அத்தியாயம் – 10
துருவ மகாராஜன் யக்ஷர்களுடன் போரிடுதல்
பதம் 4.10.1 : மகாமுனிவர் மைத்ரேயர் கூறினார்: அன்பார்ந்த விதுரனே, அதன் பிறகு துருவ மன்னர் பிரஜாபதி சிசுமாரனின் புதல்வியான பிரமி என்பவளை மணந்தார். அவள் கல்பன் மற்றும் வத்ஸரன் என்னும் இரு புதல்வர்களை ஈன்றெடுத்தாள்.
பதம் 4.10.2 : வாயு தேவனின் புதல்வியான அலா என்பவளை மிகவும் ஆற்றல் பெற்ற துருவ மன்னர் தன் மற்றொரு மனைவியாக அடைந்தார். அவள் மூலம் துருவ மன்னர் உத்கலன் என்ற புதல்வனையும், ஓர் அழகான புதல்வியையும் பெற்றெடுத்தார்.
பதம் 4.10.3 : மணமாகாதிருந்த துருவ மன்னரின் இளைய சகோதரன் உத்தமன் ஓர் நாள் இமயமலைக்கு வேட்டையாடச் சென்றபொழுது ஓர் சக்திமிக்க யக்ஷனால் கொல்லப்பட்டான். அவன் அன்னையான சுருசியும் தன் மைந்தனைப் பின்பற்றி அவன் சென்றவழியே சென்றாள் (மரணமடைந்தாள்).
பதம் 4.10.4 : தன் தம்பி உத்தமன் இமயமலையில் யக்ஷர்களால் கொல்லப்பட்டான் என்பதைக் கேள்விப்பட்ட துருவர் துயரமும் ஆத்திரமும் கொண்டார். உடனே அவர் தன் இரதத்தில் ஏறி யக்ஷர்களின் தலைநகரான அளகாபுரி நகரத்தை வெற்றி கொள்வதற்காகச் சென்றார்.
பதம் 4.10.5 : துருவ மகாராஜா இமயமலையின் வடதிசையில் ஓர் பள்ளத்தாக்கின் உள் நகரில் முழுவதும் பேய்த்தோற்றமுடையவர்களைக் கண்டார். அவர்கள் சிவபெருமானின் அடியவர்கள் ஆவர்.
பதம் 4.10.6 : மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: எனதன்பு விதுரனே, துருவ மன்னர் அழகாபுரியினை அடைந்தவுடன் தனது கையிலிருந்து சங்கினை ஊதினார். அவ்வொலியானது விண்ணிலும், மண்ணிலுள்ள அனைத்துத் திக்குகளிலும் எதிரொலித்தது. யக்ஷர்களின் மனைவியர் மிகுந்த அச்சமுற்றனர். அவர்கள் கண்களிலிருந்து அவர்கள் மிகுந்த உணர்ச்சிவயப்பட்டவர்களாக இருந்தனர் என்பது தெரிந்தது.
பதம் 4.10.7 : ஓ, வீரரிற் சிறந்த விதுரனே, துருவ மன்னரின் சங்கொலி அதிர்வினைத் தாங்கவொண்ணாத யக்ஷ வீரர்கள் நகரின் வெளியே வந்து பல்வேறு ஆயுதங்களுடன் துருவ மன்னரைத் தாக்கினர்.
பதம் 4.10.8 : மிகச் சிறந்த இரத வீரரும், வில்வீரருமான துருவர் ஒரே சமயத்தில் மூன்று அம்புகள் வீதம் எய்து அவர்களை அழிக்கத் தொடங்கினார்.
பதம் 4.10.9 : துருவரால் தங்கள் உயிருக்கு ஊறு நேரும் என்பதை அறிந்த யக்ஷ வீரர்கள் தாங்கள் தோல்வியுறுவது திண்ணம் என்ற முடிவிற்கு வந்தனர். ஆயினும் அவர்கள் சுத்த வீரர்களானதினால் துருவனின் வீரத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.
பதம் 4.10.10 : பிறர் காலினால் மிதிபடுவதைத் தாங்கவொண்ணா பாம்புகள் போல் துருவ மன்னரின் வீரத்தைத் தாங்க முடியாத யக்ஷர்கள், (இருமடங்கு அம்புகள்) ஒவ்வொரு வீரனும் ஆறு அம்புகளை ஒரே சமயத்தில் எய்தினர். இவ்வாறு அவர்கள் தங்கள் அருமையான வீரத்தினை வெளிப்படுத்தினர்.
பதங்கள் 4.10.11 – 4.10.12 : 1,30,000 யக்ஷ வீரர்கள் அனைவரும் வலிமை மிக்கவர்கள் மிகுந்த ஆத்திரங்கொண்டு துருவரது அதிசயச் செயல்களைத் தோற்கடிக்க வேண்டுமென்று விரும்பினர். தங்களது முழுச்சக்தியுடன் அவர் மீதும் அவரது ரதம் மற்றும் ரத சாரதியின் மீதும் பல்வேறு விதமான இறகுகளைப் பின்புறம் கொண்ட கூரம்புகளையும், இரும்புத் தண்டாயுதங்களையும், வாட்களையும், திரிசூலங்களையும், குத்தீட்டிகளையும், வேற்கம்புகளையும் மற்றும் புஸீண்டி ஆயுதங்களையும் எறிந்தனர்.
பதம் 4.10.13 : துருவமகாராஜா, உயர்ந்த மலையானது இடைவிடாத மழையினால் மூடப்பட்டிருந்தது போல் ஆயுத மழையினால் மூடப்பட்டிருந்தார்.
பதம் 4.10.14 : வானிலிருந்து இந்த யுத்தத்தினைப் பார்த்துக் கொண்டிருந்த சித்தர்கள் அனைவரும், துருவமகாராஜா எதிரிகளின் அம்பு மழையினால் மூழ்கடிக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சிக் கூக்குரலுடன், “மனுவின் பௌத்திரனான (பேரப்பிள்ளை) துருவன் தொலைந்தார்” என்றும் மேலும் சூரியனைப் போன்ற துருவ மன்னர் யக்ஷர்களின் மேலைக் கடலில் மூழ்கிவிட்டார் என்றும் அரற்றினார்.
பதம் 4.10.15 : யக்ஷர்கள் அடைந்த தற்காலிக வெற்றிக்கே, அவர்கள் துருவ மன்னரை வென்றுவிட்டதாக ஆச்சரியப்பட்டனர். சிறிது நேரத்தில் பனிமூட்டத்திலிருந்து சூரியன் வெளிவருவதுபோல் துருவரின் இரதம் வெளியே வந்தது.
பதம் 4.10.16 : துருவர் எய்திய வில்லின் நாணொலியும், அம்பு செல்லும் ஓசையும், பகைவரின் உள்ளங்களைத் துயரத்தில் ஆழ்த்தியது. வானிலுள்ள மேகக் கூட்டத்தை சூறைக் காற்று சிதறடித்தது போல் அவர் தனது அம்புகளினால் பகைவரின் ஆயுதங்களைச் சிதறடித்தார்.
பதம் 4.10.17 : தேவேந்திரனின் வஜ்ராயுதம் எவ்வாறு மலைகளை உடைத்து சின்னா பின்னப்படுத்தியதோ, அதுபோல் துருவரால் எய்யப்பட்ட கூரம்புகள் எதிரிகளின் கேடயங்களைத் துளைத்து அவர்களது உடல்களை கிழித்தன.
பதங்கள் 4.10.18 – 4.10.19 : மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: நேசிப்பிற்குரிய விதுரனே, துருவ மன்னரின் அம்புகளால் துண்டிக்கப்பட்ட யக்ஷர்களின் தலைகளை தலைப்பாகைகளும், செவிக்குண்டலங்களும் அணி செய்திருந்தன. அவர்களின் கால்கள் பொற்பனைமரங்கள் போல் எழில்பெற்றுத் திகழ்ந்தன. அவர் தம் கைகளைக் காப்புகளும், வளைகளும் அலங்கரித்தன. மேலும் அவர்களின் சிரங்களில் பொன்னாலான கிரீடங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. செருக்களத்தில் சிதறியிருந்த இந்த ஆபரணங்களின் ஒளி வீரர்களின் மனங்களையும் கலங்க வைப்பதாக இருந்தது.
பதம் 4.10.20 : கொல்லப்படாத மீதி யக்ஷர்களின் உடல்கள் சிறந்த வீரரான துருவ மன்னனின் அம்புகளினால் பங்கப்படுத்தப்பட்டன. அதனால் அவர்கள் சிங்கத்தினால் சிதறடிக்கப்பட்ட யானைக் கூட்டங்கள் போல் சிதறி ஓடினர்.
பதம் 4.10.21 : மனிதகுலத்தின் மிகச் சிறந்த தோன்றலான துருவ மன்னர் அப்பெரிய யுத்தகளத்தில் தன் எதிரே ஆயுதம் தரித்த வீரர் யாருமே இல்லை என்பதை அறிந்தார். பின்னர் அளகாபுரி நகரைக் காணலாம் என விரும்பினார்; மாயமந்திரங்களில் தேர்ந்த யக்ஷர்களின் சூழ்ச்சியை எவரும் அறிந்திலர்’ என்று எண்ணிக் கொண்டார்.
பதம் 4.10.22 : இதற்கிடையில் துருவர் தனது தேரோட்டியிடம் அவரது மாயா தந்திர எதிரிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பொழுது கடலால் சூழப்பட்டது போன்ற பயங்கர ஓசையினைக் கேட்டார். ஒரு பயங்கரமான புழுதிப்புயல் வானத்திலிருந்தும் அனைத்துத் திக்குகளில் இருந்தும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை அவர்கள் அறிந்தனர்.
பதம் 4.10.23 : கணப்பொழுதில் வானைக் கரிய மேகக் கூட்டங்கள் மூடியதும் பெருத்த இடியோசை கேட்டது. கண்ணைப் பறிக்கும் மின்னலுடன் கனமழை பெய்தது.
பதம் 4.10.24 : குற்றமில்லாத விதுரனே, அம்மழையில், இரத்தமும் சளியும், சீழும், மலமும், மூத்திரமும், எலும்பும், நிணமும் ஏராளமாகக் கலந்து துருவனின் முன்னால் வீழ்ந்தன. மேலும் தலையற்ற முண்டங்கள் வானத்திலிருந்து கீழே வீழ்ந்தன.
பதம் 4.10.25 : அடுத்து வானில் ஒரு பெரிய மலை தென்பட்டது. அனைத்துத் திக்குகளிலிருந்தும் ஆலங்கட்டிகளும், கதாயுதங்களும், இரும்புத் தண்டாயுதங்களும், வாட்களும், குண்டாந்தடிகளும் பெரிய பாறாங்கற்களும் பறந்து வந்தன.
பதம் 4.10.26 : துருவ மன்னர் மேலும், பயங்கரமான பாம்புகள் ஆத்திரங் கொண்ட விழிகளுடன், வாயிலிருந்து நெருப்பை உமிழ்ந்து கொண்டு தன்னை விழுங்க வருவதைக் கண்டார். அவற்றுடன் கூட்டங் கூட்டமாக மதங் கொண்ட யானைகளும், சிங்கங்களும், புலிகளும் வந்தன.
பதம் 4.10.27 : கல்பத்தின் இறுதியில் முழுப்பிரபஞ்சமும் அழிக்கப்படுவது போல் ஆழிப்பேரலைகளின் பெருத்த ஓசையுடன் அச்சந்தரும் வண்ணம் ஒரு சமூத்திரமே அவர் முன்னர் வந்தது.
பதம் 4.10.28 : யக்ஷர்கள் என்னும் அசுரர்கள் இயற்கையிலேயே மிகவும் கொடியவர்கள். அவர்களது அசுரத்தனமான மாய தந்திரங்களினால் இது போன்ற வியப்பிற்குரிய அதிசயக் காட்சிகளை உண்டுபண்ணி புத்தி குறைந்தவர்களை அச்சுறுத்துவர்.
பதம் 4.10.29 : துருவ மன்னர் அசுரர்களின் மாயவித்தைகளினால் சூழப்பட்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட மகாமுனிவர்கள் அனைவரும் உடனே அவருக்கு மங்களகரமான ஊக்கத்தினையும் உற்சாகத்தினையும் அளிப்பதற்காக அங்கே ஒருங்கு கூடினர்.
பதம் 4.10.30 : அனைத்து முனிவர்களும் கூறினர்: ஓ, மன்னர் உத்தானபாதனின் மைந்தனே, ‘சார்ங்கதன்வா’ என்றழைக்கப்படும் முழுமுதற் கடவுள் தனது பக்தர்களின் துன்பங்களை நீக்குபவராவார். அவர் உன் பகைவர்களை அழிப்பாராக! பகவானின் புனித நாமமும் பகவானைப் போன்றே சக்தியுடையதாகும். ஆகையினால் அவரது புனித நாமத்தினைக் கேட்பதினாலும் ஓதுவதினாலும் பலர் பயங்கரமான மரணத்திலிருந்து முற்றிலும் எளிதாகப் பாதுகாக்கப்படுவர். இவ்வாறு ஒரு பக்தன் காப்பாற்றப்படுகிறான்.