அத்தியாயம் – 20
பிருந்தாவனத்தில் மழைக் காலமும்
இலையுதிர் காலமும்
பதம் 10.20.1
ஸ்ரீ-ஸுக உவாச
தயோஸ் தத் அத்புதம் கர்ம தாவாக்னேர் மோஷம் ஆத்மன:
கோபா: ஸ்த்ரீப்ய: ஸமாசக்யு: ப்ரலம்ப-வதம் ஏவ ச
ஸ்ரீ ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தயோ:—பகவான் கிருஷ்ணர் மற்றும் பகவான் பலராமர் என்னும் இருவரின்; தத்—அது; அத்புதம்—அற்புதமான; கர்ம—செயல்; தாவ-அக்னே:—காட்டுத் தீயிலிருந்து; மோக்ஷம்—காத்தது; ஆத்மன:—தம்மை; கோபா:—கோபாலர்கள்; ஸ்த்ரீப்ய:—பெண்களுக்கு; ஸமாசக்யு:—அவர்கள் முழுவதும் எடுத்துரைத்தனர்; ப்ரலம்ப-வதம்—பிரலம்பாசுரன் வதம்; ஏவ—உண்மையில்; ச—மற்றும்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: விருந்தாவனத்தில் இருந்த பெண்களிடம் ஆயர்குலச் சிறுவர்கள், காட்டுத் தீயிலிருந்து தம்மைக் காத்தும், பிரலம்பாசுரனை வதம் செய்தும் கிருஷ்ணரும் பலராமரும் ஆற்றிய அற்புதச் செயல்களை முழுவதும் எடுத்துரைத்தனர்.
பதம் 10.20.2
கோப-வ்ருத்தாஸ் ச கோப்யஸ் ச தத் உபாகர்ண்ய விஸ்மிதா:
மேநிரே தேவ-ப்ரவரௌ க்ருஷ்ண-ராமௌ வ்ரஜம் கதௌ
கோப-வ்ருத்தா:—ஆயர்குலப் பெரியோர்; ச—மற்றும்; கோப்ய:—கோபியர்கள்; ச—மேலும்; தத்—அது; உபகர்ண்ய—கேட்டு; விஸ்மிதா:—ஆச்சரியமுற்றனர்; மேநிரே—அவர்கள் கருதினர்; தேவ-ப்ரவரௌ—இருவரும் சிறப்பான தேவர்கள்; க்ருஷ்ண-ராமௌ—கிருஷ்ண பலராம சகோதரர்கள்; வ்ரஜம்—விருந்தாவனத்திற்கு; கதௌ—வந்துள்ளனர்.
இதனைக் கேட்ட ஆயர்குலப் பெரியவர்களும், பெண்டிரும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், கிருஷ்ணரும், பலராமரும் விருந்தாவனத்தில் அவதரித்திருக்கும் வானுலகைச் சேர்ந்த தேவர்களாகத்தான் இருத்தல் வேண்டும் என்று முடிவு செய்தனர்.
பதம் 10.20.3
தத: ப்ராவர்தத ப்ராவ்ருத் ஸர்வ-ஸத்த்வ-ஸமுத்பவா
வித்யோதமான-பரிதிர் விஸ்பூர்ஜித-நபஸ்-தலா
தத:—பிறகு; ப்ராவர்தத—தொடங்கியது; ப்ராவ்ருத்—மழைக்காலம்; ஸர்வஸத்த்வ—அனைத்து உயிர்களின்; ஸமுத்பவா—பிறப்பின் ஆதாரம்; வித்யோதமான—ஒளி செய்யும் மின்னலுடன்; பரிதி:—வானத்தில்; விஸ்பூர்ஜித—அதிர்ந்தது (இடியினால்); நப:-தலா—வானம்.
பிறகு உயிர்க்குலங்கள் அனைத்திற்கும் உயிராகவும், வாழ்வின் ஆதாரமாகவும் திகழும் மழைக்காலம் தொடங்கியது. வானம் இடியினால் அதிரத் தொடங்கியது. அடிவானத்தில் மின்னல் அடிக்கடி மின்னி ஒளிசெய்தது.
பதம் 10.20.4
ஸாந்த்ர-நீலாம்புதைர் வ்யோம ஸ-வித்யுத்-ஸ்தனயித்னுபி:
அஸ்பஷ்ட-ஜ்யோதிர் ஆச்சன்னம் ப்ரஹ்மேவ ஸ-குணம் பபௌ
ஸாந்த்ர—அடர்த்தியான; நீல—நீலநிற; அம்புதை:—மேகங்களினால்; வ்யோம—வானம்; ஸ-வித்யுத்—மின்னலுடன்; ஸ்தனயித்னுபி:—மற்றும் இடிஓசை; அஸ்பஷ்ட—பரவியது; ஜ்யோதி:—அதன் ஒளி; ஆச்சன்னம்—மூடியது; ப்ரஹ்ம—ஜீவாத்மா; இவ—போன்று; ஸ-குணம்—ஜட இயற்கையின் குணங்களினால்; பபெள—வெளிப்பட்டவாறு.
இடியுடனும், மின்னலுடனும் கூடிய நீல நிற மேகங்களால் வானப்பரப்பு மூடப்பட்டது. இவ்வாறு வானமும் அதன் இயற்கை ஒளியும் மூடப்பட்டது போல், ஜீவாத்மாவும் ஜட இயற்கையின் முக்குணங்களினால் மூடப்படுகிறான்.
பதம் 10.20.5
அஷ்டௌ மாஸான் நிபீதம் யத் பூம்யாஸ் சோத-மயம் வஸு
ஸ்வ-கோபிர் மோக்தும் ஆரேபே பர்ஜன்ய: கால ஆகதே
அஷ்டௌ—எட்டு; மாஸான்—மாதங்கள்; நிபீதம்—குடித்தல்; யத்—இந்த; பூம்யா:—பூமியின்; ச—மேலும்; உத-மயம்—நீரினாலான; வஸு—செல்வம்; ஸ்வ-கோபி:—அதன் சுய கதிர்களால்; மோக்தும்—விடுவிக்கிறது; ஆரேப—தொடங்குகிறது; பர்ஜன்ய:—சூரியன்; காலே—உரிய காலத்தில்; ஆகதே—வந்தபொழுது.
தனது கதிர்களால் சூரியன் பூமியின் செல்வமான நீரினை எட்டு மாதங்கள் உறிஞ்சிக் கொள்கிறான். இப்போது உரிய காலம் வந்துவிட்டது. அதனால் அவன் தன்னிடம் சேர்த்துக் கொண்ட நீரினை இப்போது விடுவிக்கத் தொடங்குகிறான்.
பதம் 10.20.6
தடித்வந்தோ மஹா-மேகாஸ் சண்ட-ஸ்வஸன-வேபிதா:
ப்ரீணனம் ஜீவனம் ஹி அஸ்ய முமுசு: கருணா இவ
தடித்-வந்த:—மின்னலாக மின்னி; மஹா-மேகா:—பெரும் மேகக் கூட்டங்கள்; சண்ட—உக்கிரமான; ஸ்வஸன—காற்றினால்; வேபிதா:—அதிர்ந்து; ப்ரீணனம்—மகிழ்ச்சியளிக்க; ஜீவனம்—தமது உயிரை (தண்ணீரை); ஹி—உண்மையில்; அஸ்ய—இவ்வுலகின்; முமுசு:—அவை விடுவிக்கின்றன; கருணா:—கருணை மிக்கப் பெரியோர்; இவ—போன்று.
உக்கிரமான காற்றினால் பெரும் மேகக் கூட்டங்கள் அதிர்ந்து மின்னலாக மின்னுகின்றன. கருணை மிக்கப் பெரியவர்களைப் போல மேகங்கள் இவ்வுலகின் மகிழ்ச்சிக்காகத் தமது உயிரைக் தருகின்றன.
பதம் 10.20.7
தப:-க்ருஸா தேவ-மீடா ஆஸீத் வார்ஷீயஸீ மஹீ
யதைவ காம்ய-தபஸஸ் தனு: ஸம்ப்ராப்ய தத்-பலம்
தப:-க்ருஸா—கோடை வெய்யிலினால் வறண்ட; தேவ-மீடா—வருண பகவானால் கருணையுடன் பொழியப்படும்; ஆஸீத்—ஆனது; வர்ஷீயஸீ—முற்றிலும் வளம் பெறுகிறது; மஹீ—பூமி; யதா ஏவ—போன்று; காம்ய—புலனுகர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட; தபஸ:—ஒருவன் செய்யும் தவங்கள்; தனு:—உடல்; ஸம்ப்ராப்ய—பெற்ற பிறகு; தத்—அத்தவங்களினால்; பலம்—பலன்.
பூமியானவள் கோடை வெம்மையினால் வறண்டு போகிறாள், ஆயினும் அவள் வருண தேவனால் கருணை மழை பொழியப்படும் பொழுது மீண்டும் வளம் பெறுகிறாள். இவ்வாறு பூமியானது பௌதிக நோக்கங்களுக்காகத் தவம் செய்யும் ஒருவனது இளைத்துப் போன உடலைப் போன்றிருக்கிறது. ஆயினும் அவன் தான் செய்த தவங்களின் பலன்களை அடையும் பொழுது மீண்டும் முற்றிலும் புத்துணர்ச்சியும், புது சக்தியும் பெறுகிறான்.
பதம் 10.20.8
நிஸா-முகேஷு கத்யோதாஸ் தமஸா பாந்தி ந க்ரஹா:
யதா பாபேன பாஷண்டா ந ஹி வேதா: கலௌ யுகே
நிஸா-முகேஷு—மாலைக் கருக்கலில்; கத்யோதா:—மின்மினிப் பூச்சிகள்; தமஸா—இருளின் காரணமாக; பாந்தி—ஒளிர்கின்றன; ந—இல்லை; க்ரஹா:—கிரஹங்கள்; யதா—போன்று; பாபேன—பாவச் செயல்களால்; பாஷண்டா:—நாத்திகக் கருத்துக்கள்; ந—இல்லை; ஹி—உறுதியாக; வேதா:—வேதங்கள்; கலௌ யுகே—கலியுகத்தில்.
மழைக்காலத்தின் மாலைக் கருக்கலில், மேகங்கள் மூடியிருப்பதினால் வானில் நட்சத்திரங்கள் தென்படுவதில்லை. மாறாக அந்த இருளில் மின்மினிப் பூச்சிகள் ஒளிர்விடுகின்றன. இது எதனைப் போன்றதென்றால் கலியுகத்தில் பாவச் செயல்களின் ஆக்கிரமிப்பினால் உண்மையான வேத அறிவு மறைக்கப்பட்டு நாத்திகக் கருத்துக்கள் வளர்வது போன்றதாகும்.
பதம் 10.20.9
ஸ்ருத்வா பர்ஜன்ய நினதம் மண்டுகா: ஸஸ்ருஜுர் கிர:
தூஷ்ணீம் ஸயானா: ப்ராக் யத்வத் ப்ராஹ்மணா நியமாத்யயே
ஸ்ருத்வா—கேட்டு; பர்ஜன்ய—மழை மேகங்களின்; நினதம்—இடியினைக் கேட்டு; மண்டுகா:—தவளைகள்; ஸஸ்ருஜு—வெளிப்படுத்துகின்றன: கிர:—தமது ஒலியினை; தூஷ்ணீம்—அமைதியாக; ஸயானா:—படுத்திருக்கும்; ப்ராக்—முன்னர்; யத்வத்—போன்று; ப்ராஹ்மணா:—அந்தண மாணவர்கள்; நியம-அத்யயே—தமது காலைக் கடன்களை முடித்த பிறகு.
மழைமேகங்கள் ஒன்றோடொன்று மோதி இடியோசை செய்யும் பொழுது அதுவரை அமைதியுடனிருந்த தவளைகள் திடீரென்று கத்தத் தொடங்குகின்றன. அதுபோல் தமது காலைக் கடன்களை அமைதியுடன் முடித்த அந்தண மாணவர்கள் தமது ஆசிரியரால் அழைக்கப்படும் பொழுது தமது பாடல்களை ஓதத் தொடங்கினர்.
பதம் 10.20.10
ஆஸன்ன் உத்பத-காமின்ய: க்ஷுத்ர-நத்யோ ‘னுஸுஷ்யதீ:
பும்ஸே யதாஸ்வாந்த்ரஸ்ய தேஹ-த்ரவிணி-ஸம்பத:
ஆஸன்—அவை ஆகின்றன; உத்பத-காமின்ய:—தமது பாதையிலிருந்து செல்வது; க்ஷுத்ர—முக்கியத்துவமற்ற; நத்ய:—நதிகள்; அனுஸுஷ்யதி:—வறண்டுபோய்; பும்ஸ:—ஒருவனது; யதா—போன்று; அஸ்வாந்த்ரஸ்ய—சுதந்தரமற்றவனான (அதாவது அவன் தனது புலன்களின் அடிமை); தேஹ—உடல்; த்ரவிண—சொத்துக்கள்; ஸம்பத:—செல்வங்கள்.
மழைக்காலம் தொடங்கியவுடன் வறண்டுபோன முக்கித்துவமற்ற நதிகள் கூட, தனது புலன்களின் தேவைகளினால் கட்டுப்படுத்தப்படும் ஒருவனது உடல், சொத்து, பொருள் போன்று தமக்குரிய பாதைகளில் பொங்கிப் பிரவகித்து ஓடுகின்றன.
பதம் 10.20.11
ஹரிதா ஹரிபி: ஸஷ்பைர் இந்த்ரகோபைஸ் ச லோஹிதா
உச்சிலீந்த்ர-க்ருதச்-சாயா ந்ருணம் ஸ்ரீர் இவ பூர் அபூத்
ஹரிதா:—பசுமைநிறம்; ஹரிபி:—பச்சைவண்ணம்; ஸஷ்பை:—புதிதாக முளைத்த புற்களால்; இந்த்ர-கோபை:—”இந்த்ர கோப” என்னும் பூச்சிகளால்; ச—மற்றும்; லோஹிதா—சிவந்த; உச்சிலீந்த்ர—காளான்களால்; க்ருத—கொடுக்கப்பட்ட; சாயா—அடைக்கலம்; ந்ருணம்—மனிதர்களின்; ஸ்ரீ:—செல்வம்; இவ—போன்று; பூ:—பூமி; அபூத்—ஆனது.
புதிதாக முளைத்த புற்கள் பூமிக்குப் பச்சை வண்ணம் அளித்தன. “இந்த்ரகோப” பூச்சிகள் அதற்கு சிகப்பு வண்ணம் அளித்தன. வெண்மை நிறக் காளான்கள் அதற்கு மற்றொரு நிறம் மற்றும் வட்ட வடிவமான நிழலையும் அளித்தன. இதன் காரணமாக பூமி புதுப் பணக்காரனைப் போன்று வளமுடன் காட்சியளித்தது.
பதம் 10.20.12
ஷேத்ராணி ஸஷ்ய-ஸம்பத்பி: கர்ஷகாணாம் முதம் தது:
மானினாம் அனுதாபம் வை தைவாதீனம் அஜாநதாம்
ஷேத்ராணி—வயல்கள்; ஸஷ்ய-ஸம்பத்பி:—அவற்றின் தானியச் செல்வங்கள்; கர்ஷாகாணாம்—விவசாயிகளுக்கு; முதம்—மகிழ்ச்சி; தது:—அளிக்கின்றது; மானினாம்—வீண் கர்வமுடைய பிறர்க்கு; அனுதாபம்—அனுதாபம்; வை—உண்மையில்; தைவ-அதீனம்—தெய்வாதீனம்; அஜாநதாம்—புரிந்துகொள்ளாதவர்கள்.
தமது தானியச் செல்வங்களினால் வயல்கள் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. ஆயினும் அதே வயல்கள் விவசாயத்தில் வீண்கர்வமுடையவர்களாகவும், எல்லா பரமபுருஷ பகவானின் கட்டுப்பாட்டின் கீழ் எவ்வாறு இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள முடியாவதவர்களாகவும் இருப்பவர்களின் இதயத்தில் அனுதாபத்தினை உண்டாக்குகின்றன.
பதம் 10.20.13
ஜல-ஸ்தலௌகஸ: ஸர்வே நவ-வாரி-நிஷேவயா
அபிப்ரன் ருசிரம் ரூபம் யதா ஹரி-நிஷேவயா
ஜல—நீரின்; ஸ்தல—மற்றும் நிலம்; ஒகஸ:—வசிப்பவர்கள்; ஸர்வே—அனைவரும்; நவ—புதிய; வாரி—நீரின்; நிஷேவயா—துணையினைப் பெறுவதினால்; அபிப்ரன்—அவை பெற்றுக் கொண்டு; ருசிரம்—கவர்ச்சி; ரூபம்—வடிவம்; யதா—போன்று; ஹரி-நிஷேவயா—முழுமுதற்கடவுளுக்குப் பக்தித் தொண்டு செய்வதினால்.
புதிதாகப் பெய்த மழையினைப் பயன்படுத்திக் கொள்வதினால் எல்லா உயிர்களுக்கும் நீர் நிலைகளும் பரமபுருஷ பகவானுக்குப் பக்தித்தொண்டு செய்வதின் மூலம் ஒரு பக்தன் அழகு பெறுவது போன்று கவர்ச்சியும், இனிமையும் பெறுகின்றன.
பதம் 10.20.14
ஸரித்பி: ஸங்கத: ஸிந்துஸ் சுக்ஷோப ஸ்வஸனோர்மிமான்
அபக்வ-யோகினஸ் சித்தம் காமாக்தம் குண-யுக் யதா
ஸரித்பி:—நதிகள்; ஸங்கத:—சங்கமித்தல்; ஸிந்து:—கடலுடன்; சுக்ஷோப—கொந்தளிக்கின்றது; ஸ்வஸன:—காற்று வீசுவதால்; ஊர்மிமான்:—அலைகள் எழுந்து; அபக்வ:—அறிவு முதிர்ச்சியடையாத; யோகின:—யோகியின்; சித்தம்:—மனம்; காம-அக்தம்:—ஆசையின் கறை படிந்திருப்பது; குண-யுக்:—புலனுகர்ச்சிப் பொருட்களுடன் கொண்ட தொடர்பினைப் பேணுவது; யதா:—போன்று.
நதிகள் கடலில் சங்கமமாகும் இடத்தில் கடல், கொந்தளித்து, காற்றினால் அதன் மீது அலைகள் எழுவதானது, அறிவு முதிர்ச்சியடையாத யோகியின் மனம் ஆசையின் கறை படிந்திருப்பதினாலும், புலனுகர்ச்சிப் பொருட்களின்மீது கொண்ட பற்றினாலும் கொந்தளிப்பது போன்றதாகும்.
பதம் 10.20.15
கிரயோ வர்ஷ-தாராபிர் ஹன்யமானா ந விவ்யது:
அபிபூயமான வ்யஸனைர் யதாதோக்ஷஜ-சேதஸ:
கிரய:—மலைகள்; வர்ஷ-தாராபி:—மழைமேகங்களினால்; ஹன்யமானா:—மோதுண்டு; ந விவ்யது:—அதிர்வதில்லை; அபிபூயமானா:—தாக்கப்படுதல்; வ்யஸனை:—ஆபத்துக்களால்; யதா—போன்று; அதோக்ஷஸ-சேதஸ:—பரமபுருஷ பகவானிடத்தில் ஈடுபட்டுள்ள மனதினை உடையவர்கள்.
எல்லா வகையான ஆபத்துகளினால் பாதிக்கப்பட்ட போதிலும் கூட முழுமுதற் கடவுளிடத்தில் ஈடுபட்டுள்ள மனதினையுடைய பக்தர்கள் அமைதியுடன் இருத்தலைப் போன்று மழை மேகங்களினால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட போதிலும் கூட மலைகள் எந்தவிதமான அதிர்வுமின்றி அமைதியுடன் இருக்கின்றன.
பதம் 10.20.16
மார்கா பபூவு: ஸந்திக்தாஸ் த்ருணைஸ் சன்னா ஹி அஸம்ஸ்க்ருதா:
நாப்யஸ்யமானா: ஸ்ருதயோ த்விஜை: காலேன சாஹதா:
மார்கா:—சாலைகள்; பபூவு:—ஆனது; ஸந்திக்தா:—தெளிவற்று இருத்தல்; த்ருணை:—புற்கள்; சன்னா:—மூடப்பட்டு; ஹி—உண்மையில்; அஸம்ஸ்க்ருதா:—தெளிவின்றி; ந அப்யஸ்யமானா:—கற்காது; ஸ்ருதய:—ஸ்ருதிகள்; த்விஜை:—அந்தணர்களால்; காலேன—காலத்தின் பாதிப்பினால்; ச:—மற்றும்; ஆஹதா:—கெட்டுப்போதல்.
மழைக்காலத்தின் தூய்மையற்ற சாலைகள், புல்பூண்டுகளும், குப்பைகளும் சேர்ந்து நடந்துசெல்வதற்கு கரடுமுரடாகின்றன. இச்சாலைகள் அந்தணர்களால் நீண்ட நாள் கற்கப்படாத சுருதிகள் போன்றவையாகும். அவைகளும் காலத்தின் மாற்றத்தினால் மூடப்பட்டுக் கெட்டுப் போகின்றன.
பதம் 10.20.17
லோக-பந்துஷு மேகேஷு வித்யுதஸ் சல-ஸௌஹ்ருதா:
ஸ்தைர்யம் ந சக்ரு: காமின்ய: புருஷேஷு குணிஷ்வ் இவ
லோக:—அனைத்துலகின்; பந்துஸு—நண்பர்கள்; மேகேஷு:—மேகங்களின் மத்தியில்; வித்யுத:—மின்னல்; சல-ஸௌஹ்ருதா:—அவர்களது நட்பில் காணும் மாற்றம்; ஸ்தைர்யம்:—நிலைத்து; ந சக்ரு:—காப்பதில்லை; காமின்ய:—காம இச்சையுடைய பெண்கள்; புருஷேஷு—ஆண்மை மிக்கவர்கள்; குணிஷு—நல்லொழுக்கமுள்ளவர்கள்; இவ:—போன்று.
அனைத்து உயிர்களின் நலன் விரும்பும் நண்பர்களாக மேகங்கள் இருந்த போதிலும், நிலைமாறும் குணமுடைய மின்னலானது ஒரு மேகக் கூட்டத்தினின்று மற்றொரு மேகக் கூட்டத்திற்குச் செல்கிறது. இது எதனைப் போன்றதென்றால் ஆண்மைமிக்க ஆண்களுக்கு காம இச்சையுடைய பெண்கள் நம்பிக்கைத் துரோகம் செய்வது போன்றதாகும்.
பதம் 10.20.18
தனுர் வியதி மாஹேந்த்ரம் நிர்குணம் ச குணினி அபாத்
வ்யக்தே குண-வ்யதிகரே ‘குணவான் புருஷோ யதா
தனு:—வில் (வானவில்); வியதி:—வானத்தில்; மஹா-இந்த்ரம்:—தேவேந்திரனின்; நிர்குணம்:—குணங்கள் இன்றி (அல்லது நாண் இன்றி); ச:—இருந்தபோதிலும்; குணினி:—ஒலி போன்ற குணங்களை உடைய வானத்தில்; அபாத்:—தோன்றியது; வ்யக்தே:—வெளிப்படும் ஜடக்குணத்தில்; குண-வ்யதிகரே:—ஜடக் குணங்களில் வினைத் தொடர்புகளை உடைய; அகுண-வான்:—ஜடக் குணங்களோடு தொடர்பில்லாதவர்; புருஷ:—முழுமுதற் கடவுள்; யதா:—போன்று.
தேவேந்திரனின் வளைந்த வில்லானது (வானவில்) வானத்தில் தோன்றும்பொழுது (வானத்திற்கு இடி ஓசைபோன்ற குணம் உண்டு) அது சாதாரண வில்லாகக் காணப்படுவதில்லை ஏனென்றால் அதற்கு நாண் கிடையாது, அதுபோல் பரமபுருஷ பகவான் ஜடக் குணங்களின் வினைத் தொடர்புடைய இவ்வுலகில் அவதரிக்கும் பொழுது அவர் சாதாரண மனிதனைப் போல் காணப்படுவதில்லை. காரணம் அவர் ஜடக் குணங்கள் அனைத்தினின்றும் விடுதலை பெற்றவராகவும், அனைத்துப் பெளதிக நிலைகளிலிருந்தும் சுதந்திரம் உடையவராகவும் இருக்கின்றார்.
பதம் 10.20.19
ந ரராஜோடுபஸ் சன்ன: ஸ்வ-ஜ்யோத்ஸ்னா-ராஜிதைர் கனை:
அஹம்-மத்யா பாஸிதயா ஸ்வ-பாஸா புருஷோ யதா
ந ரராஜ:—ஒளிர்வதில்லை; உடுப:—சந்திரன்; சன்ன:—மறைக்கப்பட்டு; ஸ்வ-ஜ்யோத்ஸ்னா:—அதன் சுய ஒளியால்; ராஜிதை:—ஒளி வீசப்படுகின்றன; கனை:—மேகங்களால்; அஹம்-மத்யா:—ஆணவத்தினால்; பாஸிதயா:—அது ஒளிவீசப்படுகிறது; ஸ்வ-பாஸா:—அதன் சுய ஒளியினால்; புரூஷ:—உயிர்வாழி; யதா:—போன்று.
மழைக்காலத்தில், சந்திரனால் ஒளிபெறும் மேகங்கள் மறைக்கப்படுவதனால், சந்திரனின் தோற்றம் தடுக்கப்படுகிறது. அதுபோல் தூய ஆத்மாவினால் ஒளி பெறும் உயிர் ஆணவத்தினால் மூடப்படுவதினால் உலக வாழ்க்கையில் உள்ள அதன் நேரடித் தோற்றமும் தடுக்கப்படுகிறது.
பதம் 10.20.20
மேகாகமோத்ஸவா ஹ்ருஷ்டா: ப்ரத்யனந்தான் சிகண்டின:
க்ருஹேஸு தப்த-நிர்விண்ணா யதாச்யுத-ஜனாகமே
மேக—மேகங்களின்; ஆகம—வருகையினால்; உத்ஸவா—விழாக் கொண்டாடுகின்றன; ஹ்ருஷ்டா—பெருமகிழ்ச்சியடைகின்றன; ப்ரத்யனந்தன்—ஒலி எழுப்பி வாழ்த்துக் கூறுகின்றன; ஸிகண்டின:—மயில்கள்; க்ருஹேஸு—அவர்களது இல்லங்களில்; தப்த—துன்பப்பட்டுக் கொண்டிருப்போர்; நிர்விண்ணா:—மகிழ்ச்சியடைகின்றனர்; யதா—போன்று; அச்யுத—குற்றமற்ற முழுமுதற் கடவுளின்; ஜன—பக்தர்களின்; ஆகமே—வருகையினால்.
வானில் மேகங்கள் திரளக் கண்டால் மயில்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பி ஆனந்தக் கூத்தாடுகின்றன. இது இல்லற வாழ்க்கையில் துன்புறுவோர், குற்றமற்ற முழுமுதற் கடவுளின் தூய பக்தர்கள் தமது இல்லங்களுக்கு வருகை தரும் பொழுது அடைகின்ற மகிழ்ச்சியைப் போன்றதாகும்.
பதம் 10.20.21
பீத்வாப: பாதபா: பத்பிர் ஆஜன் நானாத்ம-மூர்தய:
ப்ராக் ஷாமாஸ் தபஸா ஸ்ராந்தா யதா காமானுஸேவயா
பீத்வா—குடித்த; ஆப:—தண்ணீர்; பாத-பா:—மரங்கள்; பத்பி:—அவற்றின் பாதங்களில்; ஆஸன்—பெறுகின்றன; நானா—பல்வேறு: ஆத்ம-மூர்தய:—உடல் தன்மைகள்; ப்ராக்—முன்னர்; ஷாமா—மெலிதல்; தபஸா—தவங்களினால்; ஸ்ராந்தா—சோர்வுற்று; யதா—போன்று; காம-அனுஸேவயா—விரும்பிய பொருள்களை அடைந்த மகிழ்ச்சியால்.
மரங்கள் வாடியும் காய்ந்தும் இருந்தன. ஆயினும் அவை தமது வேர்கள் என்னும் பாதங்களினால் புதிதாகப் பெய்த மழை நீரைப் பருகியவுடன் அவற்றின் மேனியில் பசுமைபடர்ந்தது. அதுபோல் கடுமையான தவத்தினால் மெலிவும், சோர்வுமுற்ற ஒருவனது உடல் அவன் விரும்பிய பொருளைத் தனது தவத்தின் மூலம் அடையப் பெற்றவுடன் மீண்டும் தேஜஸும், ஆரோக்கியமும் உடைய தன்மைகளை வெளிப்படுத்துகிறது.
பதம் 10.20.22
ஸர: ஸ்வ் அஸாந்த-ரோத: ஸுந்யூஷுர் அங்காபி ஸாரஸா:
க்ருஹேஷ்வ் அஸாந்த-க்ருத்யேஷு க்ராம்யா இவ துராஸயா:
ஸர: ஸு—குணங்களில்; அஸாந்த—துன்புறுதல்; ரோத: ஸு—அதன் கரைகள்; ந்யூஷு:—தொடர்ந்து வாழும்; அங்க—அன்பார்ந்த அரசனே; அபி—உண்மையில்; ஸாரஸா:—நாரைகள்: க்ருஹேஷு—அவர்களது இல்லங்களில்; அஸாந்த—அமைதியிழந்து; க்ருத்யேஷு—செயல்கள் நிறைவேற்றப்படும்; க்ராம்யா:—லோகாயத மனிதர்கள்; இவ—போன்று; துராஸயா:—அவர்களது மனம் மாசடைந்திருக்கின்றது.
மாசற்ற மனங்களையுடைய லோகாயத மனிதர்கள் தமது இல்லங்களில் எத்துணை இடர்ப்பாடுகள் நேர்ந்த போதிலும் அங்கேயே தொடர்ந்து இருப்பது போன்று மழைக்காலத்தில் குளக்கரைகள் இடர்ப்பாடிலும் கூட நாரைகள் தொடர்ந்து அங்கேயே வசிக்கின்றன.
பதம் 10.20.23
ஜலௌகைர் நிரபித்யந்த ஸேதவோ வர்ஷதீஸ்வரே
பாஷண்டினாம் அஸத்-வாதைர் வேத-மார்கா: கலௌ யதா
ஜல-ஓகை:—வெள்ளத்தினால்; நிரபித்யந்த—உடைபட்டுப்போன; ஸேதவ:—கால்வாய்கள்; வர்ஷதி—அவன் மழை பெய்வித்தபொழுது; ஈஸ்வரே—தேவேந்திரன்; பாஷண்டினாம்—நாத்திகர்களின்; அஸத்-வாதை:—தவறான கொள்கைகளினால்; வேத-மார்கா:—வேத மார்க்கம்; கலெள—கலியுகத்தில்; யதா—போன்று.
கலியுகத்தில் வேதமார்க்கத்தின் எல்லைகள் நாத்திகர்களின் தவறான கொள்கைகளினால் உடைந்து போவது போல், இந்திரன் மழை பெய்வித்த பொழுது வயல்களில் அருகேயுள்ள கால்வாய்கள், பெருக்கெடுத்துவரும் வெள்ளத்தினால் உடைந்து போயின.
பதம் 10.20.24
வ்யமுஞ்சன் வாயுபிர் நுன்னா பூதேப்யஸ் சாம்ருதம் கனா:
யதாஸிஷோ விஸ்-பத்ய: காலே காலே த்விஜேரிதா:
வ்யமுஞ்சன்—அவை பொழிந்தன; வாயுபி:—காற்றினால்; நுன்னா:—உந்தப்பட்டு; பூதேப்ய:—எல்லா உயிர்வாழிகளுக்கும்; ச—மற்றும்; அம்ருதம்—அவற்றின் அமிர்தநீரினை; கனா:—மேகங்கள்; யதா—போன்று; ஆஸிஷ:—தானங்கள்; வித்-பதய:—அரசர்கள்; காலே-காலே—காலா காலத்திற்கு; த்விஜ—அந்தணர்களால்; ஈரிதா:—துண்டப்பட்டு.
காற்றினால் உந்தப்பட்ட மேகங்கள் எல்லா உயிர்களின் நன்மைக்காவும் தமது அமிர்த நீரினைப் பொழிந்ததானது அந்தணர்களால் உபதேசிக்கப்பட்ட மன்னர்கள் காலாகாலத்திற்கும் தமது குடிமக்களுக்குத் தானங்கள் வழங்குவதற்கு ஒப்பாகும்.
பதம் 10.20.25
ஏவம் வனம் தத் வர்ஷிஷ்டம் பக்வ-கர்ஜுர-ஜம்புமத்
கோ-கோபாலைர் வ்ருதோ ரந்தும் ஸ-பல: ப்ராவிஸத் தரி:
ஏவம்—இவ்வாறு; வனம்—காடு; தத்—அது; வர்ஷிஷ்டம்—மிக்க ஒளி பெற்று; பக்வ—செழித்து; கர்ஜுர—பேரீச்சம்பழங்கள்; ஜம்பு—மற்றும் நாவல்-பழங்கள்; மத்—நிறைந்து; கோ—பசுக்களால்; கோபாலை:—கோபாலர்கள்; வ்ருத:—சூழ்ந்து உடன்வர; ரந்தும்—விளையாடும் நோக்கத்துடன்; ஸ-பல:—பலராமருடன் சேர்ந்து; ப்ரவிஸித்—அவர் பிரவேசித்தார்; ஹரி:—பகவான் கிருஷ்ணர்.
இவ்வாறு விருந்தாவனக் காடு பேரீச்சம் பழங்களும், நாவல் பழங்களும் நிறைந்து செழிப்புடனும், வளமுடனும் திகழ்ந்த பொழுது பகவான் கிருஷ்ணர், ஸ்ரீ பலராமருடன் சேர்ந்து கொண்டு, பசுக்களும், ஆயர்குலச் சிறுவர்களும் உடன்வர விளையாடி மகிழ்வதற்காக அக்காட்டினுள் பிரவேசித்தார்.
பதம் 10.20.26
தேனவோ மந்த-காமின்ய ஊதோ-பாரேண பூயஸா
யயுர் பகவதாஹுதா த்ருதம் ப்ரீத்யா ஸ்நுத-ஸ்தனா:
தேனவ:—பசுக்கள்; மந்த-காமின்ய:—மெதுவாக நடந்தன; ஊத:—அவற்றின் பால்மடியின்; பாரேண—பாரத்தின் காரணமாக; பூயஸா—மிகப்பெரிய; யயு:—அவை சென்றன; பகவதா—பகவானால்; ஆஹுத:—அழைக்கப்படுதல்; த்ருதம்—விரைவாக; ப்ரீத்யா—அன்பின் காரணமாக; ஸ்நுத—ஈரமாகின; ஸ்தனா:—அவற்றின் பால்மடிகள்.
பருத்த பால் மடிகளின் பாரம் தாங்காது பசுக்கள் எல்லாம் மிகவும் மெதுவாக நடந்து செல்லும். ஆயினும் முழுமுதற் கடவுள் அழைத்தாரென்றால் அவர்மீது கொண்ட சிறந்த அன்பின் காரணமாக அப்பசுக்கள் எல்லாம் அவர் இருக்கும் இடம் நோக்கி விரைந்து ஓடும். அப்போது அப்பசுக்களின் பால்மடிகள் நனைந்து ஈரமாகக் காணப்படும்
பதம் 10.20.27
வனௌகஸ: ப்ரமுதிதா வன-ராஜீர் மதுச்-யுத:
ஜல-தாரா கிரேர் நாதாத் ஆஸன்னா தத்ருஸே குஹா:
வன-ஒளகஸ:—பழங்குடிப்பெண்கள்; ப்ரமுதிதா:—ஆனந்தமடைந்தனர்; வன-ராஜீ:—காட்டு மரங்கள்; மதுச்-யுத:—இனிய மதுவினைச் சிந்தும்; ஜல-தாரா:—அருவிகள்; கிரே:—மலைகளின் மீது; நாதாத்—அவற்றின் எதிரொலியிலிருந்து; ஆஸன்னா:—அருகில்; தத்ருஸே—அவர் அறிந்து கொண்டார்; குஹா:—குகைகள்.
வனங்களில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்களின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிவதைப் பகவான் கண்டார். மரங்களிலிருந்து இனிய மது வழிந்தது. மலையுச்சியிலிருந்து வீழ்ந்த அருவியின் ஓசை அருகில் குகைகள் இருப்பதை உணர்த்தின.
பதம் 10.20.28
க்வசித் வனஸ்பதி-க்ரோடே குஹாயாம் சாபிவர்ஷதி
நிர்விஸ்ய பகவான் ரேமே கந்த-மூல-பலாஸன:
க்வசித்—சிலசமயம்; வனஸ்பதி—மரத்தின்; க்ரோடே—பொந்தில்; குஹாயாம்—குகைகளில்; ச—அல்லது; அபிவர்ஷதி—மழை பெய்யும் பொழுது; நிர்விஸ்ய—நுழைந்து கொள்வார்; பகவான்—முழுமுதற் கடவுள்; ரேமே—மகிழ்ச்சியுற்றார்; கந்த-மூல—வேர்கள்; பல—பழங்கள்; அஸன:—உண்பார்.
மழைபெய்யும் பொழுது விளையாடுவதற்காகவும் கிழங்குகள், பழங்கள் போன்றவற்றை உண்பதற்காகவும் பகவான் குகைகளிலோ அல்லது மரத்தின் பெரிய பொந்துகளிலோ புகுந்து கொள்வார்.
பதம் 10.20.29
ததி-ஓதனம் ஸமானீதம் ஸிலாயாம் ஸலிலாந்திகே
ஸம்போஜனீயைர் புபுஜே கோபை: ஸங்கர்ஷணான் வித:
ததி-ஓதனம்—தயிர்சாதம்; ஸமானீதம்—அனுப்பப்பட்ட; ஸிலாயாம்—ஒரு பாறையின் மீது; ஸலில-அந்திகே—நீர் நிலையருகே; ஸம்போஜனீயை:—அவரோடு உணவினையும் எடுத்துக் கொள்வார்; புபுஜே—அவர் உண்டார்; கோபை:—கோபாலர்களுடன்; ஸங்கர்ஷண—அன்வித:—பகவான் பலராமரோடு சேர்ந்து.
பகவான் கிருஷ்ணர் தனது இல்லத்திலிருந்து அனுப்பப்பட்ட தயிர்சாதத்தை பகவான் சங்கர்ஷணருடனும் சேர்ந்து தன்னோடு வழக்கமாக உணவு உண்ணும் கோபாலர்களுடன் உண்பார். நீர் நிலை அருகேயுள்ள ஒரு பெரிய பாறையில் அமர்ந்து கொண்டு அவர்கள் உணவு உண்பர்.
பதங்கள் 10.20.30 – 10.20.31
ஸாத்வாலோபரி ஸம்விஸ்ய சர்வதோ மீலிதேக்ஷணான்
த்ருப்தான் வ்ருஷான் வத்ஸதரான் காஸ் ச ஸ்வோதோ-பர-ஸ்ரமா:
ப்ராவ்ருத்-ஸ்ரியம் ச தாம் வீக்ஷ்ய ஸர்வ-கால-ஸுகாவஹாம்
பகவான் பூஜயாம் சக்ரே ஆத்ம-ஸக்தி-உபப்ரும்ஹிதாம்
ஸாத்வல—புல்தரையின்; உபரி—மீது; ஸம்விஸ்ய:—படுத்துக் கொண்டு; சர்வத:—அசைபோட்டுக் கொண்டிருந்த; மீலித—மூடிக் கொண்டு; ஈக்ஷணான்—அவற்றின் கண்கள்; த்ருப்தான்—திருப்தியடைந்தார்; வ்ருஷான்—காளைகள்; வத்ஸதரான்—கன்றுகள்; கா:—பசுக்கள்; ச—மற்றும்; ஸ்வ—தமது; ஊத:—பால் மடிகள்; பர—பாரத்தினால்; ஸ்ரமா:—சிரமப்படுவதை; ப்ராவ்ருத்—மழைக்காலத்தின்; ஸ்ரியம்—செல்வம்; ச—மேலும்; தாம்—அவை; வீக்ஷ்ய—கண்டு; ஸர்வ-கால—எப்போதும்; ஸுக—சுகம்; ஆவஹாம்—அளித்து; பகவான்—முழுமுதற் கடவுள்; பூஜயாம் சக்ரே—கெளரவித்தார்; ஆத்ம-ஸக்தி—அவரது அகச் சக்தியில் இருந்து; உபப்ரும்ஹிதாம்—விரிவடைந்தன.
பசும்புல் தரையின் மீது படுத்துக் கொண்டு தமது கண்களை மூடியவாறு திருப்தியுடன், பசுக்களும், எருதுகளும், கன்றுக் குட்டிகளும் அசைபோட்டுக் கொண்டிருப்பதையும், பசுக்கள் பால் நிரம்பிய தமது மடிகளின் கனம் தாங்காது சிரமப்படுவதையும் பகவான் கிருஷ்ணர் கண்டார். அளவில்லா ஆனந்தத்தின் ஆதாரமான, விருந்தாவனத்தின் எழிலும், வளமும்மிக்க மழைக்காலத்தினைக் கண்டு பகவான் தமது அகச்சக்தியிலிருந்து விரிவடைந்து அம்மழைக்காலத்திற்கு எல்லாவிதமான மரியாதைகளையும் அளித்தார்.
பதம் 10.20.32
ஏவம் நிவஸதோஸ் தஸ்மின் ராம-கேஸவயோர் வ்ரஜே
ஸரத் ஸம்பவத் வ்யப்ரா ஸ்வச்சாம்ப்வ்-அபருஷானிலா
ஏவம்—இவ்வாறு; நிவஸதோ:—அவர்கள் இருவரும் இருந்த போது; தஸ்மின்—அங்கு; ராம-கேஸவயோ:—பகவான் ராமரும் பகவான் கேசவரும்; வ்ரஜே—விருந்தாவனத்தில்; ஸரத்—காத்துகாலம் (இலையுதிர்காலம்); ஸம்பவத்—வந்தது; வ்யப்ரா—மேகமின்றி வானம் தெளிவாக இருந்தது; ஸ்வச்ச-அம்பு—நீர்நிலைகள் மிகவும் தெளிவுடன் விளங்கின; அபருஷ-அனிலா—காற்று இதமாக வீசியது.
பகவான் ராமரும், பகவான் கேசவரும் விருந்தாவனத்தில் இவ்வாறு இருக்கின்ற காலத்தில் சரத்காலம் என்னும் இலையுதிர் காலம் வந்தது. இக்காலத்தில் வானம் மேகமின்றித் தெளிவாகவும், நீர்நிலைகள் தெளிவாகவும் காணப்படும். காற்றும் இதமாக வீசும்.
பதம் 10.20.33
ஸரதா நீரஜோத்பத்த்யா நீராணி ப்ருக்ருதிம் யயு:
ப்ரஷ்டானாம் இவ சேதாம்ஸி புனர் யோக-நிஷேவயா
ஸரதா—இலையுதிர் காலத்தின் பாதிப்பினால்; நீரஜ—தாமரை மலர்கள்; உத்பத்த்யா—புத்துயிர் அளிக்கிறது; நீராணி—நீர் நிலைகள்; ப்ரக்ருதிம்—அவற்றின் இயற்கை நிலைக்கு (தெளிவு நிலைக்கு); யயு:—திரும்பின; ப்ரஷ்டானாம்—வீழ்ந்துவிட்டவர்கள்; இவ—போன்று; சேதாம்ஸி—மனங்கள்; புன:—மீண்டும்; யோக—பக்தித் தொண்டின்; நிஸேவயா—பயிற்சியினால்.
தாமரை மலர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சரத் காலம் என்னும் இலையுதிர் காலம், வழி தவறி வீழ்ச்சியுற்ற யோகிகள் மீண்டும் பக்தித் தொண்டினை மேற்கொள்ளும்பொழுது அது அவர்களது மனங்களைத் தூய்மை செய்வதுபோல், நீர் நிலைகள் அனைத்தையும் அவற்றின் தெளிந்த இயற்கை நிலையினை அடையச் செய்தது.
பதம் 10.20.34
வ்யோம்யோ ‘ப்ப்ரம் பூத-ஸாபல்யம் புவ: பங்கம் அபாம் மலம்
ஸரத் ஜஹாராஸ்ரமிணாம் க்ருஷ்ணே பக்திர் யதாஸுபம்
வ்யோம்ய:—வானத்தில்; அப்-ப்ரம்—மேகங்கள்; பூத—விலங்குகளின்; ஸாபல்யம்—கூட்டமாக வாழும் நிலை; புவ:—பூமியின்; பங்கம்—மண் மூடிய நிலை; அபாம்—நீரின்; மலம்—மாசு; ஸரத்—இலையுதிர் காலம்; ஜஹார—நீக்கியது; ஆஸ்ரமிணாம்—மனித சமுதாயத்தின் நான்கு வகையான ஆன்மீகப் பிரிவுகள்; க்ருஷ்ணே—பகவான் கிருஷ்ணரின்; பக்தி:—பக்தித் தொண்டு; யதா—போன்று; அஸுபம்—எல்லாப் பாவங்களையும்.
இலையுதிர்காலம் மேகங்களை நீக்கி வானைத் தெளிவடையச் செய்கிறது. கூட்டமாகவும், நெருக்கமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் விலங்குகளுக்கு விடுதலையளித்து அவற்றை வெளிவரச் செய்கிறது. மண்ணால் மூடப்பட்ட பூமியினைச் சுத்தம் செய்கிறது. நீரிலுள்ள அழுக்குகளை நீக்கி நீர்நிலைகளைத் தெளிவடையச் செய்கிறது. இது போன்றே பகவான் கிருஷ்ணருக்குச் செய்யும் பக்தித் தொண்டும் நான்கு பிரிவினருக்கும். அவர்களுக்குரிய துன்பங்களிலிருந்து விடுதலையளிக்கிறது.
பதம் 10.20.35
ஸர்வ-ஸ்வம் ஜலதா ஹித்வா விரேஜு: ஸுப்ர-வர்சஸ:
யதா த்யக்தைஷணா: ஸாந்தா முனயோ முக்த-கில்பிஷா:
ஸர்வ-ஸ்வம்—தாம் வைத்திருக்கும் அனைத்தையும்; ஜல-தா:—மேகங்கள்; ஹித்வா—துறக்கின்றது; விரேஜு:—ஒளிர்கின்றது; ஸுப்ர—தூய; வர்சஸ:—அவற்றின் ஒளி; யதா—போன்றது; த்யக்த-ஏஷணா:—அனைத்து இச்சைகளையும் துறந்தோர்; ஸாந்தா:—அமைதியடைதல்; முனய:—முனிவர்கள்; முக்த-கில்பிஷா:—தீய எண்ணங்களிலிருந்து விடுதலை பெறுதல்.
மேகங்கள் தான் வைத்திருந்த அனைத்தையும் துறந்த தூய ஒளியுடன் மிளிர்வதானது பெளதிக இச்சைகள் அனைத்தையும் துறந்து அதன் காரணமாகத் தீய எண்ணங்களிலிருந்து விடுதலை பெற்று அமைதியுடன் வாழும் முனிவர்களைப் பேன்றதாகும்.
பதம் 10.20.36
கிரயோ முமுசுஸ் தோயம் க்வசின் ந முமுசு: ஸிவம்
யதா ஜ்ஞானாம்ருதம் காலே ஜ்ஞானினோ தததே நவா
கிரய:—மலைகள்; முமுசு:—வெளியேற்றுதல்; தோயம்—தமது நீரினை; க்வசித்—சிலசமயம்; ந முமுசு:—வெறியேற்றுவதில்லை; ஸிவம்—தூய; யதா—போன்று; ஜ்ஞான—உன்னத ஞானத்தின்; அம்ருதம்—அமிர்தம்; காலே—உரியகாலத்தில்; ஜ்ஞானின:—ஆன்மீக ஞானத்தில் தேர்ந்தோர்; தததே—அருள்வது; ந வா—அல்லது இல்லை.
இப்பருவ காலத்தில் மலைகள் சிலசமயம் தமது தூய நீரை வெளியேற்றும் அல்லது சிலசமயம் வெளியேற்றுவதில்லை. இது எதனைப் போன்றதென்றால் உன்னத விஞ்ஞானத்தில் தேர்ந்தவர்கள் உன்னத ஞானாமிர்தத்தினை சிலசமயம் வழங்குவதும், சிலசமயம் வழங்காதிருப்பதும் போன்றதாகும்.
பதம் 10.20.37
நைவாவிதன் க்ஷீயமாணம் ஜலம் காத-ஜலே-சரா:
யதாயுர் அன்வ்-அஹம் க்ஷய்யம் நரா மூடா: குடும்பின:
ந—இல்லை; ஏவ—உண்மையில்; அவிதன்—போற்றுதல்; க்ஷீயமாணம்—வற்றுதல்; ஜலம்—நீர்; காத-ஜலே—ஆழமற்ற இடம்; சரா:—அசையும் உயிர்கள்; யதா—போன்று; ஆயு:—அவர்களது வாழ்நாள்; அனு—அஹம்—ஒவ்வொரு நாளும்; க்ஷய்யம்—குறைதல்; நரா:—மனிதர்கள்; மூடா:—மூடர்கள்; குடும்பின:—குடும்பத்தினருடன் வாழ்பவர்கள்.
நாள் ஒன்று கழியும்போது தனது வாழ்நாளில் ஒன்று குறைகிறது என்பதை அறியாத மூட இல்லறத்தானைப் போன்று ஆழமற்ற இடத்தில் நீந்திக்கொண்டிருக்கும் மீன் தான் வசிக்கும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது என்பதை அறிவதில்லை.
பதம் 10.20.38
காத-வாரி-சராஸ் தாபம் அவிந்தான் சரத்-அர்க-ஜம்
யதா தரித்ர: க்ருபண: குடும்பி அவிஜிதேந்த்ரிய:
காத-வாரி-சரா—ஆழமற்ற இடத்தில் வசிப்பவை; தாபம்—துன்புறுதல்; அவிந்தன்—அனுபவித்தல்; ஸரத்-அர்க-ஜம்—இலையுதிர் காலத்து சூரிய வெம்மையினால்; யதா—போன்று; தரித்ர:—ஓர் ஏழைமனிதன்; க்ருபண:—உலோப குணங்கொண்ட; குடும்பீ—இல்லறவாழ்வில் ஆழ்ந்த பற்றுடையவன்; அவிஜித-இந்த்ரிய:—புலன்களைக் கட்டுப்படுத்தாதவன்.
ஏழையும், கஞ்சனுமாகி இல்லறவாழ்வில் அளவுகடந்த பற்றுடையவனாக இருப்பவன் துன்பத்திற்காளாவது போன்று ஆழமில்லாத இடத்தில் வசிக்கும் மீன், இலையுதிர்காலச் சூரியனின் வெம்மையினால் துன்புறுகிறது.
பதம் 10.20.39
ஸனை: ஸனைர் ஜஹீ: பங்கம் ஸ்தலானி ஆமம் ச வீருத:
யராஹம்-மமதாம் தீரா: ஸரீராதிஷ்வ் அநாத்மஸு
ஸனை: ஸனை:—படிப்படியாக; ஜஹு:—நீங்கி; பங்கம்—அவற்றின் சேறு; ஸ்தலானி—நிலப்பகுதிகள்; ஆமம்—அவற்றின் இளந்தளிர் நிலை; ச—மற்றும்; வீருத:—தாவரங்கள்; யதா—போன்று; அஹம்-மமதாம்—ஆணவமும் சுயநலமும்; தீரா:—தெளிவுபெற்ற முனிவர்கள்; ஸரீர-ஆதிஷு—பௌதிக உடல் மற்றும் பிற புறப்பொருட்கள்; அநாத்மஸு—உண்மையான ஆத்மாவிலிருந்து அவை வேறுபட்டன.
படிப்படியாக நிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சேறு நீங்கப்பெற்று தாவரங்கள் தமது இளந்தளிர்ப் பருவத்தைக் கடக்கின்றன. அதுபோல் தெளிவுபெற்ற முனிவர்கள் தமது ஆணவம் மற்றம் சுயநலத்தினைக் கைவிடுகின்றனர். இக்குணங்கள் உண்மையான ஆத்மாவிலிருந்து வேறுபட்ட பெளதிக உடல் மற்றும் அதன் துணைப் பொருட்களின் அடிப்படையில் அமைந்தவையாகும்.
பதம் 10.20.40
நிஸ்சலாம்புர் அபூத் தூஷ்ணீம் ஸமுத்ர: ஸரத்-ஆகமே
ஆத்மனி உபரதே ஸம்யன் முனிர் வ்யுப்பரதாகம:
நிஸ்சல—அசைவற்று; அம்பு:—அதன்நீர்; அபூத்—ஆனது; தூஷ்ணீம்—அமைதி; ஸமுத்ர:—கடல்; ஸரத்—சரத்காலம்; ஆகமே—வருதல்; ஆத்மனி—ஆத்மா; உபரதே—பெளதிகச் செயல்கள் நீங்கி; ஸம்யக்—முற்றிலும்; முனி:—ஒரு முனிவன்; வ்யுபரத—துறந்த; ஆகம:—வேத-ஆகமங்கள்.
இலையுதிர்காலம் வந்தவுடன் கடலிலும், நீர்நிலைகளும் நிச்சலனமாக அமைதியுடன் இருப்பதானது உலகியற் செயல்களை மட்டுமல்லாது வேதாகமங்களையும் துறந்த ஒரு முனிவனைப் போன்றதாகும்.
பதம் 10.20.41
கேதாரேப்யஸ் த்வ் அபோ ‘க்ருஹ்ணன் கர்ஷக த்ருட-ஸேதுபி:
யதா ப்ராணை: ஸ்ரவஜ் ஜ்ஞானம் தத் நிரோதன யோகினி
கேதாரேப்ய:—நீர் நிறைந்த வயற்காடுகளிலிருந்து; து—மற்றும்; அப:—நீர்; அக்ருஹ்ணன்—எடுத்தல்; கர்ஸகா:—விவசாயிகள்; த்ருட—வலிமையான; ஸேதுபி:—கால்வாய்கள்; யதா—போன்று; ப்ராணை:—புலன்களின் மூலம்; ஸ்ரவத்—பொங்கிவருதல்; ஜ்ஞானம்—உணர்வு; தத்—அப்புலன்களின்; நிரோதேன—கடுமையான கட்டுப்பாட்டினால்; யோகினி:—யோகிகள்.
யோகத்தினைப் பயிற்சி செய்வோர் தமது உணர்வுகள் கொந்தளிக்கும் புலன்களின் வழியே வெளிப்படாமல் இருப்பதற்காகத் தமது புலன்களை கடுமையான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவது போன்று நெல் வயல்களில் பாய்ச்சிய நீர் பெருக்கி வெளியே வடிந்துவிடாமல் இருப்பதற்காக விவசாயிகள் வலிமையான மண்கரைகளை உயர்த்திக் கட்டுகின்றனர்.
பதம் 10.20.42
ஸரத்-அர்காம்ஸு-ஜாம்ஸ் தாபான் பூதானாம் உடுபோ ‘ஹரத்
தேஹாபிமான-ஜம் போதோ முகுந்தோ வ்ரஜ-யோஷிதாம்
ஸரத்-அர்க—இலையுதிர் காலச் சூரியனின்; அம்ஸு—கதிர்களிலிருந்து; ஜான்—உண்டான; தாபான்—துன்பம்; பூதானாம்—எல்லா உயிர்களின்; உடுப:—சந்திரன்; அஹரத்—நீக்குதல்; தேஹ—பௌதிக உடலுடன்; அபிமான-ஜம்—தவறான அடையாளத்தின் அடிப்படையில்; போத:—ஞானம்; முகுந்த:—பகவான் கிருஷ்ணர்; வ்ரஜ-யோஷிதாம்—விருந்தாவனப் பெண்களின்.
சூரியனின் சுடுகதிர்களின் காரணமாகத் துன்புற்ற அனைத்து உயிர்களையும் இலையுதிர்காலம் அத்துன்பத்திலிருந்து விடுவித்த செயல் தனது உடலுடன் தன்னை அடையானம் கண்டவனின் துன்பத்தை ஞானம் விடுவித்தது போன்றும், தனது பிரிவினால் வாடிய விருந்தாவன மங்கையரின் வாட்டத்திலிருந்து பகவான் முகுந்தன் அவர்களை விடுவித்தது போன்றதுமாகும்.
பதம் 10.20.43
கம் அஸோபத நிர்மேகம் ஸரத்-விமல-தாராகம்
ஸத்த்வ-யுக்தம் யதா சித்தம் ஸப்த-ப்ரஹ்மார்த-தர்ஷனம்
கம்—வானம்; அஸோபத—பளபளப்புடன் மின்னியது; நிர்மேகம்—மேகமின்றி; ஸரத்—சரத்காலம்; விமல—தெளிவாக; தாரகம்—தாரகைகள்; ஸத்த்வ-யுக்தம்—சத்துவகுணமுடைய; யதா—போன்று; சித்தம்—மனம்; ஸப்த-ப்ரஹ்ம—வேதங்கள்; அர்த—பொருள்; தர்ஷனம்—நேரடியாக உணர்தல்.
மேகங்கள் இன்றி தெளிவாகவும், நட்சத்திரங்களுடனும் காணப்பட்ட இலையுதிர்காலத்து வானம் ஒளி நிறைந்து விளங்கிய காட்சி வேதங்களின் மறைபொருளை நன்குணர்ந்த ஒருவனின் ஆன்மீக உணர்வினைப் போன்றதாக இருந்தது.
பதம் 10.20.44
அகண்ட-மண்டலோ வ்யோம்னி ராராஜோடு-கணை: ஸஸீ
யதா யது-பதி: க்ருஷ்ணோ வ்ருஷ்ணீ-சக்ராவ்ருதோ புவி
அகண்ட—அகண்ட; மண்டல:—மண்டலம்; வ்யோம்னி—ஞானத்தில்; ரராஜ—ஒளிர்ந்தது; உடு-கணை:—நட்சத்திரக் கூட்டங்கள்; ஸஸீ—சந்திரன்; யதா—போன்று; யது-பதி:—யது குலநாயகன்; க்ருஷண:—பகவான் கிருஷ்ணர்; வ்ருஷ்ணி-சக்ர—விருஷ்ணீக்களின் சக்கரத்தினால்; ஆவ்ருத:—சூழப்பட்டு; புவி—புவிமேல்.
யதுகுல நாயகரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்புவியில் விருஷ்ணீக்கள் அனைவராலும் சூழப்பட்டு ஒளிவீச இருந்ததைப் போன்று நட்சத்திரங்களால் சூழப்பட்ட முழுநிலவு வானத்தில் ஒளிவீசியது.
பதம் 10.20.45
ஆஸ்விஷ்ய ஸம-ஸீதோஷ்ணம் ப்ரஸுன-வன-மாருதம்
ஜானாஸ் தாபம் ஜஹுர் கோப்யொ ந க்ருஷ்ண-ஹ்ருத-சேதஸ:
ஆஸ்விஷ்ய—தழுவுதல்; ஸம—சமமாக; ஸீத-உஷ்ணம்—குளிர் மற்றும் வெம்மைக்கு நடுவே; ப்ரஸூன-வன—நறுமண மலர்க்காட்டின்; மாருதம்—தென்றல்; ஜனா:—பொதுமக்கள்; தாபம்—துன்பம்; ஜஹீ:—நீங்கப் பெற்றனர்; கோப்ய:—கோபியர்கள்; ந—இல்லை; க்ருஷ்ண—பகவான் கிருஷ்ணரால்; ஹ்ருத—திருடப்பட்ட; சேதஸ:—அவர்களது இதயங்கள்.
பகவான் கிருஷ்ணரிடம் இதயங்களைப் பறி கொடுத்த கோபியர்களைத் தவிர பிறர் நறுமணமலர்க்காட்டிலிருந்து வரும் தென்றல் காற்றைத் தழுவி மக்கள் தங்கள் துன்பங்களை மறக்க முடியும். இந்த காற்று அதிக வெப்பமுமின்றி மிதமாக இருந்தது.
பதம் 10.20.46
காவோ ம்ருகா: ககா நார்ய: புஷ்பிண்ய: ஸரதாபவன் அன்வீயமானா: ஸ்வ-வ்ருஷை: பலைர் ஈஸ-க்ரியா இவ
காவ:—பசுக்கள்; ம்ருகா:—பெண் மான்கள்; ககா:—பேடைப் பறவைகள்; நார்ய:—பெண்கள்; புஷ்பின்ய—பருவவயதில்; ஸரதா—சரத்காலத்தினால்; அபவன்—ஆயினர்; அன்வீயமானா:—தேடிச் செல்லுதல்; ஸ்வ-வ்ருஷை:—அந்தந்த துணையால்; பலை:—நல்ல பலன்களால்; ஈஸ-க்ரியா—பரமபுருஷ பகவானின் தொண்டில் செய்யப்படும் செயல்கள்; இவ—போன்று.
இலையுதிர் காலத்தின் பாதிப்பினால் பசுக்களும், பெண்மான்களும், பேடைப்பறவைகளும் உரிய பருவம் அடைந்து, பாலுறவு இன்பம் வேண்டி ஆண் துணைவர்களால் தேடப்படுவது என்பது முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டில் செய்யப்படும் செயல்களை அவற்றின் நற்பலன்கள் தாமே தேடி வருவன போன்றதாகும்.
பதம் 10.20.47
உதஹ்ருஷ்யன் வாரிஜானி ஸீர்யோத்தானே குமுத் விநா
ராஜ்ஞா து நிர்பயா லோகா யதா தஸ்யூன் விநா ந்ருப
உதஹ்ருஷ்யன்—ஏராளமாகப் பூக்கும்; வாரி-ஜானி—தாமரை மலர்கள்; ஸூர்ய—சூரியன்; உத்தானே—எழும் பொழுது; குமுத்—குமுதமலர்கள்; விநா—தவிர; ராஜ்ஞா—ஓர் அரசனின் முன்பு; து—உண்மையில்; நிர்பயா:—அச்சமின்றி; லோகா:—பொதுமக்கள்; யதா—போன்று; தஸ்யூன்—திருடர்கள்; விநா—தவிர; ந்ருப—ஓ, மன்னனே!
ஒ, பரீக்ஷித்து மன்னனே! இலையுதிர்காலச் சூரியன் கீழ்வானில் எழும்பொழுது, இரவில் மலரும் குமுத மலர்களைத் தவிர, தாமரை மலர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் மலர்வதானது வலிமைமிக்க அரசனின் ஆட்சியில் திருடர்களைத் தவிர குடிமக்கள் அனைவரும் அச்சமின்றி இருப்பது போன்றதாகும்.
பதம் 10.20.48
புர-க்ராமேஷ்வ் ஆக்ரயணைர் இந்த்ரியைஸ் ச மஹோத்ஸவை:
பபெள பூ: பக்வ-ஸஷ்யாட்யா கலாப்யாம் நிதராம் ஹரே:
புர—நகர்ப்புறங்களில்; க்ராமேஷு—மற்றும் கிராமங்களில்; ஆக்ரயணை:—புதிதாக அறுவடை செய்த தானியங்களைச் சுவைப்பதற்கான வேத வேள்விகளைச் செய்தல்; இந்த்ரியை:—மற்றும் பிற கொண்டாட்டங்கள்; ச—மற்றும்; மஹா-உத்ஸவை:— மஹாஉற்ச்சவங்கள்; பபௌ—ஒளி செய்தன; பூ:—பூமி; பக்வ—பக்குவமான; ஸஸ்ய—அதன் தானியங்கள்; ஆட்யா—வளமான; கலா—பகவானின் விரிவு ஆவாள்; ஆப்யாம்—அவர்கள் இருவருடன் (கிருஷ்ணர், பலராமர்); நிதராம்—மிகவும்; ஹரே:—முழுமுதற் கடவுளின்.
எல்லா நகரங்களிலும், கிராமங்களிலும் மக்கள் அறுவடைநாள் (பொங்கல்) மற்றும் அதனுடன் சேர்ந்து கொண்டாடப்படும் சில விழாக்கள் (போகி, மாட்டுப்பொங்கல்) போன்றவற்றை வேதங்கள் கூறுமாறு அக்கினி வேள்விகள் செய்து கொண்டாடுகின்றனர்: இதன் காரணமாக பூமி புதிதாக வந்த தானியங்களினால் பொலிவுற்றது. அதிலும் சிறப்பாக பரமபுருஷ பகவானின் அம்சமான கிருஷ்ணர் மற்றும் பலராமர் இருந்ததினால் பூமி எழிலுடையதாகத் திகழ்ந்தது.
பதம் 10.20.49
வணிக்-முனி-ந்ருப-ஸ்நாதா நிர்கம்யார்தான் ப்ரபேதிரே
வர்ஷ-ருத்தா யதா ஸித்தா: ஸ்வ-பிண்டான் கால ஆகதே
வணிக்—வணிகர்கள்; முனி—முனிவர்கள்; ந்ருப—அரசர்கள்; ஸ்நாதா:—பிரம்மச்சாரி மாணவர்கள்; நிர்கம்ய—வெளியே சென்று; அர்தான்—அவர்கள் விரும்பிய குறிக்கோள்; ப்ரபேதிரே—எய்தப்பெற்று; வர்ஷ—மழையினால்; ருத்தா:—தடுத்து நிறுத்தப்பட்டு; யதா—போன்று; ஸித்தா:—சித்தர்கள்; ஸ்வ-பிண்டான்—அவர்கள் அடைய விரும்பும் வடிவங்கள்; காலே—உரிய காலம்; ஆகதே—வந்தது.
மழையினால் தடுக்கப்பட்ட வணிகர்கள், முனிவர்கள், மன்னர்கள், பிரம்மச்சாரிகள் மாணவர்கள், அனைவரும் வெளியே சென்று தாங்கள் விரும்பிய பொருள்களை அடைந்ததானது இவ்வாழ்க்கையில் ஸித்தி கைவரப் பெற்றவர்கள் உரியகாலம் வரும் பொழுது தமது பெளதிக உடல்களை விட்டுத் தமக்குரிய வடிவங்களைப் பெறுவது போன்றதாகும்.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “பிருந்தாவனத்தில் மழைக் காலமும் இலையுதிர் காலமும்” எனும் தலைப்பை கொண்ட இருபதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.