அத்தியாயம் – 28
கிருஷ்ணர் வருணனின் பிடிவிலிருந்து
நந்த மகாராஜாவை விடுவித்தல்
பதம் 10.28.1 : ஸ்ரீ பாதராயணி கூறினார்: ஏகாதசியன்று விரதமிருந்து பகவான் ஜனார்தனனை வழிபட்ட நந்தமகாராஜா மறுநாள் துவாதசியன்று காளிந்தி நதியில் நீராடுவதற்காக இறங்கினார்.
பதம் 10.28.2 : அசுப நேரத்தில் நந்தமகாராஜா நீராடிய காரணத்தினால் வருணனின் சேவகனான ஓர் அசுரன் அவரைப் பிடித்துவந்து தன் எஜமானன் முன்பு நிறுத்தினான்.
பதம் 10.28.3 : நந்தமகாராஜாவைக் காணாத ஆயர்கள் “ஓ, கிருஷ்ணா! ஓ, ராமா!” என்று பெருங்குரலெடுத்துக் கூவி அழைத்ததைக் கேட்ட பகவான் கிருஷ்ணர் தமது தந்தை வருணனால் சிறை செய்யப்பட்டுள்ளார். என்பதைப் புரிந்துகொண்டார். அதன்பின் தமது பக்தர்களின் அச்சத்தைக் கெடுக்கும் எல்லாம் வல்ல பகவான் வருணதேவனின் அவைக்களத்திற்குச் சென்றார்.
பதம் 10.28.4 : பகவான் ரிஷிகேஸர் அங்கே வந்ததைக் கண்ட வருண தேவன் அவரை விரிவாக வழிபட்டார். பகவானைத் தரிசித்ததினால் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்த வருணன் பின்வருமாறு கூறினார்.
பதம் 10.28.5 : ஸ்ரீ வருணர் கூறினார்: எனது உடல் தனது இயக்கத்தினை இப்போது நிறைவு செய்துவிட்டது. ஓ, பகவானே, எனது வாழ்க்கை லட்சியம் உண்மையில் ஈடேறிவிட்டது. ஓ, முழுமுதற் கடவுளே! உமது தாமரைத் திருவடிகளை ஏற்றுக்கொண்டவர்களால் மட்டுமே உலகியல் வாழ்க்கைப் பாதையினைக் கடந்து செல்ல முடியும்.
பதம் 10.28.6 : இவ்வுலகின் படைப்பிற்கு உதவும் மாயாசக்தியின் கறையே படியாத முழுமுதற்கடவுளே, முழுமெய்ப்பொருளே, பரமாத்மாவே! உமக்கு எனது வந்தனங்கள் உரித்தாகுக.
பதம் 10.28.7 : இங்கு அமர்ந்திருக்கும் தங்கள் தந்தையை, தனது கடமை என்ன வென்று அறியாத மதியற்ற எனது சேவகன் அறியாமையில் இங்கே அழைத்து வந்துவிட்டான். இதற்காக எங்களை மன்னித்தருள வேண்டும்.
பதம் 10.28.8 : ஓ, கிருஷ்ணா, ஓ, எல்லாவற்றையும் காண்பவரே, உமது கருணையினை எனக்கும் கூட அருள்வீராக. உமது தந்தையின் மீது நீர் பேரன்புடையவர். ஆதலினால் அவரை அருள்கூர்ந்து அழைத்துச் செல்வீராக.
பதம் 10.28.9 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு வருணனால் திருப்தி செய்யப்பட்ட முழுமுதற் கடவுளும், ஆள்பவர்கள் அனைவரின் பரம ஆளுனரான ஸ்ரீ கிருஷ்ணர் தமது தந்தையை அழைத்துக் கொண்டு தமது இல்லம் திரும்பினார். அவர்களைக் கண்டு அவரது உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பதம் 10.28.10 : சமுத்திரலோகத்தின் ஆதிபத்தியத் தேவரான வருணனின் பெரும் வளத்தினை முதன்முதலில் கண்டும், வருணனும் அவரது பணியாட்களும் கிருஷ்ணரை மிக்கப் பணிவுடன் வணங்கியதைக் கண்டும் நந்த மகாராஜா பெரும் ஆச்சரியத்தில் மூழ்கினார். அவர் இந்த அதிசயத்தினைத் தமது சக ஆயர்களுக்கு விளக்கிக் கூறினார்.
பதம் 10.28.11 : (வருணனிடம் கிருஷ்ணர் புரிந்த லீலையைக் கேட்டு) ஆயர்கள் கிருஷ்ணர் நிச்சயம் பரமபுருஷ பகவானாகத்தான் இருத்தல் வேண்டும் என்று கருதினர். ஓ, மன்னனே, அவர்களது மனங்கள் ஆர்வத்தால் நிரம்பி வழிந்தன. அவர்கள் “பரம புருஷ பகவான் தமது உன்னத உறைவிடத்தினை நமக்கு அருள்வாரா?” என்று எண்ணினர்.
பதம் 10.28.12 : எல்லாவற்றையும் காணவல்லவர் ஆதலினால் முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணர் ஆயர்கள் தம் மனதில் எண்ணியதை அறிந்து கொண்டார். அவர்களது விருப்பத்தினை நிறைவேற்றுவதின் மூலம் அவர்களுக்குக் கருணைபுரிய விரும்பிய பகவான் பின்வருமாறு எண்ணினார்.
பதம் 10.28.13 : (பகவான் கிருஷ்ணர் எண்ணினார்) இவ்வுலகிலுள்ள மக்கள் தங்களது உயர்ந்த மற்றும் தாழ்ந்த இலக்குகளுக்கு இடையிலேயே அலைந்துகொண்டிருக்கின்றனர். இவ்விலக்குகளை அவர்கள் விருப்பித்திற்கேற்பச் செய்யும் செயல்களின் மூலமும் ஞானமின்மையாலுமே எய்தப் பெறுகின்றனர். இவ்வாறு மக்கள் தங்கள் உண்மையான இலக்கு எதுவென்று அறியாதிருக்கின்றனர்.
பதம் 10.28.14 : இவ்வாறு ஆழ்ந்து சிந்தித்து பெருங்கருணையுடைய முழுமுதற் கடவுள் பகவான் ஹரி, பெளதிக இருளுக்கு மேலேயுள்ள தமது உறைவிடத்தை ஆயர்களுக்குக் காட்டியருளினார்.
பதம் 10.28.15 : பகவான் கிருஷ்ணர் அளவற்றதும், உணர்வுடையதும், நித்தியமானதுமான அழிவற்ற ஆன்மீக ஜோதியைக் காட்டியருளினார். முனிவர்களின் உணர்வு ஜட இயற்கைக் குணங்களிலிருந்து விடுதலை பெறும் பொழுது, சமாதி நிலையில் அவர்கள் அந்த ஆன்மீகத் தோற்றத்தினைத் தரிசிக்கின்றனர்.
பதம் 10.28.16 : பிரம்மரதம் என்னும் குளத்திற்கு ஆயர்களை பகவான் கிருஷ்ணர் அழைத்துவந்து, அதில் மூழ்கி அவர்களை மீண்டும் வெளிவரச் செய்தார். ஆயர்கள் முழுமெய்ப்பொருளின் உலகினைப் பார்த்த இந்த இடத்தில் இருந்துதான் அக்ரூரரும் ஆன்மீக உலகினைப் பார்த்தார்.
பதம் 10.28.17 : நந்தமகாராஜாவும், ஆயர்களும் உன்னத உறைவிடத்தினைத் தரிசித்தவுடன் பரமானந்தம் எய்தினர். அங்கே கிருஷ்ணர் வீற்றிருக்க அவரை வேதங்களின் வடிவங்கள் போற்றித் துதிப்பதைக் கண்டு அவர்கள் மிகுந்த வியப்பெய்தினர்.