அத்தியாயம் – 4
சிருஷ்டிக்கும் முறை
பதம் 2.4.1
சூத உவாச
வையாஸகேர் இதி வசஸ் தத்வ-நிஸ்சயம் ஆத்மன:
உபதார்ய மதிம் க்ருஷ்ணே ஒளத்தரேய: ஸதீம் வ்யதாத்
சூத உவாச-சூத கோஸ்வாமி கூறினார்; வையாஸ்கே:-சுகதேவ கோஸ்வாமியின்; இதி—இவ்வாறாக; வச:- சொற்பொழிவுகள் ; தத்வ நிஸ்சயம்—உண்மையை சரியென நிரூபிப்பது; ஆத்மன:-ஆத்மாவின்; உபதார்ய-உணர்ந்து; மதிம்-மன ஒருமை: க்ருஷ்ணே-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்; ஒளத்தரேய:-உத்தராவின் புதல்வன்; ஸ்தீம்-பரிசுத்தம் ; வ்யதாத்-செலுத்தினார்.
சூத கோஸ்வாமி கூறினார்: ஆத்மாவைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் சுகதேவ கோஸ்வாமி சொல்லக் கேட்ட உத்தரையின் புதல்வரான பரீட்சித்து மகாராஜன், தம் கவனத்தை நம்பிக்கையோடு பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மீது பதியச் செய்தார்.
பதம் 2.4.2
ஆத்ம-ஜாயா-ஸுதாகார பசு-த்ரவிண-பந்துஷு
ராஜ்யே சாவிகலே நித்யம் விரூதாம் மமதாம் ஜஹௌ
ஆத்ம-உடல்; ஜாயா-மனைவி; ஸுத-மண்; ஆகார- அரண்மனை; பசு- குதிரைகளும் யானைகளும்; த்ரவிண- பொக்கிஷம்; பந்துஷு- நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம்; ராஜ்யே- இராஜ்யத்தில்; ச-மேலும்; அவிகலே-இடைங்சல் இல்லாதவாறு; நித்யம்—சீரான; விரூதாம்—ஆழப்பதிந்த; மமதாம்-உறவு; ஜஹௌ- கைவிட்டார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பரீட்சித்து மகாராஜனுக்கு இருந்த இதய பூர்வமான கவர்ச்சியின் விளைவாக, அவரது சொந்த உடல், மனைவி, குழந்தைகள், அரண்மனை, குதிரைகளையும், யானைகளையும் பொக்கிஷம், நண்பர்கள், உறவினர்கள், மற்றும் அவரது எதிர்ப்பற்ற இராஜ்யம் ஆகியவற்றின் மீது அவருக்கிருந்த ஆழமான பிரியத்தையும் அவரால் கைவிட முடிந்தது.
பதங்கள் 2.4.3 – 2.4.4
பப்ராச்ச சேமம் ஏவார்தம் யன் மாம் ப்ருச்சத ஸத்தமா:
க்ருஷ்ணானுபாவ-ச்ரவணே ச்ரத்ததானோ மஹா-மனோ:
ஸம்ஸ்தாம் விக்ஞாய ஸன்யஸ்ய கர்ம த்ரை- வர்கிகம் ச யத்
வாஸுதேவே பகவதி ஆத்ம-பாவம் த்ருதம் கத:
பப்ராச்ச-வினவினார்;ச-மேலும்; இமம் – இந்த; யத்—அந்த; ஏவ-; அதைப்போலவே; அர்தம்—நோக்கம்; ப்ருச்சத-நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்; ஸத்தமா- சிறந்த முனிவர்களே; மாம்- என்னிடம்; க்ருஷ்ண அனுபாவ-கிருஷ்ண சிந்தனையில் மெய்மறந்து; ச்ரவணே—கேட்பதில்; ச்ரத்ததான:-முழு நம்பிக்கை ; மஹா மன:- மிகச் சிறந்த ஆத்மா; ஸம்ஸ்தாம்-மரணம்; விக்ஞாய-அறிவிக்கப்பட்டு; ஸன்யஸ்ய-துறக்கும்; கர்ம-பலன் நோக்கு செயல்கள்; த்ரை- வர்கிகம்-மதம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலன் இன்பம் எனும் மூன்று கொள்கைகள்; ச-மேலும்; யத்- அது எதுவாக இருப்பினும்; வாஸுதேவே—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்; பகவதி—பரம புருஷர்; ஆத்ம-பாவம்-அன்பின் கவர்ச்சி; த்ருதம்- உறுதியாக நிலைபெற்று; கத:-அடைந்த.
சிறந்த முனிவர்களே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிந்தனையில் எப்பொழுதும் மெய் மறந்திருந்த மிகச் சிறந்த ஆத்மாவான பரீட்சித்து மகாராஜன், உடனடியாக நிகழப் போகும் தனது மரணத்தை நன்கறிந்து, மதம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலன் இன்பம் ஆகிய எல்லா வகையான பலன் நோக்குச் செயல்களையும் துறந்து கிருஷ்ணரிடம் தமக்குள்ள இயல்பான அன்பில் உறுதியாக தம் நினைவை பதியச் செய்த அவர், நீங்கள் என்னிடம் வினவுவதைப் போலவே, இக்கேள்விகளை எல்லாம் வினவினார்.
பதம் 2.4.5
ராஜோவாச
ஸமீசீனம் வசோ ப்ரஹ்மன் ஸர்வ-க்ஞஸ்ய தவானக
தமோ விசீர்யதே மஹ்யம் ஹரே: கதயத: கதாம்
ராஜா உவாச-அரசன் கூறினார்; ஸமீசீனம்-முற்றிலும் சரி; வச:-பேச்சுக்கள்; ப்ரஹ்மன்—ஓ கற்றறிந்த பிராமணரே; ஸர்வ-க்ஞஸ்ய- அனைத்தையும் அறிந்த ஒருவர்; தவ-உமது ; அனக- எவ்விதகளங்கமும் இல்லாமல்; தம:-அறியாமையின் இருள்; விசீர்யதே-படிப்படியாக மறைகின்றது; மஹ்யம்- என்னிடம்; ஹரே:-பகவானின்; கதயத:-நீர் பேசும் பொழுது; கதாம்-விஷயங்கள்.
பரீட்சித்து மகாராஜன் கூறினார்: கற்றறிந்த பிராமணரே, எவ்விதமான ஜடக் களங்கமும் தங்களிடம் இல்லாததால் அனைத்தையும் நீர் அறிந்திருக்கிறீர். ஆகவே நீர் என்னிடம் பேசியவை அனைத்தும் சரியானதாகவே காணப்படுகின்றன. பகவானைப் பற்றிய விஷயங்களை நீர் விவரிப்பதால், உமது பேச்சுக்கள் எனது அறியாமையெனும் இருளை படிப்படியாக நிலைகுலையச் செய்கின்றன.
பதம் 2.4.6
பூய ஏவ விவித்ஸாமி பகவான் ஆத்ம-மாயயா
யதேதம் ஸ்ருஜதே விஸ்வம் துர்விபாவ்யம் அதீஸ்வரை:
பூய- மீண்டும்; ஏவ—அதுவும்; விவித்ஸாமி-நான் அறிய விரும்புகிறேன்; பகவான்—முழுமுதற் கடவுள்; ஆத்ம-சொந்த; மாயயா-சக்திகளால்; யதா-அவ்வாறு; இதம்- இந்த அதிசயமான உலகம்: ஸ்ருஜதே-படைக்கிறார்; விஸ்வம்-பிரபஞ்சம்; பாவ்யம்—நினைத்தற்கரிய; அதீஸ்வரை:-பெரும் தேவர்களால்.
பரம புருஷர் அவரது சொந்த சக்திகளால், பெரும் தேவர்களாலும் நினைத்தற்கரிய அதிசயமான இப்பிரபஞ்சங்களை, எவ்வாறு படைக்கிறார் என்பதை தங்களிடமிருந்து அறிய நான் ஆசைப்படுகிறேன்.
பதம் 2.4.7
யதா கோபாயதி விபுர் யதா ஸம்யச்சதே புன:
யாம் யாம் சக்திம் உபாஸ்ரித்ய புரு-சக்தி: பர: புமான்
ஆத்மானம் க்ரீடயன் கீரீடன் கரோதி விகரோதி ச
யதா—அவ்வாறு; கோபாயதி- பராமரிக்கிரார்; விபு:- சக்தி வாய்ந்த; யதா—அவ்வாறு; ஸம்யச்சதே— முடிவு கட்டுகிறார்; புன:— மீண்டும்; யாம் யாம்-அவ்வாறு; சக்திம்–சக்திகள்; உபாஸ்ரித்ய- ஈடுபடுத்துவதன் வாயிலாக: புரு-சக்தி:-சர்வ சக்தி படைத்தவர்; பர:-பரமன்; புமான்- பரமபுருஷர்; ஆத்மானம்-விரிவங்கங்கள்; க்ரீடயன்—அவர்களை ஈடுபடுத்தி; கீரீடன்- அதில் தானும் ஈடுபட்டு; கரோதி- அவற்றைச் செய்கிறார்; விகரோதி-செய்யப்படுவதற்குக் காரணமாக இருக்கிறார்.
சர்வசக்தி படைத்தவரான பரம புருஷர், ஒரு விளையாட்டாளனைப் போல் விளையாட்டாக எப்படி இந்த அதிசய உலகைப் பராமரிப்பதிலும், மீண்டும் அதை அழிப்பதிலும் தமது வெவ்வேறு சக்திகளையும், விரிவங்கங்களையும் ஈடுபடுத்துகிறார் என்பதை தயவு செய்து விளக்குவீராக.
பதம் 2.4.8
நூனம் பகவதோ ப்ரஹ்மன் ஹரேர் அத்புத-கர்மண:
துர்விபாவ்யம் இவாபாதி கவிபிஸ் சாபி சேஷ்டிதம்
நூனம்—இன்னும் போதவில்லை; பகவத-பகவானின்; ப்ரஹ்மன்-கற்றறிந்த பிராமணரே; ஹரே:- பகவானின்; அத்புத -அற்புதமான; கர்மண:- செயலாற்றுபவன்; துர்விபாவ்யம்—நினைத்தற்கரிய; இவ—அவ்வாறு; ஆபாதி—தோற்றமளிக்கிறது; கவிபி: புலன்களாலும்; ச-மேலும்; ஆபி-இருந்தும்; சேஷ்டிதம்- முயற்சியை மேற்கொண்டதால்.
கற்றறிந்த பிராமணரே, பகவானின் உன்னதமான செயல்களனைத்தும் அற்புதமாகவும், நினைத்தற்கரியவையாகவும் காணப்படுகின்றன. ஏனெனில் பல கற்றறிந்த பண்டிதர்கள் மேற்கொண்ட பெரும் முயற்சிகளும்கூட அவற்றை புரிந்து கொள்வதற்குப் போதுமானவையல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பதம் 2.4.9
யதா குணாம்ஸ் து ப்ரக்ருதேர் யுகபத் க்ரமசோ ‘பி வா
பிபர்தி பூரிசஸ் த்வ ஏக: குர்வன் கர்மாணி ஜன்மபி:
யதா—அவைகள் உள்ளவாறே; குணான்-குணங்கள்; து—ஆனால்; ப்ரக்ருதே: ஜடசக்தியின்; யுகபத்—ஏக காலத்தில்; க்ரமச:-படிப்படியாக; அபி—மேலும்; வா—எதுவாயினும்; பிபர்தி-பராமரிக்கிறார்; பூரிச- பல உருவங்கள்; து—ஆனால், ஏக- பரமமான ஒன்று: குர்வன்-செயற்படும்; கர்மாணி—செயல்கள்; ஜன்மபி—அவதாரங்களால்.
பரமபுருஷ பகவான், தாம் மட்டுமே ஜட இயற்கைக் குணங்களை இயங்கினாலும், அல்லது ஒரே சமயத்தில் விரிவடைந்தாலும், அல்லது இயற்கைக் குணங்களை பல உருவங்களாக ஆள்வதற்காக ஒன்றன் பின் ஒன்றாக விரிவடைந்தாலும், அவர் ஒருவரேயாவார்.
பதம் 2.4.10
விசிகித்ஸிதம் ஏதன் மே ப்ரவீது பகவான் யதா
சப்தே ப்ரஹ்மணி நிஷ்ணாத பரஸ்மிம்ஸ் ச பவான் கலு
விசிகித்ஸிதம்- சந்தேகமான விசாரணை; ஏதத்-இது; மே- என்னுடைய; ப்ரவீது சரியாகக் களைந்துவிடும்; பகவான் -பகவானைப் போல் சக்தி வாய்ந்த; யதா—அந்த அளவுக்கு: சப்தே -உன்னத ஓசை; ப்ரஹ்மணி—வேத இலக்கியம்; நிஷ்ணாத —முற்றிலும் உணர்ந்த; பரஸ்மின்—தெய்வீகத்தில்; ச-மேலும்; பவான்—ரே; கலு -உண்மையில்;
தாங்கள் வேத இலக்கியங்களைக் கற்றுணர்ந்தவரும், உன்னத தன்னுணர்வு பெற்றவரும், பகவானின் சிறந்த பக்தருமாவீர். எனவே பரமபுருஷருக்கு ஈடானவரான தாங்கள், என்னுடைய சந்தேகங்களை எல்லாம் தீர்த்தருள வேண்டுகிறேன்.
பதம் 2.4.11
ஸூத உவாச
இதி உபாமந்த்ரிதோ ராஜ்ஞா குணானுகதனே ஹரே:
ஹ்ருஷீகேசம் அனுஸ்ம்ருத்ய ப்ரதிவக்தும் ப்ரசக்ரமே
ஸூத உவாச-சூத கோஸ்வாமி கூறினார்: இதி— இவ்வாறாக; உபாமந்தரித:-வேண்டிக் கொள்ளப்பட்டதால்; ராஜ்ஞா—அரசனால்; குண அனுகதனே-பகவானின் உன்னத இயல்புகளை விவரிப்பதில்; ஹரே.-முழுமுதற் கடவுளின்; ஹ்ருஷகேசம்-புலன்களுக்கு எஜமானர்; அனுஸ்ம்ருத்ய-நன்றாக ஞாபகத்திற் ப்ரதிவத்தும்—பதிலளிப்பதற்காக; ப்ரசக்ரமே-ஆரம்ப ஏற்பாடுகளை நிறைவேற்றினார்.
சூத கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக, முழுமுதற் கடவுளின் எஜமானரை படைப்புச் சக்தியைப் பற்றி விவரிக்குமாறு சுகதேவ கோஸ்வாமியை அரசன் வேண்டிக்கொண்ட பொழுது, புலன்களின் (ஸ்ரீ கிருஷ்ணரை) முறையாக அவர் ஞாபகப்படுத்திக் கொண்டபின், பின்வருமாறு அவர் பதில் கூறினார்.
பதம் 2.4.12
ஸ்ரீசுக உவாச
நம: பரஸ்மை புருஷாய பூயஸே
ஸத்-உத்பவ-ஸ்தான-நிரோத-லீலயா
க்ருஹீத-சக்தி-த்ரிதயாய தேஹினாம்
அந்தர்பவாயானுபலக்ஷ்ய-வர்த்மனே
ஸ்ரீசுக உவாச-ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: நம-வணக்கம் செலுத்தி; பரஸ்மை-பரமன்; புருஷாய-முழுமுதற்கடவுள்; பூயஸே- பூரண முழுமையுடன்; ஸத்-உத்பவ-ஜடஉலகின்படைப்பு: ஸ்தான-அதன் பாராமரிப்பு: நிரோத-மேலும்அதன் ஒடுக்கம்;லீலயா-லீலைகளினால்; க்ருஹீத-ஏற்று: சக்தி-சக்தி: த்ரிதயாய- முக்குணங்கள்; தேஹினாம்- ஜட உடல்களைப் பெற்றிருக்கும் அனைவரின்; அந்த-பவாயா- உள்ளே வாசம் செய்பவரிடம் (பகவான்); அனுபலக்ஷ்ய-நினைந்தற்கரிய; வர்த்மனே-அத்தகைய வழிகளை உடையவன்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஜட உலகை சிருஷ்டிப்பதற்காக இயற்கையின் முக்குணங்களை ஏற்கும் பரமபுருஷ பகவானிடம் எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். நினைத்தற்கரிய செயல்களைப் புரிபவரான அவரே அனைவரின் உடலிலும் வாழும் பூரண முழுமையாவார்.
பதம் 2.4.13
பூயோ நம: ஸத்-வருஜின- ச்சிதே ‘ஸதாம்
அஸம்பவாயாகில- ஸத்வ-மூர்தயே
பும்ஸாம் புன: பாரமஹம்ஸய ஆஸ்ரமே
வ்யவஸ்திதானாம் அனும்ருக்ய-தாசுஷே
பூய-மீண்டும்; நம- என் வணக்கங்கள்: ஸத்-பக்தர்களுடைய; வருஜின- துயரங்கள்; சிதே-விடுவிப்பவர். அஸதாம்-நாஸ்தி- பக்தர்களல்லாத அசுரர்கள்: அஸம்பவாய—துயரங்களின் நிறுத்தம்; அகில-முழுமை; ஸத்வ-நற்குணம்; மூர்தயே- முழுமுதற் கடவுளிடம்: பும்ஸாம்- ஆன்மீகிகளின்; புன:-மீண்டும்; பாரமஹம்ஸயே-ஆன்மீக பூரணத்துவத்தின் மிக உயர்ந்த நிலை; ஆஸ்ரமே-நிலையில்; வ்யவஸ்திதானாம்—முக்கியமாக இருக்கின்ற; அனும்ருக்ய-இலக்கு; தாசுஷே-விடுவிப்பவிர்.
புனித பக்தர்களை எல்லாத் துயரங்களிலிருந்தும் விடுவிப்பவரும், பக்தரல்லாத அசுரர்களின் நாஸ்திக மனோபாவங்களின் வளர்ச்சியை அழிப்பவரும், பரிபூரண வாழ்வையும், உன்னத உருவையும் கொண்டவருமான அவருக்கு எனது பணிவான வணக்கங்களை மீண்டும் நான் சமர்ப்பிக்கிறேன். மிக உயர்ந்த ஆன்மீகிகளுக்கு, அவர்களுக்குரிய பிரத்தியேகமான இலக்குகளை அவர் வழங்குகிறார்.
பதம் 2.4.14
நமோ நமஸ் தே ‘ஸ்த்வ் ருஷபாய ஸாத்வதாம்
விதூர-காஷ்டாய முஹு: குயோகினாம்
நிரஸ்த-ஸாம்யாதிசயேன ராதஸா
ஸ்வ-தாமனி ப்ரஹ்மணி ரம்ஸ்யதே நம:
நம-நம-தே- எனது வணக்கங்களை நான் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன்; அஸ்து-உள்ளன; ருஷபாய-மிகச் சிறந்த சகாக்களிடம்; ஸாத்வதாம்- யது வம்சத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களின்; விதூர- காஷ்டாய- பௌதிக வாய்ச்சண்டை செய்பவர்களிடம் இருந்து தூர விலகியிருப்பவர்; முஹு:- எப்பொழுதும்: குயோகினாம்—பக்தரல்லாதவர்களின்; நிரஸ்த -வெற்றி கொள்ளப்பட்ட; ஸாம்ய-சம அந்தஸ்து; அதிசயேன- பெருமையால்; ராதஸா- செல்வத்தால்; ஸ்வ- தாமனி-அவரது சொந்த வசிப்பிடத்தில்; ப்ரஹ்மணி_ஆன்மீக வெளியில்; ரம்ஸ்யதே- அனுபவிக்கிறார்; நம:-நான் தலை வணங்குகிறேன்.
யது வம்சத்தினரின் சகாவும், பக்தரல்லாதவர்களுக்கு எப்பொழுதுமே பிரச்சினையாகவும் உள்ளவரான அவருக்கு எனது வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். அவரே ஜட, ஆன்மீக உலகங்களின் பரம அனுபவிப்பாளர் என்ற போதிலும், ஆன்மீக வெளியிலுள்ள தமது சொந்த வசிப்பிடத்தை அவர் அனுபவித்து மகிழ்கிறார். உன்னதமான அவரது ஐசுவரியம் அளவிட முடியாததாக இருப்பதால் அவருக்குச் சமமானவரும் எவருமில்லை.
பதம் 2.4.15
யத்-கீர்தனம் யத்-ஸ்மரணம் யத்-ஈக்ஷணம்
யத்-வந்தனம் யச் ச்ரவணம் யத்-அர்ஹணம்
லோகஸ்ய ஸத்யோ விதுனோதி கல்மஷம்
தஸ்மை ஸுபத்ர-ஸ்ரவஸே நமோ நம:
யுத்-யாருடைய, கீர்தனம்-பெருமைகள்; யத்-யாருடைய; ஸ்மரணம்-நினைவுகள்: யத்-யாருடைய; சரவணம்-கேள்விப்பட்டு: யத்-யாருடைய; அர்ஹணம்-வழிபடும்; யத்-யாருடைய; வந்தனம்—பிரார்த்தனைகள்: லோகஸ்ய-அனைவருடைய; ஸத்ய:உடனே; விதுனோதி-குறிப்பாக தூய்மைப்படுத்துகிறது; கல்மஷம் – பாவ விளைவுகள்; தஸ்மை-அவரிடம்; ஸுபத்ர -ஸர்வ மங்களம்; ஸ்ரவஸே-செவி சாய்க்கப்படுபவர்: நம:-நான் அளிக்க வேண்டிய வணக்கங்கள்; நம- மேன்மேலும்.
சர்வ மங்களம் பொருந்திய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய பெருமைகள், நினைவுகள், அவரது தரிசனம், பிரார்த்தனைகள், அவரைப் பற்றி கேட்ட மற்றும் அவரது வழிபாடு ஆகியவை சாதகனின் பாவ விளைவுகளை எல்லாம் உடனே தூய்மை செய்துவிடக் கூடியவையாகும். அவருக்கு எனது வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 2.4.16
விசக்ஷணா யச்-சரணோபஸாதனாத்
ஸங்கம் வ்யுதஸ்யோபயதோ ‘ந்தர்-ஆத்மன:
விந்தந்தி ஹி ப்ரஹ்ம-கதிம் கத-க்லமாஸ்
தஸ்மை ஸுபத்ர-ஸ்ரவஸே நமோ நம:
விசக்ஷணா-புத்தி கூர்மையுடைய; யச் – யாருடைய; சரண உபஸாதனாத்-மலர்ப் பாதங்களில் ஒருவன் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதால்; ஸங்கம்—பற்று; வ்யுதஸ்ய: முழுமையாகக் கைவிட்டு; உபயத:- நிகழ் மற்றும் எதிர்கால வாழ்வுகளுக்காக; அந்த: ஆத்மன—மனப்பூர்வமாக; விந்தந்தி- முன்னேறுகிறார்; ஹி-நிச்சயமாக; ப்ரஹ்ம-கதிம்- ஆன்மீக வாழ்வை நோக்கி; கத-க்லமா-சிரமமில்லாமல்; தஸ்மை- அவரிடம்; ஸுபத்ர-ஸர்வ மங்களம்; ஸ்ரவஸே-கேட்கப்படுபவரிடம்; நம:-நான் அளிக்க வேண்டிய வணக்கங்கள்; நம:-மென்மேலும்.
சர்வ மங்களம் பொருந்திய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் எனது மரியாதை கலந்த வணக்கங்களை மென்மேலும் நான் சமர்ப்பிக்கிறேன். புத்தி கூர்மையுள்ளவர்கள், அவரது தாமரைப் பாதங்களில் சரணடைவதன் வாயிலாக, நிகழ் மற்றும் எதிர்கால வாழ்வுகளின் எல்லாப் பற்றுக்களிலிருந்தும் விடுபட்டு சிரமமின்றி ஆன்மீக வாழ்வை நோக்கி முன்னேறுகின்றனர்.
பதம் 2.4.17
தபஸ்வினோ தான-பரா யஸஸ்வினோ
மனஸ்வினோ மந்த்ர-வித: ஸுமங்களா:
க்ஷேமம் ந விந்தந்தி வினா யத்- அர்பணம்
தஸ்மை ஸுபத்ர-ச்ரவஸே நமோ நம:
தபஸ்வினோ —பெரும் புலமை வாய்ந்த முனிவர்கள்: தான- பரா—பெரும் கொடை வள்ளல்; யஸஸ்வின- பெரும் உழைப்பாளி; மனஸ்வின-பெரும் தத்துவவாதிகள் அல்லது யோகிகள்: மந்த்ர-வித-வேத மந்திரங்களின் தலை சிறந்த ஒதுவார்கள்: ஸுமங்களா-வேத நியமங்களை உறுதியாகப் பின்பற்றுபவர்கள்; க்ஷேமம்- பயனுள்ள முடிவு; ந- என்றுமில்லை; விந்தந்தி- அடைய; வினா-இல்லாமல்; யத்-அர்பணம்- அர்ப்பணம்; தஸ்மை-அவரிடம்(கடவுள்); ஸுபத்ர-மங்களம்; ச்ரவஸே —அவரைப்பற்றி (கடவுள்) கேள்விப்படுதல்; நம -எனது வணக்கங்கள்; நம-மென்மேலும்.
புலமை வாய்ந்த பெரும் முனிவர்கள், பெரும் கொடை வள்ளல்கள் சிறந்த உழைப்பாளிகள், பெரும் தத்துவவாதிகள், யோகிகள் வே மந்திரங்களின் தலை சிறந்த ஒதுவார்கள், மற்றும் வேத நியமங்களை உறுதியாகப் பின்பற்றுபவர்கள் ஆகியோர் தங்களது தலை சிறந்த பண்புகளை பகவானின் தொண்டிற்காக அர்ப்பணிக்காமல் எவ்வித நற்பயனையும் அடைய முடியாது என்பதால், அந்த சர்வமங்களம் பொருந்திய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் நான் மென்மேலும் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
பதம் 2.4.18
கிராத-ஹுணாந்தர புலின்த-புல்கசா
ஆபீர-கம்பா யவனா: கஸாதய
யே ‘ல்யே சபாபா யதி-அபாஸ்ரயாஸ்ரயா:
சுத்யந்தா தஸ்மை ப்ரபவிஷ்ணவே நம:
கிராத- பழைய பாரதத்தைச் சேர்ந்த ஒரு மாகாணம்: ஹுணா- ஜெர்மனி மற்றும் ருஷியாவைச் சேர்ந்த பகுதி; ஆந்திர- தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு மாகாணம்; புலின்த-கிரேக்கர்கள்; புல்கசா-மற்றொரு மாகாணம்; ஆபீர-பழைய சிந்துவைச் சேர்ந்த பாகம்; கம்பா:- மற்றொகு மாகாணம்; யவனா: துருக்கி தேசத்தவர்கள்; களி ஆகய:-மங்கோலிய மாகாணம் : யே- அவர்களும் கூட; அன்யே பிறர்; ச-மேலும்; பாபா:-பாவ வாழ்வில் பற்றுக் கொண்டுள்ள; அபாஸ்ரய-ஆஸ்ரயா:-பகவத் பக்தர்களிடம் தஞ்சமடைந்திருப்பதால்; சுத்யந்தி-உடனே தூய்மை அடைகின்றனர்; யத்-யாருடைய; தஸ்மை – அவரிடம் (பகவான்); ப்ரபவிஷ்ணவே —சக்தி விஷ்ணுவிடம்; நம:— எனது மரியாதை நிறைந்த வணக்கங்கள்.
கிராத, ஹுண, ஆத்ர, புலிந்த, புல்கச, ஆபீர, சும்ப, யவன, கச இனங்களை சேர்ந்தவர்களும், பாவச் செயல்களில் பற்றுக் கொண்டுள்ள மற்றவர்களும் கூட சர்வ வல்லமை படைத்த பகவானின் பக்தர்களிடம் தஞ்சமடைவதால், தூய்மையடைய முடியும். அந்த பகவானிடம் எனது தாழ்மையான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
பதம் 2.4.19
ஸ ஏஷ ஆத்மாத்மவதாம் அதீஸ்வரஸ்
த்ரயீமயோ தர்மமயஸ் தபோமய;
கத-வ்யலீகைர் அஜ-சங்கராதிபிர்
விதர்க்ய-லிங்கோ பகவான் பிரஸீதாம்
ஸ:— அவர் (ஸ்ரீ கிருஷ்ணர்}; ஏஷ்-இருக்கிறார்: ஆத்மா- பரமாத்மா; ஆத்மவதாம்-முக்தி பெற்ற ஆத்மாக்களின்; அதீஸ்வர: பரம புருஷர்; த்ரயீ-மய:- வேதங்களின் உருவம்; தர்ம-மய:-தர்ம சாஸ்திர சொரூபம், நப.-மய:-தவ சொரூபம்; கத வ்யலீகை: எல்லா வகையான பாசாங்குகளுக்கும் மேற்பட்டவர்களால்; அஜ— பிரம்ம தேவர்; சங்கர ஆதிபி:-சிவ பெருமானாலும், மற்றவர்களாலும்; விதர்க்யலிங்க:-பய பக்தியுடன் துதிக்கப்படுபவர்; பகவான்— முழுமுதற் கடவுள்; ப்ரஸீதாம்- என்னிடம் அன்பு கொள்வாராக.
முக்தி பெற்ற எல்லா ஆத்மாக்களுக்கும் அவரே பரமாத்மாவாகவும், பரமபுருஷராகவும் உள்ளார். வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள் மற்றும் தவம் ஆகியவற்றின் உருவமாக இருப்பவரும் அவரே. அவர் பிரம்ம தேவர், சிவபெருமான் மற்றும் எல்லா வித போலிப் பகட்டுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் ஆகியோரால் துதிக்கப்படுகிறார். பெரும் பய பக்தியுடன் பூஜிக்கப்படுபவரான அப்பரமபுருஷர் என்னிடம் தயவு காட்டுவாராக.
பதம் 2.4.20
ஸ்ரிய: பதிர் யக்ஞ-பதி: ப்ரஜா-பதிர்
தியாம் பதிர் லோக-பதிர் தரா-பதி:
பதிர் கதிஸ் சாந்தக-வ்ருஷ்ணி-ஸாத்வதாம்
ப்ரஸீததாம் மே பகவான் ஸதாம் பதி:
ஸ்ரிய:- எல்லா செல்வங்களும்; பதி:- உரிமையாளர்;யக்ஞ-யாகத்தின்; பதி-நிர்வகிப்பவர்; ப்ரஜா-பதி:-எல்லா ஜீவராசிகளுக்கும் தலைவர்; தியாம்- புத்தியின்; பதி:- எஜமானர்; லோசு – பதி:- எல்லா கிரகங்களுக்கும் உரிமையாளர்; தரா-பூமி; பதி:- பரமன்; பதி: தலைவர்; கதி:-இலக்கு; ச-மேலும்; அந்தக -யது வம்சத்து அரசர்களில் ஒருவர்: வ்ருஷ்ணி- யது வம்சத்தின் முதல் அரசன்; ஸாத்வதாம்-யது வம்சத்தினர்; ப்ரஸீத்தாம்- கருணை கொள்வாராக; மே-என்மீது; பகவான்-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; ஸதாம்- எல்லா பக்தர்களின்; பதி:- பகவான்.
பக்தர்களின் வழிபாட்டுக்குரியவரும், யது வம்சத்தைச் சேர்ந்த அந்தக மற்றும் வ்ருஷ்ணியைப் போன்ற அரசர்களைக் காப்பவரும், அவர்களால் போற்றப்படுபவரும், எல்லா லக்ஷ்மி தேவிகளுக்கும் கணவரும், எல்லா யாகங்களையும் நிர்வகித்து அனைத்து ஜீவராசிகளுக்கும் வழிகாட்டியாய் இருப்பவரும், எல்லா புத்தியையும் ஆள்பவரும், ஆன்மீக மற்றும் ஜட உலகங்கள் அனைத்திற்கும் உரிமையாளரும், மேலும் மண்ணுலகில் தோன்றிய மிகச் சிறந்த அவதாரியுமான (அனைவரிலும் பரமமான) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என்மீது கருணை கொள்வாராக.
பதம் 2.4.21
யத்-அங்ரி-அபித்யான-ஸமாதி-தௌதயா
தியானுபஸ்யந்தி ஹி தத்வம் ஆத்மன:
வதந்தி சைதத் கவயோ யதா-ருசம்
ஸ மே முகுந்தோ பகவான் ப்ரஸீததாம்
யத் – அங்ரி-யாருடைய தாமரைப் பாதங்கள்; அபித்யான— ஒவ்வொரு வினாடியும் மனதில் எண்ணி; ஸமாதி-சமாதி; தௌதயா- கழுவப்பட்டு; தியா—அத்தகைய தூய புத்தியால்; அனுபஸ்யந்தி- அதிகாரிகளைப் பின்பற்றும் முறையால் காண்கிறான்; ஹி-நிச்சயமாக; தத்வம்- வரம்பற்ற மெய்ப்பொருள்: ஆத்மன:- பரம புருஷருடையதும், ஒருவருடையதும்; வதந்தி-அவர்கள் கூறுகின்றனர்; ச-மேலும்; ஏதத் -இது; கவய:-தத்துவவாதிகள் அல்லது கற்றறிந்த பண்டிதர்கள்; யதா – ருசம் – அவன் எண்ணுவதைப் போல்; ஸ-அவர் (பகவான்); மே- என்னுடைய; முகுந்த- ஸ்ரீ கிருஷ்ணர் (முக்தியளிப்பவர்); பகவான்- முழுமுதற் கடவுள்: ப்ரஸீததாம்— என்னிடம் கருணை கொள்பவராக.
முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரே முக்தியளிப்பவராவார். அதிகாரபூர்வமானவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, ஒவ்வொரு வினாடியும் அவரது தாமரைப் பாதங்களை நினைவிற் கொள்வதன் மூலமாக, சமாதியில் ஆழ்ந்துள்ள பக்தர்களால் வரம்பற்ற பரம் புருஷரை காண முடிகிறது. ஆயினும் கற்றறிந்த மனக்கற்பனையாளர்கள் தங்களுடைய சலன சித்தத்திற்கேற்ப அவரைப் பற்றி எண்ணுகின்றனர். பெருமான் என்னிடம் கருணை கொள்வாராக.
பதம் 2.4.22
ப்ரசோதிடா யேன புரா ஸரஸ்வதீ
விதன்வதாஜஸ்ய ஸதிம் ஸ்ம்ருதீம் ஹ்ருதி
ஸ்வ-லக்ஷணா ப்ராதுரபூ கிலாஸ்யத:
ஸ மே ருஷீணாம் ருஷப: ப்ரஸீததாம்
ப்ரசோதிடா-ஊக்கமூட்டினார்; யேன-எவரால்; புரா- படைப்பின் ஆரம்பத்தில்: ஸரஸ்வதி- கல்வி தேவதை: விதன்வதா—பெருகச் செய்தார்: அஜஸ்ய-முதல் ஜீவராசியான பிரம்மாவின்: ஸதீம் ஸ்ம்ருதீம்- சக்தி வாய்த்த ஞாபக சக்தி; ஹ்ருதி —இதயத்தில்; ஸ்வ- அவருக்குச் சொந்தமான; லக்ஷணா-குறியாகக் கொண்டு ; ப்ராதுரபூத்-உண்டுபண்ணப்பட்டது; கில-போன்று: ஆஸ்யத:-வாயிலிருந்து: ஸ: அவர்; மே-என்னிடம்: குஷீணாம்- ஆசிரியர்களின்: ருஷப- முக்கியமான; ப்ரஸீததாம்- திருப்தி கொள்வாராக.
படைப்பின் ஆரம்பத்தில் பிரம்மாவின் சக்தி வாய்ந்த அறிவை அவரது இதயத்திலிருந்து கொண்டு பெருகச் செய்து, படைப்பைப் பற்றியதும், தம்மைப் பற்றியதுமான முழு அறிவை அவருள்ளே எழச் செய்தவரும், பிரம்மனின் வாயிலிருந்து படைக்கப்பட்டதைப் போல் காணப்பட்டவருமான பகவான் என்னிடம் கருணை கொள்வாராக.
பதம் 2.4.23
பூதைர் மஹத்பிர் ய இமா: புரோ விபுர்
நிர்மாய சேதே யத் அமூஷு பூருஷ:
புங்க்தே குணான் ஷோடச ஷோடசாத்மக:
ஸோ ‘லங்க்ருஷீஷ்ட பகவான் வசாம்ஸி மே
பூதைர்—மூலப் பொருட்களால்; மஹத்பி:-ஜட படைப்பின்; ய: அவர்; இமா:- இவையனைத்தும்; புர:-உடல்கள்; விபு:-பகவானின்; நிர்மாய- அமைக்கப்படுவதற்காக; சேதே-படுத்துக் கிடக்கும்; யத் அமூஷு- அவதரித்தவர்; பூருஷ: பகவான் விஷ்ணு; புங்க்தே- அடிபணியத் தூண்டுகிறது; குணான்—இயற்கையின் முக்குணங்கள்; ஷோடச-பதினாறு பிரிவுகளில்; ஷோடச ஆத்மக:—இப்பதினாறையும் சிருஷ்டிப்பவராக இருப்பதால்; ஸ:—அவர்; அலங்க்ருஷீஷ்ட- அலங்கரிக்கக் கூடும்; பகவான்- முழுமுதற் கடவுள்; வசாம்ஸி- கூற்றுகள்; மே- எனது.
பரமபுருஷ பகவான் பிரபஞ்சத்தினுள் சயனிப்பதன் வாயிலாக, மூலப் பொருட்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ள ஜட உடல்களை இயக்குகிறார். பதினாறு பிரிவுகளைக் கொண்ட ஜடக் குணங்கள் அவரது படைக்கும் கருவிகளாக உள்ளன. மேலும் தமது புருஷ அவதாரத்தில் தோன்றும் பகவான், ஜடக் குணங்களின் இப்பதினாறு பிரிவுகளிடம் ஜீவராசி கட்டுப்பட்டுக் கிடக்குமாறு செய்கிறார். அந்த முழுமுதற் கடவுள் கருணை கூர்ந்து எனது கூற்றுக்களைக் கௌரவிப்பாராக.
பதம் 2.4.24
நமஸ் தஸ்மை பகவதே வாஸுதேவாய வேதஸே
பபுர் ஞானம் அயம் சௌம்யா யன்-முகாம்புருஹாஸவம்
நம:- எனது வணக்கங்களை; தஸ்மை-அவரிடம்; பகவதே- முழுமுதற் கடவுளிடம்; வாஸுதேவாய— வாசுதேவனிடம் அல்லது அவருடைய அவதாரங்களிடம்; வேதஸே-வேத இலக்கியங்களைத் தொகுத்தவரான; பபு:-அருந்தி; ஞானம் – அறிவு; அயம்— இந்த வேத அறிவு; செளம்யா:-பக்தர்கள், குறிப்பாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவிகள்; யத்-யாருடையதில் இருந்து; முக அம்புருஹ- தாமரையை ஒத்த வாய்; ஆஸவம்—அவரது வாயிலிருந்து தோன்றும் அமிர்தம்.
வேத நூல்களைத் தொகுத்தவரும், வாசுதேவனின் அவதாரமுமான ஸ்ரீல வியாசதேவருக்கு எனது தாழ்மையான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். தூய பக்தர்கள் பகவானின் வாயிலிருந்து தோன்றும் அமிர்தம் போன்ற உன்னத அறிவைப் பருகுகின்றனர்.
பதம் 2.4.25
ஏதத் ஏவாத்ம-பூ ராஜன் நாரதாய விப்ருச்சதே
வேத-கர்போ ‘ப்யதாத் ஸாக்ஷாத் யத் ஆஹ ஹரிர் ஆத்மன:
ஏதத் – இவ்விஷயத்தில்; ஏவ-அவ்வாறே; ஆத்ம-பூ-முதலில் பிறந்தவர் (பிரம்ம தேவர்); ராஜன்—எனதருமை மகாராஜனே; நாரதாய- நாரத முனிவரிடம்; விப்ருச்சதே-அதைப்பற்றிய விசாரணையைச் செய்தபின்; வேத – கர்ப:-பிறப்பிலிருந்தே வேத அறிவால் நிரப்பப்பட்டவர்; அப்யதாத்-அறிவிக்கப்பட்டார்; ஸாக்ஷாத்- நேரடியாக; யத் ஆஹ-அவர் பேசியது; ஹரி:-பகவான்; ஆத்மன- பிரம்மாவிடம்.
அன்புள்ள அரசே, முதன் முதலாகப் பிறந்தவரான பிரம்மாவிற்கு, அவரது பிறப்பின் ஆரம்பத்திலேயே பகவான் வேத அறிவைப் புகட்டினார். பகவான் தமது சொந்த மகனிடம் (பிரம்மா) நேரடியாக பேசியதைப் போலவே, பிரம்மாவும் இவ்விஷயத்தைப் பற்றி நாரதர் கேட்ட கேள்விக்குத் தக்கவாறு விடையளித்தார்.
ஸ்ரீமத் பாகவதம், இரண்டாம் காண்டத்தின், “சிருஷ்டிக்கும் முறை” எனும் தலைப்பைக் கொண்ட நான்காம் அத்தியாயம் நிறைவு பெறுகின்றது.