அத்தியாயம் – 9
துருவ மகாராஜன் இல்லம் திரும்புதல்
பதம் 4.9.1
மைத்ரேய உவாச
த ஏவம் உத்ஸன்ன-பயா உருக்ரமே
க்டுதாவனாமா: ப்ரயயுங் த்ரி-விற்டபம்
ஸஹஸ்ராஸீணீர்ஷாபி ததோ கர்துமதா
மதோர் வனம் ப்தெய-தித்க்க்ஷேயா கத:
மைத்ரேய: உவாச—மாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்; தே—தேவர்கள்; ஏவம்—இவ்வாறு; உத்ஸன்ன-பயா:—தமது அனைத்து அச்சங்களில் இருந்தும் விடுபட்டு; உருக்ரமே—முழுமுதற்கடவுளுக்கு; அவரது செயல்கள் சிறப்பானவையாகும்; க்ருத—அவனாமா:—அவர்கள் அவரைத் தொழுது; ப்ரயயு:—திரும்புச் சென்றனர்; த்ரி-விஷ்டபம்—அவர்களுக்குரிய தேவலோகங்களுக்கு; ஸகஸ்ரஸீர்ஷா அபி—சவகஸ்ரஸீர்ஷா என்று அறியப்படுபவரான முழுமுதற் கடவுள்; தத:—அங்கிருந்து; கருத்மதா—கருடனின் மீது அமர்ந்து கொண்டு; மதோ வனம்—மதுவனம் எனப்படும் வனம்; ப்ருத்ய—தொண்டன்; தித்க்க்ஷேயா—அவரைக் காண விரும்பி; கத—சென்றார்.
மாமுனிவர் மைத்ரேயர் விதுரரிடம் கூறினார்: முழுமுதற் கடவுளின் உறுதிமொழியினைக் கேட்டுத் தேவர்கள் அனைவரும் தங்கள் அச்சம் நீங்கி அவரைத் தொழுது தங்களுக்குரிய தேவலோகங்களுக்குத் திரும்பிச் சென்றனர். சகஸ்ரஸீர்ஷா அவதாரத்திற்கும் தனக்கும் வேறுபாடில்லாத பகவான் தனது கருட வாகனத்தின் மீது அமர்ந்து தனது தொண்டனான துருவனைக் காண்பதற்கு மதுவனம் காட்டிற்குச் சென்றார்.
பதம் 4.9.2
ஸ வை தியா யோக-விபாக-தீவ்ரயா
ஹ்ருத்-பத்ம-கோஸே ஸ்புரிதம் தடித்-ப்ரபம்
திரோஹிதம் ஸஹஸைவோல க்ஷ்யி
பஹி:-ஸ்திதம் தத்-அவஸ்தம் தகர்ஸ
ஸ:—துருவமகாராஜா; வை—கூட; தியா—தியானத்தினால்; யோக-விபாக-திவ்ரயா—யோக முறையின் முதிர்ந்த உணர்வுநிலை; ஹ்ருத்—கிருதயம்; பத்ம-கோஸே—தாமரைமலரின்; ஸ்புரிதம்—வெளிப்படுத்தப்பட்டு; தடித்-ப்ரபம்—மின்னலைப் போன்ற புத்திக் கூர்மை; திரோஹிதம்—மறைந்தது; ஸஹஸா—கண்ணிமைக்கும் நேரத்தில்; ஏவ—கூட; உபல்ய—நினைந்து; பஹி:-ஸ்திதம்—புறம்பாக இருந்தது; தத்-அவஸ்தம்—அதேதோற்றத்தில்; ததர்ஷ—காண முடிந்தது.
துருவ மகாராஜா தனது மனதில் ஆழ்ந்து தியானித்த பகவானின் உருவமானது மின்னலைப் போன்று ஒளிமயமானது. கண நேரத்தில் அவர் மனதினின்று அது மறைந்தது. அதனால் அவர் தியானம் தடைப்பட்டது. துருவன் குழப்பமடைந்தார். ஆனால் அவர் விழிதிறந்து பார்த்தபொழுது அவர் மனதிலிருந்த அதே முழுமுதற் கடவுள் அவர் கண்ணெதிரே நின்று கொண்டிருந்தார்.
பதம் 4.9.3
தத்-தர் ஸனேனாகத-ஸாத்வஸ: கூதிதாவ்
அவந்ததாங்கம் விநமய்ய தண்டவத்
த்ருக்ப்யாம் ப்ரபஸ்யன் ப்ரபிபன்ன இவார் பகஸ்
கம்கபன்ன இவாஸ்யேன புஜைர் இவாஸ்விஷன்
தத்-தர்ஸனேன—இறைவனைப் பார்த்த பிறகு; ஆகத-ஸாத்வஸ:—துருவ மன்னன் மிகுந்த மிகுந்த குழப்பமுற்று; க்ஷிதௌ—நிலத்தில்; அவந்தத—தொழுதார்; அங்கம்—அவரது உடல்; விநமய்ய—நெடுஞ்சாண்கிடையாக; தண்டவத்—கழியினைப் போன்று; த்ருக்ப்யாம்—தனது விழிகளினால்; ப்ரபஸ்யன்—நோக்கி; ப்ரபிபன்—பருகினார்; திவ—போன்று; அர்பக:—அச்சிறுவன்; கம்பன்—முத்தமிட்டு; இவ—போன்று; ஆஸ்யேன—தனது வாயுடன்; புஜை:—தனது கைகளுடன்; திவ—போன்று; ஆஸ்விஷன்—தழுவிக்கொண்டார்.
தன் கண்ணெதிரே பகவானைக் கண்டவுடன் துருவ மன்னன் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி அவருக்கு மரியாதைகளையும், வணக்கங்களையும் செலுத்தி நெடுஞ்சாண்கிடையாக அவர் கால்களில் வீழ்ந்து அவர் மீது கொண்ட அன்பினால் அப்படியே கரைந்து போனார். துருவ மன்னன் மெய்மறந்த நிலையில் பகவானை நோக்கித் தன் கண்களினாலேயே அவர் எழிலினைப் பருகினார். பகவானது திருவடித் தாமரைகளைத் தன் இதழ்களினால் முத்தமிட்டு அவரைத் தன் இரு கரங்களினாலும் கட்டித் தழுவிக் கொண்டார்.
பதம் 4.9.4
ஸ தம் விவக்ஷந்தம் அதத்-விதம் ஹரிர்
ஜ்ஞாத்வாஸ்ய ஸர்வஸ்ய சஹ்ருதி அவஸ்தித:
க்ருதாஞ்ஜலிம் ப்ரஹ்மமயேன கம்புனா
பஸ்பர்ஸ பாலம் க்பேயா கபோலே
ஸ:—முழுமுதற் கடவுள்; தம்—துருவமன்னர்; விவக்ஷந்தம்—அவரது தன்மைகளைப் பற்றி பிரார்த்திக்க விரும்பினார்; அதத்-விதம்—அதில் அனுபவம் இல்லை; ஹரி:—முழுமுதற் கடவுள்; ஜ்ஞாத்வா—புரிந்து கொண்டு; அஸ்ய—துருவ மகாராஜாவின்; ஸ்ர்வஸ்ய—அனைவரின்; ச—மேலும்; ஹ்ருதி—இதயத்தில்; அவஸ்தித:—இருக்கின்ற; க்ருத-அஞ்ஜலிம்—கூப்பியக் கரங்களுடன் இருந்து; ப்ரஹ்ம்-மயேன:—வேத மந்திரங்களினிடத்துள்ள உறுதி; கம்புனா—அவரது சங்கினால்; பஸ்பர்ஸ—தொட்டார்; பாலம்—சிறுவன்; க்ருபயா—அளவற்ற கருணையினால்; கபோலே—முன்தலையில்.
துருவ மன்னர் சிறுவனாக இருந்தபோதிலும் முழுமுதற் கடவுளைச் சிறந்த வார்த்தைகளினால் வழிபட வேண்டுமென்று விரும்பினார். அவர் அனுபவமில்லாதவர். எனவே அவரால் உடனே தன்னிலைக்கு வர முடியவில்லை. அனைவரது உள்ளங்களிலும் வீற்றிருக்கும் முழுமுதற் கடவுள், துருவ மன்னனின் இக்கையறு நிலையினைப் புரிந்து கொண்டார். அவர் தமது காரணமற்றக் கருணையினால் தன்முன்னே குவித்த கைகளுடன் நின்று கொண்டிருந்த துருவ மன்னனின் முன் தலையினைத் தன் கையிலிருந்த சங்கினால் தொட்டார்.
பதம் 4.9.5
ஸ வை தனதவ ப்ரதிபாதிதாம் கிரம்
தைவீம் பரிஜ்ஞாத-பராத்ம-நிர்ணய:
தம்-பக்தி-பாவோ சுரய்யக்குணாத் அஸத்வரம்
பரிஸ்ருதோடு-ஸ்ரவஸம் த்ருவ–ஹிதி
ஸ:—துருவ மகாராஜா; வை—உறுதியாக; ததா—அச்சமயம்; ஏவ—போன்று; க்ரதிபாதி—தாம் எய்தினார்; கிரம்—பேச்சு; தைவீம்—உன்னதமான; பரிஜ்ஞாத—புரிந்து கொண்டு; பர-ஆத்மா—பரமாத்மாவின்; நிர்ணய:—முடிவு; தம்—பகவானுக்கு; பக்தி-பாவ:—பக்தித் தொண்டில் இருந்து; அப்யக்குருணாத்—பிரார்த்தனைகளைச் செலுத்தி; அஸத்வரம்—எவ்விதக் குழப்பமான முடிவுமின்றி; பரிஸ்ருத—மிகவும் அறியப்பட்ட; உரு-ஸ்ரவஸம்—அவரது புகழ்; துருவ-ஹிதி:—துருவனது உலகம், அது அழிவற்றது.
அச்சமயத்தில் துருவ மன்னர் வேதங்களின் முடிவினையும் முழு மெய்ப்பொருளின் உணர்வினையும், அதற்கு உயிர்களுடன் உள்ள உறவினையும் நன்கு அறிந்து கொண்டார். மிகவும் பந்துப்பட்ட புகழினை உடைய பரமபுருஷ பகவானுக்குரிய பக்தித் தொண்டிற்கேற்ப யுக அழிவுக் காலத்தில் கூட அழியாத உலகத்தை எதிர்காலத்தில் பெறப்போகும் துருவ மன்னர் தமது ஆழ்ந்த முடிவான வழிபாடுகளைச் செலுத்தினார்.
பதம் 4.9.6
யோ ‘ந்த: ப்ரலிஸ்ய மம வாசம் சிமார் ப்ரஸீதாம்
ஸஞ்ஜீவயதி அகில-ஸக்தி-தர: ஸ்வ தாம்னா
அன்யாம்ஸ் ச ஹஸ்த-சரண-ஸ்ரவண-த்வக்-ஆதீன்
ப்ராணான் நமோ பகவதே புருஷாய துப்யம்
த்ருவ: உவாச—துருவ மகாராஜா கூறினார்; ய:—பரமபுருஷ பகவானான அவர்; அந்த:—உள்ளே; ப்ரலிஸ்ய—புகுந்து; மம—எனது; வாசம்—வார்த்தைகள்; இமார்—இவையெல்லாம்; ப்ரஸீப்தாம்—செயலற்று அல்லது மரித்த; ஸஞ்ஜீவயதி—புத்துயுர் அளித்து; அகில—அகிலம்; ஸக்தி—சக்தி; தர:— கொண்டிருந்தால்; ஸ்வ-தாம்னா—அவரது அகச்சக்தியினால்; அன்யான் ச—பிறபாகங்களும் கூட; ஹஸ்த—கரம்; சரண—பாதங்கள்; ஸ்ரவண—செவிகள்; த்வக்—தோல்; ஆதீன்—போன்ற பிற; ப்ராணான்—உயிர்ச்சக்தி; நம:—எனது வழிபாட்டினைச் செலுத்த அருள்வீர்; புருஷாய—பரமபுருஷர்; துப்யம்—உமக்கு.
துருவ மன்னர் கூறினார்: போற்றுதலுக்குரிய பகவானே! நீர் அனைத்து சக்திகளும் வாய்க்கப் பெற்றவர். நீர் என்னுள்ளே புகுந்து உமது கரங்களையும், கால்களையும், செவிகளையும், தொடும் உணர்வினையும், உயிர்ச்சக்தியினையும் குறிப்பாக எனது பேசும் சக்தியினையும் உயிர்ப்பித்தீர். எனது மரியாதைக்குரிய வழிபாடுகளை உமக்குச் செலுத்துதற்கு அருள்புரிவீராக.
பதம் 4.9.7
ஏனஸ் த்வம் பகவன்ன கிதம் ஆத்ம-ஸக்த்யா
மாயாக்யயோரு-குணயா மஹத்-ஆதி-அஸேஷம்
ஸருஷ்ட்வானுவிஸ்ய புருஷஸ்-தத்-அஸத்-குணேஷீ
நானேவ தாருஷீ விபாவஸீவத் விபாஸி
ஏக:—ஒன்று; த்வம்—சீர்; ஏவ—உறுதியான; பகவான்—ஓ, எந்தன் பகவானே; இதம்—இந்த உலகம்; ஆத்ம-ஸக்த்யா—உமது சுயச் சக்தியினால்; மாயா-ஆக்யயா—மாயையின் பெயரில்; உரு—சிறந்த சக்தியுடையவர்; குணயா—இயற்கையின் குணங்களினாலானது; மஹத்-ஆதி—மஹத் தத்துவம், போன்றவை; அஸேஷம்—அளவற்ற; ஸ்ருஷ்ட்வா—படைத்தப்பிறகு; அனுவிஸ்ய—பிறர் புகுந்து; புருஷ:—பரமாத்மா; தத்—மாயையின்; அஸத்-குணேஷீ—தற்காலிகமாக வெளிப்பட்டக் குணங்கள்; நானா—பல்வேறு வகை; இவ—இப்பொழுது போன்று; தாருஷீ—மரத்துண்டுகளிலுள்ள; விபா வஸீ—தீயைப் போன்று; விபாஸி—நீர் தோன்றுகிறீர்.
போற்றுதலுக்குரிய பகவானே! நீரே பரம்பொருள், ஆனால் உமது பல்வேறு வகைச் சக்திகளினால் நீர் ஆன்மீக மற்றும் இப்பௌதீக உலகங்களில் வேறு வேறாகத் தோன்றுகின்றீர். நீர் உமது புறச் சக்தியினால் இப்பௌதீக உலகின் முழுச்சக்தியை படைக்கிறீர். அதன்பிறகு உலகினுள் நீர் பரமாத்மாவாக நுழைகின்றீர். நீரே பரமபுருஷர்; மேலும் நீர் இயற்கையின் தற்காலிக குணங்களினால், நெருப்பு பல்வேறு வடிவுடைய விறகுகளில் எரியும்பொழுது பல்வேறு வகையாகத் தோன்றுகிறதோ அதுபோல் நீவிரும் பல்வேறு வகையாகத் தோற்றங்களைப் படைக்கின்றீர்.
பதம் 4.9.8
த்வத்-தத்தயா வயுனயேதம் அசஷ்ட விஸ்வம்
ஸீப்த-ப்ரபுத்த இவ நாத பவத் ப்ரபன்ன:
தஸ்யாபவர்க்ய-ஸரணம் தவ பாத-மூலம்
விஸ்மர்யதே க்ருத-விதா கதம் ஆர்த–பந்தோ
த்வத்-தத்தயா—உம்மால் அருளப்பட்ட; வயுனயா—ஞானத்தினால்; இதம்—இந்த; விஸ்வம்—முழு பிரபஞ்சமும்; ஸீப்த-ப்ரபுத்த:—ஒரு மனிதன் உறக்கத்தினின்று விழித்து; இவ—போல; நாத—நாதரே; பவத்-ப்ரபன்ன:—பிரம்மதேவன், அவர் உம்மைச் சரணடைந்தவர்; தஸ்ய—அவரது; ஆபவர்க்ய—விடுதலையினை விரும்புபவர்களின்; ஸரணம்—அடைக்கலம்; தவ—உமது; பாத-மூலம்—தாமரைத் திருவடி; விஸ்மர்யதே—மறக்கக் கூடியது; க்ருத-விதா—ஓர் கற்றறிந்தவனால்; கதம்—எவ்வாறு; ஆர்த-பந்தோ—ஓ, வருந்துவோரின் நண்பனே.
ஓ நாதரே, பிரம்ம தேவன் முற்றிலும் உம்மையே சரணடைந்திருக்கின்றார். ஆரம்பத்தில் நீர் அவருக்கு அருளிய ஞானத்தினாலேயே ஒருவன் எவ்வாறு உறக்கத்தினின்று எழுந்தவுடன் தனது காலைக் கடமைகளைப் பற்றி நினைப்பானோ அது போன்று அவரால் இப்பிரபஞ்சத்தினைப் பார்க்கவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது, விடுதலையினை விரும்பும் மனிதர்களுக்கு நீரே அடைக்கலமாகவும், வருந்துவோர்களுக்கு நீரே நண்பராகவும் விளங்குகின்றீர். அவ்வாறிருக்க நிறைந்த மதியுடைய அறிஞனால் எவ்வாறு உம்மை மறக்க இயலும்?
பதம் 4.9.9
நூனம் விமுஷ்ட-மதயஸ் தவ மாயயா தே
யே த்வாம் பவாப்யய-விமோக்ஷணம் அன்ய ஹேதோ:
அர்அந்தி கல்பக-தரும் குணபோபபோக்யம்
இச்ந்தியத் ஸ்பர்ஸஜம் நிரயே ‘பி நீர்ணாம்
நூனம்—உறுதியாக; விமுஷ்ட-மதய:—தனது சரியான புத்தியை இழந்தவர்கள்; தவ—உமது; மாயயா—உமது மாயா சக்தியினால்; தே—அவர்கள்; யே—எவர்; த்வாம்—நீர்; பவ—பிறப்பிலிருந்து; அப்யய—மரணத்திலும்; விமோக்ஷணம்—விடுதலைக்கான காரணம்; அன்ய-ஹேதோ:—பிற நோக்கங்களுக்காக; அர்சந்தி—துதித்தல்; கல்பக-தரும்—கல்பக தரு போன்றோர்; குணப—இறந்த உடலின்; உபயோக்யம்—புலனுகர்ச்சி; இச்சந்தி—அவர்கள் விரும்புகின்றார்; ஸ்பர்ஜம்—தொடு உணர்ச்சியால் உண்டான; நிரயே—நரகத்தில்; அபி—கூட; நீர்ணாம்—மனிதர்களுக்காக.
இத்தோல் பொதியின் புலனுகர்ச்சிகளுக்காக உம்மை வழிபடுபவர்கள், நிச்சயம் உமது மாயா சக்தியினால் பாதிக்கப்பட்டவர்களே ஆவர். விரும்பியதைத் தரும் கற்பக விரும்சம் போன்றவரும், பிறப்பு இறப்பிலிருந்து விடுவிப்பவருமாகிய உம்மை அடைவதற்குப் பதிலாக, மூடர்கள், நரகத்தில் உழலும் வாழ்க்கை நிலை பெற்றவர்களுக்கும் கிடைப்பதான புலனுகர்ச்சிகளுக்குரிய வரங்களை உம்மிடம் இருந்து பெற விரும்புகின்றனர்.
பதம் 4.9.10
யாநிர்வ்ருதிஸ் தனு-ப்ருதாம் தவ பாத-பத்ம-
த்யானாத் பவஜ்-ஜன-கதா-ஸ்ரவணேன வா ஸ்யாத்
ஸா ப்ரஹ்மணி ஸ்வ-மஹிமனி அபி நாத மா பூத்
கிம் த்வ அந்தகாஸி-லுவிதார் பததாம் விமானாத்
யா—எந்த; நிர்வ்ருதி:—ஆனந்தம்; தனு-ப்ருதாம்—வடிவத்தின்; தவ—உமது; பாத-பத்ம—தாமரைத் திருவடி; த்யானாத்—தியானிப்பதினால்; பவத்-ஜன—உமது நெருங்கிய பக்தர்களிடமிருந்து; கதா—சரிதம்; ஸ்ரவணேன—கேட்பதினால்; வா—அல்லது; ஸ்யாத்—கிடைக்கிறது; ஸா—அந்த இன்பம்; ப்ராஹ்மணி—அருவமான பிரம்மனிடத்தில்; ஸ்வ-மஹிமனி—உமது மிகவுயர்ந்த; அபி—கூட; நாத—ஒ நாதனே; மா—இல்லை; பூத்—வெளிப்படுதல்; கிம்—என்ன சொல்வது; து—பின்னர்; அந்தக-அஸி—மரணத்தின் கூர்வாள்; லுவிதாத்—அழிகிறது; பததாம்—கீழே விழுந்தவர்கள்; விமாத்—தங்கள் விமானங்களிலிருந்து.
வழிபாட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய பகவானே, உமது திருவடித் தாமரைகளை தியானிப்பதினாலும் தூய பக்தர்களிடமிருந்து உமது புகழினைக் கேட்பதினாலும் பெறும் அளவற்ற மகிழ்ச்சியானது பரம்பொருளான அருவமான பிரம்மத்துடன் ஒருவன் இணைவதினால் பெறும் தேவசுகத்தினை விட மிகவுயர்ந்ததாகும். அப்பிரம்மானந்தமும் பக்தித் தொண்டிலிருந்து பெறும் உன்னத ஆனந்தத்திற்கு ஈடாகாதென்றால், காலமென்னும் கூர்வாளினால் வெட்டிச் சாய்க்கப்படும் நிலையில்லாத தேவலோகங்களுக்குச் செல்வதினால் ஒருவன் என்னதான் தேவலோகத்திற்கு உயர்த்தப்பட்டாலும் உரிய காலத்தில் அவன் மீண்டும் கீழே வீழ்வான்.
பதம் 4.9.11
பக்திம் முஹி: ப்ரவஹதாம் த்வயி மே ப்ரஸங்கோ
பூயாத் அனந்த மஹதாம் அமவாஸயனாம்
பேனாஞ்ஜஸொல் பணம் உரு-வ்யஸனம் பவாப்திம்
நேஷ்யே பவத்-குண-கதாம்ருத-பான மத்த:
பக்திம்—பக்தித்தொண்டு; முஹீ:—தொடர்ந்து; ப்ரவஹதாம்—நிறைவேற்றுபவர்கள்; த்வயி—உமக்கு; மே—எனது; ப்ரஸங்க:—நெருங்கிய தொடர்பு; பூயாத்—ஆகலாம்; அனந்த—ஓ, அளவிறந்தவரே; மஹதாம்—உயர்ந்த பக்தர்களின்; அமல—ஆஸயனாம்—ஜடமாசுக்களில் இருந்து விடுபட்டோரின் இதயங்கள்; யேன—எதனால்; அஞ்ஜஸா—எளிதில்; உல்பணம்—பயங்கர; உரு—சிறந்த; வ்யஸனம்—முழுவதும் ஆபத்து; பவ-சுப்தீம்—பௌதீக வாழ்வுச் சமுத்திரம்; நேஸ்யெ—நான் கடப்பேன்; பலத்—உமது; குண—உன்னதக் குணங்கள்; கதா—லீலைகள்; அம்ருத—அமிர்தம்; நித்தியம்; பான—அருந்துவதினால்; மத்த:—புத்திசுவாதீனம் இல்லாமை.
துருவ மகாராஜா தொடர்ந்து கூறினார்: ஓ, அளவிறந்த பகவானே, ஆற்றின் அலைகள் தொடர்ந்து வீசுவதுபோல் உமது உன்னதமான அன்புத் தொண்டில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் சிறந்த பக்தர்களுடன் நான் தொடர்பு கொள்ளுமாறு எனக்கு நீர் அருள்புரிதல் வேண்டும். இதுபோன்ற உன்னதமான பக்தர்கள் முற்றிலும் மாசற்ற வாழ்க்கை நிலை உடையோராக இருக்கின்றனர். பக்தித் தொண்டு புரிவதின் பலனாக தீயின் நாக்குகளைப் போன்று அபாய அலைகளினால் நிரப்பப்பட்டிருக்கும் உலக வாழ்க்கை என்னும் அறியாமைக் கடலினை என்னால் நிச்சயமாக நீந்திக் கடக்க முடியும். இது என்னால் ஆகக்கூடியதே ஏனெனில் என்றும் நித்தியமாக இருக்கும் உமது கல்யாணக்குணங்கள் மற்றும் திருவிளையாடல்களைக் கேட்பதற்கு நான் பித்தனாகியுள்ளேன்.
பதம் 4.9.12
தே ந ஸ்மரந்தி அதிதராம் ப்ரியம் ஈஸமர்த்யம்
யே சான்வ அத: ஸீத-ஸீஹ்ருத்-க்ருஹ-வித்த-தாரா:
யே த்வ அப்ஜ-நாப பவதீய-பதாரவிந்த-
ஸெகந்த்ய-லுப்த-ஹ்ருதயேஷீ க்ருத-ப்ரஸங்கா:
தே—அவர்கள்; ந—இல்லை; ஸ்மரந்தி—நினைத்து; அதிதராம்—உயர்ந்த; ப்ரியம்—பிரியம்; ஈஸ—ஓ, பகவானே; மர்த்யம்—ஜட உடல்; யே—எவர்கள்; ச—கூட; அனு—தொடர்பினால்; அத:—அந்த; ஸீத—மைந்தர்கள்; ஸீஹ்ருத்—நண்பர்கள்; க்ருஹ—இல்லம்; வித்த—செல்வம்; தாரா:—தாரம்; யே—எவர்கள்; து—பிறகு; அம்ஜ-நாப—தாமரை மலரினை உந்திச் சுழியாக உடைய பகவானே; பவதீய—உமது; பத—அரவிந்த தாமரைத் திருவடி; ஸெகந்த்ய—நறுமணம்; ஒறுபத—எய்தப்பெறுதல்; ஹ்தேயேஷீ—பக்தர்களின் இதயங்களுடன்; க்ருத-ப்ரஸங்கா:—கொண்ட தொடர்பு.
ஓ, தாமரையினை உந்திச் சுழியாக உடைய பகவானே, ஒருவன், எப்போதும் உமது தாமரைத் திருவடிகளையும் அதிலிருந்து வரும் நறுமணத்தையும் நாடும் பக்தர்களுடன் கொள்ளும் தொடர்பினால் உடலின் மீதும், அவ்வுடலுடன் கூடிய உறவினால் வரும் சந்ததியினர், நண்பர்கள், குடும்பம், செல்வம் மற்றும் மனைவி போன்ற லோகாயத மனிதர்களுக்கு மிகமிக விருப்பமானவைகளான இவற்றின் மீதும் பற்று வைப்பதில்லை. ஏன் உண்மையில் அவன் அவற்றை லட்சியப்படுத்துவதுகூட இல்லை.
பதம் 4.9.13
திர்யன்-நக-த்விஜ-ஸரீஸ்ருப-தேவ-தைத்ய
மர்த்யாதிபி: பரிசிதம் ஸத்-அஸத்-விஸேஷம்
ரூபம் ஸ்தவிஷ்டம் அஜ தே மஹத்-ஆதி-அனேகம்
நாத: பரம் பரம வேத்மி நயத்ர வாத:
திர்யக்—விலங்குகள்; நக—மரங்கள்; த்விஜ—பறவைகள்; ஸரீண்டுப—ஊர்வன; தேவ—தேவர்கள்; தைத்ய—அசுரர்கள்; மர்த்ய-ஆதிபி:—மனிதர்கள் போன்றோர்; பரிசிதம்—வியாபித்தல்; ஸத்-அஸத்—லிஸேஷம்—பல்வகைத் தோற்ற வெளிப்பாடு, மற்றும் வெளிப்பாடின்மை; ரூபம்—வடிவம்; ஸ்தவிஷ்டம்—முழுப்பிரபஞ்சம்; அஜ—ஒ, பிறப்பிலேயே; தே—உமது; மஹத்—ஆதி முழுப்பௌதீகச் சட்கதியின் காரணம் போன்றவை; அனேகம்—அனேக காரணங்கள்; ந—இல்லை; அத:—இதிலிருந்து; பரம்—உன்னதமான; பரம்—ஓ பரம் பொருளே; வேத்மி—நான் அறிவேன்; ந—இல்லை; யத்ர—எங்கே; வாத:—பல்வேறு விவாதங்கள்.
போற்றுதலுக்குரிய பகவானே, ஓ, பிறவாத பரம்பொருளே! பல்வேறு வகை உயிர்களான, விலங்குகள், மரங்கள், பறவைகள், ஊர்வன, தேவர்கள் மற்றும் மனிதர்கள் யாவும் உமது பௌதீக சக்தியின் காரணமாகத் தோன்றிய இப்பிரபஞ்சமும் யாங்கணும் பரந்து பட்டிருக்கின்றன என்பதை நான் நன்கறிவேன். மேலும் இவை சில நேரங்களில் வெளிப்படுகின்றன, சில நேரங்களில் வெளிப்படாதிருக்கின்றன என்பதையும் நான் அறிவேன்; ஆயினும் எனது முன்னால் நிற்கின்ற உமது பரம வடிவத்தினைப் பார்க்கின்ற அனுபவம் எனக்கு முன்பு வாய்த்ததே இல்லை. இப்போது அனைத்துவிதக் கற்பனைக் கோட்பாடுகளும் ஒரு முடிவிற்கு வந்துவிட்டன.
பதம் 4.9.14
கல்பாந்த ஏதத் அகிலம் ஜடரேண க்ருஹ்ணன்
ஸேதே பு மான் ஸ்வ-த்ருக் அனந்த-ஸகஸ் தத்-அங்கே
யன்-நாபி-ஸிந்து-ருஹ-காஞ்சன-லோக-பத்ம
கர்வே த்யுமான் பகவதே ப்ரணதோ ‘ஸ்மி தஸ்மை
கல்ப-அந்தே—கல்பத்தின் இறுதியில்; ஏதத்—இப்பிரபஞ்சம்; அகிலம்—அனைத்தும்; ஜடரேண—வயிற்றினுள்; க்ருஹ்ணன்—இழுத்துக் கொள்கிறார்; ஸேதே—படுத்திருத்தல்; புமான்—பரமபுருஷர்; ஸ்வத்ருக்—அவரைப் பார்த்து; அனந்த—அளவற்ற சேஷனின்; ஸக:—உடன்; தத்—அங்கே அவர் மடியின் மீது; யத்—எவரிடமிருந்து; நாபி—நாபியில்; ஸிந்து—சமுத்திரம்; ருஹ—வெளி வருதல்; காஞ்சன—பொன்மயமான; லோக—லோகம்; பத்ம—தாமரை; கர்பே—இதழ் அடுக்கின்மீது; த்யுமான்—பிரம்மதேவன், பகவதே—முழுமுதற் கடவுளுக்கு; ப்ரணத:—வந்தனங்களை அர்ப்பணித்து; அஸ்மி—நான்; தஸ்மை—அவருக்கு.
வணங்குதற்குரிய பகவானே, ஒவ்வொரு கல்பத்தின் இறுதியிலும் முழுமுதற் கடவுளான கர்போதகஸாயீ விஷ்ணு இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கலைத்துத் தன் வயிற்றினுள் அடக்கிக் கொள்கிறார். அவர் தனது நாகத்தின் மேல் பள்ளிகொண்டிருப்பார். அவரது உந்திச்சுழியில் இருந்து தண்டுடன் கூடியத் தங்கத்தாமரை மலர் ஒன்று தோன்றியது. அதில்தான் பிரம்மதேவன் படைக்கப்பட்டார். அம்முழுமுதற் கடவுள் நீரே என்பதை நான் அறிந்து கொண்டேன், ஆகையினால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கிறேன்.
பதம் 4.9.15
த்வம் நித்ய-முக்த பரிசுத்த-விபுத்த ஆத்மா
கூட-ஸ்த ஆதி புருஷோ பகவாம்ஸ் த்ரி-அதீஸ:
யத் புத்தி அவஸ்திதிம் அகண்டிதயா ஸ்வ-த்ருஷ்ட்யா
த்ரஷ்டா ஸ்திதாவ் அதிமகோ வ்யதிரிக்த ஆஸ்ஸே
த்வம்—நீர்; நித்ய—நித்தியம்; முக்த—முக்தர்; பரிஸீத்த—பரிசுத்தமானவர்; விபுத்த:—அறிவுநிரம்பியவர்; ஆத்மா—பரமாத்மா; கூட-ஸ்த:—மாற்றமில்லாதவர்; ஆதி—ஆதியானவர்; புருஷ:—புருஷர்; பகவான்—ஆறுவகை வளங்களையுடைய பகவான்; த்ரி-அதீஸா:—முக்குணங்களின் நாயகர்; யத்—எதிலிருந்து; புத்தி—மதிநலமிக்கச் செயல்கள்; அவஸ்திதிம்—அனைத்து நிலைகள்; அகண்டிதயாயா—உடைதலின்றி; ஸ்வ-த்ருஷ்ட்யா—உன்னதமானப் பார்வையினால்; த்ரஷ்டா—நீர் காண்கிறீர்; ஸ்திதௌ—காப்பதற்காக (உலகை); அதி-மக:—அனைத்து வேள்விகளின் முடிவினையும் அனுபவிப்பவர்; வ்யதிரிக்த:—வித்தியாசமாக; ஆஸ்ஸே—நீர் இருக்கின்றீர்.
போற்றுதற்குரிய பகவானே, உமது தடையில்லாத உன்னதமான பார்வையினால் நீர் அனைத்து மதியுடைச் செயல்களையும் பார்க்கின்ற பரம சாட்சியாக விளங்குகின்றீர். நீர் நித்திய முக்தர், நீர் சுத்த சத்துவ குணத்தில் நிலை பெற்றிருக்கின்றீர். நீரே எந்தவித மாற்றமுமில்லாதப் பரமாத்மாவும் ஆவீர். நீரே ஆறு வளங்களையும் உடைய ஆதி முழுமுதற் கடவுள். மேலும் ஜட இயற்கையின் முக்குணங்களின் நித்திய நாயகரும் நீரே ஆவிர். இவ்வாறு நீர் எப்போதும் பிற உயிர்களிடமிருந்து வேறுபட்டிருக்கின்றீர். பகவான் விஷ்ணுவாக நீர் பிரபஞ்சத்தின் அனைத்தையும் காக்கின்றீர். ஆயினும் நீர் தனித்தே இருக்கின்றீர். மேலும் அனைத்து வேள்விகளின் பலன்களை அனுபவிப்பவரும் நீரே ஆவிர்.
பதம் 4.9.16
யஸ்மின் விருத்த-கதயோ ஹி அனிஸம் யுந்தி
வித்யாதயோ விவித-ஸக்தயா ஆனுபூர்வ்யாத்
தத் ப்ரஹ்ம விஸ்வ-பவம் ஏகம் அனந்தம் ஆத்யம்
ஆனந்த-மாத்ரம் அவிகாரம் அஹம் ப்ரபத்யே
யஸ்மின்—எவரிடம்; விருத்த-கதய:—மாறுபட்ட குணத்தின்; ஹி—உறுதியாக; அனிஸம்—எப்போதும்; பதந்தி—வெளிப்படுகின்றன; வித்ய-ஆதய:—ஞானமும் அஞ்ஞானமும் போன்றவை; விவித—பல்வேறு; ஸக்த்ய:—சக்திகள்; ஆனுபூர்வ்யாத்—தொடர்ந்து; தத்—அந்த; ப்ரஹ்ம்—பிரம்மம்; விஸ்வ-பவம்—உலகப் படைப்பின் காரணம்; ஏகம்—ஒன்று; அனந்தம்—அளவில்லாதது; ஆத்யம்—ஆதியானது; ஆனந்த-மாத்ரம்—ஆனந்தமானது; அவிகாரம்—மாற்றமில்லாதது; அஹம்—நான்; ப்ரபத்யே—எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
போற்றுதற்குரிய பகவானே, உமது அருவ வெளிப்பாட்டில் இரண்டு எதிரெதிர் கூறுகள் உள்ளன ஞானம் மற்றும் அஞ்ஞானம். உமது பல்வேறு சக்திகளும் தொடர்ந்து வெளிப்படுகின்றன. ஆனால் அருவமான பிரம்மமோ பிரிக்கவொண்ணாதது, உண்மையானது, மாற்றமில்லாதது, அளவிறந்தது, ஆனந்தமானது. அதுவே பௌதீகத் தோற்றத்திற்குக் காரணமானதுமாகும். நீரே அவ்வுருவ பிரம்மம் ஆதலினால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்குச் செலுத்துகிறேன்.
பதம் 4.9.17
ஸத்யாஸிஷோ ஹி பகவம்ஸ் தவ பாத-பத்மம்
ஆஸீஷ் ததானுபஜத: புருஷார்த்-மூர்தே:
அபி ஏவம் அர்ய பகவான் பரிபாதிதீனான்
வாஸ்ரேவ வத்ஸகம் அனுக்ரஹ-காதரோ ‘ஸ்மான்
ஸத்ய—உண்மை; ஆஸிஷ:—பிறவரங்களோடு ஒப்பிட்டு; ஹி—உறுதியாக; பகவன்—எந்தன் பகவானே; தவ—உமது; பாத—பத்மம் தாமரைத் திருவடிகள்; ஆஸீ:—ஆசி; ததா—அவ்வழியில்; அனுபஜத:—பக்தர்களுக்கு; புருஷ-அர்த—வாழ்வின் உண்மை லட்சியமாகும்; லர்தே:—உருவம்; அபி—இருந்தாலும்; ஏவம்—இவ்வாறு; அர்ய—ஓ; பகவான்; பகவான்—முழுமுதற் கடவுள்; பரிபாதி—காத்தல்; தீனான்—இதயத்தில் ஏழ்மையாளன்; வாஸ்ரா—ஓர் பசு; இவ—போன்று; வத்ஸகம்—கன்றுக்குட்டிக்கு; அனுக்ரஹ—கருணைகாட்டி; காதர:—பேரார்வம்; அஸ்மான்—என்னிடத்தில்.
எந்தன் தேவனே, ஓ, பரமபுருஷ பகவானே, நீரே அனைத்து நல்லாசிகளின் பரம வடிவமாகத் திகழ்கின்றீர். ஆகையினால் மன்னராகி மாநிலத்தை ஆளுவதைக் காட்டிலும் எவ்வித இச்சையுமின்றி உமது பக்தித் தொண்டிற்கு அடிமையாகி உமது தாமரைத் திருவடிகளைத் தொழுவது சாலச்சிறந்ததாகும். உமது தாமரைத் திருவடிகளை வழிபடுவதன் பயனே அது. என் போன்ற அறியாப் பக்தர்களுக்கு நீரே, ஒரு பசு தனக்குப் பிறந்த புதிய கன்றுக்குட்டிக்குப் பால் கொடுத்து அதனை எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும் காக்கிறதோ அதுபோல் காக்கின்ற கருணைக்கடலாக விளங்குகின்றீர்.
பதம் 4.9.18
மைத்ரேய உவாச
அதாபிஷ்டுத ஏவம் வை ஸத்-ஸங்கல்பேன தீமதா
ப்ருத்யானுரக்தோ பகவான் ப்ரதினந்யேதம் அப்ரவீத்
மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; அத—பிறகு; அபிஷ்டுத:—வழிபட்டு; ஏவம்—இவ்வாறு; வை—உறுதியாக; ஸத்-ஸங்கல்பேன—தனது உள்ளத்தில் நல்விருப்பங்கள் மட்டுமே உடைய துருவ மன்னரால்; தீ-மதா—அவர் மிகுந்த புத்திமான் ஆதலினால்; ப்ருதய-அனுரக்த:—மிகவும் தாராளமாகப் பக்தர்களிடம் நடப்பவர்; பகவான்—முழுமுதற் கடவுள்; ப்ரதினந்த்யா—அவரைப் பாராட்டி; இதம்—இவ்வாறு; அத்ரவீத்—கூறினார்.
மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே, உள்ளத்தில் நல்லெண்ணமுடைய துருவ மன்னர் தன் வழிபாட்டினை முடிந்தவுடன், தன் பக்தர்களிடமும் ஊழியர்களிடமும் மிகுந்த அன்புடைய பரமபுருஷ பகவானான முழுமுதற் கடவுள் அவரைப் பாராட்டிப் பின்வருவனவற்றைக் கூறினார்.
பதம் 4.9.19
ஸ்ரீ-பகவான் உவாச
வேதாஹம் தே வ்யவாஸிதம் ஹ்ருதி ராஜன்ய-பாவக
தத் ப்ரயச்சாமி பத்ரம் தே துராபம் அபி ஸீவ்ரத
ஸ்ரீ-பகவான் உவாச—முழுமுதற் கடவுள் கூறினார்; வேத—அறிவார்; அஹம்—நான்; தே—உமது; வ்யவஸிதம்—தீர்மானம்; ஹ்ருதி—உள்ளத்தினுள்; ராஜன்ய-பாலக—ஓ ராஜகுமாரனே; தத்—அந்த; ப்ராயச்சாமி—நான் கொடுப்பேன்; ப்தரம்—எல்லா மங்கலங்களையும்; தே—உனக்கு; துராபம்—கிடைப்பதற்கரியதாயினும்; அபி—அதற்குப்பதிலாக; ஸீ-வ்ரத—புனிதமானச் சபதத்தினை மேற்கொண்ட ஒருவன்.
முழுமுதற் கடவுள் கூறினார்: அன்பார்ந்த அரசகுமார, துருவனே, புனிதமான விரதங்களை நீ நிறைவேற்றியிருக்கிறாய், உனது உள்ளத்திலுள்ள ஆசையாதென எனக்குத் தெரியும். உன் ஆசை பேராசையாகவும், நிறைவேறுவதற்கு அரியதாயினும் கூட, அது நிறைவேறுவதற்கு நான் துணை புரிவேன். உனக்கு எல்லா நன்மைகளும் உண்டாகட்டும்.
பதங்கள் 4.9.20 – 4.9.21
நான்யைர் அதிஷ்டிதம் பத்ர யத் ப்ராஜிஷ்ணு த்ருவ-ஷிதி
யத்ர க்ரஹர்க்ஷ-தாராணாம் ஜ்யோதிஷாம் சக்ரம் ஆஹிதம்
மேட்யாம் கோ சக்ரவத் ஸ்தாஸ்னு பரஸ்தாத் கல்ப-வாஸினாம்
தர்மோ ‘க்னி: கஸ்யபக: ஸீக்ரோ முனயோ யே வனௌகஸ
சாந்தி தக்ஷிணீ-க்ருத்ய ப்ரமந்தோ ஸதாரகா:
ந—இல்லை; அன்னய:—மற்றவர்களால்; அதிஷ்டிதம்—ஆளப்பட்டது; பத்ர—என் அன்புச் சிறுவனே; யத்—எந்த; ப்ராஜீஷிணு—ஒளிமயமான; த்ருவ-க்ஷிதி—துருவலோகம் எனப்படும் கிரஹம்; யத்ர—எங்கே; க்ரஹ—கிரஹங்கள்; ருக்ஷ—விண்மீன் கூட்டம்; தாரணாம்—விண்மீன்கள்; ஜ்யோதிஷாம்—ஒளிக்கோளம்; சக்ரம்—சுற்றிவரும்; ஆஹிதம்—செய்யப்படும்; மேட்யாம்—செக்குக்கல்; கோ—காளைமாடுகள்; சக்ர—சுற்றிவருவதை; வத்—போன்று; ஸ்தாஸ்ணு—இடம் பெயராத; பரஸ்தாத்—மேலாக; கல்ப—பிரம்மதேவனின் ஒரு நாள் (கல்பம்); வாஸினாம்—வாழ்பவர்கள்; தர்ம:—தர்மன்; அக்னி:—அக்கினி; கஸ்யப:—காச்யபர்; ஸீக்ர:—சுக்கிராச்சாரியார்; முனய—மகாமுனிவர்கள்; யே—இவர்கள் எல்லோரும்; வன-ஒகஸ:—வனத்தில் வாழ்கின்ற; சாந்தி—நகர்ந்து; தக்ஷிணீ-க்ருத்ய—தனக்கு வலப்புறமாக; ப்ரமந்த:—சுற்றிவருதல்; யத்—எந்தக்கிரஹம்; ஸ-தாரகா:—அனைத்து விண்மீன்கள்.
முழுமுதற் கடவுள் தொடர்ந்து கூறினார்: எனதன்பு துருவனே, உனக்கு நான் வடமீன் என்றறியப்படும் ஒளிமிகுந்த கிரஹத்தினைப் பரிசாக அளிக்கப் போகிறேன். அது கல்ப இறுதியின் அழிவுக் காலத்திலும் கூட தொடர்ந்து அழியாதிருக்கும். இந்த உலகினை இது வரை யாரும் ஆண்டதில்லை. அது அனைத்துச் சூரியக்குடும்பங்களினாலும், கிரஹங்களினாலும், விண்மீன்களாலும் சூழப்பட்டிருக்கும். செக்கினை காளைமாடுகள் எங்ஙனம் சுற்றிவருகின்றனவோ, அது போல் வானிலுள்ள அனைத்து ஒளிக் கோளங்களும் இக்கிரஹத்தைச் சுற்றிவரும். இவ்வடமீனைத் தம் வலப்புறமாகக் கொண்டு தர்மன், அக்கினி, காச்யபர் மற்றும் சுக்கிராச்சாரியார் போன்ற மகாமுனிவர்கள் வாழும் கிரஹங்கள் இக்கிரஹத்தைச் சுற்றிவரும். அனைத்துக் கிரஹங்களும் அழிக்கப்பட்டப் பிறகும் கூட இக்கிரஹம் நிலையாக இருக்கும்.
பதம் 4.9.22
ப்ரஸ்திதே துவனம் பித்ரா தத்த்வா காம் தர்ம-ஸம்ஸ்ரய:
ஷட்-த்ரிம்ஸத்-வர்ஷ-ஸாஹஸ்ரம் ரக்ஷிதாவ்யாஹதேந்த்ரிய:
ப்ரஸ்திதே—புறப்பட்ட பிறகு; து—ஆனால்; வனம்—வனத்திற்கு; பித்ரா—உனது தந்தை; தத்த்வா—அளித்து; காம்—முழு உலகமும்; தர்ம-ஸம்ஸ்ரய:—கடவுள்பற்றின் பாதுகாப்பின்கீழ்; ஷட்-த்ரிம்ஸத்—முப்பத்தாறு; வர்ஷ—வருடங்கள்; ஸாஹஸ்ரம்—ஓராயிரம்; ரக்ஷிதா—நீ ஆளப்போகிறாய்; அவ்யாஹத—அழிவின்றி; இந்த்ரிய:—புலன்களின் ஆற்றல்.
உன் தந்தை தன் ஆட்சியினை உனக்களித்து வனம் சென்றபிறகு நீ தொடர்ந்து முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் இந்நிலவுலகம் முழுவதையும் ஆள்வாய். உனது புலன்கள் அனைத்தும் இப்போதிருக்கின்ற வலிமையுடனேயே தொடர்ந்து இருக்கலாம். உனக்கு முதுமை என்பதே கிடையாது.
பதம் 4.9.23
த்வத்-ப்ராதரி உத்தமே நஷ்டே ம்ருகயாயாம் து தன்-மனா:
அன்வேஷ்ந்தீ வனம் மாதா தாவாக்னிம் ஸா ப்ரவேக்ஷ்யதி
த்வத்—உனது; ப்ராதரி—சகோதரன்; உத்தமே—உத்தமன்; நஷ்டே—கொல்லப்படுவான்; ம்ருகயாயாம்—வேட்டையாடும் பொழுது; து—பிறகு; தத்-மனா:—அதிகப்பாசத்தினால்; அன்வே ஷந்தீ—தேடும்பொழுது; வனத்—வனத்தில்; மாதா—அன்னை; தாவ-அக்னிம்—காட்டுத்தீயில்; ஸா—அவள்; ப்ரவேக்ஷயதி—நுழையும் பொழுது.
பகவான் தொடர்ந்து கூறினார்: எதிர்காலத்தில் உன் சகோதரன் உத்தமன் காட்டிற்கு வேட்டையாடச் செல்வான், வேட்டையில் அவன் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் பொழுது கொல்லப்படுவான். உனது மாற்றாந்தாயான சுருசி தன் புதல்வன் இறந்த துக்கத்தினால் பைத்தியம் பிடித்து அவனைத் தேடிக் காட்டிற்குச் செல்வாள். ஆனால் அவள் காட்டுத்தீயினுக்கு இரையாவாள்.
பதம் 4.9.24
இஷ்ட்வா மாம் யஜ்ஞ ஹ்ருதயம் யஜ்ஜை: புஷ்கல-தக்ஷிணை:
புக்த்வா சேஹாஸிஷ: ஸத்யா அந்தே மாம் ஸம்ஸ்மரிஷ்யஸி
இஷ்ட்வா—வழிபட்ட பிறகு; மாம்—என்னை; யக்ஞ-ஹ்ருதயம்—அனைத்து வேள்விகளின் இதயம்; யஜ்ஞை:—சிறந்த வேள்விகளினால்; புஷ்கல-தக்ஷிணை:—உளப்பூர்வமாகச் செய்யும் உயர்ந்த தானங்கள்; புக்தவா—மகிழ்ந்தபிறகு; ச—கூட; இஹ—இவ்வுலகினுள்; ஆஸிஷ:—ஆசிகள்; ஸத்யா:—உண்மை; அந்தே—முடிவில்; மாம்—எனது; ஸம்ஸ்மரிஷ்யஸி—நீ நினைவில் வைத்திருப்பாய்.
பகவான் தொடர்ந்து கூறினார்: நானே அனைத்து வேள்விகளின் இதயமாக விளங்குகிறேன். நீ மிகப் பெரிய வேள்விகளையும் மிகச் சிறந்த தானதருமங்களையும் செய்பவனாக விளங்குவாய். இவ்வாறு உன் வாழ்வில் நீ உலக மகிழ்ச்சியின் ஆசிகளை அனுபவிக்கக் கூடியவனாக இருப்பாய். மேலும் உனது மரணத்தின் போது கூட நீ என்னை நினைப்பவனாக விளங்குவாய்.
பதம் 4.9.25
ததோ கந்தாஸி மத்-ஸ்தானம் ஸர்வ-லோக-நமஸ்க்ருதம்
உபரிஷ்டாத் ருஷிப்பயஸ் த்வம் யதோ நாவர்ததே கத:
தத:—அதன்பிறகு; கந்தா அஸி—நீ செல்வாய்; மத்-ஸ்தானம்—எனது இருப்பிடத்திற்கு; ஸர்வ-லோக—சர்வ லோகங்களும்; நம:-க்ருதம்—வந்தனங்களை அர்ப்பணிக்கும்; உபரிஷ்டாத்—மேலாக இருக்கிறது; ருஷிப்ய:—ரிஷிகளின் மண்டலங்களைக் காட்டிலும்; த்வம்—நீ; யத:—எங்கிருந்து; ந—இல்லை; ஆவர்ததே—திரும்பி வருதல்; கத:—அங்கு சென்றபிறகு.
முழுமுதற் கடவுள் தொடர்ந்து கூறினார்: அன்புத் துருவனே, இவ்வுடல் கொண்ட ஜட வாழ்வை நீ நீத்தபிறகு சர்வலோக வாசிகளாலும் துதிக்கப்படும் எனது உலகத்தை அடைவாய். அது சப்த ரிஷி மண்டலத்திற்கும் மேலாக இருக்கிறது. அதனை நீ அடைந்த பிறகு இந்த உலகிற்கு மீண்டும் திரும்பி வரமாட்டாய்.
பதம் 4.9.26
மைத்ரேய உவாச
இதி அர்சித: ஸ பகவான் அதிசிஸ்யாத்மன: பதம்
பாலஸ்ய பஸ்யதோ தாம ஸ்வம் அகாத் கருட-த்வஜ:
மைத்ரேய: உவாச—மாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்; இதி—இவ்வாறு; அர்சித:—துதிக்கவும் மரியாதை செய்யவும்; ஸ:—பரமபுருஷ பகவான்; பகவான்—முழுமுதற் கடவுள்; அதிதிஸ்ய—அர்ப்பணித்தப் பிறகு; ஆத்மன:—அவருக்குரிய; பதம்—இருப்பிடம்; பாலஸ்ய—அச்சிறுவன்; பஸ்யத:—பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது; தாம—அவர் இருப்பிடத்திற்கு; ஸ்வம்—சொந்தமான; அகாத்—திரும்பிச் சென்றார்; கருட-த்வஜ:—கருடக் கொடியினை உடைய பகவான் விஷ்ணு.
மைத்ரேய மாமுனிவர் கூறினார்: துருவ மன்னரால் துதிக்கவும் மரியாதையும் செய்யப்பட்டு தமக்குரிய மண்டலத்தை அவருக்கு அளித்த பிறகு, பகவான் விஷ்ணு கருட வாகனத்தின் மீது ஏறி துருவ மன்னர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே தமது இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றார்.
பதம் 4.9.27
ஸோ ‘பி ஸங்கல்பஜம் விஷ்ணோ: பாத–ஸேவோபஸாதிதம்
ப்ராப்ய ஸங்கல்ப-நிர்வாணம் நாதிப்ரீதோ ‘ப்யகாத் புரம்
ஸ:—அவர் (துருவ மன்னர்); அபி—இருந்தாலும்; ஸங்கல்ப-ஜம்—விரும்பிய முடிவு; விஷ்ணோ:—பகவான் விஷ்ணு; பாத-ஸேவா—திருவடித் தாமரைகளுக்குத் தொண்டு செய்து; உபஸாதிதம்—எய்தினார்; ப்ராப்ய—எய்திய பிறகு; ஸங்கல்ப—அவர் தீர்மானம்; நிர்வாணம்—திருப்தி; ந—இல்லை; அதிப்ரீத:—மிகவும் மகிழ்ச்சியடைய; அப்யகாத்—அவர் திரும்பிச் சென்றார்; புரம்—அவர் மாளிகைக்கு.
தனது தீர்மானத்திற்கேற்ப பகவானின் தாமரைத் திருவடிகளைத் தொழுது விரும்பிய பலனை பெற்றப்பிறகும் கூட, துருவ மன்னர் அதிக மகிழ்ச்சியடைந்துவிடவில்லை. இவ்வாறு அவர் தன் அரண்மனைக்கு திரும்பிச் சென்றார்.
பதம் 4.9.28
விதுர உவாச
ஸீதுர்லபம் யத் பரமம் பதம் ஹரேர்
மாயாவினஸ் தச்-சரணார்சனார்ஜீதம்
லப்த்வாபிஅஸித்தார்தம் இவைக-ஜன்மனா
கதம் ஸ்வம் ஆத்மானம் அமன்யதார்த–வித்
விதுர: உவாச—விதுரர் தொடர்ந்து கேட்டார்; ஸீதுர்லபம்—மிகவும் அரியது; யத்—எந்த; பரமம்—பரம்பொருள்; பதம்—நிலை; ஹரே:—முழுமுதற் கடவுளின்; மாயா-வின:—அதிநேசமுடையவர்; தத்—அவரது; சரண—தாமரைத்திருவடி; அர்சன—வழிபடுவதினால்; அர்ஜிதம்—எய்தினார்; லப்த்வா—எய்தியபிறகும்; அபி—இருந்தாலும்; அஸித்த-அர்தம்—நிறைவேறவில்லை; அவ—இருந்தாலும்; ஏக-ஜன்மனா—ஒரு வாழ்க்கைக் காலத்திலேயே; கதம்—ஏன்; ஸ்வம்—அவரது; ஆத்மானம்—இதயம்; அமன்யத—அவன் நினைத்தார்; அர்த-வித்—சிறந்த ஞானமுடையவர்.
ஸ்ரீ விதுரர் கேட்டார்: மரியாதைக்குரிய அந்தணரே, பகவானின் இருப்பிடம் அடைவதற்கரியது. அது தூய பக்தித் தொண்டினால் மட்டுமே அடையக் கூடியது; காரணம் அது ஒன்றே கருணைமிக்க பகவானுக்கு மிகவும் விருப்பமானதாகும். தனது ஒரு பிறவியிலேயே துருவ மன்னர் அந்நிலையினை எய்தி விட்டார். மேலும் அவர் மிகுந்த ஞானமும் மனச்சான்றும் மிக்கவர். பிறகு ஏன் அவர் மகிழ்ச்சியடையவில்லை?
பதம் 4.9.29
மைத்ரேய உவாச
மாது: ஸபத்னியா வாக்-பானணர் ஹ்ருதி வித்தஸ் து தான் ஸ்மரன்
நைச்சன் முக்திம்-பதேர் முக்திம் தஸ்மாத் தாபம் உபேயிவான்
மைத்ரேய: உவாச—மாமுனிவர் மைத்ரேயர் பதில் கூறினார்; மாது:—தன் அன்னையின்; ஸ-பத்னியா:—சக கிழத்தியின்; வாக்-பானை:—கடுஞ்சொற்கள் என்னும் அம்புகளினால்; ஹ்ருதி—இதயத்தில்; வித்த:—கிழித்து; து—பிறகு; தான்—அவை எல்லாவற்றையும்; ஸ்மரன்—நினைந்து; ந—இல்லை; அய்ச்சத்—விருப்பம்; முக்தி பதே:—முக்தியளிக்கும் திருவடித் தாமரைகளையுடைய பகவானிடமிருந்து; முக்திம்—முக்தி; தஸ்மாத்—ஆகையினால்; தாபம்—துயரம்; உபேயிவான்—அவர் அடைந்தார்.
மைத்ரேயர் பதில் கூறினார்: தனது மாற்றாந்தாயின் கொடுஞ்சொற்கள் என்னும் அம்புகளினால் துளைக்கப்பட்டிருந்த துருவ மன்னனது இதயம் மிகவும் துயரமடைந்திருந்தது. அவர் தனது வாழ்க்கை லட்சியத்தில் உறுதியாக நிலைபெற்றிருந்த போதிலும் அவளது தவறான நடத்தையினை அவரால் மறக்க முடியவில்லை. அவர் இந்த உலகிலிருந்து உண்மையான விடுதலையினைக் கேட்கவில்லை. மாறாகத் தனது பக்தித் தொண்டின் முடிவில் முழுமுதற் கடவுள் தன் முன் காட்சியளித்தபொழுது தன் மனதில் உலகியல் தேவைகள் இருந்தமைக்காக மிகவும் நாணினார்.
பதம் 4.9.30
த்ருவ உவாச
ஸமாதினா நைக-பவேன யத் பதம்
விது: ஸனந்தாதய ஊர்த்வ-ரேதஸ
மானஸர் அஹம் ஷட்பிர் அமுஷ்ய பாதயோஸ்
சாயாம் உகேத்யாபகத: ப்ருதன்-மதி:
த்ருவ: உவாச—துருவ மகாராஜா கூறினார்; ஸமாதினா—சமாதி நிலையில் யோகத்தினைப் பயிலுதல்; ந—இல்லை; ஏக-பவேன—ஒரே பிறவியில்; யத்—எந்த; பதம்—நிலை; விது:—புரிந்து; ஸனந்த-ஆதய:—சனந்தனரின் தலைமையின் கீழுள்ள நான்கு பிரம்மச்சாரிகள்; ஊர்த்வ-ரேதஷ:—தவறிழைக்காத பிரம்மச்சாரிகள்; மானஸ:—மாதங்களுக்குள்; அஹம்—நான்; ஷட்பி:—ஆறு; அமுஷ்ய—அவரது; பாதயோ:—தாமரைத் திருவடிகளின்; சாயாம்—அடைக்கலம்; உபேத்ய—எய்துதல்; அபகத:—கீழே விழுந்து; ப்ருதக்-மதி:—பகவானைத் தவிர பிறவற்றின் மீது என் மனம் நிலை கொண்டிருக்கிறது.
துருவ மன்னர் தனக்குள் எண்ணினார்: பகவானின் தாமரைத் திருவடிகளின் நிழலில் இருப்பதற்காகச் செய்யப்படும் முயற்சியானது அத்துணை எளிதானதன்று. ஏனெனில் சமாதி நிலையில் அட்டாங்க யோகத்தினால் பயிற்சி செய்த சனந்தனரின் தலைமையின் கீழுள்ள நான்கு பிரம்மச்சாரிகளும் பகவானின் திருவடித் தாமரைகளின் அடைக்கலம் பெற்றது பற்பலப் பிறவிகளுக்கு அப்பால்தான். ஆறு மாதங்களில் அவர்கள் அடைந்ததை நான் அடைந்திருக்கிறேன். ஆயினும் பகவானுக்கு மாறாக எனது சிந்தனையிருந்ததினால் நான் என் நிலையினின்றும் தாழ்ந்து போய்விட்டேன்.
பதம் 4.9.31
அஹோ பத மமானாத்ம்யம் மந்த-பாக்யஸ்ய பஸ்யத
பவ-சித்த: பாத-மூலம் கத்வா யாசே யத் அந்தவத்
அஹோ—அந்தோ; பத—ஐயோ; மம—எனது; அனாத்ம்யம்—உடல் உணர்ச்சியினால்; மந்த-பாக்யஸ்ய—துரதிர்ஷ்ட வசத்தின்; பஸ்யத—பார்ப்பதற்கு; பவ—உலக வாழ்க்கை; சித்த:—துண்டிக்கக் கூடிய பகவான்; பாத—மூலம் திருவடித் தாமரைகள்; கத்வா—அடைந்தும்; யாசே—நான் துதித்தேன்: யத்—எந்த; அந்த-வத்—அழியக்கூடிய.
அந்தோ, என்னைப் பாருங்கள்! நான் எத்தனை நல்வாய்ப்பு அற்றவன்! பிறப்பு இறப்புத் தளையினைத் துண்டிக்க கூடிய பகவானின் தாமரைத் திருவடிகளை அணுகியும் எனது புத்தியின்மையினால் நான் அழியக்கூடியப் பொருட்களை வேண்டி வணங்கிவிட்டேனே.
பதம் 4.9.32
மதிர் விதூஷிதா தேவை: பதபிர் அஸஹிஷ்ணுபி:
யோ நாரத-வசஸ் தத்யம் நாக்ராஹிஷம் அஸத்தம:
மதி:—மதி; விதூஷிதா—மாசுற்று; தேவை:—தேவர்கள்; பதத்பி:—கீழேவிழுவர்; அஸஹிஷ்ணுபி:—பொறுமையின்றி; ய—நான்; நாரத—நாரத மாமுனிவர்; வச:—அறிவுரைகளின்; தத்யம்—உண்மை; ந—இல்லை; அக்ராஹிஷம்—ஏற்றுக் கொள்ளக்கூடிய; அஸத்-தம:—மிகுந்த பயனற்றவன்.
தேவலோகங்களில் வாழும் அனைத்துத் தேவர்களும் ஒரு நாள் கீழுலகிற்குத் திரும்பவும் வரக்கூடியவர்களே, பக்தித் தொண்டினால் நான் வைகுண்ட லோகத்திற்கு உயர்த்தப்படுவதற்கு அவர்கள் அனைவரும் பொறாமை கொண்டுள்ளனர். அதனால் சகிப்புத் தன்மையில்லாத தேவர்கள் எனது மதியினைக் கெடுத்துவிட்டனர். இதன் காரணமாகவே நாரத முனிவர் அருளிய அறிவுரை என்னும் வரத்தினை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது போய்விட்டது போலும்.
பதம் 4.9.33
தைவீம் மாயாம் உபாஸ்ரித்ய ப்ரஸீப்த இவ பின்ன-த்ருக்
த்பயே த்விதீயே ‘பி அஸதி ப்ராத்ரு-ப்ராத்ருவ்ய-ஹ்ருத்–ருஜா
தைவீம்—முழுமுதற்கடவுள்; மாயாம்—மாயை; உபாஸ்ரித்ய—அடைக்கலம் கொண்டு; ப்ரஸீப்த:—தூங்கும்போது வரும் கனவு; இவ—போன்று; பின்ன-த்ருக்—பார்வை மாற்றத்தினால்; த்பயே—நான் வருந்தினேன்; த்விதீயே—மாயையில்; அபி—இருந்தாலும்; அஸதி—நிலையில்லாத; ப்ராதுர்—சகோதரன்; ப்ராத்ருவ்ய—எதிரி; ஹ்ருத்—இதயத்தினுள்; ருஜா—துக்கத்தினால்.
துருவ மன்னர் இவ்வாறு வருந்தினார்: நான் மாயையின் கோரப் பிடியில் சிக்கிவிட்டேன்; உண்மை என்னவென்று அறியாததினால் நான் அதன் மடியில் தூங்கிவிட்டேன். இருவேறு பார்வை பெற்றதினால் என் மனதிலும் இவ்வாறு “அவர்கள் எனது எதிரிகள்” என்றெண்ணி வருந்தினேன்.
பதம் 4.9.34
மயைதத் ப்ரார்திதம் வ்யர்தம் சிகித்ஸேவ கதாயுஷி
ப்ரஸாத்ய ஜகத்-ஆத்மானம் தபஸா துஷ்ப்ரஸாதனம்
பவ ச்சிதம் அயாசே ‘ஹம் பவம் பாக்ய-விவர்ஜித:
மயா—என்னால்; ஏதத்—இந்த; ப்ரார்திதம்—பிரார்த்திக்க; வ்யர்தம்—பயனற்றது; சிகித்ஸா—சிகிச்சை; இவ—போல; கத—முடிவற்றிருக்கிறது; ஆயுஷி—ஒருவனது வாழ்க்கை; ப்ரஸாத்ய—திருப்திப்படுத்தியப் பிறகு; ஜகத்-ஆத்மானம்—பிரபஞ்சத்தின் ஆத்மா; தபஸா—தவம்; துஷ்ப்ரஸாதனம்—திருப்திப்படுத்துவதற்கரியவர்; பவ-சிதம்—முழுமுதற் கடவுள்; அவரே பிறப்பு, இறப்புத்தளையைத் துண்டிப்பவர்; அயாசே—பிரார்த்தித்து; அஹம்—நான்; பவம்—பிறப்பு, இறப்புச் சுழற்சியில்; பாக்ய—பாக்யம்; விவர்ஜித:—இன்றி இருத்தல்.
முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவது என்பது மிகவும் கடினமான காரியமாகும், இப்பிரபஞ்சத்தின் பரமாத்மாவினையே நான் திருப்திப்படுத்தியிருந்தும் பயனற்றவைகளை வேண்டி நான் வணங்கிவிட்டேன். எனது செயல் இறந்துவிட்ட ஒருவனுக்கு மருத்துவம் பார்த்தது போலாகி விட்டது. எனது துரதிர்ஷ்டத்தினைப் பாருங்கள் பிறப்பு, இறப்புச் சுழற்சியிலிருந்து வெளியேற்றுபவரான பரமபுருஷ பகவானைச் சந்தித்தும் அதே சுழற்சியில் மீண்டும் சிக்கிக் கொள்வதற்கான வரத்தைக் கேட்டுவிட்டேன்.
பதம் 4.9.35
ஸ்வராஜ்யம் யச்சதோ மௌட்யான் மானோ மே பிக்ஷிதோ பத
ஈஸ்வராத் க்ஷீண-புண்யேன பலீ-காரான் இவாதன:
ஸ்வராஜ்யம்—அவரது பக்தித்தொண்டு; யச்சத:—அருளும் நோக்கமுடைய பகவானிடமிருந்து; மெளட்யாத்—மூடத்தனத்தினால்; மான:—உலகியற் செல்வம்; மே—என்னால்; பிக்ஷித:—கேட்டுக் கொள்ளப்பட்டு; பத—அந்தோ; ஈஸ்வராத்—பெரிய சக்கரவர்த்தியிடமிருந்து; க்ஷீண—குறைந்தது; புண்யேன—அவரது புனிதச் செயல்கள்; பலீ-காரான்—உமி நீக்கப்பட்ட நொய்யரிசி; இவ—போன்று; அதன:—ஏழை மனிதன்.
எனது மூடத்தனத்தினாலும் புண்ணியக்குறைவினாலும் பகவான் அவருக்குத் தொண்டு செய்யும் அரிய வாய்ப்பினை எனக்களித்தும் நான் உலகத்தின் புகழ், செல்வம் போன்றவற்றை விரும்பி விட்டேன். எனது செயல், ஏழை ஒருவன் ஒரு பேரரசரைத் திருப்திப்படுத்தினால் பதிலுக்கு என்ன வேண்டுமென்று அரசர் கேட்க அவன் அறியாமையினால் உமி நீக்கப்பட்ட நொய்யரிசித் துணுக்குகளைக் கேட்டக் கதை போலாகி விட்டது.
பதம் 4.9.36
மைத்ரேய உவாச
ந வை முகுந்தஸ்ய பதாரவிந்தயோ
ரஜோ-ஜீஷஸ் தாத பவாத்ருஸ ஜனா:
வாஞ்சந்தி தத்-தாஸ்யம் ருதே ‘ர்தம் ஆத்மனோ
யத்ருச்சயா வப்த-மன-ஸம்ருத்தய:
மைத்ரேய: உவாச—மைத்ரேய மாமுனிவர் கூறினார்; ந—இல்லை; வை—உறுதியாக; முகுந்தஸ்ய—விடுதலையினை அளிக்கக் கூடிய பகவான்; பத-அரவிந்தயோ:—தாமரைத் திருவடிகளின்; தஜ:-ஜீஷ:—அதன் தூசியினைச் சுவைக்க விரும்புபவர்கள்; தாத—அன்பார்ந்த விதுரனே; பவாத்ருஷா:—உன்னைப் போன்று; ஜனா:—மனிதர்கள்; வாஞ்சந்தி—விருப்பம்; தத்—அவரது; தாஸ்யம்—தாசராக; ருதே—இன்றி; அர்தம்—விருப்பம்; ஆத்மன:—அவர்களுக்கு; யத்ருச்சயா—தாமாகவே; வப்த—என்ன எய்தினரோ; மன:-ஸம்ருத்தய:—தங்களை மிகவும் வளமுடையவர்களாகக் கருதுகின்றனர்.
மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: எனதன்புக்குரிய விதுரனே, உன் போன்று முகுந்தனது தாமரைத் திருவடிகளின் தூய பக்தர்கள் (முக்தியளிக்கக் கூடிய முழுமுதற் கடவுள்) அவரது தாமரைத் திருவடிகளிலுள்ள அருளின்மீது பற்றுடையவர்கள். மேலும் பகவானின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்வதின் மூலமே எப்போதும் திருப்தியடைகின்றார். இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட நிலையிலும் திருப்தியடைபவர்களே. ஆதலினால் அவர்கள் பகவானிடம் இருந்து பொருள் வளங்களைக் கேட்பதே இல்லை.
பதம் 4.9.37
ஆகர்ண்யாத்ம-ஜம் ஆயாந்தம் ஸம்பரேத்ய யதாகதம்
ராஜா ந ஸ்ரத்ததே பத்ரம் அபத்ராஸ்ய ருதோ மம
ஆகர்ண்ய—கேள்விப்பட்டு; ஆத்ம-ஜம்—அவர் மைந்தன்; ஆயாந்தம்—திரும்பி வருதல்; ஸம்பரேத்ய—மரணத்திற்குப்பின்; யதா—போன்று; ஆகதம்—திரும்பி வருதல்; ராஜா—அரசன் உத்தானபாதன்; ந—இல்லை; ஸ்ரத்ததே—ஏதனும் நம்பிக்கை இருந்தால்; பத்ரம்—நல்யோகம்; அபத்ரஸ்ய—புனிதமற்ற; குத:—பிறப்பிடம்; மம—எனது.
மன்னன் உத்தானபாதன் தன் மைந்தன் துருவன் மீண்டும் அரண்மனைக்குத் திரும்பி வரும் செய்தி கேள்விப்பட்டான். இறந்தவன் உயிர்த்தெழுதல் போன்றதா ஆதலினால் அச்செய்தியினை மன்னனால் நம்பமுடியவில்லை. அவர் தன்னை ஓர் இழிந்தவராகவேக் கருதினார். ஆதலினால் இது போன்ற நல்யோகத்தினைத் தானடைவது கடினம் என்றும் நினைத்தார்.
பதம் 4.9.38
ஸ்ரத்தாய வாக்யம் தேவருஷேர் ஹர்ஷ-வேகேன தர்ஷித:
வார்தா-ஹர்துர் அதிப்ரீதோ ஹாரம் ப்ராதான் மஹா–தனம்
ஸ்ரத்தாய—நம்பிக்கை கொண்டு; வாக்யம்—வார்த்தைகளில்; தேவருஷே:—நாரத மாமுனிவரின்; ஹர்ஷ-வாகேன—பெரும் திருப்தியினால்; தர்ஷித—மகிழ்ச்சிகொண்டு; வார்தா-ஹர்து:—அச்செய்தியினைக் கொண்டு வந்த தூதரிடம்; அதிப்ரீத:—மிகுந்த திருப்தியுற்று; ஹாரம்—ஓர் முத்துமாலை; ப்ராதார்—அளித்தார்; மஹா-தனம்—மிகுந்த மதிப்புடைய.
தூதரின் வார்த்தைகளை நம்ப முடியாவிட்டாலும் நாரத முனிவரின் வார்த்தைகளில் அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது. அதனால் அச்செய்தியினால் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். மேலும் அவர் முழுத்திருப்தியுடன் அச்செய்தி கொண்டு வந்த தூதருக்குத் தன் கழுத்திலிருந்த விலையுயர்ந்த முத்து மாலையினைப் பரிசாக அளித்தார்.
பதங்கள் 4.9.39 – 4.9.40
ஸத்-அஸ்வம் ரதம் ஆருஹ்ய கார்தஸ்வர-பரிஷ்க்ருதம்
ப்ராஹ்மணை: குல-வ்ருத்தைஸ்ச பர்யஸ்தோ ‘மாத்ய-பந்துபி:
ஸங்க-துந்துபி-நாதேன ப்ரஹ்ம-கோஷேண வேணுபி:
நிஸ்க்ந்ராம புராத் தூர்ணம் ஆத்மஜாபீக்ஷணோத்ஸீக:
ஸத்-அஸ்வம்—உயர்ந்த ஜாதிக்குதிரைகள் பூட்டிய; ரதம்—ரதம்; ஆருஹ்ய—தங்கசரிகைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட; ப்ராஹ்மணை:—அந்தணர்களுடன்; குல-விருந்தை:—குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன்; ச—மேலும்; பர்யஸ்த:—சூழ்ந்துவர; அமாத்ய—மந்திரிப்பிரதானிகள்; பந்துபி:—நண்பர்கள்; ஸங்க—சங்குகள்; துந்துபி—துந்துபிகள்; நாதேன—ஒலியுடன்; ப்ராஹ்ம-கோஷேன—வேதமந்திரங்கள் முழங்க; வேணுபி:—புல்லாங்குழல்கள்; நிஸ்சக்ராம—அவர் வெளியே வந்தார்; புராத்—நகரிலிருந்து; தூர்ணம்—விரைந்து; ஆத்ம-ஜ—புதல்வன்; அபீக்ஷண—காண்பதற்கு; உத்ஸீக:—மிகுந்த உற்சாகத்துடன்.
தனது மைந்தனைக் காணும் பேராவலுடன் மன்னர் உத்தானபாதன் தங்கச்சரிகைகளினால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உயர்ந்த சாதிப் புரவிகளைப் பூட்டி அதில் ஏறினார். கற்றறிந்த அந்தணர்கள், குடும்பத்துப் பெரியவர்கள், நண்பர்கள் ஆகியோரை அழைத்துக் கொண்டு நகரை விட்டு நீங்கினார். தன் ஊர்வலத்தினை இவ்வாறு தொடங்கிய பொழுது சங்குகளும், துந்துபிகளும், குழல்களும் ஒலித்தது. அவற்றோடு வேத மந்திரங்களின் ஒலியும் முழங்கி நன்நிமித்தங்களைக் காட்டின.
பதம் 4.9.41
ஸீனீதி: ஸீருசிஸ் சாஸ்ய மஹிஷ்யௌ ருக்ம-பூஷிதே
ஆருஹ்ய ஸிபிகாம் ஸாந்தம் உத்த மேனாபிஜக்மது:
ஸீனீதி:—ராணி சுனீதி; ஸீருசி:—ராணி சுருசி; ச—மேலும்; அஸ்ய—மன்னரின்; மஹிஷ்யேன—பட்டமகிஷிகள்; ருக்ம-பூஷிதே—பொன் நகைகளினால் அலங்கரித்து; ஆமஹ்ய—ஏறினர்; ஸிபிகாம்—ஒரு பல்லக்கில்; ஸார்தம்—உடன்; உத்தமேன—மன்னரின் மற்றொரு மைந்தன் உத்தமன்; அபிஜகமது:—அனைவரும் புறப்பட்டுச் சென்றார்.
மன்னர் உத்தானபாதனின் பட்டத்து ராணிகளான சுனீதி, மற்றும் சுருசியும். அவரது மற்றொரு மைந்தனான உத்தமனும் அவ்வூர்வலத்தில் வந்தனர். அரசியர் இருவரும் ஓர் அழகான பல்லக்கில் வந்தனர்.
பதங்கள் 4.9.42 – 4.9.43
தம் த்ருஷ்ட் ஓபவனாப்யாஸ ஆயாந்தம் தரஸா ரதாத்
அவருஹ்ய ந்ருபஸ் தூர்ணம் ஆஸாத்ய ப்ரேம-விஹ்வல:
பரிரேபே ‘ங்கஜம் தோர்ப்யாம் தீர் கோத்கண்ட-மனா: ஸ்வஸன்
விஷ்வக்ஷேனாங்க்ரி-ஸம்ஸ்பர்ஸ ஹதாஸேஷாக–பந்தனம்
தம்—அவர் (துருவ மகாராஜா); த்ருஷ்ட்வா—கண்டதும்; உபவன—சிறியவனம்; அப்யாஸே—அருகில்; ஆயாந்தம்—திரும்பிவருவது; தாஸா—மிகுந்த விரைவுடன்; ரதாத்—ரதத்திலிருந்து; அவருஹ்ய—இறங்கி; ந்ருப:—மன்னர்; தூர்ணம்—உடனே; ஆஸாத்ய—அருகில் வந்து; ப்ரேம—பிரேமையுடன்; விஹ்வல:—மகிழ்ச்சி கொண்டு; பரிரேபே—அவர் தழுவினார்; அங்க-ஜம்—அவரது மைந்தனை; தோர்யாம்—தனது கரங்களில்; தீர்க—நீண்டநேரம்; உத்கண்ட—ஆர்வத்துடன்; மனா:—மன்னர்; அவரது மனம்; ஸ்வஸன்—நீண்ட பெருமூச்சுடன்; விஷ்வக்ஷேன—பகவானின்; அங்க்ரி—தாமரைத் திருவடிகளினால்; ஸம்ஸ்பர்ஸ—தொடப்பட்டு; ஹத—அழிக்கப்பட்டது; அஸேஷ—அளவற்ற; அக—ஜடமாசுக்கள்; பந்தனம்—அவைகளின் அடிமை.
துருவமன்னன் அருகிலுள்ள உபவனத்தில் நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்த மன்னர் உத்தானபாதன் விரைந்து தன் இரதத்தினின்று கீழே இறங்கினார். நீண்ட காலமாகத் தன் மைந்தன் துருவனைக் காண வேண்டுமென்று மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எனவே மிகுந்த பாசத்துடனும் நேசத்துடனும் நீண்டநாள் காணாத தன் மைந்தனை நீண்டதொரு பெருமூச்சுடன் மார்புறத் தழுவிக் கொண்டார். ஆனால் துருவ மகாராஜா முன்பு போல் இல்லை; அவர் முழுமுதற் கடவுளின் திருவடித் தாமரைகள் தன் மீது பட்டதினால் பெற்ற ஆன்மீக வளர்ச்சியினால் முற்றிலும் புனிதமடைந்திருந்தார்.
பதம் 4.9.44
அதாஜிக்ரன் முஹீர் முர்த்னி ஸீதைர் நயன-வாரிபி:
ஸ்நாபயாம் ஆஸ தனயம் ஜாதோத்தாம-மனோரத:
அத—அதன்பிறகு; ஆஜிக்ரன்—உச்சிமோந்து; முஹீ:—மீண்டும், மீண்டும்; மூர்த்னி—தலையின்மீது; ஸீனத:—குளிர்ந்த; நயன—விழிகளின்; வாரிபி:—கண்ணீரினால்; ஸ்நாபயாம்-ஆஸ—நீராட்டினார்; தனயம்—தனயன்; ஜாத—நிறைவேறியது; உத்தாம—சிறந்த; மன:-ரத:—அவர் விருப்பம்.
மைந்தன் துருவனுடன் மீண்டும் இணைய வேண்டும் என்ற மன்னர் உத்தானபாதனின் நெடுநாளைய விருப்பம் நிறைவேறியதினால் அவர் துருவனை மீண்டும் மீண்டும் உச்சி முகர்ந்து பெருகி வந்த ஆனந்தக் கண்ணீரினால் நீராட்டினார்.
பதம் 4.9.45
அபிவந்த்ய பிது: பாதாவ் ஆஸீர்பிஸ் சாபிமந்த்ரித:
நானாம மாதரௌ ஸீர்ஷ்ணா ஸத்-க்ருத: ஸஜ்-ஜனாக்ரணீ:
அபிவந்த்ய—வழிபட்டு; பிது:—அவர் தந்தையின்; பாதௌ—பாதங்களில்; ஆஸீர்பி:—ஆசிகளுடன்; ச—மேலும்; அபிமந்த்ரித:-நானாம—அவர் குனிந்து; மாதரெள—தன் இரு அன்னையரையும்; ஸீர்ஷ்ணா—தன் தலையினால்; ஸத்-க்ருத:—கௌரவிக்கப்பட்டனர்; ஸத்-ஜன—பெருமக்களின்; அக்ரணீ:—மிகவுயர்ந்த.
பின்னர் சான்றோர் அனைவரினும் மிகச்சிறந்த துருவ மன்னர் தன் தந்தையின் காலடியில் வீழ்ந்து வணங்கித் தன் தந்தையுடன் உரையாடி அவரால் பெருமதிப்புப் பெற்றார். பிறகு தன் இரு அன்னையரின் பாதங்களிலும் வீழ்ந்து வணங்கினார்.
பதம் 4.9.46
ஸீருசிஸ் தம் ஸமுத்தாப்ய பாதாவனதம் அர்பகம்
பரிஷ்வஜ்யாஹ ஜீவேதி பாஷ்ப-கத்கதயா கிரா
ஸீருசி:—ராணி சுருசி; தம்—அவரது; ஸமுத்தாப்ய—அவரை அள்ளி எடுத்து; பாத-அவனதம்—தன் பாதங்களில் விழுந்த; அர்பகம்—அறியாச் சிறுவனை; பரிஷ்வஜ்ய—தழுவி; ஆஹ—அவள் கூறினாள்; ஜீவ—நீண்டநாள் வாழ்வாயாக; இதி—இவ்வாறு; பாஷ்ப—கண்ணீருடன்; கதகதயா—விம்மினார்; கிரா—வார்த்தைகளுடன்.
துருவ மன்னரின் சிற்றன்னையான சுருசி அவ்வறியாச் சிறுவன் தன் பாதங்களில் விழுந்து பணிந்ததை கண்டவுடன் இருகைகளாலும் அவரை அள்ளி எடுத்துத் தழுவிக் கொண்டு கண்களிலிருந்து கண்ணீர் பெருக உணர்ச்சி மேலீட்டினால் கம்மிய குரலில் “அன்பு மகனே நீ நீண்ட நாள் வாழ்வாயாக” என்று வாழ்த்தினாள்.
பதம் 4.9.47
யஸ்ய ப்ரஸன்னோ பகவான் குணைர் மைத்ரி-ஆதிபிர் ஹரி:
தஸ்மை நமந்தி பூதானி நிம்னம் ஆப இவ ஸ்வயம்
யஸ்ய—யாரேனும் ஒருவர் அவரிடம்; ப்ரஸன்ன—மகிழ்ச்சியுற்று; பகவான்—முழுமுதற் கடவுள்; குணை:—குணங்களினால்; மைத்ரீ-ஆதிபி:—நட்பு போன்றவற்றினால்; ஹரி:—பகவான் ஹரி; தஸ்மை—அவருக்கு; நமந்தி—மரியாதை அளித்து; பூதானி—அனைத்து உயிர்வாழிகளும்; நிம்னம்—பள்ளத்தை நோக்கி; ஆப:—நீர்; இவ—போன்று; ஸ்வயம்—தானாகவே.
முழுமுதற் கடவுளுடன் கொண்ட நட்பினால் உன்னத குணங்கள் வாய்க்கப் பெற்ற ஒருவருக்கு, பள்ளத்தை நோக்கி ஆற்று நீர் இயற்கையாகவேப் பாய்ந்து செல்வதைப் போல், உயிர்கள் அனைத்தும் அவருக்கு மரியாதை அளிப்பர்.
பதம் 4.9.48
உத்தமஸ் சத்ருவஸ் சோபாவ் அன்யோன்யம் ப்ரேம்-விஹ்வலௌ
அங்க ஸங்காத் உத்புலகாவ் அஸ்ரௌகம் முஹீர் ஊஹது:
உத்தம: ச—உத்தமனும்; த்ருவ: ச—துருவனும்; உகௌ—இருவரும்; அன்யோன்யம்—ஒருவரையொருவர்; ப்ரேம-விஹ்வலெள—பாசத்தினால் உணர்ச்சிவயப்பட்டு; அங்க-ஸங்காத்—தழுவிக் கொண்டு; உத்புலகௌ—மயிர்க்கூச்செறிய; அஸ்ர—கண்ணீரின்; ஓகம்—அருவி; முகு:—மீண்டும் மீண்டும்; ஊஹது:—அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.
இரு சகோதரர்களாக உத்தமனும் துருவ மன்னனும் தங்கள் கண்ணீரைப் பரிமாறிக் கொண்டனர். அன்பினாலும் பாசத்தினாலும் அவர்கள் இருவரும் மெய்மறந்து ஒருவரையொருவர் மயிர்க்கூச்செறியக் கட்டுத்தழுவிக் கொண்டனர்.
பதம் 4.9.49
ஸீனீதிர் அஸ்ய ஜனனீ ப்ராணேப்யோ ‘பிப்ரியம் சுதம்
உபகுஹ்ய ஜஹாவ் ஆதிம் தத்-அங்க-ஸ்பர்ஸ–நிர்வ்ருதா
ஸீனிதி:—சுனீதி, துருவனைப் பெற்ற தாய்; அஸ்ய—அவரது; ஜனனீ—அன்னை; ப்ராணேப்ய:—உயிர்மூச்சைக் காட்டிலும் சிறந்த; அபி—கூட; ப்ரியம்—பிரியமான; ஸுதம்—மைந்தன்; உபருஹ்ய—தழுவிக் கொண்டு; ஜஹௌ—நீங்கினார்; ஆதிம்—அனைத்துத் துயரங்களையும்; தத்-அங்க—அவர் உடல்; ஸ்பர்ஸ—ஸ்பரிசம்; தொடு உணர்ச்சி; நிர்வ்ருதா—திருப்தியடைந்தது.
துருவ மன்னனைப் பெற்றெடுத்த அன்னையான சுனீதி தன் உயிரைக் காட்டிலும் அவர் மீது அதிகப் பிரியமுடையவள் ஆவாள். அவள் அவரை ஆவிசேர அணைத்துக் கொண்டாள். அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்ததினால் தனது உலகத் துன்பங்கள் அனைத்தையும் மறந்து போனாள்.
பதம் 4.9.50
பய: ஸ்தனாப்யாம் ஸீஸ்ராவ நேத்ர-ஜை: ஸலிலை: ஸிவை:
ததாபிஷிச்யமனாப்யாம் வீர வீர-ஸீவோ முஹீ:
பய:—பால்; ஸ்தனாப்யாம்—இரு மார்பகங்களிலிருந்தும்; ஸீஸ்ராவ—சுரந்து வழிந்தது; நேத்ர-ஜை:—கண்ணீரினால்; ஸீவை:—மங்கலமானது; ததா—அந்தநேரம்; அபிஷிச்மானாப்யாம்—நனைந்தது; வீர—எனதன்பு விதுரனே; வீர-ஸீவ:—ஒரு வீரனைப்பெற்றெடுத்த அன்னை; முஹீ:—தொடர்ந்து.
எனதன்பு விதுரனே, சுனீதி மிகச் சிறந்த வீரனைப் பெற்றெடுத்த தாயாவாள். அவன் கண்களிலிருந்து பெருகியக் கண்ணீருடன், மார்பகங்களில் இருந்து சுரந்த பாலும் கலந்து துருவ மகாராஜாவை நனைத்தது. இது மிகச் சிறந்த மங்கல அறிகுறியாகும்.
பதம் 4.9.51
தாம் ஸஸம்ஸீர் ஜனா ராஜ்நீம் திஷ்ட்யா தே புத்ர ஆர்தி-ஹா
பர்தி லப்தஸ் சிரம் நஷ்டோ ரக்ஷிதா மண்டலம் புவ:
தாம்—ராணி சுனீதிக்கு; ஸஸம்ஸீ:—பாராட்டினர்; ஜனா:—குடிமக்கள்; ராஜ்நீம்—அரசிக்கு; திஷ்ட்யா—யோகத்தினால்; தே—உங்கள்; புத்ர:—புத்திரன்; ஆர்தி-ஹா—உங்கள் அனைத்துத் துன்பங்களையும் நீக்குவார்; ப்ரதிலப்த:—இப்போது திரும்பி வந்துள்ளார்; சிரம்—நீண்டநாட்களுக்குப் பிறகு; நஷ்ட:—தொலைந்து போன; ரக்ஷிதா—காப்பாற்றுவார்; மண்டலம்—இப்புவி மண்டலத்தை; புவ:—பூமி.
குடிமக்கள் அனைவரும் அரசியிடம் புகழ்ந்து கூறினர்: மதிப்பிற்குரிய மகாராணியே! நீண்ட நாட்களுக்கு முன்னர் தொலைந்துபோன உங்கள் பாசத்திற்குரிய செல்வ மகன் நீங்கள் செய்த புண்ணியத்தினால் இப்பொழுது திரும்பி வந்திருக்கிறார். இதிலிருந்து உங்கள் மைந்தன் அதிககாலம் உங்களைக் காப்பாற்றுவார் என்றும், உங்கள் உலகத் துன்பங்கள் அனைத்தையும் போக்குவார் என்றும் தெரிகிறது.
பதம் 4.9.52
அப்யர்சிதஸ் த்வயா நூனம் பகவான் ப்ரணதார்தி-ஹா
யத்-அனுத்யாயினோ தீரா ம்ருத்யும் ஜிக்யு: ஸீதுர்ஜயம்
அப்யர்சித:—துதித்தல்; த்வயா—உங்களால்; நூனம்—எப்படியும்; பகவான்—முழுமதற் கடவுள்; ப்ரணத-ஆர்தி-ஹா—பயங்கர அழிவினின்றுத் தன் பக்தர்களைக் காப்பவர்; யத்—எவரை; அனுத்யாயின:—தொடர்ந்து தியானித்தால்; தீரா:—தெய்வீக மகான்கள்; ம்ருத்யும்—மரணம்; ஜிக்யு:—வெற்றியடைதல்; ஸீதுர்ஜயம்—அதனை வெல்வது மிக மிகக் கடினமானது.
அன்பிற்குரிய மகாராணி அவர்களே, நீங்கள், மிகப் பயங்கர அழிவினின்றுத் தன் பக்தர்களைக் காப்பாற்றும் முழுமுதற் கடவுளை வணங்கியிருக்க வேண்டும். அவரைத் தொடர்ந்து வணங்குவோர் பிறப்பு, இறப்பு தொடர்ச்சியினைக் கடப்பர். இந்நிறைவினை எய்துதல் மிகவும் கடினமானதாகும்.
பதம் 4.9.53
லால்ய மானம் ஜனனயர் ஏவம் த்ருவம் ஸப்ராதரம் ந்ருப்:
ஆரோப்ய கரிஷீம் ஹ்ருஷ்ட: ஸ்தூயமானோ ‘விஸத்புரம்
லால்யமானம்—இவ்வாறு புகழப்பட்டு; ஜனன:—பொது மக்களினால்; ஏவம்—இவ்வாறு; த்ருவம்—துருவ மகாராஜா; ஸ-ப்ராதரம்—தன் சகோரருடன்; ந்ருப:—மன்னர்; ஆரோப்ய—இட்டு; கரிணீம்—பெண் யானையின் முதுகின் மேல்; ஹ்ருஷ்ட:—மிக்க மகிழ்ச்சியுடன்; ஸ்தூயமான:—பாராட்டப்பட்டு; அவிஸத்—சென்றனர்; புரம்—அவர் தலைநகருக்கு.
மைத்ரேய முனிவர் தொடர்ந்து கூறினார்: என் அன்பிற்குரிய விதுரனே, துருவ மன்னரை அனைவரும் இவ்வாறு புகழ்ந்ததினால் மன்னர் மிக்க மகிழ்ச்சியடைந்தார். அவர் துருவனையும் அவர் சகோதரனையும் ஒரு பெண்யானையின் மீது அமரச் செய்தார். பின்னர் தன் தலைநகர் திரும்பினார். அங்கும் பல்வேறு மக்களால் அவர் பாராட்டப்பட்டார்.
பதம் 4.9.54
தத்ர தத்ரோபஸங்லுப்தைர் லஸன்-மகர-தோரணை:
ஸவ்ருந்தை: கதவீ ஸ்தம்பை: பூக-போனதஸ் ச தத்-விதை:
தத்ர தத்ர—இங்குமங்கும்; உபஸங்க்லுப்தை:—ஏற்படுத்தப்பட்டது; லஸத்—அழகான; மகர—மீன்வடிவ; தோரணை:—தோரணங்கள்; ஸ-வ்ருந்தை:—வாழைக்குலைகளும், பூக்களும்; கதவீ—வாழைமரங்கள்; ஸதம்பை:—தூண்கள்; பூக—போதை; கழுகு—மரங்கள்; ச—மேலும்; தத்-விதை:—இவ்வாறாக.
நகர் முழுவதும் அங்குமிங்கும் பெருங்குலைகளும், பூக்களுமுடைய வாழைமரங்களினாலும்; பாக்கு மரங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மீன்போன்ற வடிவினையுடைய மகர தோரண வாயில்கள் பலவிடங்களில் காணப்பட்டன.
பதம் 4.9.55
சூத-பல்லவ-வாஸ:-ஸ்ரன் முக்தா-தாம-விலம்பிபி:
உபஸ்க்ருதம் ப்ரதி-த்வாரம் அபாம் கும்பை: ஸதீபகை:
சூத-பல்லவ—மாவிலைகளுடன்; வாஸ:—துணி; ஸ்ரக்—மலர் மாலைகள்; முக்தா-தாம—முத்துமாலைகள்; விலம்பிபி:—தொங்கிக் கொண்டிருந்தன; உபஸ்ருதம்—அலங்கரிக்கப்பட்டு; ப்ரதி-த்வாரம்—ஒவ்வொரு வாயிலிலும்; அபாம்—நீர்நிறைந்த; கும்பை:—கும்பங்கள்; ஸ-தீபகை:—எரிகின்ற விளக்குகள்.
ஒவ்வொரு வாயிலிலும் குத்து விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பூரண கும்பங்கள் மலர்களாலும், முத்துக்களாலும், வண்ணத் துணிகளாலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
பதம் 4.9.56
ப்ராகானரர் கோபுராகாரை: ஸாதகும்ப-பரிச்சதை:
ஸர்வதோ ‘லங்க்ருதம் ஸ்ரீமத்-விமான-ஸிகர-த்யுபி:
ப்ராகானர:—சுற்றுச்சுவர்கள்; கோபுர—கோபுரங்கள்; ஆகாரை:—இல்லங்கள்; ஸாதகும்ப—பொன்னாலான; பரிச்சதை:—ஆபரண வேலைப்பாடுகளுடன்; ஸர்வத:—எல்லாப் பக்கங்களிலும்; அலங்க்ருதம்—அணிசெய்யப்பட்டிருந்தது; ஸ்ரீமத்—மதிப்புயர்ந்த, அழகான; விமான—ஆகாய விமானங்கள்; ஸிகர—கும்பங்கள்; த்யுபி:—மின்னின.
தலைநகரிலுள்ள வாயில்கள் மற்றும் சுற்றுசுவர்கள் போன்ற எல்லா இடங்களும் ஏற்கனவே எழிலுடையவை. ஆயினும் இவ்விழாவிற்காக அவை பொன்னாபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மாளிகைகளின் கோபுரக்கவசங்கள் மின்னின. அதுபோல் வானில் சுற்றிப் பறந்து கொண்டிருந்த ஆகாய விமானங்களும் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் எழில் மிக்கவையாக இருந்தன.
பதம் 4.9.57
ம்ருஷ்ட-சத்வர-ரத்யாட்ட மார்கம் சந்தன-சர்சிதம்
லாஜாக்ஷதை: புஷ்ப-பலைஸ் தண்டுலைர் பலிபிர் யுதம்
ம்ருஷ்ட—முழுவதும் சுத்தம் செய்து; சத்வர—நான்கு முனை சந்திப்பு; ரத்யா—பெரிய வீதிகள்; அட்ட—அமர்வதற்குரிய உயர்ந்த மேடைகள்; மார்கம்—சந்துகள்; சந்தன—சந்தனம்; சர்சிதம்—தெளிந்து; லாஜ—அரிசிப்பொரிகளுடன்; அக்ஷதை:—வாற்கோதுமைகளும்; புஷ்ப—புஷ்பங்களும்; பலை:—பழங்களும்; தண்டுலை:—அரிசியுடன்; பலிபி:—மங்கலப் பரிசுப் பொருட்களும்; யுதம்—வைக்கப்பட்டிருந்தன.
நகரின் அனைத்து நான்கு முனை சந்திப்புகள், வீதிகள் மற்றும் உயர்ந்த மேடைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு சந்தனநீர் தெளிக்கப்பெற்றிருந்தன. அட்சதைக்குரியத் தானியங்களான அரிசி, வாற்கோதுமை போன்றவையும் பழங்களும், மலர்களும், மங்கலப் பரிசுப் பொருட்களும் நகரெங்கணும் பரவலாக வைக்கப்பட்டிருந்தன.
பதங்கள் 4.9.58 – 4.9.59
த்ருவாய பதி த்ருஷ்டாய தத்ர புர-ஸ்த்ரிய:
ஸித்தார்தாக்ஷத-ததி-அம்பு தூர்வா புஷ்ப பலானி ச
உபஜஹ்ரு: ப்ரயுஞ்ஜானா வாத்ஸல்யாத் ஆஸிஷ: ஸதீ:
ஸ்ருண்வம்ஸ் தத்-வல்கு-கீதானி ப்ராவிஸத் பவனம் பிது:
த்ருவாய—துருவனை; பதி—வீதியில்; த்ருஷ்டாய—கண்டு; தத்ர தத்ர—இங்குமங்கும்; புர-ஸ்த்ரிய:—குடும்பப் பெண்கள்; ஸித்தார்த—வெள்ளைக் கடுகுகளையும்; அக்ஷத—வாற்கோதுமை; மமி—தயிர்; அம்பு—நீர்; தூர்வா—அருகம்புல்; புஷ்ப—புஷ்பங்கள்; பவானி—பழங்கள்; ச—மேலும்; உபஜஹ்ரு:—அவர்கள் பொழிந்தனர்; ப்ரயுஞ்ஜானா:—முழங்கினர்; ஸல்யாஷ்—அன்பினால்; ஆஸிஷ:—வாழ்த்துக்கள்; ஸதீ:—கற்புப்பெண்டிர்; ஸ்ருணவன்—கேட்டு; தத்—தங்கள்; வல்க—மிக இனிய; கீதானி—பாடல்கள்; ப்ராவிஸத்—அவர் நுழைந்தார்; பவனம்—மாளிகை; பிது:—தந்தையுடன்.
துருவ மகாராஜா ஊர்வலம் சென்றபொழுது, அவரைக் காண வேண்டுமென்று அங்கே குழுமியிருந்த குலப் பெண்கள் அவர் மீது கொண்ட பாசத்தினால் வெண்கடுகு, வாற்கோதுமை, தயிர், தண்ணீர், அருகம்புல், பழங்கள், பூக்கள் போன்றவற்றை அவர்மீது பொழிந்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பெண்கள் மங்கல குலவையிட்டு வரவேற்கும்போது, தன் தந்தையின் அரண்மனையினுள் துருவ மன்னர் நுழைந்தார்.
பதம் 4.9.60
மஹாமணி-வ்ராதமயே ஸ தஸ்மின் பவனோத்தமே
வாலிதோ நிதராம் பித்ரா ந்யவஸத் திவி தேவவத்
மஹாமணி—மிகவும் விலைமதிப்புடைய நகைகள்: வ்ராத—கொத்துக் கொத்தாக; மயே—அலங்கரிக்கப்பட்டு; ஸ:—அவர் (துருவ மகாராஜா); தஸ்மின்—அதில்; பவன-உத்தமே—எழில்மிக்க மாளிகையில்; வாலித:—உயர்ந்த; நிதராம்—எப்போதும்; பித்ரா—தந்தையினால்; ந்யவஸத்—வாழ்ந்தார்; திவி—தேவலோகம்; தேவ-வத்—தேவர்களைப் போன்று.
அதன்பிறகு துருவ மன்னர் மதிப்புமிக்க பொன்னாபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் தந்தையின் மாளிகையில் தங்கினார். அவரது பாசத்திற்குரிய தந்தையின் பாதுகாப்பில் அவர் தேவலோகத்திலுள்ள தேவர்களைப் போன்று வாழ்ந்து வரலானார்.
பதம் 4.9.61
பய:-பேன-நிபா: ஸய்யா தாந்தா ருக்ம-பரிச்சதா:
ஆஸனானி மஹார்ஹானி யத்ர ரௌக்மா உபஸ்கரா:
பய:—பால்; பேன—நுரை; நிபா:—போன்ற; ஸய்யா:—மெத்தை; தாந்தா:—தந்தத்தினால் செய்த; ருக்ம—பொன்னாலான; பரிச்சதா:—அணி செய்யப்பட்ட; ஆஸனானி—இருக்கைகள்; மஹா-அர்ஹானி—மிகுந்த மதிப்புடைய; யத்ர—எங்கே; ரௌக்மா:—பொன்னாலான; உபஸ்கரா:—மேஜை, நாற்காலிகள்.
அம்மாளிகையிலுள்ள கட்டில் தந்தத்தினால் செய்யப்பட்டு பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் மீது போடப்பட்டிருந்த மெத்தை பால்நுரை போல் காட்சியளித்தது. மேஜைகளும் நாற்காலிகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.
பதம் 4.9.62
யத்ர ஸ்படிக-குட்யேசு மஹா-மாரகதேஷீ ச
மணி-ப்ரதீபா ஆபாந்தி லலனா-ரத்ன-ஸம்யுதா:
யத்ர—எங்கே; ஸ்படிக—பளிங்கினால் செய்யப்பட்டது; குட்யேஷீ—சுவர்களில்; மஹா-மாரகதேஷீ—நீலம் போன்ற வைர வைடூரியக் கற்களினால் அலங்கரிக்கப்பட்டு; ச—மேலும்; மணி-ப்ரதீபா:—பொன்னால் செய்யப்பட்ட விளக்குகள்; ஆபாந்தி—ஒளிர்ந்தது; லலனா—பெண் வடிவங்கள்; ரத்ன—ரத்தினங்களினால் செய்யப்பட்ட; ஸம்யுதா:—ஏந்தியிருந்தனர்.
அரசரின் மாளிகைச் சுவர்கள் பளிங்கினால் கட்டப்பட்டு அதில் நீலமும் வைர வைடூரியங்களும் பதிக்கப்பட்டிருந்தன. மேலும் அதில் அழகிய இளமங்கையர் தங்கள் கரங்களில் இரத்தினத் தீபங்களை ஏந்தியது போன்ற சித்திரங்களும் தீட்டப்பட்டிருந்தன.
பதம் 4.9.63
உத்யானானி ச ரம்யாணி விசித்ரைர் அமர-த்ருமை:
கூஜ-த்விஹங்க-மிதுனைர் காயன்-மத்த-மதுவ்ரதை:
உத்யானானி—தோட்டங்கள்; ச—மேலும்; ரம்யாணி—ரம்மியமானவை; விசித்ரை:—பலவித; அமர-த்ருமை:—தேவலோகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்கள்; கூஜ—பாடிக்கொண்டு; த்விஹங்க—பறவைகள்; மிதுனை:—ஜோடிகளுடன்; காயத்—ரீங்காரம்; மத்த—வெறிகொண்ட; மது-வ்ரதை:—வண்டுகளுடன்.
அரசரின் மாளிகையைச் சுற்றித் தோட்டங்கள் இருந்தன. அவற்றில் தேவலோகத்திலிருந்து கொண்டுவரப்பட்டப் பல்வகை மரங்கள் இருந்தன. இம்மரங்களின் கிளைகளில் குயில்கள் தங்கள் இணைகளுடன் சேர்ந்து இனிமையாகப் பாடிக் கொண்டிருக்கும். வண்டுகளின் இனிமையான ரீங்கார ஒலி எப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கும்.
பதம் 4.9.64
வாப்யோ வைதூர்ய-ஸோபானா: பத்மொத்பல-குமுத்-வதீ:
ஹம்ஸ-காரணட்வ-குலைர் ஜீஷ்டாஸ் சக்ராஹ்வ-ஸாரஸை:
வாப்ய:—ஏரிகள்; வைதூர்ய—மரகதப் பச்சைக்கல்; ஸோபானா:—படிகளுடன்; பத்ம—தாமரைமலர்கள்; உத்பவ—நீலோத்பலம்; குமுத்-வாதீ:—அல்லி மலர்கள்; ஹம்ஸ—அன்னப்பறவைகள்; காரண்டவம்—வாத்துகள்; குனல்:—கூட்டங்கூட்டமாக; ஜீஷ்டா:—வாழ்ந்தன; சக்ராஹவ—சக்கரவாஹம் என்றும் பறவை; ஸாரஸை:—நாரைகள்.
குளக்கரைகளின் படித்துறைகள் மரகதப் பச்சைப் கற்களினால் அமைந்திருந்தன. குளங்களில் பல்வண்ணத் தாமரைகளும், அல்லிகளும், நீலோத்பல மலர்களும் பூத்துச்சிரித்தன. அன்னம், வாத்து, சக்கரவாஹம், செங்கால் நாரை போன்ற பறவைகள் கூட்டங் கூட்டமாக அங்கு காணப்பட்டன.
பதம் 4.9.65
உத்தானபாதோ ராஜருஷி ப்ரபாவம் தனயஸ்ய தம்
ஸ்ருத்வா த்ருஷ்ட்வாத்புததமம் ப்ரபேதே விஸ்மயம் பரம்
உத்தானபாத:—மன்னர் உத்தானபாதர்; ராஜ-ருஷி:—ராஜரிஷி; ப்ரபாவம்—புகழ்; தனயஸ்ய—அவர் மைந்தனின்; தம்—அந்த; ஸ்ருத்வா—கேட்டு; த்ருஷ்ட்வா—பார்த்து; அத்புத—அற்புதமானது; தமம்—மிகுந்த உயர்வுடையது; ப்ரபேதே—மகிழ்ச்சியடைந்தார்; விஸ்மயம்—அதிசயம்; பரம்—பரமம்.
ராஜரிஷியான உத்தானபாதர் தன் அரச மைந்தன் துருவனின் புகழ்மிக்கச் செயல்களைக் கேட்டும், அவனது செல்வாக்கினை நேரில் அறிந்தும், துருவனின் செயல்கள், அதிசயத்தின் உச்சநிலைக்கு உரியவை என்று உணர்ந்து துருவனின் சிறப்பையும் எண்ணி மிகவும் திருப்தியடைந்தார்.
பதம் 4.9.66
வீக்ஷ்யோட-வயஸம் தம் ச ப்ரக்ருதீனாம் ச ஸம்மதம்
அனுரக்த-ப்ரஜம் ராஜா த்ருவம் வக்ரே புவ: பதிம்
வீக்ஷ்ய—பார்த்தபிறகு; ஊட-வயஸம்—உரியவயது வந்ததும்; தம்—துருவன்; ச—மேலும்; ப்ரக்ருதீனாம்—அமைச்சர்களினால்; ச—மேலும்; ஸம்மதம்—சம்மதித்து; அனுரக—நேசிப்பிற்குரிய; ப்ரஜம்—அவர் செயல்களினால்; த்ருவம்—துருவ மகாராஜா; சக்ரே—ஆனார்; புவ:—இப்புவியின்; பதிம்—பதியாக.
துருவ மன்னருக்கு அரசினை ஆளும் வயது வந்தவுடன், அமைச்சர்கள், அவரை ஏற்றுக் கொண்டதையும், மக்கள் அவர் மீது மிக்க பாசம் வைத்திருப்பதையும் கண்ட மன்னர் உத்தானபாதன், ஆழ்ந்து சிந்தித்து, துருவ மன்னரை இப்பூமண்டலத்தின் மாமன்னராக முடிசூட்டினார்.
பதம் 4.9.67
ஆத்மானம் ச ப்ரவயஸம் ஆகலய்ய விஸாம்பதி:
வனம் விரக்த: ப்ராதிஷ்டத் விம்ருஸன்ன் ஆத்மனோ கதிம்
ஆத்மானம்—அவர்; ச—மேலும்; ப்ரவயஸம்—வயது முதிர்ச்சியினால்; ஆகலய்ய—கருதி; விஸாம்பதி:—மன்னர் உத்தானபாதர்; வனம்—வனத்திற்கு; விரக்த:—பற்றற்று ப்ராதிஷ்டத்—புறப்பட்டார்; விம்ருஸன்—ஆழ்ந்துசிந்தித்து; ஆத்மன:—ஆத்ம; கதிம்—விடுதலைக்காக.
தனது வயது முதிர்ச்சியினையும், ஆத்மாவின் நலனையும் கருத்தில் கொண்டு ஆழ்ந்து சிந்தித்த பிறகு உலகப் பற்றுக்களைத் துறந்து காட்டிற்குச் சென்றார்.
ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “துருவ மகாராஜா இல்லம் திரும்புதல்” எனும் தலைப்பை கொண்ட ஒன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.