அத்தியாயம் – 7
பூரணத்தின் ஞானம்
பதம் 7.1
ஸ்ரீ-பகவான் உவாச
மய் யாஸக்த-மனா: பார்த யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய:
அஸம்ஷயம் ஸமக்ரம் மாம் யதா க்ஞாஸ்யஸி தச் ச்ருணு
ஸ்ரீ-பகவான் உவாச – முழுமுதற் கடவுள் கூறினார்; மயி – என்னிடம்; ஆஸக்த-மனா: – பற்றிய மனதுடன்; பார்த – பிருதாவின் மகனே; யோகம் — யோகம்; யுஞ்ஜன் – இவ்வாறு பயின்று; மத்-ஆஷ்ரய: – எனது உணர்வில் (கிருஷ்ண உணர்வில்); அஸம்’ஷயம் – சந்தேகமின்றி; ஸமக்ரம் – முழுமையாக; மாம் – என்னை; யதா — எவ்வாறு; ஜ்ஞாஸ்யஸி – நீ அறியலாம்; தத் – அதை; ஷ்ருணு – கேட்க முயல்வாயாக.
புருஷோத்தமரான முழுமுதற்கடவுள் கூறினார்: பிருதாவின் மகனே, என்னிடம் பற்றுதல் கொண்ட மனதுடன், என்னைப் பற்றிய முழு உணர்வில், யோகத்தைப் பயில்வதன் மூலம் என்னை நீ எவ்வாறு சந்தேகம் ஏதுமின்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம் என்பதை இனி கேட்பாயாக.
பதம் 7.2
க்ஞானம் தே (அ)ஹம் ஸ-விக்ஞானம் இதம் வக்ஷ்யாம்-யஷேஷத:
யஜ் க்ஞாத்வா னேஹ பூயோ (அ)ன்யஜ் க்ஞாதவ்யம் அவஷிஷ்யதே
ஜ்ஞானம் – ஞானம் (புலன்களைக் கொண்டு அறியும் அசாதாரணமான அறிவு); தே – உனக்கு; அஹம் – நான்; ஸ – உடன்; விஜ்ஞானம் – விஞ்ஞானம் (ஆழமான தெய்வீக அறிவு); இதம் – இந்த; வக்ஷ்யாமி – விளக்குகிறேன்; அஷேஷத: – முழுவதும்; யத் – எதை; ஜ்ஞாத்வா — அறிவதால்; ந – இல்லை; இஹ – இவ்வுலகில்; பூய – மேலும்; அன்யத் – ஏதும் அதிகமாக; ஜ்ஞாதவ்யம் – அறிய வேண்டியவை; அவஷிஷ்யதே – மீதமிருப்பது.
தற்போது, சாதாரண அறிவையும் தெய்வீக அறிவையும் நான் உனக்கு முழுமையாக அறிவிக்கின்றேன். இதனை அறிந்த பின் நீ அறிய வேண்டியவை ஏதும் இருக்காது.
பதம் 7.3
மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஷ்சித் யததி ஸித்தயே
யததாம் அபி ஸித்தானாம் கஷ்சின் மாம் வேத்தி தத்த்வத:
மனுஷ்யாணாம் – மனிதர்களில்; ஸஹஸ்ரேஷு – பல்லாயிரம்; கஷ்சித் — ஏதேனும் ஒருவன்; யததி – முயல்கிறான்; ஸித்தயே – பக்குவத்திற்காக; யததாம் – அவ்வாறு முயல்வோரில்; அபி – கூட; ஸித்தானாம் – பக்குவத்தை அடைந்தவரில்; கஷ்சித் – ஏதேனும் ஒருவன்; மாம் – என்னை; வேத்தி — அறிகிறான்; தத்த்வத: – உள்ளபடி.
ஆயிரமாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவன் பக்குவமடைய முயற்சி செய்யலாம். அவ்வாறு பக்குவமடைந்தவர்களில் கூட யாரேனும் ஒருவனே என்னை உண்மையாக அறிகிறான்.
பதம் 7.4
பூமிர் ஆபோ (அ)னலோ வாயு: கம் மனோ புத்திர் ஏவ ச
அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதிர் அஷ்டதா
பூமி: – நிலம்; ஆப: – நீர்; அனல: – நெருப்பு; வாயு: – காற்று; கம் – ஆகாயம்; மன: – மனம்; புத்தி: – புத்தி; ஏவ – நிச்சயமாக; ச – மேலும்; அஹங்கார: – அஹங்காரம்; இதி — இவ்வாறு; இயம் – இவையெல்லாம்; மே – எனது; பின்னா — பிரிந்த; ப்ரக்ரு’தி: — சக்திகள்; அஷ்டதா – எட்டு.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம்—இந்த எட்டும் சேர்ந்ததே எனது பிரிந்த ஜட சக்திகளாகும்.
பதம் 7.5
அபரேயம் இதஸ் த்வ்ன்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்
ஜீவ-பூதாம் மஹா-பாஹோ யயேதம் தார்யதே ஜகத்
அபரா — தாழ்ந்த; இயம் – இந்த; இத: – இதற்குப்பின்; து – ஆனால்; அன்யாம் — மற்றொரு; ப்ரக்ரு’திம் – சக்தி; வித்தி – அறிய முயல்வாயாக; மே – எனது; பராம் – உயர்ந்த; ஜீவ-பூதாம் – ஜீவாத்மாக்கள்; மஹா-பாஹோ – பலம் பொருந்திய புயங்களை உடையோனே; யயா – யாரால்; இதம் – இந்த; தார்யதே – உபயோகிக்கப்படுவது; ஜகத் – ஜடவுலகம்.
பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, இதற்கு அப்பால், என்னுடைய உயந்த சக்தி ஒன்று உள்ளது. இந்த தாழ்ந்த ஜட இயற்கையினை தனது சுயநலனிற்காக உபயோகிக்ககூடிய ஜீவாத்மாக்களை அஃது உள்ளடக்கியதாகும்.
பதம் 7.6
ஏதத்-யோனீனி பூதானி ஸர்வாணீத்-யுபதாரய
அஹம் க்ருத்ஸ்னஸ்ய ஜஹத: ப்ரபவ: ப்ரலயஸ் ததா
ஏதத் – இவ்விரண்டு இயற்கைகள்; யோனீனி – பிறப்பின் மூலம்; பூதானி — எல்லாப் படைப்புகளும்; ஸர்வாணி – எல்லா; இதி – இவ்வாறு; உபதாரய — அறிவாய்; அஹம் – நான்; க்ரு’த்ஸ்னஸ்ய – எல்லாம் அடங்கிய; ஜகத: – உலகின்; ப்ரபவ: – தோற்ற மூலம்; ப்ரலய: – அழிவு; ததா – அதுபோல.
படைக்கப்பட்டவை அனைத்தும் இந்த இரண்டு இயற்கையைச் சேர்ந்தவையே. இவ்வுலகில் ஜடமாகவும் ஆன்மீகமாகவும் இருப்பவை அனைத்திற்கும், ஆதியும் அந்தமும் நானே என்பதை நிச்சயமாக அறிவாயாக.
பதம் 7.7
மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய
மயி ஸர்வம் இதம் ப்ரோதம் ஸூத்ரே மணி-கணா இவ
மத்த: – என்னைவிட; பர-தரம் — உயர்ந்த; ந – இல்லை; அன்யத்கிஞ்சித் – வேறு எதுவும்; அஸ்தி — இருக்க; தனஞ்ஜய – செல்வத்தை வெல்வோனே; மயி – என்னில்; ஸர்வம் – எல்லாம்; இதம் – நாம் காணும்; ப்ரோதம் – கோர்க்கப்பட்டு; ஸூத்ரே – நூலில்; மணி-கணா: – முத்துக்கள்; இவ – போல.
செல்வத்தை வெல்வோனே, என்னைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதுபோல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.
பதம் 7.8
ரஸோ (அ)ஹம் அப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஷஷி-ஸூர்யயோ:
ப்ரணவ: ஸர்வ-வேதேஷு ஷப்த: கே பௌருஷம் ந்ருஷு
ரஸ: – சுவை; அஹம் – நான்; அப்ஸு – நீரின்; கௌந்தேய – குந்தியின் மகனே; ப்ரபா – ஒளி; அஸ்மி – நானே; ஷஷி-ஸூர்யயோ: – சந்திர சூரியர்களின்; ப்ரணவ: – அ-உ-ம் எனும் மூன்று எழுத்துக்கள் கொண்ட ஓம்; ஸர்வ – எல்லா; வேதேஷு – வேதங்களில்; ஷப்த: – ஒலி; கே – வானில்; பௌருஷம் – திறமை; ந்ருஷு – மனிதரில்.
குந்தியின் மகனே, நானே நீரின் சுவையும், சூரிய சந்திரர்களின் ஒளியும், வேத மந்திரங்களின் பிரணவ ஒலியுமாக (ஓம்) இருக்கின்றேன்; ஆகாயத்தில் சப்தமாகவும், மனிதரில் திறமையாகவும் இருப்பது நானே.
பதம் 7.9
புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச தேஜஷ் சாஸ்மி விபாவஸௌ
ஜீவனம் ஸர்வ-பூதேஷு தபஷ் சாஸ்மி தபஸ்விஷு
புண்ய: – மூலம்; கந்த: – வாசனை; ப்ரு’திவ்யாம் – நிலத்தில்; ச – மேலும்; தேஜ: – வெப்பம்; ச – மேலும்; அஸ்மி – நானே; விபாவஸௌ – நெருப்பில்; ஜீவனம் – வாழ்வு; ஸர்வ – எல்லா; பூதேஷு – ஜீவன்களின்; தப: — தவம்; ச – மேலும்; அஸ்மி – நானே; தபஸ்விஷு – தவம் புரிவோரின்.
நிலத்தின் மூல நறுமணமும், நெருப்பின் வெப்பமும் நானே. உயிரினங்களின் உயிரும், தவம் புரிவோரின் தவமும் நானே.
பதம் 7.10
பீஜம் மாம் ஸர்வ-பூதானாம் வித்தி பார்த ஸநாதனம்
புத்திர் புத்திமதாம் அஸ்மி தேஜஸ் தேஜஸ்வினாம் அஹம்
பீஜம் – விதை; மாம் – என்னை; ஸர்வ-பூதானாம் — எல்லா உயிர்களின்; வித்தி – அறிய முயல்வாயாக; பார்த: – பிருதாவின் மகனே; ஸநாதனம் — மூல; புத்தி: – புத்தி; புத்தி-மதாம் – புத்திசாலிகளின்; அஸ்மி – நானே; தேஜ: – பலம்; தேஜஸ்வினாம் – பலசாலிகளின்; அஹம் – நான்.
பிருதாவின் மகனே, எல்லா உயிரினங்களின் மூல விதையும், புத்திசாலிகளின் புத்தியும், பலசாலிகளின் பலமும் நானே என்பதை அறிவாயாக.
பதம் 7.11
பலம் பலவதாம் சாஹம் காம-ராக-விவர்ஜிதம்
தர்மாவிருத்தோ பூதேஷு காமோ (அ)ஸ்மி பரதர்ஷப
பலம் — பலம்; பல-வதாம் – பலசாலிகளின்; ச – மேலும்; அஹம் – நானே; காம – காமம்; ராக – பற்று; விவர்ஜிதம் – இல்லாத; தர்ம-அவிருத்த – தர்மத்திற்கு விரோதமில்லாத; பூதேஷு – எல்லா உயிரினங்களிலும்; காம: – காமம்; அஸ்மி – நானே; பரத-ருஷப – பரதர்களின் தலைவனே.
பரதர்களின் தலைவா (அர்ஜுனா), காமமும் பற்றுதலும் அறவே இல்லாத பலசாலிகளின் பலம் நானே. தர்மத்தின் கொள்கைகளுக்கு விரோதமில்லாத காமமும் நானே.
பதம் 7.12
யே சைவ ஸாத்த்விகா பாவா ராஜஸாஸ் தாமஸாஷ் ச யே
மத்த ஏவேதி தான் வித்தி ந த்வஹம் தேஷு தே மயி
யே – அவையனைத்தும்; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; ஸாத்த்விகா: – ஸ்த்வ குணத்தில்; பாவா: – வாழ்க்கை நிலைகளும்; ராஜஸ: – ரஜோ குணத்தில்; தாமஸ: – தமோ குணத்தில்; ச – மேலும்; யே – அவையனைத்தும்; மத்த: – என்னிலிருந்து; ஏவ – நிச்சயமாக; இதி – இவ்வாறு; தான் — அவை; வித்தி – அறிய முயல்வாய்; ந – இல்லை; து – ஆனால்; அஹம் – நான்; தேஷு — அவற்றில்; தே – அவை; மயி — என்னில்.
ஸத்வம், ரஜஸ், தமஸ் இவற்றில் எந்த வாழ்க்கை நிலையானாலும், அவை எனது சக்தியால் படைக்கப்படுபவை என்பதை அறிவாயாக. ஒருவிதத்தில் நானே எல்லாம் என்றபோதிலும், நான் சுதந்திரமானவன். நான் ஜட இயற்கையின் குணங்களுக்கு உட்பட்டவனல்ல, மாறாக அவை எனக்குள் அடக்கம்.
பதம் 7.13
த்ரிபிர் குண-மயைர் பாவைர் ஏபி: ஸர்வம் இதம் ஜகத்
மோஹிதம் நாபி ஜானாதி மாம் ஏப்ய: பரம் அவ்யயம்
த்ரிபி: — மூன்று; குண-மயை: – குணங்களை உடைய; பாவை: – வாழ்க்கை நிலைகளால்; ஏபி: – இவையெல்லாம்; ஸர்வம் – முழு; இதம் – இந்த; ஜகத் – பிரபஞ்சம்; மோஹிதம் – மயங்கி; ந–அபிஜானாதி — அறிவதில்லை; மாம் – என்னை; ஏப்ய: – இவற்றிற்கு மேலான; பரம – பரமமான; அவ்யயம் — அழிவற்ற.
(ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்) மூவகை குணங்களில் மயங்கியிருப்பதால், குணங்களுக்கு அப்பாற்பட்ட அழிவற்ற என்னை முழு உலகமும் அறியாது.
பதம் 7.14
தைவீ ஹ்யேஷா குண-மயீ மம மாயா துரத்யயா
மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே
தைவீ – தெய்வீக; ஹி – நிச்சயமாக; ஏஷா – இந்த; குண-மயீ – ஜட இயற்கையின் முக்குணங்களாலான; மம – எனது; மாயா – சக்தி; துரத்யயா – வெல்வது கடினமானது; மாம் – என்னிடம்; ஏவ – நிச்சயமாக; யே – எவர்கள்; ப்ரபத்யந்தே — சரணடைந்தவர்; மாயாம்-ஏதாம் – இந்த மயக்க சக்தி; தரந்தி – வெல்கின்றனர்; தே – அவர்கள்.
ஜட இயற்கையின் முக்குணங்களாலான எனது இந்த தெய்வீக சக்தி வெல்லுவதற்கரியது. ஆனால் என்னிடம் சரணடைந்தோர் இதனை எளிதில் கடக்கலாம்.
பதம் 7.15
ந மாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா:
மாயயாபஹ்ருத-க்ஞானா ஆஸுரம் பாவம் ஆஷ்ரிதா:
ந – இல்லை; மாம் – எனக்கு; துஷ்க்ருதின — துஷ்டர்கள்; மூடா: – முட்டாள்; ப்ரபத்யந்தே — சரணடைதல்; நர-ஆதமா: – மனிதரில் கீழோர்; மாயயா – மாயையால்; அபஹ்ருத – அபகரிக்கப்பட்ட; ஜ்ஞான: – எவரது அறிவு; ஆஸுரம் — அசுர; பாவம் – தன்மை; ஆஷ்ரிதா: – கொண்டவர்.
சற்றும் அறிவற்ற மூடர்களும், மனிதரில் கடைநிலையோரும், மாயையால் அறிவு கவரப்பட்டவர்களும், அசுரரின் நாத்திகத் தன்மையை ஏற்றவர்களுமான துஷ்டர்கள் என்னிடம் சரணடைவதில்லை.
பதம் 7.16
சதுர்-விதா பஜந்தே மாம் ஜனா: ஸுக்ருதினோ (அ)ர்ஜுன
ஆர்தோ ஜிக்ஞாஸுர் அர்தார்தீ க்ஞானீ ச பரதர்ஷப
சது: விதா – நான்கு விதமான; பஜந்தே – தொண்டு புரிகின்றனர்; மாம் – எனக்கு; ஜனா: – மனிதர்; ஸு-க்ருதின: – நல்லோர்; அர்ஜுன — அர்ஜுனா; ஆர்த: – துயருற்றவன்; ஜிஜ்ஞாஸு: – கேள்வியுடையவன்; அர்த:-அர்தீ – ஜட இலாபங்களை விரும்புபவன்; ஜ்ஞானீ – விஷயங்களை உள்ளபடி அறிந்தவன்; ச – மேலும்; பரத-ரு’ஷப – பரத வம்சத்தில் சிறந்தனே.
பரதர்களில் சிறந்தவனே, நான்கு விதமான நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர்— துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் என்பவர் அவர்கள்.
பதம் 7.17
தேஷாம் க்ஞானீ நித்ய-யுக்த ஏக-பக்திர் விஷிஷ்யதே
ப்ரியோ ஹி க்ஞானினோ (அ)த்யர்தம் அஹம் ஸ ச மம ப்ரிய:
தேஷாம் – இவர்களின்; ஜ்ஞானீ – முழு ஞானத்தை உடையவன்; நித்ய-யுக்த: – எப்போதும் ஈடுபட்டு; ஏக – மட்டும்; பக்தி: – பக்தித் தொண்டில்; விஷிஷ்யதே – விசேஷமானவன்; ப்ரிய: – பிரியமானவன்; ஹி – நிச்சயமாக; ஜ்ஞானின: – ஞானிக்கு; அதியர்தம் – மிகவும்; அஹம் – நான்; ஸ: – அவன்; ச – மேலும்; மம – எனக்கு; ப்ரிய: – பிரியமானவன்.
இவர்களில், முழு ஞானத்துடன் எப்போதும் தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவனே சிறந்தவன்; ஏனெனில், நான் அவனுக்கு மிகவும் பிரியமானவன், அவனும் எனக்கு மிகவும் பிரியமானவன்.
பதம் 7.18
உதாரா: ஸர்வ ஏவைதே க்ஞானீ த்வாத்மைவ மே மதம்
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாம் ஏவானுத்தமாம் கதிம்
உதாரா: – உத்தமர்கள்; ஸர்வே – அனைவரும்; ஏவ – நிச்சயமாக; ஏதே – இந்த; ஜ்ஞானீ – ஞானி; து — ஆனால்; ஆத்மா ஏவ – என்னைப் போலவே; மே – எனது; மதம் – கருத்து; ஆஸ்தித: – நிலைபெற்றவன்; ஸ: – அவன்; ஹி – நிச்சயமாக; யுக்த-ஆத்மா — பக்தித் தொண்டில் ஈடுபட்டு; மாம் – என்னில்; ஏவ – நிச்சயமாக; அனுத்தமாம் – மிகவும் உயர்ந்த; கதிம் – இலக்கு.
இந்த பக்தர்கள் அனைவருமே சந்தேகமின்றி உத்தமர்கள்தான்; ஆயினும், என்னைப் பற்றிய ஞானத்தில் நிலைபெற்றுள்ளவனை, நான் என்னைப் போலவே கருதுகிறேன். அவன் எனது உன்னத தொண்டில் ஈடுபட்டிருப்பதால், மிகவுயர்ந்த, பக்குவ இலக்கான என்னை அவன் அடைவது உறுதி.
பதம் 7.19
பஹூனாம் ஜன்மனாம் அந்தே க்ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு-துர்லப:
பஹூனாம் – பற்பல; ஜன்மனாம் – பிறவிகளுக்கு; அந்தே – பிறகு; ஜ்ஞான-வான் – ஞானத்தில் முழுமை பெற்றவன்; மாம் – என்னிடம்; ப்ரபத்யதே – சரணடைகிறான்; வாஸுதேவ — பரம புருஷ பகவான், கிருஷ்ணர்; ஸர்வம் – எல்லாம்; இதி – இவ்வாறாக; ஸ: – அத்தகு; மஹா-ஆத்மா – மிகச்சிறந்த ஆத்மா; ஸு-துர்லப: — காண்பதற்கு மிகவும் அரிதானவன்.
பற்பல பிறவிகளுக்குப் பின், உண்மையான அறிவுடையவன், எல்லாக் காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.
பதம் 7.20
காமைஸ் தைஸ் தைர் ஹ்ருத-க்ஞானா: ப்ரபத்யந்தே (அ)ன்ய-தேவதா:
தம் தம் நியமம் ஆஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா
காமை: – ஆசைகளால்; தை: தை: – பல்வேறு; ஹ்ரு’த – அலைக்கழிக்கப்பட்ட; ஜ்ஞானா: – ஞானம்; ப்ரபத்யந்தே – சரணடைகின்றனர்; அன்ய – பிறருக்கு; தேவதா: – தேவர்கள்; தம் தம் — அதற்கேற்ற; நியமம் – நியமங்கள்; ஆஸ்தாய – பின்பற்றி; ப்ரக்ரு’த்யா — இயற்கையாகவே; நியதா: – கட்டுப்படுத்தப்பட்டு; ஸ்வயா – அவர்களது சுயமான.
ஜட ஆசைகளால் அறிவை இழந்தவர்கள், தேவர்களிடம் சரணடைந்து, தங்களது இயற்கைக்கு ஏற்ற வழிபாட்டு முறைகளையும் நியமங்களையும் பின்பற்றுகின்றனர்.
பதம் 7.21
யோ யோ யாம் யாம் தனும் பக்த: ஷ்ரத்தயார்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஷ்ரத்தாம் தாம் ஏவ விததாம்-யஹம்
ய: ய: – யாராயினும்; யாம் யாம் – ஏதாகிலும்; தனும் – தேவனின் ரூபத்தில்; பக்த: – பக்தன்; ஷ்ரத்தயா – நம்பிக்கையுடன்; அர்சிதும் — வழிபடுவதற்கு; இச்சதி — விரும்புகின்றானோ; தஸ்ய தஸ்ய – அவனுக்கு; அசலாம் – உறுதியான; ஷ்ரத்தாம் – நம்பிக்கை; தாம் – அவனுக்கு; ஏவ – நிச்சயமாக; விததாமி – அளிக்கிறேன்; அஹம் – நான்.
எல்லோரது இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன். தேவர்களை வழிபட வேண்டுமென ஒருவன் விரும்பும்போது, அந்த குறிப்பிட்ட தேவனிடம் பக்தி செய்வதற்கான அவனது நம்பிக்கையை நானே பலப்படுத்துகிறேன்.
பதம் 7.22
ஸ தயா ஷ்ரத்தயா யுக்தஸ் தஸ்யாராதனம் ஈஹதே
லபதே ச தத: காமான் மயைவ விஹிதான் ஹி தான்
ஸ: – அவன்; தயா — அத்துடன்; ஷ்ரத்தயா – நம்பிக்கையுடன்; யுக்த: – இணைந்து; தஸ்ய – அந்த தேவரது; ஆராதனம் — வழிபாடு; ஈஹதே – நாடுவதை; லபதே – அடைகிறான்; ச – மேலும்; தத: – அதிலிருந்து; காமான் — அவனது ஆசைகள்; மயா – என்னால்; ஏவ – மட்டுமே; விஹிதான் – ஏற்பாடு செய்யப்படுகிறது; ஹி – நிச்சயமாக; தான் — அவை.
இத்தகைய நம்பிக்கையுடன் இணைந்து, அவன் ஒரு குறிப்பிட்ட தேவரை வழிபட்டு, தனது ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறான். ஆனால் உண்மையில் இந்த நன்மைகளெல்லாம் என்னால் மட்டுமே அளிக்கப்படுபவையாகும்.
பதம் 7.23
அந்தவத் து பலம் தேஷாம் தத் பவத்-யல்ப-மேதஸாம்
தேவான் தேவ-யஜோ யாந்தி மத்-பக்தா யாந்தி மாம் அபி
அந்த-வத் – அழியக்கூடிய; து – ஆனால்; பலம் – பலம்; தேஷாம் – அவர்களது; தத் — அந்த; பவதி — ஆகின்றன; அல்ப-மேதஸாம் – சிற்றறிவு உடையோர்; தேவான் – தேவர்களிடம்; தேவ-யஜ: – தேவர்களை வழிபடுவோர்; யாந்தி – செல்கின்றனர்; மத் – எனது; பக்தா: – பக்தர்கள்; யாந்தி – அடைகின்றனர்; மாம் – என்னை; அபி – மேலும்.
தேவர்களை வழிபடும் சிற்றறிவு படைத்த மக்களது பலன்கள், தற்காலிகமானதும் ஓர் எல்லைக்கு உட்பட்டதுமாகும். தேவர்களை வழிபடுவோர் தேவர்களின் உலகங்களுக்குச் செல்வர். ஆனால் எனது பக்தர்கள் இறுதியில் எனது உன்னத உலகை அடைகின்றனர்.
பதம் 7.24
அவ்யக்தம் வ்யக்திம் ஆபன்னம் மன்யந்தே மாம் அபுத்தய:
பரம் பாவம் அஜானந்தோ மமாவ்யயம் அனுத்தமம்
அவ்யக்தம் – தோன்றாத; வ்யக்திம் – வியக்தித்துவம்; ஆபன்னம் — அடைந்த; மன்யந்தே – எண்ணுகின்றனர்; மாம் — என்னை; அபுத்தய: – சிற்றறிவு உடையோர்; பரம் – பரம; பாவம் – நிலையை; அஜானந்த: – அறியாமல்; மம – எனது; அவ்யயம் – அழிவற்ற; அனுத்தமம் – மிகவும் உயர்ந்தது.
யோகப் பயிற்சியில் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் பாதையிலிருந்து பிறழாமலும் ஈடுபட வேண்டும். மனக் கற்பனையால் பிறந்த எல்லா ஜட ஆசைகளையும் துறந்து, எல்லா பக்கங்களிலிருந்தும் அனைத்துப் புலன்களையும் மனதால் அடக்க வேண்டும்.
பதம் 7.25
நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோக-மாயா-ஸமாவ்ருத:
மூடோ (அ)யம் நாபிஜானாதி லோகோ மாம் அஜம் அவ்யயம்
ந – இல்லை; அஹம் – நான்; ப்ரகாஷ – தோன்றுவது; ஸர்வஸ்ய – எல்லாருக்கும்; யோக-மாயா – அந்தரங்க சக்தியினால்; ஸமாவ்ரு’த: – மறைக்கப்பட்டு; மூட: – முட்டாள்; அயம் – இதை; ந – இல்லை; அபிஜானாதி – அறிய முடியும்; லோக: – நபர்கள்; மாம் – என்னை; அஜம் – பிறப்பற்ற; அவ்யயம் – அழிவற்ற
சிற்றறிவுடையோருக்கும் முட்டாளுக்கும் நான் ஒருபோதும் தோன்றுவதில்லை. நான் எனது அந்தரங்க சக்தியால் கவரப்பட்டுள்ளேன், எனவே நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை இவர்கள் அறிவதில்லை.
பதம் 7.26
வேதாஹம் ஸமதீதானி வர்தமானானி சார்ஜுன
பவிஷ்யாணி ச பூதானி மாம் து வேத ந கஷ்சன
வேத: – அறிவேன்; அஹம் – நான்; ஸமதீதானி – கடந்தகாலம்; வர்தமானானி – நிகழ்காலம்; ச – மேலும்; அர்ஜுன – அர்ஜுனா; பவிஷ்யாணி – எதிர்காலம்; ச – மேலும்; பூதானி – எல்லா உயிர்வாழிகளையும்; மாம் – என்னை; து – ஆனால்; வேத – அறிந்தவன்; ந – இல்லை; கஷ்சன – யாரும்.
அர்ஜுனா, முழுமுதற் கடவுளான நான், கடந்த காலத்தில் நடந்தவை, தற்போது நடப்பவை, இனி நடக்க போகின்றவை அனைத்தையும் அறிவேன். நான் எல்லா ஜீவாத்மாக்களையும் நன்கறிவேன், ஆனால் என்னை அறிந்தவர் யாருமில்லை.
பதம் 7.27
இச்சா-த்வேஷ-ஸமுத்தேன த்வந்த்வ-மோஹேன பாரத
ஸர்வ-பூதானி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரந்தப
இச்சா – விருப்பு; த்வேஷ – வெறுப்பு; ஸமுத்தேன – எழக்கூடிய; த்வந்த்வ – இருமை; மோஹேன – மோகத்தினால்; பாரத — பரதகுலத் தோன்றலே; ஸர்வ – எல்லா; பூதானி — உயிர்வாழிகள்; ஸம்மோஹம் – மயக்கத்தில்; ஸர்கே: – பிறக்கும்போது; யாந்தி – செல்வன: பரந்தப – எதிரிகளை வெல்வோனே.
பரத குலத் தோன்றலே, எதிரிகளை வெல்வோனே, விருப்பு வெறுப்பினால் உண்டான இருமைகளில் மயங்கியுள்ள எல்லா உயிர்வாழிகளும், மிகுந்த குழப்பத்துடன் பிறந்துள்ளனர்.
பதம் 7.28
யேஷாம் த்வந்த-கதம் பாபம் ஜனானாம் புண்ய-கர்மணாம்
தே த்வந்த்வ-மோஹ-நிர்முக்தா பஜந்தே மாம் த்ருட-வ்ரதா:
யேஷாம் – எவர்களது; து – ஆனால்; அந்த-கதம் – முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதோ; பாபம் – பாவங்கள்; ஜனானாம் — மனிதர்களின்; புண்ய — புண்ணிய; கர்மணாம் – முற்செயல்கள்; தே – அவர்கள்; தரவந்த்வ – இருமையின்; மோஹ – மயக்கத்திலிருந்து; நிர்முக்தா: – விடுபட்டு; பஜந்தே – பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றனர்; மாம் – எனது; த்ரு’ட-வ்ரதா: – மன உறுதியுடன்.
முற்பிறவியிலும் இப்பிறவியிலும் புண்ணிய செயல்களில் ஈடுபட்டு, எவர்களது பாவ விளைவுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதோ, எவர்கள் மயக்கத்தின் இருமையிலிருந்து பூரணமாக விடுபட்டுள்ளார்களோ, அவர்களே எனது பக்தித் தொண்டில் மனவுறுதியுடன் ஈடுபடுவர்.
பதம் 7.29
ஜரா-மரண-மோக்ஷாய மாம்-ஆஷ்ரித்ய யதந்தி யே
தே ப்ரஹ்ம தத் விது: க்ருத்ஸ்னம்-அத்யாத்மம் கர்ம சாகிலம்
ஜரா – முதுமை; மரண – மரணத்திலிருந்து; மோக்ஷாய – மோக்ஷம் வேண்டி; மாம் – என்னிடம்; ஆஷ்ரித்ய – அடைக்கலம் புகுந்து; யதந்தி – முயற்சி செய்கின்றனர்; யே – அவர்கள் எல்லாரும்; தே – அத்தகையோர்; ப்ரஹ்ம – பிரம்மன்; தத் – உண்மையில்; விது: – அவர்கள் அறிவார்கள்; க்ரு’த்ஸ்னம் – அனைத்தையும்; அத்யாத்மம் – திவ்யமான; கர்ம – செயல்கள்; ச – கூட; அகிலம் – முழுமையாக.
முதுமையிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபட முயலும் அறிவுடையோர், பக்தித் தொண்டின் மூலம் என்னிடம் அடைக்கலம் புகுகின்றனர். திவ்யமானச் செயல்களைப் பற்றிய அனைத்தையும் அறிவதால், அவர்கள் உண்மையில் பிரம்மனே.
பதம் 7.30
ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியக்ஞம் ச யே விது:
ப்ரயாண-காலே (அ)பி ச மாம் தே விதுர் யுக்த-சேதஸ:
ஸ-ஆதிபூத – மேலும் பௌதிகப் தோற்றத்தினை ஆள்பவனாக; ஆதிதைவம் – எல்லா தேவர்களையும் ஆள்பவனாக; மாம் – என்னை; ஸ-ஆதியஜ்ஞம் – மற்றும் எல்லா யாகங்களையும் ஆள்பவனாக; ச – மேலும்; யே – எவர்கள்; விது: — அறிகின்றனர்; ப்ரயாண – மரண; காலே – காலத்தில்; அபி – கூட; ச – மேலும்; மாம் – என்னை; தே – அவர்கள்; விது: – அறிகின்றனர்; யுக்த-சேதஸ: – அவர்களது மனம் என்னில் ஈடுபட்டு.
பௌதிகத் தோற்றம், தேவர்கள் மற்றும எல்லாவித யாகங்களை ஆள்பவனாகவும், பரம புருஷனாகவும், என்னை அறிந்து, என்னைப் பற்றிய உணர்வுடன் இருப்பவர்கள், மரண நேரத்திலும்கூட பரம புருஷ பகவானான என்னை அறிய முடியும்.