அத்தியாயம் – 18
பிராமணச் சிறுவனால் பரீட்சித்து சபிக்கப்படுதல்
பதம் 1.18.1
ஸூத உவாச
யோ வை த்ரௌணி-அஸ்த்ர-விப்லுஷ்டோ ந மா துர் உதரே ம்ருத:
அநுக்ரஹாத் பகவத: கிருஷ்ணஸ்யாத்புத-கர்மண:

ஸூத உவாச-ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; ய-யாரொருவர்; வை—நிச்சயமாக; த்ரௌணி-அஸ்த்ர-துரோணருடைய மகனின் ஆயுதத்தால்; விப்லுஷ்ட:-எரிக்கப்பட்டார்; ந-இல்லை; மாது- தாயின்; உதரே-கருப்பைக்குள்; ம்ருத:-மரணத்தை சந்தித்தார்; அநுக்ரஹாத்——கருணையால்; பகவத-பரம புருஷரின்; க்ருஷ்ணஸ்ய- கிருஷ்ணர்; அத்புத-கர்மண-அற்புதமாக செயற்படுபவர்.

ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: தமது தாயின் கருப்பைக்குள் இருந்த பரீட்சித்து மகாராஜன், துரோணருடைய மகனின் ஆயுதத்தால் தாக்கப்பட்டபோதிலும், அற்புதமாக செயற்படுபவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையால், எரிக்கப்பட முடியாதவராக இருந்தார்.

பதம் 1.18.2
ப்ரஹ்மகோபோத்திதாத் யஸ் து தக்ஷகாத் ப்ராணவிப்லவாத்
ந ஸம்முமோஹோருபயாத் பகவதி அர்பிதாசய:

ப்ரஹ்மகோப-ஒரு பிராமணனின் கோபத்தால்; உத்திதா- விளைவிக்கப்பட்ட; ய- எது; து—ஆனால்; தக்ஷகாத்- நாகத்தினால்; ப்ராணவிப்லவாத்—பிராண நாசத்திலிருந்து; ந- ஒருபோதும் இல்லை; ஸம்முமோஹு—கலக்கமடைந்தார்; உருபயாத்—பெரும் பயம்: பகவதி -பரம புருஷரிடம்; அர்பித-சரணமடைந்தார்; ஆசய-உணர்வு.

மேலும், பரீட்சித்து மகாராஜன் எப்பொழுதும் மணமறிந்து பரம புருஷரிடம் சரணடைந்தவராக இருந்தார். எனவே ஒரு பிராமண சிறுவனுடைய கோபத்தினால் தன்னை ஒரு நாகம் தீண்டப் போகிறது என்பதை அறிந்த அவர் அச்சமோ, கலக்கமோ அடையவில்லை.

பதம் 1.18.3
உத்ஸ்ருஜ்ய ஸர்வத: பங்கம் விக்ஞாதாஜித-ஸம்ஸ்திதி
வையாஸுகேர்: ஜூஹௌ சிஷ்யோ கங்காயாம் ஸ்வம் கலேவரம்

உத்ஸ்ருஜ்ய- விட்டு ஒதுங்கியபின்; ஸர்வத:- சுற்றுப்புறம்; ஸங்கம் – உறவு: விக்ஞாத-புரிந்துகொண்டு; அஜித-வெல்ல முடியாதவர் (பரம புருஷர்); ஸம்ஸ்திதி- உண்மை நிலையை; வையாஸகே:-வியாசரின் புதல்வரிடம்; ஜஹௌ—துறந்தார்; சிஷ்ய: ஒரு சீடராக ; கங்காயாம்- கங்கைக் கரையில்; ஸ்வம்-அவரது சொந்த; கலேவரம்-ஜடவுடல்.

மேலும், அவரது சகாக்களை எல்லாம் விட்டுப் பிரிந்தபின், அரசர் வியாசரின் புதல்வரிடம் (சுகதேவ கோஸ்வாமி) ஒரு சீடராக சரணமடைந்தார். இவ்வாறாக பரம புருஷரின் உண்மையான நிலையை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.

பதம் 1.18.4
நோத்தமஸ்லோக வார்தானாம் ஜூஷதாம் தத் கதாம்ருதம்
ஸ்யாத் ஸம்ப்ரமோ ‘ன்த காலே ‘பி ஸ்மரதாம் தத் பதாம்புஜம்

ந-இல்லை; உத்தம பரம ஸ்லோக-வேத மந்திரங்களால் பாடப்படும் புருஷர்; வார்தானாம்—அவற்றின் மீது வாழ்பவர்களின்; ஜுஷதாம்- அதில் ஈடுபட்டிருப்பவர்களின்; தத்—அவரது; அம்ருதம்- அவரைப் பற்றிய உன்னதமான கதைகளில்; ஸ்யாத்- என்ற நிலை ஏற்படுகிறது; ஸம்ப்ரம:-மதி மயக்கம்; அந்த – மரண; காலே- காலத்தில்; அபி—மேலும்; ஸ்மரதாம்-நினைக்கும்; தத்—அவரது; பத அம்புஜம்- தாமரைப் பாதங்கள்.

இது உண்மை, ஏனெனில், யாரைப் பற்றி வேத மந்திரங்கள் பாடுகின்றனவோ, அப்பரம புருஷரின் உன்னதமான கதைகளைக் கேட்பதில் தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும், பகவானின் தாமரைப் பாதங்களை இடையறாது நினைப்பதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் மரண காலத்திலும் மதிமயக்கம் ஏற்படாது.

பதம் 1.18.5
தாவத் கலிர் ந ப்ரபவேத் ப்ரவிஷ்டோ ‘பீஹ ஸர்வத:
யாவத் ஈசோ மஹான் உர்வ்யாம் ஆபிமன்யவ ஏக-ராட்

தாவத்-அதுவரை; கலி:-கலி புருஷன்; ந- முடியாது; ப்ரபவேத்- செழிப்படைய; ப்ரவிஷ்ட- உள்ளே புகுந்தான்; அபி-எனினும்; இஹ-இங்கும்; ஸர்வத:- எங்கும்; யாவத்-இருக்கும்வரை; ஈச : தலைவராக; மஹான்- மிகச்சிறந்த; உர்வ்யாம்- சக்தி வாய்ந்த; ஆபிமன்யவ—அபிமன்யுவின் மகன்; ஏகராட்-ஒரே பேரரசர்.

அபிமன்யுவின் சிறந்த, சக்தி வாய்ந்த மகன் உலகப் பேரரசராக இருக்கும்வரை, கலி புருஷன் செழிப்படைய வாய்ப்பில்லை.

பதம் 1.18.6
யஸ்மின் அஹனி யர்ஹி ஏவ பகவான் உத்ஸஸர்ஜ காம் ததைவேஹானுவ்ருத்தோ ‘ஸாவ் அதர்ம-ப்ரபவ: கலி:

யஸ்மின்—அதே; அஹனி—நாளில் ; யர்ஹி ஏவ—அதே வினாடியில்; பகவான்-பரம் புருஷர்; உத்ஸஸர்ஜ—ஒருபுறம் விட்டு; காம் -பூமியை; ததா—அச்சமயத்தில்; ஏவ-நிச்சயமாக; இஹ—இவ்வுலகில்; அனுவ்ருத்த—பின்தொடர்ந்தான்; அஸௌ—அவன்; அதர்ம—அதர்மம்; ப்ரபவ:-துரிதப்படுத்தும்; கலி:-கலி புருஷன்.

பரம புருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த பூமியை விட்டுச் சென்ற அதே நாளில், அக்கணமே, எல்லா அதர்மச் செயல்களையும் தூண்டும் கலி புருஷன் இவ்வுலகினுள் பிரவேசித்தான்.

பதம் 1.18.7
நானுத்வேஷ்டி கலிம் ஸம்ராட் ஸாரங்க இவ ஸார புக்
குசலானி ஆசு ஸித்யந்தி நேதராணி க்ருதானி யத்

ந -ஒருபோதும் இல்லை; அநுத்வேஷ்டி – பகை; கலிம்- கலி புருஷனிடம்; ஸம்ராட்-பேரரசர்; ஸாரம்-க-தேனீயைப் போல் நடைமுறைக்கேற்றதைச் செய்பவர்; இவ-போல்; ஸாரபுக்- சாராம்சத்தை ஏற்பவர்; குசலானி-மங்களகரமான நிகழ்ச்சிகள் அல்லது புண்ணியங்கள்; ஆசு-உடனடியாக; ஸித்யந்தி—வெற்றியடைகிறது; ந- ஒருபோதும் இல்லை; இதராணி—அமங்களமாக இருப்பவை; க்ருதானி—செய்யப்படுவதால்; யத்—அவ்வாறே.

இக்கலியுகத்தில் புண்ணியங்கள் உடனே நல்ல பலன்களை அளிக்கின்றன. ஆனால் பாவங்கள் அப்படியல்லாமல் செய்யப்பட்ட பின்னரே பயனளிக்கின்றன. எனவே பரீட்சித்து மகாராஜன் தேனீயைப் போன்று சாரத்தை மட்டுமே கிரகிக்கும் தெளிந்த மனதுடையவர் என்பதால் கலி புருஷனை அவர் ஒருபோதும் பகைக்கவில்லை.

பதம் 1.18.8
கிம் நு பாலேஷு சூரேண கலினா தீர-பீருணா
அப்ரமத்த: ப்ரமத்தேஷு யோ வ்ருகோ ந்ருஷு வர்ததே

கிம்- என்ன; நு—இருக்கக்கூடும்; பாலேஷு-குறைந்த அறிவுடையவர்களுக்கு இடையில்; சூரேண- சக்தி வாய்ந்தவனால்; கலினா—கலி புருஷனால்; தீர—புலனடக்கம் உள்ளவர்கள்; பீருணா- அதில் அச்சம் கொண்டவனால்; அப்ரமத்த:-கவனமாக இருப்பவன்; ப்ரமத்தேஷு—அஜாக்கிரதையாக உள்ளவர்களுக்கு ய:அவர்; வ்ருக:-புலி ; ந்ருஷு-மனிதருக்கிடையில்; வர்ததே- இருக்கிறார்.

குறைந்த அறிவுடையவர்கள், கலி புருஷனை மிகவும் சக்தி வாய்ந்தவனாக உணரக்கூடும், ஆனால் புலனடக்கம் உள்ளவர்கள் அஞ்சுவதற்கு இதில் ஒன்றுமில்லை என்று பரீட்சித்து மகாராஜன் கருதினார். புலியைப் போல் சக்தி வாய்ந்தவராக இருந்த அரசர் முட்டாள்களையும், அஜாக்கிரதையாக இருந்தவர்களையும் கவனித்துக் கொண்டார்.

பதம் 1.18.9
உபவர்ணிதம் ஏதத் வ: புண்யம் பாரீக்ஷிதம் மயா
வாஸுதேவ-கதோபேதம் ஆக்யானம் யத் அப்ருச்சத

உபவர்ணிதம்-கிட்டத்தட்ட விவரிக்கப்பட்டுள்ள அனைத்தும்; ஏதத்—இவையனைத்தும்; வ:-உங்களுக்கு; புண்யம்- புண்ணியம்; பாரீக்ஷிதம்—பரீட்சித்து மகாராஜனைப் பற்றி; மயா- என்னால்; வாஸுதேவ—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; கதா:-கதைகள்; உபேதம்- சம்பந்தமான; ஆக்யானம்- கூற்றுகள்; யத்-எதை; அப்ருச்சத—நீங்கள் என்னிடமிருந்து கேட்ட.

முனிவர்களே, நீங்கள் என்னிடமிருந்து புண்ணியவானாகிய பரீட்சித்து மகாராஜனின் கேட்டதுபோலவே, சரித்திரத்துடன் பற்றி தொடர்புடைய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகளைப் பற்றி கிட்டத்தட்ட அனைத்தையுமே இப்பொழுது நான் விவரித்துள்ளேன்.

பதம் 1.18.10
யா யா: கதா பகவத: கதனீயோரு கர்மண:
குண-கர்மாஸ்ரயா: பும்பி: ஸம்ஸேவ்யாஸ் தா புபூஷுபி:

யா-ஏதாயினும்; யா:-எதுவாகிலும்; கதா—விஷயங்கள்; பகவத- பரம புருஷரைப் பற்றிய; கதனீய-என்னால் பேசப்படப் போகும்; உரு கர்மண:- அற்புதமாக செயற்படுபவரின்; குண—திவ்ய குணங்கள்; கர்ம-அசாதாரணமான செயல்கள்; ஆஸ்ரய:- சம்பந்தப்படும்; பும்பி:- நபர்களால்; ஸம்சேவ்யா:கேட்கப்பட வேண்டிய; தா- அவையனைத்தும்; புபூஷுபி:— தங்களது சொந்த நன்மையைவிரும்புபவர்களால்.

வாழ்வில் முழு பூரணத்துவத்தை அடைய விரும்புபவர்கள், அற்புதமாக செயற்படுபவரான பரம புருஷரின் திவ்யமான செயல்கள் மற்றும் குணங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய விஷயங்களையும் அடக்கத்துடன் கேட்க வேண்டும்.

பதம் 1.18.11
ருஷய ஊசு:
ஸூத ஜீவ ஸமா: ஸௌம்ய சாஸ்வதீர் விசதம் யச:
யஸ் த்வம் சம்ஸஸி க்ருஷ்ணஸ்ய மர்த்யானாம் அம்ருதம் ஹி ந:

ருஷய ஊசு:- நல்லோரான முனிவர்கள் கூறினர்; ஸூத- சூத கோஸ்வாமியே; ஜீவ-நீங்கள் வாழ வாழ்த்துகிறோம்; ஸமா: பல்லாண்டுகள்; ஸௌம்ய-மனம் ஆழ்ந்த; சாஸ்வதீ:-நித்தியமான; விசதம்- குறிப்பாக; யச:-புகழில்; ய: த்வம் ஏனெனில் நீங்கள்; சம்ஸஸி- நன்றாகப் பேசுகிறீர்கள்; க்ருஷ்ணஸ்ய-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; மர்த்யானாம்—இறப்பவர்களின்; அம்ருதம்—நித்திய வாழ்வு; ஹி-நிச்சயமாக; ந:- எங்கள்.

நல்லோரான முனிவர்கள் கூறினர்: சூத கோஸ்வாமியே பரம புருஷரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் செயல்களைப் பற்றி தாங்கள் மிக நன்றாகப் பேசுகிறீர்கள். எனவே தாங்கள் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம். எங்களைப் போன்ற மடியக்கூடிய ஜீவன்களுக்கு இது அமுதத்தைப் போலவே உள்ளது.

பதம் 1.18.12
கர்மணி அஸ்மின் அனாஸ்வாஸே தூம-தூம்ராத்மனாம்
பவான் ஆபாயயதி கோவிந்த-பாத-பத்மாஸவம் மது

கர்மணி—செயல்; அஸ்மின் – இதில்; தூம-புகை; அனாஸ்வாஸே- நிச்சய மில்லாமல்; தூம்ரேஆத்மனாம்—படிந்த உடலும், மனதும்; பவான்- நல்லாத்மாவான தாங்கள்; ஆபாயயதி- மிகவும் மகிழ்ச்சியளிக்கும்; கோவிந்த-பரம புருஷர்; பாத-பாதங்கள்; பத்ம ஆஸவம்- தாமரை மலரின் அமுதம்; மது—தேன்.

எங்களுடைய செயலில் பல குறைகள் இருப்பதால், அதன் பலனைப் பற்றிய நிச்சயம் இல்லாமலேயே, பலன்நோக்குக் கருமமாகிய இந்த யாகத் தீயை இப்பொழுது நாங்கள் எங்களது உடல்கள் புகையால் கருமை அடைந்துள்ளன. ஆனால் தாங்கள் விநியோகிக்கும், ஆரம்பித்திருக்கிறோம். பரம் புருஷராகிய கோவிந்தனுடைய தாமரைப் பாதங்களின் அமுதத்தினால் உண்மையாகவே நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

பதம் 1.18.13
துலயாம லவேனாபி ந ஸ்வர்கம் நாபுனர்-பவம்
பகவத்-ஸங்கி-ஸங்கஸ்ய மர்த்யானாம் கிம் உதாசிஷ:

துலயாம-சமப்படுத்த; லவேன-நொடிநேரத்தால்; அபி—கூட; ந – ஒருபோதும் முடியாது; ஸ்வர்கம்-ஸ்வர்க லோகங்கள்; ந- அல்லது; அபுன: பவம்—பௌதிகத்திலிருந்து முக்தி; பகவத்-ஸங்கி_ பகவத் பக்தர்; ஸங்கஸ்ய-தொடர்பின்; மர்த்யானாம்-மரணமடைய வேண்டியவர்கள்; கிம்- என்ன இருக்கிறது; உத—பேசுவதற்கு; ஆசிஷ:- பௌதிக நன்மை.

பகவத் பக்தருடன் கொள்ளும் கணநேர தொடர்பின் மதிப்பை, ஸ்வர்க லோகங்களை அடைவதுடனோ அல்லது பௌதிகத்திலிருந்து முக்தியடைவதுடனோ கூட ஒப்பிட முடியாது. எனவே இறக்கப் போகும் மக்களுக்குரியதான, பெளதிக செழுமை எனும் உலகாயத நன்மைகளைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது?

பதம் 1.18.14
கோ நாம த்ருப்யேத் ரஸவித் கதாயாம்
மஹத்தமைகாந்த பராயணஸ்ய
நாந்தம் குணானாம் அகுணஸ்ய ஜக்முர்
யோகேஸ்வரா யே பவ-பாத்ம-முக்யா:

க-யாரவர்; நாம-குறிப்பாக ; த்ருப்யேத்- முழு திருப்தியைப் பெறுவார்; ரஸ-வித்-ரஸாம்ருதத்தைச் சுவைப்பதில் கைதேர்ந்த; கதாயாம்- எனும் விஷயங்களில்; மஹத்-தம- ஜீவராசிகளிலேயே மிகச்சிறந்தவர்; ஏகாந்த-பிரத்தியேகமாக; பராயணஸ்ய-புகலிடமாக இருப்பவரின்;ந—ஒருபோதும் இல்லை;அந்தம்-முடிவு; குணானாம்- குணங்களின்; அகுணஸ்ய-திவ்யமானவரின்; ஜக்மு:-ஆராய்ந்தறிய இயலும்; யோக ஈஸ்வரா-யோக சக்திகளின் தலைவர்கள்; யே- அவர்களால்; பவ-சிவபெருமான்; பாத்ம-பிரம்மதேவர்; முக்யா: தலைவர்கள்.

பரம் புருஷரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே (கோவிந்தன்), மிகச்சிறந்த ஜீவராசிகளுக்கும் தனிப்பட்ட புகலிடமாக விளங்குகிறார். அவரது திவ்யமான இயற்கைக் குணங்களை சிவபெருமானையும், பிரம்மதேவரையும் போன்ற யோக சக்திகளின் தலைவர்களாலும் கூட அளவிட முடியாது. அமுதத்தை (ரஸத்தை) சுவைப்பதில் கைதேர்ந்த ஒருவரால், அவரைப் பற்றிய செய்திகளைக் கேட்டு எப்பொழுதாவது முழுமையாகத் திருப்தியடைய முடியுமா?

பதம் 1.18.15
தன் நோ பவான் வை பகவத் ப்ரதானோ
மஹத்தமைகாந்த-பராயணஸ்ய
ஹரேர் உதாரம் சரிதம் விசுத்தம்
சுஸ்ரூஷதாம் நோ விதனோது வித்வன்

ந – எங்களின்; பவான்- நல்லாத்மாவான தாங்கள்; வை-நிச்சயமாக; பகவத்-பரம புருஷரின் தொடர்பில்; ப்ரதான:-முக்கியமாக; மஹத்-தம உயர்ந்தவர்களில் தலைசிறந்த; ஏகாந்த-பிரத்தியேகமாக; பராயணஸ்ய -புகலிடத்தின்; ஹரே: பகவானின்; உதாரம்—பாரபட்சமற்ற; சரிதம்—செயல்கள்; விசுத்தம்-உன்னத; சுஸ்ரூஷதாம்—கேட்க விரும்புபவர்கள்; ந :- எங்களுக்கு; விதனோது—தயவுசெய்து விவரியுங்கள்; வித்வன்—அறிஞரே.

சூத கோஸ்வாமியே, பரம புருஷர் தங்களுடைய வழிபாட்டிற்குரிய முக்கிய பொருளாக இருப்பதால், தாங்கள் சிறந்த அறிஞராகவும், பகவானின் தூய பக்தராகவும் விளங்குகிறீர்கள். எனவே பெளதிக கருத்துகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பகவானின் லீலைகளைப் பற்றி கேட்டறிய நாங்கள் ஆவல் கொண்டிருப்பதால், தயவுகூர்ந்து அவற்றை விவரிக்க வேண்டுகிறோம்.

பதம் 1.18.16
ஸ வை மஹா பாகவத: பரீக்ஷித்
யேனாபவர்காக்யம் அதப்ர-புத்தி:
ஞானேன வையாஸகி-சப்திதேன
பேஜே ககேந்ர-த்வஜ-பாதமூலம்

ஸ—அவர்; வை—நிச்சயமாக; மஹாபாகவத:-உத்தம பக்தர்; பரீக்ஷித்— அரசர்; யேன-எதனால்; அபவர்கஆக்யம்-முக்தியெனும் பெயரால்; அதப்ர—நிலைத்த; புத்தி:- புத்தி; ஞானேன- அறிவால்; வையாஸகி—வியாசரின் புதல்வர்; சப்திதேன—பேசப்பட்ட; பேஜே-மேற்கொண்ட ; கக-இந்த்ர—பறவை ராஜனான கருடன்; த்வஜ—கொடி; பாத மூலம்—பாதங்கள்.

ஓ சூத கோஸ்வாமி, வியாச புத்திரரால் (ஸ்ரீல சுகதேவர்) பகவானைப் பற்றி பேசப்பட்ட எந்த விஷயத்தைக் கேட்டு, பரீட்சித்து மகாராஜனின் புத்தி முக்தியில் நிலைபெற்று, பறவை ராஜனான கருடனின் புகலிடமான, பகவானின் தாமரைப் பாதங்களை அவர் அடைந்தாரோ, அவ்விஷயங்களைப் பற்றி தயவுசெய்து விளக்கிக் கூறுங்கள்.

பதம் 1.18.17
தன் ந: பரம் புண்யம் அஸம்வ்ருதார்தம்
ஆக்யானம் அத்யத்புத-யோக-நிஷ்டம்
ஆக்யாஹி அனந்தாசரிதோபபன்னம்
பாரீக்ஷிதம் பாகவதாபிராமம்

தத்-எனவே; ந: எங்களுக்கு; பரம்-திவ்யமானவை; புண்யம்— தூய்மைப்படுத்தக்கூடியவை; அஸம்வ்ருத-அர்தம் உள்ளபடி; யானம்—வர்ணனை; அதி—மிகவும்; அத்புத—அற்புதமான; யோக ஆக் நிஷ்டம்-பூரண பக்தி யோகம்; ஆக்யாஹி-விளக்குங்கள்; அனந்த எல்லையற்றவரை; ஆசரித:- செயல்கள்; உபபன்னம் நிறைந்த; பாரீக்ஷிதம்—பரீட்சித்து மகாராஜனிடம் பேசப்பட்ட; பாகவத தூய பக்தர்களின்; அபிராமம் குறிப்பாக மிகப் பிரியமானவை.

தூய பக்தர்களுக்குப் பிரியமானதும், பரீட்சித்து மகாராஜனுக்கு உபதேசிக்கப்பட்டதும், பக்தி யோகம் நிறைந்ததும், தூய்மைப்படுத்துவதும், ஒப்பற்றதுமான அந்த எல்லையற்றவரின் கதைகளை தயவுசெய்து எங்களுக்குக் கூறுங்கள்.

பதம் 1.18.18
ஸூத உவாச
அஹோ வயம் ஜன்ம-ப்ருதோ ‘த்ய ஹாஸ்ம
வ்ருத்தானுவ்ருத்யாபி விலோம-ஜாதா:
தௌஷ்குல்யம் ஆதிம் விதுனோதி சீக்ரம்
மஹத்தமானாம் அபிதான-யோக:

ஸூத உவாச-சூத கோஸ்வாமி கூறினார்; அஹோ-எப்படி; வயம்—நாங்கள்; ஜன்ம-ப்ருத:-பிறப்பில் உயர்த்தப்பட்டவர்கள்; அத்ய-இன்று: ஹ- தெளிவாக; ஆஸ்ம-ஆகிவிட்டோம்; வ்ருத்த அனுவ்ருத்யா-அறிவில் முன்னேறியவர்களுக்குச் சேவை செய்வதால்; அபி-போதிலும்; விலோம-ஜாதா:-கலப்படமான ஜாதியில் பிறந்த; தௌஷ்குல்யம்-பிறப்பால் உண்டான தகுதியற்ற நிலை; ஆகிம்-துன்பங்கள்; விதுனோதி—தூய்மைப்படுத்துகிறது; சீக்ரம்- மிக விரைவில்; மஹத்-தமானாம் சிறந்தவர்களின்; அபிதான- உரையாடல்; யோக-சம்பந்தம்.

ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: பகவானே நாங்கள் கலப்படமான ஜாதியில் பிறந்திருந்தபோதிலும், உயர்ந்த அறிவைப் பெற்றிருப்பவர்களுக்குத் தொண்டு பின்பற்றுவதாலேயே பிறவிப் பயனை செய்து, அவர்களைப் அடைந்தவர்களாவோம். இத்தகைய மகான்களுடன் உரையாடுவதாலேயே இழிகுலத்தால் ஏற்படும் இழுக்கை ஒருவரால் உடனேயே தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும்.

பதம் 1.18.19
குத: புனர் க்ருணதோ நாம தஸ்ய
மஹத்தமைகாந்த-பராயணஸ்ய
யோ நந்த-சக்திர் பகவான் அனன்தோ
மஹத்-குணத்வாத் யம் அனந்தம் ஆஹு:

குத:- என்ன சொல்வது; புன:-மீண்டும்; க்ருணத:-பாடுபவர்; நாம-புனித நாமத்தை; தஸ்ய—அவரது : மஹத்தம- சிறந்த பக்தர்கள்: ஏகாந்த-பிரத்தியேக; பராயணஸ்ய-புகலிடம் கொண்டவரின்; ய: யாரொருவர்; அனந்த-தான் எல்லையற்றவராவார்; சக்தி: சக்தி; பகவான்-பரம புருஷர்; அனந்த:—அளவிட முடியாத; மஹத்- மிகச்சிறந்த; குணத்வாத்—அத்தகைய குணங்களினால்; யம்-யாரை; அனந்தம்—”அனந்தன்” எனும் பெயரால்; ஆஹு:—அழைக்கப்படுகிறார்.

மேலும் எல்லையற்ற சக்தியைக் கொண்டவரான எல்லையற்றவரின் புனித நாமத்தைப் பாடும் சிறந்த பக்தர்களுடைய வழிகாட்டலின் கீழ் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது? உன்னத குணங்களையும், சக்தியையும் அளவின்றி பெற்றிருப்பவரான பரம புருஷர் அனந்தன் (எல்லையற்றவர்) எனப்படுகிறார்.

பதம் 1.18.20
ஏதாவதாலம் நனு ஸுசிதேன
குணைர் அஸாம்யான திசாயனஸ்ய
ஹித்வேதரான் ப்ரார்தயதோ விபூதிர்
யஸ்யாங்ரி-ரேணும் ஜுஷதே ‘நபீப்ஸோ:

ஏதாவதா-இதுவரை; அலம்-தேவையில்லை; நனு- என்றால்; குணை:- குணங்களால்; அஸாம்ப- அளவிட முடியாத; அனதி சாயனஸ்ய-மிஞ்சப்படாதவரின்; ஹித் ஸுசிதேன-விவரணையால்; இதரான்—பிறர்; ப்ரார்தயத:-கேட்பவர்களின்; விபூதி-ஸ்ரீ தேவியின் அனுக்கிரகத்தை; யஸ்ய-யாருடைய; அங்ரி-பாதங்கள்: ரேணும்-தூசு; ஜுஷதே -சேவை செய்கிறார்; அன்பீப்ஸோ- விருப்பம் இல்லாதவரின்.

அவர் (பரம புருஷர்) எல்லையற்றவரென்றும், இணையானவர் யாருமில்லை என்றும் இப்பொழுது தீர்மானிக்கப் பட்டுள்ளது. எனவே யாராலும் அவரைப் பற்றி போதுமான அளவு விவரிக்க முடியாது. பிரார்த்தனைகள் செய்தும் ஸ்ரீதேவியான லக்ஷ்மியின் அனுகிரகத்தை சக்தி வாய்ந்த தேவர்களால் அடைய முடியவில்லை. ஆனால் இதே லக்ஷ்மி தேவியின் சேவையைப் பெறும் மனமில்லாதவராக பகவான் இருந்தபோதிலும், லக்ஷ்மி தேவி அவருக்குத் தொண்டு செய்து வருகிறாள்.

பதம் 1.18.21
அதாபி யத்-பாத-நகாவஸ்ருஷ்டம்
ஜகத் விரிஞ்சோபஹ்ருதார்ஹணாம்ப:
ஸேசம் புனாதி அன்யதமோ முகுந்தாத்
கோ நாம லோகே பகவத்பதார்த:

அத-எனவே: அபி-நிச்சயமாக; யத்-யாருடைய; பாத நக-பாத நகங்கள்: அவஸ்ருஷ்டம்-வெளிப்படும்; ஜகத்-முழு பிரபஞ்சத்தையும்; விரிஞ்ச:-பிரம்மதேவர்; உபஹ்ருத-சேகரித்தார்; அர்ஹண—வழிபாடு; அம்ப:-நீர்; ஸ—அதனுடன்; ஈசம்- சிவபெருமானை; புனாதி- தூய்மைப்படுத்துகிறது; அன்யதம:-வேறு யார்; முகுந்தாத்—பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரைத் தவிர; சு:-யார்; நாம- நாமம்; லோகே—உலகினுள்; பகவத்- பரம புருஷர்; பத- நிலை; அர்த – தகுதியுடைய.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைத் தவிர வேறு யாரால் பரம புருஷர் என்ற பெயருக்குத் தகுதியுடையவராக இருக்க முடியும்? சிவபெருமானை வணக்கத்துடன் வரவேற்று உபசரிப்பதற்காக, பிரம்மதேவர் பகவானின் பாத நகங்களிலிருந்து வெளிப்படும் நீரைச் சேகரித்து அவருக்குக் கொடுத்தார். இதே நீர் (கங்கை), சிவபெருமான் உட்பட முழு பிரபஞ்சத்தையும் தூய்மைப்படுத்துகிறது.

பதம் 1.18.22
யத்ரானுரக்தா: ஸஹஸைவ தீரா
வ்யபோஹ்ய தேஹாதிஷு ஸங்கம் ஊடம்
வ்ரஜந்தி தத் பாரம ஹம்ஸ்யம் அந்த்யம்
யஸ்மின் அஹிம்சோபசம: ஸ்வ தர்ம:

யத்ர-யாரிடம்; அனுரக்தா:-உறுதியான பற்றுக் கொண்டுள்ள; ஸஹஸா-திடீரென்று; ஏவ- நிச்சயமாக ; தீரா-புலனடக்கம் உள்ளவர்; வ்யபோஹ்ய-கைவிட்டு; தேஹ- ஸ்தூல உடலையும், சூட்சும மனதையும்; ஆகிஷு -சம்பந்தமான; ஸங்கம்—பற்று; ஊடம்- கொண்டு; வ்ரஜந்தி—செல்கின்றனர்; தத் -அந்த; பாரம-ஹம்ஸ்யம்- மிகவுயர்ந்த பூரணத்துவநிலை; அந்த்யம் — அதற்கும் அப்பால்;யஸ்மின்-எதில்; அஹிம்ஸா-அகிம்சை; உபசம:-மற்றும் துறவு; ஸ்வ தர்ம:—பயனாக கிடைக்கும் தொழில்.

பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரிடம் பற்றுக் கொண்டுள்ள தன்னடக்கம் உள்ளவர்களால், பௌதிக பற்று, ஸ்தூல உடல் மற்றும் சூட்சும மனம் ஆகியவற்றைக் கொண்ட உலகைத் திடீரென கைவிட்டு, எதனால் அகிம்சையையும், பற்றின்மையையும் பெற முடியுமோ அத்துறவு வாழ்வின் மிக உயர்ந்த பூரணத்துவத்தை அடைய முடியும்.

பதம் 1.18.23
அஹம் ஹி ப்ருஷ்டோ ‘ர்யமணோ பவத்பிர்
ஆசக்ஷ ஆத்மாவகமோ ‘த்ர யாவான்
நப: பதந்தி ஆத்ம-ஸமம் பதத்ரிணஸ்
ததா ஸமம் விஷ்ணு-கதிம் விபஸ்சித:

அஹம்- நான்; ஹி- நிச்சயமாக; ப்ருஷ்ட:- உங்களால் கேட்கப்பட்ட; அர்யமண-சூரியனைப் போல் சக்தி வாய்ந்த; பவத்பி-உங்களால்; ஆசக்ஷே-வர்ணிக்கிறேன்; ஆத்-அவகம:-என்னுடைய அறிவைப் பொறுத்தவரை; அத்ர-இங்கு ; யாவான்-அதுவரை; நப:- ஆகாயம்; பதந்தி—பறக்கின்றன; ஆத்ம ஸமம்- இயன்றவரை; பதத்ரிண:- பறவைகள்; ததா-இவ்வாறாக; ஸமம்-அதைப் போலவே ; விஷ்ணு-கதிம் விஷ்ணுவைப் பற்றிய அறிவு; விபஸ்சித: கற்றவர்களாக இருந்தபோதிலும்.

சூரியனைப் போல் தூய சக்தியைப் பெற்றுள்ள ரிஷிகளே, என் புத்திக்கெட்டிய வகையில் விஷ்ணுவின் திவ்ய லீலைகளை உங்களுக்கு விவரிக்க நான் முயற்சிக்கிறேன். பறவைகள் அவற்றின் சக்திக்கேற்ப ஆகாயத்தில் பறப்பதைப் போலவே, கற்றறிந்த பக்தர்களும் தங்களது தன்னுணர்வுக்கேற்ப பகவானைப் பற்றி விவரிக்கின்றனர்.

பதங்கள் 1.18.24 – 1.18.25
ஏகதா தனுர் உத்யம்ய விசரன் ம்ருகயாம் வனே
ம்ருகான் அனுகத: ஸ்ராந்த: க்ஷுதிதஸ் த்ருஷிடோ ப்ருசம்
ஜலாசயம் அசக்ஷாண : ப்ரவிவேச தம் ஆஸ்ரமம்
ததர்ச முனிம் ஆஸீனம் சாந்தம் மீலித- லோசனம்

ஏகதா-ஒரு சமயம்; தனு:-வில், அம்புகள்; உத்யம்ய-தாங்கி; விசரன்—பின்தொடர்ந்து; ம்ருகயாம் – மிருக வேட்டை; வனே -வனத்தில்; ம்ருகான்-மான்கள்; அனுகத:-பின்தொடரும் பொழுது; ஸ்ராந்த:-களைப்படைந்தார்; க்ஷுதித:-பசியாலும்; த்ருஷித-தாகத்தாலும்; ப்ருசம்-மிகவும்; ஜலஆசயம்—நீர்நிலையை; அச்க்ஷாண:- தேடி அலையும்பொழுது; ப்ரவிவேச-உட்பிரவேசித்தார்; தம்- அப்புகழ்பெற்ற; ஆஸ்ரமம்-சமீக ரிஷியின் ஆஷ்ரமம்; ததர்ச-கண்டார்; முனிம்-ரிஷி; ஆஸீனம்—அமர்ந்திருப்பதை; சாந்தம்- மௌனமாக; மீலித-மூடிய; லோசனம்—கண்கள்.

ஒரு சமயம் வில்லும், அம்புகளும் ஏந்தி காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த பரீட்சித்து மகாராஜன் மான்களைத் தொடர்ந்தோடி, பசியும், தாகமும் மேலிட மிகவும் களைப்படைந்தார். நீர்நிலையைத் தேடியலைந்த வேளையில், புகழ்பெற்ற சமீக ரிஷியின் ஆஷ்ரமத்துள் நுழைந்த அவர், ரிஷி மூடிய கண்களுடன் மெளனமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்.

பதம் 1.18.26
ப்ரதிருத்தேந்ரிய-ப்ராண-மனோ-புத்திம் உபாரதம்
ஸ்தான-த்ரயாத் பரம் ப்ராப்தம் ப்ரஹ்ம-பூதம் அவிக்ரியம்

பிரதிருத்த-பின்வாங்கப்பட்டு, இந்திரிய-புலனுறுப்புகள்: ப்ராண-சுவாசக்காற்று; மன:-மனம்; புத்திம்-புத்தி; உபாரதம்- ஒடுங்கிக் கிடந்தன: ஸ்தான—இடங்கள்; த்ரயாத்-மூன்றிலுமிருந்து: பரம்-உன்னத; ப்ராப்தம்—அடைந்திருந்தார்; ப்ரஹ்ம-பூதம்-தன்மையில் பூரணத்திற்கு இணையான; அவிக்ரியம்- பாதிப்படையாத.

முனிவரின் புலனுறுப்புகள், சுவாசம், மனம் மற்றும் புத்தி ஆகிய அனைத்தும் பௌதிகச் செயல்களிலிருந்து விடுபட்டிருந்தன. தன்மையில் பரிபூரணத்திற்கு இணையான ஒருன்னத நிலையை அவர் அடைந்திருந்ததால், (விழிப்பு, கனவு மற்றும் உணர்வற்ற நிலை ஆகிய) மூன்று நிலைகளுக்கு அப்பாற்பட்ட சமாதியில் அவர்நிலைபெற்றிருந்தார்.

பதம் 1.18.27
விப்ரகீர்ண-ஜடாச்சன்னம் ரௌரவேணா ஜினேன ச
விசுஷ்யத்தாலுர் உதகம் ததா-பூதம் அயாசத

விப்ரகீர்ண-சிதறிக் கிடந்த; ஜட-ஆச்சன்னம்—நீண்ட ஜடாமுடியால் மூடப்பட்டு; ரௌரவேண-மான் தோலால்; அஜினேன்-தோலால்; ச-மேலும்; விசுஷ்யத்-உலர்ந்துபோன; தாலு—தொண்டை; உதகம்- நீர்; ததா-பூதம் —அந்நிலையில்; அயாசத-கேட்டார்.

உடல் முழுவதும் ஜடாமுடி சிதறிக் கிடக்க, மான் தோலை அணிந்து தியானத்திலிருந்த முனிவரை நோக்கி, தாகத்தால் தொண்டை உலர்ந்து போன அரசர் குடிக்க நீர் கேட்டார்.

பதம் 1.18.28
அலப்த-த்ருண-பூமி-ஆதிர் அஸம்ப்ராப்தார்க்ய-ஸூன்ருத:
அவக்ஞாதம் இவாத்மானம் மன்யமானஸ் சுகோப ஹ

அலப்த—வரவேற்கப்படாததால்; த்ருண—புல்லாசனம்; இடம்; ஆதி:- முதலான; அஸம்ப்ராப்த முறையாக வரவேற்கப் பூமி படாமல்; அர்க்ய-அர்க்கியம்; சூன்றுத:- இனிய வார்த்தைகள்; அவக்ஞாதம்-இவ்வாறு அலட்சியம் செய்யப்பட்டு; இவ-அப்படி; ஆத்மானம்- தான்; மன்யமான — அவ்வாறெண்ணி; சுகோப- கோபமடைந்தார்; ஹ—அவ்வாறு.

வழக்கமாக அளிக்கப்படும் ஓர் ஆசனமோ, இடமோ, நீரோ அல்லது இனிய வார்த்தைகளோ அளிக்கப்படாததால், தான் அலட்சியம் செய்யப்பட்டதாக எண்ணிய அரசர் கோபமடைந்தார்.

பதம் 1.18.29
அபூத-பூர்வ: ஸஹஸா க்ஷுத்-த்ருட்ப்யாம் அர்திதாத்மன:
ப்ராஹ்மணம் ப்ரதி அபூத் ப்ரஹ்மன் மத்ஸரோ மன்யுர் ஏவ ச

அபூத-பூர்வ:-புதுமையானதாக இருந்தன; ஸஹஸா- சந்தர்ப்ப சூழ்நிலையால்; க்ஷுத்-பசி; திருடப்யாம்- தாகத்தாலும்; அர்தித- துன்பத்திற்கு உள்ளானதால்; ஆத்மன:- அவரை; பிராஹ்மணம்- ஒரு பிராமணருக்கு; ப்ரதி-எதிராக; அபூத்-ஆனார்; ப்ரஹ்மன்—ஓ பிராமணர்களே; மத்ஸர:- வெறுப்பும்; மன்யு:-கோபமும்; ஏவ- இவ்வாறு;ச-மேலும்.

ஓ பிராமணர்களே, அரசர் பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்பட்டிருந்ததால், பிராமண முனிவரிடம் அவர் கொண்ட கோபமும், வெறுப்பும் என்றுமில்லாத புதுமையாக இருந்தன.

பதம் 1.18.30
ஸ து ப்ரஹ்ம-ருஷேர் அம்ஸே கதாஸும் உரகம் ருஷா
வினிர்கச்சன் தனுஷ்-கோட்யா நிதாய புரம் ஆகத:

ஸ—அரசர்; து—ஆயினும்; ப்ரஹ்ம-ருஷே:-பிராமண முனிவரின்: அம்ஸே—கழுத்தில்; கத-அஸும்—செத்த; உரகம்-பாம்பு ; ரஷா-கோபத்தில்; வினிர்கச்சன்—வெளியேறும்பொழுது; தனுகோட்யாட- வில்லின் நுனியால்; நிதாய—அதைப் போட்டு; புரம்-அரண்மனைக்கு; ஆகத:-திரும்பினார்.

அப்படி அவமதிக்கப்பட்ட அரசர் வெளியேறும்பொழுது, வில்லின் நுனியால் ஒரு செத்த பாம்பை எடுத்து கோபத்துடன் அதை பிரம்மரிஷியின் கழுத்தில் போட்டார். பிறகு தமது அரண்மனைக்குத் திரும்பினார்.

பதம் 1.18.31
ஏஷ கிம் நிப்ருதாசேஷ-கரணோ மீலிதேக்ஷண:
ம்ருஷா-ஸமாதிர் ஆஹோஸ்வித் கிம் நு ஸ்யாத் க்ஷத்ர-பந்துபி:

ஏஷ்-இந்த; கிம்- என்ன; நிப்ருத-அசேஷ தியானநிலை; கரண:-புலன்கள்; மீலித – முடிய; ஈண:-கண்கள்; ம்ருஷா- பொய்யான; ஸமாதி:-சமாதி; ஆஹோ-இருக்கிறார்; ஸ்வித் -அது அப்படி இருக்குமானால்; கிம்-அல்லது; நு—ஆனால்; ஸ்யாத் இருக்கக்கூடும்; க்ஷத்ர-பந்துபி- தாழ்ந்த க்ஷத்திரியனால்.

திரும்பி வந்ததும், முனிவர் புலன்களடங்கி தியான நிலையில் கண்மூடியவரா அல்லது ஒரு தாழ்ந்த க்ஷத்திரியனால் ஆகவேண்டிய தென்ன என்று பொய் சமாதியிலிருப்பவரா என்று ஆழ்ந்து சிந்திக்கத் துவங்கினார்.

பதம் 1.18.32
தஸ்ய புத்ரோ ‘திதேஜஸ்வீ விஹரன் பாலகோ ‘ர்பகை:
ராஜ்னாகம் ப்ராபிதம் தாதம் ஸ்ருத்வா தத்ரேதம் அப்ரவீத்

தஸ்ய-அவரது (முனிவரின்); புத்ர:-மகன்; அதி-மிகவும்; தேஜஸ்வீ-சக்தி வாய்ந்த: விஹரன்-விளையாடும்பொழுது : பாலக- சிறுவர்களுடன்; அர்பகை:- குழந்தைத்தனமான; ராஜ்னா—அரசரால்; அகம் -துன்பம்; ப்ராபிதம்—அடையும்படி செய்யப்பட்ட; தாதம் -தந்தை; ஸ்ருத்வா—கேட்டதால்; தத்ர—அப்பொழுதே; இதம் – இங்ஙனம்; அப்ரவீத்—கூறினான்.

அந்த முனிவருக்கு ஒரு புத்திரன் இருந்தான். அவன் பிராமண புத்திரனென்பதால் மிகவும் சக்தி வாய்ந்தவனாக அனுபவமில்லாத சிறுவர்களுடன் விளையாடிக் இருந்தான். கொண்டிருந்த அவன், அரசரால் தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட பிழையைக் கேட்டு அப்பொழுதே இங்ஙனம் கூறினான்.

பதம் 1.18.33
அஹோ அதர்ம: பாலானாம் பீவ்னாம் பலி-புஜாம் இவ
ஸ்வாமினி அகம் யத் தாஸானாம் த்வார-பானாம் சுனாம் இவ

அஹோ-அதைப் பாருங்கள்; அதர்ம:- அதர்மம்; பாலானாம்- அரசர்களின்; பீவ்னாம்-வளர்க்கப்பட்டவளின்; பலிபுஜாம்- காக்கைகளைப் போல்; இவ-போன்று; ஸ்வாமினி— எஜமானருக்கு; அகம்- பாவம்; யத்—என்ன இருக்கிறது; தாஸானாம்-சேவகர்களின்; த்வார-பானாம்—வாசலைக் காக்கும்; சுனாம்—நாய்களை; இவ- போல்.

(பிராமண புத்திரனான ஸ்ருங்கி கூறினான்:) காக்கைகளையும், வாசற் காக்கும் நாய்களையும் போன்ற அரசர்களின் பாவச் செயல்களைப் பாருங்கள். சேவகர்களான இவர்கள் தாங்கள் பின்பற்ற வேண்டிய கொள்கைகளைக் கைவிட்டு தங்களுடைய எஜமானர்களுக்கு எதிராகவே பாவம் செய்ய முற்பட்டு விட்டனர்.

பதம் 1.18.34
ப்ராஹ்மணை: க்ஷத்ர-பந்துர் ஹி க்ருஹ-பாலோ நிரூபித:
ஸ கதம் தத்-க்ருஹே த்வா:ஸ்த: ஸபாண்டம் போக்தும் அர்ஹதி

ப்ராஹ்மணை:-பிராமண க்ஷத்திரியர்களின் மகன்கள்; பிரிவினரால்; ஹி- நிச்சயமாக;க்ஷத்ர-பந்து: க்ருஹ-பால: வாசற்காக்கும் நாய்; நிரூபித:-நியமிக்கப்பட்ட; ஸ-அவர்; கதம் எந்த உரிமையுடன்; தத்-க்ருஹே-அவரது (எஜமானரின்) வீட்டில்; த்வா:ஸ்தா:-வாயிலுடன் நிற்கும்; ஸ-பாண்டம் ஒரே பாத்திரத்தில்; போக்தும்-உண்ண; அர்ஹதி-தகுதி பெற்றுள்ளான்.

அரச பரம்பரையினர் வாசற்காக்கும் நாய்களாக நியமிக்கப் பட்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் வாயிலுடன் தங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாய், வீட்டில் நுழைந்து எஜமானருடன் ஒரே பாத்திரத்தில் உண்பதற்கு ஏது உரிமை?

பதம் 1.18.35
க்ருஷ்ணே கதே பகவதி சாஸ்தரி உத்பத-காமினாம்
தத் பின்ன-ஸேதூன் அத்யாஹம் சாஸ்மி பஸ்யத மே பலம்
க்ருஷ்ணே-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; கதே-இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டதால்; பகவதி-பரம புருஷர்; சாஸ்தரி-பரம ஆளுநர்; உத்பத-காமினாம்—திடீரென பதவிக்கு வந்தவர்களின்; தத்-பின்ன பிரிந்து சென்றதால்; ஸேதூன்—காவலர்; அத்ய-இன்று; அஹம் நான்; சாஸ்மி-தண்டிக்கப் போகிறேன்; பஸ்யத-பாருங்கள்; மே எனது; பலம்—பலத்தை.

பரம புருஷரும், பரம ஆளுநருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் புறப்பட்டுச் சென்றபின், நம்மைக் காப்பவர் இல்லாத இவ்வேளையில், திடீரென பதவிக்கு வந்துள்ள இவர்களின் கை ஓங்கியுள்ளது. எனவே அவர்களை இப்பொழுது நானே தண்டிக்கப் போகிறேன்; என் தவ வலிமையைப் பாருங்கள்.

பதம் 1.18.36
இதி உக்த்வா ரோஷ-தாம்ராக்ஷோ வயஸ்யான் ருஷி-பாலக:
கௌசிகி-ஆய உபஸ்ப்ருஸ்ய வாக்-வஜ்ரம் விஸஸர்ஜ ஹ

இதி—இவ்வாறு; உக்த்வா—கூறி; ரோஷ-தம்ர-அக்ஷ்:—கோபத்தால் சிவந்த கண்களுடன்; வயஸ்யான்—விளையாட்டுத் தோழர்களிடம்; ருஷி-பாலக:-ரிஷி புத்திரன்; கௌசிகி- கௌசிகி நதியின்; ஆப-நிரை; உபஸ்ப்ருஸ்ய- தொட்டு; வாக்- வார்த்தையான; வஜ்ரம்— வஜ்ராயுதத்தை (சாபத்தை); விஸஸர்ஜ—ஏவினான்; ஹ- கடந்த காலத்தில்.


ரிஷி புத்திரன், தோழர்களிடம் இப்படிக் கூறிவிட்டு, கோபத்தால் சிவந்த கண்களுடன், கௌசிகி நதியின் நீரைத் தொட்டு சொல்லாகிய வஜ்ராயுதத்தை (சாபத்தை) விடுத்தான்.

பதம் 1.18.37
இதி லங்கித-மர்யாதம் தக்ஷக: ஸப்தமே ‘ஹனி
தங்க்ஷ்யதி ஸ்ம குலாங் காரம் சோதிதோ மே தத-த்ருஹம்

இதி -இவ்வாறாக; லங்கித- மீறிய; மர்யாதம்- மரியாதையை; தக்ஷக:—தக்ஷகன் (ஸர்ப்ப ராஜன்); ஸப்தமே-ஏழாவது; அஹனி- நாளில்; தங்ஷ்யதி—கடிக்கும்; ஸ்ம- நிச்சயமாக; குல-அங்காரம்- குலத்தை அழித்த; சோதித:- செய்திருப்பதால்; மே- என்; ததத்ருஹம்- தந்தைக்குத் துரோகம்.

பிராமண புத்திரன் இவ்வாறு அரசரைச் சபித்தான்: ஒழுக்கவிதிகளை மீறி என் தந்தையை அவமதித்த, குலத் துரோகியை (பரீட்சித்து மகாராஜன்) இன்றிலிருந்து ஏழாவது நாள் ஸர்ப்ப ராஜன் (தக்ஷகன்) கடிக்கப் போகிறான்.

பதம் 1.18.38
ததோ ‘ப்யேத்யாஸ்ரமம் பாலோ கலே ஸர்ப-கலேவரம்
பிதரம் வீக்ஷ்ய துஹ்கார்தோ முக்த-கண்டோ ருரோத ஹ

தத:-அதன் பிறகு; அப்யேத்ய—நுழைந்தபின்; ஆஸ்ரமம் – ஆஷ்ரமத்தில்; பால:- சிறுவன்; கலே ஸர்ப- கழுத்திலிருந்த பாம்பை; கலேவரம்- உடல்; பிதரம்- தந்தையின்; வீக்ஷ்ய-கண்டதும்; துஹ்க ஆர்த:-துக்கம் பொங்கி வர; முக்த-கண்ட:-வாய்விட்டு; ரூரோத- அலறினான்; ஹ—கடந்த காலத்தில்.

பின் ஆஷ்ரமத்திற்குத் திரும்பிய அச்சிறுவன், தன் தந்தையின் கழுத்தில் பாம்பு கிடப்பதைக் கண்டு துக்கம் பொங்கி வர வாய்விட்டு அலறினான்.

பதம் 1.18.39
ஸ வா ஆங்கிரஸோ ப்ரஹ்மன் ஸ்ருத்வா ஸுத-விலாபனம்
உன்மீல்ய சனகைர் நேத்ரே திருஷ்ட்வா சாம்ஸே ம்ருதோரகம்

ஸ—அவர்; வை-கூட; ஆங்கிரஸ:—ஆங்கிரஸ குலத்தில் பிறந்தவரான அந்த ரிஷி: ப்ரஹ்மன்-சௌனகரே; ஸ்ருத்வா- கேட்டதும்; ஸுத— தன் புத்திரன்; விலாபனம்-துக்கத்தால் அலறுவதை; உன்மீல்ய-திறந்து; சனகை:-மெதுவாக; நேத்ரே-கண்களால்; த்ருஷ்ட்வா—கண்டு; ச-மேலும்; அம்ஸே- கழுத்தில்; ம்ருத-செத்த ; உரகம்—பாம்பு.

பிராமணர்களே, ஆங்கிரஸ முனியின் குலத்தவரான ரிஷி, தன் புத்திரனின் கூக்குரலைக் கேட்டு மெதுவாக கண்களைத் திறந்து தம் கழுத்தில் செத்த பாம்பு கிடப்பதைக் கண்டார்.

பதம் 1.18.40
விஸ்ருஜ்ய தம் ச பப்ரச்ச வத்ஸ கஸ்மாத் தி ரோதிஷி
கேன வா தே ‘பக்ருதம் இதி உக்த: ஸ ன்யவேதயத்

விஸ்ருஜ்ய-ஒருபுறம் எறிந்துவிட்டு; தம்- அதை: ச-மேலும், பப்ரச்ச- கேட்டார்; வத்ஸ-மகனே; கஸ்மாத்- எதற்காக; ஹி- கொண்ட; இதி- நிச்சயமாக; ரோதிஷி-அழும்; கேன-யாரால்: வா-இல்லையெனின்; தே—அவர்கள்; அபக்ருதம்- தவறாக நடந்து இவ்வாறு; உக்த:-கேட்டதும்; ஸ-சிறுவன்; ன்யவேதயத்- நிகழ்ந்ததைத் தெரிவித்தான்.

அவர் செத்த பாம்பை ஒருபுறம் எறிந்துவிட்டு, தன் மகனைப் பார்த்து அவன் அழுகைக்கு என்ன காரணம் என்றும், யாராவது அவனுக்குத் தீங்கிழைத்தார்களா என்றும் கேட்டார். இதைக் கேட்ட மகன் நிகழ்ந்ததை விளக்கிக் கூறினான்.

பதம் 1.18.41
நிசம்ய சப்தம் அதத் அர்ஹம் நரேந்தரம்
ஸ ப்ராஹ்மணோ நாத்மஜம் அப்யனந்தத்
அஹோ பதாம்ஹோ மஹத் அத்ய தே க்ருதம்
அல்பீயஸி த்ரோஹ உருர் தமோ த்ருத:

நிசம்ய- கேட்டபின்; சப்தம் – சபிக்கப்பட்டதை; அதத் அர்ஹம்-ஒருபோதும் தண்டிக்கப்படக்கூடாதவர்; நரஇந்தரம் மனிதரிலேயே மிகச்சிறந்தவரான அரசரை; ஸ்—அந்த; ப்ராஹ்மண்ட பிரம்மரிஷி; ந இல்லை; ஆத்-மஜம் அவரது சொந்த மகன்; அப்யனந்தத்-பாராட்டினார்; அஹோ-ஐயோ; பத-வருந்தத்தக்க; அம்ஹ:- பாவங்கள்; மஹத்-மிகப்பெரிய; அத்ய-இன்று தே-நீ; க்ருதம்—செய்துவிட்டாய்; அல்பீயஸி-சிறிய; த்ரோஹே-பிழை: உரு-மிகப்பெரிய; தம;- தண்டனை; த்ருத:-விதிக்கப்பட்டது.

மனித வர்க்கத்திலேயே மிகச்சிறந்தவரென்பதால், அவரை ஒருபோதும் தண்டித்திருக்கக் கூடாது என்றாலும், அவர் சபிக்கப்பட்டதைத் தன் மகனிடமிருந்து கேட்ட ரிஷி அவனுடைய செயலைப் பாராட்டவில்லை. மாறாக “ஐயோ எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்துவிட்டாய். சிறிய பிழைக்கு பெரிய தண்டனையை விதித்துவிட்டாயே” என்று கூறி வருந்தினார்.

பதம் 1.18.42
ந வை ந்ருபிர் நரதேவம் பராக்யம்
ஸம்மாதும்அர்ஹஸி அவிபக்வ-புத்தே
யத்-தேஜஸா துர்விஷஹேண குப்தா
வின்தந்தி பத்ராணி அகுதோபயா: ப்ரஜா:

வை-உண்மையில்; ந்ருபி:— எந்த மனிதனாலும் ; நரதேவம்-மனித தெய்வத்திற்கு; பரஆக்யம்—உன்னத மானவரான; ந-ஒருபோதும் கூடாது; ஸம்மாதும்- சமமானவராக கருதுதல்; அர்ஹஸி- பராக்கிரமத்தால்; அவிபக்வ-பக்குவப்படாத; புத்தே-புத்தி; யத்- எவரின்; தேஜஸா-பராக்கிரமத்தால்;துர்விஷஹேண_மிஞ்ச முடியாத: குப்தான்- பாதுகாக்கப்பட்டு; விந்தந்தி—அனுபவிக்கின்றனர்; பத்ராணி- எல்லா செழிப்புக்களையும்; அகுத-பயா:- முற்றிலும் பாதுகாக்கப்பட்டு;
ப்ரஜா:-பிரஜைகள்.

பக்குவப்படாத புத்தியுடையவனே, மனிதர்களிலேயே மிகச்சிறந்தவரான அரசர் பரம புருஷருக்குச் சமமானவர் என்பதை நீ அறியவில்லை. சாதாரண மனிதனுக்குச் சமமாக அவரை எண்ணுதல் கூடாது. மிஞ்ச முடியாத அவரது பராக்கிரமத்தினால் பாதுகாக்கப்படுவதால்தான் பிரஜைகள் செழிப்புடன் வாழ்கின்றனர்.

பதம் 1.18.43
அலக்ஷ்யமாணே நர-தேவ-நாம்னி
ரதாங்க-பாணாவ் அயம் அங்க லோக:
ததா ஹி சௌர-பிரசுரோ வினங்க்ஷ்யதி
அரக்ஷ்யமாணோ ‘விவரூதவத் க்ஷணாத்

அலக்ஷ்யமாணே—அழிக்கப்பட்டு; நரதேவ—அரசாட்சி; நாம்னி- பெயரின்; ரத-அங்க பாணௌ—பகவானின் பிரதிநிதி; அயம்— இந்த; அங்க-மகனே; லோக-இவ்வுலகம்; ததாஹி_உடனே; சௌர—திருடர்கள்; ப்ரசுர:—அளவுக்கதிகமான; வினங்க்ஷ்யதி- முறியடிக்கின்றனர்; அரக்ஷ்யமாண:—பாதுகாக்கப்படாததால்: அவி வரூத-வத்-ஆட்டுக்குட்டிகளைப் போல்; க்ஷணாத்— உடனே.

மகனே, ஏகாதிபத்திய ஆட்சிமுறையானது, தேர்ச் சக்கரத்தை ஏந்தியவரான பகவானைப் பிரதிபலிக்கிறது. இந்த ஆட்சிமுறை அழிக்கப்படும் போது, உலகில் திருடர்கள் நிறைந்து விடுகின்றனர். இவர்கள், கலைந்து சென்ற ஆட்டுக்குட்டிகளைப் போல், பாதுகாப்பற்ற பிரஜைகளை உடனே முறியடித்து விடுகின்றனர்.

பதம் 1.18.44
தத் அத்ய ந: பாபம் உபைதி அனன்வயம்
யன் நஷ்ட-நாதஸ்ய வஸோர் விலும்பகாத்
பரஸ்பரம் க்னந்தி சபந்தி வ்ருஞ்ஜதே
பசூன் ஸ்த்ரியோ ‘ர்தான் புரு தஸ்யவோ ஜனா:

தத்-இக்காரணத்தினால்; அத்ய-இன்றிலிருந்து: ந:- நம்மீது: பாபம்- பாவ விளைவுகள்; உபைதி—கைப்பற்றுவார்கள்; அவன்வயம்—பிளவு; யத்- ஏனெனில்;நஷ்ட-அழிக்கப்படுகிறது: நாதஸ்ய- அரசரின்; வஸோ-செல்வத்தின்; விலும்பகாத்- கொள்ளையடிக்கப்பட்டு: பரஸ்பரம்-ஒருவரையொருவர்; க்னந்தி-கொல்வர்; சபந்தி- தீங்கிழைப்பர்; வ்ருஞ்ஜதே- திருடுவர்; பசூன்—மிருகங்களை; ஸ்த்ரிய:—பெண்களை; அர்தான்—பொருட்களை; புரு—அதிகமான; தஸ்யவ:–திருடர்கள்; ஜனா:-பாமர மக்கள்.

அரசாட்சியின் முடிவாலும், மக்களின் செல்வம் திருடர்களாலும் அயோக்கியர்களாலும் கொள்ளையடிக்கப்படுவதாலும், பெரும் சமூகப் பிளவுகள் ஏற்படும். மக்கள் ஒருவரையொருவர் கொல்வர். மிருகங்களையும், பெண்களையும் அபகரிப்பர். இந்த பாவங்களுக்கெல்லாம் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

பதம் 1.18.45
ததார்ய தர்ம: ப்ரவிலீயதே ந்ருணாம்
வர்ணாஸ்ரமாசார யுதஸ் த்ரயீமய:
ததோ ‘ர்த காமாபினிவேசிதாத்மனாம்
கனாம் கபீனாம் இவ வர்ண ஸங்கர:

ததா-அப்பொழுது; ஆர்ய- நாகரிக முன்னேற்றம்; தர்ம:-ஈடுபாடு; ப்ரவிலியதே -அழிக்கப்பட்டு விடுகிறது; ந்ருணாம்-மனித வர்க்கத்தின்; வர்ணா-ஜாதி: ஆஸ்ரம-ஆன்மீகப் பிரிவுகள்: ஆசார-யுத:-நன்கு அமைக்கப்பட்டிருந்த; த்ரயீ-மய:-வேத கட்டளைப்படி; தத:- அதன் பிறகு; அர்த-பொருளாதார முன்னேற்றம்; காம-அபினிவேசித-புலன் நுகர்வில் முழுமையாக ஆழ்ந்துள்ள; ஆத்மனாம்-மக்களின்; சுனாம்— நாய்களைப் போன்றும்; கபீனாம்- குரங்குகளைப் போன்றதும்; இவ- இவ்வாறாக; வர்ண – ஸங்கர:- தேவையற்ற ஜனத்தொகை.

அப்போது நாகரிக முன்னேற்றப் பாதையிலிருந்து பொதுமக்கள் சரிந்து விடுவார்கள். இதனால் வேதக் கட்டளைகளும், வர்ணாஸ்ரம முறைப்படியான கடமைகளும் சீரழிந்துவிடும். இவ்வாறு புலன் நுகர்வை நோக்கமாகக் கொண்ட பொருளாதார முன்னேற்றத்தால் அவர்கள் அதிகமாக கவரப்படுவார்கள். இதன் பலனாக நாய், குரங்குகளின் தரத்திலுள்ள தேவையற்ற ஜனத்தொகை உற்பத்தியாகும்.

பதம் 1.18.46
தர்ம-பாலோ நர-பதி: ஸ து ஸம்ராட் ப்ருஹச்-ச்ரவா:
ஸாக்ஷான் மஹா-பாகவதோ ராஜர்ஷிர் ஹயமேதயாட்
க்ஷுத்-த்ருட்-ஸ்ரம-யுதோ தீனோ நைவாஸ்மச் சாபம் அர்ஹதி

தர்மபால: சமய காவலர்; நரபதி- அரசர்; ஸ-அவர்; து-ஆனால்; ஸம்ராட்-சக்கரவர்த்தி; ப்ருஹத்-உயர்வாக; ஸ்ரவா- போற்றப்படுபவர்; ஸாக்ஷாத்- நேரடியாக ; மஹா பாகவத: -பகவானின் முதல்தரமான பக்தர்; ராஜருஷி:-ராஜரிஷி; ஹய-மேதயாட்—அஸ்வமேத யாகங்களைச் செய்தவர்; க்ஷுத்—பசி; த்ருட் -தாகம்; ஸ்ரமயுத:-பீடிக்கப்பட்ட; தீன:-களைப்படைந்த; ந- ஒருபோதும் இல்லை; ஏவ-இவ்வாறு ; அஸ்மத்-நம்முடைய; சாபம்—சாபத்திற்கு; அர்ஹதி—தகுதியுடையவர்.

பரீட்சித்து மகாராஜன் பரம புருஷரின் முதல்தரமான பக்தரும், பெரும் புகழ்பெற்றவரும், பக்தியுள்ள ஓர் அரசருமாவார். ராஜரிஷியான அவர் பல அஸ்வமேத யாகங்களைச் செய்திருக்கிறார். பசியாலும், தாகத்தாலும் களைப்படைந்திருந்த அவர் ஒருக்காலும் நமது சாபத்துக்கு உரியவராகார்.

பதம் 1.18.47
அபாபேஷு ஸ்வ-ப்ருத்யேஷு பாலேனாபக்வ-புத்தினா
பாபம் க்ருதம் தத் பகவான் ஸர்வாத்மா க்ஷந்தும் அர்ஹதி

அபாபேஷு- எல்லா பாவங்களிலிருந்தும் முற்றிலும் விடுபட்டு உள்ளவருக்கு; ஸ்வ-ப்ருத்யேஷு-கீழ்ப்படிந்தவரும், பாதுகாக்கப்பட வேண்டியவருமான ஒருவருக்கு; பாலேன-பாலகனால்; அபக்வ- பக்குவமடையாத; புத்தினா-புத்தியால்; பாபம் -பாவச் செயல்; க்ருதம்— செய்யப்பட்டது; தத் பகவான்-எனவே பரம புருஷர்; ஸர்வ ஆத்மா-எங்கும் வியாபித்திருப்பவரான; க்ஷந்தும்—மன்னித்தருள; அர்ஹதி- தகுதியுள்ள.

பிறகு, எல்லா பாவங்களிலிருந்தும் முற்றிலும் விடுபட்டவரும் பணிவுள்ளவரும், பாதுகாக்கத் தகுந்தவருமான ஒருவரைச் சபித்து பெரும் பாவத்தைச் செய்துவிட்ட பக்குவமில்லாத புத்தியுடைய சிறுவனை, எங்கும் நிறைந்திருப்பவரான பரம புருஷர் மன்னித்தருள வேண்டும் என்று நிஷி வேண்டினார்.

பதம் 1.18.48
திரஸ்க்ருதா விப்ரலப்தா: சப்தா: க்ஷிப்தா ஹதா அபி
நாஸ்ய தத் ப்ரதிகுர்வந்தி தத்-பக்தா: ப்ரபவோ

திர-க்ருதா-நிந்திக்கப்படினும்; விப்ரலப்தா:-வஞ்சிக்கப்படினும்; சப்தா:-சபிக்கப்படினும்; க்ஷிப்தா— அலட்சியத்தால் தொல்லைப் படுத்தப்படினும்; ஹதா—அல்லது கொல்லப்படினும்; அபி—தவிரவும்; ந- ஒருபோதும் இல்லை; அஸ்ய-இச்செயல்களுக்கெல்லாம்; தத்— அவற்றை ; ப்ரதிகுர்வந்தி—எதிர்த் தாக்குதல்; தத்—பகவானின்; பக்தா- பக்தர்கள்; ப்ரபவ:- சக்தி படைத்தவர்கள்; அபி-என்றபோதிலும்; ஹி- நிச்சயமாக.

பகவத் பக்தர்கள் மிகவும் பொறுமைசாலிகள் என்பதால், நிந்திக்கப்படினும், வஞ்சிக்கப்படினும், சபிக்கப்படினும், தொந்தரவு செய்யப்படினும், அலட்சியப்படுத்தப்படினும் அல்லது கொல்லப்படினும், அதைத் திருப்பிச் செய்வதில்லை.

பதம் 1.18.49
இதி புத்ரக்ருதாகேன ஸோ ‘நுதப்தோ மஹா-முனி:
ஸ்வயம் விப்ரக்ருதோ ராஜ்னா நைவாகம் தத் அசிந்தயத்

இதி -இவ்வாறு; புத்ர—மகன்; க்ருத-செய்யப்பட்ட; அகேன்- பாவத்தால்; ஸ:-அவர் (ரிஷி); அநுதப்த:-வருத்தப்பட்டு; மஹா முனி:- மாமுனிவர்; ஸ்வயம்- சுயமாக; விப்ரக்ருத:- இவ்வாறு அவமானப்படுத்தப்பட்டு; ராஜ்னா—அரசரால்; ந-இல்லை; ஏவ- நிச்சயமாக; அகம்-பாவம்; தத்-அந்த; அசிந்தயத்—அதைப் பற்றி சிந்தித்தார்.

இவ்வாறு புத்திரன் செய்த பாவத்தால் வருத்தமடைந்த மாமுனிவர், அரசர் செய்த பிழையை முக்கியமாக எடுத்துக் கொள்ளவில்லை.

பதம் 1.18.50
ப்ராயச: ஸாதவோ லோகே பரைர் த்வந்வேஷு யோஜிதா
ந வ்யதந்தி ந ஹ்ருஷ்யந்தி யத ஆத்மா ‘குணாஸ்ரய:

ப்ராயச- பொதுவாக; ஸாதவ- ஆன்மீகவாதிகள்; லோகே — இவ்வுலகில்; பரை:-பிறரால்; த்வந்வேஷு-இருமையில்; யோஜிதா- ஈடுபட்டு; ந-ஒருபோதும் இல்லை; வ்யதந்தி—துன்புறுவதோ; ந— அல்லது; ஹ்ருஷ்யந்தி-இன்புறுவதோ; யத—ஏனெனில்; ஆத்மா- ஆத்மா; அகுண- ஆஸ்ரய:-குணத்திற்கு அப்பாற்பட்டது.

பொதுவாக ஆன்மீகிகள் உன்னதமான செயல்களில்ஈடுபட்டிருப்பதால், பிறரால் ஜடவுலக இருமைகளில் ஈடுபடுத்தப் பட்டபோதிலும் அவர்கள் துன்புறுவதோ அல்லது இன்புறுவதோ இல்லை.


ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “பிராமணச் சிறுவனால் பரீட்சித்து சபிக்கப்படுதல்” எனும் தலைப்பைக் கொண்ட பதினெட்டாம் அத்தியாயத்திற்கான இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare