அத்தியாயம் – 30
கோபியர்கள் கிருஷ்ணரைத் தேடுதல்
பதம் 10.30.1
ஸ்ரீ-ஸுக உவாச
அந்தர்ஹிதே பகவதி ஸஹஸைவ வ்ரஜான்கனா:
அதப்யம்ஸ் தம் அசக்ஷாணா: கரிண்ய இவ யூதபம்
ஸ்ரீ-ஸுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அந்தர்ஹிதே—அவர் மறைந்தவுடன்; பகவதி—முழுமுதற்கடவுள்; ஸஹஸா ஏவ—திடீரென்று; வ்ரஜ-அங்கனா:—விரஜத்தின் இளமங்கையர்; அதப்யன்—மிகவும் துக்கித்தனர்; தம்—அவரை; அசக்ஷாணா:—காணாது; கரிண்ய:—பெண்யானைகள்; இவ—போன்று; யூதபம்—தங்கள் தலைவனை.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: திடீரென்று பகவான் கிருஷ்ணர் மறைந்தவுடன், அவரைக் காணாத கோபியர்கள் தமது இணையான ஆண் யானையைப் பிரிந்த பெண்யானைகளைப் போல் மிகவும் துயருற்றனர்.
பதம் 10.30.2
கத்யானுராக-ஸ்மித-விப்ரமேக்ஷிதைர்
மனோ-ரமாலாப-விஹார-விப்ரமை:
ஆக்ஷிப்த-சித்தா: ப்ரமதா ரமா-பதேஸ்
தாஸ் தா விசேஷ்டா ஜக்ருஹுஸ் தத்-ஆத்மிகா:
கத்யா—அவரது செயல்கள்; அனுராக—பிரியமான; ஸ்மித—புன்னகை; விப்ரம—வேடிக்கை; ஈக்ஷிதை:—பார்வைகள்; மன:-ரம—மனங்கவரும்; ஆலாப—அவரது பேச்சுக்கள்; விஹார:—விளையாட்டுக்கள்; விப்ரமை:—பிற கவர்ச்சிமிகு நினைவுகள்; ஆக்ஷிப்த—நிரப்பப் பெற்ற; சித்தா:—அவர்களது இதயங்கள்; ப்ரமதா:—அப்பெண்கள்; ரமா-பதே:—அதிர்ஷ்ட தேவதையான ரமாவின் கணவர் அல்லது எழில், செல்வம் போன்றவற்றின் தலைவர்; தா: தா:—அலை ஒவ்வொன்றின்; விசேஷ்டா:—அற்புதச் செயல்கள்; ஜக்ருஹு:—அவர்கள் நடித்தனர்; தத்-ஆத்மிகா:—அவரது நினைவில் மூழ்கி.
கோபியர்கள் கிருஷ்ணரை நினைத்தவுடன் அவர்தம் இதயங்கள், அவரது செயல்களினாலும், கவர்ச்சி மிகு புன்னகையாலும், வேடிக்கைப் பார்வையினாலும், மதிமயக்கும் பேச்சுக்களாலும், அவர்களோடு அவர் நடத்தி மகிழ்ந்த பல்வேறு லீலைகளினாலும், உணர்ச்சிவயப்பட்டன. இவ்வாறு ரமாவின் துணைவரான பகவான் கிருஷ்ணரின் நினைவுகளில் மூழ்கிய கோபியர்கள் அவரது பல்வேறு உன்னத லீலைகளை நடிக்கத் தொடங்கினர்.
பதம் 10.30.3
கதி-ஸ்மித-ப்ரேக்ஷண-பாஷணாதிஷு
ப்ரியா: ப்ரியஸ்ய ப்ரதிரூட-மூர்தய:
அஸாவ் அஹம் த்வ் இதி அபலாஸ் தத்-ஆத்மிகா
ந்யவேதிஷு: க்ருஷ்ண-விஹார-விப்ரமா:
கதி—அவரது செயல்களினால்; ஸ்மித—புன்னகை; ப்ரேக்ஷண—பார்வையில்; பாஷணா—பேச்சில்; ஆதிஷு—போன்றவை; ப்ரியா:—பிரியமுடையக் கோபியர்கள்; ப்ரியஸ்ய—தங்கள் பிரியமானவரின்; ப்ரதிரூட—முற்றிலும் ஆழ்ந்து; மூர்தய:—தங்கள் உடல்கள்; அஸௌ—அவர்; அஹம்—நான்; து—உண்மையில்; இதி—இவ்வாறு கூறிய; அபலா:—அபலைப் பெண்கள்; தத்-ஆத்மிகா:—அவரோடுத் தம்மை அடையாளம் கண்டு; ந்யவேதிஷு:—அவர்கள் அறிவித்தனர்; க்ருஷ்ண-விஹார—கிருஷ்ணரின் லீலைகளின் காரணமாக; விப்ரமா:—அவரது மயக்கம்.
பிரியமான கோபியர்கள், தமது பிரியத்திற்குரிய கிருஷ்ணரின் நினைவுகளில் மூழ்கிப் போனதினால் அவர்களின் உடல்கள், அவர் நடப்பதைப் போன்றும், சிரிப்பதைப் போன்றும், பார்ப்பதைப் போன்றும் பேசுவதைப் போன்றும் அவரது சிறந்த தன்மைகள் அனைத்தையும் பாவனை செய்தன. அவரது நினைவுகளில் முற்றிலும் ஆழ்ந்து அவரது லீலைகளை நினைத்து மதிமயங்கிய காரணத்தினால் அவர்கள் ஒருத்தி மற்றொருத்தியிடம் “நானே கிருஷ்ணர்” என்று கூறினர்.
பதம் 10.30.4
காயந்த்ய உச்சைர் அமும் ஏவ ஸம்ஹதா
விசிக்யுர் உன்மத்தக-வத் வனாத் வனம்
பப்ரச்சுர் ஆகாஸ-வத் அந்தரம் பஹிர்
பூதேஷு ஸந்தம் புருஷம் வனஸ்பதீன்
காயந்த்ய:—பாடிக்கொண்டு; உச்சை:—உரக்க; அமும்—அவரைப் பற்றி; ஏவ—உண்மையில்; ஸம்ஹதா:—கூட்டமாக இணைந்து; விசிக்யு:—அவர்கள் தேடினர்; உன்மத்தக-வத்—உன்மத்தம் பிடித்தவர்களைப் போன்று; வனாத்வனம்—காட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு; பப்ரச்சு:—அவர்கள் வினவினர்; ஆகாஸ-வத்—வானத்தைப் போன்று; அந்தரம்—உள்ளேயும்; பஹி:—வெளியேயும்; பூதேஷு—படைக்கப்பட்ட எல்லா உயிர்களிலும்; ஸந்தம்—இருக்கின்றவர்; புருஷம்—பரமபுருஷர்; வனஸ்பதீன்—மரங்களிடமிருந்து.
கிருஷ்ணரைப் பற்றி உரக்கப் பாடிக் கொண்டு அவர்கள் உன்மத்தம் பிடித்த பெண்களின் கூட்டம் போன்று அவரை அவர்கள் அக்காடெங்கும் தேடினர். ஆகாயத்தைப் போன்று எல்லா உயிர்களின் அகத்திலும், புறத்திலும் நிறைந்திருப்பவர் ஆதலினால், அவரைப் பற்றி அவர்கள் மரங்களிடம் கூட விசாரித்தனர்.
பதம் 10.30.5
த்ருஷ்டோ வ: கச்சித் அஸ்வந்த ப்லக்ஷ ந்யக்ரோத நோ மன:
நந்த-ஸுனுர் கதோ ஹ்ருத்வா ப்ரேம-ஹாஸாவலோகனை:
த்ருஷ்ட:—பார்த்தீர்களா; வ:—நீங்கள்; கச்சித்—உண்டோ; அஸ்வந்த—ஓ, அரச மரமே; ப்லக்ஷ—ஓ, அத்தி மரமே; ந்யக்ரோத—ஓ, ஆலமரமே; ந:—எங்கள்; மன:—மனங்கள்; நந்த—நந்த மகாராஜாவின்; ஸுனு:—மைந்தன்; கத:—சென்றாரா; ஹருத்வா—திருடிக்கொண்டு; ப்ரோம—பிரேமைமிக்க; ஹாஸ—அவரது புன்னகையுடன்; அவலோகனை:—மற்றும் பார்வையினால்.
(கோபியர்கள் கூறினர்:) ஓ, அரச மரமே! ஒ, அத்திமரமே! ஓ ஆலமரமே! நீங்கள் கிருஷ்ணரைப் பார்த்தீர்களா? தமது புன்னகையாலும், பார்வையினாலும் எங்கள் மனங்களைத் திருடிய நந்தமகாராஜாவின் மைந்தர் எங்களைப் பிரிந்து சென்றுவிட்டார்.
பதம் 10.30.6
கச்சித் குரபகாஸோக நாக-புன்னாக-சம்பகா:
ராமானுஜோ மானிணீனாம் இதோ தர்ப-ஹர-ஸ்மித:
கச்சித்—உண்டோ?; குரபக-அஸோக-நாக-புன்னாக-சம்பகா:—குரவமரமே, அசோக மரமே, நாக மரமே, புன்னாக மரமே, சண்பக மரமே; ராம—பலராமரின்; அனுஜ:—இளைய சகோதரர்; மானினீனாம்—இயற்கையிலேயே கர்வமுடைய பெண்களின்; இத:—இங்கிருந்து சென்றாரா; தர்ப—கர்வம்; ஹர—நீக்கும்; ஸ்மித:—அவரது புன்னகை.
ஓ, குரவமரமே, அசோக மரமே, நாக மரமே, புன்னாக மரமே, சண்பக மரமே! எல்லாப் பெண்களின் கர்வத்தினையும் தமது புன்னகையினால் அழிக்கும், பலராமரின் இளைய சகோதரர் இவ்வழியே சென்றாரா?
பதம் 10.30.7
கச்சித் துளஸி கல்யாணி
கோவிந்த-சரண-ப்ரியே
ஸஹ த்வாளி-குலைர் பிப்ரத்
த்ருஷ்டஸ் தே ‘தி-ப்ரியோ ‘ச்யுத:
கச்சித்—உண்டோ?; துளஸி—ஓ, துளசிச் செடியே; கல்யாணி—ஒ, அன்புடைய ஒன்றே; கோவிந்த—பகவான் கிருஷ்ணரின்; சரண—பாதங்கள்; ப்ரியே—பிரியமாகக் கொண்டவனே; ஸஹ—சேர்ந்து; த்வா—உனது; அளி—தும்பிகள்; குலை:—கூட்டம்; பிப்ரத்—சுமந்து கொண்டு; த்ருஷ்ட:—காணப்பட்டதா; தே—உன்னால்; அதி-ப்ரிய:—மிகவும் பிரியமான; அச்யுத:—பகவான் அச்சுதன்.
கோவிந்தனின் பாதங்களின் மீது பற்றுடைய துளசியே, உன்னையும் உன்னைச் சுற்றி மொய்க்கும் தும்பிகளையும் அணிந்து கொண்டு குற்றமற்றவரான அச்சுதன் இவ்வழியே நடந்து சென்றதை நீ பார்த்தாயா?
பதம் 10.30.8
மாலதி அதர்ஸி வ: கச்சின் மல்லிகே ஜாதி-யூதிகே
ப்ரீதிம் வோ ஜனயன் யாத: கர-ஸ்பர்ஸேன மாதவ:
மாலதி—ஓ, மாலதிச் செடியே (ஒருவகையான மல்லிகைச் செடி); அதர்ஸி—பார்த்தீரா; வ:—உங்களால்; கச்சித்—உண்டோ?; மல்லிகே—ஓ, மல்லிகையே; ஜாதி—ஓ, ஜாதி மல்லியே; யூதிகே—ஓ, யூதிகையே (மற்றொரு வகையான மல்லிகை); ப்ரீதிம்—இன்பம்; வ:—உங்களுக்கு; ஜனயன்—உண்டாக்கி; யாத:—சென்றவன்; கர—அவரது கரத்தின்; ஸ்பர்ஸேன—தொடுகின்றவன்; மாதவ:—வசந்த காலத்தின் உருவமான கிருஷ்ணர்.
ஓ, மல்லிகையே, யூதிகையே தமது கரங்களின் தீண்டலால் உங்களுக்கு இன்பமளித்துவிட்டு மாதவன் இவ்வழியே சென்றாரா?
பதம் 10.30.9
சூத-ப்ரியால-பனஸாஸன-கோவிதார-
ஜம்ப்வ்-அர்க-பில்வ-பகுலாம்ர-கதம்ப-நீபா:
யே ‘ன்யே பரார்த-பவகா யமுனோபகூலா:
ஸம்ஸந்து க்ருஷ்ண பதவீம் ரஹிதாத்மனாம் ந:
சூத—ஓ, மாங்கொடியே; ப்ரியால—ஓ, ப்ரியால மரமே (ஒருவகையான ‘ஸால’ மரம்); பனஸு—ஓ, பலாமரமே; ஆஸன—ஓ, ஆஸன-மரமே (மஞ்சள் “ஸால” மரம்); கோவிதார—ஓ, கோவிதார மரமே; ஜம்பு—ஓ, நாவல் மரமே; அர்க—ஓ, எருக்கஞ் செடியே; பில்வ—ஓ, வில்வமரமே; பகுல—ஓ, மகிழ மரமே; ஆம்ர—ஓ, மாமரமே; கதம்ப—ஓ, கடம்ப மரமே; நீபா:—ஓ, நீப மரமே (கடம்ப மரத்தில் சிறிய வகையினைச் சேர்ந்தது); யே—யார்; அன்யே—பிறர்; பர—மற்றவர்களின்; அர்த—பொருட்டு; பவகா:—உங்கள் வாழ்க்கை; யமுனா-உபகூலா:—யமுனை நதிக்கரையில் அருகில் வசிக்கின்ற; ஸம்ஸந்து—அருள் கூர்ந்து உரைப்பீராக; க்ருஷ்ண-பதவீம்—கிருஷ்ணர் சென்ற பாதை; ரஹித—இழந்திருக்கின்றோம்; ஆத்மனாம்—எங்கள் மனங்களின்; ந:—எமக்கு.
யமுனை நதிக்கரையில் உங்களது வாழ்வினையே பிறர் நலத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டு நிற்கும் மாங்கொடியே, பிரியால மரமே, பலாமரமே, ஆஸனமரமே, கோவிதார மரமே, நாவல் மரமே, எருக்கஞ்செடியே, வில்வமரமே, மகிழமரமே, மாமரமே, கடம்பமரமே, நீபமரமே, செடி கொடிகளே, கோபியர்களாகிய நாங்கள் எங்கள் மனங்களைத் தொலைத்துவிட்டோம். கிருஷ்ணர் இவ்வழியே சென்றாரா என்பதை எமக்கு அருள் கூர்ந்து உரைப்பீராக.
பதம் 10.30.10
கிம் தே க்ருதம் க்ஷிதி தபோ பத கேஸவாங்க்ரி
ஸ்பர்ஸோத்ஸவோத்புளகிதாங்க ருஹைர் விபாஸி
ஆபி அங்க்ரி ஸம்பவ உருக்ரம விக்ரமாத் வா
ஆஹோ வராஹ வபுஷ: பரிரம்பணேன
கிம்—என்ன; தே—உன்னால்; க்ருதம்—செய்யப்பட்டது; க்ஷிதி—ஓ, பூமியை; தப:—தவம்; பத—உண்மையில்; கேஸவ—பகவான் கிருஷ்ணரின்; அங்க்ரி—பாதங்களினால்; ஸ்பர்ஸ—ஸ்பரிசத்தின் காரணமாக; உத்ஸவ—இன்ப உணர்வினால்; உத்புளகித—புளகிதத்தினால் மயிர்க் கூச்செறிந்ததோ; அங்க-ருஹை:—உனது மேனியிலுள்ள உரோமங்கள் (நிலத்தில் வளரும் புற்கள் மற்றும் செடிகள்); விபாஸி—நீ எழில்மிக்கவளாகத் தோன்றுகிறாய்; அபி—ஒருவேளை; அங்க்ரி—பாதங்களினால் (உனது மேற்பரப்பில் இப்போது அவதரித்திருக்கும் கிருஷ்ணரின்); ஸம்பவ:—உண்டான; உருக்ரம—பகவான் கிருஷ்ணரின் குள்ள அவதாரமான பகவான் வாமன தேவர், அவர் இப்பிரபஞ்சம் முழுவதையும் தமது பாதங்களின் மூன்று அடிகளால் அளந்தார்; விக்ரமாத்—காலடியின் காரணமாக; வா—அல்லது; ஆஹ உ—அல்லது ஒருவேளை; வராஹ—பகவான் கிருஷ்ணரின் வராக அவதாரம்; வபுஷ:—உடலினால்; பரிரம்பணேன—தழுவிக் கொண்டதின் காரணமாக.
ஓ, அன்னை பூமியே, பகவான் கிருஷ்ணரின் திருவடித் தாமரைகளின் ஸ்பரிசம் படுவதற்கு நீ என்ன தவம் செய்தாயோ? அந்த ஸ்பரிசத்தின் விளைவாக எழுந்த இன்பத்தினால் உனது மேனி புளகமுற்று மயிர்க்கூச்செறிந்தனையோ? இந்நிலையில் நீ மிக்க எழிலுடையவளாகத் தோன்றுகிறாய். இது பகவானின் தற்போதைய வடிவத்தினால் உண்டானதா அல்லது இதற்கு முன்பு அவர் வாமனதேவர் என்னும் குள்ள வடிவம் கொண்டு தமது பாதங்களை உன்மீது பதித்ததினால் உண்டானதா அல்லது அதற்கும்முன்பு வராகதேவர் என்னும் பன்றியின் வடிவம் கொண்டு அவர் உன்னைத் தழுவிக் கொண்டதினால் உண்டானதா?
பதம் 10.30.11
அபி ஏண-பத்னி உபகத: ப்ரியயேஹ காத்ரைஸ்
தன்வன் த்ருஸாம் ஸகி ஸு-நிர்வ்ருதிம் அச்யுதோ வ:
காந்தாங்க-ஸங்க-குச-குங்கும-ரஞ்ஜிதாயா:
குந்த-ஸ்ரஜ: குல-பதேர் இஹ வாதி கந்த:
அபி—உண்டோ; ஏண—மானின்; பத்னி—மனைவியே; உபகத:—எதிர்ப்பட்டாரா; ப்ரியயா—அவரது அன்பிற்குரியவளுடன் இணைந்து; இஹ—இங்கே; காத்ரை:—அவரது உடல் அங்கங்களினால்; தன்வன்—உண்டாகின்ற; த்ருஸாம்—விழிகளின்; ஸகி—ஓ, சகியே; ஸூ-நிர்வ்ருதிம்—பேரின்பம்; அச்யுத:—குற்றமற்ற பகவான் கிருஷ்ணர்; வ:—உனது; காந்தா—அவரது காதலியின்; அங்க-ஸங்க—உடல் தொடர்பின் காரணமாக; குச—மார்பகங்களின் மீது; குங்கும—குங்குமத்தினால்; ரஞ்ஜிதாயா:—வண்ணம் செய்யப்பட்ட; குந்த—மல்லிகை மலர்களின்; ஸ்ரஜ:—மாலையின்; குல—கூட்டத்தின் (கோபியர்களின்); பதே:—தலைவரின்; இஹ—இங்கே எங்கணும்; வாதி—வீசுகின்ற; கந்த:—நறுமணம்.
மானின் மனைவியான ஓ, சகியே, பகவான் அச்சுதன், தமக்குப் பிரியமானவளுடன் இங்கே இருந்து உனது விழிகளுக்கு மகிழ்ச்சியளித்தாரா? உண்மையில் இங்கே வீசும் காற்றில் அவரது மாலையிலுள்ள மல்லிகை மலர்களின் நறுமணம் கமழ்ந்திருக்கின்றது. அவர் தமது பிரிய சிநேகிதியைத் தழுவியதினால், அவள் மார்பகங்களில் உள்ள குங்குமத் துகள் அவர் அணிந்துள்ள மாலையில் படிந்திருக்கின்றது.
பதம் 10.30.12
பாஹும் ப்ரியாம்ஸ உபதாய க்ருஹீத-பத்மோ
ராமானுஜஸ் துளஸிகாளி-குலைர் மதாந்தை:
அன்வீயமான இஹ வஸ் தாராவ: ப்ரணாமம்
கிம் வாபினந்ததி சரன் ப்ரணயாவலோகை:
பாஹும்—அவரது கரம்; ப்ரியா—அவரது ப்ரியக்காதலியின்; அம்ஸே—தோளின் மீது; உபதாய—இட்டு; க்ருஹீத—பிடித்திருப்பார்; பத்ம:—ஒரு தாமரை மலர்; ராம-அனுஜ:—பலராமரின் இளைய சகோதரரான கிருஷ்ணர்; துளஸிகா—அவரது துளசி மஞ்சரியினைச் சுற்றி மொய்க்கும் (அவை அவரது மாலையினை அணி செய்கின்றன); அளி-குலை:—ஏராளமானத் தும்பிக்களினால்; மத—மதிமயக்கத்துடன்; அந்தை:—பார்வை இழந்த; அன்வீயமான:—பின்தொடரப்படுகின்றது; இஹ—இங்கே; வ:—உமது; தரவ:—ஓ, மரங்களே; ப்ரணாமம்—தலைவணங்குதல்; கிம்வா—உண்டா இல்லையா; அபினந்ததி—ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது; சரண்—நடந்து செல்லும் பொழுது; ப்ரணய—காதல் நிரம்பிய; அவலோகை:—அவரது பார்வைகளுடன்.
ஓ மரங்களே! நீங்கள் தலைவணங்கி நிற்பதை நாங்கள் காண்கின்றோம். மதிமயங்கிய தும்பிகள் மொய்க்கும் துளசி மஞ்சரிகள் அலங்கரிக்கும் மாலையினை அணிந்த பலராமரின் இளைய சகோதரர் இவ்வழியே செல்லும் பொழுது, அவர் தமது பாசமிகு பார்வையினால் உங்கள் வந்தனங்களை ஏற்றுக் கொண்டாரா? அவர் தமது ஒரு கரத்தினைத் அவரதுப் பிரியசகியின் தோள்களின் மீது போட்டுக் கொண்டும் மற்றொரு கரத்தில் தாமரை மலர் ஒன்றினையும் வைத்திருத்தல் வேண்டும்.
பதம் 10.30.13
ப்ருச்சதேமா லதா பாஹுன் அபி ஆஸ்லிஷ்டா வனஸ்பதே:
நூனம் தத்-கரஜ-ஸ்ப்ருஷ்டா பிப்ரதி உத்புளகானி அஹோ
ப்ருச்சத—கேட்போம்; இமா—இவற்றிடமிருந்து; லதா—கொடிகள்; பாஹுன்—கரங்கள் (கிளைகள்); அபி—இருந்தபோதிலும்; ஆஸ்லிஷ்டா:—தழுவிக் கொண்டு; வனஸ்பதே—மரத்தின்; நூனம்—நிச்சயமாக; தத்—அவரது, கிருஷ்ணரது; கர-ஜ—விரல் நகங்களினால்; ஸ்ப்ருஷ்டா—தொட்டது; பிப்ரதி—கொண்டிருக்கின்றன; உத்புளகானி—புளகத்தினால் மயிர்க்கூச்செறிந்திருக்கின்றன; அஹோ—சற்றுப் பாருங்கள்.
கிருஷ்ணரைப் பற்றி இக்கொடிகளிடம் நாம் கேட்போம். மரம் என்னும் தங்கள் கணவனின் கரங்களை அவை தழுவிக் கொண்டிருந்த போதிலும் கிருஷ்ணரின் விரல் நகங்கள் அவற்றின் மீது நிச்சயம் பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாக விளைந்த இன்பப் பெருக்கினால் அவை மயிர்க்கூச்செறிந்திருக்கின்றன.
பதம் 10.30.14
இதி உன்மத்த-வசோ கோப்ய: க்ருஷ்ணான்வேஷண-காதரா:
லீலா பகவதஸ் தாஸ் தா ஹி அனுசக்ருஸ் தத்-ஆத்மிகா:
இதி—இவ்வாறு; உன்மத்த—உன்மத்தங் கொண்டு; வச—வார்த்தைகள் மொழிந்தனர்; கோப்ய—கோபியர்கள்; க்ருஷ்ண-அன்வேஷண—கிருஷ்ணரைத் தேடுவதினால்; காதாரா:—கவனம் மாறி; லீலா:—உன்னத லீலைகள்; பகவத்:—அவரது முழுமுதற்கடவுளின்; தா: தா:—ஒவ்வொன்றையும்; ஹி—உண்மையில்; அனுசக்ருஸ்—அவர்கள் நடித்தனர்; தத்-ஆத்மிகா—அவரது நினைவில் மூழ்கியவர்களாக.
இவ்வாறு கூறி கோபியர்கள், கிருஷ்ணரைத் தேடுவதிலிருந்து கவனம் மாறி, அவரது நினைவில் முற்றிலும் ஆழ்ந்தவர்களாக, அவரது பல்வேறு லீலைகளை நடிக்கத் தொடங்கினர்.
பதம் 10.30.15
கஸ்யாசித் பூதனாயந்த்யா: க்ருஷ்ணாயந்தி அபிபத் ஸ்தனம்
தோகயித்வா ருததி அன்யா பதாஹன் ஸகடாயதீம்
கஸ்யாசித்—கோபியர்களுள் ஒருத்தி; பூதனாயந்த்யா:—பூதனா என்னும் அரக்கியைப் போல் நடித்தாள்; க்ருஷ்ணாயந்தீ—மற்றொருத்தி கிருஷ்ணரைப் போல் நடித்து; அபிபத்—குடித்தாள்; ஸ்தனம்—ஸ்தனத்திலிருந்து; தோகயித்வா—குழந்தையைப்போல் நடித்து; ருததீ—அழுது கொண்டு; அன்யா—மற்றொருத்தி; பதா—அவளது பாதத்துடன்; அஹன்—தாக்கினாள்; ஸகடாயதீம்—வண்டியைப் போல் பாவனைசெய்த மற்றொருத்தி.
ஒரு கோபி பூதனாவைப் போல் நடிக்க மற்றொருத்தி குழந்தை கிருஷ்ணராக நடித்து, அவளது ஸ்தனத்தில் பால் குடிப்பது போல் பாவனை செய்தாள். பிறிதொரு கோபி குழந்தை கிருஷ்ணராக நடித்து, சகடாசுரனாக நடித்த கோபியை எட்டி உதைத்தாள்.
பதம் 10.30.16
தைத்யாயித்வா ஜஹாரான்யாம் ஏகோ
க்ருஷ்ணார்ப-பாவனாம் ரிங்கயாம் ஆஸ காபி அங்க்ரீ
கர்ஷந்தீ கோஷ-நி: ஸ்வனை:
தைத்யாயித்வா—ஓர் அசுரனைப் போல் நடித்து (த்ருணாவர்த்தன் என்னும் பெயருடையவன்); ஜஹார—தூக்கிச் சென்றாள்; அன்யாம்—மற்றொரு கோபி; ஏகா—ஒரு கோபி; க்ருஸ்ண-அர்ப—குழந்தைக் கிருஷ்ணரின்; பாவனாம்—மனநிலை உடையவளாக; ரிங்கயாம் ஆஸ—தவழ்ந்து சென்றாள்; கா அபி—அவர்களுள் ஒருத்தி; அங்க்ரீ—அவளது இருபாதங்கள்; கர்ஷந்தீ—இழுத்துக்கொண்டு; கோஷ—சலங்கைகளின்; நி: ஸ்வனை:—ஒலியுடன்.
ஒரு கோபி த்ருணாவர்த்தனாக நடித்து, குழந்தை கிருஷ்ணராக நடித்த கோபியைத் தூக்கிச் சென்றாள். மற்றொரு கோபி தவழ்ந்து சென்றாள், அவள் தனது பாதங்களினால் ஊர்ந்து செல்கையில், அவள் கால்களில் அணிந்திருந்த சலங்கைகள் ஒலி செய்தன.
பதம் 10.30.17
க்ருஷ்ண-ராமாயிதே த்வே து கோபாயந்த்யஸ் ச காஸ்சன
வத்ஸாயதீம் ஹந்தி சான்யா தத்ரைகா து பகாயதீம்
க்ருஷ்ண-ராமாயித—பகவான் கிருஷ்ணராகவும், பகவான் பலராமராகவும் நடித்தனர்; த்வே இரு—கோபியர்கள்; து—மற்றும்; கோபாயந்த்ய:—அவர்களின் ஆயர்குல நண்பர்களைப் போன்று நடித்தனர்; ச—மற்றும்; காஸ்சன—சிலர்; வத்ஸாயதீம்—கன்றின் வடிவம் மேற்கொண்ட வத்ஸாசுரனாக நடித்தாள்; ஹந்தி—கொல்லப்பட்ட; ச—மற்றும்; அன்யா—மற்றொரு; தத்ர—அங்கே; ஏகா—ஒருத்தி; து—மேலும்; பகாயதீம்—மற்றொருத்தி, நாரை என்னும் பறவை வடிவம் மேற்கொண்ட பகாசுரனாக நடித்தாள்.
ஆயர்குலச் சிறுவர்களாக நடித்த கோபியர்களின் மத்தியில் இரு கோபியர்கள் இராமராகவும், கிருஷ்ணராகவும் நடித்தனர். ஒரு கோபி மற்றொரு கோபியுடன் சேர்ந்து வத்ஸாசுரனைக் கிருஷ்ணர் வதம் செய்ததை நடித்துக் காட்டினாள். இரு கோபியர்கள் இணைந்து பகாசுர வதத்தினை நடித்தனர்.
பதம் 10.30.18
ஆஹூய தூர-கா யத்வத் க்ருஷ்ணஸ் தம் அனுவர்ததீம்
வேணும் க்வணந்தீம் க்ரீடந்தீம் அன்யா: ஸம்ஸந்தி ஸாத்வ் இதி
ஆஹூய—அழைத்தல்; தூர—வெகுதொலைவில் இருந்த; கா—பசுக்கள்; யத்வத்—போன்று; க்ருஷ்ண:—கிருஷ்ணர்; தம்—அவரை; அனுவர்ததீம்—நடித்துக் கொண்டிருந்த பிறிதொரு கோபி; வேணும்—புல்லாங்குழல்; க்வணந்தீம்—ஒலித்தல்; க்ரீடந்தீம்—விளையாடுதல்; அன்யா:—பிறகோபியர்கள்; ஸம்ஸந்தி—பாராட்டினர்; ஸாது—இதி “நன்று” என்று.
ஒரு கோபி, வெகு தொலைவில் நிற்கும் பசுக்களை கிருஷ்ணர் எவ்வாறு அழைப்பாரென்றும், எவ்வாறு அவர் புல்லாங்குழல் இசைப்பாரென்றும், எவ்வாறு வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவார் என்றும் மிகப் பொருத்தமாக நடித்துக் காட்டிய பொழுது பிற கோபியர்கள் அவளை “நன்று! நன்று!” என்று பாராட்டினர்.
பதம் 10.30.19
கஸ்யாஞ்சித் ஸ்வ-புஜம் ந்யஸ்ய சலந்தி ஆஹாபரா நனு
க்ருஷ்ணோ ‘ஹம் பஸ்யத கதிம் லலிதாம் இதி தன்-மனா:
கஸ்யாஞ்சித்—அவர்களுள் ஒருத்தி; ஸ்வ-புஜம்—அவளது கரத்தினை; ந்யஸ்ய—இட்டு (தோள்களின் மீது); சலந்தீ—நடந்து சென்று; ஆஹ—குறிப்பிட்டாள்; அபரா—மற்றொருத்தியிடம்; நனு—உண்மையில்; க்ருஷ்ண:—கிருஷ்ணர்; அஹம்—நான்; பஸ்யத—இங்கே பார்; கதிம்—என்று நடையினை; லலிதாம்—எழில்மிக்க; இதி—இவ்வார்த்தைகளுடன்; தத்—அவரிடத்தில்; மனா:—அவளது மனதுடன் முற்றிலும் ஆழ்ந்தவளாக.
கிருஷ்ணரிடம் தனது மனதை நிலை நிறுத்திய மற்றொரு கோபி, தனது கரத்தினைத் தன் தோழியின் தோள்களில் போட்டவாறு “நானே கிருஷ்ணர் எத்துணை எழிலுடன் நான் நடக்கின்றேன் என்பதைப் பாருங்கள்” என்று கூறினாள்.
பதம் 10.30.20
மா பைஷ்ட வாத-வர்ஷாப்யாம் தத்-த்ராணம் விஹிதம் மயா
இதி உக்த்வைகேன ஹஸ்தேன யதந்தி உன்னிததே ‘ம்பரம்
மா பைஷ்ட—நீங்கள் யாரும் அஞ்சவேண்டாம்; வாத—வாத-காற்று; வர்ஷாப்யாம்—மற்றும் மழை; தத்—அவற்றிலிருந்து; த்ராணம்—உங்களின் மீட்பு; விஹிதம்—ஏற்பாடு செய்பட்டிருக்கிறது; மயா—என்னால்; இதி—இவ்வாறு; உக்த்வா—கூறியபடி; ஏகேன—ஒரு; ஹஸ்தேன—கரத்தில்; யதந்தீ—முயற்சித்தாள்; உன்னிததே—அவள் துவக்கினாள்; அம்பரம்—அவளது மேலாடையினை.
“காற்று, மழைக்கு நீங்கள் அஞ்சவேண்டாம், நான் உங்களைக் காப்பாற்றுவேன்” இவ்வாறு கூறிய ஒரு கோபி தனது தாவணியைத் தன் தலைக்கு மேலே தூக்கினாள்.
பதம் 10.30.21
ஆருஹ்யைகா பதாக்ரம்ய ஸிரஸி ஆஹாபராம் ந்ருப
துஷ்டாஹே கச்ச ஜாதோ ‘ஹம் கலானாம் நனு தண்ட-க்ருத்
ஆருஹ்ய—ஏறிக் கொண்டு; ஏக—கோபியருள் ஒருத்தி; பதா—தனது பாதத்தினால்; ஆக்ரம்ய—மேலே ஏறிக் கொண்டாள்; ஸிரஸி—தலையில்; ஆஹ—கூறினாள்; அபராம்—மற்றொருத்தியிடம்; ந்ருப—ஓ, மன்னனே (பரீக்ஷித்து); துஷ்ட—கொடிய; அஹே—பாம்பே; கச்ச—செல்வாயாக; ஜாத:—அவதரித்திருக்கின்றேன்; அஹம்—நான்; கலானாம்—துவேஷமிக்கவர்களை; நனு—உண்மையில்; தண்ட—தண்டனை; க்ருத்—அளிப்பவராக.
(சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்:) ஓ, மன்னனே! ஒரு கோபி, மற்றொரு கோபியின் தோள்களில் ஏறிக்கொண்டு, தனது பாதத்தினை அடுத்தவள் தலையின் மீது வைத்தபடி “கொடிய பாம்பே! இங்கிருந்து செல்வாயாக. துஷ்டர்களைத் தண்டிப்பதற்காகவே நான் இவ்வுலகில் அவதரித்திருக்கின்றேன் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினாள்.
பதம் 10.30.22
தத்ரைகோவாச ஹே கோபா தாவாக்னிம் பஸ்ய
தோல்பணம் சக்ஷும்ஷ ஆஸ்வ அபிதத்வம்வோ விதாஸ்யே
க்ஷேமம் அஞ்ஜஸா
தத்ர—அங்கே; ஏகா—அவர்களுள் ஒருத்தி; உவாச—கூறினாள்: ஹேகோபா:—ஓ, ஆயர்குலச் சிறுவர்களே; தாவ-அக்னிம்—காட்டுத்தீ; பஸ்யத—பாருங்கள்; உல்பணம்—பெருஞ்சீற்றமுடன்; சக்ஷும்ஷி—உங்கள் கண்களை; ஆஸு—விரைந்து; அபிதத்வம்—மூடிக்கொள்ளுங்கள்; விதாஸ்யே—நான் ஏற்பாடு செய்வேன்; க்ஷேமம்—பாதுகாப்பிற்கு; அஞ்ஜஸா—எளிதாக.
பிறகு வேறொரு கோபி கூறினாள்: அன்பிற்குரிய ஆயர்குலச் சிறுவர்களே! பெருஞ்சீற்றமுடன் எரிகின்ற காட்டுத்தீயைப் பாருங்கள்! விரைந்து உங்கள் விழிகளை மூடிக் கொள்ளுங்கள். உங்களை எளிதாக நான் காப்பேன் என்றாள்.
பதம் 10.30.23
பத்தான்யயா ஸ்ரஜா காசித் தன்வீ தத்ர உலூகலே
பத்னாமி பாண்ட-பேத்தாரம் ஹையங்கவ முஷம் த்வ் இதி
பீதா ஸு-த்ருக் பிதாயாஸ்யம் பேஜே பீதி-விடம்பனம்
பத்தா—கட்டினாள்; அன்யயா—மற்றொரு கோபியினால்; ஸ்ரஜா—மலர்மாலையுடன்; காசித்—ஒரு கோபி; தன்வீ—மெல்லிய; தத்ர—அங்கே; உலூகலே—உரலில்; பத்னாமி—நான் கட்டுகின்றேன்; பாண்ட—பாண்டங்களின்; பேத்தாரம்—உடைத்தவன்; ஹையம்-கவ—முந்தின நாள் பாலிலிருந்து சேமித்து வைத்த வெண்ணெயின்; முஷம்—திருடியவன்; து—உண்மையில்; இதி—இவ்வாறு கூறியபடி; பீதா—அஞ்சினாள்; ஸு-த்ருக்—அழகிய விழிகளுடன்; பிதாய—மூடிக்கொண்டு; அஸ்யம்—அவளது முகம்; பேஜே—மேற்கொண்டு; பீதி—அச்சத்தின்; விடம்பனம்—பாசாங்கு.
ஒரு கோபி, மெல்லிய உடலுடைய தனது தோழி ஒருத்தியின் கரங்களை மலர்மாலையினால் கட்டியபடியே “வெண்ணெய் இருந்த பானையினை உடைத்து வெண்ணெய் திருடிய இச்சிறுவனை நான் கட்டிவைக்கப் போகிறேன்” என்று கூற, அத்தோழி தனது அழகிய விழிகளைக் கைகளினால் பொத்தியபடியே அஞ்சுவது போல் பாசாங்கு செய்தாள்.
பதம் 10.30.24
ஏவம் க்ருஷ்ணம் ப்ருச்சமானா வ்ருந்தாவன-லதாஸ் தரூன்
வ்யசக்ஷத வனோத்தேஸே பதானி பரமாத்மன:
ஏவம்—இவ்வாறு; க்ருஷ்ணம்—கிருஷ்ணரைப்பற்றி; ப்ருச்சமானா:—வினவிக் கொண்டு; வ்ருந்தாவன—விருந்தாவனக்காட்டின்; லதா:—கொடிகளிடமிருந்தும்; தரூன்—மற்றும் மரங்கள்; வ்யசக்ஷத—அவர்கள் கண்டனர்; வன—வனத்தின்; உத்தேஸே—ஓரிடத்தில்; பதானி—காலடிச் சுவடுகளை; பரம-ஆத்மன:—பரமாத்மாவின்.
இவ்வாறு கோபியர்கள் கிருஷ்ணரின் லீலைகளை நடித்துக் கொண்டும், விருந்தாவனத்திலுள்ள மரம், செடி, கொடிகளிடம் அவர் இருப்பிடத்தைப் பற்றி வினவிக் கொண்டும் இருந்தபொழுது, காட்டின் ஒரு மூலையில் கிருஷ்ணரின் காலடிச் சுவடுகளை அவர்கள் காண நேர்ந்தது.
பதம் 10.30.25
பதானி வ்யக்தம் ஏதானி நந்த-ஸூனோர் மஹாத்மன:
லக்ஷ்யந்தே ஹி த்வஜாம்போஜ-வஜ்ராங்குஸ-யவாதிபி:
பதானி—காலடிச்சுவடுகள்; வ்யக்தம்—தெளிவாக; ஏதானி—இவை; நந்த-ஸூனோ:—நந்த மகாராஜாவின் மைந்தர்; மஹா-ஆத்மன:—மகாத்மா; லக்ஷ்யந்தே—உறுதிப்படுத்துகின்றது; ஹி—உண்மையில்; த்வஜ—கொடியினால்; அம்போஜ—தாமரை; வஜ்ர—வஜ்ராயுதம்; அங்குஸ—அங்குசம்; யவ-ஆதிபி:—வாற்கோதுமை போன்றவற்றினால்.
(கோபியர்கள் கூறினர்) இக்காலடிச் சுவடுகளில் தெளிவாகக் காணப்படும் கொடி, தாமரை, வஜ்ராயுதம், அங்குசம், வாற்கோதுமை மணி போன்ற அடையாளங்கள் இவை நந்தமகாராஜாவின் மைந்தருடையவை என்று உறுதிசெய்கின்றன.
பதம் 10.30.26
தைஸ் தை: பதைஸ் தத்-பதவீம்
அன்விச்சந்த்யோ ‘க்ரதோ ‘பலா:
வத்வா: பதை: ஸு-ப்ருக்தானி
விலோக்யார்தா: ஸமப்ருவன்
தை: தை:—அப் பல்வேறு; பதை:—காலடிச் சுவடுகளினால்; தத்—அவருடைய; பதவீம்—பாதை; அன்விச்சந்த்ய:—பின்தொடர்ந்து; அக்ரத:—முன்னோக்கி; அபலா:—பெண்கள்; வத்வா:—அவரது பிரிய காதலியின்; பதை:—காலடிச்சுவடுகளுடன்; ஸுப்ருக்தானி—முழுவதும் ஒன்றோடென்று கலந்து; விலோக்ய—கண்டு; ஆர்தா:—துன்புற்றனர்; ஸமப்ருவன்—அவர்கள் கூறினர்.
கிருஷ்ணரின் காலடிச் சுவடுகளைக் கொண்டு அவர் சென்ற பாதையில் கோபியர்கள் நடக்கத் தொடங்கினர். ஓரிடத்தில் அச்சுவடுகள் அவரது பிரியமிகு காதலியின் காலடிச் சுவடுகளோடு கலந்திருப்பதைக் கண்டு அவர்கள் மிகுந்த துயருற்றுப் பின்வருமாறு கூறினர்.
பதம் 10.30.27
கஸ்யா: பதானி சைதானி யாதாயா நந்த-ஸுனுனா
அம்ஸ-ந்யஸ்த-ப்ரக்ஷோஷ்டாயா: கரேணோ: கரிணா யதா
கஸ்யா:—ஒரு குறிப்பிட்ட கோபியின்; பதானி—காலடிச் சுவடுகள்; ச—மேலும்; ஏதானி—இவை; யாதாயா:—சென்றிருக்கின்றான்; நந்த-ஸீனுனா—நந்த மகாராஜாவின் மைந்தருடன்; அம்ஸ—அவளது தோளின் மீது; ந்யஸ்த—இட்டு; ப்ரக்ஷோஷ்டாயா:—அவரது முன்கை: கரேணோ:—ஒரு பெண் யானையின்; கரிணா—யானையினால்; யதா—போன்று.
(கோபியர்கள் கூறினர்:) இங்கே நாம் காணும் யாரோ ஒரு கோபியின் காலடிச் சுவடுகளிலிருந்து அவள் நந்தமகாராஜாவின் மைந்தருடன் இணைந்து சென்றிருக்க வேண்டுமென்று தெரிகிறது. ஓர் ஆண் யானை தனது துதிக்கையினைத் தன் உடன் வரும் பெண் யானையின் மீது போடுவதுபோல் அவரும், அப்பெண்ணின் தோள்களின் மீது தமது கரத்தினைப் போட்டிருத்தல் வேண்டும்.
பதம் 10.30.28
அனயாராதிதோ நூனம் பகவான் ஹரிர் ஈஸ்வர:
யன் நோ விஹாய கோவிந்த: ப்ரீதோ யாம் அனயத் ரஹ:
அனயா—அவளால்; ஆராதித:—முறையாக பூஜிக்கப்பட்டு; நூனம்—நிச்சயமாக; பகவான்—முழுமுதற்கடவுள்; ஹரி:—பகவான் கிருஷ்ணர்; ஈஸ்வர:—பரம நெறியாளர்; யத்—எவ்வளவு; ந:—நம்மை; விஹாய—புறக்கணித்து; கோவிந்த:—பகவான் கோவிந்தன்; ப்ரீத:—மகிழ்ச்சியுற்று; யாம்—அவளை; அனயத்—அழைத்துச் செல்லுதல்; ரஹ:—ஒரு தனி இடத்திற்கு.
நிச்சயமாக அக்கோபி, எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளான கோவிந்தனை முறையாக பூஜித்திருக்கின்றாள். அதனால் அவள் மீது மகிழ்ச்சி கொண்ட அவர், நம்மையெல்லாம் புறக்கணித்து விட்டு அவளை ஒரு தனி இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பதம் 10.30.29
தன்யா அஹோ அமீ ஆல்யோ கோவிந்தாங்க்ரி-அப்ஜ-ரேணவ:
யான் ப்ரஹ்மேஸேௗ ரமா தேவீ ததுர் மூர்த்னி அக-நுத்தயே
தன்யா:—புனிதமுடையது; அஹோ—ஆ; அமீ—இவை; ஆல்ய:—ஓ, கோபியர்களே; கோவிந்த—கோவிந்தனின்; அங்க்ரி-அப்ஜ—தாமரைத்திருவடிகளின்;; ரேணவ:—தூசியின் கூறுகள்; யான்—அதனை ப்ரஹ்மா—பிரம்மதேவன்; ஈஸௌ—சிவபெருமான்; ரமாதேவீ—பகவான் விஷ்ணுவின் துணைவி ரமாதேவி; தது:—எடுத்துக் கொள்கின்றனர்; மூர்த்னி—அவர்கள் தலைகளின் மீது; அக—அவர்களது பாவப்பலன்களின்; நுத்தயே—நீக்கத்திற்காக.
ஓ, பெண்களே! கோவிந்தனின் தாமரைத்திருவடிகளிலுள்ள தூசு மிகவும் புனிதமானதாகும். அதனைப் பிரம்மதேவனும், சிவபெருமானும், ரமாதேவியும் தங்கள் பாவபலன்களின் நீக்கத்திற்காக அவர்களது தலைகளின் மீது எடுத்து வைத்துக் கொள்கின்றனர்.
பதம் 10.30.30
தஸ்யா அமூனி ந: ஷோபம் குர்வந்தி உச்சை: பதானி யத்
யைகாபஹ்ருத்ய கோபீனாம் ரஹோ புங்க்தே ‘ச்யுதாதரம்
ந லக்ஷ்யந்தே பதானி அத்ர தஸ்யா நூனம் த்ருணாங்குரை:
கித்யத் ஸுஜாதாங்க்ரி-தலாம் உன்னின்யே ப்ரேயஸீம் ப்ரிய:
தஸ்யா:—அவளின்; அமூனி—இவை; ந:—நமக்கு; ஷோபம்—கலக்கம்; குர்வந்தி—உண்டாக்குகின்றன; உச்சை:—அதிகமாக; பதானி—காலடிச் சுவடுகள்; யத்—ஏனென்றால்; யா—அவள்; ஏகா—மட்டும்; அபஹ்ருத்ய—தனியே எடுத்துச் செல்லப்படுதல்; கோபீனாம்—அனைத்துக் கோபியர்களின்; ரஹ:—தனிமையில்; புங்க்தே—அவள் மகிழ்கின்றாள்; அச்யுத—கிருஷ்ணரின்; அதரம்—அதரங்கள்; நலக்ஷ்யந்தே—காணப்படவில்லை; பதானி—பாதங்கள்; அத்ர—இங்கே; தஸ்யா:—அவளுடைய; நூனம்—நிச்சயமாக; த்ருண—புல்லின் இதழ்களினால்; அங்குரை:—மற்றும் வளரும் முனைகள்; கித்யத்—வேதனை செய்யுமென்று; ஸுஜாத—மெல்லிய; அங்க்ரி—அவளது பாதங்களின்; தலாம்—அடிப்பகுதி; உன்னின்யே—அவர்தூக்கி இருக்கின்றார்; ப்ரேயஸீம்—அவருடைய காதலியை; ப்ரிய:—அவளது பிரியமிகு கிருஷ்ணர்.
தனிச்சிறப்புடைய அக்கோபியின் காலடிக்சுவடுகள் நமக்குப் பெரும் கலக்கத்தினை உண்டு பண்ணுகின்றன. எல்லாக் கோபியர்களையும் விட்டுவிட்டு, அவள் மட்டும் ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே அவள் கிருஷ்ணரின் அதரங்களைச் சுவைத்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றாள். இங்கே பாருங்கள் இந்த இடத்தில் அவளது காலடிச் சுவடுகளை நம்மால் காண முடியவில்லை. அவளது மென்மையான பாதங்களை புற்களும், முனைகளும் காயப்படுத்தியிருக்க வேண்டும் என்று தெரிகிறது, அதனால் அவளுடைய காதலர் அவரது பிரிய காதலியைத் தூக்கிச் சென்றுள்ளார்.
பதம் 10.30.31
இமானி அதிக-மக்னானி பதானி வஹதோ வதூம்
கோப்ய: பஸ்யத க்ருஷ்ணஸ்ய பாராக்ராந்தஸ்ய காமின:
அத்ராவரோபிதா காந்தா புஷ்ப-ஹேதோர் மஹாத்மனா
இமானி—இவை; அதிக—அதிகம்; மக்னானி—இணைந்த; பதானி—பாதச்சுவடுகள்; வஹத:—தூக்கிச் சென்ற அவரின்; வதூம்—அவருடைய காதலி; கோப்ய:—ஓ, கோபியர்களே; பஸ்யத—சற்றுப் பாருங்கள்; க்ருஷ்ணஸ்ய—கிருஷ்ணரின்; பார—பாரத்தினால்; ஆக்ராந்தஸ்ய—இழுத்தும்; காமின:—காமமிகு; அத்ர—இந்த இடத்தில்; அவரோபிதா—கீழே இறக்கிவைத்தல்; காந்தா—பிரியசகியை; புஷ்ப—மலர்களை (சேகரித்தல்); ஹேதோ:—நோக்கத்திற்காக; மஹா-ஆத்மனா—மிகுந்த கூர்மதி உடையவரால்.
அன்பார்ந்த கோபியரே, இந்த இடத்தில் காமமிகு கிருஷ்ணரின் காலடிச் சுவடுகள் எவ்வாறு ஆழமாகப் பதிந்திருக்கின்றன என்பதைச் சற்றுப் பாருங்கள். அவரது பிரிய காதலியின் பாரத்தினைச் சுமந்து செல்வது அவருக்குக் கடினமாக இருந்திருக்க வேண்டும். மேலும் இந்த இடத்தில் மலர்களைச் சேகரிப்பதற்காக அக்கூர்மதி உடையவர் அவளைக் கீழே இறக்கிவிட்டிருக்க வேண்டும்.
பதம் 10.30.32
அத்ர ப்ரஸூனாவசய: ப்ரயார்தே ப்ரேயஸா க்ருத:
ப்ரபதாக்ரமண ஏதே பஸ்யதாஸகலே பதே
அத்ர—இங்கே; ப்ரஸூன—மலர்களை; அவசய:—சேகரித்தல்; ப்ரியா-அர்தே—அவரது பிரிய காதலிக்காக; ப்ரேயஸா—பிரேமைமிகு கிருஷ்ணரால்; க்ருத:—செய்யப்பட்டது; ப்ரபத—அவரது பாதத்தின் முன் பகுதி; ஆக்ரமணே—கீழே பதிந்திருத்தல்; ஏதே—இவை; பஸ்யத—சற்றுப் பாருங்கள்; அஸகலே—அரைகுறையாக; பதே—காலடிச் சுவடுகள்.
அன்பிற்குரிய கிருஷ்ணர் தமது பிரிய காதலிக்காக இந்த இடத்தில் எவ்வாறு மலர்களைச் சேகரித்துள்ளார் என்பதைச் சற்றே பாருங்கள். இங்கே அவர் தமது பாதங்களின் முன் பகுதிச் சுவடுகளையே விட்டுச் சென்றுள்ளார். ஏனென்றால் அவர் மலர்களைப் பறிப்பதற்காகத் தமது கால்களின் விரல்களை ஊன்றி நின்றுள்ளார்.
பதம் 10.30.33
கேஸ-ப்ரஸாதனம் த்வ் அத்ர காமின்யா: காமினா க்ருதம்
தானி சூடயதா காந்தாம் உபவிஷ்டம் இஹ த்ருவம்
கேஸ—அவளது கேசத்தின்; ப்ரஸாதனம்—அலங்கரிப்பதற்காக; து—மேலும்; அத்ர—இங்கே; காமின்யா:—காமமிகு பெண்ணின்; காமினா—காமமிகு இளைஞனால்; க்ருதம்—செய்யப்பட்டது; தானி—அவற்றுள் (மலர்கள்); சூடயதா—மணிமுடியைச் செய்து கொண்டிருந்த அவரால்; காந்தம்—அவருடைய காதலி; உபவிஷ்டம்—அமர்ந்து; இஹ—இங்கே; த்ருவம்—நிச்சயமாக.
கிருஷ்ணர் அவருடைய காதலியின் கேசத்தினை அழகு செய்வதற்காக நிச்சயம் இந்த இடத்தில் அமர்ந்துள்ளார். அக்காமமிகு இளைஞன் தாம் சேகரித்த மலர்களைக் கொண்டு அக்காமமிகு பெண்ணுக்கு ஒரு மணிமுடி செய்திருக்க வேண்டும்.
பதம் 10.30.34
ரேமே தயா சாத்ம-ரத ஆத்மாராமோ ‘பி அகண்டித:
காமினாம் தர்ஸயன் தைன்யம் ஸ்த்ரீணாம் சைவ துராத்மதாம்
ரேமே—அவர் மகிழ்ந்தார்; தயா—அவளுடன்; ச—மற்றும்; ஆத்ம-ரத:—தன்னில் மட்டுமே இன்பமடைபவர்; ஆத்ம-ஆராம:—முற்றிலும் சுய திருப்தியுடையவர்; அபி—இருந்தபோதிலும்; அகண்டித:—குறைவுடையதில்லை; காமினாம்—சாதாரணக் காமுகர்களின்; தர்ஸயன்—காட்டுகின்ற; தைன்யம்—இழிந்த நிலை; ஸ்த்ரீணாம்—சாதாரணப் பெண்களின்; ச ஏவ—மேலும் கூட; துராத்மதாம்—கல்நெஞ்சமுடைய.
(சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்:) பகவான் கிருஷ்ணர் தம்முன் மகிழ்பவராகவும், சுயதிருப்தியுடையவராகவும், தம்முன் முழுமை உடையவராகவும் இருந்தபோதிலும் அவர் அக்கோபியுடன் களித்து மகிழ்ந்தார். இவ்வாறு அவர் நேர்மாறாக சாதாரண காமமிகு ஆண்கள் மற்றும் கல்நெஞ்சமுடைய பெண்களின் இழிதன்மையினை வெளிப்படுத்திக் காட்டினார்.
பதங்கள் 10.30.35 – 10.30.36
இதி ஏவம் தர்ஸயந்தயஸ் தாஸ் சேருர் கோப்யோ விசேதஸ:
யாம் கோபீம் அனயத் க்ருஷ்ணோ விஹாயான்யா: ஸ்த்ரியோ வனே
ஸா ச மேனே ததாத்மானம் வரிஷ்டம் ஸர்வ-யோஷிதாம்
ஹித்வா கோபீ: காம-யானா மாம் அஸௌ பஜதே ப்ரிய:
இதி—இவ்வாறு; ஏவம்—இவ்வழியே; தர்ஸயந்த்ய:—காட்டினர்; தா:—அவர்கள்; சேரு:—அலைந்தனர்; கோப்ய:—கோபியர்கள்; விசேதஸ:—முற்றிலும் குழப்பமுற்று; யாம்—எவளை; கோபீம்—கோபி; அனயத்—அவர் அழைத்துச் சென்றார்; க்ருஷ்ண:—பகவான் கிருஷ்ணர்; விஹாய—புறக்கணித்து; அன்யா:—மற்ற; ஸ்த்ரிய:—பெண்கள்; வனே—வனத்தில்; ஸா—அவள்; ச—கூட; மேனே—நினைத்தாள்; ததா—பின்னர்; ஆத்மானம்—தனக்குள்; வரிஷ்டம்—சிறந்தவள்; ஸர்வ—அனைத்து; யோஹிதாம்—பெண்களில்; ஹித்வா—புறக்கணித்து; கோபீ:—கோபியர்கள்; காம-யானா:—காம இச்சையினால் தூண்டப் பெற்றோர்; மாம்—என்னை; அஸௌ—அவள்; பஜதே—ஏற்றுக் கொண்டிருக்கின்றார்; ப்ரிய—பிரியமானவளாக.
கோபியர்கள் அலைந்து திரிந்த பொழுது அவர்களின் மனம் முற்றிலும் குழப்பத்திற்காளானது. அவர்கள் கிருஷ்ணருடைய லீலைகளின் பல்வேறு அடையாளங்களைச் சுட்டிக் காட்டினர். கிருஷ்ணர் பிற கோபியர்கள் அனைவரையும் புறக்கணித்து ஒரு குறிப்பிட்ட கோபியை மட்டும் ஒரு தனிக் காட்டிற்கு அழைத்துச் சென்றாரே அவள் தானே பிற பெண்கள் அனைவரினும் சிறந்தவள் என்று தன்னைப் பற்றிக் கருதத் தொடங்கினாள். “அவள் நினைத்தாள்” எனது காதலர், பிறகோபியர்கள் அனைவரும் மன்மதனால் துன்புறுத்தப்பட்டபோதிலும் கூட அவர்களைப் புறக்கணித்துவிட்டார். அவர் தனிமையில் உறவாட என்னை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளார்” என்று.
பதம் 10.30.37
ததோ கத்வா வனோத்தேஸம் த்ருப்தா கேஸவம் அப்ரவீத்
ந பாரயே ‘ஹம் சலிதும் நய மாம் யத்ர தே மன:
ததோ:—பின்னர்; கத்வா—சென்றுகொண்டிருந்த பொழுது; வன—வனத்தின்; உத்தேஸம்—ஒரு பகுதியில்; த்ருப்தா—கர்வங்கொண்டு; கேஸவம்—கிருஷ்ணரிடம்; அப்ரவீத்—அவள் கூறினாள்; ந பாரயே—இயலாதிருக்கின்றேன்; அஹம்—நான்; சலிதும்—நடப்பதற்கு; நய—இட்டுச் செல்வீராக; மாம்—என்னை; யத்ர—எங்கே; தே—உமது; மன:—மனம்.
காதலர்கள் இருவரும் விருந்தாவனக்காட்டின் ஒரு பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்தபொழுது அக்குறிப்பிட்ட கோபி தன்னை எண்ணிக் கர்வம் கொள்ளத் தொடங்கினாள். அவள் பகவான் கேசவரிடம் “இதற்கு மேல் என்னால் நடக்க முடியாது. நீர் எங்கெல்லாம் செல்ல விரும்புகின்றீரோ அங்கெல்லாம் என்னைத் தூக்கிச் செல்வீராக” என்று கூறினாள்.
பதம் 10.30.38
ஏவம் உக்த: ப்ரியாம் ஆஹ ஸ்கந்த ஆருஹ்யதாம் இதி
ததஸ் சாந்தர்ததே க்ருஷ்ண: ஸா வதூர் அன்வதப்யத
ஏவம்—இவ்வாறு; உக்த:—கூறியது; ப்ரியாம்—அவரது காதலியிடம்; ஆஹ—அவர் கூறினார்; ஸ்கந்த—எனது தோள்களின் மீது; ஆருஹ்யதாம்—ஏறிக்கொள்; இதி—இவ்வார்த்தைகள்; தத:—பிறகு; ச—மற்றும்; அந்தர்ததே—அவர் மறைந்தார்; க்ருஷ்ண:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; ஸா—அவள்; வதூ:—அவருடைய காதலி; அன்வதப்யத—துயரம் கொண்டாள்.
அவள் இவ்வாறு கூறியதும் பகவான் கிருஷ்ணர் “எனது தோள்களின் மீது ஏறிக் கொள்வாயாக” என்று மறுமொழி கூறினார். இதனைக் கூறிய மறுகணமே அவர் அங்கிருந்து மறைந்தார். பிறகு அவருடைய பிரிய காதலி மிகுந்த துயரத்திற்கு ஆளானாள்.
பதம் 10.30.39
ஹா நாத ரமண ப்ரேஷ்ட க்வாஸி க்வாஸி மஹா-புஜ
தாஸ்யாஸ் தே க்ருபணாயா மே ஸகே தர்ஸய ஸன்னிதிம்
ஹா—ஓ!; நாத—நாதனே; ரமண—காதலரே; ப்ரேஷ்ட—பேரன்பிற்குரிய; க்வ அஸி க்வ அஸி—நீர் எங்கே இருக்கின்றீர், நீர் எங்கே இருக்கின்றீர்; மஹா-புஜ—ஓ, உறுதிமிக்க கரங்களை உடையவரே; தாஸ்யா:—பணிப்பெண்ணுக்கு; தே—உமது; க்ருபணாயா:—ஏழை; மே—எனக்கு; ஸகே—ஓ, நண்பரே; தர்ஸய—காட்டுவீராக; ஸன்னிதிம்—உமது தோற்றத்தினை.
அவள் உரக்கக் கூறினாள்: ஓ, நாதனே! எந்தன் காதலரே! ஓ பேரன்பிற்குரியவரே, நீ எங்கே இருக்கின்றீர்? நீர் எங்கே இருக்கின்றீர்? வலிமைமிக்க கரங்களை உடையவரே, ஓ, நண்பரே, உமது இந்த ஏழைப்பணிப்பெண்ணுக்கு உம்மைக் காட்டியருள்வீராக!
பதம் 10.30.40
ஸ்ரீ-ஸுக உவாச
அன்விச்சந்த்யோ பகவதோ மார்கம் கோப்யோ ‘வி தூரித:
தத்ருஸு: ப்ரிய விஸ்லேஷான் மோஹிதாம் து: கிதாம் ஸகீம்
ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அன்விச்சந்த்ய:—தேடிக்கொண்டு; பகவத:—முழுமுதற்கடவுளின்; மார்கம்—பாதை; கோப்ய:—கோபியர்கள்; அவிதூரித:—வெகு தூரத்தில் அன்று; தத்ருஸு:—கண்டனர்; ப்ரிய—அவளது காதலரின்; விஸ்லேஷாத்—பிரிவின் காரணமாக; மோஹிதாம்—குழப்பமுற்று; து: கிதாம்—துக்கத்துடன்; ஸகீம்—அவர்களின் தோழி.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கிருஷ்ணரைத் தேடிக் கொண்டு அவர் சென்ற பாதையில் தொடர்ந்து வந்த கோபியர்கள் சிறிது தூரத்தில், சோகத்தில் வீற்றிருந்த தங்கள் தோழியைக் கண்டனர். தனது காதலரின் பிரிவினால் அவள் மிக்க குழப்பமுற்றிருந்தாள்.
பதம் 10.30.41
தயா கதிதம் ஆகர்ணய மான-ப்ராப்திம் ச மாதவாத்
அவமானம் ச தௌராத்ம்யாத் விஸ்மயம் பரமம் யயு:
தயா—அவளால்; கதிதம்—என்ன நடந்ததென்று; ஆகர்ணய—கேட்டு; மான—மரியாதையின்; ப்ராப்திம்—பெற்றுக்கொண்டும்; ச—மற்றும்; மாதவாத்—பகவான் கிருஷ்ணரிடமிருந்து; அவமானம்—அவமானம்; ச—மேலும்; தௌராத்ம்யாத்—அவளின் தவறான நடத்தை காரணமாக; விஸ்மயம்—ஆச்சரியம்; பரமம்—உணர்ந்த; யயு:—அவர்கள் அடைந்தனர்.
அவள் அவர்களிடம், மாதவன் தனக்கு எந்த அளவிற்கு மரியாதை அளித்தாரென்றும், ஆயினும் தனது தவறான நடத்தையின் காரணமாகத் தான் எவ்வாறு அவமானப்பட நேர்ந்தது என்றும் கூறினாள். இதனைக் கேட்டுக் கோபியர்கள் மிகுந்த ஆச்சரியத்திற்காளாயினர்.
பதம் 10.30.42
ததோ ‘விஸன் வனம் சந்த்ர-ஜ்யோத்ஸ்னா யாவத் விபாவ்யதே
தம: ப்ரவிஷ்டம் ஆலக்ஷ்ய ததோ நிவவ்ருது: ஸ்த்ரிய:
ததோ:—பிறகு; அவிஸன்—அவர்கள் புகுந்தனர்; வனம்—வனம்; சந்த்ர—சந்திரனின்; ஜ்யோத்ஸ்னா—ஒளி; யாவத்—எதுவரை; விபாவ்யதே—தெரிந்ததோ அதுவரை; தம:—இருள்; ப்ரவிஷ்டம்—நுழையப்பட்டது; ஆலக்ஷ்ய—கண்டு; தத:—பின்னர்; நிவவ்ருது:—திரும்பி வருதல்; ஸ்த்ரிய:—பெண்கள்.
பிறகு கிருஷ்ணரைத் தேடிக் கோபியர்கள் காட்டின் அடர்ந்த பகுதியினுள் புகுந்து நிலவு வெளிச்சம் தெரியும் இடம் வரை சென்றனர். ஆனால் தாங்கள் இருளில் மூழ்கிவிட்டோம் என்று உணர்ந்தவுடன் அவர்கள் திரும்பிவரத் தீர்மானித்தனர்.
பதம் 10.30.43
தன்-மனஸ்காஸ் தத்-ஆலாபாஸ் தத்-விசேஷ்டாஸ் தத்-ஆத்மிகா:
தத்-குணான் ஏவ காயந்த்யோ நாத்மாகாராணி ஸஸ்மரு:
தன்-மனஸ்கா:—அவர்களின் மனங்கள் அவரது நினைவுகளால் நிரப்பப்பட்டிருந்தன; தத்-ஆலாபா:—அவரைப் பற்றிப் பேசிக் கொண்டும்; தத்-விசேஷ்டா:—அவரது செயல்களைப் பாவனைசெய்து கொண்டும்; தத்-ஆத்மிகா:—அவர் இருப்பதாக உணர்ந்து; தத்-குணான்—அவரது குணங்களைப் பற்றி; ஏவ—மட்டும்; காயந்த்ய:—பாடிக்கொண்டு; ந—இல்லை; ஆத்ம—அவர்களது; ஆகாராணி—வீடுகளை; ஸஸ்மரு:—நினைத்தல்.
அவர்களின் மனங்கள் அவரது நினைவுகளில் மூழ்கின; அவரைப் பற்றியே அவர்கள் உரையாடினர். அவரது லீலைகளை நடித்து அவர், தம் முன் இருப்பதாக உணர்ந்தனர். கிருஷ்ணரின் உன்னதக் குணங்களின் பெருமைகளை உரத்தகுரலில் பாடி அவர்கள் தமது இல்லங்களை முற்றிலும் மறந்தனர்.
பதம் 10.30.44
புன: புளினம் ஆகத்ய காளிந்த்யா: க்ருஷ்ண பாவனா:
ஸமவேதா ஜகு: க்ருஷ்ணம் தத்-ஆகமன-காங்க்ஷிதா:
புன:—மீண்டும்; புளினம்—கரைக்கு; ஆகத்ய—வந்து; காளிந்த்யா:—யமுனை நதியின்; க்ருஷ்ண-பாவனா:—கிருஷ்ணரை தியானித்து; ஸமவேதா:—ஒன்றாக இணைந்து; ஜகு:—அவர்கள் பாடினர்; க்ருஷ்ணம்—கிருஷ்ணரைப்பற்றி; தத்-ஆகமன—அவரது வருகையினை; காங்க்ஷிதா:—ஆர்வமுடன் விரும்பி.
கோபியர்கள் மீண்டும் காளிந்தி நதிக்கரைக்கு வந்தனர். கிருஷ்ணரைத் தியானித்து அவர் திரும்பிவருவார் என்று ஆர்வமுடன் நம்பிக்கை கொண்டு அவரைப் பற்றிப் பாடுவதற்காக அவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து கீழே அமர்ந்தனர்.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “கோபியர்கள் கிருஷ்ணரைத் தேடுதல்” எனும் தலைப்பை கொண்ட முப்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.