அத்தியாயம் – 27
உலகின் இயல்பினைப் புரிந்து கொள்ளுதல்
பதம் 3.27.1
ஸ்ரீபகவானுவாச
ப்ருக்ருதி-ஸ்தோபி புருஷோ நாஜ்யதே ப்ராக்ருதைர்குணை:
அவிகாராதகர்த்ருத்வாந் நிர்குணத்வாஜ்ஜலார்கவத்

ஸ்ரீ-பகவான் உவாச-பரமபுருஷ பகவான் கூறினார்; ப்ரக்ருதிஸ்த:-தூல உடலில் குடியிருக்கும்; அபி-இருப்பினும்; புருஷ:-வாழும் உயிரினம்; ந-இல்லை; அஜ்யதே-பாதிக்கப்பட்டு; ப்ரக்ருதை:-உலக இயற்கையின்; குணை:-குணங்களால்; அவிகாராத்-மாற்றம் இல்லாமல் இருப்பதில் இருந்து; அகர்த்ருவாத்-உரிமையாளரிடமிருந்து பெற்ற விடுதலையால்; நிர்குணத்வாத்-ஜட இயற்கையின் குணங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதிலிருந்து; ஜல-நீரில்; அர்கவத்-கதிரவன் போல.

பரமபுருஷ பகவானாகிய கபிலர் தொடர்ந்தார். உயிரினம் இவ்வாறு உலக இயற்கையின் குணங்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் பொழுது, அவர் மாறாமலும் உரிமையைக் கோராமலும் இருப்பதால், கதிரவன் நீரில் அதனுடைய பிரதிபலிப்பிலிருந்து விலகி இருத்தல் போல, ஜடவுடலில் தங்கி வாழ்ந்தாலும், குணங்களின் மாற்றுச் செயல்களிலிருந்து பிரிந்திருக்கிறார்.

பதம் 3.27.2
ஸ ஏஷ யர்ஹி ப்ரக்ருதேரகுணேஷ்வபிவிஷஜ்ஜதே
அஹம் க்ரியா-விமூடாத்மா கர்த்தாஸ்மீத்யபிமந்யதே

ஸ:-அந்தவாழும் உயிரினம்; ஏஷ:-இந்த; யர்ஹி-எப்பொழுது; ப்ரக்ருதே-ஜட இயற்கையின்; குணேஷு-குணங்களில்; அபிவிஷஜ்ஜதே-உறிஞ்சப்படுகிறது; அஹங்க்ரியா-போலி ஆளுமையால்; விமூடா-மனம் குழம்பி; ஆத்மா-தனிப்பட்ட ஆத்மா; கர்ததா—செய்பவர்; அஸ்மி-நான்; இதி-இவ்வாறு; அபிமந்யதே-அவர் நினைக்கிறார்.

ஆத்மா ஜட இயற்கையின் மயக்கத்திலும் போலி ஆளுமையின் மயக்கத்திலும் இருக்கும் பொழுது, அவர் உடலைத் தானாக இனம் கண்டு ஜடச் செயல்களில் ஆழ்ந்து விடுகிறார். மேலும் தன்முனைப்பு எனும் அகங்காரத்தின் பாதிப்பினால் அவர் தன்னை எல்லாவற்றுக்கும் உரிமையாளர் ஆக நினைக்கிறார்.

பதம் 3.27.3
தேன ஸம்ஸார-பதவீமவசோப்யேத்யனிர்வ்ருத:
ப்ராஸங்கிகை: கர்ம-தோஷை: ஸத-ஸந்மிஸ்ர-யோனிஷூ

தேன—இதனால்; ஸம்ஸார-மீண்டும் வரும் பிறப்பு, இறப்பின்; பதவீம்-வழி; அவச:-உதவியின்றி; அப்யேதி- அவர் அனுபவிக்கிறார்; அனிர்வ்ருத-மனக்குறை கொண்டு; ப்ராஸங்கிகை:-ஜட இயற்கையின் தொடர்பிலிருந்து விளையும்; கர்ம-தோஷை:-தவறான செயல்களால்; ஸத்-நல்ல; அஸத்-தீமை; மிஸ்ர-கலந்து; யோனிஷூ-வாழ்வின் வேறுபட்ட உயிரினங்களில்.

அதனால் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா வாழ்வின் வேறுபட்ட உயிரினங்களில், உயர்ந்ததும் தாழ்ந்ததும் ஆகிய உயிரினங்களில் ஜட இயற்கையின் குணங்களோடு அது கொண்ட தொடர்பினால் கூடுவிட்டுக் கூடு பாய்கிறது. அது பூவுலகச் செயல்களிலிருந்து விடுபட்டால் அன்றி, அதனுடைய தவறான செயலால் அது இந்த நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பதம் 3.27.4
அர்த்தே ஹ்யவித்யமானேபி ஸம்ஸ்ருதிர்ன நிவர்த்ததே
த்யாயதோ விஷயானஸ்ய ஸ்வப்னேனர்த்தாகமோ யதா

அர்த்தே-உண்மைக் காரணம்; ஹி-நிச்சயமாக; அவித்யமானே-இல்லாதிருத்தல்; அபி-ஆயினும்; ஸம்ஸ்ருதி:-ஜடவுலக உளதாந் தன்மை சார்ந்த நிலை; ந-இல்லை; நிவர்த்ததே-முடிவுறுதல்; த்யாயத:-ஆழ்ந்து நினைத்தல்; விஷயான்—புலன்களின் பொருட்கள்; அஸ்ய- வாழும் உயிரினத்தின்; ஸ்வப்னே—கனவில்; அனர்த்த- தீங்குகள்; ஆகம:-வருகை; யதா-போல.

உண்மையில் ஒரு வாழும் வ்யக்தி மண்ணுலக வாழ்வுக்கு இருப்பின் அப்பால் உள்ளார். ஆயினும் ஜட இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தும் அவருடைய மனநிலையால், அவருடைய உலகியல் சார்ந்த நிலை முடிவுறவில்லை. கனவில் இருப்பதைப் போல, அவர் இவ்வுலகின் எல்லா விதமான தீங்குகளாலும் பாதிக்கப்படுகிறார்.

பதம் 3.27.5
அத ஏவ சனைஸ்சித்தம் ப்ரஸக்தமஸதாம் பதி
பக்தி-யோகேன தீவ்ரேண விரக்த்யா ச நயேத்வரம்

அத ஏவ-அதனால்; சனை:-படிப்படியாக; சித்தம்-மனம், உணர்வு நிலை; ப்ரஸக்தம்-பற்றுடைமை; அஸதாம்-ஜட இன்பங்களின்; பதி-வழியில்; பக்தி-யோகேன-பக்தித் தொண்டால்; தீவ்ரேண-மிகவும் தீவிரமாக; விரக்த்யா-பற்று இல்லாமல்; ச-மற்றும்; நயேத்—அவர் எடுத்து வருதல் வேண்டும்; வசம்-கட்டுப்பாட்டின் கீழ்.

மன்னுலக இன்பத்தில் பற்றுக் கொண்டு மாசடைந்து கிடக்கும் உணர்வு நிலையை இக உலகப் பற்றின்றி மிகவும் தீவிர இறை பக்தித் தொண்டில் ஈடுபடுத்தவது ஒவ்வொரு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவின் கடமையாகும். அப்போதுதான் அவருடைய மனம் மற்றும் உணர்வு நிலை முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும்.

பதம் 3.27.6
யமாதிபிர்யோக-பதைரப்யஸஞ் ஸ்ரத்தயாந்வித:
மயி பாவேன ஸத்யேன மத்-கதா-ஸ்ரவணேன ச

யம ஆதிபி:-யமனுடன் தொடங்கி; யோகபதை:-யோக முறையால்; அப்யஸஞ்-பயிற்சி செய்தல்; ஸ்ரத்தயா அந்வித:-சிறந்த நம்பிக்கையுடன்; மயி-என்னிடம்; பாவேன-பக்தியுடன்; ஸத்யேன-கலப்படமற்ற; மத்கதா—என்னைப் பற்றிய கதைகள்; ஸ்ரவணேன-கேட்பதால்; ச-மற்றும்.

கட்டுப்படுத்தும் யோக முறையினைப் பயிற்சி செய்வதன் மூலம் ஒருவன் இறைபக்தி உள்ளவராக வேண்டும் என்னைப் பற்றிக் கேட்பதன் மூலமும், என் நாமத்தை உச்சரிப்பதன் மூலமும் கலப்படமற்ற பக்தி தொண்டிற்கு ஒவ்வொருவரும் தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும்.

பதம் 3.27.7
ஸர்வ-பூதஸமத்வேன நிர்வைரேணாப்ரஸங்கத:
ப்ரஹ்மசர்யேண மௌனேன ஸ்வ-தர்மேண பலீயஸா

ஸர்வ-எல்லா; பூத—வாழும் உயிரினங்கள்; ஸமத்வேன-சமமாகப் பார்ப்பதன் மூலம்; நிர்வைரேண-பகைமையின்றி; அப்ரஸங்கத:-நெருங்கிய தொடர்புகளின்றி; ப்ரஹ்மசர்யேண-மனத்துறவால்; மௌனேன-மௌனத்தால்; ஸ்வ-தர்மேண-ஒருவரின் வேலையால்; பலீயஸா- முடிவைக் கொடுப்பதால்.

பக்திக் தொண்டை நிறைவேற்றுவதில், எல்லா உயிரினத்தையும் சமமாகவும் யாரிடமும் பகையின்றியும், ஆயினும் யாரிடமும் நெருங்கிய தொடர்பின்றியும் பார்க்க வேண்டும். ஒருவர் மனத் துறவைக் கடைப்பிடிக்க வேண்டும், அமைதியாக, பரமபுருஷ பகவானிடம் முடிவுகளை விட்டுவிட்டு, அவருடைய என்றும் அழியாத தொண்டுகளை நிறைவேற்ற வேண்டும்.

பதம் 3.27.8
யத்ருச்சயோபலப்தேன ஸந்துஷ்டோ மித-புங் முனி:
விவிக்த-சரண: சாந்தோ மைத்ர: கருண ஆத்மவான்

யத்ருச்சயா-கஷ்டமில்லாமல்; உபலப்தேன—அடைந்ததுடன்; ஸ்ந்துஷ்ட:-திருப்தி அடைந்து; மித-குறைவாக; புக்-உண்ணுதல்; முனி:-சிந்தனையார்ந்த; விவிக்த சரண:-ஒதுக்கப்பட்ட இடத்தில் வாழுதல்: சாந்த:-அமைதியான; மைத்ர:-தோழமையுள்ள; கருண;-அன்புடன்; ஆத்ம-வான்—தன்னுடைமையுள்ள, தன்னை அறிந்த.

ஒரு பக்தர் அதிகத் தொல்லையின்றிச் சம்பாதிக்கும் அளவான வருவாயினைக் கொண்டு திருப்தி அடையவேண்டும். தேவையான அளவை விட அதிகமாக அவர் உண்ணக் கூடாது. தனித்த இடத்தில் அவர் வசிக்க வேண்டும் எப்போதும் தெய்வ சிந்தனையுடன், அமைதியாக, நட்பாக, அன்புடன், தன்னை உணர்ந்த அடக்கத்தோடு இருத்தல் வேண்டும்.

பதம் 3.27.9
ஸானுபந்தே ச தேஹேஸ்மிந் நகுர்வந்நஸதா-க்ரஹம்
ஞானேன த்ருஷ்ட -தத்வேன ப்ரக்ருதே: புருஷஸ்ய ச

ஸ அனுபந்தே-உடல் தொடர்களுடன்; ச-மற்றும்; தேஹே- உடலை நோக்கி; அஸ்மிந்-இந்த; அகுர்வந்-செய்யாமல்; அஸத் ஆக்ரஹம்-வாழ்வின் உடலியல் கருத்து; ஞானேன—அறிவு மூலம்; த்ருஷ்ட-பார்த்து; தத்வேன-உண்மை; ப்ரக்ருதே:-பொருளின்; புருஷஸ்ய-ஆத்மாவின்; ச-மற்றும்.

உணர்வு, பொருள் ஆகியவற்றை அறிவதன் வழி ஒருவரது பார்க்கும் ஆற்றல் அதிகரிக்கப்பட வேண்டும், ஒருவர் வேலை இல்லாமல் தன்னை உடலுடன் இனம் கண்டு, உடல் தொடர்புகளால் கவரப்படுதல் கூடாது.

பதம் 3.27.10
நிவ்ருத்த- புத் -யவஸ்தாணோ தூரீ-பூதாந்ய-தர்சன: உபலப்யாத்மனாத்மானம் சக்ஷூ ஷேவார்கம் ஆத்ம-த்ருக்

நிவ்ருத்த-எல்லை கடந்து மேம்பட்டு; புத்தி அவஸ்தான:- ஜடவுணர்வு நிலையின் நிலைகள்; தூரீபூத—தூரத்தில்; தர்சன:-வாழ்வின் கருத்துகள்; உபலப்ய—உணர்ந்து கொண்டு; ஆத்மனா—அவரின் தூய்மையான அறிவாற்றலால்; ஆத்மானம்—அவருடைய; சக்ஷூஷா-அவர் கண்களுடன்; இவ-போல; அர்கம்-சூரியன்; ஆத்ம- த்ருக்-தன்னை உணர்ந்தவர்.

ஒருவர் உலகியல் நிலைகளுக்கு அப்பாற்பட்டு, எல்லை கடந்த நிலையில் இருக்க வேண்டும், வாழ்வின் பிற கருத்துகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். இவ்வாறு போலி அகங்காரத்திலிருந்து விடுபட்டு உணர்ந்து, ஒருவர் வானில் சூரியனைப் பார்ப்பது போல தன்னை உணர்ந்து கொள்ளவேண்டும்.

பதம் 3.27.11
முக்த-லிங்கம் ஸதாபாஸம-ஸதி ப்ரதிபத்யதே
ஸதோ பந்துமஸச்சக்ஷூ: ஸர்வானுஸ்யூதமத்வயம்

முக்தலிங்கம்-எல்லாம் கடந்த தத்துவம்; ஸத்ஆபாஸம்- பிரதிபலிப்பாக வெளிப்படுவது; அஸதி-போலி ஆளுமையில்; ப்ரதிபத்யதே-அவர் உணர்கிறார்; ஸத:பந்தும்-ஜடவுலகக் காரணத்தின் உதவி; அஸத்சக்ஷூ:-மாய சக்தியின் கண் (வெளியிடுபவர்); ஸர்வ அனுஸ்யூதம்-எல்லாவற்றிலும் நுழைந்த; அத்வயம்-இரண்டாவது இன்றி.

போலி அகங்காரம் இருப்பினும் அதன் எதிரொலியாக வெளிப்படுபவரும், எல்லாம் கடந்த தத்துவமாக விளங்குபவரும் ஆகிய முழுமையான பரமபுருஷ பகவானை ஒரு வீடுபேறு அடைந்த ஆத்மா உணர்கிறது. பருப்பொருளாகிய எதனையும் தாங்குபவரும், அனைத்திலும் ஊடுருவி இருப்பவரும் அவரே ஆவார். இரண்டாவது இல்லாமல் முழுமையானவர், அவர் மாய சக்தியின் கண்களாவார்.

பதம் 3.27.12
யதா ஜலஸ்த -ஆபாஸ: ஸ்தலஸ்தேனாவத்ருச்யதே
ஸ்வாபாஸேன ததா ஸூர்யோ ஜல-ஸ்தேன திவி ஸ்தித:

யதா-போல; ஜலஸ்த-நீரில் அமைந்திருக்கும்; ஆபாஸ:-பிரதிபலிப்பு; ஸ்தலஸ்தேன-சுவரில் அமைந்திருக்கும்; அவத்ருச்யதே-உற்று பார்க்கப்படுகிறது; ஸ்வ ஆபாஸேன-அதன் பிரதிபலிப்பால்; ததா-அந்த வழியில்; சூர்ய:-கதிரவன்; ஜலஸ்தேன-நீரில் அமைந்திருக்கும்; திவி-வானில்; ஸ்தித:-அமைந்து.

கதிரவன் வானில் இருந்தாலும், தண்ணீரில் பிரதிபலிக்கும் போது உணரப்படுதல் போலவும், மீண்டும் அறையின் சுவரில் பிரதிபலிக்கும் போது உணரப்படுதல் போலவும் பகவான் இருப்பதை நாம் தெளிவாக உணர முடியும்.

பதம் 3.27.13
ஏவம் த்ரிவ்ருத-ஹங்காரோ பூதேந்த்ரிய-மனோமயை: ஸ்வாபாஸைர்லக்ஷிதோனேன ஸதாபாஸேன ஸத்ய-த்ருக்

ஏவம்-இவ்வாறு; த்ரிவிருத்-மூன்றுவித; அஹங்கார:-போலி ஆளுமை; பூத இந்த்ரிய மன: மயை:-உடல், புலன்கள் மற்றும் மனத்தால் ஆகிய; ஸ்வாபாஸை:-அதன் சொந்தப் பிரதிபலிப்பால்; லக்ஷித:-வெளிப்படுத்தப்பட்டது; அனேன—இதனால்; ஸதா பாஸேன-பிரம்மனின் பிரதிபலிப்பால்; ஸத்யத்ருக்—தன்னை உணர்ந்த ஆத்மா.

தன்னை உணர்ந்த ஆத்மா இவ்வாறு முதலில் மூன்றுவித அகங்காரத்திலும், பின்னர் உடலிலும், புலன்களிலும், மனத்திலும் பிரதிபலிக்கிறது.

பதம் 3.27.14
பூத-ஸூக்ஷ்மேந்த்ரியமனோ-புத்யாதிஷ்விஹ நித்ரயா
லீனேஷ்வஸதி யஸ்தத்ர வினித்ரோ நிரஹங்க்ரிய:

பூத-ஜட மூலப் பொருட்கள்; ஸூக்ஷ்ம-இன்பத்தின் பொருட்கள்; இந்த்ரிய—ஜடப் புலன்கள்; மன:-மனம்; புத்தி-அறிவு; ஆதிஷூ-முதலியன; இஹ-இங்கு; நித்ரயா-உறக்கத்தால்; லீனேஷு-கலந்து; அஸதி-வெளிப்படுத்தப்படாததில்; ய:-யார்; தத்ர—அங்கு; வினித்ர:-விழிப்பு; நிரஹங்க்ரிய:-போலி ஆளுமையிலிருந்து விடுதலை.

ஒரு பக்தர் ஐம்புலப் பொருட்கள், மண்ணுலக இன்பத்திற்கு ஆன பொருட்கள், புலன்கள், மனம் மற்றும் அறிவுக் கூர்மை முதலியவற்றில் கலந்து இருப்பதாகத் தோன்றினாலும், அவர் விழித்திருப்பவராக, போலி அகங்காரத்திலிருந்து விடுபட்டவராகப் புரிந்து கொள்ளப்படுகிறார்.

பதம் 3.27.15
மந்யமானஸ்ததாத்மான மனஷ்டோ நஷ்டவந்ம்ருஷா
நஷ்டே – ஹங்கரணேத்ருஷ்டா நஷ்டவித்த இவாதுர:

மந்யமான-நினைத்தல்; ததா-பின்னர்; ஆத்மானம்—அவரை; அனஷ்ட-தொலையாவிட்டாலும்; நஷ்டவத்- தொலைந்ததாக; ம்ருஷா-போலியாக; நஷ்டே அஹங்கரணே-ஆளுமையின் மறைவினால்; த்ருஷ்டா-பார்ப்பவர்; நஷ்டவித்த—தன் அதிர்ஷ்டத்தைத் தொலைத்தவர்; இவ-போல; ஆதுர-துன்பத்திற்கு ஆளானவர்.

பார்க்கும் நிலையில் உயிரினம் தன் இருப்பை ஒளிமயமானதாக உணரமுடியும். ஆனால் ஆழ்ந்த உறக்க நிலையில் தொலைத்து, துன்பத்தை உணர்ந்து, தன்னை இழந்தவராக நினைக்கும் ஒருவரைப் போல, தன்னையும் இழந்தவராகத் தவறாக நினைக்கிறார்.

பதம் 3.27.16
ஏவம்ப்ரத்யவம்ருச்யாஸாவ் ஆத்மானம் ப்ரதிபத்யதே
ஸாஹங்காரஸ்ய த்ரவ்யஸ்ய யோவஸ்தானமனுக்ரஹ:

ஏவம்-இவ்வாறு; ப்ரத்யவம்ருச்ய-புரிந்து கொண்டபிறகு; அஸௌ-அந்த மனிதர்; ஆத்மானம்-தன்னை; ப்ரதிபத்யதே-உணர்கிறார்; ஸ அஹங்காரஸ்ய-போலி ஆளுமையின்கீழ் ஒப்புக் கொண்டு; த்ரவ்யஸ்ய-சூழ்நிலையின்; ய:-யார்; அவஸ்தானம்-தங்குமிடம்; அனுக்ரஹ:-வெளிப்படுத்துபவர்.

பக்குவத்தினால் ஒருவர் தன் தனித்தன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறபொழுது, போலி அகங்காரத்தின் கீழ் அவர் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை அவருக்கு வெளிப்படுகிறது.

பதம் 3.27.17
தேவஹூதிர் உவாச
புருஷம் ப்ரக்ருதிர்ப்ரம்மந்ந விமுஞ்சதி கர்ஹிசித் அந்யோந்யாபாஸ்ரயத்வாச்ச நித்யத்வாதனயோ: ப்ரபோ

தேவஹூதி உவாச—தேவஹூதி கூறினாள்; புருஷம்-ஆத்மா; பிரக்ருதி-ஜட இயற்கை; ப்ரம்மன்—ஓ ப்ராமணரே; ந-இல்லை; விமுஞ்சதி-விடுவித்து; கர்ஹிசித்-எந்த நேரத்திலும்; அந்யோந்ய-ஒருவருக்கொருவர்; அபாஸ்ரயத்வாத்—கவர்ச்சியிலிருந்து; ச-மற்றும்; நித்யவாத்-நிலைத்த தன்மையிலிருந்து; அனயோ—அந்த இரண்டின்; ப்ரபோ-ஓ என் பகவானே.

ஸ்ரீ தேவஹூதி வினவினாள்: என் அன்பு பிராம்மணரே, பருப்பொருளாகிய இயற்கை எப்போதும் ஆத்மாவிற்கு விடுதலை தருகிறதோ? ஒன்று மற்றொன்றை நிலையாக பற்றி நிற்பதால் அவற்றின் பிரிவு எப்படி நிகழமுடியும்?

பதம் 3.27.18
யதா கந்தஸ்ய பூமேஸ்ச ந பாவோ வ்யதிரேகத:
அபாம் ரஸஸ்ய ச யதா ததா புத்தே: பரஸ்ய ச

யதா-போல; கந்தஸ்ய-நறுமணத்தின்; பூமே-பூமியின்: ச- மற்றும்; ந-இல்லை; பாவ-இருப்பு; வ்யதிரேகத-தனியாக; அபாம்-நீரின்; ரஸஸ்ய—சுவையின்; ச-மற்றும்; ததா-அதனால்; புத்தே-அறிவுக் கூர்மையின்; பரஸ்ய-உணர்வுநிலையின் ஆத்மா; ச-மற்றும்.

பூமியின் நறுமணமும் நீரின் சுவையும் தனித்தனியாக இல்லாதது போல, அறிவுக்கூர்மையும் உணர்வும் தனியாக இருக்கமுடியாது.

பதம் 3.27.19
அகர்து: கர்ம-பந்தோயம் புருஷஸ்ய யதாஸ்ரய:
குணேஷு ஸத்சுப்ரக்ருதே: கைவல்யம் தேஷ்வதத கதம்

அகர்து-ஸாத்விகச் செயலாளரின் செய்யாதவர்; கர்ம-பந்த:-பயன் தரும் செயல்களுக்கான பிடிப்பு; அயம்-இந்த; புருஷஸ்ய-ஆத்மாவின்; யத் ஆஸ்ரய-குணங்களுக்குப் பற்றினால் ஏற்பட்டவை; குணேசு-குணங்கள்; ஸத்சு—இருக்கின்றன; ப்ரக்ருதே-ஜட இயற்கையின்; கைவல்யம்- விடுதலை; தேஷீ-அந்த; அத—அதனால்; கதம்-எப்படி.

அதனால் அனைத்துச் செயல்களையும் அமைதியாகச் செய்யினும், அவர் மீது உலகஇயற்கை செயல்பட்டு, அவரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் வரை, ஆத்மாவுக்கு எவ்வாறு விடுதலை இருக்க முடியும் ?

பதம் 3.27.20
க்வசித் தத்வாவமர்சேன நிவ்ருத்தம் பயமுல்பணம்
அநிவ்ருத்த-னிமித்தத்வாத்புன: ப்ரத்யவதிஷ்டதே

க்வசித்-குறிப்பிட்ட நிகழ்ச்சியில்; தத்வ-அடிப்படைத் தத்துவங்கள்; அவமர்சேன-பிரதிபலிப்பதால்; நிவ்ருததம்- தவிர்த்து; பயம்-அச்சம்; உல்பணம்-சிறந்தது; அநிவ்ருத்த-முடிவுறாது; நிமித்தத்வாத்-காரணத்தால்; புன-மீண்டும்; ப்ரத்யவதிஷ்டதே-அது தோன்றுகிறது.

கட்டுப்பாட்டைப் பற்றிய பயம் அடிப்படைத் தத்துவங்களில் கேள்வியாலும் மனக் கற்பனையாலும், உலகியல் தளை தவிர்க்கப்பட்டாலும், அதன் காரணம் முடிவுறாததால், அது இன்னும் மீண்டும் தோன்றித் தொல்லை கொடுக்கலாம்.

பதம் 3.27.21
ஸ்ரீ-பகவானுவாச
அநிமித்த-நிமித்தேன ஸ்வ-தர்மேணாமலாத்மனா
தீவ்ரயா மயி பக்த்யாச ஸ்ருத-ஸம்ப்ருதயா சிரம்

ஸ்ரீ-பகவான் உவாச-பரமபுருஷ பகவான் கூறினார்; அநிமித்த நிமித்தேன-செயல்களின் பலன்களை விரும்பாமல்; ஸ்வதர்மேண-ஒருவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதால்; அமல ஆத்மனா—தூய மனத்துடன்; தீவ்ரயா-தீவிரமாக; மயி-என்னிடம்; பக்த்யா—பக்தித் தொண்டினால்; ச-மற்றும்; ஸ்ருத-கேட்டு; ஸம்ப்ருதயா-கொடுக்கப்பட்டு; சிரம்-நெடுங்காலத்திற்கு.

பரமபுருஷ பகவான் கூறினார்: ஒருவர் என்னைப்பற்றி அல்லது என்னிடமிருந்து நெடுங்காலத்திற்குக் கேட்பதன் மூலமும், என்னிடம் பக்தித் தொண்டைத் தீவிரமாகச் செய்வதன் மூலமும் வீடுபேறு பெறமுடியும். இவ்வாறு ஒருவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதால், எதிர்ச்செயல் இருக்காது, அவர் பருப்பொருளின் மாசிலிருந்து விடுதலை அடைவார்.

பதம் 3.27.22
ஞானேன த்ருஷ்ட-தத்வேன வைராக்யேண பலீயஸா
தபோ-யுக்தேன யோகேன தீவ்ரேணாத்ம-ஸமாதினா

ஞானேன— அறிவில்; த்ருஷ்ட-தத்வேன-பரம சத்தியத்தின் நோக்குடன்; வைராக்யேண—துறவுடன்; பலீயஸா-மிகவும் ஆற்றலுடைய; தபோ-யுக்தேன—துறவில் ஈடுபடுவதால்; யோகேன-அறிவார்ந்த யோகத்தால்; தீவ்ரேண-உறுதியாக நிலைத்து; ஆத்மஸமாதினா—தன்னில் ஆழ்ந்து போவதால்.

இந்த பக்தித் தொண்டு எல்லாம் கடந்த தத்துவ நோக்குடன் முழுமையான அறிவில் ஆற்றலுடன் நிகழ்த்தப்படவேண்டும். ஒருவர் தன்னை உணரும் ஆற்றலில் உறுதியாக நிலைக்கும் பொருட்டு, துறவு கொண்டு தவத்தில் ஈடுபட்டு, அறிவார்ந்த யோகத்தை நிகழ்த்த வேண்டும்.

பதம் 3.27.23
ப்ரக்ருதி: புருஷஸ்யேஹ தஹ்யமானா த்வஹர்-னிசம்
திரோ-மவித்ரீ சனகைரக்னேர்யோனிரிவாரணி:

ப்ரக்ருதி-ஜட இயற்கையின் பாதிப்பு; புருஷஸ்ய-வாழும் உயிரினத்தின்; இஹ-இங்கு; தஹ்யமானா—சுட்டெரிக்கப்பட்டு; து-ஆனால்; அஹனிசம்-பகலும் இரவும்; திர: பவித்ரீ-மறைந்து; சனகை-படிப்படியாக; அக்நே-நெருப்பின்; யோனி-தோற்றத்தின் காரணம்; இது-பால; அரணி-மரக்குச்சிகள்.

மண்ணுலக இயற்கை உலகின் உயிரினத்தைப் பாதித்துள்ளது இவ்வாறு உயிரினம் எப்போதும் கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் இருப்பது போல் உள்ளது. ஆனால் நெருப்பை உண்டாக்கும் மரக்குச்சிகளே நெருப்புக்கு இரையாவதைப் போல, பக்தித் தொண்டைத் தீவிரமாக நிறைவேற்றும் முறையால், இந்த மண்ணுலக பாதிப்பும் நம்மை விட்டு நீங்கிவிடும்.

பதம் 3.27.24
புக்த-போகா-பரித்யக்தா த்ருஷ்ட-தோஷா சநித்யச:
நேஸ்வரஸ்யாசுபம் தத்தே ஸ்வேமஹிம்னி ஸ்திதஸ்ய ச

புக்த—அனுபவித்து; போகா—இன்பம்; பரித்யக்தா-விட்டுக் கொடுத்து; த்ருஷ்ட-கண்டுபிடித்து; தோஷா-குற்றம் உடைமை; ச-மற்றும்; நித்யச-எப்போதும்; ந-இல்லை; ஈஸ்வரஸ்ய-சுதந்திரத்தின்; அசுபம்-கெடுதி; தத்தே-சுமத்துகிறாள்; ஸ்வேமஹிம்னி—அவருடைய புகழில்; ஸ்திதஸ்ய-அமைந்து; ச-மற்றும்.

பூவுலக இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் தனது ஆசையின் குற்றத்தை உணர்வதாலும் பின்னர் அதை விட்டு விடுவதாலும் உயிரினம் விடுதலை அடைந்து, தன் சொந்தப் புகழில் நிற்கின்றது.

பதம் 3.27.25
யதா ஹ்ய ப்ரதிபுத்தஸ்ய ப்ரஸ்வாபோ பஹ்வ-நர்த்த-ப்ருத்
ஸ ஏவ ப்ரதிபுத்தஸ்ய ந வை மோஹாய கல்பதே

யதா-போல; ஹி-உண்மையில்; அப்ரதிபுத்தஸ்ய-உறங்குகின்ற ஒருவரின்; ப்ரஸ்வாப:-கனவு; பஹு அனர்த்தப்ருத்-பல மங்கல மல்லாத பொருட்களைத் தாங்குதல்; ஸ ஏவ-அதே கனவு; ப்ரதிபுத்தஸ்ய-விழிப்பு நிலையில் உள்ள ஒருவரின்; ந-இல்லை; வை-நிச்சயமாக; மோஹாய-தடுமாறுதலுக்காக; கல்பதே-வல்லமையுடைய.

கனவு நிலையில் ஒருவரின் உணர்வுகள் ஏறக்குறைய அடங்கியுள்ளன. இப்போது ஒருவர் அதிக மங்கலமற்ற பொருட்களைக் கனவில் பார்க்கிறார், ஆனால் அவர் விழித்திருக்கும் போதும், முழுதும் உணர்வில் இருக்கும் பொழுதும் அந்த மங்கலமற்ற பொருட்கள் அவரைத் தடுமாறச் செய்ய இயலாது.

பதம் 3.27.26
ஏவம் விதித-தத்வஸ்ய ப்ர்க்ருதிர்மயி மானஸம்
யுஞ்ஜதோ நாபகுருத ஆத்மாராமஸ்ய கர்ஹிசித்

ஏவம்-இவ்வாறு; விதித தத்வஸ்ய—பரசத்தியத்தைப் பற்றி அறிந்த ஒருவரிடம்; ப்ரக்ருதி:-ஜட இயற்கை; மயி—என்னிடம்; மானஸம்-மனம்; யுஞ்ஜத:-நிலை நிறுத்துதல்; ந- இல்லை; அபகுருதே-துன்பப்படுத்த இயலும்; ஆத்ம ஆராமஸ்ய- தன்னில் மகிழும் ஒருவரிடம்; கர்ஹிசித்—எந்த நேரத்திலும்.

அறிவொளி பெற்ற ஆத்மாவை, இது இவ்வுலகச் செயல்களில் ஈடுபட்டிருந்த போதிலும் மண்ணுலகத்தின் பாதிப்பு துன்புறுத்த இயலாது, ஏனென்றால் அந்த ஆத்மா பரம சத்தியத்தின் உண்மையை அறிவார், அவர் மனம் பரம புருஷ பகவானிடம் என்றும் நிலைத்திருக்கும்.

பதம் 3.27.27
யதைவமத்யாத்ம-ரத: காலேன பஹு-ஜந்மனா
ஸர்வத்ர ஜாத-வைராக்ய ஆப்ரஹ்மபுவனான்முனி:

யதா—எப்பொழுது; ஏவம்-இவ்வாறு; ஆத்யாத்ம-தன்னை அறிதலில் ஈடுபட்டுள்ள; காலேன-பல வருடங்களுக்கு; பஹுஜந்மனா-பல பிறவிகளுக்கு; ஸர்வத்ர-எல்லா இடத்திலும்; ஜாத-வைராக்ய-பற்றற்ற நிலை பிறக்கிறது; ஆ-ப்ரஹம-புவனாத்-ப்ரம்மலோகம் வரை; முனி:-சிந்திப்பவர்.

இவ்வாறு ஒருவர் பலப்பல பிறவிகளில் பலப்பல ஆண்டுகளுக்கு, தன்னை அறிதலிலும் பக்தித் தொண்டிலும் ஈடுபடும் பொழுது, அவர் பிரம்மலோகம் எனப்படும் மிகவுயர்ந்த கோள்வரை எந்த உலகக் கோள்களிலும் அனுபவிக்க ஆசையற்றவர் ஆகிறார். அவர் இறை உணர்வு நிலையில் முழு வளர்ச்சியடைந்தவர் ஆகிறார்.

பதங்கள் 3.27.28 – 3.27.29
மத்-பக்த: ப்ரதிஹபுத்தார்த்தோ மத்-ப்ரஸாதேன பூயஸா
நி:ஸ்ரேயஸம் ஸ்வ-ஸம்ஸ்தானாம்கைவல்யாக்யம் மதா-ஸ்ரயம்

ப்ராப்நோதிஉறாஞ்ஜஸா தீர:ஸ்வ-த்ருசாச்சிந்நஸம்சய:
யத்கத்வாநநிவர்த்தேத யோகீ லிங்காத்விநிர்கமே

மத்பக்த:-என் பக்தர்; ப்ரதிபுத்த-அர்த்த:-தன்னை அறிந்த; மத்ப்ரஸாதேன-என் அகாரணமான கருணையால்; பூயஸா-எல்லையற்ற; நிஸ்ரேயஸம்-இறுதி முழுமையான குறிக்கோள்; ஸ்வஸம் தானம்-அவர் இருப்பிடம்; கைவல்ய-ஆக்யம்-கைவல்யம் எனப்படும்; மத்ஆஸ்ரயம்-என் பாதுகாப்பில்; ப்ராப்நோதீ-அடைந்து; இஹ-இந்த வாழ்வில்; அஞ்ஜஸா-உண்மையாக; தீர:-நிலையாக; ஸ்வத்ருசா-தன்னைப் பற்றிய அறிவால்; சிந்நஸம்சய:- சந்தேகங்களிலிருந்து விடுபட்டு; யத்-அந்த இருப்பிடத்துக்கு; கத்வா-சென்று; ந-ஒருபோதுமில்லை; நிவர்தேத-மீண்டு வந்து; யோகீ-அறிவராகிய பக்தர்; லிங்காத்-நுட்பமான, மொத்த ஜடவுடல்களிலிருந்து; விநிர்கமே-பிரிந்த பிறகு.

என் பக்தர் என்னுடைய எல்லையற்ற கருணையினால் உண்மையில் தன்னை அறிந்தவர் ஆகிறார். இவ்வாறு எல்லாச் சந்தேகங்களிலிருந்தும் விடுபடும்பொழுது, அவர் அவருக்கென்று விதிக்கப்பட்ட இருப்பிடத்தை நோக்கி நிலையாக முன்னேறுகிறார், அந்த இருப்பிடம் கலப்படமற்ற இன்பத்தில் என் ஆன்மீகச் சக்தியின் நேரடிப் பாதுகாப்பில் உள்ளது. அதுவே உயிரினத்தின் இறுதியான முழுமையான குறிக்கோளாகும். தற்போதைய பூதஉடலை விட்டபிறகு, அறிவராகிய பக்தர் அந்த தெய்வீகமான இருப்பிடம் செல்கிறார், அங்கிருந்து ஒருபோதும் மீண்டு வருவதில்லை.

பதம் 3.27.30
யதா ந யோகோ பசிதாஸூசேதோ
மாயாசு ஸித்தஸ்ய விஷஜ்ஜதேங்க
அநந்ய-ஹேதுஷ்வத மே கதி: ஸ்யாத்
ஆத்யந்நிகீ யத்ர ந ம்ருத்யு-ஹாஸ:

யதா-எப்பொழுது; ந-இல்லை; யோக-உபசிதாசு-யோகத்தால் வளர்ச்சி பெறும் ஆற்றல்களுக்கு; சேத:-கவனம்; மாயாசு-மாயையின் வெளிப்பாடு; ஸித்தஸ்ய-முழு யோகிகள்; விஷஜ்ஜதே-கவரப்படுகிறது; அங்க-என் அன்பு அன்னையே; அநந்ய ஹேதுஷூ-வேறு காரணம் இன்றி; அத-பின்னர்; மே-என்னிடம்; கதி:-அவர் முன்னேற்றம்; ஸ்யாத்-அடைதல்; ஆத்யந்திகீ-எல்லை அற்ற; யத்ர-எங்கு; ந-இல்லை; ம்ருத்யுஹாஸ:-மரணத்தின் ஆற்றல்.

முழுமையடைந்த யோகியின் கவனம் உலகியல் சக்தியின் வெளிப்பாடுகளான, அறிவார்ந்த ஆற்றல்களின் சாதாரணச் செயல்களால் மேலும் கவரப்படாதபொழுது, என்னை நோக்கிய அவர் முன்னேற்றல் எல்லையற்றதாக ஆகிறது, இதனால் மரணத்தின் ஆற்றல் அவரை மிஞ்சி ஆட்கொள்ள முடியாது.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “உலகின் இயல்பினைப் புரிந்து கொள்ளுதல்” எனும் தலைப்பைக் கொண்ட இருபத்தேழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare