அத்தியாயம் – 14
திதி எனும் நங்கை மாலையில் கருவுறுதல்
பதம் 3.14.1
ஸ்ரீ ஸுக உவாச
நிஸம்ய கௌஷாரவிணோபவர்ணிதாம்
ஹரே: கதாம் காரண-ஸூகராத்மன:
புன: ஸ பப்ரச்ச தம் உத்யதாஞ்ஜலிர்
ந சாதித்ருப்தோ விதுரோ த்ருத-வ்ரத:

ஸ்ரீ – ஸூக: உவாச – ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; நிஸம்ய – கேட்டபின்னர்; கௌஷாரவினா – மைத்ரேய முனிவரால்; உபவர்ணி தாம் – விளக்கப்பட்டது; ஹரே: – முழு முதற் கடவுளின்; கதாம் – சரிதங்கள்; காரண – பூமியைத் தூக்கிய காரணத்திற்காக; ஸூகர – ஆத்மன: – வராஹ அவதாரம்; புன: – மீண்டும்; ஸ: – அவர்; பப்ரச்ச வினவினார்; தம் – அவரிடமிருந்து (மைத்ரேயர்); உத்யத – அஞ்ஜலி: – கூப்பிய கரங்களுடன்; ந – இல்லை; ச – மேலும், அதி – த்ருப்த: – மிகுந்த திருப்தியற்று; விதுர: – விதுரர்; த்ருத – வ்ரத: – சபதம் மேற்கொண்டிருப்பவர்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பகவான் வராஹரின் அவதாரத்தினை மாமுனிவர் மைத்ரேயரிடமிருந்து கேட்ட பின்னர் உயர்ந்த விரதம் மேற்கொண்டிருக்கும் விதுரர் அத்துடன் திருப்தியடையாதவராக, கூப்பியக் கரங்களுடன் மைத்ரேய முனிவரிடம் பகவானின் உன்னதச் செயல்களை மேலும் கூறியருளுமாறு வேண்டினார்.

பதம் 3.14.2
விதுர உவாச
தேனைவ து முனி-ச்ரேஷ்ட ஹரிணா யஜ்ஞ-மூர்தினா
ஆதி தைத்யோ ஹிரண்யாக்ஷோ ஹத இதி அனுஸுஸ்ரும

விதுர : உவாச – ஸ்ரீ விதுரர் கூறினார்; தேன – அவரால்; ஏவ – நிச்சயமாக; து – ஆனால்; முனி – ச்ரேஷ்ட – ஓ. முனி சிரேஷ்டரே; ஹரிணா – முழு முதற் கடவுளால்; யஜ்கு – மூர்தினா – வேள்விகளின் வடிவமானவர்; ஆதி – ஆதி: தைத்ய: – அசுரன்: ஹிரண்யாக்ஷ: – இரண்யாட்சன் என்னும் பெயரினன்; ஹத – கொல்லப்பட்டது; இதி – இவ்வாறு; அனுஸுஸ்ரும – பரம்பரையாகக் கேட்டது.

ஶ்ரீ விதுரர் கூறினார்: ஓ, மாமுனிவரே, ஆதி அசுரனான இரண்யாட்சன் வேள்விகளின் வடிவமான முழுமுதற்கடவுளாகிய பகவான் வராஹரால் கொல்லப்பட்டான் என்பதை நான் சீட பரம்பரையின் வாயிலாக கேட்டிருக்கிறேன்.

பதம் 3.14.3
தஸ்ய சோத்தரத: க்ஷௌணீம் ஸ்வ-தம்ஷ்ட்ராக்ரேண லீலயா
தைத்ய-ராஜஸ்ய ச ப்ரஹ்மன் கஸ்மாத் தேதோர் அபூன் ம்ருத:

தஸ்ய – அவரது; ச – மேலும்; உத்தரத: – தூக்கும் பொழுது; க்ஷௌணீம் – பூமி கிரஹம்; ஸ்வ – தம்ஷ்ட்ர – அக்ரேண – தமது தந்தங்களின் நுனியினால்; லீலயா – அவரது லீலைகள்; தைத்ய – ராஜஸ்ய – அசுரர்களின் அரசன்; ச – மேலும்; ப்ரஹ்மன் – ஓ அந்தணரே; கஸ்மாத் – எதிலிருந்து; ஹேதோ:- காரணம்: அபூத் – இருந்தது; ம்ருத: – யுத்தம்.

பூமியைக் கடலிலிருந்து தூக்கி வந்து திருவிளையாடல் புரிந்த பகவான் வராஹருக்கும் அசுர மன்னனுக்கும் ஏன் யுத்தம் நடந்தது? அந்தணரே, அதன் காரணம் யாது?

பதம் 3.14.4
ச்ரத்ததானாய பக்தாய ப்ரூஹி தஜ் ஜன்ம – விஸ்தரம்
ருஷே ந த்ருப்யதி மன: பரம் கௌ தூஹலம் ஹிமே

ச்ரத்ததானாய – நம்பிக்கையுள்ள ஒருவருக்கு; பக்தாய – ஒரு பக்தனுக்கு: ப்ரூதி – அருள் கூர்ந்து கூறவும்; தத் – அவரது; ஜன்ம – தோற்றம்; விஸ்தரம் – விளக்கமாக; ருஷே – ஒ. மாமுனிவரே; ந – இல்லை: திருப்யதி – திருப்தியடைவது; மன: மனம்; பரம – மிகுந்த; கௌதூஹலம் – அறியும் அவா : ஹி – உறுதியாக; மே – எனது.

புதியனவற்றை அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவல் என் மனதில் அதிகரிக்கிறது. மேலும் பகவானின்,அவதாரத் தோற்றத்தினைப் பற்றிக் கேட்கக் கேட்கத் திகட்டுவதே இல்லை. ஆகையினால் நம்பிக்கை கொண்ட ஒரு பக்தனுக்கு அவரைப் பற்றி மேலும் மேலும் விளக்கியருள்வீராக.

பதம் 3.14.5
மைத்ரேய உவாச
ஸாது வீர த்வயா ப்ருஷ்டம் அவதார-கதாம் ஹரே:
யத் த்வம் ப்ருச்சஸி மர்த்யானாம் ம்ருத்யு-பாஸ-விஸாதனீம்

மைத்ரேய: உவாச – மைத்ரேயர் கூறினார்: ஸாது – பக்தன்; வீர – ஓ, வீரனே; த்வயா – உன்னால்; ப்ருஷ்டம் – வினவப்பட்டது; அவதார – கதாம் – பகவானின் அவதாரங்களைப் பற்றிய சரிதம்; யத் – எது; த்வம் – உன்னால்; ப்ருச்சஸி – என்னிடம் கேட்டது; மர்த்யானாம் – மரணத்தை இறுதியில் அடைவதற்கே பிறந்துள்ளோர்; ம்ருத்யு – பாஸ – ஜன மரணச் சங்கிலி; விஸாதனீம் – விடுதலையின் ஆதாரம்.

மைத்ரேய மாமுனிவர் கூறினார்: ஓ. வீரனே, நீ என்னிடம் கேட்டறிய விழைந்தது ஒரு பக்தனுக்கு மிகவும் பொருத்தமானதானதாகும். ஏனெனில் அது முழுமுதற்கடவுளின் அவதாரங்களைப் பற்றியதாகும். மரணமே எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் ஜனன மரணப் பிணைப்பின் விடுதலைக்கு அவர் ஒருவரே ஆதாரம் விளங்குகின்றார்.

பதம் 3.14.6
யயோத்தானபத: புத்ரோ முனினா கீதயார்பக:
ம்ருத்யோ: க்ருத்வைவ மூர்த்னி அங்க்ரிம் ஆருரோஹ ஹரே: பதம்

யயா—அதனால்;உத்தானபத:- மன்னன் உத்தானபாதன்; புத்ர:- புத்திரன்; முனினா-முனிவரால்; கீதயா-பாடப் பெற்று: அர்பக: ஒரு குழந்தை; ம்ருத்யோ-மரணத்தின்; க்ருத்வா-இட்டு; ஏவ- உறுதியாக; மூர்த்னி—தலையின் மீது; அங்க்ரிம்—பாதங்களை; ஆருரோஹ- ஏறினால்; ஹரே:-முழுமுதற் கடவுளின்; பதம்-உறைவிடத்திற்கு.

இவ்வீர சரிதங்களைப் பற்றி நாரதமுனிவரிடம் கேட்டறிந்த மன்னன் உத்தானபாத மன்னனின் மைந்தனாகிய துருவன் முழுமுதற் கடவுளின் ஞானம் பெற்றதோடு, மரணத்தின் தலையில் கால் வைத்து ஏறி பகவானின் உறைவிடத்தையும் அடைந்தார்.

பதம் 3.14.7
அதாத்ராபீதிகாஸோ ‘யம் ஸ்ருதோ மே வர்ணித: புரா
ப்ரஹ்மணா தேவ-தேவேன தேவானாம் அனுப்ரூச்சதாம்

அத-இப்பொழுது; அத்ர— இவ்விஷயமாக; அபி-மேலும்; இதி ஹாஸ:- சரித்திரம்; அயம்- இந்த; ஸ்ருத:-கேட்டல் மே என்னால்; வர்ணித:- வர்ணிக்கப்பட்டது; புரா—முன்னொரு காலத்தில்; ப்ரஹ் மணா-பிரம்ம தேவரால்; தேவ-தேவேன- தேவர்களுக்கெல்லாம் உயர்ந்த தேவர்; தேவானாம் – தேவர்களினால்; அனுப்ருச் சதாம் – கேட்டது.

பகவான் வராஹருக்கும், இரண்யாட்சனுக்கும் (அசுரன்) நடைபெற்ற யுத்தம் பற்றிய வரலாற்றினை, முன்னொரு சமயம் தேவர்களுக்கெல்லாம் உயர்ந்த தேவரான பிரம்ம தேவன் சக தேவர்களிடம் விவரித்துக் கொண்டிருந்த போது நான் கேள்விப்பட்டேன்.

பதம் 3.14.8
திதிர் தாக்ஷாயணீ க்ஷத்தர் மாரீசம் கஸ்யபம் பதிம்
அபத்ய-காமா சகமே ஸந்த்யாயாம் ஹ்ருச்-சயார்திதா

திதி:-திதி என்பவன்; தாக்ஷாயணீ-தக்ஷனின் மகள்; க்ஷத்த:- ஓ, விதுரனே; மாரீசம்- மரீசியின் மைந்தர்; கஷ்யபம்- கச்யபர்; பதிம்- அவள் கணவர்; அபத்ய-காமா-குழந்தை பெறவேண்டும் என்னும் விருப்பத்தில்; சகமே-வேண்டினால்; ஸந்த்யாயாம்-மாலையில்; ஹ்ருத்—ஸய-பாலுறவு ஆசை; அர்திதா—துன்புறுத்தியதால்.

தட்சனின் புதல்வியான திதி, குழந்தை வேண்டும் என்பதற்காக மரீசியின் மைந்தனும் தனது கணவருமான கச்யபரிடம் மாலை நேரத்தில் உடலுறவு கொள்ள விரும்பினாள்.

பதம் 3.14.9
இஷ்ட்வாக்னி-ஜிஹ்வம் பயஸா புருஷம் யஜுஷாம் பதிம்
நிம்லோசதி அர்க ஆஸீனம் அக்னி-அகாரே ஸமாஹிதம்

இஷ்ட்வா-வழிபட்ட பின்னர்; அக்னி-அக்கினி ஜிஹ்வம்- நாக்கு; பயஸா-நிவேதனத்தினால்; புருஷம்-பரமபுருஷருக்கு; யஜுஷாம்-எல்லா கேள்விகளிலும்; பதிம் – பதியாக; நிம்லோசதி- மறையும் பொழுது: அர்கே-சூரியன்; ஆஸீனம் – ஆசனத்தில் அமர்ந்து; அக்னி—அகாரே-வேள்விக் கூடத்தில்; ஸமாஹிதம்-முற்றிலும் சமாதி நிலையில்.

மேற்றிசையில் சூரியன் மறைந்தான். யாகத் தீயை நாவாகக் கொண்ட முழுமுதற் கடவுளுக்கு நிவேதனங்களைப் படைத்த பின்னர் முனிவர் சமாதியில் அமர்ந்தார்.

பதம் 3.14.10
ஏஷ மாம் த்வத் -க்ருதே வித்வன் காம ஆத்த-ஸராஸன:
துநோதி தீனாம் விக்ரம்ய ரம்பாம் இவ மதங்கஜ

திதி: உவாக-எழில் மங்கை திதி கூறினாள்; ஏஷ:- இவையெல்லாம்; மாம் – எனக்கு; த்வத்-க்ருதே-உமக்கு; வித்வன்-ஓ, கற்றறிந்தவரே; காம: – காமன் (மன்மதன்); ஆத்த ஸராஸன: தனது அம்புகளினால்; துநோதி-துன்புறுத்துகிறான்; தீனாம் – ஏழை என்னை; விக்ரம்ய – தாக்குகிறான்; ரம்பாம்- வாழை மரம்; இவ-போன்று மதம் – கஜ:- மதங் கொண்ட யானை.

அப்பொழுது எழில் மங்கை திதி தனது இச்சையினை எடுத்துரைத்தாள். ஓ, கற்றறிந்தவரே, மதங் கொண்ட யானை வாழைக்கன்றினை மிதித்துச் சீர்குலைப்பதைப் போல் மன்மதன் தனது மலர்க்கணைகளினால் என்னைத் தொல்லைப்படுத்துகிறான்.

பதம் 3.14.11
தத் பவான் தஹ்யமானாயாம் ஸ-பத்னீனாம் ஸம்ருத்திபி:
ப்ரஜாவதீனாம் பத்ரம் தே மய் ஆயுங்க்தாம் அனுக்ரஹம்

தத்—ஆகையினால்; பவான் – நீர்; தஹ்யமானாயாம் – துன்பப்படுகிறேன்; ஸ – பத்னீனாம் – சக கிழத்திகளின்; ஸம்ருத்திபி:- வளங்களினால்; ப்ரஜா – வதீனாம் – குழந்தைகள் உடையவர்களின்; பத்ரம் – எல்லா வளமும்; தே-உமக்கு: மயி – எனக்கு; ஆயுங்க்தாம் – எல்லா வழிகளிலும் எனக்கு; அனுக்ரஹம் கருணை.

ஆகையினால் உமது முழுக் கருணையினையும் என்மீது வைப்பதின் மூலம் என்னிடம் அன்புடன் நடந்து கொள்வீராக. எனது சக கிழத்திகளின் வளத்தினைக் காண நான் துன்புறுகிறேன், எனக்கும் மழலைச் செல்வம் வேண்டுமென்று விரும்புகிறேன். இதனை நிறைவேற்றுவதின் மூலம் நீரும் மகிழ்ச்சியடையலாம்.

பதம் 3.14.12
பர்தரி ஆப்தோருமானானாம் லோகான் ஆவிஸதே யஸ:
பதிர் பவத்-விதோ யாஸாம் ப்ரஜயா நனு ஜாயதே

பந்தரி—கணவனால்; ஆப்த – உருமானானம் அன்பிற்குரியவர்கள்; லோகான் – உலகில்; ஆவிஸதே – விரிவடைதல்; யஸ: – புகழ்; பதி:- கணவன்; பவத்-வித:-உம்போன்ற நல்லவர்கள்; யாஸாம் – அவர்களின்; ப்ரஜயா – குழந்தைகளினால்; நனு – உறுதியாக; ஜாயதே – விரிவடைகிறது.

ஒரு பெண் அவளது கணவனின் ஆசியினாலேயே இவ்வுலகில் கௌரவிக்கப்படுகிறான். உம்போன்ற கணவன்மார்களோ புதல்வர்களைப் பெறுவதினால் புகழடைகின்றனர். ஏனெனில் உமது படைப்பின் நோக்கமே உயிர்களைப் பெருக்குவதுதானே!

பதம் 3.14.13
புரா பிதா நோ பகவான் தக்ஷோ துஹித்ரு–வத்ஸல:
கம் வ்ருணீத வரம் – வத்ஸா இதி அப்ருச்சத ந: ப்ருதக்

புரா-முனனர்; பிதா-தந்தை; ந:-எங்கள்; பகவான் – மிகுந்த வளமிக்க; தக்ஷ: – தக்ஷன்; துஹித்ரு-வத்ஸல:-தன் புதல்விகளிடத்து மிகுந்த பாசமுடையவர்; கம்-அவருக்கு; வ்ருணீத—நீ ஏற்றுக் கொள்ள விரும்பும்; வரம்—கணவன்; வத்ஸா:-ஓ, என் மக்களே; இதி – இவ்வாறு; அப்ருச்சத – கேட்டுக் கொண்டார்; ந:-எம்மிடம்; ப்ருதம்- தனிப்பட்ட முறையில்.

மிகுந்த செல்வமுடையவரும், தனது புதல்விகளிடம் மிக்க அன்புடையவருமான எங்களது தந்தை தக்ஷன்; நீண்ட நாட்களுக்கு முன்னர், எங்களிடம் தனியே யாரை நீங்கள் உங்கள் கணவராக வரிக்கப் போகிறீர்கள் என்று கேட்டார்.

பதம் 3.14.14
ஸ விதிவாத்மஜானாம் நோ பாவம் ஸந்தான-பாவன:
த்ரயோதஸாததாத் தாஸாம் யாஸ் தே ஸீலம் அநுவ்ரத:

ஸ:-தக்ஷன்; விதித்வா-புரிந்து கொண்டு; ஆத்ம-ஜானாம்- புதல்விகளின்; ந:- எங்கள்; பாவம் – எண்ணத்தை; ஸந்தான- குழந்தைகள்; பாவன:-நலன் விரும்பி; திரயோதஸ-பதின் மூன்று; அததாத்-அளித்தார்; தாஸாம்—அவர்கள் அனைவரையும்; யா – அவர்களை; தே – உமது : ஸீலம் – நடத்தை; அனுவ்ரதா:- எல்லோரும். நம்பிக்கையுடையோர்.

எங்களது நலத்தில் மிகுந்த அக்கறையுடைய எங்கள் தந்தை தக்ஷன், எங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு தமது பதின்மூன்று புதல்விகளையும் உமக்கு மணமுடித்துக் கொடுத்தார். அன்றிலிருந்து நாங்கள் அனைவரும் உம்மிடம் முழு நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறோம்.

பதம் 3.14.15
அத மே குரு கல்யாணம் காமம் கமல-லோசன
ஆர்தோபஸர்பணம் பூமன் அமோகம் ஹி மஹீயஸி

அத-ஆகையினால்; மே-எனக்கு; குரு-அன்புடன் அருள்வீர்; கல்யாணம்-ஆசி; காமம் – இச்சை; கமல – லோசன—ஓ, கமலக் கண்ணீரே; ஆர்த – துன்புறுவோரின்; உபஸர்பணம் – அணுகுவோர்; பூமன் – ஓ, சிறந்தோரே; அமோகம்-தோல்வியின்றி: ஹி – உறுதியாக; மஹீயஸி – ஒரு சிறந்த மனிதருக்கு.

ஒ, செந்தாமரை விழிகளுக்குச் சொந்தக்காரரே, எனது இச்சையினைத் தீர்த்து வைக்கும் ஆசியினை எனக்கு அன்புடன் அருள்வீராக. துன்பமுறும் ஒருவன் அது நீங்கும் பொருட்டு உயர்ந்தவரை அணுகினால் அவனது வேண்டுகோள் வீணாகப் போகாது.

பதம் 3.14.16
இதி தாம் வீர மாரீச: க்ருபணாம் பஹு-பாஷிணீம்
ப்ரத்யாஹானுனயன் வாசா ப்ரவ்ருத்தானங்க-கஸ்மலாம்

இதி—இவ்வாறு; தாம்-அவளுக்கு; வீர-ஒ, வீரனே; மாரீச – மரீசியின் மைந்தன் (காச்யபர்); க்ருபணாம் – ஏழைக்கு: பஹு – பாஷிணீம்-மிகுந்த பேச்சினள்; ப்ரத்யாஹ – பதிலிறுத்தார்; அனுனயன் — சமாதானப்படுத்தும்; வாசா-வார்த்தைகளினால்; ப்ரவ்ருத்த – உணர்ச்சிவயப்பட்டு; அனங்க—இச்சை; கஸ்மலாம் – மாசுற்றவள்.

சிறந்த வீரனே (விதுரா) இவ்வாறு இச்சை என்னும் குறையினால் பீடிக்கப்பட்ட திதி, ஏழையாகி இரங்கலுற்றதும் மரீசியின் மைந்தன் (கச்யபர்) அவளைத் தகுந்த வார்த்தைகளினால் சமாதானப்படுத்தினார்.

பதம் 3.14.17
ஏஷ தே ஹம் விதாஸ்யாமி ப்ரியம் பீரு யத் இச்சஸி
தஸ்யா: காமம் ந க: குர்யாத் ஸித்திஸ் த்ரைவர்கிகீ யத:

ஏவு : – இந்த; தே – உனது வேண்டுகோள்; அஹம்—நான்; விதாஸ்யாமி – நிறைவேற்றுவேன்; ப்ரியம்-பிரியமானவளே; பீரு-ஒ, பாதிக்கப்பட்டவளே; யத்-என்ன; இச்சஸி—உனது இச்சை; தஸ்யா:- அவள்; காமம் – இச்சைகள்; ந – இல்லை; க: – யார்; குர்யாத் – நிறைவேற்றுவார்; ஸித்தி:-மோக்ஷ ஸித்தி ; த்ரைவர்கிகீ-மூன்று; யத:-யாரிடமிருந்து.

ஓ, துன்பத்தினால் வருந்துபவளே, உனது விருப்பம் எதுவாயினும் உடனடியாக அதை நான் நிறைவேற்றுவேன். உன்னைத் தவிர வேறு யார் விடுதலைக்கான மூன்று நியதிகளுக்கு ஆதாரமாக உள்ளார்?

பதம் 3.14.18
ஸர்வாஸ்ரமான் உபாதாய ஸ்வாஸ்ரமேண களத்ரவான்
வ்யஸனார்ணவம் அத்யேதி ஜல-யானைர் யதார்ணவம்

ஸர்வ – எல்லாம்; ஆஷ்ரமான்-சமூகப் பிரிவுகள்; உபாதாய- நிறைவேற்றுவதற்கு; ஸ்வ-தனது; ஆஷ்ரமேண—சமூகப் பிரிவுகளினால்; கனத்ர—வான்-மனைவியுடன் ஒருவன் வாழ்வது; வ்யஸன—அர்ண வம்-பௌதீக வாழ்வு என்னும் அபாயகரமானக் கடல்; அத்யேகி—ஒருவன் கடப்பதற்கு; ஜல-யானை: – படகு; யதா- போன்ற; அர்ணவம்-கடல்.

நீரில் மிதந்து செல்லும் படகு போன்றவற்றினால் ஒருவன் கடலைக் கடப்பது போல், ஆபத்து நிறைந்த உலக வாழ்வு என்னும் கடலினை ஒருவன் மனைவியுடன் இல்வாழ்க்கை நடத்துவதன் மூலமே கடக்க முடியும்.

பதம் 3.14.19
யாம் ஆஹுர் ஆத்மனோ ஹி அர்தம் ச்ரேயஸ்-காமஸ்ய மானினி
யஸ்யாம் ஸ்வ-துரம் அத்யஸ்ய புமாம்ஸ் சரதி விஜ்வர:

யாம் – மனைவி என்பவள்; ஆஹு: – கூறப்படுகிறது; ஆத்மன: – உடலின்; ஹி – இவ்வாறு; அர்தம்-பாதி; சீரேய:- நலனில்; காமஸ்ய- அனைத்து விருப்பங்களின்; மானினி-ஓ, மரியாதைக்குரியவளே; யஸ்யாம் – அவளிடத்தில்; ஸ்வ – துரம் – அனைத்துப் பொறுப்புக்களும்; அத்யஸ்ய-ஒப்படைத்து; புமான்-ஒரு மனிதன்; சரதி-செல்கிறான்; விஜ்வர:-கவலை ஏதுமின்றி.

ஓ, மரியாதைக்குரியவளே, ஒரு மனைவி மிகவும் உதவிகரமாக இருப்பதினாலேயே அவள் ஒரு ஆடவனின் உடலின் நற்பாதி என்று அழைக்கப்படுகிறாள். காரணம் அவள் அனைத்து மங்களச் செயல்களிலும் பங்கு பெறுகிறாள். ஆதலால் ஒரு ஆண் தன் மனைவியிடம் அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைத்துவிட்டு கவலையின்றி வாழ முடியும்.

பதம் 3.14.20
யாம் ஆஸ்ரித்யேந்த்ரியாராதீன் துர்ஜயான் இதராஸ்ரமை
வயம் ஜயேம ஹேலாபிர் தஸ்யூன் துர்க-பதிர் யதா

யாம் – அவளை; ஆஸ்ரித்ய-அடைக்கலம் புகுவது; இந்த்ரிய- புலன்கள்; அராதீன்-பகைவர்; துர்ஜயான்—வெற்றி கொள்வதற்குக் கடினமான ; இதர—இல்லறத்தாரைத் தவிர பிறர்; ஆஸ்ரமை:-சமுதாயப் பிரிவுகளினால்; வயம் – நாம்; ஜயேம – வெற்றி பெறக் கூடும்; ஹேலாபி:- எளிதில்; தஸ்யூன்—அத்துமீறி நுழையும் கொள்ளையர்கள்; துர்க—பதி:-ஒரு கோட்டைக் காவலன்; யதா—போன்று.

ஒரு கோட்டையின் பாதுகாவலன் அத்துமீறி நுழையும் கொள்ளைக்காரர்களை எளிதில் வெற்றி கொள்வதைப் போல மனைவியைச் சரணடைவதின் மூலம் ஒருவன் புலன்களை வெற்றி கொள்ள முடியும். இவை, பிற சமுதாயப் அமைப்புகளில் வெற்றி கொள்ள முடியாதவையாகும்.

பதம் 3.14.21
ந வயம் ப்ரபவஸ் தாம் த்வாம் அனுகர்தும் க்ருஹேஸ்வரி
அபி ஆயுஷா வா கார்த்ஸ்ன்யேன யே சான்யே குண-க்ருத்னவ:

ந – இல்லை; வயம்-நாங்கள்: ப்ரபவ:-இயலக் கூடியவர்கள்; தாம்-அந்த: த்வாம் – உனக்கு; அனுகர்தும். – அதனையேச் செய்வ தற்கு; க்ருஹ-ஈஸ்வரி.-ஓ இல்லத்தரசியே; அபி — அதற்குப் பதிலாக; ஆயுஸா-ஆயுளினால்; வா—அல்லது (மறுபிறவியில்); கார்த்ஸ்ன்யேன-முழுவதும்; யே-யார்; ச – மேலும்; அன்யே – மற்றவர்;குண-க்ருத்னவ:- குணங்களைப் போற்றும் இயல்புடையோர்.

ஓ, இல்லத்தின் அரசியே, உன்னைப் போன்று நாங்கள் செயல்படவோ, அல்லது நீ செய்தவற்றுக்கு இவ்வாழ்க்கை மட்டுமல்ல, மறுபிறவியிலும் நன்றி செலுத்தவோ செய்யவோ எங்களால் முடியாது. தனிப்பட்டக் குணங்களைப் பாராட்டுவோரும் கூட உமது நற்செயல்களுக்கு நன்றி செலுத்துவது என்பது சாத்தியமற்றதாகும்.

பதம் 3.14.22
அதாபி காமம் ஏதம் தே ப்ரஜாத்யை கரவாணி அலம்
யதா மாம் நாதிரோசந்தி முஹூர்தம் ப்ரதிபாலய

அத அபி – இருந்தாலும் கூட (இது சாத்தியமல்ல); காமம்- பாலுணர்வு இச்சை; ஏதம்-இருப்பதைப் போன்று ; தே-உனது; ப்ரஜாத்யை-குழந்தை பேற்றிற்காக; கரவாணி—செய்யவிடு; அலம்- தாமதமின்றி: யதா-போன்று; மாம் – எனக்கு ; ந-இல்லாதிருக்கலாம்; அதிரோசந்தி-பழி கூறல்: முஹூர்தம்—ஒரு சில விநாடிகள்; ப்ரதிபாலய-காத்திருத்தல்.

உனக்குத் திருப்பிச் செய்வது எனக்கு இயலாததாயினும் கூட, குழந்தைப் பேற்றிற்காக உனது காம இச்சையினை நான் உடனே திருப்திப்படுத்துவேன். ஆனாலும் ஒரு சில விநாடிகள் நீ பொறுத்திருக்க வேண்டும். அப்போதுதான் பிறர் என்னைப் பழி கூற மாட்டார்.

பதம் 3.14.23
ஏஷா கோரதமா வேலா கோராணாம் கோர-தர்ஸனா
சரந்தி யஸ்யாம் பூதானி பூதேஸானுசரானி ஹ

ஏஷா – இந்த நேரம்; கோர – தமா- மிகவும் பயங்கரமானது; வேலா-காலம்; கோராணாம் – பயங்கரத்தின்; கோர – தர்ஸனா – பயங்கரப்பார்வை; சரந்தி-நடமாடுகிறது; யஸ்யாம்-அதில்; பூதானி – பூதகணங்கள்; பூத – ஈஷ – பூதகணங்களின் தலைவர்; அனுசராணி— தொடர்ந்திருக்கும் துணைவர்கள்; ஹ-உண்மையில்.

இக்குறிப்பிட்ட நேரமானது மிகவும் அமங்களமானதாகும். ஏனென்றால் இந்நேரத்தில் பயங்கரமானத் தோற்றமுடைய பூத கணங்களும், அவற்றின் தலைவரும் அவரோடு இருக்கும் அவர் துணைவர்களும் கண்ணுக்குத் தென்படுகின்றனர்.

பதம் 3.14.24
ஏதஸ்யாம் ஸாத்வி ஸந்த்யாயாம் பகவான் பூத-பாவன:
பரீதோ பூத-பர்ஷத்பிர் வ்ருஷேணாடதி பூதராட்

ஏதஸ்யாம் – இந்த நேரத்தில்; ஸாத்வி—ஓ, கற்பிற் சிறந்தவளே; ஸந்த்யாயாம்-இரவும் பகலும் சந்திக்கின்ற சந்தியாகாலம்; பகவான்- கடவுள் அம்சம் உடையவர்; பூத-பாவன:-பூத கணங்களின் நலன் விரும்புபவர்; பரீத:-சூழப்பட்டு; பூத-பர்ஷத்பி:-பூத சகாக்களால்; வ்ருஷேண-காளை வாகனத்தின் மீது; அடதி-பயணம் செய்கிறார்; பூத-ராட்-பூதங்களின் அரசர்;

இந்த நேரம் பூத கணங்களின் தலைவரான சிவபெருமான் தனது காளை வாகனத்தின் மீது அமர்ந்து வர, அவருடன் தமது நன்மைக்காக அவரைப் பின்பற்றும் பூதங்களும் சேர்ந்து வரும் நேரமாகும்.

பதம் 3.14.25
ஸ்மஸான-சக்ரானில-தூளி-தூம்ர-
விகீர்ண-வித்யோத-ஜடா-கலாப:
பஸ்மாவகுண்டாமல-ருக்ம-தேஹோ
தேவஸ் த்ரிபி: பஸ்யதி தேவரஸ் தே

ஸ்மஸான- மயானம்; சக்ர—அனில—சூறைக் காற்று; தூளி—தூசு; தூம்ர – புகை: விகீர்ண-வித்யோத-மேலே பூசியிருப்பார்; ஜடா- கலாப:-ஜடாமுடி: பஸ்ம-சாம்பல்; அவகுண்ட—அணிந்திருப்பார்; அமல் – கறையற்ற; ருக்ம-சிவந்த; தேஹ:-உடலுடையவர்; தேவ:- தேவர்; த்ரிபி:- மூன்று விழிகளுடன்; பஸ்யதி-பார்ப்பவர்; தேவர:- கணவரின் இளைய சதோதரர்; தே-உமது.

சிவபெருமானின் மேனி சிவந்த நிறமுடையது. அவர் களங்கமற்றவர் என்பதோடு தன் உடலெங்கும் சாம்பலைத் திருநீறாகப் பூசியிருப்பவரும் ஆவார். அவரது சடைமுடியில் சுழற்காற்றினால் பறந்து வந்த சுடுகாட்டுத் தூசி ஒட்டியிருக்கும். அவர் உனது கணவரின் இளைய சகோதரர் ஆவார். அவருக்கு மூன்று விழிகள் உண்டு.

பதம் 3.14.26
ந யஸ்ய லோகே ஸ்வ-ஜன: பரோ வா
நாத்யாத்ருதோ நோத கஸ்சித் விகர்ஹ்ய:
வயம் வ்ரதைர் யச்-சரணாபவித்தாம்
ஆஸாஸ்மஹே ‘ஜாம் பத புக்த-போகாம்

ந—இல்லை; யஸ்ய—அவரது; லோகே-உலகில்; ஸ்வ-ஜன:- உறவினர்; பர:-தொடர்பில்லாத; வா—அல்லது; ந-இல்லை; அதி-மிகவும்; ஆத்ருத:-சாதகமாக; ந – இல்லை; உத—அல்லது; கஸ்சித்—யாரேனும்; விகர்ஹ்ய:-குற்றவாளி; வயம்-நாம்; வ்ரதை:- விரதங்களினால்; யத்—அவரது; சரண-பாதங்கள்; அபவித்தாம்- புறக்கணித்தல்; ஆஸாஸ்மஹே – மரியாதையுடன் வழிபடுதல்; அஜாம் – மஹா பிரசாதம்; பத-உறுதியாக; புக்த – போகாம் – மீதமுள்ள உணவு.

சிவபெருமான் யாரையும் தனது உறவினராகக் கருதுவதில்லை. இருந்தும் அவரோடு தொடர்பு இல்லாதவர் என்று ஒருவரும் இல்லை. அவர் யாரிடத்தும் விருப்பும் கொள்வதில்லை. வெறுப்பும் கொள்வதில்லை. அவருக்கு அளிக்கப்படும் நிவேதனங்களை நாம் மரியாதையுடன் வழிபடுவோம். அவரால் புறக்கணிக்கப்பட்டவற்றை நாம் ஏற்றுக் கொள்வோம் என்று உறுதி ஏற்போம்.

பதம் 3.14.27
யஸ்யானவத்யாசரிதம் மனீஷிணோ
க்ருணந்தி அவித்யா-படலம் பிபித்ஸவ:
நிரஸ்த- ஸாம்யாதிஸயோ ‘பி யத் ஸ்வயம்
பிஸாச-சர்யாம் அசரத் கதி: ஸதாம்

யஸ்ய-அவரது;அனவத்ய-குற்றமற்ற; ஆசரிதம் – தன்மை; மனீஷிண:- மகாமுனிவர்கள்; க்ருணந்தி—பின்பற்றுவது; அவித்யா- அறியாமை; படலம் – கூட்டம்; பிபித்ஸவ:-நீங்குதற்கு விரும்புதல்; நிரஸ்த-பயனின்றி; ஸாம்ய-சமம்; அதிஸய:-சிறப்பு; அபி – இருந்த போதிலும்; யத்—போன்று; ஸ்வயம்-சுயமாக; பிஸாச-பிசாசு; சர்யாம்—செயல்கள்; அசரத்—செய்யப்படுதல்; கதி: சுதி; ஸதாம்— பகவானின் பக்தர்களின்.

சிவபெருமானுக்கு இணையாக அல்லது அவரை விட உயர்வாக இப்பூத உலகில் ஒருவரும் இல்லை என்ற போதிலும், அவரது குற்றங் கூற முடியாத தன்மையினை தங்களது அறியாமை நீங்க வேண்டும் என்பதற்காக மகாத்மாக்கள் பின்பற்றிய போதிலும், அவர், ஒரு பிசாசு பகவானின் பக்தர்களுக்கு முக்தியளிப்பதைப் போன்று விளங்குகிறார்.

பதம் 3.14.28
ஹஸத்தி யஸ்யாசரிதம் ஹி துர்பகா
ஸ்வாத்மன்-ரதஸ்யாவிதுஷ ஸமீஹிதம்
யைர் வஸ்த்ர- மால்யாபரணானுலேபனை
ஸ்வ-போஜனம் ஸ்வாத்மதயோபலாலிதம்

ஹஸந்தி-பரிகசித்தல்; யஸ்ய-அவரது; ஆசரிதம் – செயல்; ஹி – உறுதியாக; துர்பகா – துரதிர்ஷ்டம்; ஸ்வ-ஆத்மன்—சுய உணர்வில்; ரதஸ்ய-ஈடுபடும் ஒருவன்; அவிதுஷ:-அறியாது; ஸமீஹிதம்—அவர் நோக்கம்; யை:-அவரால்; வஸ்த்ர-ஆடை; மால்ய-மாலைகள்: ஆபரண—அணிகலன்கள்; அனு- இது போன்று ஆடம்பரமான; லேபனை: – வாசனைத் திரவியங்களுடன்; ஸ்வ-போஜனம்- நாய்களினால் தின்னப்படும்; ஸ்வ-ஆத்மதயா-ஆத்மாவாக எண்ணி; உபலாலிதம் — பேணிப்பாதுகாத்தல்.

துரதிர்ஷ்டசாலிகளான மூடர்கள், அவர் தன்னுணர்வில் ஈடுபட்டிருக்கிறார் என்பதையறியாது அவரைப் பரிகசிக்கின்றனர். அம்மூடர்கள் நாய்கள் தின்னப் போகும் தமது உடலை ஆடை, அணிகலன்கள், மலர் மாலைகள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றைக் கொண்டு பேணுவதில் ஈடுபடுகின்றனர்.

பதம் 3.14.29
ப்ரஹ்மாதயோ யத்-க்ருத-ஸேது-பாலா
யத்-காரணம் விஸ்வம் இதம் ச மாயா
ஆஜ்ஞா-கரீ யஸ்ய பிஸாச-சர்யா
அஹோ விபூம்னஸ் சரிதம் விடம்பனம்

ப்ரஹ்ம-ஆதய:-பிரம்ம தேவர் போன்ற தேவர்கள்; யத்- அவரது; க்ருத-செயல்கள்; ஸேது-சமயச்சடங்குகள்; பாலா:- கடைபிடிப்பவர்கள்; யத் – அவர் ஒருவரே; காரணம்-காரணம்; விஸ்வம்-பிரபஞ்சம்: இதம் – இந்த; ச – மேலும்; மாயா – மாயை, பௌதிகச் – சக்தி; ஆஜ்ஞா – கரீ – கட்டளையினை ஏற்றுக் கொள்ளும்; யஸ்ய-அவரது; பிஸாச-பிசாசு; சர்யா-செயல்; அஹோ – ஓ, எனது தலைவனே; விபூம்ன:-சிறந்தவரின்; சரிதம்-நன்மை; விடம்பனம்-ஒரு பாவனையே.

பிரம்மா போன்ற தேவர்களும் சிவபெருமான் கடைப்பிடிக்கும் சமயச் சடங்குகளைப் பின்பற்றுகின்றனர். நடப்பு உலகின் படைப்பிற்குக் காரணமான ஜட இயற்கையினைக் கட்டுப்படுத்துபவர் அவரே ஆவார். அவர் மிக உயர்ந்தவர். ஆதலினால் அவரது பேய்த் தன்மைகள் என்பவை ஒரு பாவனையேயாகும்.

பதம் 3.14.30
மைத்ரேய உவாச
ஸைவம் ஸம்விதிதே பர்த்ரா மன்மதோன்மதிதேந்த்ரியா
ஜக்ராஹ வாஸோ ப்ரஹ்மர்ஷேர் வ்ருஷஜீவ கத-த்ரபா

மைத்ரேய: உவாச-மைத்ரேயர் கூறினார்; ஸா—அவள்; ஏவம்- இவ்வாறு; ஸம்விதிதே-தெரிவிக்கப்பட்டும் கூட; பர்த்ரா-அவளது கணவனால்; மன்மத-மன்மதனால்; உன்மதித-உன்மத்தம் பிடித்ததினால்; இந்த்ரியா-புலன்கள்; ஜக்ராஹ-பிடித்து; வாஸ:- ஆடையினை; ப்ரஹ்ம-ருஷே:-சிறந்த அந்தண முனிவரின்; வ்ருஷலீ-இவ-பரத்தையினைப் போன்று: கத-த்ரபா–நாணமின்றி.

மைத்ரேயர் கூறினார்: திதி இவ்வாறு தன் கணவானல் அறிவுறுத்தப்பட்டும், அவள் பாலுறவு கொள்வதற்கு மன்மதனால் தூண்டப்பட்டாள். எனவே அவள் வெட்கமும் நாணமும் அற்ற ஒரு பரத்தையினைப் போல் அச்சிறந்த அந்தண முனிவரின் ஆடைகளைப் பிடித்து இழுத்தாள்.

பதம் 3.14.31
ஸ விதித்வாத பார்யாயாஸ் தம் நிர்பந்தம் விகர்மணி
நத்வா திஷ்டாய ரஹஸி தயாதோபவிவேஸ ஹி

ஸ:- அவர்; விதித்வா – புரிந்து கொண்டு; அத-அதன் பின்னர்; பார்யாயா:-மனைவியின்; தம் — அந்த; நிர்பந்தம்-நிர்ப்பந்தம்; விகர்மணி – தடைசெய்யப்பட்டிருக்கும் செயலை; நத்வா-வந்தனங்களை அர்ப்பணித்து; திஷ்டாய – வணங்கத் தகும் விதிக்கு ; ரஹஸி- இரகசியமான இடத்தில்; தயா—அவளோடு; அத—இவ்வாறு: உபவிவேஷ – கூடினார்; ஹி-உறுதியாக.

மனைவியின் உள்ளக் கிடக்கையினை அறிந்து கொண்ட அவர், அத்தடை செய்யப்பட்டிருக்கும் செயலைச் செய்வதற்குச் சம்மதித்தார். பின்னர் அவர் வணங்குதற்குரிய விதிக்குத் தனது வணக்கத்தினைச் செலுத்திய பின்னர், ஒரு தனிமையான இடத்தில் அவளுடன் கூடினார்.

பதம் 3.14.32
அதோபஸ்ப்ருஸ்ய ஸலிலம் ப்ராணான் ஆயம்ய வாக்-யத:
த்யாயஞ் ஜஜாப விரஜம் ப்ரஹ்ம ஜ்யோதி: ஜநாதனம்

அத-அதன்பிறகு; உபஸ்ப்ருஸ்ய-தொடுதல் அல்லது நீரில் நீராடுதல்; ஸலிலம்-தண்ணீர்; ப்ராணான் ஆயம்ய – சமாதியில் ஆழ்ந்து;வாக் – யத:-பேச்சைக் கட்டுப்படுத்தி; த்யாயன்—தியானம்; ஜஜாய-மனதினில் ஜெபித்தார்; விரஜம் – தூய; ப்ரஹ்ம-காயத்திரி மந்திரத்தினை; ஜ்யோதி:-ஜோதி: ஸநாதனம்-நித்தியம்.

அதன் பின்னர் அவ்வந்தணர் நீராடிவிட்டு சமாதி நிலையில் அமர்ந்து, பேச்சைக்கட்டுப்படுத்தி, காயத்திரி மந்திரத்தினை வாயினுள் ஜெபித்தபடி பிரம்ம ஜோதியின் தியானத்தில் ஆழ்ந்தார்.

பதம் 3.14.33
திதிஸ் து வ்ரீடிதா தேன கர்மாவத்யேன பாரத
உபஸங்கம்ய விப்ரர்ஷிம் அதோ-முகி அப்யபாலத்

திதி:-கச்யபரின் மனைவியான திதி; து-ஆனால்; வ்ரீடிதா- வெட்கி; தேன—அதனால்; கர்ம – செயல்; அவத்யேன—தவறு; பாரத – ஓ, பரதகுலத் தோன்றலே; உபஸங்கம்ய-அருகில் சென்று; விப்ர-ருஷிம்-அந்தண முனிவர்; அத:-தலைகுனிந்து ; அப்ய பாஸத-பணிவுடன் கூறினாள்;

ஓ பரதகுலத் தோன்றலே, இதன்பின்னர் திதி தன் கணவனிடம் சென்றாள். தவறான செயலினால் அவள் முகம் வாடி தலை குனிந்திருந்தது. அவள் பின்வருமாறு கூறினாள்.

பதம் 3.14.34
திதிர் உவாச
ந மே கர்பம் இமம் ப்ரஹ்மன் பூதானாம் ருஷபோ ‘வதீத்
ருத்ர: பதிர் ஹி பூதானாம் யஸ்யாகரவம் அம்ஹஸம்

திதி: உவாச- எழில்மிக்க திதி கூறினாள்; ந-இல்லை; மே – எனது; கர்பம் – கர்ப்பம்; இமம் – இந்த; ப்ரஹ்மன் – ஓ, அந்தணரே; பூதானாம் – எல்லா உயிர் வாழிகளின்; ருஷப: – உயிர் வாழிகள் அனைத்தினும் சிறந்தவர்; அவதீத் – அவனைக் கொல்வதற்கு; ருத்ர:- சிவபெருமான்; பதி:-பதி; ஹி-உறுதியாக; பூதானாம்—எல்லா உயிர் வாழிகளின்; யஸ்ய-அவரது; அகரவம் – நான் செய்த; அம்ஹஸம் – குற்றம்.

எழில் மிக்க திதி கூறினாள் அன்பிற்குரிய அந்தணரே, அனைத்து உயிர்களுக்கும் தலைவரான சிவபெருமான் எனது கருவினை அழிக்காதிருக்கும்படி அருள் கூர்ந்து பார்த்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் அவருக்கெதிராக மிகப் பெரிய குற்றத்தினை நான் புரிந்திருக்கிறேன்.

பதம் 3.14.35
நமோ ருத்ராய மஹதே தேவாயோக்ராய மீடுஷே
சிவாய ந்யஸ்த-தண்டாய த்ருத-தண்டாய மன்யவே

நம:-அனைத்து வந்தனங்களும்; ருத்ராய – சினமுடைய சிவ பெருமானுக்கு; மஹதே – சிறந்தவருக்கு; தேவாய – தேவருக்கு; உக்ராய – உக்கிரமானவருக்கு; மீடுஷே – பௌதிக இச்சைகள் அனைத்தையும் நிறைவேறச் செய்பவருக்கு; சிவாய—அனைத்து மங்கலங்களுக்கும்; ந்யஸ்த – தண்டாய — மன்னித்தருள்பவருக்கு; த்ருத – தண்டாய – உடனடியாகத் தண்டிப்பவருக்கு; மன்யவே- சினத்திற்கு.

ஒரே சமயத்தில் கொடூரமான தேவராகவும், உலக ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவருமான சினமிக்க சிவபெருமானுக்கு எனது வந்தனங்களை சமர்ப்பிக்கிறேன். அவர் அனைத்து மங்களங்கள் உடையவராகவும், மன்னித்தருள்பவராகவும் விளங்குகிறார். ஆயினும் அவரது கொடிய சினமோ உடனே ஒருவனை தண்டிக்க வல்லதாகும்.

பதம் 3.14.36
ஸ ந: ப்ரஸீததாம் பாமோ பகவான் உர்வ்-அநுக்ரஹ:
வ்யாதஸ்யாபி அநுகம்ப்யானாம் ஸ்த்ரீணாம் தேவ: ஸதீ-பதி:

ஸ:—அவர்; ந:-எம்முடன்; ப்ரஸீததாம்-மகிழ்ச்சியடைய; பாம: மைத்துனன்; பகவான்—எல்லா வளங்களும் உடையவர்; உரு-மிகச் சிறந்த; அநுக்ரஹ:- கருணைமயம்; வ்யாதஸ்ய-வேடரின்; அடி- மேலும்; அநுகம்ப்யானாம்–கருணையின் வடிவமானவர்;ஸ்த்ரீணாம்— பெண்களின்; தேவ:- வணங்குதற்குரிய தேவர்; ஸதீ-பதி-சதீயின் கணவர் (கற்பிற் சிறந்த).

எனது இளைய சகோதரி சதீயின் கணவர் ஆதலினால் அவர் எனக்கு மைத்துனர் ஆவார். அவர் என்மீது மகிழ்ச்சி அடைவாராக. பெண்கள் அனைவரின் வணக்கத்திற்குரிய தேவரும் அவரே ஆவார். அவர் அனைத்து வளங்களும் நிறைந்தவராவார். கல்வியறிவில்லாத வேடர்களினாலுலும் மன்னித்தருளப்படும் பெண்களிடத்து அவர் மிக்க கருணையுடையவராவார்.

பதம் 3.14.37
மைத்ரேய உவாச
ஸ்வ-ஸர்கஸ்யாஸிஷம் லோக்யாம் ஆஸாஸானாம் ப்ரவேபதீம்
நிவ்ருத்த-ஸந்த்யா-நியமோ பார்யாம் ஆஹ ப்ரஜாபதி:

மைத்ரேய: உவாச-மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்; ஸ்வ- ஸர்கஸ்ய—அவளது சொந்த குழந்தைகளுக்காக; ஆஸிஷம் – நலன்: லோக்யாம் – உலகில்; ஆஸாஸானாம் – விருப்பம்; ப்ரவேயதிம் – நடுங்கும் பொழுது; நிவ்ருத்த – அதிலிருந்து கவனத்தைத் திருப்பி; ஸந்தியா – நியம்: சந்தியாவந்தன – ஒழுங்குமுறை விதிகள்; பார்யாம்— மனைவிக்கு; ஆஹ-கூறினார்; ப்ரஜாபதி:-பிரஜாபதி.

மைத்ரேயர் கூறினார் கச்யபர் அவர் மனைவியிடம் இவ்வாறு கூறிக் கொண்டிருந்த பொழுது தனது கணவரிடம் தவறிழைத்து விட்டோமோ என்னும் அச்சத்தின் காரணமாக அவள் உடல் நடுங்கியது. அவரது நித்தியக் கடமையான சந்தியாவந்தன பிரார்த்தனையினைச் செய்ய விடாது அவரது கவனம் திசை திருப்பப்பட்டது என்பதை அவள் புரிந்து கொண்டாள். இருந்தும் இவ்வுலகில் தன் குழந்தைகளின் நலனை விரும்பினாள்.

பதம் 3.14.38
கஸ்யப உவாச
அப்ராயத்யாத் ஆத்மனஸ் தே தோஷான் மௌஹுர்திகாத் உத
மன்-நிதேஸாதிசாரேண தேவானாம் சாதிஹேலனாத்

கஸ்யப: உவாச-கற்றறிந்த அந்தணர் கச்யபர் கூறினார்; அப்ராயத்யாத் —மாசடைந்த காரணத்தினால்; ஆத்மன:-மனதின்; தே – மனதின்; தோஷாத் – தோஷம்; மௌஹுர்திகாத்—அந்தக் கணத்தில்; உத—மேலும்; மத்-எனது; நிதேஸ வழிகாட்டுதலையும்; அதிசாரேண— புறக்கணித்தாய்; தேவானாம் – தேவர்களின்;ச-மேலும்; அதிஹேலனாத்- பாராமுகமாயிருத்தல்.

கற்றறிந்த கச்யபர் கூறினார்; உனது மனம் மாசுற்ற காரணத்தினாலும், அக்குறிப்பிட்ட நேரம் குறையுடையதாக இருந்த காரணத்தினாலும், எனது அறிவுரைகளை நீ புறக்கணித்தக் காரணத்தினாலும், தேவர்களிடத்து நீ பாராமுகமாக நடந்து கொண்ட காரணத்தினாலும் எல்லாம் அமங்களமாகிவிட்டன.

பதம் 3.14.39
பவிஷ்யதஸ் தவாபத்ராவ் அபத்ரே ஜாடராதமௌ
லோகான் ஸ-பாலாம்ஸ் த்ரீம்ஷ் சண்டி முஹுர் ஆக்ரந்தயிஷ்யத:

பவிஷ்யத:-பிறப்பர்; தவ- உனக்கு; அபத்ரௌ-ஆணவமிக்க இருபுதல்வர்கள்; அபத்ரே-ஒ, அதிர்ஷ்டமில்லாதவளே; ஜாடர- அதமௌ—கண்டனத்திற்குரிய கருப்பையிலிருந்து; லோகான்—எல்லா உலகங்கள்; ஸ—பாலான்—பகவான் அவற்றின் ஆட்சியாளர்களுடன்; த்ரீன்—மூன்று ; சண்டி- செருக்குடைய ஒருவன்; முஹு:—தொடர்ந்து; ஆக்ரந்தயிஷ் யத:-துன்பத்திற்குக் காரணமாவர்.

ஒ, இறுமாப்புடையவளே, உனது நிந்தனைக்குரிய கருப்பையிலிருந்து இரண்டு ஆணவமிக்க மைந்தர்கள் பிறப்பார்கள். அதிர்ஷ்டமில்லாதவளே, மூவுலகங்களுக்கும் அவர்கள் தொடர்ந்து தொல்லைகளைத் தருவர்.

பதம் 3.14.40
ப்ராணினாம் ஹன்யமானானாம் தீனானாம் அக்ருதாகஸாம்
ஸ்த்ரீணாம் நிக்ருஹ்யமாணானாம் கோபிதேஷு மஹாத்மஸு

ப்ராணினாம்-உயிர்வாழிகள்; ஹன்யமானானாம் – கொல்லப்படும் பொழுது; தீனானாம் – ஏழையின்; அக்ருத – ஆகஸாம் – குற்றமற்ற; ஸ்த்ரீணாம்—பெண்களின்; நிக்ருஹ்ய – மாணானாம்- கொடுமைப்படுத்தப்படுதல்; கோபிதேஷு—ஆத்திரமூட்டப்படுதல். மஹா தீமஸு – மகாத்மாக்கள்.

அவர்கள் ஏழை மற்றும் குற்றமற்ற உயிர்வாழிகளைக் கொல்வர், பெண்களைக் கொடுமைப்படுத்துவர், மகாத்மாக்களை சினமூட்டுவர்.

பதம் 3.14.41
ததா விஸ்வேஸ்வர: க்ருத்தோ பகவால் லோக-பாவன:
ஹனிஷ்யதி அவதீர்யாஸௌ யதாத்ரீன் ஸதபர்வ-த்ருக்

ததா — அந்த நேரம்; விஸ்வ-ஈஸ்வர:-பிரபஞ்சத்தின் ஈசுவரன்; க்ருத்த:-மிகுந்த சினத்துடன்; பகவான்-முழு முதற்கடவுள்; லோக- பாவன:-பொதுவாக மக்களின் நலன் மீது விருப்பங் கொண்டு; ஹனிஷ்யதி-கொல்வார்; அவதீர்ய-தன்னைப் பிறப்பித்துக் கொண்டு; அஸௌ—அவர்: யதா-போன்று; அத்ரீன்- மலைகள்; ஸத-பர்வ திருக்- வஜ்ராயுதத்தை வைத்திருப்பவர் (இந்திரன்).

அந்த நேரம் இப்பிரபஞ்சத்தின் நாயகரான பகவானும், உயிர்களின் நலன் விரும்புபவருமான முழுமுதற் கடவுள் தன்னை அவதரித்துக் கொண்டு, இந்திரன் தன் கையிலுள்ள வஜ்ராயுதத்தினால் மலைகளை உடைத்து நொறுக்குவது போல் அவர்களை அழிப்பார்.

பதம் 3.14.42
திதிர் உவாச
வதம் பகவதா ஸாக்ஷாத் ஸுநாபோதார-பாஹுனா
ஆஸாஸே புத்ரயோர் மஹ்யம் மா க்ருத்தாத் ப்ராஹ்மணாத் ப்ரபோ

திதி: உவாச-திதி கூறினாள்; வதம்—கொல்லப்படுதல்; பகவதா – முழுமுதற்கடவுளால்; ஸாக்ஷாத்-நேரடியாக; ஸுநாப—அவரது சுதர்சன சக்கரத்தினால்; உதார-மிகுந்த பெருந்தன்மையுடன்; பாஹுனா— கரங்களினால்; ஆஸாஸே-நான் விரும்புகிறேன்; புத்ரயோ – புத்திரர்களின்; மஹ்யம்—எனது; மா- ஏற்படப் போவதில்லை; க்ருத்தாத்—சீற்றத்தினால்; ப்ராஹ்மணாத்—அந்தணர்களின்; ப்ரபோ – ஓ, பிரபுவே.

திதி கூறினாள்: எனது புதல்வர்கள் மிகவும் பெருந்தன்மையாக முழுமுதற் கடவுளின் கரத்திலுள்ள சுதர்சனச் சக்கரத்தினால் கொல்லப்படுவதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். ஓ எந்தன் பிரபுவே, அவர்கள் அந்தணர்களின் சீற்றத்தின் காரணமாகக் கொல்லப்பட மாட்டார்கள் அல்லவா.

பதம் 3.14.43
ந ப்ரஹ்ம-தண்ட-தக்தஸ்ய ந பூத-பயதஸ்ய ச
நாரகாஸ் சாநுக்ருஹ்ணந்தி யாம் யாம் யோனிம் அஸௌ கத:

ந – இல்லை; ப்ரஹ்ம தண்ட—அந்தணரின் தண்டனை; தக்தஸ்ய-இவ்வாறு தண்டிக்கப்படும் ஒருவன்; ந – இல்லை; பூத – பய – தஸ்ய – உயிர்வாழிகள் அனைவர்க்கும் எப்பொழுதும் அச்சமூட்டுபவன்; ச – மேலும்; நாரகா-நரகத்திலுள்ளவர்கள்; ச – மேலும்; அநுக்ருஹ்ணந்தி—ஏதேனும் கருணை செய்வது; யாம்யாம்- எதுவாயினும்; யோனிம்-உயிரினங்கள்; அஸௌ—குற்றவாளி; கத:- செல்வது.

அந்தணரால் நிந்திக்கப்பட்டவன் அல்லது உயிர்களுக்கு எப்பொழுதும் அச்சந்தருபவன், நரகத்தில் உள்ளவர்களினால் அல்லது அவன் பிறந்த இனத்தினரால் கூட கருணை செய்யப்படுவதில்லை.

பதங்கள் 3.14.44 – 3.14.45
கஸ்யப உவாச
க்ருத-சோகானுதாபேன ஸத்ய: ப்ரத்யவமர்ஸநாத்
பகவதி உரு-மானாச் ச பவே மயி அபி சாதராத்
புத்ரஸ்யைவ ச புத்ராணாம் பவிதைக: ஸதாம் மத:
காஸ்யந்தி யத்-யஸு: ஸுத்தம் பகவத்-யஸஸா ஸமம்

கஸ்யப: உவாச – கற்றறிந்த கச்யபர் கூறினார்; க்ருத – சோக- சோகங் கொண்டு; அனுதாபேன — அனுதாபத்தினால்; ஸத்ய – உடனே; ப்ரத்யவமர்ஸ நாத் – முதிர்ந்த சிந்தனையினால்; பகவதி – முழுமுதற் கடவுளுக்கு; உரு – சிறந்த: மானாத் – வழிபடுதல்; ச – மேலும்; பவே – சிவபெருமானுக்கு; மயி அபி – எனக்கும் கூட ; ச – மேலும்; ஆதராத் – மரியாதையினால்; புத்ரஸ்ய – மைந்தனின்; ஏவ – உறுதியாக; ச – மேலும்; புத்ராணாம் – புத்திரர்களின்; பவிதா – பிறப்பான்; ஏக:-ஒருவன்; ஸதாம் — பக்தர்களின்; மத: – அங்கீகரிக்கப்படுவான்; காஸ்யந்தி – பரவும்; யத் – அவனை; யஸ: – அங்கீகாரம்; ஸுத்தம் — உன்னதமான; பகவத் — முழுமுதற் கடவுளின்; யஸஸா — அங்கீகரிப்பர்; ஸமம் – சமமாக.

கற்றறிந்த கச்யபர் கூறினார்: உனது சோகம், அனுதாபம், முதிர் சிந்தனை போன்றவற்றினாலும், முழுமுதற் கடவுளிடத்து நீ வைத்திருக்கும் மாறாத நம்பிக்கையினாலும், சிவபெருமானிடத்தும் என்னிடத்தும் நீ வைத்திருக்கின்ற பக்தியினாலும் உனது புத்திரனின் (இரண்யகசிபு) புத்திரர்களுள் ஒருவன் (பிரஹலாதன்) பகவானின் பக்தனாக அங்கீகரிக்கப்படுவான். அவனது புகழும் முழுமுதற் கடவுளின் புகழைப் போலவே விரிந்து பரவும்.

பதம் 3.14.46
யோகைர் ஹேமேவ துர்வர்ணம் பாவயிஷ்யந்தி ஸாதவ:
நிர்வைராதியிர் ஆத்மானம் யச்-சீலம் அநுவர்திதும்

யோகை: – தவறு நீக்கும் முறையினால்; ஹேம – தங்கம்; இவ- போன்று; துர்வர்ணம்-தாழ்ந்த தரமுடையது; பாவயிஷ்யந்தி- தூய்மையாகும்; ஸாதவ:-மகான்கள்; நிர்வைர-ஆதிபி: பகைமை யிலிருந்து விடுதலை பெறும் பயிற்சியினால் ஆத்மானம்—தன்னை; யத்—அவனது ; சீலம் – சீலம்; அநுவர்திதும் – காலடிகளைப் பின்பற்றுவதற்கு.

அவனது காலடிகளைப் பின்பற்றுவதற்கு, மகான்கள்; எவ்வாறு தங்கத்திலுள்ள குறைகளை தூய்மை செய்யும் முறையினால நீக்குகின்றனரோ அதுபோல் பகைமையிலிருந்து விடுதலை பெறுவதற்கான பயிற்சியினால் அவனது நடத்தையினை முன்மாதிரியாகக் கொள்வதற்கு முயல்வர்.

பதம் 3.14.47
யத்-ப்ரஸாதாத் இதம் விஸ்வம் ப்ரஸீததி யத்-ஆத்மகம்
ஸ ஸ்வ-த்ருக் பகவான் யஸ்ய தோஷ்யதே ‘னன்யயா த்ருஸா

யத் – அவரால்; ப்ரஸாதாத்-கருணையின்; இதம்- இந்த; விஸ்வம் – பிரபஞ்சம்; ப்ரஸீததி-மகிழ்ச்சியடையும்; யத்—அவரது; ஆத்மகம்—அவரது சர்வவல்லமை காரணமாக; ஸ:-அவர்; ஸ்வ- திருக்—அவரது பக்தர்களிடம் சிறந்த அக்கறைகொண்டு; பகவான்— முழுமுதற் கடவுள்: யஸ்ய—அவரது; தோஷ்யதே-மகிழ்ச்சியடைவார்; அனன்யயா – மாற்றமின்றி; த்ருஸா-புத்தியினால்.

அனைவருமே அவனிடத்து மகிழ்ச்சியடைவர் ஏனென்றால் இப்பிரபஞ்சத்தின் பரம நெறியாளரான முழுமுதற் கடவுள், அவரைத் தவிர வேறு எதையும் விரும்பாத பக்தனிடம் எப்பொழுதும் திருப்தியுடைவராவார்.

பதம் 3.14.48
ஸ வை மஹா-பாகவதோ மஹாத்மா
மஹானுபாவோ மஹதாம் மஹிஷ்ட
ப்ரவ்ருத்த-பக்த்யா ஹி அநுபாவிதாஸயே
நிவேஸ்ய வைகுண்டம் இமம் விஹாஸ்யதி

ஸ:- அவர்; வை -உறுதியாக; மஹா-பாகவத:-உயர்ந்த பக்தன்; மஹா-ஆத்மா-விரிந்த புத்தி; மஹா—அனுபாவ:-விரிந்த செல்வாக்கு; மஹதாம் – மகாத்மாக்களின்; மஹிஷ்ட:- மிகச் சிறந்த: ப்ரவ்ருத்த-நன்கு முதிர்ந்த; பக்தியா-பக்தித் தொண்டினால்; ஹி- உறுதியாக; அநுபாவித—அனுபாவம் என்னும் தன்னை மறந்த நிலையில் இருத்தல்; ஆஸயே-மனதில்;நிவேஸ்ய – நுழைந்து; வைகுண்டம்— ஆன்மீக வெளியில்; இமம்-இந்த (பௌதிக உலகம்); விஹாஸ்யதி-நீங்குதல்.

பகவானின் மிகச்சிறந்த பக்தன் விரிந்த புத்தியும் விரிந்த செல்வாக்கும், மகாத்மாக்கள் அனைவரிலும் மிகச்சிறந்தவனாகவும் விளங்குவான். முதிர்ந்த பக்தித் தொண்டினால் அவன் உன்னதமான மெய்மறக்கும் நிலை எய்துவான். மேலும் இப்பௌதிக உலகைத் துறந்த பிறகு அவன் ஆன்மீக வானுள் புகுவான்.

பதம் 3.14.49
அலும்பட: சீல-தரோ குணாகரோ
ஹ்ருஷ்ட: பரர்த்தியா வ்யதோ துஹ் கிதேஷு
அபூத – சத்ருர் ஜகத: ஸோக-ஹர்தா
நைதாகிகம் தாபம் இவோடுராஜ:

அலம்பட:-ஒழுக்கமுள்ள; சீல-தர: சீலமிக்க; குணஆகர: நற்குணங்களின் உறைவிடம்; ஹ்ருஷ்ட-மகிழ்ச்சி; பர-ருத்யா- பிறர் மகிழ்ச்சியில்; வ்யதிதத:-துன்பமுறுதல்; துஹ் கிதேஷு – பிறர் துக்கத்தில்; அபூத-சத்ரு:-பகைவரில்லாது; ஜகத:-அனைத்துப் பிரபஞ்சத்தின்; ஸோக – ஹர்தா – சோகத்தை அழிப்பவர்; நைதாகிகம்-கோடைச் சூரியனின் தாபம் துன்பம்; இவ-போன்று: உடு- ராஜ:-சந்திரன்.

ஒழுக்கமிக்க நற்குணங்கள் அனைத்தின் உறைவிடமாக அவன் திகழ்வான். பிறர் மகிழ்ச்சியில் தான் மகிழ்வான். பிறர் துன்பங்கண்டு தான் துன்புறுவான். அவனுக்குப் பகைவரே இருக்கப் போவதில்லை. கோடைச் சூரியன் மறைந்த பிறகு வரும் குளிர் நிலவைப் போல் அவன் அனைத்துப் பிரபஞ்சங்களின் துக்கங்களையும் அழிப்பவனாக விளங்குவான்.

பதம் 3.14.50
அந்தர் பஹிஷ் சாமலம் அப்ஜ-நேத்ரம்
ஸ்வ-பூருஷேச்சானுக்குஹீத-ரூபம்
பௌத்ரஸ் தவ ஸ்ரீ-லலனா-லலாமம்
த்ரஷ்டா ஸ்புரத்-குண்டல-மண்டிதானனம்

அந்த:-உள்ளும்; பஹி:புறமும்; ச – மேலும்; அமலம் – குற்றமற்ற; அப்ஜ – நேத்ரம் – தாமரை விழிகள்; ஸ்வ- பூருஷ – சொந்த பக்தன்; இச்சா – அநுக்ருஹீத – ரூபம் – விருப்பத்திற்கேற்ப வடிவத்தினை மேற்கொள்ளுதல்; பௌத்ர:-பௌத்திரன் (பேரன்); தவ—உனது; ஸ்ரீ-லலனா—அழகிய அதிர்ஷ்ட தேவதை (மகாலட்சுமி); லலாமம்-அலங்கரித்தல்; த்ரஷ்டா-காண்பான்; ஸ்புரத்-குண்டல— மின்னுகின்ற செவிக்குண்டலங்கள்; மண்டித-அலங்கரிக்கப்பட்ட; ஆனனம்- திருமுகம்.

எழில்மிக்க இலட்சுமி தேவியைத் துணைவியாக அடைந்திருக்கும் முழுமுதற் கடவுளை அகத்திலும், புறத்திலும் உனது பேரனால் காண முடியும். பக்தன் விரும்பும் வடிவத்தைப் பகவானால் மேற்கொள்ள முடியும். அவரது அழகுத் திருமுகத்திற்குச் செவிக்குண்டலங்கள் மேலும் அழகு செய்யும்.

பதம் 3.14.51
மைத்ரேய உவாச
ஸ்ருத்வா பாகவதம் பௌத்ரம் அமோதத திதிர் ப்ருஸம்
புத்ரயோஸ் ச வதம் க்ருஷ்ணாத் விதித்வாஸீன் மஹா-மனா:

மைத்ரேய: உவாச – மைத்ரேயர் கூறினார்; ஸ்ருத்வா—கேட்டதினால்; பாகவதம் – பகவானின் சிறந்த பக்தன் ஆவான் என்று; பௌத்ரம் – பேரக்குழந்தை; அமோதத- மகிழ்ச்சியெய்தி; திதி:- திதி; ப்ருஸம் – மிகச்சிறந்த; புத்ரயோ:-இரு புத்திரர்களின்; ச-மேலும்; வதம் – கொல்லப்படுதல்; க்ருஷ்ணாத் – கிருஷ்ணரால்; விதித்வா – இதனை அறிந்து; ஆஸீத்-ஆனான்; மஹா-மனா:-மனதினில் மிக்க மகிழ்ச்சி கொண்டாள்.

மைத்ரேய மாமுனிவர் கூறினார்: தனது பேரக்குழந்தை மிகச் சிறந்த பக்தனாக விளங்குவான் என்றும், தனது புத்திரர்கள் கிருஷ்ணரால் கொல்லப்படுவார்கள் என்றும் கேட்டவுடன் திதி அகத்தினில் மிக்க மகிழ்ச்சி கொண்டாள்.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “திதி எனும் நங்கை மாலையில் கருவுறுதல்” எனும் தலைப்பைக் கொண்ட பதினான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare