அத்தியாயம் – 30
எதிர்விளைவுச் செயல்களைப் பற்றி
பகவான் கபிலரின் வர்ணனை
பதம் 3.30.1
கபில உவாச
தயை தஸ்ய ஜனோ நூனம் நாயம் வேதோரு விக்ரமம்:
கால்யமானேர் பி பலினோ வாயோரிவ கனாவலி:
கபில உவாச—பகவான் கபிலர் கூறினார்; தஸ்ய ஏதஸ்ய—இந்தக் காலக் கூறின்; ஜன—மனிதர்; நூனம்—நிச்சயமாக; ந—இல்லை; அயம்—இந்த; வேத—அறிந்தவர்; உரு—விக்ரமம்ச—சிறந்த பலம்; கால்யமான—செய்யப்பட்டு; அபி—இருப்பினும்; பலின—பலமான; வா யோ:—காற்றின்; இவ—போல; கன—மேகங்களின்; ஆவலி—கூட்டம்.
பரமபுருஷ பகவான் கூறினார். மேகங்களின் கூட்டம் காற்றின் பலமான பாதிப்பை அறியாதது போல, பூதவுணர்வில் ஈடுபட்டுள்ள ஒருவர் தன்னை அழைத்துச் செல்லும் காலக் கூற்றின் பலமான ஆற்றலை அறியமாட்டார்.
பதம் 3.30.2
யம் யமர்த்தமுபாதத்தே து: கேன சுக-ஹேதவே
தம் தம் துனோதி பகவான் புமாஞ்சோசதியத்-க்ருதே
யம்யம்—எதுவாயினும்; அர்த்தம்—பொருள்; உபாதத்தே—ஒருவர் பெறுதல்; து: கேன—கஷ்டத்துடன்; சுக-ஹேதவே—இன்பத்திற்காக; தம்தம்—அந்த; துனோதி—அழித்தல்; பகவான்—பரம புருஷ பகவான்; புமான்—மனிதர்; சோசதி—புலம்புகிறார்; யத்க்ருதே—அந்தக் காரணத்திற்காக.
இன்பம் என்று அழைக்கப்படும் ஒன்றிற்காக, மிகுந்த துன்பத்துடனும் வேலையுடனும் உலோகாயதியால் உருவாக்கப்படும் எதுவும், காலக் கூறாக விளங்கும் பரமபுருஷ பகவானால் அழிக்கப்படுவதால் கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மா புலம்புகிறது.
பதம் 3.30.3
யதத்ருவஸ்ய தேஹஸ்ய ஸானுபந்தஸ்ய துர்மதி
த்ருவாணி மந்யதே மோஹாத் க்ருஹ-க்ஷேத்ர-வசூனி ச
யத்—ஏனெனில்; அத்ருவஸ்ய—தற்காலிகமான; தேஹஸ்ய—உடலின்; ஸானுபந்தஸ்ய—தொடர்பு உடையதுடன்; துர்மதி—தவறாக வழி நடத்தப்பட்டவர்; த்ருவாணி—நிலையான; மந்யதே—நினைக்கிறார்; மோஹாத்—அறியாமையால்; க்ருஹ—வீடு; க்ஷேத்ர—நிலம்; வசூனி—செல்வம்; ச—மற்றும்.
தவறாக வழிநடத்தப்பட்ட உலோகாயதி, அவர் உடல் நிலையானதல்ல என்றும் அந்த உடலுடன் தொடர்புடைய வீடு, நிலம் செல்வம் ஆகிய கவர்ச்சிகளும் தற்காலிகமானவை என்றும் அறியாதவர். அறியாமையால் மட்டுமே, அவர் எல்லாம் நிலையானது என்று நினைக்கிறார்.
பதம் 3.30.4
ஐந்துர்வை பவ ஏதஸ்மின் யாம் யாம் யோனிமனுவ்ரஜேத்
தஸ்யாம் தஸ்யாம் ஸ லபதே நிர்வ்ருதிம் ந விரஜ்யதே
ஐந்து—வாழும் உயிரினங்கள்; வை—நிச்சயமாக; பவே—உலக இருப்பில்; ஏதஸ்மின்—இந்த; யாம்யாம்—எதுவாயினும்; யோனிம்—உயிரினங்கள்; அனுவ்ரஜேத்—அவர் பெறலாம்; தஸ்யாம் தஸ்யாம்—அதில்; ஸ—அவர்; லபதே—அடைகிறார்; நிர்வ்ருதிம்—திருப்தி; ந—இல்லை; விரஜ்யதே—வெறுப்பு அடைய.
எந்த உயிரினத்தில் ஒருவர் தோன்றினாலும், அந்த உயிரினத்தில் அதற்கென்று நியமிக்கப்பட்ட திருப்தியை அடைகிறார், அவர் அந்த நிலை அடைந்ததற்காக ஒருபோதும் வெறுப்படைவதில்லை.
பதம் 3.30.5
நலகஸ்-தோபி தேஹம் வை ந புமாம்ஸ்த்யக்துமிச்சதி
நாரக்யாம் நிர்வ்ருதௌ ஸத்யாம் தேவ-மாயா-விமோஹித
நரக—நரகத்தில்; ஸ்த—அமைந்து; அபி—கூட; தேஹம்—உடல்; வை—உண்மையில்; ந—இல்லை; புமான்—மனிதர்; த்யக்தும்—விட்டுச்செல்ல; இச்சக்தி—விரும்புதல்; நாரக்யாம்—நரகத்தனம்; நிர்வ்ருதௌ—இன்பம்; ஸத்யாம்—இருக்கும்பொழுது; தேவமாயா—விஷ்ணுவின் மாய சக்தியால்; விமோஹித—ஏமாற்றப்பட்ட.
கட்டுப்படுத்தப்பட்ட உயிரினம் எந்த உயிரினங்களின் தோற்றத்தை எடுக்கிறதோ அந்த வாழ்வில் திருப்தியடைகிறது; மாயா சக்தியின் மூடிய பாதிப்பால், நரகத்திலும், தன் உடலை விட்டு விட விரும்புகிறது. ஏனெனில் அவர் நரக இன்பத்தில் மகிழ்கிறார்.
பதம் 3.30.6
ஆத்ம-ஜாயா -சுதாகார- பசூத்-ரவிணபந்துஷு
நிரூட- மூலஹ் -ருதய ஆத்மானம் பஹு மந்யதே
ஆத்ம—உடல்; ஜாயா—மனைவி; சூத—குழந்தைகள்; அகார—வீடு; பசு—விலங்குகள்; த்ரவிண—செல்வம்; பந்துஷு—தோழர்களில்; நிரூட—மூல—ஆழ்ந்து வேரோடி; ஹ்ருதய—அவர் மனம்; ஆத்மானம்—அவரை; பஹு—உயர்வாக; மந்யதே—அவர் நினைக்கிறார்.
ஒருவரது வாழ்க்கைத் தரத்துடன் கொள்ளும் அந்தத் திருப்தி, உடல், மனைவி, வீடு, குழந்தைகள், விலங்குகள், செல்வம் மற்றும் நண்பர்களுடன் கொள்ளும் ஆழ்ந்த வேரோடிய பற்றின் காரணமாக ஏற்படுவதாகும். அந்தத் தொடர்பில், கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மா தான் சரியாக இருப்பதாக நினைக்கிறார்.
பதம் 3.30.7
ஸந்தஹ்யமான-ஸர்வாங்க ஏஷாமுத்வஹனாதினா
கரோத்யவிரதம் மூடோ துரிதானி துராசய:
ஸந்தஹ்யமான—தீவிரமான; ஸர்வ—எல்லா; அங்க—அவர்தம் உறுப்புகள்; ஏஷாம்—இந்தக் குடும்ப அங்கத்தினர்கள்; உத்வஹன—காப்பதற்காக; ஆதினா—ஆர்வத்துடன்; கரோதி—அவர் செய்கிறார்; அவிரதம்—எப்போதும்; மூடா:—முட்டாள்; துரிதானி—பாவச்செயல்கள்; துராசய:—தீய எண்ணமுடைய.
அவர் எப்போதும் கவலையில் வெந்து கொண்டிருந்தாலும், அந்த முட்டாள் எப்போதும் ஒருபோதும் நிறைவேற்றப்பட முடியாத எதிர்பார்ப்புடன், தன் குடும்பம் மற்றும் சமுதாயம் எனப்படுவதைக் காக்கும் பொருட்டு எல்லாவிதமான பாவச் செயல்களையும் செய்கிறார்.
பதம் 3.30.8
ஆக்ஷிப்தாத்மேந்த்ரிய ஸ்த்ரீணாம் அஸதீனாம் ச மாயயா
ரஹோரசிதயாலாபை: சிசூனாம் கல-பாஷிணாம்
ஆக்ஷிப்த—மயக்கிய; ஆத்ம—மனம்; இந்த்ரிய—அவர் புலன்கள்; ஸ்த்ரீணாம்—பெண்களின்; அஸதீனாம்—போலியான; ச—மற்றும்; மாயயா—மாயையால்; ரஹ—இனிமையான இடத்தில்; ரசிதயா—காட்டப்பட்டு; ஆலாபை—பேசுவதால்; சசீனாம்—குழந்தைகளின்; கலபாஷிணாம்—இனிய சொற்களுடன்.
அவரை மாயையால் மயக்கும் பெண்ணுக்கு அவர் தன் மனத்தையும் புலன்களையும் தருகிறார். அவர் தனிமையான அணைப்புகளையும் அவளுடன் பேசுவதையும் அனுபவிக்கிறார், அவர் சிறிய குழந்தைகளின் இனிய சொற்களால் மயங்குகிறார்.
பதம் 3.30.9
க்ருஹே கூட-தர்மேஷீ துகந்த்-ரேஷ்வதந்த்ரித
குர்வந்து க-ப்ரதீகாரம் சுகவந்மந்யதே க்ருசீ
க்ருஹே—குடும்ப வாழ்வில்; கூடதர்மேசுஷு—போலியைப் பயிற்சி செய்வதில் ஈடுபட்ட; து க தந்த்ரேசு—துன்பங்களைப் பரப்புதல்; அதந்த்ரித—கவனமுடன்; குர்வந்—செய்தல்; து: க—ப்ரதீகாரம்— தொல்லைகளின் ஒருமுகப்படுத்துதல்; சுகவத்—இன்பமாக; மத்யதே—நினைக்கிறார்; க்ருசீ—குடும்பத்தலைவர்.
சூழ்ச்சித் திறமும் அரசியலும் நிறைந்த அவரது குடும்ப வாழ்வில் பற்றுள்ள குடும்பத்தலைவர் தொடர்ந்து இருக்கிறார். எப்பொழுதும் துன்பங்களைப் பரப்பிக் கொண்டு, புலன் நுகர்ச்சியின் செயல்களால் கட்டுப்படுத்தப்பட்டு, அவர் தனது எல்லாத் துன்பங்களின் எதிர்ச்செயல்களுக்கு எதிராகச் செயல்படுகிறார். அவர் வெற்றிகரமாக அந்தத் துன்பங்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறார்.
பதம் 3.30.10
அர்த்தைராபாதிதைர்குர்வ்யா ஹிம்ஸயேதஸ்த-தஸ்ச தான்
புஷ்ணாதி யேஷாம் போஷேண சேஷ -புக்யாத்யத: ஸ்வயம்
அர்த்தை—செல்வத்தால்; ஆபாதிதை—கைக்கொண்டு; குர்வ்யா—சிறந்தது; ஹிம்ஸயா—வன்முறையால்; இத: தத:—இங்கும் அங்கும்; ச—மற்றும்; தான்—அவர்கள் (குடும்ப அங்கத்தினர்கள்); புஷ்ணாதி—அவர் காக்கிறார்; யேஷாம்—அவருடைய; போஷேண—பாதுகாப்பினால்; சேஷ —எஞ்சியுள்ளது; புக்—உண்ணுதல்; யாதி—அவர் செல்கிறார்; அத—கீழ் நோக்கி; ஸ்வயம்—தான்.
இங்கும் அங்கும் வன்முறை புரிவதன் மூலம் அவர் பணம் பெறுகிறார் அவர் அதை அவரது குடும்பத் தொண்டில் ஈடுபடுத்தினாலும், அவர் தான் இவ்வாறு வாங்கிய உணவில் ஒரு சிறு பகுதியை மட்டும் உண்கிறார். ஒழுங்கற்ற வழியில் அவர் யாருக்காகப் பணத்தைச் சம்பாதித்தாரோ, அவர்களுக்காக நரகத்திற்குச் செல்கிறார்.
பதம் 3.30.11
வார்த்தாயாம் லுப்யமானாயாம் ஆரப்தாயாம் புன: புன:
லோபாபிபூதோ நி: ஸத்வ: பரார்த்தே குருதே ஸ்ப்ருஹாம்
வார்த்தாயாம்—அவரது வேலை; லுப்யமானாயாம்—தடை செய்யப்படும் பொழுது; ஆரப்தாயாம்—எடுத்துக் கொண்டு; புன புன—மீண்டும் மீண்டும்; லோப—பேராசையால்; அபிபூத—மயங்கி; நி—ஸத்வ—அழிந்து; பரார்த்தே—மற்றவரின் செல்வத்திற்காக; குருதே ஸ்ப்ருஹாம்—அவர் விரும்புகிறார்.
அவர் தன் வேலையில் தோல்வி கண்டு துன்பப்படும்போது, மீண்டும் மீண்டும் தான் முன்னேறுவதற்கு முயற்சி செய்கிறார், ஆனால் எல்லா முயற்சிகளிலும் அவர் திணறி அழியும் பொழுது, அதிகம் பேராசையினால் அவர் பிறரிடம் இருந்து பணத்தை ஏற்றுக் கொள்கிறார்.
பதம் 3.30.12
குடும்ப-பரணாகல்போ மந்த-பாக்யோ வ்ருதோத்யம்:
ஸ்ரியா விஹீன: க்ருபணோ த்யாயஞ்ச்வஸிதி மூட-தீ:
குடும்ப—அவர் குடும்பம்; பரண—காப்பதில்; அகல்ப—இயலாமை; மந்த—பாக்ய—துரதிருஷ்ட மனிதன்; வ்ருதா—வெறுமையில்; உத்யம்—அவரது முயற்சி; ஸ்ரியா—அழகு, செல்வம்; விஹீன—இழந்து; க்ருபண—துயரம் மிகுந்த; த்யாயன்—வருந்துதல்; ச்வஸிதி—பெருமூச்சு விடுகிறார்; மூட—தடுமாறி; தீ—அவர் அறிவுக்கூர்மை.
இவ்வாறு துரதிருஷ்டசாலியான மனிதன், அவரது குடும்ப அங்கத்தினர்களைக் காப்பதில் தோல்வியுற்று, எல்லா அழகையும் இழக்கிறார். அவர் எப்போதும் தன் தோல்வியை நினைத்து மிகவும் ஆழமாக வருந்துகிறார்.
பதம் 3.30.13
ஏவம் ஸ்வ-பரணாகல்பம் தத்-கலத்ராதயஸ்ததா
நாத்ரியந்தே யதாபூர்வம் கீனாசா இவகோ-ஜரம்
ஏவம்—இவ்வாறு; ஸ்வ—பரண—அவர்களைப் பாதுகாக்க; அகல்பம்—இயலாமை; தத்—அவருடைய; கலத்ர—மனைவி; ஆதய—மற்றும் பிறர்; ததா—அதனால்; ந—இல்லை; ஆத்ரியந்தே—மதிப்பது; யதா—போல; பூர்வம்—முன்பு; கீனாசா—விவசாயிகள்; இவ—போல; கோஜரம்—வயதான எருது.
அவர்களுக்கு அவர் துணை புரிய இயலாமலிருப்பதைக் கண்டு அவர் மனைவியும், பிறரும் முன்பு கொடுத்த அதே மதிப்புடன் அவரை நடத்தமாட்டார்கள், கஞ்சத்தனம் நிரம்பிய விவசாயிகளும் அவர்களுடைய வயதான, நலிவுற்ற எருதுகளை முன்பு நடத்திய முறையில் நடந்த ஒப்பமாட்டார்கள்.
பதம் 3.30.14
தத்ராப்ய ஜாத-நிர்வேதோ ப்ரியமாண: ஸ்வயம் -ப்ருதை:
ஜரயோபாத்தவைரூப்யோ மரணாபிமுகோ க்ருஹே
தத்ர—அங்கு; அபி—ஆயினும்; அஜாத—தோன்றாமல்; நிர்வேத—வெறுப்பு; ப்ரியமான—காக்கப்பட்டு; ஸ்வயம்—அவரால்; ப்ருதை—காக்கப்படுபவரால்; ஜரயா—முதுமையால்; உபாத்த—பெறப்பட்டு; வைரூப்ய—வடிவம் மாறி; மரண—மரணம்; அபிமுக—அணுகுதல்; க்ருஹே—வீட்டில்.
முட்டாள்தனமான குடும்பஸ்தர், அவர் முன்பு காப்பாற்றியவர்களால் காப்பாற்றப்பட்ட போதிலும், குடும்ப வாழ்வில் வெறுப்பு கொள்வதில்லை, முதுமையின் பாதிப்பால் வடிவம் மாறி, அவர் இறுதி மரணத்தைச் சந்திக்கத் தன்னைத் தயார் செய்து கொள்கிறார்.
பதம் 3.30.15
ஆஸ்தே வமத்யோபந்யஸ்தம் க்ருஹபால இவாஹரன்
ஆமயாவ்யப்ரதீப்தாக்னிர் அல்பாஹாரோல்-சேஷ்டித:
ஆஸ்தே—அவர் தொடர்ந்து இருப்பார்; அவமத்யா—புறக்கணிக்கப்பட்ட; உபந்யஸ்தம்—வைக்கப்பட்ட; க்ருஹபால:—நாய்; இவ—போல; ஆஹரன்—உண்ணுதல்; ஆமயாவீ—நோயுற்ற; அப்ரதீப்த அக்நி:—அஜீரணம் கொண்டு; அல்ப—சிறிய; ஆஹார:—உண்ணுதல்; அல்ப—சிறிய; சேஷ்டித:—அவரது செயல்.
கொடுக்கப்படுவதை உண்ணும் செல்லமான நாய், பூனைகளைப் போல வீட்டில் அவர் புறக்கணிக்கப்பட்டு இருப்பார். அஜீரணம் மற்றும் உண்ணும் விருப்பம் இழத்தல் போன்ற பல நோய்களால் துன்புற்று, அவர் உணவின் சிறு கவளங்களை மட்டுமே உண்கிறார், அவர் மேலும் வேலை செய்ய இயலாத நோயாளியாகிறார்.
பதம் 3.30.16
வாயுனோத்க்ரமதோத்தார: கப-ஸம்ருத்தநாடிக:
காஸ-ஸ்வாஸ-க்ருதாயாஸ: கண்டே குர-குராயதே
வாயுனா—காற்றால்; உத்க்ரமதா—புடைத்து; உத்தார:—அவர் கண்கள்; கப—சளியுடன்; ஸம்ருத்த—மட்டுமீறி; நாடிக:—அவர் மூச்சுக்குழல்; காஸ—இருமல்; ஸ்வாஸ—சுவாஸித்தல்; க்ருத—செய்யப்பட்டு; ஆயாஸ:—கடினமான; கண்டே—தொண்டையில்; குரகுராயதே—அவர் ‘குரகுர’ என்பது போன்ற ஒலியை உருவாக்குகிறார்.
அந்த நோயுற்ற நிலையில்,உள்ளிருந்து எழும் காற்றின் அழுத்தத்தால் அவர் கண்கள் புடைக்கின்றன. அவரது சுரப்பிகள் இயங்க முடியாமல் சளியினால் தடைபடுகின்றன. அவர் சுவாசிக்கச் கஷ்டப்பட்டு, மூச்சை வெளிவிட்டு உள்ளிழுக்கும் தொண்டைக்குள் ஒலிக்கும் கரகர எனும் ஒலியை உருவாக்குகிறார்.
பதம் 3.30.17
சயான: பரிசோசத்பி: பரிவீத: ஸ்வ-பந்துபி:
வாச்யமானோபி ந ப்ரூதே கால-பாசவசம் கத:
சயான:—கீழே படுத்து; பரிசோசத்பி:—புலம்புதல்; பரிவீத:—சூழப்பட்டு; ஸ்வபந்துபி:—அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களால்; வாச்யமான:—பேசுவதற்குத் தூண்டப்பட்டு; அபி—ஆயினும்; ந—இல்லை; ப்ரூதே—அவர் பேசுகிறார்; கால—காலத்தின்; பாச—சுருக்குக் கயிறு; வசம்—கட்டுப்பாட்டின் கீழ்; கத:—சென்றது.
இந்த விதத்தில் அவர் மரணத்தின் பிடியில் அகப்படுகிறார். புலம்புகின்ற நண்பர்களாலும் உறவினர்களாலும் சூழப்பட்டுப் படுத்திருக்கிறார். ஆயினும் அவர் அவர்களுடன் பேச விரும்பினாலும், அவர் காலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் அவரால் இயலாது.
பதம் 3.30.18
ஏவம் கும்ப-பரணே வ்யாப்ருதாத்மாஜிதேந்த்ரிய:
ம்ருயதே ருததாம் ஸ்வானாம் உருவேதனயா-ஸ்ததீ:
ஏவம்—இவ்வாறு; குடும்ப-பரணே—குடும்பத்தை நிர்வகிப்பதில்; வ்யாப்ருத—கவனத்தைக் கவர்ந்து; ஆத்மா—அவர் மனம்; அஜித—கட்டுப்படுத்தப்படாத; இந்த்ரிய:—அவரது புலன்கள்; ம்ருயதே—அவர் இறக்கிறார்; ருததாம்—அழும்பொழுது; ஸ்வானாம்—அவர் உறவினர்கள்; உரு—சிறந்தது; வேதனயா—வலியுடன்; அஸ்த—இழந்து; தீ:—உணர்வு நிலை.
இவ்வாறு கட்டுப்படுத்த முடியாத புலன்களுடன் குடும்பத்தைக் காப்பதில் ஈடுபட்டுள்ள மனிதன். தன் உறவினர்கள் அழுவதைப் பார்த்துக் கொண்டே, மிகுந்த வருத்தத்தில் இறக்கிறார். அவர் மிகவும் பரிதாபமாக, மிகுந்த வலியில், உணர்வு இன்றி இறக்கிறார்.
பதம் 3.30.19
யம-தூதௌ ததா ப்ராப்தௌ பீமௌ ஸரபஸேக்ஷணௌ
ஸ த்ருஷ்ட்வா த்ரஸ்த-ஹ்ருதய: சக்ருந்-மூத்ரம் விமுஞ்சதி
யம தூதௌ—யமராஜனின் இரு தூதர்கள்; ததா—அந்த நேரத்தில்; ப்ராப்தௌ—அடைந்து; பீமௌ—பயங்கரமான; ஸரபஸ—முழு கோபத்துடன்; ஈக்ஷணௌ—அவர்கள் கண்கள்; ஸ:—அவர்; த்ருஷ்ட்வா—பார்த்தல்; த்ரஸ்த—பயந்து; ஹ்ருதய:—அவர் மனம்; சக்ருத்—மலம்; மூத்ரம்—சிறுநீர்; விமுஞ்சதி—அவர் கழிக்கிறார்.
மரணத்தின் போது, அவர் மரண தேவனின் தூதர்கள் தன் முன் வருவதைப் பார்க்கிறார். அவர்களது கோபமான கண்களைப் பார்த்து மிகுந்த பயத்தில் அவர் மலமும் சிறுநீரும் கழிக்கிறார்.
பதம் 3.30.20
யாதனா- தேஹ ஆவ்ருத்ய பானசர்பத்வா கலே பலாத்
நயதோ தீர்கமத்வானம் தண்ட்யம் ராஜு-படா யதா
யாதனா—தண்டனைக்காக; தேஹே—அவர் உடல்; ஆவ்ருத்ய—மூடுதல்; பாசை:—கயிறுகளுடன்; பத்வா—கட்டுதல்; கலே—கழுத்தினால்; பலாத்—வலிமையால்; நயத:—அவர்கள் அழைத்துச் செல்வர்; தீர்கம்—நீண்ட; அத்வானம்—தூரம்; தண்ட்யம்—ஒரு குற்றவாளி; ராஜபடா:—அரசனின் வீரர்கள்; யதா—போல.
மாநிலத்தின் காவலர்களால் ஒரு குற்றவாளி தண்டனை கொடுத்து சிறைப்படுத்தப்படுவது போல குற்றமான புலன் நுகர்ச்சியில் ஈடுபட்ட எவரும் அதுபோல யமதூதர்களால் சிறைப்படுத்தப்படுகிறார். அவர்கள் தன்னை கழுத்தில் பலமான கயிற்றால் கட்டி, அவனது சூட்சும உடலைப் பிணைக்கிறார்கள். அதனால் அவன் பயங்கரமான தண்டனைக்கு ஆளாகும்.
பதம் 3.30.21
தயோர்னிர்பிந்த-ஹ்ருதயஸ் தர்ஜனைர்ஜாத- வேபது:
பதி ஸ்வபிர்பக்ஷ்யமாண ஆர்த்தோகம் ஸ்வமனுஸ்மரன்
தயோ:—யமதூதர்களின்; நிர்பிந்ந—உடைந்த; ஹ்ருதய:—அவர் மனம்; தர்ஜனை:—அச்சுறுத்தலால்; ஜாத—தோன்றி; வேபது:—நடுங்கி; பதி—தெருவில்; ஸ்வபி:—நாய்களால்; பக்ஷ்யமான:—கடிக்கப்பட்டு; ஆர்த்த:—தொல்லைப்பட்டு; அகம்—பாவங்கள்; ஸ்வம்—அவருடைய; அனுஸ்மரன்—நினைவு கூர்தல்.
யமராஜனின் காவலர்களால் எடுத்துச் செல்லப்படும்போது அவர் திணறி அவர்கள் கைகளில் சிக்கி நடுங்குகிறார். தெருவைக் கடந்து செல்லும் பொழுது, அவர் நாய்களால் கடிக்கப்படுகிறார். அவர் அவரது வாழ்வின் பாவமான செயல்களை நினைவுகூர இயலும், இவ்வாறு அவர் பயங்கரமாகத் தொல்லைப்படுகிறார்.
பதம் 3.30.22
க்ஷுத்-ருட்பரீதோர்கதவானலானிலை:
ஸந்தப்யமான: பதி தப்த-வாலுகே
க்ருச்ரேண ப்ருஷ்டே கசயா ச தாடித
ஸ்சலத்யசக்தோ பி நிராஸ்ரமோதகே
க்ஷுத்ருட்—பசி மற்றும் தாகத்தால்; பரீத:—துயருற்று; அர்க்க—சூரியன்; தவ அனல—காட்டுத்தீ; அநிலை:—காற்றால்; ஸந்தப்யமான:—வாட்டப்பட்டு; பதி—தெருவில்; தப்த வாலுகே—சூடான மண்ணின்; க்ருச்ரேண—வேதனை; ப்ருஷ்டே—பின்புறத்தில்; கசயா—அடியுடன்; ச—மற்றும்; தாடித:—அடித்து; சலதி—அவர் அசைகிறார்; அஸக்த:—இயலாமல்; அபி—ஆயினும்; நிராஸ்ரம்—உதகே—இருப்பிடம் அல்லது தண்ணீர் இன்றி.
வாட்டும் சூரியனின் கீழ், குற்றவாளி இருபுறங்களிலும் காட்டுத் தீயுடன் கூடிய சூடான மண் நிரம்பிய தெருக்கள் வழியாகக் கடந்து செல்ல வேண்டும். அவரால் நடக்க இயலாத போது அவர் முதுகில் காவலர்களால் அடிக்கப்படுகிறார். அவர் பசியாலும் தாகத்தாலும் துன்புறுகிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக, குடிநீர் இல்லை, இருப்பிடம் இல்லை, தெருவில் ஒதுங்கி இளைப்பாற இடம் இல்லை.
பதம் 3.30.23
தத்ர தத்ர பதஞ் ச்ராந்தோ மூர்ச்சித: புனருத்தித:
பதா பாபீயஸா நீதஸ் தரஸா யமஸாதனம்
தத்ர தத்ர—இங்கும் அங்கும்; பதன்—விழுதல்; ச்ராந்த:—களைப்பற்று; மூர்ச்சித:—மூர்ச்சை அடைந்து; புன:—மீண்டும்; உத்தித:—எழுந்து; பதா—தெரு வழியே; பாபீயஸா—மிக மங்கல மற்ற; நீத:—கொண்டு வரப்பட்டு; தரஸா—விரைவாக; யம ஸாதனம்—யமராஜனின் முன்பு.
யமராஜனின் இருப்பிடம் செல்ல, தெருவைக் கடக்கும் பொழுது, அவர் களைப்பால் கீழே விழுகிறார், சிலசமயம் அவர் மயக்கமடைகிறார். ஆனால் அவர் மீண்டும் எழுந்திருக்குமாறு வற்புறுத்தப்படுகிறார். இந்தவிதத்தில் அவர் விரைவாக யமராஜனின் முன்பு கொண்டு வரப்படுகிறார்.
பதம் 3.30.24
யோஜனானாம் ஸஹஸ்ராணி நவதிம் நவ சாத்வன
த்ரிபிர்முஹுர்தைர்த்வாப்யாம் வா நீத: ப்ராப்னோதி யாதனா:
யோஜனானாம்—யோஜனைகளின்; ஸஹஸ்ராணி—ஆயிரங்கள்; நவதிம்—தொண்ணூறு; நவ—ஒன்பது; ச—மற்றும்; அத்வன:—தூரத்திலிருந்து; த்ரிபி:—மூன்று; முஹுர்தை:—நொடிகளில்; த்வாப்யாம்—இரண்டு; வா—அல்லது; நீத:—கொண்டுவரப்பட்டு; ப்ராப்னோதி—அவர் பெறுகிறார்; யாதனா:—தண்டனைகள்.
இவ்வாறு அவர் 99,000 யோசனைகளை இரண்டு அல்லது மூன்று நொடிக்குள் கடக்க வேண்டும். பின்னர் அவர் உடனே அவர் துன்புறுவதற்கென்று விதிக்கப்பட்ட சித்ரவதை தரும் தண்டனையில் ஈடுபடுத்தப்படுவார்.
பதம் 3.30.25
ஆதீபனம் ஸ்வ-காத்ராணாம் வேஷ்டயித்வோல்முகாதிபி:
ஆத்மமாம்ஸாதனம் க்வாபி ஸ்வ-க்ருத்தம் பரதோபி வா
ஆதீபனம்—நெருப்பின் மீது அமர்ந்து; ஸ்வகாத்ராணாம்—தன் சொந்த உறுப்புகளின்; வேஷ்டயித்வா—சூழப்பட்டு; உல்முக ஆதிபி:—எரியும் மரத் துண்டுகள் முதலியவற்றால்; ஆத்ம மாம்ஸ—அவருடைய தசையின்; அதனம்—உண்ணுதல்; க்வாபி—சில சமயம்; ஸ்வக்ருத்தம்—அவரால் செய்யப்பட்டது; பரத:—பிறரால்; அபி—வேறு; வா—அல்லது.
எரியும் மரத் துண்டுகளுக்கு இடையில் அவர் வைக்கப்படுகிறார். அவரது உறுப்புகள் நெருப்பின் மேல் இடப்படுகின்றன. சிலநிகழ்ச்சிகளில் அவர் தன் சதையைத் தானே உண்ணுமாறு செய்யப்படுகிறார். அல்லது பிறர் அதை உண்ணுமாறு செய்யப்படுகிறார்.
பதம் 3.30.26
ஜீவதஸ்சாந்த்ராப்யுத்தார: ஸ்வ-க்ருத்ரைர் யமஸாதனே
ஸர்ப-வ்ருஸ்சிக-தம் சாத்யைர் தசத்பிஸ்சாத்ம-வைசஸம்
ஜீவத:—உயிருடன்; ச—மற்றும்; அந்த்ர—அவர் குடல்களின்; அப்யுத்தார:—வெளியில் இழுத்து; ஸ்வக்ருத்ரை:—நாய்கள் மற்றும் வல்லூறுகள்; யமஸாதனே—யமராஜனின் இருப்பிடத்தில்; ஸர்ப—பாம்புகளால்; வ்ருஸ்சிக—தேள்கள்; தம்ச—சிறிய கொசுக்கள்; ஆத்யை:—முதலியன; தசத்பி:—கடித்தல்; ச—மற்றும்; ஆத்ம வைசஸம்—அவரின் விதை.
அவரது குடல்கள் நரகத்தின் வேட்டை நாய்களாலும், வல்லூறுகளாலும் வெளியில் இழுக்கப்படுகின்றன. அவர் அதைப் பார்க்க இன்னும் உயிருடன் இருந்த போதிலும், அவர் பாம்புகள், தேள்கள், சிறிய கொசுக்கள் மற்றும் பிற உயிரினங்களால் கடிக்கப்பட்டு வதைக்கு ஆளாகிறார்.
பதம் 3.30.27
க்ருந்தனம் சாவயவ சோ கஜாதிப்யோ பிதாபனம்
பாதனம் கிரி-ஸ்ருங்கேப்யோ ரோதனம் சாம்பு-கர்தயோ:
க்ருந்தனம்—வெட்டுதல்; ச—மற்றும்; அவயவச:—ஒவ்வொரு உறுப்பாக; கஜதிப்ய:—யானைகள் முதலியவற்றால்; பீதாபனம்—கிழித்தல்; பாதனம்—சுழற்றி வீசுதல்; கிரி—குன்றுகளின்; ஸ்ருங்கேப்ய:—மேலிருந்து; ரோதனம்—அடைத்து வைத்தல்; ச—மற்றும்; அம்பு கர்தயோ:—நீரில் அல்லது குகையில்.
அடுத்து அவர் உறுப்புகள் வெட்டப்பட்டு, யானைகளால் துண்டு ஆகக் கிழிக்கப்படுகின்றன. அவர் மலை உச்சிகளில் இருந்து உருட்டி கீழே தள்ளப்படுகிறார். அவரும் நீரில் அல்லது குகையில் அடைத்து வைக்கப்படுகிறார்.
பதம் 3.30.28
யாஸ்தாமிஸ்ராந்த-தாமிஸ்ரா ரௌரவாத்யாஸ்ச யாதனா:
புங்க்தே நரோவா நாரீவா மித: ஸங்கேன நிர்மிதா:
யா:—எந்த; தாமிஸ்ர—ஒரு நரகத்தின் பெயர்; அந்த தாமிஸ்ரா:—ஒரு நரகத்தின் பெயர்; ரௌரவ—ஒரு நரகத்தின் பெயர்; ஆத்யா:—முதலியன; ச—மற்றும்; யாதனா:—தண்டனைகள்; புங்க்தே—அனுபவிக்கிறார்; நர:—மனிதன்; வா—அல்லது; நாரீ—பெண்; வா—அல்லது; மித:—பரஸ்பரம்; ஸங்கேன—தொடர்பால்; நிர்மிதா—ஏற்பட்டது.
கள்ளத்தனமான இன்பத்தோய்வின் மேல் கட்டப்பட்ட வாழ்வையுடைய ஆண்களும் பெண்களும் பலவிதத் துன்பங்கள் நிறைந்த சூழ்நிலைகளுடைய தாமிஸ்ர அந்த—தாமிஸ்ர மற்றும் ரௌரவ என்று அறியப்படும் நரகங்களில் தள்ளப்படுகிறார்கள்.
பதம் 3.30.29
அத்ரைவ நரக:ஸ்வர்க இதி மாத: ப்ரசக்ஷதே
யா யாதனா வை நாரக்யஸ் தா இஹாப்யுபலக்ஷிதா:
அத்ர—இந்த உலகில்; ஏவ—கூட; நரக:—நரகம்; ஸ்வர்க:—சுவர்க்கம்; இதி—இவ்வாறு; மாத:—ஓ அன்னையே; ப்ரசக்ஷதே—அவர்கள் கூறுகின்றனர்; யா:—எந்த; யாதனா:—தண்டனைகள்; வை—நிச்சயமாக; நாரக்ய:—நரகமான; தா:—அவர்கள்; இஹ—இங்கு; அபி—உடன்; உபலக்ஷிதா:—புலனாகக் கூடிய.
பகவான் கபிலர் தொடர்ந்தார்: என் அன்பு அன்னையே, நாம் நகரம் அல்லது சுவர்க்கத்தை பூமியாகிய இந்தக் கோளில் அனுபவிக்கிறோம், ஏனெனில் நரக தண்டனைகள் சில சமயம் இந்தக் கோளிலும் வெளிப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
பதம் 3.30.30
ஏவம் குடும்பம் பிப்ராண உதரம்பர ஏவ வா
விஸ்ருஜ்யேஹோபயம் ப்ரேத்ய புங்க்தே தத்-பலமீத்ருசம்
ஏவம்—இந்த விதத்தில்; குடும்பம்—குடும்பம்; பிப்ராண:—பாதுகாப்பவர்; உதரம்—வயிறு; பர:—காப்பாற்றுபவர்; ஏவ—மட்டும்; வா—அல்லது; விஸ்ருஜ்ய—விட்ட பிறகு; இஹ—இங்கு; உபயம்—இருவரும்; ப்ரேத்ய—மரணத்தின் பிறகு; புங்க்தே—அவர் அனுபவிக்கிறார்; தத்—அதன்; பலம்—விளைவு; ஈத்ருசம்—அத்தகைய.
பாவச் செயல்களால் தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுகாக்கும் மனிதன், இந்த உடலை விட்ட பிறகு நரக வாழ்வை அனுபவிக்கிறான் அவனது உறவினர்களும் அனுபவிக்கின்றனர்.
பதம் 3.30.31
ஏக: ப்ரபத்யதே த்வாந்தம் ஹித்வேதம் ஸ்வ-கலேவரம்
குசலேதரபாதேயோ பூத-த்ரோஹேண யத் ப்ருதம்
ஏக:—மட்டும்; ப்ரபத்யதே—அவர் நுழைகிறார்; த்வாந்தம்—இருள்; ஹித்வா—விட்ட பிறகு; இதம்—இந்த; ஸ்வ—அவருடைய; கலேவரம்—உடல்; குசல—இதர பாவம்; பாதேய:—அவர் வழிச் செலவிற்கான பணம்; பூத—பிற வாழும் உயிரினங்களிடம்; த்ரோ ஹேண—தீமை நிறைந்த செயலால்; யத்—எந்த உடல்; ப்ருதம்—காக்கப்பட்டது.
அவர் இந்த உடலை விட்ட பின்னர் தனியாக நரகத்தின் மிக இருளடைந்த பகுதிகளுக்குச் செல்கிறார், பிற உயிரினங்களிடம் கொண்ட பொறாமையால் அவர் பெற்ற பணம், அவர் இந்த உலகை விட்டுச் செல்லும்பொழுது அவரது இடுகாட்டுச் செலவாகிறது.
பதம் 3.30.32
தைவேனாஸாதிதம் தஸ்ய சமலம் நிரயே புமான்
புங்க்தே குடும்ப-போஷஸ்ய ஹ்ருதவித்த இவாதுர:
தைவேன—பரம புருஷ பகவானின் ஏற்பட்டால்; ஆஸாதிதம்—பெறப்பட்டு; தஸ்ய—அவருடைய; சமலம்—பாவ எதிர்ச்செயல்; நிரயே—நரகச் சூழலில்; புமான்—மனிதன்; புங்க்தே—அனுபவிக்கிறார்; குடும்ப போஷஸ்ய—குடும்பத்தைக் காப்பாற்றுவதன்; ஹ்ருதவித்த—செல்வம் இழந்த ஒருவர்; இவ—போல; ஆதுர:—துன்புறுதல்.
இவ்வாறு, பரமபுருஷ பகவானின் ஏற்பாட்டால், குடும்பத்தினரைப் பாதுகாப்பவர், தன் பாவச் செயல்களுக்காக, செல்வம் இழந்த ஒரு மனிதரைப் போல, துன்புறுவதற்காக நரகச் சூழலில் தள்ளப்படுகிறார்.
பதம் 3.30.33
கேவலேன ஹ்யதர்மேண குடும்ப-பரணோத்சுக:
யாதி ஜீவோந்த-தாமிஸ்ரம் சரமம் தமஸ பதம்
கேவலேன—எளிய முறையில்; ஹி—நிச்சயமாக; அதர்மேண—தர்மம் அல்லாத செயல்களால்; குடும்ப—குடும்பம்; பரண—காக்க; உத்சீக:—ஆர்வம்; யாதி—செல்ல; ஜீவ:—மனிதர்; அந்த தாமிஸ்ரம்—அந்த தாமிஸ்ரத்திற்கு; சரமம்—இறுதி; தமஸ:—இருட்டின்; பதம்—இடம்.
அதனால் தன் குடும்பத்தையும் உறவினர்களையும் தவறான வழிகளின் மூலமே காப்பாற்ற விரும்பும் ஒருவர் நிச்சயமான அந்த தாமிஸ்ர என்று அறியப்படும் நரகத்தின் மிகவும் இருட்டான இடத்திற்குச் செல்கிறார்.
பதம் 3.30.34
அதஸ்தாந் நர-லோகஸ்ய யாவதீர்யாதனாதய:
க்ரமச: ஸமனுக்ரம்ய புனரத்ராவ்ரஜேச்சுசி:
அதஸ்தாத்—கீழிருந்து; நரலோகஸ்ய—மனிதப்பிறப்பு; யாவதீ:—யாரெல்லாம் உண்டோ அவர்கள்; யாதனா:—தண்டனைகள்; ஆதய:—முதலியன; க்ரமச:—ஒழுங்கான முறையில்; ஸமனுக்ரம்ய—அனுபவித்துக் கொண்டு; புன:—மீண்டும்; அத்ர—இங்கு; பூமியில்; ஆவ்ரஜேத்—அவர் திரும்பி வரலாம்; சுசி:—தூய்மை.
எல்லாத் துன்பமான, நரகச் சூழ்நிலைகளை அனுபவித்துக் கடந்த பிறகு, மனிதப் பிறப்பிற்கு முந்தைய விலங்கு வாழ்வின் கீழான வடிவங்களை ஒழுங்கான முறையில் கடந்த பிறகு, அவரது பாவங்களைத் தூய்மை ஆக்கிய பிறகு, ஒருவர் பூமியில் மனித உயிரினமாக மீண்டும் பிறக்கிறார்.
ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “எதிர்விளைவுச் செயல்களைப் பற்றி பகவான் கபிலரின் வர்ணனை“ எனும் தலைப்பைக் கொண்ட முப்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.