அத்தியாயம் – 25
பகவான் கிருஷ்ணர் கோவர்தன கிரியைத் தூக்குதல்
பதம் 10.25.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பார்ந்த பரீக்ஷித்து மன்னனே, தனக்குரிய வேள்வி தடைபட்டது கண்ட இந்திரன், கிருஷ்ணரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்ட நந்த மகாராஜாவிடமும், ஆயர்களிடமும் பெருஞ்சீற்றம் கொண்டான்.
பதம் 10.25.2 : சினம் கொண்ட இந்திரன் இப்பிரபஞ்சத்தையே அழிக்கவல்ல ‘சர்மவர்தகம்’ என்னும் மேகக் கூட்டத்தினை அனுப்பினான். தன்னை பரம நெறியாளராகக் கருதிக் கொண்டு அவன் பின்வருமாறு கூறினான்.
பதம் 10.25.3 : (இந்திரன் கூறினான்:) இந்த ஆயர்குலத்தினரைச் சற்றுப் பாருங்கள், இவர்கள் தங்கள் வளத்தினால் மிகவும் மதிமயக்கம் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சாதாரண மனிதனான கிருஷ்ணனைச் சரணடைந்ததின் மூலம் தேவர்களிடத்தில் குற்றமிழைத்திருக்கின்றனர்.
பதம் 10.25.4 : அவர்கள் கிருஷ்ணரைச் சரண் புகுந்தது, உன்னத ஆத்ம ஞானத்தைப் புறக்கணித்துவிட்டு அதற்குப் பதிலாகப் பலன் தரும் வேள்விச் சடங்குகள் என்னும் படகுகளின் மூலம் பௌதிக வாழ்க்கை என்னும் பெருங்கடலைக் கடக்க எண்ணும் மனிதர்களின் மதியற்ற முயற்சியைப் போன்றதாகும்.
பதம் 10.25.5 : தன்னைப் பெரிய அறிஞனாக எண்ணும் மதியற்ற, செருக்குடைய, அதிகம் பேசுகின்ற மானுடச் சிறுவனான கிருஷ்ணரைச் சரணடைந்ததின் மூலம் இந்த ஆயர்கள் எனக்கு எதிராகச் செயல்பட்டுள்ளனர்.
பதம் 10.25.6 : (அழிவு செய்யும் மேகங்களைப் பார்த்து இந்திரன் கூறினான்) இம் மனிதர்களிடம் உள்ள செல்வமே இவர்களைக் கர்வமும் பெருமையும் கொள்ளச் செய்கிறது. அவர்களின் செருக்கு கிருஷ்ணரால் தாங்கப்படுகிறது. நீங்கள் சென்று அவர்களின் ஆணவத்தையும், விலங்கினங்களையும் அழிப்பீராக.
பதம் 10.25.7 : நந்த மகாராஜாவின் ஆயர்குலத்தினை அழிப்பதற்காக எனது ஐராவதம் என்னும் யானையின் மீது அமர்ந்து கொண்டு, வேகமாக வீசும் வாயுதேவர்களுடன் இணைந்து நான் உங்களைப் பின் தொடர்ந்து விரஜத்திற்கு வருவேன்.
பதம் 10.25.8 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பிரபஞ்ச அழிவிற்கான மேகங்கள் இந்திரனின் கட்டளையினால் காலம் அல்லாத காலத்தில் தங்களது கட்டிலிருந்து விடுதலைபெற்று நந்த மகாராஜாவின் கோகுலத்தில் மழை பொழியச் சென்றன. அங்கே அவை தமது சக்திகளையெல்லாம் ஒருங்கு திரட்டிக் கனமழை பெய்து அங்குள்ளவர்களைத் துன்புறுத்தின.
பதம் 10.25.9 : அச்சந்தரும் வாயுதேவர்களால் முன்னோக்கிச் செலுத்தப்பட்டு, மின்னல் அம்புகளுடனும், பெருத்த இடி ஓசையுடனும் அம்மேகங்கள் ஆலங்கட்டி மழை பெய்தன.
பதம் 10.25.10 : பெருந்தூண்களைப் போன்ற மழைத்துளிகளை அம்மேகங்கள் பொழிந்தன. பூமி முழுவதும் வெள்ளக்காடாகியது. உயர்ந்த பகுதி தாழ்ந்த பகுதி என்று பிரித்துக்காண முடியாத அளவிற்கு பூமி தரைமட்டமாகியது.
பதம் 10.25.11 : பலத்த காற்றினாலும், பெருமழையினாலும் பசுக்களும், பிற விலங்கினங்களும் நடு நடுங்கின. ஆயர்குல ஆண்களும், பெண்களும் குளிரினால் துன்புற்றனர். அனைவரும் அடைக்கலம் வேண்டி பகவான் கோவிந்தனிடம் சென்றனர்.
பதம் 10.25.12 : கனமழை தந்த துன்பத்தினால் நடுங்கியபடியும் தமது உடல்களினால் தலைகளையும் கன்றுகளையும் மறைத்தபடியும் பசுக்கள் முழு முதற்கடவுளின் தாமரைத் திருவடிகளை அணுகின.
பதம் 10.25.13 : (ஆயர்குலப் பெண்களும் ஆண்களும் பகவானிடம் கூறினர்:) கிருஷ்ணா, கிருஷ்ணா, ஓ, பாக்கியவனே, இந்திரனின் தண்டனையிலிருந்து பசுக்களைக் காத்தருள்வீராக! ஒ, பக்தர்களிடம் பாசமுடையவரே, எம்மையும் காத்தருள்வீராக.
பதம் 10.25.14 : தமது கோகுலவாசிகள் ஆலங்கட்டி மழையினாலும், பெருஞ்சூறைக் காற்றினாலும் உணர்விழந்த நிலைக்கு வந்திருப்பதைக் கண்ட பகவான் ஹரி “இது சினங்கொண்ட இந்திரனின் வேலையே” என்று அறிந்து கொண்டார்.
பதம் 10.25.15 : (ஸ்ரீ கிருஷ்ணர் தமக்குள் கூறிக்கொண்டார்:) அவனுக்குரிய வேள்வியை நாம் தடுத்து நிறுத்தியதால் இந்திரன் வழக்கத்திற்கு மாறாகப் பலத்த காற்றுடன் கூடிய, துன்பம் விளைவிக்கவல்ல மழைபெய்யச் செய்கின்றான்.
பதம் 10.25.16 : இந்திரனால் செய்யப்பட்ட இந்த இடையூறுக்கு எனது யோக சக்தியால் நான் முற்றிலும் எதிர் நடவடிக்கை மேற்கொள்வேன். தமது செல்வத்தினால் இந்திரன் போன்ற தேவர்கள் கர்வமுடையவர்களாக இருக்கின்றனர். மடமையின் காரணமாக அவர்கள் தம்மை இப்பிரபஞ்சத்தின் தலைவனாகக் கருதுகின்றனர். இவர்களது அறியாமையினை நான் இப்போது அழிப்பேன்.
பதம் 10.25.17 : தேவர்கள் சத்துவ குணமுடையவர்களாக இருப்பதினால் தன்னையே தலைவனாகக் கருதும் அவர்களது ஆணவமானது அவர்களை நிச்சயம் பாதித்துவிடக் கூடாது. அவ்வாறு சத்துவகுணம் இழந்து, ஆணவம் மட்டுமே உடையவர்களாக இருப்பவர்களெனில், அவர்களது ஆணவத்தை அழித்து அவர்களைக் காப்பதே எனது நோக்கமாகும்.
பதம் 10.25.18 : இந்த ஆயர்குலம் எனது சொந்தக்குடும்பம் ஆதலினாலும், ஆயர்கள் என்னை அடைக்கலம் கொண்டு என்னையே தங்கள் தலைவனாகவும் ஏற்றுக்கொண்டிருப்பதினாலும் எனது யோக சக்தியால் நான் ஆயர்குலத்தைப் பாதுகாப்பேன். மேலும் எனது பக்தர்களைக் காப்பதாக நான் விரதம் மேற்கொண்டிருக்கின்றேன்.
பதம் 10.25.19 : இவ்வாறு கூறிய விஷ்ணுவான பகவான் கிருஷ்ணர் ஒரு குழந்தை காளான்குடையை மிக எளிதாகத் தூக்குவது போல் கோவர்தனகிரியை ஒரே கரத்தில் தூக்கினார்.
பதம் 10.25.20 : பிறகு பகவான் ஆயர்குலத்தினரைப் பார்த்துக் கூறினார்: ஓ அன்னையே, ஓ தந்தையே, ஓ, விரஜவாசிகளே, நீங்கள் விரும்பினால் உங்கள் பசுக்களுடன் இம்மலையின் கீழே வாருங்கள்.
பதம் 10.25.21 : எனது கரத்திலிருந்து இந்த மலை கீழே விழுந்து விடும் என்று நீங்கள் அஞ்ச வேண்டாம். இக்காற்றுக்கும், மழைக்கும் அஞ்ச வேண்டாம். இத்துன்பங்களிலிருந்து உங்களை மீட்பதற்கான ஏற்பாடு ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றது.
பதம் 10.25.22 : பகவான் கிருஷ்ணரால் அவர்களது மனம் அமைதிப்படுத்தப்பட்டவுடன் அவர்கள் அனைவரும் மலையின் கீழே வந்தனர். அங்கே அவர்கள் தங்கள் பசுக்கள், வண்டிகள், பணியாட்கள், புரோகிதர்கள், மற்றும் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் போதிய இடம் இருப்பதைக் கண்டனர்.
பதம் 10.25.23 : பகவான் கிருஷ்ணர் பசிதாகம் மறந்து, எல்லாவகையான இன்பங்களையும் துறந்து விரஜ மக்கள் பார்த்துக் கொண்டிருக்க சிறிதும் அசையாது ஏழுநாட்கள் அந்த மலையைத் தாங்கிக் கொண்டு நின்றார்.
பதம் 10.25.24 : பகவான் கிருஷ்ணர் வெளிப்படுத்திய யோக சக்தியைக் கண்ட தேவேந்திரன் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானான். ஆணவம் என்னும் மாளிகையிலிருந்து அவன் கீழே வீழ்ந்தான். அவனது நோக்கங்கள் நொறுங்கிப்போயின, அவன் மேகங்களுக்கு மழையை நிறுத்திக் கொள்ளுமாறு கட்டளையிட்டான்.
பதம் 10.25.25 : உக்கிரமான மழையும் காற்றும் நின்று, மேகங்கள் இன்றி வானம் தெளிவாகி, சூரியனும் உதித்ததைக்கண்ட கோவர்தன கிரிதாரியான பகவான் கிருஷ்ணர் ஆயர்குலத்தாரிடம் பின்வருமாறு கூறினார்.
பதம் 10.25.26 : (பகவான் கிருஷ்ணர் கூறினார்:) அன்பிற்குரிய ஆயர்குலத்தோரே! உங்கள் மனைவியர், மக்கள் மற்றும் செல்வங்களுடன் இப்போது நீங்கள் வெளியேறுவீர்களாக. காற்றும் மழையும் நின்றுவிட்டன. நதிகளில் வெள்ளமும் வடிந்துவிட்டது.
பதம் 10.25.27 : தங்கள் பசுக்களுடனும், வண்டியில் ஏற்றப்பட்ட உபகரணங்களுடனும் ஆயர்குல ஆண்கள் வெளியேறினர். பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் மெதுவாக அவர்களைப் பின் தொடர்ந்து சென்றனர்.
பதம் 10.25.28 : எல்லா உயிரினங்களும் பார்த்துக் கொண்டிருக்க, முழுமுதற் கடவுள் முன்பிருந்தாற்போன்றே மலையினை அதன் இடத்தில் மீண்டும் வைத்தார்.
பதம் 10.25.29 : விருந்தாவனத்தைச் சேர்ந்த அனைவரும் உணர்ச்சிப் பெருக்கினால் ஆனந்தக் கூத்தாடினர். ஸ்ரீ கிருஷ்ணருடன் அவர்களுக்குரிய தொடர்பிற்கேற்ப அவர்கள் அவரை வாழ்த்தினர். சிலர் அவரை மார்புறத் தழுவிக் கொண்டனர், வேறு சிலர் காலில் விழுந்து வணங்கினர். கோபியர்கள் தயிருடன் நீர் கலந்து அவருக்குப் பருகக் கொடுத்தனர். மேலும் அவர்கள் அவர்மீது அட்சதைகள் போட்டுத் தங்கள் ஆசிகளை வழங்கினர்.
பதம் 10.25.30 : அன்னை யசோதையும், அன்னை ரோகிணியும், நந்த மகாராஜாவும், பலத்திற்கு சிறந்த பலராமரும் கிருஷ்ணரைத் தங்கள் மார்புடன் தழுவிக் கொண்டனர். பாசத்தினால் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் தங்கள் ஆசிகளை அவருக்கு வழங்கினார்கள்.
பதம் 10.25.31 : ஓ, மன்னனே! சொர்க்கத்தில் இருந்து தேவர்களும், சித்தர்களும், சாகித்யர்களும், கந்தர்வர்களும், சாரணர்களும், பகவான் கிருஷ்ணரின் கீர்த்திகளை இசைத்தபடி மிக்க மகிழ்ச்சியுடன் மலர்மாரி பொழிந்தனர்.
பதம் 10.25.32 : அன்பிற்குரிய பரீக்ஷித்து மன்னனே, வானிலிருந்து தேவர்கள் தங்கள் சங்குகளையும், துந்துபிகளையும் முழங்கினர். தும்புருவின் தலைமையின் கீழ் சிறந்த கந்தர்வர்கள் கீதங்கள் பாடினர்.
பதம் 10.25.33 : தமது அன்பிற்குரிய ஆயர்குலச் சிறுவர்கள் சூழ்ந்து வர, பகவான் பலராமருடன் சேர்ந்து கொண்டு கிருஷ்ணர் பின்னர் தமது பசுக்களை மேய்க்கும் வழக்கமான இடத்திற்குச் சென்றார். ஆயர்குல இளம் பெண்கள் தங்கள் இதயந்தொட்ட கிருஷ்ணர் கோவர்தனகிரியைத் தூக்கியது பற்றியும் அவரது பிற செய்கைகளைப் பற்றியும் பாடியபடி மிக்க மகிழ்ச்சியுடன் தங்கள் இல்லம் திரும்பினர்.