அத்தியாயம் – 35
காட்டிற்குச் சென்ற கிருஷ்ணரை எண்ணிக்
கோபியர்கள் பாடியது
பதம் 10.35.1
ஸ்ரீ-ஸுக உவாச
கோப்ய: க்ருஷ்ணே வனம் யாதே தம் அனுத்தே-சேதஸ:
க்ருஷ்ண-லீலா: ப்ரகாயந்த்யோ நின்யுர் து: கேன வாஸரான்
ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; கோப்ய:—கோபியர்கள்; க்ருஷ்ணே—பகவான் கிருஷ்ணர்; வனம்—காட்டிற்கு; யாதே—சென்றவுடன்; தம்—அவர் பின்னே; அனுத்தே—பின்தொடர்ந்து செல்லும்; சேதஸ:—அவர்களின் மனங்கள்; க்ருஷ்ண-லீலா:—கிருஷ்ணரின் உன்னத லீலைகளை; ப்ரகாயந்த்ய:—உரக்கப்பாடி; நின்யு:—அவர்கள் கழித்தனர்; து: கேன—துயரத்துடன்; வாஸரான்—நாட்களை.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கிருஷ்ணர் எப்போதெல்லாம் காட்டிற்குச் செல்கின்றாரோ அப்போது கோபியர்களின் மனங்களும் அவர் பின்னால் ஓடும். அதனால் அந்த இளம் பெண்கள் அவரது லீலைகளைப் பற்றிப் பாடி தமது நாட்களைத் துயரத்துடன் கழிக்கின்றனர்.
பதங்கள் 10.35.2 – 10.35.3
ஸ்ரீ-கோப்ய ஊசு:
வாம-பாஹு-க்ருத-வாம-கபோலோ
வவ்கித-ப்ருர் அதரார்ப்பித-வேணும்
கோமளாங்குலிபிர் ஆஸ்ரித-மார்கம்
கோப்ய ஈரயதி யத்ர முகுந்த:
வ்யோம-யான-வனிதா: ஸஹ ஸித்தைர்
விஸ்மிதாஸ் தத் உபதார்ய ஸ-லஜ்ஜா:
காம-மார்கண-ஸமர்ப்பித-சித்தா:
கஸ்மலம் யயுர் அபஸ்ம்ருதே-நீவ்ய:
ஸ்ரீ-கோப்ய: ஊசு:—கோபியர்கள் கூறினார்; வாம—இடது; பாஹு—அவரது தோளின்மீது; க்ருத—வைத்துக்கொள்கின்றார்; வாம—இடது; கபோல:—அவரது கன்னத்தினை; வல்கித—அசைக்கின்றார்; ப்ரு:—அவரது புருவங்களை; அதர—தமது அதரங்களின்மீது; அர்ப்பித—வைக்கின்றார்; வேணும்—அவரது புல்லாங்குழலை; கோமள—மெல்லிய; அங்குலிபி—விரல்களினால்; ஆஸ்ரித-மார்கம்—அதன் துளைகளை மூடுகின்றார்; கோப்ய:—ஓ, கோபியர்களோ; ஈரயதி—இசையினை; யத்ர—எங்கே; முகுந்த—பகவான் கிருஷ்ணர்; வ்யோம—வாகனத்தில்; யான—பயணம் செய்யும்; வனிதா:—வனிதையர்கள்: ஸஹ—உடன் இணைந்து; ஸித்தை:—சித்த தேவர்களின்; விஸ்மிதா—ஆச்சரியமடைகின்றனர்; தத்—அதனை; உபதார்ய—கேட்டு; ஸ—உடன்; லஜ்ஜா:—வெட்கங்கொள்கின்றனர்; காம—காமத்தின்; மார்கண—பின் தொடர்ந்து; ஸமர்ப்பித—சமர்ப்பித்தனர்; சித்தா:—தங்கள் மனங்களை; கஸ்மலம்—துன்பம்; யயு:—அவர்கள் அடைந்தனர்; அபஸ்ம்ருத்—மறந்தனர்; நீவ்ய:—தங்கள் அணிந்திருந்த மேகலைகள் நெகிழ்வதை.
கோபியர்கள் கூறினர்: “முகுந்தன் தமது குழலை இசைக்கும் பொழுது தமது அதரங்களின் மீது அதனை வைத்துக் கொள்கின்றார், தமது இடது கன்னத்தினை, இடது தோளின்மீது சாய்த்துக் கொள்கிறார். தமது புருவங்களை அசைத்து ஆடச் செய்கிறார். அச்சமயம் விமானங்களில், தமது கணவர்களுடன் பயணம் செய்யும் சித்தர்களின் தேவியர்கள் ஆச்சரியத்திற்காளாகின்றனர். இனிய ஒலியினைக் கேட்டுத் தமது மனங்களில் காம இச்சை எழுவதைக் கண்டு அப்பெண்கள் நாணுகின்றனர். துயரத்தினால் தங்கள் இடைகளில் அணிந்திருந்த மேகலைகள் நெகிழ்வதையும் அவர்கள் அறியவில்லை.
பதங்கள் 10.35.4 – 10.35.5
ஹந்த சித்ரம் அபலா: ஸ்ருணுதேதம்
ஹார-ஹாஸ உரஸி ஸ்திர-வித்யுத்
நந்த-ஸுனுர் அயம் ஆர்த-ஜனானாம்
நர்ம-தோ யர்ஹி கூஜித-வேணு:
வ்ருந்தஸோ வ்ரஜ-வ்ருஷா ம்ருக-காவோ
வேணு-வாத்ய-ஹ்ருத-சேதஸா ஆராத்
தந்த-தஷ்ட-கவளா த்ருத-கர்ணா
நித்ரிதா விகித-சித்ரம் இவாஸன்
ஹந்த—ஆ; சித்ரம்—அற்புதம்; அபலா:—ஓ, பெண்களே; ஸ்ருணுத—கேட்டு; இதம்—இந்த; ஹரா—(ஒளிவீசும்) கழுத்தணியைப் போன்ற; ஹாஸ:—அவருடைய புன்னகை; உரஸி—மார்பின்மீது; ஸ்திர—அசையாது; வித்யுத்—மின்னல்; நந்த-ஸுனு:—நந்த மகாராஜாவின் மைந்தன்; அயம்—இது; ஆர்த—துன்புறுவோர்; ஜனானாம்—ஜனங்களுக்கு; நர்ம—மகிழ்ச்சி; த:—அளிப்பவர்; யர்ஹி—எப்பொழுது; கூஜித—ஒலிக்கின்ற; வேணு:—அவருடைய குழல்; வருந்தஸ்:—கூட்டம் கூட்டமாக; வ்ரஜ—விரஜத்தில் இருக்கின்ற; வ்ருஷா:—காளைகள்; ம்ருக—மான்கள்; காவ:—பசுக்கள்: வேணு—குழலின்; வாத்ய—இசைப்பதினால்; ஹ்ருத—பறி கொடுக்கும்; சேதஸ:—தமது மனங்களை; ஆராத்—தூரத்தில்; தந்த—தங்களது பற்களால்; தஷ்ட—கடிக்க; கவளா—தமது வாயில்; த்ருத—நிறுத்தும்; கர்ணா:—தங்கள் காதுகளை; நித்ரிதா—நித்திரைகொள்வது; விகித—வரையப்பட்ட; சித்ரம்—ஒரு சித்திரம்; இவ—போன்று: ஆஸன்—அவை இருந்தன.
ஒ, பெண்களே! துன்புறுவோர்க்கு இன்பமளிக்கும் நந்த கோபனின் மைந்தன் தமது மார்பின் மீது நிலையான மின்னலை உடையவராகவும் ஒளிரும் வைர அட்டிகை போன்ற புன்னகை உடையவராகவும், இருக்கின்றார். இப்போது சில அற்புத நிகழ்வுகளைக் கேட்பீராக! அவர் தமது புல்லாங்குழலினை இசைக்கும்பொழுது வெகு தொலைவில் கூட்டம்கூட்டமாக நிற்கும் விரஜகத்திலுள்ள காளைகளும், மான்களும், பசுக்களும், அவ்வொலியினால் ஈர்க்கப்பட்டுத் தமது வாயில் வைத்திருக்கும் புல்லைத் தின்னாமல், செவிமடல்களை நேராக நிமிர்த்திக் கொண்டு நிற்கும். அவையனைத்தும் அசைவற்று நிற்பது. உறங்குவது போலும் அல்லது சித்திரத்தில் வரைந்த உருவங்கள் போலும் தோற்றமளிக்கும்.
பதங்கள் 10.35.6 – 10.35.7
பர்ஹிண-ஸ்தபக-தாது-பலாஸைர்
பத்த-மல்ல-பரிபர்ஹ-விடம்ப:
கர்ஹிசித் ஸ-பல ஆலி ஸ கோபைர்
கா: ஸமாஹ்வயதி யத்ர முகுந்த:
தர்ஹி பக்ன-கதய: ஸரிதோ வை
தத்-பதாம்புஜ-ரஜோ ‘னில-நீதம்
ஸ்ப்ருஹயதீர் வயம் இவாபஹீ-புண்யா:
ப்ரேம-வேபித-புஜா: ஸ்திமிதாப:
பர்ஹிண—மயில்களின்; ஸ்தபக—இறகுகளுடன்; தாது—பலவண்ணத் தாதுகள்; பலாஸை:—மற்றும் இலைகளுடன்; பத்த—அணி செய்யப்பட்ட; மல்ல—ஒரு மல்யுத்தவீரனின்; பரிபர்ஹ—ஆடை; விடம்ப:—பாவனை செய்தல்; கர்ஹிசித்—சிலசமயம்; ஸ-பல:—பலராமருடன்; ஆலி—அன்பிற்குரிய கோபியே; ஸ:—அவர்; கோபை:—ஆயர் குலச்சிறுவர்களுடன்; கா:—பசுக்கள்; ஸமாஹ்வயதி—அழைக்கிறார்; யத்ர—எப்பொழுது; முகுந்த:—பகவான் முகுந்தன்; தர்ஹி—பின்னர்; பக்ன—முறிந்த; கதய:—அவற்றின் ஓட்டம்; ஸரித:—நதிகளின்; வை—உண்மையில்; தத்—அவருடைய; பத-அம்புஜ—தாமரைத் திருவடிகளின்; ரஜ—தூசு; அனில—காற்றினால்; நீதம்—கொண்டு வந்தது; ஸ்ப்ருஹயதீ:—நாட்டமுடன்; வயம்—நம்மை; இவ—போன்று; அபஹீ—சிறிதளவு; புண்யா:—புண்ணியமுடையன; ப்ரேம—கடவுளின்மீதுள்ள அன்பின் காரணமாக; வேபித—நடுங்குகின்றன; புஜா:—அவற்றின் கரங்கள் (அலைகள்); ஸ்திமித—நின்றன; ஆப:—அவற்றின் நீர்.
அன்பார்ந்த கோபியே! சிலசமயம் பகவான் முகுந்தன், இலைகளையும் மயிலிறகுகளையும், வண்ணத் தாதுப் பொருட்களையும் அணிந்து கொண்டு வரும்பொழுது ஒரு மல்யுத்த வீரனின் தோற்றத்தினைப் பாவனை செய்வது போன்றிருக்கும் அவரது தோற்றம். பிறகு பலராமருடனும், ஆயர்குலச் சிறுவர்களுடனும் சேர்ந்து கொண்டு தமது புல்லாங்குழலை இசைத்துப் பசுக்களை அழைப்பார். அச்சமயம் நதிகள் தமது ஒட்டத்தினை நிறுத்திவிடும். அவரது தமாரைத் திருவடிகளிலிருந்து தூசியினைக் கொண்டுவரும் காற்றிற்காக ஆர்வமுடன் காத்திருக்கும் நினைப்பில் தம்மை மறந்து அவற்றிலுள்ள நீர் அசைவற்று நிற்கும். ஆயினும் நம்மைப் போல் ஆறுகளும் அத்தனைப் புண்ணியம் செய்தவை அல்ல, அதனால் அவை காதலினால் தமது கரங்கள் நடுங்கக் காத்துக் கொண்டு நிற்கும்.
பதங்கள் 10.35.8 – 10.35.11
அனுசரை: ஸமனுவர்ணித-வீர்ய
ஆதி-பூருஷ இவசால-பூதி:
வன-சரோ கிரி-தடேஷீ சரந்தீர்
வேணுனாஹ்வயதி கா: ஸ யதா ஹி
வன-லதாஸ் தரவ ஆத்மனி விஷ்ணும்
வ்யஞ்ஜயந்த்ய இவ புஷ்ப-பலாட்யா:
ப்ரணத-பார-விடபா மது-தாரா:
ப்ரேம-ஹ்ருஷ்ட-தனவோ வவ்ருஷீ: ஸ்ம
தர்ஸனிய-திலகோ வன-மாலா-
திவ்ய-கந்த-துளஸீ-மது-மத்தை:
அளி-குலைர் அலகு கீதம் அபிஷ்டம்
ஆத்ரியன் யர்ஹி ஸந்தித-வேணு:
ஸரஸி ஸாரஸ-ஹம்ஸ-விஹங்காஸ்
சாரு-கீத-ஹ்ருத-சேதஸ ஏத்ய
ஹரிம் உபாஸத தே யத-சித்தா
ஹந்த மீலித-த்ருஸோ த்ருத-மௌனா:
அனுசரை:—அவரது துணைவர்களால்; ஸமனுவர்ணித—விரிவாக விளக்கப்படுகின்றது; வீர்ய:—அவரது வீரம்; ஆதி-பூருஷ:—முழுமுதற் கடவுள்; இவ—போன்று; அசல—மாற்றமின்றி; பூதி:—அவரது வளங்கள்; வன—வனத்தில்; சர:—செல்கின்றனார்; கிரி—மலைகளின்; தடேஷீ—பக்கங்களின் மீது; சரந்தீ:—புல் மேய்ந்து கொண்டிருக்கும்; வேணுனா—அவரது புல்லாங்குழலினால்; ஆஹ்வயதி—அழைக்கின்றார்; கா:—பசுக்களை; ஸ:—அவர்; யதா—எப்பொழுது; ஹி—உண்மையில்; வன-லதா:—வனத்திலுள்ளக் கொடிகள்; தரவ:—மற்றும் மரங்கள்; ஆத்மனி—தமக்குள்; விஷ்ணும்—பரமபுருஷபகவான், விஷ்ணு; வ்யஞ்ஜயந்த்ய:—வெளிப்படுத்துகின்றன; இவ—போன்று; புஷ்ப—புஷ்பங்களையும்; பல—பழங்களையும்; ஆட்யா:—வளமாகப் பெற்று; ப்ரணத—தலை வணங்குகின்றன; பார—பாரத்தின் காரணமாக; விடபா:—அவற்றின் கிளைகள்; மது—இனிய மதுவினை; தாரா:—பொழிகின்றன; ப்ரேம—பிரேமையினால்; ஹ்ருஷ்ட—மயிர்க்கூச்செறிகின்றன; தனவ:—அவற்றினுடைய உடல்களின் (அடிமரங்களின்) மீது; வவ்ருஷீ-ஸ்ம—மழையாகப் பொழிகின்றன; தர்ஸனிய—காண்பதற்குக் கவர்ச்சிகரமாக இருப்பவர்களின்; திலக:—மிகவும் நேர்த்தியான; வன-மாலா—வன மலர்களினாலான அவரது மாலையின் மீது; திவ்ய—திவ்யமான; கந்த—அதன் நறுமணம்; துளஸீ—துளசிமலர்களின்; மது—இனிமையான மதுவினால்; மத்தை:—மதிமயங்கிய; அளி—தும்பிகளின்; குலை—கூட்டங்களினால்; அலகு—உரக்க; கீதம்—பாடிக்கொண்டு; அபிஷ்டம்—விரும்பத்தக்க; ஆத்ரியன்—நன்றியுடன் ஏற்றுக் கொள்கின்றார்; யர்ஹி—எப்பொழுது; ஸந்தித—வைத்துக்கொண்டு; வேணு:—அவரது புல்லாங்குழலை; ஸரஸி—குளத்தில்; ஸாரஸ—நாரைகள்; ஹம்ஸ—அன்னங்கள்; விஹங்கா:—பிற பறவைகள்; சாரு—முன்வருகின்றன; கீத—(அவரது புல்லாங்குழலின்) பாடலால்; ஹ்ருத —எடுத்துச் செல்லப்பட்டது; சேதஸ:—யாருடைய மனம்; ஏத்ய—முன்னே வருவது; ஹரிம்—பகவான் கிருஷ்ணரை; உபாஸத—வழிபடுகின்றன; தே—அவை; யத—கட்டுப்பாட்டின் கீழ்; சித்தா:—அவற்றின் மனங்கள்; ஹந்த—ஆ; மீலித—மூடிக்கொள்கின்றன; த்ருஸ—தமது விழிகளை; த்ருத—அனுஷ்டிக்கின்றன; மௌனா:—மௌனம்.
கிருஷ்ணர், அவரது நண்பர்கள் அவரது வீரச் செயல்களின் கீர்த்திகளை விரிவாகப் பாடிக்கொண்டு உடன் வர காட்டிற்குச் செல்கிறார். இவ்வாறு அவர், குறையாத வளங்களை வெளிப்படுத்தும் முழுமுதற் கடவுளைப் போல் தோன்றுகின்றார். பசுக்கள் மலைப்பகுதிகளின் திரிந்து கொண்டிருக்கும்பொழுது கிருஷ்ணர் தமது புல்லாங்குழலின் ஒலியினால் அவற்றை அழைக்கின்றார். அப்பொழுது அவ்வொலியைக் கேட்ட மரங்களும், கொடிகளும் ஏராளமான பழங்களையும், புஷ்பங்களையும் வெளிப்படுத்தித் தமது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றன. அப்போது அவை பகவான் மகாவிஷ்ணுவைத் தமது மனங்களில் வெளிப்படுத்துவன போன்று காணப்படுகின்றன. பாரம் தாங்காது அவற்றின் கிளைகள் நிலத்தை நோக்கிக் குனியும் பொழுது அவற்றின் அடிமரத்தின் நரம்புகளும், அவற்றின்மீது படர்ந்துள்ள கொடிகளும் கடவுள் மீதான அன்பில் தம்மை மறந்து மயிர்க் கூச்செறிகின்றன. மரங்களும், கொடிகளும் இனிய மதுவினைப் பொழிகின்றன. கிருஷ்ணர் அணிந்துள்ள மாலையிலுள்ள துளசிப் பூக்களின் திவ்ய நறுமணம் மற்றும் இனிமையான மதுவினால் மதிமயங்கித் தும்பிகள் அவருக்காக ஒசையுடன் ரீங்காரமிடும், எல்லோரையும் விட எழில் மிக்கவரான பகவான் புல்லாங்குழலைத் தமது இதழ்களில் வைத்து இனிமையான இசையெழுப்புவதின் மூலம் தும்பிகளின் பாடலை நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறார். புல்லாங்குழலின் இனிய இசை பின்னர் நாரைகள், அன்னங்கள் மற்றும் நீர்வாழ்ப் பறவைகளின் உள்ளங்களையும் கொள்ளை கொள்கின்றது. உண்மையில் அவை கிருஷ்ணரை அணுகி, தமது விழிகளை மூடிக்கொண்டு, கடுமையாக மௌனம் காத்து ஆழ்ந்த தியானத்தில் தமது உணர்வினை அவர் மீது நிலைநிறுத்தி அவரை வழிபடுகின்றன.
பதங்கள் 10.35.12 – 10.35.13
ஸஹ-பல: ஸ்ரக்-அவதம்ஸ-விலாஸ:
ஸானுஷீ க்ஷிதி-ப்ருதோ வ்ரஜ-தேவ்ய:
ஹர்ஷயன் யர்ஹி வேணு-ரவேண
ஜாத-ஹர்ஷ உபரம்பதி விஸ்வம்
மஹத்-அதிக்ரமண-ஸங்கித-சேதா
மந்த-மந்தம் அனுகர்ஜதி மேக:
ஸுஹ்ருதம் அப்யவர்ஷத் ஸுமனோபிஸ்
சாயயா ச விததத் ப்ரதபத்ரம்
ஸஹ-பல:—பலராமருடன் சேர்ந்து; ஸ்ரக்—ஒரு மலர் மாலை; அவதம்ஸ—அவரது தலையில் ஆபரணமாக; விலாஸ:—வேடிக்கையாக அணிந்துகொண்டு; ஸானுஷீ—பக்கங்களில்; க்ஷிதி-பருத:—ஒரு மலையின்; வ்ரஜ-தேவ்ய:—ஓ, விருந்தாவனத் தேவதையே (கோபி); ஹர்ஷயன்—இன்பம் அளிக்கின்றார்; யர்ஹி—எப்பொழுது; வேணு—அவரது குழலின்; ரவேண—இனிமையான ஒலியினால்; ஜாத-ஹர்ஷ:—மகிழ்ச்சி கொண்டு; உபரம்பதி—சுவைக்குக் காரணமாகிறது; விஸ்வம்—உலகம் முழுவதின்; மஹத்—மகத்தானவர்களுக்கு எதிராக; அதிக்ரமண—மீறி நடத்தல்; ஸங்கித—அச்சங்கொண்டு; சேதா:—தனது மனதில்; மந்த-மந்தம்—மிகவும் நேர்த்தியாக; அனுகர்ஜதி—பதிலுக்கு இடியோசை எழுப்புகிறது; மேக:—மேகம்; ஸுஹ்ருதம்—தனது உயிர் நண்பர் மீது; அப்யவர்ஷத்—மழைபொழிகின்றது; ஸுமனோபி:—மலர்களுடன்; சாயயா—தனது நிழலினால்; ச—மற்றும்; விததத்—அளிக்கின்றது; ப்ரதபத்ரம்—சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும் குடை போன்றது.
ஒ, விரஜ தேவியரே! பகவான் கிருஷ்ணர் தமது தலையில் ஒரு மலர் மாலையை வேடிக்கையாக அணிந்து கொண்டு பலராமருடன் சேர்ந்து மலைப் பகுதிகளில் மகிழ்ந்திருக்கும் பொழுது தமது புல்லாங்குழலின் இனிய ஒலியினால் அவர் எல்லா உயிர்களையும் மகிழ்ச்சிப்படுத்துகிறார். இவ்வாறு அவர் உலகம் முழுவதையும் இன்பமடையச் செய்கின்றார். அச்சமயம் அருகிலுள்ள மேகம் மகத்தான ஒருவருக்கு எதிராகக் குற்றமிழைத்து விடுவோமோ என்னும் அச்சத்தின் காரணமான அவரது குழலிசைக்கு ஏற்ப இடியோசையினை மிகவும் நேர்த்தியாக இழையச் செய்கிறது. மேகம் தனது உயிர்நண்பரான கிருஷ்ணர் மீது மழையாகப் பெய்வித்து, சூரியனின் சுடுகதிர்கள் அவர்மீது படவிடாது ஒரு குடையினைப் போல் அவருக்கு நிழல் அளிக்கின்றது.
பதங்கள் 10.35.14 – 10.35.15
விவித-கோப-சரணேஷீ விதக்தோ
வேணு-வாத்ய உருதா நிஜ-ஸிக்ஷா:
தவ ஸுத: ஸதி யதாதர-பிம்பே
தத்த-வேணுர் அனயத் ஸ்வர-ஜாதீ:
ஸவனஸஸ் தத் உபதார்ய ஸுரேஸா:
ஸக்ர-ஸர்வ-பரமேஷ்டி-புரோகா:
கவய ஆனத-கந்தர-சித்தா:
கஸ்மலம் யயுர் அனிஸ்சித-தத்த்வா:
விவித—பல்வேறு; கோப—ஆயர்களின்; சரணேஷீ—செயல்களில்; விதக்த:—தேர்ந்தவர்; வேணு—புல்லாங்குழலின்; வாத்ய—இசைப்பதில்; உருதா—பல்வகை; நிஜ—அவரது சுய கண்டுபிடிப்புகளின்; ஸிக்ஷா:—அவருடைய சிட்சைகள்; தவ—உனது; ஸுத:—மைந்தன்; ஸதி—ஓ, புண்ணியவதியே (யசோதை); யதா—எப்பொழுது; அதர—அவரது இதழ்களின் மீது; பிம்பே—சிவந்த கோவைப்பழம் போன்ற; தத்த—வைத்து; வேணு:—அவரது புல்லாங்குழலினை; அனயத்—அவர் எழுப்பினார்; ஸ்வர—ஸ்வரங்களின்; ஜாதி:—வரிசைகளை; ஸவனஸ:—கீழ், மத்திய உச்சஸ்தாயிகளில்; தத்—அதனை; உபதார்ய—கேட்டு; ஸுர-ஈஸா:—முதன்மைத் தேவர்கள்; ஸக்ர—இந்திரன்; ஸர்வ—சிவபெருமான்; பரமேஷ்டி—மற்றும் பிரம்மதேவன்; புர:-கா:—தலைமையில்; கவய:—கற்றறிந்த அறிஞர்கள்; ஆனத—தாழ்ந்து பணிந்தனர்; கந்தர—தங்கள் கழுத்துக்களை; சித்தா:—மற்றும் மனங்களையும்; கஸ்மலம் யயு:—அவர்கள் குழப்பமடைகின்றனர்; அனிஸ்சித—உறுதிப்படுத்த இயலாமல்; தத்த்வா:—அதன் சாரத்தினை.
ஓ, புண்ணியவதி தாயான யசோதை அன்னையே பசுக்களை மேய்ப்பதின் அனைத்துக் கலைகளிலும் தேர்ந்துள்ள உனது மைந்தர் புல்லாங்குழலை இசைப்பதில் பல புதிய யுக்திகளைக் கண்டுபிடித்துள்ளார். அவரது சிவந்த கோவைப்பழ அதரங்களில் அவர் தமது புல்லாங்குழலை வைத்துப் பல்வேறு ஸ்வர வரிசைகளைக் கீழ் மத்திய உச்சஸ்தாயிகளில் இசை எழுப்பும் பொழுது அதன் ஒலியைக் கேட்டு பிரம்மதேவர், சிவபெருமான், இந்திரன் மற்றும் பிற தேவர் தலைவர்கள் அனைவரும் குழப்பமடைகின்றனர். இவர்கள் அனைவரும் சிறந்த கற்றறிந்த அறிஞர்களாக இருந்தபோதிலும் அந்த இசையின் சாரத்தினை என்னவென்று அவர்களால் உறுதிபடுத்த முடியவில்லை. அதனால் அவர்கள் தமது தலைகளையும், இதயங்களையும் தாழ்த்தி வணங்கினர்.
பதங்கள் 10.35.16 – 10.35.17
நிஜ-பதாப்ஜ-தலைர் த்வஜ-வஜ்ர-
நீரஜாங்குஸ-விசித்ர-லலாமை:
வ்ரஜ-புவ: ஸமயன் குர-தோதம்
வர்ஷ்ம-துர்ய-கதிர்-வேணு:
வ்ரஜதி தேன வயம் ஸ-விலாஸ-
வீக்ஷணார்பித-மனோபவ-வேகா:
குஜ-கதிம் கமிதா ந விதாம:
கஸ்மலேன கவரம் வஸனம் வா
நிஜ—அவரது; பத-அப்ஜ—தாமரைத் திருவடிகளின்; தலை:—மலர் இதழ்களைப் போன்ற; த்வஜ—கொடியின்; வஜ்ர—வஜ்ராயுதத்தின்; நீரஜ—தாமரைமலர்; அங்குஸ—அங்குசத்தின்; விசித்ர—பல்வகையான; லலாமை:—அடையாளங்களினால்; வ்ரஜ—வ்ரஜத்தின்; புவ:—நிலத்தின்; ஸமயன்—விடுவித்தல்; குர—குளம் படிகளிலிருந்து (பசுக்களின்); தோதம்—வேதனை; வர்ஷ்ம:—தமது உடலினால்; துர்ய—யானையைப் போன்ற; கதி:—அதன் அசைவு; ஈடித—புகழப்பட்ட; வேணு:—அவருடைய புல்லாங்குழல்; வ்ரஜதி—அவர் நடக்கிறார்; தேன—அதனால்; வயம்—நாம்; ஸவிலாஸ—வேடிக்கையான; வீக்ஷண—அவருடைய பார்வைகளினால்; அர்பித—அளிக்கப்படுகின்றோம்; மன:-பவ—மன்மதனின்; வேகா:—அவர்களின் கிளர்ச்சி; குஜ—மரங்களைப் போன்று; கதிம்—அவர்களின் நிலை (அதாவது முற்றிலும் அசைவற்ற நிலை); கமிதா:—எய்துகின்றோம்; ந விதாம:—நாம் அறிவதில்லை; கஸ்மலேன—நமது மயக்கத்தினால்; கவரம்—நமது பின்னல் சடைகள்; வஸனம்—நமது ஆடைகள்; வா—அல்லது.
கிருஷ்ணர் தமது செந்தாமரை இதழ் போன்ற மென்மையான பாதங்களினால் விரஜம் முழுவதும் நடந்து அதன் நிலப்பகுதியில், தமது பாதங்களிலுள்ள கொடி வஜ்ராயுதம், தாமரை மலர் மற்றும் அங்குசக் குறிகளைப் பதிக்கும்பொழுது, பசுக்களின் காலடிக் குளம்புகள் பட்டு வருந்தும் நிலத்தின் வேதனையிலிருந்து அதற்கு விடுதலையளிக்கின்றார். அவர் தமது புல்லாங்குழலை இசைக்கும் பொழுது அவரது உடல் ஓர் யானையைப் போன்று கவர்ச்சிகரமாக அசைகிறது. கிருஷ்ணர் நம்மை வேடிக்கையாகப் பார்க்கும் பொழுது மன்மதனால் கிளர்ச்சிக்கு ஆளாக்கப்படும் கோபியர்களாகிய நாம் நமது கூந்தலும், ஆடையும் குலைவதைக் கூட அறியாது மரங்களைப் போல் அசைவற்று நிற்கின்றோம்.
பதங்கள் 10.35.18 – 10.35.19
மணி-தர: க்வசித் ஆகணயன் கா
மாலயா தயித-கந்த-துளஸ்யா:
ப்ரணயினோ ‘னுசரஸ்ய கதாம்ஸே
ப்ரக்ஷிபன் புஜம் அகாயத யத்ர
க்வணித-வேணு-ரவ-வாஞ்சித-சித்தா:
க்ருஷ்ணம் அன்வஸத க்ருஷ்ண-க்ருஹிண்ய:
குண-கணார்ணம் அனுகத்ய ஹரிண்யோ
கோபிகா இவ விமுக்த-க்ருஹாஸா:
மணி—(நூலிழையில் கட்டிய) மணிகள்; தர:—பிடித்துக் கொண்டு; க்வசித்—ஏதோ ஓரிடத்தில்; ஆகணயன்—எண்ணிக்கொண்டு; கா:—பசுக்கள்; மாலயா—மாலையுடன்; தயித—அவரது பிரியமான; கந்த—அன்பிற்குரிய; துளஸ்யா:—துளசி மலர்கள்; ப்ரணயின:—அன்பான; அனுசரஸ்ய—ஒரு நண்பனின்; கதா—சில சமயங்களில்; அம்ஸே—தோளின்மீது; ப்ரக்ஷிபன்—போட்டுக்கொண்டு; புஜம்—அவரது கரத்தினை; ஆகயத—அவர் பாடினார்; யத்ர—எப்பொழுது; க்வணித—ஒலித்த; வேணு—அவரது புல்லாங்குழலின்; ரவ—ஓசையினால்; வாஞ்சித—திருடப்பட்ட; சித்தா:—அவற்றின் மனங்கள்; க்ருஷ்ணம்—கிருஷ்ணர்; அன்வஸத—அவை அருகில் அமர்ந்து கொண்டு; க்ருஷ்ண—கருநிற மானின்; க்ருஹிண்ய:—மனைவியர்; குண-கண—எல்லா உன்னத குணங்களின்; அர்ணம்—கடல்; அனுகத்ய—அணுகி; ஹரிண்ய:—பெண்மான்கள்; கோபிகா:—கோபியர்கள்; இவ—போன்று; விமுக்த—துறந்தன; க்ருஹ—குடும்பம் மற்றும் வீட்டின் மீதான; ஆஸா:—அவற்றின் நம்பிக்கைகளை.
கிருஷ்ணர் இப்போது எங்கோ ஓரிடத்தில் நின்று நூலிழையில் கோர்க்கப்பட்ட மணிகளைக் கொண்டு தமது பசுக்களை எண்ணிக்கொண்டிருப்பார். அவர் தமக்கு மிகவும் பிரியமான நறுமணமுடைய துளசிமலர்களினாலான மாலையினை அணிந்திருப்பார். அவரது அன்பிற்குரிய ஆயர்குலச் சிறுவனின் தோளின் மீது தமது கரத்தினைப் போட்டிருப்பார். கிருஷ்ணர் தமது புல்லாங்குழலினை இசைத்துக் கொண்டு பாடும்பொழுது உன்னதக் குணங்களின் கடலான அவரை அணுகிய கருநிற மான்களின் துணையான பெண்மான்கள் அவர் அருகில் சென்று அமரும். கோபியர்களான நம்மைப் போல் அம்மான்களும் இல்லற வாழ்வின் இன்பத்தின் மீதான அனைத்து நம்பிக்கைகளையும் துறந்திருக்கும்.
பதங்கள் 10.35.20 – 10.35.21
குந்த-தாம-க்ருத-கௌதுக-வேஷோ
கோப-கோதன-வ்ருதோ-யமுனாயாம்
நந்த-ஸுனூர் அனகே தவ வத்ஸோ
நர்ம-த: ப்ரணயிணாம் விஜஹார
மந்த-வாயுர் உபவாதி அனுகூலம்
மானயன் மலயஜ-ஸ்பர்ஸேன
வந்தினஸ் தம் உபதேவ-கணா யே
வாத்ய-கீத-பலிபி: பரிவவ்ரு:
குந்த—மல்லிகைமலர்களின்; தாம—மாலையுடன்; க்ருத—செய்யப்பட்ட; கெளதுக—விளையாட்டாக; வேஷ:—அவருடைய வேடம்; கோப—கோபாலர்களால்; கோதன—மற்றும் பசுக்களினால்; வ்ருத:—சூழப்பட்டு; யமுனாயாம்—யமுனையின் அருகே; நந்த-ஸுனு:—நந்த மகாராஜாவின் மைந்தன்; அனகே—ஓ, பாவமற்ற பெண்மணியே; தவ—தங்கள்; வத்ஸ—பாசக் குழந்தை; நர்ம-த:—மகிழ்ச்சியூட்டுகின்றார்; ப்ரணயினாம்—அவரது பிரியமிகு நண்பர்களின்; விஜஹார—விளையாடிக் கொண்டிருக்கிறார்; மந்த—மெல்லிய; வாயு:—காற்று; உபவாதி—வீசுகின்றது; அனுகூலம்—அனுகூலமாக; மானயன்—கௌரவிக்கின்றது; மலய-ஜ—சந்தனத்தின் (நறுமணத்தின்); ஸ்பர்ஸேன—ஸ்பரிசத்தில்; வந்தின:—அவரைப் போற்றுகின்றனர்; தம்—அவரை; உபதேவ—உபதேவர்கள்; கணா:—பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்; யே—யார்; வாத்ய—வாத்திய இசையுடன்; கீத—பாடிக் கொண்டு; பலிபி:—பரிசுப் பொருட்களையும்; பரிவவ்ரு:—அவர்கள் சூழ்ந்திருந்து.
ஓ, பாவமற்ற யசோதையே! நந்த மகாராஜாவின் மைந்தரான தங்கள் பாசமிகு குழந்தை ஒரு மல்லிகை மாலையினால் தம்மை நன்றாக அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார். அவர் இப்பொழுது யமுனையின் அருகில் பசுக்களும், ஆயர்குலச்சிறுவர்களும் சூழ்ந்திருக்க இசை எழுப்பிக் கொண்டுத் தமது நண்பர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றார். மந்தமாருதம் சந்தனத்தின் நறுமணத்தினைச் சுமந்து வந்து அவரை கௌரவிக்கின்றது. வாழ்த்திசை முழங்குபவர்களைப் போன்று பல்வேறு உபதேவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் நின்றுகொண்டு தமது இசையினையும், பாடங்களையும், பரிசுப் பொருட்களையும் அவருக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர்.
பதங்கள் 10.35.22 – 10.35.23
வத்ஸலோ வ்ரஜ-கவாம் யத் அக-த்ரோ
வந்த்யமான-சரண: பதி வ்ருத்தை:
க்ருத்ஸன-கோ-தனம் உபோஹ்ய தினாந்தே
கீத-வேணூர் அனுகேடித கீர்தி:
உத்ஸவம் ஸ்ரம-ருசாபி த்ருஸுனாம்
உன்னயன் குர-ரஜஸ்-சுரித-ஸ்ரக்
தித்ஸயைதி ஸுஹ்ருத்-ஆஸிஷ ஏஷ
தேவகீ-ஜடர-பூர் உடு ராஜ:
வத்ஸல:—பாசத்தினால்; வ்ரஜ-கவாம்—விரஜத்திலுள்ள பசுக்களின் மீது; யத்—ஏனெனில்; அக—மலையினை; த்ர:—தூக்கியவர்; வந்த்யமான—வணங்கப்படுகின்றன; சரண:—அவருடைய பாதங்கள்; பதி—பாதையின் மருங்கில்; வ்ருத்தை:—மேன்மைமிக்க தேவர்களால்; க்ருத்ஸ்ன—முழுவதும்; கோ-தனம்—பசுக்களின்கூட்டம்; உபோஹ்ய—சேர்த்துக் கொண்டு; தின—பகற்பொழுதின்; அந்தே—இறுதியில்; கீத-வேணு:—அவரது புல்லாங்குழலின்; இசைக்கின்றார்; அனுக—அவரது துணைவர்களால்; ஈடித—புகழப்பட்டு; கீர்த்தி:—அவருடைய கீர்த்திகள்; உத்ஸவம்—ஓர் உற்சவம்; ஸ்ரம—சிரமத்தின்; ருசா—அவருடைய நிறத்தினால்; அபி—கூட; த்ருஸுனாம்—கண்களுக்கு; உன்னயன்—எழுந்த; குர—குளம்புகளிலிருந்து (பசுக்களின்); ரஜ:—தூசியினால்; சுரித—பூசப்பட்ட; ஸ்ரக்—அவரது மாலை; தித்ஸயா—அவர்களின் விருப்பங்கள்; இதி—அவர் வருகிறார்; ஸுஹ்ருத்—அவருடைய நண்பர்களுக்கு; ஆஸிஷ—அவர்களின் ஆசைகள்; ஏஷ:—இது; தேவகீ—அன்னை யசோதையின்; ஜடா—கருப்பையிலிருந்து; பூ:—பிறந்த; உடு-ராஜ:—சந்திரன்.
விரஜத்திலுள்ள பசுக்களின் மீது கொண்ட அளவற்ற பாசத்திலேயே கிருஷ்ணர் கோவர்தன கிரியைத் தூக்கியவரானார். பகற்பொழுதின் இறுதியில் அவருடைய எல்லாப் பசுக்களும் சூழ்ந்துவர அவர் தமது புல்லாங்குழலில் இசை எழுப்புவார், அவர் வரும் பாதையில் நின்று கொண்டு தேவர்கள் அவரது தாமரைத் திருவடிகளை வணங்குவர், அவரது நண்பர்களான ஆயர்குலச்சிறுவர்களோ அவருடைய கீர்த்திகளைப் பாடிக் கொண்டு உடன் வருவர். அவர் அணிந்திருக்கும் மாலை, பசுக்களின் காலடிக் குளம்புகளினால் எழும் தூசு நிறைந்திருக்கும். களைப்பினால் அதிகரிக்கும் அவருடைய எழில் அனைவரின் கண்களுக்கும் ஆனந்த உற்சவத்தினை உருவாக்கும். தமது நண்பர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஆர்வத்தில் கிருஷ்ணர், அன்னை யசோதையின் கருப்பையிருந்து எழுந்து வந்த நிலவு ஆவார்.
பதங்கள் 10.35.24 – 10.35.25
மத-விகூர்ணித-லோசன ஈஷத்
மான-த: ஸ்வ-ஸுஹ்ருதாம் வன-மாலீ
பதர-பாண்டு-வதனோ ம்ருது-கண்டம்
மண்டயன் கனக-குண்டல-லக்ஷ்ம்யா
யது-பதிர் த்விரத-ராஜ-விஹாரோ
யாமினி-பதிர் இவைஷ தினாந்தே
முதித-வக்த்ர உபயாதி துரந்தம்
மோசயன் வ்ரஜ-கவாம் தின-தாபம்
மத—மயக்கதினால்; விகூர்ணித—சுழல்கின்ற; லோசன:—அவருடைய விழிகள்; ஈஷத்—மெதுவாக; மான-த:—மரியாதை அளிக்கும்; ஸ்வ-ஸுஹ்ருதாம்—அவரது நலம் விரும்பும் நண்பர்களுக்கு; வன-மாலீ—வனத்திலுள்ள மலர்களினால் கட்டப்பட்ட மாலை அணிந்தவர்; பதர—இலந்தைப் பழம் போன்ற; பாண்டு—வெண்ணிறமுடைய; வதன:—அவருடைய முகம்; ம்ருது—மென்மையான; கண்டம்—அவருடைய கன்னங்கள்; மண்டயன்—அணிசெய்யும்; கனக—பொன்னாலான; குண்டல—செவிக் குண்டலங்கள்; லக்ஷ்ம்யா—எழிலுடன்; யது-பதி:—யதுகுலத்தலைவர்; த்விரத-ராஜ—ஓர் ராஜ யானையைப் போன்று; விஹார:—அவருடைய விளையாட்டு; யாமினி-பதி:—இரவின் நாயகன் (சந்திரன்); இவ—போன்று; ஏஷ:—அவர்; தின-அந்தே—நாளின் முடிவில்; முதிதா—மகிழ்ச்சிமிக்க; வக்த்ர:—அவருடைய முகம்; உபயாதி—வருகின்றார்; துரந்தம்—கடப்பதற்கரிய; மோசயன்—விரட்டிக் கொண்டு; வ்ரஜ—விரஜத்தின்; கவாம்—பசுக்களின் அல்லது கருணை காட்டப்பட வேண்டியவர்களின்; தின—பகற்பொழுதின்; தாபம்—துன்பம் செய்யும் வெம்மை.
கிருஷ்ணர் மரியாதையுடன் தமது நலம் விரும்பும் நண்பர்களை வாழ்த்தும் பொழுது அவருடைய விழிகள் மயக்கம் கொண்டன போன்று மெதுவாகச் சுழலும். அவர் வனத்திலுள்ள மலர்களினால் கட்டப்பட்ட மாலையினை அணிந்திருக்கின்றார். அவருடைய மென்மையான கன்னங்களின் எழிலினை பொன்னால் செய்யப்பட்ட அவரது செவிக்குண்டலங்களின் ஒளியும் வெண்ணிலந்தைப் பழம் போன்ற அவருடைய திருமுகத்தின் வெண்ணிறமும் அதிகரிக்கச் செய்கின்றன. இரவின் நாயகனான சந்திரனை ஒத்த மகிழ்ச்சி மிக்க முகத்துடன் யது குலத் தலைவரான அவர் ஒரு ராஜ யானையைப் போல நடக்கின்றார். இவ்வாறு பகலின் துன்பம் செய்யும் வெப்பத்திலிருந்து விரஜத்தின் பசுக்களை மீட்டுக் கொண்டு மாலையில் அவர் விரஜத்திற்குத் திரும்புகின்றார்.
பதம் 10.35.26
ஸ்ரீ-ஸுக உவாச
ஏவம் வ்ரஜ-ஸ்த்ரியோ ராஜன் க்ருஷ்ண-லீலானுகாயதீ:
ரேமிரே ‘ஹ: ஸு தச்-சித்தாஸ் தன்-மனஸ்கா மஹோதயா:
ஸ்ரீ-ஸுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; வ்ரஜ-ஸ்த்ரிய:—விரஜத்தின் பெண்கள்; ராஜன்—ஓ, ராஜனே; க்ருஷ்ண-லீலா—கிருஷ்ண லீலைகளைப் பற்றி; அனு காயதீ:—தொடர்ந்து ஓதுகின்றனர்; ரேமிரே—அவர்கள் மகிழ்கின்றனர்; அஹ: ஸு—பகற்பொழுதுகளில்; தத்-சித்தா:—அவரிடத்து ஆழ்ந்திருக்கும் சித்தமுடையவர்கள்; தன்-மனஸ்கா:—அவரிடத்து ஆழ்ந்திருக்கும் மனமுடையவர்கள்; மஹா—சிறந்த; உதயா:—விழாக்கால மகிழ்ச்சியடைகின்றனர்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: “ஓ மன்னனே, இவ்வாறு பகற்பொழுதில் விரஜத்திலுள்ளப் பெண்கள் தொடர்ந்து கிருஷ்ணருடைய லீலைகளைப் பாடி மகிழ்கின்றனர். மேலும் அவரிடத்து ஆழ்ந்திருக்கும் சித்தமும், மனமும் உடைய பெண்கள் விழாக்கால மகிழ்ச்சியால் நிரப்பப்படுகின்றனர்.”
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “காட்டிற்குச் சென்ற கிருஷ்ணரை எண்ணிக் கோபியர்கள் பாடியது” எனும் தலைப்பைக் கொண்ட, முப்பத்தைந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.