அத்தியாயம் – 17
கலி பெற்ற தண்டனையும் பரிசும்
பதம் 1.17.1 : சூத கோஸ்வாமி கூறினார்: அந்த இடத்தை அடைந்த பரீட்சித்து மகாராஜன், அரச உடைதரித்த சூத்திரனொருவன் நாதனற்றவைபோல் காணப்பட்ட ஒரு பசுவையும், எருதுவையும் தடியால் இம்சிப்பதைக் கண்டார்.
பதம் 1.17.2 : அந்த எருது வெண்தாமரையைப் போல் வெண்மையாக இருந்தது. தன்னை இம்சித்துக் கொண்டிருந்த அந்த சூத்திரனால் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி இருந்ததால், அது நடுக்கத்துடன் சிறுநீர் கழித்தவாறு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.
பதம் 1.17.3 : பசுவிலிருந்து தர்மத்தைக் கறக்க முடியும் என்பதால், பயனளிக்கக் கூடியது என்றாலும், அது இப்பொழுது இரங்கத்தக்க அது நிலையிலும், கன்றற்றதாகவும் உள்ளது. அதன் கால்கள் ஒரு சூத்திரனால் அடிக்கப்பட்டன. துன்பத்திற்கு ஆளாகி, இளைத்து காணப்பட்ட அதன் கண்களில் கண்ணீர் ததும்பியது. இந்நிலையில், சிறிது புல் கிடைக்குமா என்று அது ஏங்கியது.
பதம் 1.17.4 : அம்புகளுடனும் வில்லுடனும் நன்கு ஆயத்தமாயிருந்த பரீட்சித்து மகாராஜன், தங்கத்தாலான தேரிலமர்ந்து, இடி முழக்கம் போன்ற ஆழமான குரலில் அவனுடன் (சூத்திரனுடன்) பேசினார்.
பதம் 1.17.5 : ஓ, யார் நீ? பலசாலியைப் போல் காணப்பட்டாலும், பாதுகாப்பிலுள்ள ஆதரவற்றவர்களை நீ கொல்லத் துணிந்தாயே! என் உடையால் உன்னை ஒரு தெய்வீக மனிதனை (அரசனைப்) போல் காட்டிக் கொள்கிறாய். ஆனால் செயலால் இருப்பிறப்பெய்திய க்ஷத்திரியர்களின் கொள்கைகளை எதிர்க்கிறாய்.
பதம் 1.17.6 : அயோக்கியனே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், காண்டீப வில்லை எந்திய அர்ஜுனனும் மறைந்து விட்டதால், குற்றமற்ற ஒரு பசுவையும் நீ அடிக்கத் துணிந்தாயா? அதை மறைவான ஓரிடத்தில் நீ அடிப்பதால், நீ குற்றவாளியென கருதப்பட்டு, கொல்லப்பட வேண்டியவனாக இருக்கிறாய்.
பதம் 1.17.7 : பிறகு அவர் (பரீட்சித்து மகாராஜன்) எருதைப் பார்த்து கேட்டார். நீ யார்? நீ வெண்தாமரையைப் போல் வெண்மை நிறம் கொண்ட ஓர் எருதாஅல்லது நீ ஒரு தேவனா? மூன்று கால்களை இழந்து ஒரே காலுடன் நீ நடமாடுகிறாய். நீ ஓர் எருதின் உருவில் இருந்து கொண்டு எங்களுக்கு துன்பத்தை விளைவிக்கும் ஒரு தேவனா?
பதம் 1.17.8 : குரு வம்சத்து அரசர்களின் கரங்களால் நன்கு பாதுகாக்கப்பட்டு வந்ததோர் இராஜ்ஜியத்தில், கண்களில் கண்ணீருடன் நீ துக்கப்படுவதை இப்பொழுதுதான் முதன்முறையாக நான் காண்கிறேன். இன்றுவரை பூமியிலுள்ள ஒருவரும் அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாக ஒருபோதும் கண்ணீர் சிந்தியதே இல்லை.
பதம் 1.17.9 : சுரபி மகனே, இனிமேல் நீ வருந்தத் தேவையில்லை, இந்த இழி குல சூத்திரனைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமுமில்லை. மேலும், பசு ரூபம் கொண்ட தாயே, பொறாமை கொண்ட எல்லா மனிதர்களையும் அடக்கி ஆள்பவனாக நான் வாழும்வரை நீ அழ வேண்டிய காரணமில்லை. அனைத்தும் உனக்கு நன்மையாகவே இருக்கும்.
பதங்கள் 1.17.10 – 1.17.11 : தூய்மையான எருதே, ஓரரசனின் இராஜ்ஜியத்திலுள்ள உயிரினங்கள் அனைத்தும் துஷ்டர்களாக்கப்படும் போது, அந்த அரசனின் நற்பெயர், ஆயுள் மற்றும் நற்பிறப்பு ஆகியவை மறைந்துவிடும். துன்பப்படுபவர்களின் துன்பங்களை தீர்ப்பதுதான் அரசரின் முக்கிய கடமையாகும். எனவே, பிற ஜீவராசிகளை இவன் துன்புறுத்துவதால் மிகவும் இழிவான இவனை நான் கொன்று விடுகிறேன்.
பதம் 1.17.12 : அவர் (பரீட்சித்து மகாராஜன்) எருதிடம் திரும்பத் திரும்ப பின்வருமாறு கேள்விகள் கேட்டார்: சுரபியின் மகனே, மூன்று கால்களைத் துண்டித்தவன் யார்? உன்னுடைய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் அரசர்களின் இராஜ்ஜியத்தில், உன்னைப் போல் இவ்வளவு மகிழ்ச்சியற்றவர் ஒருவரும் இல்லை.
பதம் 1.17.13 : எருதே, நீ குற்றமற்றவனாயும், முற்றிலும் நேர்மையுடையவனாயும் இருக்கிறாய். எனவே உனக்கு சர்வ நன்மையும் உண்டாகட்டும். உன்னை அங்கவீனப்படுத்தி, பிருதாவின் புத்திரர்களுக்கு இழுக்கை உண்டாக்கியவன் யாரென்று தயவுசெய்து சொல்.
பதம் 1.17.14 : குற்றமற்ற ஜீவராசிகளுக்கு துன்பம் விளைவிப்பவன் யாராக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் இருப்பவனாக இருந்தாலும், என்னைக் கண்டு அஞ்சத்தான் வேண்டும். நேர்மையற்ற துஷ்டர்களை அடக்குவதால், ஒருவர் தானாகவே குற்றமற்றவர்களுக்கு நன்மை செய்பவராகிறார்.
பதம் 1.17.15 : ஓர் அற்ப ஜீவராசி, கலசத்துடனும், அலங்காரங்களுடனும் கூடிய ஸ்வர்க லோகவாசியாக இருப்பினும், குற்றமற்றவர்களைத் ஒரு துன்புறுத்துவதன் மூலமாக குற்றம் புரிபவனாக இருந்தால், அவன் நேரடியாக என்னாலேயே நாசம் செய்யப்படுவான்.
பதம் 1.17.16 : அவசரகாலமில்லாத சாதாரண காலங்களில் சட்டங்களுக்குக் கீழ்ப்படிபவர்களுக்கு முழு பாதுகாப்பையும் அளித்து, சாஸ்திர விதிகளை மீறுபவர்களை தண்டிப்பதே அரசாளும் மன்னரின் உயர்ந்த கடமையாகும்.
பதம் 1.17.17 : தர்மதேவதை கூறியது: உம்மால் பேசப்பட்ட இவ்வார்த்தைகள் பாண்டவ வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மிகவும் பொருத்த மானவையாகும். பரம புருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் கூட பாண்டவர்களின் பக்திப்பூர்வமான தகுதி முறைகளால் கவரப்பட்டு, ஒரு தூதருக்குரிய கடமைகளைச் செய்தார்.
பதம் 1.17.18 : மனிதருள் மிகச்சிறந்தவரே, சாஸ்திர அனுபவமற்ற தத்துவ வாதிகளின் வெவ்வேறு அபிப்பிராயங்களால் நாங்கள் குழப்பம் அடைந்திருப்பதால், எங்களுடைய துன்பங்களுக்குக் காரணமான கயவனை ஆராய்ந்தறிவது மிகவும் கடினமாக உள்ளது.
பதம் 1.17.19 : எல்லா வகையான இருமைகளையும் ஒப்புக்கொள்ள மறுக்கும் சில தத்துவவாதிகள், ஒருவரது சொந்த இன்ப துன்பங்களுக்கு அவரே பொறுப்பாளி என்று கூறுகின்றனர். பிறர் அமானுஷ்யமான சக்திகளே அதற்குப் பொறுப்பு என்றும், மற்றவர்கள் செயல்தான் அதற்குப் பொறுப்பென்றும் கூறுகின்றனர். ஆழ்ந்த பௌதிகவாதிகளோ, இயற்கைதான் முடிவான காரணம் என்று சாதிக்கின்றனர்.
பதம் 1.17.20 : விவாதத்தினால் துன்பத்திற்கான காரணத்தை விசாரித்தறியவோ, அல்லது கற்பனையின் மூலமாக அதை அறியவோ, அல்லது வார்த்தைகளால் அதை விவரிக்கவோ ஒருவராலும் முடியாது என்று நம்பும் சில அறிஞர்களும் உள்ளனர். ராஜரிஷியே, இதில் எது பொருத்தமானதென்பதை உமது புத்தியால் நீரே ஆராய்ந்து கொள்ளும்.
பதம் 1.17.21 : சூத கோஸ்வாமி கூறினார்: பிராமண சிரேஷ்டரே, தர்ம தேவதையின் பேச்சைக் கேட்ட பரீட்சித்து மகாராஜன் பூரண திருப்தியடைந்து, பிழையோ, வருத்தமோ இன்றி பதிலளித்தார்.
பதம் 1.17.22 : அரசர் கூறினார்: தர்மமறிந்த நீ, ஓர் எருதின் வடிவத்தைத் தாங்கியிருக்கிறாய். மேலும், அதர்மம் செய்தவனுக்கு ஏற்படும் நிலை, அதைக் குறித்துப் பேசுபவனுக்கு ஏற்படும் என்ற தத்துவத்திற்கு ஏற்பவே நீ பேசுகிறாய். நீ தர்ம தேவதையே அன்றி வேறு யாருமில்லை.
பதம் 1.17.23 : இவ்வாறாக பகவானின் சக்திகள் நினைத்தற்கரியவை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மனக் கற்பனையாலோ, வார்த்தை ஜாலங்களாலோ அவற்றை ஒருவராலும் மதிப்பிட முடியாது.
பதம் 1.17.24 : சத்திய யுகத்தில் உனது நான்கு கால்களும் தவம், தூய்மை, தயை மற்றும் உண்மை எனும் நான்கு கொள்கைகளால் நிலைநாட்டப் பட்டிருந்தன. ஆனால் தற்பெருமை, சிற்றின்ப வெறி மற்றும் குடிவெறி ஆகியவற்றின் உருவிலுள்ள அளவு கடந்த அதர்மங்களின் காரணத்தால், உனது மூன்று கால்கள் உடைந்து விட்டதாகத் தெரிகிறது.
பதம் 1.17.25 : இப்பொழுது உண்மை எனும் உனது ஒரே காலினால் நீ எப்படியோ நடமாடி வருகிறாய். ஆனால் வஞ்சகமாக செழிப்படைந்து வரும் கலி புருஷன் அந்த காலையும் அழித்துவிட முயலுகின்றான்.
பதம் 1.17.26 : பரம புருஷராலும் மற்றவர்களாலும் பூமியின் பாரம் குறைந்ததில் சந்தேகமில்லை. பூமியில் அவர் அவதரித்திருந்த போது, மங்களகரமான அவரது அடிச்சுவடுகளினால் எல்லா நன்மைகளும் நிகழ்ந்தன.
பதம் 1.17.27 : துரதிர்ஷ்டவசமாக பரம் புருஷரால் கைவிடப்பட்ட குற்றமற்ற பூமிதேவி, இப்பொழுது அரசர்களைப் போல் நடிக்கும் தாழ்ந்த பிரிவினரால் ஆண்டு அனுபவிக்கப்படுவதால், தனது எதிர்காலத்தை எண்ணி கண்களில் கண்ணீருடன் வருந்திக் கொண்டிருக்கிறாள்.
பதம் 1.17.28 : இவ்வாறாகஆயிரம் எதிரிகளுடன் தனித்து போரிடக்கூடியவரான பரீட்சித்து மகாராஜன், தர்ம தேவதையையும், பூமி தேவியையும் சமாதானப்படுத்தினார். பிறகு எல்லா அதர்மங்களுக்கும் நின்று காரணமான கலி புருஷனைக் கொன்றுவிட தமது கூரிய உடைவாளை எடுத்தார்.
பதம் 1.17.29 : அரசர் தன்னை கொல்லப் போகிறார் என்பதைப் புரிந்துகொண்ட கலி புருஷன் உடனே அரச உடையைக் களைந்து, அச்சத்துடன் சிரம் தாழ்த்தி, அவரிடம் முழுமையாக சரணடைந்தான்.
பதம் 1.17.30 : சரணாகதியை ஏற்கும் தகுதி படைத்தவரும், சரித்திரத்தில் புகழ்ந்து பாடத் தகுந்தவருமான பரீட்சித்து மகாராஜன், இழிவடைந்தவனும், சரணடைந்தவனுமான கலியைக் கொல்லவில்லை. மாறாக தீனமானவர்களிடம் அவர் அன்பு கொண்டவர் என்பதால், இரக்கத்துடன் புன்னகை செய்தார்.
பதம் 1.17.31 : இவ்வாறாக அரசர் கூறினார்: அர்ஜுனனின் பரம்பரைப் புகழை பெற்றவர்கள் நாங்கள்; எனவே கூப்பிய கரங்களுடன் நீ சரணாகதி அடைந்திருப்பதால், உன் ஆனால் உயிருக்காக நீ அஞ்ச வேண்டிய அவசியமில்லை. நீ அதர்மத்தின் நண்பனென்பதால், என்னுடைய இராஜ்ஜியத்தில் நீ இருக்க முடியாது.
பதம் 1.17.32 : அதர்மனான கலி புருஷனை ஒரு மனித தெய்வமாக அல்லது தலைமை நிர்வாகியாக செயற்பட அனுமதித்தால், பேராசை; நேர்மையின்மை, கொள்ளை, அநாகரிகம், நம்பிக்கைத் துரோகம், துரதிர்ஷ்டம், ஏமாற்று, கலகம் மற்றும் தற்பெருமை ஆகியவற்றைப் போன்ற அதர்மக் கொள்கைகள் நிச்சயமாக நிரம்பியிருக்கும்.
பதம் 1.17.33 : எனவே, அதர்மத்தின் நண்பனே, பரம புருஷரின் திருப்திக்காக, சமயக் கொள்கைகளுக்கும், சத்தியத்திற்கும் ஏற்ப நிபுணர்கள் யாகமியற்றும் இடத்தில் இருப்பதற்கு உனக்குத் தகுதியில்லை.
பதம் 1.17.34 : யாகச் சடங்குகளில், சில சமயங்களில் ஒரு தேவர் வழிபடப்பட்டபோதிலும், பரம புருஷ பகவானுடன் வழி படப்படுகிறார். ஏனெனில், அவர் அனைவரிலும் பரமாத்மாவாகவும் காற்றைப் போல் உள்ளும், புறமும் இருப்பவராகவும் இருக்கிறார். எனவே வழிபடுபவருக்கு எல்லா நன்மைகளையும் அளிப்பவர் அவரேயாவார்.
பதம் 1.17.35 : ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனால் இவ்வாறு உத்தரவிடப்பட்ட கலி புருஷன், பயத்தால் நடுங்க ஆரம்பித்தான். தன்னைக் கொல்ல யமராஜனைப் போல் தன் முன் நிற்கும் அரசரைப் பார்த்து, கலி பின்வருமாறு பேசினான்.
பதம் 1.17.36 : மாட்சிமை தாங்கிய அரசே, தங்களுடைய உத்தரவுப்படி எங்கு வேண்டுமானாலும் என்னால் வாழ முடியும் என்றாலும், நான் காணும் இடங்களிலெல்லாம் தாங்கள் வில்லுடனும், அம்புகளுடனும் நிற்பதைத் தவிர வேறெதையும் என்னால் காண முடியவில்லை.
பதம் 1.17.37 : எனவே, சமயக் காவலர்களில் தலைமையானவரே, தங்களுடைய அரசாங்கத்தின் பாதுகாப்பில் நான் நிரந்தரமாக வாழக்கூடிய ஓரிடத்தை தயவுசெய்து உறுதி செய்து விடுங்கள்.
பதம் 1.17.38 : சூத கோஸ்வாமி கூறினார்: கலி புருஷனால் இவ்வாறு வேண்டிக் கொள்ளப்பட்ட பரீட்சித்து மகாராஜன், சூது, குடி, விபச்சாரம் மற்றும் மிருக வதை ஆகியவை நடைபெறும் இடங்களில் வாழ அவனுக்கு அனுமதியளித்தார்.
பதம் 1.17.39 : கலி புருஷன் இன்னுமொரு இடத்தை வேண்டியதால், தங்கம் இருக்கும் இடத்தில் வாழ அரசர் அவனுக்கு அனுமதியளித்தார். ஏனெனில் தங்கம் இருக்கும் இடத்தில் பொய், குடிப்பழக்கம், காமம், வெறுப்பு மற்றும் பொறாமை ஆகியவையும் இருக்கும்.
பதம் 1.17.40 : இவ்வாறாக உத்தரையின் மகனான பரீட்சித்து மகாராஜனின் உத்தரவுப்படி, கலி புருஷன் அவ்வைந்து இடங்களிலும் வாழ அனுமதிக்கப்பட்டான்.
பதம் 1.17.41 : எனவே, முன்னேற்றமான நல்வாழ்வை விரும்புபவர்கள், முக்கியமாக அரசர்கள், சமயவாதிகள், ஜன சமூகத் தலைவர்கள், பிராமணர்கள் மற்றும் சந்நியாசிகள் ஆகியோர் மேற்குறிப்பிட்ட நான்கு அதர்மக் கொள்கைகளுடன் ஒருபோதும் தொடர்புகொள்ளக் கூடாது.
பதம் 1.17.42 : அதன் பிறகு, அரசர், தர்மதேவதை (எருது) இழந்திருந்த மூன்று கால்களை மீண்டும் கூடும்படிச் செய்தார். மேலும் செயல்களுக்கு உற்சாகமூட்டுவதன் மூலம் பூமியின் நிலையையும் அவர் நன்கு விருத்தியடையச் செய்தார்.
பதங்கள் 1.17.43 – 1.17.44 : நாட்டைத் துறந்து காட்டிற்குச் செல்ல விரும்பிய யுதிஷ்டிர மகாராஜன், ஹஸ்தினாபுர இராஜ்ஜியத்தை, மகா பாக்கியசாலியும், சக்கரவர்த்தியுமான பரீட்சித்து மகாராஜனிடம் ஒப்படைத்தார். பரீட்சித்து மகாராஜன் குரு வம்சத்து அரசர்களின் செயல்களால் வாழ்த்தப்படுவதால், இப்பொழுது அவர் பெரும் வெற்றியுடன் உலகை ஆண்டு வருகிறார்.
பதம் 1.17.45 : அபிமன்யு புத்திரரான பரீட்சித்து மகாராஜன் சிறந்த அனுபவசாலியாவார். அவரது சீரிய ஆட்சி முறையாலும், ஆதரவாலும் தான், இத்தகைய ஒரு யாகத்தை நீங்கள் செய்வது சாத்தியமாகியுள்ளது.