அத்தியாயம் – 18
வராக பகவானுக்கும்
அசுரனான ஹிரண்யாட்சனுக்கும் இடையை போர்
பதம் 3.18.1 : மைத்ரேயர் தொடர்ந்தார்: பொய்யான புகழும், செருக்கும் உடைய தைத்யன் வருணனின் சொற்களில் சிறிதளவே கவனம் செலுத்தினான். ஓ! அன்பு விதுரனே, அவன் நாரதரிடமிருந்து பரமபுருஷ பகவானின் இருப்பிடத்தை அறிந்து கொண்டு, கடலின் ஆழத்தை வெகு விரைவாக அணுகினான்.
பதம் 3.18.2 : அங்கு, தன் கொம்புகளின் நுனியில் பூமியைத் தாங்கிக்கொண்டு, ஒளிபொருந்திய சிவந்த கண்களுடன் கூடிய பரமபுருஷ பகவானை, அவருடைய வராக அவதாரத்தால் அந்த அசுரன் கண்டான். பின் அசுரன் சிரித்துக்கொண்டே நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்கு என்றான்.
பதம் 3.18.3 : அசுரன் பகவானை அழைத்தான்: ஓ தேவர்களில் சிறந்தவரே, காட்டுப்பன்றியின் வடிவத்தில் இருப்பவரே, நான் கூறுவதைக் கேளுங்கள். கீழுலகில் வாழ்பவர்களும் இந்த பூமியும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நீங்கள் இதை என் முன்னிலையில் இருந்து எடுக்க இயலாது, என்னால் காயம் அடையாதீர்கள்.
பதம் 3.18.4 : நீ கயவன், நீ எங்களைக் கொல்வதற்காக, எங்கள் எதிரிகளால் பேணிக் காக்கப்பட்டாய், மற்றும் நீ சில அகரர்களை மறைந்திருந்து கொன்றாய், ஓ முட்டாளே உன் சக்தி எல்லாம் வெறும் மாயம், அதனால் இன்று உன்னைக் கொல்வதன் மூலம் என் உறவினர்களுக்கு வாழ்வு அளிக்கிறேன்.
பதம் 3.18.5 : அசுரன் தொடர்ந்தான்: என் கையினால் சுழற்றி எறியப்பட்ட கதையினால் உன் மண்டையோடு நொறுங்கி, நீ கொல்லப்பட்டு விழும் போது, பக்தியினால் உனக்கு வேள்வியும், நைவேந்யமும் தரும் தேவர்களும், முனிவர்களும், வேரற்ற மரங்கள் போல் தானாகவே வீழ்ந்து விடுவார்கள்.
பதம் 3.18.6 : அசுரனின் அம்பு போல் தைக்கும் தீய சொற்களால் பகவான் வேதனைப்பட்ட போதிலும், அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டார். ஆனால் அவருடைய கொம்புகளின் நுனியில் இருந்த பூமி அச்சப் படுவதைக் கண்டு, ஒரு ஆண் யானை, தன் பெண் யானையுடன் ஒரு முதலையால் தாக்கப்படும் பொழுது எவ்வாறு வீறிட்டுக் கொண்டு எழுமோ அதுபோல, அவர் நீரிலிருந்து எழும்பினார்.
பதம் 3.18.7 : தங்கமயமான முடியைக் கொண்ட தலையும், பயம் தரும் கொம்புகளும் உடைய அகரன், முதலை யானையைத் துரத்துவது போல, நீரிலிருந்து எழும் பகவானைத் துரத்தினான். இடி போல் முழங்கிக் கொண்டு அவன் கூறினான் : அறைகூவல் விடுக்கின்ற எதிரியின் முன்னால் இருந்து ஓட உனக்கு வெட்கமாக இல்லையா? வெட்கமற்ற உயிரினங்களுக்குப் பழி என்று எதுவும் கிடையாது.
பதம் 3.18.8 : பகவான், பூமியை, நீரின் மேற்பரப்பில் தன்னுடைய பார்வைக்குள் வைத்து தன்னுடைய சக்தியை, நீரின் மேல் மிதக்கும் சக்தியாக மாற்றி அவளுக்கு அதைக் கொடுத்தார். எதிரி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அண்டத்தைப் படைப்பவராகிய பிரம்மா, பகவானைப் போற்றினார். மற்ற தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிந்தார்கள்.
பதம் 3.18.9 : உடலில் நகைகளும், வளைகளும், அழகிய தங்கத்தாலான போர்க்கவசமும் தரித்த அசுரன் பகவானை, சிறந்த கதையுடன் பின்னாலிருந்து துரத்தினான். பகவான், அவனுடைய துளைக்கும் தீயசொற்களைப் பொறுத்துக் கொண்டார். ஆயினும் அவனுக்குப் பதில் கூற, அவருடைய பயங்கரமான கோபத்தை வெளிப்படுத்தினார்.
பதம் 3.18.10 : பரமபுருஷ பகவான் கூறினார் உண்மையில், நாங்கள் காட்டில் குடியிருக்கும் உயிரினங்கள், உங்களைப் போல நாங்கள் நாய்களை வேட்டையாடுவதற்காகத் தேடிக் கொண்டிருக்கிறோம். மரணத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்றவர் நீங்கள் ஈடுபட்டிருக்கும் வம்புப் பேச்சைக் கேட்டு அஞ்சமாட்டார். ஏனெனில் நீங்கள் மரண விதியினால் கட்டுண்டு இருக்கிறீர்கள்.
பதம் 3.18.11 : உறுதியாக நாங்கள் ரஸா தலத்தில் வாழ்பவர்களின் பாதுகாப்பைத் திருடி விட்டோம். மற்றும் வெட்கமெல்லாம் இழந்து விட்டோம். உன்னுடைய பலம் பொருந்திய கதாயுதத்தினால் தாக்கப்பட்டாலும் கூட, நான் சிறிது நேரம் இந்த நீரிலேயே தங்குவேன், ஏனென்றால், சக்தி வாய்ந்த எதிரியுடன் பகைமை உருவாக்கின பின்பு, எனக்குச் செல்ல வேறு இடம் இல்லை.
பதம் 3.18.12 : நீ பல காலாட்படை வீரர்களுக்குத் தலைவனாக இருக்கலாம். இப்போது எங்களைத் தூக்கி எறிவதற்கு முயற்சியும் எடுக்கலாம். உன் முட்டாள் தனமான பேச்சை விட்டுவிட்டு, எங்களைக் கொல்வதன் மூலம் உன்னுடைய நெருங்கிய உறவினர்களின் கவலையைத் துடைத்து விடு. ஒருவன் செருக்குடையவனாக இருக்கலாம். இருந்த போதிலும், அவன் தன் உறுதிமொழியை நிறைவேற்றத் தவறினால், அவன் அவையில் அமரத் தகுதி இல்லாதவனாகிறான்.
பதம் 3.18.13 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: பரமபுருஷ பகவானால் அறைகூவல் விடப்பட்ட தீயவன் கோபமும் கலக்கமும் மிக்கவனாய், சீண்டப்பட்ட நாகம் போல கோபத்தால் துடித்தான்.
பதம் 3.18.14 : அசுரன் வெகு கோபத்துடன் சீறிக்கொண்டு, அவனது எல்லாப் புலன்களும் கோபத்தால் துடிக்க, விரைவாக பகவானின் மேல் பாய்ந்து, அவரைத் தன் சக்தியுள்ள கதையால் ஓர் அடி அடித்தான்.
பதம் 3.18.15 : தவம் நிறைவேறிய யோகி மரணத்திலிருந்து சாமர்த்தியமாகத் தப்பிப்பது போல, பகவான் தன் மார்பைக் குறிவைத்து எதிரியின் கதையிலிருந்து கடுமையாக வரவிருந்த அடியிலிருந்து விலகி எப்படியோ தப்பினார்.
பதம் 3.18.16 : பரமபுருஷ பகவான் இப்பொழுது அவருடைய கோபத்தை வெளிப்படுத்தி, அசுரனைச் சந்திக்க விரைந்தார். அசுரன் சீற்றத்தில் தன் உதட்டைக் கடித்துக்கொண்டு, தன் கதையை தூக்கிக் கொண்டு, மீண்டும் அதை வேகமாகச் சுழற்றினான்.
பதம் 3.18.17 : பிறகு, பகவான், அவருடைய கதையினால் பகைவனின் வலப்புறப் புருவத்தில் அடித்தார். ஆனால்,ஒ மேலான விதுரனே அசுரன் சண்டை விடுவதில் நிபுணன் ஆகையால், அவன் தன் கதையின் பக்குவமான இயக்கத்தால் தன்னைக் காத்துக் கொண்டான்.
பதம் 3.18.18 : இந்த விதத்தில், அசுரனான ஹர்யக்ஷனும், பரமபுருஷ பகவானும், வெற்றியை விரும்பி, இருவரும் சினம் கொண்டு, தங்கள் கதைகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
பதம் 3.18.19 : போரிடும் இருவருக்கும் இடையில் நல்ல போட்டி இருந்தது. இருவருக்கும் அவர்களின் கூர்மையான கதைகளால் ஏற்பட்ட காயங்கள் அவர்களின் உடல்களில் இருந்தன. மற்றும் குருதியிலிருந்து வந்த நாற்றத்தால் மேலும் மேலும் சீற்றம் கொண்டனர். வெற்றி பெறும் ஆர்வத்தால், அவர்கள் பலவிதமான போரிடும் முறைகளைக் கையாண்டனர். ஒரு பசுவுக்காக இரு காளைகள் புரியும் போரை ஒத்திருந்தது, அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்த போர்.
பதம் 3.18.20 : குரு மரபினைச் சார்ந்தவரே அண்டத்தில் அதிக சுதந்திரம் பெற்ற பிரம்மதேவர். தன்னைப் பின்பற்றுபவர்களுடன் வந்து, காட்டுப்பன்றி வடிவத்தில் தோன்றிய பரமபுருஷ பகவானுக்கும் அசுரனுக்கும் இடையில் பூமிக்காக நடந்த பயங்கரச் சண்டையை அவர் கண்ணுற்றார்.
பதம் 3.18.21 : ஆயிரக்கணக்கான முனிவர்களுக்கும், தத்துவ ஆய்வாளர்களுக்கும் தலைவராகிய பிரம்மா போர் நடக்கும் இடத்தை அடைந்த பிறகு, யாராலும் சண்டையிட முடியாத அளவிற்கு ஈடு இணையற்ற சக்தியை அடைந்த அசுரனைப் பார்த்தார். பிறகு, பிரம்மா முதன் முதலாக, காட்டுப் பன்றியின் வடிவமெடுத்த நாராயணரை கீழ்வருமாறு வேண்டினார்.
பதம்பதங்கள் 3.18.22 – 3.18.23 : பிரபு பிரம்மா கூறினார்: என் அன்பு பகவானே, இந்தக் கயவன் தேவர்களுக்கும், பிராமணர்களுக்கும், பசுக்களுக்கும், மற்றும் அப்பழுக்கில்லாதப் பாதங்களை வணங்கி அடிமையாக இருப்பவர் களுக்கும் தொடர்ந்து தொல்லை தருகிறான். அவர்களை அநாவசியமாக அலைக்கழித்து, அவர்களது பயத்திற்குக் காரணமாக இருக்கிறான். என்னிடமிருந்து பெற்ற வரம் காரணமாக, அவன் தீயவனாகி, எப்போதும் போரிடத் தகுந்தவரைத் தேடிக் கொண்டு, இந்தச் சிறுமைச் செயலுக்காக, அண்டம் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறான்.
பதம் 3.18.24 : பிரம்மதேவர் தொடர்ந்தார்: என் அன்பு பகவானே, பாம்பு போன்ற தீயவனும், மாய வித்தையில் சேர்ந்தவனும், கொடியவனும், தன்னைப் பாதுகாத்துக் கொள்பவனும் ஆன, இந்தக் கயவனுடன் விளையாடத் தேவையில்லை.
பதம் 3.18.25 : பிரம்மா தொடர்ந்தார்: என் அன்பு பகவானே, நீங்கள் தவறு செய்யாதவர். தயவு செய்து தீய காலம் வருவதற்கு முன் இந்தப் பாவமிக்க கயவனைக் கொல்லுங்கள். அவன் தனக்குச் சாதகமான, வல்லமை மிக்க அணுகுமுறையைத் தருவதற்கு முன் கொல்லுங்கள். நீங்கள் சந்தேகம் அற்ற உங்கள் அந்தரங்க சக்தியால் அவனைக் கொல்ல முடியும்.
பதம் 3.18.26 : என் பகவானே, இவ்வுலகை மறைக்கின்ற மாலைநேர இருள் சுற்றிலும் வேகமாகச் சூழ்ந்து கொண்டு வருகிறது. நீங்கள் எல்லா ஆத்மாக்களின் பேராத்மாவாக இருப்பதால் கருணையுடன் அந்த அசுரனைக் கொன்று தேவர்களுக்கு வெற்றியைத் தாருங்கள்.
பதம் 3.18.27 : அபிஜித் எனப்படும், வெற்றி வாய்ப்பு தரும், நண்பகலில் தொடங்கிய, நல்ல நேரம் கடந்து கொண்டு இருக்கிறது. ஆதலால் உங்களுடைய தோழர்களின் நன்மைக்காக, இந்த வல்லமை மிக்க எதிரியை ஒழித்து விடுங்கள்.
பதம் 3.18.28 : இந்த அசுரன் நம் அதிர்ஷ்டவசமாக, தானாகவே இசைந்து உங்களிடம் வத்திருக்கிறான். அவன் மரணம் உங்களால் விதிக்கப் பட்டது. ஆதலால், உங்கள் வழிகளை வெளிப்படுத்தி, மற்போரில் அவனைக் கொன்று, உலகங்களில் அமைதியை நிலை நாட்டுங்கள்.