அத்தியாயம் – 32
பிரிந்தவர் கூடினர்
பதம் 10.32.1
ஸ்ரீ-ஸுக உவாச
இதி கோப்ய: ப்ரகாயந்த்ய: ப்ரலபந்த்யஸ் ச சித்ரதா
ருருது: ஸு-ஸ்வரம் ராஜன் க்ருஷ்ண-தர்ஸன-லாலஸா:
ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—மேலே கூறப்பட்டவாறு; கோப்ய:—கோபியர்கள்; ப்ரகாயந்த்ய:—பாடிக்கொண்டும்; ப்ரலபந்த்ய:—பேசிக்கொண்டும்; ச—மற்றும்; சித்ரதா—பல்வேறு மனங்கவரும் வழிகளில்; ருருது:—அழுதனர்; ஸு-ஸ்வரம்—கூக்குரலிட்டு; ராஜன்—ஓ மன்னனே; க்ருஷ்ண-தர்ஸன—கிருஷ்ணரின் தரிசனத்திற்காக; லாலஸா:—பேரார்வங்கொண்டு.
சுகதேவ கோஸ்வாமி கூறினார். ஓ, மன்னனே, இவ்வாறு கோபியர்கள் பாடிக் கொண்டும், பல்வேறு மனங்கவரும் வழிகளில் தங்கள் மனதிலுள்ளவற்றைப் பேசிக்கொண்டும் கூக்குரலிட்டு அழத்தொடங்கினர். பகவான் கிருஷ்ணரைக் காணவேண்டுமென்று அவர்கள் பேரார்வங்கொண்டிருந்தனர்.
பதம் 10.32.2
தாஸாம் ஆவிரபூச் சௌரி: ஸ்மயமான-முகாம்புஜ:
பீதாம்பர-தர: ஸ்ரக்வீ ஸாக்ஷான் மன்மத-மன்மத:
தாஸாம்—அவர்களின்முன்பு; ஆவிரபூத்—அவர் தோன்றினார்; ஸௌரி:—பகவான் கிருஷ்ணர்; ஸ்மயமான—புன்னகை பூத்த; முக—அவரது முகம்; அம்புஜ:—தாமரைமலர் போன்ற; பீத—மஞ்சள் வண்ண; அம்பர—ஆடை; தர:—அணிந்துகொண்டும்; ஸ்ரக்-வீ—ஒரு மலர்மாலை அணிந்துகொண்டும்; ஸாக்ஷாத்—நேரில்; மன்-மத—மன்மதனின் (இவன் மனதினை மோகமுறச் செய்வான்); மன்—மனதினை; மத:—மோகமுறச் செய்பவர்.
பின்னர் பகவான் கிருஷ்ணர் புன்னகை பூத்த செந்தாமரை மலர் முகத்துடன் மஞ்சள் வண்ணப் பட்டுப் பீதாம்பரமும், மலர் மாலையும் அணிந்தவராக சாதாரண மனிதர்களின் மனங்களை மோகமுறச் செய்யும் மன்மதனின் மனதினையே மோகமுறச் செய்யக் கூடியவராகக் கோபியர்களின் முன்னே நேரில் தோன்றினார்.
பதம் 10.32.3
தம் விலோக்யாகதம் ப்ரேஷ்டம் ப்ரீதி-உத்புல்ல-த்ருஸோ ‘பலா:
உத்தஸ்துர் யுகபத் ஸர்வஸ் தன்வ: ப்ராணம் இவாகதம்
தம்—அவரை; விலோக்ய—கண்ட; ஆகதம்—திரும்பிவர; ப்ரேஷ்டம்—அவர்களின் நேசத்திற்குரிய; ப்ரீதி—அன்புமீதூர; உத்புல்ல—விரியத்திறந்தனர்; த்ருஸ:—தங்கள் விழிகளை; அபலா:—பெண்கள்; உத்தஸ்து:—அவர்கள் எழுந்து நின்றனர்; யுகபத்—அனைவரும் உடனே; ஸர்வா:—அனைவரின்; தன்வ:—உடலிலும்; ப்ராணம்—உயிர்க் காற்று (பிராணன்); இவ—போன்று; ஆகதம்—திரும்பிவந்தது.
தங்கள் உயிரினும் மேலான கிருஷ்ணர் திரும்பிவந்ததைக் கண்டவுடன் கோபியர்கள் அனைவரும் உடனே எழுந்து நின்றனர். அவர் மீது கொண்ட அளவிலா அன்பினால் அவர்களின் விழிகள் அகலமாக விரிந்தன. இது, அவர்களின் உடலினுள் உயிர்க்காற்று மீண்டும் புகுந்தது போல் இருந்தது.
பதம் 10.32.4
காசித் கராம்புஜம் ஸெனரேர் ஜக்ருஹே ‘ஞ்ஜலினா முதா
காசித் ததார தத்-பாஹும் அம்ஸே சந்தன-பூஷிதம்
காசித்—அவர்களுள் ஒருத்தி; கர-அம்புஜம்—செந்தாமரைக் கரத்தினை; ஸெனரே:—பகவான் கிருஷ்ணரின்; ஜக்ருஹே—பற்றிக் கொண்டாள்; அஞ்ஜலினா—தனது குவித்த கரங்களுக்கிடையில்; முதா—மகிழ்ச்சியுடன்; காசித்—மற்றொருத்தி; ததார—எடுத்து வைத்துக் கொண்டாள்; தத்-பாஹும்—அவரது கரத்தினை; அம்ஸே—அவளது தோள்களின் மீது; சந்தன—சந்தனத்தினால்; பூஷிதம்—அணி செய்யப்பட்ட.
ஒரு கோபி மிக்க மகிழ்ச்சியுடன் குவித்து தனது இந் கரங்களுக்கிடையே கிருஷ்ணரின் கரத்தினைப் பற்றிக் கொண்டாள். மற்றொருத்தி சந்தனம் பூசிய அவரது திருக்கரத்தினை எடுத்துத் தனது தோள்களின் மீது வைத்துக் கொண்டாள்.
பதம் 10.32.5
காசித் அஞ்ஜலினாக்ருஹ்ணாத் தன்வீ தாம்பூல-சர்விதம்
ஏகா தத்-அங்க்ரி-கமலம் ஸந்தப்தா ஸ்தனயோர் அதாத்
காசித்—ஒருத்தி; அஞ்ஜலினா—குவித்தகரங்களில்; அக்ருஹ்ணாத்—எடுத்து; தன்வீ—மெல்லிய; தாம்பூல—தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு); சர்விதம்—அவர் சுவைத்த மிச்சம்; ஏகா—ஒருத்தி; தத்—அவருடைய; அங்க்ரி—பாதத்தினை; கமலம்—தாமரை; ஸந்தப்தா—எரிகின்ற; ஸ்தனயோ—மார்பகங்களின் மீது; அதாத்—இட்டுக் கொண்டாள்.
மெல்லிய உடல் கொண்ட ஒரு கோபி, மிக்க மரியாதையுடன் அவர் தரித்த தாம்பூலத்தின் (வெற்றிலை பாக்கின்) மிச்சத்தைத் தனது இரு கரங்களிலும் ஏந்திக் கொண்டாள். மற்றொரு கோபி சுட்டெரிக்கும் ஆசையினால் அவரது தாமரைத் திருவடியை எடுத்து தனது மார்பகங்களின் மீது வைத்துக் கொண்டாள்.
பதம் 10.32.6
ஏகா ப்ரு-குடிம் ஆபத்ய ப்ரேம-ஸம்ரம்ப-விஹ்வலா
க்னந்தீவைக்ஷத் கடாக்ஷேபை: ஸந்தஷ்ட-தஸனச்-சதா
ஏகா—மேலும் ஒரு கோபி; ப்ரு-குடிம்—அவரது புருவங்களை; ஆபத்ய—நெரித்தபடி; ப்ரேம—தூய காதலின்; ஸம்ரம்ப—சீற்றத்துடன்; விஹ்வலா—தன்னை வைத்துக் கொண்டு; க்னந்தி—காயப்படுத்துவது; இவ—போன்று; ஜக்ஷத்—அவள் பார்த்தாள்; கட—அவளுடைய ஓரப்பார்வைகளின்; ஆக்ஷேபை:—அவமரியாதையுடன்; ஸந்தஷ்ட—கடித்துக் கொண்டு; தஸன—அவளது பற்களினால்; சதா—குவிந்த (அவளது இதழ்கள்).
ஒரு கோபி காதலினால் எழுந்த சினத்தின் வசப்பட்டு, பற்களினால் தனது இதழ்களைக் கடித்தபடி நெரித்த புருவங்களுடன், அவரைத் தனது கடுமையான பார்வைகளினால் காயப்படுத்துவது போன்று வெறித்துப் பார்த்தாள்.
பதம் 10.32.7
அபராநிமிஷத்-த்ருக்ப்யாம் ஜுஷாணா தன்-முகாம்புஜம்
ஆபீதம் அபி நாத்ருப்யத் ஸந்தஸ் தச்-சரணம் யதா
அபரா—மற்றொரு கோபி; அநிமிஷத்—கண் இமைக்காது; த்ருக்ப்யாம்—விழிகளுடன்; ஜுஷாணா—சுவைத்தாள்; தத்—அவருடைய; முக-அம்புஜம்—தாமரை முகத்தனை; ஆபீதம்—முற்றிலும் சுவைத்தும்; அபி—இருந்தபோதிலும்; ந அத்ருப்யத்—அவள் திருப்தியடையவில்லை; ஸந்த:—யோக சித்தர்கள்; தத்-சரணம்—அவரது திருவடிகளை; யதா—போன்று.
மற்றொரு கோபி கண் இமைக்காது அவரது தாமரைத் திருமுகத்தினை உற்று நோக்கினாள், அதன் இனிமையை முற்றிலும் சுவைத்த பின்னரும், யோக சித்தர்கள் பகவானின் திருவடிகளைத் தியானிக்கும் பொழுது ஒருபோதும் திருப்தியடையாதிருப்பது போல் அவளும் திருப்தியடையாதிருந்தாள்.
பதம் 10.32.8
தம் காசின் நேத்ர-ரந்த்ரேண ஹ்ருதி க்ருத்வா நிமீல்ய ச
புளகாங்கி உபகுஹ்யாஸ்தே யோகீவானந்த-சம்ப்லுதா
தம்—அவரை; காசித்—அவர்களுள் ஒருத்தி; நேத்ர—அவள் விழிகளின்; ரந்த்ரேண—ஒளி ஊடுருவிச் செல்லும் முளையின் வழியே; ஹ்ருதி—அவளது இதயத்தில்; க்ருத்வா—இருத்தி; நிமீல்ய—மூடிக் கொண்டு; ச—மற்றும்; புளக-அங்கீ—மயிர்க் கூச்செரிந்தான்; உபகுஹ்ய—தழுவிக்கொண்டு; ஆஸ்தே—அவள் இருந்தாள்; யோகீ—ஒரு யோகியை; இவ—போன்று; ஆனந்த—ஆனந்தத்தில்; ஸம்ப்லுதா—மூழ்கியவளாக.
ஒரு கோபி, அவளது விழிகளிலுள்ள ஒளி ஊடுருவிச் செல்லும் துளைகளின் வழியே பகவானை எடுத்துத் தனது இதயத்தில் இருத்திக் கொண்டாள். பிறகு அவள் தனது கண்களை மூடிக்கொண்டு, மயிர்க் கூச்செரிந்தவளாக, அவரைத் தனது இதயத்தினுள்ளே தொடர்ந்து தழுவினாள். இவ்வாறு உன்னத ஆனந்தத்தில் மூழ்கியிருந்த அவள், பகவானைத் தியானிக்கும் ஒரு யோகியைப் போன்றிருந்தாள்.
பதம் 10.32.9
ஸர்வாஸ் தா: கேஸவாலோக-பரமோத்ஸவ-நிர்வ்ருதா:
ஜஹுர் விரஹ-ஜம்தாபம் ப்ராஜ்ஞம் ப்ராப்ய யதா ஜனா:
ஸர்வா:—அனைத்து; தா:—கோபியர்களும்; கேஸவ—பகவான் கிருஷ்ணரின்; ஆலோக—தரிசனத்தால்; பரம—பரம; உத்ஸவ—உற்சவத்தில்; நிர்வ்ருதா:—மகிழ்ந்தனர்; ஜஹு:—அவர்கள் விட்டொழித்தனர்; விரஹ-ஜம்—பிரிவில் விளைந்த அவர்களின்; தாபம்—துன்பத்தினை; ப்ராஜ்ஞம்—ஆன்மீக ஞானமுடைய ஒருவன்; ப்ராப்ய—எய்தும்; யதா—போன்று; ஜனா:—மக்கள்.
தங்கள் பிரியத்திற்குரிய கேசவனை மீண்டும் கண்டவுடன் கோபியர்கள் அனைவரும் விழாக்கால ஆனந்தத்தில் மகிழ்ந்தனர். ஆன்மீக ஞானியின் தொடர்பினைப் பெற்றவுடன் சாதாரண மனிதர்கள் தங்கள் துன்பங்களை மறப்பது போன்று, கோபியர்களும் தங்கள் பிரிவுத் துயர் நீங்கினார்.
பதம் 10.32.10
தாபிர் விதூத-ஸோகாபிர் பகவான் அச்யுதோ வ்ருத:
வ்யரோசதாதிகம் தாத புருஷ: ஸக்திபிர் யதா
தாபி:—இக்கோபியர்கள்; விதூத—முற்றிலும் நீங்கியது; ஸோகாபி:—அவர்களின் துன்பம்; பகவான்—முழுமுதற்கடவுள்; அச்யுத:—குற்றமற்ற பகவான்; வ்ருத:—சூழப்பட்டு; வ்யரோசத—ஒளிமிக்கவராகத் தோன்றினார்; அதிகம்—அதிகமான; தாத—எனதன்பிற்குரிய (பரீக்ஷித்து மன்னர்); புருஷ:—பரமாத்மா; ஸக்திபி:—அவரது உன்ன சக்திகளால்; யதா—போன்று.
தமது துன்பங்கள் அனைத்தும் இப்போது நீங்கப் பெற்றக் கோபியர்களால் சூழப்பட்ட முழுமுதற் கடவுளான பகவான் அச்சுதன் கண்ணைப் பறிக்கும் ஒளியுடையவராக விளங்கினார். அன்பார்ந்த மன்னனே! கிருஷ்ணர் இவ்வாறு, தமது ஆன்மீகச் சக்திகளால் சூழப்பட்டிருக்கும் பரமாத்மா போல் தோன்றினார்.
பதங்கள் 10.32.11 – 10.32.12
தா: ஸமாதாய காளிந்த்ய நிர்விஸ்ய புளினம் விபு:
விகஸத்-குந்த-மந்தார-ஸுரபி-அனில-ஷட்பதம்
ஸரச்-சந்த்ராம்ஸு-ஸந்தோஹ த்வஸ்த-தோஷா-தம: ஸிவம்
க்ருஷ்ணாயா ஹஸ்த தரளா-சித-கோமள-வாலுகம்
தா:—அக்கோபியர்களை; ஸமாதாய—அழைத்துக்கொண்டு; காளிந்த்யா:—யமுனையின்; நிர்விஸ்ய—சென்றார்; புளினம்—கரைக்கு; விபு:—எல்லாம் வல்ல பரமபுருஷ பகவான்; விகஸத்—மலர்கின்ற; குந்த-மந்தார—மல்லிகை மற்றும் மந்தாரை மலர்களின்; ஸுரபி—நறுமணம்; அனில—கலந்த காற்று; ஷட்-பதம்—தும்பிகளுடன்; ஸரத்—சரத்காலம்; சந்த்ர—சந்திரனின்; அம்ஸு—கதிர்களின்; ஸந்தோஹ—ஏராளமாக; த்வஸ்த—நீக்கின; தோஷா—இரவின்; தம:—இருளை; ஸிவம்—மங்களகரமான; க்ருஷ்ணா-யா:—யமுனைநதியின்; ஹஸ்த—கரங்களைப் போன்ற; தரள—அவளது அலைகளினால்; ஆசித—குவிக்கப்பட்ட; கோமள—மென்மையான; வாலுகம்—மணல்.
பிறகு எல்லாம் வல்ல பகவான் கோபியர்களை அழைத்துக் கொண்டு தனது அலைக்கரங்களால் பூமணலைக் குவித்திருக்கும் காளிந்தி நதியின் கரைக்குச் சென்றார். அப்புனித இடத்தில் தும்பிகளை மயக்கும், அப்போது மலர்ந்த மல்லிகை மற்றும் மந்தார மலர்களின் நறுமணத்தைச் சுமந்து கொண்டு தென்றல் காற்று வீசிக் கொண்டிருந்தது. சரத்காலச் சந்திரனின் ஏராளமான ஒளிக்கதிர்கள் இரவின் இருளை நீக்கிக் கொண்டிருந்தன.
பதம் 10.32.13
தத்-தர்ஸனாஹ்லாத-விதூத-ஹ்ருத்-ருஜோ
மனோரதாந்தம் ஸ்ருதயோ யதா யயு:
ஸ்வைர் உத்தரீயை: குச-குங்குமாங்கிதைர்
அசீக்லுபன்ன் ஆஸனம் ஆத்ம-பந்தவே
தத்—அவரை, கிருஷ்ணரை; தர்ஸன—பார்த்ததின் காரணமாக; ஆஹ்லாத—ஆனந்தத்தினால்; விதூத—நீங்கப்பெற்றது; ஹ்ருத்—அவர்கள் இதயங்களிலுள்ள; ருஜ:—வேதனை; மன: ரத—அவர்களின் விருப்பம்; அந்தம்—இறுதியில் நிறைவேறியது; ஸ்ருதய:—வெளிப்படட வேதங்கள்; யதா—போன்று; யயு:—அவர்கள் எய்தினர்; ஸ்வை:—தமது; உத்தரீயை:—மூடும் மேலாடைகளினால்; குச—அவர்கள் மார்பகங்களை; குங்கும—குங்குமத் துகள்கள்; அங்கிதை:—கறைபடிந்த; அசீக்லுபன்—அவர்கள் ஏற்படுத்தினர்; ஆஸனம்—ஓர் இருக்கை; ஆத்ம—அவர்களது ஆத்மாக்களின்; பந்தவே—ஆருயிர் நண்பருக்கு.
கிருஷ்ணரைக் கண்ட ஆனந்தத்தினால் அவர்களின் மனவேதனை நீங்கியது. முன்பிருந்த வேதவடிவங்களைப் போல் கோபியர்கள் தங்கள் இச்சைகள் முற்றிலும் நிறைவேறக் கண்டனர். அவர்கள் தமது ஆருயிர் நண்பர் கிருஷ்ணருக்காக, அவர்களின் மார்பகங்களில் பூசிய குங்குமத்தினால் கறைபடிந்திருந்த அவர்களது மேலாடைகளைக் கொண்டு ஓர் இருக்கை தயார் செய்தனர்.
பதம் 10.32.14
தத்ரோபவிஷ்டோ பகவான் ஸ ஈஸ்வரோ
யோகேஸ்வராந்தர்-ஹ்ருதி கல்பிதாஸன:
சாகஸ கோபீ-பரிஷத்-கதோ ‘ர்சிதஸ்
த்ரைலோக்ய-லக்ஷ்மி-ஏக-பதம் வபுர் ததத்
தத்ர—அங்கே; உபவிஷ்ட:—அமர்ந்தார்; பகவான்—முழுமுதற் கடவுள்; ஸ:—அவர்; ஈஸ்வர:—உச்ச நெறியாளர்; யோக-ஈஸ்வர—யோக ஸித்திகளின் தலைவர்களின்; அந்த:—உள்ளே; ஹ்ருதி—இதயங்களின்; கல்பித—தயார் செய்யப்பட்ட; ஆஸன:—அவருடைய இருக்கையில்; சகாஸ—ஒளிமிக்கவராகத் தோன்றினார்: கோபீ-பரிஷத்—கோபியர்களின் கூட்டத்தில்; கத:—இருந்த நிலையில்; அர்சித:—வழிபட்டபொழுது; த்ரை-லோக்ய—மூவுலங்களின்; லக்ஷ்மீ—அழகு மற்றும் பிற செல்வங்களின்; ஏக—சிறந்த; பதம்—உறைவிடம்; வபு:—அவரது உன்னத வடிவம்; ததத்—காட்சியளித்தது.
யோகஸித்திகளின் தலைவர்களான சித்தர்கள் முழுழுதற் கடவுளான பகவான் கிருஷ்ணருக்குத் தங்கள் இதயங்களில் சிம்மாசனம் அமைத்துள்ளனர். ஆனால் அவரோ கோபியர்களின் கூட்டத்தில் அமர்ந்து கொண்டார். மூவுலங்களிலுமுள்ள அழகிற்கும் செல்வங்களுக்கும் உறைவிடமாகத் திகழும் அவரது உன்னத உடல், கோபியர்கள் அவரை வழிபட்டபொழுது தகதகவென்று ஒளிவீசியது.
பதம் 10.32.15
ஸபாஜயித்வா தம் அனங்க-தீபனம்
ஸஹாஸ-லீலேக்ஷண-விப்ரம-ப்ருவா
ஸம்ஸ்பர்ஸனேனாங்க-க்ருதாங்க்ரி-ஹஸ்தயோ:
ஸம்ஸ்துத்ய ஈஷத் குபிதா பபாஷிரே
ஸபாஜயித்வா—கௌரவித்தனர்; தம்—அவரை; அனங்க—காம இச்சைகளை; தீபனம்—தூண்டினார்; ஸ-ஹாஸ—புன்னகைத்தனர்; லீலா—வேடிக்கையாக; ஈக்ஷண—பார்வைகளுடன்; விப்ரம—விளையாட்டாக; ப்ருவா—தங்கள் புருவங்களை; ஸம்ஸ்பர்ஸனேன—தொட்டனர்; அங்க—தங்கள் மடிகளின்மீது; க்ருத—இட்டனர்; அங்க்ரி—அவரது கால்களையும்; ஹஸ்தயோ—கரங்களையும்; ஸம்ஸ்துத்ய—போற்றினர்; ஈஷத்—சிறிதளவு; குபிதா:—சினத்துடன்; பபாஸிரே—அவர்கள் கூறினர்.
ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களிடம், காம இச்சையினைக் கிளர்ந்தெழச் செய்தார். அதனால் அவர்கள் அவரை, வேடிக்கையான புன்னகையுடன் பார்த்தும், தமது புருவங்களின் அசைவினால் தமது காதல் உணர்வினை ஜாடையாக உணர்த்தியும், தங்கள் மடிகளில் அவரது திருவடிகளையும், திருக்கரங்களையும் எடுத்துவைத்து அவற்றைப் பிடித்துவிட்டும் கெளரவித்தனர், அவர்கள் அவரை இவ்வாறு வழிபட்ட போதிலும், அவரிடத்துச் சிறிதளவு சினமும் கொண்டிருந்தனர், அதனால் அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்.
பதம் 10.32.16
ஸ்ரீ-கோப்ய ஊசு:
பஜதோ ‘னுபஜந்தி ஏக ஏக ஏதத்-விபர்யயம்
நோபயாம்ஸ் ச பஜந்தி ஏக ஏதத் நோ ப்ரூஹி சாது போ:
ஸ்ரீ-கோப்ய: ஊசு:—கோபியர்கள் கூறினர்; பஜத:—தம்மை மதிப்பவர்களை; அனு—பதிலுக்கு; பஜந்தி—மதிக்கின்றனர்; ஏகே—சிலர்; ஏகே—சிலர்; ஏதத்—இதற்கு; விபர்யயம்—மாறாக; ந உபயான்—இரண்டும் இல்லை; ச—மேலும்; பஜந்தி—பதிலுக்கு; ஏகே—சிலர்; ஏதத்—இந்த; ந:—எங்களுக்கு; ப்ரூஹி—கூறவும்; ஸாது—முறையாக; போ:—ஓ, அன்பரே.
கோபியர்கள் கூறினர்: “சிலர், தங்கள் மீது அன்புடையவர்களுக்கு தங்கள் அன்பினைத் திருப்பித் தருகின்றனர். மற்றுஞ் சிலரோ தங்கள் மீது உறவோ, பகையோ இல்லாதவர்களாக இருந்தாலும் அல்லது பகைவர்களாக இருந்தபோதிலும் அவர்களுக்குத் தங்கள் அன்பினைத் தருகின்றனர். வேறு சிலரோ எவரிடத்தும் அன்புவைப்பதில்லை. அன்பார்ந்த கிருஷ்ணரே இது ஏன் என்று அருள்கூர்ந்து எமக்கு விளக்குவீராக.”
பதம் 10.32.17
ஸ்ரீ-பகவான் உவாச
மிதோ பஜந்தி யே ஸக்ய: ஸ்வார்தைகாந்தோத்யமா ஹி தே
ந தத்ர ஸௌஹ்ருதம் தர்ம: ஸ்வார்தார்தம் தத் தி நான்யதா
ஸ்ரீ-பகவான் உவாச—முழுமுதற்கடவுள் கூறினார்; மித:—பரஸ்பரம்; பஜந்தி—கைம்மாறு செய்வது; யே—யார்; ஸக்ய:—நண்பர்கள்; ஸ்வ-அர்த—அவர்களின் சுயநலத்திற்காக; ஏக-அந்த—குறுகியமனப்பான்மை உடையது; உத்யமா:—அவர்களின் முயற்சி; ஹி—உண்மையில்; தே—அவர்கள்; ந—இல்லை; தத்ர—அங்கே; ஸௌஹ்ருதம்—உண்மையான நட்பு; தர்ம:—உண்மையான தர்மம்; ஸ்வ-அர்த—அவர்களின் சுயநலத்தின்; அர்தம்—பொருட்டு; தத்—அது; ஹி—உண்மையில்; ந—இல்லை; அன்யதா—வேறுவழியில்.
ஒருவர்மீது மற்றொருவர் செலுத்தும் பரஸ்பர அன்பு அவர்களுக்கு மட்டுமே பயனளிக்கக் கூடியதாக இருந்தால் உண்மையில் அது சுயநலமுடையதாகும். அவர்களிடம் உண்மையான நட்பும் இல்லை. அவர்கள் உண்மையான சமய தர்மங்களைப் பின்பற்றுபவர்களும் அல்லர். உண்மையில் அவர்கள் தமக்கு எந்தவிதமான பயனையும் எதிர்பார்க்காதவர்களாக இருந்தால் அவர்கள் பரஸ்பரம் அன்பினைப் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள்.
பதம் 10.32.18
பஜந்தி அபஜதோ யே வை கருணா: பிதரௌ யதா
தர்மோ நிரபவாதோ ‘த்ர ஸௌஹ்ருதம் ச ஸு-மத்யமா:
பஜந்தி—பக்தியுடன் தொண்டு செய்பவர்கள்; அபஜத:—பதிலுக்குத் தம்மீது அன்பு செலுத்தாதவர்களிடத்து; யே—எவர்கள்; வை—உண்மையில்; கருணா:—கருணையுடைய; பிதரௌ—பெற்றோர்கள்; யதா—போன்று; தர்ம:—தர்மம்; நிரபவாத:—குற்றமற்ற; அத்ர—இங்கே; ஸௌஹ்ருதம்—நட்பு; ச—மற்றும்; ஸு-மத்யமா:—ஓ மெல்லிடைப் பெண்களே.
அன்பார்ந்த மெல்லிடைக் கோபியர்களே! சிலர் இயற்கையிலேயே கருணையுடையவர்களாக அல்லது பெற்றோர்களைப்போல் இயற்கையிலேயே பாசமுடையவர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தம் மீது பதிலுக்கு அன்பு செலுத்தத் தவறியவர்களுக்கும் பக்தியுடன் தொண்டு புரிகின்றனர். இவர்களே உண்மையான குற்றமற்ற சமயதர்மத்தினைப் பின்பற்றுகின்றனர். மேலும் இவர்களே உண்மையான நலம் விரும்பிகளாகவும் இருக்கின்றனர்.
பதம் 10.32.19
பஜதோ ‘பி ந வை கேசித் பஜந்தி அபஜத: குத:
ஆத்மாராமா ஹி ஆப்த-காமா அக்ருத-க்ஞா குரு-த்ருஹ:
பஜத:—அனுகூலமாக செயல்படுவர்களுடன்; அபி—கூட; ந—இல்லை; வை—நிச்சயமாக; கேசித்—சிலர்; பஜந்தி—கருத்துப் பரிமாற்றம்; அபஜத:—சாதகமாக செயற்படாதவர்களுடன்; குத:—என்னவென்று சொல்வது; ஆத்ம-ஆராமா:—சுய திருப்தியுடைய; ஹி—உண்மையில்; ஆப்த-காமா:—தங்களது பௌதிக ஆசைகளை முன்பே அடையப்பெற்றவர்கள்; அக்ருத-க்ஞா:—நன்றியற்றவர்கள்; குரு-த்ருஹ:—உயர்ந்தவர்களிடம் விரோதம் கொண்டவர்கள்.
பிறகு, பௌதிக திருப்தியும், ஆன்மீகத் தன்னிறைவும் உள்ள அல்லது இயற்கையாகவே நன்றி கெட்டவர்களாக அல்லது உயர்ந்தவர்களிடம் விரோதம் கொண்டவர்களாக உள்ளவர்களும் இருக்கின்றனர். இத்தகைய மனிதர்கள் தங்களை நேசிப்பவர்களைக்கூட நேசிப்பதில்லை. அவர்களிடம் விரோதம் கொண்டவர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
பதம் 10.32.20
நாஹம் து ஸக்யோ பஜதோ ‘பி ஜந்தூன்
பஜாமி அமீஷாம் அனுவ்ருத்தி-வ்ருத்தயே
யதாதனோ லப்த-தனே விநஷ்டே
தச்-சிந்தயான்யன் நிப்ருதோ ந வேத
ந—செய்யாதிருக்கிறேன்; அஹம்—நான்; து—மாறாக; ஸக்ய:—ஓ, சகியரே; பஜத:—பூஜிக்கின்றவர்களை; அபி—கூட; ஜந்தூன்—உயிர்களிடத்து; பஜாமி—பதில் செய்வதில்லை; அமீஷாம்—அவர்களின்; அனுவ்ருத்தி—மனப்பாங்கினை (தூய காதலுக்கான); வ்ருத்தயே—தூண்டுவதற்காக; யதா—போன்று; அதன:—ஓர் ஏழை; லப்த—தான் பெற்ற; தனே—செல்வத்தை; விநஷ்டே—தொலைத்துவிட்டால்; தத்—அதனை; சிந்தயா—ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருப்பான்; அன்யத்—பிறவற்றை; நிப்ருத:—நிரப்பப்பட்ட; ந வேத—அறிவதில்லை.
ஓ, கோபியர்களே! என்னைப் பக்தியுடன் வழிபடும் உயிர்கள்மீது கூட நான் உடனே பதிலுக்கு அன்பு செலுத்துவதில்லை, காரணம், அவர்களின் அன்பு கலந்த பக்தியை மேலும் தீவிரப்படுத்துவதற்கு நான் விரும்புகின்றேன் என்பதுவேயாகும். பிறகு அவர்கள், வறுமையில் வாடும் ஏழை ஒருவன் செல்வத்தைப் பெற்று, உடனே அதை இழந்துவிட்டானென்றால் வேறு எதையும் நினைக்காது தொலைந்து போன தன் செல்வத்தைப் பற்றியே ஆழ்ந்து நினைப்பது போல் ஆகிவிடுகின்றனர்.
பதம் 10.32.21
ஏவம் மத்-அர்தோஜ்ஜித-லோக-வேத-
ஸ்வானாம் ஹி வோ மய்ய் அனுவ்ருத்தயே ‘பலா:
மயாபரோக்ஷம் பஜதா திரோஹிதம்
மாஸுயிதும் மார்ஹத தத் ப்ரியம் ப்ரியா:
ஏவம்—இவ்வாறு; மத்—எனது; அர்த—பொருட்டு; உஜ்ஜித—புறக்கணித்து; லோக—உலகின் கருத்து; வேத—வேதங்களின் கருத்து; ஸ்வானாம்—மற்றும் உறவினர்களின்; ஹி—உண்மையில்; வ:—உங்களின்; மயி—எனக்கு; அனுவ்ருத்தயே—காதல் எண்ணத்திற்கு; அபலா:—அன்பிற்குரிய பெண்களே; மயா—என்னால்; அபரோக்ஷம்—உங்கள் பார்வையினின்று மறைந்தது; பஜதா—உண்மையிலேயே பதில் செய்கின்றவர்; திரோஹிதம்—மறைதல்; மா—என்னோடு; அஸுயிதும்—பகைமையுடன்; மா-அர்ஹத—நீங்கள் இருத்தல் கூடாது; தத்—ஆகையினால்; ப்ரியம்—உங்கள் பிரியமான; ப்ரியா:—எனது பிரியமானவர்களே.
என் பொருட்டு நீங்கள் உலகின் கருத்துக்களையும், வேதங்களின் கருத்துக்களையும், உங்கள் உறவினர்களின் கருத்துக்களையும் புறக்கணித்து வந்துள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொண்டே நான் உங்களது பற்றினை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக இவ்வாறு நடந்து கொண்டேன். திடீரென்று மறைந்து, உங்கள் பார்வையிலிருந்து என்னை நான் விலக்கிக் கொண்ட போதிலும் உங்கள் மீது அன்பு செலுத்துவதை நான் ஒருபோதும் நிறுத்தியதில்லை. ஆகையினால் எனதன்புக் கோபியர்களே! உங்கள் பிரியமான என்னைப் பற்றித் தவறான கருத்துக்களுக்கு இடங்கொடுத்துவிடாதீர்.
பதம் 10.32.22
ந பாரயே ‘ஹம் நிரவத்ய-ஸம்யுஜாம்
ஸ்வ-ஸா து-க்ருத்யம் விபுதாயுஷாபி வ:
யா மாபஜன் துர்ஜர-கேஹ-ஸ்ருங்கலா:
ஸம்வ்ருஸ்ச்ய தத்வ: ப்ரதியாது ஸாதுனா
ந—இல்லை; பாரயே—செய்யும் திறனுடையவனாக; அஹம்—நான்; நிரவத்ய-ஸம்யுஜாம்—வஞ்சகங்களிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றவர்களுக்கு; ஸ்வ-ஸா து-க்ருத்யம்—முறையாக ஈடு செய்வது; விபுத-ஆயுஷா—தேவர்களைப் போல் நீண்ட ஆயுட்காலமாக; அபி—இருந்த போதிலும்; வ:—உங்களுக்கு; யா:—யார்; மா—என்னை; அபஜன்—வழிபட்டு; துர்ஜர—வெல்வதற்கரிய; கேஹ-ஸ்ருங்கலா:—இல்வாழ்வின் சங்கிலிகளை; ஸம்வ்ருஸ்ச்ய—துண்டித்தல்; தத்—அது; வ:—உங்களிடம்; ப்ரதியாது—திரும்பிவருவதாக; ஸாதுனா—நற்செயலால்.
பிரம்மதேவனின் ஆயுட்காலம் முழுவதிலும்கூட உங்கள் குற்றமற்ற தொண்டிற்கான எனது கடனை என்னால் திருப்பித்தர இயலாது. என்னோடு நீங்கள் கொண்டுள்ள உறவு அப்பழுக்கற்றது. உடைத்து எறிவதற்கு அரிய இல்லறச்சங்கிலிகள் அனைத்தையும் துண்டித்த நீங்கள் என்னை வழிபட்டிருக்கின்றீர்கள். ஆகையினால் உங்களது கீர்த்திமிகு செயல்கள், உங்களுக்குரியதாகுக.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “பிரிந்தவர் கூடினர்” எனும் தலைப்பைக் கொண்ட, முப்பத்திரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.