அத்தியாயம் – 24
கர்தம முனிவரின் துறவு
பதம் 3.24.1
மைத்ரேய உவாச
நிர்வேத-வாதினீமேவம் மனோர்துஹிதரம் முனி:
தயாளூ சாலினீமாஹ சுக்லாபிவ்யாஹ்ருதம் ஸ்மரன்

மைத்ரேய-சிறந்த முனிவர் மைத்ரேயர்; உவாச-கூறினார்a; நிர்வேதவாதினீம்-முழுதும் துறவு பற்றிய வார்த்தைகளைப் பேசுபவர்; ஏவம்—இவ்வாறு; மனோ—ஸ்வாயம்புவ மனுவின்; துஹிதரம்—மகளுக்கு; முனி-கர்தம முனிவர்; தயாளூ-இரக்கம் நிறைந்த; சாலினீம்—புகழத் தகுதியானவர்; ஆஹ—பதில் கூறினார்; சுக்ல-பகவான் விஷ்ணுவால்; அபிவ்யாஹ்ருதம்-கூறப்பட்டது; ஸ்மரன்—நினைவுபடுத்தி.

பகவான் விஷ்ணுவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, முழுவதும் துறவு பற்றிய வார்த்தைகளைப் பேசும், ஸ்வாயம்புவ மனுவின் மகளான தேவஹூதியிடம், இரக்கம் நிறைந்த கர்தம முனிவர் பின்வருமாறு பதில் கூறினார்.

பதம் 3.24.2
ரிஷிருவாச
மாகிதோ ராஜ-புத்ரீத்தம் ஆத்மானம் ப்ரத்யனிந்திதே
பகவாம்ஸ்தேக்ஷரோ கர்பம் அதூராத்ஸம்ப்ரபத்ஸ்யதே

ரிஷி உவாச-முனிவர் கூறினார்; மா கித-ஏமாற்றத்திற்கு உள்ளாகாதே; ராஜபுத்ரீ-ஓ இளவரசியே; இதிஹம்-இந்த வழியில்; ஆத்மானம்-நீதான்; ப்ரதி-நோக்கி; அனிந்திம்த-ஓ போற்றத் தகுந்த தேவகீதியே; பகவான்-பரமபுருஷ பகவான்; தே—உன்னுடைய; அக்ஷர—தவறிழைக்காத; கர்பம்-கருப்பை; அதூராத்-தாமதம் இன்றி; ஸம்ப்ரபித்ஸ்யதே-நுழையும்.

முனிவர் கூறினார்: ஓ இளவரசியே உன்னையே நீ ஏமாற்றத்திற்கு உள்ளாக்காதே. நீ உண்மையில் போற்றத் தகுந்தவள் மாசற்ற இறைவனாகிய பரமபுருஷ பகவான் உன் மகனாக, உன் கருப்பையில் விரைவில் நுழைவான்.

பதம் 3.24.3
திருத-வ்ரதாஸி பத்ரம் தே தமேன நியமேனச
தபோத்-ரவிண-தானைஸ்ச ஸ்ரத்தயா சேஸ்வரம் பஜ

த்ருத வ்ரதாஸி-நீ புனிதமாக சூளுரைகளை மேற்கொண்டு இருக்கிறாய்; பத்ரம் தே-கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்; தமேன-புலன்கனின் கட்டுப்பாட்டால்; நியமேன-மதத்தைக் கடைப்பிடிப்பதால்; ச-மற்றும்; தப-தவங்கள்; த்ரவிண—பணத்தின்; தானை-தானம் கொடுப்பதன் மூலம்; ச-மற்றும்; ஸ்ரத்தயா-சிறந்த நம்பிக்கையுடன்; ச-மற்றும்; ஈஸ்வரம்—பகவான்; பஜ—வழிபாடு.

நீ புனிதமான குளுரைகளை மேற்கொண்டிருக்கிறாய். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். அதனால் நீ உனது புலன்களைக் கட்டுப்படுத்தியும், மதத்தைக் கடைப்பிடிப்பதாலும், தவ நெறியாலும் உன் பணத்தைத் தானம் செய்வதாலும் மிகுந்த நம்பிக்கையுடன் இறைவனை வழிபடவேண்டும்.

பதம் 3.24.4
ஸ த்வயாராதித சுக்லோ விதந்வந்மாமகம்யச
சேத்தா தே ஹ்ருதய-க்ரந்திம் ஔதர்யோ ப்ரம்ம-பாவன:

ஸ—அவர்; த்வயா—உன்னால்; ஆராதிரு:-வழிபடப்பட்டு; சுக்ல-பரமபுருஷ பகவான்; விதந்வன்-பரவி; மாமகம்-என்னுடைய; யச-புகழ்; சேத்தா—அவர் துண்டிப்பார்; தே-உன்னுடைய; ஹ்ருதய-மனத்தின்; க்ரந்திம்-முடிச்சை; ஒளதர்ய-உன் மகன்; பிரம்ம-பிரம்மனின் அறிவு; பாவன-கற்பித்தல்.

உன்னால் வழிபடப்படும் பரமபுருஷ பகவான், என் பெயர், மற்றும் புகழைப் பரப்புவார். அவர் உன் மகனாக வருவதன் மூலம் உன் மனக்கட்டை அவிழ்த்து பிரம்ம அறிவைக் கற்பித்தார்.

பதம் 3.24.5
மைத்ரேய உவாச
தேவஹூத்யபி ஸந்தேசம் கெளரவேண ப்ரஜாபதே
ஸம்யக் ஸ்ரத்தாய புருஷம் கூட-ஸ்தமபஜத்குரும்

மைத்ரேய உவாச-மைத்ரேயர் கூறினார்; தேவஹூதி—தேவஹூதி; அபி-கூட; ஸந்தேசம்-வழி; கௌரவேண-மிகுந்த மரியாதையுடன்; ப்ரஜாபதே-கர்தமரின்; ஸம்யக்:-முழுதும்; ஸ்ரத்தாய—நம்பிக்கை கொண்டு; புருஷம்-பரமபுருஷ பகவான்; கூடஸ்தம்-எல்லார் மனதில் அமைந்துள்ள; அபஜத்-வழிபாட்டு; குரும்-மிகவும் வழிபடத்தக்க.

ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: அண்டத்தின் மனித உயிர்களை உருவாக்குபவர் அல்லது பிரஜாபதிகளில் ஒருவராகிய கர்தமரைக் கணவராக அடைந்த தேவஹூதி அவர் வழியிலேயே மிகுந்த உண்மையாகவும், மரியாதையாகவும் சென்றாள். ஓ சிறந்த முனிவரே, இவ்வாறு அவள் எல்லார் மனதிலும் குடியிருக்கும் பரமபுருஷ பகவானை அண்டத்தின் தலைவரை வழிபடத்தொடங்கினாள்.

பதம் 3.24.6
தஸ்யாம் பஹு-திதே காலே பகவாந்மதுசூதன:
கார்தமம் வீர்யமாபந்நோ ஜக்ஞேக்னிரிவ தாருணி

தஸ்யாம்-தேவஹூதியிடம்; பஹு-திதே காலே-பல ஆண்டுகளுக்குப் பிறகு; பகவான்-பரமபுருஷ பகவான்; மதுசூதன—மது எனும் அரக்கனைக் கொன்றவன்; கார்தமம்-கர்தமரின்; வீர்யம்-விந்து; ஆபந்ந—நுழைந்து; ஜக்ஞே—அவர் தோன்றினார்; அக்னி- நெருப்பு; இவ-போல; தாருணி-மரத்தில்.

பலப்பல ஆண்டுகளுக்குப் பிறகு, பரமபுருஷ பகவான், மது என்னும் அரக்கனைக் கொன்று மதுசூதனன் எனும் பெயருடன் கர்தமரின் விந்துவில் நுழைந்து வேள்வியின் போது மரத்திலிருந்து தீ வருவதைப்போல, தேவஹூதியிடம் தோன்றினார்.

பதம் 3.24.7
அவாதயம்ஸ்ததா வ்யோம்னி வாதித்ராணி கனாகனா:
காயந்தி தம்ஸ்ம கந்தர்வா ந்ருத்யந்த்யப்ஸரஸோ முதா

அவாதயன்-ஒலித்து; ததா—அந்த நேரத்தில்; வ்யோம்னி- வானில்; வாத்திராணி—இசைக்கருவிகள்; கனாகனா—மழைமேகங்கள்; காயந்தி-பாடி; தம்-அவரிடம்; ஸ்ம-நிச்சயமாக; கந்தர்வா-கந்தர்வர்கள்; ந்ருத்யந்தி-நடனமாடினர்; அப்ஸரஸ்—அப்ஸர்கள்; முதா- மகிழ்ச்சியான களிவெறியில்.

அவர் பூமியில் அவதரித்த பொழுது, தேவர்கள் மழை மேகங்களின் வடிவில் வானில் இசைக்கருவிகளை இசைத்தனர். மேலுலக இசைக் கலைஞர்கள், கந்தர்வர்கள் பகவானின் புகழ்களைப் பாடினர், அப்போது மேலுலக நடனப் பெண்கள் மகிழ்ச்சிக் களிவெறியில் ஆடினர்.

பதம் 3.24.8
பேது: கமனஸோ திவ்யா: கேசரைரபவர்ஜிதா:
ப்ரஸேதுஸ்ச திச: ஸர்வா அம்பாம்ஸிச மனாம்ஸிச


பேது-விழுந்து; சுமஸை-பூக்கள்; திவ்யா-அழகிய; கேசரை- வானில் பறக்கும் தேவர்களால்; அபவர்ஜிதர்-சொரிந்தனர்; ப்ரஸேது-திருப்தி அடைந்தனர்; ச-மற்றும்; திச-திசைகள்; ஸர்வா—எல்லா; அம்பாம்ஸி-தண்ணீர்; ச-மற்றும்; மனாம்ஸி-மனங்கள்; ச-மற்றும்.

பகவான் பிறந்தபோது வானில் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்த தேவர்கள் மலர்களைச் சொரிந்தனர். எல்லாத் திசைகளும், நீரும், எல்லாருடைய மனங்களும் மிகவும் திருப்தி அடைந்தன.

பதம் 3.24.9
தத்கர்தமாஸ்ரம-பதம் ஸரஸ்வத்யா பரிஸ்ரிதம்
ஸ்வயம்பூ: ஸாகம்ருஷிபிர் மரீச்-யாதிபிரப்யயாத்

தத்—அந்த; கர்தம-கர்தரின்; ஆஸ்ரம பதம்-துறவு மாடத்திற்கு; ஸரஸ்வத்யா-சரஸ்வதி நதியால்; பரிஸ்ரிதம்-சூழப்பட்டு; ஸ்வயம்பு-பிரம்மா (தான் தோன்றி); ஸாகம்—உடன்; ரிஷிபி-முனிவர்கள்; மரீசி—சிறந்த மரீசிமுனிவர்; ஆதிபி-பிறர் அப்யயாத்—அவர் அங்கு வந்தார்.

பிரம்மா, முதலில் தோன்றிய உயிர்ப் பொருள்; மரீசி முனிவருடனும் பிற முனிவர்களுடனும் சரஸ்வதி நதியால் சூழப்பட்ட கர்தமரின் துறவு மாடத்திற்கு அவர் சென்றார்.

பதம் 3.24.10
பகவந்தம் பரம் ப்ரம்ம ஸத்வேனாம்சேன சத்ருஹன்
தத்வ-ஸங்க்யா ன-விக்ஞபப்த்யை ஜாதம் வித்வானஜ: ஸ்வராட்

பகவந்தம்-பகவான்; பரம-பரமன்; பிரம்ம-பிரம்மன்; ஸத்வேன-மாசுபடாத வாழ்வுகொண்டு; அம்சேன-முழுநிறைவான பகுதியில்; சத்ருஹன்-ஓ பகைவரைக் கொல்பவரே; தத்வஸங்க்யான—24 ஜடவுலகப் பொருள்களின் தத்துவம்; விக்ஞப்த்யை-விளக்குவதற்கு; ஜாதம்-தோன்றி; விதிவான்-தெரிந்து; அஜ-பிறக்காத (பகவான் பிரம்மா); ஸ்வராட்- சுதந்திரமான.

மைத்ரேயர் தொடர் ந்தார் ஓ எதிரியைக் கொல்பவரே பிறக்காத பகவான் ஆகிய பிரம்மா அறிவை அடைவதில் பெரும்பாலும் சுதந்திரமானவர். பரமபுருஷ பகவானுடைய குணத்தில் ஒரு பகுதியே, ஸாங்க்ய யோகம் எனப்படும் அறிவின் முழு நிலையை விளக்குதற்கென்ற தேவஹூதீயின் கருப்பையில் தோன்றியுள்ளது என்பதைப் பிரமனால் புரிந்துகொள்ள இயலும்.

பதம் 3.24.11
ஸபாஜயன் விசுத்தேன சேதஸா தச்-சிகீர்ஷிதம்
ப்ரஹ்ருஷ்யமாணைரசுபி: கர்தமம் சேதமப்யதாத்

ஸபாஜயன்—வழிபடுதல்; விசுத்தேன—தூய; சேதஸா—மனத்துடன்; தத்-பரமபுருஷ பகவானின்; சிகீர்ஷிதம்- எண்ணப்பட்ட செயல்கள்; ப்ரஹ்ருஷ்யமாணை- மகிழ்ச்சியடைந்த; அசுபி:-புலன்களுடன்; கர்தமம்-கர்தம முனிவரிடம்; ச-மற்றும் தேவகீதியிடம்; இதம்-இந்த; அப்யதாத்- பேசினார்.

ஒரு அவதாரமாக, அவருடைய எண்ணரிய செயல்களுக்காக மகிழ்ச்சியடைந்த புலன்களுடனும், தூய மனத்துடனும் பிரம்மாவானவர் பகவானை வழிபட்ட பிறகு கர்தமர் தேவகிதி ஆகிய இருவருடனும் பின்வருமாறு பேசினார்.

பதம் 3.24.12
ப்ரம்மோவாச
த்வயா மே பசிதிஸ்தாத கல்பிதா நிர்வ்யலீகத:
யந்மே ஸஞ்ஜக்ருஹ வாக்யம் பாவந்மானத மானயன்

பிரம்மா-பகவான் பிரம்மா; உவாச-கூறினார்; த்வயா-உங்களால்; மே-என்னுடைய; அபிசிதி-வழிபாடு; தாத—ஓ மகனே; கல்பிதா-நிறைவேறியது; நிர்வ்யக்லீக்த—வஞ்சகம் இன்றி; யத்—அதனால்; மே-என்னுடைய; ஸஞ்ஜ்க்ருஹே-முழுதும் ஒப்புக்கொண்டு; வாக்யம்-அறிவுரைகள்; பவாந்—நீங்கள்; மானத-ஓ-கர்தமரே (மற்றவர்களுக்கு மதிப்பு தருபவர்); மானயன்—மதித்து.

பகவான் பிரம்மன் கூறினார்: என் அன்பு மகனான கர்தமரே நீங்கள் எந்த வஞ்சகமும் இன்றி என் அறிவுரைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டதால், அவற்றிற்குத் தகுந்த மதிப்பு தருவதால், நீங்கள் என்னைச் சரியாக வழிபட்டுள்ளீர்கள். நீங்கள் என்னிடமிருந்து பெற்ற அறிவுரைகளைச் செயலாற்றி இருக்கிறீர்கள். அதன் மூலம் எனக்கு மதிப்பு தந்தீர்கள்.

பதம் 3.24.13
ஏதாவத்யேவ கஸ்ரூஷா கார்யா பிதரி புத்ரகை:
பாடமித்யனுமந்யேத கௌரவேண குரோர்வச:

ஏதாவதீ-இது வரையில்; ஏவ-துல்லியமாக: சுஸ்ரூஷா- தொண்டு; கார்யா-செய்யப்பட வேண்டியவை; பிதரி—தந்தைக்கு; புத்ரகை:-மகன்களால்; பாடம் இதி:-ஒப்புக்கொள்ளுதல்; “ஆம், ஐயா” அனுமந்யேத—அவர் பணிந்து நடக்கவேண்டும்; கௌரவேண-பெரியவருக்குக் காட்டும் நன்மதிப்புடன்; குரோ-குருவின்; வச-கட்டளைகள்.

மகன்கள் தந்தைக்கு இந்த அளவில் துல்லியமாகத் தொண்டு கட்டாயம் செய்யவேண்டும். ஒருவர் தந்தை அல்லது ஆன்மீக குருவின் கட்டளைக்கு நன்மதிப்புடன், “ஆம் ஐயா” என்று கூறிப் பணிந்து நடக்கவேண்டும்.

பதம் 3.24.14
இமா துஹிதர: ஸத்யஸ் தவ வத்ஸ சுமத்யமா:
ஸர்கமேதம் ப்ரபாவை ஸ்வைர்ப்ரும்ஹயிஷ்யந்த்யனேகதா

இமா-இந்த; துஹிதர-பெண்கள்; ஸத்ய-கற்பு; தவ-உங்கள்; வத்ஸ-ஓ என் அன்பு மகனே; சுமத்யமா-மெல்லிய இடையுடைய; ஸர்கம்-படைப்பு; ஏதம்-இந்த; ப்ரமாவை-சந்ததிகளால்; ஸ்வை- அவர்களின்; ப்ரும்ஹயிஷ்யந்தி-அவர்கள் அதிகரிப்பார்; அனேகதா- பலவழிகளிலும்.

பகவான் பிரம்மா பின்னர் கர்தம முனிவரின் ஒன்பது பெண்களைப் போற்றிக் கூறினார்: மெல்லிய இடையுடைய உங்கள் பெண்கள் நிச்சயமாக கற்புள்ளவர்கள். அவர் பல வழிகளிலும் தங்கள் சொந்த சந்ததியினரால் படைப்பை அதிகரிப்பவர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

பதம் 3.24.15
அதஸ்த்வம்ருஷி-முக்யேப்யோ யதா-சீலம் யதா-ருசி
ஆத்மஜா: பரிதேஹ்யத்ய விஸ்த்ருணீஹியசோ புவி

அத—அதனால்; த்வம்-நீங்கள்; ரிஷிமுக்யேப்யோ-முதன்மை பெற்ற முனிவர்களுக்கு: யதாஷீலம்—மனநிலைக்கு ஏற்றபடி; யதாருசி—ரசனைக்கு ஏற்றபடி; ஆத்மஜா—உங்கள் பெண்கள்; பரிதேஹி-தயவு செய்து கொடுத்து விடுங்கள்; அத்ய-இன்று; விஸ்த்ருணீஷி-பரவி; யச-புகழ்; புவி-அண்டம் முழுதும்.

அதனால், தயவு செய்து நீங்கள் உங்கள் பெண்களின் மனநிலை, ரசனைக்கு ஏற்றபடி, அவர்களை முதன்மை பெற்ற முனிவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். அதன்மூலம் இந்த அண்டம் முழுவதும் உங்கள் புகழைப் பரப்புங்கள்.

பதம் 3.24.16
வேதாஹமாத்யம் புருஷம் அவதீர்ணம் ஸ்வ-மாயயா
பூதானாம் சேவதிம் தேஹம் பிப்ராணம் கபிலம் முனே

வேத-தெரிந்து; அஹம்-நான்; ஆத்யம்—உண்மையான; புருஷம்-அனுபவிப்பவர்; அவதீர்ணம்-இறங்கிவந்து; ஸ்வமாய்யா- அவருடைய உள்ளார்ந்த ஆற்றலால்; பூதானாம்-எல்லா வாழும் உள் பொருள்களின்; சேவதிம்-செல்வம் போல்; எல்லா விருப்பப்பட்டவருக்கும் கொடுப்பவர்; தேஹம்-உடல்: பிப்ராணாம்-ஊகித்து; கபிலம்-கபில முனிவர்; முனே-ஓ கர்தம முனிவரே

ஓ கர்தமரே, உண்மையான பரமபுருஷ பகவான் இப்போது அவருடைய அந்தரங்க சக்தியால் ஒரு அவதாரமாகத் தோன்றியுள்ளார். வாழும் உள்பொருள்களால் விரும்பப்பட்டவரை அளிப்பவர், அவர் இப்போது கபிலமுனிவரின் உடலை எடுத்துள்ளார்.

பதம் 3.24.17
ஞான-விக்ஞான-யோகேன கர்மணா முத்தரன் ஜடா:
ஹிரண்ய- கேச: பத்மாக்ஷ: பத்மமுத்ராபதாம்புஜ:

ஞான-புனித நூல்களின் அறிவு; விக்ஞான-செயல்முறை; யோகேன-அறிவார்ந்த யோகத்தின் மூலம்; கர்மணாம்—ஐடச் செயல்களின்; உத்தரன்-வேருடன்; ஜடா-வேர்கள்; ஹிரண்ய கேச-பொன்னான முடி; பத்ம அக்ஷ-தாமரை போன்ற கண்கள் கொண்ட; பத்ம-முத்ர:-தாமரையின் அடையாளம் குறிக்கப்பட்ட; பதாம்புஜ-தாமரைப் பாதங்கள் கொண்டு.

அறிவார்ந்த யோகம், புனித நூல்களிலிருந்து பெற்ற அறிவைச் செயற்படுத்துதல் இவற்றால், தங்க மயமான முடி இதழ்கள் போன்ற கண்கள், தாமரை மலர்களை அடையாளக் குறியாகப் பெற்ற தாமரை போன்ற பாதங்கள் இவை கொண்டவையாகச் சித்தரிக்கப்படும் கபில முனிவர் ஜடவுலகில் ஆழ்ந்து வேரோடியிருக்கும் ஆசையை வேரோடு அழித்திடுவார்.

பதம் 3.24.18
ஏஷ மானவி தே கர்பம் ப்ரவிஷ்ட: கைடபார்தன:
அவித்யா-ஸம்சய -க்ரந்த்திம் சித்வா காம் விசரிஷ்யதி

ஏஷ-அதே பரமபுருஷ பகவான்; மானவி-ஓ மனுவின் மகளே; தே-உன்னுடைய; கர்பம்-கருப்பை; ப்ரவிஷ்ட-நுழைந்து; கைடப அர்தன-கைடப எனும் அசுரனைக் கொன்றவர்; அவித்யா-அறியாமையின்; ஸம்சய-சந்தேகத்தின்; க்ரந்திம்-முடி; சித்வா-அறுத்து; காம்-உலகம்; விசரிஷ்யதி-அவர் பயணம் செய்வார்.

பின்னர் பகவான் பிரம்மா தேவஹூதியிடம் கூறினார். என் அன்பு மனுவின் மகளே, கைடபன் எனும் அசுரனைக் கொன்ற அதே பரமபுருஷ பகவான் இப்போது உன் கருப்பையில் உள்ளார். அவர் உன்னுடைய எல்லா அறியாமை மற்றும் சந்தேகங்களின் முடிச்சுகளை அறுத்தெறிவார். பின்னர் அவர் இந்த உலகம் முழுவதும் பயணம் செய்வார்.

பதம் 3.24.19
அயம் ஸித்த-கணாதீச: ஸாங்க்யா சார்யை: சுசம்மத:
லோகே கபில இத்யாக்யாம் கந்தாதே கீர்த்திவர்தன:

அயம்-இந்தப் பரமபுருஷ பகவான்; ஸித்தகண-முழுமை அடைந்த முனிவர்களின்; ஆதீச-தலைமை; ஸாங்கிய ஆசார்யை-ஸாங்கிய தத்துவத்தில் நிபுணர்களான ஆசார்யர்களால்; சு ஸம்மத-வேதக் கொள்கைகளின் படி ஒப்புக்கொள்ளப்பட்ட; லோகே-உலகில்; கபில இதி-கபிலராக; ஆக்யாம்-கொண்டாடி; கந்தா—அவர் செய்வது; தே-உன்னுடைய; கீர்த்தி-புகழ்; வர்தன:-அதிகரித்து.

உன்னுடைய மகன் எல்லா முழுமை பெற்ற முனிவர்களுக்கும் தலைமை பெறுவான். அவன் மக்களிடையேயும், உண்மையான அறிவைப் பரப்புவதில் நிபுணர்களான ஆச்சாரியர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவான். அவன் கபிலர் எனும் பெயரால் கொண்டாடப்படுவான். தேவகீதியின் மகனாக, அவன் உன் புகழை அதிகரிப்பான்.

பதம் 3.24.20
மைத்தேய உவாச
தாவாஸ்வாஸ்ய ஜகத்-ஸ்ருஷ்டா குமாரை: ஸஹ-நாரத:
ஹம்ஸோ ஹம்ஸேன யானேன த்ரி-தாம-பரமம் யயௌ

மைத்ரேய உவாச-மைத்ரேயர் கூறினார்; தாவ்—தம்பதிகள்; ஆஸ்வாஸ்ய-திரும்பவும் உறுதி செய்யப்பட்டு; ஜகத்ஸ்ருஷ்டா—அண்டத்தின் படைப்பாளர்; குமாரை-குமாரர்களுடன்; ஸஹநாரத-நாரதருடன்; ஹம்ஸ-பகவான் பிரம்மா; ஹம்ஸேன யானேன—அவருடைய அன்ன வாஹனத்தால்; த்ரிதாமபரமம்-மேலுலகக் கோள்களுக்கு; யயௌ- சென்றார்.

ஸ்ரீ மைத்ரேதயர் கூறினார்: கர்தம முனிவரிடமும் அவர் மனைவி தேவஹூதியிடமும் இவ்வாறு பேசிய பிறகு, பகவான் பிரம்மா, அண்டத்தைப் படைப்பவர், ஹம்ஸ என்றும் அறியப்படுபவர். நான்கு குமாரர்களுடனும், நாரதருடனும், தன் அன்ன வாஹனத்தின் மீது அமர்ந்து மூன்று சூரிய மண்டலங்களின் மேலான இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.

பதம் 3.24.21
கதே சத-த்ருதெள க்ஷத்த: கர்தமஸ்தேன சோதித:
யதோதிதம் ஸ்வ-துஹிக்ரு: ப்ராதாத்-விஸ்வஸ்ருஜாம் தத:

கதே-அவர் பிரித்த பிறகு; சதத்ருதௌ-பகவான் பிரம்மா; க்ஷத்த—ஓ விதுரரே; கர்தம-முனிவர்; தேன-அவரால்; சோதித- ஆணையிடப்பட்டு; யதா உதிதம்-கூறப்பட்டது போல; ஸ்வதுஹித்ரு-அவர் சொந்த மகள்கள்; ப்ராதாத்- ஒப்படைக்கப்பட்டு; விஸ்வஸ்ருஜாம்—உலக மக்கள் தொகையின் படைப்பாளர்களுக்கு; தத-பிறகு.

ஓ விதுரரே, பிரம்மா பிரிந்து சென்ற பிறகு, பிரம்மாவால் கட்டளையிடப்பட்ட கர்தம முனிவர், அறிவுறுத்தியபடி, தன் ஒன்பது பெண்களை, உலகின் மக்கள் தொகையைப் படைத்த ஒன்பது சிறந்த முனிவர்களிடம் ஒப்படைத்தார்.

பதங்கள் 3.24.22 – 3.24.23
மரீசயே கலாம் ப்ராதாத் அநஸுயாமதாத்ரயே
ஸ்ரத்தாமங்கிரேஸ யச்சத் புலஸ்த்யாய ஹவிர்புவம்

புலஹாய கதிம் யுத்தாம் க்ருதவே ச க்ரியாம் ஸதீம்
க்யாதிம் ச ப்ருகவேயச்சத் வஸிஷ்டாயாப்யருந்ததீம்

மரீசயே-மரீசியிடம்; கலாம்-கலா; ப்ராதாத்—அவர் ஒப்படைத்தார்; அநசுயாம்-அநசுயா; அத-பிறகு; அத்ரயே-அத்ரியிடம்; ஸ்ரத்தாம-ஸ்ரத்தா; அங்கிரஸே-அங்கிரசரிடம்; அயச்சத்—அவர் கொடுத்தார்; புலஸ்த்யாய—புலஸ்த்யரிடம்; ஹவிர்புவம்-ஹவிர்யூ; புலஹாய-புலஹரிடம்; கதிம்-கதி; யுக்தாம்-தகுந்த; க்ரதவே-க்ரதுவிடம்; ச-மற்றும்; க்ரியாம்-க்ரியா; ஸதீம்-நற்குணமுடைய; க்யாதம்-க்யாதி; ச-மற்றும்; பருகவே- பருகுவிடம்; அயச்சித்-அவர் கொடுத்தார்; வஸிஷ்டாய-வஸிஷ்ட முனிவரிடம்; அபி-கூட; அருந்ததீம்-அருந்ததீ.

கர்தம முனிவர் தன் பெண் கலாவை மரீசியிடமும், மற்றொரு பெண் அநசூயாவை அத்ரியிடமும் ஒப்படைத்தார். அவர் ஸ்ரத்தாவை அங்கிரசரியிடமும் ஹவிர்பூவை புலத்தியரிடமும் கொடுத்தார். கதியைப் புலஹரிடமும் கற்புள்ள க்ரியாவை கிரதுவுக்கும், க்யாதியைப் ப்ருகுவிடமும், அருந்ததியை வஸிஷ்டரிடமும் கொடுத்தார்.

பதம் 3.24.24
அதர்வணே ததாச்சாந்திம் யயா யக்ஞோ விதந்யதே
விப்ரர்ஷபான் க்ருதோத்வாஹான் ஸதாரான் ஸமலாலய

அதர்வணே—அதர்வாவிடம்; அததாத்-அவர் கொடுத்தார்; சாந்திம்-சாந்தி; யயா-யாரால்; யக்ஞா-வேள்வி; விதந்யதே-நிகழ்த்தப்பட்டது; விப்ரர்ஷபான்-முதன்மையா பிராமணர்கள்; கிருத-உத்வாஹான்-மணந்து; ஸதாரான்—அவர்கள் மனைவியருடன்; சமலாலயத்—அவர்களைப் பாதுகாத்தார்.

அவர் சாந்தியை அதர்வாவுக்குக் கொடுத்தார். சாந்தியின் பொருட்டு வேள்விகள் நடைபெற்றன. இவ்வாறு அவர் முதன்மை பெற்ற பிராமணர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். அவர் அவர்களை, அவர்தம் மனைவியருடன் பாதுகாத்தார்.

பதம் 3.24.25
ததஸ்த ருஷய க்ஷத்த: க்ருததாரா நிமந்த்ர்ய தம்
ப்ராதிஷ்டந்நத்திமாபந்நா: ஸ்வம் ஸ்வமாஸ்ரமமண்டலம்

தத-பிறகு ; தே-அவர்கள்; ருஷய:-முனிவர்கள்; க்ஷத்த-ஓ விதுரரே; க்ருததாரா—இவ்வாறு மணந்து; நிமந்த்ர்ய-விடைபெற்று; த-கர்தமர்; ப்ராதிஷ்டன்-அவர்கள் பிரிந்தனர்; நந்திம் – மகிழ்ச்சி; ஆபந்நா-பெற்று; ஸ்வம்-ஸ்வம் – ஒவ்வொருவரும் அவருடைய; ஆஸ்ரம மண்டலம்-துறவு மாடம்.

இவ்வாறு மணம் புரிந்த முனிவர்கள் கர்தமரிடம் விடை பெற்று, மகிழ்ச்சியுடன் புறப்பட்டு, ஒவ்வொருவரும் அவரின் துறவு மாடத்திற்குச் சென்றனர், ஒ விதுரரே.

பதம் 3.24.26
ஸ சாவதீர்ணம் த்ரி-யுகம் ஆக்ஞாய விபுதர்ஷபம்
விவிக்த உபஸங்கம்ய ப்ரணம்ய ஸமபாஷத

ஸ-கர்தம முனிவர்; ச-மற்றும்; அவதீர்ண—இறங்கி வந்து; த்ரி-யுகம்-விஷ்ணு; அக்ஞாய-புரிந்துகொண்டு; விபுதர்ஷபம்- தேவர்களின் தலைவர்; விவிக்தே-தனிப்பட்ட இடத்தில்; உபஸங்கம்-அணுகி; ப்ரணம்ய-வணக்கங்கள் கொடுத்து; ஸம்பாஷத—அவர் பேசினார்.

தேவர்களின் தலைவரான பரமபுருஷ பகவானாகிய விஷ்ணு பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார் என்பதைக் கர்தம முனிவர் புரிந்து கொண்ட பொழுது, அவரைத் தனியிடத்தில் அணுகி, வணக்கங்களைத் தெரிவித்து, கர்தமர் பின்வருமாறு பேசினார்.

பதம் 3.24.27
அஹோ பாபச்யமானானாம் நிரயே ஸ்வைரமங்கலை:
காலேன பூயஸா நூனம் ப்ரசீதந்தீஹ தேவதா:

அஹோ-ஒ; பாபச்யமானானாம்-மிகவும் துன்பமுற்றவருடன்; நிரயே-நரக ஜடவுலகப்பிடிப்பில்; ஸ்வை-அவர்களுடைய; அமங்கலை-தவறுகளால்; காலேன பூயஸா-நீண்ட காலத்திற்குப் பிறகு; நூனம்-உண்மையில்; ப்ரஸீதந்தி—அவர்கள் மகிழ்ந்து; இஹ-இந்த உலகில்; தேவதா-தேவர்கள்.

கர்தம முனிவர் கூறினார்: ஓ தங்களுடைய தவறுகளால் பூதவுலகக் கட்டிலிருக்கும் துன்பம் அடைந்த ஆத்மாக்களுடன், நீண்ட காலத்திற்குப் பின், இந்த அண்டத்தின் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

பதம் 3.24.28
பஹு-ஜந்ம-விபக்வேன ஸம்யக்-யோக -ஸமாதினா
த்ரஷ்டும் யதந்தே யதய: சூந்யாகாரேஷு யத்-பதம்

பகு-பல; ஐந்ம-பிறப்புக்களுக்குப் பிறகு: விபக்வேன- பக்குவமடைந்த; ஸம்பக்-முழுமை; யோகஸமாதினா-யோகத்தில் மெய்ம்மறந்த நிலையால்; திரஷ்டும்-பார்க்க; யதந்தே-அவர்கள் பெருமுயற்சி செய்வர்; யதஸ-யோகிகள்; சூந்யாகாரேஷு-தனித்த இடங்களில்; யத்-யாருடைய; பதம்- பாதங்கள்.

பல பிறவிகளுக்குப் பிறகு பக்குவமடைந்த யோகிகள், மெய்மறந்த யோக நிலையில், பரம புருஷ பகவானின் பாத கமலங்களைக் கண்ணாற் காண்பதற்குத் தனித்த இடங்களில் முயற்சி செய்வர்.

பதம் 3.24.29
ஸ ஏவ பகவானத்ய ஹேலனம் நகணய்ய ந:
க்ருஹேஷு ஜாதோ க்ராம்யாணாம் ய: ஸ்வானாம் பக்ஷ-போஷண:

ஸ ஏவ-அதே; பகவான்-பரமபுருஷ பகவான்; அதிய-இன்று; ஹேலனம்—கவனக் குறைவு; ந-இல்லை; கணய்ய-உயர்வு; தாழ்வு-கருதி; ந-எங்களுடைய; க்ருகேஷு-வீடுகளில்; ஜாத-தோன்றி; கிராம்யாணாம்—சாதாரண குடும்பத் தலைவர்களின்; ய—அவர்; ஸ்வானாம்-அவருடைய சொந்த பக்தர்களின்; பக்ஷபோஷண:- அவர்களுக்குத் துணை புரிபவர்.

நம்மைப் போன்ற சாதாரண குடும்பத்தலைவர்களின் கவனக்குறைவைக் கருதாமல், அதே பரமபுருஷ பகவான், அவரின் பக்தர்களுக்கு உதவி புரிய நம் இல்லங்களில் தோன்றுகிறார்.

பதம் 3.24.30
ஸ்வீயம் வாக்யம்ருதம் கர்தும் அவதீர்ணோஸிமே க்ருஹே
சிகீர்ஷுர்பகவான் ஞானம் பக்தானாம் மான-வர்தன

ஸ்வீயம்-உங்களுடைய; வாக்யம்—சொற்கள்; ருதம்-உண்மை; கர்தும்-உருவாக்க; அவதீர்ண-கீழிறங்கி; அஸி-நீங்கள்; மே க்ருஹே-என் வீட்டில்; சிகீர்ஷு-பரப்ப விருப்பப்பட்டு; பகவான்- பரமபுருஷ பகவான்; ஞானம்-அறிவு; பக்தானாம்-பக்தர்களின்; மான-மரியாதை; வர்தன-அதிகரிப்பவர்.

கர்தம முனிவர் கூறினார் உங்கள் பக்தர்களின் மதிப்பை எப்போதும் அதிகரிக்கும் என் அன்புள்ள பகவானே, நீங்கள் உங்கள் வார்த்தையை செயற்படுத்தவும், உண்மை அறிவின் நெறி முறையைப் பரப்பவும் என் வீட்டிற்கு வந்துள்ளீர்கள்.

பதம் 3.24.31
தாந்யேவ தேபிரூபாணி ரூபாணி பகவம்ஸ்தவ
யானி யானி ச ரோசந்தே ஸ்வஜனானாமரூபிணி

தானி-அந்த; ஏவ-உண்மையாக; தே-உங்கள்; அபிரூபாணி- தகுதியான; ரூபாணி-வடிவங்கள்; பகவன்—ஒ பகவானே; தவ- உங்களுடைய; யானி யானி-எந்தெந்த; ச-மற்றும்; ரோசந்தே- மகிழ்ந்து; ஸ்வஜனானாம்-உங்களின் சொந்த பக்தர்களுக்கு; அரூபிண—ஜடவுலக வடிவமில்லாத.

என் அன்பு பகவானே, உங்களுக்கு உலகியல் வடிவம் இல்லாவிட்டாலும், நீங்கள் உங்கள் எண்ணற்ற வடிவங்கள் பெற்று உள்ளீர்கள். அவை உங்கள் பக்தர்களை மகிழ்விக்கும் அந்த வடிவங்கள் எல்லாம் கடந்தவையாகும்.

பதம் 3.24.32
த்வாம் சூரிபிஸ்தத்வ- புபுத்ஸயாத்தா
ஸதாபிவாதார்ஹண பாத-பீடம்
ஐஸ்வர்ய-வைராக்ய யசோவ-போத
வீர்ய-ஸ்ரியா பூர்தமஹம் ப்ரபத்யே

த்வாம்-உங்களிடம்; சூரிபி-சிறந்த முனிவர்களால்; தத்வ்-பூரண உண்மை; புபுத்ஸயா-புரிந்து கொள்ளும் ஆசையுடன்; அத்தா- நிச்சயமாக; ஸதா-எப்போதும்; அபிவாத-வணக்கத்துக்கு உரிய மதிப்புடன்; அர்ஹண—தகுந்தவை; பாத-உங்கள் பாதங்களின்; பீடம்- இருக்கைக்கு; ஐஸ்வர்ய-பொருள்வளம்; வைராக்ய-துறவு; யச-புகழ்; அவபோத—அறிவு; வீர்ய-பலம்; ஸ்ரியா—அழகுடன்; பூர்தம்-முழுமையானவை; அஹம்-நான்; ப்ரபத்யே-சரணம்.

என் அன்பான பகவானே. சிறந்த முனிவர்கள் எல்லாம் முழு உண்மையைப் புரிந்து கொள்ள ஆர்வமுடையவர்கள் அவர்களிடமிருந்து வணக்கத்துக்கு உரிய மதிப்பை எப்போதும் பெறத்தகுதி வாய்ந்த இருப்பிடம் உங்களின் தாமரை போன்ற திருவடிகள் உள்ளன. நீங்கள் செல்வவளத்தில், துறவில், மெய்யறிவுடைய புகழில், அறிவில், ஆற்றலில் முழுமை பெற்றவர், அதனால் உங்களின் பாத கமலங்களில் என்னை அடைக்கலமாகத் தருகிறேன்.

பதம் 3.24.33
பரம் ப்ரதானம் புருஷம் மஹாந்தம்
காலம் கவிம் த்ரி-வ்ருதம் லோகபாலம்
ஆத்மாநுபூத்யானுகத-ப்ரபஞ்சம்
ஸ்வச்சந்தசக்திம் கபிலம் ப்ரபத்யே

பரம்—எல்லாம் கடந்த; ப்ரதானம்-பரமன்; புருஷம்- தனியொருவர்; மஹாந்தம்—பருவுலகின் மூலமாய் இருப்பவர்; காலம்—காலமாய் இருப்பவர்; கவிம்-முழு அறிவுடையவர்; த்ரிவ்ருதம்—இயற்கையின் மூன்று குணங்கள்; லோகபாலம் எல்லா அண்டங்களையும் பாதுகாப்பவர்; ஆத்ம-அவரிடம்; அநுபூத்ய- உள்ளார்ந்த ஆற்றலால்; அனுகத-கரைந்து; ப்ரபஞ்சம்-ஜட வெளிப்பாடுகள்; ஸ்வச்சந்த-சுதந்திரமாக; சக்திம்—ஆற்றலுடைய; கபிலம்-கபில பகவானிடம்; பரபத்யே-நான் சரணடைகிறேன்.

கபிலரின் வடிவில் அவதரித்திருக்கும், சுதந்திர ஆற்றலுடைய உன்னதமான, பரமபுருஷரை, காலம் மற்றும் பொருளின் மொத்த உருவமாக விளங்கும் பகவானை, ஜட இயற்கையின் மூன்று குணங்களின் கீழ் எல்லா அண்டங்களையும் முழு அறிவுடன் பாதுகாப்பவரை உலகப்பொருள்கள் அழிந்த பின், அவற்றைத் தன்னிடம் இழுத்துக் கொள்பவரை, பரமபுருஷ பகவானை நான் சரணடைகிறேன்.

பதம் 3.24.34
ஆ ஸ்மாபிப்ருச்சேத்ய பதிம் ப்ரஜானாம்
த்வயாவதீர்ணார்ண உதாப்த-காம
பரிவ்ரஜத்-பதவீம் ஆஸ்திதோஹம்
சரிஷ்யே த்வாம் ஹ்ருதியுஞ்ஜன் விசோக:

ஆஸ்ம அபிப்ருச்சே-நான் விசாரிக்கின்றேன்; அத்ய-இப்போது; பதிம்—பகவான்; ப்ரஜானாம்—படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களின்; திவ்யா-உங்களால்; அவதீர்ணார்ண- கடனிலிருந்து-விடுபட்டு; உத-மற்றும்; ஆப்த-நிறைவேறி; காம- ஆசைகள்: பரிவ்ரஜத்—அலைந்து திரியும் பிச்சைக்காரரின்; பதவீம்-வழி; ஆஸ்தித-ஒப்புக்கொள்ளுதல்; அஹம்-நான்; சரிஷ்யே-நான் அலைவேன்; த்வாம்-நீங்கள்; ஹ்ருதி-என் மனத்தில்; யுஞ்ஜன்-வைத்து; விசோக-புலம்பிலிருந்து விடுபட்டு.

இன்று, உங்களை நான் சில கேட்க வேண்டும், நீங்கள் வாழும் பொருள்களுக்கும் அனைத்துக்கும் பகவான். என் தந்தையிடம் எனக்குள்ளே கடன்களிலிருந்து நீங்கள் இப்போது விடுவித்திருப்பதால், என்னுடைய ஆசைகள் எல்லாம் நிறைவேறியிருப்பதால், ஒரு அலைந்து திரியும் பிச்சைக்காரனின் ஆணையை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். இந்த குடும்ப வாழ்வைத் துறந்து விட்டு, புலம்பலிலிருந்து விடுபட்டு, எப்போதும் உங்களை என் மனத்தில் நினைத்துக்கொண்டு, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடம் செல்ல விரும்புகின்றேன்.

பதம் 3.24.35
ஸ்ரீ-பகவானுவாச
மயா ப்ரோக்தம் ஹிலோகஸ்ய ப்ரமாணம் ஸத்ய-லௌகிகே
அதாஜனி மயா துப்யம் யதவோசம்ருதம் முனே

ஸ்ரீ பகவான் உவாச-பரமபுருஷ பகவான் கூறினார்; மயா- என்னால்; ப்ரோக்தம்-பேசப்பட்ட; ஹி-உண்மையில்; லோகஸ்ய- மக்களுக்காக; பிரமாணம்-அதிகாரம்; ஸத்யம்-புனித நூலில் பேசப்பட்ட; லௌகிகே-சாதாரணப் பேச்சில்; அத—அதனால்; அஜனி—பிறப்பு இருந்தது; மயா—என்னால்; துப்யம்—உன்னிடம்; யத்—அந்த; அவோசம்-நான் கூறினேன்; ருதம்-உண்மை; முனே-ஓ முனிவரே.

பரமபுருஷ பகவானாகிய கபிலர் கூறினார். நேரடியாக அல்லது புனித நூல்களில் நான் என்ன பேசினாலும், அது எல்லா விதத்திலும் உலகின் மக்களுக்கு அதிகாரப் பூர்வமானது. ஓ முனிவரே, முன்பே நான் உங்களுக்கு மகனாக வருவேன் என்று கூறியிருந்ததால், அந்த உண்மையை நிறைவேற்ற நான் இறங்கி வந்தேன்.

பதம் 3.24.36
ஏதந்மே ஜந்ம லோகேஸ்மிந் முழுக்ஷுணாம் துராசயாத்
ப்ரஸம்க்யானாய தத்வானாம் ஸம்மதாயாத்ம-தர்சனே

ஏதத்-இந்த; மே-என்னுடைய; ஜந்ம-பிறப்பு: லோகே-இந்த உலகில்; அஸ்மிந்-இதில்; முழுக்ஷுணாம்—விடுதலை விரும்பும் சிறந்த முனிவர்களால்; துராசயாத் -அவசியமற்ற ஜடவுலக ஆசைகளிலிருந்து; ப்ரஸம்க்யானாய-விளக்குவதற்காக; தத்வானாம்—உண்மைகளின்; ஸம்மதாய-உயர்வாக மதிக்கப்பட்டது; ஆத்ம தர்சனே – தன்னை அறிதலில்.

அவசியமற்ற மண்ணுலக ஆசைகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட விரும்புபவர்களால், தன்னை அறிதலில் மிகவும் உயர்வாக மதிக்கப்பட்ட சாங்கிய தத்துவத்தைச் சிறப்பாக விளக்க இந்த உலகில் யான் அவதாரம் எடுத்தேன்.

பதம் 3.24.37
ஏஷ ஆத்மபதோ வ்யக்தோ நஷ்ட: காலேன பூயஸா
தம் ப்ரவர்தயிதும் தேஹம்இமம் வித்திமயா ப்ருதம்

ஏஷ-இந்த; ஆத்ம பத-தன்னை உணர்தலின் வழி; அவ்யக்த- அறிந்து கொள்ளக்கடினமான; நஷ்ட-நஷ்டம்; காலேனபூயஸா—காலப்போக்கில்; தம்-இந்த; ப்ரவர்தயிதும்-மீண்டும் அறிமுகப்படுத்த; தேஹம்-உடல்; இமம்-இந்த; வித்தி— தயவுசெய்து அறி; மயா-என்னால்; ப்ருதம்-ஊகித்து.

தன்னை உணர்தலாகிய இந்த வழி, புரிந்து கொள்ளக் கடினமானது, காலப்போக்கில் மறைந்து போயிற்று. மனித சமுதாயத்திற்கு இந்தத் தத்துவத்தை மீண்டும் அறிமுகப்படுத்தவும், விளக்கவும் கபிலரின் இந்த உடலை நான் எடுத்துள்ளேன்.

பதம் 3.24.38
கச்ச காமம் மயா ப்ருஷ்டோ மயி ஸ்ந்நயஸ்த-கர்மணா
ஜித்வா சுதுர்ஜயம் ம்ருத்யும் அம்ருதத்வாய மாம் பஜ

கச்ச—செல்; காமம்-நீ விரும்பியபடி; மயா- என்னால்; ஆப்ருஷ்ட- ஒப்புதல் அளிக்கப்பட்டது; மயி—என்னிடம்; ஸந்யஸ்த-முழுதும் சரணடைந்து; கர்மணா-உன் செயல்களுடன்; ஜித்வா-பிடித்துக் கொண்டு; சுதுர்ஜயம்-ஏறிக் கடக்கமுடியாத; ம்ருத்யும்-மரணம்; அம்ருதத்வாய-நிலையான வாழ்வுக்கு; மாம்-என்னிடம்; பஜ-பக்தித் தொண்டில் ஈடுபட்டு.

இப்போது, என்னால் இசைவு தரப்பட்ட நீ, என்னிடம் உன் எல்லாச் செயல்களையும் ஒப்படைத்து விட்டு, உன் விருப்பப்படி செல். வெல்ல முடியாத மரணத்தை வென்று, நிலைத்த வாழ்வுக்காக என்னை வழிபடு.

பதம் 3.24.39
மாம் ஆத்மானம் ஸ்வயம் -ஜ்யோதி: ஸர்வ-பூத-குஹாசயம் ஆத்மந்யேவாத்மனா வீக்ஷ்ய விசோகோபயம்ருச்சஸி

மாம்-என்னை; ஆத்மானம்-மேலான ஆத்மா அல்லது பரமாத்மா; ஸ்வயம் ஜ்யோதி—தானே ஒளிரும்; ஸர்வ பூத-எல்லா உயிரினங்களின்; குஹா-மனங்களில்; ஆசயம்-தங்கும்; ஆத்மணி-உன் மனத்தில்; ஏவ-உண்மையில்; ஆத்மனா-உன் அறிவாற்றல் மூலம்; வீக்ஷ்ய-எப்போதும் பார்த்து, எப்போதும் நினைத்து; விசோக:-புலம்பலிலிருந்து விடுபட்டு; அபயம்—பயமின்மை; ருச்சஸி—நீ அடைவாய்.

நீ உன் மனத்தில், உன் அறிவாற்றல் மூலமாக, எல்லா உள்பொருள்களின் மனங்களிலும் குடியிருக்கும், உயர்ந்த, தானே ஒளிரும் ஆத்மாவாகிய என்னை எப்போதும் பார்ப்பாய்.

பதம் 3.24.40
மாத்ர ஆத்யாத்மிகீம் வித்யாம் சமனீம் ஸர்வ-கர்மணாம்
விதரிஷ்யே யயாசாசௌ பயம் சாதிதரிஷ்யதி

மாத்ர-என் அன்ளையிடம்; ஆதியாத்மிகீம்-அகநிலை வாழ்வின் கதவைப் திறப்பது; வித்யாம்-அறிவு; சமனீம்-முடிவு; ஸர்வகர்மணாம்-எல்லா பயன்தரும் செயல்கள்; விதரிஷ்யே-நான் தருவேன்; யயா-அதனால்; ச-உடன்; அசெள—அவள்; பயம்—அச்சம்; ச-உடன்; அதிதரிஷ்யதி-மீண்டு வருதல்.

என் அன்னைக்கும் ஆன்மீக வாழ்வுக்கும் கதவாக விளங்கும் இந்த மேதகு அறிவை நானும் வர்ணிப்பேன். அதனால் அவள் பயன் தரும் செயல்களுக்கு எதிரான செயல்களை முடித்து, தன்னை அறிதல் மற்றும் முழுமையை அடைய முடியும். இவ்வாறு அவளும் மண்ணுலகின் எல்லா அச்சத்திலிருந்தும் விடுபடுவாள்.

பதம் 3.24.41
மைத்ரேய உவாச
ஏவம் ஸமுதிதஸ்தேன கபிலேன ப்ரஜாபதி:
தக்ஷிணீ-க்ருத்ய தம் ப்ரீதோ வனமேவ ஜகாம ஹ

மைத்ரேய உவாச-சிறந்த முனிவராகிய மைத்ரேயர் கூறினார்; ஏவம்-இவ்வாறு; ஸமுதித – அழைத்து; தேன—அவரால்; கபிலேன- கபிலரால்; ப்ரஜாபதி-மனித சமுதாயத்தின் முன்னோர்; தக்ஷிணீக்ருத்ய-சுற்றி வந்து; தம்-அவரை; ப்ரீதி-அமைதி அடைந்து; வனம்-காட்டிற்கு; ஏவ-உண்மையில்; ஜகாம-அவர் சென்றார்; ஹ-பிறகு.

ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: இவ்வாறு மனித சமுதாயத்தின் முன்னோடியான கர்தம முனிவர் அவர் மகனாகிய கபிலரால் முழுமையாகப் பேசப்பட்டதும், அவர் இறைவனைச் சுற்றிவந்து, நல்ல, அமைதியான மனத்துடன் உடனே காட்டிற்குச் சென்றார்.

பதம் 3.24.42
வ்ரதம் ஸ ஆஸ்திதோ மௌனம் ஆத்மைகசரணோமுனி:
நி: ஸங்கோ வ்யசரத்க்ஷோணீம் அனக்னிரனிகேதன:

வ்ரதம்—சபதம்; ஸ-அவர் (கர்தமர்); ஆஸ்தித-ஒப்புக் கொண்டு; மெளனம்-அமைதி; ஆத்ம-பரமபுருஷ பகவானால்; ஏக-தனிப்பட்ட முறையில்; சரண-பாதுகாக்கப்பட்டு; முனி-முனிவர்; நிஸ்ஸங்க தொடர்பின்றி; வ்யசரத்—அவர் பயணம் செய்தார்; க்ஷோணீம்-பூமி; அனக்னி-நெருப்பின்றி; அனிகேதன—இருப்பிடம் இன்றி.

கர்தம முனிவர், பரமபுருஷ பகவானைப் பற்றி நினைப்பதற்கும், தனிப்பட்ட அவரிடம் அடைக்கலம் பெறவும், மெளனத்தை ஒரு சபதமாக ஏற்றுக்கொண்டார். தொடர்பின்றி, அவர் சன்னியாசியாக இருப்பிடம், நெருப்பு இவற்றின் தொடர்பு இன்றி, இந்த உலக உருண்டையின் மேற்பகுதியில் அவர் பயணம் செய்தார்.

பதம் 3.24.43
மனோ ப்ரஹ்மணி யுஞ்ஜானோ யத்தத்ஸதஸத: பரம்
குணாவபாஸே விகுண ஏகபக்த்யானுபாவிதே

மன்-மனம்; ப்ரஹ்மணி-பரமனிடம்; யுஞ்ஜான-நிறுத்தி; யத்-எந்த; தத்—அந்த; ஸத் அஸத-காரணமும் விளைவும்; பரம்- அப்பாற்பட்டு; குண அவபாஸே—உலக இயற்கையின் மூன்று குணங்களையும் வெளிப்படுத்துபவர்; விகுணே—உலகியல் குணங்களுக்கு அப்பாற்பட்டவர்; ஏக பக்த்யா-தனிப்பட்ட பக்தியால்; அனுபாவிதே-மனத்தால் உணரப்பட்டவர்.

காரண விளைவுக்கு அப்பாற்பட்டு, மண்ணுலக இயற்கையின் மூன்று குணங்களையும் வெளிப்படுத்துபவரான, இந்த மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவரான, தவறாத பக்தித் தொண்டினால் மட்டும் மனத்தால் உணரப்பட்டவரான, பரப்பிரம்மன், பரமபுருஷ பகவானிடம் தன் மனத்தை ஈடுபடுத்தினார்.

பதம் 3.24.44
நிரஹங்க்ருதிர்நிர்மமஸ்ச நிர்த்வந்த்வ: ஸம- த்ருக் – ஸ்வத்ருக்
ப்ரத்யக் ப்ரசாந்ததீர்தீர: ப்ரசாந்தோர்மிரிவோததி:

நிரஹங்க்ருதி-போலியான ஆளுமையின்றி; நிர்மம்-ஜடவுலகப் பிடிப்பின்றி; ச-மற்றும்; திர்த்வந்த்வ-இரட்டைத் தன்மை இன்றி; ஸமத்ருக்-சமநிலை பார்த்து; ஸ்வத்ருக்-அவரையே பார்த்து; ப்ரத்யக்—உட்புறம் திரும்பி; ப்ரசாந்த-முழுமையாக அமைந்து; தீ-மனம்; தீர-மயங்காமல், அமைதி குலையாமல்; ப்ரசாந்தி-அமைதியாக; ஊர்மி—அதன் அலைகள்; இவ-போல; உததி—கடல்.

இவ்வாறு அவர் படிப்படியாக மண்ணுலகத் தனித்தன்மையின் பொய்யான ஆளுமையால் பாதிக்கப்படாமல், உலகப் பாசத்திலிருந்து விடுபட்டார். அமைதி குலையாமல், எல்லோருக்கும் சமமாக, இரட்டைத் தன்மை இன்றி, அவரால் தன்னையே பார்க்க முடிந்தது. அவர் மனம் உட்புறமாகத் திரும்பி அமைதியான அலைகளையுடைய கடலைப் போல, முழுதும் அமைதியாக இருந்தது.

பதம் 3.24.45
வாசுதேவே பகவதி ஸர்வ-க்ஞே ப்ரத்யகா-த்மனி
பரேண பக்திபாவேன லப்தாத்மா முக்த -பந்தன:

வாசுதேவ-வாசுதேவரிடம்; பகவதி-பரமபுருஷ பகவான்; ஸர்வக்ஞே-எல்லாம் அறியும்; ப்ரத்யக் ஆத்மணி-எல்லாரிடமும் இருக்கும் பரமாத்மா; பரேண— எல்லாம் கடந்த; பக்திபாவேன-பக்தித்தொண்டால்; லப்த ஆத்மா—அவரிடம் அமைந்துள்ள; முக்த பந்தன-உலகப் பிடிப்பிலிருந்து விடுதலையடைந்து.

அவர் இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட வாழ்விலிருந்து விடுபட்டார். அனைவரது உள்ளத்தில் ஊடுருவி இருந்து அனைத்தும் அறிந்த பரமாத்மா எனும் வாசுதேவராகிய பரமபுருஷ பகவானுக்கு, அறிவார்ந்த பக்தித் தொண்டு செய்துகொண்டிருந்தார்.

பதம் 3.24.46
ஆத்மானம் ஸர்வ-பூதேஷு பகவந்தமவஸ்திதம்
அபச்யத்ஸர்வ-பூதானி பகவத்யபி சாத்மனி

ஆத்மானம்-பரமாத்மா; ஸர்வ-பூதேஷு-எல்லா வாழும் உயிர் இனங்களிலும்; பசுவந்தம்-பரமபுருஷபகவான்; அவஸ்திதம்— அமர்ந்து; அபச்யத்-அவர் பார்த்தார்; ஸர்வ பூதானி-எல்லாம் வாழும் உயிரினங்கள்; பகவதி-பரமபுருஷ பகவானிடம்; அபி-மேலாக; ச-மற்றும்; ஆத்மனி-பரமாத்மாவிடம்.

பரமபுருஷ பகவான் எல்லாருடைய மனத்திலும் அமர்ந்து இருப்பதை அவர் பார்க்கத் தொடங்கினார்; அதுபோல் எல்லாரும் இறைவனுடன் ஒன்றி இருப்பதையும் கண்டார்; ஏனென்றால் அவரே எல்லாருக்கும் பரமாத்மாஆவார்.

பதம் 3.24.47
இச்சா – த்வேஷ-விஹீனேன ஸர்வத்ர ஸம-சேதஸா
பகவத்- பக்தி யுக்தேன ப்ராப்தா பாகவதீ கதி:

இச்சா-ஆசை; துவேஷ-மற்றும் வெறுப்பு; விஹீனேன-இருந்து விடுபட்ட; ஸர்வத்ர-எங்கும்; ஸம-சமம்; சேதஸா-மனத்துடன்; பகவத்-பரமபுருஷ பகவானிடம்; பக்தியுக்தேன-பக்தித் தொண்டு புரிவதன் மூலம்; ப்ராப்தா-அடையப்பட்டது; பாகவதீகதி:-பக்தரின் சேருமிடம் (வீடு செல்லல், பகவானிடம் திரும்பிச் செல்லல்).

எல்லா வெறுப்பு, விருப்பிலிருந்தும் விடுபட்டு எல்லார்க்கும் சமமாக இருந்த கர்தம முனிவர், மாசில்லாத பக்தித் தொண்டைச் செய்ததால், இறுதியாக பகவானிடம் திரும்பிச் செல்லும் வழியை அடைந்தார்.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “கர்தம முனிவரின் துறவு” எனும் தலைப்பைக் கொண்ட இருபத்து நான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare