அத்தியாயம் – 33
கபிலரின் செயல்கள்
பதம் 3.33.1
மைத்ரேய உவாச
ஏவம் நிசம்ய கபிலஸ்ய வசோ ஜனித்ரீ
ஸா கர்தமஸ்ய தயிதா கில தேவஹூதி:
விஸ்த்ரஸ்த-மோஹ-படலா தமபிப்ரணம்ய
துஷ்டாவ தத்வ-விஷயாங்கித-ஸித்தி -பூமிம்

மைத்ரேய உவாச—மைத்ரேயர் கூறினார்; ஏவம்—இவ்வாறு; நிசம்ய—கேட்டு; கபிலஸ்ய—பகவான் கபிலரின்; வச—சொற்கள்; ஜனித்ரீ—அன்னை; ஸா—அவள்; கர்தமஸ்ய—கர்தம முனிவரின்; தயிதா—அன்பு மனைவி; கில—பெயருடைய; தேவஹூதி—தேவஹூதி; விஸ்த்ரஸ்த—இருந்து விடுபட்டு; மோஹகடலா—மாயையின் மறைப்பு; தம்—அவரிடம்; அபிப்ரணம்ய—வணக்கங்களை அளித்து; துஷ்டாவ—வழிபாட்டு வாசகங்களை ஒப்புவித்து; தத்வ—அடிப்படைக் கோட்பாடுகள்; விஷய—பொருளில்; அங்கித—ஆசிரியர்; ஸித்தி—விடுதலையின்; பூமிம்—பின்புலம்.

ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: இவ்வாறு பகவான் கபிலரின் அன்னையும் கர்தம முனிவரின் மனைவியும் ஆன தேவஹூதி பக்தித் தொண்டு மற்றும் எல்லை கடந்த அறிவு பற்றிய அறியாமையில் இருந்து விடுபட்டாள். விடுதலைக்குப் பின்புலமான சாங்கிய முறைத் தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளின் ஆசிரியராகிய பகவானுக்கு அவள் தன் வணக்கத்தை அர்ப்பணித்தாள், அவள் அவரைப் பின்வரும் வேண்டுதல்களின் பதங்களால் திருப்தி செய்தாள்.

பதம் 3.33.2
தேவஹூதிருவாச
அதாப்யஜோந்த: ஸலிலே சயாநம்
பூதேந்த்ரியார்தாத்ம-மயம் வபுஸ்தே
குண-ப்ரவாஹம் ஸத- சேஷ- பீஜம்
தத்யௌ ஸ்வயம் யஜ்-டராப்ஜ-ஜாத:

தேவஹூதி உவாச—தேவஹூதி கூறினாள்; அத அபி—மேலும்; அஜ—பகவான் பிரம்மா; அந்த: ஸலிலே—நீரில்; சயானம்—படுத்திருத்தல்; பூத—ஜடமூலப்பொருள்கள்; இந்த்ரிய—புலன்கள்; அர்த—புலனுக்கான பொறிகள்; ஆத்மமய—மயம்—ஊடுருவப்பட்டு; வபு—உடல்; தே—உங்கள்; குணப்ரவாஹம்—ஜட இயற்கையின் மூன்று குணங்கள் ஆகிய நீரோட்டத்தின் மூலாதாரம்; ஸத்—வெளிப்படுத்தி; அசேஷ—எல்லாவற்றிலும்; பீஜம்—விதை; தத்யௌ—தியானிக்கப்பட்டு; ஸ்வயம்—அவரை; யத்—யாரை; ஜடர—வயிற்றிலிருந்து; அப்ஜ—தாமரைமலரிலிருந்து; ஜாத—பிறந்தார்.

தேவஹூதி கூறினார் ப்ரம்மா பிறப்பற்றவர் என்று கூறப்படுகிறார். ஏனென்றால் அண்டத்தின் அடியில் உள்ள கடலில் நீங்கள் பள்ளி கொண்டிருக்கும் பொழுது உங்கள் வயிற்றிலிருந்து வளரும் தாமரை மலரிலிருந்து பிறக்கிறார். ஆனால் எல்லையற்ற அண்டங்களின் மூலாதாரமாகிய உடலையுடைய பிரம்மனும் உங்களைக் குறித்துத் தியானித்தார்.

பதம் 3.33.3
ஸ ஏவ விஸ்வஸ்ய பவான் விதத்தே
குணப்ரவாஹேண விபக்த-வீர்ய:
ஸர்காத்யனீஹோ விததாபிஸந்தி
ராத்மேஸ்வரோ தர்க்ய-ஸஹஸ்ரசக்தி:

ஸ—அந்த மனிதர்; ஏவ—நிச்சயமாக; விஸ்வஸ்ய—அண்டத்தின்; பவான்—நீங்கள்; விதத்தே—நடத்துதல்; குணப்ரவாஹேண—குணங்களின் எதிர்ச் செயல்களால்; விபக்த—பிரிக்கப்பட்டு; வீர்ய—உங்கள் சக்திகள்; ஸர்க ஆதி—படைப்பு முதலியன; அநீஹ—செய்யாதவர்; அவிதத—பயனற்றதல்லாத; அபிஸந்தி—உங்கள் தீர்மானம்; ஆத்ம ஈஸ்வர—எல்லா உயிரினங்களின் தலைவர்; அதர்க்ய—நினைக்க முடியாத; ஸஹஸ்ர—ஆயிரங்கள்; சக்தி—சக்திகள் கொண்டது.

என் அன்பு பகவானே, தனிப்பட்ட முறையில் நீங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை என்றாலும், இயற்கைக் குணங்களின் எதிர்ச் செயல்களில் உங்கள் சக்திகளைப் பகிர்ந்து அளித்துள்ளீர்கள், அந்தக் காரணத்திற்காக, இயலுலக வெளிப்பாட்டின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் நடைபெறுகின்றன. என் அன்பு பகவானே, நீங்கள் உறுதியானவர். எல்லா உயிரினங்களின் பரம புருஷ பகவான். அவர்களுக்காக நீங்கள் இந்த வெளி உலகைப் படைத்தீர்கள், நீங்கள் ஒருவராக இருந்தாலும், உங்கள் பல்வேறு பட்ட சக்திகள் பல்வேறு வகைகளில் செயற்பட முடியும் இது எங்களால் நினைத்துப் பார்க்க இயலாதது.

பதம் 3.33.4
ஸ த்வம் ப்ருதோ மே ஜடரேண நாத
கதம் நு யஸ்யோதர ஏததாதஸீத்
விஸ்வம் யுகாந்தே வட-பத்ர ஏக:
சேதே‘ஸ்ம மாயா-சிகர் அங்க்ரிபான:

ஸ—அந்த மனிதர்; த்வம்—நீங்கள்; ப்ருத—பிறப்பு எடுத்து; மே ஜடரேண—என் வயிற்றால்; நாத—ஓ என் பகவானே; கதம்—எப்படி; நு—பின்னர்; யஸ்ய—யாருடைய; உதரே—வயிற்றில்; ஏதத்—இந்த; ஆஸித்—தங்கி; விஸ்வம்—அண்டம்; யுக அந்தே—ஆயிரம் ஆண்டுகளின் முடிவில்; வடபத்ர—ஆலமரத்தின் இலைமேல்; ஏக—தனியாக; சேதே ஸ்ம—நீங்கள் படுத்திருப்பீர்கள்; மாயா—நினைத்துப் பார்க்க இயலாத ஆற்றல்கள் கொண்டு; சிசு—ஒரு குழந்தை; அங்க்ரி—உங்கள் கால்விரல்; பான—சப்பிக் கொண்டு.

பரம புருஷ பகவானாக, நீங்கள் என் வயிற்றிலிருந்து பிறந்துள்ளீர்கள். ஓ என் பகவானே, எல்லா உலகையும் தன் வயிற்றில் கொண்ட மேலான ஒருவருக்கு அது எவ்வாறு முடிந்தது? பதில் அது முடியும் என்பதுவே பதில் ஏனெனில் யுக முடிவில் நீங்கள் ஆலமரத்தின் இலைமீது, ஒரு சிறிய குழந்தை போல, உங்கள் பாதகமலத்தின் விரலைச் சப்பிக் கொண்டு படுத்திருப்பீர்கள்.

பதம் 3.33.5
த்வம் தேஹ-தந்த்ர ப்ரசமாய பாப்மனாம்
நிதேச-பாஜாம் ச விபோ விபூதயே
யதாவதாராஸ்தவ சூகராதய
ஸ்ததாயம் அபி ஆத்ம-பதோபலப்தயே

த்வம்—நீங்கள்; தேஹ—இந்த உடல்; தந்த்ர—மேற்கொண்டு; ப்ரசமயாய—குறைப்பதற்காக; பாப்மனாம்—பாவச் செயல்களின்; நிதேச பாஜாம்—பக்தியில் அறிவுரைகளின்; ச—மற்றும்; விபோ—ஓ என் பகவானே; விபூதயே—விரிவிற்காக; யதா—போல; அவதாரா—அவதாரங்கள்; தவ—உங்களுடைய; சூகர ஆதய—காட்டுப்பன்றி மற்றும் பிறவடிவங்கள்; ததா—அதனால்; அயம்—கபிலரின் அவதாரம்; அபத—உறுதியாக; ஆத்மபத—தன்னை அறிதலின் வழி; உபஸப்யதே—வெளிப்படுத்தும் பொருட்டு.

என் அன்பு பகவானே, நீங்கள் நெறிதவறியோரின் பாவச் செயல்களைக் குறைக்கும் பொருட்டும், அவர்களின் அறிவை பக்தியிலும் விடுதலையிலும் வளம்பெறச் செய்யும் பொருட்டும் இந்த உடலை எடுத்துள்ளீர்கள். இந்தப் பாவம் நிறைந்த மக்கள் உங்கள் வழிகாட்டலைச் சார்ந்துள்ளதால், உங்கள் சொந்த விருப்பத்தால் நீங்கள் ஒரு காட்டுப்பன்றி மற்றும் பிற வடிவங்களாகப் பிறப்பு எடுக்கிறீர்கள். அதுபோல, உங்களைச் சார்ந்தவர்களுக்கு எல்லை கடந்த அறிவை வழங்கும் பொருட்டு நீங்கள் தோன்றியுள்ளீர்கள்.

பதம் 3.33.6
யந்-நாமதேய-ஸ்ரவணானுகீர்தனாத்
யத்-ப்ரஹ்வணாத்யத்-ஸ்மரணாதபிக்வசித்
ஸ்வாதோபி ஸத்ய ஸவனாய கல்பதே
குத: புனஸ்தே பகவந்நு தர்சனாத்

யத்—யாரிடமிருந்து (பரம புருஷ பகவான்); நாமதேய—பெயர்; ஸ்ரவண—கேட்டல்; அனுகீர்தநாத்—உச்சரிப்பதால்; யத்—யாரிடம்; ப்ரஹ்வணாத்—வணக்கங்களைத் தெரிவிப்பதால்; யத்—யாரிடம்; ஸ்மரணாத்—நினைவு கூர்வதால்; அபி—ஆயினும்; க்வசித்—எந்த நேரத்திலும்; ஸ்வ ஆத—நாய் உண்பவர்; அபி—ஆயினும்; ஸத்ய—உடனே; ஸவனாய—வேத வேள்விகளை நடத்தும் பொருட்டு; கல்பதே—தகுதி பெற்று; குத—என்ன சொல்வது; புன—மீண்டும்; தே—நீங்கள்; பகவன்—ஓ பரம புருஷ பகவானே; நு—பின்னர்; தர்சனாத்—நேருக்கு நேர் பார்ப்பதால்.

ஒருவர் ஒருமுறை பரம புருஷ பகவானின் புனிதப் பெயரைக் கூறினால் அல்லது அவரைப் பற்றி இசைத்தல் அவரது திருவிளையாடல்கள் பற்றிக் கேட்டால், அவருக்கு வணக்கங்களை அர்ப்பணித்தால், அல்லது அவரை நினைவு கூர்ந்தாலும் கூட அவர் நாய்க்கறி உண்ணும் குடும்பத்தில் பிறந்தவராயினும் உடனே வேத வேள்விகளை நிகழ்த்துவதற்குத் தகுதியானவர் ஆகிறார் என்றால், பரம புருஷரை நேருக்கு நேர் பார்க்கும் மனிதர்களின் ஆன்மீக முன்னேற்றம் பற்றிச் சொல்ல ஏதுமில்லை.

பதம் 3.33.7
அஹோ பத ஸ்வ-பசோதோ கரீயான்
யஜ்-ஜிஹ்வாக்ரே வர்ததே நாம துப்யம்
தேபுஸ்தபஸ்தே ஜுஹுவு ஸஸ்னுரார்யா
ப்ரஹ்மானூகர்நாம க்ருணந்தி யே தே

அஹோ பத—ஓ, எத்துணை புகழ் பெற்றது; ஸ்வ பச—ஒரு நாய் உண்பவன்; அத—பின்னர்; கரீயான்—வணங்கத்தக்க; யத்—யாரிடம்; ஜிஹ்வா அக்ரே—நாக்கின் நுனியில்; வர்ததே—நிகழ்காலம்; நாம—புனிதப் பெயர்; துப்யம்—உங்களுக்கு; தேபு தப—துறவுகளைப் பயிற்சி செய்து; தே—அவர்கள்; ஜுஹுவு—அக்னியாகங்களை நிறைவேற்றி; ஸஸ்னு—புனித நதிகளில் குளித்து; ஆர்யா—ஆரியர்கள்; ப்ரஹ்ம அனூசு—வேதங்களைக் கற்று; நாம—புனிதப் பெயர்; க்ருணந்தி—ஏற்றுக் கொண்டு; யே—அவர்கள்; தே—உங்கள்.

ஓ, அவர்கள் எத்துணை புகழ் பெற்றவர்கள் அவர்களின் நாக்குகள் உங்களின் புனிதப் பெயரை உச்சரிக்கின்றன. நாய் உண்பவர்களின் குடும்பங்களில் பிறந்திருந்தாலும் அந்த மனிதர்கள் வழிபடத்தக்கவர்கள். உங்கள் மேலாட்சியின் புனிதப் பெயரை உச்சரிப்வர்கள் எல்லாவிதமான துறவுகள், அக்னியாகங்கள் ஆகியவற்றை நிறைவேற்றி இருக்கவேண்டும், ஆரியர்களின் எல்லா நல்ல முறைகளையும் அடைந்திருக்க வேண்டும். உங்கள் மேலாட்சியின் புனிதப் பெயரை உச்சரிப்பதற்கு, அவர்கள் யாத்திரை செய்யும் புனித இடங்களில் குளித்திருக்க வேண்டும், வேதங்களைப் படித்திருக்க வேண்டும் தேவையான எல்லாவற்றையும் நிறைவேற்றி இருக்க வேண்டும்.

பதம் 3.33.8
தம் த்வாமஹம் பரம்ஹ பரம் புமாம்ஸம்
ப்ரத்யக்-ஸ்ரோதஸ்யாத்மனி ஸம்விபாவ்யம்
ஸ்வ-தேஜஸா த்வஸ்தகுண-ப்ரவாஹம்
வந்தே விஷ்ணும் கபிலம் வேத-கர்பம்

தம்—அவரிடம்; த்வாம்—நீங்கள்; அஹம்—நான்; ப்ரம்ம—ப்ரம்மன்; பரம்—பரம்; புமாம்ஸம்—பரம புருஷ பகவான்; ப்ரத்யக் ஸ்ரோதஸி—உட்புறம் திரும்பி; ஆத்மனி—மனத்தில்; ஸம் விபாவ்யம்—தியானித்து; மனத்தால் உணர்ந்து; ஸ்வ தேஜஸா—உங்கள் சொந்த ஆற்றலால்; த்வஸ்த—மறைந்து; குணப்ரவாஹம்—இயற்கைக் குணங்களின் பாதிப்பு; வந்தே—நான் வணங்குகிறேன்; விஷ்ணும்—பகவான் விஷ்ணுவுக்கு; கபிலம்—கபிலர் என்ற பெயருடைய; வேத கர்பம்—வேதங்களின் உறைவிடம்.

என் பகவானே, நீங்கள் கபிலர் என்ற பெயரிலிருக்கும் பகவான் விஷ்ணுவே என்றும், நீங்கள் பரம புருஷ பகவான், மேலான பிரம்மன் என்றும் நான் நம்புகிறேன். புனிதர்களும் முனிவர்களும், மனம் மற்றும் புலன்களின் தொல்லைகளில் இருந்து விடுபட்டு, உங்களைக் குறித்து த்யானிக்கிறார்கள், ஏனெனில் உங்கள் கருணையால் மட்டுமே ஒருவர் ஜடஇயற்கையின் மூன்று குணங்களின் பிடிகளிலிருந்து விடுபடமுடியும். அழிவின் போது, எல்லா வேதங்களும் உங்களிடம் மட்டும் தக்க வைக்கப்படுகின்றன.

பதம் 3.33.9
மைத்ரேய உவாச
ஈடிதோ பகவானேவம் கபிலாக்ய: பர: புமான்
வாசாவிக்லவயேத்யாஹ மாதரம் மாத்ரு-வத்ஸல:

மைத்ரேய உவாச—மைத்ரேயர் கூறினார்; ஈடித—புகழ்ந்து; பகவான்—பரம புருஷபகவான்; ஏவம்—இவ்வாறு; கபில ஆக்ய—கபிலர் எனப் பெயருடைய; பர—பரமன்; புமான்—மனிதர்; வாசா—சொற்களுடன்; அவிக்லவயா—மதிப்பு; இதி—இவ்வாறு; ஆஹ—பதிலளித்தார்; மாதரம்—அவர் அன்னைக்கு; மாத்ரு வத்ஸல—அவர் அன்னையிடம் மிகவும் அன்புள்ள.

இவ்வாறு பரம புருஷ பகவான் கபிலர், தான் மிகவும் அன்பு கொண்டுள்ள தன் அன்னையின் சொற்களால் திருப்தி அடைந்து, மதிப்புடன் பதிலளித்தார்.

பதம் 3.33.10
கபில உவாச
மார்கேணானேன மாதஸ்தே கஸேவ்யேனோதிதேனமே
ஆஸ்திதேன பராம் காஷ்டாம் அசிராதவரோத்ஸ்யஸி

கபில: உவாச—பகவான் கபிலர் கூறுகிறார்; மார்கேண—வழியால்; அனேன—இந்த; மாத:—என் அன்பு அன்னை; தே—உங்களுக்காக; சூஸேவ்யேன—நிறைவேற்ற மிகவும் எளிமையான; உதிதேன—அறிவுறுத்தப்பட்டு; மே—என்னால்; ஆஸ்திதேன—நிகழ்த்தப்பட்டு; பராம்—பரமன்; காஷ்டாம்—குறிக்கோள்; அசிராத்—மிக விரைவில்; அவரோத்ஸ்யஸி—நீங்கள் அடைவீர்கள்.

பரம புருஷ பகவான் கூறினார்: என் அன்பு அன்னையே, நான் உங்களுக்கு முன்பே அறிவுறுத்திய தன்னை உணர்தலின் வழி மிகவும் எளிமையானது. நீங்கள் இந்த முறையைக் கஷ்டமின்றி நிறைவேற்றலாம், அதைப் பின்பற்றுவதால், உங்கள் தற்போதைய உடலினுள்ளே விடுதலையை, நீங்கள் மிக விரைவில் பெறுவீர்கள்.

பதம் 3.33.11
ஸ்ரத்தத்ஸ்வைதந்மதம் மஹ்யம் ஜுஷ்டம் யத்ப்ரம்-ஹவாதிபி:
யேன மாமபயம் யாயா ம்ருத்யும்ருச்ந்த்யதத்-வித:

ஸ்ரத்தத்ஸ்வ—உங்களுக்கு மற்றவை உறுதியானவை; ஏதத்—இதைப் பற்றி; மதம்—அறிவுரை; மஹ்யம்—என்னுடைய; ஜுஷ்டம்—பின்பற்றப்பட்டு; யத்—எந்த; ப்ரம்மவாதிபி:—மெய்யறிவாளர்களால்; யேன—எதனால்; மாம்—என்னிடம்; அபயம்—பயமின்றி; யாயா—நீங்கள் அடைவீர்கள்; ம்ருத்யும்—மரணம்; ருச்சந்தி—அடைதல்; அ தத் வித:—இதைக் கற்றுணராதவர்கள்.

என் அன்புத் தாயே, மெய்யறிவாளர்களாய் இருப்பவர்கள், நான் உங்களுக்குத் தந்துள்ளது போன்ற அறிவுரைகளை உறுதியாகப் பின்பற்றுவார்கள். உங்களுக்கு மற்றவை உறுதியளிக்கப்பட்டவை, அதாவது, நீங்கள் சரியாகத் தன்னை அறியும் பாதையைக் கடந்து சென்றால் உறுதியாக நீங்கள் அச்சம் தரத்தக்க குற்றத்திலிருந்து விடுபடுவீர்கள், இறுதியில் என்னை அடைவீர்கள். அம்மா, பக்தித் தொண்டின் இந்த முறையைக் கற்றுணராதவர்கள், உறுதியாக பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியிலிருந்து வெளியில் வர இயலாது.

பதம் 3.33.12
மைத்ரேய உவாச
இதி ப்ரதர்ச்ய பகவான் ஸதீம் தாமாத்மனோ கதிம்
ஸ்வ-மாத்ரா ப்ரம்ஹ-வாதிந்யா கபிலோனுமதோ யயௌ

மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; இதி—இவ்வாறு; ப்ரதர்ச்ய—அறிவுறுத்திய பிறகு; பகவான்—பரம புருஷ பகவான்; ஸதீம்—போற்றத்தக்க; தாம்—அந்த; ஆத்மன:—தன்னை அறிதலின்; கதிம்—வழி; ஸ்வமாத்ரா—அவர் அன்னையிடமிருந்து; ப்ரம்ம வாதிந்யா—தன்னை உணர்ந்து; கபில:—பகவான் கபிலர்; அனுமத:—அனுமதி பெற்று; யயௌ—சென்றார்.

ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: பரம புருஷ பகவானாகிய கபிலர், தன் அன்பான அன்னைக்கு அறிவுறுத்திய பிறகு, அவர் சமயப் பணி நிறைவேறியதால், அன்னையிடம் அனுமதி பெற்று வீட்டை விட்டுச் சென்றார்.

பதம் 3.33.13
ஸா சாபி தனயோக்தேன யோகாதேசேன யோக-யுக்
தஸ்மிந்நாஸ்ரம ஆபீடே ஸரஸ்வத்யா: ஸமாஹிதா

ஸா—அவள்; ச—மற்றும்; அபி—உடன்; தனய—அவள் மகனால்; உத்தேன—பேசப்பட்டு; யோக ஆதேசேன—யோகம் பற்றிய அறிவுரையால்; யோக யுக்—பக்தியோகத்தில் ஈடுபட்டு; தஸ்மின்—அதில்; ஆஸ்ரமே—துறவு மாடம்; ஆபீடே—மலர்க்கிரீடம்; ஸரஸ்வத்யா:—ஸரஸ்வதியின்; ஸமாஹிதா—ஸமாதியில் நிலைத்து.

அவள் மகனால் அறிவுறுத்தப்பட்டதுபோல, தேவஹூதியும் அந்த ஆஸ்ரமத்திலேயே பக்தி யோகத்தைப் பயிற்சி செய்யத் தொடங்கினாள். அவள், மலர்களால் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு, ஸரஸ்வதி நதியின் மலர்க்கிரீடமாகக் கருதப்பட்ட கர்தம முனிவரின் இல்லத்தில் சமாதி நிலையைப் பயிற்சி செய்தாள்.

பதம் 3.33.14
அபீக்ஷ்ணாவகா-ஹகபிசான் ஜடிலான் குடிலாலகான்
ஆத்மானாம் சோக்ர-தபஸா பிப்ரதீ சீரிணம் க்ருசம்

அபீக்ஷ்ண—மீண்டும் மீண்டும்; அவகாஹ—குளிப்பதால்; கபிசான்—சாம்பல் நிறம்; ஜடிலான்—சடையாகிவிட்ட; குடில—சுருண்ட; அலகான்—முடி; ஆத்மானாம்—அவள் உடல்; ச—மற்றும்; உக்ரதபஸா—சீரிய தவங்களால்; பிப்ரதீ—ஆனது; சீரிணம்—பழைய கிழிந்த உடையணிந்து; க்ருசம்—மெலிந்து.

அவள் தினமும் மூன்று முறை குளிக்கத் தொடங்கினாள், இவ்வாறு அவள் சுருண்ட கருங் கூந்தல் படிப்படியாக நரைத்துப் போனது. தவத்தால், அவள் உடல் படிப்படியாக இளைத்துப் போனது, அவள் பழைய உடைகளை அணிந்தாள்.

பதம் 3.33.15
ப்ரஜாபதே: கர்தமஸ்ய தபோ-யோக-விஜ்ரும்பிதம்
ஸ்வ-கார்ஹஸ்த்யமனௌபம்யம் ப்ரார்த்யம் வைமானிகைரபி

ப்ரஜாபதே:—மனித இனத்தின் மூதாதையின்; கர்தமஸ்ய—கர்தம முனிவர்; தப:—தவத்தால்; யோக—யோகத்தால்; விஜ்ரும்பிதம்—வளர்ந்து; ஸ்வ கார்ஹஸ்த்ய—அவரது வீடு மற்றும் வீடு சார்ந்த பரிவாரம்; அனௌபம்யம்—சமமற்ற; ப்ரார்த்யம்—பொறாமைப்படத்தக்க; வைமானிகை:—சொர்க்கத்தில் தங்கியிருப்பவர்களால்; அபி—ஆயினும்.

பிரஜாபதிகளில் ஒருவராகிய கர்தம முனிவரின் வீடும், அகப்பரிவாரமும், அவருடைய தவம் மற்றும் யோகத்தின் அறிவாற்றலின் விளைவாக, அவரது செல்வவளம் சில சமயம் வான்வெளியில் வானூர்திகளில் பயணம் செய்பவர்களாலும் பொறாமைப்படும் விதத்தில் அமைந்திருந்தது.

பதம் 3.33.16
பய:- பேனநிபா: சய்யா தாந்தா ருக்ம-பரிச்சதா:
ஆஸனானி ச ஹைமானி சுஸ்பர்சாஸ்தரணானிச

பய:—பாலின்; பேன—நுரை; நிபா:—ஒத்திருத்தல்; சய்யா:—படுக்கைகள்; தாந்தா:—தந்தத்தால் செய்யப்பட்டு; ருக்ம—பொன்மயமான; பரிச்சதா:—உறைகளுடன்; ஆஸனானி—நாற்காலிகள், மேஜைகள்; ச—மற்றும்; ஹைமானி—தங்கத்தால் செய்யப்பட்டு; சு ஸபர்சு—தொடுவதற்கு மென்மையான; ஆஸ்தரணானி—மெத்தைகள்; ச—மற்றும்.

இங்கு கர்தம முனிவரின் வீட்டுச் செல்வவளம் வர்ணிக்கப்படுகிறது. படுக்கை விரிப்புகளும் படுக்கைகளும் பாலின் நுரைபோல் வெண்மையாக இருந்தன, நாற்காலிகளும் மேஜைகளும் தங்கத்தால் செய்யப்பட்டு, தங்கத்தால் ஆன சரிகைச் சித்திர வேலையுடன் கூடிய துணியால் மூடப்பட்டிருந்தன, படுக்குமிடம் தங்கத்தால் செய்யப்பட்டு, மிகவும் மென்மையான தலையணைகளைக் கொண்டிருந்தது.

பதம் 3.33.17
ஸ்வச்சஸ்-படிக-குட்யேஷு மஹாமாரகதேஷு ச
ரத்ன-ப்ரதீபா ஆபாந்தி லலனாரத்ன-ஸ்ம்யுதா:

ஸ்வச்ச—தூய்மையான; ஸ்படிக—பளிங்கு; குட்யேஷு—சுவர்களில்; மஹாமாரகதேஷு—விலை மதிப்புள்ள பச்சைக் கற்களால் அலங்கரிக்கப்பட்டு; ச—மற்றும்; ரத்னப்ரதீபா:—தங்கத்தாலான விளக்குகள்; ஆபாந்தி—ஒளி வீசுதல்; லலனா:—பெண்கள்; ரத்ன—நகைகளுடன்; ஸம்யுதா:—அலங்கரிக்கப்பட்டு.

வீட்டின் சுவர்கள் முதல் தரமான பளிங்கினால் கட்டப்பட்டிருந்தன, மதிப்புமிக்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விளக்கிற்கு எந்தத் தேவையும் இருக்கவில்லை, ஏனெனில் வீடு இந்த நகைகளின் ஒளிக் கதிர்களால் ஒளிவீசிப் பிரகாசித்தது. வீட்டில் உள்ள பெண்மணிகள் ஏராளமான நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.

பதம் 3.33.18
க்ருஹோத்யானம் குசுமிதை ரம்யம் பஹ்வ-மரத்ருமை:
கூஜத்-விஹங்கமிதுனம்- காயந்-மத்த-மதுவ்ரதம்

க்ருஹ உத்யானம்—வீட்டுத் தோட்டம்; குசுமிதை:—மலர்கள் மற்றும் பழங்களுடன்; ரம்யம்—அழகாக; பகு அமரத்ருமை:—பல விண்ணுலக மரங்களுடன்; கூஜத்—பாடுதல்; விஹங்க—பறவைகளின்; மிதுனம்—ஜோடிகளுடன்; காயத்—முனகுதல்; மத்த—மதுவெறி கொண்ட; மதுவ்ரதம்—தேனீக்களுடன்.

வீட்டின் சுற்றுச்சுவர் ஆழகிய தோட்டங்களாலும், இனிய, மணமுள்ள மலர்களாலும், உயர்ந்த, அழகிய, புதுப்பழங்களைத் தரும் பல மரங்களாலும் சூழப்பட்டிருந்தது. அந்தத் தோட்டங்களில் பாடும் பறவைகள் மரங்களின் மீது அமரும், அவற்றின் பேசும் ஒலிகள், தேனீக்களின் முனகும் ஒலி இவை அந்தச் சூழலையே எத்துணை முடியுமோ அத்துணை இனிமையாக ஆக்கி இருந்ததால் மிகவும் கவர்ச்சியாய் இருந்தன.

பதம் 3.33.19
யத்ர ப்ரவிஷ்டமாத்மாநம் விபுதானுசரா ஜகு:
வாப்யாமுத்பல-கந்திந்யாம் கர்தமேனோபலாலிதம்

யத்ர—எங்கு; ப்ரவிஷ்டம்—நுழைந்து; ஆத்மானம்—அவளிடம்; விபுதாநுசரா:—வானுலக வாசிகளின் தோழர்கள்; ஜகு:—பாடினர்; வாப்யாம்—குளத்தில்; உத்பல—தாமரைகளின்; கந்திநயாம்—நறுமணத்துடன்; கர்தமேன—கர்தமரால்; உபலாலிதம்—சிறந்த கவனத்துடன் பராமரிக்கப்பட்டு.

தாமரை மலர்கள் நிரம்பிய குளத்தில் குளிப்பதற்காக, அந்த அழகிய தோட்டத்தில் தேவஹூதி நுழையும்போது, வானுலக வாசிகளின் துணைவர்களாகிய கந்தர்வர்கள், கர்தம முனிவரின் புகழ்மிக்க இல்லற வாழ்வு பற்றிப் பாடுவார்கள். அவளின் சிறந்த கணவராகிய, கர்தமர், அவளுக்கு எல்லா நேரத்திலும் எல்லாப் பாதுகாப்பும் அளித்தார்.

பதம் 3.33.20
ஹித்வா ததீப்ஸிததமம் அப்யாகண்டல-யோஷிதாம்
கிஞ்சிச்சகார வதனம் புத்ர-விச்லேஷணாதுரா

ஹித்வா—விட்டுவிட்டு; தத்—அந்த இல்லறம்; ஈப்ஸித தமம்—மிகவும் விரும்பத்தக்க; அபி—அதுவும்; ஆகண்டல யோஷிதாம்—பகவான் இந்திரனின் மனைவிகளால்; கிஞ்சித் சகார வதனம்—அவள் முகத்தில் வருந்தத்தக்க தோற்றம் கொண்டாள்; புத்ர விச்லேஷண—அவள் மகனிடம் இருந்து பிரிந்ததால்; ஆதுரா—துன்பப்பட்டு.

எல்லாப் பக்கங்களிலும் அவள் நிலை தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும், புனிதவதியான தேவஹூதி, மேலுலகப் பெண்களும் பொறாமைப்படும் அளவிற்கு அவளுக்கு உடைமைகள் இருந்தபோதிலும், எல்லா வசதிகளையும் விட்டு விட்டாள். அவள் தனது மகன் தன்னிடமிருந்து பிரிக்கப்படுகிறாரே என்று மட்டும் வருந்தினாள்.

பதம் 3.33.21
வனம் ப்ரவ்ரஜிதே பத்யாவ அபத்ய-விரஹாதுரா
ஞாத-தத்வாப்யஞபந்நஷ்டே வத்ஸே கௌரிவ வத்ஸலா

வனம்—காட்டிற்கு; ப்ரவ்ரஜிதே பத்யௌ—அவள் கணவர் வீட்டை விட்டுச் சென்றபொழுது; அபத்ய விரஹ—அவள் மகனிடமிருந்து பிரிவால்; ஆதுரா—மிகவும் வருத்தம்; ஞாத தத்வா—உண்மையிலிருந்து; அபி—ஆயினும்; அபூத்—அவள் ஆனாள்; நஷ்டே வத்ஸே—பசு கன்றை இழந்த போது; கௌ:—பசு; இவ—போல; வத்ஸலா—அன்புள்ள.

தேவஹூதியின் கணவர் முன்பே வீட்டை விட்டுச் சென்று துறவு வாழ்வை ஏற்றுக் கொண்டார், பின்னர் அவளது ஒரே மகன், கபிலர், வீட்டை விட்டுச் சென்றார். அவளுக்கு வாழ்வு மற்றும் மரணத்தின் எல்லா உண்மைகளும் தெரியும் என்றாலும், அவள் மனம் எல்லா மாசும் நீங்கித் தூய்மையடைந்திருந்தது என்றாலும், ஒரு பசு தன் கன்று இறக்கும் பொழுது பாதிக்கப்படுவதுபோல, அவள் மகனின் இழப்பிற்குப் பெரிதும் வருந்தினாள்.

பதம் 3.33.22
தமேவ த்யாயதீ தேவம் அபத்யம் கபிலம் ஹரிம்
பபூவாசிரதோ வத்ஸ நி: ஸ்ப்ருஹா தாத்ருசே க்ருஹே

தம்—அவரிடம்; ஏவ—நிச்சயமாக; த்யாயதீ—தியானித்தல்; தேவம்—தெய்வீகம்; அபத்யம்—மகன்; கபிலம்—பகவான் கபிலர்; ஹரிம்—பரம புருஷ பகவான்; பபூவ—ஆனாள்; அசிரத:—மிக விரைவில்; வத்ஸ—ஓ அன்பு விதுரரே; நி: ஸ்ப்ருஹா—பற்றின்றி; தாத்ருசே க்ருஹே—அந்த வீட்டிற்கு.

ஓ விதுரரே, இவ்வாறு அவள் மகனாகிய பரம புருஷ பகவானை, கபில தேவரை நோக்கி எப்போதும் தியானித்து, அவள் மிக விரைவில் அவளது நன்கு அலங்கரிக்கப்பட்ட வீட்டிடம் பற்றின்றிப் போனாள்.

பதம் 3.33.23
த்யாயதீ பகவத்- ரூபம் யதாஹ த்யான-கோசரம்
சுத: ப்ரஸந்ந-வதனம் ஸமஸ்த-வ்யஸ்த- சிந்தயா

த்யாயதீ—தியானித்தல்; பகவத் ரூபம்—பரம புருஷ பகவானின் வடிவத்தை; யத்—எந்த; ஆஹ—அவர் அறிவுறுத்தினார்; த்யான கோசரம்—தியானத்திற்கான பொருள்; சுத:—அவள் மகன்; ப்ரஸந்நவதனம்—புன்சிரிப்புடன் கூடிய முகத்துடன்; ஸமஸ்த—மொத்தத்தில்; வ்யஸ்த—பகுதிகளில்; சிந்தயா—அவள் மனத்துடன்.

அதனால் எப்போதும் புன்சிரிப்புடன் கூடிய பரம புருஷ பகவான், கபில தேவர், அவள் மகனிடமிருந்து எல்லாவற்றையும் விளக்கமாகவும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டதும், தேவஹூதி நிலையாகத் தொடர்ந்த பகவானின் விஷ்ணு வடிவத்தைக் குறித்து தியானிக்கத் தொடங்கினாள்.

பதங்கள் 3.33.24 – 3.33.25
பக்தி-ப்ரவாஹ-யோகேன வைராக்யேண பலீயஸா
யுக்தானுஷ்டானஜாதேன- ஞானேன ப்ரம்-ஹஹேதுனா

விசுத்தேன ததாத்மானம் ஆத்மனா விச்வதோ-முகம்
ஸ்வானுபூத்யா நிரோபூத மாயா-குண-விசேஷணம்

பக்தி ப்ரவாஹ யோகேன—பக்தித் தொண்டில் தொடர்ந்து ஈடுபடுவதால்; வைராக்யேண—துறவால்; பலீயஸா—மிகவும் வல்லமை; யுக்த அனுஷ்டான—கடமைகளைச் சரியாகச் செய்வதால்; ஜாதேன—உருவாக்கி; ஞானேன—அறிவால்; பிரம்மஹேதுனா—பரம சத்தியத்தை உணர்ந்த காரணத்தால்; விசுத்தேன—தூய்மையாக்குதலால்; ததா—பின்னர்; ஆத்மானம்—பரம புருஷ பகவான்; ஆத்மனா—மனத்துடன்; விச்வத: முகம்—எல்லா இடத்திலும் திரும்பும் அவர் முகம்; ஸ்வ அனுபூத்யா—தன்னை அறிதலால்; திர: பூத—மறைந்து; மாயாகுணா—ஜட இயற்கையின் குணங்களின்; விசேஷணம்—தனித்தன்மைகள்.

அவள் அவ்வாறு சீரிய ஈடுபாட்டுடன் பக்தித் தொண்டு புரிந்தாள். அவள் ஆழ்ந்த துறவு நிலை மேற்கொண்டதால், அவள் உடலின் அடிப்படைத் தேவைகளை மட்டும் ஏற்றுக் கொண்டாள். பரம சத்தியத்தை உணர்ந்து கொண்டதால் அறிவு பெற்றாள், அவள் மனம் தூய்மை அடைந்தது, அவள் பரம புருஷ பகவானைக் குறித்து தியானம் செய்வதில் முழுவதும் ஆழ்ந்து விட்டாள், இயற்கையின் குணங்களால் ஏற்பட்ட எல்லா அச்ச உணர்வுகளும் அவளிடமிருந்து மறைந்தன.

பதம் 3.33.26
ப்ரஹ்மண் யவஸ்தித-மதிர் பகவத்யாத்ம-ஸம்ஸ்ரயே
நிவ்ருத்த- ஜீவாபத்தித்வாத் க்ஷீணக்-லேசாப்த-னிர்வ்ருதி:

ப்ரம்மணி—பிரம்மனில்; அவஸ்தித—அமைந்து; மதி:—அவள் மனம்; பகவதி—பரம புருஷ பகவானில்; ஆத்ம ஸம்ஸ்ரயே—எல்லா உயிரினங்களிலும் தங்கும்; நிவ்ருத்த—விடுபட்டு; ஜீவ—ஜீவாத்மாவின்; ஆபத்தித்வாத்—துரதிருஷ்டவசமான சூழலில் இருந்து; க்ஷீண—மறைந்து; க்லேச—ஜடத் துன்பங்கள்; ஆப்த—அடைந்து; நிர்வ்ருதி:—எல்லை கடந்த இன்பம்.

அவள் மனம் பகவானிடம் முழுதும் ஈடுபட்டது, அவள் தானாகவே அருவ பிரம்மன் பற்றிய அறிவை உணர்ந்தாள். பிரம்மனை உணர்ந்த ஆத்மாவாக, அவள் வாழ்வின் உலோகாயதக் கருத்தின் நெறிமுறையினின்று விடுபட்டாள். இவ்வாறு எல்லா உலகத் துன்பங்களும் மறைந்தன. அவள் எல்லை கடநத் இன்பம் அடைந்தாள்.

பதம் 3.33.27
நித்யாரூட-ஸமாதித் வாத் பராவ்ருத்த- குண-ப்ரமா
ந ஸஸ்மார ததாத்மானம் ஸ்வப்னே த்ருஷ்டமிவோத்தித

நித்ய—நிலையான; ஆரூட—அதில் அமைந்து; ஸமாதித்வாத்—உறக்கம் போன்ற நிலையிலிருந்து; பராவ்ருத்த—இருந்து விடுபட்டு; குண—ஜட இயற்கையின் குணங்களின் ப்ரமா—மாயை; ந ஸஸ்மார—அவளுக்கு நினைவில்லை; ததா—பின்னர்; ஆத்மானம்—அவளுடைய பருவுடல்; ஸ்வப்னே—கனவில்; த்ருஷ்டம்—பார்த்து; இவ—போல; உத்தித—எழுந்தவர்.

நிலையான மயக்கத்தில் இருந்து இயற்கையின் குணங்களால் வலியுறுத்தப்பட்ட மாயையிலிருந்து விடுபட்டு, ஒருவர் கனவில் தன்னுடைய வேறுபட்ட உடல்களை மறப்பதுபோல அவள் தன் பருவுடலை மறந்தாள்.

பதம் 3.33.28
தத்தேஹ பரத போஷே ப்ய க்ருசஸ்சாத்ய-ஸம்பவாத்
பபௌ மலைரவச்சந்ந: ஸதூம இவ பாவக:

தத்தேஹ—அவளது உடல்; பரத—பிறரால் (கர்தமரால் படைக்கப்பட்ட அழகிய பெண்கள்); போஷ—காக்கப்பட்டு; அபி—ஆயினும்; அக்ருச—இளைப்பில்லாத; ச—மற்றும்; ஆதி—கவலை; அஸம்பவாத்—நிகழாதிருப்பதிலிருந்து; பபௌ—ஒளிவீசி; மலை—தூசியால்; அவச்சந்த—மூடப்பட்டு; ஸ தூம—புகையால் சூழப்பட்டு; இவ—போல்; பாவக—நெருப்பு.

அவளது உடல் அவள் கணவராகிய கர்தமர் படைத்த அழகிய ஆன்மீக பெண்களால் பராமரிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவளுக்கு மனக் கவலை இல்லாததால், அவளது உடல் இளைக்க வில்லை. அவள் புகையால் சூழப்பட்ட நெருப்பு போலத் தோன்றினாள்.

பதம் 3.33.29
ஸ்வாங்கம் தபோ-யோக மயம் முக்த-கேசம் கதாம்பரம்
தைவ-குப்தம் ந புபுதே வாஸுதே-வப்விஷ்டதீ:

ஸ்வ அங்கம்—அவளது உடல்; தமப—தவம்; யோக—யோகப்பயிற்சி; மயம்—முழுதும் ஈடுபட்டு; முக்த—தளர்த்தப்பட்டு; கேசம்—அவள் கூந்தல்; கத—ஒழுங்கின்றிக் கலைந்து; அம்பரம்—அவள் உடைகள்; தைவ—பகவானால்; குப்தம்—பாதுகாக்கப்பட்டு; ந—இல்லை; புபுதே—அவர் அறிந்திருந்தாள்; வாசுதேவ—பரம புருஷ பகவானிடம்; ப்ரவிஷ்ட—ஆழ்ந்து; தீ—அவர் நினைவுகள்.

அவள் எப்போதும் பரம புருஷ பகவானுடைய நினைவில் மூழ்கி இருந்ததால், அவள் கூந்தல் சிலசமயம் தளர்த்தப்பட்டு இருந்ததையோ அல்லது அவளது உடைகள் ஒழுங்கின்றிக் கலைந்து இருந்ததையோ அவள் அறியவில்லை.

பதம் 3.33.30
ஏவம் ஸா கபிலோக்தேன மார்கேணாசிரத: பரம்
ஆத்மானம் ப்ரம்ஹநிர்வாணம் பகவந்தமவாப ஹ

ஏவம்—இவ்வாறு; ஸா—அவள் (தேவஹூதி); கபில—கபிலரால்; உக்தேன—அறிவுறுத்தப்பட்டு; மார்கேண—வழியால்; அசிரத:—விரைவில்; பரம்—பரமன்; ஆத்மானம்—பரமாத்மா; பிரம்ம—பிரம்மன்; நிர்வாணம்—உலோகாயத இருப்பின் அழிவு; பகவந்தம்—பரம புருஷ பகவான்; அவாப—அவள் அடைந்தாள்; ஹ—நிச்சயமாக.

என் அன்பு விதுரரே, கபிலரால் அறிவுறுத்தப்பட்ட தத்துவங்களைப் பின்பற்றுவதால், தேவஹூதி விரைவில் உலகப் பிணிப்பிலிருந்து விடுதலை அடைந்தாள், அவள் கடினமின்றி, பரமாத்மா ஆகிய பரம புருஷ பகவானை அடைந்தாள்.

பதம் 3.33.31
தத்வீராஸீத்புண்யதமம் க்ஷேத்ரம் த்ரைலோக்-யவிஸ்ருதம்
நாம்னா ஸித்த-பதம்யத்ர ஸா ஸம்ஸித்திமுபேயுஷீ

தத்—அந்த; வீர—ஓ வீரமுள்ள விதுரரே; ஆஸீத்—இருந்த; புண்யதமம்—மிகவும் புனிதமான; க்ஷேத்ரம்—இடம்; த்ரை லோக்ய—மூன்று உலகங்களில்; விஸ்ருதம்—அறியப்பட; நாம்னா—பெயரால்; ஸித்தபதம்—ஸித்தபத; யத்ர—எங்கு; ஸா—அவள் (தேவஹூதி); ஸம்ஸித்திம்—முழுமை; உபேயுஷீ—அடையப்பட்டது.

என் அன்பு விதுரரே, தேவஹூதி அவளது பரிபூரணத்தை அடைந்த அரண்மனை மிகவும் புனித இருப்பிடமாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அது மூன்று உலகங்களிலும் ஸித்தபத என்று குறிப்பிடப்படுகிறது.

பதம் 3.33.32
தஸ்யாஸ்தத்-யோகவிதுத மார்த்யம் மர்த்யமபூத்ஸரித்
ஸ்ரோதஸாம் ப்ரவரா ஸௌம்ய ஸித்திதா ஸித்தஸேவிதா

தஸ்யா:—தேவஹூதியின்; தத்—அந்த; யோக—யோகப் பயிற்சியால்; விதுத—விட்டுக் கொடுத்து; மார்த்யம்—ஜட மூலப் பொருட்கள்; மர்த்யம்—அவளது நிலையற்ற உடல்; அபூத்—ஆனது; ஸரித்—ஒரு நதி; ஸ்ரோதஸாம்—எல்லா நதிகளின்; ப்ரவரா—முதன்மையான; ஸௌம்ய—ஓ நல்ல விதுரனே; ஸித்திதா—முழுமை அளித்தல்; ஸித்த—முழுமை விரும்புபவர்களால்; சேவிதா—பயன்படுத்தி.

அன்பு விதுரனே, அவள் உடலில் மூலப் பொருட்கள் நீராய் உருகி இப்போது ஓடும் நதியாகும். அது எல்லா நதிகளிலும் மிகவும் புனிதமானது. அந்த நதியில் குளிப்பவர் எவரும் முழுமை அடைகிறார், அதனால் முழுமையை விரும்பும் எல்லா மனிதர்களும் அங்கு சென்று குளிப்பார்.

பதம் 3.33.33
கபிலோபி மஹா-யோகீ பகவான் பிதுராஸ்ரமாத்
மாதரம் ஸமனுக்ஞாப்ய ப்ராகுதீசீம் திசம்யயௌ

கபில:—பகவான் கபிலர்; அபி—உறுதியாக; மஹா யோகீ—சிறந்த முனிவர்; பகவான்—பரம புருஷ பகவான்; பிது:—அவர் தந்தையின்; ஆஸ்ரமாத்—துறவி மாடத்திலிருந்து; மாதரம்—அவர் தாயிடமிருந்து; ஸமனுக்ஞாப்ய—அனுமதி கேட்டுக் கொண்டு; ப்ராக் உதீசீம்—வடகிழக்கு; திசம்—திசை; யயௌ—அவர் சென்றார்.

என் அன்பு விதுரரே, மிகச்சிறந்த முனிவராகிய கபிலர், பரம புருஷ பகவான், அவருடைய தாயின் அனுமதியுடன் அவர் தந்தையின் துறவு மாடத்தை விட்டு நீங்கி வடகிழக்குத் திசை நோக்கிச் சென்றார்.

பதம் 3.33.34
ஸித்தசாரண-கந்தர்வைர் முனிபிஸ்சாப்ஸரோ-கணை:
ஸ்தூயமான: ஸமுத்ரேண தத்தார்ஹண-நிகேதன:

ஸித்த—ஸித்தர்களால்; சாரண—சாரணர்களால்; கந்தர்வை:—கந்தர்வர்களால்; முனிபி:—முனிவர்களால்; ச—மற்றும்; அப்ஸர: கணை:—அப்ஸரங்களால் (மேலுலகக் கோள்களைச் சேர்ந்த அழகிய பெண்கள்); ஸ்தூயமான:—புகழப்பட்டு; ஸமுத்ரேண—கடலால்; தத்த—கொடுக்கப்பட்டு; அர்ஹண—படையல்கள்; நிகேதன:—தங்கும் இடம்.

அவர் வடதிசையில் கடந்து செல்லும் பொழுது, எல்லா மேலுலக வாசிகளான சாரணர்கள் மற்றும் கந்தர்கள், முனிவர்கள் மற்றும் மேலுலகக் கோள்களின் அழகிய பெண்கள் அவரை வேண்டி, அவருக்கு எல்லா மரியாதைகளும் அளித்தனர். கடல் அவருக்குப் படையல்கள் அளித்து, தங்குவதற்கு இடம் கொடுத்தது.

பதம் 3.33.35
ஆஸ்தே யோகம் ஸமாஸ்தாய ஸாங்க்யாசார்யைரபிஷ்டுத:
த்ரயாணாமபி லோகானாம் உபசாந்த்யை ஸமாஹித:

ஆஸ்தே—அவர் தொடர்ந்து இருக்கிறார்; யோகம்—யோகம்; ஸமாஸ்தாய—பயிற்சி செய்து; ஸாங்க்ய—ஸாங்க்ய தத்துவத்தின்; ஆசார்யை:—சிறந்த ஆசிரியர்களால்; அபிஷ்டுத:—வணங்கி; த்ரயாணாம்—மூன்று; அபி—உறுதியாக; லோகானாம்—உலகங்களின்; உபா சாந்த்யை—விடுவிக்கும் பொருட்டு; ஸமாஹித:—மயக்கத்தில் பொருந்தி.

இப்போதும் கூட கபில முனிவர் மூன்று உலகங்களிலுமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மாக்களின் விடுதலைக்காக அங்கு தியானத்தில் இருக்கிறார், சாங்கியத் தத்துவ முறையின் ஆசார்யர்கள் அல்லது சிறந்த ஆசிரியர்கள் அவரை வணங்குகின்றனர்.

பதம் 3.33.36
ஏதந்நிகதிதம் தாத யதப்ருஷ்டோஹம் தவானக
கபிலஸ்ய ச ஸம்வாதோ தேவஹூத்யாஸ்ச பாவன:

ஏதத்—இந்த; நிகதிதம்—பேசப்பட்டு; தாத—ஓ அன்பு விதுரனே; யத்—எந்த; ப்ருஷ்ட:—கேட்கப்பட்டால்; அஹம்—நான்; தவ—உன்னால்; அனக—ஓ பாவமற்ற விதுரனே; கபிலஸ்ய—கபிலரின்; ச—மற்றும்; ஸம்வாத:—உரையாடல்; தேவஹூத்யா:—தேவஹூதியின்; ச—மற்றும்; பாவன:—தூய்மையான.

என் அன்பு மகனே, நீ என்னிடமிருந்து கேட்டதால், நான் பதில் கூறினேன். ஓ பாவமற்றவனே, கபில தேவர், அவர் அன்னை மற்றும் அவர்களது செயல்கள் பற்றிய வர்ணனைகள் எல்லாத் தூய உரையாடல்களைக் காட்டிலும் மிகவும் தூய்மையானது.

பதம் 3.33.37
ய இதமனுஸ்ருணோதி யோ பிதத்தே
கபில-முனேர்மதமாத்ம -யோக-குஹ்யம்
பகவதி க்ருததீ: சுபர்ண-கேதா
வுபலபதே பகவத்பதாரவிந்தம்

ய:—யாராயினும்; இதம்—இந்த; அனுஸ்ருணோதி—கேட்டு; ய:—யாராயினும்; அபிதத்தே—விளக்குபவர்; கபில—முனே:—கபில முனிவரின்; மதம்—அறிவுரைகள்; ஆத்ம யோக—பகவானைத் தியானிப்பதை அடிப்படையாகக் கொண்டு; குஹ்யம்—ரகசியமானது; பகவதி—பரம புருஷ பகவானிடம்; க்ருத தீ:—அவரது மனத்தைப் பதிய வைத்து; சுபர்ணகேதௌ—கருடக் கொடி உடையவர்; உபலபதே—அடைதல்; பகவத்—பகவானின்; பத—அரவிந்தம்— தாமரைத் திருவடிகள்.

கபிலதேவர் மற்றும் அவரது அன்னையின் செயல்கள் பற்றிய வர்ணனை மிகவும் ரகசியமானது, இந்த வர்ணனையைப் பற்றிக் கேட்பவர் அல்லது படிப்பவர் கருடரால் தாங்கப்படும் பரம புருஷ பகவானுக்குப் பக்தராகிறார், அதன் பின்னர், அவர் பகவானின் எல்லை கடந்த அன்புத் தொண்டில் ஈடுபடுவதற்கு பகவானின் இருப்பிடத்தில் நுழைகிறார்.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “கபிலரின் செயல்கள்“ எனும் தலைப்பைக் கொண்ட முப்பத்து மூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare