அத்தியாயம் – 16
வைகுண்டத்தின் வாயிற்காவலர்களான ஜயன், விஜயன் என்பார்
முனிவர்களினால் சபிக்கப்படுதல்
பதம் 3.16.1
ப்ரஹ்மோவாச
இதி தத் க்ருணதாம் தேஷாம் முனீனாம் யோக-தர்மிணாம்
ப்ரதிநந்த்ய ஜகாதேதம் விகுண்ட-நிலயோ விபு:
ப்ரஹ்மா உவாச-பிரம்ம தேவர் கூறினார்; இதி-இவ்வாறு ; தத் – பேச்சு; க்ருணதாம் – புகழ்ந்து; தேஷாம்- அவர்கள்; முனீனாம் -அந்நான்கு முனிவர்கள்; யோக-தர்மிணாம்- பரமருடன் தொடர்பு கொள்வதில் ஈடுபடுதல்; ப்ரதிநந்த்ய-பாராட்டிய பிறகு; ஜகாத- கூறினார்; இதம்—இந்த வார்த்தைகளை; விகுண்ட-நிலய:-கவலைக்கு இடமில்லாத அவரது உறைவிடம்; விபு:-முழுமுதற் கடவுள்.
பிரம்ம தேவர் கூறினார்: இவ்வாறு தம்மைப் பிரார்த்தித்த முனிவர்களைப் பாராட்டிய பிறகு பரலோகத்தை தமது உறைவிடமாகக் கொண்ட முழுமுதற் கடவுள் பின்வருமாறு கூறினார்.
பதம் 3.16.2
ஸ்ரீ பகவான் உவாச
ஏதௌ தௌ பார்ஷதௌ மஹ்யம் ஜயோ விஜய ஏவ ச
கதர்தீ-க்ருத்ய மாம் யத் வோ பஹ்வ் அக்ராதாம் அதிக்ரமம்
ஸ்ரீ பகவான் உவாச- முழுமுதற் கடவுள் கூறினார்; ஏதௌ- இவர்கள் இருவர்; தௌ—இவர்கள்; பார்ஷதௌ—காவலர்கள்; மஹ்யம்- எனது; ஜய:-ஜயன் என்னும் பெயரினன்; விஜய-விஜயன் என்னும் பெயரினன்; ஏவ-உறுதியாக; ச-மேலும்; கதர்தீ-க்ருத்ய— புறக்கணித்ததினால்; மாம்- என்னை; யத்- இந்த; வ:-உமக்கெதிரான; பஹு—பெரிய; அக்ராதாம்—செய்திருக்கின்றனர்; அதிக்ரமம்- குற்றம்.
முழுமுதற் கடவுள் கூறினார்: எனது வாயிற்காவலர்களான ஜயன் மற்றும் விஜயன் என்னும் இவ்விருவரும் என்னை புறக்கணித்த காரணத்தினால் உங்களுக்கு மிகப் பெரிய குற்றம் இழைத்து விட்டனர்.
பதம் 3.16.3
யஸ் த்வ ஏதயோர் த்ருதோ தண்டோ பவத்பிர் மாம் அனுவ்ரதை:
ஸ ஏவானுமதோ ‘ஸ்மாபிர் முனயோ தேவ-ஹேலனாத்
ய:-எவன்; து—ஆனால்; ஏதயோ;-ஜய, விஜயனைப் பொருத்த மட்டில்; த்ருத:—அளிக்கப்பட்டது; தண்ட:-தண்டனை; பவத்பி:- உம்மால்; மாம்-என்னை; அனுவ்ரதை:-பக்தியுடைய; ஸ:-அந்த; ஏவ-உறுதியாக; அனுமத:-அங்கீகரிக்கப்படுகிறது; அஸ்மாபி:- என்னால்; முனய:ஒ, மாமுனிவர்களே; தேவ -உமக்கெதிராக ஹேலனாத்—அக்குற்றத்தின் காரணமாக.
ஓ, மாமுனிவர்களே, என்மீது மிகுந்த பக்தியுடைய நீங்கள் இவர்களுக்கு அளித்த தண்டனையை அங்கீகரிக்கிறேன்.
பதம் 3.16.4
தத் வ: ப்ரஸாதயாமி அத்ய ப்ரஹ்ம தைவம் பரம் ஹி மே
தத் தீதி ஆத்ம-க்ருதம் மன்யே யத் ஸ்வ-பும்பிர் அஸத்-க்ருதா:
தத்-ஆகையினால்; வ:முனிவர்களே; ப்ரஸாதயாமி–நான் உங்களது மன்னிப்பை வேண்டுகிறேன்; அத்ய-இப்பொழுது; ப்ரஹ்ம- அந்தணர்கள்; தைவம்- மிகுந்த நேசிப்பிற்குரியவர்கள்; பரம் – உயர்ந்த; ஹி-ஏனெனில்; மே-எனது; தத்-அக்குற்றம்; ஹி-ஏனென்றால்; இதி-இவ்வாறு; ஆத்ம-க்ருதம்- என்னால் செய்யப்பட்டது; மன்யே-நான் கருதுகிறேன்; யத்-இந்த; ஸ்வ- பும்பி: எனது காவலர்களினால்; அஸத்—க்ருதா:- அவமரியாதை இழைக்கப்பட்டது.
எனது அன்பிற்கும், மிகுந்த நேசிப்பிற்கும் உரியோர் அந்தணரே. எனது காவலர்களினால் உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையானது உண்மையில் என்னால் இழைக்கப்பட்டதேயாகும், ஏனெனில் இக்காவலர்கள் எனது பணியாளர்கள் ஆவர். இக்குற்றம் என்னால் இழைக்கப்பட்டதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன் ஆகையினால் நடந்து விட்ட இச்சம்பவத்திற்காக நான் உங்களது மன்னிப்பினைக் கோருகிறேன்.
பதம் 3.16.5
யன்-நாமானி ச க்ருஹ்ணாதி லோகோ ப்ருத்யே க்ருதாகஸி
ஸோ ‘ஸாது-வாதஸ் தத்-கீர்திம் ஹந்தி த்வசம் இவாமய:
யத்—எவரின்; நாமானி- நாமங்கள்; ச-மேலும்; க்ருஹ்ணாதி- எடுத்துக் கொள்வர்; லோக:-பொது மக்கள்; ப்ருத்யே-ஒரு வேலைக்காரன்; க்ருத-ஆகஸி- ஏதேனும் தவறு செய்தால்; ஸ:- அந்த; அஸாது—வாத:-பழி; தத்- அம்மனிதனின்; கீர்திம் – புகழ்; ஹந்தி – அழிகிறது; த்வசம்-தோலின்; இவ-போன்று; ஆமய:- வெண்குஷ்டம்;
உடலில் ஒரு சிறு புள்ளியாகத் தோன்றும் வெண்குஷ்டமானது எவ்வாறு உடல் முழுவதையும் கெடுத்துவிடுகிறதோ அதுபோல் ஒரு வேலைக்காரன் செய்யும் தவறினால் அவன் எஜமானன் பொது மக்களால் பழிக்கப்படுகிறான்.
பதம் 3.16.6
யஸ்யாம்ருதாமல-யஸ:-ச்ரவணாவகாஹ:
ஸத்ய: புனாதி ஜகத் ஆஸ்வபசாத் விகுண்ட:
ஸோ ‘ஹம் பவத்ப்ய உபலப்த- ஸுதீர்த- கீர்திஸ்
சிந்தியாம் ஸ்வ-பாஹும் அபி வ: ப்ரதிகூல-வ்ருத்திம்
யஸ்ய-எவரது; அம்ருத -அமிர்தம்; அமல- தூய்மையான; யஸ- பெருமைகள்; ஸ்ரவண-கேட்டல்; அவகாஹ:-உட்புகும் பொழுது; ஸத்ய:-உடனடியாக; புனாதி- தூய்மை செய்கிறது; ஜகத்-பிரபஞ்சம்; ஆஸ்வ-பசாத்-தாயைத்தின்னும் புலையர்கள் உள்ளிட்ட; விகுண்ட:- கவலையின்றி; ஸ: -அம்மனிதன்; அஹம்-நான்; பவத்ப்ய:- உம்மிடமிருந்து; உபலப்த-எய்தியது; ஸுதீர்த-புனித யாத்திரைக்குச் சிறந்த இடம்; கீர்தி:-புகழ்; சிந்த்யாம்-துண்டிப்பது; ஸ்வ-பாஹும்- எனது கரத்தினை; அபி-கூட; வ:-உமக்கு: ப்ரதிகூல-வ்ருத்திம்- எதிராக நடந்து கொண்டது.
இவ்வுலகிலுள்ள யாரும், அவன் நாயைச் சமைத்துத் தின்னும் புலையனாக இருந்த போதிலும் எனது நாமம், புகழ்போன்ற பெருமைகளை தனது செவிகளில் கேட்பதின் மூலம் உடனடியாகத் தூய்மையடைகிறான். இப்பொழுது எந்தவித ஐயத்திற்கும் இடமின்றி என்னை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்; ஆகையினால் எனது சொந்தக் கரமாயினும் அது உங்களுக்கு எதிரானச் செயலைச் செய்ததென்றால் அதனைத் துண்டித்தெறியவும் நான் தயங்கமாட்டேன்.
பதம் 3.16.7
யத்- ஸேவயா சரண-பத்ம- பவித்ர- ரேணும்
ஸத்ய: க்ஷதாகில-மலம் ப்ரதிலப்த- சீலம்
ந ஸ்ரீர் விரக்தம் அபி மாம் விஜஹாதி யஸ்யா:
ப்ரேக்ஷா-லவார்த இதரே நியமான் வஹந்தி
யத்- எவரின்; ஸேவயா- சேவையினால்; சரண-பாதங்கள்; பத்ம – தாமரை; பவித்ர—புனிதமான: ரேணும்-தூசு; ஸத்ய:-உடனடியாக: க்ஷத—நீக்கப்படுதல்; அகில-எல்லா; மலம்-பாவங்கள்; ப்ரதிலப்த— அடைதல்; சீலம்-தன்மை; ந-இல்லை: ஸ்ரீ:-அதிர்ஷ்ட தேவதை; விரக்தம்-பற்றின்றி இருத்தல்; அபி-இருந்த போதிலும்; மாம்— என்னை; விஜஹாதி-நீங்குதல்; யஸ்யா:-அதிர்ஷ்ட தேவதையின்; ப்ரேக்ஷா- லவ-அர்த:-சிறிதளவு கருணை பெறுவதற்காக; இதரே- பிறர், பிரம்மதேவர் போன்றவர்கள்; நியமான்- புனிதமான விரதங்கள்; வஹந்தி-கடைப் பிடித்தல்,
பகவான் தொடர்ந்து கூறினார்: நான் எனது பக்தர்களுக்குத் தொண்டனாக இருக்கின்ற காரணத்தினால் எனது தாமரைத் திருவடிகளானது மிகுந்த புனிதமடைந்து அனைத்து வகையான பாவங்களையும் உடனடியாக நீக்குகின்றன. இவ்வாறான தன்மையினை நான் பெற்றிருப்பதினால் அதிர்ஷ்ட தேவதையினிடத்து நான் எந்தவிதமானப் பற்றில்லாதவனாக இருந்த போதிலும்கூட அவள் என்னை விட்டு நீங்குவதே இல்லை. ஆனால் பிறர் அவளது எழிலைப் புகழ்ந்து அவளிடமிருந்து சிறிதளவு கருணையினைப் பெறுவதற்காக புனிதமான விரதங்களையெல்லாம் மேற்கொள்கின்றனர்.
பதம் 3.16.8
நாஹம் ததாத்மி யஜமான-ஹவிர் விதானே
ச்யோதத்-க்ருத-ப்லுதம் அதன் ஹுத-புன்-முகேன
யத் ப்ராஹ்மணஸ்ய முகதஸ் சரதோ ‘னுகாஸம்
துஷ்டஸ்ய மய்ய அவஹிதைர் நிஜ-கர்ம-பாகை:
ந-இல்லை; அஹம்-நான்; ததா-மாறாக; அத்மி – நான் உண்கிறேன்;யஜமான-வேள்வியைச் செய்பவனால்; ஹவி:-அர்ப்பணிக்கப்படும் பொருள்கள்; விதானே-வேள்வித் தீயில்; ச்யோதத்—பெய்வது; க்ருத-நெய்; ப்லுதம்—கலந்து; அதன்- உண்கின்ற; ஹுத—புக்—வேள்வித் தீ; முகேன- வாயினால்; யத்- போன்று; ப்ராஹ்மணல்ய-அந்தணரின்; முகத:-வாயிலிருந்து; சரத:-செயல்படுகின்ற; அனுகாஸம்—கவளங்கள்; துஷ்டஸ்ய- திருப்தியடைதல்; மயி-எனக்கு; அவஹிதை:-அர்ப்பணிக்கப்பட்ட; நிஜ-சொந்தமான; கர்ம—செயல்கள்; பாகை:-பலன்களினால்.
வேள்வித் தீயில் யான் உண்ணுதற்கு உரியதாக அர்ப்பணிக்கப்படும் நிவேதனங்களில் நான் மகிழ்வதில்லை. ஆனால் தமது செயல்களின் பலன்கள் அனைத்தையும் முற்றிலும் எனக்கே அர்ப்பணித்து விட்டவர்களும், எனது பிரஸாதத்தினால் எப்பொழுதும் திருப்தியடைந்திருப்பவர்களுமான அந்தணர்களுக்கு அளிக்கப்படும் சுவை மிகுந்த நறுநெய் ததும்பி வழியும் நிவேதனத்தில் பெரிதும் மகிழ்கிறேன்.
பதம் 3.16.9
யேஷாம் பிபர்மி அஹம் அகண்ட- விகுண்ட – யோக
மாயா-விபூதிர் அமலாங்க்ரி-ரஜ: கிரீடை:
விப்ராம்ஸ் து கோ ந விஷஹேத யத் – அர்ஹணாம்ப:
ஸத்ய: புநாதி ஸஹ-சந்த்ர- லலாம- லோகான்
யேஷாம்- அந்தணர்களின்; பிபர்மி- நான் தாங்குகிறேன்; அஹம்— நான்; அகண்ட-உடைவில்லாத; விகுண்ட- தடையில்லாத; யோக- மாயா -அகச் சக்தி; விபூதி:-வளம்; அமல- தூய; அங்க்ரி-பாதங்களின்; ரஜ:- தூசு; க்ரீடை:-மணிமுடியின்மீது; விப்ரான்- அந்தணர்கள்; து-பிறகு;க:-யார்; ந— இல்லை; விஷஹேத-சுமத்தல்; யத் — பரமபுருஷ பகவானின்; அர்ஹண—அம்ப:-பாதங்களைக் கழுவி வரும் நீர்; ஸத்ய:-உடனே; புநாதி—புனிதப்படுத்துதல்;ஸஹ- உடன்;சந்த்ர—லலாம-சிவபெருமான்; லோகான்—மூன்று உலகங்கள்.
தடையற்ற எனது அகச் சக்தியின் தலைவன் நானே ஆவேன். எனது பாதங்களைக் கழுவி வரும் மீதமுள்ள நீரே கங்கையாகும். இக்கங்கை நதி சிவபெருமானுடன் சேர்ந்து மூவுலகங்களையும் புனிதப்படுத்துகிறது. இதனைச் சிவபிரான் தனது தலையில் தாங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு வைணவன் பாதங்களிலுள்ளத் தூசியினை நான் எனது தலையால் தாங்கிக் கொண்டால், இதைப்போல் தானும் செய்வதற்கு வேறு யாரே மறுக்கக் கூடும்?
பதம் 3.16.10
யே மே தனூர் த்விஜ-வரான் துஹதீர் மதீயா
பூதானி அலப்த-ஸரணானி ச பேத -புத்யா
த்ரக்ஷ்யந்தி அக-க்ஷத-த்ருஸோ ஹி அஹி -மன்யவஸ்-தான்
க்ருத்ரா ருஷா மம குஷந்தி அதிதண்ட – நேது:
யே-இந்த மனிதர்கள்; மே -எனது; தனூ:-உடல்; த்விஜ-வரான்— அந்தணர்களின் சிறந்தோர்; துஹதீ:-பசுக்கள்; மதீயா:-எனக்குத் தொடர்புடையன; பூதானி -உயிர் வாழிகள்; அலப்த-ஸரணானி— பாதுகாப்பற்ற; ச – மேலும்; பேத—புத்யா-வேறுபாடுடையதாகக் கருதி; த்ரக்ஷ்யந்தி— காண்பது; அக—பாவத்தினால்;க்ஷத- அழிகிறது; த்ருஷ:—அவர்களது தீர்ப்பின் செயல்திறமானது ; ஹி-ஏனென்றால்; அஹி-ஒரு பாம்பைப் போன்று; மன்யவ:-ஆத்திரம்; தான்- அதே மனிதர்கள்; க்ருத்ரா:-கழுகு போன்ற தூதர்களினால்; ருஷா— ஆத்திரத்துடன்; மம- எனது; குஷந்தி-கிழித்தல்; அதிதண்ட- நேது:- தண்டனையின் கண்காணிப்பாளாரான யமராஜன்.
அந்தணர்களும், பசுக்களும், பாதுகாப்பற்ற உயிர்களும் எனது சொந்த உடலாவர். என்னிடமிருந்து இவர்களை வேறுபடுத்திப் பார்ப்பவர்களின் நியாயத் தீர்ப்பானது அவர்களது சொந்தப் பாவங்களினாலேயே அழிக்கப்படிருக்கிறது. அவர்கள் கொடிய நாகங்களைப் போன்றவர்கள். மேலும் அவர்கள், பாவிகளின் கண்காணிப்பாளராக விளங்கும் யமராஜனின் கழுகு போன்றத் தூதர்களின் அலகுகளினால் மிகுந்த சினத்துடன் கிழித்தெறியப்படுகின்றனர்.
பதம் 3.16.11
யே ப்ராஹ்மணான் மயிதியா க்ஷிபதோ ‘ர்சயந்தஸ்
துஸ்யத்-த்ருத: ஸ்மித- ஸுதோக்ஷித- பத்ம-வக்த்ரா
வாண்யாநுராக-கலயாத்மஜவத் க்ருணந்த:
ஸம்போதயந்தி அஹம் இவாஹம் உபாஹ்ருதஸ் தை:
யே-இந்தமனிதர்கள்; ப்ராஹ்மணான்-அந்தணர்கள்; மயி- என்னிடத்தில்; தியா-புத்தியுடன்; க்ஷிபத:- கடுமையான வார்த்தைகளை உரைத்தல்; அர்சயந்த:- மரியாதை கொண்டு; துஸ்யத்-மகிழ்ச்சியடைதல்; ஹ்ருத:-உள்ளம்; ஸ்மித-புன்னகை; ஸுதா—அமிர்தம்; உக்ஷித-குளிர்ந்த; பத்ம-தாமரை போன்ற; வக்த்ரா:- முகங்கள்; வாண்யா— வார்த்தைகளுடன்; அநுராக— கலயா- அன்புடன்; ஆத்மஜ-வத் -மைந்தனைப் போன்று; க்ருணந்த:- புகழ்தல்; ஸ்ம்போதயந்தி- சாந்தப்படுத்துதல்; அஹம்-நான்; இவ- போன்று; அஹம்- தான்; உபாஹ்ருத:-கட்டுப்படுத்தப்படுதல்; தை:—அவர்களால்.
மாறாக அந்தணர்கள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், தங்கள் உள்ளம் மகிழ்ந்து, அமிர்தப்புன்னகையினால் தங்கள் தாமரை போன்ற மலர் முகம் ஒளி பெற, அவ்வந்தணர்களை மதிப்பவர்களே என் உள்ளங்கவர்பவர்கள் ஆவர். ஒரு மைந்தன் தன் தந்தையினையும், நான் உங்களையும் அமைதிப்படுத்துவதைப் போல் அவர்களும் அவ்வந்தணர்களை என்னைப்போல் எண்ணி அவர்களைக் குளிர்ச்சியும் அன்பும் பொருந்திய வார்த்தைகளினால் அமைதிப்படுத்துகின்றனர்.
பதம் 3.16.12
தன் மே ஸ்வ – பர்துர் அவஸாயம் அலக்ஷமாணெள
யுஷ்மத்-வ்யதிக்ரம-கதிம் ப்ரதிபத்ய ஸத்ய:
பூயோ மமாந்திகம் இதாம் தத் அநுக்ரஹோ மே
யத் கல்பதாம் அசிரதோ ப்ருதயோர் விவாஸ:
தத் -ஆகையினால்; மே – எனது; ஸ்வ—பர்து:-தங்கள் எஜமானரின்; அவஸாயம் – எண்ணம்; அலக்ஷமாணௌ-அறியாது; யுஷ்மத்-உங்களுக்கெதிராக; வ்யதிக்ரம்-குற்றம்; கதிம்-விளைவு; ப்ரதிபத்ய-வினைபயனை அனுபவித்தல்; ஸத்ய:-உடனடியாக; பூய:-மீண்டும்; மம அந்திகம் – என்னருகில்; இதாம்-பெறுதல்; தத் -அந்த ; அநுக்ர-கருணை; மே-எனக்கு; யத்-இந்த; கல்பதாம்- ஏற்படுத்தப்படட்டும்; அசிரத:- சீக்கிரத்தில்; ப்ருதயோ:- இவ்விருகாவலர்களின்; விவாஸ- வெளியேற்றப்படுதல்.
இவ்விரு காவலர்களும் தங்கள் எஜமானரின் மனதினை நன்கு அறிந்து கொள்ளாது உங்களிடம் வரம்புமீறி நடந்து விட்டனர். ஆகையினால் நான் உங்களிடம் வேண்டுவது இவர்கள் செய்த வினையின் பயனை இவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்றாலும் கூட நீங்கள் இவர்கள் மீது கருணைக் கொண்டு இவர்கள் இருவரும் நீண்ட நாட்களுக்கு வெளியே இல்லாது வெகு சீக்கிரமே என்னை வந்து அடையும்படி உதவி செய்தல் வேண்டும்.
பதம் 3.16.13
ப்ரஹ்மோவாச
அத தஸ்யோதீம் தேவீம் ருஷி – குல்யாம் ஸரஸ்வதீம்
நாஸ்வாத்ய மன்யு-தஷ்டானாம் தேஷாம் ஆத்மாபி அத்ருப்யத
ப்ரஹ்மா-பிரம்ம தேவன்; உவாச-கூறினார்; அத-இப்பொழுது; தஸ்ய-பரமபுருஷ பகவானின்; உஸதீம் — அன்புமயமான; தேவீம்- ஒளிர்கின்ற; ருஷி-குல்யாம்-வேத மந்திரங்களின் ஆற்றொழுக்கு போல்; ஸரஸ்வதீம்- பேச்சு; ந-இல்லை; ஆஸ்வாத்ய-கேட்பது; மன்யு – சினம்; தஷ்டானாம்-கடிபட்ட; தேஷாம்—அம்முனிவர்கள்; ஆத்மா-மனம்; அபி- இருந்த திருப்தியடைதல், போதிலும்; அதிருப்பத – திருப்தியடைதல்.
பிரம்ம தேவர் தொடர்ந்து கூறினார்: சினம் என்னும் பாம்பினால் அம்முனிவர்கள் தீண்டப்பட்டிருந்த போதிலும், அன்பும், ஒளியும் நிறைந்ததும் ஆற்றொழுக்குப் போன்றதும் ஆகிய வேத மந்திர வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டேயிருந்த போது அவர்களின் ஆத்மாக்களுக்குத் திகட்டவேயில்லை.
பதம் 3.16.14
ஸதீம் வ்யாதாய ச்ருண்வந்தோ லக்வீம் குர்வ்-அர்த-கஹ்வராம் விகாஹ்யாகாத-கம்பீராம் ந விதுஸ் தச்-சிகீர்ஷிதம்
ஸதீம்- மேன்மையான; வ்யாதாய- செவிகள் மிகுந்த கவனத்துடன் பெற்ற; ச்ருண்வந்த:-கேட்டல்; லக்வீம்-முறையாகத் தொடுக்கப்பெற்ற; குரு- சிறப்பு வாய்ந்த; அர்த—உட்பொருள்; கஹ்வராம் -புரிந்து கொள்வதற்கு கடினமான; விகாய-ஆழ்ந்து சிந்திப்பதற்குரிய; அகாத-ஆழ்ந்த; கம்பீராம்- கம்பீரமான; ந- இல்லை; விது:-புரிந்து கொள்ள; தத்-பரமபுருஷ பகவானின்; சிகீர்ஷிதம்-எண்ணத்தினை.
பகவானின் மேன்மை மிக்க உரையானது உணர்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் அதன் சிறப்பு வாய்ந்த உட்பொருளும், ஆழங்காண்பதற்கரிய கருப்பொருளின் முக்கியத்துவமே காரணமாகும். அம்முனிவர்கள் அதனைக் கூர்ந்து கவனமுடன் கேட்டு ஆழ்ந்து சிந்திக்கவும் செய்தனர். இருந்தும் பகவான் எதைச் சொல்ல விரும்புகிறார் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
பதம் 3.16.15
தே யோக-மாயயாரப்த- பாரமேஷ்ட்ய-மஹோதயம்
ப்ரோசு: ப்ராஞ்ஜலயோ விப்ரா: ப்ரஹ்ருஷ்டா: க்ஷுபித-த்வச:
தே—அவர்கள்; யோக-மாயயா —அவரது அகச் சக்தி எனப்படும் யோக மாயையினால்; ஆரப்த—வெளிப்படுத்தப்பட்ட; பாரமேஷ்ட்ய- முழுமுதற் கடவுளின்; மஹா-உதயம்—எண்ணற்ற பெருமைகள்; ப்ரோசு:-பேசினர்; ப்ராஞ்ஜலய:-கூப்பியக் கரங்களுடன்; விப்ரா:- அந்த நான்கு அந்தணர்களும்; ப்ரஹ்ருஷ்டா:-மிகுந்த மகிழ்ச்சியடைந்ததினால்; க்ஷுபித -த்வச:-மயிர்க்கூச்செறிய.
அந்நான்கு அந்தணர்களும் இறைவனது தரிசனத்தினால் பெருமகிழ்ச்சி அடைந்து உடலெங்கும் மயிர்க் கூச்செறிந்தனர். தங்கள் உடலெங்கும் ஓர் இன்பப் பரவசம் ஊடுருவிச் செல்வதை அவர்கள் உணர்ந்தனர். பின்னர் அவர்கள், யோகமாயையான அகச் சக்தியின் மூலம் தனது பரம கடவுள் தன்மையின் எண்ணற்றப் பெருமைகளை வெளிப்படுத்தியிருப்பவரானப் பகவானிடம் பின்வருமாறு கூறினர்.
பதம் 3.16.16
ருஷய ஊசு
ந வயம் பகவன் வித்மஸ் தவ தேவ சிகீர்ஷிதம்
க்ருதோ மே ‘நுக்ரஹஷ் சேதி யத் அத்யக்ஷ: பிரபாஷஸே
ருஷய:-முனிவர்கள்; ஊசு:-கூறினர்: ந-இல்லை; வயம்- நாங்கள்; பகவன்—ஓ. முழுமுதற் கடவுளே; வித்ம:-அறிந்தது; தவ- உமது; தேவ-ஓ, தேவனே; சிகீர்ஷிதம்-நாங்கள் செய்ய வேண்டியது; க்ருத:- செய்யப்பட்டிருக்கிறது; மே-எனக்கு; அநுக்ரஹ:- கருணை; ச-மேலும்; இதி-இவ்வாறு; யத்-இந்த அத்யக்ஷ:பரம ஆளுநர்; ப்ரபாஷஸே-நீங்கள் கூறுவது.
முனிவர்கள் கூறினர்: ஓ, முழுமுதற் கடவுளே, நாங்கள் எதைச் செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகிறீர் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லோரையும் ஆள்கின்ற மூலப்பொருளாக நீர் விளங்கிய போதிலும் நாங்கள் ஏதோ உமக்கு நன்மை செய்து விட்டோம் என்பது போல் எங்கள் சார்பாக நீர் பேசுகின்றீர்.
பதம் 3.16.17
ப்ரஹ்மண்யஸ்ய பரம் தைவம் ப்ராஹ்மணா: கில தே ப்ரபோ
விப்ராணாம் தேவ-தேவானாம் பகவான் ஆத்ம-தைவதம்
ப்ரஹ்மண்யஸ்ய- அந்தணக் கலாச்சாரத்தின் பரம இயக்குநர்; பரம் – மிகவுயர்ந்த; தைவம்-நிலை; ப்ராஹ்மண:-அந்தணர்கள்; கில-பிறருக்கு கற்பிப்பதற்காக; தே-உமது; ப்ரபே-ஓ, பகவானே ; விப்ராணாம்- அந்தணர்களின்; தேவ- தேவானாம் தேவர்களால் வணங்கப்படுவதற்குரிய; பகவான்—முழுமுதற் கடவுள்; ஆத்ம—தனது; தைவதம்- வழிபடும் தெய்வம்.
ஓ, பகவானே அந்தணக் கலாச்சாரத்தின் பரம இயக்குநராக நீரே விளங்குகின்றீர், அந்தணர்களை மிகவுயர் நிலையில் வைத்துப் பார்க்கும் உமது இயல்பு பிறருக்கு ஒரு பாடமாக இருக்கின்றது. நீர் ஒருவரே பிறதேவர்களுக்கு மட்டுமல்ல அந்தணர்களுக்கும் கூட உண்மையில் வழிபடுவதற்குரிய பரம தெய்வமாக விளங்குகின்றீர்.
பதம் 3.16.18
த்வத்த: ஸநாதனோ தர்மோ ரக்ஷ்யதே தனுபிஸ் தவ
தர்மஸ்ய பரம குஹ்யோ நிர்விகாரோ பவான் மத:
த்வத்த:-உம்மிடமிருந்து; ஸநாதன:-நித்தியமான; தர்ம:- தர்மம்; ரக்ஷ்யதே – பாதுகாக்கப்படுகிறது; தனுபி:-பல்வேறு விதமானத் தோற்றங்களினால்; தவ-உமது; தர்மஸ்ய-சமய அறநெறிகளின்; பரம:-பரமர்; குஹ்ய:- குறிக்கோள்; நிர்விகார: மாற்றமில்லாதவர்; பவான்—நீர்; மத:-எமது எண்ணம்.
அனைத்து உயிர்களின் நித்திய தர்மத்திற்கும் நீர் ஒருவரே ஆதாரமாக விளங்குகின்றீர், மேலும் உமது முழுமுதற் கடவுள் தன்மையின் பல்வேறு அவதாரங்களினால் நீர் சமய அறநெறிகளை எப்பொழுதும் காத்து வருகின்றீர். அனைத்து சமய அறநெறிகளின் குறிக்கோளாகவும் நீரே இருக்கின்றீர். எம்மைப் பொருத்த மட்டில் நீர் இறுதியற்றவர் மற்றும் காலந்தோறும் மாற்றமின்றி இருப்பவர் ஆவிர்.
பதம் 3.16.19
தரந்தி ஹி அஞ்ஜஸா ம்ருத்யும் நிவ்ருத்தா யத்-அநுக்ரஹாத்
யோகின: ஸ பவான் கிம் ஸ்வித் அநுக்ருஹ்யேத யத் பரை:
தரந்தி—கடப்பது; ஹி-ஏனென்றால்; அஞ்ஜஸா—எளிதில்; ம்ருத்யும்- ஜனன மரணம்; நிவ்ருத்தா-பௌதிக ஆசைகள் அனைத்தையும் துறந்து; யத்-உமது; அநுக்ரஹாத்- கருணையினால்; யோகின:- யோகிகள்; ஸ:-பரமபுருஷ பகவான்; பவான் – நீர்; கிம்- ஸ்வித்-சாத்தியமற்றதாகும்; அநுக்ருஹ்யேத-அருளப்படலாம்; யத்— இந்த; பரை:-பிறரால்.
யோகிகளும், உன்னதமான ஞானிகளும், உமது கருணையினால் உலகியல் ஆசைகள் அனைத்தையும் துறந்து அறியாமைக் கடலினைக் கடக்கின்றனர். அதனால் முழுமுதற் கடவுளைப் பிறர் அருள வேண்டும் என்ற பேச்சுக்கு இடமேயில்லை.
பதம் 3.16.20
யம் வை விபூதிர் உபயாதி அனுவேலம் அன்யைர்
அர்தார்திபி: ஸ்வ-ஸிரஸா த்ருத-பர்த-ரேணு:
தன்யார்பிதாங்க்ரி-துளஸீ-நவ-தாம-தாம்னோ
லோகம் மதுவ்ரத-பதேர் இவ காம- யானா
யம்- எவரை; வை -உறுதியாக; விபூதி:-இலட்சுமி,அதிர்ஷ்டதேவதை; உபயாதி- காத்திருக்கிறாள்; அனுவேலம்-எப்போதாவது; அன்யை:-பிறரால்; அர்த-பௌதிக வசதிகள்; அர்திபி:- விரும்புவோர்களினால்; ஸ்வஸிரஸா—தங்கள் சிரங்களினால்; த்ருத-ஏற்றுக் கொண்டு; பாத- பாதங்களின்; ரேணு:-தூசு; தன்ய- பக்தர்களினால்; அர்பித—அர்ப்பணிக்கப்பட்ட; அங்க்ரி-உமது திருவடிகளில்; துளஸீ-துவரி இலைகள்: நவ-புதிய; தாம- மாலையின் மீது; தாம்ன:-இடம் பெறுவதற்காக; லோகம்-இடம்; மது—வ்ரத—பதே:-வண்டுகளின் அரசன்; இவ-போன்று ; காம யானா—தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வம்.
தனது பாதங்களின் தூசியினைப் பிறர் தலையால் தாங்குகின்ற பெருமையினையுடைய அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமி தேவி, உமது ஆசி பெற்ற பக்தனால் அர்ப்பணிக்கப்பட்டப் புதிய துளசி மாலையில் ராஜ வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கும் திருவடித் தாமரைகளில் தனக்கும் ஓர் இடம் வேண்டும் என்பதற்காக மிகுந்த ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறாள்.
பதம் 3.16.21
யஸ் தாம் விவிக்த-சரிதைர் அனுவர்தமானாம்
நாத்யாத்ரியத் பரம-பாகவத- ப்ரஸங்க:
ஸ த்வம் த்விஜானுபத- புண்ய-ரஜ:-புனீத:
ஸ்ரீவத்ஸு-லக்ஷ்ம கிம் அகா பக- பாஜனஸ் த்வம்
ய- எவர்; தாம்-லெட்சுமி: விவிக்த-முற்றிலும் தூய்மையான; சரிதை:-பக்தித் தொண்டுகள்; அனுவர்தமானாம்-தொண்டு செய்தல்; ந-இல்லை; அத்யாத்ரியத்-பற்றுவைத்தல்;பரம—உயர்ந்த;பாகவத- பக்தர்கள்; ப்ரஸங்க:-பற்று வைத்தல்; ஸ:-பரமபுருஷ பகவான்; த்வம்—நீர்; த்விஜ-அந்தணர்களின்; அனுபத-பாதையில்; புண்ய- புண்ணியம்: ரஜ: -தூசு; புனீத: தூய்மையடைதல்; ஸ்ரீவத்ஸ- ஸ்ரீவத்ஸத்தின்; லக்ஷ்ம-அடையாளம்: கிம்-என்ன; அகா:- நீர் அடைந்திருப்பது; பக—அனைத்து வளங்கள் அல்லது அனைத்து நற்குணங்கள்; பாஜன:-உறைவிடம்; த்வம்-நீர்.
ஓ. பகவானே உமது உன்னத அன்புத் தொண்டில் காலந்தோறும் ஈடுபட்டிற்க்கும் அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமியினிடத்து நீர் பற்று வைப்பதில்லை. மாறாக உமது தூய பக்தர்களின் செயல்களினிடத்து மட்டுமே நீர் அளவு கடந்த பற்றுடையவராக இருக்கின்றீர். இவ்வாறிருக்க எவ்வாறு நீர் அந்தணர்கள் நடந்து சென்ற பாதையின் தூசியினால் தூய்மை பெறக்கூடும் மேலும் எவ்வாறு நீர் உமது மார்பில் இலங்கும் ஸ்ரீவத்ஸ சின்னத்தினால் பெருமை அல்லது அதிர்ஷ்டம் அடைதல் கூடும்?
பதம் 3.16.22
தர்மஸ்ய தே பகவதஸ் த்ரி-யுக த்ரிபி: ஸ்வை:
பத்பிஷ் சராசரம் இதம் த்விஜ- தேவதார்தம்
நூனம் ப்ருதம் தத்-அபிகாதி ரஜஸ் தமஸ் ச
ஸத்வேன நோ வரதயா தனுவா நிரஸ்ய
தர்மஸ்ய-அனைத்து தர்மங்களின் வடிவமானவர்; தே-உமது; பகவத-முழுமுதற் கடவுளின்; த்ரி-யுக- மூன்று யுகங்களிலும் தன்னை வெளிப்படுத்தியவர்; த்ரிபி:- மூன்றினால்; ஸ்வை:- தமக்குரிய; பத்பி:-பாதங்கள்; சர—அசரம்—உயிருள்ள மற்றும் உயிரற்ற; இதம் -இப்பிரபஞ்சம்; த்விஜ-இருபிறப்பாளர்; தேவதா- தேவர்கள்; அர்தம்- நன்மைக்காக; நூனம்- எவ்வாறேனும்; ப்ருதம் -பாதுகாத்தல்; தத்-அப்பாதங்கள்; அபிகாதி— அழிக்கின்ற; ரஜ:- இரஜோ குணம்; தம-தமோகுணம்; ச-மேலும்; ஸத்வேன- தூய நற்குணத்தின்; ந:-எமக்கு; வர -தயா-நல்வரங்கள் அனைத்தையும் அருள; தனுவா—உமது உன்னத வடிவத்தினால்; நிரஸ்ய-நீக்குவீராக.
ஓ, பகவானே நீரே அனைத்துத் தர்மங்களின் வடிவமாக விளங்கு கின்றீர். ஆகையினால் நீர் மூன்று யுகங்களிலும் உம்மைத் தோன்றச் செய்து உயிருள்ளவைகளையும், உயிரற்றவைகளையும் தன்னிடத்தே கொண்டிருக்கும் இப்பிரபஞ்சத்தினைக் காத்தருள்கின்றீர். தூய சத்துவக் குணத்தினாலானதும், எல்லா நல்வரங்களும் அளிப்பதுமான உமது கருணையினால் தேவர்கள் மற்றும் இருபிறப்பாளர்களின் நன்மைக்காக, இரஜோ மற்றும் தமோ குணத்தினை அன்புகொண்டு நீக்கியருள்வீராக.
பதம் 3.16.23
ந த்வம் த்விஜோத்தம-குலம் யதி ஹாத்ம-கோபம்
கோப்தா வ்ருஷ: ஸ்வர்ஹணேன ஸ ஸூன்ருதேன
தர்ஹி ஏவ நங்க்ஷ்யதி சிவஸ் தவ தேவ பந்தா
லோகோ ‘க்ரஹீஷ்யத் ருஷபஸ்ய ஹி தத் ப்ரமாணம்
ந-இல்லை; த்வம்-நீர்; த்விஜ-இருபிறப்பாளரின்; உத்தம- குலம் – உயர்ந்த பிரிவு; யதி-இவ்வாறிருந்தால்; ஹ-உண்மையில்: ஆத்ம- கோபம்- உம்மால் பாதுகாக்கப்படுவதற்குரிய; கோப்தா- காப்பவர்; வ்ருஷ:- மிகச் சிறந்த; ஸூ-அர்ஹணேன- வழிபாட்டினால்; ஸ-ஸூன்ருதேன- இனிமையான வார்த்தைகளுடன்; தர்ஹி-பின்னர்; ஏவ—உறுதியாக; நங்க்ஷ்யதி—தொலைந்து போய்விடும்; சிவ:-புனிதமான; தவ-உமது; தேவ -ஒ. தேவனே; பந்தா:- பாதை; லோக:-பொது மக்கள்; அக்ரஹீஷ்யத்-ஏற்றுக் கொள்வர்; ருஷபஸ்ய-மிகச் சிறந்த; ஹி—ஏனென்றால்; தத்—அந்த; ப்ரமாணம்- அதிகாரமுடைய.
ஓ, பகவானே, இரு பிறப்பாளர்களிலும் உணர்ந்தவர்களைப் பாதுகாப்பவராக நீரே விளங்குகின்றீர், இனிமையான வார்த்தைகளினாலும், வழிபாட்டினாலும் நீர் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால், உமது வலிமை மற்றும் அதிகாரத்தின் கீழ் செயல்படும் பொதுமக்களினால் நிச்சயமாக வழிபாட்டின் மங்களகரமான பாதையானதும் புறக்கணிக்கப்படும்.
பதம் 3.16.24
தத் தே ‘நபீஷ்டம் இவ ஸத்வ-நிதேர் விதித்ஸோ:
க்ஷேமம் ஜனாய நிஜ-சக்திபிர் உத்ருதாரே:
நைதாவதா த்ரி-அதிபதேர் பத விஸ்வ-பர்துஸ்
தேஜ: க்ஷதம் த்வ அவநதஸ்ய ஸ தே விநோத:
தத்-புனிதப் பாதையின் அழிவானது; தே-உம்மால் ; அதநபீஷ்டம் – விரும்பப்படுவதில்லை; இவ- போன்று; ஸத்வ-நிதே:- நற்குணம் அனைத்தின் உறைவிடம்; விதித்ஸோ:-செய்ய விரும்புவதற்கு; க்ஷேமம் – நலன்; ஜனாய-பொதுமக்கள்; நிஜ சக்திபி: -உமது சுயசக்தியினால் உத்ருத-அழிக்கப்படுதல்; அரே:- எதிரானவை; ந-இல்லை; ஏதாவதா-இதனால்; த்ரி-அதிபதே:- மூன்று வகையானப் படைப்புக்களின் எஜமானர்; பத-ஒ, பகவானே; விஸ்வ-பர்து:- பிரபஞ்சத்தைக் காப்பவர்; தேஜ:-சக்தி; க்ஷதம்-குறைதல்; து- ஆனால்; அவநதஸ்ய-பணிவுடன்; ஸ:-அந்த ; தே-உமது; விநோத:-மகிழ்ச்சி.
அனைத்து நற்குணங்களின் உறைவிடமாக நீர் விளங்குவதினால், போற்றுதற்குரிய பகவானே, அப்புனிதப் பாதை அழிவதை நீர் ஒருபோதும் விரும்புவதில்லை. பொதுமக்களின் நலனுக்காக உமது ஆற்றல் மிக்க சக்தியினால் நீர் தீய சக்திகள் அனைத்தையும் அழிக்கின்றீர். நீரே மூன்று படைப்புக்களின் எஜமானராகவும் பிரபஞ்சம் முழுவதையும் பாதுகாப்பவராகவும் விளங்குகின்றீர். ஆகையினால் உமது பணிவார்ந்த தன்மையினால் உமது சக்தி ஒருபோதும் குறைவுபடுவதே இல்லை. மாறாக உமது பணிவினால் நீர் உமது உன்னதமான லீலைகளை வெளிப்படுத்துகின்றீர்.
பதம் 3.16.25
யம் வானயோர் தமம் அதீஸ பவான் விதத்தே
வ்ருத்திம் நு வா தத் அநுமன்மஹி நிர்வ்யலீகம்
அஸ்மாஸுவா ய உசிதோ த்ரியதாம் ஸ தண்டோ
யே (அ)நாகஸெள வயம் அயுங்க்ஷ்மஹி கில்பிஷேண
யம்- எது ; வா- அல்லது; அனயோ:-இவர்கள் இருவரின்; தமம்— தண்டனை; அதீஸ-ஓ, பகவானே; பவான்-உமது மேலாண்மையின் கீழ்; விதத்தே -அளித்தல்; வ்ருத்திம்-நல் வாழ்க்கைக்கு; நு— உறுதியாக; வா -அல்லது; தத்-அந்த; அநுமன்மஹி—நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; நிர்வ்யலீகம்—எந்தவித பொய்மையுமின்றி; அஸ்மாஸு-எங்களுக்கு; வா—அல்லது; ய:-எதுவாயினும்; உசித- முறையானது; த்ரியதாம்-அளிக்கப் படலாம்; ஸ:-அந்த; தண்ட:- தண்டனை; யே-அவர்; அநாகஸௌ-பாவமற்ற; வயம்-நாங்கள்: அயுங்க்ஷ்மஹி-ஒதுக்கப்பட்டது; கில்பிஷேண-சாபத்துடன்.
ஓ பகவானே, ஏதும் அறியாத இவ்விருவாயிற் காவலர்களுக்கோ அல்லது எங்களுக்கோ நீர் விரும்பி அளிக்கும் எந்தவிதமான தண்டனையாக இருந்தாலும் நாங்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வோம். குற்றமற்ற இருவரை நாங்கள் சபித்துவிட்டோம் என்பதை நாங்கள் நன்றாக அறிவோம்.
பதம் 3.16.26
ஸ்ரீ பகவான் உவாச
ஏதௌ ஸுரேதர-கதிம் ப்ரதிபத்ய ஸத்ய:
ஸம்ரம்ப-ஸம்ப்ருத-ஸமாதி-அநுபத்த-யோகௌ
பூய: ஸகாஸம் உபயாஸ்யத ஆஸு யோ வ;
சாபோ மயைவ நிமிதஸ் தத் அவேத விப்ரா:
ஸ்ரீ-பகவான் உவாச- முழுமுதற் கடவுள் கூறினார்; ஏதௌ- இந்த இரு காவலர்களும்; ஸுர-இதர—அகரத்தன்மை; கதிம்- கருப்பை; ப்ரதிபத்ய-பெறுவர்; ஸத்ய:—விரைவில்; ஸம்ரம்ப —ஆத்திரத்தினால்; ஸம்ருத- தீவிரப்படுத்தப்பட்டது; ஸமாதி- மனசினை ஒருமுகப்படுத்துவதினால்; அநுபத்த –உறுதியாக; யோகௌ—என்னுடன் இணைந்து; பூய:-மீண்டும்; ஸகாஸம்- என் முன்னிலையில்; உபயாஸ்யத:- திரும்புவர்; ஆஸு-விரைவில்; ய: – இந்த; வ:-உமது; சாப:- சாபம்; மயா-என்னால்; ஏவ- தனியாக; நிமித:-விடுக்கப்பட்டது; தத் -அந்த; அவேத-அறிவீராக; விப்ரா:-ஓ அந்தணர்களே.
பகவான் பதிலளித்தார்: ஓ, அந்தணர்களே, இவர்களுக்கு நீங்கள் அளித்தத் தண்டனையானது உண்மையில் என்னால் விதிக்கப் பட்டதாகும். ஆகையினால் இவர்கள் அசுர குலத்தில் பிறப்பார்கள். ஆயினும் இவர்கள் சினத்தினால் தூண்டப் பெற்று ஆழ்ந்த சிந்தனை, நினைவு இவற்றின் துணைகொண்டு எப்போதும் என்னோடு உறுதியாக இணைந்திருப்பர். இவர்கள் கூடிய விரைவில் மீண்டும் என்னை அடைவர்.
பதம் 3.16.27
ப்ரஹ்மோவாச
அத தே முனயோ த்ருஷ்ட்வா நயனானந்த-பாஜனம்
வைகுண்டம் தத்-அதிஷ்டானம் விகுண்டம் ச ஸ்வயம்-ப்ரபம்
ப்ரஹ்மா உவாச-பிரம்ம தேவர் கூறினார்; அத-இப்பொழுது; தே—அவர்கள்; முனய;-முனிவர்கள்; த்ருஷ்ட்வா- தரிசித்த பிறகு; நயன-விழிகளினால்; ஆனந்த- ஆனந்தம்; பாஜனம்- உண்டாகி; வைகுண்டம்-வைகுண்ட-லோகம்; தத்—அவரது; அதிஷ்டானம்- உறைவிடம்; விகுண்டம்- முழுமுதற் கடவுள்; ச—மேலும்; ஸ்வயம்- ப்ரபம்—சுய ஒளியுடையவர்.
பிரம்ம தேவர் கூறினார்: சுய ஒளி கொண்ட வைகுண்ட லோகத்தில் முழுமுதற் கடவுளைத் தங்கள் விழிகளினால் தரிசித்துப் பிறகு அம்முனிவர்கள் அவ்வுன்னத உறைவிடத்தினைவிட்டு நீங்கினர்.
பதம் 3.16.28
பகவந்தம் பரிக்ரம்ய ப்ரணீபத்யானுமான்ய ச
ப்ரதிஜக்மு: பரமுதிதா: ஸம்ஸந்தோ வைஷ்ணவீம் ஸ்ரியம்
பகவந்தம் – முழுமுதற் கடவுள்; பரிக்ரம்ய—சுற்றி வலம் வந்த பிறகு; ப்ரணீபத்ய-வந்தனங்களை அர்ப்பணித்தப் பிறகு; அனுமான்ய—கற்றுக் கொண்ட பின்னர்; ச—மேலும்; ப்ரதிஜக்மு:-திரும்பினர்; ப்ரமுதிதா:— மிகுந்த மகிழ்ச்சி கொண்டு; ஸம்ஸந்த:-புகழ்ந்து; வைஷ்ணவீம்— வைணவர்களின் ; ஸ்ரியம்-செல்வம்.
அம்முனிவர்கள் முழுமுதற் கடவுளைச் சுற்றி வலம் வந்து தங்கள் வந்தனங்களை அர்ப்பணித்த பின்னர் வைணவர்களின் தெய்வீக வளங்களை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி எய்தி அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
பதம் 3.16.29
பகவான் அனுகாவ் ஆஹ யாதம் மா பைஷ்டம் அஸ்து ஸம்
ப்ரஹ்ம-தேஜ: ஸமர்தோ ‘பி ஹந்தும் நேச்சே மதம் துமே
பகவான்- முழுமுதற் கடவுள்; அனுகௌ—அவரது இரு காவலர்க்கும்; ஆஹ- கூறினார்; யாதம்- இவ்விடத்தை விட்டுச் செல்லுங்கள்; மா-தேவையில்லை; பைஷ்டம்—அச்சம்; அஸ்து- அடைவீராக: ஸம்-மகிழ்ச்சி; ப்ரஹ்ம-அந்தணரின்; தேஜ:-சாபம்; ஸமர்த:-இயலக் கூடியதாக; அபி —இருந்தும்; ஹந்தும்—பயனற்றுப் போவதற்கு; ந இச்சேவிரும்பவில்லை; மதம்—அனுமதித்தேன்; து— மாறாக; மே – என்னால்.
பகவான் பின்னர் அவரது காவலர்களாக ஜயன் மற்றும் விஜயனிடம் கூறினார்: இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள் அச்சம் தேவையில்லை. அனைத்துப் பெருமைகளும் உங்களுக்கு உண்டாவதாகுக. அந்தணர்களின் சாபத்தினைப் பயனற்றுப் போகச் செய்யும் திறன் எனக்கிருந்த போதிலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன், காரணம் அது எனது ஒப்புதலைப் பெற்றிருக்கிறது.
பதம் 3.16.30
எதத் புரைவ நிர்திஷ்டம் ரமயா க்ருத்தயா யதா
புராபவாரிதா த்வாரி விஸந்தீ மய் உபாரதே
ஏதத்-இப்புறப்பாடானது; புரா-முன்னர்; ஏவ-நிச்சயமாக; நிதிஷ்டம்- சொல்லப்பட்டது; ரமயா- இலட்சுமி தேவியினால்; க்ருத்தயா-சிற்றத்துடன்; யதா—அப்பொழுது; புரா – முன்னர்; அபவாரிதா-தடுக்கப்பட்டது; த்வாரி-வாயிலில்; விஸந்தி-நுழையும் பொழுது; மயி- நான்; உபாரதே-ஒய்வெடுத்துக் கொண்டிருந்த பொழுது.
வைகுண்ட லோகத்திலிருந்து நீங்கள் புறப்பட்டுச் செல்லும் இந்நிகழ்ச்சியானது அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமி தேவியினால் முன்னரேக் கணித்துக் கூறப்பட்டது. அவள் ஒரு நாள் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டாள். ஏனென்றால் அவள் எனது இருப்பிடத்தைவிட்டு நீங்கிச் சென்று மீண்டும் ஒருநாள் நான் துயில் கொண்டிருந்த வேளையில் இங்கே திரும்பி வந்தபொழுது உங்களால் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டாள்.
பதம் 3.16.31
மயி ஸம்ரம்ப-யோகேன நிஸ்தீர்ய ப்ரஹ்ம-ஹேலனம்
ப்ரத்யேஷ்யதம் நிகாஸம் மே காலேனால்பீயஸா புன:
மயி-எனக்கு; ஸம்ரம்ப-யோகேன-சினத்தில் தெய்வீக யோகத்தினைப் பயிற்சி செய்வதினாம்; நிஸ்தீர்ய-விடுதலை பெறுதல்; ப்ரஹ்ம- ஹேலனம் —அந்தணர்களை அவமதித்ததின் விளைவிலிருந்து; பிரத்யேஷ்யதம்-மீண்டும் திரும்பி வருவீர்; நிகாஸம்- அருகில்; மே- எனது; காலேன-உரிய காலத்தில்; அல்பீயஸா-மிக விரைவில்: புன:- மீண்டும்.
பகவான் வைகுண்ட வாசிகளான ஐயன் மற்றும் விஜயனிடம் உறுதியளிக்கும் விதமாகக் கூறினார்: சினத்தில் தெய்வீக யோக முறையினை நீங்கள் பயிற்சி செய்வதின் மூலம் அந்தணர்களிடம் கீழ்ப்படியாததினால் விளைந்த முந்தைய பாவத்தை நீங்கள் இப்போது போக்கிக் கொள்வீர்களாக. மேலும் மிகக் குறுகிய காலத்தில் என்னிடம் நீங்கள் மீண்டும் திரும்பி வருவீராக.
பதம் 3.16.32
த்வாஹ் ஸ்தாவ் ஆதிஸ்ய பகவான் விமான-ஸ்ரேணி-பூஷணம் ஸர்வாதிஸயயா லக்ஷ்ம்யா ஜுஷ்டம் ஸ்வம் திஷ்ண்யம் ஆவிஸத்
த்வா:-ஸ்தௌ— வாயிற்காப்போருக்கு; ஆதிஸ்ய–அவர்களுக்கு வழிகாட்டிவிட்டு; பகவான்- முழுமுதற் கடவுள்; விமான-ஸ்ரேணி- பூஷணம்-பொன்வண்ண ஆகாய விமானங்களினால் எப்பொழுதும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்; ஸர்வ-அதிஸயயா—எல்லா வகையிலும் வளமிக்கோங்கும்; லக்ஷ்மயா-வளங்கள்; ஜுஷ்டம்-அணி செய்யப்பட்ட; ஸ்வம்—அவருக்குரிய; திஷ்ண்யம்-உறைவிடம்: ஆவிஸத்- திரும்பினார்.
இவ்வாறு வைகுண்டத்தின் வாயிலில் அருளிச் செய்த பகவான் பின்னர் பொன்வண்ண ஆகாயவிமானங்களினால் அலங்கரிக்கப்பட்டதும், எல்லா வகையிலும் வளங்களும், செல்வங்களும் நிறைந்திருப்பதுமானத் தனது உறைவிடத்திற்குத் திரும்பிச் சென்றார்.
பதம் 3.16.33
தௌ து கீர்வாண-ருஷபௌ துஸ்தராத் தரி-லோகத:
ஹத-ஸ்ரியௌ ப்ரஹ்ம-சாபாத் அபூதாம் விகத-ஸ்மயௌ
தௌ-அவ்விருவாயிற்காவலர்கள்; து—ஆனால்; கீர்வாண- ருஷபௌ தேவர்களிற் சிறந்தோர்; துஸ்தராத்—விலக்குதற்கு இயலாது; ஹர-லோகத:- பகவான் ஹரியின் உறைவிடமான வைகுண்டத்திலிருந்து; ஹத-ஸ்ரியௌ-அழகும் ஒளியும் இழந்து; ப்ரஹ்ம-சாபாத்—அந்தணரின் சாபத்திலிருந்து; அபூதாம்-ஆயினர்; விகத-ஸ்மயெள வாட்டங்கொண்டு.
தேவர்களில் சிறந்த அவ்விரு வாயிற்காவலர்களும் அந்தணர்களின் சாபத்தினால் அழகும் ஒளியும் இழந்து முகவாட்டமுற்று முழுமுதற் கடவுளின் உறைவிடமான வைகுண்ட லோகத்திலிருந்து கீழே விழுந்தனர்.
பதம் 3.16.34
தத விகுண்ட -திஷணாத் தயோர் நிபதமானயோ:
ஹாஹா-காரோ மஹான் ஆஸீத் விமானாக்ருயேஷு புத்ரகா:
ததா-பிறகு; விகுண்ட-பரமபுருஷ பகவானின்; திஷணாத்— உறைவிடத்திலிருந்து; தயோ:-அவர்கள் இருவரும்; நிபதமானயோ- விழுந்து கொண்டிருத்தல்; ஹாஹா-கார:-உணர்ச்சி மேலீட்டால் அந்தோ, ஐயோ என்று அலறுதல்; மஹான்-சிறந்த; ஆஸீத்- ஏற்பட்டது; விமான-அக்ருயேஷ- சிறந்தவிமானங்களில்; புத்ரகா:- ஓ, தேவர்களே.
ஜயனும், விஜயனும் பகவானின் உறைவிடத்திலிருந்து கீழே விழுந்து கொண்டிருப்பதைத் தங்களது மிகச்சிறந்த விமானங்களில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் உணர்ச்சி மேலீட்டால் வருத்தத்துடன், அந்தோ, ஐயோ என்று கூக்குரலிட்டனர்.
பதம் 3.16.35
தாவ் ஏவ ஹி அதுனா ப்ராப்தௌ பார்ஷத-ப்ரவரௌ ஹரே:
திதேர் ஜடர-நிர்விஷ்டம் காஸ்யபம் தேஜ உல்பணம்
தெள—அவ்விரு வாயிற்காவலர்களும்; ஏவ- உறுதியாக; ஹி- உரையாற்றினார்; அதுனா—இப்பொழுது; ப்ராப்தௌ- பெறப்பட்டு; பார்ஷத- ப்ரவரௌ-முக்கியத் துணைவர்கள்; ஹரே:-முழுமுதற் கடவுள்; திதே:-திதியின்; ஜடர -கருப்பை; நிர்விஷ்டம்-புகுந்து; காஸ்யபம்-கச்யபமுனிவரின்; தேஜ:-சுக்கிலத் தினால்; உல்பணம்— மிகவலிமை வாய்ந்த.
பிரம்ம தேவர் தொடர்ந்து கூறினார்: முழுமுதற் கடவுளின் தலைமை வாயிற்காவலர்களான அவர்கள் இருவரும் இப்போது திதி எனும் தேவகன்னியின் கருப்பையில் புகுந்து கச்யப முனிவரின் வன்மை மிக்க சுக்கிலத்தினால் மூடப்பட்டிருக்கின்றனர்.
பதம் 3.16.36
தயோர் அஸுரயோர் அத்ய தேஜஸா யமயோர் ஹி வ:
ஆக்ஷிப்தம் தேஜ ஏதர்ஹி பகவாம்ஸ் தத் விதித்ஸதி
தயோ:-அவர்களின்; அஸுரயோ:- இரு அசுரர்களின்; அத்ய— இன்று; தேஜஸா-ஆண்மையினால்; யமயோ:-இருவரின்; ஹி- உறுதியாக; வ:-தேவர்களாகிய நீங்கள் அனைவரும்; ஆக்ஷிப்தம்- கொந்தளித்தல்; தேஜ-ஆற்றல்; ஏதர்ஹி-இவ்வாறு நிச்சயமாக; பகவான்-முழு முதற்கடவுள்; தத்-அந்த; விதித்ஸதி—செய்வதற்கு விரும்புதல்;
இந்த இரட்டை அசுரர்களின் ஆற்றலினால் உங்களது சக்தி குறைக்கப்பட்டிருக்கிறது. அதுவே உங்களைத் துன்பத்திற்கும் ஆளாக்கியிருக்கிறது. இதனை நீக்குவதற்கான சக்தி என்னிடம் இல்லை. மேலும் பகவானின் விருப்பத்தின் பேரிலேயே இவையனைத்தும் நடைபெறுகின்றன.
பதம் 3.16.37
விஸ்வஸ்ய ய: ஸ்திதி-லயோத்பவ-ஹேதுர் ஆத்யோ
யோகேஸ்வரைர் அபி துரத்யய-யோகமாய:
க்ஷேமம் விதாஸ்யதி ஸ நோ பகவாம்ஸ் திரியதீஸஸ்
தத்ராஸ்மதீய-விம்ருஸேன கியான் இஹார்த:
விஸ்வஸ்ய-பிரபஞ்சத்தின்; ய-அவர்; ஸ்திதி- காத்தல்; லய- அழித்தல்; உத்பவ-படைத்தல்; ஹேது:-காரணம்; ஆத்ய:- ஆதிபுருஷர்; யோக-ஈஸ்வரை:-யோகத்தின் தலைவர்களினால்; அபி-கூட; துரத்யய-எளிதில் புரிந்து கொள்ள முடியாது; யோக- மாய:-அவரது யோக மாயை சக்தி; க்ஷேமம்-நலன்; விதாஸ்யதி- செய்யும்; ஸ -அவர்; ந-நமது; பகவான்-முழுமுதற் கடவுள்; த்ரி- அதீஸ: ஜட இயற்கையின் முக்குணங்களைக் கட்டுப்படுத்துபவர்; தத்ர-அங்கே;அஸ்மதீய-நம்மால்; விம்ருஸேன-சிந்தித்து; கியான்- என்ன; இஹ-இது விஷயத்தில்; அர்த:-நோக்கம்.
குழந்தைகளே, பகவானே திடமான இயற்கையின் முக்குணங்களையும் கட்டுப்படுத்துபவராக விளங்குகின்றார். மேலும் அவரே இப்பிரபஞ்சத்தினைப் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முச்செயலுக்கும் பொறுப்பாவார். அவரது அதிசயமான படைப்புச் சக்தியான யோக மாயையினை யோகத்தில் தலைசிறந்து விளங்குபவர்களால் கூட எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஆதிபுருஷரான முழுமுதற் கடவுள் மட்டுமே நம்மைக் காக்க வருவார். மேலும் இதனை நாம் பேசிக் கொண்டிருப்பதினால் பகவானுக்கு நம்மால் ஆகக்கூடியது என்ன?
ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “வைகுண்டத்தின் வாயிற்காவலர்களான ஜயன், விஜயன் என்பார் முனிவர்களினால் சபிக்கப்படுதல்” எனும் தலைப்பைக் கொண்ட பதினாவது அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.