அத்தியாயம் – 22
கிருஷ்ணர் இளங்கோபியர்களின் ஆடைகளைத் திருடுதல்
பதம் 10.22.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: குளிர்காலத்தின் முதல் மாதத்தில் (மார்கழி மாதம்) கோகுலத்தில் உள்ள மணமாகாத குமரிப் பெண்கள் காத்யாயனீ தேவியை விரதமிருந்து வழிபடுவர். அம்மாதம் முழுவதும் அவர்கள் மசாலா சேர்க்காத ஹவிஷ்யான்னத்தை மட்டுமே உண்பர்.
பதங்கள் 10.22.2 – 10.22.3 : அன்பிற்குரிய மன்னா, அருணோதயத்திற்குச் சிறிது முன்பு காலைக் கருக்கலில் யமுனை நதியில் நீராடி கோபியர்கள் நதிக்கரையில் மண்ணைக் கொண்டு துர்காதேவியின் பிரதிமை ஒன்றைச் செய்தனர். பிறகு அவர்கள் அத்தேவியை எளிமையும் வளமும் நிறைந்த சந்தனம், பழங்கள், வெற்றிலை பாக்கு, இளந்தளிர்கள், நறுமணமலர் மாலைகள், போன்றவற்றை அர்ப்பணித்து, விளக்குகள் ஏற்றி, தூப தீபங்கள் காட்டி வழிபட்டனர்.
பதம் 10.22.4 : பின்வரும் மந்திரத்தை ஓதி கன்னிப்பெண்கள் அனைவரும் அத்தேவியை வழிபட்டனர்: “ஓ, காத்யாயனீ தேவியே, ஒ, பகவானின் மகாசக்தியே, ஓ, மகா யோக சக்தி உடையவளே, ஓ, எல்லாம் வல்ல ஈஸ்வரியே, நந்த மகாராஜாவின் மைந்தனை எனது மணாளனாக்குவாயாக. உனக்கு எனது வந்தனங்கள். “
பதம் 10.22.5 : இவ்வாறு அக்குமரிப் பெண்கள் ஒரு மாத காலம் தங்கள் விரதத்தை அனுஷ்டித்து, பத்ரகாளியை முறையாக வழிபட்டனர். அவர்கள், “நந்த புத்திரர் எனக்குக் கணவராக வேண்டும்” என்று தியானித்தபடி, கிருஷ்ணரில் தங்கள் மனங்களை மூழ்கடித்தனர்.
பதம் 10.22.6 : அவர்கள் அனைவரும் காலைக்கருக்கலில் எழுந்து ஒவ்வொரு பெண்ணையும் பெயர்சொல்லி அழைத்து, ஒருவர் கையை மற்றவர் பற்றிக் கொண்டு கிருஷ்ணரின் கீர்த்திகளை உரத்த குரலில் பாடிக்கொண்டே காளிந்தி நதிக்கு நீராடச் செல்வர்.
பதம் 10.22.7 : ஒருநாள் அவர்கள் நதிக்கரைக்கு வந்து முன்புபோல் ஆடைகளைக் களைந்து கீழே வைத்து விட்டு கிருஷ்ணரின் கீர்த்திகளைப் பாடியபடியே நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
பதம் 10.22.8 : முழுமுதற்கடவுளும், யோக ஸித்திகளின் தலைவர்களுக்கெல்லாம் தலைவருமான பகவான் கிருஷ்ணர், கோபியர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை நன்கறிந்து கொண்டார். அதனால் அவர் கோபியர்களின் முயற்சிக்குரிய பலன்களை அவர்களுக்கு அளிக்க விரும்பி, தமது இளம் நண்பர்கள் உடன் வர அந்த இடத்திற்குச் சென்றார்.
பதம் 10.22.9 : பெண்களின் ஆடைகளை எடுத்துக்கொண்டு அவர் விரைந்து ஒரு கதம்ப மரத்தின் மீது ஏறிக் கொண்டார். பிறகு அவர் சத்தம் போட்டுப் பெரிதாகச் சிரித்தார். அவரது நண்பர்களும் அவருடன் சேர்ந்து சிரித்தனர். அவர் அப்பெண்களிடம் கேலி மொழிகள் பேசலானார்.
பதம் 10.22.10 : (பகவான் கிருஷ்ணர் கூறினார்:) அன்பார்ந்த பெண்களே, நீங்கள் விரும்பினால் இங்கே வந்து உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விரதம் இருந்து களைத்துப் போயிருப்பதால் நான் உங்களிடம் கேலி பேசவில்லை, உண்மையைக் கூறுகிறேன்.
பதம் 10.22.11 : இதற்கு முன்பு நான் ஒரு போதும் பொய்யே பேசியதில்லை. இதனை இச்சிறுவர்கள் நன்கறிவார்கள். ஓ, மெல்லிய இடையுடைய பெண்களே! நீங்கள் அனைவரும் தனித் தனியாகவோ அல்லது சேர்ந்து வந்தோ உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
பதம் 10.22.12 : கிருஷ்ணர் தம்மை வேடிக்கை செய்ததைக் கண்ட கோபியர்கள் அவர் மீதான காதலில் முற்றிலும் ஆழ்ந்து போயினர். தங்களது கவலைக்கிடையிலும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கேலிகள் பேசத் தொடங்கினர். ஆயினும் அவர்கள் நீரை விட்டு வெளியே வரவில்லை.
பதம் 10.22.13 : கோபியர்களிடம் கிருஷ்ணர் இவ்வாறு கேலி மொழிகள் பேசியவுடன் கோபியர்களின் மனங்கள் முற்றிலும் அவரது வார்த்தைகளினால் ஈர்க்கப்பட்டன. கழுத்துவரை குளிர்ந்த ஆற்று நீரில் மூழ்கியிருந்ததினால் அவர்கள் நடுங்கத் தொடங்கினர். அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறலுற்றனர்.
பதம் 10.22.14 : (கோபியர்கள் கூறினர்:) இனிய கிருஷ்ணரே, அநீதி செய்யாதே! நீ மரியாதைக்குரிய நந்த மகாராஜாவின் மைந்தன் என்பதும், விரஜம் முழுவதும் கீர்த்தி பெற்றவன் என்பதுடன் எங்களுக்கும் நீ இனிமை வாய்ந்தவனாவாய். எங்கள் ஆடைகளை எங்களிடம் திருப்பிக் கொடுத்துவிடு. நாங்கள் குளிரினால் நடுங்குகின்றோம்.
பதம் 10.22.15 : ஒ, சியாம சுந்தரா! நாங்கள் உனது அடிமைகள். நீ என்ன சொன்னாலும், அதனை நாங்கள் செய்வோம். அதனால் எங்கள் ஆடைகளைக் கொடுத்து விடு. தர்மம் என்னவென்று நீ நன்கறிவாய். அவ்வாறு நீ திருப்பித்தரவில்லையென்றால் மன்னரிடம் நாங்கள் புகார் செய்வோம்.
பதம் 10.22.16 : முழுமுதற் கடவுள் கூறினார்: உண்மையிலேயே நீங்கள் எனது அடிமைகள் என்றால், எனது சொல்லைக் கேட்பவர்கள் என்றால் ஒளி பொருந்திய உமது புன்னகையுடன் வந்து ஒவ்வொருவரும் உங்கள் ஆடைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். நான் கூறியபடி நீங்கள் நடக்காவிட்டால் பிறகு உங்கள் ஆடைகளை நான் திருப்பித் தரமாட்டேன். மேலும் அரசரின் கோபம் என்னை என்ன செய்யும்?
பதம் 10.22.17 : பிறகு குளிரினால் வருந்திய கோபியர்கள் அனைவரும் பிறப்பிடத்தினைக் கைகளால் மறைத்தபடியே நீரினின்று வெளியே வந்தனர்.
பதம் 10.22.18 : தர்மசங்கடமான நிலைக்குக் கோபியர்கள் ஆளாகியிருப்பதைக் கண்ட பகவான், அவர்கள் தம் மீது வைத்திருக்கும் தூய காதலை எண்ணித் திருப்தியடைந்தார். அவர்களது ஆடைகளைத் தமது தோள்களில் போட்டுக் கொண்டு புன்னகை புரிந்தவாறே பகவான் அவர்களிடம் அன்பொழுகப் பேசலானார்.
பதம் 10.22.19 : (பகவான் கிருஷ்ணர் கூறினார்) உங்கள் விரதத்தினை நிறைவேற்றும் பொழுது நீங்கள் பிறந்த மேனியராக நீராடியுள்ளீர். இது தேவர்களுக்கு எதிராக இழைத்த பெருங்குற்றமாகும். உங்கள் பாவத்திற்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் கரங்களைக் குவித்துத் தலைக்கு மேலே உயர்த்தி வந்தனம் செய்தல் வேண்டும். பிறகு உங்கள் பாவாடைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
பதம் 10.22.20 : இதனால் விருந்தாவனத்தைச் சேர்ந்த கன்னிப்பெண்கள், ஆடையின்றி ஆற்றில் நீராடியதனால் தாங்கள் தங்கள் விரதத்திலிருந்து தவறிவிட்டோமோவென்று கருதி பகவான் அச்யுதன் சொன்னதற்கு ஒப்புக்கொண்டனர். ஆயினும், தங்கள் விரதத்தினை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்ய வேண்டும் என்று விரும்பிய அவர்கள், பகவான் கிருஷ்ணரே புண்ணியச் செயல்கள் அனைத்திற்கும் இறுதிப் பலனாக இருப்பவர் என்று, அவர்கள் தமது பாவங்கள் நீங்க வேண்டுமென்பதற்காக அவருக்குத் தங்கள் வந்தனங்களை அர்ப்பணித்தனர்.
பதம் 10.22.21 : அவர்கள் தலை வணங்கியதைக் கண்ட முழுமுதற் கடவுளான தேவகி மைந்தன், அவர்கள்மீது கருணை கொண்டும், அவர்கள் செயலில் திருப்தியுற்றும், அவர்களது ஆடைகளை மீண்டும் அவர்களிடத்து வழங்கினார்.
பதம் 10.22.22 : கோபியர்கள் முற்றிலும் ஏமாற்றப்பட்டும், நாணம் அழிக்கப்பட்டும், கேலி செய்யப்பட்டும், விளையாட்டுப் பொம்மைகள் போல் ஆட்டுவிக்கப்பட்டும், அவர்களது ஆடைகள் திருடப்பட்டும் கூட ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவர்கள் பகைமை பாராட்டவில்லை. மாறாகத் தங்கள் பிரியமானவரிடம் சேர்ந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தினைப் பெற்றமைக்காக அவர்கள் பெரிதும் மனம் மகிழ்ந்தனர்.
பதம் 10.22.23 : கோபியர்கள் தங்கள் அன்பிற்குரிய கிருஷ்ணருடன் கொண்ட தொடர்பினால் மதிமயங்கி இருந்தனர். அவரால் அவர்கள் முற்றிலும் ஈர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் தங்கள் ஆடைகளை அணிந்து கொண்ட போதிலும் அசையாது அப்படியே நின்றனர். அவர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயே அவரை நாணத்துடன் பார்த்துக் கொண்டு நின்றனர்.
பதம் 10.22.24 : தங்கள் விரதத்தினை நிறைவேற்றுவதில் கோபியர்களுக்கிருந்த உறுதியினைப் பரமபுருஷ பகவான் நன்கு உணர்ந்துகொண்டார். அப்பெண்கள் தமது தாமரைத் திருவடிகளைத் தொடுவதற்கு விருப்பங்கொண்டதையும் கூடப் பகவான் நன்கறிவார். அதனால் பகவான் தாமோதரனாகிய கிருஷ்ணர் அவர்களிடம் பின்வருமாறு கூறலுற்றார்.
பதம் 10.22.25 : (பகவான் கிருஷ்ணர் கூறினார்:) ஓ, புனிதமுடைய பெண்களே! உங்கள் விரதத்தின் நோக்கம் என்னை வழிபடுவதே என்பதை நான் நன்கறிவேன். உங்களது அந்த எண்ணம் என்னால் அங்கீகரிக்கப்படுகிறது. உண்மையில் அது கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
பதம் 10.22.26 : சூரிய வெய்யிலில் காய்ந்து, சமைக்கப்பட்ட தானியங்கள் மீண்டும் எவ்வாறு முளைப்பதில்லையோ அதுபோல் என்னிடத்தில் தமது மனங்களை நிலைநிறுத்தியவர்களின் விருப்பம் அவர்களை ஒருபோதும் புலனுகர்ச்சிக்கான உலகியல் காமத்திற்கு இட்டுச் செல்வதில்லை.
பதம் 10.22.27 : இப்போது இங்கிருந்து விரஜத்திற்குச் செல்வீராக. உங்களது எண்ணம் நிறைவேறிவிட்டது. எனது துணையுடன் இனிவரும் இரவுகளை நீங்கள் அனுபவித்து மகிழலாம். ஓ, தூயவர்களே, இதுதானே நீங்கள் காத்யாயனி தேவியை வழிபட்டு விரதம் இருந்ததின் நோக்கம்.
பதம் 10.22.28 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு தமது விருப்பம் நிறைவேறப்பட்ட அக்கன்னிப் பெண்கள், முழுமுதற்கடவுளால் உபதேசிக்கப்பட்டவுடன், அவரது தாமரைத் திருவடிகளைத் தியானித்து அவரைப் பிரிய மனமின்றி மிகுந்த சிரமத்துடன் விரஜத்திற்குத் திரும்பிச் சென்றனர்.
பதம் 10.22.29 : சிறிது நேரத்திற்குப் பிறகு தேவகீ மைந்தரான பகவான் கிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமருடன் சேர்ந்து, ஆயர்குல நண்பர்கள் உடன் வர பசுக்களை மேய்த்துக்கொண்டு விருந்தாவனத்திலிருந்து வெகு தூரத்திற்குச் சென்றார்.
பதம் 10.22.30 : சூரியனின் வெம்மை மிகவும் கடுமையாக இருந்தது. மரங்களெல்லாம் நிழல் தரும் குடைகளாக விளங்குவதைப் பகவான் கிருஷ்ணர் கண்டார். அதனால் அவர் தமது ஆயர் குல நண்பர்களிடம் பின்வருமாறு கூறலானார்.
பதங்கள் 10.22.31 – 10.22.32 : (பகவான் கிருஷ்ணர் கூறினார்:) ஓ, ஸ்தோக கிருஷ்ணா, அம்சு, ஸ்ரீதாமா, சுபலா, அர்ஜுனா, விருஷபா, ஒஜஸ்வீ, தேவப்பிரஸ்தா, வரூதபா, மிகுந்த பாக்கியம் செய்த இம்மரங்களைப் பாருங்கள், அவற்றின் வாழ்க்கை முற்றிலும் பிறர் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது. காற்று, மழை, வெய்யில், பனி போன்றவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இவை அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
பதம் 10.22.33 : இம்மரங்கள் அனைத்து உயிர்களையும் எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதைப் பாருங்கள்! இவற்றின் பிறப்பு வெற்றிகரமானதாகும். இவற்றின் தன்மையோ மகாத்மாக்களைப் போன்றதாகும். யாரேனும் ஒருவன் மரத்திடம் எதையாவது கேட்டு ஏமாற்றத்துடன் ஒருபோதும் திரும்பிச் செல்வதில்லை.
பதம் 10.22.34 : இம்மரங்கள் ஒருவனின் விருப்பத்தைத் தமது இலைகள், மலர்கள், பழங்கள், நிழல், வேர்கள், பட்டைகள், விறகு, நறுமணம், சாறு, நார் மற்றும் இளந்தளிர்களினால் பூர்த்தி செய்கின்றன.
பதம் 10.22.35 : ஒவ்வோர் உயிர்வாழியும் தமது உயிர், செல்வம், புத்தி, வார்த்தைகள் போன்றவற்றினால் பிறருக்கு நன்மை செய்வதைத் தமது கடமையாகக் கொள்ள வேண்டும்.
பதம் 10.22.36 : தமது ஏராளமான தளிர்கள், பழங்கள், மலர்கள், இலைகள் போன்றவற்றின் பாரந்தாங்காது நிலத்தைத் தொடுவதுபோல் வளைந்திருந்த கிளைகளையுடைய மரக்கூட்டங்களுக்கு நடுவே நடந்து பகவான் கிருஷ்ணர் யமுனை நதியினை அடைந்தார்.
பதம் 10.22.37 : ஆயர்குலச் சிறுவர்கள் தெளிவும், குளிர்ச்சியும் நலமுமிக்க யமுனை நதியின் நீரினை பசுக்கள் பருகுமாறு செய்தனர். ஓ, பரீக்ஷித்து மன்னனே, ஆயர்குலச் சிறுவர்களும் தங்கள் ஆசை தீர யமுனையின் இன்சுவை நீரினைப் பருகினர்.
பதம் 10.22.38 : ஓ, மன்னனே! பிறகு ஆயர்குலச்சிறுவர்கள் சாவகாசமாக தமது பசுக்களை யமுனை நதியின் அருகில் இருந்த உபவனத்தில் மேய்க்கத் தொடங்கினர். தாங்க முடியாத பசி வந்தவுடன் அவர்கள் கிருஷ்ணரையும் பலராமரையும் அணுகி பின்வருமாறு கூறினர்.