அத்தியாயம் – 25
மன்னர் புரஞ்ஜனனின் குணநலன்கள்
பதம் 4.25.1
மைத்ரேய உவாச
இதி ஸந்திஸ்ய பகவான் பார்ஹிஷதைர் அபிபூஜித:
பஸ்யதாம் ராஜ-புத்ராணாம் தத்ரைவாந்தர்ததே ஹர:
மைத்ரேய: உவாச—மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறுகிறார்; இதி—இவ்வாறு; ஸந்திஸ்ய—உபதேசித்தல்; பார்ஹிஷதை:—பர்ஹிஷத் மன்னரின் மைந்தர்கள்; அதிபூஜித:—வணங்கப்பட்டு; பஸ்யதாம்—அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே; ராஜ-புத்ராணாம்—மன்னரின் மைந்தர்கள்; தத்ர—அங்கே; ஏவ—உறுதியாக; அந்தர்ததே—பார்வையிலிருந்து மறைந்தார்; ஹர:—சிவபெருமான்.
மாமுனிவர் மைத்ரேயர் விதுரரிடம் தொடர்ந்து கூறலானார்: அன்பிற்குரிய விதுரனே, இவ்வாறு மன்னர் பர்ஹிஷத்தின் மைந்தர்கள் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டனர். மன்னரின் மைந்தர்களும் சிவபெருமானை மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்டு வணங்கினர். இறுதியில் சிவபெருமான் இளவரசர்களின் பார்வையிலிருந்து மறைந்தார்.
பதம் 4.25.2
ருத்ர-கீதம் பகவத: ஸ்தோத்ரம் ஸர்வே ப்ரசேதஸ:
ஜபந்தஸ் தே தபஸ் தேபுர் வர்ஷாணாம் அயுதம் ஜலே
ருத்ர-கீதம்—சிவபெருமான் பாடிய கீதம்; பகவத:—பகவானின்; ஸ்தோத்ரம்—வழிபாடு; ஸர்வே—எல்லாம்; ப்ரசேதஸ:—பிரசேதர்கள் என்றறியப்படும் இளவரசர்கள்; ஜபந்த:—ஜெபித்தனர்; தே—அனைவரும்; தப:—தவம்; தேபு:—செய்யப்பட்டது; வர்ஷாணாம்—வருடங்கள்; அயுதம்—பத்தாயிரம்; ஜலே—நீரினுள் நின்று.
பிரசேதா இளவரசர்கள் அனைவரும் பத்தாயிரம் ஆண்டுகள் நீரினுள் நின்றபடி சிவபெருமானால் அருளப்பட்ட வழிபாட்டினைப் பயின்றனர்.
பதம் 4.25.3
ப்ராசீனபர்ஹிஷம் க்ஷத்த: கர்மஸ்வ ஆஸக்த-மானஸம்
நாரதோ ‘த்யாத்ம-தத்த்வ-ஜ்ஞ: க்ருபாலு: ப்ரத்யபோதயத்
ப்ராசீனபர்ஹிஷம்—மன்னர் பிராசின பர்ஹிஷத்திற்கு; க்ஷத்த:—ஓ, விதுரனே; கர்மஸு—பலன் தரும் செயல்களில்; ஆஸக்த—பற்றுக் கொள்ளுதல்; மானஸம்—இம்மனநிலையுடன்; நாரத:—நாரத மாமுனிவர்; அத்யாத்ம—ஆன்மிகத் தன்மையினை: தத்த்வ-ஜ்ஞ:—உண்மையை அறிந்தவர்; க்ருபாலு:—கருணை கொண்டு; ப்ரத்யபோதயத்—உபதேசமளித்தார்.
இவ்வாறு இளவரசர்கள் தண்ணீரில் கடுமையான தவங்களைச் செய்து கொண்டிருந்த பொழுது அவர்களது தந்தையோ வெளியில் பல்வேறு விதமான நற்செயல்களைச் செய்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அனைத்து ஆன்மீக வாழ்விற்கும் ஆசானாகவும், குருவாகவும் திகழும் மாமுனிவர் நாரதர் மன்னர் மீது மிகுந்த கருணை கொண்டு ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி அவருக்கு உபதேசிக்க வேண்டுமென்று தீர்மானித்தார்.
பதம் 4.25.4
ஸ்ரேயஸ் த்வம் கதமத் ராஜன் கர்மணாத்மன ஈஹஸே
து: க-ஹானி: ஸூகாவாப்தி: ஸ்ரேயஸ் தன் நேஹ சேஷ்யதே
ஸ்ரேய:—இறுதி ஆசி; த்வம்—உனது; கதமத்—என்ன அது; ராஜன்—ஓ, மன்னனே; கர்மணா—பலன் தரும் செயல்களினால்; ஆத்மன:—ஆத்மாவின்; தஸே—நீ விரும்புவது; து: க—ஹானி:—அனைத்துத் துன்பங்களின் மறைவு; ஸூக—அவாப்தி:—அனைத்து இன்பங்களும் பெறுவது; ஷ்ரேய:—போற்றுதற்குரியது; தத்—அந்த; ந—இல்லை; இஹ—இது தொடர்பாக; ச—மேலும்; இஷ்யதே—கிடைக்கிறது.
நாரத முனிவர் பிராசீனபர்ஹிஷத் மன்னரிடம் கேட்டார்: அன்பார்ந்த மன்னனே, நற்செயல்களைச் செய்வதின் மூலம் நீ அடைய விரும்புவது என்ன? வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோளே துன்பங்கள் அனைத்தையும் நீக்கி இன்பம் அனுபவிப்பதுவேயாகும். ஆனால் இவ்விரண்டும் பலன் தரும் செயல்களினால் கிடைக்கக்கூடியவை அல்ல.
பதம் 4.25.5
ராஜோவாச
ந ஜானாமி மஹா-பாக பரம் கர்மாபவித்த-தீ:
ப்ரூஹி மே விமலம் ஜ்ஞானம் யேன முச்யேய கர்மபி:
ராஜா உவாச—அரசர் கூறினார்; ந—இல்லை; ஜானாமி—நான் அறிவது; மஹா-பாக—ஓ, மகாத்மாவே; பரம்—உன்னதமான; கர்ம—பலன்தரும் செயல்களினால்; அபவித்த—துளைக்கப்பட்டு; தீ:—எனது அறிவு; ப்ரூஹி—அருள் கூர்ந்து கூறவும்; மே—எனக்கு; விமலம்—குற்றமற்ற; ஜ்ஞானம்—ஞானம்; யேன—எதனால்; முக்யேய—நான் விடுதலை பெற; கர்மபி:—பலன் தரும் செயல்களிலிருந்து.
அரசர் பதில் கூறினார்: ஓ, பெருமைக்குரிய நாரதரே, எனது ஞானமானது பயன்தரும் உலகியல் செயல்களில் சிக்குண்டிருக்கிறது; ஆகையினால் வாழ்க்கையின் இறுதி லட்சியம் என்னவென்று எனக்குத் தெரியாது. அன்பு கொண்டு தூய ஞானத்தை எனக்கு அருளுவீராக! அதனால் உலகியற் சிக்கலிலிருந்து நான் விடுபட இயலும்.
பதம் 4.25.6
க்ருஹேஷூ-கூட-தர்மேஷூ புத்ர-தார-தனார்த்த தீ:
ந பரம் விந்ததே மூடோ ப்ராம்யன் ஸம்ஸார-வர்த்மஸூ
க்ருஹேஷூ—இல்லற வாழ்வில்; கூட-தர்மேஷூ—தவறான தொழிற்கடமைகளில்; புத்ர—புத்திரர்கள்; தார—தாரம்; தன—தனம்; அர்த—வாழ்வின் குறிக்கோள்; தீ:—ஒருவன் கருதுகிறான்; ந—இல்லை; பரம்—உன்னதம்; விந்ததே—எய்துகிறான்; மூட:—மூடன்; ப்ராம்யன்—அலைதல்; ஸம்ஸார—பௌதீக வாழ்க்கை; வர்த்மஸூ—பாதையில்.
எழில்மிக்க வாழ்க்கை என்றழைக்கப்படும் மனைவி மற்றும் குழந்தைகளிடம் சிக்கிக்கொண்டு, செல்வத்தைத் தேடி ஓடுகின்ற இல்லற வாழ்க்கையில் பற்று வைத்திருப்பவர்கள் இதுவே வாழ்வின் இறுதி இலட்சியம் என்று கருதுகின்றனர். இவர்களைப் போன்றவர்கள் வாழ்க்கை முழுவதும் வாழ்க்கையின் இறுதி இலட்சியம் என்னவென்று அறியாமலேயே பல்வேறு விதமான உடல்களில் திரிந்து கொண்டிருப்பர்.
பதம் 4.25.7
நாரத உவாச
போ போ: ப்ரஜாபதே ராஜன் பஸூன் பஸ்ய த்வயாத்வரே
ஸம்ஞாபிதான் ஜீவ-ஸங்கான் நிர்க்ருணேன ஸஹஸ்ரஸ:
நாரத: உவாச—நாரத மாமுனிவர் கூறினார்; போ: போ:—ஓ, ஓ, (விளி); ப்ரஜா-பதே—பிரஜாபதியே; ராஜன்—ஓ, மன்னனே; பஸூன்—விலங்குகள்; பஸ்ய—அருள் கூர்ந்துபார்; த்வயா—உன்னால்; அத்வரே—வேள்வியில்; ஸம்ஜ்ஞா-பிதான்—கொல்லப்பட்ட; ஜீவ-ஸங்கான்—விலங்குகளின் கூட்டம்; நிர்க்ருணேன—இரக்கமின்றி; ஸஹஸ்ரஸ:—ஆயிரக்கணக்கில்.
மாமுனிவர் நாரதர் கூறினார்: ஒ, பிரஜாபதியே, அன்பிற்குரிய மன்னனே, கருணையும், இரக்கமும் சிறிதுமின்றி உன்னால் வேள்வியில் பலியிடப்பட்ட ஆயிரக்கணக்கான விலங்குகளை வானத்தில் அருள் கூர்ந்து காண்பாயாக!
பதம் 4.25.8
ஏதே த்வாம் ஸம்ப்ரதீக்ஷந்தே ஸ்மரந்தோ வைஸஸம் தவ
ஸம்பரேதம் அய:-கூடைஸ் சிந்தந்தி உத்தித-மன்யவ:
ஏதே—அவையனைத்தும்; த்வாம்—நீ; ஸம்ப்ரதீக்ஷந்தே—காத்துக் கொண்டிருக்கின்றன; ஸ்மரந்த:—நினைவிற்கொண்டு; வைஸஸம்—காயங்கள்; தவ—உனது; ஸம்பரேதம்—நீ மரித்த பிறகு; அய:—இரும்பினால் செய்யப்பட்ட; கூடை:—கொம்புகளினால்; சிந்தந்தி—குத்திக் கிழித்தல்; உத்தித—புத்துணர்ச்சி; மன்யல:—சினம்.
இந்த விலங்குகள் அனைத்தும் உனது மரணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றன. அப்போதுதான் அவைகள் நீ அவற்றிற்கு இழைந்த காயங்களுக்காக உன்னைப் பழிவாங்க முடியும். நீ மரித்த பிறகு அவை மிகுந்த ஆத்திரங்கொண்டு தமது இரும்புக் கொம்புகளினால் உனது உடலைக் கிழித்தெறியும்.
பதம் 4.25.9
அத்ர தே கதயிஷ்யே ‘மும்இதிஹாஸம் புராதனம்
புரஞ்ஜனஸ்ய சரிதம் நிபோத கததோ மம
அத்ர—இங்கே; தே—உனக்கு; கதயிஷ்யே—நான் கூறப்போகிறேன்; அமும்—இது விஷயம் தொடர்பாக; இதிஹாஸம்—சரித்திரம்; புராதனம்—மிகப் பழமையான; புரஞ்ஜனஸ்ய—புரஞ்ஜனன் தொடர்பான; சரிதம்—அவரது சரிதம்; நிபோத—புரிந்து கொள்ள முயற்சிப்பாயாக; கதத: மம—நான் கூறிக்கொண்டிருப்பதை.
இது தொடர்பாகப் புரஞ்ஜனன் என்றழைக்கப்பட்ட ஒரு மன்னரின் பழைய வரலாற்றினை உனக்கு நான் உரைக்க விரும்புகிறேன். அருள்கூர்ந்து மிகுந்த கவனத்துடன் இதனைக் கேட்பாயாக.
பதம் 4.25.10
ஆஸீத் புரஞ்ஜனோ நாம ராஜா ராஜன் ப்ருஹச்-ச்ரவா:
தஸ்யாவிஜ்ஞாத-நாமாஸீத் ஸகாவிஜ்ஞாத-சேஸ்டித:
ஆஸீத்—அங்கு இருந்தார்; புரஞ்ஜன:—புரஞ்ஜனன்; நாம—பெயரில்; ராஜா—அரசர்; ராஜன்—ஓ, மன்னனே; ப்ருஹத்ஸ்ரவா:—அவர் செயல்கள் உயர்ந்தவையாக இருந்தன; தஸ்ய—அவனது; அவிஜ்ஞாத—அறியாதான்; நாம—பெயரில்; ஆஸீத்—இருந்தான்; ஸகா—நண்பன்; அவிஜ்ஞாத—அறியாதான்; சேஷ்டித—அவன் செயல்கள்.
அன்பார்ந்த மன்னனே! முன்னொரு காலத்தில் புரஞ்ஜனன் என்றொரு மன்னர் இருந்தார். அவரது செயல்களுக்காக அவர் மிகவும் போற்றப்பட்டார். அவருக்கு அவிஜ்ஞாதன் (அறியாதான்) என்றொரு நண்பன் இருந்தான். அவனது செயல்களை யாராலும் புரிந்துகொள்ள முடியாது.
பதம் 4.25.11
ஸோ ‘ன்வேஷமாண: ஸரணம் பப்ராம ப்ருதிவீம் ப்ரபு:
நானுரூபம் யதாவிந்தத் அபூத் ஸ விமனா இவ
ஸ:—புரஞ்ஜன மன்னர்; அன்வேஸமாண:—தேடி வைத்தார்; ஸரணம்—அடைக்கலம்; பப்ராம—பயணம் செய்து; ப்ருத்வீம்—பூமி முழுவதும்; ப்ரபு:—தனிப்பட்டத் தலைவனாவதற்காக; ந—இல்லை; அனுரூபம்—அவர் விருப்பத்திற்கேற்ற; யதா—எப்பொழுது; அவிந்தத்—காணக்கூடிய; அபூத்—ஆனார்; ஸ:—அவர்; விமனா:—வாட்டமுற்றார்; இவ—போல.
புரஞ்ஜன மன்னர் தான் வசிப்பதற்குத் தகுந்த இடத்தைத் தேடி இவ்வுலகமெங்கணும் அலைந்தார். இவ்வாறு அவர் பயங்கரமாகப் பயணம் செய்தும் அவர் விருப்பத்திற்குகந்த இடத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் அவர் துக்கமும் ஏமாற்றமும் அடைந்தார்.
பதம் 4.25.12
ந ஸாது மேனே தா: ஸர்வா பூதலே யாவதீ: புர:
காமான் காமயமானோ ‘ஸௌ தஸ்ய தஸ்யோபபத்தயே
ந—இல்லை; ஸாது—நல்ல; மேனே—சிந்தனை; தா:—அவைகள்; ஸர்வா:—எல்லாம்; பூ-தலே—பூமியில்; யாவரீ:—அனைத்து வகையான; புர:—குடியிருக்கும் இல்லங்கள்; காமான்—புலனுகர்ச்சியான பொருள்கள்; காமயமான:—விரும்புகின்ற; அஸௌ—அந்த அரசர்; தஸ்ய—அவரது; உபபத்தயே—பெறுவதற்காக.
புரஞ்ஜன மன்னரிடம் புலனின்பத்திற்கான இச்சைகள் அளவின்றி இருந்தன. இதனைத் தொடர்ந்து அவரது இச்சைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய சரியான இடத்தைத் தேடி அவர் இவ்வுலகம் முழுவதும் பயணம் செய்தார். தீவினை வயத்தால், அவர் பார்த்த இடம் அத்தனையும் அவருக்கு குறைவுடையதாகவேத் தோன்றியது.
பதம் 4.25.13
ஸ ஏகதா ஹிமவதோ தக்ஷிணேஸ்வத ஸானுஷு
ததர்ஸ நவபிர் த்வார்பி: புரம் லக்ஷித-லக்ஷணாம்
ஸ:—புரஞ்ஜன மன்னர்; ஏகதா—முன்னொரு காலத்தில்; ஹிமவத:—இமயமலையின்; தக்ஷிணேஷு—தென்திசை; அத—இதன் பின்னர்; ஸானுஷு—முகடுகளின் மேல்; கதர்ஷ—கண்டார்; நவபி:—ஒன்பது; த்வார்பி:—வாயில்கள்; புரம்—ஒரு நகரம்; லக்ஷித—தென்பட்டது; லக்ஷணாம்—அனைத்து மங்கலங்களும் நிறைந்தது.
இவ்வாறு புரஞ்ஜன மன்னர் அலைந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் இமயமலையின் தென்பகுதியில் “பாரத வர்ஷம்” (இந்தியா) என்னும் பெயருடைய ஒரு இடத்தைக் கண்டார். இந்நகரமானது ஒன்பது வாயில்களையுடையதாகவும், அனைத்து மங்கலங்களும் நிரம்பியதாகவும் இருந்தது.
பதம் 4.25.14
ப்ராகாரோபவனாட்டால-பரிகைர் அக்ஷ-தோரணை:
ஸ்வர்ண-ரௌப்யாயஸை: ஸ்ருங்கை: ஸங்குலாம் ஸர்வதோக்ருஹை:
ப்ராகார—மதில்கள்; உபவன—பூங்காக்கள்; அட்டால—கோபுரங்கள்; பரிகை—அகழிகளுடன்; அக்ஷ—சாளரங்கள்; தோரணை:—வாயில்களுடன்; ஸ்வர்ண—தங்கம்; ரௌப்ய—வெள்ளி; அயஸை:—இரும்பினால் செய்யப்பட்ட; ஸ்ருங்கை:—மாடங்களுடன்; ஸங்குலாம்—நெருக்கமாக; ஸர்வத:—எங்கெங்கும்; க்ருஹை:—வீடுகளுடன்.
அந்த நகரமானது மதில்களாலும், பூங்காக்களினாலும் சூழப்பட்டு, அதனுள் கோபுரங்கள், கால்வாய்கள், சாளரங்கள் மற்றும் வடிகால்கள் உடையனவாக இருந்தது. வீடுகளின் மாடங்கள் தங்கம், வெள்ளி மற்றும் இரும்பினால் செய்யப்பட்டு எழில்மிக்கவையாக விளங்கின.
பதம் 4.25.15
நீல-ஸ்படிக-வைடூர்ய முக்தா-மரகதாருணை:
க்லுப்த-ஹர்ம்ய-ஸ்தகீம் தீப்தாம் ஸ்ரியா போகவதீம் இவ
நீலம்—நீலம்; ஸ்படிக—ஸ்படிகம்; வைடூர்ய—வைடூர்யம்; முக்தா—முத்து; மரகத—மரகதம்; அருணை:—இரத்தினங்களுடன்; க்லுப்த—அலங்கரிக்கப்பட்டு; ஹர்ம்ய-ஸ்தலீம்—மாளிகை சுவர்கள்; தீப்தாம்—ஒளியானது; ஸ்ரியா—எழிலுடன்; போகவதீம்—போகவதி என்னும் தேவலோகத்திலுள்ள நகரத்தைப் போல்; இவ—போன்று.
அந்நகரத்திலுள்ள வீடுகளின் தரைகள் நீலம், வைடூர்யம், முத்து, மரகதம், இரத்தினம் மற்றும் பளிங்கினால் கட்டப்பட்டிருந்தன. தலைநகரின் வீடுகள் ஒளிமிக்கவையாக விளங்கினமையால் அந்த நகரமானது வான மண்டலத்திலுள்ள போகவதி என்னும் தேவ நகரத்தோடு ஒப்பிடப்பட்டிருக்கிறது.
பதம் 4.25.16
ஸபா-சத்வர-ரத்யாபிர் ஆக்ரீடாயதனாபணை:
சைத்ய-த்வஜ-பதாகாபிர் யுக்தாம் வித்ரும-வேதிபி
ஸபா—அரங்கங்கள்; சதவர—நான்கு முனை சந்திப்புகள்; ரத்யாபி:—தெருக்களினால்; ஆக்ரீட-ஆயதன—சூதாட்ட விடுதிகள்; ஆபணை:—கடைகள்; சைத்ய—ஓய்வு விடுதிகள்; த்வஜ-பதாகாபி:—கொடிகள் மற்றும் பதாகைகள்; யுக்தாம்—அலங்கரிக்கப்பட்டு; வித்ரும—மரங்கள் இன்றி; வேதிபி:—மேடைகளுடன்.
அந்த நகரத்தில் பல்வேறு சொற்பொழிவு அரங்கங்கள், நான் முனை சந்திப்புகள், உணவு விடுதிகள், சூதாட்ட விடுதிகள், சந்தைகள், ஓய்வு இல்லங்கள், கொடிகள், தோரணங்கள் மற்றும் எழில் வண்ணப் பூங்காக்கள் போன்றவை இருந்தன. இவை நகரமெங்கும் சூழ்ந்திருந்தன.
பதம் 4.25.17
புர்யாஸ் து பாஹ்யோபவனே திவ்ய-த்ரும-லதாகுலே
நதத்-விஹங்காலி-குல-கோலாஹல-ஜலாஸயே
புர்யா:—அந்நகரின்; து—பின்னர்; பாஹ்ய-உபவனே—வெளிப்புறத்திலுள்ள நந்தவனத்தில்; திவ்ய—அருமையான; த்ரும—மரங்கள்; லதா—கொடிகள்; ஆகுலே—நிரப்பப்பட்டு; நதத்—ஒலித்தன; விஹங்க—பறவைகள்; அலி—வண்டுகள்; குல—கூட்டங்கள்; கோலாஹல—ரீங்காரமிட்டபடி; ஜல-ஆஸயே—குளம்.
அந்நகரின் வெளிப்பகுதியில் ஓர் அருமையான குளம் இருந்தது. அதைச்சுற்றிலும் எழில்மிக்க மரங்களும், செடி கொடிகளும் நின்றிருந்தன. அக்குளத்தைச் சுற்றி எப்போதும் பறவைகளும் வண்டுகளும் கூட்டங்கூட்டமாக ஒதிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தன.
பதம் 4.25.18
ஹிம-நிர்ஜர-விப்ருஷ்மத் குஸுமாகர—வாயுனா
சலத் ப்ரவால விடப நளினீ தட-ஸம்பதி
ஹிம-நிர்ஜர—பனிமலையிலிருந்து விழும் அருவி; விப்ருட்மத்—நீர்த்துளிகளைச் சுமந்து கொண்டு; குஸும ஆகர—வசந்தகாலம்; வாயுனா—தென்றல் காற்றினால்; சலத்—அசைகின்ற; ப்ரவால—கிளைகள்; விடப—மரங்கள்; நளினீ தட—தாமரை மலர்களுடன் கூடிய குளக்கரையில்; ஸம்பதி—வளம்.
குளத்தின் கரைகளின் மீது நின்று கொண்டிருக்கும் மரங்கள், அருகிலுள்ள பனிமலைகளிலிருந்து தென்றல் காற்று சுமந்து வரும் அருவி நீர்த்துளிகளை வாங்கிக் கொள்ளும்.
பதம் 4.25.19
நானாரண்ய-ம்ருக-வ்ராதைர் அநாபாதே முனி-வ்ரதை:
ஆஹூதம் மன்யதே பாந்தோ யத்ர கோகில-கூஜிதை:
நானா—பல்வேறு; அரண்ய—வனம்; ம்ருக—மிருகங்கள்; வ்ராதை:—கூட்டங்களுடன்; அநாபாதே—வன்முறையின்றி; முனி-வ்ரதை:—மாமுனிவர்களைப் போன்று; ஆஹூதம்—வரவேற்கப்பட்டது போல்; மன்யதே—கருதுதல்; பாந்த:—பயணி; யத்ர—அங்கே; கோகில—குயில்; கூஜிதை:—இனிய ஒலியினால்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் வனத்திலுள்ள விலங்குகள்கூட மாமுனிவர்களைப் போல் வன்முறையும், காழ்ப்புணர்ச்சியும் இன்றி வாழ்கின்றன. இதனைத் தொடர்ந்து அவ்விலங்குகள் எவரையும் தாக்குவதில்லை. எல்லாவற்றிகும் மேலாக அங்கே ஒலிப்பது குயில்களின் இனிய குரலோசையே ஆகும். அப்பாதையில் செல்லும் எந்தவொரு பயணியும் அந்த நந்தவனத்தில் சிறிது நேரம் இளைப்பாறிச் செல்வதற்காக அச்சூழ்நிலைகளால் வரவேற்கப்படுகிறான்.
பதம் 4.25.20
யத்ருச்சயாகதாம் தத்ர ததர்ஸ ப்ரமதோத்தமாம்
ப்ருத்யைர் தஸபிர் ஆயாந்தீம் ஏகைக ஸத-நாயகை:
யத்ருச்சயா—திடீரென்று, எந்தவிதமான ஈடுபாடுமின்றி; ஆகதாம்—அடைந்தனர்; தத்ர—அங்கே; ததர்ஸ—அவர் பார்த்தார்; ப்ரமதா—ஒரு பெண்ணை; உத்தமாம்—மிக அழகிய; ப்ருத்யை:—வேலைக்காரர்கள் சூழ்ந்துவர; தஸபி:—பத்து; ஆயாந்தீம்—முன்வந்து; ஏக-ஏக—ஒவ்வொருவரும்; ஸத—நூற்றுக்கணக்கான; நாயகை:—தலைவர்கள்.
இவ்வாறு அந்த நந்தவனத்தில் மன்னர் புரஞ்ஜனர் இங்குமங்குமாக அலைந்து கொண்டிருந்த பொழுது எந்தவிதமான ஈடுபாடுமின்றி அவ்வழியே நடந்து சென்று கொண்டிருந்த ஓர் அழகிய இளம் பெண்ணைக் கண்டார். அவளுக்குத் துணையாகப் பத்து வேலைக்காரர்கள் வந்தனர். ஒவ்வொரு வேலைக்காரனுடனும் நூற்றுக்கணக்கான அவனது மனைவியரும் உடன் வந்தனர்.
பதம் 4.25.21
பஞ்ச-ஸீர்ஷாஹினா குப்தாம் ப்ரதீஹாரேண ஸர்வத:
அன்வேஷமாணாம் ருஷபம் அப்ரௌடாம் காம ரூபிணீம்
பஞ்ச—ஐந்து; ஸீர்ஷ—தலைகள்; அஹினா—பாம்பினால்; குப்தாம்—பாதுகாக்கப்பட்ட; ப்ரதீஹாரேண—மெய்க்காப்பாளனால்; ஸர்வத:—எங்கும்; அன்வேஷமாணாம்—தேடிக்கொண்டிருக்கும் ஒருவர்; ருஷபம்—ஒரு கணவன்; அப்ரௌடாம்—அதிக வயதில்லை; காம-ரூபிணீம்—காம இச்சைகளைத் தீர்த்து வைக்கும் கவர்ச்சி வாய்ந்த.
அந்தப் பெண் ஓர் ஐந்து தலை நாகத்தினால் எல்லாப் பக்கங்களிலும் இருந்து பாதுகாக்கப்பட்டாள். அவள் இளமையும் எழிலும் மிக்கவளாக விளங்கினாள். மேலும் அவள் தனக்குத் தகுந்த பொருத்தமானக் கணவனைத் தேடுவதில் மிகுந்த ஆர்வமுடையவளாக இருப்பது போல் தோன்றினாள்.
பதம் 4.25.22
ஸுநாஸாம் ஸுததீம் பாலாம் ஸுகபோலாம் வரானனாம்
ஸம-வின்யஸ்த-கர்ணாப்யாம் பிப்ரதீம் குண்டல-ஸ்ரியம்
ஸு-நாஸாம்—அழகிய நாசி; ஸு-ததீம்—ஒளிவீசும் பற்கள்; பாலாம்—இளம் பெண்; ஸு-கபோலாம்—அழகிய நெற்றி; வர-ஆனனாம்—அழகிய முகம்; ஸம—சமமான; வின்யஸ்த—ஏற்படுத்தப்பட்ட; கர்ணாப்யாம்—இருசெவிகள்; பிப்ரதீம்—ஒளிவீசும்; குண்டல-ஸ்ரியம்—அழகிய காதணிகளைக் கொண்டிருந்தாள்.
அப்பெண்ணின் நாசியும், பற்களும், நெற்றியும் எழில் மிக்கவையாக இருந்தன. அவளது இருசெவிகளும்கூட சம அழகு வாய்ந்தவையாகவும், ஒளிவீசும் காதணிகளால் அலங்கரிக்கப்பட்டவையாகவும் இருந்தன.
பதம் 4.25.23
பிஸங்க-நீவீம்-ஸுஸ்ரோணீம் ஸ்யாமாம் கனக-மேகலாம்
பத்ப்யாம் க்வணத்ப்யாம் சலந்தீம் நூபுரைர் தேவதாம் இவ
பிஸங்க—மஞ்சள் வண்ணம்; நீவீம்—ஆடை; ஸு-ஸ்ரோணீம்—எழில்மிக்க இடை; ஸ்யாமாம்—கருமைநிற; ககை—பொன்னலான; மேகலாம்—மேகலை; பத்ப்யாம்—பாதங்களுடன்; க்வணப்தியாம்—ஒலிசெய்யும்; சலந்தீம்—நடை; நூபுரை:—சலங்கைகளுடன்; தேவதாம்—தேவதை; இவ—போன்று.
அப்பெண்ணின் இடையானது எழில்மிக்கதாக இருந்தது. அவள் மஞ்சள் வண்ண ஆடை உடுத்தி இடையில் பொன்னாலான மேகலை அணிந்திருந்தாள். அவள் நடக்கும் பொழுது காலிலுள்ள சலங்கைகள் ஒலித்தன. தோற்றத்தில் அவள் ஒரு தேவகன்னியைப் போல் விளங்கினாள்.
பதம் 4.25.24
ஸ்தனௌ வ்யஞ்ஜித-கைஸோரௌ ஸம-வ்ருத்தௌ நிரந்தரெள
வஸ்த்ராந்தேன நிகூஹந்தீம் வ்ரீடயா கஜ-காமினீம்
ஸ்தனௌ—ஸ்தனங்கள்; வ்யஞ்ஜித—குறிப்பிடுகின்றது; கைஸோரௌ—புத்திளமை; ஸமவ்குத்தௌ—சமமாக உருண்டு; நிரந்தரெள—அருகருகே நெருக்கமாக இருந்தன; வஸ்த்ர-அந்தேன—சேலையின் முந்தானையினால்; நிகூஹந்தீம்—மூடுவதற்கு முயற்சித்தல்; வ்ரீடயா—நாணத்தினால்; கஜ-காமினீம்—பெண் யானையினைப் போல் நடந்து சென்றாள்.
அருகருகே உருண்டு திரண்டிருந்த மார்பகங்களை சேலையின் முந்தானையினால் மூடுவதற்கு அப்பெண் முயற்சித்துக் கொண்ருந்தாள். அவள் ஒரு பெண்யானையைப் போல் நடந்து கொண்டே நாணத்தினால் மீண்டும் மீண்டும் தனது மார்பகங்களை மூடுவதற்கு முயற்சித்தாள்.
பதம் 4.25.25
தாம் ஆஹ வலிதம் வீர: ஸவ்ரீட-ஸ்மித-ஸோபனாம்
ஸ்நிக்தேனாபாங்க-புங்கேன ஸ்ப்ருஷ்ட: ப்ரேமோத்ப்ரமம்-ப்ருவா
தாம்—அவருக்கு; ஆஹ—பேசினார்; வலிதம்—மிகவும் மென்மையாக; வீர:—வீரர்; ஸ-வ்ரீட—நாணத்துடன்; ஸ்மித—புன்னகை; ஷோபனாம்—மிக அழகிய; ஸ்நிக்தேன—பாலுறவு விருப்பம்; அபாங்க-புங்கேன—பார்வை என்னும் அம்பினால்; ஸ்ப்ருஷ்ட:—துளைக்கப்பட்டு; ப்ரேம-உத்-ப்ரமத்—உணர்ச்சிமிகு காதல்; ப்ருவா—புருவங்களினால்.
மிகச் சிறந்த வீரரான, புரஞ்ஜனன் எழில் மிகு அப்பெண்ணின் அழகிய முகம் மற்றும் புருவங்களினால் கவரப்பட்டு, அவளது காம இச்சை என்னும் அம்பினால் உடனடியாகத் துளைக்கப்பட்டார். நாணத்துடன் அவள் புன்னகைத்த பொழுது புரஞ்ஜனனுக்கு அவள் மிகவும் அழகுடையவளாகத் தோன்றினாள். புரஞ்ஜனன் ஒரு சிறந்த வீரராக இருந்தபோதிலும் அவரால் அவளிடம் பேசாமல் இருக்க முடியவில்லை.
பதம் 4.25.26
கா த்வம் கஞ்ஜ-பலாஸாக்ஷி கஸ்யாஸீஹ குத: ஸதி
இமாம் உப புரீம் பீரு கிம் சிகீர்ஷஸி ஸம்ஸ மே
கா—யார்; த்வம்—நீ; கஞ்ஜ-பலாஸ—செந்தாமரை மலரின் இதழ்களைப் போன்று; அக்ஷி—விழிகள்; கஸ்ய—அவளது; அஸி—நீ இருக்கின்றாய்; இஹ—இங்கே; குத:—எங்கிருந்து; ஸதி—ஓ கற்பிற் சிறந்தவளே; இமாம்—இந்த; உப—அருகில்; புரீம்—நகரம்; பீரு—ஓ, நாணம் மிக்கவளே; கிம்—என்ன; சிகீர்ஷஸி—நீ செய்வதற்கு முயற்சிக்கின்றாய்; ஸம்ஸ—அன்புடன் விளக்குவாயாக; மே—எனக்கு.
செந்தாமரை மலர் போல் விழிகள் உடையவளே, நீ எங்கிருந்து வருகிறாய், நீ யார், யாருடைய புதல்வி என்பதை அன்புடன் எனக்கு விளக்குவாயாக. நீ கற்பிற் சிறந்தவளாகத் தோன்றுகின்றாய், நீ இங்கு வந்ததின் நோக்கம் என்ன? நீ என்ன செய்வதற்கு முயலுகின்றாய்? இவற்றையெல்லாம் எனக்கு அருள்கூர்ந்து விளக்குவாயாக.
பதம் 4.25.27
க ஏதே ‘னுபதா யே த ஏகாதஸ மஹா-படா:
ஏதா வா லலனா: ஸுப்ரு கோ ‘யம் தே ‘ஹி: புர:-ஸர
கே—யார்; ஏதே—இவர்களெல்லாம்; அனுபதா:—பின்னால் வருபவர்கள்; யே—யார் இவர்கள்; தே—உனது; ஏகாதஸ—பதினோரு; மஹா-படா:—ஆற்றல்மிக்க மெய்க்காப்பாளர்கள்; ஏதா:—இவர்கள் அனைவரும்; வா—கூட; வலனா:—பெண்கள்; ஸு-ப்ரு—ஓ, அழகிய விழிகளைக் கொண்டவளே; க:—யார்; அயம்—இது; தே—உனது; அஹி:—பாம்பு; புர:—முன்னால்; ஸர:—செல்வது.
அன்பிற்குரிய தாமரைக்கண்ணாளே, உன்னோடு இருக்கும் பதினோரு மெய்க்காப்பாளர்களும் பத்து வேலைக்காரர்களும் யாவர்? அவ்வேலைக்காரர்களைத் தொடர்ந்து வரும் பெண்கள் யாவர்? மற்றும் உன் முன்னால் சென்று கொண்டிருக்கும் பாம்பு யார்?
பதம் 4.25.28
த்வம் ஹ்ரீர் பவானி அஸி அத வாக்ரமா பதிம்
விசின்வதீ கிம் முனிவத் ரஹோ வனே
த்வத்-அங்க்ரி-காமாப்த-ஸமஸ்த-காமம்
க்வ பத்ம-கோஸ: பதித: கராக்ராத்
த்வம்—நீ; ஹ்ரீ—நாணம்; பவானீ—சிவபெருமானின் மனைவி; அலி—இருக்கின்றாய்; அத—அல்லது; வாக்—சரஸ்வதி, கல்வித் தேவதை; ரமா—அதிர்ஷ்டதேவதை; பதிம்—கணவன்; விசின்வதீ—தேடியலைதல், நினைத்துக்கொண்டு; கிம்—இருக்கின்றாய்; முனி-வத்—முனிவரைப் போன்று; ரஹ:—இத்தனிமையான இடத்தில்; வனே—வனத்தில்; த்வத்-அங்கரி—உனது பாதங்கள்; காம—காமம்; ஆப்த—எய்துதல்; ஸமஸ்த—அனைத்தும்; காமம்—விரும்பும் பொருள்கள்; க்வ—எங்கிருக்கிறது; பத்ம-கோஸ:—தாமரைமலர்; பதித:—வீழ்ந்தது; கர—கரத்தில்; அக்ராத்—உள்ளங்கை அல்லது முன்பகுதி.
அன்பார்ந்த அழகிய பெண்ணே! உண்மையில் நீ ரமா என்னும் அதிர்ஷ்ட தேவதை போன்று அல்லது சிவபெருமானின் மனைவியான பவானியைப் போன்று, அல்லது கல்வித் தெய்வமும், பிரம்ம தேவனின் மனைவியுமான சரஸ்வதியைப் போன்று இருக்கின்றாய். இவர்களுடன் ஒருத்தியாக நீ இருந்தபோதிலும், இவ்வனத்தில் நீ அலைந்து, திரிந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். உண்மையில் நீ மாமுனிவர்களைப் போல் மிகவும் அமைதியாக இருக்கின்றாய். நீ என்ன, உனது கணவனைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றாயா? உனது கணவன் யாராக இருந்தபோதிலும் நீ அவனது நம்பிக்கைக்குரியவளாக இருப்பதைப் புரிந்து கொள்வதின் மூலம் அவன் அனைத்து வளங்களையும் பெறுவதற்காக நிச்சயம் வருவான். நீ அதிர்ஷ்டதேவதையாகவே இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன் ஆயினும் உனது கரத்தில் தாமரை மலரை நான் காணவில்லை எனவே அத்தாமரை மலரை நீ எங்கே வீசி எறிந்துவிட்டாய் என்று நான் கேட்க விழைகிறேன்.
பதம் 4.25.29
நாஸாம் வரோர்வன்யதமாபுவி ஸ்ப்ருக்
புரீம் இமாம் வீர-வரேண ஸாகம்
அர்ஹஸி அலங்கர்தும் அதப்ர-கர்மணா
லோகம் பரம் ஸ்ரீர் இவ யஜ்ஞ-பும்ஸா
ந—இல்லை; ஆஸாம்—இவர்களில்; வரோரு—ஓ, அதிர்ஷ்டம் நிறைந்தவளே; அன்யதமா—யாரேனும் ஒருவர்; புவி-ஸ்ப்ருக்—நிலத்தைத் தொடுகின்ற; புரீம்—நகரம்; இமாம்—இந்த; வீர-வரேண—சிறந்தவீரன்; ஸாகம்—உடனிருத்தல்; அர்ஹஸி—உனக்குப் பொருத்தமானது; அலங்கர்தும்—அலங்கரிப்பதற்கு; அதப்ர—புகழ்மிக்க; கர்மணா—அவரது செயல்கள்; லோகம்—உலகம்; பர—உன்னதமான; ஸ்ரீ:—அதிர்ஷ்ட தேவதை; இவ—போன்று; யஜ்ஞ-பும்ஸா—அனைத்து வேள்விகளையும் அனுபவிப்பவர்.
ஓ, அதிர்ஷ்டம் மிக்கவளே! மேலே நான் குறிப்பிட்டப் பெண்களில் ஒருத்தியாக நீ இல்லை என்று தெரிகிறது ஏனென்றால் உனது பாதங்கள் நிலத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் நீ இந்த உலகத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் பகவான் விஷ்ணுவுடன் உறையும் அதிர்ஷ்டதேவதை இலட்சுமி எவ்வாறு வைகுண்டலோகத்தின் அழகை அதிகரிக்கச் செய்கின்றாளோ அதுபோல் நீயும் என்னுடன் தொடர்புகொள்வதின் மூலம் இந்நகரின் அழகினை அதிகரிக்கக் கூடும். மேலும் நான் மிகச் சிறந்த வீரன் என்பதையும் இவ்வுலகின் ஆற்றல் மிக்க அரசன் என்பதையும் நீ புரிந்து கொள்ள வேண்டும்.
பதம் 4.25.30
யத் ஏஷ மாபாங்க-விகண்டிதேந்த்ரியம்
ஸவ்ரீட-பாவ-ஸ்மித-விப்ரமத்-ப்ருவா
த்வயோபஸ்ருஷ்டோ பகவான் மனோ-பவ:
ப்ரபாததே ‘தானுக்ருஹாண ஷோபனே
யத்—ஏனென்றால்; ஏஷ:—இந்த; மா—எனது; அபாங்க—உனது பார்வையினால்; விகண்டித—கிளர்ச்சியடைதல்; இந்த்ரியம்—அவரது புலன்கள் அல்லது மனம்; ஸ-வ்ரீட—நாணத்துடன்; பாவ—பற்று; ஸ்மித—புன்னகை; விப்ரமத்—குழம்புகின்றது; ப்ருவா—புருவங்களுடன்; த்வயா—உன்னால்; உபஸ்ருஷ்ட:—பாதிக்கப்படுதல்; பகவான்—ஆற்றல்மிக்க; மன:-பவ:—மன்மதன்; ப்ரபாததே—துன்புறுத்துகின்றது; அத—ஆகையினால்; அனுக்ருஹாண—கருணை கொள்ள வேண்டும்; ஸோபனே—ஓ, எழில்மிக்கவளே.
உனது பார்வை இன்று என் மனதை மிக்கக் கிளர்ச்சியடையச் செய்கிறது. உனது புன்னகை முற்றிலும் நாணமிக்கதாக இருக்கிறது அத்தோடு அதில் ஆசையும் கலந்து என்னுள் இருக்கும் மன்மதனைக் கொந்தளிக்கச் செய்கிறது. ஆகையினால், ஓ, எழில் மிக்கவளே! நீ என்மீது கருணை காட்டவேண்டுமென்று உன்னை வேண்டுகிறேன்.
பதம் 4.25.31
த்வத்-ஆநனம் ஸுப்ரு ஸுதார-லோசனம்
வ்யாலம்பி-நீலாலக வ்ருந்த-ஸம்வ்ருதம்
உன்னீய மே தர்ஸய வல்கு-வாசகம்
யத் வ்ரிடயா நாபிமுகம் ஸுசி-ஸ்மிதே
த்வத்—உனது; ஆநனம்—முகம்; ஸு-ப்ரு—வில்லைப்போல் புருவமுடையாய்; ஸுதார—அழகிய கண்மணிகளுடன்; லோ—விழிகள்; வ்யாலம்பி—சிதறிய; நீல—நீலம்; அலக-வ்ருண்த—பின்னிய கூந்தலினால்; ஸம்வ்ருதம்—சூழப்பட்டு; உன்னீய—உயர்ந்திருக்கும்; மே—எனக்கு: தர்ஸய—காட்டு; வல்கு-வாசகம்—கேட்பதற்கு இனிய வார்த்தைகளை; யத்—எந்த முகம்; வ்ரீடயா—வெட்கத்தினால்; ந—இல்லை; அபிமுகம்—நேருக்குநேர்; ஸுசி—ஸ்மிதே—ஓ, அன்புப் புன்னகை பூக்கும் இளம் பெண்ணே.
அன்பிற்குரியவளே, வில்போன்ற புருவமும், வேல்போன்ற விழிகளும் உடையது உனது எழில்முகம்; உனது கருநீலக் கூந்தல் அலைபோல் பரந்திருக்கிறது. இதற்கும் மேலாக உனது வாய்ச்சொற்கள் மிகவும் இனிமையாக இருக்கின்றன. நாணம் உனக்குத் தடை விதித்திருப்பதினால் நீ தேருக்கு நேர் என்னைப் பார்க்க மறுக்கிறாய். ஆகையினால் அன்பிற்குரியவளே! புன்னகை பூத்த முகத்தினாய் குனிந்த தலை நிமிர்ந்து என்னை நோக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.
பதம் 4.25.32
நாரத உவாச
இத்தம் புரஞ்ஜனம் தாரீ யாசமானம் அதிரவத்
அப்யநந்தத தம் வீரம் ஹஸந்தீ வீர மோஹிதா
நாரதி: உவாச—நாரத மாமுனிவர் தொடர்ந்து கூறினார்; இத்தம்—இதன்மேல்; புரஞ்ஜனம்—புரஞ்ஜனருக்கு; நாரீ—அப்பெண்; யாசமானம்—இரந்துவேண்டல்; அதீர-வத்—பொறுமை இழந்து; அப்யநந்தத—அவள் கூறினாள்; தம்—அவரது; வீரம்—வீரம்; ஹஸந்தீ—புன்னகை; வீர—ஒ, வீரரே; மோஹிதா—அவரால் கவரப்பட்டாள்.
நாரதர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த மன்னனே, புரஞ்ஜனன் இவ்வாறு அப்பெண்ணால் கவரப்பட்டு அவளைத் தொடுவதற்கும் அனுபவித்து மகிழ்வதற்கும் பொறுமை இழந்து துடிக்கலானார். அப்பெண்ணும் அவரது வார்த்தைகளினால் கவரப்பட்டு அவர் வேண்டுகோளை ஏற்றுப் புன்னகைத்தாள். அந்த நேரம் அவள் மன்னரால் நிச்சயம் கவரப்பட்டவள் ஆனாள்.
பதம் 4.25.33
ந விதாம வயம் ஸம்யக் கர்தாரம் புருஷர்ஷப
ஆத்மனஸ் ச பரஸ்யாபி கோத்ரம் நாம ச யத்-க்ருதம்
ந—இல்லை; விதாம—அறிவது; வயம்—நான்; ஸம்யக்—சரியாக; கர்தாரம்—செய்பவர்; புருஷ-ருஷப—ஓ, மனிதரில் சிறந்தவரே; ஆத்மன:—எனது; ச—மேலும்; பரஸ்ய—பிறரின்; அபி—கூட; கோத்ரம்—குலச்சரித்திரம்; நாம—பெயர்; ச—மேலும்; யத்-க்ருதம்—யாரால் செய்யப்பட்டிருக்கிறது என்று.
அப்பெண் கூறினாள்: ஓ, மனிதரில் சிறந்தவரே, என்னை ஈன்றெடுத்தவர் யார் என்பதை நான் அறியேன். அதைப்பற்றி உம்மிடம் மிகச்சரியாக என்னால் எடுத்துரைக்க இயலாது. என்னுடன் வரும் இவர்கள் யாரென்பதையும் இவர்களது பெயர்களையும் கூட நான் அறியேன்.
பதம் 4.25.34
இஹாத்ய ஸந்தம் ஆத்மானம் விதாம ந தத: பரம்
யேனேயம் நிர்மிதா வீர பரீ ஸரணம் ஆத்மன:
இஹ—இங்கே; அத்ய—இன்று; ஸந்தம்—தோன்றியிருத்தல்; ஆத்மானம்—உயிர்வாழிகள்; விதாம—இதைமட்டும் நாம் அறிவோம்; ந—இல்லை; தத: பரம்—இதற்கு மேல்; யேன—யாரால்; இயம்—இந்த; நிர்மிதா—படைக்கப்பட்டது; வீர—ஓ, சிறந்த வீரரே; புரீ—நகரம்; ஸரணம்—இருப்பிடம்; ஆத்மன:—எல்லா உயிர்வாழிகளின்.
ஓ, மாவீரரே, இந்த இடத்தில் நாம் தோன்றியிருக்கிறோம் என்பதை மட்டுமே நாம் அறிவோம். இதன்பிறகு என்ன நடக்கும் என்பதை நாம் அறிந்திலோம். உண்மையில், நமது குடியிருப்புக்காக இவ்வழகிய இடத்தைப் படைத்தது யார் என்பதை அறிவதற்கு சிரத்தையில்லாத மூடர்களாகவே நாம் இருக்கிறோம்.
பதம் 4.25.35
ஏதே ஸகாய: ஸக்யோ மே நரா நார்யஸ் ச மானத
ஸுப்தாயாம் மயி ஜாகர்தி நாகோ ‘யம் பாலயன் புரீம்
ஏதே—இவர்கள் அனைவரும்; ஸகாய:—ஆண் நண்பர்கள்; ஸக்ய:—பெண் நண்பர்கள்; மே—எனது; நரா:—ஆடவர்; நார்ய:—பெண்டிர்; ச—மேலும்; மானத—ஓ, மரியாதைக்குரியவரே; ஸுப்தாயாம்—உறங்கும் பொழுது; மயி—நான்; ஜாகர்தி—விழிப்புடன் இருத்தல்; நாக:—நாகம்; அயம்—இந்த; பலாயன்—பாதுகாத்தல்; புரீம்—இந்த நகர்.
மேன்மைமிக்கவரே, என்னுடன் இருக்கும் இந்த ஆண்களும் பெண்களும் எனது நண்பர்கள் ஆவர். இந்த நாகப்பாம்பு எப்போதும் விழிப்புடன் இருந்து நான் உறங்கும் பொழுது கூட இந்த நகரத்தைப் பாதுகாக்கிறது. இதுமட்டுமே நான் அறிவேன். இதற்குமேல் நான் ஒன்றும் அறியேன்.
பதம் 4.25.36
திஷ்ட்யாகதோ ‘ஸி பத்ரம் தே க்ராம்யான் காமான் அபீப்ஸஸே
உத்வஹிஷ்யாமி தாம்ஸ் தே ‘ஹம் ஸ்வ பந்துபிர் அரிந்தம
திஷ்ட்யா—என்னுடைய அதிர்ஷ்டத்தினால்; ஆகத: அஸி—நீர் இங்கே வந்திருக்கின்றீர்; பத்ரம்—அனைத்து மங்கலங்களும்; தே—உமக்கு உண்டாவதாக; க்ராம்யான்—புலனுக்குரிய; காமான்—மகிழ்ச்சியளிக்கும் பொருள்களின் மீதான விருப்பம்; அபீப்ஸஸே—நீர் அனுபவித்து மகிழ விரும்புகிறீர்; உத்-வஹிஷ்யாமி—நான் வழங்குவேன்; தான்—இவர்கள் எல்லோரும்; தே—உமக்கு; அஹம்—நான்; ஸ்வ-பந்துபி:—எனது நண்பர்கள் அனைவருடன்; அரிம்-தம—ஓ, பகைவரைச் சுடுபவரே.
ஓ, பகைவரைச் சுடுபவரே, ஏதோ ஒரு விதத்தில் நீர் இங்கே வந்திருக்கின்றீர். நிச்சயமாக இது எனது சிறந்த அதிர்ஷ்டமேயாகும். உமக்கு எல்லா மங்கலங்களும் கிடைக்க நான் வாழ்த்துகிறேன். உமது புலன்களைத் திருப்திப்படுத்துவதற்கான தீராத ஆசை உம்மிடம் இருக்கிறது. நானும் எனது நண்பர்கள் அனைவரும் உமது ஆசைகளை நிறைவேற்றுவதற்காக எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்வோம்.
பதம் 4.25.37
இமாம் த்வம் அதிதிஷ்டஸ்வ புரீம் நவ-முகீம் விபோ
மயோபனீதான் க்ருஹ்ணான: காம-போகான் ஸதம் ஸமா:
இமாம்—இந்த; த்வம்—உமது மேலாந்தன்மையினால்; அதிதிஷ்டஸ்வ—இருப்பீர்; புரீம்—இந்த நகரத்தில்; நவ-முகீம்—ஒன்பது வாயில்களுடன்; விபோ—ஓ, தலைவரே; மயா—என்னால்; உபநீதான்—ஏற்பாடு செய்யப்பட்ட; க்ருஹ்ணான:—பெற்றுக் கொண்டு; காம-போகான்—புலனுகர்ச்சிக்கான போகப் பொருள்கள்; ஸதம்—ஒரு நூறு; ஸமா:—வருடங்கள்.
அன்பிற்குரிய தலைவரே, உமக்காக ஒன்பது வாயில்கள் கொண்ட இந்த நகரத்தை நான் ஏற்படுத்தியிருக்கிறேன். ஆகையினால் நீர் அனைத்து வகையான புலனுகர்ச்சிகளையும் பெறலாம். நீர் இங்கே நூறு வருடங்கள் வரை வாழலாம். மேலும் உமது புலனுகர்ச்சிக்கான அனைத்துப் போகப் பொருட்களும் இங்கு வழங்கப்படும்.
பதம் 4.25.38
கம் நு த்வத்-அன்யம் ரமயே ஹி அரதி-ஜ்ஞம் அகோவிதம் அஸம்பராயாபிமுகம் அஷ்வஸ்தன-விதம் பசும்
கம்—யாருக்கு; நு—பிறகு; த்வத்—உம்மைவிட; அன்யம்—அடுத்தவர்; ரமயே—அனுபவித்து மகிழ நான் பாலுறவு இன்பத்தின் ஞானம் இன்றி; அகோவிதம்—ஆதலினால் பெரும்பாலும் மூடத்தனமான; அஸம்பராய—மறுபிறப்புப்பற்றிய ஞானம் ஏதுமின்றி; அபிமுகம்—முன்னோக்குகின்ற; அஷ்வஸ்தன-விதம்—அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியாதவர்; பசும்—விலங்குகளைப் போன்றோர்.
மற்றவர்களோடு நான் இணைவேன் என்று எவ்வாறு எதிர்பார்க்கக் கூடும், அவர்கள் பாலுறவில் தேர்ந்தவர்களும் அல்லர், இருக்கும் போதும், இறந்த பின்னரும் வாழ்க்கையை எவ்வாறு அனுபவிப்பது? என்று அறிகின்ற திறனுமிலர். இப்படிப்பட்ட மனிதர்கள் மூடர்களேயாவர். ஏனென்றால் புலனின்ப முறைகளை அவர்கள் இப்பிறப்பிலும் சரி, மறுபிறப்பிலும் சரி, அறிவதில்லை.
பதம் 4.25.39
தர்மோ ஹி அர்தார்த காமெள ச ப்ரஜானந்தோ ‘ம்ருதம் யஸ:
லோகா விஸோகா விரஜா யான் ந கேவலினோ விது:
தர்ம:—மதச்சடங்குகள்; ஹி—உறுதியாக; அத்ர—இங்கே; (இல்லற வாழ்வில் அல்லது கிரஹஸ்த ஆஷ்ரமத்தில்); அர்த—பொருளாதார வளர்ச்சி; காமௌ—புலனுகர்ச்சி; ச—மேலும்; பிரஜா-ஆனந்த:—மக்கட்தொகையின் இன்பம்; அம்ருதம்—வேள்விகளின் விளைவுகள்; யக்ஷ:—கௌரவம்; லோகா:—உலகங்கள்; விஷோகா:—சோகம் இன்றி; விரஜா—பிணி இன்றி; யான்—இந்த; ந—இல்லை; கேவலின:—உன்னதமானவர்கள்; விது:—அறிந்தது.
அப்பெண் தொடர்ந்து கூறினாள் பௌதீக உலகில் ஓர் இல்லறத்தானுடைய வாழ்க்கை சமயதர்மம், பொருளாதார வளர்ச்சி, புலனுகர்ச்சி, குழந்தைப்பேறு, புதல்வர்கள் மற்றும் பேரக்குழந்தைகள் போன்ற அனைத்து வகையான மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. இதன்பின்னர் பௌதீகக் கௌரவத்தினைப் போல் ஒருவன் விடுதலையையும் விரும்பலாம். இல்லறத்தான் வேள்விகளின் பலன்களைப் போற்றலாம், அதுவே அவனை மேலுகத்திற்கு உயர்வு பெறச் செய்யக் கூடியதாகும். இந்த இன்பங்கள் அனைத்தையும் உன்னதமானவர்கள் நடைமுறையில் அறியார். அவர்களால் இதுபோன்ற இன்பங்களைக் கற்பனை கூடச் செய்ய முடியாது.
பதம் 4.25.40
பித்ரு-தேவருஷி-மர்த்யானாம் பூதானாம் ஆத்மனஸ் ச ஹ
க்ஷேம்யம் வதந்தி ஸரணம் பவே ‘ஸ்மின் யத் க்ருஹாஸ்ரம:
பித்ரு—முன்னோர்கள்; தேவ—தேவர்கள்; ருஷி—முனிவர்கள்; மர்த்யானாம்—பொதுவாக மனித இனத்தின்; பூதானாம்—எல்லையற்ற உயிர்வாழிகளின்; ஆத்மன:—ஒருவனின்; ச—மேலும்; ஹ—உறுதியாக; க்ஷேம்யம்—நன்மை; வதந்தி—அவர்கள் கூறுகின்றனர்; ஸரணம்—அடைக்கலம்; பவே—பௌதீக உலகில்; அஸ்மின்—இந்த; யத்—அது; க்ருஹ-ஆஸ்ரம:—இல்லறவாழ்க்கை.
அப்பெண் தொடர்ந்து கூறினாள் அதிகாரம் பெற்றோர்களின் கருத்தின்படி இல்லறவாழ்க்கையானது ஒருவனுக்கு இன்பமளிப்பதாக இருப்பதோடு அவனது முன்னோர்கள், தேவர்கள், முனிவர்கள் மற்றும் அனைவருக்கும் கூட இன்பமளிக்கிறது. இல்லறவாழ்க்கை என்பது இவ்வாறு நன்மையுடைய ஒன்றாகும்.
பதம் 4.25.41
கா நாம வீர விக்யாதம் வதான்யம் ப்ரிய-தர்ஸனம்
நவ்ருணீத ப்ரியம் ப்ராப்தம் மாத்ருஸீ த்வாத்ருஸம் பதிம்
கா—யார்; நாம—உண்மையில்; வீர—அன்பிற்குரிய வீரரே; விக்யாதம்—புகழ்; வதான்யம்—பெருங்குணம்; ப்ரிய-தர்ஸனம்—எழில்தோற்றம்; ந—இல்லை; வ்ருணீத—ஏற்றுக்கொள்வதற்கு; ப்ரியம்—எளிதில்; ப்ராப்தம்—கிடைத்தல்; மாத்ருஸீ—என்னைப் போல்; த்வாத்ருஸம்—உம்மைப்போல்; பதிம்—கணவன்.
ஓ எனதன்பு வீரரே, இவ்வுலகில் உம்மைப்போல் ஒருவரைக் கணவனாக அடைய யார்தான் மறுப்பர்? நீர் மிகுந்த புகழும், தாராள குணமும், பேரெழிலும் உடையவர் என்பதோடு எளிதில் எனக்குக் கிடைத்தவரும் ஆவீர்.
பதம் 4.25.42
கஸ்யா மனஸ் தே புவி போகி-போகயோ:
ஸ்த்ரியா ந ஸஜ்ஜேத் புஜயோர் மஹா புஜ
யோ’ நாத-வர்காதிம் அலம் க்ருணோத்தத
ஸ்மிதாவலோகேன சரதி அபோஹிதும்
கஸ்யா:—யாருடைய; மன:—மனம்; தே—உமது; புவி—இப்புவியில்; போகி-போகயோ:—பாம்பின் உடலைப்போல்; ஸ்த்ரியா:—ஒரு பெண்ணின்; ந—இல்லை; ஸஜ்ஜேத்—கவரப்படுதல்; புஜயோ:—கரங்களினால்; மஹா-புஜ—ஓ, புஜபல பராக்கிரமனே; ய—யார் ஒருவர்; அநாத-வர்கா—என்போன்ற ஏழைப் பெண்; அதி—மனதின் துன்பங்களை; அலம்—திறன்; க்ருணா உத்தத—அளவற்ற கருணையினால்; ஸ்மித-அவலோகேன—கவர்ச்சிமிக்கப் புன்னகையினால்; சரதி—பயணம்செய்தல்; அபோஹிதும்—நீக்குவதற்கு.
ஓ, புஜபல பராக்கிரமனே. பாம்பின் உடல்களைப்போல் உறுதியுடையதாகத் திகழும் உமது கரங்களினால் இவ்வுலகிலுள்ள யார் தான் கவரப்படமாட்டார்கள்? உமது கவர்ச்சிமிகு புன்னகையினாலும், அளவற்ற கருணையினாலும் உண்மையில் என் போன்று கணவனில்லாத பெண்களின் துயர்தன்னை நீர் நீக்குகின்றீர். இப்பூமியின் மீது நீர் இத்துணை நாள் பயணம் செய்தது எங்களது நன்மைக்காகத் தான் என்றே நாங்கள் கருதுகின்றோம்.
பதம் 4.25.43
நாரத உவாச
இதி தௌ தம்பதீ தத்ர ஸமுத்ய ஸமயம் மித:
தாம் ப்ரவிஸ்ய புரீம் ராஜன் முமுதாதே ஸதம் ஸமா:
நாரத: உவாச—மாமுனிவர் நாரதர் கூறினார்; இதி—இவ்வாறு; தெள—அவர்கள்; தம்-பதீ—தம்பதியினராக; தத்ர—அங்கே; ஸமுத்ய—சம ஆர்வமுடன்; ஸமயம்—ஒருவரையொருவர் ஏற்றுக் கொண்டு; மித:—சமமாக; தாம்—அந்த இடத்தில்; ப்ரவிஸ்ய—நுழைந்தனர்; புரீம்—அந்த நகரத்தில்; ராஜன்—ஓ, அரசனே; முமுதாதே—அவர்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்தனர்; ஸதம்—நூறு; ஸமா:—வருடங்கள்.
மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய மன்னனே ஆணும், பெண்ணுமான அவ்விருவரும் ஒருவரையொருவர் அன்பினால் அரவணைத்துக் கொண்டு அந்நகரினுள் நுழைந்து அங்கே நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
பதம் 4.25.44
உபகீயமானோ லலிதம் தத்ர தத்ர ச காயகை:
க்ரீடன் பரிவ்ருத: ஸ்த்ரீபிர் ஹ்ரதினீம் ஆவிஸச் சுசௌ
உபகீயமான:—பாடிக்கொண்டு; லலிதம்—மிகவும் அருமையாக; தத்ர தத்ர—இங்குமங்கும்; ச—மேலும்; காயகை:—இசைக்கலைஞர்களினால்; க்ரீடன்—இசைத்துக் கொண்டு; பரிவ்ருத:—சூழப்பட்டு; ஸ்த்ரீபி:—பெண்களினால்; ஹ்ரதினீம்—ஆற்றிலுள்ள நீர்; ஆவிஸத்—அடைந்தனர்; ஸுசௌ—கோடைகாலத்தில் வெம்மையாக இருக்கும் பொழுது.
ஏராளமான இசைக்கலைஞர்கள் மன்னர் புரஞ்ஜனரின் பெருமைகளையும், வீரதீரச் செயல்களையும் போற்றிப்பாடினர். கோடைக் காலத்தில் வெம்மை அதிகமாக இருக்கும் பொழுது அவர் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு வழக்கமாகச் செல்வார். அங்கே பல பெண்களால் சூழப்பட்டு அவர்களுடன் அவர் உறவாடி மகிழ்வார்.
பதம் 4.25.45
ஸப்தோபரி க்ருதா த்வார: புரஸ் தஸ்யாஸ் து த்வே அத:
ப்ருதக்-விஷய-கதி-அர்தம் தஸ்யாம் ய: கஸ்சனேஸ்வர:
ஸப்த—ஏழு; உபரி—மேலே; க்ருதா:—செய்யப்பட்டன; த்வார:—வாயில்கள்; புர:—நகரத்தின்; தஸ்யா:—அந்த; து—பிறகு; த்வே—இரண்டு; அத:—கீழே; ப்ருதக்—வேறுபாடு; விஷய:—இடங்களுக்கு; கதி-அர்தம்—செல்வதற்காக; தஸ்யாம்—அந்த நகரத்தில்; ய:—யாரொருவர்; கஸ்சன—யாராயினும்; ஈஸ்வர:—ஆளுநர்.
அந்த நகரத்தின் ஒன்பது வாயில்களில் ஏழுமேலே இருந்தன, இரண்டு கீழே மறைவாக இருந்தன. மொத்தம் ஒன்பது வாயில்கள் செய்யப்பட்டன; இவை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றன. இவ்வாயில்கள் அனைத்தும் அந்நகரத்தின் ஆளுநரால் பயன்படுத்தப் பட்டன.
பதம் 4.25.46
பஞ்ச த்வாரஸ் து பௌரஸ்த்யா தக்ஷிணைகா ததோத்தரா
பஸ்சிமே த்வே அமூஷாம் தே நாமனி ந்ருப வர்ணயே
பஞ்ச—ஐந்து; த்வார—வாயில்கள்; து—பிறகு; பௌரஸ்த்யா:—கீழ்த்திசையை நோக்கி இருக்கின்றன; தக்ஷிணா—தென்திசை; ஏகா—ஒன்று; ததா—மேலும்; உத்தரா—வடதிசையை நோக்கி ஒன்று; பஸ்சிமே—அதுபோல் மேல்திசையில்; த்வே—இரண்டு; அமூஷாம்—அவைகளின்; தே—உனக்கு; நாமானி—பெயர்களை; ந்ருப—ஓ, மன்னனே; வர்ணயே—நான் விளக்குவேன்.
அன்பிற்குரிய மன்னனே, அவ்வொன்பது வாயில்களில் ஐந்து கீழ்த்திசையை நோக்கியும், ஒன்று வடதிசையை நோக்கியும், ஒன்று தென்திசையை நோக்கியும், இரண்டு மேல்திசையை நோக்கியும் இருக்கின்றன. இப்பல்வேறு வகையான வாயில்களின் பெயர்களையும் கூறுவதற்கு நான் முயற்சி செய்வேன்.
பதம் 4.25.47
கத்யோதாவிர்முகீ ச ப்ராக் த்வாராவ் ஏகத்ர நிர்மிதே
விப்ராஜிதம் ஜனபதம் யாதி தாப்யாம் த்யுமத்-ஸக:
கத்யோதா—கத்யோதா என்ற பெயரில்; ஆவிர்முகீ—ஆவிர்முகீ என்ற பெயரில்; ச—மேலும்; ப்ராக்—கீழ்த்திசையை நோக்கி; த்வாரௌ—இருவாயில்கள்; ஏகத்ர—ஒரே இடத்தில்; நிர்மிதே—கட்டப்பட்டிருக்கின்றன; விப்ராஜிதம்—விப்ராஜிதம் என்ற பெயரில்; ஜன-பதம்—நகரம்; யாதி—செல்வதற்கு; தாப்யாம்—அவர்களால்; த்யுமத்—துயுமான் என்ற பெயரில்; ஸக:—அவர் நண்பனுடன்.
கத்யோதா மற்றும் ஆவிர்முகீ என்றும் பெயருள்ள இருவாயில்கள் கீழ்த்திசையை நோக்கி இருக்கின்றன. ஆயினும் அவை ஒரே இடத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்விரு வாயில்களின் வழியேதான் மன்னர் விப்ராஜிதம் என்னும் நகருக்குத் தன் நண்பனான துயுமான் என்பவன் உடன்வரச் செல்வார்.
பதம் 4.25.48
நளினீ நாளினீ ச ப்ராக் த்வாராவ் ஏகத்ர நிர்மிதே
அவதூத-ஸகஸ் தாப்யாம் விஷயம் யாதி ஸௌரபம்
நளினீ—நளினீ என்னும் பெயரில்; நாளினீ—நாளினீ என்னும் பெயரில்; ச—மேலும்; ப்ராக்—கீழ்த்திசை; த்வாரெள—இருவாயில்கள்; ஏகத்ர—ஒரே இடத்தில்; நிர்மிதே—கட்டப்பட்டிருக்கிறது; அவதூத—அவதூதன் என்ற பெயரில்; ஸக:—அவரது நண்பனுடன்; தாப்யாம்—அவ்விரு வாயில்களினால்; விஷயம்—இடம்; யாதி—செல்வது; ஸௌரபம்—ஸௌரபம் என்ற பெயரில்.
இதுபோல் கீழ்த்திசையில் இரண்டு வாயில்கள் இருக்கின்றன. அவை நளினீ மற்றும் நாளினீ என்னும் பெயருடையவையாம். இவ்விரு வாயில்களின் வழியாகவே அம்மன்னர் தனது நண்பன் அவதூதன் என்பவனுடன் சேர்ந்து ஸௌரபம் என்னும் நகருக்குச் செல்வார்.
பதம் 4.25.49
முக்யா நாம புரஸ்தாத் த்வாஸ் தயாபண-பஹுதெனௌ
விஷயௌ யாதி புர-ராட் ரஸஜ்ஞ—விபணான்வித:
முக்யா—தலைவன்; நாம—அழைக்கப்படுபவன்; புரஸ்தாத்—கீழ்த் திசையில்; த்வா:—வாயில்; தயா—அதன்மூலம்; ஆபண—ஆபணம் என்ற பெயரில்; பஹுதனௌ—பஹுதனம் என்ற பெயரில்; விஷயௌ—இரண்டு இடங்கள்; யாதி—செல்வது; புர-ராட்—அந்த நகரத்தின் அரசன் (புரஞ்ஜனன்); ரஸ-ஜ்ஞ—ரஸக்ஞன் என்ற பெயரில்; விபண—விபணன் என்ற பெயரில்; அன்வித:—உடல்.
கீழ்த்திசையில் அமைந்திருக்கும் ஐந்தாவது வாயிலானது முக்யா அல்லது தலைவன் என்ற பெயருடையது ஆகும். இந்த வாயிலின் வழியாகவே அவர் தன் நண்பர்களான ரஸக்ஞன் மற்றும் விபணன் என்பவர்களோடு பஹுதனம் மற்றும் ஆபணம் என்னும் இரண்டு இடங்களுக்குச் செல்வார்.
பதம் 4.25.50
பித்ருஹுர் ந்ருப புர்யா த்வார் தக்ஷிணேன புரஞ்ஜன:
ராஷ்ட்ரம் தக்ஷிண-பஞ்சாலம் யாதி ஸ்ருததரான்வித:
பித்ருஹு:—பித்ருஹு என்ற பெயரில்; ந்ருப—ஓ, மன்னனே; புர்யா:—நகரத்தின்; த்வா:—வாயில்; தக்ஷிணேன—தென்திசையில்; புரஞ்ஜன்:—மன்னர் புரஞ்ஜனன்; ராஷ்ட்ரம்—நாடு; தக்ஷிண—தென்திசை; பஞ்சாலம்—பஞ்சாலம் என்ற பெயருடைய; யாதி—செல்வார்; ஸ்ரத-தர-அன்வித:—அவர் நண்பன் ஸ்ரததரன் என்பானுடன் சேர்ந்து.
தென்திசையிலுள்ள வாயில் பித்ருஹு என்றழைக்கப்படுகிறது. இதன் வழியாகவே மன்னர் புரஞ்ஜனன் தனது நண்பர் ஸ்ரததரன் என்பவனுடன் சேர்ந்து தக்ஷிண பஞ்சாலம் என்னும் நகரத்திற்கு செல்வார்.
பதம் 4.25.51
தேவஹுர் நாம புர்யா த்வா உத்தரேண புரஞ்ஜன:
ராஷ்ட்ரம் உத்தர-பஞ்சாலம் யாதி ஸ்ருததரான்வித:
தேவஹு:—தேவஹு என்ற பெயரில்; நாம— என்றழைக்கப்பட்டது; புர்யா:—நகரத்தின்; த்வா:—வாயில்; உத்தரேண—வடதிசைப்பகுதியில்; புரஞ்ஜன:—மன்னர் புரஞ்ஜனன்; ராஷ்ட்ரம்—நாடு; உத்தர—வடதிசை; பஞ்சாலம்—பஞ்சாலம் என்ற பெயருடைய; யாதி—செல்வார்; ஸ்ருத-தர-அன்வித:—அவரது நண்பன் ஸ்ருததரனுடன்.
வடதிசையில் தேவஹு என்னும் பெயருடைய வாயில் இருந்தது. இதன் வழியாகவே புரஞ்ஜன மன்னர் அவரது நண்பன் ஸ்ருததரன் என்பாருடன் உத்தர பஞ்சாலம் என்னும் இடத்திற்குச் செல்வார்.
பதம் 4.25.52
ஆஸுரீ நாம பஸ்சாத் த்வாஸ்தயா யாதி புரஞ்ஜன:
க்ராமகம் நாம விஷயம் துர்மதேன ஸமன்வித:
ஆஸுரீ—ஆஸுரீ என்ற பெயரில்; நாம—அழைக்கப்படுகிறது; பஸ்சாத்—மேற்குத்திசையில்; த்வா:—வாயில்; தயா—அதன்மூலம்; யாதி—செல்வது; புரஞ்ஜன:—மன்னர் புரஞ்ஜனன்; க்ராமகம்—கிராமகம் என்ற பெயரில்; நாம—அழைக்கப்பட்ட; விஷயம்—புலனின்ப நகரம்; துர்மதேன—துர்மதன்; ஸமன்வித:—உடன்வர.
மேல்பகுதியில் ஆஸுரீ என்ற பெயரில் ஒரு வாயில் இருந்தது. இவ்வாயிலின் வழியேதான் மன்னர் புரஞ்ஜனன் அவரது நண்பன் துர்மதன் என்பவனுடன் சேர்ந்து கிராமகம் என்னும் நகரத்திற்குச் செல்வார்.
பதம் 4.25.53
நிர்ருதிர் நாம பஸ்சாத் த்வாஸ் தயா யாதி புரஞ்ஜன:
வைஸஸம் நாம விஷயம் லுப்தகேன ஸமன்வித:
நிர்ருதி:—நிர்ருதி என்ற பெயரில்; நாம—அழைக்கப்படும்; பஷ்சாத்—மேற்குதிசை; த்வா—வாயில்; தயா—அதன்மூலம்; யாதி—செல்வார்; புரஞ்ஜன:—மன்னர் புரஞ்ஜனன்; வைஷஸம்—வைஷஸம் என்ற பெயருடைய; நாம—அழைக்கப்படும்; விஷயம்—இடம்; லுப்தகேன—லுப்தகன் என்னும் பெயருடைய நண்பன்; ஸமன்வித:—உடன்வர.
மேல்திசையிலுள்ள மற்றொரு வாயிலுக்கு “நிர்ருதி” என்று பெயர். புரஞ்ஜன மன்னர் இந்தவாயிலின் வழியே தான் தன் நண்பன் லுப்தகன் என்பவன் உடன்வர வைஸஸம் என்னும் இடத்திற்குச் செல்வார்.
பதம் 4.25.54
அந்தாவ் அமீஷாம் பௌராணாம் நிர்வாக்-பேஸஸ்க்ருதாவ் உபௌ
அக்ஷண்வதாம் அதிபதிஸ் தாப்யாம் யாதி கரோதி ச
அந்தௌ—குருடன்; அமீஷாம்—அவர்கள் மத்தியில்; பௌராணாம்—குடிமக்களின்; நிர்வாக்—நிர்வாக் என்ற பெயரில்; பேஷாஸ்க்ருதௌ—பேஸாஸ்க்ருத் என்ற பெயரில்; உபௌ—இருவரும்; அக்ஷண்வதாம்—விழியுள்ள மக்களின்; அதிபதி:—அதிபதி; தாப்யாம்—அவர்கள் இருவருடன்; யாதி—செல்வது; கரோதி—செயல்படுவது; ச—மேலும்.
அந்நகரில் வாழும் குடிமக்கள் பலருள் நிர்வாக் என்றும் பேஸாஸ்க்ருத் என்னும் பெயருடைய இருவர் இருந்தனர். பார்வையுள்ள மக்களை ஆள்பவராக புரஞ்ஜன மன்னர் இருந்தபோதிலும் துரதிர்ஷ்டவசமாக அவர் இந்த இரு குருடர்களுடனும் அடிக்கடி தொடர்பு கொள்வார். இவர்கள் இருவருடனும் சேர்ந்து கொண்டு அவர் இங்கும் அங்கும் செல்வதும், பல்வேறு செயல்களைச் செய்பவராகவும் இருந்தார்.
பதம் 4.25.55
ஸ யர்ஹி அந்த: புர-கதோ விஷுசீன-ஸமன்வித:
மோஹம் ப்ரஸாதம் ஹர்ஷம்வா யாதி ஜாயாத்மஜோத்பவம்
ஸ:—அவர்; யர்ஹி—செல்லும்பொழுது; அந்த: புர—அந்தப் புரத்திற்கு; கத:—செல்வது வழக்கம்; விஷுசீன—மனதினால்; ஸமன்வித:—உடன்வர; மோஹம்—மோகம்; ப்ரஸாதம்—திருப்தி; ஹர்ஷம்—இன்பம்; வா—அல்லது; யாதி—அனுபவித்து மகிழ்தல்; ஜாயா—மனைவி; ஆத்ம-ஜ—குழந்தைகள்; உத்பவம்—அவர்களால் உண்டாக்கப்பட்ட.
சிலநேரங்களில் அவர் தனது தலைமைப் பணியாளர்களுள் ஒருவனான (மனம்) விஷுசீனன் என்பவனுடன் அவரது அந்தப்புரத்திற்குச் செல்வது வழக்கம். அந்தநேரம் அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து மோகம், திருப்தி, மகிழ்ச்சி போன்றவை வழக்கமாக உண்டாக்கப்படும்.
பதம் 4.25.56
ஏவம் கர்மஸு ஸம்ஸக்த: காமாத்மா வஞ்சிதோ ‘புத:
மஹிஷீ யத் யத் ஈஹேத தத் தத் ஏவான்வவர்தத
ஏவம்—இவ்வாறு; கர்மஸு—பலன்தரும் செயல்களில்; ஸம்ஸக்த:—மிகுந்த பற்றுக்கொண்டு; காம-ஆத்மா—காமாத்மாவாக; வாஞ்சித:—ஏமாற்றப்பட்டார்; அபுத:—மதிகுறைந்த; மஹிஷீ—அரசி; யத்யத்—எதுவாயினும்; ஈஹேத—அவள் விரும்பியது; தத்தத்—அவையெல்லாம்; ஏவ—நிச்சயமாக; அன்வவர்தத—அவர் பின்பற்றினார்.
இவ்வாறு பல்வேறு வகையான மனயூகங்கள் மற்றும் பலன்தரும் செயல்களில் சிக்கிக் கொண்டு மன்னர் புரஞ்ஜனன் உலகியல் நோக்கின் முழுக் கட்டுப்பாட்டில் வந்து ஏமாற்றப்பட்டார். உண்மையில் அவர் தன் மனைவியான அரசியின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி வந்தார்.
பதங்கள் 4.25.57 – 4.25-61
க்வசித் பிபந்த்யாம் பிபதி மதிராம் மத-விஹ்வல:
அஸ்நந்த்யாம் க்வசித் அஸ்நாதி ஜக்ஷத்யாம் ஸஹ ஜக்ஷிதி
க்வசித் காயதி காயந்த்யாம் ருதத்யாம் ருததி க்வசித்
க்வசித் தஸந்த்யாம் ஹஸதி ஜல்பந்த்யாம் அனு ஜல்பதி
க்வசித் தாவதி தாவந்த்யாம் திஷ்டந்த்யாம் அனு திஷ்டதி
அநு ஸேதே ஸயானாயாம் அன்வாஸ்தே க்வசித் ஆஸதீம்
க்வசித் ச்ருணோதி ஸ்ருண்வந்த்யாம் பஸ்யந்த்யாம் அனு பஸ்யதி
க்வசிஜ் ஜிக்ரதி ஜிக்ரந்த்யாம் ஸ்ப்ருஸந்த்யாம் ஸ்ப்ருஸதிக்வசித்
கவசித் ச ஸோதீம் ஜாயாம் அனு ஸோசதி தீனவத்
அனு ஹ்ருஷ்யதி ஹ்ருயந்த்யாம் முதிதாம் அனு மோததே
க்வசித்—சிலநேரம்; பிபந்தியாம்—குடிக்கும்பொழுது; பிபதி—அவர் குடித்தார்; மதிராம்—மது; மத—விஹ்வல:—மதுவினால் போதையடைதல்; அஸ்நந்த்யாம்—அவள் உண்ணும் பொழுது; க்வசித்—சிலநேரம்; அஷ்நாதி—அவர் உண்டார்; ஜக்ஷத்யாம்—அவள் தாம்பூலம் தரித்தாள் என்றால்; ஸஹ—அவளுடன்; ஜக்ஷிதி—அவர் தாம்பூலம் தரித்தார்; க்வசித்—சிலநேரம்; காயதி—அவர் பாடுவார்; காயந்த்யாம்—அவர் மனைவி பாடும்பொழுது; ருதத்யாம்—மனைவி அழும் பொழுது; ருததி—அவரும் அழுதார்; க்வசித்—சிலநேரம்; ஹஸந்த்யாம்—அவள் சிரிக்கும் பொழுது; ஹஸதி—அவரும் கூட சிரித்தார்; ஜல்பந்த்யாம்—அவள் உளறினாள் என்றால்; ஜல்பதி—அவரும் உளறினார்; க்வசித்—சிலநேரம்; தாவதி—அவரும் நடத்தார்; தாவந்த்யாம்—அவள் நடக்கும் பொழுது; திஷ்டந்தியாம்—அவள் அமைதியாக நின்று கொண்டிருந்தால்; அனு—அவளைத் தொடர்ந்து; திஷ்டதி—அவரும் நின்றார்; அனு—அவளைப் பின்பற்றி; ஸேதே—அவரும் படுப்பார்; ஸர்யானாயாம்—அவள் படுக்கையில் படுக்கும் பொழுது; அனு—அவளைப் பின்பற்றி; ஆஸ்தே—அவரும் அமர்ந்தார்; க்வசித்—சிலநேரம்; ஆஸதீம்—அவள் அமரும்பொழுது; க்வசித்—சிலநேரம்; ஸ்ருணோதி—அவரும் கேட்டார்; ஸ்ருஷ்வந்த்யாம்—அவள் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது; பஸ்யந்த்யாம்—அவள் எதையாவது பார்க்கும் பொழுது; அனு—அவளைப் பின்பற்றி; பஸ்யதி—அவரும் பார்த்தார்; க்வசித்—சிலநேரம்; ஜிக்ரதி—அவரும் முகர்ந்தார்; ஜிக்ரந்த்யாம்—அவர் மனைவி முகரும்பொழுது; ஸ்ப்ருஸந்த்யாம்—மனைவி தொடும் பொழுது; ஸ்ப்ருஸதி—அவரும்கூடத் தொட்டார்; க்வசித்—அந்த நேரம்; க்வசித் ச—சிலநேரங்களில் கூட; ஸோசதீம்—அவள் சோகமுறும் பொழுது; ஜாயாம்—அவர் மனைவி; அனு—அவளைப் பின்பற்றி; ஸோசதி—அவரும் கூட சோகமுற்றார்; தீன—வத்—ஓர் ஏழை மனிதனைப்போல்; அனு—அவளைப் பின்பற்றி; ஹ்ருஷ்யதி—அவர் தொடர்ந்து மகிழ்ந்தார்; ஹ்ருஷ்யந்த்யாம்—அவள் மகிழும் பொழுது; முதிதாம்—அவள் திருப்தியடையும்பொழுது; அனு—அவளைப் பின்பற்றி; மேததே—திருப்தியடைந்தார்.
அரசி மதுவருந்தும் பொழுது மன்னர் புரஞ்ஜனனும் மதுவருந்தினார். அரசி உண்ணும் பொழுது சேர்த்து உண்டார்; அவள் தாம்பூலம் தரிக்கும் பொழுது மன்னர் புரஞ்ஜனனும் தாம்பூலம் தரித்தார். அரசி பாடும் பொழுது அவரும் பாடினார். அதுபோல் அரசி அழும் போது அவரும் அழுதார், அவள் சிரித்தால், அவரும் சிரித்தார். அரசி எதையாவது உளறினால், அவரும் உளறிக்கொட்டினார், அரசி நடக்கும் பொழுது, மன்னரும் நடந்தார், அரசி அசையாது நின்றால், அவரும் அசையாது நின்றார். அரசி படுக்கையில் துயிலும் பொழுது அவரும் அவளுடன் துயின்றார். அரசி அமரும் பொழுது அவரும் சேர்ந்து அமர்ந்தார். அரசி எதையாவது செவியினால் கேட்டால், மன்னரும் அதையே காதினால் கேட்டார், அரசி எதையாவது பார்க்கும் பொழுது அவரும் பார்த்தார், மேலும் அரசி நாசியினால் எதையாவது முகரும் பொழுது, அரசரும் அதையே தானும் முகர்ந்தார். அரசி எதையாவது தொட்டால் அரசரும் அதையே தொடுவார். அன்பிற்குரிய அரசி துக்கித்தால் அரசரும் அவளைப் பின்பற்றி அவ்வாறே துக்கித்தார். இவ்வாறு அரசி மகிழ்ச்சியடையும் பொழுது மன்னரும் மகிழ்ந்தார். அரசி திருப்தியடையும் பொழுது மன்னரும் கூடத் திருப்தியடைந்தார்.
பதம் 4.25.62
விப்ரலப்தோ மஹிஷ்யைவம் ஸர்வ-ப்ரக்ருதி-வஞ்சித:
நேச்சன்ன அனுகரோதி அஜ்ஞ: க்லைப்யாத் க்ரீடா-ம்ருகோ யதா
விப்ரலப்த:—மயக்கப்பட்டு; மஹிஷ்யா—அரசியால்; ஏவம்—இவ்வாறு; ஸர்வ—எல்லாம்; ப்ரக்ருதி—தோற்றம்; வஞ்சித்:—ஏமாற்றப்பட்டார்; ந இச்சன்—இச்சையின்றி; அனுகரோதி—பின்பற்றவும் பாவனையும் செய்தல்; அஜ்ஞ:—அந்த மூடமன்னர்; க்லைப்யாத்—சக்தியினால்; க்ரீடா-ம்ருக—செல்லப்பிராணி; யதா—போன்று.
இவ்வாறாக மன்னர் புரஞ்ஜனன் அவரது ஆசை மனைவியால் மயக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டார். உண்மையில் அவர் இந்த உலகில் ஏமாற்றப்பட்டுத் தனது இயற்கைத் தன்மையினை இழந்து போனதால் கையாலாகாத இந்த மூட மன்னர் தனது விருப்பத்திற்கெதிராக, அவரது மனைவியின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தார். இது கூத்தாடியின் விருப்பத்திற்கேற்றவாறு குரங்கு ஆடுதலுக்கு ஒக்கும்.
ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “மன்னர் புரஞ்ஜனனின் குணநலன்கள்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தைந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.