்) மையப்புள்ளியில் நிலைநிறுத்தினார்.
பதம் 4.28.39
ஆஸ்தே ஸ்தாணுர் இவைகத்ர திவ்யம் வர்ஷ-ஸதம் ஸ்திர:
வாஸுதேவே பகவதி நான்யத் வேதோத்வஹன் ரதிம்
ஆஸ்தே—உறுதியாக இருந்தார்; ஸ்தாணு:—அசையாமல்; இவ—போன்று; ஏகத்ர—ஒரே இடத்தில்; திவ்யம்—தேவர்களின்; வர்ஷ—வருடங்கள்; ஸதம்—நூறு; ஸ்திர:—ஸ்திரமாக, வாஸுதேவே—பகவான் கிருஷ்ணருக்கு; பகவதி—முழுமுதற் கடவுள்; ந—இல்லை; அன்யத்—வேறெதுவும்; வேத—அறிந்தது; உத்வஹன்—அடையப்பெற்று; ரதிம்—கவர்ச்சி.
இவ்வாறு அவர் தேவர்களின் கணக்கின்படி நூறு வருடங்கள் ஒரே இடத்தில் அசையாது இருந்தார். இதன்பின்னர் அவர் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் தூய பக்தித் தொண்டில் வளர்ச்சியடைந்து அந்த நிலையிலேயே ஸ்திரமாக இருந்தார்.
பதம் 4.28.40
ஸ வ்யாபகதயாத்மானம் வ்யதிரிக்ததயாத்மனி
வித்வான் ஸ்வப்ன இவாமர்ஸ-ஸாக்ஷிணம் விரராம ஹ
ஸ:—மன்னர் மலயத்துவஜன்; வ்யாபகதயா—எங்கும் நிறைந்ததினால்; ஆத்மானம்—பரமாத்மா; வ்யதிரிக்ததயா—வேற்றுடையினால்; ஆத்மனி—அவரது சுயத்தில்; வித்வான்—நிறைகல்வி கற்றவர்; ஸ்வப்னே—கனவில்; இவ—போன்று; அமர்ஸ—ஆய்ந்த முடிவின்; ஸாக்ஷிணம்—சாட்சி; விரராம—வேறுபாடற்றவராதல்; ஹ—உறுதியாக.
மன்னர் மலயத்துவஜன் தனிப்பட்ட ஆத்மாவிலிருந்து பரமாத்மாவை வேறுபடுத்திக் காணும் திறன்மூலம் நிறையறிவு எய்தப் பெற்றார். தனிப்பட்ட ஆத்மா அகத்தில் மட்டும் இருக்கிறது மாறாக பரமாத்மாவோ எங்கும் வியாபித்திருக்கின்றது. அவர் பரு உடல் ஆத்மா அல்லவென்றும், ஆத்மாவே அந்த உடலின் சாட்சியாக இருக்கிறது என்றும் உணரும் நிறையறிவு உடையவரானார்.
பதம் 4.28.41
ஸாக்ஷாத் பகவதோக்தேன குருணா ஹரிணா ந்ருப
விஸுத்த-க்ஞான-தீபேன ஸ்புரதா விஸ்வதோ-முகம்
ஸாக்ஷாத்—நேரடியாக; பகவதா—முழுமுதற் கடவுளினால்; உக்தேன—அறிவுறுத்தப்பட்டு; குருணா—ஆன்மீக குரு; ஹரிணா—பகவான் ஹரியினால்; ந்ருப—ஓ, மன்னனே; விஸுத்த—தூய; ஜ்ஞான—ஞானம்; தீபேன—ஒளியினால்; ஸ்புரதா—ஒளிபெற்று; விஸ்வத:-முகம்—பார்வையின் அனைத்துக் கோணங்களிலும்.
இவ்வழியில் மன்னர் மலயத்துவஜன் நிறைவான ஞானம் எய்தினார். ஏனென்றால் அவரது தூய நிலையில் அவர் முழுமுதற் கடவுளால் நேரடியாக அறிவுறுத்தப்பட்டார். இவ்வொளிமிக்க உன்னத ஞானத்தினால் அவர் எல்லாவற்றையும் பார்வையின் பல்வேறு கோணங்களிலிருந்தும் அறியக் கூடியவரானார்.
பதம் 4.28.42
பரே ப்ரஹ்மணி சாத்மானம் பரம் ப்ரஹ்ம ததாத்மனி
வீக்ஷமாணோ விஹாயேக்ஷாம் அஸ்மாத் உபரராம ஹ
பரே—உன்னதமான; ப்ரஹ்மணி—முழுப்பொருளில்; ச—மேலும்; ஆத்மானம்—சுயம்; பரம்—பரம்; ப்ரஹ்ம—முழுப்பொருள்; ததா—மேலும் ஆத்மனி—அவரிடத்து; வீக்ஷமாண:—இவ்வாறு கண்டுணர்ந்து; விஷாய—விட்டுவிட்டார்; ஈக்ஷாம்—தனிப்பட்ட; அஸ்மாத்—இந்த முறையிலிருந்து; உபரராம—ஓய்வுபெற்று; ஹ—உறுதியுடன்.
மன்னர் மலயத்துவஜன் பரமாத்மா தம் அருகில் வீற்றிருக்கின்றார் என்பதை இவ்வாறு கண்டு கொண்டார். அதுபோல் தனிப்பட்ட ஆத்மாவாகிய தாமும் பரமாத்மாவின் அருகில் அமர்ந்திருக்கிறோம் என்பதையும் கண்டு கொண்டார். இவ்வாறு இருவரும் ஒருங்கே இருக்கும் போது அங்கே தனிப்பட்ட விருப்பங்களுக்கு எந்தவிதத் தேவையும் இல்லையென்றானது; அதனால் அவர் தமது செயல்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்.
பதம் 4.28.43
பதிம் பரம-தர்ம-ஜ்ஞம் வைதர்பீ மவயத்வஜம்
ப்ரேம்னா பர்யசரத் தித்வா போகான் ஸா பதி-தேவதா
பதிம்—அவருடைய கணவர்; பரம—உயர்ந்த; தர்ம-ஜ்ஞம்—சமயதர்மங்களை அறிந்தவர்; வைதர்பீ—விதர்பனின் மகள்; மலயத்வஜம்—மலயத்துவஜனிடம்; ப்ரேம்ணா—அன்பும் பாசமும் கொண்டு; பர்யசரத்—பக்தியுடன் பணியுரிந்தாள்; ஹித்வா—துறந்து; போகான்—போகம்; ஸா—அவள்; பதி-தேவதா—தன் கணவனையே பரமபுருஷ பகவானாக ஏற்றுக்கொண்டு.
மன்னர் விதர்பனின் மகள் தன் கணவனே பரம்பொருள் என்று முழுவதுமாக ஏற்றுக் கொண்டவள். தனது கணவனின் சிறந்த கொள்கைகளைப் பின்பற்றித் துறவு நெறியை மேற்கொண்டு புலனின்பம் அனைத்தையும் அவள் துறந்தாள். பின் அவரது தொண்டில் ஈடுபட்டாள்.
பதம் 4.28.44
சீர வாஸாப வ்ரத-க்ஷாமா வேணி-பூத-ஸிரோருஹா
பபாவ் உப பதிம் ஸாந்தா ஸிகா ஸாந்தம் இவானலம்
சீர-வாஸா—பழைய ஆடைகளை அணிந்து; வ்ரத-க்ஷாமா— தவத்தினால் உடல் இளைத்தும், மெலிந்தும் காணப்படுதல்; வேணீ-பூத—சிக்கலாகி; ஸிரோஹோ—அவள் தலையில்; பபெள—அவள் ஒளிந்தாள்; உபபதிம்—கணவன் அருகில்; ஸாந்தா—சாந்தம்; ஸிகா—தீக்கொழுந்து; ஸாந்தம்—அசையாது அமைதியாக; இவ—போன்று; அனலம்—தீ.
மன்னர் விதர்பனின் மகள் பழைய ஆடைகளையே அணிந்திருந்தாள். அவள் தவவிரதம் மேற்கொண்டிருந்ததினால் உடல் இளைத்தும் மெலிந்தும் காணப்பட்டாள். அவள் தலைமுடியை நன்கு பராமரிக்காததினால் அது சிக்கலாகி ஜடை விழுந்தது. அவள் எப்போதும் தன் கணவனின் அருகிலேயே இருந்த போதிலும் அவள் காற்றினால் அலைக்கழிக்கப்படாத நெருப்புச் சுடர் போல் அசையாது அமைதியாக இருந்தாள்.
பதம் 4.28.45
அஜாநதீ ப்ரியதமம் யதோபரதம் அங்கனா
ஸுஸ்திராஸநம் ஆஸாத்ய யதா-பூர்வம் உபாசரத்
அஜாநதீ—எந்தவிதமான உணர்வுமின்றி; ப்ரிய-தமம்—அவளுடைய உயிருக்குயிரான கணவன்; யதா—அப்பொழுது; உபரதம்—மரித்தல்; அங்கனா—பெண்; ஸுஸ்திர—நிலையாக; ஆஸனம்—ஆசனத்தில்; ஆஸாத்ய—நடைபெற்றது; யதா—போல; பூர்வம்—முன்பு; உபாசரத்—பணிவிடைகள் அவருக்கு நடைபெற்றன.
மன்னர் விதர்பனின் மகள் தன் கணவன் உடலிலிருந்து உயிர் பிரிந்ததை அறிந்து கொள்ளும் வரை, ஆசனத்தில் உறுதியாக இருந்த அவருக்குத் தொடர்ந்து தன்னுடைய வழக்கமான பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தாள்.
பதம் 4.28.46
யதா நோபல பேதாங் க்ராவ் ஊஷ்மாணம் பத்யுர் அர்சதீ
ஆஸீத் ஸம்விக்ன-ஹ்ருதயா யூத-ப்ரஷ்டா ம்ருகீ யதா
யதா—எப்பொழுது; ந—இல்லை; உபலபேத—உணர்ச்சி; அங்க்ரௌ—பாதங்களில்; ஊஷ்மாணம்—சூடு; பத்யு:—அவள் கணவனின்; அர்சதீ—சேவை செய்யும் பொழுது; ஆஸீத்—அவள் ஆனாள்; ஸம்விக்ன—கவலையுடைய; ஹ்ருதயா—இதயத்தில்; யூத-ப்ரஷ்டா—அவள் கணவனை இழந்த; ம்ருகீ—பெண்மான்; யதா—போன்று.
அவள் தன் கணவனின் கால்களை பிடித்துவிட்டுக் கொண்டிருந்த பொழுது அவர் கால்களில் உணர்ச்சியோ, சூடோ இல்லை என்பதை உணர்ந்து உயிர் பிரிந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டாள். கணவனைப் பிரிந்து தனிமையில் இருப்பதை எண்ணி அவள் மிகவும் வருந்தினால். கணவன் துணையை இழந்துவிட்ட அவள் நிலை ஆண்மானைவிட்டுப் பிரிந்த பெண்மானின் நிலையைப் போல் பரிதாபமாக இருந்தது.
பதம் 4.28.47
ஆத்மானம் ஸோசதீ தீனம் அபந்தும் விக்லவாஸ்ருபி:
ஸ்தனாவ் ஆஸிச்ய விபினே ஸுஸ்வரம் ப்ரருரோத ஸா
ஆத்மானம்—அவளைப் பற்றி; ஸோசதி—துக்கமுறுதல்; தீனம்—துயரமிக்க; அபத்தும்:——துணையின்றி; விக்லவ—உடைந்த மனத்தினளாய்; அஸ்ருபி:—கண்ணீரினால்; ஸ்தனௌ—மார்பகங்களில்; ஆஸிச்ய—நனைந்து; விபினே—காட்டில்; ஸுஸ்வரம்—ஓவென்று; ப்ரருரோத—அழத்தொடங்கினாள்; ஸா—அவள்.
இப்போது காட்டில் கணவனை இழந்த கைம்பெண்ணாகவும், தனித்தும் விடப்பட்ட விதர்பனின் மகள் துக்கமிகுதியால் தொடர்ந்து கண்ணீர்விட்டாள். அது அவள் மார்பகங்களை நனைத்தது. அவள் வாய்விட்டு ஓவென்று கதறியழுதாள்.
பதம் 4.28.48
உத்திஷ்டோதிஷ்ட ராஜர்ஷே இமாம் உததி-மேகலாம்
தஸ்யுப்ப: சுக்ஷ்த்ர-பந்துப்யோ பிப்யதீம் பாதும் அர்ஹ:
உத்திஷ்ட—அருள்கூர்ந்து எழுந்திருங்கள்; உத்திஷ்ட—அருள்கூர்ந்து எழுந்திருங்கள்; ராஜ-ருஷே—ஓ, சிறந்த அரசரே; இமாம்—இந்த பூமி; உததி—கடலினால்; மேகலாம்—சூழப்பட்டு; தஸ்யுப்ய:—துஷ்டர்களிடமிருந்து; க்ஷத்ர-பந்துப்ய:—ஒழுக்கங்கெட்ட அரசர்களிடமிருந்து; பிப்யதீம்—மிகவும் அச்சங்கொள்ளுதல்; அச்சங்கொள்ளுதல்; பாதும்—பாதுகாப்பதற்கு; அர்ஹஸி—நீர் செய்யவேண்டும்.
ஓ, அரசர்களிற் சிறந்தவரே, அருள்கூர்ந்து எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்! இவ்வுலகம் கடலாலும், தீயோராலும், ஒழுக்கமில்லாத அரசர்களாலும் சூழப்பட்டிருப்பதைப் பாருங்கள். அச்சத்தால் நடுங்குகிற இந்த உலகைக் காக்க வேண்டியது உங்கள் கடமையாகும்.
பதம் 4.28.49
ஏவம் விலபந்தீ பாலா விபினே ‘னுகதா பதிம்
பதிதா பாதயோர் பர்தூ ருததி அஷ்ரூணி அவர்தயத்
ஏவம்—இவ்வாறு; விலபந்தீ—துக்கித்த; பாலா—அந்த அறியாத பெண்; விபினே—தனிமையான காட்டில்; அனுகதா—கடுமையாகப் பின்பற்றி; பதிம்—தன் கணவனிடத்து; பதிதா—கீழேவிழுந்து; பாதயோ:—பாதங்களில்; பர்து:—அவள் கணவனின்; ருததி—அழுது கொண்டு; அஷ்ருணி—கண்ணீர்; அவர்தயத்—அவள் வடித்தாள்.
கணவனின் சொல்லை ஒருநாளும் எதிர்க்காத அந்தப் பெண் தனிமையான காட்டில் இறந்துபோன தன் கணவனின் பாதங்களில் வீழ்ந்து கதறியழுதாள். கண்ணீர் அருவியாகக் கொட்டியது.
பதம் 4.28.50
சிதிம் தாருமயீம் சித்வா தஸ்யாம் பத்யு: கலேவரம்
ஆதீப்ய சானுமரணேவிலபந்தீ மனோ ததே
சிதிம்—சிதை; தாரு-மயீம்—மரங்களினால் அமைத்தாள்; சித்வா—அடுக்கினாள்; தஸ்யாம்—அதன்மேல்; பத்யு:—கணவனின்; கலேவரம்—உடலை; ஆதீப்ய—எரியூட்டியபிறகு; ச—மேலும்; அனுமரணே—அவனோடு இறப்பதற்கே உடன்கட்டை ஏறுதல்; விலபந்தீ—சோகத்துடன்; மன:—அவள் மனம்; ததே—முடிவு செய்தது.
பிறகு அவள் தன் கணவனுக்காக விறகுகளை அடுக்கி அந்தச் சிதையில் இறந்த தன் கணவன் உடலை எடுத்து வைத்து தீ மூட்டினாள். துக்கம் தாங்க முடியாமல் தானும் தன் கணவனுடன் உடன்கட்டை ஏறி உயிரை விடுவதெனத் தீர்மானித்தாள்.
பதம் 4.28.51
தத்ர பூர்வதர: கஸ்சித் ஸகா ப்ராஹ்மண ஆத்மவான்
ஸாந்த்வயன் வல்குனா ஸாம்னா தாம் ஆஹ ருததீம் ப்ரபோ
தத்ர—அங்கு; பூர்வதர:—முன்னர்; கஸ்சித்—ஒருவர்; ஸகா—நண்பர்; ப்ராஹ்மண:—ஓர் அந்தணர்; ஆத்மவான்—நன்கு கற்றறிந்த அறிஞர்; ஸாந்த்வயன்—சாந்தப்படுத்தி; வல்குனா—நன்கு; ஸாம்னா—அமைதிப்படுத்தும் வார்த்தைகளினால்; தாம்—அவளுக்கு; ஆஹ—அவர் கூறினார்;
அன்பிற்குரிய மன்னனே, புரஞ்ஜன மன்னரின் நெடு நாளைய நண்பரான அந்தணர் ஒருவர் அங்கு வந்து இனிமையான வார்த்தைகளின் மூலம் அரசியை அமைதிப்படுத்தத் தொடங்கினார்.
பதம் 4.28.52
ப்ராஹ்மண உவாச
கா த்வம் கஸ்யாஸி கோவாயம் ஸயானோ யஸ்ய ஸோசஸி
ஜானாஸி கிம் ஸகாயம் மாம் யேனாக்ரே விசசர்த ஹ
ப்ராஹ்மண உவாச—கற்றறிந்த அந்தணர் கூறினார்; கா—யார்; த்வம்—நீ; கஸ்ய—யாரது; அஸி—நீ; க:—யார்; வா—அல்லது; அயம்—இந்த; ஸயன:—படுத்திருப்பது; யஸ்ய—யாருடைய; ஸோசஸி—நீ அழுதுகொண்டிருப்பது; ஜானாஸிகிம்—உனக்குத் தெரியுமா; ஸகாயம்—நண்பன்; மாம்—என்னுடைய; யேன—எவருடன்; அக்ரே—முன்னர்; விசசர்தப—நீ ஆலோசித்து; ஹ—உறுதியாக.
அந்த அந்தணர் பின்வருமாறு கேட்டார்; நீ யார்? யாருடைய மகள் அல்லது மனைவி? இங்கே படுத்திருக்கும் மனிதன் யார்? நீ இறந்துகிடக்கும் இம்மனிதனுக்காக அழுகிறாய் என்று தோன்றுகிறது. என்னைத் தெரியவில்லையா? நான் உனது நிரந்தர நண்பன். கடந்த காலத்தில் பலமுறை நீ என்னைக் கலந்தாலோசித்திருக்கிறாய் என்பதை நினைவுபடுத்திப்பார்.
பதம் 4.28.53
அபி ஸ்மரஸி சாத்மானம் அவிஜ்ஞாத-ஸகம் ஸகே
ஹித்வா மாம் பதம் அன்விச்சன் பௌம-போக-ரதோ கத:
அபி ஸ்மரஸி—உனக்கு நினைவில்லையா; ச—மேலும்; ஆத்மானம்—பரமாத்மா; அவிஜ்ஞாத—தெரியாத; ஸகம்—நண்பர்; ஸகே—ஓ, நண்பனே; ஹித்வா—விட்டுவிடுதல்; மாம்—எனது; பதம்—நிலை; அன்விச்சன்—விரும்புதல்; பெளம—பௌதீக; போக—போகம்; ரத:—பற்றுதல்; கத:—நீ ஆனாய்.
அந்த அந்தணர் தொடர்ந்து கூறினார்: அன்பு நண்பனே, உடனே என்னை அடையாளம் கண்டு கொள்ள உன்னால் முடியவில்லையென்றபோதிலும் முன்பு உன்னுடைய உயிர் நண்பனாக நான் இருந்தது உனக்கு நினைவில்லையா? தீவினைவயத்தால் நீ எனது துணையைப் பிரிந்து உலகில் இன்பங்களை அனுபவிக்கும் நிலையினை ஏற்றுக் கொண்டாய்.
பதம் 4.28.54
ஹம்ஸா அஹம் ச த்வம்சார்ய ஸகாயெள மானஸாயனௌ
அபூதாம் அந்தரா வெளக: ஸஹஸ்ர-பரிவத்ஸரான்
ஹம்ஸௌ—இரண்டு அன்னப்பறவைகள்; அஹம்—நான்; ச—மேலும்; த்வம்—நீ; ஆர்ய—ஓ, மகாத்மாவே; ஸகாயௌ—நண்பர்கள்; மான்ஸ்-ஆயனௌ—மானஸ ஏரியில்; அபூதாம்—ஆனோம்; அந்தரா—தனியேபிரிந்து; வா—உண்மையில்; ஓக:—உண்மையான உறைவிடத்திலிருந்து; ஸஹஸ்ர—ஆயிரங்கள்; பரி—தொடர்ந்து; வத்ஸரான்—வருடங்கள்.
அன்பு நண்பனே! நாமிருவரும் உண்மையில் இணைபிரியாத இரண்டு அன்னப்பறவைகளைப் போலிருந்தோம். மானஸ ஏரியைப் போன்ற ஒரே இதயத்தில் குடியிருந்தோம். இவ்வாறு இணைந்து பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தபோதிலும் நாம் இன்னும் நமது உண்மையான உறைவிடத்திலிருந்து நெடுந்தூரம் தள்ளியே இருக்கிறோம்.
பதம் 4.28.55
ஸ த்வம் விஹாய மாம் பந்தோ கதோ கிராம்ய-மதிர் மஹீம்
விசரன் பதம் அத்ராக்ஷீ: கயாசின் நிர்மிதம் ஸ்த்ரியா
ஸ:—அந்த அன்னம்; த்வம்—உன்னை; விஹாய—நீங்குதல்; மாம்—எனது; பந்தோ—ஓ, நண்பனே; கத:—சென்றாய்; க்ராம்ய—பௌதீக; மதி:—அவன் உணர்வு; மஹீம்—பூமிக்கு; விசரன்—பயணம் செய்தல்; பதம்—நிலை; அத்ராக்ஷீ:—நீ பார்த்தாய்; கயாசித்—சிலரால்; நிர்மிதம்—உண்டாக்கப்பட்டது; ஸ்த்ரியா—பெண்ணால்.
அன்பு நண்பனே, இப்போதும் நீ எனது பழைய நண்பனேயாவாய். நீ என்னைப் பிரிந்த பிறகு நீ மேலும் மேலும் உலகியல் பிணிப்புக்கு உட்படுவாய். மேலும் என்னைக் காணாததினால் நீ, யாரோ ஒரு பெண்ணால் படைக்கப்பட்ட இந்த உலகம் முழுவதும் பல்வேறு உடல்களில் பயணம் செய்து கொண்டே இருக்கின்றாய்.
பதம் 4.28.56
பஞ்சாராமம் நவ-த்வாரம் ரக-பாலம் த்ரி-கோஷ்டகம்
ஷட்-குலம் பஞ்ச-விபணம் பஞ்ச ப்ரக்ருதி ஸ்த்ரீ-தவம்
பஞ்ச-ஆராமம்—ஐந்து தோட்டங்கள்; நவ-த்வாரம்—ஒன்பது வாயில்கள்; ஏக—ஒரு; பாவம்—ஒரு காவல்காரர்; த்ரி—மூன்று; கோஷ்டகம்—தொகுதிகள்; ஷட்—ஆறு; குலம்—குடும்பங்கள்; பஞ்ச—ஐந்து; விபணம்—பொருட்கிடங்குகள்; பஞ்ச—ஐந்து; ப்ரக்ருதி—பௌதீகப் பொருட்கள்; ஸ்த்ரீ—பெண்; தவம்—தலைவி.
அந்த நகரத்தில் (பருஉடல்). ஐந்து தோட்டங்கள், ஒன்பது வாயில்கள், ஒரு காவல்காரர், மூன்று அறைத் தொகுதிகள், ஆறு குடும்பங்கள், ஐந்து பொருட்கிடங்குகள், ஐந்து பொருட்கள், போன்றவை இருந்தன. அவ்வீட்டின் தலைவியாக ஒரு பெண் இருந்தாள்.
பதம் 4.28.57
பஞ்சேந்த்ரியார்தா ஆராமா த்வார: ப்ராணா நவ ப்ரபோ
தேஜோ- ‘ப-அன்னானி கோஷ்டானி குலம் இந்த்ரிய-ஸங்க்ரஹ:
பஞ்ச—ஐந்து; இந்த்ரிய-அர்த:—புலனுகர்ச்சிப் பொருட்கள்: ஆராமா:—தோட்டங்கள்; த்வார:—வாயில்கள்; ப்ராணா:—புலன்களிலுள்ள துளைகள்; நவ—ஒன்பது; ப்ரபோ—ஓ, அரசனே; தேஜ:-அப்—நெருப்பு, நீர்; அன்னானி—உணவுதானியங்கள் அல்லது பூமி; கோஷ்டானி—அறைத்தொகுதிகள்; குலம்—குடும்பங்கள்; இந்த்ரிய-ஸங்க்ரஹ:—ஐம்புலன்களும், மனமும்.
அன்பார்ந்த நண்பனே, ஐந்து தோட்டங்கள் என்பவை புலனின்பத்திற்கான ஐந்து பொருட்களாகும் என்பது ஒன்பது வாயில்களின் வழியே செல்லும் உயிர்க்காற்று காவலர் ஆகும். மூன்று அறைத் தொகுதிகள் என்பன நெருப்பு, நீர் மற்றும் நிலம் என்னும் மூலப் பொருட்களாகும். ஆறு குடும்பங்கள் என்பவை மனம் மற்றும் ஐம்புலன்களின் கூட்டுத் தொகையாகும்.
பதம் 4.28.58
விபணஸ் து க்ரியா-ஸக்திர் பூத-ப்ரக்ருதிர் அவ்யயா
ஸக்தி—அதீஷ: புமாம்ஸ் த்வ அத்ர ப்ரவிஷ்டோ நாவபுத்யதே
வைபன்ன:—பொருட்கிடங்குகள்; து—பிறகு; க்ரியா-ஸக்தி:—செயல்படுவதற்கான சக்தி அல்லது செயற்புலன்கள்; பூத—பஞ்ச பூதங்கள்; ப்ரக்ருதி:—பௌதீகப் பொருட்கள்; அவ்யா—நித்தியமானது; ஸக்தி—சக்தி; அதீஷ:—நெறியாளர்; புமான்—மனிதன்; து—பிறகு; அத்ர—இங்கே: ப்ரவிஷ்ட:—புகுதல்; ந—இல்லை; அவபுத்யதே—அறிவுக்கு ஆளாதல்.
ஐந்து பொருட்கிடங்குகள் என்பன ஐந்து செயற்புலன் உறுப்புகளாகும். அவை தங்கள் நடவடிக்கைகளை, என்றும் நித்தியமாக இருக்கும் பஞ்சபூதங்களின் மூலம் நடத்துகின்றன. இச்செயல்கள் அத்தனைக்கும் பின்னால் ஆத்மா இருக்கிறது. ஆத்மாவே மனிதனாகவும், உண்மையில் அனுபவித்து மகிழ்பவனாகவும் இருக்கிறான். உடல் என்னும் நகரத்தில் அவன் இப்பொழுது ஒளிந்திருப்பதினால் அவன் அறிவிழந்தவனாக இருக்கிறான்.
பதம் 4.28.59
தஸ்மிம்ஸ் த்வம் ராமயா ஸ்ப்ருஷ்டோ ரமமாணோ ‘ஸ்ருத-ஸ்ம்ருதி:
தத்-ஸங்காத் ஈத்ருஷீம் ப்ராப்தோ தஸாம் பாபீயஸீம் ப்ரபோ
தஸ்மின்—இச்சூழல்நிலையில்; த்வம்—நீ; ராமயா—பெண்ணுடன்; ஸ்ப்ருஷ்ட:—தொடர்பினால்; ரமயாண:—மகிழ்ந்து; அஸ்ருத-ஸ்ம்ருதி:—ஆன்மீகத் தோற்றத்தின் நினைவின்றி; தத்—அவளுடன்; ஸங்காத்—தொடர்பினால்; ஈத்ருஷம்—இதுபோன்ற; ப்ராப்த:—நீ அடைந்திருக்கின்றாய்; தஸாம்—ஒருநிலை; பாபீயஸீம்—முற்றிலும் பாவச்செயல்கள் நிறைந்த; ப்ரபோ—இனிய நண்பனே.
அன்பு நண்பனே, உலகத்தின் ஆசைகளுடைய பெண்ணுடன் சேர்ந்து நீ இவ்வுடலினுள் நுழைந்தவுடன், புலனின்பத்தில் முற்றிலும் ஆழ்ந்துவிட்டாய். எனவே, நீ உனது ஆன்மீக வாழ்க்கையினை மறந்திருக்கிறாய். உனது உலகியற் கருத்துக்களினால் நீ பல்வேறு துன்ப நிலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றாய்.
பதம் 4.28.60
ந த்வம் விதர்ப-துஹிதா நாயம் வீர: ஸீஹ் ருத்தவ
ந பதிஸ் த்வம் புரஞ்ஜன்யா ருத்தோ நவ-முகே யயா
ந—இல்லை; த்வம்—நீ; விதர்ப-துஹிதா—விதர்பனின் மகள்; ந—இல்லை; அயம்—இந்த; வீர:—வீரன்; ஸு-ஹ்ருத்—நலன் விருமபும் கணவன்; தவ—உன்னுடைய; ந—இல்லை; பதி:—கணவன்; த்வம்—நீ; புரஞ்ஜன்யா:—புரஞ்ஜனீயின்; ருத்த:—சிறைப்படுதல்; நவ-முகே—ஒன்பது வாயில்களையுடைய உடலில்; யயா—பௌதீகசக்தியினால்.
உண்மையில் நீ விதர்பனின் மகளுமல்லள் உனது நலன் விரும்பும் கணவனாகிய இதோ இறந்து கிடக்கும் மலயத்துவஜனின் மனைவியுமல்லள். நீ புரஞ்ஜனீயின் உண்மையான கணவனுமல்லன். நீ ஒன்பது வாயில்களுடைய இவ்வுடலினுள் சிறைப் படுத்தப்பட்டிருக்கின்றாய் அவ்வளவுதான்.
பதம் 4.28.61
மாயா ஹி ஏஷா மயா ஸ்ருஷ்டா யத் புமாம்ஸம் ஸ்த்ரியம் ஸதீம்
மன்யஸே நோபயம் யத் வை ஹம்ஸௌ பஸ்யாவயோர் கதிம்
மாயா—மாயை; ஹி—உறுதியாக; ஏஷா—இந்த; மயா—என்னால்; ஸ்ருஷ்டா—படைக்கப்பட்டது; யத்—எதிலிருந்து; புமாம்ஸம்—ஆண்; ஸ்த்ரியம்—பெண்; ஸதீம்—கற்புடைய; மன்யஸே—நீ கருதுகிறாய்; ந—இல்லை; உபயம்—இருவரும்; யத்—ஏனென்றால்; வை—உறுதியாக; ஹம்ஸௌ—மாசுகளிலிருந்து விடுதலை பெறுதல்; பஸ்ய—பார்ப்பாயாக; ஆவயோ—நமது; கதிம்—உண்மை நிலை.
சில நேரங்களில் நீ உன்னை ஆணாகவும், சில நேரங்களில் கற்புடைய பெண்ணாகவும், சில நேரங்களில் அலியாகவும் நினைக்கின்றாய். இவையனைத்தும் மாயாசக்தியினால் படைக்கப்பட்ட உடலின் விளைவுகளேயாகும். இம்மாயா சக்தியும் என்னுடைய சக்தியேயாகும். உண்மையில் நானும் நீயும் நாமிருவரும் தூய ஆன்மீக அடையாளங்களேயாவோம். இதனை நீ புரிந்து கொள்ள முயற்சிப்பாயாக. நான் நமது உண்மை நிலையை உனக்கெடுத்து விளக்கிக் கொண்டிருக்கின்றேன்.
பதம் 4.28.62
அஹம் பவான் ந சான்யஸ் த்வம் த்வம் ஏவாஹம் விசக்ஷ்வ போ:
ந நௌ பஸ்யந்தி கவயஸ் சித்ரம் ஜாது மனாக் அபி
அஹம்—நான்; பவான்—நீ; ந—இல்லை; ச—மேலும்; அன்ய:—வேறுபாடு; த்வம்—நீ; த்வம்—நீ; ஏவ—உறுதியாக; அஹம்—நானிருப்பதுபோல்; விசக்ஷ்வ—கவனித்தாயானால்; போ:—அன்பு நண்பனே; ந—இல்லை; நௌ—நமது; பஸ்யந்தி—காண்பது; கவய:—படித்த அறிஞர்கள்; சித்ரம்—தவறான வேறுபாடு; ஜாது—எந்த நேரத்திலும்; மனாக்—சிறிதளவு கூட; அபி—கூட.
அன்பு நண்பனே, நானும் நீயும் ஆன்மீகமயமானவர்கள் ஆதலினால் பரமாத்மாவான எனக்கும் தனிப்பட்ட ஆத்மாவான உனக்கும் தன்மையில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. உனது உண்மை நிலையில் அன்பு நண்பனே, நீ தன்மையினால் என்னிடமிருந்து வேறுபடுவதில்லை. இதனைப் புரிந்து கொள்ள முயல்வாயாக. அறிவில் மேன்மையுடைய கற்றிறிந்த அறிஞர்கள் நம்மிருவருக்குமிடையே எந்தவிதமானத் தன்மை வேறுபாடுகளும் காண்பதில்லை.
பதம் 4.28.63
யதாபுருஷ ஆத்மானம் ஏகம் ஆதர்ச சக்ஷுஷோ:
த்விதாபூதம் அவேக்ஷேத ததைவாந்தரம் ஆவயோ:
யதா—போன்று; புருஷ:—உயிர்ப்பொருள்; ஆத்மானம்—அவன் உடல்; ஏகம்—ஒன்று; ஆகர்ஸ்—நிலைக் கண்ணாடியில்; சக்ஷுஷோ—கண்களினால்; த்விதா—ஆயுதம் இரண்டாகத் தோன்றும்; அவேக்ஷேத—காண்கிறான்; ததா—அதுபோல்; ஏவ—உறுதியாக; அந்தரம்—வேறுபாடு; ஆவயோ:—நமக்கிடையே.
நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தைக் காணும் ஒருவன் தான் அதனுள் தன்னை மட்டுமே காண்கிறான் ஆனால் மற்றவர் கண்களுக்கு அவன் இருமையாகத் தென்படுகிறான். ஆகவே பாதிக்கப்பட்டும் பாதிக்கப்படாமலும் இருக்கும் நமது உலகப் பணியில் கடவுளுக்கும் உயிர்க்குமிடையே ஒரு வேறுபாடு இருக்கின்றது.
பதம் 4.28.64
ஏவம் ஸ மானஸோ ஹம்ஸோ ஹம்ஸேன ப்ரதிபோதித:
ஸ்வ-ஸ்தஸ் தத்-வ்யபிசாரேண நஷ்டாம் ஆப புன: ஸ்ம்ருதிம்
ஏவம்—இவ்வாறு; ஸ:—அவன் (தனிப்பட்ட ஆத்மா); மானஸ:—இதயத்தில் இணைந்து வாழ்தல்; ஹம்ஸ:—அன்னப்பறவை போன்று; ஹம்ஸேன—மற்றொரு அன்னத்தினால்; ப்ரதிபோதித—உபதேசிக்கப்பட்டு; ஸ்வ-ஸ்த:—தன்னுணர்வில் நிலைபெறுதல்; தத்—வ்யபிசாரேண—பரமாத்மாவிடம் இருந்து பிரிக்கப்பட்டதினால்; நஷ்டாம்—தொலைக்கப்பட்ட; ஆப—நன்மை அடைய; புன:—மீண்டும்; ஸ்ம்ருதிம்—உண்மை நினைவினை.
இந்த வழியில் இரண்டு அன்னப்பறவைகளும் இதயத்தில் இணைந்து வாழ்கின்றன. ஓர் அன்னம் மற்றொன்றினால் அறிவுரை கொடுக்கப்பெறும் பொழுது, அது தனது உண்மை நிலை எய்துகிறது. அதாவது உலகியல் கவர்ச்சியினால் ஒருவன் தொலைத்துவிட்ட அவனுடைய உண்மையானக் கிருஷ்ண உணர்வினை மீண்டும் பெறுகிறான் என்பதாம்.
பதம் 4.28.65
பர்ஹிஷ்மன்ன் ஏதத் அத்யாத்மம் பாரோக்ஷ்யேண ப்ரதர்ஸிதம்
யத் பரோக்ஷ:-ப்ரியோ தேவோ பகவான் விஸ்வ-பாவன:
பர்ஹிஷ்மன்—ஓ, மன்னன் பிராசீனபர்ஹியே; ஏதத்—இந்த; அத்யாத்மம்—தன்னுணர்வு பெறுவதற்கான கதையினை; பாரோக்ஷ்யேன—மறைமுகமாக; ப்ரதர்ஸிதம்—உபதேசித்தது; யத்—ஏனென்றால்; பரோக்ஷ-ப்ரிய:—மறைமுக விளக்கத்தினால் விரும்புகின்ற; தேவ:—பரமபுருஷபகவான்; பகவான்—முழுமுதற் கடவுள்; விஸ்வ-பாவன:—அனைத்துக் காரணங்களுக்கும் மூலகாரணர்;
அன்புடைய மன்னன் பிராசீனபர்ஹியே காரணங்கள் எல்லாவற்றுக்கும் மூலகாரணராக விளங்கும் முழுமுதற் கடவுள் மறைமுகமாக அறியப்படுவர் என்று போற்றப்படுகிறார். ஆகையினால் நான் உனக்கு புரஞ்ஜனனின் கதையைக் கூறினேன். உண்மையில் இது தன்னுணர்வு பெறுவதற்கான உபதேசமாகும்.
ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “அடுத்தபிறவியில் புரஞ்ஜனன் பெண்ணாகப் பிறத்தல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தெட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.