அத்தியாயம் – 18
பிராமணச் சிறுவனால் பரீட்சித்து சபிக்கப்படுதல்
பதம் 1.18.1 : ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: தமது தாயின் கருப்பைக்குள் இருந்த பரீட்சித்து மகாராஜன், துரோணருடைய மகனின் ஆயுதத்தால் தாக்கப்பட்டபோதிலும், அற்புதமாக செயற்படுபவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையால், எரிக்கப்பட முடியாதவராக இருந்தார்.

பதம் 1.18.2 : மேலும், பரீட்சித்து மகாராஜன் எப்பொழுதும் மணமறிந்து பரம புருஷரிடம் சரணடைந்தவராக இருந்தார். எனவே ஒரு பிராமண சிறுவனுடைய கோபத்தினால் தன்னை ஒரு நாகம் தீண்டப் போகிறது என்பதை அறிந்த அவர் அச்சமோ, கலக்கமோ அடையவில்லை.

பதம் 1.18.3 : மேலும், அவரது சகாக்களை எல்லாம் விட்டுப் பிரிந்தபின், அரசர் வியாசரின் புதல்வரிடம் (சுகதேவ கோஸ்வாமி) ஒரு சீடராக சரணமடைந்தார். இவ்வாறாக பரம புருஷரின் உண்மையான நிலையை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.

பதம் 1.18.4 : இது உண்மை, ஏனெனில், யாரைப் பற்றி வேத மந்திரங்கள் பாடுகின்றனவோ, அப்பரம புருஷரின் உன்னதமான கதைகளைக் கேட்பதில் தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும், பகவானின் தாமரைப் பாதங்களை இடையறாது நினைப்பதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் மரண காலத்திலும் மதிமயக்கம் ஏற்படாது.

பதம் 1.18.5 : அபிமன்யுவின் சிறந்த, சக்தி வாய்ந்த மகன் உலகப் பேரரசராக இருக்கும்வரை, கலி புருஷன் செழிப்படைய வாய்ப்பில்லை.

பதம் 1.18.6 : பரம புருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த பூமியை விட்டுச் சென்ற அதே நாளில், அக்கணமே, எல்லா அதர்மச் செயல்களையும் தூண்டும் கலி புருஷன் இவ்வுலகினுள் பிரவேசித்தான்.

பதம் 1.18.7 : இக்கலியுகத்தில் புண்ணியங்கள் உடனே நல்ல பலன்களை அளிக்கின்றன. ஆனால் பாவங்கள் அப்படியல்லாமல் செய்யப்பட்ட பின்னரே பயனளிக்கின்றன. எனவே பரீட்சித்து மகாராஜன் தேனீயைப் போன்று சாரத்தை மட்டுமே கிரகிக்கும் தெளிந்த மனதுடையவர் என்பதால் கலி புருஷனை அவர் ஒருபோதும் பகைக்கவில்லை.

பதம் 1.18.8 : குறைந்த அறிவுடையவர்கள், கலி புருஷனை மிகவும் சக்தி வாய்ந்தவனாக உணரக்கூடும், ஆனால் புலனடக்கம் உள்ளவர்கள் அஞ்சுவதற்கு இதில் ஒன்றுமில்லை என்று பரீட்சித்து மகாராஜன் கருதினார். புலியைப் போல் சக்தி வாய்ந்தவராக இருந்த அரசர் முட்டாள்களையும், அஜாக்கிரதையாக இருந்தவர்களையும் கவனித்துக் கொண்டார்.

பதம் 1.18.9 : முனிவர்களே, நீங்கள் என்னிடமிருந்து புண்ணியவானாகிய பரீட்சித்து மகாராஜனின் கேட்டதுபோலவே, சரித்திரத்துடன் பற்றி தொடர்புடைய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகளைப் பற்றி கிட்டத்தட்ட அனைத்தையுமே இப்பொழுது நான் விவரித்துள்ளேன்.

பதம் 1.18.10 : வாழ்வில் முழு பூரணத்துவத்தை அடைய விரும்புபவர்கள், அற்புதமாக செயற்படுபவரான பரம புருஷரின் திவ்யமான செயல்கள் மற்றும் குணங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய விஷயங்களையும் அடக்கத்துடன் கேட்க வேண்டும்.

பதம் 1.18.11 : நல்லோரான முனிவர்கள் கூறினர்: சூத கோஸ்வாமியே பரம புருஷரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் செயல்களைப் பற்றி தாங்கள் மிக நன்றாகப் பேசுகிறீர்கள். எனவே தாங்கள் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம். எங்களைப் போன்ற மடியக்கூடிய ஜீவன்களுக்கு இது அமுதத்தைப் போலவே உள்ளது.

பதம் 1.18.12 : எங்களுடைய செயலில் பல குறைகள் இருப்பதால், அதன் பலனைப் பற்றிய நிச்சயம் இல்லாமலேயே, பலன்நோக்குக் கருமமாகிய இந்த யாகத் தீயை இப்பொழுது நாங்கள் எங்களது உடல்கள் புகையால் கருமை அடைந்துள்ளன. ஆனால் தாங்கள் விநியோகிக்கும், ஆரம்பித்திருக்கிறோம். பரம் புருஷராகிய கோவிந்தனுடைய தாமரைப் பாதங்களின் அமுதத்தினால் உண்மையாகவே நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

பதம் 1.18.13 : பகவத் பக்தருடன் கொள்ளும் கணநேர தொடர்பின் மதிப்பை, ஸ்வர்க லோகங்களை அடைவதுடனோ அல்லது பௌதிகத்திலிருந்து முக்தியடைவதுடனோ கூட ஒப்பிட முடியாது. எனவே இறக்கப் போகும் மக்களுக்குரியதான, பெளதிக செழுமை எனும் உலகாயத நன்மைகளைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது?

பதம் 1.18.14 : பரம் புருஷரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே (கோவிந்தன்), மிகச்சிறந்த ஜீவராசிகளுக்கும் தனிப்பட்ட புகலிடமாக விளங்குகிறார். அவரது திவ்யமான இயற்கைக் குணங்களை சிவபெருமானையும், பிரம்மதேவரையும் போன்ற யோக சக்திகளின் தலைவர்களாலும் கூட அளவிட முடியாது. அமுதத்தை (ரஸத்தை) சுவைப்பதில் கைதேர்ந்த ஒருவரால், அவரைப் பற்றிய செய்திகளைக் கேட்டு எப்பொழுதாவது முழுமையாகத் திருப்தியடைய முடியுமா?

பதம் 1.18.15 : சூத கோஸ்வாமியே, பரம புருஷர் தங்களுடைய வழிபாட்டிற்குரிய முக்கிய பொருளாக இருப்பதால், தாங்கள் சிறந்த அறிஞராகவும், பகவானின் தூய பக்தராகவும் விளங்குகிறீர்கள். எனவே பெளதிக கருத்துகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பகவானின் லீலைகளைப் பற்றி கேட்டறிய நாங்கள் ஆவல் கொண்டிருப்பதால், தயவுகூர்ந்து அவற்றை விவரிக்க வேண்டுகிறோம்.

பதம் 1.18.16 : ஓ சூத கோஸ்வாமி, வியாச புத்திரரால் (ஸ்ரீல சுகதேவர்) பகவானைப் பற்றி பேசப்பட்ட எந்த விஷயத்தைக் கேட்டு, பரீட்சித்து மகாராஜனின் புத்தி முக்தியில் நிலைபெற்று, பறவை ராஜனான கருடனின் புகலிடமான, பகவானின் தாமரைப் பாதங்களை அவர் அடைந்தாரோ, அவ்விஷயங்களைப் பற்றி தயவுசெய்து விளக்கிக் கூறுங்கள்.

பதம் 1.18.17 : தூய பக்தர்களுக்குப் பிரியமானதும், பரீட்சித்து மகாராஜனுக்கு உபதேசிக்கப்பட்டதும், பக்தி யோகம் நிறைந்ததும், தூய்மைப்படுத்துவதும், ஒப்பற்றதுமான அந்த எல்லையற்றவரின் கதைகளை தயவுசெய்து எங்களுக்குக் கூறுங்கள்.

பதம் 1.18.18 : ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: பகவானே நாங்கள் கலப்படமான ஜாதியில் பிறந்திருந்தபோதிலும், உயர்ந்த அறிவைப் பெற்றிருப்பவர்களுக்குத் தொண்டு பின்பற்றுவதாலேயே பிறவிப் பயனை செய்து, அவர்களைப் அடைந்தவர்களாவோம். இத்தகைய மகான்களுடன் உரையாடுவதாலேயே இழிகுலத்தால் ஏற்படும் இழுக்கை ஒருவரால் உடனேயே தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும்.

பதம் 1.18.19 : மேலும் எல்லையற்ற சக்தியைக் கொண்டவரான எல்லையற்றவரின் புனித நாமத்தைப் பாடும் சிறந்த பக்தர்களுடைய வழிகாட்டலின் கீழ் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது? உன்னத குணங்களையும், சக்தியையும் அளவின்றி பெற்றிருப்பவரான பரம புருஷர் அனந்தன் (எல்லையற்றவர்) எனப்படுகிறார்.

பதம் 1.18.20 : அவர் (பரம புருஷர்) எல்லையற்றவரென்றும், இணையானவர் யாருமில்லை என்றும் இப்பொழுது தீர்மானிக்கப் பட்டுள்ளது. எனவே யாராலும் அவரைப் பற்றி போதுமான அளவு விவரிக்க முடியாது. பிரார்த்தனைகள் செய்தும் ஸ்ரீதேவியான லக்ஷ்மியின் அனுகிரகத்தை சக்தி வாய்ந்த தேவர்களால் அடைய முடியவில்லை. ஆனால் இதே லக்ஷ்மி தேவியின் சேவையைப் பெறும் மனமில்லாதவராக பகவான் இருந்தபோதிலும், லக்ஷ்மி தேவி அவருக்குத் தொண்டு செய்து வருகிறாள்.

பதம் 1.18.21 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைத் தவிர வேறு யாரால் பரம புருஷர் என்ற பெயருக்குத் தகுதியுடையவராக இருக்க முடியும்? சிவபெருமானை வணக்கத்துடன் வரவேற்று உபசரிப்பதற்காக, பிரம்மதேவர் பகவானின் பாத நகங்களிலிருந்து வெளிப்படும் நீரைச் சேகரித்து அவருக்குக் கொடுத்தார். இதே நீர் (கங்கை), சிவபெருமான் உட்பட முழு பிரபஞ்சத்தையும் தூய்மைப்படுத்துகிறது.

பதம் 1.18.22 : பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரிடம் பற்றுக் கொண்டுள்ள தன்னடக்கம் உள்ளவர்களால், பௌதிக பற்று, ஸ்தூல உடல் மற்றும் சூட்சும மனம் ஆகியவற்றைக் கொண்ட உலகைத் திடீரென கைவிட்டு, எதனால் அகிம்சையையும், பற்றின்மையையும் பெற முடியுமோ அத்துறவு வாழ்வின் மிக உயர்ந்த பூரணத்துவத்தை அடைய முடியும்.

பதம் 1.18.23 : சூரியனைப் போல் தூய சக்தியைப் பெற்றுள்ள ரிஷிகளே, என் புத்திக்கெட்டிய வகையில் விஷ்ணுவின் திவ்ய லீலைகளை உங்களுக்கு விவரிக்க நான் முயற்சிக்கிறேன். பறவைகள் அவற்றின் சக்திக்கேற்ப ஆகாயத்தில் பறப்பதைப் போலவே, கற்றறிந்த பக்தர்களும் தங்களது தன்னுணர்வுக்கேற்ப பகவானைப் பற்றி விவரிக்கின்றனர்.

பதங்கள் 1.18.24 – 1.18.25: ஒரு சமயம் வில்லும், அம்புகளும் ஏந்தி காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த பரீட்சித்து மகாராஜன் மான்களைத் தொடர்ந்தோடி, பசியும், தாகமும் மேலிட மிகவும் களைப்படைந்தார். நீர்நிலையைத் தேடியலைந்த வேளையில், புகழ்பெற்ற சமீக ரிஷியின் ஆஷ்ரமத்துள் நுழைந்த அவர், ரிஷி மூடிய கண்களுடன் மெளனமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்.

பதம் 1.18.26 : முனிவரின் புலனுறுப்புகள், சுவாசம், மனம் மற்றும் புத்தி ஆகிய அனைத்தும் பௌதிகச் செயல்களிலிருந்து விடுபட்டிருந்தன. தன்மையில் பரிபூரணத்திற்கு இணையான ஒருன்னத நிலையை அவர் அடைந்திருந்ததால், (விழிப்பு, கனவு மற்றும் உணர்வற்ற நிலை ஆகிய) மூன்று நிலைகளுக்கு அப்பாற்பட்ட சமாதியில் அவர்நிலைபெற்றிருந்தார்.

பதம் 1.18.27 : உடல் முழுவதும் ஜடாமுடி சிதறிக் கிடக்க, மான் தோலை அணிந்து தியானத்திலிருந்த முனிவரை நோக்கி, தாகத்தால் தொண்டை உலர்ந்து போன அரசர் குடிக்க நீர் கேட்டார்.

பதம் 1.18.28 : வழக்கமாக அளிக்கப்படும் ஓர் ஆசனமோ, இடமோ, நீரோ அல்லது இனிய வார்த்தைகளோ அளிக்கப்படாததால், தான் அலட்சியம் செய்யப்பட்டதாக எண்ணிய அரசர் கோபமடைந்தார்.

பதம் 1.18.29 : ஓ பிராமணர்களே, அரசர் பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்பட்டிருந்ததால், பிராமண முனிவரிடம் அவர் கொண்ட கோபமும், வெறுப்பும் என்றுமில்லாத புதுமையாக இருந்தன.

பதம் 1.18.30 : அப்படி அவமதிக்கப்பட்ட அரசர் வெளியேறும்பொழுது, வில்லின் நுனியால் ஒரு செத்த பாம்பை எடுத்து கோபத்துடன் அதை பிரம்மரிஷியின் கழுத்தில் போட்டார். பிறகு தமது அரண்மனைக்குத் திரும்பினார்.

பதம் 1.18.31 : திரும்பி வந்ததும், முனிவர் புலன்களடங்கி தியான நிலையில் கண்மூடியவரா அல்லது ஒரு தாழ்ந்த க்ஷத்திரியனால் ஆகவேண்டிய தென்ன என்று பொய் சமாதியிலிருப்பவரா என்று ஆழ்ந்து சிந்திக்கத் துவங்கினார்.

பதம் 1.18.32 : அந்த முனிவருக்கு ஒரு புத்திரன் இருந்தான். அவன் பிராமண புத்திரனென்பதால் மிகவும் சக்தி வாய்ந்தவனாக அனுபவமில்லாத சிறுவர்களுடன் விளையாடிக் இருந்தான். கொண்டிருந்த அவன், அரசரால் தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட பிழையைக் கேட்டு அப்பொழுதே இங்ஙனம் கூறினான்.

பதம் 1.18.33 : (பிராமண புத்திரனான ஸ்ருங்கி கூறினான்:) காக்கைகளையும், வாசற் காக்கும் நாய்களையும் போன்ற அரசர்களின் பாவச் செயல்களைப் பாருங்கள். சேவகர்களான இவர்கள் தாங்கள் பின்பற்ற வேண்டிய கொள்கைகளைக் கைவிட்டு தங்களுடைய எஜமானர்களுக்கு எதிராகவே பாவம் செய்ய முற்பட்டு விட்டனர்.

பதம் 1.18.34 : அரச பரம்பரையினர் வாசற்காக்கும் நாய்களாக நியமிக்கப் பட்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் வாயிலுடன் தங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாய், வீட்டில் நுழைந்து எஜமானருடன் ஒரே பாத்திரத்தில் உண்பதற்கு ஏது உரிமை?

பதம் 1.18.35 : பரம புருஷரும், பரம ஆளுநருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் புறப்பட்டுச் சென்றபின், நம்மைக் காப்பவர் இல்லாத இவ்வேளையில், திடீரென பதவிக்கு வந்துள்ள இவர்களின் கை ஓங்கியுள்ளது. எனவே அவர்களை இப்பொழுது நானே தண்டிக்கப் போகிறேன்; என் தவ வலிமையைப் பாருங்கள்.

பதம் 1.18.36 : ரிஷி புத்திரன், தோழர்களிடம் இப்படிக் கூறிவிட்டு, கோபத்தால் சிவந்த கண்களுடன், கௌசிகி நதியின் நீரைத் தொட்டு சொல்லாகிய வஜ்ராயுதத்தை (சாபத்தை) விடுத்தான்.

பதம் 1.18.37 : பிராமண புத்திரன் இவ்வாறு அரசரைச் சபித்தான்: ஒழுக்கவிதிகளை மீறி என் தந்தையை அவமதித்த, குலத் துரோகியை (பரீட்சித்து மகாராஜன்) இன்றிலிருந்து ஏழாவது நாள் ஸர்ப்ப ராஜன் (தக்ஷகன்) கடிக்கப் போகிறான்.

பதம் 1.18.38 : பின் ஆஷ்ரமத்திற்குத் திரும்பிய அச்சிறுவன், தன் தந்தையின் கழுத்தில் பாம்பு கிடப்பதைக் கண்டு துக்கம் பொங்கி வர வாய்விட்டு அலறினான்.

பதம் 1.18.39 : பிராமணர்களே, ஆங்கிரஸ முனியின் குலத்தவரான ரிஷி, தன் புத்திரனின் கூக்குரலைக் கேட்டு மெதுவாக கண்களைத் திறந்து தம் கழுத்தில் செத்த பாம்பு கிடப்பதைக் கண்டார்.

பதம் 1.18.40 : அவர் செத்த பாம்பை ஒருபுறம் எறிந்துவிட்டு, தன் மகனைப் பார்த்து அவன் அழுகைக்கு என்ன காரணம் என்றும், யாராவது அவனுக்குத் தீங்கிழைத்தார்களா என்றும் கேட்டார். இதைக் கேட்ட மகன் நிகழ்ந்ததை விளக்கிக் கூறினான்.

பதம் 1.18.41 : மனித வர்க்கத்திலேயே மிகச்சிறந்தவரென்பதால், அவரை ஒருபோதும் தண்டித்திருக்கக் கூடாது என்றாலும், அவர் சபிக்கப்பட்டதைத் தன் மகனிடமிருந்து கேட்ட ரிஷி அவனுடைய செயலைப் பாராட்டவில்லை. மாறாக “ஐயோ எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்துவிட்டாய். சிறிய பிழைக்கு பெரிய தண்டனையை விதித்துவிட்டாயே” என்று கூறி வருந்தினார்.

பதம் 1.18.42 : பக்குவப்படாத புத்தியுடையவனே, மனிதர்களிலேயே மிகச்சிறந்தவரான அரசர் பரம புருஷருக்குச் சமமானவர் என்பதை நீ அறியவில்லை. சாதாரண மனிதனுக்குச் சமமாக அவரை எண்ணுதல் கூடாது. மிஞ்ச முடியாத அவரது பராக்கிரமத்தினால் பாதுகாக்கப்படுவதால்தான் பிரஜைகள் செழிப்புடன் வாழ்கின்றனர்.

பதம் 1.18.43 : மகனே, ஏகாதிபத்திய ஆட்சிமுறையானது, தேர்ச் சக்கரத்தை ஏந்தியவரான பகவானைப் பிரதிபலிக்கிறது. இந்த ஆட்சிமுறை அழிக்கப்படும் போது, உலகில் திருடர்கள் நிறைந்து விடுகின்றனர். இவர்கள், கலைந்து சென்ற ஆட்டுக்குட்டிகளைப் போல், பாதுகாப்பற்ற பிரஜைகளை உடனே முறியடித்து விடுகின்றனர்.

பதம் 1.18.44 : அரசாட்சியின் முடிவாலும், மக்களின் செல்வம் திருடர்களாலும் அயோக்கியர்களாலும் கொள்ளையடிக்கப்படுவதாலும், பெரும் சமூகப் பிளவுகள் ஏற்படும். மக்கள் ஒருவரையொருவர் கொல்வர். மிருகங்களையும், பெண்களையும் அபகரிப்பர். இந்த பாவங்களுக்கெல்லாம் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

பதம் 1.18.45 : அப்போது நாகரிக முன்னேற்றப் பாதையிலிருந்து பொதுமக்கள் சரிந்து விடுவார்கள். இதனால் வேதக் கட்டளைகளும், வர்ணாஸ்ரம முறைப்படியான கடமைகளும் சீரழிந்துவிடும். இவ்வாறு புலன் நுகர்வை நோக்கமாகக் கொண்ட பொருளாதார முன்னேற்றத்தால் அவர்கள் அதிகமாக கவரப்படுவார்கள். இதன் பலனாக நாய், குரங்குகளின் தரத்திலுள்ள தேவையற்ற ஜனத்தொகை உற்பத்தியாகும்.

பதம் 1.18.46 : பரீட்சித்து மகாராஜன் பரம புருஷரின் முதல்தரமான பக்தரும், பெரும் புகழ்பெற்றவரும், பக்தியுள்ள ஓர் அரசருமாவார். ராஜரிஷியான அவர் பல அஸ்வமேத யாகங்களைச் செய்திருக்கிறார். பசியாலும், தாகத்தாலும் களைப்படைந்திருந்த அவர் ஒருக்காலும் நமது சாபத்துக்கு உரியவராகார்.

பதம் 1.18.47 : பிறகு, எல்லா பாவங்களிலிருந்தும் முற்றிலும் விடுபட்டவரும் பணிவுள்ளவரும், பாதுகாக்கத் தகுந்தவருமான ஒருவரைச் சபித்து பெரும் பாவத்தைச் செய்துவிட்ட பக்குவமில்லாத புத்தியுடைய சிறுவனை, எங்கும் நிறைந்திருப்பவரான பரம புருஷர் மன்னித்தருள வேண்டும் என்று நிஷி வேண்டினார்.

பதம் 1.18.48 : பகவத் பக்தர்கள் மிகவும் பொறுமைசாலிகள் என்பதால், நிந்திக்கப்படினும், வஞ்சிக்கப்படினும், சபிக்கப்படினும், தொந்தரவு செய்யப்படினும், அலட்சியப்படுத்தப்படினும் அல்லது கொல்லப்படினும், அதைத் திருப்பிச் செய்வதில்லை.

பதம் 1.18.49 : இவ்வாறு புத்திரன் செய்த பாவத்தால் வருத்தமடைந்த மாமுனிவர், அரசர் செய்த பிழையை முக்கியமாக எடுத்துக் கொள்ளவில்லை.

பதம் 1.18.50 : பொதுவாக ஆன்மீகிகள் உன்னதமான செயல்களில்ஈடுபட்டிருப்பதால், பிறரால் ஜடவுலக இருமைகளில் ஈடுபடுத்தப் பட்டபோதிலும் அவர்கள் துன்புறுவதோ அல்லது இன்புறுவதோ இல்லை.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare