அத்தியாயம் – 27
புரஞ்ஜனனின் நகரம் சண்டவேகனால் தாக்கப்படுதல்
பதம் 4.27.1 : மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய மன்னனே, மன்னர் புரஞ்ஜனனின் மனைவி பல்வேறு வழிகளில் அவரை மயக்கி அவரைத்தன் கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்தாள். அம்மன்னரோடு பாலுறவு வாழ்க்கையினை அனுபவித்து மகிழ்ந்து அவருக்கு வேண்டிய மட்டும் திருப்தியளித்தாள்.
பதம் 4.27.2 : அரசி நன்கு நீராடி, ஆடை, ஆபரணங்களினால் தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டாள். சுவைமிக்க உணவுகளை உண்டு முழுத் திருப்தியடைந்தவுடன் அவள் மன்னரிடம் வந்தாள். நன்கு அலங்கரிக்கப்பட்ட அவள் எழில்முகத்தைக் கண்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவளை வரவேற்றார்.
பதம் 4.27.3 : அரசி புரஞ்ஜனி மன்னரை மார்புறத்தழுவிக் கொண்டாள். அரசரும், அவள் தோள்களைப் பற்றி அணைத்துக் கொண்டார். இவ்வாறு அவர்கள் ஒரு தனிமையான இடத்தில் சிரித்துப் பேசி மகிழ்ந்திருந்தனர். இவ்வழியில் மன்னர் புரஞ்ஜனன் அவரது அழகிய மனைவியால் மயக்கப்பட்டு தமது நல்லுணர்வினை இழந்தார். இரவும் பகலும் ஓடி மறைவதை தன் வாழ்நாள் எந்தவிதமான பயனுமின்றிக் குறைந்து கொண்டே வருகிறது என்று பொருளாகும் என்பதை அவர் மறந்து போனார்.
பதம் 4.27.4 : இவ்வாறு மாயையினால் அதிகமான அளவு ஆட்கொள்ளப்பட்டு, உணர்வு முன்னேற்றம் உடையவராக இருந்தபோதிலும் புரஞ்ஜன மன்னர் எப்போதும் தலையணையின் மீது இருக்கும் தன் மனைவியின் கரங்களின் மீதே முகம் புதைத்துப் படுத்திருந்தார். பெண்ணே தனது இறுதி இலட்சியமும், ஆத்மாவும் ஆகும் என்று கருதி அறியாமை என்னும் தமோ குணத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தார். தன்னுணர்வு பெறுவது பற்றியோ, தனது ஆன்மாவைப் பற்றியோ அல்லது முழுமுதற் கடவுள் பற்றியோ என்னவென்று அறிந்து கொள்ள முடியாதவராக இருந்தார்.
பதம் 4.27.5 : அன்பிற்குரிய மன்னன் பிராசீனபர்ஹிஷத்தே, இவ்வாறு தனது உள்ளம் முழுதும் காமமும், பாவமும் நிரம்பப்பெற்றிருந்த மன்னன் புரஞ்சனன் தனது மனைவியுடன் பாலுறவு கொள்வதில் சுகித்திருக்கத் தொடங்கினார். அதனால் அவரது புதிய வாழ்க்கையும், இளமையும் அரைக் கணத்தில் தீர்ந்து போயின.
பதம் 4.27.6 : மாமுனிவர் நாரதர் பின்னர் மன்னர் பிராசீனபர்ஹிஷத்திடம் கூறினார். ஓ ஒருவனது ஆயுட்காலமானது நெடியதாகும் (விராட்), அதனால் மன்னர் புரஞ்சனன் தம் மனைவி புரஞ்சனீயிடம் 1,100 புத்திரர்களை ஈன்றெடுத்தார். இதிலேயே அவர் தமது ஆயுளில் பாதிக் காலத்தைக் கழித்தார்.
பதம் 4.27.7 : ஒ பிரஜாபதியான மன்னன் பிராசீனபர்ஹிஷத்தே, இவ்வாறு மன்னர் புரஞ்ஜனன் 110 புதல்விகளைப் பெற்றெடுத்தார். அப்புதல்விகள் அனைவரும் தமது தாய் தந்தையரைப் போன்றே புகழுடையவர்களாக விளங்கினர். அவர்கள் நேர்மையுடையவர்களாகவும், பெருந்தன்மை மிக்கவர்களாக நற்குணமுடையவர்களாகவும் திகழ்ந்தனர்.
பதம் 4.27.8 : இதன்பிறகு பஞ்சால நாட்டின் அரசரான மன்னர் புரஞ்ஜனன் தமது குடும்ப வம்சத்தைப் பெருக்குவதற்காகத் தமது புதல்வர்களுக்குத் தகுதி வாய்ந்த பெண்களையும், தமது புதல்விகளுக்குத் தகுதிவாய்ந்த ஆண்களையும் மணமுடித்து வைத்தார்.
பதம் 4.27.9 : இப்புதல்வர்களுள் பலர் நூற்றுக்கணக்கான புதல்வர்களை ஈன்றெடுத்தனர். இதனால் பஞ்சால நாடு மன்னர் புரஞ்ஜனனின் பிள்ளைகளினாலும் பேரப்பிள்ளைகளினாலும் நிரம்பி வழிந்தது.
பதம் 4.27.10 : இக்குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் மன்னர் புரஞ்ஜனனின் செல்வங்களான அரண்மனை, கஜானா, வேலைக்காரர்கள், செயலர்கள் போன்றவற்றைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்களாக விளங்கினார். இப்பொருள்களிடத்துப் புரஞ்ஜனனின் பற்று மிகவும் ஆழமாக வேரூன்றியிருந்தது.
பதம் 4.27.11 : மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய மன்னன் பிராசினபர்ஹிசத்துவே, உன்னைப்போல் மன்னர் புரஞ்ஜனனும் ஏராளமான ஆசைகள் உடையவராக இருந்தார். இதனால் அவர் தேவர்களையும், பித்ருக்களையும் (முன்னோர்களையும்), சமுதாயத் தலைவர்களையும் பல்வேறு வேள்விகளினால் வழிபட்டார். அவ்வேள்விகள் அனைத்தும் கோரமானவையாக இருந்தன. ஏனென்றால் அவை விலங்குகளைக் கொல்லும் ஆசையைத் தூண்டுவனவாக இருந்தன.
பதம் 4.27.12 : பலன்தரும் செயல்களிடத்தும் (கர்ம காண்டீயம்) சந்ததியினரிடத்தும் மிகுந்த பற்றுடையவராகவும் மாசுற்ற உணர்வு உடையவராகவும் விளங்கிய மன்னர் புரஞ்ஜனன் இறுதியில் உலக விஷயங்களில் அளவுகடந்த பற்றுடையவர்களும் கூட விரும்பாத ஓர் நிலையினை அடைந்தார்.
பதம் 4.27.13 : ஓ, மன்னனே! கந்தர்வ லோகத்தை சண்டவேகன் என்னும் மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். அவனுக்குத் துணையாக 360 கந்தர்வ வீரர்கள் இருந்தனர்.
பதம் 4.27.14 : சண்டவேகனுடன் கந்தர்வ வீரர்களைப் போல் ஏராளமான பெண் கந்தர்வீக்களும் இருந்தனர். இவர்கள் அனைவரும் புலனின்பத்திற்காகப் பொருட்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் கொள்ளையடித்தனர்.
பதம் 4.27.15 : சுந்தவர்வ ராஜாவும் (சண்டவேகன்) அவரது வீரர்களும் புரஞ்ஜனனின் நகரத்தைக் கொள்ளையடிக்க வரும் பொழுது அந்நகரத்தை ஓர் ஐந்து தலை நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது.
பதம் 4.27.16 : மன்னர் புரஞ்ஜனனின் நகரத்தைக் கண்காணித்து வந்த ஐந்து தலை நாகம் கந்தர்வர்களுடன் கடுமையாக நூறு வருடங்கள் போரிட்டது. எண்ணிக்கையில் அவர்கள் 720 பேர்கள் இருந்தபோதிலும் அது தனியாகவே அவர்களுடன் போரிட்டது.
பதம் 4.27.17 : அவர்கள் அனைவரும் மிகச் சிறந்த வீரர்கள் ஆனதினாலும் தான் தனியே போரிட்டதினாலும் ஐந்து தலை நாகம் வலிமை குன்றியது. தனக்கு மிகவும் நெருக்கமான நண்பனான நாகம் வலிமையிழந்ததைக் கண்டு மன்னர் புரஞ்ஜனனும் நகரிலுள்ள குடிமக்களும் பெரிதும் மனக்கலக்கமுற்றனர்.
பதம் 4.27.18 : மன்னர் புரஞ்ஜனன் பஞ்சால நகரில் மக்களிடமிருந்து வரி வசூல் செய்தார். பாலுறவு இன்பத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். முற்றிலும் பெண்களின் கட்டுப்பாட்டின் கீழ் அவர் இருந்ததினால் தனது வாழ்நாட்கள் கழிவதையும் தாம் மரணத்தின் எல்லைக்கு வந்துவிட்டதையும் அவரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
பதம் 4.27.19 : அன்பார்ந்த மன்னன் பிராசீன பர்ஹிஷத்தே! தடுக்கவொண்ணாத காலத்தின் புதல்வி தனக்குத் தகுந்த கணவனைத் தேடி மூன்று உலகங்களிலும் பயணம் செய்து கொண்டிருந்தாள். அப்படி அவள் வந்தபோதும் அவளை ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
பதம் 4.27.20 : காலத்தின் புதல்வி (ஜரா) மிகவும் துரதிர்ஷ்டம் வாய்ந்தவள் ஆனாள். இதனைத் தொடர்ந்து அவள் துர்பகா (துர்பாக்கியசாலி) என்று கூறப்பட்டாள். ஒருவாறாக இவள் ஒரு முறை ஒரு சிறந்த மன்னரால் மகிழ்ச்சியடைந்தாள், மேலும் அம்மன்னர் அவளை ஏற்றுக் கொண்ட காரணத்தினால் அவள் அவருக்கு ஒரு சிறந்த வரம் அருளினாள்.
பதம் 4.27.21 : முன்பு ஒரு நாள் நான் மேலுலகமான பிரம்ம லோகத்திலிருந்து பூமிக்கு வந்தேன். பிரபஞ்சம் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்த காலத்தின் புதல்வி என்னை சந்தித்தாள். நான் பிரம்மச்சரியன் என்பதை அறிந்து கொண்ட அவள், என் மீது மோகமுற்று, நான் அவளை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினாள்.
பதம் 4.27.22 : மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: அவளது வேண்டுகோளை நான் மறுதலித்ததினால் அவள் என் மீது ஆத்திரங்கொண்டாள். என்னை மிகவும் கடுமையாகச் சபித்தாள். நான் நீண்ட நாட்கள் ஓரிடத்திலும் தங்க முடியாது என்றும் கூறினாள்.
பதம் 4.27.23 : என்னிடம் ஏமாற்றமடைந்த காலமகள் எனது அனுமதியோடு பயம் என்னும் பெயருடைய, யவனர்களின் மன்னனை அடைந்து அவனைத் தன் கணவனாக ஏற்றுக் கொண்டாள்.
பதம் 4.27.24 : யவனர்களின் மன்னனை அணுகிய காலகன்யா அவனிடம் கூறினாள் மிகச் சிறந்த வீரரே, எனது போற்றுதலுக்குரியவரே, தீண்டத்தகாதவர்களிடையே நீரே மிகச் சிறந்தவர். உம்மை நான் காதலிக்கிறேன். கணவனாக அடையவும் விரும்புகிறேன். உம்மை நண்பனாக அடையும். ஒருவன் குழப்பமடைவதில்லை என்பதை நான் நன்கறிவேன்.
பதம் 4.27.25 : மரபுகளின் அல்லது சாத்திர நெறிகளின்படி தானம் வழங்காதவனும், தானம் பெறாதவனும் அறியாமை என்னும் தமோ குண முடையவர்களாகவே கருதப்படுகின்றனர். இவர்கள் மூடர்களின் காலடியைப் பின்பற்றுகின்றனர். நிச்சயம் இவர்கள் இறுதியில் துக்கத்தைத் தவிர வேறெதுவும் அடைவதில்லை.
பதம் 4.27.26 : காலகன்யா தொடர்ந்து கூறினாள்: ஒ, மேன்மைமிக்கவரே, உமக்கு சேவை செய்ய வேண்டுமென்பதற்காகவே உமது முன் இப்போது நான் நின்று கொண்டிருக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்வதின் மூலம் எனக்குக் கருணை காட்டுவீராக, நேர்மைமிக்க ஒருவருக்கு சிறந்த கடமை துன்பத்தில் வருந்துவோர்க்கு இரக்கப்படுதலேயாகும்.
பதம் 4.27.27 : காலத்தின் புதல்வியான காலகன்யாவின் உரையைக் கேட்ட யவன ராஜா புன்னகை பூத்தார். தெய்வ விதியின் பேரில் தான் செய்ய வேண்டிய தனது இரகசியப் பணியினை நிறைவேற்றுவதற்காக, அவர் காலகன்யாவிடம் பின்வருமாறு கூறினார்.
பதம் 4.27.28 : யவன ராஜா பதில் கூறினார்: ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு நான் உனக்கு ஒரு கணவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். உண்மையில் ஒவ்வொருவனும் உன்னை அமங்கலமானவள், தொல்லை தருபவள் என்றே கருதுகிறான். இவ்வாறு ஒருவருமே உன்னை விரும்பாத போது எவன் உன்னைத் தன் மனைவியாக ஏற்றுக் கொள்வான்?
பதம் 4.27.29 : இவ்வுலகம் பலன் தரும் செயல்களின் விளைவாகும். ஆகையினால் நீ கண்ணுக்குப் புலப்படாமல் பொது மக்களைத் தாக்கலாம். எனது வீரர்களின் உதவியினால் எந்தவிதமான எதிர்ப்புமின்றி நீ அவர்களைக் கொல்லலாம்.
பதம் 4.27.30 : யவன ராஜா தொடர்ந்து கூறினார்: இதோ இவன் என் சகோதரன் பிரஜ்வாரன்; உன்னை எனது சகோதரியாக நான் இப்போது ஏற்றுக் கொள்கிறேன். இவ்வுலகில் கண்ணுக்குப் புலனாகாமல் செயல்படுவதற்காக உங்கள் இருவரையும் அதுபோல் எனது அபாயகரமான வீரர்களையும் நான் பணியில் அமர்த்துகின்றேன்.