அத்தியாயம் – 12
குமாரர்கள் மற்றும் பல்லோரின் படைப்பு
பதம் 3.12.1
மைத்ரேய உவாச
இதி தே வர்ணித: க்ஷத்த: காலாக்ய: பரமாத்மன:
மஹிமா வேத-கர்போ ‘த யதாஸ்ராக்ஷீன் நிபோத மே
மைத்ரேய: உவாச – ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்; இதி—இவ்வாறு; தே-உனக்கு; வர்ணித:- விளக்கப்பட்டது; க்ஷத்த:—ஓ, விதுரனே; கால—ஆக்ய:-நித்திய காலத்தின் பெயரினால்; பரமாத்மன:- பரமாத்மாவின்; மஹிமா—பெருமைகள்; வேத-கர்ப:-வேதங்களின் உறைவிடமான பிரம்ம தேவன்; அத—இதன் பிறகு; யதா—இருத்தலைப் போன்று; அஸ்ராக்ஷித்- -படைக்கப்பட்டது; நிபோத—புரிந்து கொள்ள முயற்சிப்பாயாக; மே- என்னிடமிருந்து.
ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: ஓ. கல்வியிற் சிறந்த விதுரனே, இதுவரை காலம்போன்று செயற்பட்டு வரும் முழுமுதற் கடவுளின் பெருமைகளைப் பற்றி உனக்கு விளக்கினேன். இப்பொழுது நீ என்னிடமிருந்து அனைத்து வேதங்களுக்கும் உறைவிடமாகத் திகழும் பிரம்ம தேவரின் படைப்பினைப் பற்றி அறிந்து கொள்வாயாக.
பதம் 3.12.2
ஸஸர்ஜாக்ரே ‘ந்த தாமிஸ்ரம் அத தாமிஸ்ர ஆதி-க்ருத்
மஹாமோஹம் ச மோஹம் ச தமஸ் சாஜ்ஞான-வ்ருத்தய:
ஸஸர்ஜ-படைத்தல்; அக்ரே – முதன்முதலில்; அந்த -தாமிஸ்ரம்-மரண உணர்ச்சி; அத-பிறகு: தாமிஸ்ரம்- எண்ணம் நிறைவேறாததினால் வரும் ஆத்திரம்; ஆதி- க்ருத்- இவையெல்லாம்; மஹா -மோஹம்—அனுபவிக்கும் பொருள்களின் மீதான உடைமை உரிமை; ச-மேலும்; மோஹம்- மாயக் கருத்து; ச-மேலும்; தம: சுய-அறிவின் இருள்; ச-அதே போன்று; அஜ்ஞான—அஞ்ஞானம்; வ்ருத்தய:-ஈடுபாடுகள்.
பிரம்ம தேவர் முதலில் சுய வஞ்சனை, மரண உணர்ச்சி, எண்ணம் நிறைவேறாததினால் வரும் ஆத்திரம், தவறான உடைமை உரிமை, உடலியற் மாயக் கருத்து, அல்லது ஒருவனது உண்மையான அடையாளம் பற்றிய மறதி போன்ற ஐயுறவுக் கொள்கைகளையே படைத்தார்.
பதம் 3.12.3
த்ருண்ட்வா பாபியஸீம் ஸ்ருஷ்டிம் நாத்மானம் பஹ்வ் அமன்யத
பகவத்-த்யான-பூதேன மனஸான்யாம் ததோ ‘ஸ்ருஜத்
த்ருஷ்ட்வா-காண்பது; பாபீயஸீம்-பாவகரமானது; ஸ்ருண்டிம் – படைப்பு: ந-இல்லை: ஆத்மானம் — அவருக்கு; பஹு-மிகுந்த மகிழ்ச்சி; அமன்யத-உணர்ந்தார்; பகவத்-முழுமுதற் கடவுளின் மீது: த்யான—தியானம் ; பூதேன-அதனால் தூய்மை பெற்று; மனஸா-இது போன்ற மனநிலையினால்;அன்யாம்— அடுத்த; தத:-அதன்பிறகு; அஸ்ருஜத்- படைத்தல்.
இதுபோன்ற தவறான படைப்பினைப் பாவமாகக் கருதிய பிரம்ம தேவர் தனது செயலினால் மிக்க மகிழ்ச்சிடையவில்லை. அதனால் அவர் முழுமுதற் கடவுளைத் தியானித்துத் தன்னைப் புனிதப்படுத்திக் கொண்டார். இதன் பின்னர் அவர் படைப்பின் அடுத்த கட்டத்தை துவக்கினார்.
பதம் 3.12.4
ஸனகம் ச ஸனந்தம் ச ஸநாதனம் அதாத்மபூ:
ஸனத்–குமாரம் ச முனீன் நிஷ்க்ரியான் ஊர்தவ-ரேதஸ:
ஸனகம்-சனகர்; ச-மேலும்; ஸனந்தம்-சனந்தர்; ச-மேலும்; ஸநாதனம்- சநாதனர்; அத-அதன்பிறகு: ஆத்ம பூ:- சுய பிறவியான பிரம்ம தேவன்; ஸனத்- குமாரம்- சனத் குமாரர்; ச-மேலும்; முனீன்- மகாமுனிவர்கள்; நிஷ்க்ரியான்- பலன் தரும் அனைத்துச் செயல்களிலிருந்தும் விடுதலை பெற்றோர்; ஊர்த்வ-ரேதஸ:-அவர்களது சுக்கிலம் மேல்நோக்கி எழுவதாகும்.
ஆரம்பத்தில் பிரம்மதேவர் சனகர், சனந்தர், சநாதனர் மற்றும் சனத் குமாரர் என்னும் நான்கு மாமுனிவர்களைப் படைத்தார். அவர்கள் அனைவரும் பௌதிகச் செயல்களில் ஈடுபட விரும்பவில்லை. ஏனெனில் அவர்களது சுக்கிலம் மேல்நோக்கிப் பாய்ந்த காரணத்தினால் அவர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தனர்.
பதம் 3.12.5
தான் பபாஷே ஸ்வபூ: புத்ரான் ப்ரஜா: ஸ்ருஜத புத்ரகா:
தன் நைச்சன் மோக்ஷ -தர்மாணோ வாஸுதேவ-பராயணா:
தான்-மேலேகுறிப்பிடப்பட்ட குமாரர்களுக்கு; பபாஷே-கூறினார்; ஸ்வபூ:- பிரம்ம தேவர்; புத்ரான்-புத்திரர்களிடம்; ப்ரஜா-பிரஜா உற்பத்தி: ஸ்ருஜத-படைப்பதற்கு; புத்ரகா:- ஓ, அன்பு மைந்தர்களே; தத்- அந்த; ந-இல்லை; ஐச்சன்-விருப்பம்; மோக்ஷ- தர்மாண:- விடுதலைக்கான கொள்கைகளில் தம்மை ஒப்படைத்தல்; வாஸுதேவ – முழுமுதற் கடவுள்; பராயணா:-மிகுந்த பக்தியுடையோராயிருந்தனர்.
அவர்கள் நால்வரையும் படைத்தப் பின்னர் பிரம்ம தேவர் அவர்களிடம் கூறினார்: “அன்பார்ந்த மைந்தர்களே, இப்பொழுது பிரஜைகளைப் படைப்பீராக” என்று. அவர்கள் முழுமுதற் கடவுளான வாசுதேவரிடம் பற்றுக் கொண்டு விடுதலையினை நோக்கமாகக் கொண்டிருந்ததினால், அவர்கள் தங்கள் விருப்பமின்மையைத் தெரியப்படுத்தினர்.
பதம் 3.12.6
ஸோ அவத்யாத: ஸுதைர் ஏவம் ப்ரத்யாக்யாதானுசாஸனை:
க்ரோதம் துர்விஷஹம் ஜாதம் நியந்தும் உபசக்ரமே
ஸ: அவர் (பிரம்ம தேவர்); அவத்யாத:-இவ்வாறு அவமதிக்கப்பட்டவுடன்; ஸுதை:-மைந்தர்களினால்; ஏவம் – இவ்வாறு; ப்ரத்யாக்யாத-கீழ்ப்படிய மறுத்தது; அனுசாஸனை:- தங்கள் தந்தையின் கட்டளை; க்ரோதம்- சினம்; துர்விஷஹம்- பொறுத்துக் கொள்வதற்கு அரியது; ஜாதம் -இவ்வாறு எழுந்தது; நியந்தும்-கட்டுப்படுத்துவதற்கு; உபசக்ரமே-மிகவும் முயற்சித்தார்.
தமது தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படியாத மைந்தர்களின் மீது பிரம்மதேவருக்கு மிகுந்த சினம் எழுந்தது. அதனை அவர் வெளிப்படுத்தாது மிகுந்த சிரமத்துடன் அச்சினத்தினை அடக்குவதற்கு முயன்றார்.
பதம் 3.12.7
தியா நிக்ருஹ்யமாணோ ‘பி ப்ருவோர் மத்யாத் ப்ரஜாபதே;
ஸத்யோ ‘ஜாயத தன்-மன்யு: குமாரோ நீல- லோஹித:
தியா- ஞானத்தினால்; நிக்ருஹ்யமாணோ: கட்டுப்படுத்தப்படுகின்ற; அபி- பதிலாக; ப்ருவோ:-புருவங்களின்; மத்யாத்-மத்தியிலிருந்து; ப்ரஜாபதே:- பிரம்மதேவரின்; ஸத்ய:-உடனே; அஜாயத-பிறந்தது; தத்—அவரது; மன்யு:-சினம்; குமார:- ஒரு குழந்தை; நீல— லோஹித-நீலமும் சிவப்பும் கலந்த வண்ணத்தில்.
அவர் தனது சினத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போதிலும் அது, அவரது புருவங்களுக்கு மத்தியிலிருந்து நீலமும், சிவப்பும் கலந்த வண்ணத்தில் ஒரு குழந்தையாகத் தோன்றியது.
பதம் 3.12.8
ஸ வை ருரோத தேவானாம் பூர்வஜோ பகவான் பவ:
நாமானி குரு மே தாத: ஸ்தானானி ச ஜகத் – குரோ
ஸ:—அவர்; வை-உறுதியாக; ருரோத-இரைந்து கதறினார்; தேவானாம்-பூர்வஜ:-தேவர்களில் மூத்தவரே; பகவான்- மிகவும் சக்தி வாய்ந்தவரே; பவ:-சிவபெருமான்; நாமானி-பல்வேறு நாமங்கள்; குரு-குறிப்படுதல்; மே-எனது; தாத:—ஓ, விதியை நிர்ணயிப்பவரே; ஸ்தானானி—இடங்கள்; ச-மேலும்; ஜகத்-குரோ—ஜகத் குருவே.
பிறந்தவுடன் அது சுதறி அழத் தொடங்குகிறது; ஓ, விதியை நிர்ணயிப்பவரே. ஜகத் குருவே, அருள் கூர்ந்து எனது பெயரையும், இடத்தையும் குறிப்பிடுவீராக.
பதம் 3.12.9
இதி தஸ்ய வச: பாத்மோ பகவான் பரிபாலயன்
அப்யதாத் பத்ரயா வாசா மா ரோதீஸ் தத் கரோமி தே
இதி—இவ்வாறு: தஸ்ய-அவரது; வச:- வேண்டுகோள்; பாத்ம: -தாமரை மலரிலிருந்து பிறந்தவர்; பகவான்- சக்தி வாய்ந்தவர்; பரிபாலயன் -வேண்டுகோளை ஏற்று: அப்யதாத்-அமைதிப்படுத்தினார்; பத்ரயா- அன்புடன்; வாசா—-வார்த்தைகள்; மா-வேண்டாம்; ரோதீ:-அழ; தத்—அந்த; கரோமி- நான் நிறைவேற்றுவேன்; தே – நீ விரும்பியதை.
அனைத்துச் சக்திகளும் நிறைந்தவரும் தாமரை மலரிலிருந்து பிறந்தவருமான பிரம்மா அக் குழந்தையின் வேண்டுகோளை ஏற்று அதைச் சமாதானப்படுத்தும் வகையில் கூறினார்: “அழ வேண்டாம், நிச்சயம் நீ விரும்பியதை நான் நிறைவேற்றுவேன்” என்று.
பதம் 3.12.10
யத் அரோதீ: ஸுர – சிரேஷ்ட ஸோத்வேக இவ பாலக:
ததஸ் த்வாம் அபிதாஸ்யந்தி நாம்னா ருத்ர இதி ப்ரஜா:
யத்—எவ்வளவு தூரம்; அரோதீ:–கதறி அழுதல்; ஸுர— ச்ரேஷ்ட—ஒ. தேவர்களின் தலைவனே; ஸ-உத்வேக:-மிகுந்த கவலையுடன்; இவ-போன்று; பாலக:-ஒரு பையன்; தத:-ஆகையினால்; த்வாம்- நீ: அபிதாஸ்யந்தி—அழைக்கப்படுவாய்; நாம்னா—என்ற பெயரில்; ருத்ர:- ருத்திரன்; இதி-இவ்வாறு; ப்ரஜா:—மக்கள்.
அதன் பின்னர் பிரம்மா கூறினார்: ஒ, தேவர்களின் தலைவனே, நீ ருத்திரன் என்று மக்களால் அழைக்கப்படுவாய். ஏனெனில் நீ மிகவும் கவலை கொண்டு அழுதமையே இதற்குக் காரணமாகும்.
பதம் 3.12.11
ஹ்ருத் இந்த்ரியாணி அஸுர் வ்யோம வாயுர் அக்னிர் ஜலம் மஹீ
ஸூர்யச் சந்த்ரஸ் தபஸ் சைவ ஸ்தானானி அக்ரே க்ருதானி தே
ஹ்ருத்- இதயம்; இந்த்ரியாணி-புலன்கள்; அஸு:-உயிர் காற்று; வ்யோம- வானம்; வாயு:-காற்று ; அக்னி:-அக்னி; ஜலம்-தண்ணீர்; மஹீ – நிலம்; ஸூர்ய:-சூரியன்; சந்திர – சந்திரன்; தப;-தவம்; ச- அதுபோல்; ஏவ- உறுதியாக; ஸ்தானானி – இவ்விடங்கள் அனைத்தும்; அக்ரே- இதற்கு முன்பே; க்ருதானி- ஏற்கெனவே படைக்கப்பட்டு விட்டது; தே-உனக்காக.
அன்புக் குழந்தையே, உனது இருப்பிடமாக நான் ஏற்கெனவே கீழ்க்கண்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து விட்டேன். அவை: இதயம், புலன்கள், மூச்சுக்காற்று, வானம், காற்று, அக்னி, தண்ணீர், பூமி, சூரியன், சந்திரன் மற்றும் தவம் முதலியவையாகும்.
பதம் 3.12.12
மன்யுர் மனுர் மஹினஸோ மஹான் சிவ ருதத்வஜ:
உக்ரரேதா பவ: காலோ வாமதேவோ த்ருதவ்ரத:
மன்யு: மனு: மஹினஸ:- மஹான், ஸிவ:- ருதத்வஜ: உக்கிரரேதா:- பவ: கால: வாமதேவ:- திருதவிரத:- இவையனைத்தும் ருத்திரனின் பெயர்களாகும்.
பிரம்ம தேவர் கூறினார்: அன்புக் குழந்தையே, உனக்கு மற்றும் பதினோரு பெயர்களும் உண்டு. அவை: மன்யு, மனு, மஹினஸன், மஹான், சிவன், ருத்வஜன், உக்ரரேதான், பவன், காலன், வாமதேவன், மற்றும் திருதவிரதன் என்பவையாகும்.
பதம் 3.12.13
தீர் த்ருதி ரஸலோமா ச நியுத் ஸர்பிர் இலாம்பிகா
இராவதீ ஸ்வதா தீக்ஷா ருத்ராண்யோ ருத்ர தே ஸ்த்ரிய:
தீ, திருதி, ரஸலா, உமா, நியூத், ஸர்பி: இலா, அம்பிகா, இராவதீ, ஸ்வதா, தீக்ஷா ருத்ராண்ய:-பதினோரு ருத்ராணீகள்; ருத்ர-ஓ ருத்திரனே; தே-உனக்கு ; ஸ்த்ரிய:-மனைவியர்.
ஓ.ருத்திரனே, உனக்குப் பதினோரு மனைவியர் உண்டு. அவர்கள் ருத்ராணீகள் என்றழைக்கப்படுவர். அவர்களின் பெயர்கள்: தீ, திருதி, ரஸலா, உமா, நியுத், ஸர்பி, இலா, அம்பிகா, இராவதீ, ஸ்வதா மற்றும் தீக்ஷா என்பவையாகும்.
பதம் 3.12.14
க்ருஹாணைதானி நாமானி ஸ்தானானி ச ஸ-யோஷண:
ஏபி: ஸ்ருஜ ப்ரஜா பஹ்வீ: ப்ரஜானாம் அஸி யத் பதி;
க்ருஹாண— ஏற்றுக் கொள்வாயாக; ஏதானி-இவையெல்லாவற்றையும்; நாமானி—பல்வேறு நாமங்கள்; ஸ்தானானி—அதுபோல் இடங்கள்; ச-மேலும்; ஸ-யோஷண:-மனைவியருடன்; ஏபி: – அவர்களுடன்; ஸ்ருஜ-உற்பத்தி செய்வாய்; ப்ரஜா:-பிரஜைகளை; பஹ்வீ:-பெருமளவில்; ப்ரஜானாம்—உயிர்வாழிகளின்; அஸி-நீ; யத்—இன்றிலிருந்து; பதி—பதியாவாய்.
அன்புக் குழந்தையே, நீ இப்பொழுது உனக்குரிய பல நாமங்களையும், உனக்கும், உன் பல்வேறு மனைவியர்க்கும் உரிய பல்வேறு இருப்பிடங்களையும் ஏற்றுக் கொள்வாயாக. இப்பொழுது நீயும் உயிர்களின் தலைவர்களுள் ஒருவன். ஆதலினால் மக்கட் தொகையினைப் பெருமளவில் நீ உற்பத்தி செய்வாயாக.
பதம் 3.12.15
இதி ஆதிஷ்ட: ஸ்வ குருணா பகவான் நீல-லோஹிதா:
ஸத்வாக்ருதி ஸ்வபாவேன ஸஸர்ஜாத்ம ஸமா: ப்ரஜா:
இதி-இவ்வாறு: ஆதிஷ்ட:-கட்டளையிடப்பட்டு; ஸ்வ- குருணா- தனது சொந்த ஆன்மீக குருவினால்; பகவான்-சக்தி வாய்ந்த: நீல-லோஹித: நீலமும் சிவப்பும் கலந்த வண்ணமுடைய ருத்திரன்; ஸத்வ-சக்தி; ஆக்ருதி-உடல் தன்மைகள்; ஸ்வபாவேன- கொடூரமான குணம் உடைய; ஸஸர்ஜ-படைத்தார்; ஆத்ம-ஸமா:- அவரது தன்மையை ஒத்த: ப்ரஜா:-பிரஜைகள்.
நீலமும் சிவப்பும் கலந்த உடல் வண்ணமுடைய ஆற்றல் மிக்க ருத்திரன் தன்னைப் போன்றே கொடூர குணமும், வலிமையும், உடல் தோற்றமும் கொண்ட பல பிரஜைகளை உற்பத்தி செய்தார்.
பதம் 3.12.16
ருத்ராணாம் ருத்ர-ஸ்ருஷ்டானாம் ஸமந்தாத் க்ரஸதாம் ஜகத்
நிஸாம்யாஸங்க்யஸோ யூதான் ப்ரஜாபதிர் அஸங்கத
ருத்ராணாம்-ருத்திரனின் மைந்தர்கள்; ருத்ர-ஸ்ருஷ்டானாம் ருத்திரனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்; ஸமந்தாத்- ஒன்றாகக் கூடி நின்றது; க்ரஸதாம்–விழுங்குவதற்காக; ஜகத்-ஜகத்தினை; நிஸாம்ய— அவர்கள் செயல்களைக் கண்டு; அஸங்க்யஸ:-அளவற்ற; யூதான்- கூட்டம்; ப்ரஜா-பதி:-உயிர் வாழிகளின் தந்தைக்கு (பிரஜாபதிக்கு); அஸங்கத- அச்சம் தோன்றியது.
ருத்திரனால் உண்டுபண்ணப்பட்டக் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் எண்ணற்றவர்களாவர். அவர்கள் கூடி நிற்பதைக் கண்டால் பிரபஞ்சத்தையே விழுங்கி விடுவர் போன்று தோன்றுவர். உயிர்வாழிகளின் தந்தையான பிரம்ம தேவர் இதனைக் கண்டு மிகுந்த அச்சங் கொண்டார்.
பதம் 3.12.17
அலம் ப்ரஜாபி: ஸ்ருஷ்டாபிர் ஈத்ருஸுபி: ஸுரோத்தம
மயா ஸஹ தஹந்தீபிர் திஸச் சஹுர்பிர் உல்பணை:
அலம்- தேவையற்றது; ப்ரஜாபி:- இதுபோன்ற உயிர்வாழிகளால்; ஸ்ருஷ்டாபி:- உற்பத்தி செய்வது; ஈத்ருஸீபி:-இவ்வகையில்; ஸுர— உத்தம -ஒ. தேவர்களில் சிறந்தோனே; மயா- என்னையும்; ஸஹ – உடன்; தஹந்தீபி :- எரிக்கின்றனர்; திஸ: – எல்லாத் திசைகளையும்; சக்ஷுர்பி:- கண்களினால்; உல்பணை:—தீ ஜுவாலைகளினால்.
பிரம்ம தேவர் ருத்திரனிடம் கூறினார்: ஓ. தேவர்களிற் சிறந்தோனே, இக்குணமுடைய உயிர்களை நீ படைப்பது தேவையற்றது இவர்கள் தங்கள் கண்களிலிருந்து எழும் தீ பிழம்புகளினால் எல்லாத் திசைகளையும் எரித்துப் பொசுக்கத் துவங்கி விட்டனர், ஏன் இவர்கள் என்னையே கூடத் தாக்கியுள்ளனர்.
பதம் 3.12.18
தப ஆதிஷ்ட பத்ரம் தே ஸர்வ – பூத – ஸூகாவஹம்
தபஸைவ யதா பூர்வம் ஸ்ரஷ்டா விஸ்வம் இதம் பவான்
தப:- தவம்; ஆதிஷ்ட-இருப்பாயாக; பத்ரம்-மங்கலம்; தே – உனக்கு; ஸர்வ – எல்லா; பூத-உயிர்வாழிகள்; ஸுக-ஆவஹம் மகிழ்ச்சியளிக்கும்; தபஸா-தவத்தினால்; ஏவ – மட்டும்; யதா – போன்று; பூர்வம்-முன்னர்; ஸ்ரஷ்டா-படைப்பாயாக; விஸ்வம்- பிரபஞ்சம்; இதம்—இந்த; பவான் – நீ.
அன்பு மைந்தனே, நீ தவம் செய்வதுதான் உனக்கு நன்மையளிக்கும். அதுவே அனைத்து உயிர்வாழிகளுக்கும் மங்களகரமானதும் ஆகும். மேலும் அவையே உனக்கு நல்லாசிகள் அனைத்தையும் அளிக்கும். தவத்தினால் மட்டுமே நீ இப்பிரபஞ்சத்தினை முன்னரே இருந்தது போல் படைக்க முடியும்.
பதம் 3.12.19
தபஸைவ பரம் ஜ்யோதிர் பகவந்தம் அதோக்ஷஜம்
ஸர்வ-பூத-குஹாவாஸம் அஞ்ஜஸா விந்ததே புமான்
தபஸா-தவத்தினால்; ஏவ-மட்டுமே; பரம் – பரம; ஜ்யோதி:- ஜோதி; பகவந்தம்-முழுமுதற் கடவுளுக்கு; அதோக்ஷஜம்—புலன்களினால் அறிவதற்கு அரியவர்; ஸர்வ-பூத-குஹா- ஆவாஸம் -அனைத்து உயிர்வாழிகளின் இதயங்களிலும் வாழ்பவர்; அஞ்ஜஸா- முற்றிலும்; விந்ததே-அறியக் கூடும் ; புமான்- ஒருவன்.
அனைத்து உயிர்களின் இதயங்களில் இருப்பவரும் அதே நேரம் புலன்களினால் அறிவதற்கு அரியவருமான முழுமுதற் கடவுளை ஒருவன் தவத்தினால் மட்டுமே அணுக முடியும்.
பதம் 3.12.20
மைத்ரேய உவாச
ஏவம் ஆத்மபுவாதிஷ்ட: பரிக்ரம்ய கிராம் பதிம்
பாடம் இதி அமும் ஆமந்த்ரிய விவேஸ தபஸே வனம்
மைத்ரேய: உவாச-ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்; ஏவம்-இவ்வாறு; ஆத்ம-புவா-பிரம்மதேவரால்; ஆதிஷ்ட: – மிகவும் வேண்டப்பட்டு; பரிக்ரம்ய- சுற்றி வலம் வந்து: கிராம்-வேதங்களின்; பதிம்- தலைவருக்கு; பாடம்- அதுவே சரி; இதி-இவ்வாறு: அமும்-பிரம்ம தேவருக்கு; ஆமந்த்ரிய-இவ்வாறு கூறினார்; விவேஸ- புகுந்தார்; தபஸே-தவம் செய்வதற்காக; வனம் -வனத்தினுள்.
ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: இவ்வாறு தனது தந்தையான பிரம்ம தேவரால் கட்டளையிடப்பட்ட ருத்திரன், வேதங்களின் குருவான பிரம்ம தேவரைச் சுற்றி வந்தார். அவரது ஒப்புதலை வார்த்தைகளினால் தெரிவித்த பிறகு அவர் தவம் செய்வதற்காக வனத்தினுள் புகுந்தார்.
பதம் 3.12.21
அதாபித்யாயத: ஸர்கம் தச புத்ரா: ப்ரஜஜ்ஞீரே
பகவச்-சக்தி-யுக்தஸ்ய லோக-ஸந்தான-ஹேதவ:
அத—இவ்வாறு; அபித்யாயத:- சிந்தித்தபொழுது; ஸர்கம் – படைத்தல்.தஸ-பத்து;புத்ரா:- புத்திரர்கள்; ப்ரஜஜ்ஞீரே ஈன்றெடுக்கப்பட்டனர்; பகவத்-முழுமுதற் கடவுளின்; சக்தி – சக்தி; யுக்தஸ்ய- அதிகாரமளிக்கப்பட்டு; லோக-உலகம்; ஸந்தான—சந்தான உற்பத்தி; ஹேதவ:-காரணங்கள்.
முழுமுதற் கடவுளினால் அதிகாரமளிக்கப்பட்டப் பிரம்ம தேவர் உயிர்களைப் படைக்க வேண்டியதை மனதிற்கொண்டு ஜனப் பெருக்கத்திற்காக பத்துப் புதல்வர்களைப் படைத்தார்.
பதம் 3.12.22
மரீசிர் அத்ரி-அங்கிரஸௌ புலஸ்த்ய: புலஹ: க்ரது:
ப்ருகுரி வஸிஷ்டோ தக்ஷஸ் ச தஸமஸ் தத்ர நாரத:
மரீசி:அத்ரி, அங்கிரஸௌ, புலஸ்தியர், புலஹ:, கிரது: பிருகு: வசிஷ்டர் : தக்ஷ:-பிரம்ம தேவரின் புதல்வர்களின் பெயர்கள்; ச – மேலும்; தஸம:- பத்தாவது; தத்ர-அங்கே; நாரத: நாரதர்.
மரீசி, அத்திரி, அங்கிரஸௌ, புலஸ்தியர், புலஹர், கிரது, பிருகு, வசிஷ்டர், தக்ஷன் முதலிய புதல்வர்களும் பத்தாவதாக நாரதரும் பிறந்தனர்.
பதம் 3.12.23
உத்ஸங்கான் நாரதோ ஜஜ்ஞே தக்ஷோ ‘ங்குஷ்டாத் ஸ்வயம்புவ:
ப்ராணாத் வஸிஷ்ட: ஸஞ்ஜாதோ ப்ருகுஸ் த்வசி கராத் க்ரது:
உத்ஸங்காத்—உன்னதமான முதிர் சிந்தனையினால்; நாரத: மாமுனிவர் நாரதர்: ஜஜ்ஞே-பிறந்தார்; தக்ஷ:-தக்ஷன்; அங்குஷ்டாத் – கட்டை விரலிலிருந்து: ஸ்வயம்புவ:- பிரம்மாவின்; ப்ராணாத்— சுவாசத்திலிருந்து; வஸிஷ்ட:-வசிஷ்டர்; ஸஞ்ஜாத:- பிறந்தார்; ப்ருகு :- பிருகு முனிவர்; த்வசி-தொடுதலினால்; கராத்- கரத்தினின்று; க்ரது:-கிரது முனிவர்.
பிரம்ம தேவரது உடலின் மிகச்சிறந்த பகுதியான சிந்திக்கும் தன்மை உடைய உள்ளத்திலிருந்து நாரதர் பிறந்தார். வசிஷ்டர் அவரது சுவாசத்திலிருந்தும், தக்ஷன் அவரது கட்டை விரலிலிருந்தும், பிருகு முனிவர் அவரது தொடு உணர்ச்சியிலிருந்தும், கிரது முனிவர் அவரது கரத்தினின்றும் தோன்றினர்.
பதம் 3.12.24
புலஹோ நாபிதோ ஜஜ்ஞே புலஸ்த்ய: கர்ணயோர் ருஷி:
அங்கிரா முகதோ ‘க்ஷணோ ‘த்ரிர் மரீசிர் மனஸோ ‘பவத்
புலஹ-புலஹ முனிவர்; நாபித:- நாபியிலிருந்தும்: ஐஜ்ஞே – பிறந்தவர்; புலஸ்த்ய:-புலஸ்திய முனிவர்; கர்ணயோ:-காதுகளில் இருந்தும்; ருஷி:-மாமுனிவர்; அங்கிரா:-அங்கிரசு முனிவர்; முகத:-வாயிலிருந்தும்; அஷ்ண:—கண்களிலிருந்தும்: அத்ரி:- அத்திரி முனிவர்: மரீசி:-மரீசி முனிவர்; மனஸ:-மனதிலிருந்தும்; அபவத்- தோன்றினர்.
புலஸ்தியர் காதுகளில் இருந்தும், அங்கிரசு வாயிலிருந்தும், அத்திரி விழிகளில் இருந்தும், மரீசி மனதிலிருந்தும், புலஹர் பிரம்ம தேவரின் நாபியிலிருந்தும் தோன்றினர்.
பதம் 3.12.25
தர்ம: ஸ்தனாத் தக்ஷிணதோ யத்ர நாராயண: ஸ்வயம்
அதர்ம: ப்ருஷ்டதோ யஸ்மான் ம்ருத்யுர் லோக-பயங்கர:
தர்ம:-சமய அறநெறி; ஸ்தனாத்—மார்பிலிருந்தும்; தக்ஷிணத:- வலது புறத்திலிருந்தும்; யத்ர—அங்கே; நாராணய:-பரமபுருஷ பகவான்; ஸ்வயம்-தனிப்பட்ட முறையில்; அதர்ம:-சமய அறநெறிக்குப் புறம்பானது; ப்ருஷ்டத:-பிருஷ்டத்திலிருந்தும்; யஸ்மாத்-அதிலிருந்து; ம்ருத்யு: மரணம்; லோக-உயிர்வாழிக்கு; பயம்- -கர:-பயங்கரம்.
சமய அறநெறியானது முழுமுதற் கடவுளான நாராயணர் உறையும் பிரம்ம தேவரின் மார்பிலிருந்து தோன்றியது. சமயத்திற்குப் புறம்பானவை அவரது பிருஷ்டத்திலிருந்து தோன்றியது. உயிர் வாழிக்கு அச்சந்தரும் மரணமானது அங்கே தான் நிகழ்கிறது.
பதம் 3.12.26
ஹ்ருதி காமோ ப்ருவ: க்ரோதோ லோபஸ் சாதர-தச்சதாத்
ஆஸ்யாத் வாக் ஸிந்தவோ மேத்ரான் நிர்ருதி: பாயோர் அகாஸ்ரய:
ஹ்ருதி – இதயத்திலிருந்து, காம:- காமம்; ப்ருவ:- புருவங்களில் இருந்து; க்ரோத:- குரோதம் ; லோய:- பேராசை: ச-மேலும்: அதர- தச்சதாத்- அதரங்களின் இடையிலிருந்து; ஆஸ்யாத் – வாயிலிருந்து; வாக்- வாக்கும்; ஸிந்தவ: – கடல்கள்; மேத்ராத் – ஆண்குறியிலிருந்து; நிர்ருதி: – இழி செயல்கள்; பாயோ:- எருவாயிலிருந்து (குதம்): அக -ஆஷ்ரய: – தீயொழுக்கத்தின் இருப்பிடம்.
பிரம்ம தேவரின் இதயத்திலிருந்து காமமும், புருவங்களுக்கு இடையில் இருந்து குரோதமும், உதடுகளின் வழியே பேராசையும், வாயிலிருந்து வாக்கும், ஆண் குறியிலிருந்து கடல்களும், அனைத்துப் பாவங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் எருவாயிலிருந்து இழிந்த வெறுக்கத்தகும் செயல்களும் தோன்றின.
பதம் 3.12.27
சாயாயா: கர்தமோ ஜஜ்ஞே தேவஹூத்யா: பதி: ப்ரபு:
மனஸோ தேஹதஸ் சேதம் ஜஜ்ஞே விஸ்வ-க்ருதோ ஜகத்
சாயாயா:- நிழலிலிருந்து: கர்தம-கர்தம முனிவர்: ஜஜ்ஞே- தோன்றினார்; தேவஹூதியா:- தேவஹுதியின்; பதி:-கணவர்; ப்ரபு: – குரு; மனஸ:-மனதிலிருந்து; தேஹத:-தேஹத்திலிருந்து; ச – மேலும்: இதம் – இந்த; ஜஜ்ஞே- வளர்ந்தது; விஸ்வ – பிரபஞ்சம்; க்ருத:-படைத்தவரின்; ஜகத் – ஜகம்.
மிகச்சிறந்த தேவஹுதியின் கணவரான கர்தம முனிவர் பிரம்ம தேவரின் நிழலிலிருந்து தோன்றினார். இவ்வாறு அனைவரும் பிரம்ம தேவரின் உடல் அல்லது மனதிலிருந்து தோன்றினர்.
பதம் 3.12.28
வாசம் துஹிதரம் தன்வீம் ஸ்வயம்பூர் ஹரதீம் மன:
ஆகாமாம் சகமே க்ஷத்த: ஸ-காம இதி ந: ஸ்ருதம்
வாசம் – வாக்கு: துஹிதரம்-புதல்வியினிடத்து; தன்வீம்-அவரது உடலிலிருந்து பிறந்த: ஸ்வயம்பு-பிரம்ம தேவர்; ஹரதீம்- கவர்ச்சி கொண்டு; மன:-அவரது மனம்; ஆகாமாம்-பாலுறவு நாட்டம் இன்றி; சகமே – விரும்பினார்; க்ஷத்த:- ஓ, விதுரனே; ஸ-காம:-பாலுறவு நாட்டமுற்று; இதி-இவ்வாறு; ந:- நாம்; ச்ருதம்-கேட்டிருக்கிறோம்.
ஓ, விதுரனே, பிரம்ம தேவர் உடலிலிருந்து தோன்றிய வாக்கு என்னும் அவரது புதல்வி காம இச்சை இல்லாதவளாக இருந்தும் பிரம்ம தேவரின் மனதினை அவள் கவர்ந்ததினால் அவர் அவளிடம் பாலுறவுக் கவர்ச்சி உடையவரானார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பதம் 3.12.29
தம் அதர்மே க்ருத-மதிம் விலோக்ய பிதரம் ஸுதா;
மரீசி-முக்யா முனயோ விஸ்ரம்பாத் ப்ரத்யபோதயன்
தம்—அவருக்கு; அதர்மே – முறைகேட்டினால்; க்ருத – மதிம் மனம் – ஆளாகியதினால்; விலோக்ய—இதனைக் கண்டு: பிதரம்— தந்தைக்கு; ஸுதா:-புதல்வர்கள்; மரீசி – முக்யா:-மரீசியின் தலைமையின் கீழ்: முனய:-முனிவர்கள்: விஸ்ரம்பாத்- மிகுந்த மரியாதையுடன்: ப்ரத்யபோதயன் — பின்வருமாறு கூறினர்.
தனது தந்தையின் முறைகேடானச் செயலைக் கண்டு மரீசி முனிவர் உள்ளிட்ட பிரம்ம தேவரின் புதல்வர்கள் அனைவரும் மிகுந்த மரியாதையுடன் பின்வருமாறு கூறினர்.
பதம் 3.12.30
நைதத் பூர்வை: க்ருதம் த்வத் யே ந கரிஷ்யந்தி சாபரே
யஸ் த்வம் துஹிதரம் கச்சேர் அனிக்ருஹ்யாங்கஜம் ப்ரபு:
ந -இல்லை; ஏதத் – இதுபோன்ற செயல்; பூர்வை:- இதற்கு முந்தைய பிரம்மாக்கள் அல்லது இப்பிரம்ம தேவரின் முந்தைய கல்பங்களில்; க்ருதம்- செய்யப்பட்டது; த்வத்—உம்மால்; யே-அது; ந-இல்லை; கரிஷ்யந்தி-செய்யப் போவதும்; ச-மேலும்; அபரே – எவரேனும்; ய:—அது; த்வம்—நீர்; துஹிதரம் – மகளிடம்; கச்சே: – செல்வது; அனிக்குஹ்ய-கட்டுப்பாடின்றி; அங்கஜம் – காம இச்சை; ப்ரபு:—ஓ, தந்தையே.
ஓ தந்தையே, ஒரு இக்கட்டானச் சூழ்நிலைக்கு உம்மை ஆளாக்கிக் கொள்ளும் இச்செயலானது உமக்கு முந்தைய பிரம்மாக்களினாலோ, வேறு எவராலுமோ செய்யப்பட்டதில்லை. நீரே இதற்கு முந்தைய கல்பங்களிலோ செய்ததுமில்லை. இனி வருங்காலத்தில் எவரும் செய்வதற்கு முயற்சிக்கப் போவதுமில்லை. நீரே இப்பிரபஞ்சத்தின் உயர்ந்த உயிர் ஆவீர். அவ்வாறிருக்க உமது இச்சைகளை அடக்க முடியாது நீர் ஏன் உமது புதல்வியுடன் பாலுறவு கொள்ள விரும்பினீர்?
பதம் 3.12.31
தேஜீயஸாம் அபி ஹி ஏதன் ந ஸுஸ்லோக்யம் ஜகத்-குரோ
யத்-வ்ருத்தம் அநுதிஷ்டன் வை லோக க்ஷேமாய கல்பதே
தேஜீயஸாம் – உயர்ந்த சக்தியுடையவர்; அபி-இருந்தும்; ஹி- உறுதியாக; ஏதத்—இச்செயல்; ந-பொருந்துவதாயில்லை; ஸு-ஸ்லோக்யம் நன்னடத்தை; ஜகத்-குரோ-ஜகத் குரு; யத்—அவரது; வ்ருத்தம்-நடத்தை; அநுதிஷ்டன்-பின்பற்றப்படும் ; வை – உறுதியாக; லோக:-உலகம்; க்ஷேமாய- வளத்திற்காக; கல்பதே -தகுதியாவர்.
நீரே மிகவும் சக்தியுடையவராக விளங்கிய போதிலும் உமது தகாத பாலுறவுச் செயல் பொருந்துவதன்று. ஏனெனில் ஆன்மீக வளர்ச்சிக்காகப் பொதுமக்கள் உம்மைப் பின்பற்றுகின்றனர்.
பதம் 3.12.32
தஸ்மை நமோ பகவதே ய இதம் ஸ்வேன ரோசிஸா
ஆத்ம-ஸ்தம் ப்யஞ்ஜயாம் ஆஸ ஸ தர்மம் பாதும் அர்ஹதி
தஸ்மை—அவருக்கு; நம: வந்தனங்கள்; பகவதே-முழுமுதற் கடவுளுக்கு; ய:-அவர்; இதம்-இந்த; ஸ்வேன—அவரது சுயமான; ரோசிஷா-ஜோதி; ஆத்ம—ஸ்தம்—அவர் தம்மில் நிலைத்து; வ்யஞ்ஜயாம்-ஆஸ—தோன்றுகிறார்; ஸ:-அவர்; தர்மம்-சமயம்; பாதும்—பாதுகாப்பிற்காக; அர்ஹதி—அன்புடன் அருள்வாராக.
தம்மில் நிலைத்தவாறே தமது ஜோதியினால் இப்பிரபஞ்சத்தினைத் தோற்றுவித்த முழுமுதற் கடவுளுக்கு நமது மரியாதைக்குரிய வந்தனங்களைச் சமர்ப்பிப்போம். அனைத்து நன்மைகளுக்காகவும் அவர் சமய அறநெறிகளைக் காப்பாராக.
பதம் 3.12.33
ஸ இத்தம் க்ருணத: புத்ரான் புரோ த்ருஷ்ட்வா ப்ரஜாபதீன்
ப்ரஜாபதி-பதிஸ் தன்வம் தத்யாஜ வ்ரீடிதஸ் ததா
தாம் திஸோ ஜக்ருஹுர் கோராம் நீஹாரம் யத் விதுஸ் தம:
ஸ:-அவர் (பிரம்மா); இத்தம்- இவ்வாறு; க்ருணத:- பேசியது; புத்ரான்-புத்திரர்கள்; புர:-முன்னர்; த்ருஷ்ட்வா – கண்டு; ப்ரஜா— பதீன்-பிரஜாபதிகள் அனைவரும்; ப்ரஜாபதி-பதி: இவர்கள் – அனைவரின் தந்தையான (பிரம்மா); தன்வம்- உடல்; தத்யாஜ– துறந்தார்; வ்ரீடித:-நாணங் கொண்டு; ததா – அந்த நேரம்; தாம்—அந்த உடல்; திஸ:-எல்லாத் திசைகளிலும்; ஜக்ருஹு:-ஏற்றுக்கொள்ளல்; கோராம்- குறை கூறும் வண்ணம்; நீஹாரம்-பனி மூட்டம்; யத்-அது; விது: – அவர்கள் அறிந்தவாறு; தம:-இருள்.
அனைத்துப் பிரஜாபதிகளின் தந்தையான பிரம்மதேவர் தனது பிரஜாபதி புத்திரர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டு வெட்கிக் குறுகினார். தான் ஏற்றுக் கொண்டிருந்த உடலை உடனடியாகத் துறக்கவும் செய்தார். பின்னர் அவ்வுடல் இருளின் ஆபத்தான பனி மூட்டம் போல் அனைத்துத் திக்குகளிலும் காட்சியளித்தது.
பதம் 3.12.34
கதாசித் த்யாயத: ஸ்ரஷ்டுர் வேதா ஆஸம்ஸ் சதுர் முகாத்
கதம் ஸ்ரக்ஷ்யாமி அஹம் லோகான் ஸமவேதான் யதா புரா
கதாசித்-முன்னொரு காலத்தில்; த்யாயத:-ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது : ஸ்ரஷ்டு:-பிரம்மதேவரின்; வேதா:-வேத இலக்கியம்; ஆஸன்-வெளிப்பட்டது; சது:-முகாத்-நான்கு வாய்களிலிருந்தும்; கதம்— ஸ்ரக்ஷ்யாமி-எவ்வாறு நான் படைப்பேன்; அஹம்—எனது; லோகான்–அனைத்து உலகங்களும்; ஸமவேதான்—கூடியிருத்தல்; யதா—இருந்தது போன்று; புரா—முன்பு.
முன்னொரு காலத்தில், பிரம்ம தேவர் கடந்த கல்பத்தில் இருந்த உலகங்களைப் போன்று எவ்வாறு உலகங்களைப் படைப்பது என்று ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்த பொழுது பல்வேறு ஞானங்களையுடைய நான்கு வேதங்களும் அவரது நான்கு வாய்களிலிருந்தும் வெளிப்பட்டன.
பதம் 3.12.35
சாதுர்-ஹோத்ரம் கர்ம-தந்ந்ரம் உபவேத – நயை: ஸஹ
தர்மஸ்ய பாதாஸ் சத்வாரஸ் ததைவாஸ்ரம-வ்ருத்தய:
சாது: நான்கு; ஹோத்ரம்- வேள்விக்கான பொருள்கள்; கர்ம- செயல்கள்; தந்த்ரம் – இச்செயல்களின் விரிவுகள்; உபவேத- உபவேதங்கள்; நயை: – தருக்க முடிவுகளினால்; ஸஹ- உடன்; தர்மஸ்ய-சமயத்தின்; பாதா :- கொள்கைகள்; சத்வார:-நான்கு; ததா ஏவ-அதே வழியில்; ஆஸ்ரம – சமுதாய அமைப்புக்கள்; வ்ருத்தய:-தொழில்கள்.
அக்கினி வேள்வி செய்யும்பொழுது தேவைப்படும் நான்கு வகையான கருவிகள்: செய்பவர் (ஒதுபவர்), அர்ப்பணிப்பவர், நெருப்பு, உபவேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கேற்ற செயல்கள் போன்றவையாகும். மேலும் நான்கு, சமய அறநெறிகள் (சத்தியம், துறவு நெறி, கருணை மற்றும் தூய்மை) மற்றும் நான்கு வகையான சமுதாயப் பிரிவுகளின் தர்மங்கள் போன்றவை அனைத்தும் வெளிப்பட்டன.
பதம் 3.12.36
விதுர உவாச
ஸ வை விஸ்வ-ஸ்ருஜாம் ஈஸோ வேதாதீன் முகதோ ‘ஸ்ருஜத்
யத் யத் யேனாஸ்ருஜத் தேவஸ் தன் மே ப்ரூஹி தபோ-தன
விதுர: உவாச-விதுரர் கூறினார்; ஸ:-அவர் (பிரம்மா); வை – உறுதியாக ; விஸ்வ-பிரபஞ்சம்: ஸ்ருஜாம்-படைத்தவரின்; ஈஸ: – கட்டுப்படுத்துபவர்; வேத- ஆதீன்-வேதங்கள் போன்றவை; முகத:- வாயினின்று; அஸ்ருஜத்-நிறுவப்பட்டது; யத் – அந்த; யத்-அது; யேன – அதனால்; அஸ்ருஜத் –படைத்தல்; தேவ:-தெய்வம்; தத் – அந்த; மே-எனக்கு; ப்ரூஹி-அருள் கூர்ந்து விளக்கவும்: தப:-தன- ஓ, தவத்தை மட்டுமே செல்வமாகக் கொண்டிருக்கும் முனிவரே.
விதுரர் கூறினார்: ஓ, தவத்தை மட்டுமே செல்வமாகக் கொண்டிருக்கும் மாமுனிவரே, பிரம்ம தேவர் வாயினின்று வெளி வந்த வேத ஞானத்தினை யாருடைய உதவியினால் எவ்வாறு அவர் நிறுவினார் என்பதை அருள்கூர்ந்து விளக்குவீராக.
பதம் 3.12.37
மைத்ரேய உவாச
ருக்-யஜு:-ஸாமாதர்வாக்யான்
வேதான் பூர்வாதிபிர் முகை:
ஸாஸ்த்ரம் இஜ்யாம் ஸ்துதி-ஸ்தோமம்
ப்ராயஸ்சித்தம் வ்யதாத் க்ரமாத்
மைத்ரேய: உவாச-மைத்ரேயர் கூறினார்; ருக்-யஜு:—ஸாம- அதர்வ- நான்கு வேதங்கள்; ஆக்யான்- என்ற பெயரில்; வேதான்-வேத இலக்கியங்கள்; பூர்வ- ஆதிபி:-முன்புறமிருந்து தொடங்கி; முகை:- வாய்களினால்; ஸாஸ்த்ரம்- முன்பு உச்சரிக்கப்படாத வேத சாத்திரங்கள்; இஜ்யாம்-புரோகிதச் சடங்குகள்; ஸ்துதி-ஸ்தோமம்-துதித்தற்குரிய கருப்பொருள்கள்; ப்ராயஸ்சித்தம்-உன்னதமானச் செயல்கள்; வ்யதாத் -நிறுவப்பட்டன; க்ரமாத் – ஒன்றன்பின் மற்றொன்று.
மைத்ரேயர் கூறினார்: பிரம்ம தேவரின் முன்புற முகத்திலிருந்து தொடங்கி நான்கு வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்பவை தோன்றின. அதனைத் தொடர்ந்து முன்னர் உச்சாடனம் செய்யப்படாத வேத சாத்திரங்கள், புரோகிதச் சடங்குகள், துதிப்பதற்குரிய கருப்பொருட்கள், மற்றும் மனவாசகங்கடந்த செயல்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நிறுவப்பட்டன.
பதம் 3.12.38
ஆயுர்-வேதம் தனுர்-வேதம் காந்தர்வம் வேதம் ஆத்மன:
ஸ்தாபத்யம் சாஸ்ருஜத் வேதம் க்ரமாத் பூர்வாதிபிர் முகை:
ஆயு: வேதம்- ஆயுர் வேதம் (மருத்துவ விஞ்ஞானம்); தனு:- வேதம்—தனுர்வேதம் (ராணுவ விஞ்ஞானம்); காந்தர்வம்—இசைக் கலைகள்; வேதம்—இவையெல்லாம் வேத அறிவேயாகும்; ஆத்மன:- அவரது சுயமாக; ஸ்தாபத்யம் – சிற்பக் கலைகள்; ச-மேலும்; அஸ்ருஜத் – படைக்கப்பட்டன; வேதம்- அறிவு; க்ரமாத்-முறையே; பூர்வ- ஆதிபி:- முன்பக்கமுள்ள முகத்திலிருந்து தொடங்கி; முகை:- வாய்களினின்று.
அவர் மேலும், மருத்துவ விஞ்ஞானம், இராணுவ விஞ்ஞானம், இசைக்கலை, சிற்பக்கலை போன்றவற்றையெல்லாம் வேதங்களிலிருந்து படைத்தார். இவையெல்லாம் அவரது முன்பக்கமுள்ள முகத்திலிருந்து தொடங்கி ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின.
பதம் 3.12.39
இதிஹாஸ-புராணானி பஞ்சமம் வேதம் ஈஸ்வர:
ஸர்வேப்ய ஏவ வக்த்ரேப்ய: ஸஸ்ருஜே ஸர்வ-தர்ஸன:
இதிஹாஸ-இதிகாசங்கள்; புராணானி-புராணங்கள் (வேதங்களின் இணைப்புக்கள்); பஞ்சமம் – ஐந்தாம்; வேதம்-வேத இலக்கியம்; ஈஸ்வர:-பகவான்; ஸர்வேப்ய:- எல்லாம் ஒருங்குகூடி; ஏவ – உறுதியாக; வக்த்ரேப்ய:- அவரது வாய்களினின்று; ஸஸ்ருஜ – படைக்கப்பட்டன; ஸர்வ-எல்லாவற்றையும்; தர்ஸன:- முக்காலத்தையும் பார்க்கும் சக்தியுடையவர்.
பின்னர் அவர் கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என்னும் முக்காலங்களையும் காணும் ஆற்றல் பெற்றவராதலினால் ஐந்தாம் வேதமான புராணங்களையும், இதிகாசங்களையும் தமது வாய்களிலிருந்து படைத்தளித்தார்.
பதம் 3.12.40
ஷோடஷி-யுக்தௌ பூர்வ-வக்த்ராத் புரீஷி-அக்னிஷ்துதாவ் அத ஆப்தோர்யாமாதிராத்ரெள ச வாஜபேயம் ஸகோஸவம்
ஷோடஷீ-யுக்தௌ—வேள்விகளின் வகைகள்; பூர்வ-வக்த்ராத் – கீழ்த்திசை வாயினின்று: புரீஷி-அக்னிஷ்டு தெள- வேள்வியின் வகை; அத – அதன்பிறகு; ஆப்தோர்யாம – அதிராத்தௌ – வேள்வியின் வகை; ச – மேலும்; வாஜபேயம் – வேள்வியின் வகை; ஸ-கோஸவம் – வேள்வியின் வகை.
அக்கினி வேள்விகளின் பல்வேறு வகைகளும் (ஷோடஷீ, யுக்தம், புரீஷி, அக்னிஷ்டோமம், ஆப்தோர்யாமம், அதிராத்ரம், வாஜபேயம், மற்றும் கோஸவம்) பிரம்ம தேவரின் கீழ்த்திசை வாயினின்று வெளிப்பட்டன.
பதம் 3.12.41
வித்யா தானம் தப: ஸத்யம் தர்மஸ்யேதி பதானி ச
ஆஸ்ரமாம்ஸ் ச யதா-ஸங்க்யம் அஸ்ருஜத் ஸஹ வ்ருத்திபி:
வித்யா – கல்வி; தானம்-தானம்; தப:-தவம்; ஸத்யம்- சத்தியம்; தர்மஸ்ய-சமயத்தின் நெறிகள்; இதி – இவ்வாறு; பதானி – நான்கு கால்கள்; ச-மேலும் ; ஆஸ்ரமான்—வாழ்க்கை முறைகள்; ச-மேலும்; யதா – அவை போன்று; ஸங்க்யம் – எண்ணிக்கையில்; அஸ்ருஜத்— படைக்கப்பட்டன; ஸஹ—அவற்றுடன்; வ்ருத்திபி:-வாழ்க்கைத் தொழில்களினால்.
தானம், தவம், கல்வி, சத்தியம் போன்றவை சமயத்தின் நான்கு அங்கங்கள் என்று கூறப்படுகின்றன. இவற்றைக் கற்றுக் கொள்வதற்கு வாழ்க்கைத் தொழில் மற்றும் பல்வேறு பிரிவுகளைப் பொருத்து நான்கு அமைப்புக்கள் இருக்கின்றன. பிரம்மதேவர் இவையனைத்தையும் ஒழுங்குமுறையில் படைத்தார்.
பதம் 3.12.42
ஸாவித்ரம் ப்ராஜாபத்யம் ச ப்ராஹ்மம் சாத ப்ருஹத் ததா
வார்தா ஸஞ்சய-சாலீன-சிலோஞ்ச இதி வை க்ருஹே
ஸாவித்ரம்-இரு பிறப்பாளருக்கு உபநயன விழா; ப்ராஜபத்யம்- ஒரு வருடத்திற்கு நிறைவேற்றுவதற்கான சபதம்; ச-மேலும்; ப்ராஹ்மம்-வேதங்களை ஏற்றுக்கொள்ளுதல்; ச-மேலும்; அத-கூட; ப்ருஹத்-பாலுறவு வாழ்க்கையை முற்றிலும் தவிர்த்தல்; ததா — பிறகு; வார்தா-வேதக் கட்டளையின் படியுள்ள வாழ்க்கைத் தொழில்கள்; ஸஞ்சய-தொழில் தர்மம்; சாலீன – யாருடைய உதவியினையும் கேட்டுப் பெறாத வாழ்க்கை: ஸில-உஞ்ச:-கீழே சிதறி கிடக்கும் தானியங்கள்; இதி-இவ்வாறு; வை-இருந்தாலும்; க்ருஹே-இல்லற வாழ்க்கையில்.
இதன் பின்னர், இரு பிறப்பாளருக்கான உபநயன விழா துவக்கப் பெற்றது. இதனுடைய நோக்கம், வேதங்களை ஏற்றுக் கொண்ட பிறகு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு அவ்விதிகளைப் பின்பற்றுவது, பாலுறவு வாழ்க்கையினை முற்றிலும் தவிர்ப்பது, வேதங்களின் கட்டளைகளுக்கேற்ப வாழ்க்கைத் தொழில் புரிவது, இல்லற வாழ்க்கைக்குரிய தொழில் தர்மங்களைச் செய்வது, பூமியில் சிதறிக் கிடக்கும் தானியங்களைக் கொண்டு யாருடைய உதவியுமின்றி வாழ்வது போன்றவையாகும்.
பதம் 3.12.43
வைகானஸா வாலகில்யௌ- தும்பரா: பேனபா வனே
ந்யாஸே குடீசக: பூர்வம் பஹ்வோதோ ஹம்ஸ-நிஷ்க்ரியௌ
வைகானஸா:- நடைமுறை வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்று, பாதி வெந்த உணவுப் பொருட்கள் மட்டும் உண்டு வாழ்பவர்; வாலகில்ய-மென்மேலும் வரும்போதுதான் அதிகமாகச் சேமித்து வைத்திருந்த தானியங்களை நீங்கிச் செல்பவர்; ஒளதும்பரா:-காலை எழுந்து தான் செல்லும் திசையில் என்ன கிடைக்கிறதோ அதை மட்டும் உண்டு வாழ்பவர்; பேனபா:-மரத்திலிருந்து தானே உதிர்ந்து கிடக்கும் கனிகளை மட்டும் உண்டு வாழ்பவர்; வனே-வனத்தில்; ந்யாஸே- துறவு வாழ்க்கை முறையில்; குடீசக: – எந்தவிதப் பற்றுமின்றி இல்லற வாழ்வில் இருத்தல்; பூர்வம்-ஆரம்பத்தில்: பஹ்வோத—உலகியல் செயல்கள் அனைத்தையும் துறந்து முற்றிலும் உன்னதத் தொண்டில் ஈடுபடுதல்; ஹம்ஸ்-மனவாசகம் கடந்த ஞானத்தில் முற்றிலும் ஈடுபடுதல்; நிஷ்க்ரியௌ-அனைத்துச் செயல்களையும் நிறுத்தி விடுதல்.
ஓய்வு பெற்ற வாழ்க்கை என்பது நான்கு வகைப்படும், அவை: வைகானஸஸ், வாலகில்யஸ், ஔதும்பரஸ், ஃபேனபஸ் என்பவையாகும். துறவு வாழ்க்கையின் நான்கு பிரிவுகள், குடீசகஸ், பஹ்வோதஸ், ஹம்ஸஸ், நிஷ்க்ரியஸ் என்பவையாகும். இவையனைத்தும் பிரம்ம தேவரிடமிருந்தே தோன்றின.
பதம் 3.12.44
ஆன்வீக்ஷிகீ த்ரயீ வார்தா தண்ட-நீதிஸ் ததைவ ச
ஏவம் வ்யாஹ்ருதயஷ் சாஸன் ப்ரணவோ ஹி அஸ்ய தஸ்ரத:
ஆன்வீக்ஷிகீ- தருக்கம்; த்ரயீ- மூன்று இலட்சியங்கள், சமயம். செல்வம்,மோட்சம்;வார்தா- புலனுகர்ச்சி: தண்ட-சட்டம் ஒழுங்கு; நீதி :- நீதிகள்: ததா-மேலும்; ஏவ ச- முறையாக; ஏவம்-இவ்வாறு; வ்யாஹ்ருதய:-கொண்டாடப்படும் பண்களாக பூ; புவ: மற்றும் ஸ்வ; ச-மேலும்; ஆஸன் -வெளிப்பட்டது; ப்ரணவ:-ஓம்கார மந்திரம்: ஹி-உறுதியாக; அஸ்ய-அவரது (பிரம்மா); தஹ்ரத: -இதயத்திலிருந்து.
தருக்க சாத்திரம், வேதத்தில் கூறப்படும் வாழ்க்கை இலட்சியங்கள். சட்டம் ஒழுங்கு, நன்னடத்தை விதிகள், சிறந்த வழிபாட்டுப் பண்களான பூ: புவ: ஸ்வ: போன்றவையெல்லாம் பிரம்ம தேவரின் வாய்களிலிருந்து தோன்றின. பிரணவ ஓம்கார மந்திரம் அவரது இதயத்திலிருந்து வெளிப்பட்டது.
பதம் 3.12.45
தஸ்யோஷ்ணிக் ஆஸீல் லோமப்யோ
காயத்ரீ ச த்வசோ விபோ:
த்ரிஷ்டும் மாம்ஸாத் ஸ்நுதோ ‘நுஷ்டுப்
ஜகதி அஸ்த்ன: ப்ரஜாபதே:
தஸ்ய -அவரது; உஷ்ணிக்-வேத அளவுகளில் ஒன்று; ஆஸீத்- பிறந்தது; லோமப்ய:-உடலிலுள்ள மயிர்க்கால்களிலிருந்து; காயத்ரீ – தலையாய வேதப் பனுவல்; ச-மேலும்; த்வச:- தோலிலிருந்து; விபோ:-அவரது; த்ரிஷ்டுப்-ஒரு வகையான இசை அளவு; மாம்ஸாத் – தசையிலிருந்து; ஸ்நுத:-நரம்புகளிலிருந்து; அநுஸ்டுப் – மற்றொரு வகையான இசை அளவு; ஜகதீ- மற்றொரு வகையான இசை அளவு; அஸ்த்ன:-எலும்புகளிலிருந்து; ப்ரஜாபதே:-உயிர்வாழிகளின் தந்தையின்.
இதன்பின்னர் இலக்கியக் கலையான உஷ்ணிக் என்பது எல்லாம் வல்ல பிரஜாபதியின் உடலிலுள்ள ரோமக் கால்களிலிருந்து தோன்றியது. தலையாய வேதப் பனுவலான காயத்ரீ அவரது தோலிலிருந்து தோன்றியது. த்ரிஷ்டுப் அவரது தசையிலிருந்தும், அனுஷ்டுப் அவரது நரம்புகளிலிருந்தும், ஜகதீ அவரது எலும்புகளிலிருந்தும் தோன்றியது.
பதம் 3.12.46
மஜ்ஜாயா: பங்க்திர் உத்பன்னா ப்ருஹதீ ப்ராணதோ ‘பவத்
மஜ்ஜாயா:- மஜ்ஜையிலிருந்து; பங்க்தி:- ஒரு குறிப்பிட்ட வகையானப் பண்; உத்பன்னா—வெளிப்பட்டது; ப்ருஹதீ-மற்றொரு வகையானப் பண்; ப்ராணத:-உயிர் மூச்சுக் காற்றிலிருந்து; அபவத்—பிறந்தது.
பண்களை எழுதும் கலையான பங்க்தி அவரது எலும்பின் மஜ்ஜையிலிருந்து தோன்றியது. ப்ருஹதீ என்னும் மற்றொரு வகையானப் பண் உயிர்களின் தலைவரான பிரம்ம தேவரின் மூச்சுக் காற்றிலிருந்தும் பிறந்தது.
பதம் 3.12.47
ஸ்பர்ஸஸ் தஸ்யாபவஜ் ஜீவ: ஸ்வரோ தேஹ உதாஹ்ருத
ஊஷ்மாணம் இந்த்ரியானி ஆஹூர் அந்த:-ஸ்தா பலம் ஆத்மன:
ஸ்வரா: ஸப்த விஹாரேண பவந்தி ஸ்ம ப்ரஜாபதே
ஸ்பர்ஷ:- ‘க’விலிருந்து’ம’ வரை உள்ள எழுத்துக்கள்; தஸ்ய-அவரது; அபவத்-ஆனது; ஜீவ:-ஜீவனிலிருந்து; ஸ்வர: உயிரெழுத்துக்கள்; தேஹ:-அவர் உடலிலிருந்து; உதாஹ்ருத:- வெளிப்பட்டன; ஊஷ்மாணம்- ச,ஷ,ஸ,ஹ போன்ற எழுத்துக்கள்; இந்த்ரியாணி — புலன்கள்; ஆஹு:-அழைக்கப்பட்டன; அந்த:- ஸ்தா:-இடையினம் என்று அறியப்படும் எழுத்துக்கள் (ய, ர, ல, வ) பலம்-சக்தியிலிருந்தும்; ஆத்மன:-அவரது; ஸ்வரா:-ஸ்வரங்கள்; ஸப்த—எழும்; விஹா ரேண-புலன்களின் செயல்களினால்; பவந்திஸ்ம-தோன்றின; ப்ரஜாபதே:-உயிர்வாழிகளின் தலைவரிடமிருந்து.
பிரம்ம தேவரின் ஆத்மாவானது ஸ்பரிச எழுத்துக்களாக வெளிப்பட்டதாகும். அவரது உடல் உயிரெழுத்துக்களாகவும், புலன்கள் சீறொலி எழுத்துக்களாகவும், அவரது சக்தி இடையின எழுத்துக்களாகவும், புலன்களின் செயல்கள் ஏழு ஸ்வரங்களாகவும் இருக்கின்றன.
பதம் 3.12.48
ஸ்பத ப்ரஹ்மாத்மனஸ் தஸ்ய வ்யக்தாவ்யக்தாத்மன: பர:
ப்ரஹ்மாவபாதி விததோ நானா-சக்தி-உபப்ரும்ஹித:
ஸப்த- ப்ரஹ்ம- சப்த பிரம்மம் (உன்னத ஒலி); ஆத்மன: – பரமபுருஷ பகவானின்; தஸ்ய— அவரது; வ்யக்த- தோன்றியது; அவ்யக்த-ஆத்மன:-தோன்றாதது; பர:-உன்னதம்; ப்ரஹ்மா – முழு(பூரணம்); அவபாதி முற்றிலும் தோற்றுவிக்கப்பட்டது; விதத: – அளிக்கின்ற; நானா-பல்வேறு; ஸக்தி- சக்திகளின்; உபப்ரும் ஹித: – அளிக்கப்பட்டவர்.
மனவாசகங்கடந்த ஒலிக்கு ஆதாரமாகவும், கண்ணுக்குப் புலனாகின்ற புலனாகாத கருத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவராகவும் விளங்கும் முழுமுதற் கடவுளின் தனிப்பட்ட அவதாரமே பிரம்மதேவர் ஆவார். பிரம்ம தேவர் நானாவித சக்திகளையும் தன்னிடத்தே கொண்டு வந்திருப்பதோடு முழு மெய்ப்பொருளின் முழு வடிவமும் ஆவார்.
பதம் 3.12.49
ததோ ‘பராம் உபாதாய ஸ ஸர்காய மனோ ததே
தத:-அதன்பிறகு: அபராம் – மற்றொரு; உபாதாய—ஏற்றுக் கொள்ளப்பட்டது; ஸ;-அவர்; ஸர்காய-படைப்பு விஷயத்தில்; மன:-மனம்; ததே-ஈடுபட்டார்.
அதன்பிறகு பாலுறவு வாழ்க்கைக்குத் தடையில்லாத மற்றொரு உடலினைப் பிரம்ம தேவர் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு அவர் மீண்டும் படைப்புத் தொழிலில் ஈடுபடலானார்.
பதம் 3.12.50
ருஷீணாம் பூரி-வீர்யாணாம் அபி ஸர்கம் அவிஸ்த்ருதம்
ஜ்னாத்வா தத் த்ருதயே பூயஸ் சிந்தயாம் ஆஸ கௌரவ
ருஷீணாம்-மகா முனிவர்களின்; பூரி-வீர்யாணாம்—உயர்ந்த வலிமையுள்ள சக்தியுடன்; அபி-இருந்தாலும்; ஸர்கம்-படைப்பு; அவிஸ்த்ருதம் – விரிவடையவில்லை; ஜ்னாத்வா—அறிதல்; தத்—அந்த; ஹ்ருதயே-அவரது இதயத்தில்; பூய:- மீண்டும்; சிந்தயாம் ஆஸ— சிந்திக்கத் தொடங்கினார்; கெளரவ-ஓ, குருகுலத் தோன்றலே.
ஒ, குருகுலத் தோன்றலே, ஆற்றல் மிக்க உயர் சக்தியுடையவர்களாக இம் மாமுனிவர்கள் இருந்த போதிலும் ஜனத்தொகை போதுமான அளவு அதிகரிக்கவில்லை என்பதை பிரம்ம தேவர் உணர்ந்தார். அதனால் எவ்வாறு மக்கட் தொகையினைப் பெருக்குவது என்று அவர் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார்.
பதம் 3.12.51
அஹோ அத்புதம் ஏதன் மே வ்யாப்ருதஸ்யாபி நித்யதா
ந ஹி ஏதந்தே ப்ரஜா நூனம் தைவம் அத்ர விகாதகம்
அஹோ-அந்தோ; அத்புதம்- அற்புதமானது; ஏதத்-இந்த; மே – எனக்கு; வ்யாப்ருதஸ்ய- ஓய்வின்றி உழைத்தல்; அபி—இருந்தாலும்; நித்யதா – எப்பொழுதும்; ந-இல்லை; ஹி-உறுதியாக; ஏதந்தே – உற்பத்தி செய்வது; ப்ரஜா:-பிரஜைகளை (உயிர்வாழிகளை); நூனம்- எவ்வாறேனும்; தைவம் – விதி; அத்ர—இங்கே; விகாதகம்—எதிராக.
பிரம்மதேவர் தனக்குள் இவ்வாறு எண்ணினார்: அந்தோ நான் இப்பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்தவனாக இருந்த போதிலும் கூட மக்கட் தொகைப் பெருக்கமானது போதிய அளவு இல்லையென்பது ஓர் அதிசயமே ஆகும். இத்துரதிர்ஷ்ட நிலைக்கு விதியைத் தவிர வேறு யாரைக் காரணம் சொல்வது.
பதம் 3.12.52
ஏவம் யுக்த-க்ருதஸ் தஸ்ய தைவம் சாவேக்ஷதஸ் ததா
கஸ்ய ரூபம் அபூத் த்வேதா யத் காயம் அபிசக்ஷதே
ஏவம்-இவ்வாறு; யுக்த—ஆழ்ந்து சிந்தித்து; க்ருத: செய்யும்பொழுது ; தஸ்ய—அவரது; தைவம்-இயற்கைக்கு மீறிய தெய்வ சக்தி; ச-மேலும்; அவேக்ஷத:-உணர்ந்து; ததா-அந்நேரம்; கஸ்ய- பிரம்மதேவரின்; ரூபம்-வடிவம்; அபூத்—வெளிப்பட்டது; த்வேதா- இரு பாகங்கள்; யத்—அது; காயம்- அவர் உடல்; அபிசக்ஷதே – கூறப்படுகிறது.
இவ்வாறு அவர் ஆழ்ந்து சிந்தித்து இயற்கைக்கும் மேலான சக்தியினைத் தியானித்தபொழுது, இரண்டு உருவங்கள் அவர் உடலிலிருந்து தோன்றின. அவை பிரம்மதேவரின் உடலாக இன்றும் போற்றப்படுகின்றன.
பதம் 3.12.53
தாப்யாம் ரூப-விபாகாப்யாம் மிதுனம் ஸமபத்யத
தாப்யாம்-அவர்களின்; ரூப—உருவம்; விபாகாப்யாம் – இவ்வாறு பிரிக்கப்பட்டு; மிதுனம்-பாலுறவு; ஸமபத்யத-நேர்த்தியாகச் செய்யப்பட்டது.
இவ்வாறு தனித்தனியே வந்த புதிய உடல்கள் இரண்டும் பாலுறவு நிலையில் ஒன்றாக இணைந்தன.
பதம் 3.12.54
யஸ் து தத்ர புமான் ஸோ அபூன் மனு: ஸ்வாயம்புவ: ஸ்வராட்
ஸ்த்ரீ யாஸீச் சதரூபாக்யா மஹிஷி அஸ்ய மஹாத்மன:
ய:- ஒருவர்; து-ஆனால்; தத்ர—அங்கே; புமான்-ஆண்; ஸ: – அவர்; அபூத்-ஆனார்; மனு:-மனித இனத்தின் தந்தையாவார்; ஸ்வாயம்புவ: – சுவாயம்புவ என்னும் பெயரில்; ஸ்வ-ராட் – முழுச் சுதந்திரமான; ஸ்த்ரீ-பெண்; யா- ஒருவர்; ஆஸீத்-அங்கு; ஸதரூபா- சதரூபா என்னும் பெயரினள்; ஆக்யா-அறியப்படுகின்றனர்; மஹிஷீ- அரசி; அஸ்ய—அவரின்; மஹாத்மன:-மகாத்மா ஆவார்.
அவர்கள் இருவரில் ஒருவர் ஆண், அவர்தான் பிற்காலத்தில் சுவாயம்புவ மனு என்று அழைக்கப்பெறும் சிறப்புடையவர். மற்றொருத்தி பெண், இவளே மகாத்மா மனுவின் மனைவி என்றறியப்படும் அரசி சதரூபா என்பவள்.
பதம் 3.12.55
ததா மிதுன-தர்மேண ப்ரஜா ஹி ஏதாம் பபூவிரே
ததா-அந்நேரம்; மிதுன-பாலுறவு வாழ்க்கை; தர்மேண – ஒழுங்கு முறை விதிகளுக்கேற்ப; ப்ரஜா:-பிரஜைகள்: ஹி-உறுதியாக ; ஏதாம் – அதிகரித்தது; பபூவிரே-நடைபெற்றது.
இதன்பின்னர் அவர்கள் இருவரும் பாலுறவின் மூலம் உலகின் மக்கட் தொகையை ஒன்றன்பின் ஒன்றாக அதிகரித்தனர்.
பதம் 3.12.56
ஸ சாபி ஸதரூபாயாம் பஞ்சாபத்யானி அஜீஜனத்
ப்ரியவ்ரதோத்தானபாதெள திஸ்ர: கன்யாஸ் ச பாரத
ஆகூதிர் தேவஹூதிஸ் ச ப்ரஸூதிர் இதி ஸத்தம
ஸ:-அவர் (மனு); ச-மேலும்; அபி- உரிய காலத்தில்; ஸத – ரூபாயாம் -சதரூபாவிற்கு; பஞ்ச-ஐந்து; அபத்யானி- குழந்தைகள்; அஜீஜனத்—பிறந்தனர்; ப்ரியவ்ரத- பிரியவிரதன்; உத்தானபாதௌ – உத்தானபாதன்; திஸ்ர:- எண்ணிக்கையில் மூன்று; கன்யா:-புதல்விகள்; ச-மேலும்; பாரத-ஓ, பரதகுலத்தவனே; ஆகூதி:- ஆகூதி; தேவஹூதி—தேவஹூதி; ச-மேலும்; ப்ரஸூதி:-பிரஸூதி; இதி – இவ்வாறு; ஸத்தம—ஓ, அனைவரிலும் சிறந்தவனே.
ஒ, பரதகுலத் தோன்றலே, உரிய காலத்தில் அவர் (மனு) சதரூபாவினிடத்தில் ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவர்களுள் இருவர் ஆண்கள். ஒருவன் பிரியவிரதன், மற்றொருவன் உத்தானபாதன். மீதி மூவர் பெண்கள், ஆகூதி, தேவஹூதி மற்றும் பிரஸூதி என்பன அவர்கள் பெயர்கள்.
பதம் 3.12.57
ஆகூதிம் ருசயே ப்ராதாத் கர்தமாய து மத்யமாம்
தக்ஷாயாதாத் ப்ரஸூதிம் ச யத ஆபூரிதம் ஜகத்
ஆகூதிம்- ஆகூதி என்னும் பெயருடைய புதல்வி; ருசயே – ருசி என்னும் முனிவருக்கு; ப்ராதாத்-மணமுடித்தார்; கர்தமாய—கர்தம முனிவருக்கு; து -ஆனால்; மத்யமாம்- இடையிலுள்ள பெண் (தேவஹூதி); தக்ஷாய—தக்ஷனுக்கு; அதாத்-மணமுடித்தார்; ப்ரஸூதிம்—கடைசிப் பெண்ணான பிரஸூதியை; ச- -மேலும்: யத: – அங்கிருந்து: ஆபுரிதம் – நிறைவேற்றப்பட்டது: ஜகத்- முழு உலகமும்.
தந்தையான மனு தன் மூத்த புதல்வி ஆகூதியை ருசி என்னும் முனிவருக்கும், இரண்டாவது புதல்வி தேவஹூதியை கர்தம முனிவருக்கும், கடைசிப் பெண் பிரஸூதியை தக்ஷனுக்கும் மணமுடித்துக் கொடுத்தார். இவர்களில் இருந்ததே உலகின் மக்கட் தொகை பெருக ஆரம்பித்து.
ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “குமாரர்கள் மற்றும் பல்லோரின் படைப்பு” எனும் தலைப்பைக் கொண்ட பன்னிரெண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.