அத்தியாயம் – 32
பயன்தரும் செயல்களில் வருகின்ற சிக்கல்
பதம் 3.32.1 : பரம புருஷபகவான் கூறினார்: இல்லற வாழ்வின் நடுவில் வாழும் மனிதர் மதச்சடங்குகளைச் செய்வதன் மூலம் உலகியல் பயன்களைப் பெறுகிறார், அதன் மூலம் அவர் தன் பொருளாதார வளர்ச்சி மற்றும் புலன் நுகர்ச்சிக்கான ஆசையை நிறைவேற்றுகிறார். மீண்டும் மீண்டும் அவர் அதே வழியில் செயல்படுகிறார்.

பதம் 3.32.2 : அந்த மனிதர்கள் புலன் நுகர்ச்சியில் அதிகப்பற்று கொண்டதால், பக்தித் தொண்டை எப்போதும் இழக்கின்றனர், அதனால் அவர்கள் பலவித யாகங்களைச் செய்தாலும் தேவர்களையும் முன்னோர்களையும் திருப்தி செய்யச் சிறந்த வாக்குறுதிகளை எடுத்தாலும், அவர்கள் கிருஷ்ண உணர்வில், பக்தித் தொண்டில் ஆர்வம் கொள்வதில்லை.

பதம் 3.32.3 : புலன் நுகர்ச்சியால் கவரப்பட்ட தேவர்கள் மற்றும் முன்னோர்களிடம் பக்தியுள்ள அந்த உலோகாயதர்கள் ஸோமரசம் குடிப்பதற்கு சந்திரனுக்கு உயர்த்தப்படுகிறார்கள். மீண்டும் அவர்கள் இந்தக் கோளுக்குத் திரும்பி வருகிறார்கள்.

பதம் 3.32.4 : உலோகாயத மனிதர்களின் எல்லாக் கோள்களும், சந்திரன் போன்ற மேலுலகக் கோள்களும் சேர்ந்து, பரம புருஷ பகவானாகிய ஹரி, அநந்த சேஷம் என்று அறியப்படும் பாம்புகளால் ஆன தன் படுக்கைக்குச் செல்லும் பொழுது மறைகின்றன.

பதம் 3.32.5 : அறிவும் தூய்மையடைந்த உணர்வு நிலையும் உடையவர்கள் கிருஷ்ண உணர்வில் முழுத் திருப்தி அடைகின்றனர். இயற்கையின் குணங்களிலிருந்து விடுபட்டவராக அவர்கள் புலன் திருப்திக்காகச் செயல்படுவதில்லை. மாறாக அவர்கள் தங்கள் கடமைகளில் ஈடுபட்டு இருப்பதால் அவர்கள் ஒருவர் எதிர்பார்க்கப்படுவது போலச் செயல்படுகின்றனர்.

பதம் 3.32.6 : எந்தப் பற்றுமின்றி கடமைகளை அவர் செய்வதன் மூலம் உரிமையாளர் அல்லது போலி ஆளுமை உணர்வு இல்லாதிருப்பதன் மூலம், மனச்சான்றினைத் தூய்மைப்படுத்துதலின் மூலம் ஒருவருடைய இயல்பான நிலையில் எளிதாக பகவானின் ராஜ்யத்தில் நுழைய முடியும்.

பதம் 3.32.7 : ஒளி நிறைந்த பாதையின் வழியாக, அந்த விடுதலை பெற்ற மனதிர்கள் முழுமையான பரம புருஷ பகவானை ஆன்மீக மற்றும் ஜடவுலகங்களின் உரிமையாளரை, அவற்றின் வெளிப்பாடு மற்றும் அழிவிற்கு மேலான காரணமாக விளங்குபவரை அணுகுகின்றனர்.

பதம் 3.32.8 : பரம புருஷ பகவானின் ஹிரண்யகர்ப்ப விரிவை வழிபடுபவர்கள் இந்த ஜடவுலகினுடைய இரண்டு பரார்தங்கள் முடியும் வரையிலும் பகவான் ப்ரம்மா இறக்கும் வரையிலும் இந்த உலகில் இருக்கின்றனர்.

பதம் 3.32.9 : ஜட இயற்கையுள் மூன்று குணங்களின் நேரம் இரு பரார்த்தங்கள் என்று அறியப்படும் காலத்தை அனுபவித்த பின்னர், பகவான் பிரம்மா, பூமி, நீர் காற்று, நெருப்பு, வான் மனம், ஆளுமை முதலிய அடுக்குகளால் மூடப்பட்டு அண்டத்தை மூடிவிட்டு பகவானிடம் திரும்பிச் செல்கிறார்.

பதம் 3.32.10 : மனத்தைக் கட்டுப்படுத்தி, சுவாசிக்கும் பயிற்சிகளைச் செய்வதால் உலகப் பற்றின்றி இருக்கும் யோகிகள், மிக மிகத் தொலைவில் உள்ள பிரம்மனின் கோளை அடைகின்றனர். தங்களின் உடல்களைக் கைவிட்ட பின்னர் அவர்கள் பகவான் பிரம்மனின் உடலில் நுழைகின்றனர், அதனால் பிரம்மன் விடுதலை பெற்று பரம புருஷ பகவானாகிய மேலான பிரம்மனிடம் சேரும்பொழுது, அந்த யோகிகளும் பகவானின் அரசிற்குள் செல்ல முடியும்.

பதம் 3.32.11 : அதனால், என் அன்பு அன்னையே, எல்லாருடைய மனத்திலும் அமர்ந்திருக்கும் பரம புருஷ பகவானின் திருவடி நிழலை பக்தித் தொண்டினால் நேரடியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பதங்கள் 3.32.12- 3.32.15 : என் அன்பு அன்னையே, சிலர் பரம புருஷ பகவானை சிறப்பான சுய ஆர்வத்துடன் வழிபடலாம், ஆனால் பகவான் பிரம்மனைப் போன்ற தேவர்களும், ஸநத் குமாரரைப் போன்ற சிறந்த சாதுக்களும் மற்றும் மரீசீ போன்ற சிறந்த முனிவர்களும் படைப்பின் போது மீண்டும் இந்தப் பருவுலகிற்கு வரவேண்டும். இயற்கையின் மூன்று குணங்களின் செயலெதிர்ச்செயல் தொடங்கும்பொழுது, இந்த உலக வெளிப்பாட்டின் படைப்பாளரும், வேத அறிவு நிறைந்தவரும் ஆகிய பிரம்மா, ஆன்மீக வழி மற்றும் யோக முறையின் ஆசிரியர்களான சிறந்த முனிவர்கள் ஆகியோர் காலக் கூற்றின் பாதிப்பின் கீழ் வருகின்றனர். அவர்கள் தங்களது பயன்தராத செயல்களால் விடுதலை அடைகின்றனர், அவர்கள் புருஷரின் முதல் அவதாரத்தை அடைகின்றனர், ஆனால் படைப்பு நேரத்தில், அவர்கள் முன்பு இருந்தவாறு சரியாக அதே வடிவங்களுடனும் நிலைமைகளுடனும் திரும்பி வருகின்றனர்.

பதம் 3.32.16 : இந்தப் பருவுலகத்தோடு மிகவும் ஒன்றிப்போனவர்கள் விதிக்கப்பட்ட கடமைகளை மிகவும் நன்றாகவும், சிறந்த நம்பிக்கையுடனும் நிறைவேற்றுகிறார்கள். அவர்கள் தினமும் விதிக்கப்பட்ட அந்த கடமைகளை, பலன் கிடைக்கும் வண்ணம் பற்றுடன் செய்கிறார்கள்.

பதம் 3.32.17 : அந்த மனிதர்கள், ரஜோ குணத்தால் தூண்டப்பட்டு, கவலைகளை நிறைந்தவர்களாக, கட்டுப்படுத்தப்படாத புலன்களால் எப்போதும் புலன் நுகர்ச்சிக்கு ஆசைப்படுபவர்களாக இருக்கின்றனர், அவர்கள் முன்னோர்களை வழிபடுகின்றனர், இரவும் பகலும் அவர்களின் குடும்ப சமூக மற்றும் தேசிய வாழ்வின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப் பாடுபடுகின்றனர்.

பதம் 3.32.18 : அந்த மனிதர்கள் த்ரை வர்கிக எனப்படுகின்றனர் ஏனெனில் அவர்கள் மூன்று வித உயர்த்தும் முறைகளில் ஆர்வம் கொண்டவர்கள். கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மாவுக்கு வீடுபேறுதரும் பரம புருஷ பகவானிடம் வெறுப்பு கொண்டவர்கள். உன்னத வீரத்தால் கேட்கத் தகுதியான பரமபுருஷ பகவானது திருவிளையாடல்களில் அவர்கள் ஆர்வம் இல்லாதவர்கள்.

பதம் 3.32.19 : அந்த மனிதர்கள் பகவானின் ஆணையால் கண்டிக்கப் படுகிறார்கள். அவர்கள் பரமபுருஷ பகவானின் செயல்களாகிய தேனை வெறுப்பதால், அவர்கள் மலம் தின்னும் பன்றிகளுடன் ஒப்பிடப்படுகிறார்கள். அவர்கள் பகவானின் உன்னதச் செயல்களைக் கேட்பதை விட்டுவிட்டு உலோகாயத வாதிகளின் வெறுக்கத்தக்க செயல்களைக் கேட்பதில் ஈடுபடுகின்றனர்.

பதம் 3.32.20 : அந்த உலோகாயதவாதிகள் சூரியனின் தெற்குப்பாதை மூலம் பித்ருலோகம் எனப்படும் கோனிற்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் இந்த பூமியாகிய கோளிற்கு மீண்டும் திரும்பி வந்து, அவர்களின் குடும்பங்களில் பிறப்பு எடுத்து, பிறப்பிலிருந்து வாழ்வின் முடிவுவரை அதே உலகியல் பயன்தரும் செயல்களை மீண்டும் தொடங்குகின்றனர்.

பதம் 3.32.21 : உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்ட எவரும் தீடிரென்று சிலசமயம் விழுவதுபோல அவர்களுடைய பக்திச் செயல்களின் விளைவுகள் முடியும் பொழுது; வன்மை வாய்ந்த சக்தியால் அவர்கள் கீழ் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்கள் மீண்டும் இந்தக் கோளிற்குத் திரும்ப வருகின்றனர்.

பதம் 3.32.22 : என் அன்பான அன்னையே, நீங்கள் பரம புருஷ பகவானிடம் சரணடையுங்கள் என்று அதனால் நான் அறிவுறுத்துகிறேன், ஏனெனில் அவருடைய தாமரைத் திருவடிகள் வழிபடத் தகுதியானவை. இதைப் பக்தி மற்றும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில் இவ்வாறு நீங்கள் உன்னத பக்தித் தொண்டில் பணிபுரிய முடியும்.

பதம் 3.32.23 : கிருஷ்ண உணர்வில் ஈடுபாடு, மற்றும் கிருஷ்ணரிடம் பக்தித் தொண்டை நிறைவேற்றுதல் அறிவிலும், பற்றின்மையிலும், தன்னை அறிதலிலும் முன்னேற்றமடையச் செய்யும்.

பதம் 3.32.24 : மிகவுயர்ந்த பக்தரின் மனம் புலனுக்கான செயல்களில் சமநிலை அடைகிறது, ஒப்புக்கொள்ளத்தக்க அல்லது ஒப்புக்கொள்ளத்தகாத செயல்களுக்கு அப்பாற்பட்டவர்.

பதம் 3.32.25 : அவருடைய உன்னத அறிவுக்கூர்மையால், தூய பக்தர் தன் நோக்கில் சமமாக இருக்கிறார், தன்னைப் பொருளால் மாசுபட விடுவதில்லை. அவர் எதையும் உயர்ந்ததாகவோ தாழ்ந்ததாகவோ பார்ப்பதில்லை, அவர் தன்னை, பரமனுடன் தன்மையில் சமமாக, உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவதாக உணர்கிறார்.

பதம் 3.32.26 : பரம புருஷபகவான் மட்டுமே முமையான உன்னத அறிவு ஆவார். ஆயினும் அவரைப் பல்வேறு வகையாகப் புரிந்து கொள்ளும் முறைகளுக்கு ஏற்றபடி அவர் வேறுமாதிரி தோன்றுகிறார், அருவ பிரம்மனாக, பரமாத்மாவாக, பரம புருஷ பகவானாக அல்லது புருஷ அவதாரமாகத் தோன்றுகிறார்.

பதம் 3.32.27 : எல்லா யோகிகளுக்கான மிகச்சிறந்த பொது நெறிமுறை என்னவென்றால் பலவித யோகத்தால் அடையக் கூடிய உலகியற் பொருளில் முழுதும் பற்றின்றி இருத்தலாகும்.

பதம் 3.32.28 : உடல் பொருள் ஆவி கடந்த நிலையை வெறுக்கிறவர்கள் உண்மையே வடிவான இறைவனை புலனறி சாட்சியாகவும், வேறுபாடாகவும் உணர்கின்றனர், அதனால், தவறாகக் கொள்ளப்பட்ட கற்பனையால், அனைத்துமே அவர்களுக்கு தொடர்புடையதாகத் தோன்றுகின்றன.

பதம் 3.32.29 : மஹத்-தத்வமாகிய முழு ஆற்றலில் இருந்து, போலி ஆளுமை, உலக இயற்கையின் மூன்று குணங்கள் ஐந்து மூலப்பொருட்கள், தனிப்பட்ட உணர்வு நிலை, பதினொரு புலன்கள் மற்றும் பருவுடலை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன். அதுபோல, முழு அண்டமும் பரம புருஷ பகவானிடமிருந்து வந்திருக்கிறது.

பதம் 3.32.30 : நம்பிக்கையுடன், தளரா உறுதியுடன், முழுப்பற்றின்மையுடன் ஏற்கனவே பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவருக்கு, பரமனைப் பற்றிய நினைவில் எப்போதும் ஆழ்ந்திருப்பவருக்கு முழுமையான அறிவினைப்பெற முடியும் அப்படிபட்டவர் உலகத் தொடர்பிலிருந்து விலகி இருக்கிறார்.

பதம் 3.32.31 : என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அன்னையே, நான் முன்பே பரமசத்தியத்தைப் புரிந்து கொள்வதன் வழிமுறையினை வர்ணித்திருக்கிறேன், அதன் மூலம் ஒருவர் பொருள், ஆத்மா, அவற்றின் தொடர்பு ஆகிய இவற்றின் உறுதியான உண்மையைப் புரிந்துகொள்ள முடியும்.

பதம் 3.32.32 : தத்துவ ஆராய்ச்சி பரமபுருண பகவானைப் புரிந்து கொள்ளுதலில் நிறைவு பெறுகிறது. இந்தப் புரிந்து கொள்ளும் நிலை அடைந்த பிறகு, ஒருவர் இயற்கையின் குணங்களிலிருந்து விடுதலை அடையும் பொழுது, அவர் பக்தித் தொண்டின் உயர்நிலை அடைகிறார். நேரடியாக பக்தித் தொண்டின் மூலமாக அல்லது தத்துவ ஆராய்ச்சியின் மூலம், பரம புருஷ பகவானை ஒருவர் கண்டுபிடித்துச் சேர்ந்திட வேண்டும்.

பதம் 3.32.33 : ஒரு தனிப்பொருள் அதன் வேறுபட்ட தன்மைகளால் வெவ்வேறு புலன்களால் ஒவ்வொரு விதமாகப் போற்றப்படுகிறது. அதுபோல, பரம புருஷ பகவான் ஒருவர், ஆனால் பலவித புனித நூல்களின் நெறிகளுக்கேற்றபடி அவர் வேறுபட்டத் தோன்றுகிறார்.

பதங்கள் 3.32.34 – 3.32.36 : பயன் தரும் செயல்கள் மற்றும் வேள்விகளையும் நிகழ்த்துவதால், தானம் வழங்குவதால், தவங்களைச் செய்வதால், பல்வேறு இலக்கியங்களைக் கற்பதால், தத்துவ ஆராய்ச்சி நடத்துவதால், மனத்தைக் கட்டுப்படுத்துவதால், புலன்களை அடக்குவதால், துறவு நெறியான வாழ்வை ஏற்றுக்கொள்வதால், மற்றும் ஒருவருடைய சமூக நெறியின் விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதால்; யோகப் பயிற்சியின் வேறுபட்ட பிரிவுகளைச் செய்வதால் பக்தித் தொண்டு புரிவதால், பற்று பற்றின்மை ஆகிய இரண்டின் அடையாளங்களையும் உள்ளடக்கிய பக்தித் தொண்டின் முறையை வெளிப்படுத்துவதால்; தன்னை அறிதலின் விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்வதால், பற்றின்மை எனும் பலமான உணர்வை வளர்ப்பதால், தன்னை உணர்தலின் வேறுபட்ட வழிமுறைகளைப் புரிந்து கொள்வதில் நிபுணரான ஒருவர் பரம புருஷ பகவானை இந்த உலகிலும் ஆன்மீக உலகிலும் அவரை உணர்கிறார்.

பதம் 3.32.37 : என் அன்பு அன்னையே நான் உங்களுக்கு பக்தித் தொண்டின் முறையையும் நான்கு வேறுபட்ட சமூகப்பிரிவுகளில் அதன் அடையாளத்தையும் விளக்கி இருக்கிறேன். சாஸ்வதமான காலம் எவ்வாறு வாழும் உயிரினங்களை, அவற்றின் புலனால் அறிய முடியாத போதும், துரத்துகிறது என்றும் விளக்கினேன்.

பதம் 3.32.38 : அறியாமையாலோ அல்லது அவருடைய உண்மை அடையாளத்தை மறந்தோ ஒருவர் நிகழ்த்தும் செயல்களுக்கு ஏற்றபடி உயிரினத்திற்கு பல்வேறு வகையான வாழ்வுகள் உள்ளன என் அன்பு அன்னையே, யாரேனும் அந்த மறதியில் அகப்பட்டுக்கொண்டால், அவரால் தன்னுடைய இயங்கும் நிலை எங்கு முடியும் என்பதைப் புரிந்துகொள்ள இயலாது.

பதம் 3.32.39 : பகவான் கபிலர் தொடர்ந்தார் இந்த அறிவுரை பொறாமைப்படுபவர்களுக்கும் உலோகாயத வாதிகளுக்கும் அல்லது தங்கள் நடத்தையில் தூய்மையற்றவர்களுக்கும் உரியதல்ல. வஞ்சனையாளர்களுக்கு அல்லது உலகத்தின் பொருள்கள் பற்றிய செருக்கு உடையவர்களுக்குரியதும் இல்லை.

பதம் 3.32.40 : மிகவும் பேராசைப்படுபவர்கள், குடும்பவாழ்வில் அதிகப்பற்றுடையவர்கள், பக்தரல்லாதார், பக்தர்களிடம் பொறாமைப்படுபவர்கள், பரம புருஷபகவானிடம் பொறமைப்படுபவர்கள் ஆகியோருக்கு அந்த அறிவுரை அறிவுறுத்தப்படக் கூடாது.

பதம் 3.32.41 : அறிவுரையானது ஆன்மீக குருவிடம் மதிப்புள்ள பக்தருக்கும் பொறாமையற்றவருக்கும், எல்லா வித வாழும் உயிரினங்களிடம் நட்புக் கொண்டவருக்கும், மற்றும் நம்பிக்கை மற்றும் உண்மையுடன் சேவை புரிய ஆர்வமுள்ளவருக்கும் தரப்படவேண்டும்.

பதம் 3.32.42 : இந்த அறிவுரை ஆன்மீக குருவால் பிற எல்லாவற்றையும் விட பரம புருஷ பகவானை மிகவும் அன்பானவராக எடுத்துக்கொண்டவருக்கு, யாரிடமும் பொறாமை இல்லாதவருக்கு, முழுதும் தூய்மையாக்கப்பட்டவருக்கு, கிருஷ்ண உணர்வின் எல்லைக்கு வெளியில் இருப்பவற்றில் பற்றின்மையை வளர்த்துக் கொண்டவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

பதம் 3.32.43 : நம்பிக்கையுடனும், அன்புடனும் என்னைத் தியானித்து என்னைப் பற்றிக் கேட்டு எனது பெயரை உச்சரிக்கும் ஒருவர் நிச்சயமாக பகவானிடம் வீடுபேறு பெறுவதற்குத் திரும்பிச் செல்கிறார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare