அத்தியாயம் – 26
ஜட இயற்கையின் அடிப்படைத் தத்துவங்கள்
பதம் 3.26.1
ஸ்ரீ-பகவான் உவாச
அத தே ஸம்ப்ரவக்ஷ்யாமி தத்வானாம் லக்ஷணம் ப்ருதக்
யத் விதித்வா விமுச்யேத புருஷ: ப்ராக்ருதைர் குணை:
ஸ்ரீ-பகவான் உவாச-பரம புருஷ பகவான் கூறினார்; அத- இப்போது; தே-உங்களிடம்; ஸம்ப்ரவக்ஷ்யாமி-நான் வருணிப்பேன்; தத்வானாம்-பரம சத்தியத்தின் வகைகளின்; லக்ஷணம்-குறிப்பிடத்தக்க அமைப்புகள்; ப்ருதக்-ஒவ்வொன்றாக; யத்-எந்த; விதித்வா-தெரிந்து; விமுச்யேத-ஒருவர் விடுதலை பெற முடியும்; புருஷ-எந்த நபரும்; ப்ராக்ருதை-ஜடவுலக இயற்கையின்; குணை:- குணங்களிலிருந்து.
பரமபுருஷ பகவானாகிய கபிலர் தொடர்ந்தார்: என் அன்பு அன்னையே, இப்போது நான் உங்களுக்கு நிறைவான உண்மையின் வேறுபட்ட வகைகளை வர்ணிக்கிறேன், அதை அறிந்த எவரும் மண்ணுலக இயற்கையின் இயல்புகள் மற்றும் அவற்றின் பாதிப்பிலிருந்து விடுபட முடியும்.
பதம் 3.26.2
ஞானம் நி: ஸ்ரேயஸார்த்தாய புருஷஸ்யாத்ம-தர்சனம்
யத் ஆஹுர் வர்ணயே தத்தே ஹ்ருத-யக்ரந்தி-பேதனம்
ஞானம்-அறிவு; நி:ச்ரேய-அர்த்தாய-இறுதி முழுமைக்காக; புருஷஸ்ய-ஒரு மனிதனின்; ஆத்ம தர்சனம்-தன்னை அறிதல்; யத்-எந்த: ஆஹு:-அவர்கள் கூறினர்; வர்ணயே-நான் விளக்குவேன்; தத்-அந்த; தே-உங்களிடம்; ஹ்ருதய-மனதில்; க்ரந்தி-முடிச்சுகள்; பேதனம்-வெட்டுகிறது.
தன்னை அறியும் கலையில் ஒருவன் பெறும் ஞானமே இறுதியும் முழுமையானதும் ஆகும். அத்தகைய அறிவினால் மண்ணுலகின் மீது உள்ள பற்றின் முடிச்சுகள் அறுக்கப்படுகின்றன. அந்த ஞானத்தின் சிறப்பை நான் உங்களுக்கு விளக்குகிறேன்.
பதம் 3.26.3
அநாதிர் ஆத்மா புருஷோ நிர்குண: ப்ரக்ருதே: பர:
ப்ரத்யக்– தாமா ஸ்வயம்ஜ் -யோதிர் விச்வம் யேன ஸமந்விதம்
அநாதி-தொடக்கம் இன்றி; ஆத்மா-பரமாத்மா; புருஷ-பரம புருஷ பகவான்; நிர்குண—இயற்கையின் ஜட குணங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வீக; ப்ரக்ருதே பர-இந்த ஜடவுலகிற்கு அப்பால்; ப்ரத்யக் தாமா—எங்கும் உணரக்கூடிய; ஸ்வயம் ஜ்யோதி—தானாக ஒளிவிடும்; விச்வம்-முழு படைப்பு; யேன-யாரால்; ஸமந்விதம்- பாதுகாக்கப்படுகிறது.
பரம புருஷ பகவானே பரமாத்மா, அவருக்குத் தொடக்கம் இல்லை. அவர் இயற்கையின் திடகுணங்களைக் கடந்த தெய்வீகமானவர் இந்த திடவுலகின் இருப்பிற்கு அப்பாற்பட்டவர். அவர் எங்கும் உணரக்கூடியவர் ஏனென்றால் அவர் தானாக ஒளிர்பவர். அவருடை தானே ஒளிரும் ஒளியால் அனைத்துப் படைப்பும் பாதுகாக்கப்படுகின்றன.
பதம் 3.26.4
ஸ ஏஷ ப்ரக்ருதிம் சூக்ஷ்மாம் தைவீம் குணமயீம் விபு: யத்ருச்சயைவோபகதாமப்யபத்யத லீலயா
ஸ ஏஷ:-அதே பரமபுருஷ பகவான்; ப்ரக்ருதிம்-ஜடசக்தி; சூஷ்மாம்-நுட்பமான; தைவீம்-விஷ்ணுவுக்குத் தொடர்புடைய; குணமயீம்-ஜடவுலக இயற்கையின் மூன்று குணங்களால் நிறைந்த; விபு-சிறந்ததான எல்லாவற்றிலும் மிகச் சிறந்தது; யத்ருச்சயா-தன் சுய விருப்பத்தின்; இவ-முழுவதும்; உபகதாம்-அடையப்பட்டு; அப்யபத்யத—அவர் ஏற்றுக்கொண்டார்; லீலயா-அவருடைய லீலையாக.
விஷ்ணுவுடன் தொடர்புடைய இயற்கையின் ஜடகுணங்களால் நிரம்பிய நுட்பமான, திடசக்தியை, சிறந்ததெல்லாவற்றிலும் சிறந்த பரமபுருஷ பகவான் தன்னுடைய திருவிளையாடலாக ஏற்றுக் கொண்டார்.
பதம் 3.26.5
குணைர்விசித்ரா: ஸ்ருஜதீம் ஸ்ரூபா: ப்ரக்ருதிம் ப்ரஜா:
விலோக்ய முமுஹே ஸத்ய: இஹ ஞான- கூஹயா
குணை:-மூன்று வித குணங்களால்; விசித்ரா-பல்வேறு வகைப்பட்ட; ஸ்ருஜதீம்-படைக்க; ஸரூபா—வடிவங்களுடன்; ப்ரக்ருதிம்-ஜடவுலக இயற்கை; ப்ரஜா—வாழும் உயிரினங்கள்; விலோக்ய-பார்த்து; முமுஹே-மயக்கப்படுகிறது; ஸத்ய—உடனே; ஸ-வாழும் உயிரினம்; இஹ-இந்த உலகில்; ஞான கூஹயா-அறிவை மூடும் அமைப்பால்.
தன்னுடைய மூன்றுவித குணங்களால் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டு ஜடவுலக இயற்கையானது வாழும் உயிரினங்களைப் படைக்கிறது. இதைப் பார்த்த உயிரினங்கள் அறிவை மூடும் மாயா சக்தியின் தோற்றத்தால் மயக்கப்படுகின்றன.
பதம் 3.26.6
ஏவம் பராபித்யானேன கர்த்ருவத்வம் ப்ரக்ருதே: புமான்
கர்மஸு க்ரியமாணேஷ குணைராத்மனி மன்யதே
ஏவம்-இந்த விதத்தில்; பர-பிற; அபித்யானேன-இனம் காணுதலால்; கர்த்ருத்வம்-செயல்களின் நிகழ்வு; ப்ரக்குதே:-ஜட இயற்கையின்; புமான்—வாழும் உயிரினம்; கர்மஸுக்ரியமாணேஷு-செயல்கள் நிகழ்த்தப்படும் போது; குணை-மூன்று குணங்களால்; ஆத்மனி-தன்னிடம்; மந்யதே-அவர் கருதுகிறார்.
தன்னுடைய மறதியினால், தெய்வீகமான உயிரினம் ஜடசக்தியின் பாதிப்பை தன் செயல்களின் களமாக ஏற்றுக் கொள்கிறான். இவ்வாறு தூண்டப்பட்டு அவன் செயல்களைத் தானே செய்வதாக தவறாக எண்ணுகிறான்.
பதம் 3.26.7
தத அஸ்ய ஸம்ஸ்ருதிர் பந்த:பாரதந்த்ர்யம் ச தத்க்ருதம்
பவதி அகர்துர் ஈசஸ்ய ஸாக்ஷிணோ நிர்வ்ருதாத்மன:
தத்-தவறான கருத்திலிருந்து; அஸ்ய-கட்டுப்படுத்தபட்ட ஆன்மாவின்; ஸம்ஸ்ருதி:-கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வு; பந்த:-பிணைப்பு; பாராதந்த்ர்யம்-சார்ந்து இருத்தல்; ச-மற்றும்; தத்க்ருதம்-அதனால் உருவாக்கப்பட்டது; பவதி—உள்ளது; அகர்து:-செய்யாதவரின்; ஈசஸ்ய-சுதந்திரமான; லாக்ஷிண-சாட்சி; நிர்வ்ருத—ஆத்மன-இயற்கையாக ஆனந்தமயமான.
உலகியலைப்பற்றிய உணர்வுநிலையே ஒருவரின் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வுக்குக் காரணமாகும். அதில் மண்ணுலக சக்தியால் வாழும் உயிரினத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆத்மா எதுவும் செய்யாவிட்டாலும் அந்தச் செயல்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், தனியொரு ஆன்மா கட்டுப்பட்ட வாழ்வால் பாதிக்கப்படுகிறான்.
பதம் 3.26.8
கார்ய-காரண -கர்த்ருத்வே காரணம் ப்ரக்ருதிம் விது:
போக்த்ருத்வே சுகதுக்கானானம் புருஷம் ப்ரக்ருதே: பரம்
கார்ய-உடல்; காரண—புலன்கள்; கர்த்ருத்வே-தேவர்களைப் பற்றிய; காரணம்-காரணம்; ப்ரக்ருதிம்- ஜடஇயற்கை; விது—படித்தவர் புரிந்து கொள்வர்; போக்த்ருத்வே- உணர்தலைப்பற்றிய; சுக-இன்பத்தின்; து: கானாம்-துன்பத்தின்; புருஷம்-ஆத்மா; ப்ரக்ருதே-ஜட இயற்கைக்கு; பரம்-திவ்யமான.
கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவின் பருவுடல் மற்றும் புலன்கள், புலன்களை அடக்கி ஆளும் தெய்வங்கள் மற்றும் தேவர்கள் ஆகியவற்றின் உண்மைக்கு காரணம் இயற்கையே ஆகும். இது படித்த மனிதர்களால் புரிந்து கொள்ளப்பட்டது. ஆத்மாவின் இன்ப, துன்ப உணர்வுகள் இயற்கையால் எல்லை கடந்த தத்துவமான இருக்கும், அந்த ஆத்மாவாலேயே விளைவிக்கப்படுகின்றன.
பதம் 3.26.9
தேவஹுதிர்உவாச
ப்ரக்ருதே புருக்ஷஸ்யாபி லக்ஷணம் புருஷோத்தம
ப்ரூஹி காரணயோர் அஸ்ய ஸத்-அஸச்ச யத்-ஆத்மகம்
தேவஹுதி உவாச-தேவஹுதி கூறினாள்; ப்ரக்ருதே-அவரது சக்திகளின்; புருஷஸ்ய-பரமனின்; அபி-மற்றும்; லக்ஷணம்-குணநலன்கள்; புருஷ உத்தம-ஓ பரமபுருஷ பகவானே; ப்ரூஹி-தயவு செய்து விளக்குங்கள்; காரணயோர்-காரணங்கள்; அஸ்ய-இந்தப் படைப்பின்; ஸத் அஸத்-வெளிப்பட்டும் வெளிப்படாமலும் உள்ளவை; ச-மற்றும்; யத் ஆத்மகம்-எவற்றை உள்ளடக்கியதோ.
தேவஹுதி கூறினாள்: முழுமுதற்கடவுளே தயவுசெய்து பரமபுருஷ பகவானின் மற்றும் அவருடைய சக்திகளின் குணநலன்களை விளக்குங்கள். ஏனென்றால் இவை இரண்டும் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் இருக்கும் படைப்பின் காரணங்களாகும்.
பதம் 3.26.10
ஸ்ரீ-பகவானுவாச
யத்தத்ரி-குணம் அவ்யக்தம் நித்யம் ஸதஸதாத்மகம்
ப்ரதானம் ப்ரக்ருதிம் ப்ராஹுரவிசேஷம் விசேஷவத்
ஸ்ரீ பகவான் உவாச-பரமபுருஷ பகாவன் கூறுகிறார்; யத்- இப்போது மேலும்; தத்-அந்த; த்ரி குணம்-மூன்று குணங்களின் இணைப்பு; அவ்யக்தம்-வெளிப்படுத்தாத; நித்யம்-நிலையான; ஸத் அஸத் ஆத்மகம்—காரண, விளைவை உள்ளடக்கிய; ப்ரதானம்—முக்கியமான; ப்ரக்ருதிம்-ப்ரக்ருதி; ப்ராஹு—அவர்கள் அழைப்பர்; அவிசேஷம்-வேறுபாடு அற்ற; விசேஷவத்—வேறுபாட்டை உடையது.
பரமபுருஷ பகவான் கூறினார்; மூன்று குணங்களின் தெளிவில்லாத நிலைத்த இணைப்பு உலக வெளிப்பாட்டின் நிலைக்கும் காரணம் ஆகும். அது ப்ரதானம் எனப்படுகிறது. ஒரு பொருள் வெளிப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது அது பிரகிருதி எனப்படுகிறது.
பதம் 3.26.11
பஞ்சபி: பஞ்சபிர்ப்ரம்ம சதுர்-பிர்தசபிஸ்ததர்
ஏதச் சதுர்விம்சதிகம் கணம் ப்ராதானிகம் விது:
பஞ்சபி:-ஐந்துடன் (மூலப்பொருட்கள்); பஞ்சபி:-ஐந்து; (நுட்பமானபொருட்கள்); பிரம்ம-பிரம்மன்; சதுர்பி:-நான்கு (உள்புலன்கள்); தசபி—பத்து (அறிவை பெற ஐந்து புலன்களும், செயலுக்கான ஐந்து பொறிகளும்); ததா—அந்த வழியில்; ஏதத்-இந்த; சது—விசதிகம்-இருபத்து நான்கு பொருள்கள் உள்ளடங்கிய; கணம்-முழு மொத்தம்; பிராதானிகம்-பிராதானத்தை உள்ளடக்கிய; விது-அவை அறிந்தது.
முழு மொத்த மூலப் பொருள்களான, ஐந்து மொத்த மூலப் பொருட்கள், ஐந்து நுட்பமான பொருட்கள், நான்கு உள்புலன்கள், அறிவைப் பெறுவதற்கான ஐந்து புலன்கள் மற்றும் செயலின் ஐந்து வெளிப்புறப் பொறிகள், இவை அனைத்தும் பிரதானம் என்று அறியப்படும்.
பதம் 3.26.12
மஹா-பூதானி பஞ்சைவ பூராபோக்னிர்மருந்நப:
தந்-மாத்ரானிச தாவந்தி கந்தாதீனி மதானி மே
மஹாபூதானி-முழு மூலக்கூறுகள்; பஞ்ச-ஐந்து; ஏவ- மிகச்சரியாக; பூ-பூமி; ஆப-நீர்; அக்நி-தீ; மருத்-காற்று; நப- ஆகாயம்; தத்மாத்ராணி-நுட்பமான மூலப்பொருள்கள்; ச-கூட; தாவந்தி-பலவித; கந்தாதீனி-மணம் முதலியன (சுவை, நிறம், தொடு உணர்ச்சி, மற்றும் ஒலி); மதானி-கருதப்படுகின்றன; மே-என்னால்.
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் எனும் ஐந்து முழு மூலப் பொருட்கள் உள்ளன. ஐந்து நுட்பமான மூலக்கூறுகளாக மணம், சுவை, நிறம், தொடுஉணர்ச்சி மற்றும் ஒலி முதலியனவும் உள்ளன.
பதம் 3.26.13
இந்த்ரியாணி தச ஸ்ரோத்ரம் த்வக்த்ருக்ரஸன-நாஸிகா
வாக்கரௌ சரணௌ மேட்ரம் பாயுர் தசம உச்யதே
இந்த்ரியாணி-புலன்கள்; தச-பத்து; ஸ்ரோத்ரம்—கேட்கும் புலன்; த்வக்-தொடு புலன்; த்ருக்-பார்க்கும் புலன்; ரஸன-சுவைப்புலன்; நாஸிகா-முகரும் புலன்; வாக்-பேசும் பொறி; கரௌ-இரு கைகள்; சரணௌ-பயணிக்கும் பொறிகள் (கால்கள்); மேட்ரம்-உற்பத்தி செய்யும் பொறி; பாயு-வெளியேற்றும் பொறி; தசம்-பத்தாம்; உச்யதே—அழைக்கப்படுகிறது.
அறிவைப் பெறுதற்குரிய புலன்களும் செயலுக்கான பத்துப் பொறிகளும் உடலில் உள்ளன. கேட்கும் புலன், சுவைப்புலன், தொடு புலன், பார்க்கும் புலன்; முகரும் புலன், பேசுவதற்குச் செயல்படும் பொறி, வேலை செய்யச் செயல்படும் பொறிகள், பயணம் செய்ய, உற்பத்தி செய்ய மற்றும் வெளியேற்றம் செயல்படுவதும் ஆக மொத்தம் பத்துப் பொறிகள் ஆகும்.
பதம் 3.26.14
மனோ புத்திரஹங்காரஸ்சித்தமித்யந்தராத்மகம்
சதுர்தா லக்ஷ்யதே பேதோ வ்ருத்யா லக்ஷண-ரூபயா
மன-மனம்; புத்தி-புத்திக்கூர்மை; அஹங்கார-ஆளுமை; சித்தம்-உணர்வு நிலை; இதி-இவ்வாறு; அந்த அத்மகம்- உள்ளே உள்ள நுட்பமான புலன்கள்; சதுர்தா-நான்கு நோக்குகளைக் கொண்டு; லக்ஷ்தேய-உற்று நோக்கப்படுகிறது; பேத-வேறுபாடு; வ்ருத்யார-அவற்றின் வேலைகளால்; லக்ஷண ரூபயா-வேறுபட்ட குணநலன்களைச் சுட்டிக் காட்டும்.
மனம், புத்திக்கூர்மை, ஆளுமை, மாசுபடிந்த உணர்வுநிலை எனும் உள்ளார்ந்த நுட்பமான நான்கு சூட்சுமப் புலன்களும் நம்மால் உணரப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் வேறுபட்ட குண நலன்களைச் சுட்டிக்காட்டுகின்றன. அவற்றின் செயற்பாடுகளும் ஒன்றுக் கொன்று வேறுபட்டவையாகும்.
பதம் 3.26.15
ஏதாவானேவ ஸங்க்யாதோ ப்ரம்மண: ஸ-குணஸ்ய ஹ
ஸந்நிவேசோ மயாப்ரோக்தோய: கால: பஞ்ச-விம்சக:
ஏதாவான்-மிகுந்த; ஏவ-சரியாக; ஸங்கயாத-கணக்கிட்டு; ப்ரஹ்மண-பிரம்மனின்; ஸகுணஸ்ய-ஜடத்தன்மைகளுடன்; ஹ-உண்மையில்; ஸந்நிவேச-ஏற்பாடு; மயா-என்னால்; ப்ரோக்த-பேசப்பட்டு; ய-எந்த; கால-நேரம்; பஞ்சவிம்சக:-இருபத்தைந்தாம்.
இவை எல்லாம் தகுதி வாய்ந்த பிரம்மனாகக் கருதப்படுகின்றன. நேரம் என்று அறியப்படும் மூன்று காலங்களும் கலக்கும் மூலப் பொருள் இருபத்தைந்தாம் மூலக்கூறு என்று கணக்கிடப்படுகிறது.
பதம் 3.26.16
ப்ரபாவம் பௌருஷம் ப்ராஹு: காலமேகே யதோ பயம்
அஹங்கார-விமூடஸ்ய கர்து ப்க்ருதிமீயுஷ:
ப்ரபாவம்-பாதிப்பு; பௌருஷம்-பரமபுருஷ பகவானின்; ப்ராஹு—அவர்கள் கூறியுள்ளனர்; காலம்-காலக்கூறு; ஏக-சில; யத-அதிலிருந்து; பயம்-அச்சம்; அஹங்கார விமூடஸ்ய-போலி ஆளுமையால் ஏமாற்றப்பட்டு; கர்து-தனிப்பட்ட ஆத்மாவின்; ப்ரக்ருதிம்-ஜட இயற்கை; ஈயுஷ-தொடர்பு கொண்டு.
பரமபுருஷ பகவானின் பாதிப்பு காலத்தின் விளைவில் உணரப்படுகிறது, அது ஜட இயற்கையைத் தொடர்பு கொண்டு ஏமாற்றப்பட்ட ஆத்மாவின் போலி ஆளுமையால் மரண பயம் கொடுக்கும் தன்மையது.
பதம் 3.26.17
ப்ரக்ருதேர்குண-ஸாம்யஸ்ய நிர்விசேஷஸ்ய மானவி
சேஷ்டா யத: ஸ பகவான் கால இத்யுபலக்ஷித:
ப்ரக்ருதே-ஜட இயற்கையின்; குண-ஸாம்யஸ்ய-மூன்று குணங்களின் தொடர்பு இல்லாமல்; நிர்விசேஷஸ்ய-குறிப்பிட்ட குணங்களின்றி; மானவி-ஓ மனுவின் மகளே; சேஷ்டா—அசைவு; யத-அவரிடமிருந்து; ஸ-அவர்; பகவான்-பரமபுருஷ பகவான்; கால-நேரம்; இதி-இவ்வாறு; உபலக்ஷித—அமர்த்தப்பட்டது.
என் அன்பு அன்னையே, ஒ ஸ்வயம்புவ மனுவின் மகளே, நான் விளக்கியது போல, காலக்கூறு என்பதே பரமபுருஷ பகவான் ஆவார். அவரிடமிருந்து, நடுநிலையான, வெளிப்படுத்தாத இயற்கையின் பரபரப்பினால் படைப்பு தொடங்குகிறது.
பதம் 3.26.18
அந்த: புருஷ-ரூபேண கால-ரூபேண யோ பஹி:
ஸமந்வேத்யேஷ ஸத்வானாம் பகவானாத்ம-மாயயா
அந்த:-அதனுள்; புருஷரூபேண—பரமாத்மா வடிவில்; காலரூபேண-காலத்தின் வடிவில்; ய-அவர்; பஹி-வெளியில்; மைந்வேதி-இருக்கிறார்; ஏஷ-அவர்; ஸத்வானாம்-எல்லா வாழும் உயிரினங்களின்; பகவான்-பரம புருஷ பகவான்; ஆத்ம மாயயா-அவர் ஆற்றல்களால்.
பரமபுருஷ பகவான் அவருடைய ஆற்றல்களை வெளிப்படுத்துவதன் மூலம், வெளியில் காலமாகவும் உள்ளே தன்னைப் பரமாத்மாவாகவும் வைத்துக் கொண்டு, இந்த எல்லா வேறுபட்ட மூலக் கூறுகளையும் சரிசெய்கிறார்.
பதம் 3.26.19
தைவாத்க்ஷுபித-தர்மிண்யாம் ஸ்வஸ்யாம் யோளென பர: புமான்
ஆதத்த வீர்யம் ஸாசுத மஹத்-தத்வம் ஹிரண்மயம்
தைவாத்-கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களின் விதியினால்; க்ஷுபித-கலங்கி; தர்மிண்யாம்—அவர் குணங்களின் சமநிலை; ஸ்வஸ்யாம்-அவருடைய; யோனௌ-கருப்பையில் (ஜட இயற்கை); பர: புமான்- பரமபுருஷ பகவான்; ஆதத்த-சினைப்படுத்தி; வீர்யம்- விந்து; (அவர் உள் ஆற்றல்); ஸா—அவள் (ஜட இயற்கை); ஆகத— பெற்றெடுத்து; மஹத் தத்வம்-இயல் உலக அறிவுக் கூர்மையின் முழு மொத்தம்; ஹிரண்மயம்-ஹிரண்மய என்று அறியப்பட்ட.
பரமபுருஷ பகவான் தன் உள்ளார்ந்த வீரியத்தால் இயற்கையைக் கருவுறச் செய்த பிறகு, இயற்கை, ஹிரண்மய என்று அறியப்படும் பர உலக அறிவுக் கூர்மையின் மொத்தத்தைப் பெற்றெடுக்கிறது. ஐட இயற்கையில் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களின் விதியினால் அவள் கலங்குவதால் இது நடைபெறுகிறது.
பதம் 3.26.20
விஸ்வமாத்ம-கதம் வ்யஞ்ஜன் கூடஸ்-தோ ஜகதங்குர:
ஸ்வ-தேஜஸாபிபத்தீவ்ரமாத்ம -ப்ரஸ்வாபனம் தம:
விஸ்வம்-அண்டம்; ஆத்ம கதம்-அதனுள்ளேயே நிரம்பியது; வயஞ்ஜன்-வெளிப்படுத்தும்; கூடஸ்த- மாற்றமுடியாது; ஐகத் அங்குர—எல்லா இயலுலக வெளிப்பாடுகளின் மூலம்; ஸ்வதேஜஸா-அதனுடைய ஒளியால்; அபிபத்-விழுங்கப்பட்டு; தீவிரம்—அடர்ந்த; ஆத்ம ப்ரஸ்வாபனம்—மஹத்தத்வத்தை மூடிய ; தம-இருள்.
இவ்வாறு, பல்வேறு வகைப்பொருள்களை வெளிப்படுத்திய பிறகு, தன் உள்ளே எல்லா அண்டங்களையும் அடக்கியதும், எல்லா வித தெய்வீக வெளிப்பாடுகளின் ஆதாரமானதும், அழிக்கப்படும் நேரத்தில் அழியாமல் இருப்பதும் ஒளியை மூடியுள்ள இருளை விழுங்குகிறது.
பதம் 3.26.21
யத் தத் ஸத்வ – குணம் ஸ்வச்சம் சாந்தம் பகவத: பதம்:
யத் ஆஹுர் வாஸுதேவாக்யம் சித்தம் தந்மஹத் -ஆத்மகம்
யத்—எந்த; தத்-அந்த; ஸத்வ குணம்-ஸத்வ குணம்; ஸ்வச்சம்-தெளிவு; சாந்தம்—அமைதி; பகவத-பரமபுருஷ பகவானின்; பதம்—புரிந்து கொள்ளுதலின் நிலை; யத்-எந்த; ஆஹீ-அழைக்கப்பட்டு; வாசுதேவ-ஆக்யம்- வாசுதேவரின் பெயரால்; சித்தம்—உணர்வு நிலை; தத்—அந்ததி; மஹத் ஆத்மகம்—மஹத் தத்வத்தில் வெளிப்படும்.
ஸத்வ குணம் பரமபுருஷ பகவானைப் புரிந்து கொள்ளும் தெளிவான அமைதியான நிலை, பொதுவாக வாசுதேவர் அல்லது உணர்வு நிலையென்று அழைக்கப்படும் ஸத்வ குணம் மஹத் தத்வத்தில் வெளிப்படும்.
பதம் 3.26.22
ஸ்வச்சத்வம விகாரித்வம் சாந்தத்வமிதி சேதஸ:
வ்ருத்திபிர்லக்ஷணம் ப்ரோக்தம் யதாபாம் ப்ரக்ருதி: பரா
ஸ்வச்சத்வம்—தெளிவு; அவிகாரித்வம்—எல்லா கவன மாற்றத்திலிருந்து விடுதலை; சாந்தத்வம்-அமைதி; இதி-இவ்வாறு; சேதஸ—உணர்வு நிலையின்; வ்ருத்திபி— பண்பு நலன்களால்: லக்ஷணம்—தனிக்கூறுகள்; ப்ரோக்தம்- அழைக்கப்படும்; யதா-போல; ஆபம்-தண்ணீரின்; ப்ரக்ருதி-இயற்கையான நிலை; பரா- தூய.
மஹத் தத்துவத்தின் வெளிபாட்டிற்குப் பின்னர், இந்தத் தோற்றங்கள் ஒரே நேரத்தில் தோன்றும். இயல்பான பூமியுடன் தொடர்பு கொள்ள வரும் முன் தன் இயல்பான தண்ணீர் தூய்மையாக, இனிமையாக, கலங்காமல் உள்ளது. அதுபோல தூய உணர்வு நிலை அல்லது மனச்சான்று என்பது அமைதி, தெளிவு, மாறுபடாத சிந்தனை ஆகிய இந்த இயல்புகளைத் தன்னகத்தே கொண்டது.
பதங்கள் 3.26.23 – 3.26.24
மஹத் -தத்வாத்விகுர்வாணாத் பகவத்-வீர்ய -ஸம்பவாத்
க்ரியா-சக்திரஹஸ்காரஸ்த்ரி-வித ஸமபத்யத
வைகாரிகஸ்தைஜஸஸ்ச தாமஸஸ்ச யதோ பவ:
மனஸஸ் சேந்த்ரியாணாம் ச பூதானாம் மஹதாமபி
மஹத்தத்வாத்-மஹத் தத்வத்திலிருந்து; விகுர்வாணாத்—மாற்றத்தை அனுபவித்தல்; பகவத் வீர்ய ஸம்பவாத்-பகவானின் சொந்த சக்தியிலிருந்து மலர்ந்தது; க்ரியா- சக்தி செயலாற்றலுடன் அளிக்கப்பட்ட; அஹங்கார-ஜட ஆளுமை; த்ரிவித-மூன்று வகைகளின்; ஸமபத்யத-துள்ளியது; வைகாரிக-மாற்றப்பட்ட ஸத்வகுணத்தில் ஜட ஆளுமை; தைஜஸ-ரஜோகுணத்தில் ஜட ஆளுமை; ச- மற்றும்; யத-அதிலிருந்து; பவ-மூலம்; மனஸ- மனத்தின்; ச-மற்றும்; இந்த்ரியாணாம்-உற்றுப் பார்த்தல் மற்றும் செயலுக்கான புலன்களின்; ச-மற்றும்; பூதானம் மஹதாம்-ஐந்து முழுமையான மூலக்கூறுகளின்; அபி-கூட.
லௌகீகத் தற்பெருமை பகவானின் சக்தியிலிருந்து மலர்ந்த மஹத் தத்வத்திலிருந்து ஊற்றெடுக்கிறது தற்பெருமை ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று விதங்களின் செயலாற்றலுடன் இயங்கக்கூடியது. இந்த மூன்று விதமான ஜட ஆளுமையிலிருந்து, மனம், உற்றுப்பார்க்கும் புலன்கள், செயல் பொறி மற்றும் முழு மூலப் பொருட்கள் மலர்கின்றன.
பதம் 3.26.25
ஸஹஸ்ர-சிரஸம் ஸாக்ஷாத்யமனந்தம் ப்ரசக்ஷதே
ஸங்கர்ஷணாக்யம் புருஷம் பூதேந்த்ரியம-னோமயம்
ஸஹஸ்ரசிரஸம்-ஆயிரம் தலைகளுடன்; ஸாக்ஷாத்- நேரடியாக; யம்-யாரிடமிருந்து; அனந்தம்—அனந்த; ப்ரசக்ஷதே—அவர்கள் அழைப்பர்; ஸங்கர்ஷணாக்யம்-ஸங்கர்ஷண எனும் பெயரால்; புருஷம்-பரமபுருஷ பகவான்; பூத-முழு மூலப்பொருட்கள்; இந்த்ரிய-புலன்கள்; மன: மயம்—மனத்தைக் கொண்ட.
முழு மூலப்பொருட்கள் புலன்கள் மற்றும் மனம் ஆகியவற்றுக்கு ஆதாரமான மூன்றுவித அகங்காரம் மேற்கூறியவற்றோடு ஒருங்கு வைத்து எண்ணத்தகுவது. ஏனென்றால் அதுவே அவற்றின் காரணமாகும். ஆயிரம் தலைகளுடன் கூடிய ப்ரத்யக்ஷமான பகவான் அனந்தர் என்ற கூறப்படும் ஸங்க்ர்ஷணர் எனும் பெயரால் அது அறியப்படுகிறது.
பதம் 3.26.26
கர்த்ருத்வம் கரணத்வம் ச கார்யத்வம் சேதி லக்ஷணம்
சாந்த -கோர-விமூடத்வமிதி வா ஸ்யாதஹங்க்ருதே:
கர்த்ருத்வம்-செய்பவராக; கரணத்வம்-கருவியாக; ச- மற்றும்; கார்யத்வம்-விளைவாக; ச-மற்றும்; இதி-இவ்வாறு; லக்ஷணம்-குணநலன்கள்; சாந்த-அமைதி; கோர-சுறுசுறுப்பான; விமூடத்வம்-சோர்ந்து இருக்கும்; இதி-இவ்வாறு; வா-அல்லது; ஸ்யாத்—இருக்கலாம்; அஹங்க்ருதே-போலி ஆளுமையின்.
இந்தப் போலித்தற்பெருமை செயலாற்றுபவராகவும், ஒரு கருவியாகவும், விளைவாகவும் வர்ணிக்கப்படுகிறது. இது எவ்வாறு ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களால் பாதிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, இது மேலும், அமைதியாக, சுறுசுறுப்பாக அல்லது சோர்ந்து இருப்பதாகவும் வர்ணிக்கப்படுகிறது.
பதம் 3.26.27
வைகாரிகாத் விகுர்வாணாந் மனஸ்-தத்வமஜாயத
யத்-ஸங்கல்ப -விகல்லாப்யாம் வர்ததே காம -ஸம்பவ:
வைகாரிகாத்-ஸத்வத்தின் போலியான ஆளுமையிலிருந்து; விகுர்வாணாத்-மாற்றத்தை அனுபவித்தல்; மன-மனம்; தத்வம்-தத்துவம்; அஜாயத-மலர்ந்து; யத்-யாருடைய; ஸங்கல்ப-நிகழ்கிறது; காமஸம்பவ-ஆசையின் உதயம்.
ஸத்வத்தின் போலியான தற்பெருமையிலிருந்து, மற்றொரு மாற்றம் ஏற்படுகிறது. ஆசைகளை உண்டுபண்ணக்கூடிய எண்ணங்கள் மற்றும் பிரதிபலிப்புகள் கொண்ட மனம் அல்லது உள்ளம் இதிலிருந்து மலர்கிறது.
பதம் 3.26.28
யத் விதுர் ஹ்யனிருத்தாக்யம் ஹ்ருஷீகாணாமதீஸ்வரம் சாரதேந்தீவரச்யாமம் -ஸம்ராத்யம் யோகிபி: சனை:
யத்-எந்த மனம்; விது-அறியப்பட்டது; ஹி-உண்மையில்; அநிருத்தாக்யம்—அநிருத்தர் எனும் பெயரால்; ஹ்ருஷீகாணாம்—புலன்களின்; அதீஸ்வரம்-மேலான அரசர்; சாரத-இலையுதிர் காலத்திற்குரிய; இந்தீரவ-நீலத்தாமரை போல; ச்யாமம்-நீலநிறமான; ஸம்ராத்யம்-காணப்பட்டவர்; யோகிபி-யோகிகளால்; சனை:-படிப்படியாக.
உயிரினத்தின் மனம் புலன்களின் அரசர் எனப்படும் பகவான் அநிருத்தரின் பெயரால் அறியப்படுகிறது. அவர் இலையுதிர்க் காலத்தில் மலரும் தாமரையை ஒத்த கருநீல நிறமுடைய தோற்றம் கொண்டவர் அவர் யோகிகளாலேயே காலப்போக்கில் தான் அறியப்படுகிறார்.
பதம் 3.26.29
தைஜஸாத்து விகுர்வாணாத் புத்தி-தத்வமபூத்ஸதி த்வவ்யஸ்புரணவிக்ஞான மிந்த்ரியாணாமனுக்ரஹ:
தைஜஸாத்-ரஜோ குணத்தின் போலிப் பெருமையிலிருந்து; து-பின்னர்; விகுர்வாணாத்—மாற்றத்தை அநுபவித்தல்; புத்தி-அறிவுக்கூர்மை; தத்வம்—தத்துவம்; அபூத்-பிறப்பெடுத்து; ஸதி-ஓ நல்ல ஒழுக்கமுடைய சீமாட்டியே; த்ரவ்ய-பொருள்கள்; ஸ்புரண- பார்வைக்கு வருதல்; விக்ஞானம்—உறுதிப்படுத்தல்; இந்த்ரியாணாம்-புலன்களுக்கு; அனுக்ரஹ:-உதவி தருதல்.
ரஜோ குணத்தின் தற்பெருமை மாற்றப்பட்டு, ஓ நல்ல ஒழுக்கமுடைய சீமாட்டியே அறிவு பிறக்கிறது. அறிவின் வேலைகள் என்னவென்றால், பார்வைக்கு வரும் பொழுது பொருள்களின் இயல்பினை உறுதிப்படுத்த உதவி செய்வதும், புலன்களுக்கு உதவி புரிவதும் ஆகும்.
பதம் 3.26.30
ஸம்ஸயோத விபர்யாஸோ நிஸ்சய: ஸ்ம்ருதிரேவ ச
ஸ்வாப இத்யுச்யதே புத்தேர் லக்ஷணம் வ்ருத்தித: ப்ருதக்
ஸம்ஸய-சந்தேகம்; அத-பின்னர்; விபர்யாஸ-தவறாகப் புரிந்து கொள்ளுதல்; நிஸ்சய-சரியாகப் புரிந்து கொள்ளுதல்; ஸ்ம்ருதி-நினைவு; ஏவ-கூட; ச-மற்றும்; ஸ்வாப-உறக்கம்; இதி-இவ்வாறு; உச்யதே- கூறப்படுகின்றன; புத்தே-அறிவுக் கூர்மையின்; லக்ஷணம் குணநலன்கள்; வ்ருத்தித-வேலைகளால்; ப்ருதக்—வேறுபட்ட
சந்தேகம், தவறாகப் புரிந்து கொள்ளுதல், சரியாகப் புரிந்து கொள்ளுதல், நினைவாற்றல், உறக்கம், ஆகியன அனைத்தும் அறிவுக் கூர்மையின் குறிப்பிட்ட பண்பு நலன்களாகக் கூறப்படுகின்றன.
பதம் 3.26.31
தைஜஸானீந்த்ரியாண்யேவ க்ரியா-க்ஞான-விபாகச:
ப்ராணஸ்ய ஹி க்ரியா-சக்திபுத்தேர்விக்ஞான -சக்திதா
தைஜஸானி-ரஜோ குணத்தில் ஆளுமையிலிருந்து உருவானது; இந்த்ரியாணி—புலன்கள்; ஏவ- நிச்சயமாக; க்ரியா-செயல்; க்ஞான-அறிவு; விபாகச-அதன்படி; ப்ராணஸ்ய-உயர்நிலையான சக்திகள்; ஹி-உண்மையில்; க்ரியா சக்தி—செயலின் புலன்கள்; புத்தே-அறிவுக்கூர்மையின்; விக்ஞான சக்திதா—அறிவைப் பெறுவதற்கான புலன்கள்.
தற்பெருமையானது ரஜோ குணத்தில் இரண்டு விதப் புலன்களை உருவாக்குகிறது அறிவைப் பெறுவதற்கான புலன்கள் மற்றும் அதனைச் செயற்படுத்தும் புலன்கள் ஆகியவை ஆகும். செயற்படுத்தும் புலன்கள் உயிர்நிலையான சக்தியைச் சார்ந்தவை, அறிவைப் பெறுவதற்கான புலன்கள் அறிவுக் கூர்மையைச் சார்ந்தவை.
பதம் 3.26.32
தாமஸாச்ச விகுர்வாணாத்பகவத்-வீர்ய -சோதிதாத்
சப்தமாத்ரமபூத்தஸ்மாந்நப ஸ்ரோத்ரம் து சப்தகம்
தாமஸாத்-அறியாமையில் ஆளுமைத் தன்மையிலிருந்து; ச-மற்றும்; விகுர்வாணாத்—மாற்றத்தை அனுபவித்தல்; பகவத் வீர்ய-பரமபுருஷ பகவானின் சக்தியால்; சோதிதாத்—தூண்டப்பட்டு; சப்த மாத்ரம்-நுட்பமான பொருளின் ஒலி; அபூத்-வெளிப்பட்டது; தஸ்மாத்-அதிலிருந்து; நப—வானம்; ஸ்ரோத்ரம்-கேட்கும் புலன்; து—பின்னர்; சப்தகம்—ஒலியைப் பிடிப்பது.
தாமசகுணத்தில் காணப்படும் ஆளுமைத்தன்மை பரமபுருஷ பகவானின் பாலுணர்வு சக்தியால் கலங்கும் பொழுது, நுட்பமான ஒலி வெளிப்படுகிறது. அந்த ஒலியிலிருந்து விண் வெளியும் கேட்கும் புலனும் வெளிப்படுகிறது.
பதம் 3.26.33
அர்த்தாஸ்ரயத்வம் சப்தஸ்ய த்ரஷ்டுர்லிங்கத்வமேவ ச
தந்மாத்ரத்வம் ச நபஸோ லக்ஷணம் கவயோ விது:
அர்த்த ஆஸ்ரத்வம்-ஒரு பொருளின் அர்த்தத்தைத் தருவது; சப்தஸ்ய-ஒலியின்; த்ரஷ்டு-பேசுபவரின்; லிங்கத்வம்-இருத்தலைப் பற்றிய நியதி; ஏவ-கூட; ச- மற்றும்; தந்மாத்ரத்வம்-நுட்பமான மூலப்பொருள்; ச- மற்றும்; நபஸ-வானின்; லக்ஷணம்-விளக்கம்; கவய-படித்தவர்கள்; விது-அறிவார்கள்.
படித்தவர்கள், உண்மையான அறிவு உடையவர்கள் ஒலியானது ஒரு பொருள் பற்றிய எண்ணத்தைத் தருவதாக விளக்குவார்கள், பேச்சாளர் இருப்பதை நமது பார்வையிலிருந்து மறைந்தாலும் வானின் நுட்பமான வடிவத்தை ஒலி உருவாக்கும் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
பதம் 3.26.34
பூதானாம் சித்ர-தாத்ருத்வம் பஹிரந்தரமேவ ச
ப்ராணேந்த்ரியாத்ம-திஷ்ண்யத்வம் நபஸோ வ்ருத்தி-லக்ஷணம்
பூதானாம்—உலகில் வாழும் உயிரினங்களின்; சித்ரதாத்ருத்வம்-அறையின் இடவசதி; பஹி-வெளிப்புறம்; அந்தரம்—உட்புறம்; ஏவ-உடன்; ச-மற்றும்; ப்ராண-உயிர்நிலையான காற்றின்; இந்ரிய-புலன்கள்; ஆத்ம-மனம்; திஷ்ண்யத்வம்-செயல்பாடுகளின் களமாக; நபஸ—புலன் கடந்த மூலப்பொருளின்; வ்ருத்தி-செயல்பாடுகள்; லக்ஷணம்-குணநலன்கள், இயல்புகள்.
காற்று புலன்கள் உள்ளம் ஆகியவற்றின் உள்ளார்ந்த மற்றும் வெளிப்படையான இயக்கத்தினையே விண்வெளிப் பொருள்களின் செயல்களும் இயல்புகளும் தம்முள் கட்டுப்படுத்தியுள்ளன என்று கூறலாம்.
பதம் 3.26.35
நபஸ: சபத் – தந்மாத்ராத்கால-கத்யா விகுர்வத:
ஸ்பர்சோபவத்ததோ வாயுஸ்த்வக் ஸ்பர்சஸ்ய ச ஸங்க்ரஹ:
நபஸ-வானிலிருந்து; சப்த தந்மாத்ராத்-நுட்பமான மூலப் பொருளாகிய ஒலியிலிருந்து தோன்றுவது; கால-கத்யா- நேரத்தின் தூண்டுதலின் கீழ்; விகுர்வத-மாற்றத்தை அனுபவித்தல்; ஸ்பர்ச-நுட்பமான மூலப்பொருளாகிய தொடு உணர்ச்சி; அபவத்-தோன்றி; தத-அங்கிருந்து; வாயு-காற்று; த்வக்-தொடு உணர்ச்சி; ஸ்பர்சஸ்ய- தொடுதலின்; ச-மற்றும்; ஸஸ்க்ரஹ-உற்று நோக்குதல்.
ஒலியிலிருந்து தோன்றுகின்ற விண்வெளி இயக்கத்திலிருந்து காலத்தின் தாக்கத்தினால் அடுத்த மாற்றம் ஏற்படுகிறது பின்னர் நுட்பமான மூலப்பொருளான தொடுவுணர்ச்சி, காற்று, மற்றும் தொடு புலன் ஆகியவை வெளிப்படுகின்றன.
பதம் 3.26.36
ம்ருதுத்வம் கடினத்வம் ச சைத்ய முஷ்ணத்வமேவச
ஏதத்ஸ்பர்சஸ்ய ஸ்பர்சத்வம் தந்மாத்ரத்வம் நபஸ்வத:
ம்ருதுத்வம்-மென்மை; கடினத்வம்-கடினத்தன்மை; ச- மற்றும்; சைத்யம்—குளிர்ச்சி; உஷ்ணத்வம்-சூடு; ஏவ—உடன்; ச-மற்றும்; ஏதத்-இந்த; ஸ்பர்சஸ்ய-நுட்பமான மூலப்பொருளாகிய தொடு உணர்ச்சியின்; ஸ்பர்சத்வம்- தனிப்பட்ட இயற்குணங்கள்; தந்மாத்ரத்வம்-நுட்பமான வடிவம்; நபஸ்வத—காற்றின்.
காற்றின் நுட்ப வடிவமாக வர்ணிக்கப்படும் தொடு உணர்ச்சியின் தனிப்பட்ட இயற்குணங்கள்; மென்மை, கடினத்தன்மை, குளிர்ச்சி மற்றும் வெப்பம் ஆகியனவாகும்.
பதம் 3.26.37
சாலனம் வ்யூஹனம் ப்ராப்திர்நேத்ருத்வம் த்ரவ்ய-சப்தயோ:
ஸர்வேந்த்ரியாணாமாத்மத்வம் வாயோ: கர்மாபிலக்ஷணம்
சாலனம்-அசைதல்; வ்யூஹனம்—கலத்தல்; ப்ராப்தி-அணுகுதலை அனுமதித்தல்; நேத்ருத்வம்-சுமத்தல்; த்ரவ்யசப்தயோ-ஒலி மற்றும் பொருள்களின் துகள்கள்; ஸர்வ-இந்திரியாணாம்—அனைத்துப் புலன்களின்; ஆத்மத்வம்-சரியாக வேலை செய்வதற்காக வழங்குதல்; வாயோ-காற்றின்; கர்ம-செயல்களால்; அபிலக்ஷணம்—தனிப்பட்ட குணங்கள்.
காற்றின் செயலானது அசைவுகளிலும், கலத்தலிலும், ஒலி உள்ளிட்ட பிற புலன்கள் உற்று நோக்கும் பொருட்களை அறிந்து கொள்ளுவதிலும் புலன்களும் சரியாக வேலை செய்வதற்கான சூழ்நிலையைத் தருவதிலும் வெளிப்படுகிறது.
பதம் 3.26.38
வாயோஸ்ச ஸ்பர்ச-தந்மாத்ராத்ரூபம் தைவேரிதாதபூத்
ஸமுத்திதம் ததஸ்தேஜஸ்சக்ஷு ரூபோபலம்பனம்
வாயோ-காற்றிலிருந்து; ச-மற்றும்; ஸ்பர்ச தந்மாத்ராத்- நுட்பமான மூலப்பொருளாகிய தொடுவுணர்ச்சியிலிருந்து மலர்வது; ரூபம்-வடிவம்; தைவ ஈரிதாத்-விதியின்படி; அபூத்-மலர்ந்தது; ஸமுத்திதம்-தோன்றி; தத-அதிலிருந்து; தேஜ-தீ; சக்ஷு- பார்வைப்புலன்; ரூப-நிறம் மற்றும் வடிவம்; உபலம்பனம்-உற்று நோக்குதல்.
காற்றின் செயலெதிர்ச் செயல்களால் மற்றும் தொடு உணர்ச்சிகளால், விதியின்படி ஒருவர் வேறுபட்ட வடிவங்களைப் பெறுகிறார். அந்த வடிவங்களின் தோற்றத்தால், தீ ஏற்படுகிறது. வண்ணத்தில் வேறுபட்ட வடிவங்களைக் கண்பார்க்கிறது.
பதம் 3.26.39
த்ரவ்யாக்ருதித்வம் குணதா வ்யக்தி-ஸம்ஸதாதவமேவ ச
தேஜஸ்த்வம் தேஜஸ: ஸாத்விரூப-மாத்ரஸ்ய வ்ருத்தய:
த்ரவ்ய -ஒரு பொருளின்; ஆக்ருதித்வம்-பரப்பு; குணதா- தரம்; வ்யக்தி ஸம்ஸ்தத்வம்-தனித்துவம்; ஏவ-உடன்; ச- மற்றும்; தேஜஸ்த்வம்-ஒளி; தேஜஸ-நெருப்பின்; ஸாத்வி—ஓ நல்லொழுக்கமுடைய நங்கையே; ரூப மாத்ரஸ்ய-நுட்பமான மூலப்பொருள் வடிவத்தின்; வ்ருத்தய-குணங்கள்.
என் அன்பு அன்னையே, எந்தப்பொருளின் வடிவமும் இயல்பும், அதனுடைய பரப்பு, தரம் மற்றும் தனித்துவம் இவற்றால் புரிந்து கொள்ளப்படுகின்றன. நெருப்பின் வடிவம் அதன் ஒளியால் புரிந்து கொள்ளப்படுகிறது.
பதம் 3.26.40
த்யோதனம் பசனம் பானமதனம் ஹிம-மர்தனம்
தேஜஸோ வ்ருத்தயஸ்த்வேதா: சோஷணம் க்ஷுத்ருடேவ ச
த்யோதனம்-அறிவொளி பெறுதல்; பசனம்-சமைத்தல்; ஜீரணித்தல்; பானம்-குடித்தல்; அதனம்-உண்ணுதல்; ஹிமமர்தனம்-குளிர்ச்சியை அழித்தல்; தேஜஸ-தீ; வ்ருத்தய-வேலைகள்; து-உண்மையில்; ஏதோ-இந்த; சோஷணம்-ஆவியாக மாறுதல்; க்ஷுத்—பசி; த்ருத்-தாகம்; ஏவ—உடன்; ச-மற்றும்.
ஒளியினாலும் சமைத்தல், ஜீரணித்தல், குளிர்ச்சியை அழித்தல், ஆவியாக மாற்றுதல் ஆகிய ஆற்றலாலும், பசி, தாகம், உண்ணுதல், குடித்தல் ஆகிய இவற்றிற்கு வழி வகுப்பதாலும் நெருப்பினது ஆற்றல் உணரப்படுகிறது.
பதம் 3.26.41
ரூப-மாத்ராத்விகுர்வாணாதேஜஸோ தைவ-சோதிதாத்
ரஸ-மாத்ரம் பூத்தஸ்மாதம்போ ஜிஹ்வா ரஸ-க்ரஹ:
ரூபமாத்ராத்-நுட்பமான மூலப்பொருளின் வடிவத்திலிருந்து மலர்வது; விகுர்வாணாத்—மாற்றத்தை அனுபவித்தல்; தேஜஸ—நெருப்பிலிருந்து; தைவசோதிதாத்—மேலான ஏற்பாட்டின் கீழ்; ரஸமாத்ரம்- நுட்பமான மூலப்பொருளான சுவை; அபூத்-வெளிப்பட்டு; தஸ்மாத்-அதிலிருந்து; அம்ப-நீர்; ஜிஹ்வா-சுவைப்புலன்; ரஸக்ரஹ-சுவையைக் கூர்ந்து கவனிக்கும்.
நெருப்பு மற்றும் பார்க்கும் உணர்ச்சியின் செயலெதிர்ச் செயலால், நுட்பமான மூலப்பொருளான சுவை தெய்வ அனுகூலத்தால் மலர்கிறது. சுவையிலிருந்து நீர் உருவாக்கப்படுகிறது. சுவையை அறியும் நாக்கும் வெளிப்படுகிறது.
பதம் 3.26.42
கஷாயோ மதுரஸ்திக்த: கட்வம்ல இதி நைகதா
பௌதிகானாம் விகாரேண ரஸ ஏகோ விபித்யதே
கஷாய—துவர்ப்புள்ள; மதுர-இனிப்பு; திக்த-கசப்பு; கடு- காரம்; அம்லா-புளிப்பு; இதி-இவ்வாறு; ந ஏகதா—பல்வேறு; பெளதிகானாம்-பிற பொருள்களின்; விகாரேண- மாற்றத்தால்; ரஸ-நுட்பமான மூலப்பொருளான சுவை; ஏக-உண்மையில் ஒன்று; விபித்யதே-பிரிக்கப்பட்டது.
தொடக்க நிலையில் ஒன்றாக இருந்த போதிலும், சுவையானது பிற பொருள்களின் தொடர்பினால்; துவர்ப்பு, இனிமை, கசப்பு, காரம், புளிப்பு, உப்பு என பல்வேறு வகை ஆகிறது.
பதம் 3.26.43
க்லேதனம் பிண்டனம் த்ருப்தி: ப்ராணனாப்யாயனோந்தனம்
தாபாபனோதோ பூயஸ்த்வமம்பஸோ வ்ருத்தயஸ்த்விமா:
க்லேதனம்-ஈரமாக்குதல்; பிண்டனம்—உறைதல்; த்ருப்தி-திருப்தி தருதல்; ப்ராணனா-வாழ்வைப் பாதுகாத்தல்; ஆப்யாயன-புது வலு உண்டாக்குகிற; உந்தனம்—மென்மையாக்குதல்; தாப-வெப்பம்; அபனோத—துரத்தி; பூயஸ்த்வம்-அதிக அளவில்; அம்பஸ-நீரின்; வ்ருத்தய-குறிப்பிடத்தக்க வேலைகள்; து-உண்மையில்; இமா-இந்த.
பிற பொருட்களை ஈரமாக்கும் அதன் தன்மையில் பல்வேறு கலவைகளை உறையும்படி செய்தலால், திருப்தி தருவதால், வாழ்வைப் பாதுகாத்தலால், பொருட்களை மென்மையாக்குவதால், வெப்பத்தைப் போக்குவதால், நீர்த் தேக்கங்களுக்கு இடைவிடாமல் தன்னை வழங்குவதால், தணிக்க முடியாத தாகத்தைத் தீர்த்துப் புத்துணர்ச்சி தருவதால் நீரின் சிறப்பியல்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
பதம் 3.26.44
ரஸ-மாத்ராத்விகுர்வாணாதம்பஸோ தைவ-சோதிதாத்
கந்த-மாத்ரமபூத்தஸ்மாத்ப்ருத்வீ க்ராணஸ்து கந்தக:
ரஸமாத்ராத்-நுட்பமான மூலப்பொருளான சுவையிலிருந்து மலர்வது; விகுாவாணாத்—மாற்றத்தை அனுபவித்தல்; அம்பஸ-நீரிலிருந்து; தைவசோதிதாத்-மேலான ஏற்பாட்டினால்; கந்தமாத்ரம்-நுட்பமான மூலப்பொருளான நறுமணம்; அபூத்—வெளிப்பட்டது; தஸ்மாத்-அதிலிருந்து; ப்ருத்வீ-பூமி; க்ராண-முகரும் புலன்; து-உண்மையில்; கந்தக-நறுமணத்தை உணரும்.
சுவைப் புலணுர்வுடன் நீரின் கலப்பினால் ஒரு மேலான ஏற்பாட்டின் கீழ் நுட்பமான மூலப் பொருளான நறுமணம் மலர்கிறது. அங்கிருந்து இந்த மண்ணும், நாம் பல்வேறுபட்ட வழிகளில் அனுபவிக்கும் மண்ணின் நறுமணமும் மற்றும் முகரும் புலனும் வெளிப்பட்டன.
பதம் 3.26.45
கரம்ப-பூதி-ஸெரைப்ய சாந்தோக்ராம்லாதிபி: ப்ருதக் த்ரவ்யாவயவவை-ஷம்யாத்கந்த ஏகோ விப்த்யதே
கரம்ப—கலந்து; பூதி-குமட்டுகிற; ஸௌரப்ய-நறுமணம்; சாந்த-மென்மையான; உக்ர-அழுத்தமான, காரமான; அம்ல-அமிலம்; ஆதிபி-முதலானவை; ப்ருதக்—தனியாக; த்ரவ்ய-பொருளின்; அவயவ-பகுதிகளின்; வைஷம்யாத்-மாறுபாட்டின் படி; கந்த-நறுமணம்; ஏக-ஒன்று; விபித்யதே-பிரிக்கப்பட்டது.
மணம், ஒன்றானாலும் தொடர்புடைய பொருட்களின் பகுதிகளின் படி, கலவையாக, குமட்டுவதாக, நறுமணமாக, மென்மையானதாக, காரமாக, அமிலத்தன்மை உடையதாக என்று பல்வேறு வகை ஆகின்றது.
பதம் 3.26.46
பாவனம் ப்ரஹ்மண ஸ்தானம் தாரணம் ஸத்-விசேஷணம்
ஸர்வ-ஸத்வ – குணோத்பேத ப்ருதி-வீவ்ருத்தி-லக்ஷணம்
பாவனம்-மாதிரி வடிவங்கள்; ப்ரஹ்மண-பரம பிரம்மனின் ஸ்தானம், தங்குவதற்குக் கட்டப்படும் இடங்கள்; தாரணம்-பொருட்களை உள்ளடக்கியது; ஸத்விசேஷணம்-திறந்த வெளியை வேறுபடுத்திக் காட்டுதல்; ஸர்வ-எல்லார்; ஸத்வ-இருப்பின்; குண- குணங்கள்; உத்பேத-வெளிப்பாட்டிற்கான இடம்; ப்ருத்வீ – பூமியின்; வ்ருத்தி-வேலைகளின்; லக்ஷணம்-சிறப்புப் பண்புகள்.
பூமியின் வேலைகளின் சிறப்புக் குணங்கள், மேலான பிரம்மனின் மாதிரி வடிவங்களின் மூலமும், தங்குவதற்கு இல்லங்களைக் கட்டுவதன் மூலமும், தண்ணீரை வைப்பதற்குப் பானைகளைத் தயாரிப்பதன் மூலமும் உணரப்படுகின்றன. பிறிதோர் வகையால், பூமி எல்லா மூலப்பொருட்களுக்கான ஆதாரத்தின் இருப்பிடமாகும்.
பதம் 3.26.47
நபோ-குண-விசேஷோர்த்தோ யஸ்ய தச்ச்ரோத்ர முச்யதே
வாயோர்-குண-விசேஷார்த்தோ யஸ்ய தத்ஸ்பர்சனம் விது:
நப குண விசேஷ-வானின்(ஒலி) குறிப்பிடத்தகுந்த தனிச் சிறப்புக் குணம்; அர்த்த-புலனுணர்வின் பொருள்; யஸ்ய-எவருடைய; தத்-அந்த; ஸ்ரோத்ரம்-கேட்கும்புலன்; உச்யதே-அழைக்கப்படும்; வாயோ குண விசேஷ-காற்றின் (தொடுதல்) குறிப்பிடத்தகுந்த தனிச் சிறப்புக் குணம்; அர்த்த—புலலுணர்வின் பொருள்; யஸ்ய-எவருடைய; தத்-அந்த; ஸ்பர்சனம்—தொட்டு அறியக்கூடிய; விது:-அவர்கள் அறிவர்.
ஒலியாக நாம் உணரும் உணர்வு செவிப் புலன் என்று அழைக்கப்படுகிறது. தொட்டு நாம் உணரும் புலன் அறிவு தொடுபுலன் என்று அழைக்கப்படுகிறது.
பதம் 3.26.48
தேஜோ-குண-விசேஷோர்த்தோ யஸ்ய தச்சக்ஷுருச்யதே
அம்போ-குண-விசேஷோர்த்தோ யஸ்ய தத்ரஸனம் விது:
பூமேர்குண-விசேஷோர்த்தோ யஸ்ய ஸ க்ராண உச்யதே
தேஜ குண விசேஷ-நெருப்பின் (வடிவம்) குறிப்பிடத்தக்க சிறப்புக் குணம்; அர்த்த-புலணுணர்வின் பொருள்; யஸ்ய-யாருடைய; சக்ஷு-பார்வைப்புலன்; உச்யதே-அழைக்கப்படுகிறது; அம்ப குண விசேஷ-தண்ணீரின் (சுவை) குறிப்பிடத்தக்க சிறப்புக் குணம்; அர்த்த— புலனுணர்வின் பொருள்; யஸ்ய-யாருடைய; தத்-அந்த; ரஸனம்-சுவைப் புலன்; விது—அவை அறியும்; பூமே குண விசேஷ-பூமியின் (மணம்) குறிப்பிடத்தக்க சிறப்புக் குணம்; அர்த்த—புலனுணர்வின் பொருள்; யஸ்ய-யாருடைய; ய-அந்த; க்ராண-முகரும்புலன்; உச்யதே—அழைக்கப்படுகிறது.
நாம் அறிகின்ற பொருளாக இருக்கும் நெருப்பின் குறிப்பிடத்தகுந்த சிறப்புக் குணம் பார்வைக்குரிய புலனாகும். நாம் ருசித்துப்பார்க்கும் பொருளான சுவையோ, தண்ணீரின் குறிப்பிடத் தகுந்த சிறப்புக் குணமாகிய, சுவைப் புலனாகும். இறுதியாக, பூமியின் குறிப்பிடத்தகுந்த சிறப்புக் குணமாகிய நறுமணமோ அது முகரும் புலன் என்று அழைக்கப்படுகிறது.
பதம் 3.26.49
பரஸ்ய த்ருஷ்யதே தர்மோ ஹ்யபரஸ்மின்ஸமந்வயாத்
அதோ விசேஷோ பாவானாம் பூமாவேவோபலக்ஷ்யதே
பரஸ்ய-காரணத்தின்; த்ருஷ்யதே-உற்று நோக்கப்படுகின்றது; தர்ம-குணங்கள்; ஹி-உண்மையில்; அபரஸ்மின்—விளைவில்; ஸமந்வயாத்-முறையில்; அத-பின்னர்; விசேஷ-குறிப்பிடத்தக்க சிறப்புக் குணம்; பாவானாம்—எல்லா மூலப்பொருட்களின்; பூமௌ- பூமியில்; ஏவ-மட்டும்; உபலக்ஷ்யதே-உற்று நோக்கப்படுகிறது.
காரணம் அதன் விளைவிலும் இருப்பதால், முந்தையதன் சிறப்புக் குணங்கள் பிந்தையதில் உற்று நோக்கப்படுகின்றன. அதனால் எல்லா மூலப் பொருட்களின் தனித்தன்மைகள் இம்மண்ணுலகில் மட்டும் இருக்கின்றன.
பதம் 3.26.50
ஏதாந்யஸம்ஹத்ய யதா மஹதா-தீனி ஸப்தவை
கால-கர்ம-குணோபேதோ ஜகதா-திரூபாவிசத்
ஏதானி-இந்த; அஸம்ஹத்ய-கலக்கப்படாத; யதா- எப்பொழுது; மஹத் ஆதீனி-மஹத் தத்துவம், போலி ஆளுமை மற்றும் 5 முழு மூலப்பொருட்கள்; ஸப்த-மொத்தமாக ஏழு; வை-உண்மையில்; கால-நேரம்; கர்ம- வேலை; குண-ஜட இயற்கையின் மூன்று குணங்கள்; உபேத-தொடரப்பட்டு; ஜகத் ஆதி-படைப்பின் மூலம்; உபாவிசத்-நுழைந்து.
இந்த எல்லா மூலப்பொருட்களும் கலக்கப்படாத பொழுது,
படைப்புக்கு மூலகாரணமாகிய பரமபுருஷ பகவான். நேரம், வேலை, மற்றும் மண்ணுலகத்தன்மைகளுடன் ஏழு பிரிவுகளைக்கொண்ட ஜட சக்தியுடன் அண்டத்தினுள் நுழைந்தார்.
பதம் 3.26.51
ததத்தேனானுவித்தேப்யோ யுக்தேப்யோண்டமசேதனம்
உத்திதம் புருஷோ யஸ்மாதுததிஷ்டதஸௌ விராட்
தத—பின்னர்; தேன-பகவானால்; அனுவித்தேப்ய—இந்த ஏழு தத்துவங்களிலிருந்து செயலில் எழுந்து; யுக்தேப்ய—இணைந்து; அண்டம்—ஒரு முட்டை (கரு); அசேதனம்—அறிவுக்கூர்மை இல்லாத; உத்திதம்-எழுந்து; புருஷ-இயலுலக உயிரினம்; யஸ்மாத்-அதிலிருந்து; உத்திஷ்டத-தோன்றி; அஸௌ—அந்த; விராட்-புகழ்பெற்ற.
செயல்புரியத் தூண்டப்பெற்று பகவானின் முன்னிலையில் இணைந்ததுமான, ஏழு தத்துவங்களிலிருந்து இனம் புரியாத ஒரு கரு உருவானது. அதிலிருந்து புகழ்வாய்ந்த பரஉலக உயிரினம் தோன்றியது.
பதம் 3.26.52
ஏததண்டம் விசேஷாக்யம் க்ரம-கூருத்தைர்தசோத்தரை:
தோயாதிபி: பரிவ்ருதம் ப்ரானேனாவ்ருதைர்பஹி:
யத்ர – லோகவிதானோயம் ரூபம் பகவதோ ஹரே:
ஏதத்—இந்த; அண்டம்-முட்டை; விசேஷாக்யம்-விசேஷ எனப்படும்; க்ரம—ஒன்றன் பின் ஒன்றாக; வ்ருத்தை—அதிகரித்து; தச-பத்து முறை; உத்தரை-சிறந்தது; தோய ஆதிபி—நீர் முதலியவற்றால்; பரிவ்ருதம்—மூடப்பட்டு; ப்ரதானேன—ப்ரானத்தால்; ஆவ்ருதை-மூடப்பட்டு; பஹி-வெளியில்; யத்ர-எங்கு; லோக விதான-சூரிய மண்டலங்களின் விரிவு; அயம்-இந்த; ரூபம்-வடிவம்; பகவத-பரமபுருஷ பகவானின்; ஹரே-பகவான் ஹரி.
இந்த உலகளாவிய முட்டை அல்லது ஒரு முட்டையின் வடிவில் உள்ள அண்டம் திட சக்தியின் வெளிப்பாடு என்று அழைக்கப்படுகிறது. நீர், காற்று, தீ, வான் ஆளுமை மற்றும் மஹத்தத்வம் ஆகிய இவற்றின் அடுக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக பருமனில் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு அடுக்கும் முந்தையதை விடப் பத்து மடங்கு பெரிது. இறுதியான வெளிப்புற அடுக்கு பிரதானத்தால் மூடப்பட்டிருக்கிறது. இந்த முட்டைக்குள் பகவான் ஹரியின் உலகளாவிய வடிவம் உள்ளது. அவருடைய உடலில் பதினான்கு கதிரவன் மண்டலங்களும் அங்கங்களாகும்.
பதம் 3.26.53
ஹிரண்மயாதண்ட -கோசா கோசாதுத்தாய ஸலிலேசயாத்
தமாவிச்ய மஹா-தேவோ பஹுதா நிர்பிபேத கம்
ஹிரண்மயாத்—பொன்மயமான; அண்ட-கோசாத்-முட்டையில் இருந்து; உத்தாய—தோன்றுதல்; ஸலிலே-நீரின் மேல்; சயாத்-படுத்திருத்தல்; தம்-அதில்; ஆவிச்ய-நுழைந்து; மஹா-தேவ-பரமபுருஷ பகவான்; பஹுதா—பல வழிகளில்; நிர்பிபேத-பிரிக்கப்பட்டு; கம்–இடைவெளிகள்.
பரமபுருஷ பகவான், விராட்புருஷர் நீரில் மிதந்து கொண்டிருந்த, அந்தப் பொன்மயமான முட்டையில் தன்னை இருத்திக் கொண்டு, அதைப் பல துறைகளாகப் பிரித்தார்.
பதம் 3.26.54
நிரபித்யதாஸ்ய ப்ரதமம் முகம் வாணீ ததோபவத்
வாண்யா வஹ்னிரதோ நாஸே ப்ராணோதோ க்ராணஏதேயோ:
நிரபித்யத-தோன்றி; அஸ்ய-அவரின்; ப்ரதமம்-முதலில்; முகம்-வாய்; வாணீ-பேசும் பொறி; தத—பின்னர்; அபவத்—வந்தது; வாண்யா-பேசும் பொறியுடன்; வஹ்னி-தீக்கடவுள்; அத—பிறகு; நாஸே-மூக்குத் துளைகள்; ப்ராண—உயிர்நிலைக் காற்று; உத-சேர்ந்து; க்ராண-முகரும் பொறி; ஏதயோ—அவற்றில்.
முதலில் அவரிடம் வாய் தோன்றியது, பின்னர் பேசும் பொறி வந்தது, அதனுடன் அந்தப் பொறியைத் தலைமை தாங்கும் தெய்வமான தீக்கடவுள் வந்தார். பின்னர் ஒரு ஜோடி மூக்குத் துளைகள் தோன்றின. அவற்றில் முகரும் பொறியும், பிராணனாகிய உயிர் நிலைக் காற்றும் தோன்றின.
பதம் 3.26.55
க்ராணாத்வாயுரபித்யேதாமக்ஷிணீ சக்ஷு ரேதயோ:
தஸ்மாத்ஸுர்யோ ந்யபித்யேதாம் கர்ணௌ ஸ்ரோத்ரம் ததோ திச:
க்ராணாத்—முகரும் பொறியிலிருந்து; வாயு-காற்றுக் கடவுள்; அபித்யேதாம்-தோன்றி; அக்ஷிணீ- இரண்டு கண்கள்; சக்ஷு-பார்வைப்புலன்; ஏதயோ—அவற்றில்; தஸ்மாத்—அதிலிருந்து; ஸுர்ய-சூரியக் கடவுள்; ந்யபித்யேதாம்-தோன்றி; கர்ணௌ-இரண்டு காதுகள்; ஸ்ரோத்ரம்-கேட்கும் புலன்; தத—அதிலிருந்து; திச- திசைகளுக்குத் தலைமை தாங்கும் தெய்வங்கள்.
முகரும் பொறியைப் பின் தொடர்ந்து, அதைத் தலைமை தாங்கும் வாயுக் கடவுள் வந்தார். பின்னர் உலகளாவிய வடிவத்தில் ஒரு ஜோடிக் கண்கள் தோன்றின, அவற்றில் பார்வைப்புலன் வந்தது. இந்தப் புலனைத் தொடர்ந்து அதைத் தலைமை தாங்கும் சூரியக் கடவுள் தோன்றினார். அடுத்து அங்கு அவரிடம் ஒரு ஜோடிக் காதுகள் தோன்றின. அவற்றில் கேட்கும் புலனும், அதைத் தொடர்ந்து, திசைத் தேவதைகள் அல்லது திசைகளுக்குத் தலைமை தாங்கும் தெய்வங்கள் தோன்றினார்.
பதம் 3.26.56
நிர்பிபேத விராஜஸ்த்வக்- ரோமச்-மஸ்ரவாதயஸ்தத
தத ஓஷதயஸ்சாஸன் சிஸ்னம் நிர்பிபிதே தத:
நிர்பிபேத-தோன்றி; விராஜ-உலகளாவிய வடித்தின்; த்வக்-தோல்; ரோம-ரோமம்; ச்மஸ்ரு-தாடி, மீசை; ஆதய-முதலியன; தத-பின்னர்; தத-பின்னர்; ஓஷதிய-மூலிகைகளும் மருந்துகளும்; ச-மற்றும்; ஆஸன்-தோன்றின; சிஸ்னம்-பிறப்புறுப்புகள்; நிர்பிபேதே-தோன்றின; தத—இதன் பின்னர்.
பின்னர் பகவானின் உலகளாவிய வடிவம், விராட்புருஷர், அவர் தோலை வெளிப்படுத்தினார், பின்னர் ரோமம், மீசை, தாடி தோன்றின. இதன் பின்னர் மூலிகைகளும் மருந்துகளும் வெளிப்பட்டன. பின்னர் அவருடைய பிறப்புறுப்புகளும் தோன்றின.
பதம் 3.26.57
ரேதஸ்தஸ்மாதாப ஆஸந்நிரபித்யத வை குதம்
குதாதபானோபானாச்ச ம்ருத்யுர்லோகபயங்கர:
ரேத-விந்து; தஸ்மாத்—அதிலிருந்து; ஆப-நீருக்குத்தலைமையான கடவுள்; ஆஸன்-தோன்றினார்; நிரபித்யத—வெளிப்படுத்தப்பட்டு; வை-உண்மையில்; குதம்-குதம்; குதாத்-மலம் கழியும் வாயிலிருந்து; அபான—தூய்மைப்படுத்தும் பொறி; அபானாத்-தூய்மைப்டுத்தும் பொறியில் இருந்து; ச-மற்றும்; ம்ருத்யு-மரணம்; லோக-பயம்-கர—அண்டம் முழுவதிலும் பயத்தைத் தோற்றுவிக்கும்.
இதன் பின்னர், விந்துவும் (இனப்பெருக்கத்தின் வினைத்திறம்) நீருக்கு அதிபதியான கடவுளும் தோன்றினர். அடுத்து மலம் கழியும் வாய் தோன்றியது. பின்னர் தூய்மைப்படுத்தும் பொறிகளும், அதன் பின்னர் அண்டம் முழுதையும் அச்சப்படுத்தும் மரண தேவதையும் தோன்றினர்.
பதம் 3.26.58
ஹஸ்தௌ ச நிரபித்யேதாம் பலம் தாப்யாம் தத ஸ்வராட்
பாதௌ ச நிரபித்யேதாம் கதிஸ்தாப்யாம் ததோ ஹரி
ஹஸ்தௌ—இரண்டு கைகள்; ச-மற்றும்; நிரபித்யேதாம்- வெளிப்படுத்தப்பட்டன; பலம்-சக்தி; தாப்யாம்-அவற்றில் இருந்து; தத—பின்னர்; ஸ்வராட்—பகவான் இந்திரன்; பாதௌ—இரு பாதங்கள்; ச-மற்றும்; நிரபித்யேதாம்—வெளிப்பட்டன; கதி—அசைவின் முறை; தாப்யாம்—அவற்றிலிருந்து; தத—பின்னர்; ஹரி—பகவான் விஷ்ணு.
அதன் பின்னர் பகவானின், உலகளாவிய வடிவம் கொண்ட பகவானின், இரு கரங்கள் வெளிப்பட்டன, அவற்றுடன் பிடித்துக் கொள்ளும் ஆற்றலும், பொருட்களைக் கீழே போடும் சக்தியும் தோன்றின. பின்னர் பகவான் இந்திரன் தோன்றினார். அடுத்து கால்கள் வெளிப்பட்டன. அவற்றுடன் அசைவு முறையும் வெளிப்பட்டது. பின்னர் பகவான் விஷ்ணு தோன்றினார்.
பதம் 3.26.59
நாட்யோஸ்ய நிரபித்யந்த தாப்யோ லோஹிதமாம் அப்ருதம்
நத்யஸ்தத: ஸமபவந்னுதரம் நிரபித்யத
நாட்ய-குருதி நாளங்கள்; அஸ்ய-உலகளாவிய வடிவத்தின்; நிரபித்யந்தாம்—வெளிப்பட்டன; தாப்ய-அவற்றிலிருந்து; லோஹிதம்-குருதி; ஆப்ருதம்- உருவாக்கப்பட்டது; நத்ய-நதிகள்; தத-அதிலிருந்து; ஸமபவந்-தோன்றின; உதரம்-வயிறு; நிரபித்யத- வெளிப்பட்டது.
உலகளாவிய வடிவத்தின் இரத்த நாளங்கள் வெளிப்பட்டன, அதன் பின்னர் சிவப்பு ரத்த அணுக்கள் அல்லது குருதி வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து நதிகளும் (இரத்த நாளங்களுக்கு அதிபதிகளான தேவதைகள்), பின்னர் ஒரு வயிறும் தோன்றின.
பதம் 3.26.60
க்ஷுத்-பிபாஸே தத ஸ்யாதாம் ஸமுத்ரஸ்த்வேதயோரபூத்
அதாஸ்ய ஹ்ருதயம் பிந்தம் ஹ்ருதயாந்மன உத்திதம்
க்ஷுத்-பிபாஸே-பசியும் தாகமும்; தத-பின்னர்; ஸ்யாதாம்-தோன்றின; ஸமுத்ர-ஸமுத்திரம்; து-பின்னர்; ஏதயோ—அவற்றைத் தொடர்ந்து; அபூத்—தோன்றின; அத—பின்னர்; அஸ்ய—உலகளாவிய வடிவத்தின்; ஹ்ருதயம்—இதயம்; பிந்தம்—தோன்றியது; ஹ்ருதயாத்— இதயத்திலிருந்து; மன—மனம்; உத்திதம்—தோன்றியது.
அடுத்து, பசி மற்றும் தாகம் ஆகிய உணர்ச்சிகள் வளர்ந்தன. அதைத் தொடர்ந்து சமுத்திரங்களின் வெளிப்பாடு ஏற்பட்டது. பின்னர் இதயம் வெளிப்பட்டது. இதயத்தைத் தொடர்ந்து மனம் தோன்றியது.
பதம் 3.26.61
மனஸஸ்சந்த்ரமா ஜாதோ புத்திர்புத்தேர் கிராம் பதி அஹங்காரஸ்ததோ ருத்ரஸ்சித்தம் சைத்யஸ்ததோ பவத்
மனஸ-மனத்திலிருந்து; சந்த்ரமா-நிலவு; ஜாத-தோன்றியது; புத்தி-புத்திக்கூர்மை; புத்தே-புத்தியிலிருந்து; கிராம்பதி—பேச்சுக்கு அதிபதி (பிரம்மா); அஹங்கார—போலி ஆளுமை; தத-பின்னர்; ருத்ர—சிவ பெருமான்; சித்தம்-உணர்வுநிலை; சைத்ய-உணர்வு நிலைக்கு அதிபதியான கடவுள்; தத—பின்னர்; அபவத்—தோன்றினார்.
மனத்திற்குப் பின்னர், நிலவு தோன்றியது. அடுத்து அறிவுக் கூர்மை தோன்றியது. அறிவுக்குக் கூர்மைக்குப் பின்னர், பகவான் பிரம்மா தோன்றினார். பின்னர் போலி ஆளுமையும், பின்னர் சிவபெருமானும் தோன்றினர். சிவபிரானின் தோற்றத்திற்குப் பிறகு உணர்வு நிலையும், உணர்வு நிலைக்கு அதிபதியான கடவுளும் வந்தனர்.
பதம் 3.26.62
ஏதே ஹ்யப்யுத்திதா தேவா நைவாஸ்யோத்தாபனேசகன்
புனராவிவிசு: கானி தமீத்தாபயிதும் க்ரமாத்
ஏதே-இந்த; ஹி-உண்மையில்; அப்யுத்தித—வெளிப்படுத்தப்பட்டது; தேவா-தேவர்கள்; ந-இல்லை; ஏவ- எல்லாவற்றில், அஸ்ய-விராட் புருஷனின்; உத்தாபனே-எழுப்புவதில்; அசகன்-முடிந்தது; புன-மீண்டும்; ஆவிவிசு:-அவர்கள் நுழைந்தனர்; கானி-உடலின் துறைகள்; தம்—அவரை; உத்தாபயிதும் எழுப்புவதற்கு; க்ரமாத்-ஒருவர் பின் ஒருவராக.
தேவர்களும், பல்வேறு புலன்களுக்கு அதிபதிகளான தெய்வங்களும் இவ்வாறு வெளிப்பட்ட பொழுது, அவர்கள் தங்கள் தோற்றத்தின் மூலத்தை எழுப்ப விரும்பினார். ஆனால் அதைச் செய்வதில் தவறியதால், அவரை எழுப்புவதற்காக ஒருவர் பின் ஒருவராக விராட் புருஷரின் உடலில் அவர்கள் மீண்டும் நுழைந்தனர். உள்ளே தூங்குகின்ற தெய்வத்தைக் கட்டுப்படுத்துபவரை எழுப்புவதற்காக, ஒருவர் வெளியே உள்ள கவனத்திலிருந்து உள்ளே உள்ள கவனத்திற்கு, புலனின் செயல்களை மீண்டும் செலுத்த வேண்டும். பின்வரும் பதங்களில், விராட் புருஷரை எழுப்புவதற்குத் தேவையான புலன்களின் செயல்பாடுகள் அழகாக விளக்கப்படும்.
பதம் 3.26.63
வஹ்னிர்வாசா முகம் பேஜே நோததிஷ்டத்ததா விராட்
க்ராணேன நாஸிகே வாயுர்நோத திஷ்டத்ததா விராட்
வஹ்னி—அக்னிக் கடவுள்; வாசா-பேச்சுப் பொறியுடன்; முகம்—வாய்; பேஜே-நுழைந்து; ந-இல்லை; உததிஷ்டத்-தோன்றியது; ததா—பின்னர்; விராட்-விராட் புருஷர்; க்ராணேன-முகரும் பொறியுடன்; நாஸிகே—அவருடைய இரு மூக்குத் துளைகளில்; வாயு—காற்றுக்கடவுள்; ந—இல்லை; உததிஷ்டத்—தோன்றியது; ததா—பிறகு; விராட்—விராட் புருஷர்.
அக்னிக் கடவுள் பேச்சுப்பொறியுடன் அவர் வாயில் நுழைந்தார். ஆனால் விராட் புருஷரை எழுப்ப முடியவில்லை. பின்னர் வாயு பகவான் வாசனைப் புலனுடன் அவருடைய மூக்குத் துளைகளில் நுழைந்தார். ஆனால் இன்னும் விராட்புருஷர் தூக்கத்திலிருந்து கண் விழிக்கவில்லை.
பதம் 3.26.64
அக்ஷிணீ சக்ஷுஷாதித்யோ நோததிஷ்டத்ததா விராட்
ஸ்ரோத்ரேண கர்ணௌ ச திசோ நோததிஷ்டத்தா விராட்
அக்ஷிணீ—அவர் இரு கண்கள்; சக்ஷுஷா—பார்வைப் புலனுடன்; ஆதித்ய-கதிரவன்; ந-இல்லை; உததிஷ்டத்-தோன்றியது; ததா-பின்னர்; விராட்—விராட்புருஷர்; ஸ்ரோத்ரேண-கேட்கும் புலனுடன்; கர்ணௌ—அவருடைய இரு காதுகள்; ச-மற்றும்; திச-திசைகளுக்கு அதிபதிகளான தெய்வங்கள்; ந—இல்லை; உததிஷ்டத்—தோன்றியது; ததா-பின்னர்; விராட்-விராட் புருஷர்.
கதிரவன் தனது பார்க்கும் புலனுடன் விராட்புருஷரின் கண்களில் நுழைந்தார். ஆனால் அப்போதும் விராட் புருஷர் எழவில்லை. அதுபோல, கேட்கும் புலனுடன் திசைகளின் அதிபதிகளான தெய்வங்கள் அவர் காதுகள் வழியாக நுழைந்தனர், ஆயினும் அவர் எழுந்திருக்கவில்லை.
பதம் 3.26.65
த்வசம் ரோமபிரோஷத்யோ நோததிஷ்டத்ததாவிராட்
ரேதஸா சிஸ்னமாபஸ்து நோததிஷ்டத்ததா விராட்
த்வசம்—விராட் புருஷரின் தோல்; ரோம-உடலின் முடியுடன்; ஒஷத்ய—மூலிகைகள் தாவரங்களுக்கு அதிபதிகளான தெய்வங்கள்; ந-இல்லை; உததிஷ்டத்—தோன்றியது; ததா-பின்னர்; விராட்-விராட் புருஷர்; ரேதஸா—இனப்பெருக்கத்திற்கான வினைத் திறத்துடன்; சிஸ்னம்-பிறப்புறுப்பு; ஆப-தண்ணீர்க்கடவுள்; து-பின்னர்; ந-இல்லை; உததிஷ்டத்—தோன்றியது; ததா—பின்னர்; விராட்—விராட்புருஷர்.
தோல், மூலிகைகள், பருவகாலத் தாவரங்கள் ஆகியவற்றுக்கு உரிய தெய்வங்கள் விராட் புருஷரின் உடல் மீதிருந்த முடிவழியாகத் தோலில் நுழைந்தார்கள். ஆனால் அத்தெய்வீக உயிர் அப்போதும் கூட எழுந்திருக்க மறுத்தது. நீருக்கு அதிபதியான கடவுள் இனப் பெருக்கத்திற்கு ஆன வினைத் திறத்துடன் அவருடைய பிறப்புறுப்பில் நுழைந்தார். ஆயினும் விராட் புருஷர் அப்போதும் எழுந்திருக்கவில்லை.
பதம் 3.26.66
குதம் ம்ருத்யுரபானேன நோததிஷ்டத்ததா விராட்
ஹஸ்தாவிந்த்ரோ பலேளைவ நோததிஷ்டத்ததா விராட்
குதம்—அவர் மலம் கழியும் வாய்; ம்ருத்யு-மரணதேவன்; அபானேன—தூய்மைப்படுத்தும் பொறியுடன்; ந-இல்லை; உததிஷ்டத்—தோன்றினார்; ததா—பின்னரும்; விராட்—விராட்புருஷர்; ஹஸ்தௌ-இரு கரங்கள்; இந்த்ர-பகவான் இந்திரன்; பலேன-பொருட்களை கிரஹித்துக் கொள்ளும் மற்றும் கீழே போடும் ஆற்றலுடன்; ஏவ-உண்மையில்; ந-இல்லை; உததிஷ்டத்-தோன்றினார்; ததா-பின்னரும்; விராட்-விராட்புருஷர்.
மரணதேவன் தூய்மைப்படுத்தும் பொறியுடன் அவருடைய குதத்தில் நுழைந்தார், ஆனால் விராட் புருஷரை, செயல்படும்படி தூண்ட இயலவில்லை. பொருட்களைப் பற்றிக் கொள்வதும் கீழே போடும் ஆற்றலும் கொண்ட கைகளின் வழியாக இந்திர பகவான் நுழைந்தார். ஆனால் அதன் பின்னரும் விராட்புருஷர் எழுந்திருக்கவில்லை.
பதம் 3.26.67
விஷ்ணுர்கத்யைவ சரணௌ நோததிஷ்டத்ததா விராட்
நாடீர்நத்யோ லோஹிதேன நோததிஷ்டத்ததா விராட்
விஷ்ணு-பகவான் விஷ்ணு; கத்யா—பயணம் செய்யும் வினைத்திறத்துடன்; ஏவ-உண்மையில்; சரணௌ—அவருடைய இரு பாதங்கள்; ந—இல்லை; உததிஷ்டத்-தோன்றினார்; ததா-பின்னரும்; விராட்-விராட்புருஷர்; நாடீ-அவர் இரத்த நாளங்கள்; நத்ய—நதிகள் அல்லது நதி தேவதைகள்; லோஹிதேன-குருதியுடன்; சுழற்சியின் ஆற்றலுடன்; ந—இல்லை; உததிஷ்டத்— கலக்கினார்; ததா—பின்னரும்; விராட்-விராட்புருஷர்.
பகவான் விஷ்ணு அசைந்து இயங்கும் ஆற்றலுடன் அவருடைய பாதங்களில் நுழைந்தார். ஆனால் விராட் புருஷர் பின்னரும் எழுந்து நிற்கு மறுத்தார். நதிகள் அவருடைய இரத்த நாளங்களில் குருதியுடனும், சுழற்சியின் ஆற்றலுடனும் நுழைந்தன, ஆனால் அந்தத் தெய்வீக உயிரினை அசைக்க இயலவில்லை.
பதம் 3.26.68
க்ஷுத்த்ருட்ப்யாமுதரம் ஸிந்துர்நோததிஷ்டத்ததா விராட்
ஹ்ருதயம் மனஸா சந்த்ரோ நோததிஷ்டத்ததா விராட்
க்ஷுத்தருட்ப்யாம்—பசி, தாகமுடன்; உதரம்-அவருடைய வயிறு; ஸிந்து-கடல் அல்லது கடல் கடவுள்; ந-இல்லை; உததிஷ்டத்-தோன்றினார்; ததா-பின்னரும்; விராட்—விராட் புருஷர்; ஹ்ருதயம்-அவர் இதயம்; மனஸா-மனத்துடன்; சந்த்ர-பகவான் சந்திரன்; ந-இல்லை; உததிஷ்டத்—தோன்றினார்; ததா-பின்னரும்; விராட்-விராட்புருஷர்.
பசியுடனும் தாகமுடனும் அலைகடல் அவர் வயிற்றில் நுழைந்தது. ஆனால் தெய்வீக உயிரோ பின்னரும் எழ மறுத்தது. சந்திர பகவான் மனத்துடன் அவர் இதயத்தில் நுழைந்தார். ஆனால் அந்தத் தெய்விக உயிர் எழுந்திருக்கவில்லை.
பதம் 3.26.69
புத்த்யா ப்ரஹ்மாபி ஹ்ருதயம் நோததிஷ்டத்ததா விராட் ருத்ரோபிமத்யா ஹ்ருதயம் நோததிஷ்டத்ததா விராட்
புத்த்யா—அறிவுக்கூர்மையுடன்; ப்ரஹ்மா—பகவான் பிரம்மா; அபி—உடன்; ஹ்ருதயம்—அவர் இதயம்; ந-இல்லை; உததிஷ்டத்-தோன்றினார்; ததா-பின்னரும்; விராட்-விராட் புருஷர்; ருத்ர:-சிவபிரான்; அபிமத்யா—ஆளுமையுடன்; ஹ்ருதயம்—அவர் இதயம்; ந-இல்லை; உததிஷ்டத்—தோன்றினார்; ததா-பின்னரும்; விராட்-விராட்புருஷர்.
பிரம்மனும் அறிவுக்கூர்மையுடன் அவர் இதயத்தில் நுழைந்தார். ஆனால் பின்னரும் அந்த விராட பகவானை எழும்பச் செய்வதில் வெல்ல முடியவில்லை. சிவபெருமானும் ஆளுமையுடன் அவர் மனத்தில் நுழைந்தார். ஆனால் பின்னரும் அந்தத் தெய்வீகம் அசையவில்லை.
பதம் 3.26.70
சித்தேன ஹ்ருதயம் சைத்ய: க்ஷேத்ரக்ஞ: ப்ராவிசத்யதா
விராட் ததைவ புருஷ: ஸலிலாதுததிஷ்டத
சித்தேன-காரணம், உணர்வு நிலையுடன்; ஹ்ருதயம்- மனம்; சைத்ய:-உணர்வு நிலைக்கு அதிபதியான தேவதை; க்ஷேத்ரக்ஞ:-இடத்தை அறிந்தவர்; ப்ராவிசத்-நுழைந்தார்; யதா—எப்பொழுது; விராட்—விராட்புருஷர்; ததா-பின்; ஏவ-அப்படியே ; புருஷ:-இயலுலக உயிரினம்; ஸலிலாத்—நீரிலிருந்து; உததிஷ்டத-எழுந்தது.
ஆயினும் உள்ளத்தைக் கட்டுப்படுத்துபவரும், உணர்வுக்கு அதிபதியுமான தேவதை, விராட பகவானின் மனத்தில் நுழைந்த அதே நேரத்தில் அத்தெய்வீகஉயிர் விளைவை உண்டாக்கும் நீரிலிருந்து எழுந்தார்.
பதம் 3.26.71
யதா ப்ரசுப்தம் புருஷம் ப்ராணேந்த்ரிய-மனோ-திய:
ப்ரபவந்தி வினா யேன நோத்தாபயிதுமோஜஸா
யதா—அதுபோல; ப்ரஸுப்தம்— உறங்குதல்; புருஷம்-ஆண்; ப்ராண-உயிர்க் காற்று; இந்த்ரிய-வேலை செய்வதற்கான மற்றும் அறிவைப் பதிவு செய்வதற்கான புலன்கள்; மன:-மனம்; திய:-அறிவுக்கூர்மை; ப்ரபவந்தி—முடிந்த; வினா—இல்லாமல்; யேன-யாருடைய (பரமாத்மா); ந—இல்லை; உத்தாபயிதும்-எழுப்புவதற்கு; ஒஜஸா—அவர்கள் சொந்த ஆற்றலால்.
ஒரு மனிதன் உறங்கும் பொழுது, அவனுடைய இயல்பான உடைமைகளாகிய உயிர்ச்சக்தி, அறிவைப் பதிவு செய்வதற்கான புலன்கள், வேலை செய்வதற்கான புலன்கள், மனம் மற்றும் அறிவுக் கூர்மை முதலியவற்றால் அவனை எழுப்ப முடியாது. பரமாத்மா அவனுக்கு உதவி செய்தால் மட்டுமே அவனை எழுப்ப முடியும்.
பதம் 3.26.72
தமஸ்மின் ப்ரத்யகாத்மானம் தியா யோக-ர்வ்ருத்தயா பக்த்யாவிரக்த்யாக்ஞானேன விவிச்யாத்மனி சிந்தயேத்
தம்—அவர் மீது; அஸ்மின்—இதில்; ப்ரத்யக் ஆத்மானம்—மேன்மை தாங்கிய பரமாத்மா; தியா—மனத்துடன்; யோக ப்ரவ்ருத்தயா—பக்தித் தொண்டில் ஈடுபட்டு; பக்த்யா—பக்திமூலம்; விரக்த்யா—பற்றின்மை மூலம்; க்ஞானேன—அகநிலை அறிவுமூலம்; விவிச்ய—கவனமாகக் கருதி; ஆத்மனி—உடலில்; சிந்தயேத்—ஒருவர் நினைக்க வேண்டும்.
அதனால், பக்தி, பற்றின்மை மற்றும் ஆன்மீக அறிவு முன்னேற்றம் இவற்றின் மூலம் பரமாத்மா இந்த உடலில் இருப்பது போலவே எண்ணினாலும் அதே சமயம் அதிலிருந்து விலகி இருப்பதாகவும் ஒருவர் நினைக்க வேண்டும்.
ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “ஜடவுலக இயற்கையின் அடிப்படைத் தத்துவங்கள்” எனும் தலைப்பைக் கொண்ட இருபத்தாறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.