அத்தியாயம் – 8
கர்போதகசாயி விஷ்ணுவிலிருந்து பிரம்மாவின் தோற்றம்
பதம் 3.8.1
மைத்ரேய உவாச
ஸத்-ஸேவனீயோ பத பூரு-வம்சோ
யல் லோக-பாலோ பகவத்-ப்ரதான:
பபூவிதேஹாஜித-கீர்த்தி-மாலாம்
பதே பதே நூதனயஸி அபீஷ்ணம்
மைத்ரேய: உவாச—ஸ்ரீமைத்ரேய முனி கூறினார்; ஸத்—ஸேவனீய: – தூய பக்தர்களுக்கு தொண்டு செய்யத் தகுந்த; பத—ஓ, நிச்சயமாக; பூரு வம்ச:-பூரு மகாராஜனின் வம்சத்தினர்; யத்-என்பதால்; லோக – பால:-அரசர்கள்; பகவத்-ப்ரதான: – முக்கியமாக பரமபுருஷரிடம் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட: பபூவித-நீரும் பிறந்திருக்கிறீர்; இஹ -இதில்: அஜீத – வெற்றி கொள்ள முடியாதவரான பகவான்; கீர்த்தி -மாலாம் – உன்னத செயல்களின் தொடர்ச்சி; பதே பதே – படிப்படியாக; நூதனயஸி-புதிது புதிதாக மாறுகிறது; அபீஷ்ணம் – எப்பொழுதும்.
மைத்ரேய மாமுனிவர் விதுரரிடம் கூறினார்: பூரு மகாராஜனின் அரச பரம்பரையினர் பரம புருஷரிடம் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்பதால், அவர்கள் தூய பக்தர்களுக்குத் தொண்டு செய்யும் தகுதியுடையவர்களாவர், நீரும் அதே குடும்பத்தில் பிறந்தவர்தான். என்ன ஆச்சரியம் உமது முயற்சியினால் பகவானின் உன்னத லீலைகள் ஒவ்வொரு வினாடியும் புதிது புதிதாக மாறிக் கொண்டிருக்கின்றன.
பதம் 3.8.2
ஸோ ‘ஹம் ந்ருணாம் க்ஷுல்ல-ஸுகாய துஹ்கம்
மஹத் கதானாம் விரமாய தஸ்ய
ப்ரவர்தயே பாகவதம் புராணம்
யத் ஆஹ ஸாக்ஷாத் பகவான் ருஷிப்ய:
ஸ -அந்த: அஹம்- நான்; ந்ருணாம் -மனிதர்களின்;— க்ஷுல்ல – மிகக் குறைவான; ஸுகாய-இன்பத்திற்காக; துஹ்கம்-துன்பம்; மஹத்- மிகப் பெரிய; கதானாம் – உள்ளே புகுந்து; விரமாய – குறைப்பதற்காக; தஸ்ய—அவரது; ப்ரவர்தயே—துவங்குவதில்; பாகவதம்- ஸ்ரீமத் பாகவதத்தை; புராணம் – புராணம்: யத்–எது; ஆஹ – கூறினார்; ஸாக்ஷாத்-நேரடியாக; பகவான்- பரமபுருஷர்: ருஷிப்ப:- முனிவர்களுக்கு.
மிகக்குறைந்த இன்பத்திற்காக பொருந்துன்பங்களில் சிக்கிக் கொண்டுள்ளவர்களின் நன்மைக்காக, மாமுனிவர்களிடம் பரமபுருஷரால் நேரடியாக பேசப்பட்ட பாகவத புராணத்தைப் பற்றி இப்பொழுது நான் பேச ஆரம்பிக்கப் போகிறேன்.
பதம் 3.8.3
ஆஸீனாம் உர்வ்யாம் பகவந்தம் ஆத்யம்
ஸங்கர்ஷணம் தேவம் அகுண்ட-ஸத்வம்
விவித்ஸவஸ் தத்வம் அத: பரஸ்ய
குமார-முக்யா முனயோ ‘ன்வப்ரூச்சன்
ஆஸீனம்—அமர்ந்துள்ள; உர்வ்யாம்-பிரபஞ்சத்திற்கடியில்; பகவந்தம்-பகவானிடம்; ஆத்யம்- ஆதியான; ஸங்கர்ஷணம் – சங்கர்ஷணர்; தேவம் -பரமபுருஷரான; அகுண்ட—ஸத்வம் – உறுதியான அறிவை; விவித்ஸவ:- அறிவதற்காக கேள்விகள் கேட்டு; தத்வம் – அத:-இதைப் போன்ற உண்மை; பரஸ்ய-பரம புருஷரைப் பற்றிய ; குமார -பாலக முனிவர்; முக்யா: – தலைமையாகக் கொண்ட; முனய:-மாமுனிவர்கள்; அன்வப்ருச்சன்-இவ்வாறு கேள்விகள் கேட்டார்.
சில காலங்களுக்கு முன், பாலக முனிவர்களில் தலைமையானவரான சனத் குமாரர் மற்ற மாமுனிவர்களால் சூழப்பட்டவாறு, உம்மைப் போலவே பரமபுருஷரான வாசுதேவனைப் பற்றிய உண்மைகளை அறிய விரும்பி, பிரபஞ்சத்தின் அடியில் அமர்ந்துள்ள பகவான் சங்கர்ஷணரிடம் விசாரணைகள் செய்தார்.
பதம் 3.8.4
ஸ்வம் ஏவ திஷ்ண்யம் பஹு மானயந்தம்
யத் வாஸுதேவாபிதம் ஆமனத்தி
ப்ரத்யக்-த்ருதாக்ஷாம்புஜ-கோசம் ஈஷத்
உன்மீலயந்தம் விபுதோதயாய
ஸ்வம் – சுயமாக; ஏவ-இவ்வாறாக; திஷ்ண்யம்—இருக்கும்; பஹு -அதிகமாக; மானயந்தம்-மதிக்கப்படும்; யத் – எது; வாஸுதேவ – பகவான் வாசுதேவன்; அபிதம் – எனும் பெயர் கொண்ட; ஆமனந்தி – ஏற்றுக் கொள்கின்றனர்; ப்ரத்யக் – த்ருத—அக்ஷ தற்சோதனை செய்யும் முடிவுடன்; அம்புஜ – கோசம் – தாமரை போன்ற கண்களை; ஈஷத் – இலேசாக; உன்மீலயந்தம்-திறந்தார்; விபுத – மிகவும் கற்றறிந்த முனிவர்களின்; உதயாய -முன்னேற்றத்திற்காக.
அச்சமயத்தில் பகவான் சங்கர்ஷணர், பகவான் வாசுதேவனென்று கற்றோரால் மதிப்பிடப்படும், தமது பரமபுருஷரை தியானித்துக் கொண்டிருந்தார். ஆனால் கற்றறிந்த மாமுனிவர்களின் முன்னேற்றத்திற்காக, தமது தாமரை போன்ற கண்களை லேசாகத் திறந்து பேசத் துவங்கினார்.
பதம் 3.8.5
ஸ்வர்துனி-உதார்த்ரை: ஸ்வ-ஜடா-கலாபைர்
உபஸ்ப்ருசந்தஸ் சரணோபதானம்
பத்மம் யத் அர்சந்தி அஹி-ராஜ-கன்யா:
ஸ-ப்ரேம நானா-பலிபிர் வரார்தா:
ஸ்வர்துனீ-உத-கங்கைநீரால்; ஆர்த்ரை:-நனைக்கப்பட்டு; ஸ்வ-ஜடா-ஜடா முடிகள்; கலாபை:-தலையிலுள்ள; உபஸ்ப்ருசந்த:- அவ்வாறு தொட்டதால்; சரண—உபதானம்—அவரது பாதங்களின் புகலிடம்; பத்மம்- தாமரைப் புகலிடம்; யத்—எது; அர்சந்தி- வழிபடும்; அஹி-ராஜ-ஸர்ப ராஜன்; கன்யா:-புதல்விகள்; ஸ –ப்ரேம- பெரும் பக்தியுடன்; நானா—அநேக; பலிபி:-பொருட்கள்; வர- அர்தா:-கணவன்களை அடைய விரும்பி.
முனிவர்கள் மிகவுயர்ந்த கிரகங்களிலிருந்து கங்கை நீரின் மூலமாக தாழ்ந்த பிரதேசத்திற்கு வந்ததால், அவர்களுடைய ஜடா முடி நனைந்திருந்தது. அவர்கள் பகவானின் தாமரைப் பாதங்களைத் தொட்டனர். அப்பாதங்கள், நல்ல கணவன்களை விரும்பும் ஸர்ப ராஜனின் புதல்விகளால் அநேக உபகரணங்களைக் கொண்டு வழிபடப்படுகின்றன.
பதம் 3.8.6
முஹுர் க்ருஷந்தோ வசஸானுராக-
ஸ்கலத்-பதேனாஸ்ய க்ருதானி தஜ்-ஜ்ஞா
கிரீட-ஸாஹஸ்ர-மணி-ப்ரவேக
ப்ரத்யோதிதோத்தாம-ஃபணா ஸஹஸ்ரம்
முஹு:- மீண்டும். மீண்டும்; க்ருணந்த:-போற்றிப் புகழ்ந்து, வசஸா -வார்த்தைகளால்; அனுராக- மிகவும் பாசத்துடன்; ஸ்கலத்- பதேன- சமமான எதுகை மோனையுடன்; அஸ்ய-பகவானின் க்ருதானி—செயல்கள்; தத் – க்ஞா:-லீலைகளை அறிந்தவர்கள்; கிரீட-கிரீடங்கள்; ஸாஹஸ்ர-ஆயிரக்கணக்கான; மணி—ப்ரவேக- மதிப்புயர்ந்த கற்களின் பிரகாசம்; ப்ரத்யோதித-அதிலிருந்து வெளிப்படும்; உத்தாம-தூக்கிய; ஃபணா – தலைகள் (படங்கள்): ஸஹஸ்ரம்- ஆயிரக்கணக்கான.
பகவானின் உன்னத லீலைகளை அறிந்திருந்த சனத் குமாரர் முதலான நான்கு குமாரர்கள், முழு அன்புடனும், பாசத்துடனும், தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் சமமான ராகத்துடன் பகவானை போற்றிப் புகழ்ந்தனர். அப்பொழுது பகவான் சங்கர்ஷணர், தமது ஆயிரக்கணக்கான உயர்த்திய தலைகளின் மேலுள்ள பிரகாசிக்கும் கற்களிலிருந்து ஒளியை பரப்பத் துவங்கினார்.
பதம் 3.8.7
ப்ரோக்தம் கிலைதத் பகவத்தமேன
நிவ்ருத்தி-தர்மாபிரதாய தேன
ஸனத்-குமாராய ஸ சாஹ ப்ருஷ்ட:
ஸாங்க்யாயனாயாங்க த்ருத-வ்ரதாய
ப்ரோக்தம்—கூறப்பட்டது; கில – நிச்சயமாக; ஏதத்-இந்த: பகவத்தமேன -பகவான் சங்கர்ஷணரால்; நிவ்ருத்தி- துறவு: தர்ம- அபிரதாய-இச்சமய விரதத்தை ஏற்றுக்கொண்டுள்ள ஒருவருக்கு; தேன-அவரால்; ஸனத்—குமாராய-சனத் குமாரருக்கு; ஸ:-அவர்; ச – கூட: ஆஹ-கூறினார்; ப்ருஷ்ட:விசாரிக்கப்பட்ட பொழுது; ஸாங்கியாயனாய-சாங்க்யாயன மாமுனிவருக்கு: அங்க- அன்புள்ள விதுரரே; த்ருத-வ்ரதாய-இத்தகைய ஒரு விரதத்தை ஏற்றவருக்கு.
இவ்வாறாக துறவு வாழ்வின் விரதத்தை முன்பே ஏற்றுக்கொண்டிருந்த மாமுனிவரான சனத் குமாரருக்கு, பகவான் சங்கர்ஷணர் ஸ்ரீமத் பாகவதத்தின் பொருளை பற்றி பேசினார். சாங்க்யாயன முனிவரால் விசாரணை செய்யப்பட்ட சனத் குமாரரும், ஸ்ரீமத் பாகவதத்தை சங்கர்ஷணரிடமிருந்து தாம் கேட்டது போலவே விளக்கிக் கூறினார்.
பதம் 3.8.8
ஸாங்க்யாயன: பாரமஹம்ஸ்ய-முக்யோ
விவக்ஷமாணோ பகவத்-விபூதீ:
ஜகாத ஸோ ‘ஸ்மத்-குரவே ‘ன்விதாய
பராசராயாத ப்ருஹஸ்பதேஸ் ச
ஸாங்க்யாயன:-சாங்க்யாயன மாமுனிவர்; பாரமஹம்ஸ்ய- முக்ய:- ஆன்மீகிகளிலேயே முக்கியமானவரான; விவக்ஷமாண:- கூறும்பொழுது; பகவத் விபூதீ:-பகவானின் மகத்துவங்களை; ஜகாத-விளக்கினார்; ஸ:-அவர்; அஸ்மத்—எனது; குரவே-ஆன்மீக குருவிற்கு: அன்விதாய -பின்பற்றினர்; பராசராய-பராசரமுனிவரிடம்; அத ப்ருஹஸ்பதே: ச-பிருகஸ்பதியிடமும்.
ஆன்மீகிகளில் தலைமையானவரான சாங்க்யாயன மாமுனிவர், ஸ்ரீமத் பாகவதத்திற்கேற்ப பகவானின் மகத்துவங்களை விவரிக்கும் பொழுது, எனது ஆன்மீக குருவான பராசர முனிவரும், பிருகஸ்பதியும் அவர் பேசுவதைக் கேட்க நேர்ந்தது.
பதம் 3.8.9
ப்ரோவாச மஹ்யம் ஸ தயாலுர் உக்தோ
முனி: புலஸ்த்யேன புராணம் ஆத்யம்
ஸோ ‘ஹம் தவைதத் கதயாமி வத்ஸ
ஸ்ரத்தாலவே நித்யம் அனுவ்ரதாய
ப்ரோவாச- கூறினார்; மஹ்யம்- எனக்கு; ஸ:-அவர்; தயாலு: – தயாள மனமுடைய; உக்த:-முன் சொல்லப்ட்ட; முனி:-முனிவர்; புலஸ்த்யேன -புலஸ்திய முனிவரால்; புராணம் ஆத்யம்- முக்கிய புராணமான ; ஸ:—அஹம் – அதையும் கூட நான்; தவ-உமக்கு ; ஏதத்- இந்த; கதயாமி- கூறப்போகிறேன் ; வத்ஸ-அருமைப் புதல்வரே; ஸ்ரத்தாலவே-விசுவாசம் உள்ளவருக்கு; நித்யம் -எப்பொழுதும்; அனுவ்ரதாய—ஆதரவாளராக உள்ள ஒருவருக்கு.
முன் சொல்லப்பட்டது போல், புலஸ்திய மாமுனிவரின் அறிவுரைப்படி, பராசர மாமுனிவர், தலைமைப் புராணத்தை (பாகவதத்தை) எனக்கு உபதேசித்தார். அருமைப் புதல்வரே, எப்பொழுதும் என்னிடம் விசுவாசமுள்ள ஆதரவாளராக நீர் இருப்பதால், நான் கேட்டதை உமக்கு விவரிக்கப் போகிறேன்.
பதம் 3.8.10
உதாப்லுதம் விஸ்வம் இதம் ததாஸீத்
யன் நித்ரயாமீலித-த்ருந் ன்யமீலயத்
அஹீந்ர-தல்பே ‘திசயான ஏக:
க்ருத க்ஷண: ஸ்வாத்ம-ரதௌ நீரீஹ:
உத-நீர்; ஆப்லுதம்- உள்ளே மூழ்கடிக்கப்பட்டது; விஸ்வம்- மூவுலகங்களும்; இதம்- இந்த; ததா-அப்பொழுது; ஆஸீத்-அது அவ்வாறு இருந்தது; யத்-எதின்; நித்ரயா- நித்திரையில்; அமீலித- மூடிய; த்ருக்-கண்கள்; ன்யமீலயத்–முழுமையாக மூடவில்லை; அஹி-இந்தி—பெரிய பாம்பான அனந்தன்; தல்பே-படுக்கையின் மேல்; அதிசயான:-சயனத்திருந்தார்; ஏக:-தனியாக; க்ருத-க்ஷண:- ஈடுபட்டிருந்ததால்; ஸ்வ-ஆத்ம-ரதௌ—அவரது அந்தரங்க சக்தியில் இன்புற்றிருந்தார்; நிரீஹ: – புறச் சக்தியின் எப்பகுதியும் இல்லாமல்.
மூவலகங்களும் நீருக்குள் மூழ்கிக்கிடந்த அச்சமயத்தில், கர்போதகசாயி விஷ்ணு மட்டும் தனியாக, தமது பாம்புப் படுக்கையான அனந்தனின் மேல் சயனித்திருந்தார், புறச் சக்தியின் செயல்களிலிருந்து விடுபட்டு, தமது சொந்த அந்தரங்க சக்திக்குள் அவர் உறங்குவதாகக் காணப்பட்ட போதிலும், அவரது கண்கள் முழுமையாக மூடிக் கொண்டிருக்கவில்லை.
பதம் 3.8.11
ஸோ ‘ன்த: சரீரே ‘ர்பித-பூத-ஸூக்ஷ்ம:
காலாத்மிகாம் சக்திம் உதீரயாண:
உவாஸ தஸ்மின் ஸலிலே பதே ஸ்வே
யதானலோ தாருணி ருத்த-வீர்ய:
ஸ:-பரமபுருஷர்; அந்த:-உள்ளே; சரீரே-உன்னத உடலில்; அர்பித-வைத்திருந்தார்; பூத-பௌதிக மூலப் பொருட்களை; ஸூக்ஷ்ம:-சூட்சும; கால -ஆத்மிகாம்—காலத்தின் வடிவில்; சக்திம் – சக்தி: உதீரயாண: —உற்சாகப்படுத்தும்; உவாஸ-வாழ்ந்தார்; தஸ்மின் – அதில்; ஸலிலே-நீரில்; பதே-இடத்தில்; ஸ்வே—அவரது சொந்த; யதா-போலவே; அனல:-நெருப்பு : தாருணி -விறகில்; ருத்த- வீர்ய:-மூழ்கியுள்ள பலம்.
விறகுக் கட்டையில் தீயின் பலம் இருப்பதைப் போலவே, பசுவான் எல்லா ஜீவராசிகளையும் அவர்களுடைய சூட்சும உடல்களில் மூழ்கடித்தபடி, பிரளய நீருக்குள் இருந்தார். அவர் காலம் எனப்படும் தமது சுய ஊக்கமூட்டும் சக்தியின் மூலமாக பிரளய நீருக்குள் சயனத்திருந்தார்.
பதம் 3.8.12
சதுர்-யுகானாம் ச ஸஹஸ்ரம் அப்ஸு
ஸ்வபன் ஸ்வயோதீரிதயா ஸ்வ-சக்த்யா
காலாக்யயாஸாதித-கர்ம-தந்த்ரோ
லோகான் அபீதான் தத்ருசே ஸ்வ-தேஹே
சது:—நான்கு; யுகானாம்—யுகங்களின்; ச-மற்றும்; ஸஹஸ்ரம்- ஆயிரம் ; அப்ஸு-நீரில்; ஸ்வபன்-உறக்கத்தில் கனவு காணும்; ஸ்வயா—அவரது அந்தரங்க சக்தியுடன்; உதீரிதயா-தொடர்ந்த வளர்ச்சிக்காக; ஸ்வ-சக்த்யா —அவரது சுய சக்தியினால்; கால -ஆக்யயா -காலம் என்ற: ஆஸாதித -அவ்வாறு ஈடுபட்டு; சுர்ம- தந்த்ர:—பலன் நோக்குக் கருமங்களின் விஷயத்தில்; லோகான்-மொத்த ஜீவராசிகள்; அபீதான்-நீலநிற; தத்ருசே-அவ்வாறு இருப்பதைக் கண்டார்; ஸ்வ-தேஹே—அவரது சொந்த உடலில்.
பகவான் அவரது அந்தரங்க சக்தியில் நாலாயிரம் யுக சக்கரங்களுக்கு சயனித்திருந்தார். மேலும் அவரது புறச் சக்தியினால் நீருக்குள் அவர் உறங்குவது போல் காணப்பட்டார். கால சக்தியால் இயக்கப்படும் ஜீவராசிகள் அவர்களது பலன் நோக்குக் கருமங்களைத் தொடர்ந்து விருத்தி செய்து கொள்வதற்காக வெளியில் வந்த பொழுது, பகவான் தமது உன்னத உடல் நீலநிறமாக இருப்பதைக் கண்டார்.
பதம் 3.8.13
தஸ்யார்த-ஸூக்ஷ்மாபினிவிஷ்ட-த்ருஷ்டேர்
அந்தர்-கதோ ‘ர்தோ ரஜஸா தனீயான்
குணேன காலானுகதேன வித்த:
ஸூஷ்யம்ஸ் ததாபித்யத நாபி-தேசாத்
தஸ்ய-அவரது; அந்த-பொருள்; ஸூஷ்ம – சூட்சும; அபினிவிஷ்ட – திருஷ்டே:-கவனம் நிலைப்படுத்தப்பட்டவரின்; அந்த: – கத:-அந்தரங்க: அர்த:-நோக்கம்; ரஜஸா-ரஜோ குணத்தினால்; தனீயான்- மிகவும் சூட்சுமமான; குணேன-குணங்களால்; கால – அனுகதேன—காலப்போக்கில் ; வித்த:-சலனமடைந்தது; ஸூஷ்யன்—உற்பத்தி செய்யும்; ததா-பிறகு; அபித்யத-மூலமாக துளைத்துச் சென்றது; நாபி-தேசாத் வயிற்றிலிருந்து.
எதன் மீது பகவானின் கவனம் பதிக்கப்பட்டதோ, அந்த சிருஷ்டிக்குரிய சூட்சுமப் பொருளானது, பௌதிக ரஜோ குணத்தினால் கிளர்ச்சியடையச் செய்யப்பட்டது. இதன் விளைவாக, சூட்சும வடிவத்திலிருந்த சிருஷ்டி அவரது வயிற்றை துளைத்துச் சென்றது.
பதம் 3.8.14
ஸ பத்ம-கோச: ஸஹஸோததிஷ்டத்
காலேன கர்ம-ப்ரதிபோதனேன
ஸ்வ-ரோசிஷா தத் ஸலிலம் விசாலம்
வித்யோதயன் அர்க இவாத்ம-யோனி:
ஸ:—அந்த; பத்ம-கோச:- தாமரை மொக்கு: ஸஹஸா- திடீரென்று; உத்திஷ்டத்-தோன்றியது; காலேன-காலத்தால்; கர்ம- கருமங்கள்; ப்ரதிபோதனேன -விழிப்புறச் செய்யும்; ஸ்வ-ரோசிஷா- அதன் சுயப் பிரகாசத்தினால்; தத்—அந்த; ஸலிலம்-பிரளய நீர் விசாலம்-விசாலமான ; வித்யோதயன் -ஒளியூட்டும்: அர்க:-சூரியன்; இவ-போல்; ஆத்ம-யோனி :-பரமபுருஷரான விஷ்ணுவிலிருந்து உற்பத்தியாகி.
இவ்வாறு துளைத்துச் சென்ற, ஜீவராசிகளுடைய கருமங்களின் மொத்த உருவானது, பரமபுருஷரான விஷ்ணுவிலிருந்து உற்பத்தியான தாமரை மொக்கின் வடிவத்தை ஏற்றது. மேலும் பகவானின் பரம விருப்பத்தினால், அது சூரியனைப் போல் அனைத்தையும் ஒளிமயமாக்கியதுடன், பரந்த பிரளய நீரையும் வற்றச் செய்தது.
பதம் 3.8.15
தல் லோக-பத்மம் ஸ உ ஏவ விஷ்ணு:
ப்ராவீவிசத் ஸர்வ-குணாவபாஸம்
தஸ்மின் ஸ்வயம் வேதமயோ விதாதா
ஸ்வயம்புவம் யம் ஸ்ம வதந்தி ஸோ ‘பூத்
தத் -அந்த; லோக-பிரபஞ்ச; பத்மம்-தாமரை; ஸ:-அவர்; உ -நிச்சயமாக; ஏவ—உண்மையில்; விஷ்ணு:-பகவான்; ப்ராவீவிசத்— உள்ளே புகுந்தார்; ஸர்வ-எல்லா; குண—அவபாஸம்- ஜட இயற்கைக் குணங்களுக்கெல்லாம் பிறப்பிடம்: தஸ்மின்-எதில்; ஸ்வயம் -சுயமாக; வேத-மய:-வேத ஞான சொரூபி; விதாதா -பிரபஞ்சத்தை ஆள்பவர்; ஸ்வயம்- புவம் – தானாகத் தோன்றிய (சுயம்பு); யம் -யாரை; ஸ்ம-கடந்த காலத்தில் ; வதந்தி-கூறுகின்றனர்; ஸ:-அவர்; அபூத்—உற்பத்தியானார்.
அப்பிரபஞ்ச தாமரைக்குள் பகவான் விஷ்ணு தாமாகவே பரமாத்மாவாகப் புகுந்தார். இவ்வாறு ஜட இயற்கைக் குணங்களால் அது கருவுறச் செய்யப்பட்ட போது, யாரை சுயம்பு என்று நாம் அழைக்கிறோமோ அந்த வேத புருஷர் உற்பத்தியானார்.
பதம் 3.8.16
தஸ்யாம் ஸ சாம்போ-ருஹ-கர்ணிகாயாம்
அவஸ்திதோ லோகம் அபஸ்யமான:
பரிக்ரமம் வ்யோம்னி விவ்ருத்த-நேத்ரஸ்
சத்வாரி லேபே ‘நுதிசம் முகானி
தஸ்யாம் -அதில்; ச-மேலும்; அம்ப:- நீர்; ருஹ –கர்ணிகாயாம்- தாமரை வட்டம்; அவஸ்தித:- அமைந்திருப்பதால்; லோகம்- உலகம்; அபஸ்யமான:- காண முடியாததால்; பரிக்ரமன்—சுற்றி வலம் வந்தார்; வ்யோம்னி—விண்வெளியில்; விவ்ருத்த-நேத்ர:-கண்களை அசைக்கும்பொழுது; சத்வாரி-நான்கு; லேபே-பெற்றார்; அநுதிசம் —திசைகளுக்கேற்ப; முகானி – தலைகளை.
தாமரையிலிருந்து பிறந்த பிரம்மா, அத்தாமரையின் வட்டத்திலேயே இருந்த போதிலும், அவரால் உலகைக் காண முடியவில்லை. எனவே அவர் விண்வெளி முழுவதையும் சுற்றி வலம் வந்தார். இவ்வாறு தமது கண்களை எல்லாத் திசைகளிலும் திருப்பும்பொழுது, நான்கு திசைகளுக்கேற்ப நான்கு தலைகளை அவர் பெற்றார்.
பதம் 3.8.17
தஸ்மாத் யுகாந்த-ஸ்வஸனாவகூர்ண
ஜலோர்மி-சக்ராத் அலிலாத் விரூடம்
உபாஸ்ரித: கஞ்சம் உ லோக-தத்வம்
நாத்மானம் அத்தாவிதத் ஆதி-தேவ:
தஸ்மாத்- அங்கிருந்து; யுக-அந்த-யுக முடிவில்: ஸ்வஸன- ஊழிக் காற்று; அவகூர்ண -அசைவின் காரணத்தால்; ஜல-நீர்; ஊர்மி- சக்ராத்-நீர்ச் சுழல்களிலிருந்து; ஸலிலாத் –நீரிலிருந்து;விரூடம்—அவற்றின் மேலுள்ள; உபாஸ்ரித:- புகலிடமாகக் கொண்டு; கஞ்ஜம்- தாமரையை;உ-ஆச்சரியத்தில்; லோக-தத்வம்—படைப்பின் இரகசியத்தை; ந-இல்லை; ஆத்மானம்-தன்னை; அத்தா— முழுமையாக; அவிதத்—புரிந்துகொள்ள முடிந்தது; ஆதி-தேவ: முதல் தேவர்.
அத்தாமரைக்குள் இருந்த பிரம்ம தேவரால், படைப்பையோ, தாமரையையோ அல்லது தன்னையோ முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. யுக முடிவில் ஊழிக்காற்றானது, நீரையும், தாமரையையும் பெரும் வட்டங்களில் சுழற்றத் துவங்கியது.
பதம் 3.8.18
க ஏஷ யோ ‘ஸாவ் அஹம் அப்ஜ-ப்ருஷ்ட
ஏதத் குதோ வாப்ஜம் அனன்யத் அப்ஸு
அஸ்தி ஹி அதஸ்தாத் இஹ கிஞ்சனைதத்
அதிஷ்டிதம் யத்ர ஸதா நு பாவ்யம்
க:-யார்: ஏஷ:-இந்த; ய: அஸெள அஹம்-அந்த நான்; அப்ஜ -ப்ருஷ்டே-தாமரை மீது: ஏதத்-இந்த; குத-எங்கிருந்து: வா- அல்லது; அப்ஜம் – தாமரை; அனன்யத் இல்லையெனில்; அப்ஸு – நீரில்; அஸ்தி- உள்ளது; ஹி—நிச்சயமாக; அதஸ்தாத்-கீழிருந்து; இஹ – இதில்; கிஞ்சன – எதுவும்; ஏதத்-இந்த; அதிஷ்டிதம்—அமைந்துள்ள; யத்ர – எதில் ஸதா- தானாக நு- அல்லது இல்லை; பாவ்யம்- இருக்கவேண்டும்.
அறியாமையிலிருந்த பிரம்ம தேவர் சிந்தித்தார்; இத்தாமரையின் மேலுள்ள நான் யார்? இந்தாமரை எங்கிருந்து முளைத்தது? கீழ்ப் புறத்தில் ஏதாவது இருக்க வேண்டும். அதிலிருந்து தான் இத்தாமரை வளர்ந்திருக்கிறது. அப்பொருள் நீருக்குள் இருக்க வேண்டும்.
பதம் 3.8.19
ஸ இத்தம் உத்வீக்ஷ்ய தத்-அப்ஜ-நாள –
நாடீபிர் அந்தர்-ஜலம் ஆவிவேச
நார்வாக்-கதஸ் தத்-கர-நாள-நாள-
நாபிம் விசின்வம்ஸ் தத் அவிந்ததாஜ:
ஸ:- அவர் (பிரம்மா); இத்தம்-இவ்வாறாக; உத்வீக்ஷ்ய- சிந்தித்து; தத் -அந்த: அப்ஐ-தாமரை: நாள- தண்டு; நாடீபி-குழாயின் மூலமாக; அந்த- ஐலம் -நீருக்குள்; ஆவிவேச -உள்ளே புகுந்தார்; நா- இல்லை; அர்வாக் –கத:;- உள்ளே சென்ற போதிலும்; தத் – கர – நாள-தாமரைத் தண்டு; நாள-குழாய்: நாபிம் -நாபியின்; விசின்வன்-அதைப் பற்றி மிகவும் சித்தித்து: தத்-அந்த; அவிந்தத— புரிந்து கொண்டார்; அஜ- தானாகப் பிறந்தவர்.
பிரம்ம தேவர் இவ்வாறு சிந்தித்தபடி, தாமரைத் தண்டினுள் உள்ள குழாய் வழியாக நீருக்குள் புகுந்தார். ஆனால் தண்டினுள் புகுந்து விஷ்ணுவின் நாபிக்கருகில் சென்ற பிறகும். வேரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பதம் 3.8.20
தமஸி அபாரே விதுராத்ம-ஸர்கம்
விசின்வதோ ‘பூத் ஸுமஹாம்ஸ் த்ரி-நேமி:
யோ தேஹ -பாஜாம் பயம் ஈரயான:
பரிக்ஷிணோதி ஆயுர் அஜஸ்ய ஹேதி:
தஸ்மை அபாரே-அறியாமையுடன் தேடிச் சென்றதால்; விதுர- விதுரரே; ஆத்ம—ஸர்கம்-தன் படைப்பின் காரணத்தை; விசின்வத: சிந்திக்கும் பொழுது: அபூத்—அது அப்படியாயிற்று; ஸு-மஹான்- மிகச்சிறந்த; த்ரி -நேமி:-மூன்று அளவுகளைக் கொண்ட காலம்; ய:- எது : தேஹ-பாஜாம் -உடல் பெற்றதின்; பயம் பயம்: ஈரயாண:- உற்பத்தி செய்யும்; பரிக்ஷிணோதி-நூறு ஆண்டுகளைச் சுருக்கி: ஆயு:-ஆயுள்; அஜஸ்ய- சுயமாகப் பிறந்தவரின்; ஹேதி: -நித்திய காலச்சக்கரம்.
விதுரரே, தம் இருப்பைப் பற்றி இவ்வாறு ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது, விஷ்ணுவின் கரத்திலுள்ள நித்திய சக்கரமும், மரணத்திற்கொப்பான பயத்தை ஜீவராசியின் மனதில் உற்பத்தி செய்வதுமான, முடிவான காலத்தை பிரம்மா அடைந்தார்.
பதம் 3.8.21
ததோ நிவ்ருத்தோ ‘ப்ரதிலப்த-காம:
ஸ்வ-திஷ்ண்யம் ஆஸாத்ய புன: ஸ தேவ:
சனைர் ஜித-ஸ்வாஸ-நிவ்ருத்த-சித்தோ
ன்யஷீதத் ஆரூட-ஸமாதி-யோக:
தத:- அதன்பிறகு;நிவ்ருத்த:- அம்முயற்சியை நிறுத்திக் கொண்டார்; அப்ரதிலப்த-காம:-விரும்பிய நோக்கத்தை அடையாமலேயே; ஸ்வ—திஷ்ண்யம்-சொந்த ஆசனத்தை; ஆஸாத்ய—அடைந்து; புன:- மீண்டும்; ஸ: – அவர்; தேவ:-தேவர்; சனை: தாமதமின்றி; ஜித-ஸ்வாஸ- மூச்சடக்கி ; நிவ்ருத்த – ஒய்வு பெற்று: சித்த:- புத்தி; ன்யஷீதத்—அமர்ந்தார்; ஆரூட -தன்னம்பிக்கையுடன்; ஸமாதி-யோக:-பகவான் மீதான தியானத்தில்.
அதன்பிறகு, விரும்பிய நோக்கத்தை அடைய முடியாததால், தம் ஆராய்ச்சியை நிறுத்திக் கொண்ட அவர், தாமரையின் உச்சிக்குத் திரும்பி வந்தார். இவ்வாறு எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திய அவர், தம் மனதை பரமபுருஷர் மீது பதியச் செய்தார்.
பதம் 3.8.22
காலேன ஸோ ‘ஜ: புருஷாயுஷாபி-
ப்ரவ்ருத்த-யோகேன விரூட-போத:
ஸ்வயம் தத் அந்தர்-ஹ்ருதயே ‘வபாதம்
அபஸ்யதாபஸ்யத யன் ந பூர்வம்
காலேன-காலப்போக்கில்; ஸ:—அவர்; அஜ: சுயமாக பிறந்த பிரம்மா; புருஷ ஆயுஷா-அவரது ஆயுட்காலத்தினால்; அபிப்ரவ்ருத்த-ஈடுபட்டதால்; யோகேன—தியானத்தில்; விருட- விருத்தி செய்துகொண்டார்; போத:- புத்தி; ஸ்வயம் -தானாக; தத் -அந்த: ஹ்ருதயே-இதயத்தில்; அவபாதம்- தோன்றியதை; அபஸ்யத—கண்டார்; அபஸ்யத—கண்டார்; யத் – எதை ; ந – இல்லை; பூர்வம்-முன்பு.
பிரம்மாவின் நூறு ஆண்டுகளின் முடிவில், அவரது தியானம் பூர்த்தியான பொழுது, தேவையான அறிவை அவர் விருத்தி செய்து கொண்டார். அதன் பயனாக, யாரை பெரு முயற்சி செய்தும் தன்னால் முன்பு காண முடியவில்லையோ, அப்பரமனை தம் இதயத்தில் அவரால் காண முடிந்தது.
பதம் 3.8.23
ம்ருணால-கௌராய-சேஷ-போக
பர்யங்க ஏகம் பருஷம் சயானம்
ஃபணாதபத்ராயுத-மூர்த-ரத்ன
த்யுபிர் ஹத-த்வாந்த-யுகாந்த-தோயே
ம்ருணால-தாமரை; கௌர-முழுவதும் வெண்மையான; ஆயத -பிரம்மாண்டமான; சேஷ-போக-சேஷ நாகத்தின் உடல்; பர்யங்கே- படுக்கையின் மேல்; ஏகம் -தனியாக; புருஷம்- பரமபுருஷர்; சயானம்- சயனித்திருந்தார்; ஃபண-ஆதபத்ர-குடை போன்ற பாம்பின் படம்; ஆயுத-அலங்காரத்துடன்; மூர்த-தலை; ரத்ன—இரத்தினங்கள்; த்யுபி:-கதிர்களால் ; ஹத- த்வாந்த- இருள் அகன்றது; யுக-அந்த- அழிவு: தோயே- நீரில்.
நீரின்மேல் ஒரு பிரம்மாண்டமான தாமரை போன்ற வெள்ளைக் கட்டிலாக சேஷ நாகத்தின் உடல் இருப்பதையும், அதில் பரமபுருஷர் தனியாக சயனித்திருப்பதையும் பிரம்மாவால் காண முடிந்தது. அச்சூழ்நிலை முழுவதும், சேஷ நாகத்தின் படத்தை அலங்கரிக்கும் இரத்தினங்களின் ஒளிக்கதிர்களால் பிரகாசப்படுத்தப் பட்டிருந்தது. அப்பிரகாசம் அப்பிரதேசங்களின் இருளை முழுமையாக அகற்றியது.
பதம் 3.8.24
ப்ரேக்ஷாம் க்ஷிபந்தம் ஹரிதோபலாத்ரே:
ஸந்யாப்ர-நீவேர் உரு-ருக்ம-மூர்தன:
ரத்னோததாரௌஷதி-ஸௌமனஸ்ய
வனோ-ஸ்ரஜோ வேணு-புஜாங்ஜிபாங்ரே.
பரேக்ஷாம்-மாறி மாறி வரும் அழகுக் காட்சி; க்ஷிபந்தம்- ஏளனம் செய்யும்; ஹரித-பச்சை நிற; உபல-பவளம்: அத்ரே:- நரகத்தின்; ஸந்யா—அப்ர-நீவே: சாயங்கால ஆகாயத்தின் உடையின்; உரு -சிறந்த ; ருக்ம- தங்கம்; மூர்த்ன:-உச்சியில் ரத்ன- இரத்தினங்கள்; உததார-நீர்வீழ்ச்சிகள் : ஒளஷதி – மூலிகைகள்; ஸௌமனஸ்ய- காட்சியின்; வன -ஸ்ரஜ:-மலர் மாலை; வேணு -ஆடை: புஜ-கரங்கள் : அங்ரிப-மரங்கள்; அங்ரே:-கால்கள்.
பகவானுடைய உன்னத உடலின் காந்தி பவள மலையின் அழகையும் ஏளனம் செய்வதாக இருந்தது. பவள மலை, சாயங்கால வானத்தினால், உடை போல் நன்கு அலங்கரிக்கப்படுகிறது. ஆனால் பகவானின் மஞ்சள் நிற ஆடை அதன் அழகையும் ஏளனம் செய்தது. மலை உச்சியில் தங்கம் இருக்கிறது. ஆனால் இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பகவானின் கிரீடம் அதை ஏளனம் செய்வதாக இருந்தது. மலர்களின் அழகுக் காட்சியுடன் கூடிய மலையிலுள்ள நீர்வீழ்ச்சிகள், மூலிகைகள் முதலானவை மாலைகள் போல் காணப்பட்டன. ஆனால் இரத்தினங்களாலும், முத்துக்களாலும், துளசி இலைகளாலும், மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பகவானின் பிரம்மாண்டமான உடலும், அவரது கரங்களும், கால்களும், மலையின் தோற்றத்தையும் ஏளனம் செய்தன.
பதம் 3.8.25
ஆயாமதோ விஸ்தரத: ஸ்வ-மான-
தேஹேன லோக-த்ரய-ஸங்ரஹேண
விசித்ர-திவ்யாபரணாம்சுகானாம்
க்ருத -ஸ்ரியாபாஸ்ரித- வேஷ- தேஹம்
ஆயாமத:-நீளத்தாலும்; விஸ்தரத:-அகலத்தாலும்; ஸ்வ-மான- அவரது சொந்த அளவால்: தேஹேன-உன்னத உடலால்; லோக-த்ரய- மூன்று (உயர், மத்திய, கீழ்) கிரக அமைப்புக்கள்: ஸங்ரஹேண-மொத்த ஆக்கிரமிப்பால்: விசித்ர-நானாவகையான: திவ்ய-உன்னதமான; ஆபரண–அம்சுகானாம்—ஆபரணங்களின் ஒளிக் கதிர்கள்; க்ருத- ஸ்ரியா அபாஸ்ரித- அந்த ஆடை ஆபரணங்களால் உண்டான அழகு; வேஷ-உடை அணிந்திருந்தார்; தேஹம்—உன்னத உடல்.
நீளத்திலும், அகலத்திலும் அளவற்றதாக இருந்த அவரது உன்னத உடல், மேல், மத்திய மற்றும் கீழ் ஆகிய மூன்று கிரக அமைப்புக்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அவரது உடல் இணையற்ற ஆடை அணிகலன்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டு சுயப் பிரகாசம் கொண்டதாக இருந்தது.
பதம் 3.8.26
பும்ஸாம் ஸ்வ-காமாய விவிக்த-மார்கைர்
அப்யர்சதாம் காம-துகாங்ரி-பத்மம்
ப்ரதர்சயந்தம் க்ருபயா நகேந்து-
மயூக-பின்னாங்குலி-சாரு-பத்ரம்
பும்ஸாம்- மனிதனின்; ஸ்வ -காமாய—ஆசைக்கேற்ப; விவிக்த- மார்கை:-பக்தி மார்க்கத்தால்; அப்யர்சதாம்- வழிபட்ட; காம- துக -அங்ரி— பத்மம்-விரும்பிய பலன்களை அளிக்கக்கூடிய பகவானின் தாமரைப் பாதங்கள்; ப்ரதர்சயந்தம்—அவற்றைக் காட்டும் பொழுது: க்ருபயா -அகாரணமான கருணையால்; நக—நகங்கள்; இந்து— சந்திரனைப் போன்ற; மயூக- கதிர்கள்; பின்ன- பிரிந்த; அங்குலி— உருவங்கள்; சாரு- பத்ரம் –மிகவும்- அழகிய.
பௌதிக களங்கமற்ற பக்தித் தொண்டினால் அடையப்படும் சன்மானங்களுக்கெல்லாம் மூல பிறப்பிடமாகிய தமது தாமரைப் பாதங்களை பகவான் உயர்த்திக் காட்டியருளினார். இத்தகைய சன்மானங்கள் அவரைத் தூய பக்தியுடன் வழிபடுபவர்களுக்கென உள்ளவையாகும். நிலவைப் போன்ற அவரது பாத நகங்களிலிருந்து வெளிப்பட்ட உன்னதமான கதிர்களின் பிரகாசம், ஒரு தாமரையின் இதழ்களைப் போல் காட்சியளித்தது.
பதம் 3.8.27
முகேன லோகார்தி-ஹர-ஸ்மிதேன
பரிஸ்ஃபுரத்-குண்டல-மண்டிதேன
சோணாயிதேனாதர-பிம்ப-பாஸா
ப்ரத்யர்ஹயந்தம் ஸுனஸேன ஸுப்ருவா
முகேன – முக ஜாடையினால்; லோக-ஆர்தி- ஹர-பக்தர்களின் துன்பத்தை அழிப்பவர்; ஸ்மிதேன—புன்னகை செய்வதன் மூலம்; பரிஸ்ஃபுரத்—பிரகாசிக்கும்; குண்டல-குண்டலங்கள்; மண்டிதேன- அவற்றால் அலங்கரிக்கப்பட்டு; சோணாயிதேன—அங்கீகரித்து; அதர— அவரது உதடுகளின்; பிம்ப-பிம்பம்; பாஸா_கதிர்கள்; ப்ரத்யர்ஹயந்தம் -பரிமாற்றம் கொண்டு; ஸு-நஸேன—இன்பமூட்டும் அவரது மூக்கினால்; ஸூ-ப்ருவா—மற்றும் இன்பமூட்டும் புருவங்கள்.
மேலும் பக்தர்களின் தொண்டை ஏற்ற அவர், தமது அழகிய புன்னகையால், அவர்களது துன்பத்தைத் துடைத்தார். குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது முகமானது, அவரது மூக்கு மற்றும் புருவங்களின் அழகாலும், அவரது உதடுகளிலிருந்து வெளிப்பட்ட கதிர்களாலும் பிரகாசித்ததால் மிகவும் இன்பமூட்டுவதாக இருந்தது.
பதம் 3.8.28
கதம்ப-கிஞ்ஜல்க-பிசங்க-வாஸஸா
ஸ்வலங்க்ருதம் மேகலயா நிதம்பே
ஹாரேண சானந்த-தனேன வத்ஸ
ஸ்ரீவத்ஸ-வக்ஷ:-ஸ்தல-வல்லபேன
கதம்ப-கிஞ்ஜல்க—கடம்ப மலரின் குங்குமப் பொடி; பிசங்க—நிறம் கொண்ட ஆடை; வாஸஸா—உடையால்; ஸு-அலங்க்ருதம்- நன்கு அலங்கரிக்கப்பட்ட; மேகலயா—கச்சையால்; நிதம்பே-இடையில்; ஹாரேண -மாலையால்; ச-மேலும்; அனந்த—உயர் ந்த; தனேன – மதிப்புள்ள: வத்ஸ -அன்பிற்குரிய விதுரரே: ஸ்ரீவத்ஸ-உன்னதமான அடையாளத்தின்; வக்ஷ:- ஸ்தல-மார்பில்: வல்லபேன- மிகவும் இன்பமூட்டும்.
அன்பிற்குரிய விதுரரே பகவானின் இடை, கடம்ப மலரின் குங்குமப் பொடியையொத்த மஞ்சள் நிற ஆடையால் மூடப்பட்டு, நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒர் இடைக் கச்சையால் சூழப்பட்டிருந்தது. அவரது மார்பு ஸ்ரீவத்ஸம் என்ற குறியாலும், அளவற்ற மதிப்புடைய ஓர் ஆரத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பதம் 3.8.29
பரார்திய-கேயூர-மணி-ப்ரவேக-
பர்யஸ்த-தோர்தண்ட-ஸஹஸ்ர- சாகம்
அவ்யக்த-மூலம் புவானாங்ரிபேந்ரம்
அஹீந்திர போகைர் அதிவீத வல்சம்
பரார்திய-மதிப்புயர்ந்த: கேயூர-ஆபரணங்கள் மணி- ப்ரவேக- மதிப்புயர்ந்த இரத்தினங்கள்: பர்யஸ்த- பரப்பும்; தோர்தண்ட- சுரங்கள்: ஸஹஸ்ர -சாகம்-ஆயிரக்கணக்கான கிளைகளுடன்; அவ்யத்த-மூலம்-மூல நிலையிலுள்ள; புலன-பிரபஞ்ச அங்ரிப – மரங்கள்: இந்திரம் – ப கவான் அஹி – இந்திர்- அனந்த தேவர்; போகை:-படங்களால்; அதிவீத-குழப்பட்ட : வல்சம் – தோள்கள்.
சந்தன மரம் நறுமணமுள்ள மலர்களாலும், கிளைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளதைப் போலவே, பகவானின் உடல் மதிப்புயர்ந்த இரத்தினங்களாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவர் புற ஆதாரமில்லாத மரமாகவும், பிரபஞ்சத்திலுள்ள மற்றனைவருக்கும் இறைவனாகவும் இருந்தார். மேலும் சந்தன மரமொன்று பல பாம்புகளால் மூடப்பட்டிருப்பது போலவே, பகவானின் உடலும் அனந்ததேவரின் படங்களால் மூடப்பட்டிருந்தது.
பதம் 3.8.30
சராசரௌகோ பகவன்-மஹீத்ரம்
அஹீந்திர-பந்தும் ஸலிலோபகூடம்
கிரீட-ஸாஹஸ்ர-ஹிரண்ய-ஸ்ருங்கம்
ஆவிர்பவத் கௌஸ்துப-ரத்ன-கர்பம்
சர – அசையும் மிருகங்கள்; அசர-அசையாத மரங்கள்; ஒக:- இடம் அல்லது சூழ்நிலை; பகவத்-பரமபுருஷர்; மஹீத்ரம்-மலை: அஹி- இந்திர-ஸ்ரீ அனந்ததேவர்; பந்தும் – நண்பர்; ஸலில-நீர்; உபகூடம் – மூழ்கியுள்ள; கிரீட -கிரீடங்கள்; ஸாஹஸ்ர-ஆயிரக்கணக்கான; ஹிரண்ய- தங்க; ஸ்ருங்கம் -சிகரங்கள்; ஆவிர்பவத்— தோற்றுவிக்கப்படுகிறது; கௌஸ்துப -கௌஸ்துப இரத்தினம்; ரத்ன— கர்பம்-சமுத்திரம்.
ஒரு பெரிய மலையைப் போல், அசையும், அசையாத ஜீவராசிகளுக்கெல்லாம் உறைவிடமாக பகவான் நிற்கிறார். பகவானாகிய அனந்த தேவர் அவரது நண்பரென்பதால், அவர் பாம்புகளின் நண்பராவரார். ஒரு மலைக்கு ஆயிரக்கணக்கான தங்கச் சிகரங்கள் இருப்பதைப் போலவே, ஆயிரக்கணக்கான தங்கக் கிரீடங்களைக் கொண்ட அனந்த நாகத்தின் படங்களுடன் பகவான் காணப்படுகிறார்; ஒரு மலை சிலசமயங்களில் இரத்தினங்கள் நிறைந்ததாக இருப்பதைப் போலவே, பகவானின் உன்னத உடலும் மதிப்புயர்ந்த இரத்தினங்களால் முற்றிலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒருமலை சிலசமயங்களில் சமூத்திர நீரில் மூழ்கிக்கிடப்பதைப் போலவே, பகவானும் சிலசமயங்களில் பிரளய நீரில் மூழ்கிக் கிடக்கிறார்.
பதம் 3.8.31
நிவீதம் ஆம்னாய மது வ்ரத ஸ்ரியா
ஸ்வ-கீர்த்தி-மய்யா வன-மாலயா ஹரிம்
ஸூர்யேந்து-வாயு-அக்னி-அகமம் த்ரி-தாமபி:
பரிக்ரமத்-ப்ராதனிகைர் துராஸதம்
நிவீதம்- அவ்வாறு சூழப்பட்டதால்; ஆம்னாய -வேத ஞானம்; மது-வ்ரத -ஸ்ரியா இனிய ஓசையும், அழகும்; ஸ்வ-கீர்த்தி- மய்யா—அவரது சொந்த கீர்த்திகளால்; வன- மாலயா-மலர் மாலை; ஹரிம்- பகவானுக்கு; ஸூர்ய-சூரியன்; இந்து -சந்திரன்; வாயு – காற்று: அக்னி-நெருப்பு: அகமம் -அணுக முடியாத; த்ரி-தாமபி: -மூன்று கிரக அமைப்புகளால்; பரிக்ரமத்-வலம்வந்து; ப்ராதணிகை:- சண்டை செய்வதற்கு; துராஸதம்—அடைவதற்கு மிகக் கடினமான.
இவ்வாறாக, மலையின் வடிவிலிருந்த பகவானைப் பார்த்த பிரம்ம தேவர், அவரைப் பரமபுருஷரான ஹரி என்று முடிவு செய்தார், மார்பின் மேலிருந்த மலர் மாலை இனிய வேத கானங்களால் பகவானின் பெருமைகளைப் பாடியதையும், மிகவும் அழகுடன் விளங்கியதையும் அவர் கண்டார். சண்டை செய்வதற்குரிய சுதர்சன சக்கரத்தால் அவர் பாதுகாக்கப்பட்டிருந்தார், சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு முதலியவைகளால் அவரை அணுக முடியவில்லை.
பதம் 3.8.32
தர்ஹி ஏவ-தன்-நாபி-ஸர-ஸரோஜம்
ஆத்மானம் அம்ப: ஸ்வஸனம் வியச் ச
ததர்ச தேவோ ஜகதோ விதாதா
நாத: பரம் லோக-விஸர்க-த்ருஷ்டி
தர்ஹி-எனவே; எவ-நிச்சயமாக; தத் -அவரது; நாபி – தாபி, ஸர:- ஏரி;ஸரோஜம்-தாமரை; ஆத்மானம்-பிரம்மா;அம்ப:- பிரளய நீர்; ஸ்வஸனம்-உலர்த்தும் காற்று: வியத்-ஆகாயம்; ச-கூட: ததர்ச -பார்வையிட்டார்; தேவ-தேவர்: ஜகத:-பிரபஞ்சத்தின்; விதாதா- கதியை நிர்ணயிப்பவர்; ந-இல்லை: அத: -பரம் -அப்பால்; லோக -விஸர்க-பிரஞ்ச தேரற்றத்தின் படைப்பு; திருஷ்டி-பார்வை.
இவ்வாறாக, பிரபஞ்ச கதியை நிர்ணயிப்பவரான பிரம்ம தேவர், பகவானைக் கண்ட அதே சமயத்தில், படைப்பின் மீதும் பார்வையைச் செலுத்தினார். பிரம்மதேவர் பசுவான் விஷ்ணுவின் நாபியிலுள்ள ஏரியையும், தாமரையையும் மட்டுமல்லாமல் பிரளய நீரையும், உலர்த்தும் காற்றையும், ஆகாயத்தையும் கூட கண்டார். அனைத்தும் அவரது காட்சிக்குத் தென்பட்டன.
பதம் 3.8.33
ஸ கர்ம-பீஜம் ரஜஸோபரக்த:
ப்ரஜா: ஸிஸ்ருக்ஷன் இயத் ஏவ த்ருஷ்ட்வா
அஸ்தௌத் விஸர்காபிமுகஸ் தம் ஈட்யம்
அவ்யக்த-வர்தமனி அபிவேசிதாத்மா
ஸ:-அவர் (பிரம்மா); கர்ம-பீஜம்—உலகாயத செயல்களின் விதை: ரஜஸா-உபரக்த:-ரஜோ குணத்தினால் தூண்டி விடப்பட்ட; ப்ரஜா:- ஜீவராசிகள்; ஸிஸ்ருக்ஷன்—இன விருத்தியைச் சிருஷ்டிக்க விரும்பி; இயத் -படைப்பிற்குரிய ஐந்து காரணங்களும்; ஏவ-இவ்வாறு; திருஷ்ட்வா—பார்த்து ; அஸ்தௌத்—அதற்காக வேண்டினார்; விஸர்க- பகவானால் படைக்கப்பட்ட பிறகு வரும் சிருஷ்டி; அபிமுக:-நோக்கி; தம்—அந்த; ஈட்யம்- வழிபடத்தக்க ; அவ்யக்த—உன்னத; வர்த்மனி -அவ்வழியில்; அபிவேசித-பதித்தார்; ஆத்மா -மனதை.
இவ்வாறு ரஜோ குணத்தினால் தூண்டிவிடப்பட்ட பிரம்ம தேவர், படைப்பைச் செய்ய ஆவல் கொண்டார். பரமபுருஷரால் சுட்டிக் காட்டப்பட்டவையான, படைப்பிற்குரிய ஐந்து காரணங்களைக் கண்டபின், சிருஷ்டிக்கும் மனோபாவத்திற்கேற்ற வழியில், தமது பணிவான பிரார்த்தனைகளை அவர் செய்யத் துவங்கினர்.
ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “கர்போதகசாயி விஷ்ணுவிலிருந்து பிரம்மாவின் தோற்றம்” எனும் தலைப்பைக் கொண்ட எட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.