அத்தியாயம் – 9
கீதையின் உட்பொருள் சுருக்கம்
பதம் 9.1
ஸ்ரீ-பகவான் உவாச
இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம் யனஸூயவே
க்ஞானம் விக்ஞான-ஸஹிதம் யஜ் க்ஞாத்வா மோக்ஷ்யஸே (அ)ஷுபாத்

ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினாா்; இதம் – இந்த; து – ஆனால்; தே – உனக்கு; குஹ்யதமம் – மிக இரகசியமான; ப்ரவக்ஷ்யாமி – கூறுகின்றேன்; அனஸூயவே – பொறாமையற்ற; ஜ்ஞானம் – அறிவு; விஜ்ஞான – அனுபவ அறிவு; ஸஹிதம் – உடன்; யத் – எதனை; ஜ்ஞாத்வா – அறிவதால்; மோக்ஷ்யஸே – விடுதலையடைவாய்; அஷுபாத் – துன்பமயமான இந்த ஜட வாழ்விலிருந்து.

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதன்பு அர்ஜுனா, நீ என்றுமே என்னிடம் பொறாமை கொள்ளாதவன் என்பதால், எதனை அறிவதால் ஜடவுலகின் துன்பங்களிலிருந்து விடுதலை அடைவாயோ, அந்த மிக இரகசியமான ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் உனக்கு நான் அளிக்கிறேன்.

பதம் 9.2
ராஜ-வித்யா ராஜ-குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரதயக்ஷாவகமம் தர்ம்யம் ஸு-ஸுகம் கர்தும் அவ்யயம்

ராஜ-வித்யா – கல்வியின் அரசன்; ராஜ-குஹ்யம் – இரகசியமான ஞானத்தின் அரசன்; பவித்ரம் – மிகத் தூய்மையானது; இதம் – இந்த. உத்தமம் – உத்தமமானது; ப்ரத்யக்ஷ – நேரடி அனுபவத்தால்; அவகமம் – புரிந்து கொள்ளக்கூடியது; தர்ம்யம் – அறக்கொள்கை; ஸு-ஸுகம் – மிகுந்த இன்பத்துடன்; கர்தும் – செயலாற்றுவது; அவ்யயம் – என்றும் அழிவற்றது.

இந்த அறிவு, கல்வியின் அரசனும், எல்லா இரகசியங்களிலும் மிக இரகசியமானதும், மிகத் தூய்மையானதுமாகும். தன்னுணர்வின் அனுபவத்தை நேரடியாக அளிப்பதால் இதுவே தர்மத்தின் பக்குவ நிலையாகும். இஃது அழிவற்றதும், பேரின்பத்துடன் செயலாற்றுப்படுவதும் ஆகும்.

பதம் 9.3
அஷ்ரத்ததானா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யு-ஸம்ஸார-வர்த்மனி

அஷ்ரத்ததானா: – நம்பிக்கையற்ற; புருஷா: – நபர்கள்; தர்மஸ்ய – தர்மத்தை நோக்கி; அஸ்ய – இந்த; பரந்தப – எதிரிகளைக் கொல்பவனே; அப்ராப்ய -அடையாமல்; மாம் – என்னை; நிவர்தந்தே – திரும்பி வருகின்றனர்; ம்ருத்யு – மரணம்; ஸம்ஸார – ஜட வாழ்க்கை; வர்த்மனி – பாதையில்.

எதிரிகளை வெல்வோனே, இந்த பக்தித் தொண்டில் நம்பிக்கையற்றவர்கள் என்னை அடைய முடியாது. எனவே, அவர்கள் இந்த பௌதிக உலகின் பிறப்பு இறப்பு பாதைக்கே திரும்பி வருகின்றனர்.

பதம் 9.4
மயா ததம் இதம் ஸர்வம் ஜகத் அவ்யக்த-மூர்தினா
மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி ந சாஹம் தேஷ்-வவஸ்தித:

மயா – என்னால்; ததம் – பரந்து; இதம் – இந்த; ஸா்வம் – எல்லா; ஜகத் -பிரபஞ்சத் தோற்றம்; அவ்யக்த-மூர்தினா – தோன்றாத உருவில்; மத்-ஸ்தானி – என்னில்; ஸா்வ-பூதானி – எல்லா ஆத்துமாக்களும்; ந – இல்லை; ச – மேலும்; அஹம் – நான்; தேஷு – அவற்றில்; அவஸ்தித: – அமைந்து.

நான் எனது தோன்றாத உருவின் மூலம் இந்த அகிலம் முழுவதும் பரவியுள்ளேன். எல்லா ஜீவன்களும் என்னில் இருக்கின்றன; ஆனால் அவர்களில் நான் இல்லை.

பதம் 9.5
ந ச மத்-ஸ்தானி பூதானி பஷ்ய மே யோகம் ஐஷ்வரம்
பூத-ப்ருன் ந ச பூத-ஸ்தோ மமாத்மா பூத-பாவன:

ந – என்றுமில்லை; ச – மேலும்; மத்-ஸ்தானி – என்னில் நிலைபெற்று; பூதானி – படைப்பு முழுவதும்; பஷ்ய – காண்பாயாக; மே – எனது; யோகம் ஐஷ்வரம் – புாிந்து கொள்ள முடியாத யோக சக்தி; பூத-ப்ருன் – எல்லா ஜீவன்களின் பாதுகாவலா்; ந – என்றுமில்லை; ச – மேலும்; பூத-ஸ்த: – பிரபஞ்சத் தோற்றத்தில்; மம – எனது; ஆத்மா – ஆத்மா; பூத-பாவன: -எல்லாத் தோற்றங்களின் மூலமான.

இருப்பினும், படைக்கப்பட்டவை எல்லாம் என்னில் நிலை பெற்றிருக்கவில்லை. எனது யோகத்தின் ஐஸ்வர்யத்தைப் பார்! நானே எல்லா உயிரினங்களையும் காப்பவன் என்றபோதிலும், எங்கும் நிறைந்துள்ளவன் என்றபோதிலும், நான் இந்த பிரபஞ்சத் தோற்றத்தின் ஒரு பகுதி அல்ல, ஏனெனில் நானே படைப்பின் மூல காரணம்.

பதம் 9.6
யதா-காஷ-ஸ்திதோ நித்யம் வாயு: ஸர்வத்ர-கோ மஹான்
ததா ஸர்வாணி பூதானி மத்-ஸ்தானீத்-யுபதாரய

யதா – எவ்வாறு; ஆகாஷ-ஸ்தித – ஆகாயத்தில் நிலைபெற்று; நித்யம் -எப்போதும்; வாயு: – காற்று; ஸர்வத்ர-க: – எங்கும் வீசிக்கொண்டு; மஹான் – பெரும்; ததா – அதுபோலவே; ஸர்வாணி-பூதானி – படைப்புகள் அனைத்தும்; மத்-ஸ்தானீ – என்னில் நிலைபெற்று; இதி – இவ்வாறு; உபதாரய – புாிந்து கொள்ள முயற்சி செய்.

எங்கும் வீசிக் கொண்டுள்ள பலத்த காற்று, எவ்வாறு எப்போதும் ஆகாயத்தினுள் உள்ளதோ, அதுபோலவே படைக்கப்பட்டவை அனைத்தும் என்னில் அமைந்துள்ளதை அறிவாயாக.

பதம் 9.7
ஸர்வ-பூதானி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம்
கல்ப-க்ஷயே புனஸ் தானி கல்பாதௌ விஸ்ருஜாம்-யஹம்

ஸர்வ-பூதானி – படைக்கப்பட்ட எல்லா உயிர்களும்; கௌந்தேய – குந்தியின் மகனே; ப்ரக்ரு‘திம் – இயற்கையில்; யாந்தி – நுழைகின்றன; மாமிகாம் – எனது; கல்ப-க்ஷயே – கல்பத்தின் முடிவில்; புன: – மீண்டும்; தானி – இவை அனைத்தையும்; கல்ப-ஆதௌ – கல்பத்தின் ஆரம்பத்தில்; விஸ்ரு‘ஜாமி – படைக்கின்றேன்; அஹம் – நான்.

குந்தியின் மகனே, கல்பத்தின் முடிவில் ஜடத் தோற்றம் முழுவமும் எனது இயற்கையில் நுழைகின்றன. அடுத்த கல்பத்தின் ஆரம்பத்தில், எனது சக்தியின் மூலம் நானே அவற்றை மீண்டும் படைக்கின்றேன்.

பதம் 9.8
ப்ரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய விஸ்ருஜாமி புன: புன:
பூத-க்ராமம் இமம் க்ருத்ஸ்னம் அவஷம் ப்ரக்ருதேர் வஷாத்

ப்ரக்ரு‘திம் – ஜட இயற்கை; ஸ்வாம் – எனது சுய; அவஷ்டப்ய – நுழைகின்றது; விஸ்ரு‘ஜாமி – படைக்கின்றேன்; புன: புன: – மீண்டும் மீண்டும்; பூத-க்ராமம் – பிரபஞ்ச தோற்றமெல்லாம்; இமம் – இந்த; க்ரு‘த்ஸ்னம் – முழு; அவஷம் – தாமாகவே; ப்ரக்ரு‘தே: – இயற்கையின் உந்துதலால்; வஷாத் – கட்டுப்பட்டு.

பிரபஞ்ச தோற்றம் முழுவதும் எனக்குக் கீழ்ப்பட்டது. எனது விருப்பப்படி அது மீண்டும் மீண்டும் தானாகப் படைக்கப்பட்டு, இறுதியில் எனது விருப்பப்படி அழிக்கப்படுகின்றது.

பதம் 9.9
ந ச மாம் தானி கர்மாணி நிபத்னந்தி தனஞ்ஜய
உதாஸீன-வத் ஆஸீனம் அஸக்தம் தேஷு கர்மஸு

ந – இல்லை; ச – மேலும்; மாம் – என்னை; தானி – அவ்வெல்லா; கா்மாணி – செயல்கள்; நிபத்னந்தி – பந்தப்படுத்துவது; தனஞ்ஜய – செல்வத்தை வெல்வோனே; உதாஸீன-வத் – நடுநலையில்; ஆஸீனம் – அமைந்து; அஸக்தம் – பற்றின்றி; தேஷு – அந்த; கர்மஸு – செயல்களில்.

தனஞ்ஜயனே, இச்செயல்கள் எதுவும் என்னை பந்தப்படுத்த முடியாது. நடுநிலையில் அமைந்துள்ள நான், இந்த பௌதிகச் செயல்களிலிருந்து எப்போதும் விலகியே உள்ளேன்.

பதம் 9.10
மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸ-சராசரம்
ஹேதுனாநேன கௌந்தேய ஜகத் விபரிவர்ததே

மயா – எனது; அத்யக்ஷேண – மேற்பார்வையில்; ப்ரக்ரு‘தி: – ஜட இயற்கை; ஸூயதே – தோன்றுகிறது; ஸ – இரண்டும்; சர-அசரம் – அசைகின்ற, அசையாத; ஹேதுனா – காரணத்தால்; அனேன – இந்த; கௌந்தேய – குந்தியின் மகனே; ஜகத் – பிரபஞ்சத் தோற்றம்; விபரிவா்ததே – செயல்படுகின்றது.

குந்தியின் மகனே, எனது சக்திகளில் ஒன்றான இந்த ஜட இயற்கை, எனது மேற்பார்வையில் செயல்பட்டு, அசைகின்ற மற்றும் அசையாதவற்றை எல்லாம் உண்டாக்குகின்றது. அதன் ஆணைப்படி, இந்தத் தோற்றம் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது.

பதம் 9.11
அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஷ்ரிதம்
பரம் பாவம் அஜானந்தோ மம பூத-மஹேஷ்வரம்

அவஜானந்தி – ஏளனம் செய்கின்றனர்; மாம் – என்னை; மூடா: – முட்டாள்கள்; மானுஷீம் – மனித உருவில்; தனும் – உடல்; ஆஷ்ரிதம் – ஏற்று; பரம் – பரம; பாவம் – இயற்கையை; அஜானந்த: – அறியாமல்; மம – எனது; பூத – இருப்பவை அனைத்திற்கும்; மஹா-ஈஸ்வரம் – உன்னத உரிமையாளர்.

மனித உருவில் நான் தோன்றும்போது முட்டாள்கள் என்னை ஏளனம் செய்கின்றனர். எனது பரம இயற்கையை, அதாவது, இருப்பவை அனைத்திற்கும் நானே உன்னத உரிமையாளன் என்பதை அவர்கள் அறியார்கள்.

பதம் 9.12
மோகாஷா மோக-கர்மாணோ மோக-க்ஞானா விசேதஸ:
ராக்ஷஸீம் ஆஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹினீம் ஷ்ரிதா:

மோக-ஆஷா: – ஆசைகளால் மயங்கியவர்கள்; மோக-கர்மாணா: – பலன்நோக்குச் செயல்களால் மயங்கியவர்கள்; மோக-ஜ்ஞானா: – ஞானத்தினால் மயங்கியவர்கள்; விசேதஸ: – குழம்பியவர்கள்; ராக்ஷஸீம் – ராட்சசமான; ஆஸுரிம் – அசுரத்தனமான; நாத்திகமான; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; ப்ரக்ரு‘திம் – இயற்கை; மோஹினீம் – மயக்குகின்ற; ஷ்ரிதா: – அடைக்கலம் கொண்டு.

இவ்வாறு குழம்பியவர்கள், ராட்சசத்தனமான கருத்துக்களாலும் நாத்திகக் கருத்துக்களாலும் கவரப்படுகின்றனர். அத்தகு மயங்கிய நிலையில், அவர்களது முக்திக்கான ஆவல்கள், பலன் நோக்குச் செயல்கள், அறிவுப் பயிற்சிகள் ஆகிய அனைத்தும் தோல்வியடைகின்றன.

பதம் 9.13
மஹாத்மானஸ் து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிம் ஆஷ்ரிதா:
பஜந்த்-யனன்ய-மனஸோ க்ஞாத்வா பூதாதிம் அவ்யயம்

மஹா-ஆத்மான: – மஹாத்மாக்கள்; து – ஆனால்; மாம் – என்னிடம்; பார்த – ப்ருதாவின் மகனே; தைவீம் – தெய்வீக; ப்ரக்ரு‘திம் – இயற்கை; ஆஷ்ரிதா: – அடைக்கலம் கொண்டு; பஜந்தி – தொண்டு செய்கின்றனர்; அனன்ய-மனஸ: – பிறழாத மனதுடன்; ஜ்ஞாத்வா – அறிந்து; பூத – படைப்பின்; ஆதிம் – ஆதி(மூலம்); அவ்யயம் – அழிவற்ற.

பிருதாவின் மகனே, குழப்பமடையாத மகாத்மாக்களோ தெய்வீக இயற்கையின் பாதுகாப்பில் உள்ளனர். அவர்கள், பரம புருஷ பகவானான என்னை, ஆதிபுருஷனாகவும் அழிவற்றவனாகவும் அறிந்து, எனது பக்தித் தொண்டில் பூரணமாக ஈடுபட்டுள்ளனர்.

பதம் 9.14
ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஷ் ச த்ருட-வ்ரதா:
நமஸ்யந்தஷ் ச மாம் பக்த்யா நித்ய-யுக்தா உபாஸதே

ஸததம் – எப்போதும்; கீர்தயந்த: – கீர்த்தனம் செய்தபடி; மாம் – என்னை; யதந்த: – முழுதும் முயன்று; ச – மேலும்; த்ரு‘ட-வ்ரதா: – திடமான உறுதியுடன்; நமஸ்யந்த: – வந்தனை செய்தபடி; ச – மேலும்; மாம் – என்னை; பக்த்யா – பக்தியுடன்; நித்ய-யுக்தா: – நித்தியமாக ஈடுபடுகின்றனர்; உபாஸதே – வழிபாட்டில்.

எப்போதும் எனது புகழை கீர்த்தனம் செய்து கொண்டு, திடமான உறுதியுடன் முயன்று கொண்டு, எனக்கு வந்தனை செய்தபடி, இந்த மகாத்மாக்கள் பக்தியுடன் நித்தியமாக என்னை வழிபடுகின்றனர்.

பதம் 9.15
ஜ்ஞான -யக்ஞேன சாப்-யன்யே யஜந்தோ மாம் உபாஸதே
ஏகத்வேன ப்ருதக்த்வேன பஹுதா விஷ்வதோ-முகம்

ஜ்ஞான -யஜ்ஞேன – அறிவை விருத்தி செய்து கொள்வதால்; ச – மேலும்; அபி – நிச்சயமாக; அன்யே – பிறர்; யஜந்த: – அர்ப்பணித்து; மாம் – என்னை; உபாஸதே – வழிபடுகின்றனர்; ஏகத்வேன – ஒருமையில்; ப்ரு‘தக்த்வேன – இருமையில்; பஹுதா – பன்மையில்; விஷ்வத:-முகம் – விஸ்வரூபத்தில்.

ஞான யாகத்தில் ஈடுபட்டிருக்கும் பிறர், பரம புருஷரை, தன்னிகரற்றவராகவும், பலரில் வேறுபட்டவராகவும், விஸ்வ ரூபத்திலும் வழிபடுகின்றனர்.

பதம் 9.16
அஹம் க்ரதுர் அஹம் யக்ஞ: ஸ்வதாஹம் அஹம் ஔஷதம்
மந்த்ரோ (அ)ஹம் அஹம் ஏவாஜ்யம் அஹம் அக்னிர் அஹம் ஹுதம்

அஹம் – நான்; க்ரது: – சடங்கு; அஹம் – நான்; யஜ்ஞ: – யாகம்; ஸ்வதா – முன்னோருக்கு அளிக்கப்படும் பொருள்; அஹம் – நான்; அஹம் – நான்; ஔஷதம் – மூலிகை; மந்த்ர: – மந்திரம்; அஹம் – நான்; அஹம் – நான்; ஏவ – நிச்சயமாக; ஆஜ்யம் – நெய்; அஹம் – நான்; அக்னி: – நெருப்பு; அஹம் – நான்; ஹுதம் – படைக்கப்படும் பொருள்.

ஆனால், சடங்கும் நானே, யாகமும், நானே, முன்னோருக்குப் படைக்கப்படும் பொருளும் நானே, நோய் தீர்க்கும் மூலிகையும் நானே, தெய்வீகமான மந்திரமும் நானே. நானே நெய், நானே அக்னி, நானே படைக்கப்படும் பொருள்.

பதம் 9.17
பிதாஹம்–அஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ:
வேத்யம் பவித்ரம் ஓம்கார ரிக் ஸாம யஜுர் ஏவ ச

பிதா – தந்தை; அஹம் – நான்; அஸ்ய – இதன்; ஜகத: – அகிலத்தின்; மாதா – தாய்; தாதா – காப்போன்; பிதாமஹ: – தாத்தா; வேத்யம் – அறியப்பட வேண்டியது எதுவோ அது; பவித்ரம் – தூய்மைப்படுத்துவது; ஓம்-கார – ஓம் என்னும் சொல்; ரு‘க் – ரிக் வேதம்; ஸாம – ஸாம வேதம்; யஜு: – யஜுர் வேதம்; ஏவ – நிச்சயமாக; ச – மேலும்.

இந்த அகிலத்தின் தந்தையும் தாயும் காப்பவனும் பாட்டனாரும் நானே. அறியப்பட வேண்டிய பொருளும், தூய்மைப்படுத்தும் பொருளும், ‘ஓம்’ என்னும் மந்திரமும் நானே. ரிக், ஸாம, யஜுர் வேதங்களும் நானே.

பதம் 9.18
கதிர் பர்தா ப்ரபு: ஸாக்ஷீ நிவாஸ: ஷரணம் ஸுஹ்ருத்
ப்ரபவ: ப்ரளய: ஸ்தானம் நிதானம் பீஜம் அவ்யயம்

கதி: – இலக்கு; பர்தா – காப்பவன்; ப்ரபு: – தலைவன்; ஸாக்ஷீ – சாட்சி; நிவாஸ: – வசிப்பிடம்; ஷரணம் – ஷரணம்; ஸு-ஹ்ரு‘த – மிகவும் நெருங்கிய நண்பன்; ப்ரபவ: – படைப்பு; ப்ரலய: – அழிவு; ஸ்தானம் – நிலை; நிதானம் – தங்குமிடம்; பீஜம் – விதை; அவ்யயம் – அழிவற்ற

நானே இலக்கு, காப்பவன், தலைவன், சாட்சி, வசிப்பிடம், அடைக்கலம், மற்றும் மிக நெருங்கிய நண்பன். நானே படைப்பு, அழிவு, எல்லாவற்றின் ஆதாரம், தங்குமிடம், மற்றும் நித்தியமான விதையும் ஆவேன்.

பதம் 9.19
தபாம்-யஹம் அஹம் வர்ஷம் நிக்ருஹ்ணாம் யுத்ஸ்ருஜாமி ச
அம்ருதம் சைவ ம்ருத்யுஷ் ச ஸத் அஸச் சாஹம் அர்ஜுன

தபாமி – வெப்பத்தைக் கொடுப்பவன்; அஹம் – நான்; அஹம் – நான்; வர்ஷம் – மழை; நிக்ரு’ஹ்ணாமி — தடுப்பவன்; உத்ஸ்ரு’ஜாமி – கொடுப்பவன்; ச – மேலும்; அம்ரு’தம் – நித்தியம்; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; ம்ரு’த்யு: – மரணம்; ச – மேலும்; ஸத் – சேதனம்; அஸத் – ஜடம்; ச – மேலும்; அஹம் – நான்; அர்ஜுன — அர்ஜுனா.

அர்ஜுனா, நானே வெப்பத்தைக் கொடுப்பவன். மழையைத் தடுப்பவனும் கொடுப்பவனும் நானே. நித்தியமும் நானே, மரண உருவமும் நானே. ஜடம், சேதனம் இரண்டும் என்னில் உள்ளன.

பதம் 9.20
த்ரை- வித்யா மாம் ஸோம-பா: பூத-பாபா
யக்ஞைர் இஷ்ட்வா ஸ்வர்-கதிம் ப்ரார்தயந்தே
தே புண்யம் ஆஸாத்ய ஸுரேந்த்ர-லோகம்
அஷ்னந்தி திவ்யான் திவி தேவ-போகான்

த்ரை-வித்ரயா – மூன்று வேதங்களை அறிவோர்; மாம் – என்னை; ஸோம-பா: – ஸோம ரஸத்தைக் குடிப்பவர்கள்; பூத – தூய்மையடைந்து; பாபா: – பாவங்களிலிருந்து; யஜ்ஞை: – யாகங்களால்; இஷ்ட்வா – வழிபட்டு; ஸ்வ-கதிம் – ஸ்வர்கத்தின் பாதை; ப்ரார்தயந்தே – வழிபடுகின்றனர்; தே – அவர்கள்; புண்யம் – புண்ணியம்; ஆஸாத்ய – அடைந்து; ஸுர-இந்த்ர – இந்திரனின்; லோகம் – உலகம்; அஷ்னந்தி – அனுபவிக்கின்றனர்; திவ்யான் – தெய்வீகமான; திவி – ஸ்வர்கத்தில்; தேவ-போகான் – தேவ சுகங்கள்.

ஸ்வர்க லோகத்தை அடைவதற்காக, வேதங்களைப் பயின்று ஸோம ரஸத்தை அருந்துபவர்கள், என்னை மறைமுகமாக வழிபடுகின்றனர். இதன் மூலமாக அவர்கள் பாவ விளைவுகளிலிருந்து தூய்மையடைந்து, புண்ணியமான இந்திர லோகத்தில் பிறவியெடுத்து, அங்கே தேவ சுகங்களை அனுபவிக்கின்றனர்.

பதம் 9.21
தே தம் புக்த்வா ஸ்வர்க-லோகம் விஷாலம்
க்ஷீணே புண்யே மர்த்ய-லோகம் விஷந்தி
ஏவம் த்ரயீ-தர்மம் அனுப்ரபன்னா
கதாகதம் காம-காமா லபந்தே

தே – அவர்கள்; தம் – அந்த; புக்த்வா – சுகிக்கின்ற; ஸ்வர்க-லோகம் – ஸ்வர்க லோகம்; விஷாலம் – பரந்த; க்ஷீணே – தீர்ந்தபின்; புண்யே – புண்ணியங்கள்; மர்த்ய-லோகம் – மரண உலகத்திற்கு; விஷந்தி – வீழ்கின்றனர்; ஏவம் – இவ்வாறாக; த்ரயீ – மூன்று வேதங்களின்; தர்மம் – தர்மத்தை: அனுப்ரபன்னா: – கடைப்பிடித்து; கத-ஆகதம் – பிறப்பு, இறப்பு; காம-காமா: – புலனின்பங்களை நாடி; லப்ந்தே – அடைகின்றனர்.

ஸ்வர்க லோகத்தில் அத்தகு பரந்த சுகத்தை அனுபவித்துவிட்டு, தங்களது புண்ணியங்களின் பலன்கள் தீர்ந்தவுடன், அவர்கள் மீண்டும் இந்த மரண உலகில் வீழ்கின்றனர். இவ்வாறாக, புலனின்பத்திற்காக வேத தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள், பிறப்பு இறப்பினையே அடைகின்றனர்.

பதம் 9.22
அனன்யாஷ் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக-க்ஷேமம் வஹாம்-யஹம்

அனன்யா: – வேறு குறிக்கோள் இன்றி; சிந்தயந்த: – ஒருமுகப்படுத்தி; மாம் – என்னை; யே – எந்த; ஜனா: – ஜனங்கள்; பர்யுபாஸதே – முறையாக வழிபடுகின்றனரோ; தேஷாம் – அவர்களுக்கு; நித்ய – நித்தியமாக; அபியுக்தானாம் – பக்தியில் நிலைபெற்று; யோக — தேவைகள்; க்ஷேமம்‘ – பாதுகாப்பு; வஹாமி – அளிக்கின்றேன்; அஹம் – நான்.

ஆனால் எனது திவ்ய ரூபத்தின் மீது தியானம் செய்துகொண்டு, களங்கமற்ற (அனன்ய) பக்தியுடன் என்னை நித்தியமாக வழிபடுபவர்களுக்கோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், அவர்களிடம் இருப்பவற்றை காத்தும் நான் பாலிக்கின்றேன்.

பதம் 9.23
யே (அ)ப்-யன்ய-தேவதா-பக்தா யஜந்தே ஷ்ரத்தயான்விதா:
தே (அ)பி மாம் ஏவ கௌந்தேய யஜந்த்-யவிதி-பூர்வகம்

யே – யார்; அபி – கூட; அன்ய – மற்ற; தேவதா – தேவர்களை; பக்தா: – பக்தர்கள்; யஜந்தே வழிபடும்; ஷ்ரத்தய-அன்விதா: – நம்பிக்கையுடன்; தே – அவர்கள்; அபி – கூட; மாம் – என்னை; ஏவ – மட்டுமே; கௌந்தேய – குந்தியின் மகனே; யஜந்தி — வழிபடுகின்றனர்; அவிதி-பூர்வகம் – தவறான வழியில்.

மற்ற தேவர்களை நம்பிக்கையோடு வணங்கும் பக்தர்கள், உண்மையில் என்னை மட்டுமே வழிபடுகின்றனர். குந்தியின் மகனே, ஆனால் அத்தகு வழிபாடு தவறான வழியில் செய்யப்படுவதாகும்.

பதம் 9.24
அஹம் ஹி ஸர்வ-யக்ஞானாம் போக்தா ச ப்ரபுர் ஏவ ச
ந து மாம் அபிஜானந்தி தத்த்வேனாதஷ் ச்யவந்தி தே

அஹம் – நான்; ஹி – நிச்சயமாக; ஸர்வ – எல்லா; யஜ்ஞானாம் — யாகங்களையும்; போக்தா – அனுபவிப்பவன்; ச – மேலும்; ப்ரபு:-ஏவ – தலைவனும்; ச – மேலும்; ந – இல்லை; து – ஆனால்; மாம் – என்னை; அபிஜானந்தி – அறிகிறார்கள்; தத்த்வேன – உண்மையில்; அத: – எனவே; ச்யவந்தி – வீழ்ச்சியடைகின்றனர்; தே – அவர்கள்.

எல்லா யாகங்களின் தலைவனும் அனுபவிப்பாளனும் நானே. எனவே, எனது உண்மையான தெய்வீக இயற்கையை அங்கீகரிக்காதவர்கள் வீழ்ச்சியடைகிறார்கள்.

பதம் 9.25
யாந்தி தேவ-வ்ரதா தேவான் பித்ரூன் யாந்தி பித்ரு-வ்ரதா:
பூதானி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்-யாஜினோ (அ)பி மாம்

யாந்தி – செல்கின்றனர்; தேவ-வ்ரதா: – தேவர்களை வழிபடுபவர்கள்; தேவான் – தேவர்களிடம்; பித்ரூ’ன் – முன்னோர்களிடம்; யாந்தி – செல்கின்றனர்; பித்ரு’-வ்ரதா: – முன்னோர்களை வழிபடுபவர்கள்; பூதானி – பூதங்களிடம்; யாந்தி – செல்கின்றனர்; பூத-இஜ்யா: – பூதங்களை வழிபடுபவர்கள்; யாந்தி – செல்கின்றனர்; மத் – எனது; யாஜின: – பக்தர்கள்; அபி – ஆனால்; மாம் – என்னிடம்.

தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களிடையே பிறப்பர்; முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களிடம் செல்வர்; பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களிடையே பிறப்பர்; மேலும், என்னை வழிபடுபவர்கள் என்னுடனே வாழ்வர்.

பதம் 9.26
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
தத் அஹம் பக்த்-யுபஹ்ருதம் அஷ்னாமி ப்ரயதாத்மன:

பத்ரம் – இலை; புஷ்பம் – பூ; பலம் – பழம்; தோயம் – நீர்; ய: – யாரேனும்; மே – எனக்கு; பக்த்யா — பக்தியுடன்; ப்ரயச்சதி – படைக்கின்றானோ; தத் – அதை; அஹம் – நான்; பக்தி-உபஹ்ரு’தம் – பக்தியுடன் படைக்கப்பட்ட; அஷ்னாமி – ஏற்கின்றேன்; ப்ரயத-ஆத்மன: – துய மனமுடையவனிடமிருந்து.

அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு ஓர் இலையோ, ஒரு பூவோ, ஒரு பழமோ, நீரோ அளித்தால் அதனை நான் ஏற்கின்றேன்.

பதம் 9.27
யத் கரோஷி யத் அஷ்னாஸி யஜ் ஜுஹோஷி ததாஸி யத்
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மத்-அர்பணம்

யத் – எதையெல்லாம்; கரோஷி – செய்கின்றாயோ; யத் – எதையெல்லாம்; அஷ்னாஸி – உண்கின்றாயோ; யத் – எதையெல்லாம்; ஜுஹோஷி – படைக்கின்றாயோ; ததாஸி – கொடுக்கின்றாயோ; யத் — எதையெல்லாம்; யத் — எந்த; தபஸ்யஸி – தவங்களை செய்கின்றாயோ; கௌந்தேய – குந்தியின் மகனே; தத் – அதை; குருஷ்வ – செய்; மத் – எனக்கு; அர்பணம் — அர்ப்பணமாக.

குந்தியின் மகனே, எதையெல்லாம் நீ செய்கின்றாயோ, எதையெல்லாம் நீ உண்கின்றாயோ, எதையெல்லாம் நீ படைக்கின்றாயோ, எதையெல்லாம் நீ கொடுக்கின்றாயோ, எந்த தவங்களையெல்லாம் நீ செய்கின்றாயோ, அதனை எனக்கு அர்ப்பணமாக செய்வாயாக.

பதம் 9.28
ஷுபாஷுப-பலைர் ஏவம் மோக்ஷ்யஸே கர்ம-பந்தனை:
ஸன்ன்யாஸ-யோக-யுக்தாத்மா விமுக்தோ மாம் உபைஷ்யஸி

ஷுப – நல்ல; அஷுப – தீய; பலை: – பலன்கள்; ஏவம் – இவ்வாறு; மோக்ஷ்யஸே – நீ விடுபடுவாய்; கர்ம – கர்ம; பந்தனை: – பந்தத்திலிருந்து; ஸன்ன்யாஸ – சந்நியாசத்தின்; யோக – யோகம்; யுக்த ஆத்மா – மனதை நிலைப்படுத்திய; விமுக்த: – முக்தி பெற்று; மாம் – என்னை; உபைஷ்யஸி – நீ அடைவாய்.

இவ்விதமாக, நீ கர்ம பந்தங்களிலிருந்தும், அதன் நல்ல தீய விளைவுகளிலிருந்தும் விடுபடுவாய். சந்நியாசத்தின் இந்த கொள்கையின் மூலம் உனது மனதை என்னில் பதியச் செய்வதால், நீ முக்தி பெற்று என்னிடமே வருவாய்.

பதம் 9.29
ஸமோ (அ)ஹம் ஸர்வ-பூதேஷு ந மே த்வேஷ்யோ (அ)ஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்-யஹம்

ஸம: – சமமானவன்; அஹம் — நான்; ஸர்வ-பூதேஷு – எல்லா உயிரினங்களுக்கும்; ந – யாருமில்லை; மே – எனக்கு; த்வேஷ்ய: – வெறுக்கின்ற; அஸ்தி – இருக்கின்றனர்; ந – இல்லை; ப்ரிய: – பிரியமான; யே – யாரொருவர்; பஐந்தி – திவ்யமான தொண்டில் ஈடுபட்டவர்; து – ஆயினும்; மாம் – எனக்கு; பக்த்யா – பக்தியில்; மயி – என்னில் உள்ளனர்; தே – அத்தகையோர்; தேஷு – அவர்களில்; ச – கூட; அபி – நிச்சயமாக; அஹம் – நான்.

நான் யாரிடமும் பொறாமை கொள்வதோ, பாரபட்சம் காட்டுவதோ இல்லை. நான் அனைவருக்கும் சமமானவன். ஆயினும் பக்தியுடன் எனக்கு அன்புத் தொண்டு புரிபவன் யாராயினும், அவன் எனது நண்பன். அவன் என்னில் இருக்கிறான். நானும் அவனுக்கு நண்பனாகிறேன்.

பதம் 9.30
அபி சேத் ஸு-துராசாரோ பஜதே மாம் அனன்ய-பாக்
ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ:

அபி – இருந்தும்; சேத் – கூட; ஸு-துராசார: – மிகவும் மோசமான செயல்களைச் செய்பவன்; பஜதே – பக்தித் தொண்டில் ஈடுபட்டு; மாம் – எனக்கு; அனன்ய-பாக் – பிறழாமல்; ஸாது: – சாது; ஏவ – நிச்சயமாக; ஸ: – அவன்; மந்தவ்ய: – கருதப்பட வேண்டும்; ஸம்யக் – முழுமையாக; வ்யவஸித: – தீர்மானத்தில் திடமாக; ஹி – நிச்சயமாக; ஸ: – அவன்.

ஒருவன் மிகவும் மோசமான செயலைச் செய்தாலும், அவன் பக்தித் தொண்டில் பிறழாது ஈடுபட்டிருந்தால், அவனை சாதுவாகவே கருத வேண்டும்; ஏனெனில், அவன் தனது தீர்மானத்தில் திடமாக உள்ளான்.

பதம் 9.31
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஷஷ்வச்-சாந்திம் நிகச்சதி
கௌந்தேய ப்ரதிஜானீஹி ந மே பக்த: ப்ரணஷ்யதி

க்ஷிப்ரம் – வெகு விரைவில்; பவதி – ஆகிறான்; தர்ம-ஆத்மா – தர்மத்தின்படி செயல்படுபவன்; ஷஷ்வத்-சாந்திம் – நித்திய அமைதியை; நிகச்சதி -அடைகின்றான்; கௌந்தேய – குந்தியின் மகனே; ப்ரதிஜானீஹி – அறிவிப்பாய்; ந – இல்லை; மே – எனது; பக்த: – பக்தன்; ப்ரணஷ்யதி – அழிவது.

அவன் வெகு விரைவில் தர்மாத்மாவாகி, நித்தியமான அமைதியை அடைகின்றான். குந்தியின் மகனே, எனது பக்தன் என்றும் அழிவதில்லை என்பதை தைரியமாக அறிவிப்பாயாக.

பதம் 9.32
மாம் ஹி பார்த வ்யபாஷ்ரித்ய யே (அ)பி ஸ்யு: பாப-யோனய:
ஸ்த்ரியோ வைஷ்யாஸ் ததா ஷூத்ராஸ் தே (அ)பி யாந்தி பராம் கதிம்

மாம் – என்னிடம்; ஹி-நிச்சயமாக; பார்த – பிருதாவின் மகனே; வ்யபாஷ்ரித்ய – சரணடைந்து; யே – யாராக; அபி – இருந்தாலும்; ஸ்யு: – கூட; பாப-யோனய: – இழி குலத்தில் பிறந்த; ஸ்த்ரிய: – பெண்கள்; வைஷ்யா – வைசியர்கள்; ததா – கூட; ஷூத்ரா: – சூத்திரர்கள்; தே அபி – அவர்கள் கூட; யாந்தி – அடைவர்; பராம் – பரம; கதிம் – இலக்கை.

பிருதாவின் மகனே, பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என கீழ் குலத்தைச் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும், என்னிடம் சரணடைபவர்கள் பரமகதியை அடைய முடியும்.

பதம் 9.33
கிம் புனர் ப்ராஹ்மணா: புண்யா பக்தா ராஜர்ஷயஸ் ததா
அநித்யம் அஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்

கிம் – எவ்வளவு; புன: – மீண்டும்; ப்ராஹ்மணா: – பிராமணர்கள்; புண்யா: -புண்ணியமான; பக்தா – பக்தர்கள்; ராஜ-ருஷய: – புனிதமான மன்னர்கள்; ததா-கூட; அநித்யம் – தற்காலிகமான; அஸுகம் – துன்பமிக்க; லோகம் – உலகம்; இமம் – இதை; ப்ராப்ய – அடைந்து; பஜஸ்வ – அன்புத் தொண்டில் ஈடுபட்டு; மாம் – என்னிடம்.

இவ்வாறிருக்க, புண்ணியமான பிராமணர்கள், பக்தர்கள், மற்றும் புனிதமான அரசர்களைப் பற்றிச் சொல்வதற்கு என்ன உள்ளது? எனவே, துன்பம் வாய்ந்த இந்த தற்காலிக உலகை அடைந்த நீ, எனது அன்புத் தொண்டில் ஈடுபடுவாயாக.

பதம் 9.34
மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு
மாம் ஏவைஷ்யஸி யுக்த்வைவம் ஆத்மானம் மத்-பராயண:

மத்-மனா: – எப்பொழுதும் என்னை சிந்தித்துக் கொண்டு; பவ – ஆவாயாக; மத் – எனது; பக்த: – பக்தன்; மத் – என்னை; யாஜீ – வழிபடுபவன்; மாம் – எனக்கு; நமஸ்குரு – வந்தனை செய்; மாம் – என்னிடம்; ஏவ – முழுமையாக; ஏஷ்யஸி – வருவாய்; யுக்த்வா – ஆழ்ந்து ஈடுபட்டு; ஏவம் -இவ்வாறாக; ஆத்மானம் – உனது ஆத்மா; மத்-பராயண: – எனக்குப் பக்தி செய்து.

உனது மனதை எப்பொழுதும் என்னைப் பற்றிச் சிந்திப்பதில் ஈடுபடுத்தி, எனது பக்தனாகி, எனக்கு வந்தனை செய்து, என்னை வழிபடுவாயாக. இவ்வாறாக என்னில் முழுமையாக லயித்து, நிச்சயமாக நீ என்னிடமே வருவாய்.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare