அத்தியாயம் – 3
கிருஷ்ணரே எல்லா அவதாரங்களுக்கும் மூலம்
பதம் 1.3.1 : சூதர் கூறினார்; படைப்பின் துவக்கத்தில், புருஷ அவதாரத்தின் விஸ்வ ரூபமாக பகவான் தம்மை விரிவடையச் செய்து, பௌதிக படைப்புக்கான மூலப்பொருட்கள் அனைத்தையும் தோற்றுவித்தார். இவ்வாறாக முதலில் பௌதிக இயக்கத்திற்குரிய பதினாறு மூலப்பொருட்கள் படைக்கப்பட்டன. இம்மூலப் பொருட்கள் ஜடப் பிரபஞ்சத்தை படைக்கும் நோக்கத்திற்காகவே உண்டாக்கப்பட்டன.
பதம் 1.3.2 : புருஷரின் ஒரு பாகம் பிரபஞ்ச நீரில் பள்ளி கொண்டிருக்க, அவரது உடலின் நாபிக் குளத்திலிருந்து ஒரு தாமரைத்தண்டு முளைக்கிறது. இத்தாமரைத் தண்டின் மீதுள்ள தாமரை மலரிலிருந்து, பிரபஞ்சத்திலுள்ள சிருஷ்டி கர்த்தாக்கள் அனைவருக்கும் தலைவரான பிரம்மா தோன்றுகிறார்.
பதம் 1.3.3 : பிரபஞ்ச கிரக அமைப்புக்கள் அனைத்தும் புருஷரின் பரந்த உடலின் மீதுதான் அமைந்துள்ளன என்று நம்பப்படுகிறது. ஆனால் பௌதிக மூலப் பொருட்களோடு அவருக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. அவரது உடல் மிகச்சிறந்த ஆன்மீக நிலையிலேயே எப்பொழுதும் இருக்கிறது.
பதம் 1.3.4 : அற்புதமான கால்கள், தொடைகள், கரங்கள் மற்றும் முகங்கள் ஆகியவற்றை ஆயிரக்கணக்கில் பெற்றிருப்பவரான, தெய்வீக வடிவிலுள்ள புருஷரை, பக்தர்கள் தங்களது பக்குவமடைந்த கண்களினால் காண்கின்றனர். அவ்வுடலில் ஆயிரக்கணக்கான தலைகள், காதுகள், கண்கள் மற்றும் மூக்குகள் ஆகியவை உள்ளன. அவை ஆயிரக்கணக்கான கிரீடங்களாலும், பிரகாசிக்கும் குண்டலங்களாலும் மற்றும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
பதம் 1.3.5 : பிரபஞ்சத்திலுள்ள பல வகையான அவதாரங்களுக்கு மூலமாகவும் அழிவற்ற வித்தாகவும் இருப்பது இந்த வடிவமேயாகும் (புருஷ அவதாரத்தின் இரண்டாவது வடிவம்). இந்த வடிவத்தின் அணுக்களிலும் பகுதிகளிலும் இருந்தே தேவர்களும், மனிதர்களும், பல்வேறு ஜீவராசிகளும் படைக்கப்பட்டனர்.
பதம் 1.3.6 : முதன்முதலாக, படைப்பின் துவக்கத்தில், பிரம்மாவின் திருமணமாகாத நான்கு புத்திரர்கள் (குமாரர்கள்) இருந்தனர். இவர்கள் பரபிரம்மத்தை உணரும் பொருட்டு பிரம்மச்சாரிய விரதத்தை ஏற்றிருந்ததால், கடுந்தவங்களை மேற்கொண்டனர்.
பதம் 1.3.7 : எல்லா யாகங்களையும் அனுபவிப்பவரான பரம புருஷர் ஒரு பன்றியின் அவதாரத்தை (இரண்டாம் அவதாரம்) ஏற்றார். மேலும் பூமியின் நன்மைக்காக அவர் பிரபஞ்சத்தின் மிகத் தாழ்ந்த பிரதேசத்திலிருந்து அதை உயர்த்தினார்.
பதம் 1.3.8 : ரிஷிகளின் யுகத்தில், முழுமுதற் கடவுள், தேவரிஷி நாரதரின் வடிவில், மூன்றாவது சக்தியாவேஷ (சக்தியளிக்கப்பட்ட) அவதாரத்தை ஏற்றார். இவர், தேவர்களுக்கு இடையில் சிறந்த முனிவராக இருக்கிறார். அவர் பக்தித் தொண்டிற்குச் சம்பந்தப்பட்டவையும் பலன் கருதாத செயல்களை ஊக்குவிக்கக்கூடிய வேதங்களின் விளக்கவுரைகளையும் தொகுத்தார்.
பதம் 1.3.9 : நான்காவது அவதாரத்தில், பகவான் தர்ம மகாராஜனின் மனைவிக்கு நரன், நாராயணன் எனும் இரட்டைக் குழந்தைகளாக அவதரித்தார். இவ்வாறாக புலன்களைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுதாரணமாக விளங்கும் கடுந்தவங்களை அவர் மேற்கொண்டார்.
பதம் 1.3.10 : ஐந்தாவது அவதாரமான பகவான் கபிலர் பூரணத்துவம் பெற்றவர்களிலேயே முதன்மையானவராவார். படைப்பிற்குரிய மூலப்பொருட்களையும் பௌதிக தத்துவத்தையும் பற்றிய ஒர் விளக்கத்தை அவர் ஆஸுரி பிராமணருக்கு அளித்தார். ஏனெனில் காலப்போக்கில் இவ்வறிவு மறைந்து போய்விட்டது.
பதம் 1.3.11 : புருஷரின் ஆறாவது அவதாரம் அத்ரி முனிவரின் புதல்வராகத் தோன்றினார். ஓர் அவதாரத்திற்காக பிரார்த்தனை செய்த அனஸுயாவின் கர்ப்பத்திலிருந்து அவர் பிறந்தார். அலர்கா, பிரகலாதரிடமும், மற்றவர்களிடமும் (யது, ஹைஹய முதலானவர்கள்) ஆன்மீக விஷயத்தைப் பற்றி பேசினார்.
பதம் 1.3.12 : பிரஜாபதி ருசி மற்றும் அவரது மனைவியான ஆகூதி ஆகியோரின் புத்திரரான யக்ஞர் ஏழாவது அவதாரமாவார். சுயம்புவ மனுவின் ஆட்சிக்காலம் மாறிய பிறகு அவர் ஆட்சி நடத்தினார். அவரது புதல்வரான யமனைப் போன்ற தேவர்கள் அவருக்கு உதவியாக இருந்தனர்.
பதம் 1.3.13 : நாபி மகாராஜன் மற்றும் அவரது மனைவியான மேருதேவி ஆகியோரின் புதல்வரான ரிஷப மகாராஜன் எட்டாவது அவதாரமாவார். இந்த அவதாரத்தில் பகவான் பூரணத்துவம் பெறும் வழியைக் காட்டினார். புலன்களை முழுமையாக கட்டுப்படுத்தியவர்களாலும், எல்லோருடைய மரியாதைக்கும் உரியவர்களாலும் இவ்வழி பின்பற்றப்படுகிறது.
பதம் 1.3.14 : பிராமணர்களே, ஒன்பதாவது அவதாரத்தில், பகவான், முனிவர்களின் பிரார்த்தனையால் ஓர் அரசரின் (பிருது) உடலை ஏற்றார். அவர் அநேக விளைச்சல்களை உற்பத்தி செய்வதற்காக நிலத்தை உழுது பயிரிட்டார். அதனால் பூமி அழகாகவும், கவர்ச்சியாகவும் காணப்பட்டது.
பதம் 1.3.15 : சாக்ஷஷ மனுவின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, முழுமையான ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, உலகம் நீருக்கடியில் மூழ்கிவிட்டது. ஒரு மீனின் (மச்சம்) வடிவத்தை ஏற்ற பகவான், வைவஸ்வத மனுவை ஒரு படகில் ஏறிக்கொள்ளச் செய்து அவரைக் காப்பாற்றினார்.
பதம் 1.3.16 : பதினொன்றாவது அவதாரமாகத் தோன்றிய பகவான் ஒரு ஆமையின் வடிவத்தை ஏற்றார். அப்போது பிரபஞ்சத்தைச் சேர்ந்த சுர, அசுரர்களால் மத்தாக பாவிக்கப்பட்ட மந்தார மலைக்கு அவரது ஓடு ஒரு சுழலச்சாக இருந்தது.
பதம் 1.3.17 : பன்னிரண்டாவது அவதாரத்தில் பகவான் தன்வந்தரியாகத் தோன்றினார். பதின்மூன்றாவது அவதாரத்தில், ஒரு பெண்ணின் கவர்ச்சிமிகுந்த அழகின் மூலமாக அவர் அசுரர்களை (நாத்திகர்களை) மயக்கி, தேவர்கள் பருகுவதற்காக அமிர்தத்தைக் கொடுத்தார்.
பதம் 1.3.18 : பதினான்காவது அவதாரத்தில் பகவான் நாசிம்மஹராகத் தோன்றினார். தச்சனொருவன் பிரம்பைத் துளைத்து இரண்டாக பிளப்பதைப் போலவே, அசுரனான ஹிரண்யகசிபுவின் உறுதியான உடலை அவர் தமது நகங்களினால் இரண்டாகப் பிளந்தார்.
பதம் 1.3.19 : பதினைந்தாவது அவரதாரத்தில் பகவான் குள்ள பிராமணரின் (வாமனரின்) வடிவத்தை ஏற்று, பலி மகாராஜன் ஏற்பாடு செய்த யாக அரங்கிற்குச் சென்றார். மூன்று கிரக அமைப்புக்களையும் கொண்ட இராஜ்ஜியத்தைத் திரும்ப அடைய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிய போதிலும், மூன்றடி நிலத்தை மட்டுமே அவர் யாசித்தார்.
பதம் 1.3.20 : பதினாறாவது அவதாரத்தில் பகவான் (பிருகுபதியாக) அவதரித்தார். அரசாளும் பிரிவினர் பிராமணர்களை (புத்திசாலி பிரிவினர்) எதிர்த்து செயற்பட்டதால் அவர்கள் மீது கோபம் கொண்ட பகவான், அரசாளும் பிரிவினரை (க்ஷத்திரியர்களை) இருபத்தோரு தடவைகள் வதம் செய்தார்.
பதம் 1.3.21 : அதன் பிறகு பகவானின் பதினேழாவது அவதாரத்தில் ஸ்ரீல வியாசதேவர் தோன்றினார். அவர் பராசர முனிவருக்கும் சத்தியவதிக்கும் புத்திரராக அவதரித்தார். பொதுவாக மக்கள் குறைந்த அறிவுள்ளவர்களாக இருப்பதைக் கண்ட அவர், ஒரு வேதத்தை பல கிளைகளாகவும், உபகிளைகளாகவும் பிரித்தார்.
பதம் 1.3.22 : பதினெட்டாவது அவதாரத்தில் பகவான், மன்னராகிய ஸ்ரீ ராமராக அவதரித்தார். தேவர்களை திருப்திப்படுத்துவதற்காக அவர் இந்து மகா சமுத்திரத்தை அடக்கி, கடலுக்கு அப்புறமிருந்த இராவணனைக் கொன்று மனித சக்திக்கு அப்பாற்பட்ட தமது ஆற்றலை வெளிப்படுத்தினார்.
பதம் 1.3.23 : பத்தொன்பதாவது மற்றும் இருபதாவது அவதாரங்களில் பகவான் பலராமராகவும். ஸ்ரீ கிருஷ்ணராகவும் சுயமாகத் தோன்றினார். இவ்வாறு விருஷ்ணி குலத்தில் (யது வம்சத்தில்) தோன்றிய அவர் உலகின் சுமையைப் போக்கினார்.
பதம் 1.3.24 : பிறகு, கலியுக ஆரம்பத்தில், கயா மாநிலத்தில், அஞ்சனாவின் புதல்வராக புத்த பகவான் தோன்றுவார். நம்பிக்கையுள்ள ஆஸ்திகர்களிடம் பொறாமை கொண்டவர்களை தந்திரமாக வழிப்படுத்துவதே அவருடைய அவதார நோக்கமாகும்.
பதம் 1.3.25 : அதன் பிறகு, இரு யுகங்கள் இணையும் சமயத்தில், சிருஷ்டியின் அதிபதியான பகவான் கல்கி அவதாரத்தை ஏற்று, விஷ்ணு யசாவின் புதல்வராகத் தோன்றுவார். இச்சமயத்தில் பூமியை ஆள்பவர்கள் கெட்டு கொள்ளக்காரர்களாக மாறி இருப்பார்கள்.
பதம் 1.3.26 : பிராமணர்களே, பகவானுடைய அவதாரங்கள், வற்றாத நீர்த்தேக்கத்திலிருந்து பாய்ந்தோடும் சிற்றாறுகளைப் போல் எண்ணற்றவையாகும்.
பதம் 1.3.27 : பிரத்தியேகமான சக்தி பெற்றவர்களாகிய ரிஷிகள், மனுக்கள், தேவர்கள் மற்றும் மனு வம்சத்தினர் ஆகிய அனைவரும் பகவானுடைய அம்சங்கள் அல்லது அம்சங்களின் அம்சங்களாவர். இதில் பிரஜாபதிகளும் அடங்குவர்.
பதம் 1.3.28 : மேற்குறிப்பிட்ட அவதாரங்கள் அனைத்தும் பகவானின் அம்சங்களோ அல்லது அம்சங்களின் அம்சங்களோதான். ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரோ மூல முழுமுதற் கடவுளாவார். நாஸ்திகர்களால் தொல்லை விளைவிக்கப்படும் போதெல்லாம் அவர்களனைவரும் பிரபஞ்சத்தில் தோன்றுகின்றனர். ஆஸ்திகர்களைக் காப்பதற்காகவே பகவான் அவதரிக்கிறார்.
பதம் 1.3.29 : பகவானின் மர்மமான தோற்றங்களைப் பற்றி காலையிலும், மாலையிலும், சிரத்தையுடனும், பக்தியுடனும் படிப்பவர் யாரக இருந்தாலும், அவர் வாழ்வின் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபடுவார்.
பதம் 1.3.30 : ஜடவுலகில் காணப்படும் பகவானின் விராட் ரூபம் அல்லது விஸ்வரூபத்தை பற்றிய கருத்து கற்பனையானதாகும். பகவானுக்கு உருவம் இருக்கிறது என்பதை குறைந்த அறிவு உள்ளவர்களையும், ஆரம்ப சாதகர்களையும் நம்பச் செய்வதற்காகவே அது உள்ளது ஆனால் உண்மையில் பகவானுக்கு பெளதிக உருவம் இல்லை.
பதம் 1.3.31 : மேகங்களும் புழுதியும் காற்றால் அடித்துச் செல்லப்படுகின்றன. ஆனால் ஆகாயம் மேகங்களால் சூழப்பட்டதாகவும், காற்று அசுத்தமாகவும் இருப்பதாக புத்தியில் தாழ்ந்தவர்கள் கூறுகின்றனர். அதைப் போன்றுதான், பெளதிகமான தேகாபிமான கருத்துக்களையும் கூட அவர்கள் ஜீவாத்மாவின் மீது சுமத்துகின்றனர்.
பதம் 1.3.32 : இந்த ஸ்தூல உருவத்திற்கு அப்பால் மற்றொரு சூட்சுமமான உருவம் இருக்கிறது. அது சாதாரண உருவத்தைப் போல் காணப்படக்கூடியதும், கேட்டறியதக்கதும், தோன்றக்கூடியதும் அல்ல. இந்த சூட்சும சரீரத்திற்கு அப்பாற்பட்ட ஜீவனுக்கு உருவம் இருக்கிறது. இல்லையெனில் தொடர்ந்து பிறவிகளை அவனால் ஏற்றிருக்க முடியாது.
பதம் 1.3.33 : ஸ்தூல மற்றும் சூட்சும உடல்களுக்கும், தூய ஆத்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை எப்போது ஒருவன் தன்னுணர்வின் வாயிலாக அறிகின்றானோ, அப்போது தன்னையும், பகவானையும் அவனால் காணமுடியும்.
பதம் 1.3.34 : பகவானின் கருணையினால், ஜீவராசியிடமுள்ள மாயா சக்தி ஒடுக்கப்பட்டு, அவனுடைய அறிவு முழுமையாக வளப்படுத்தப்படுகின்றது. இதனால் அவன் உடனே தன்னுணர்வுடன் கூடிய மெய்யறிவைப் பெற்று, அவனுடைய சுய மகிமையில் நிலை பெறுகிறான்.
பதம் 1.3.35 : பிறப்பற்றவராகவும், செயலற்றவராகவும் இருப்பவரின் பிறவிகளையும் செயல்களையும் அறிஞர்கள் இவ்வாறு விவரிக்கின்றனர். வேத நூல்களிலும் கூட கண்டறிய முடியாதவரான அவரே இதய தெய்வமாவார்.
பதம் 1.3.36 : களங்கப்படாத செயல்களைக் கொண்டவரான பகவான் ஆறு புலன்களுக்கும் எஜமானரும், ஆறு ஐஸ்வர்யங்களுடன் கூடிய முழு சக்தியைக் கொண்டவருமாவார். பிரபஞ்சங்களை அவர் படைத்து, காத்து; அழிக்கிறார் என்றாலும் அதனால் அவர் சிறிதும் பாதிப்படைவதில்லை. ஒவ்வொரு ஜீவராசியின் உள்ளேயும் இருப்பவரான அவர், எப்பொழுதும் சுதந்திரமாகவே இருக்கிறார்.
பதம் 1.3.37 : ஒரு நாடக நடிகரைப் போல் செயற்படும் பகவானின் உருவங்கள். நாமங்கள் மற்றும் செயல்கள் ஆகியவற்றின் உன்னத தன்மையை அறிவு பற்றாக்குறையாக உள்ள மூடர்களால் அறிய முடியாது. அத்தகைய விஷயங்களை அவர்களுடைய கற்பனைகளிலோ அல்லது வார்த்தைகளிலோ கூட அவர்களால் விவரிக்க முடியாது.
பதம் 1.3.38 : இரதத்தின் சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தயக்கம் இல்லாமலும், அனுகூலமான முறையிலும், இடைவிடாமல் தொண்டு செய்பவர்களால் மட்டுமே பிரபஞ்சத்தைப் படைத்தவரான அவரது புகழ், சக்தி மற்றும் உன்னத தன்மை ஆகியவற்றை முழுமையாக அறிய முடியும்.
பதம் 1.3.39 : இவ்வுலகில் இத்தகைய விசாரணைகளைச் செய்வதன் மூலமாக மட்டுமே ஒருவரால் வெற்றியையும், பரிபூரண உணர்வையும் பெற முடியும். ஏனெனில், அத்தகைய விசாரணைகள், அகில லோகங்களுக்கும் எஜமானரான முழுமுதற் கடவுளிடம் பரவசமான தெய்வீக அன்பை எழுப்பி, பயங்கரமான பிறப்பு, இறப்பெனும் தொடர்ச்சியில் இருந்து பூரணமான விடுதலைக்குரிய உத்தரவாதத்தை அளிக்கின்றன.
பதம் 1.3.40 : இந்த ஸ்ரீமத்-பாகவதம் பகவானின் இலக்கிய அவதாரமாகும். இது பகவானின் அவதாரமாகிய ஸ்ரீல வியாசதேவரால் தொகுக்கப்பட்டது. உலக மக்களின் இறுதி நன்மைக்காக ஏற்பட்டதாகும். மேலும் இது பூரண வெற்றியளிப்பதும், பேரின்பம் அளிப்பதும், பரிபூரணமானதும் ஆகும்.
பதம் 1.3.41 : ஸ்ரீல வியாசதேவர், வேத இலக்கியங்கள் மற்றும் பிரபஞ்ச சரித்திரங்கள் ஆகிய அனைத்தின் சாராம்சத்தையும் பிரித்தெடுத்தபின், அதை ஆத்ம ஞானிகளில் சிறந்தவரான தன் புத்திரருக்கு உபதேசித்தார்.
பதம் 1.3.42 : மரணத்தை எதிர்நோக்கி உணவும். நீரும் இல்லாமல் கங்கை நதிக் கரையில் அமர்த்துவிட்டவரான புகழ்பெற்ற பரீட்சித்து மகாராஜனுக்கு. வியாசதேவரின் புதல்வரான சுகதேவ கோஸ்வாமி பாகவதத்தை முறைப்படி உபதேசித்தார்.
பதம் 1.3.43 : இந்த பாகவத புராணம் சூரியனைப் போல் பிரகாசமானதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மதம், அறிவு போன்றவைகளுடன் அவரது சொந்த வசிப்பிடத்திற்கு புறப்பட்ட உடனேயே இது உதயமாகி இருக்கிறது. கலியுகத்தில் அறியாமை எனும் இருளினால் பார்வையை இழந்தவர்கள் இப்புராணத்திலிருந்து ஒளியைப் பெறலாம்.
பதம் 1.3.44 : கற்றறிந்த பிராமணர்களே, சுகதேவ கோஸ்வாமி அங்கு (பரீட்சித்து மகாராஜனுக்கு) பாகவதத்தைக் கூறியபொழுது, முழு கவனத்துடன் நானும் சக்தி வாய்ந்த அந்த மாமுனிவரின் அனுக்கிரகத்தால் அவரிடமிருந்து கேட்டறிந்த அவ்விஷயத்தை என் புத்திக்கெட்டியபடி உங்களுக்குச் சொல்ல முயற்சிக்கிறேன்.