அத்தியாயம் – 17
நம்பிக்கையின் பிரிவுகள்
பதம் 17.1
அர்ஜுன உவாச
யே ஷாஸ்த்ர- விதிம் உத்ஸ்ருஜ்ய யஜந்தே ஷ்ரத்தயான்விதா:
தேஷாம் நிஷ்டாது கா க்ருஷ்ண ஸத்த்வம் ஆஹோ ரஜஸ் தம:
அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; யே – எவரெல்லாம்; ஷாஸ்த்ர- விதியும் – சாஸ்திர விதிகளை; உத்ஸ்ரு’ஜ்ய – கைவிட்டு; யஜந்தே – வழிபடுகின்றனர்; ஷ்ரத்தயா – முழு நம்பிக்கையுடன்; அன்விதா: – ஏற்று; தேஷாம் — அவர்களின்; நிஷ்டா – நம்பிக்கை; து – ஆனால்; கா – என்ன; க்ரு’ஷ்ண – கிருஷ்ணரே; ஸத்த்வம் – ஸத்வ குணத்தில்; ஆஹோ – அல்லது; ரஜ: – ரஜோ குணத்தில்; தம: – தமோ குணத்தில்.
அர்ஜுனன் வினவினான்: கிருஷ்ணரே, சாஸ்திரங்களின் விதிகளைப் பின்பற்றாமல், தங்களது கற்பனைக்கேற்ப வழிபடுபவர்களின் நிலை என்ன? அவர்கள் இருப்பது ஸத்வ குணத்திலா, ரஜோ குணத்திலா, தமோ குணத்திலா?
பதம் 17.2
ஸ்ரீ-பகவான் உவாச
த்ரி–விதா பவதி ஷ்ரத்தா தேஹினாம் ஸா ஸ்வபாவ-ஜா
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஷ்ருணு
ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; த்ரி-விதா – மூன்று வகையாக; பவதி — ஆகின்றன; ஷ்ரத்தா – நம்பிக்கை; தேஹினாம் – உடலை உடையவனின்; ஸா – அந்த; ஸ்வ-பாவ-ஜா – அவனது சுபாவத்திற்கு ஏற்ப; ஸாத்த்விகீ – ஸத்வ குணத்தில்; ராஜஸீ – ரஜோ குணத்தில்; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; தாமஸீ – தமோ குணத்தில்; ச – மற்றும்; இதி – இவ்வாறு; தாம் – அவற்றை; ஷ்ரு’ணு – என்னிடமிருந்து கேள்.
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: உடல் பெற்ற ஆத்மாவின் சுபாவத்திற்கு ஏற்ப, அவனது நம்பிக்கை, ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்படலாம். இனி இவற்றைப் பற்றிக் கேட்பாயாக.
பதம் 17.3
ஸத்த்வானுரூபா ஸர்வஸ்ய ஷ்ரத்தா பவதி பாரத
ஷ்ரத்தா-மயோ (அ)யம் புருஷோ யோ யச்-ச்ரத்த: ஸ ஏவ ஸ:
ஸத்த்வ-அனுரூபா – இருப்பிற்கு ஏற்ப; ஸர்வஸ்ய – ஒவ்வொருவரின்; ஷ்ரத்தா – நம்பிக்கை; பவதி – ஆகின்றது; பாரத – பரதனின் மைந்தனே; ஷ்ரத்தா — நம்பிக்கை; மயா – முழு; அயம் – இந்த; புருஷ: – உயிர்வாழி; ய: – யார்; யத் – எந்த; ஷ்ரத்த: – நம்பிக்கை; ஸ: – இவ்வாறு; ஏவ – நிச்சயமாக; ஸ: – அவன்.
பரதனின் மைந்தனே, பல்வேறு இயற்கை குணங்களுக்குக் கீழான இருப்பிற்கு ஏற்ப ஒருவன் குறிப்பிட்ட நம்பிக்கையை விருத்தி செய்கிறான். உயிர்வாழி அவனுடைய குணங்களுக்கு ஏற்பவே ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை உடையவனாகக் கூறப்படுகிறான்.
பதம் 17.4
யஜந்தே ஸாத்த்விகா தேவான் யக்ஷ-ரக்ஷாம்ஸி ராஜஸா:
ப்ரேதான் பூத-கணாம்ஷ் சான்யே யஜந்தே தாமஸா ஜனா:
யஐந்தே – வழிபடுகின்றனர்; ஸாத்த்விகா: – ஸத்வ குணத்தில் இருப்பவர்கள்; தேவான் – தேவர்களை; யக்ஷ-ரக்ஷாம்ஸி – அசுரர்களை; ராஜஸா: – ரஜோ குணத்தில் இருப்பவர்கள்; ப்ரேதான் – பேய்கள்; பூத-கணான் – பூத கணங்கள்; ச – மற்றும்; அன்யே – பிறர்; யஜந்தே – வழிபடுகின்றனர்; தாமஸா: – தமோ குணத்தில்; ஜனா: – மக்கள்.
ஸத்வ குணத்தில் இருக்கும் மனிதர்கள் தேவர்களை வழிபடுகின்றனர், ரஜோ குணத்தில் இருப்பவர்கள் அசுரர்களை வழிபடுகின்றனர், தமோ குணத்தில் இருப்பவர்களோ பேய்களையும் பூத கணங்களையும் வழிபடுகின்றனர்.
பதம் 17.5 – 17.6
அஷாஸ்த்ர–விஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜனா:
தம்பாஹங்கார-ஸம்யுக்தா: காம-ராக–பலான்விதா:
கர்ஷயந்த: ஷரீர-ஸ்தம் பூத–க்ராமம் அசேதஸ:
மாம் சைவாந்த: ஷரீர-ஸ்தம் தான் வித்த்-யாஸுர-நிஷ்சயான்
அஷாஸ்த்ர – சாஸ்திரத்தில் இல்லாத; விஹிதம் – காட்டப்பட்ட; கோரம் – பிறருக்குத் தீங்கிழைக்கும்; தப்யந்தே – மேற்கொள்கின்றனர்; யே – அவர்கள்; தப: – தவங்கள்; ஜனா: – மனிதர்கள்; தம்ப – தற்பெருமை; அஹங்கார: – அஹங்காரம்; ஸம்’யுக்தா: – ஈடுபட்டு; காம – காமம்; ராக – பற்றுதல்; பல – பலத்தால்; அன்விதா – உந்தப்பட்டு; கர்ஷயந்த: – துன்புறுத்தி; ஷரீர்-ஸ்தம் — உடலினுள் அமைந்துள்ள; பூத-க்ராமம் – ஜட மூலக்கூறுகளின் கலவை; அசேதஸ: – தவறான மனோநிலையால்; மாம் – எனக்கு; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; அந்த: – உள்ளே; ஷரீர்-ஸ்தம் – உடலினுள் அமைந்துள்ள; தான் – அவர்கள்; வித்தி – அறியப்பட வேண்டும்; அஸுர-நிஷ்சயான் – அசுரர்களாக.
காமம் மற்றும் பற்றுதலின் பலவந்தத்தால் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படாத கடுமையான தவங்களை தற்பெருமையுடனும் அஹங்காரத்துடனும் செய்பவர்கள், உடலின் ஜட மூலக்கூறுகளைத் துன்புறுத்துவது மட்டுமின்றி உள்ளே உறைந்துள்ள பரமாத்மாவையும் துன்புறுத்துகின்றனர். அத்தகு முட்டாள்கள் அசுரர்களாக அறியப்படுகின்றனர்.
பதம் 17.7
ஆஹாரஸ் த்வபி ஸர்வஸ்ய த்ரி–விதோ பவதி ப்ரிய:
யக்ஞஸ் தபஸ் ததா தானம் தேஷாம் பேதம் இமம் ஷ்ருணு
ஆஹார: – உணவு; து – நிச்சயமாக; அபி – கூட; ஸர்வஸ்ய – ஒவ்வொருவரது; த்ரி-வித: – மூன்று விதமாக; பவதி – இருக்கின்றன; ப்ரிய: – பிரியமான; யஜ்ஞ: – யாகம்; தப: – தவம்; ததா – மற்றும்; தானம் — தானம்; தேஷாம் – அவர்களின்; பேதம் – வேறுபாடுகள்; இமம் — இந்த; ஷ்ரு’ணு -கேள்.
ஒவ்வொருவர் விரும்பும் உணவிலும்கூட ஜட இயற்கையின் முக்குணங்களுக்கு ஏற்ப மூன்று வகை உண்டு. இது யாகங்கள், தவங்கள், மற்றும் தானத்திற்கும் பொருந்தும். அவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளை தற்போது கேள்.
பதம் 17.8
ஆயு:-ஸத்த்வ–பலாரோக்ய- ஸுக–ப்ரீதி–விவர்தனா:
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்த்விக–ப்ரியா:
ஆயு: – ஆயுள்; ஸத்த்வ – இருப்பு; பல – பலம்; ஆரோக்ய – ஆரோக்கியம்; ஸுக – சுகம்; ப்ரீதி – திருப்தி; விவர்தனா: – அதிகப்படுத்துகின்ற; ரஸ்யா: – ரசம் உள்ள; ஸ்நிக்தா – கொழுப்புச் சத்து மிக்க; ஸ்திரா: – நீடித்திருக்கும்; ஹ்ரு’த்யா: – இதயத்திற்கு இதமான; ஆஹார – உணவு; ஸாத்த்விகா – ஸத்வ குணத்தில் இருப்பவனுக்கு; ப்ரியா: – பிரியமானது.
ஆயுளை நீடித்து, வாழ்வைத் தூய்மைபடுத்தி, பலம், ஆரோக்கியம், சுகம், மற்றும் திருப்தியைக் கொடுக்கும் உணவுகள், ஸத்வ குணத்தில் இருப்போருக்குப் பிரியமானவை. இத்தகு உணவுகள் ரசமுள்ளவையாக, கொழுப்பு சத்தும் ஊட்டச் சத்தும் மிக்கவையாக, இதயத்திற்கு இதமளிப்பவையாக உள்ளன.
பதம் 17.9
கட்வம்ல-லவணாத்-யுஷ்ண- தீக்ஷ்ண-ரூக்ஷ-விதாஹின:
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:க–ஷோகாமய–ப்ரதா:
கடு – கசப்பு; அம்ல – புளிப்பு; லவணா – உப்பு நிறைந்த; அதி-உஷ்ண – மிகவும் சூடான; தீக்ஷ்ண – காரமான; ரூக்ஷ – உலர்ந்த; விதாஹின: – எரிகின்ற; ஆஹார – உணவு; ராஜஸஸ்ய – ரஜோ குணத்தில் இருப்பவனுக்கு; இஷ்டா: – விருப்பமானது; து:க – துன்பம்; ஷோக – சோகம்; ஆமய – நோய்; ப்ரதா: – கொடுக்கக்கூடிய.
மிகவும் கசப்பான, மிகவும் புளிப்பான, உப்பு நிறைந்த, சூடான, காரமான, உலர்ந்த, மற்றும் எரிகின்ற உணவுப் பொருள்கள் ரஜோ குணத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமானதாகும். இத்தகு உணவுகள் துன்பம், சோகம் மற்றும் நோயை உண்டாக்குகின்றன.
பதம் 17.10
யாத–யாமம் கத–ரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்
உச்சிஷ்டம் அபி சாமேத்யம் போஜனம் தாமஸ–ப்ரியம்
யாத-யாமம் – சாப்பிடுவதற்கு மூன்று மணி நேரம் முன்பு சமைக்கப்பட்ட உணவு; கத-ரஸம் – சுவையற்ற; பூதி – துர்நாற்றமுள்ள; பர்யுஷிதம் – ஊசிப்போன; ச – மற்றும்; யத் – எது; உச்சிஷ்டம் – பிறரால் உண்ணப்பட்ட உணவின் மீதம்; அபி – கூட; ச – மற்றும்; அமேத்யம் – தீண்டத்தகாத; போஜனம் – உணவு; தாமஸ – தமோ குணத்தில் இருப்பவர்களுக்கு; ப்ரியம் – பிரியமானது.
உண்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே சமைக்கப்பட்ட, சுவையற்ற, பழைய, ஊசிப்போன, எச்சில்பட்ட, தீண்டத்தகாத பொருள்களைக் கொண்ட உணவுகள் தமோ குணத்தில் உள்ள மக்களால் விரும்பப்படுகின்றன.
பதம் 17.11
அபலாகாங்க்ஷிபிர் யக்ஞோ விதி–திஷ்டோ ய இஜ்யதே
யஷ்டவ்யம் ஏவேதி மன: ஸமாதாய ஸ ஸாத்த்விக:
அபலா-காங்க்ஷிபி: – பலனுக்கான ஆசையிலிருந்து விடுபட்டவர்களால்; யஜ்ஞ: – யாகம்; விதி-திஷ்ட: – சாஸ்திர விதிகளின்படி; ய – எந்த; இஜ்யதே – செய்யப்படுகின்றதோ; யஷ்டவ்யம் – செய்யப்பட வேண்டும்; ஏவ – நிச்சயமாக; இதி – இவ்வாறு; மன: – மனம்; ஸமாதாய – நிலைநிறுத்தப்பட்டு; ஸ: – அது; ஸாத்த்விக: – ஸத்வ குணத்தில்.
சாஸ்திர விதிகளின்படி, கடமையை நிறைவேற்றுவதற்காக, பலனை எதிர்பார்க்காத நபர்களால் செய்யப்படும் யாகம், ஸத்வ குணத்தைச் சார்ந்ததாகும்.
பதம் 17.12
அபிஸந்தாய து பலம் தம்பார்தம் அபி சைவ யத்
இஜ்யதே பரத-ஷ்ரேஷ்ட தம் யக்ஞம் வித்தி ராஜஸம்
அபிஸந்தாய – விருப்பத்துடன்; து – ஆனால்; பலம் – விளைவு; தம்ப – தற்பெருமை; அர்தம் – இலாபத்திற்காக; அபி – கூட; ச – மற்றும்; ஏவ – நிச்சயமாக; யத் – எது; இஜ்யதே – செய்யப்படுகின்றது; பரத-ஷ்ரேஷ்ட – பாரதர்களின் தலைவனே; தம் – அந்த; யஜ்ஞம் – யாகம்; வித்தி – அறிவாய்; ராஜஸம் – ரஜோ குணத்தில்.
ஆனால் ஏதேனும் பெளதிக நன்மையை அடைவதற்காக அல்லது தற்பெருமைக்காகச் செய்யப்படும் யாகம், பாரதர்களின் தலைவனே, ரஜோ குணத்தைச் சார்ந்தது என்பதை அறிவாயாக.
பதம் 17.13
விதி-ஹீனம் அஸ்ருஷ்டான்னம் மந்த்ர–ஹீனம் அதக்ஷிணம்
ஷ்ரத்தா–விரஹிதம் யக்ஞம் தாமஸம் பரிசக்ஷதே
விதி-ஹீனம் – சாஸ்திர விதிகளின்றி; அஸ்ரு’ஷ்ட-அன்னம் — பிரசாத விநியோகமின்றி; மந்த்ர-ஹீனம் – வேத மந்திரங்களின் உச்சாடனமின்றி; அதக்ஷிணம் — புரோகிதர்களுக்கான தட்சணை இன்றி; ஷ்ரத்தா – நம்பிக்கை; விரஹிதம் – இல்லாத; யஜ்ஞம் – யாகம்; தாமஸம் – தமோ குணத்தில்; பரிசக்ஷதே – இருப்பதாகக் கருதப்படுகின்றது.
சாஸ்திர விதிகளை மதிக்காமல், பிரசாத விநியோகம் இன்றி, வேத மந்திரங்களின் உச்சாடனம் இன்றி, புரோகிதர்களுக்கான தட்சணை இன்றி, நம்பிக்கையும் இன்றி செய்யப்படும் யாகம், தமோ குணத்தைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
பதம் 17.14
தேவ–த்விஜ-குரு-பிராக்ஞ- பூஜனம் ஷெளசம் ஆர்ஜவம்
ப்ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச ஷாரீரம் தப உச்யதே
தேவ – முழுமுதற் கடவுளின்; த்விஜ – பிராமணர்கள்; குரு – ஆன்மீக குரு; ப்ராஜ்ஞ — வழிபடத் தகுந்தவர்கள்; பூஜனம் — வழிபாடு; ஷௌசம் – தூய்மை; ஆர்ஜவம் – எளிமை; ப்ரஹ்மசர்யம் – பிரம்மசரியம்; அஹிம்’ஸா – அகிம்சை; ச – மேலும்; ஷாரீரம் – உடல் சம்பந்தமான; தப: – தவம்; உச்யதே – ஆகக் கூறப்படுகின்றது.
முழுமுதற் கடவுள், பிராமணர்கள், ஆன்மீக குரு, பெரியோர்களான தாய் தந்தையர் ஆகியோரை வழிபடுதல், மற்றும் தூய்மை, எளிமை, பிரம்மசர்யம், அகிம்சை முதலியவை உடலின் தவங்களாகும்.
பதம் 17.15
அனுத்வேக–கரம் வாக்யம் ஸத்யம் ப்ரிய-ஹிதம் ச யத்
ஸ்வாத்யாயாப்யஸனம் சைவ வாங்-மயம் தப உச்யதே
அனுத்வேக-கரம் – கிளர்ச்சி செய்யாத; வாக்யம் – வாக்கியங்கள்; ஸத்யம் – உண்மையான; ப்ரிய – பிரியமான; ஹிதம் – நன்மை தரக்கூடிய; ச – மேலும்; யத் — எந்த; ஸ்வாத்யாய – வேதக் கல்வி; அப்யஸனம் — பயிற்சி; ச – மற்றும்; ஏவ – நிச்சயமாக; வாக்-மயம் – வாக்கின்; தப: – தவம்; உச்யதே – கூறப்படுகின்றது.
உண்மையானதும் இனிமையானதும் நன்மையளிப்பதுமான பேச்சு, பிறரது மனதை துன்புறுத்தாத பேச்சு, வேத இலக்கியங்களை முறையாக உச்சரித்தல் ஆகியவை வாக்கின் தவங்களாகும்.
பதம் 17.16
மன: -ப்ரஸாத: ஸெளம்யத்வம் மெளனம் ஆத்ம-வினிக்ரஹ:
பாவ-ஸம்ஷுத்திர் இத்யேதத் தபோ மானஸம் உச்யதே
மன:-ப்ரஸாத: – மனதின் திருப்தி; ஸௌம்யத்வம் – பிறர் மீது வஞ்சனையின்றி; மௌனம் – மௌனம்; ஆத்ம – சுய; விநிக்ரஹ: – கட்டுப்பாடு; பாவ – இயற்கை; ஸம்’ஷுத்தி: – தூய்மை; இதி – இவ்வாறு; ஏதத் – இவை; தப: – தவம்; மானஸம் – மனதின்; உச்யதே – கூறப்படுகின்றன.
திருப்தி, எளிமை, மெளனம், சுயக் கட்டுப்பாடு, தனது இருப்பின் தூய்மை ஆகியவை மனதின் தவங்களாகும்.
பதம் 17.17
ஷ்ரத்தயா பரயா தப்தம் தபஸ் தத் த்ரி–விதம் நரை:
அபலாகாங்க்ஷிபிர் யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே
ஷ்ரத்தயா – நம்பிக்கையுடன்; பரயா – உன்னத; தப்தம் – ஆற்றப்படும்; தப: – தவம்; தத் – அந்த; த்ரி-விதம் – மூன்று விதமான; நரை – மனிதர்களால்; அபல-அகாங்க்ஷிபி: – பலன்களுக்கான விருப்பமில்லாத; யுக்தை: – ஈடுபட்டுள்ளதாக; ஸாத்த்விகம் – ஸத்வ குணத்தில்; பரிசக்ஷதே – அறியப்படுகின்றன.
இந்த மூன்று வகையான தவங்கள், ஜட இலாபங்களை எதிர்பார்க்காமல், பரமனைத் திருப்தி செய்வதில் ஈடுபட்டுள்ள மனிதர்களால், உன்னத நம்பிக்கையுடன் செய்யப்படும்போது, ஸத்வ குணத்தின் தவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பதம் 17.18
ஸத்கார–மான–பூஜார்தம் தபோ தம்பேன சைவ யத்
க்ரியதே தத் இஹ ப்ரோக்தம் ராஜஸம் சலம் அத்ருவம்
ஸத்-கார – மரியாதை; மான – மானம்; பூஜா – வழிபாட்டினை; அர்தம் – பெறுவதற்காக; தப: – தவம்; தம்பேன – தற்பெருமையுடன்; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; யத் – எது; க்ரியதே – செய்யப்படுகின்றதோ; தத் — அது; இஹ – இவ்வுலகில்; ப்ரோக்தம் — கூறப்படுகின்றது; ராஜஸம் – ரஜோ குணத்தில்; சலம் – சஞ்சலமான; அத்ருவம் – தற்காலிகமான.
மானம், மரியாதை, மற்றும் வழிபாட்டைப் பெறுவதற்காக, தற்பெருமையுடன் செய்யப்படும் தவங்கள் ரஜோ குணத்தில் இருப்பவையாகக் கூறப்படுகின்றன. இவை சஞ்சலமானதும் தற்காலிகமானதும் ஆகும்.
பதம் 17.19
மூட-க்ராஹேணாத்மனோ யத் பீடயா க்ரியதே தப:
பரஸ்யோத்ஸாதனார்தம் வா தத் தாமஸம் உதாஹ்ருதம்
மூட – மூடத்தனமான; க்ராஹேண – முயற்சியுடன்; ஆத்மன: – தன்னை; யத் – எந்த; பீடயா – துன்புறுத்துவதால்; க்ரியதே – செய்யப்படுகின்றதோ; தப: – தவம்; பரஸ்ய – பிறருக்கு; உத்ஸாதன-அர்தம் – அழிவைக் கொடுப்பதற்காக; வா – அல்லது; தத் – அந்த; தாமஸம் – தமோ குணத்தில்; உதாஹ்ரு’தம் – இருப்பதாகக் கூறப்படுகின்றது.
பிறரை அழிப்பதற்காகவோ துன்புறுத்துவதற்காகவோ அல்லது தன்னையே வருத்திக் கொண்டு முட்டாள்தனமான முறையில் செய்யப்படும் தவங்கள், தமோ குணத்தில் இருப்பவையாகக் கருதப்படுகின்றன.
பதம் 17.20
தாதவ்யம் இதி யத் தானம் தீயதே (அ)னுபகாரிணே
தேஷே காலே ச பாத்ரே ச தத் தானம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்
தாதவ்யம் – கொடுக்கத்தக்க; இதி – இவ்வாறு; யத் – எந்த; தானம் – தானம்; தீயதே – கொடுக்கப்படுகின்றதோ; அனுபகாரிணே – பலனை எதிர்பாராமல்; தேஷே – முறையான இடத்தில்; காலே – முறையான காலத்தில்; ச – மேலும்; பாத்ரே – தகுதியான நபருக்கு; ச – மேலும்; தத் – அந்த; தானம் – தானம்; ஸாத்த்விகம் – ஸத்வ குணத்தில் இருப்பதாக; ஸ்ம்ரு’தம் – கருதப்படுகின்றது.
பலனை எதிர்பார்க்காமல், கடமையை நிறைவேற்றுவதற்காக, தகுந்த நபருக்கு, முறையான இடத்தில், முறையான காலத்தில் கொடுக்கப்படும் தானம், ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கருதப்படுகின்றது.
பதம் 17.21
யத் து ப்ரத்யுபகாரார்தம் பலம் உத்திஷ்ய வா புன:
தீயதே ச பரிக்லிஷ்டம் தத் தானம் ராஜஸம் ஸ்ம்ருதம்
யத் – எந்த; து – ஆனால்; ப்ரதி-உபகார-அர்தம் – பிரதி உபகாரத்தை எதிர்பார்த்து; பலம் – பலனை; உத்திஷ்ய – விரும்பி; வா – அல்லது; புன: – மீண்டும்; தீயதே – கொடுக்கப்படும்; ச – மேலும்; பரிக்லிஷ்டம் – விருப்பமின்றி; தத் – அந்த; தானம் – தானம்; ராஜஸம் – ரஜோ குணத்தில்; ஸ்ம்ரு’தம் – இருப்பதாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது.
பிரதி உபகாரத்தை எதிர்பார்த்து, ஏதேனும் பலனை விரும்பி, அல்லது விருப்பமின்றி கொடுக்கப்படும் தானம், ரஜோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
பதம் 17.22
அதேஷ-காலே யத்தானம் அபாத்ரேப்யஷ் ச தீயதே
அஸத்-க்ருதம் அவக்ஞாதம் தத் தாமஸம் உதாஹ்ருதம்
அதேஷ – தூய்மையற்ற இடத்தில்; காலே – தூய்மையற்ற காலத்தில்; யத் – எந்த; தானம் – தானம்; அபாத்ரேப்ய: – தகுதியற்ற நபர்களுக்கு; ச – மேலும்; தீயதே – கொடுக்கப்படுகின்றதோ; அஸத்-க்ரு’தம் – மரியாதையின்றி; அவஜ்ஞாதம் – தக்க கவனமின்றி; தத் – அந்த; தாமஸம் – தமோ குணத்தில்; உதாஹ்ரு’தம் – இருப்பதாகக் கூறப்படுகின்றது.
தூய்மையற்ற இடத்தில், முறையற்ற காலத்தில், தகுதியற்ற நபர்களுக்கு, அல்லது தக்க கவனமும் மரியாதையும் இன்றி வழங்கப்படும் தானம், தமோ குணத்தைச் சேர்ந்ததாக கூறப்படுகின்றது.
பதம் 17.23
ஓம் தத் ஸத் இதி நிர்தேஷோ ப்ரஹ்மணஸ் த்ரி–வித: ஸ்ம்ருத:
ப்ராஹ்மணாஸ் தேன வேதாஷ் ச யக்ஞாஷ் ச விஹிதா: புரா
ஓம் – பரம்பொருளைக் குறிப்பிடும் ஒலி; தத் – அது; ஸத் – நித்தியமான; இதி – இவ்வாறு; நிர்தேஷ: – குறிப்பிடுகின்றன; ப்ரஹ்மண: – பரம்பொருள்; த்ரிவித: – மூன்றுவிதமாக; ஸ்ம்ரு’த: – கருதப்படுகின்றது; ப்ராஹ்மண: – பிராமணர்கள்; தேன – அதனுடன்; வேதா: – வேத இலக்கியம்; ச – கூட; யஜ்ஞா: – யாகம்; ச: – மேலும்; விஹிதா: – உபயோகிக்கப்பட்டது; புரா – முன்பு.
படைப்பின் ஆரம்பித்திலிருந்தே, ஓம் தத் ஸத் என்னும் மூன்று சொற்கள் பரம பூரண உண்மையைக் குறிப்பிடுவதற்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மூன்று குறியீட்டுச் சொற்களும், வேத மந்திரங்களை உச்சரிக்கும்போதும் யாகங்களின்போதும் பரமனின் திருப்திக்காக பிராமணர்களால் உச்சரிக்கப்பட்டன.
பதம் 17.24
தஸ்மாத் ஓம் இத்-யுதாஹ்ருத்ய யக்ஞ–தான–தப:-க்ரியா:
ப்ரவர்தந்தே விதானோக்தா: ஸததம் ப்ரஹ்ம–வாதினாம்
தஸ்மாத் – எனவே; ஓம் – ஓம் என்று தொடங்கி; இதி – இவ்வாறு; உதாஹ்ரு’த்ய – குறிப்பிடப்படும்; யஜ்ஞ: – யாகம்; தான – தானம்; தப: – தவம்; க்ரியா: – செயல்கள்; ப்ரவர்தந்தே – ஆரம்பிக்கின்றனர்; விதான-உக்தா: – சாஸ்திர விதிகளுக்கு ஏற்ப; ஸததம் – எப்போதும்; ப்ரஹ்ம-வாதினாம்: – ஆன்மீகவாதிகளின்.
எனவே, பரமனை அடைவதற்காக, சாஸ்திர விதிகளின்படி, யாகம், தானம், தவம் ஆகியவற்றை மேற்கொள்ளும் ஆன்மீகவாதிகள், அவற்றை ஓம் என்பதுடன் தொடங்குகின்றனர்.
பதம் 17.25
தத் இத்-யனபிஸந்தாய பலம் யக்ஞ–தப:–க்ரியா:
தான–க்ரியாஷ் ச விவிதா: க்ரியந்தே மோக்ஷ-காங்க்ஷிபி:
தத்: – அந்த; இதி – அவ்வாறு; அனபிஸந்தாய – விரும்பாமல்; பலம் – பலனை; யஜ்ஞ – யாகம்; தப: – மற்றும் தவத்தின்; க்ரியா: – செயல்கள்; தான – தானத்தின்; கிரியா: – செயல்கள்; ச: – மேலும்; விவிதா: – பல்வேறு; க்ரியந்தே – செய்யப்படுகின்றன; மோக்ஷ-காங்க்ஷிபி: – உண்மையில் முக்தியை விரும்புபவர்களால்.
பலனை எதிர்பார்க்காமல், பல்வேறு வகையான யாகம், தவம் மற்றும் தானத்தினை தத் என்னும் சப்தத்துடன் மேற்கொள்ள வேண்டும். அத்தகு உன்னத செயல்களின் நோக்கம் பெளதிக பந்தத்திலிருந்து விடுபடுவதாகும்.
பதம் 17.26 – 17.27
ஸத்-பாவே ஸாது–பாவே ச ஸத்-இத்-யேதத் ப்ரயுஜ்யதே
ப்ரஷஸ்தே கர்மணி ததா ஸச்-சப்த: பார்த யுஜ்யதே
யக்ஞே தபஸி தானே ச ஸ்திதி: ஸத் இதி–சோச்யதே
கர்ம சைவ தத்-அர்தீயம் ஸத் இத்-யேவாபிதீயதே
ஸத்-பாவே – பரமனின் இயல்பில்; ஸாது-பாவே – பக்தர்களின் இயல்பில்; ச – மேலும்; ஸத் – ஸத் என்னும் சொல்; இதி – இவ்வாறு; ஏதத் – இந்த; ப்ரயுஜ்யதே – பயன்படுத்தப்படுகின்றது; ப்ரஷஸ்தே – அங்கீகாரம் பெற்ற; கர்மணி – செயல்களில்; ததா – மற்றும்; ஸத்-ஷப்த: – ஸத் என்னும் சப்தம்; பார்த – பிருதாவின் மைந்தனே; யுஜ்யதே – பயன்படுத்தப்படுகின்றது; யஜ்ஞே – யாகத்தில்; தபஸி – தவத்தில்; தானே – தானத்தில்; ச – மேலும்; ஸ்திதி: – நிலைபெற்று; ஸத் – பரம்பொருள்; இதி – இவ்வாறு; ச – மற்றும்; உச்யதே – உச்சரிக்கப்படுகின்றது; கர்ம – செயல்; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; தத் – அதற்காக; அர்தீயம் – ஆனவை; ஸத் – பரம்பொருள்; இதி – இவ்வாறு; ஏவ – நிச்சயமாக; அபிதீயதே – குறிப்பிடப்படுகின்றது.
பக்திமயமான யாகத்தின் நோக்கம், பூரண உண்மையே. இது ஸத் என்னும் சொல்லினால் குறிப்பிடப்படுகின்றது. பிருதாவின் மைந்தனே, அத்தகு யாகத்தை செய்பவரும் ஸத் எனப்படுகிறார். மேலும், பரம புருஷரைத் திருப்திப்படுத்ததுவதற்காகச் செய்யப்படும் யாகம், தவம், மற்றும் தானத்தின் செயல்களும் ஸத் என்று அழைக்கப்படுகின்றன.
பதம் 17.28
அஷ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ் தப்தம் க்ருதம் ச யத்
அஸத் இத்-யுச்யதே பார்த ந ச தத் ப்ரேத்ய நோ இஹ
அஷ்ரத்தயா – நம்பிக்கையின்றி; ஹுதம் – யாகத்தில் அர்ப்பணிக்கப்படும்; தத்தம் — கொடுக்கப்பட்ட; தப: – தவம்; தப்தம் – நிறைவேற்றப்பட்ட; க்ரு’தம் – ஆற்றப்பட்ட; ச – மேலும்; யத் — எந்த; அஸத் – பொய்; இதி – இவ்வாறு; உச்யதே – கூறப்படுகின்றது; பார்த – பிருதாவின் மைந்தனே; ந – என்றுமில்லை; ச – மேலும்; தத் – அந்த; ப்ரேத்ய – மரணத்திற்குப் பிறகு; ந உ – இல்லை; இஹ – இந்த வாழ்வில்.
பிருதாவின் மைந்தனே, பரமனின் மீது நம்பிக்கையின்றி செய்யப்படும் யாகங்களும் தவங்களும் தானங்களும் நிலையற்றவை. அஸத் என்று அழைக்கப்படும் இவை இப்பிறவியில் மட்டுமின்றி அடுத்த பிறவியிலும் பயனற்றவை.