அத்தியாயம் – 16
வைகுண்டத்தின் வாயிற்காவலர்களான ஜயன், விஜயன் என்பார்
முனிவர்களினால் சபிக்கப்படுதல்
பதம் 3.16.1 : பிரம்ம தேவர் கூறினார்: இவ்வாறு தம்மைப் பிரார்த்தித்த முனிவர்களைப் பாராட்டிய பிறகு பரலோகத்தை தமது உறைவிடமாகக் கொண்ட முழுமுதற் கடவுள் பின்வருமாறு கூறினார்.
பதம் 3.16.2 : முழுமுதற் கடவுள் கூறினார்: எனது வாயிற்காவலர்களான ஜயன் மற்றும் விஜயன் என்னும் இவ்விருவரும் என்னை புறக்கணித்த காரணத்தினால் உங்களுக்கு மிகப் பெரிய குற்றம் இழைத்து விட்டனர்.
பதம் 3.16.3 : ஓ, மாமுனிவர்களே, என்மீது மிகுந்த பக்தியுடைய நீங்கள் இவர்களுக்கு அளித்த தண்டனையை அங்கீகரிக்கிறேன்.
பதம் 3.16.4 : எனது அன்பிற்கும், மிகுந்த நேசிப்பிற்கும் உரியோர் அந்தணரே. எனது காவலர்களினால் உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையானது உண்மையில் என்னால் இழைக்கப்பட்டதேயாகும், ஏனெனில் இக்காவலர்கள் எனது பணியாளர்கள் ஆவர். இக்குற்றம் என்னால் இழைக்கப்பட்டதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன் ஆகையினால் நடந்து விட்ட இச்சம்பவத்திற்காக நான் உங்களது மன்னிப்பினைக் கோருகிறேன்.
பதம் 3.16.5 : உடலில் ஒரு சிறு புள்ளியாகத் தோன்றும் வெண்குஷ்டமானது எவ்வாறு உடல் முழுவதையும் கெடுத்துவிடுகிறதோ அதுபோல் ஒரு வேலைக்காரன் செய்யும் தவறினால் அவன் எஜமானன் பொது மக்களால் பழிக்கப்படுகிறான்.
பதம் 3.16.6 : இவ்வுலகிலுள்ள யாரும், அவன் நாயைச் சமைத்துத் தின்னும் புலையனாக இருந்த போதிலும் எனது நாமம், புகழ்போன்ற பெருமைகளை தனது செவிகளில் கேட்பதின் மூலம் உடனடியாகத் தூய்மையடைகிறான். இப்பொழுது எந்தவித ஐயத்திற்கும் இடமின்றி என்னை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்; ஆகையினால் எனது சொந்தக் கரமாயினும் அது உங்களுக்கு எதிரானச் செயலைச் செய்ததென்றால் அதனைத் துண்டித்தெறியவும் நான் தயங்கமாட்டேன்.
பதம் 3.16.7 : பகவான் தொடர்ந்து கூறினார்: நான் எனது பக்தர்களுக்குத் தொண்டனாக இருக்கின்ற காரணத்தினால் எனது தாமரைத் திருவடிகளானது மிகுந்த புனிதமடைந்து அனைத்து வகையான பாவங்களையும் உடனடியாக நீக்குகின்றன. இவ்வாறான தன்மையினை நான் பெற்றிருப்பதினால் அதிர்ஷ்ட தேவதையினிடத்து நான் எந்தவிதமானப் பற்றில்லாதவனாக இருந்த போதிலும்கூட அவள் என்னை விட்டு நீங்குவதே இல்லை. ஆனால் பிறர் அவளது எழிலைப் புகழ்ந்து அவளிடமிருந்து சிறிதளவு கருணையினைப் பெறுவதற்காக புனிதமான விரதங்களையெல்லாம் மேற்கொள்கின்றனர்.
பதம் 3.16.8 : வேள்வித் தீயில் யான் உண்ணுதற்கு உரியதாக அர்ப்பணிக்கப்படும் நிவேதனங்களில் நான் மகிழ்வதில்லை. ஆனால் தமது செயல்களின் பலன்கள் அனைத்தையும் முற்றிலும் எனக்கே அர்ப்பணித்து விட்டவர்களும், எனது பிரஸாதத்தினால் எப்பொழுதும் திருப்தியடைந்திருப்பவர்களுமான அந்தணர்களுக்கு அளிக்கப்படும் சுவை மிகுந்த நறுநெய் ததும்பி வழியும் நிவேதனத்தில் பெரிதும் மகிழ்கிறேன்.
பதம் 3.16.9 : தடையற்ற எனது அகச் சக்தியின் தலைவன் நானே ஆவேன். எனது பாதங்களைக் கழுவி வரும் மீதமுள்ள நீரே கங்கையாகும். இக்கங்கை நதி சிவபெருமானுடன் சேர்ந்து மூவுலகங்களையும் புனிதப்படுத்துகிறது. இதனைச் சிவபிரான் தனது தலையில் தாங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு வைணவன் பாதங்களிலுள்ளத் தூசியினை நான் எனது தலையால் தாங்கிக் கொண்டால், இதைப்போல் தானும் செய்வதற்கு வேறு யாரே மறுக்கக் கூடும்?
பதம் 3.16.10 : அந்தணர்களும், பசுக்களும், பாதுகாப்பற்ற உயிர்களும் எனது சொந்த உடலாவர். என்னிடமிருந்து இவர்களை வேறுபடுத்திப் பார்ப்பவர்களின் நியாயத் தீர்ப்பானது அவர்களது சொந்தப் பாவங்களினாலேயே அழிக்கப்படிருக்கிறது. அவர்கள் கொடிய நாகங்களைப் போன்றவர்கள். மேலும் அவர்கள், பாவிகளின் கண்காணிப்பாளராக விளங்கும் யமராஜனின் கழுகு போன்றத் தூதர்களின் அலகுகளினால் மிகுந்த சினத்துடன் கிழித்தெறியப்படுகின்றனர்.
பதம் 3.16.11 : மாறாக அந்தணர்கள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், தங்கள் உள்ளம் மகிழ்ந்து, அமிர்தப்புன்னகையினால் தங்கள் தாமரை போன்ற மலர் முகம் ஒளி பெற, அவ்வந்தணர்களை மதிப்பவர்களே என் உள்ளங்கவர்பவர்கள் ஆவர். ஒரு மைந்தன் தன் தந்தையினையும், நான் உங்களையும் அமைதிப்படுத்துவதைப் போல் அவர்களும் அவ்வந்தணர்களை என்னைப்போல் எண்ணி அவர்களைக் குளிர்ச்சியும் அன்பும் பொருந்திய வார்த்தைகளினால் அமைதிப்படுத்துகின்றனர்.
பதம் 3.16.12 : இவ்விரு காவலர்களும் தங்கள் எஜமானரின் மனதினை நன்கு அறிந்து கொள்ளாது உங்களிடம் வரம்புமீறி நடந்து விட்டனர். ஆகையினால் நான் உங்களிடம் வேண்டுவது இவர்கள் செய்த வினையின் பயனை இவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்றாலும் கூட நீங்கள் இவர்கள் மீது கருணைக் கொண்டு இவர்கள் இருவரும் நீண்ட நாட்களுக்கு வெளியே இல்லாது வெகு சீக்கிரமே என்னை வந்து அடையும்படி உதவி செய்தல் வேண்டும்.
பதம் 3.16.13 : பிரம்ம தேவர் தொடர்ந்து கூறினார்: சினம் என்னும் பாம்பினால் அம்முனிவர்கள் தீண்டப்பட்டிருந்த போதிலும், அன்பும், ஒளியும் நிறைந்ததும் ஆற்றொழுக்குப் போன்றதும் ஆகிய வேத மந்திர வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டேயிருந்த போது அவர்களின் ஆத்மாக்களுக்குத் திகட்டவேயில்லை.
பதம் 3.16.14 : பகவானின் மேன்மை மிக்க உரையானது உணர்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் அதன் சிறப்பு வாய்ந்த உட்பொருளும், ஆழங்காண்பதற்கரிய கருப்பொருளின் முக்கியத்துவமே காரணமாகும். அம்முனிவர்கள் அதனைக் கூர்ந்து கவனமுடன் கேட்டு ஆழ்ந்து சிந்திக்கவும் செய்தனர். இருந்தும் பகவான் எதைச் சொல்ல விரும்புகிறார் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
பதம் 3.16.15 : அந்நான்கு அந்தணர்களும் இறைவனது தரிசனத்தினால் பெருமகிழ்ச்சி அடைந்து உடலெங்கும் மயிர்க் கூச்செறிந்தனர். தங்கள் உடலெங்கும் ஓர் இன்பப் பரவசம் ஊடுருவிச் செல்வதை அவர்கள் உணர்ந்தனர். பின்னர் அவர்கள், யோகமாயையான அகச் சக்தியின் மூலம் தனது பரம கடவுள் தன்மையின் எண்ணற்றப் பெருமைகளை வெளிப்படுத்தியிருப்பவரானப் பகவானிடம் பின்வருமாறு கூறினர்.
பதம் 3.16.16 : முனிவர்கள் கூறினர்: ஓ, முழுமுதற் கடவுளே, நாங்கள் எதைச் செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகிறீர் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லோரையும் ஆள்கின்ற மூலப்பொருளாக நீர் விளங்கிய போதிலும் நாங்கள் ஏதோ உமக்கு நன்மை செய்து விட்டோம் என்பது போல் எங்கள் சார்பாக நீர் பேசுகின்றீர்.
பதம் 3.16.17 : ஓ, பகவானே அந்தணக் கலாச்சாரத்தின் பரம இயக்குநராக நீரே விளங்குகின்றீர், அந்தணர்களை மிகவுயர் நிலையில் வைத்துப் பார்க்கும் உமது இயல்பு பிறருக்கு ஒரு பாடமாக இருக்கின்றது. நீர் ஒருவரே பிறதேவர்களுக்கு மட்டுமல்ல அந்தணர்களுக்கும் கூட உண்மையில் வழிபடுவதற்குரிய பரம தெய்வமாக விளங்குகின்றீர்.
பதம் 3.16.18 : அனைத்து உயிர்களின் நித்திய தர்மத்திற்கும் நீர் ஒருவரே ஆதாரமாக விளங்குகின்றீர், மேலும் உமது முழுமுதற் கடவுள் தன்மையின் பல்வேறு அவதாரங்களினால் நீர் சமய அறநெறிகளை எப்பொழுதும் காத்து வருகின்றீர். அனைத்து சமய அறநெறிகளின் குறிக்கோளாகவும் நீரே இருக்கின்றீர். எம்மைப் பொருத்த மட்டில் நீர் இறுதியற்றவர் மற்றும் காலந்தோறும் மாற்றமின்றி இருப்பவர் ஆவிர்.
பதம் 3.16.19 : யோகிகளும், உன்னதமான ஞானிகளும், உமது கருணையினால் உலகியல் ஆசைகள் அனைத்தையும் துறந்து அறியாமைக் கடலினைக் கடக்கின்றனர். அதனால் முழுமுதற் கடவுளைப் பிறர் அருள வேண்டும் என்ற பேச்சுக்கு இடமேயில்லை.
பதம் 3.16.20 : தனது பாதங்களின் தூசியினைப் பிறர் தலையால் தாங்குகின்ற பெருமையினையுடைய அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமி தேவி, உமது ஆசி பெற்ற பக்தனால் அர்ப்பணிக்கப்பட்டப் புதிய துளசி மாலையில் ராஜ வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கும் திருவடித் தாமரைகளில் தனக்கும் ஓர் இடம் வேண்டும் என்பதற்காக மிகுந்த ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறாள்.
பதம் 3.16.21 : ஓ. பகவானே உமது உன்னத அன்புத் தொண்டில் காலந்தோறும் ஈடுபட்டிற்க்கும் அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமியினிடத்து நீர் பற்று வைப்பதில்லை. மாறாக உமது தூய பக்தர்களின் செயல்களினிடத்து மட்டுமே நீர் அளவு கடந்த பற்றுடையவராக இருக்கின்றீர். இவ்வாறிருக்க எவ்வாறு நீர் அந்தணர்கள் நடந்து சென்ற பாதையின் தூசியினால் தூய்மை பெறக்கூடும் மேலும் எவ்வாறு நீர் உமது மார்பில் இலங்கும் ஸ்ரீவத்ஸ சின்னத்தினால் பெருமை அல்லது அதிர்ஷ்டம் அடைதல் கூடும்?
பதம் 3.16.22 : ஓ, பகவானே நீரே அனைத்துத் தர்மங்களின் வடிவமாக விளங்கு கின்றீர். ஆகையினால் நீர் மூன்று யுகங்களிலும் உம்மைத் தோன்றச் செய்து உயிருள்ளவைகளையும், உயிரற்றவைகளையும் தன்னிடத்தே கொண்டிருக்கும் இப்பிரபஞ்சத்தினைக் காத்தருள்கின்றீர். தூய சத்துவக் குணத்தினாலானதும், எல்லா நல்வரங்களும் அளிப்பதுமான உமது கருணையினால் தேவர்கள் மற்றும் இருபிறப்பாளர்களின் நன்மைக்காக, இரஜோ மற்றும் தமோ குணத்தினை அன்புகொண்டு நீக்கியருள்வீராக.
பதம் 3.16.23 : ஓ, பகவானே, இரு பிறப்பாளர்களிலும் உணர்ந்தவர்களைப் பாதுகாப்பவராக நீரே விளங்குகின்றீர், இனிமையான வார்த்தைகளினாலும், வழிபாட்டினாலும் நீர் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால், உமது வலிமை மற்றும் அதிகாரத்தின் கீழ் செயல்படும் பொதுமக்களினால் நிச்சயமாக வழிபாட்டின் மங்களகரமான பாதையானதும் புறக்கணிக்கப்படும்.
பதம் 3.16.24 : அனைத்து நற்குணங்களின் உறைவிடமாக நீர் விளங்குவதினால், போற்றுதற்குரிய பகவானே, அப்புனிதப் பாதை அழிவதை நீர் ஒருபோதும் விரும்புவதில்லை. பொதுமக்களின் நலனுக்காக உமது ஆற்றல் மிக்க சக்தியினால் நீர் தீய சக்திகள் அனைத்தையும் அழிக்கின்றீர். நீரே மூன்று படைப்புக்களின் எஜமானராகவும் பிரபஞ்சம் முழுவதையும் பாதுகாப்பவராகவும் விளங்குகின்றீர். ஆகையினால் உமது பணிவார்ந்த தன்மையினால் உமது சக்தி ஒருபோதும் குறைவுபடுவதே இல்லை. மாறாக உமது பணிவினால் நீர் உமது உன்னதமான லீலைகளை வெளிப்படுத்துகின்றீர்.
பதம் 3.16.25 : ஓ பகவானே, ஏதும் அறியாத இவ்விருவாயிற் காவலர்களுக்கோ அல்லது எங்களுக்கோ நீர் விரும்பி அளிக்கும் எந்தவிதமான தண்டனையாக இருந்தாலும் நாங்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வோம். குற்றமற்ற இருவரை நாங்கள் சபித்துவிட்டோம் என்பதை நாங்கள் நன்றாக அறிவோம்.
பதம் 3.16.26 : பகவான் பதிலளித்தார்: ஓ, அந்தணர்களே, இவர்களுக்கு நீங்கள் அளித்தத் தண்டனையானது உண்மையில் என்னால் விதிக்கப் பட்டதாகும். ஆகையினால் இவர்கள் அசுர குலத்தில் பிறப்பார்கள். ஆயினும் இவர்கள் சினத்தினால் தூண்டப் பெற்று ஆழ்ந்த சிந்தனை, நினைவு இவற்றின் துணைகொண்டு எப்போதும் என்னோடு உறுதியாக இணைந்திருப்பர். இவர்கள் கூடிய விரைவில் மீண்டும் என்னை அடைவர்.
பதம் 3.16.27 : பிரம்ம தேவர் கூறினார்: சுய ஒளி கொண்ட வைகுண்ட லோகத்தில் முழுமுதற் கடவுளைத் தங்கள் விழிகளினால் தரிசித்துப் பிறகு அம்முனிவர்கள் அவ்வுன்னத உறைவிடத்தினைவிட்டு நீங்கினர்.
பதம் 3.16.28 : அம்முனிவர்கள் முழுமுதற் கடவுளைச் சுற்றி வலம் வந்து தங்கள் வந்தனங்களை அர்ப்பணித்த பின்னர் வைணவர்களின் தெய்வீக வளங்களை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி எய்தி அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
பதம் 3.16.29 : பகவான் பின்னர் அவரது காவலர்களாக ஜயன் மற்றும் விஜயனிடம் கூறினார்: இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள் அச்சம் தேவையில்லை. அனைத்துப் பெருமைகளும் உங்களுக்கு உண்டாவதாகுக. அந்தணர்களின் சாபத்தினைப் பயனற்றுப் போகச் செய்யும் திறன் எனக்கிருந்த போதிலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன், காரணம் அது எனது ஒப்புதலைப் பெற்றிருக்கிறது.
பதம் 3.16.30 : வைகுண்ட லோகத்திலிருந்து நீங்கள் புறப்பட்டுச் செல்லும் இந்நிகழ்ச்சியானது அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமி தேவியினால் முன்னரேக் கணித்துக் கூறப்பட்டது. அவள் ஒரு நாள் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டாள். ஏனென்றால் அவள் எனது இருப்பிடத்தைவிட்டு நீங்கிச் சென்று மீண்டும் ஒருநாள் நான் துயில் கொண்டிருந்த வேளையில் இங்கே திரும்பி வந்தபொழுது உங்களால் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டாள்.
பதம் 3.16.31 : பகவான் வைகுண்ட வாசிகளான ஐயன் மற்றும் விஜயனிடம் உறுதியளிக்கும் விதமாகக் கூறினார்: சினத்தில் தெய்வீக யோக முறையினை நீங்கள் பயிற்சி செய்வதின் மூலம் அந்தணர்களிடம் கீழ்ப்படியாததினால் விளைந்த முந்தைய பாவத்தை நீங்கள் இப்போது போக்கிக் கொள்வீர்களாக. மேலும் மிகக் குறுகிய காலத்தில் என்னிடம் நீங்கள் மீண்டும் திரும்பி வருவீராக.
பதம் 3.16.32 : இவ்வாறு வைகுண்டத்தின் வாயிலில் அருளிச் செய்த பகவான் பின்னர் பொன்வண்ண ஆகாயவிமானங்களினால் அலங்கரிக்கப்பட்டதும், எல்லா வகையிலும் வளங்களும், செல்வங்களும் நிறைந்திருப்பதுமானத் தனது உறைவிடத்திற்குத் திரும்பிச் சென்றார்.
பதம் 3.16.33 : தேவர்களில் சிறந்த அவ்விரு வாயிற்காவலர்களும் அந்தணர்களின் சாபத்தினால் அழகும் ஒளியும் இழந்து முகவாட்டமுற்று முழுமுதற் கடவுளின் உறைவிடமான வைகுண்ட லோகத்திலிருந்து கீழே விழுந்தனர்.
பதம் 3.16.34 : ஜயனும், விஜயனும் பகவானின் உறைவிடத்திலிருந்து கீழே விழுந்து கொண்டிருப்பதைத் தங்களது மிகச்சிறந்த விமானங்களில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் உணர்ச்சி மேலீட்டால் வருத்தத்துடன், அந்தோ, ஐயோ என்று கூக்குரலிட்டனர்.
பதம் 3.16.35 : பிரம்ம தேவர் தொடர்ந்து கூறினார்: முழுமுதற் கடவுளின் தலைமை வாயிற்காவலர்களான அவர்கள் இருவரும் இப்போது திதி எனும் தேவகன்னியின் கருப்பையில் புகுந்து கச்யப முனிவரின் வன்மை மிக்க சுக்கிலத்தினால் மூடப்பட்டிருக்கின்றனர்.
பதம் 3.16.36 : இந்த இரட்டை அசுரர்களின் ஆற்றலினால் உங்களது சக்தி குறைக்கப்பட்டிருக்கிறது. அதுவே உங்களைத் துன்பத்திற்கும் ஆளாக்கியிருக்கிறது. இதனை நீக்குவதற்கான சக்தி என்னிடம் இல்லை. மேலும் பகவானின் விருப்பத்தின் பேரிலேயே இவையனைத்தும் நடைபெறுகின்றன.
பதம் 3.16.37 : குழந்தைகளே, பகவானே திடமான இயற்கையின் முக்குணங்களையும் கட்டுப்படுத்துபவராக விளங்குகின்றார். மேலும் அவரே இப்பிரபஞ்சத்தினைப் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முச்செயலுக்கும் பொறுப்பாவார். அவரது அதிசயமான படைப்புச் சக்தியான யோக மாயையினை யோகத்தில் தலைசிறந்து விளங்குபவர்களால் கூட எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஆதிபுருஷரான முழுமுதற் கடவுள் மட்டுமே நம்மைக் காக்க வருவார். மேலும் இதனை நாம் பேசிக் கொண்டிருப்பதினால் பகவானுக்கு நம்மால் ஆகக்கூடியது என்ன?