அத்தியாயம் – 11
ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகைக்குள் பிரவேசித்தல்
பதம் 1.11.1
ஸூத உவாச
ஆனர்தான் ஸ உபவ்ரஜ்ய ஸ்வ்ருத்தான் ஜன-பதான் ஸ்வகான்
தத்மௌ தரவரம் தேஷாம் விஷாதம் சமயன் இவ
ஸூத உவாச-சூத கோஸ்வாமி கூறினார்; ஆனர்தான்—ஆனர்தான் (துவாரகை) எனப்படும் தேசத்தின்; ஸ-அவர்; உபவ்ரஜ்ய:- எல்லையை அடைந்து; ஸ்வ்ருத்தான்-மிகச் செழிப்பான; ஜனபதான்-நகரம்; ஸ்வகான்—அவரது சொந்த; தத்மௌ–ஊதினார்; தரவரம் – மங்களகரமான சங்கை (பாஞ்சஜன்யம்); தேஷாம்—அவர்களின்; விஷாதம்- சோகத்தை; சமயன்—சமாதானப்படுத்தும்; இவ- வகையில்.
சூத கோஸ்வாமி கூறினார்: ஆனர்த நாடு (துவாரகை) எனப்படும் மிகச் செழிப்பான அவரது தலைநகரின் எல்லையை அடைந்ததும், தமது வருகையை அறிவிப்பதற்காக பகவான் அவரது மங்களகரமான சங்கை ஊதினார். இந்த சங்க நாதம் துவாரகாவாசிகளின் சோகத்தை ஆற்றியது.
பதம் 1.11.2
ஸ உச்சகாசே தவலோதரோ தரோ
`பி உருக்ரமஸ்யாத ரசோண-சோணிமா
தாத்மாயமான: கர-கஞ்ச-ஸம்புடே
யதாப்ஜ-கண்டே கல-ஹம்ஸ உத்ஸ்வன:
ஸ-அந்த; உச்சகாசே-பிரகாசித்தது; தவல-உதர:— வெண்மையான தடித்த; தர-சங்கு; அபி-அது அவ்வாறிருப்பினும்; உருக்ரமஸ்ய- சாகசக்காரரரின்; ஆதரசோண—அவரது உதடுகளின் தெய்வீக தன்மையினால்; சோணிமா-சிவந்த; தாத்மாயமான:-ஊதப்பட்டு; கர-கஞ்ச-ஸம்புடே:— தாமரைப் போன்ற கரத்தால் பற்றப்பட்டு; யதா-உள்ளபடி; அப்ஜ-கண்டே:— தாமரைப் பூக்களின் தண்டுகளால்; கல-ஹம்ஸ:— நீரில் தலையை அமிழ்த்தும் அன்னப்பறவை; உத்ஸ்வன:—உரக்க முழங்கும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் ஊதப்பட்ட அந்த வெண்மையான, பருத்த சங்கு, அவரது கரத்தால் பற்றப்பட்டு இருந்ததாலும், அவரது திவ்யமான உதடுகளால் தொடப்பட்டதாலும், சிவந்து காணப்பட்டது. அது செந்தாமரையின் தண்டுக்கிடையில் புகுந்து விளையாடும் வெண்ணிற அன்னப்பறவையைப் போல் காட்சியளித்தது.
பதம் 1.11.3
தம் உபஸ்ருத்ய நினதம் ஜகத்-பய-பயாவஹம்
ப்ரத்யுத்யயு: ப்ரஜா: ஸர்வா பர்த்ரு-தர்சன-லாலஸா:
தம்- அந்த; உபஸ்ருத்ய—கேட்டதும்; நினதம் – ஓசை; ஜகத் – பய:— பௌதிக வாழ்விலுள்ள பயம்; பய-ஆவஹம்—அச்சமூட்டும் அடிப்படை உண்மை ; ப்ரதி- நோக்கி ; உத்யயு:- விரைந்து சென்றனர்; ப்ரஜா:- பிரஜைகள்; ஸர்வா-எல்லா; பர்த்ரு- காப்பவர்; தர்சன— தரிசனத்தை ; லாலஸா:- விரும்பி.
ஜடவுலகில் பய புருஷரையும் அச்சுறுத்தக்கூடிய அந்த ஓசையைக் கேட்ட துவாரகாவாசிகள், எல்லா பக்தர்களையும் காப்பவரான பகவானின் தரிசனத்தைப் பெறும் நீண்ட கால ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக, அவரை நோக்கி விரைந்தனர்.
பதங்கள் 1.11.4 – 1.11.5
தத்ரோபனீத-பலயோ ரவேர் தீபம் இவாத்ருதா:
ஆத்மாராமம் பூர்ண-காமம் நிஜ-லாபேன நித்யதா
ப்ரீதி உத்ஃபுல்ல-முகா:ப்ரோசுர் ஹர்ஷ-கத்கதயா கிரா
பிதரம் ஸர்வ-ஸுஹ்ருதம் அவிதாரம் இவார்பகா:
தத்ர:-அதன் பிறகு; உபனீத-அளித்ததும்; பலய:- அன்பளிப்புகளை; ரவே:-சூரியனுக்கு; தீபம் – தீபம்; இவ- போல்; ஆத்ருதா:- மதிப்பிட்டு; ஆத்ம ஆராமம்—சுயதேவை பூர்த்தியுள்ளவருக்கு; பூர்ண-காமம்:—பூரண திருப்தியுள்ளவர்; நிஜ-லாபேன—அவரது சுய சக்தியால்; நித்யா-தா:—இடைவிடாது வழங்குபவர்; ப்ரீதி- பாசம்; உத்ஃபுல்ல-முகா:—சந்தோஷமான முகங்கள்; பீரோசு:-கூறினர்; ஹர்ஷ-மகிழ்ச்சியடைந்து: கத்கதயா— இன்பமான; கிரா-பேச்சுக்கள்; பிதரம்- தந்தையை; ஸர்வ-எல்லா; ஸுஹ்ருதம்—நண்பர்கள்; அவிதாரம்—இரட்சகர்; இவ-போல்; அர்பகா:—ஒருவர் ஆதரவில் வளர்ந்து வரும் குழந்தை.
தமது சுய சக்தியினால் மற்றவர்களுக்கு இடைவிடாமல் வழங்கிக் கொண்டிருப்பவரும், பூரண திருப்தியுடையவரும், சுய தேவை பூர்த்தி உடையவருமான பகவான் முன் வந்து சேர்ந்த பிரஜைகள், அவரவர் அன்பளிப்புகளை பகவானுக்கு அளித்தனர். இந்த அன்பளிப்புகள், சூரியனுக்கு தீபம் காட்டுவதைப் போன்றவையாகும். இருப்பினும், குழந்தைகள் தங்களது இரட்சகரை அல்லது தந்தையை வரவேற்பதைப் போலவே, பிரஜைகள் பகவானை வரவேற்பதற்காக இன்பமான மொழியில் பேசத் துவங்கினர்.
பதம் 1.11.6
நதா: ஸ்ம தே நாத ஸதாங்ரி-பங்கஜம்
விரிஞ்ச-வைரிஞ்ச்ய-ஸுரேந்ர-வந்திதம்
பராயணம் க்ஷேமம் இஹேச்சதாம் பரம்
ந யத்ர கால: ப்ரபவேத் பர: ப்ரபு:
நதா:-தலை வணங்கினர்; ஸ்ம-நாங்கள் அப்படிச் செய்தோம்; தே-தங்களுக்கு; நாத-பகவானே; ஸதா—எப்பொழுதும்; அங்ரி-பங்கஜம்—தாமரைப் பாதங்கள்; விரிஞ்ச-முதல் ஜீவராசியான பிரம்மா; விரஞ்ஸ்ய— ஸனக, ஸநாதனரைப் போன்ற பிரம்மாவின் புதல்வர்கள்; ஸுர-இந்ர:— ஸ்வர்க ராஜன்; வந்திதம்-வழிபடப்படும்; பராயணம்- பரம; க்ஷேமம்- நன்மை; இஹ—இவ்வாழ்வில்; இச்சதாம்—அவ்வாறு ஆசைப்படுபவர்: பரம்-மிகவுயர்ந்த; ந-ஒருபோதும் இல்லை; யத்ர—எங்கு; கால:-தவிர்க்க முடியாத காலம்; ப்ரபவேத்- அதன் ஆதிக்கத்தைச் செலுத்த முடியும்; பர:-திவ்யமான; ப்ரபு:-பரம புருஷர்.
பிரஜைகள் கூறினர்: பகவானே, தாங்கள் பிரம்மா, நான்கு ஸனத் குமாரர்கள் மற்றும் ஸ்வர்க ராஜனைப் போன்ற எல்லா தேவர்களாலும் வழிபடப்படுகிறீர்கள். வாழ்வின் மிகவுயர்ந்த நன்மையை அடைய உண்மையாக ஆசைப்படுவர்களின் இறுதியான புகலிடம் தாங்களே. உன்னதமான பரம புருஷரும் தாங்களே. மேலும் தவிர்க்க முடியாத காலத்தால் உங்களிடம் ஆதிக்கம் செலுத்த முடியாது.
பதம் 1.11.7
பவாய நஸ் த்வம் பவ விஸ்வ-பாவன
த்வம் ஏவ மாதாத ஸுஹ்ருத்—பதி: பிதா
த்வம் ஸத்-குருர் ந: பரமம் ச தைவதம்
யஸ்யானுவ்ருதியா க்ருதினோ பபூவிம
பவாய-நன்மைக்காக; ந-எங்களுக்கு; த்வம்—பகவானகிய தாங்கள்; பவ-ஆகியிருக்கிறோம். விஸ்வ-பாவன:— பிரபஞ்ச சிருஷ்டி கர்த்தா; த்வம்-தாங்கள்; ஏவ-நிச்சயமாக; மாதா—தாய்; அத- அதுபோலவே; ஸுஹ்ருத்–நண்பர்; பதி:-கணவர்; பிதா-தந்தை; த்வம்-தாங்கள்; ஸத்-குரு:- ஆன்மீக குரு; ந—எங்களுடைய; பரமம்-பரம; ச-மேலும்; தைவதம்- வழிபாட்டுக்குரிய மூர்த்தி; யஸ்ய-யாருடைய; அனுவ்ரத்தயா—அடிச்சுவடுகளைப் பின்பற்றும்; க்ருதின— வெற்றி; பபூவிம-நாங்கள் அடைந்திருக்கிறோம்.
பிரபஞ்சத்தைப் படைத்தவரே, தாங்களே எங்களுடைய தாய், நண்பர், பகவான் தந்தை, ஆன்மீக குரு மற்றும் வழிபாட்டுக்குரிய மூர்த்தி ஆகியவையாக இருக்கிறீர்கள். உங்களுடைய அடிச்சுவடுகளை பின்பற்றியதால் நாங்கள் எல்லாவிதத்திலும் வெற்றி அடைத்திருக்கிறோம் எனவே, தொடர்ந்து உங்களுடைய கருணையைப் பொழியும்படி பிரார்த்திக்கிறோம்.
பதம் 1.11.8
அஹோ ஸனாதா பவதா ஸ்ம யத் வயம்
த்ரைவிஷ்டபானாம் அபி தூர-தர்சனம்
ப்ரேம-ஸ்மித-ஸ்னிக்த-நிரீக்ஷணானனம்
பஸ்யேம ரூபம் தவ ஸ்ர்வ- ஸௌபகம்
அஹோ—ஓ, இது எங்கள் நல்லதிர்ஷ்டம்தான்; ஸ-நாதா—தலைவரின் பாதுகாப்பில் இருப்பது; பவதா- தங்களால்; ஸ்ம- நாங்கள் ஆகியதுபோல்; யத்- வயம்:—நாங்கள் உள்ளதுபோல்; த்ரைவிஷ்ட-பானாம்—தேவர்களின்; அபி-மேலும்; தூர-தர்சனம்:—அரிதாக காணப்படும்; ப்ரேம -ஸ்மித—அன்புடன் புன்னகை புரியும்; ஸ்னிக்த – சிநேகமான; நிரீக்ஷண-ஆனனம்—அவ்வாறு காணப்படும் முகம்; பஸ்யேம- நாங்கள் காண்போமாக; ரூபம்-அழகு; தவ உங்களுடைய; ஸர்வ-எல்லா; ஸௌபகம்-மங்களம்.
ஓ, பெருமானாகிய தாங்கள் ஸ்வர்கவாசிகளை காணச் செல்வது கூட மிகவும் அரிதாகும். எனவே இன்று உங்கள் முன்னிலையில், உங்களுடைய பாதுகாப்பின் கீழ் இருப்பது எங்களுடைய நல்லதிர்ஷ்டமாகும். அன்பான பார்வைகளைக் கொண்ட உங்களுடைய புன்னகை தவழும் முகத்தைக் காண்பது இன்று எங்களுக்கு சாத்திமாயிற்று, சர்வ மங்களம் நிறைந்த உங்களுடைய திவ்யமான உருவத்தை இப்பொழுது எங்களால் காணமுடிகிறது.
பதம் 1.11.9
யர்ஹி அம்புஜாஷாபஸஸார போ பவான்
குரூன் மதூன் வாத ஸுஹ்ருத்-தித்ருக்ஷயா
தத்ராப்த-கோடி-ப்ரதிம: க்ஷணோ பவேத்
ரவிம் வினாக்ஷ்ணோர் இவ நஸ் தவாச்யுத
யர்ஹி-எப்போதெல்லாம்; அம்புஜ-அக்ஷ:—தாமரை கண்களை உடையவரே; அபஸஸார- தாங்கள் சென்றுவிடுகிறீர்களோ; போ- ஓ: பவான்-நீங்கள்; குரூன்:—குரு வம்சத்தினர்; மதூன்:—மதுரா (விரஜபூமி) வாசிகள்; வா-அல்லது; அத-எனவே; ஸுஹ்ருத்-தித்ருக்ஷயா—அவர்களை சந்திக்க; தத்ர-அப்போது; அப்த-கோடி:— கோடிக்கணக்கான ஆண்டுகள்; ப்ரதிம-போல; க்ஷண-கணநேரம்; பவேத்—ஆகிறது; ரவிம்-சூரியன்; வினா-இல்லாத; அக்ஷ்ணோ- கண்களின்; இவ—அதைப் போல்; ந:-எங்களுடையது; தவ-உங்கள்; அச்யுத – குறையற்றவரே.
தாமரைக் கண்களை உடையவரே, உங்களுடைய நண்டர்களையும், உறவினர்களையும் சந்திக்க நீங்கள் மதுராவிற்கோ, விருந்தாவனத்திற்கோ அல்லது ஹஸ்தினாபுரத்திற்கோ சென்றுவிடும் போதெல்லாம், ஒவ்வொரு நொடிப்பொழுதும் எங்களுக்கு கோடிக்கணக்கான ஆண்டுகளைப் போல் காணப்படுகிறது. குறையற்றவரே, அச்சமயத்தில் சூரியன் இல்லாததைப் போல் எங்களுடைய கண்கள் பயனற்றுப்போகின்றன.
பதம் 1.11.10
கதம் வயம் நாத சிரோஷிதே த்வயி
ப்ரஸன்ன-த்ருஷ்ட்யாகில-தாப-சோஷணம்
ஜீவேம தே ஸுந்தர-ஹாஸ சோபிதம்
அபஸ்யமானா வதனம் மனோஹரம்
இதி சோதீரிதா வாச; ப்ரஜானாம் பக்த-வத்ஸல:
ஸ்ருண்வானோ’நுக்ரஹம் திருஷ்ட்யா விதன்வன் ப்ராவிசத் புரம்
கதம்-எப்படி; வயம்-நாங்கள்; நாத-பகவானே; சிரோஷிதே-கிட்டத்தட்ட எப்பொழுதும் வெளியூரிலேயே இருக்கும்; த்வயி-உங்களால்; ப்ரஸன்ன-திருப்தி; த்ருஷ்டயா-பார்வையால்; அகில-அகில; தாப-துன்பங்களும்; சோஷணம் -அழித்து: ஜீவேம-வாழ முடியும்; தே-உங்களது; ஸுந்தர-அழகிய; ஹாஸ-சிரித்து; சோபிதம் – அலங்கரிக்கப்பட்ட; அபஸ்யமானா-காணாமல்; வதனம்-முகத்தை; மனோஹரம்—கவர்ச்சியான; இதி-இவ்வாறாக; ச-மேலும்; உதீரிதா- பேசும்; வாச:-வார்த்தைகள்; ப்ரஜானாம்- பிரஜைகளின்; பக்த-வத்ஸல:-பக்தர்களிடம் அன்பு பூண்ட; ஸ்ருண்வான—இவ்வாறு அறிந்து; அனுக்ரஹம்-அனுக்கிரகம்; த்ருஷ்ட்யா-பார்வைகளால்; விதன்வன்—செலுத்தி; ப்ராவிசத்-ப்ரவேசித்தார்; புரம்-துவாரகாபுரியில்.
பகவானே. எப்பொழுதும் வெளியூரிலேயே நீங்கள் வாழ்ந்ததால் எங்களுடைய துன்பங்களை எல்லாம் அழித்துவிடக் கூடிய புன்னகை தவழும் உங்களுடைய திருமுகத்தை எங்களால் தரிசிக்க முடியாமல் போய்விடுமே. உங்களைக் காணாமல் எங்களால் எப்படி உயிர் வாழ முடியும்?
அவர்களுடைய பேச்சுகளைக் கேட்டதும், பிரஜைகளிடமும், பக்தர்களிடமும் பேரன்பு கொண்டவரான பகவான், தமது திவ்யமான பார்வையை அவர்கள் மீது செலுத்தி அவர்களுடைய வரவேற்பை ஏற்றுக் கொண்டபின் துவாரகை நகருக்குள் பிரவேசித்தார்.
பதம் 1.11.11
மது-போஜ-தசார்ஹார்ஹ-குகுராந்தக-வ்ருஷ்ணிபி:
ஆத்ம-துல்ய-பலைர் குப்தாம் நாகைர் போகவதீம் இவ
மது-மது; போஜ-போஜ; தசார்ஹ-_தசார்ஹ: அர்ஹ— அர்ஹ; குகுர-குகுர; அந்தக—அந்தக; வ்ருஷ்ணிபி:-விருஷ்ணி வம்சத்தினரால்; ஆத்ம-துல்ய—அவருக்கு நிகரான; பலை:-பலத்தால்; குப்தாம்-பாதுகாத்தனர்; நாகை:—நாகர்களால்; போகவதீம்—நாகலோகத்தின் தலைநகரம்; இவ-போல்.
நாகலோகத்தின் தலைநகரான போகவதி, நாகர்களால் பாதுகாக்கப்படுவதைப் போலவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இணையான பலசாலிகளாக போஜன், மது, தசார்ஹன், அர்ஹன், குகுரன், அந்தகன் ஆகியோரைப் போன்ற விருஷ்ணி வம்சத்தினரால் துவாரகா பாதுகாக்கப்படுகிறது.
பதம் 1.11.12
ஸர்வர்து-ஸர்வ-விபவ-புண்ய-வ்ருக்ஷ-தாஸ்ரமை:
உத்யானோபவனாராமைர் வ்ருத-பத்மாகர-ஸ்ரீயம்
ஸர்வ- எல்லா; ருது—பருவங்களும்; ஸர்வ-எல்லா; விபவ- செல்வங்களும்; புண்ய – புண்ணியம்; வ்ருக்ஷ-மரங்கள்; லதா-கொடிகள்; ஆஸ்ரமை:-ஆஷ்ரமங்களுடன்; உத்யான- பழத்தோட்டங்கள்; உபவன-பூந்தோட்டங்கள்; ஆராமை:-உல்லாசத் தோட்டங்கள் மற்றும் அழகிய பூங்காக்கள்; வ்ருத-சூழப்பட்ட; பத்ம-ஆகர:— தாமரைகளின் பிறப்பிடங்கள் அல்லது நல்ல நீர்த்தேக்கங்கள்; ஸ்ரீயம் – அழகை அதிகரிக்கும்.
துவாரகாபுரி நகரம் எல்லா பருவ காலங்களின் செல்வங்களாலும் நிறைந்திருந்தது. அங்கு ஆஷ்ரமங்களும், பழத்தோட்டங்களும், பூந்தோட்டங்களும், உல்லாசத் தோட்டங்களும் மற்றும் தாமரைப் பூக்கள் நிறைந்த நீர்த்தேக்கங்களும் இருந்தன.
பதம் 1.11.13
கோபுர-த்வார-மார்கேஷு க்ருத-கௌதுக-தோரணாம்
சித்ர-த்வஜ-பதாகாக்ரைர் அந்த: ப்ரதிஹதாதபாம்.
கோபுர—நகரவாயில்; த்வார-கதவு; மார்கேஷு- வெவ்வேறு சாலைகளில்; க்ருத—செய்யப்பட்டன; கெளதுக-திருவிழாவின் காரணத்தால்; தோரணாம்—தோரணம்; சித்ர-வர்ணம் தீட்டப்பட்ட; த்வஜ—கொடிகள்; பதாகா-அகரை:—முக்கிய அடையாளங்களால்; அந்த:-உள்ளே; ப்ரதிஹத- தடுத்துவிட்டது; ஆதபாம்—சூரியஒளியை.
நகர வாயில், வீட்டுக் கதவுகள் மற்றும் சாலையோர அலங்கார வளைவுகள் ஆகிய அனைத்தும் பகவானை வரவேற்பதற்காக, வாழை மரங்கள் மற்றும் மாவிலை தோரணங்கள் போன்ற விழாக் குறிகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கொடிகள், மாலைகள் மற்றும் வர்ணம் தீட்டப்பட்ட அடையாளங்கள், சுலோகங்கள் ஆகிய அனைத்தும் இணைந்து சூரிய ஒளியை மங்கச் செய்தன.
பதம் 1.11.14
ஸம்மார்ஜித-மஹா-மார்க-ரத்யாபணக-சத்வராம்
ஸிக்தாம் கந்த-ஜலைர் உப்தாம் ஃபல-புஷ்பாக்ஷதாங்குரை:
ஸம்மார்ஜித-நன்கு சுத்தம் செய்யப்பட்டன; மஹா-மார்க:— பெரு வீதிகள்; ரத்ய-சந்துகளும், சுரங்க வழிகளும் ; ஆபணக-கடைத்தெருக்கள்; சத்வராம்-பொதுமக்கள் கூடும் இடங்கள்; ஸிக்தாம்—நனைத்து; கந்த-ஜலை:— வாசனைத் தைலம்; உப்தாம்— தெளிக்கப்பட்டு; ஃபல-பழங்கள்; புஷ்ப-மலர்கள்: அக்ஷத- உடையாத ; அங்குரை- விதைகள்.
பெரு வீதிகள், சுரங்க வழிகள், சந்துகள், கடைத்தெருக்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்கள் ஆகிய அனைத்தும் நன்கு சுத்தம் செய்யப்பட்டபின் வாசனைத் தைலம் தெளித்து நனைக்கப்பட்டிருந்தன. மேலும் பகவானை வரவேற்பதற்காக, பழங்கள், மலர்கள், விதைகள் ஆகியவையும் எல்லா இடங்களிலும் தூவப்பட்டிருந்தன.
பதம் 1.11.15
த்வாரி த்வாரி கிருஹாணாம் ச ததி-அக்ஷத-ஃபலேக்ஷுபி:
அலங்க்ருதாம் பூர்ண-கும்பைர் பலிபிர் தூப-தீபகை:
த்வாரி த்வாரி-ஒவ்வொரு வீட்டுக் கதவும்: க்ருஹாணாம்-வீடுகளின்; ச-மேலும்; ததி-தயிர்; அக்ஷத-உடையாத: ஃபலே-பழம்: இக்ஷுபி–கரும்பு; அலங்க்ருதாம்— அலங்கரிக்கப்பட்ட; பூர்ண-கும்மை:—பூர்ண கும்பங்கள்; பலிபி-வழிபாட்டுக்குரிய பொருட்களுடன்; தூப-தூபம்; தீபகை-தீபங்களாலும், மெழுகு வர்த்திகளாலும்.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும், தயிர், உடையாத பழங்கள், கரும்பு, பூர்ண கும்பங்கள், வழிபாட்டுப் பொருட்கள், தூபம் மற்றும் தீபங்கள் ஆகிய எல்லா மங்களகரமான பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தன.
பதங்கள் 1.11.16 – 1.11.17
நிசம்ய ப்ரேஷ்டம் ஆயாந்தம் வஸுதேவோ மஹா-மனா:
அக்ரூரஸ் சோக்ரஸேனஸ் ச ராமஸ் சாத்புத-விக்ரம:
ப்ரத்யும்னஸ் சாருதேஷ்ணஸ் ச ஸாம்போ ஜாம்பவதீ-ஸுத:
ப்ரஹர்ஷ-வேகோச்சசித-சயனாஸன-போஜனா:
நிசம்ய-கேள்விப்பட்டதுமே; ப்ரேஷ்டம்- பேரன்பிற்குரிய; ஆயாந்தம்- வீடு திரும்புகிறார்; வஸுதேவ- வசுதேவர் (கிருஷ்ணரின் தந்தை); மஹா-மனா:—பெருந்தன்மையுள்ள; அக்ரூர-அக்ரூரர்; ச- மேலும்; உக்ரஸேன- உக்ரசேனர்; ச-மேலும் ராம: -பலராமர் (கிருஷ்ணரின் மூத்த சகோதரர்); ச-மேலும்; அத்புத- அமானுஷ்யமான; விக்ரம-வீரம்; ப்ரத்யும்ன -பிரத்யும்னர்; சாருதேஷ்ண- சாருதேஷ்ணர் ; ச-மேலும்;ஸாம்ப-ஸாம்ப; ஜாம்பவதீ- ஸுத:—ஜாம்பவதியின் புதல்வர்; ப்ரஹர்ஷ-பேரானந்தம்; வேக- வலிமை; உச்சசித-கவரப்பட்டு; சயன—சயனத்தையும்; ஆனை-இருக்கையையும்; போஜனா:-உண்பதையும்.
மிக பிரியமானவரான கிருஷ்ணர் துவாரகாபுரியை நோக்கி வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டதும், பெருந்தன்மையுள்ள வசுதேவர், அக்ரூரர், உக்ரசேனர், (அமானுஷ்யமான சக்தி படைத்தவரான) பலராமர், பிரத்யும்னர், சாருதேஷ்ணர் மற்றும் ஜாம்பவதியின் புதல்வரான ஸாம்பன் ஆகிய அனைவரும் பேரானந்தம் அடைந்து உறக்கம், இருக்கை உணவு ஆகியவற்றைக் கைவிட்டனர்.
பதம் 1.11.18
வாரணேந்ரம் புரஸ்க்ருத்ய ப்ராஹ்மணை: ஸஸுமங்கலை:
சங்க-தூர்ய-நினாதேன ப்ரஹ்ம-கோஷேண சாத்ருதா:
ப்ரத்யுஜ்ஜக்மு ரதைர் ஹ்ருஷ்டா: ப்ரணயாகத-ஸாத்வஸா:
வாரண இந்ரம்– மங்களகரமான யானைகள்; புரஸ்க்ருத்ய–முன்பாக நிறுத்தி; ப்ராஹ்மணை-பிராமணர்களால்; ஸஸுமங்கலை-எல்லா மங்களகரமான அடையாளங்களுடனும், சங்க-சங்கு; தூர்ய- ஊது கொம்பு; நினாதேன—ஓசையால்; ப்ரஹ்மகோஷேண:—வேத மந்திரங்களை உச்சரிப்பதால்; ச-மேலும், ஆத்ருதா:-போற்றினர்; ப்ரதி-நோக்கி; உஜஜக்மு—விரைந்து சென்றனர்; ரதை:-இரதங்களில்; ஹ்ருஷ்டா-உற்சாகத்துடன்; ப்ரணயாகத-பொங்கி வழியும் பாசத்துடன்; ஸாத்வஸா—பூர்ண மரியாதையான.
பிராமணர்கள் மலர்களை ஏந்திக் கொண்டிருக்க இரதங்கள் பகவானை நோக்கி விரைந்து சென்றன. அவர்களுக்கு முன்புறத்தில் நல்லதிர்ஷ்டத்தின் சின்னங்களான யானைகள் இருந்தன. சங்குகளும்; ஊது கொம்புகளும் முழங்கின. வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. இவ்வாறாக அவர்கள் மிகுந்த பாசத்துடன் தங்களது மரியதைகளைச் செலுத்தினர்.
பதம் 1.11.19
வாரமுக்யாஸ் ச சதசோ யானைஸ் தத்- தர்சனோத்ஸுகா:
லஸத் -குண்டல-நிர்பாத-கபோல-வதன-ஸ்ரீய:
வாரமுக்யா-பிரபலமான விலைமாதர்கள்; ச-மேலும்; சதச-நூற்றுக் கணக்கான; யானை:-வாகனங்களால்; தத்- தர்சன:— அவரைச் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை) சந்திக்க; உத்ஸுண-மிகவும் ஆவலுடன்; லஸத்-தொங்கும்; குண்டல— காதணிகள்; நிர்பாத- பிரகாசிக்க்கும்; கபோல-நெற்றி; வதன—முகம்; ஸ்ரீய – அழகு.
அதே சமயத்தில், நூற்றுக்கணக்கான பிரபலமான விலைமாதர்களும் பற்பல வாகனங்களில் முன்னேறிச் சென்றனர். அவர்கள் அனைவரும் பசுவானைச் சந்திக்க பேராவல் கொண்டிருந்தனர். மேலும் அவர்களது அழகிய முகங்கள் பிரகாசிக்கும் காதணிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அது அவர்களுடைய நெற்றியழகை அதிகரித்தது.
பதம் 1.11.20
நட-நர்தக-கந்தர்வா: ஸுத-மாகத-வந்தின:
காயந்தி சோத்தமஸ்லோக-சரிதானி அத்புதானி ச
நட-நாடக ஆசிரியர்கள்; நர்தக-நாட்டியம் ஆடுபவர்கள்; கந்தர்வா—மேலுலக பாடகர்கள்; ஸுத – சரித்திர ஆசிரியர்கள்; மாகத- வம்ச வரலாறு எழுதுபவர்கள்; வந்தின—கற்றறிந்த பேச்சாளர்கள்; காயந்தி-ஒலி பரப்பினர்: ச-முறையே; உத்தமஸ்லோக-பரம் புருஷரின்; சரிதானி—செயல்களையும்; அத்புதானி-அற்புதமான எல்லா; ச-மேலும்.
கைதேர்ந்த நாடக ஆசிரியர்கள், கலைஞர்கள், நாட்டியம், ஆடுபவர்கள், சரித்திர ஆசிரியர்கள், பாடகர்கள், வம்ச வரலாறு எழுதுபவர்கள் மற்றும் கற்றறிந்த பேச்சாளர்கள் ஆகிய அனைவரும், பகவானின் அற்புத திருவிளையாடல்களில் ஊக்கங்கொண்டு, அவரவருக்குரிய விஷயதானங்களை அளித்தவாறு தொடர்ந்து சென்றனர்.
பதம் 1.11.21
பகவாம்ஸ் தத்ர பந்தூனாம் பௌராணாம் அனுவர்தினாம்
யதா-விதி உபஸங்கம்ய ஸர்வேஷாம் மானம் ஆததே
பகவான்-பரம புருஷ ஸ்ரீ கிருஷ்ணர்; தத்ர—அந்த இடத்தில்; பந்தூனாம்-நண்பர்களின்; பெளராணாம்-பிரஜைகளின்; அனுவர் தினாம்—அவரை வரவேற்று உபசரிக்கச் சென்றவர்கள்; யதா-விதி—அதன் தகுதிக்கேற்ப; உபஸங்கம்ய-நெருங்கிச் சென்று; ஸர்வேஷாம்- ஒவ்வொருவருக்கும்; மானம்-வணக்கமும் மரியாதையும்; ஆததே-அளித்தார்.
பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வரவேற்று உபசரிக்க வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள், பிரஜைகள் முதலான மற்ற அனைவரையும் அணுகிய பகவான், அவர்களில் ஒவ்வொருவருக்கும் தகுந்த வணக்கத்தையும், மரியாதையையும் செலுத்தினார்.
பதம் 1.11.22
ப்ரஹ்வாபிவாதனாஸ்லேஷ-கர-ஸ்பர்ச-ஸ்மிதேக்ஷணை:
ஆஸ்வாஸ்ய சாஸ்வபாகேப்யோவரைஸ் சாபிமதைர் விபு:
ப்ரஹ்வா- தலை வணங்கியும்; அபிவாதன -வாழ்த்துக் கூறியும்; ஆஸ்லேஷ- தழுவியும்; கர-ஸ்பர்ச:— கை குலுக்கியும்; ஸ்மித- ஈக்ஷணை:-பார்த்து புன்னகை செய்தும்; ஆஸ்வாஸ்ய-உற்சாகப்படுத்தியும்; ச-மேலும்; ஆஸ்வஸ் பாகேப்ய-மிகத்தாழ்ந்த சண்டாளர்கள் வரை; வரை:-ஆசிர்வதித்தும்; ச-மேலும்; அபிமதை:—அவரவர் விருப்பப்படி; விபு-சர்வ வல்லமையுடையவர்.
சர்வ வல்லமையுடைய பகவான், மிகத் தாழ்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் உட்பட அனைவருக்கும் தமது சிரம்தாழ்த்தியும், வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டும், தழுவிக் கொண்டும், கை குலுக்கியும் பார்த்து புன்னகை செய்தும், உறுதிமொழிகள் கூறியும் மற்றும் ஆசீர்வதித்தும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
பதம் 1.11.23
ஸ்வயம் ச குருபிர் விப்ரை: ஸதாரை: ஸ்தவிரைர் அபி
ஆசீர்பிர் யுஜ்யமானோ ‘ன்யைர் வந்திபிஸ் சாவிசத் புரம்
ஸ்வயம்-தானே: ச-மேலும்; குருபி- வயது முதிர்ந்த உறவினர்களாலும்; விப்ரை-பிராமணர்களாலும்; ஸதாரை- அவர்களது மனைவிகளுடன்; ஸ்தவிரை-பலமிழந்த: அபி-மேலும்; ஆசீர்பி-ஆசீர்வாதத்தால்; யுஜ்யமான-போற்றப்பட்டு; அன்யை- பிறரால்; வந்திபி-பாராட்டுபவர்கள்; ச-மேலும்; அவிசத்- பிரவேசித்தார்;புரம்—நகரம்.
பிறகு, பகவானின் பெருமைகளை பாடிக்கொண்டும், ஆசிகள் வழங்கிக் கொண்டும் இருந்த வயது முதிர்ந்த உறவினர்கள் மற்றும் வயது முதிர்ந்த பிராமணர்கள் ஆகிய அனைவரும் பின் தொடர பகவான் நகரத்திற்குள் பிரவேசித்தார்.
பதம் 1.11.24
ராஜ-மார்கம் கதே க்ருஷ்ணே த்வாரகாயா குல-ஸ்த்ரிய:
ஹர்ம்யாணி ஆருருஹுர் விப்ர தத்-ஈக்ஷண-மஹோத்ஸவா:
ராஜ-மார்கம்—பொது சாலைகள்; கதே-கடக்கப்படும்பொழுதும்; க்ருஷ்ணே–கிருஷ்ணரால்; த்வாரகாயா-துவாரகா நகரின்; குல-ஸ்த்ரிய:—மரியாதைக்குரிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்; ஹர்ம்யாணி-மாளிகைகளின் மேல்; ஆருருஹு-ஏறி; விப்ர-ஓ பிரணர்களே; தத்-ஈக்ஷண—அவரைக் (கிருஷ்ணர்) காண்பதற்காகவே; மஹா-உத்ஸவா:—மிகச்சிறந்த விழாவாக எண்ணினர்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பொது சாலைகளைக் கடந்து சென்றபொழுது, துவாரகையின் மதிப்பிற்குரிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அனைவரும், இதை மிகச்சிறந்த விழாவாகக் கருதி, பகவானை தரிசிப்பதற்காக அவர்களுடைய மாளிகைகளின் கூரைகளுக்குச் சென்றனர்.
பதம் 1.11.25
நித்யம் நிரீக்ஷமானானாம் யத் அபி த்வாரகௌகஸாம்
ந வித்ருப்யந்தி ஹி த்ருச: ஸ்ரீயோ தாமாங்கம் அச்யுதம்
நித்யம்- ஒழுங்காக, எப்பொழுதும்; நிரீக்ஷமானானாம்—அவரைக் காண்பவர்களின்; யத்-என்றாலும்; அபி—என்றபோதிலும்; த்வாரகா-ஓகஸாம்:—துவாரகா வாசிகள்; ந-ஒருபோதும் இல்லை; வித்ருப்பயந்தி-திருப்தியடைந்தனர்; ஹி-அப்படியே; த்ருச:— காட்சி; ஸ்ரீய:-அழகுகள்; தாம-அங்கம்—களஞ்சியம் போன்ற உடல்; அச்யுதம்:— குறையற்றவர்.
துவாரகா வாசிகள், அழகுக் களஞ்சியமான குறையற்ற பகவானை அடிக்கடி காண்பதில் பழக்கப்பட்டிருந்தனர் என்றபோதிலும், அதில் அவர்களுக்கு சலிப்பே ஏற்படவில்லை.
பதம் 1.11.26
ஸ்ரீயோ நிவாஸோ யஸ்யோர: பான-பாத்ரம் முகம் த்ருசாம்
பாஹவோ லோக-பாலானாம் ஸாரங்காணம் பதாம்புஜம்
ஸ்ரீய:-ஸ்ரீ தேவியின்; நிவாஸ:-வசிப்பிடம்; யஸ்ய-யாருடைய; உர-மார்பு; பான பாத்ரம்—அருந்தும் பாத்திரம்: முகம்-முகம்; த்ருசாம்-கண்களின்; பாஹவ:-கரங்கள்; லோக-பாலானம்:—பரிபாலனம் செய்யும் தேவர்களின்; ஸாரங்காணாம்—கருப்பொருளை அல்லது சாராம்சத்தைப் பற்றி பேசிக் கொண்டும். பாடிக்கொண்டும் இருக்கும் பக்தர்களின்; பதஅம்புஜம்- தாமரைப் பாதங்கள்.
பகவானின் மார்பு ஸ்ரீ தேவியின் வசிப்பிடமாகும். நிலவைப் போன்ற அவரது முகம், அழகுப் பொருட்களை எல்லாம் பருகிவிட விரும்பும் கண்களுக்கு அருந்தும் பாத்திரமாகும். அவரது கரங்கள் லோக பரிபாலனம் செய்யும் தேவர்களுக்கு இளைப்பாறும் இடங்களாகும். மேலும் அவரது தாமரைப் பாதங்கள், பெருமானைத் தவிர வேறெதையும் ஒருபோதும் பேசாத பாடாத தூய பக்தர்களின் புகலிடமாகும்.
பதம் 1.11.27
ஸிதாத பத்ர-வ்யஜனைர் உபஸ்க்ருத:
ப்ரஸூன-வர்ஷைர் அபிவர்ஷித:பதி
பிசங்க-வாஸா வன-மாலயா பபௌ
கன யதார்கோடுப-சாப-வைத்யுதை:
ஸித-ஆதபத்ர:—வெண்குடை; வ்யஜனை:-ஒரு வெண்சாமரத்தால்; உபஸ்க்ருத:- சேவை செய்யப்பட்டு; ப்ரஸூன—மலர்கள்; வர்ஷைர்-மழைகளால்; அபிவர்ஷித:-இவ்வாறு மூடப்பட்டு; பதி-சாலையில்; பிசங்க-வாசா:—மஞ்சள் நிற ஆடைகளால்; வன-மாலயா:—மலர் மாலைகளால்; பபௌ – இது இப்படி ஆயிற்று; கன-மேகம்; யதா:- போல்; அர்க-சூரியன்; உடுப-சந்திரன்; சாப-வானவில்; வைத்யுதை:-மின்னலால்.
பகவான் துவாரகையின் பொது சாலையில் சென்றபொழுது, வெண்குடையொன்று அவருடைய தலையை சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்தது. வெள்ளை இறகுகளைக் கொண்ட விசிறிகள் அரை வட்டமாக அசைந்தன. மேலும் சாலையின் மேல் மலர்கள் பொழிந்தன. அவரது மஞ்சள் நிற ஆடைகளும், மலர்மாலைகளும் காண்பதற்கு, இருண்ட மேகம் ஒன்றை சூரியன், சந்திரன், மின்னல் மற்றும் வானவில் ஆகியவை ஒரே நேரத்தில் சூழ்த்து கொண்டிருந்ததைபோல் காணபட்டன.
பதம் 1.11.28
ப்ரவிஷ்டஸ் து க்ருஹம் பித்ரோ: பரிஷ்வக்த: ஸ்வ-மாத்ருபி:
வவந்தே சிரஸா ஸப்த தேவகீ-ப்ரமுகா முதா
ப்ரவிஷ்ட – நுழைந்தபின்; து-ஆனால்; க்ருஹம்-வீடுகள்; பித்ரோ- தந்தையின்; பரிஷ்வக்த-தழுவிக்கொள்ளப்பட்டார்; ஸ்வ மாத்ருபி:- அவரது சொந்த தாய்களால்; வவந்தே-வணங்கினர்; சிரஸா- அவரது தலை: ஸப்த -ஏழு; தேவகீ-தேவகி; ப்ரமுகா- தலைமையிலான: முதா-மகிழ்ச்சியுடன்.
அவரது தந்தையின் வீட்டிற்குள் புகுந்ததும், (அவரது உண்மையான தாயான) தேவகியை தலைமையாகக் கொண்ட தாய்களால் அவர் தழுவிக்கொள்ளப்பட்டார். பகவானும் தமது தலையை அவர்களுடைய பாதங்களில் வைத்து அவர்களை வணங்கினார்.
பதம் 1.11.29
தா: புத்ரம் அங்கம் ஆரோப்ய ஸ்னேஹ-ஸ்னுத-பயோதரா:
ஹர்ஷ-விஹ்வலிதாத்மான:ஸிஷிசுர் நேத்ரஜைர் ஜலை:
தா—அவர்கள் அனைவரும்; புத்ரம்-புத்திரர்; அங்கம்- மடியில்; ஆரோப்ய-அமர்த்தியதும்; ஸ்னேஹ-ஸ்னுத:—பாசத்தால் நனைந்த; பயோதரா:—ஸ்தனங்கள் பொங்கி வழிந்தன: ஹர்ஷ- இன்பம்; விஹ்வலித-ஆத்மான—அதனால் பரவசமடைத்தனர்; ஸிஷிசு:—ஈரமான; நேத்ரஜை-கண்களிலிருந்து; ஜலை—நீர்.
தங்களது புதல்வனை தழுவிக்கொண்ட அவர்கள், பிறகு அவரை தங்களது மடிகளில் அமர்த்திக் கொண்டனர். தூய அன்பினால், அவர்களது ஸ்தனங்களிலிருந்து பால் சுரந்தது. ஆனந்தப் பரவசத்தால் கண்களிலிருந்து பெருகிய அவர்களுடைய கண்ணீர் பகவானை நனைத்தது.
பதம் 1.11.30
அதாவிசத் ஸ்வ-பவனம் ஸர்வ-காமம் அனுத்தமம்
ப்ராஸாதா யத்ர பத்னீனாம் ஸஹஸ்ராணி ச ஷோடச
அத-அதன் பிறகு: அவிசத்-புகுந்தார்; ஸ்வ பவனம்—-சொந்த அரண்மனைகள்; ஸர்வ-எல்லா; காமம்- ஆசைகள்: அனுத்தமம்- முற்றிலும் பூரணமாக இருந்த; ப்ராஸாத—அரண்மனைகள்; யத்ர-எங்கு: பத்னீனா – என்ற எண்ணிக்கையைக் கொண்ட மனைவிகளின்; ஸஹஸ்ராணி:—ஆயிரக்கணக்கான; ச-அதற்கு மேலும்; ஷோடச- பதினாறு.
அதன் பிறகு, பகவான் முற்றிலும் பூரணமாக இருந்த அவரது சொந்த அரண்மனைகளுக்குள் புகுந்தார். பதினாறாயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்ட அவரது மனைவிகள் அவற்றில் வாழ்ந்தனர்.
பதம் 1.11.31
பத்ன்ய: பதிம் ப்ரோஷ்ய க்ருஹானுபாகதம்
விலோக்ய ஸஞ்சாத-மனோ-மஹோத்ஸவா:
உத்தஸ்துர் ஆராத் ஸஹஸாஸனாசயாத்
ஸாகம் வ்ரதைர் வ்ரீடித-லோசனானனா:
பத்ன்ய-பெண்மணிகள் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவிகள்); பதிம்-கணவர்; ப்ரோஷ்ய – வெளியில் சென்றிருந்த; க்ருஹ அனுபாகதம்—இப்பொழுது வீடு திரும்பியுள்ள; விலோக்ய—கண்டதும்; ஸஞ்சாத—ஏற்படுத்திக் கொண்டு; மன: மஹா உத்ஸவா:—மனதில் கொண்டாட்டமான உணர்வுடன்; உத்தஸ்து-எழுந்தனர்; ஆராத்-தூரத்திலிருந்து; ஸஹஸா—திடீரென்று; ஆஸனா-ஆசனங்களிலிருந்து; ஆசயாத்-தியான நிலையிலிருந்து; ஸாகம்-அதனுடன்; வ்ரதை:- விரதம்; வ்ரீடித – நாணத்துடன் பார்த்து; லோசன-கண்கள்; ஆனனா- அத்தகைய முகங்களுடன்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ராணிகள், நீண்ட நாட்களுக்குப் பின் அயலூலிரிருந்து வீடு திரும்பிய தங்கள் கணவரைக் கண்டு மன மகிழ்ந்தனர். ராணிகள் உடனடியாக தங்களது ஆசனங்களிலிருந்தும், தியானங்களிலிருந்தும் எழுந்து, சமூக வழக்கப்படி கூச்சத்துடன் தங்களுடைய முகங்களை மூடிக்கொண்டு, நாணத்துடன் பார்த்தனர்.
பதம் 1.11.32
தம் ஆத்மஜைர் த்ருஷ்டிபிர் அந்தராத்மனா
துரந்த-பாவா: பரிரேபிரே பதிம்
நிருத்தம் அபி ஆஸ்ரவத் அம்பு நேத்ரயோர்
விலஜ்ஜதீனாம் ப்ருகு-வர்ய வைக்லவாத்
தம்—அவரை (பகவானை); ஆத்மஜை-மகன்களால்; த்ருஷ்டிபி -பார்வையால்; அந்தர-ஆத்மனா—இதயத்தின் அந்தரங்கப்பகுதியால்; துரந்த-பாவா:—கடக்க முடியாத பரவசம்; பரிரேபிரே-தழுவினர்; பதிம்-கணவரை; நிருத்தம்-மூச்சுத் திணறடித்தது; அபி-அப்படி யிருந்தும்; ஆஸ்ரவத்-கண்ணீர்; அம்பு—நீர்த்துளிகளைப் போல்; நேத்ரயோ-கண்களிலிருந்து; விலஜ்ஜதீனாம்—வெட்கத்தில் இருந்தவரகளின்; ப்ருகு-வர்ய:—பிருகுகளில் முதன்மையானவரே; வைக்லவாத்- தவறுதலாக.
பரவசம் கடக்க முடியாத அளவிற்கு தீவிரம் அடைந்திருந்ததால், வெட்கப்பட்ட ராணிகள் முதலில் பகவானை அவர்களுடைய இதயங்களால் தழுவிக் கொண்டனர். பிறகு பார்வையால் தழுவினர். அதன்பிறகு தங்களுடைய மகன்களை அனுப்பி அவரை தழுவிக்கொள்ளச் செய்தனர். (இது தாங்களாகவே தழுவிக் கொள்வதற்குச் சமமாகும்). ஆனால், பிருகுகளில் தலைமைானவரே, தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்றபோதிலும், தங்களை அறியாமலேயே அவர்கள் கண்ணீர் சிந்தினர்.
பதம் 1.11.33
யத்யபி அஸௌ பார்ஸ்வ-கதோ-ரஹோ-கதஸ்
ததாபி தஸ்யாங்ரி-யுகம் நவம் நவம்
பதே பதே கா விரமேத தத்-பதாச்
சலாபி யச் ஸ்ரீர் ந ஜஹாதி கர்ஹிசித்
யதி-எனினும்; அபி-நிச்சயமாக; அஸௌ-அவர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்); பார்ஸ்வ கத-பக்கத்திலேயே; ரஹ: கத- பிரத்தியேகமாக தனிப்பட்ட முறையில்; ததாபி-ஆயினும்; தஸ்ய- அவரது; அங்ரி-யுகம்:— பகவானின் பாதங்கள்; நவம் நவம்- புதிது புதிதாக; பதே -அடி; பதே-ஒவ்வொரு அடியிலும்; கா-யார்; விரமேத-அதிலிருந்து விடுபட முடியும்; தத் பதாத்- அவரது பாதங்களிலிருந்து; சலாபி–அசையும்; யத்-யாரை; ஸ்ரீ-லக்ஷ்மிதேவி; ந-ஒருபோதும் இல்லை; ஜஹாதி- விட்டு விலகுகிறாள்; கர்ஹிசித்-எச்சமயத்திலும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இடையறாது அவர்கள் பக்கத்திலேயே இருந்த போதிலும், அவரது பாதங்கள் அவர்களுக்கு ஒவ்வொரு தடவையும் புத்தம் புதியதாகவே காட்சியளித்தன. லஷ்மிதேவி எப்பொழுதும் இயற்கையாகவே ஓய்வின்றி, நடமாடிக் கொண்டே இருந்தாலும், அவளால் பகவானுடைய பாதங்களை விட்டு விலக இயலவில்லை. எனவே அத்தகைய பாதங்களில் ஒருமுறை புகலிடம் கொண்ட எந்த பெண்ணால் அவற்றை விட்டு விலக இயலும்.
பதம் 1.11.34
ஏவம் நீருபாணாம் க்ஷிதி-பார-ஜன்மனாம்
அக்ஷௌஹிணீபி: பரிவ்ருத்த-தேஜஸாம்
விதாய வைரம் ஸ்வஸனோ யதானலம்
மிதோ வதேனோபரதோ நிராயுத:
ஏவம் – இவ்வாறாக; த்ருபாணாம்— அரசர்கள் அல்லது நிர்வாகிகளின்; க்ஷிதி பார—பூமியின் பாரத்தை; ஜன்மனாம்- அவ்வாறு பிறந்த; அக்ஷௌஹிணீபி-குதிரை, யானை, தேர் மற்றும் காலாட் படைகளின் பலத்தைப் பெற்றிருந்த; பரிவ்ருத்த-அத்தகைய சூழ்நிலைகளால் திமிர்பிடித்தவர்களாகி; தேஜஸாம்-சக்தி; விதாய-உருவாக்கி; வைரம் -விரோதம்; ஸ்வஸன-காற்று மற்றும் குழல் செடிகள் ஆகியவற்றின் சேர்க்கை; யதா—உள்ளபடி; அனலம்-தீ; மித-ஒன்றோடொன்று; வதேன—அவர்களைக் கொல்வதால்; உபரத-பளுவைக் குறைத்தார்; நிராயுத-அப்போரில் பங்கு கொள்ளாமல் அவராலேயே.
பூமிக்கு பாரமாக இருந்த அந்த அரசர்களைக் கொன்றபின் பகவான் சமாதனமடைந்தார். தங்களுடைய குதிரைப்படை, யானைப்படை, இரதப்படை மற்றும் காலட்படை போன்ற படைகளில் பலத்தினால் அவர்கள் திமிர்பிடித்தவர்களாக மாறியிருந்தனர். பகவான் எந்த கட்சிக்காகவும் போரிடவில்லை. ஆனால் சக்தி வாய்ந்த அரசர்களுக்கிடையில் போரை மட்டுமே அவர் தூண்டிவிட்டார். தங்களுக்கிடையில் அவர்கள் போர் செய்து கொண்டனர். அவர் மூங்கில்களுக்கிடையில் உராய்வை ஏற்படுத்தி, தீப்பொறியை விளைவிக்கும் காற்றைப் போல் நடந்துகொண்டார்.
பதம் 1.11.35
ஸ ஏஷ நர-லோகே ‘ஸ்மின் அவதீர்ண ஸ்வ-மாயயா
ரேமே ஸ்த்ரி-ரத்ன-கூடஸ்தோ பகவான் ப்ராக்ருதோ யதா
ஸ -அவர் (பரம புருஷர்); ஏஷ—இவ்வெல்லா; நர-லோகே:-மனிதர்களின் இவ்வுலகில்; அஸ்மின்-இதில்; அவதீர்ண:-தோன்றி; ஸ்வ—சுய, அந்தரங்கமான; மாயயா-காரணமற்ற கருணை; ரேமே- அனுபவித்தார்; ஸ்திர-ரத்ன:—பகவானின் மனைவியாகும் தகுதியைப் பெற்ற பெண்கள்; கூடஸ்த:-இடையில்; பகவான்-பரம புருஷ பகவான்; ப்ராக்ருத:-இகலோக; யதா-உள்ளதைப் போலவே.
அந்த பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணர், அவரது காரணமற்ற கருணையால், அவரது அந்தரங்க சக்தியின் வாயிலாக இந்த பூமியில் தோன்றி, பௌதிக விவகாரங்களில் ஈடுபட்டிருப்பதைப் போலவே, நல்ல பெண்மணிகளுக்கு இடையில் இன்பம் அனுபவித்தார்.
பதம் 1.11.36
உத்தாம-பாவ-பிசுனாமல-வல்கு-ஹாஸ
வ்ரீடாவலோக-நிஹதோ மதனோ ‘பி யாஸாம்
ஸம்முஹ்ய சாபம் அஜஹாத் ப்ரமதோத்தமாஸ் தா
யஸ்யேந்ரியம் விமதி தும் குஹகைர் ந சேகு:
உத்தாம-மனம் ஆழ்ந்த; பாவ- முகத் தோற்றம்; பிசுன கிளர்ச்சியூட்டக் கூடியது; அமல-மாசற்ற; வல்கு-ஹாஸ:—அழகிய புன்சிரிப்பு; வ்ரீட—கடைக்கண்; அவலோக-பார்க்கும்; நிஹத-தோற்கடித்தன; மதன-மன்மதன் (அல்லது “அமதன”—சகிப்பு நிறைந்த சிவன்); அபி-மேலும்; யாஸாம்-யாருடைய; ஸம்முஹ்ய- வெற்றிகொள்ளப்பட்டு; சாபம்-வில்; அஜஹாத்-கைவிட்டார்; ப்ரமத-பைத்தியம் பிடிக்கச் செய்யும் பெண்; உத்தமா- உயர்ந்த தரத்தின்; தா—எல்லா; யஸ்ய-யாருடைய; இந்ரியம் – புலன்கள்; விமதிதும்-கிளற; குஹகை-ஜால வித்தைகளால்; ந-ஒருபோதும் இல்லை; சேகு-இயன்றது.
ராணிகளின் அழகிய புன்னகைகளும், கள்ளப் பார்வைகளும் மாசற்றவையாகவும், கிளர்ச்சியூட்டக்கூடியதாகவும் இருந்தது. அவை மன்மதனை அவனது வில்லைத் துறக்கும்படிச் செய்து அவனையே தோற்கடிக்கும்படி இருந்தது. சகிப்புமிக்க சிவனும்கூட ராணியரின் இச்செயலுக்கு இரையாகிவிடக்கூடும், என்றாலும் அவர்களது ஜால வித்தையாலும், கவர்ச்சியாலும் பகவானை கிளர்ச்சியூட்ட முடியவில்லை.
பதம் 1.11.37
தம் அயம் மன்யதே லோகோ ஹி அஸங்கம் அபி ஸங்கினம்
ஆத்மௌபம்யேன மனு ஜம் வ்யாப்ருண்வானம் யதோ ‘புத:
தம்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை; அயம்—இவ்வெல்லா (சாதாரண மனிதர்கள்); மன்யதே-மனக் கற்பனை செய்கின்றனர்; லோக-பந்தப்பட்ட ஆத்மாக்கள்; ஹி- நிச்சயமாக; அஸங்கம்—பற்றற்றவர்; அபி-எனினும்; ஸங்கினம்—பாதிப்படைகிறார்; ஆத்ம-ஆத்மா; ஒளபம்யேன-ஆத்மாவுடன் ஒப்பிடுவதால்; மனுஜம்- சாதாரண மனிதன்; வ்யாப்ருண்வானம்-ஈடுபட்டிருப்பதால்; யத: ஏனெனில் அபுத:-அறியாமையின் காரணத்தால் முட்டாள்தனமாக.
பௌதிகவாதிகளாக உள்ள சாதாரண பந்தப்பட்ட ஆத்மாக்கள் பகவானை தங்களில் ஒருவராக கற்பனை செய்கின்றனர். பகவான் ஜடப் பொருளில் பற்றற்றவராக இருந்தபோதிலும், அப்பற்றினால் அவர் பாதிப்படைகிறார் என்று அறியாமையால் அவர்கள் நினைக்கின்றனர்.
பதம் 1.11.38
ஏதத் ஈசனம் ஈசஸ்ய ப்ரக்ருதி-ஸ்தோ ‘பி தத்-குணை:
ந யுஜ்யதே ஸதாத்ம-ஸ்தைர் யதா புத்திஸ் தத்-ஆஸ்ரயா
ஏதத்—இதுவே ; ஈசனம்- தெய்வீகத் தன்மை; ஈசஸ்ய-பரம புருஷரின்; ப்ரக்ருதி-ஸ்த:—ஜட இயற்கையுடன் தொடர்பு கொண்டதால்; அபி-இருந்தும்; தத்-குணை:-குணங்களால்; ந- ஒருபோதும் இல்லை; யுஜ்யதே-பாதிப்படைகிறார்; ஸதா-ஆத்ம-ஸ்தை:—நித்தியத் தன்மையில் இருப்பவர்களால்; யதா—உள்ளதுபோல்; புத்தி- புத்தி; தத்—பகவானின்; ஆஸ்ரயா-பாதுகாப்பில் உள்ளவர்கள்.
இதுவே பரம புருஷரின் தெய்வீகத் தன்மையாகும். ஜட இயற்கைக் குணங்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தபோதிலும், அவற்றினால் அவர் பாதிப்படைவதில்லை. அதைப் போலவே, பகவானிடம் புகலிடம் கொண்ட பக்தர்களும் இயற்கைக் குணங்களால் கவரப்படுவதில்லை.
பதம் 1.11.39
தம் மேனிரே ‘பலா மூடா: ஸ்த்ரைணம் சானுவ்ரதம் ரஹ:
அப்ரமாண-விதோ பர்துர் ஈஸ்வரம் மதயோ யதா
தம்-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை; மேனிரே-முடிவுக்கு வந்தனர்; அபலா—உயர்ந்த பண்பாடு; மூடா- எளிமையின் காரணத்தால்; ஸ்த்ரைணம்—மனைவியால் ஆளப்படுபவர்; ச-மேலும்; அனுவ்ரதம்—பின்பற்றுபவர்; ரஹ:-தனிமையான இடம்; அப்ரமாண-வித:—பெருமைகளின் அளவை அறிந்திருக்கவில்லை; பர்து- அவர்களது கணவரின்; ஈஸ்வரம்-பரம ஆளுநர்; மதய:— விஷயம்; யதா-உள்ளபடி.
எளிமையும், உயர்ந்த பண்பாடும் கொண்ட பெண்கள், தங்களுடைய அன்பிற்குரிய கணவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உண்மையாகவே அவர்களைப் பின்பற்றினார் என்றும் அவர்களாலேயே ஆளப்பட்டார் என்றும் எண்ணினர். பகவான் பரம ஆளுநரென்பதை நாஸ்திகர்கள் அறியாதிருப்பதைப் போலவே, அவர்களும் தங்களுடைய கணவரது பெருமைகளின் அளவை அறிந்திருக்கவில்லை.
ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகைக்குள் பிரவேசித்தல்” எனும் தலைப்பைக் கொண்ட, பதினொன்றாம் அத்தியாயத்திற்கான பக்திவேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.