அத்தியாயம் – 10
துருவ மகாராஜன் யக்ஷர்களுடன் போரிடுதல்
பதம் 4.10.1
மைத்ரேய உவாச
ப்ரஜாபதேர் துஹிதரம் ஸிஸீமாரஸ்ய வை த்ருவ:
உபயேமே ப்ரமிம் நாம தத்-ஸீதௌ-வத்ஸரெள
மைத்ரேய: உவாச—மாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்; ப்ரஜாபதே:—பிரஜாபதியின்; துஹிதரம்—புதல்வி; ஸிஸீ மாரஸ்ய—சிசுமாரன்; வை—உறுதியாக; த்ருவ:—துருவ மகாராஜா; உபயேமே—மணந்தார்; ப்ரமிம்—பிரமி; நாம—நாமம்; தத்-ஸீதௌ—அவைப்புலவர்கள்; கல்ப—கல்பன்; வத்ஸரௌ—வத்ஸரன்.
மகாமுனிவர் மைத்ரேயர் கூறினார்: அன்பார்ந்த விதுரனே, அதன் பிறகு துருவ மன்னர் பிரஜாபதி சிசுமாரனின் புதல்வியான பிரமி என்பவளை மணந்தார். அவள் கல்பன் மற்றும் வத்ஸரன் என்னும் இரு புதல்வர்களை ஈன்றெடுத்தாள்.
பதம் 4.10.2
இலாயம் அபி பார்யாயாம் வாயோ: புத்ரியாம் மஹா-பல:
புத்ரம் உத்கல-நாமானம் யோஷித்-ரத்னம் அஜீஜனத்
இலாயம்—அவர் மனைவி இலா என்ற பெயருடையவள்; அபி—மேலும்; பார்யாயாம்—அவர் மனைவிக்கு; வாயோ:—வாயுதேவனுக்கு; புத்ரியாம்—புதல்விக்கு; மஹா-பல:—மிகச்சிறந்த ஆற்றல் பெற்ற துருவ மகாராஜா; புத்ரம்—புத்திரன்; உத்கல—உத்கலன்; நாமானம்—என்ற பெயரில்; யோஷித்—பெண்; ரத்னம்—ரத்தினம்; அஜீஜனத்—அவர் பெற்றார்.
வாயு தேவனின் புதல்வியான அலா என்பவளை மிகவும் ஆற்றல் பெற்ற துருவ மன்னர் தன் மற்றொரு மனைவியாக அடைந்தார். அவள் மூலம் துருவ மன்னர் உத்கலன் என்ற புதல்வனையும், ஓர் அழகான புதல்வியையும் பெற்றெடுத்தார்.
பதம் 4.10.3
உத்தமஸ் த்வ அக்ருதோத்வாஹோ ம்ருகயாயாம் பலீயஸா
ஹத: புண்ய-ஜனேனாத்ரௌ தன்-மாதாஸ்ய கதிம் கதா
உத்தம:—உத்தமன்; து—ஆனால்; அக்ருத—இன்றி; உத்வாஹ:— திருமணம்; ம்ருகயாயாம்—வேட்டைக்குச் சென்ற பொழுது; பலியஸா—மிகவும் வலிமையுடைய; ஹத:—கொல்லப்பட்டார்; புண்ய-ஜனேன—ஓர் யக்ஷனால்; அத்ரேன—இமயமலையில்; தத்—அவர்; மாதா—அன்னை (சுருசி); அஸ்ய—அவன் மைந்தன்; கதிம்—வழியில்; கதா—பின்தொடர்ந்தார்.
மணமாகாதிருந்த துருவ மன்னரின் இளைய சகோதரன் உத்தமன் ஓர் நாள் இமயமலைக்கு வேட்டையாடச் சென்றபொழுது ஓர் சக்திமிக்க யக்ஷனால் கொல்லப்பட்டான். அவன் அன்னையான சுருசியும் தன் மைந்தனைப் பின்பற்றி அவன் சென்றவழியே சென்றாள் (மரணமடைந்தாள்).
பதம் 4.10.4
த்ருவோ ப்ராத்ரு-வதம் ஸ்ருத்வா கோபாமர்ஷ-ஸீசார்பித:
ஜைத்ரம் ஸ்யந்தனம் ஆஸ்தாய கத: புண்ய-ஜனாலயம்
த்ருவ:—துருவ மன்னன்; ப்ராத்ரு-வதம்—தன் சகோதரன் மாண்ட; ஸ்ருத்வா—செய்தியைக் கேள்வியுற்று; கோப—கோபம்; அமர்ஷ—பழிவாங்க; ஸீசா—துக்கம்; அர்பித:—நிரப்பப்பட்டு; ஜைத்ரம்–வெற்றி கொள்ள; கத:—சென்றார்; புண்ய-ஜன-ஆலயம்—யக்ஷர்களின் நகரத்திற்கு.
தன் தம்பி உத்தமன் இமயமலையில் யக்ஷர்களால் கொல்லப்பட்டான் என்பதைக் கேள்விப்பட்ட துருவர் துயரமும் ஆத்திரமும் கொண்டார். உடனே அவர் தன் இரதத்தில் ஏறி யக்ஷர்களின் தலைநகரான அளகாபுரி நகரத்தை வெற்றி கொள்வதற்காகச் சென்றார்.
பதம் 4.10.5
கத்வோதீசீம் திஸம் ராஜா ருத்ரானுசர-ஸேவிதாம்
ததர்ஸ ஹிமவத்-த்ரோண்யாம் புரீம் குஹ்யக-ஸங்குலாம்
கத்வா—சென்று; உதீசீம்—வடக்கு; திஸம்—திசை; ராஜா—மன்னர் துருவன்; ருத்ர-அனுசர—ருத்திரனின் (சிவபெருமானின்) அடியவர்கள்; ஸேவிதாம்—வசிப்பவர்களை; ததர்ஸ—பார்த்து; ஹிமவத்—இமயமலை; த்ரோண்யம்—ஓர் பள்ளத்தாக்கில்; புரீம்—ஓர் நகர்; குஹ்யக பேய்த்தோற்றமுடையவர்கள்; ஸங்குலாம்—நிறைந்து.
துருவ மகாராஜா இமயமலையின் வடதிசையில் ஓர் பள்ளத்தாக்கின் உள் நகரில் முழுவதும் பேய்த்தோற்றமுடையவர்களைக் கண்டார். அவர்கள் சிவபெருமானின் அடியவர்கள் ஆவர்.
பதம் 4.10.6
தத்மௌ ஸங்கம் ப்ருஹத்-பாஹூ: கம் திஸஸ் சானுனாதயன்
யேனோத்விகன-த்ருஸ: க்ஷத்தர் உபதேவ்யோ ‘த்ரஸன் ப்ருஸம்
தத்மெள—ஊதினார்; ஸங்கமே—சங்கு; ப்ருஹத்-பாஹு:—வலிமை மிக்க கைகளையுடைய; கம்—வானம்; திஸ: ச—எல்லாத் திசைகளிலும்; அனுனாதயன்—எதிரொலி செய்வதற்குக் காரணமாகியது; யேன—எதனால்; உத்விக்ன-த்ருஸ:—உணர்ச்சி வயப்பட்டுத் தோன்றினர்; க்ஷத்த:—அன்பு விதுரனே; உபதேவ்ய—யக்ஷர்களின் மனைவியர்; அத்ரஸன்—அச்சமுற்றனர்; ப்ருஸம்—மிகுந்த.
மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: எனதன்பு விதுரனே, துருவ மன்னர் அழகாபுரியினை அடைந்தவுடன் தனது கையிலிருந்து சங்கினை ஊதினார். அவ்வொலியானது விண்ணிலும், மண்ணிலுள்ள அனைத்துத் திக்குகளிலும் எதிரொலித்தது. யக்ஷர்களின் மனைவியர் மிகுந்த அச்சமுற்றனர். அவர்கள் கண்களிலிருந்து அவர்கள் மிகுந்த உணர்ச்சிவயப்பட்டவர்களாக இருந்தனர் என்பது தெரிந்தது.
பதம் 4.10.7
ததோ நிஷ்க்ரம்ய பலின உபதேவ-மஹா-படா:
அஸஹந்தஸ் தன்-நினாதம் அபிபேதுர் உதாயுதா:
தத:—அதன்பின்னர்; நிஷ்க்ரம்ய—வெளியே வந்து; பலின:—மிகவும் சக்திவாய்ந்த; உபதேவ—குபேரனின்; மஹா-படா:—சிறந்த வீரர்கள்; அஸஹந்த:—தாங்க முடியாதவர்களாகி; தத்—சங்கின்; நினாதம்—ஒலியினை; அபிபோது:—தாக்கினர்; உதாயுதா:—பல்வேறு வகை ஆயுதங்களினால்.
ஓ, வீரரிற் சிறந்த விதுரனே, துருவ மன்னரின் சங்கொலி அதிர்வினைத் தாங்கவொண்ணாத யக்ஷ வீரர்கள் நகரின் வெளியே வந்து பல்வேறு ஆயுதங்களுடன் துருவ மன்னரைத் தாக்கினர்.
பதம் 4.10.8
ஸ தான் ஆபததோ வீர உக்ர-தன்வா மஹா-ரத:
ஏகைகம் யுகபத் ஸர்வான் அஹன் பானணஸ் த்ரிபிஸ் த்ரிபி:
ஸ:—துருவமகாராஜா; தான்—அவர்கள் அனைவரும்; ஆபதத:—அவர் மீது விழுந்து; வீர:—வீரன்; உக்ர-தன்வா—சிறந்த வில்வீரர்; மஹா-ரத:—அனேக இரத வீரர்களுடன் யுத்தம் செய்யக் கூடியவர்; ஏக-ஏகம்—ஒருவர் பின் ஒருவராய்; யுகபத்—ஒரே சமயத்தில்; ஸர்வன்—அனைவரும்; அஹன்—கொல்லப்பட்டனர்; பானண:—அம்புகளினால்; த்ரிபி: த்ரிபி:—மூன்றினால்.
மிகச் சிறந்த இரத வீரரும், வில்வீரருமான துருவர் ஒரே சமயத்தில் மூன்று அம்புகள் வீதம் எய்து அவர்களை அழிக்கத் தொடங்கினார்.
பதம் 4.10.9
தே வை லலாட-லக்னைஸ் னதர் இஷீபி: ஸர்வ ஏவ ஹி
மத்வா நிரஸ்தம் ஆத்மானம் ஆஸம்ஸன் கர்ம தஸ்ய தத்
தே—அவர்கள்; வை—உறுதியாக; லலாட-லக்னை:—தங்கள் தலையின்மேல் குறிவைக்கும்; தை:—அந்த; இஷீபி:—அம்புகள்; ஸர்வே—அனைவரும்; ஏவ—உறுதியாக; ஹி—தோல்வியின்றி; மத்வா—நினைத்து; நிரஸ்தம்—தோல்வியுற்று; ஆத்மானம்—அவர்கள்; ஆஸம்ஸன்—புகழ்ந்து; கர்ம—செயல்; தஸ்ய—அவரது; தத்—அந்த.
துருவரால் தங்கள் உயிருக்கு ஊறு நேரும் என்பதை அறிந்த யக்ஷ வீரர்கள் தாங்கள் தோல்வியுறுவது திண்ணம் என்ற முடிவிற்கு வந்தனர். ஆயினும் அவர்கள் சுத்த வீரர்களானதினால் துருவனின் வீரத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.
பதம் 4.10.10
தே ‘பி சாமும் அம்ருஷ்யந்த: பாத-ஸ்பர்ஸம் இவோரகா:
ஸரைர் அவித்யன் யுகபத் த்வி-குணம் ப்ரசிகீர்ஷவ:
தே—யக்ஷர்கள்; அபி—கூட; ச—மேலும்; அமும்—துருவனிடத்தில்; அம்ருஷ்யம்-த:—தாங்க முடியாதவர்களாக; பாத-ஸ்பர்ஸம்—பாதங்களினால் மிதிபட்டு; இவ—போன்று; உரக:—பாம்புகள்; ஸரை:—அம்புகளுடன்; அவித்யன்—தாக்கப்பட்டு; யுகபத்—ஒரே சமயத்தில்; த்வி-குணம்—இரண்டுமடங்கு; ப்ரசிகீர்ஷ-வ:—பதிலுக்குத் தாக்கினர்.
பிறர் காலினால் மிதிபடுவதைத் தாங்கவொண்ணா பாம்புகள் போல் துருவ மன்னரின் வீரத்தைத் தாங்க முடியாத யக்ஷர்கள், (இருமடங்கு அம்புகள்) ஒவ்வொரு வீரனும் ஆறு அம்புகளை ஒரே சமயத்தில் எய்தினர். இவ்வாறு அவர்கள் தங்கள் அருமையான வீரத்தினை வெளிப்படுத்தினர்.
பதங்கள் 4.10.11 – 4.10.12
தத: பரிக-நிஸ்த்ரிம்னஸ: ப்ராஸஸீல-பரஸ்வதை:
ஸக்தி ருஷ்திபிர் புஸீண்டீபிஸ் சித்ர-வாஜை: ஸரைர் அபி
அப்யவர்ஷன் ப்ரகுபிதா: ஸரதம் ஸஹ-ஸாரதிம்
இச்சந்தஸ் தத் ப்ரதீக்ரதும் அயுதானாம் த்ரயோதஸ
தத:—அதன்பின்னர்; பரிக—தண்டாயுதங்களுடன்; நிஷ்த்ரிம்ஸை:—வாட்களுடன்; ப்ராஸ-ஸீல—திரிசூலங்களுடன்; பரஸ்வதை:—ஈட்டிகள்; ஸக்தி—வேல்கம்பு: ருஷ்டிபி:—வேல்; புஷீண்டீபி:—மற்றும்; புஸீண்டீ—ஆயுதங்கள்; சித்ர-வாஜை:—கணையின் பின்புறம்; ஸரை:—அம்புகள்: அபி—மேலும்; அப்யவர்ஷன்—துருவன் மீது பொழிந்தனர்; ப்ரகுபிதா:—ஆத்திரங்கொண்டு; ஸ-ரதம்— அவரது ரதத்துடன்; ஸஹ-ஸாரதிம்—ரதசாரதியுடன்; இச்சந்த:—விருப்பங் கொண்டு; தத்—துருவனின் செயல்கள்; ப்ரதீகர்தும்—பதிலடி கொடுத்தல்; அயுதானம்—பத்தாயிரம்; த்ரேயோதஸ—பதின்மூன்று.
1,30,000 யக்ஷ வீரர்கள் அனைவரும் வலிமை மிக்கவர்கள் மிகுந்த ஆத்திரங்கொண்டு துருவரது அதிசயச் செயல்களைத் தோற்கடிக்க வேண்டுமென்று விரும்பினர். தங்களது முழுச்சக்தியுடன் அவர் மீதும் அவரது ரதம் மற்றும் ரத சாரதியின் மீதும் பல்வேறு விதமான இறகுகளைப் பின்புறம் கொண்ட கூரம்புகளையும், இரும்புத் தண்டாயுதங்களையும், வாட்களையும், திரிசூலங்களையும், குத்தீட்டிகளையும், வேற்கம்புகளையும் மற்றும் புஸீண்டி ஆயுதங்களையும் எறிந்தனர்.
பதம் 4.10.13
ஓளத்தானபாதி: ஸ ததா ஸஸ்த்ர-வர்ஷேண பூரிணா
ந ஏவாத்ருஸ்யதாச்சன்ன ஆஸரேண யதா கிரி:
ஒளத்தானபாதி:—துருவ மகாராஜா; ஸ:—அவர்; ததா—அந்நேரத்தில்: ஸஸ்த்ர-வர்ஷேண—ஆயுத மழையினால்; பூரிணா—தொடர்ச்சியான; ந—இல்லை; ஏவ—உறுதியாக; அத்ருஸ்யதா—தெரிந்தது; ஆச்சன்ன:—மூடப்பட்டு; ஆஸாரேண—இடைவிடாத மழை; யதா—போன்று; கிரி:—ஒரு மலை.
துருவமகாராஜா, உயர்ந்த மலையானது இடைவிடாத மழையினால் மூடப்பட்டிருந்தது போல் ஆயுத மழையினால் மூடப்பட்டிருந்தார்.
பதம் 4.10.14
ஹாஹா-காரஸ் ததைவாஸீத் ஸித்தானாம் திவி பஸ்யதாம்
ஹதோ ‘யம் மானவ: ஸீர்யோ மக்ன: புண்ய-ஜனார்ணவே
ஹாஹா கார:—அதிர்ச்சிக்கூக்குரல், ஐயோ! அந்தோ!; ததா—அந்நேரம்; ஏவ—உறுதியாக; ஆஸீத்—வெளிப்படுத்தினார்; ஹித்தானாம்——சித்தலோகத்தைச் சேர்ந்தவர்கள்; திவி—வானத்தில்; பஸ்யதாம்—யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்; ஹத:—கொல்லப்பட்டார்; அயம்—இந்த; மானவ:—மனுவின் பேரன்; ஸீர்ய:—சூரியன்; மக்ன:—அடைதல்; புண்யாஜன—யக்ஷர்களின்; அர்ணவே—மேற்கடலில்.
வானிலிருந்து இந்த யுத்தத்தினைப் பார்த்துக் கொண்டிருந்த சித்தர்கள் அனைவரும், துருவமகாராஜா எதிரிகளின் அம்பு மழையினால் மூழ்கடிக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சிக் கூக்குரலுடன், “மனுவின் பௌத்திரனான (பேரப்பிள்ளை) துருவன் தொலைந்தார்” என்றும் மேலும் சூரியனைப் போன்ற துருவ மன்னர் யக்ஷர்களின் மேலைக் கடலில் மூழ்கிவிட்டார் என்றும் அரற்றினார்.
பதம் 4.10.15
நதத்ஸீ யாது தானேஷீ ஐய-காஸிஷ்வ அதோ ம்ருதே
உததிஷ்டத் ரதஸ் தஸ்ய நீஹாராத் இவ பாஸ்கர:
நதத்ஸீ—ஆச்சரியத்துடன்; யாதுதானேஷீ—யக்ஷப் பேய்கள்; ஜயகாஸிஷீ—வெற்றி பெற்றோமென்றாலும்; அதோ—பின்னர்; ம்ருதே—யுத்தத்தில்; உததிஷ்டத்—தோன்றியவுடன்; ரத:—இரதம்; தஸ்ய—துருவ மகாராஜாவின்; நீஹாராத்—பனிமூட்டத்திலிருந்து; இவ—போன்று; பாஸ்கர:—சூரியன்.
யக்ஷர்கள் அடைந்த தற்காலிக வெற்றிக்கே, அவர்கள் துருவ மன்னரை வென்றுவிட்டதாக ஆச்சரியப்பட்டனர். சிறிது நேரத்தில் பனிமூட்டத்திலிருந்து சூரியன் வெளிவருவதுபோல் துருவரின் இரதம் வெளியே வந்தது.
பதம் 4.10.16
தனுர் விஸ்பூர்ஜயன் திவ்யம் த்விஷதாம் கேதம் உத்வஹன்
அஸ்த்ரௌகம் வ்யதமத் பாணைர் கனானீகம் இவானிவ:
தனு:—அவர் வில்; விஸ்பூர்ஜயன்—ஒலி; திவ்யம்—அதிசயம்; த்விஷதாம்—பகைவரின்; கேதம்—துக்கம்; உத்வஹன்—ஏற்படுத்தியது; அஸ்த்ர-ஓகம்—பல்வேறு ஆயுதங்களையும்; வ்யத்மத்—அவர் சிதறடித்தார்; பாணை:—அவர் அம்புகளினால்; கன—மேகங்கள்; அனீகம்—கூட்டம்: இவ—போன்று; அனில:—காற்று.
துருவர் எய்திய வில்லின் நாணொலியும், அம்பு செல்லும் ஓசையும், பகைவரின் உள்ளங்களைத் துயரத்தில் ஆழ்த்தியது. வானிலுள்ள மேகக் கூட்டத்தை சூறைக் காற்று சிதறடித்தது போல் அவர் தனது அம்புகளினால் பகைவரின் ஆயுதங்களைச் சிதறடித்தார்.
பதம் 4.10.17
தஸ்ய தே சாப-நிர்முக்தா பித்த்வா வர்மாணி ரக்ஷஸாம்
காயான் ஆவிலிஸீஸ் திக்மா கிரீன் அஸனயோ யதா
தஸ்ய—துருவனின்; தே——அவ்வம்புகள்: சாப—வில்லிலிருந்து; நிர்முக்தா:—விடுபட்டு; பித்த்வா—கிழித்தது; வர்மாணி—கேடயங்கள்; ரக்ஷஸாம்—ராட்சதர்களின்; ஹாயான்—உடல்கள்; ஆலிவிஸீ:—புகுந்தது; திக்மா:—கூர்மையான; கிரீம்—மலைகள்; அஸனய:—வஜ்ராயுதம்; யதா—போன்று.
தேவேந்திரனின் வஜ்ராயுதம் எவ்வாறு மலைகளை உடைத்து சின்னா பின்னப்படுத்தியதோ, அதுபோல் துருவரால் எய்யப்பட்ட கூரம்புகள் எதிரிகளின் கேடயங்களைத் துளைத்து அவர்களது உடல்களை கிழித்தன.
பதங்கள் 4.10.18 – 4.10.19
பல்லை: ஸஞ்சித்யமானானாம் ஸிரோபிஸ் சாரு-குண்டலை:
ஊருபிர் ஹேம-தாலானபர் தோர்பிர் வலய-வல்குபி:
ஹார-கேயூர-முகுடைர் உஷ்ணீனஷஸ் ச மஹா-தனை:
ஆஸ்த்ருதாஸ் தா ரண புவோ ரேஜீர் வீர-மனோ-ஹரா:
பல்லை:—அவரது அம்புகளினால்; ஸஞ்சித்யமானானாம்—துண்டு துண்டாக்கப்பட்ட யக்ஷர்கள்; ஸிரோபி:— தலைகளுடன்; சாரு—அழகான; குண்டலை:—குண்டலங்கள்; ஊருபி:—தொடைகளுடன்: ஹேம்-தாலானப:—தங்கப்பனைமரங்கள்; தோர்பி—கரங்களுடன்; வலய-வல்குபி:—கை வளைகளுடன்; ஹார—மாலைகளுடன்; கேயூர—கைப்பட்டை; முகுடை:—கிரீடங்கள்; உஷ்ணீஷை:—தலைப்பாகைகளுடன்; ச—மேலும்; மஹா-தனை:—மதிப்புயர்ந்தவை; ஆஸ்த்ருதா:—மூடப்பட்டு; தா:—அவை; ரண-புவ:—யுத்தக்களம்; ரேஜீ:—மினுங்கத் தொடங்கியது; வீர—வீரர்களின்; மன:-ஹரா:—மனதைக் கலங்கச் செய்யும்.
மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: நேசிப்பிற்குரிய விதுரனே, துருவ மன்னரின் அம்புகளால் துண்டிக்கப்பட்ட யக்ஷர்களின் தலைகளை தலைப்பாகைகளும், செவிக்குண்டலங்களும் அணி செய்திருந்தன. அவர்களின் கால்கள் பொற்பனைமரங்கள் போல் எழில்பெற்றுத் திகழ்ந்தன. அவர் தம் கைகளைக் காப்புகளும், வளைகளும் அலங்கரித்தன. மேலும் அவர்களின் சிரங்களில் பொன்னாலான கிரீடங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. செருக்களத்தில் சிதறியிருந்த இந்த ஆபரணங்களின் ஒளி வீரர்களின் மனங்களையும் கலங்க வைப்பதாக இருந்தது.
பதம் 4.10.20
ஹதாவஷிஷ்ட இதரே ரணாஜிராத்
ரகே ‘ஷா கணா: க்ஷத்ரிய-வர்ய-ஸாயனக:
ப்ராயோ விவ்ருக்ணாவயவா விதுத்ருஷர்
ம்ருகேந்த்ர-விக்ரீடித-யூதாபா இவ
ஹத-அவஷிஷ்டா:—கொல்லப்படாத வீரர்கள்; இதரே—பிறர்; ரண-அறிராத்—யுத்தக்களத்திலிருந்து; ரக்ஷ:-கணா:—யக்ஷர்கள்; க்ஷத்ரிய-வர்ய—சிறந்த சத்திரியர்கள் அல்லது வீரர்கள்; ஸாயனக:—அம்புகளினால்; ப்ராய:—பெரும்பாலான; விவ்ருக்ண—துண்டு துண்டாக; அவயவா:—அவர்கள் உடல்பாகங்கள்; விதுத்ருஷ:—சிதறி ஓடிய; ம்ருகேந்த்ர—சிங்கத்தினால்; விக்ரீடித—தோற்கடிக்கப்பட்ட; யூதபா:—யானைகள்; இவ—போன்று.
கொல்லப்படாத மீதி யக்ஷர்களின் உடல்கள் சிறந்த வீரரான துருவ மன்னனின் அம்புகளினால் பங்கப்படுத்தப்பட்டன. அதனால் அவர்கள் சிங்கத்தினால் சிதறடிக்கப்பட்ட யானைக் கூட்டங்கள் போல் சிதறி ஓடினர்.
பதம் 4.10.21
அபஸ்யமான: ஸ ததாததாயினம்
மஹா-ம்ருதே கஞ்சன மானவோத்தம:
புரீம் தித்ருக்ஷன்ன அபி நாலிஸத் த்லிஷாம்
ந மாயினாம் வேத சிகீர்ஷிதம் ஜன:
அபஷ்யமான:—பார்க்காத பொழுது; ஸ்:—துருவன்; ததா—அந்த சமயத்தில்; ஆததாயினம்—ஆயுதம் தரித்த எதிரி வீரர்கள்; மஹா-ம்ருதே—அப்பெரிய யுத்தக்களத்தில்; காஞ்சன்—யாரும்; மானவ-உத்தம:—மனிதரிற் சிறந்தோர்; புரீம்—நகரம்; தித்ருக்ஷன்—காண விரும்பி; அபி—இருந்தாலும்; ந ஆவிஸத்—நுழையவில்லை; த்விஷாம்—எதிரிகளின்; ந—இல்லை; மாயினாம்—மாயையினால்; வேத—அறிதல்; சிகீர்ஷிதம்—தந்திரம்; ஜன:—யாரேனும்.
மனிதகுலத்தின் மிகச் சிறந்த தோன்றலான துருவ மன்னர் அப்பெரிய யுத்தகளத்தில் தன் எதிரே ஆயுதம் தரித்த வீரர் யாருமே இல்லை என்பதை அறிந்தார். பின்னர் அளகாபுரி நகரைக் காணலாம் என விரும்பினார்; மாயமந்திரங்களில் தேர்ந்த யக்ஷர்களின் சூழ்ச்சியை எவரும் அறிந்திலர்’ என்று எண்ணிக் கொண்டார்.
பதம் 4.10.22
இதிப்ருவம்ஸ் சித்ர-ரத: ஸ்வ-ஸாரதிம்
யத்த: பரேஷாம் ப்ரதியோக-ஸங்கித:
ஸீஸ்ராவ ஸப்தம் ஜலதேர் இவேரிதம்
நபஸ்வதோ திக்ஷ ரஜோ ‘ன் வத்ருஸ்-யத
இதி—இவ்வாறு; ப்ருவன்—உரையாடிக்கொண்டு; சித்ர-ரத:— சித்திர இரதத்தையுடைய துருவ மன்னர்; ஸ்வ-ஸாரதிம்— தன் இரத சாரதியுடன்; யத்த:—எச்சரிக்கையுடன்; பரேஷாம்—எதிரிகளிடமிருந்து; ப்ரதியோக—எதிர்த்தாக்குதல்; ஸங்கித:—உணர்ந்து; ஸீஸ்ராவ—ஓசை; ஸப்தம்—ஓசை; ஜலதே:—கடலிலிருந்து; இவ—போன்று; ஈரிதம்—எதிரொலி; நபஸ்வத:—காற்றின் காரணத்தினால்; திக்ஷீ—எல்லாத் திசைகளிலும்; ரஜ:—புழுதி; அனு—பிறகு; அத்ருஸ்த—உணரப்பட்டது.
இதற்கிடையில் துருவர் தனது தேரோட்டியிடம் அவரது மாயா தந்திர எதிரிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பொழுது கடலால் சூழப்பட்டது போன்ற பயங்கர ஓசையினைக் கேட்டார். ஒரு பயங்கரமான புழுதிப்புயல் வானத்திலிருந்தும் அனைத்துத் திக்குகளில் இருந்தும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை அவர்கள் அறிந்தனர்.
பதம் 4.10.23
க்ஷணேனாச்சாதிதம் வியோம கனானீகேன ஸர்வத:
விஸ்புரத்-தடிதா திக்ஷ த்ராஸயத்-ஸ்தனயித்னுனா
க்ஷணேன—கணப்பொழுதில்; ஆச்சாதிதம்—மூடப்பட்டது; வ்யோம—வானம்; கன—இருண்ட மேகங்கள்; அனிகேன—கூட்டங் கூட்டமாக; ஸர்வத:—எங்கும்; விஸ்புரத்—மோதியது; தடிதா—மின்னலுடன்; திக்ஷீ—திசைகள் எல்லாம்; த்ராஸயத்—அச்சுறுத்தியது; ஸ்தனயித்னுனா—இடியுடன்.
கணப்பொழுதில் வானைக் கரிய மேகக் கூட்டங்கள் மூடியதும் பெருத்த இடியோசை கேட்டது. கண்ணைப் பறிக்கும் மின்னலுடன் கனமழை பெய்தது.
பதம் 4.10.24
வவ்ருஷீ ருதிரௌகாஸ்ருக்-பூய-விண்-மூத்ர-மேதஸ:
நிபேதுர் ககனாத் அஸ்ய கபந்தானி அக்ரதோ ‘கை
வவ்ருஷீ:—பெய்தது; ருதிர—இரத்தம்; அக—வெள்ளம்; அங்கு—சளி; பூய—சீழ்; மூத்ர—மூத்திரம்; மேதஸ:—எலும்பு மஜ்ஜை; நிபேது:—விழத் தொடங்கியது; ககனாத்—வானிலிருந்து; அஸ்ய—துருவனின்; கபந்தானி—உடல் முண்டங்கள்; அந்ரத:—முன்னர்; அகை—ஓ குற்றமில்லாத விதுரனே.
குற்றமில்லாத விதுரனே, அம்மழையில், இரத்தமும் சளியும், சீழும், மலமும், மூத்திரமும், எலும்பும், நிணமும் ஏராளமாகக் கலந்து துருவனின் முன்னால் வீழ்ந்தன. மேலும் தலையற்ற முண்டங்கள் வானத்திலிருந்து கீழே வீழ்ந்தன.
பதம் 4.10.25
தத: கே ‘த்ருஸ்யத கிரிர் நிபேது: ஸர்வதோ-திஸம்
கதா-பரிசு-நிஸ்த்ரிம்ஸ-முஸலா: ஸாஸ்ம-வர்ஷிண:
தத:—அதன்பிறகு; கே—வானத்தில்; அத்ருஸ்யத—தென்பட்டது; கிரி:—ஓர் மலை; நிபேது:—கீழே வீழ்ந்தன; ஸர்வத:-திஸம்—எல்லாத் திசைகளில் இருந்தும்; கதா—கதாயுதங்களும்; பரிசு—இரும்புத் தண்டாயுதங்களும்; நிஸ்த்ரிம்ஸ—வாட்களும்; முஸலா:—குண்டாந்தடிகளும்; ஸ-அஸ்ம—பாறாங்கற்களும்; வர்ஷிண:—மழையாகப் பொழிந்தன.
அடுத்து வானில் ஒரு பெரிய மலை தென்பட்டது. அனைத்துத் திக்குகளிலிருந்தும் ஆலங்கட்டிகளும், கதாயுதங்களும், இரும்புத் தண்டாயுதங்களும், வாட்களும், குண்டாந்தடிகளும் பெரிய பாறாங்கற்களும் பறந்து வந்தன.
பதம் 4.10.26
அஹயோ ‘ஸனி-நி: ஸ்வாஸா வமந்தோ ‘க்னிம் ருஷாக்ஷிபி:
அப்யதாவன் கஜா மத்தா: ஸிம்ஹ-வ்யாக்ராஸ் ச யூதஸ:
அஹய:—நாகங்கள்; அஸனி—இடி; நி: ஸ்வாஸா:—சீறிக் கொண்டு; வமந்த—வாந்தியெடுத்தல்; அக்னிம்—அக்கினி; ருஷா-அக்ஷிபி:—கோபப்பார்வையுடன்; அப்பயதாவன்—முன்னால் வந்தது; கஜா:—யானைகள்; மத்தா:—மதம்பிடித்த; ஸிம்ஹ—சிங்கங்கள்; வ்யாக்ரா:—புலிகள்; ச—மேலும்; யூதஸ:—கூட்டங்கூட்டமாக.
துருவ மன்னர் மேலும், பயங்கரமான பாம்புகள் ஆத்திரங் கொண்ட விழிகளுடன், வாயிலிருந்து நெருப்பை உமிழ்ந்து கொண்டு தன்னை விழுங்க வருவதைக் கண்டார். அவற்றுடன் கூட்டங் கூட்டமாக மதங் கொண்ட யானைகளும், சிங்கங்களும், புலிகளும் வந்தன.
பதம் 4.10.27
ஸமுத்ர ஊர்மிபிர் பீம: ப்லாவயன் ஸர்வதோ புவம்
ஆஸஸாத மஹா-ஹ்ராத: கல்பாந்த இவ பீஷண
ஸமுத்ர:—சமுத்திரம்; ஊர்மிபி:—பேரலைகளுடன்; பீம:—சீற்றமுடன்; ப்லாவ-யன்—வெள்ளம்; ஸர்வத:—எல்லாத் திக்குகளிலும்; புவம்—பூமியில்; ஆஸஸாத—முன்னர் வந்தன; மஹா-ஹ்ராத:—பெருத்த ஒலி எழுப்பிய வண்ணம்; கல்ப-அந்தே—கல்ப இறுதியில்; இவ—போன்று; பீஷண:— பயங்கரமாக.
கல்பத்தின் இறுதியில் முழுப்பிரபஞ்சமும் அழிக்கப்படுவது போல் ஆழிப்பேரலைகளின் பெருத்த ஓசையுடன் அச்சந்தரும் வண்ணம் ஒரு சமூத்திரமே அவர் முன்னர் வந்தது.
பதம் 4.10.28
ஏவம்-விதானி அனேகானி த்ராஸனானி அமனஸ்வினாம்
ஸஸ்ரு ஜீஸ் திக்ம-கதய ஆஸீர்யா மாயயாஸீரா:
ஏவம்-விதானி—(ஆச்சரியத்திற்குரிய) இது போன்று; அனேகானி—பல்வகை வேறுபாடுகளில்; த்ராஸனானி—அஞ்சுகின்ற; அமனஸ்வினாம்—மதிகுறைந்தோர்க்கு; ஸஸ்ருஜீ:—அவர்கள் உண்டாக்கினர்; திக்ம-கதய:—கொடிய இயற்கையின்; ஆஸீர்யா—அசுரத்தனமான; மாயயா—மாயாதந்திரத்தினால்; அஸீரா:—அசுரர்கள்.
யக்ஷர்கள் என்னும் அசுரர்கள் இயற்கையிலேயே மிகவும் கொடியவர்கள். அவர்களது அசுரத்தனமான மாய தந்திரங்களினால் இது போன்ற வியப்பிற்குரிய அதிசயக் காட்சிகளை உண்டுபண்ணி புத்தி குறைந்தவர்களை அச்சுறுத்துவர்.
பதம் 4.10.29
த்ருவே ப்ரயுக்தாம் அஸீரைஸ் தாம் மாயாம் அதிதுஸ்தராம்
நிஸம்ய தஸ்ய முனய: ஸம் ஆஸம்ஸன் ஸமாகதா:
த்ருவே—துருவனுக்கெதிராக; ப்ரயுக்தாம்—பீடிக்கபட்ட; அஸீரை:—அசுர்களினால்; தாம்—அந்த; மாயாம்—மாயை; அதி-துஸ்தராம்—மிகப் பயங்கரமானது; நிஸம்ய—கேள்விப்பட்டு; தஸ்ய—அவரது; முனய:—மகா முனிவர்கள்; ஸம்—நல்யோகம்; ஆஸம்ஸன்—ஊக்கப்படுத்துவதற்காக; ஸீமாகதா:——கூடினர்.
துருவ மன்னர் அசுரர்களின் மாயவித்தைகளினால் சூழப்பட்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட மகாமுனிவர்கள் அனைவரும் உடனே அவருக்கு மங்களகரமான ஊக்கத்தினையும் உற்சாகத்தினையும் அளிப்பதற்காக அங்கே ஒருங்கு கூடினர்.
பதம் 4.10.30
முனய ஊசு:
ஒளத்தானபாத பகவாம்ஸ் தவ ஸார்ங்கதன்வா
தேவ: க்ஷிணோத்வ அவனதார்தி ஹரோ விபக்ஷான்
யன் நாமதேயம் அபிதாய நிஸம்ய சாத்தா
லோகோ ‘ஞ்ஜஸா தரதி துஸ்தரம் அங்க ம்ருத்யும்
முனய ஊசு:—முனிவர்கள் கூறினர்; ஓளத்தானபாத—ஓ மன்னர் உத்தானபாதனின் புதல்வனே; பகவான்—முழுமுதற் கடவுள்; தவ—உனது; ஸார்ங்க-தன்வா—சார்ங்கம் என்னும் வில்லையுடையவர்; தேவ:—பகவான்; க்ஷிணோது—அவர் கொல்வார்; அவதை—சரண் புகுந்த ஆத்மாவின்; ஆர்தி—துன்பங்கள்; ஹர:—நீக்குவார்; விகக்ஷான்—எதிரிகள்; யம்—எவரது; நாமதேயம்—புனித நாமத்தினை; அகிதாய—உச்சரித்தால்; நிஸம்ய—கேட்டு; ச—மேலும்; அத்தா—உடனே; லோக:—மனிதர்கள்; அஞ்ஜஸா—முழுவதும்; தரதி—கடப்பர்; துஸ்தரம்—கடப்பதற்கரிய; அங்க—ஓ, துருவனே; ம்ருத்யும்—மரணம்.
அனைத்து முனிவர்களும் கூறினர்: ஓ, மன்னர் உத்தானபாதனின் மைந்தனே, ‘சார்ங்கதன்வா’ என்றழைக்கப்படும் முழுமுதற் கடவுள் தனது பக்தர்களின் துன்பங்களை நீக்குபவராவார். அவர் உன் பகைவர்களை அழிப்பாராக! பகவானின் புனித நாமமும் பகவானைப் போன்றே சக்தியுடையதாகும். ஆகையினால் அவரது புனித நாமத்தினைக் கேட்பதினாலும் ஓதுவதினாலும் பலர் பயங்கரமான மரணத்திலிருந்து முற்றிலும் எளிதாகப் பாதுகாக்கப்படுவர். இவ்வாறு ஒரு பக்தன் காப்பாற்றப்படுகிறான்.
ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “துருவ மகாராஜா யக்ஷர்களுடன் போர் புரிதல்” எனும் தலைப்பை கொண்ட பத்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.