அத்தியாயம் – 5
கர்ம யோகம் - கிருஷ்ண உணர்வில் செயல்
ப.கீ 5.1
அர்ஜுன உவாச
ஸன்ன்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புனர் யோகம் ச ஷம்ஸஸி
யச் ச்ரேய ஏதயோர் ஏகம் தன் மே ப்ரூஹி ஸு-நிஷ்சிதம்
அர்ஜுன: உவாச — அர்ஜுனன் கூறினான்; ஸந்ந்யாஸம் – துறவு; கர்மணாம் – எல்லா செயல்களிலும்; க்ரு’ஷ்ண — கிருஷ்ணரே; புன: – மீண்டும்; யோகம் — பக்தித் தொண்டு; ச – மேலும்; ஷம்’ஸஸி – நீர் போற்றுகின்றீர்; யத் – எது; ஷ்ரேய: – மிகுந்த நலனைத் தருவது; ஏதயோ: – இவையிரண்டில்; ஏகம் – ஒன்று; தத் — அதை; மே – எனக்கு; ப்ரூஹி – விளக்குவீராக; ஸு-நிஷ்சிதம் – தெளிவாக.
அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணரே, முதலில் செயலைத் துறக்கவும் பின்னர் பக்தியுடன் செயலாற்றவும் பரிந்துரைத்துள்ளீர். இவையிரண்டில் சிறந்த நன்மையைத் தருவது எது என்பதை தயவுசெய்து தெளிவாக விளக்குவீராக.
ப.கீ 5.2
ஶ்ரீ-பகவான் உவாச
ஸன்ன்யாஸ꞉ கர்ம-யோகஷ் ச நி:ஷ்ரேயஸ-கராவ் உபௌ
தயோஸ் து கர்ம-ஸன்ன்யாஸாத் கர்ம-யோகோ விஷிஷ்யதே
ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; ஸந்நியாஸ்: – செயலைத் துறத்தல்; கர்ம-யோக: – பக்தியில் செயலாற்றல்; ச – மேலும்; நிஷ்ரேயஸு-கரௌ – முக்தியின் பாதையை நோக்கிச் செலுத்தும்; உபௌ – இரண்டுமே; தயோ: – இவையிரண்டில்; து — ஆனால்; கர்ம-ஸந்ந்யாஸாத் – பலன்நோக்குச் செயல்களைத் துறப்பதைவிட; கர்ம-யோக: -பக்தியுடன் செயல்படுவது; விஷிஷ்யதே – சிறந்தது.
புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் பதிலுரைத்தார்: செயலைத் துறத்தல், பக்தியுடன் செயல்படுதல் இரண்டுமே முக்திக்கு ஏற்றதாகும். ஆனால் இவையிரண்டில், செயலைத் துறப்பதைவிட பக்தித் தொண்டில் செயல்படுவது சிறந்ததாகும்.
ப.கீ 5.3
க்ஞேய꞉ ஸ நித்ய-ஸன்ன்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி
நிர்த்வந்த்வோ ஹி மஹா-பாஹோ ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே
ஜ்ஞேய: – அறியப்பட வேண்டும்; ஸ: – அவன்; நித்ய – எப்போதும்; ஸந்ந்யாஸீ – சந்நியாசி; ய: – எவனொருவன்; ந – ஒருபோதும் இல்லை; த்வேஷ்டி — வெறுப்பது; ந – இல்லை; காங்க்ஷதி – விரும்புவது; நிர்த்வந்தவ: – எல்லா இருமைகளிலிருந்தும் விடுபட்டு; ஹி – நிச்சயமாக; மஹா-பாஹோ – பலம் பொருந்திய புயங்களை உடையோனே; ஸுகம் — இன்பமாக; பந்தாத் – பந்தங்களிலிருந்து; ப்ரமுச்யதே – முழுமையாக முக்தியடைகிறான்.
எவனொருவன் தனது செயல்களின் விளைவுகளில் விருப்பு வெறுப்பு அற்றவனோ, அவனே நிரந்தரமான சந்நியாசியாவான். பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, எல்லா இருமைகளிலிருந்தும் விடுபட்டுள்ள அத்தகையோன், பௌதிக பந்தங்களை எளிதில் வென்று, முழுமையாக முக்தியடைகிறான்.
ப.கீ 5.4
ஸாங்க்ய-யோகௌ ப்ருதக் பாலா꞉ ப்ரவதந்தி ந பண்டிதா:
ஏகம் அப்-யாஸ்தித꞉ ஸம்யக் உபயோர் விந்ததே பலம்
ஸாங்க்ய — ஜட உலகின் ஆய்வறிவு; யோகௌ – பக்தித் தொண்டில் செயல்; ப்ருதக் – வெவ்வேறு; பாலா: – சிற்றறிவினர்; ப்ரவதந்தி – பேசுகின்றனர்; ந – என்றுமில்லை; பண்டிதா: – பண்டிதர்கள்; ஏகம் – ஒன்றில்; அபி – இருப்பினும்; ஆஸ்தித: – நிலைபெற்று; ஸம்யக் – பூரணமாக; உபயோ: – இரண்டின்; விந்ததே – அனுபவிக்கின்றனர்; பலம் – விளைவு.
பக்தித் தொண்டு (கர்ம யோகம்) ஜட உலகின் ஆய்வு அறிவிலிருந்து (ஸாங்கிய யோகத்திலிருந்து) வேறுபட்டது என்று அறிவற்றோரே பேசுவர். எவனொருவன் தன்னை இவ்விரண்டு பாதைகளில் ஏதேனும் ஒன்றில் முழுமையாக ஈடுபடுத்துகிறானோ, அவன் இரண்டின் பலனையும் அடைகிறான் என்று உண்மையான பண்டிதர்கள் கூறுகின்றனர்.
ப.கீ 5.5
யத் ஸாங்க்யை꞉ ப்ராப்யதே ஸ்தானம் தத் யோகைர் அபி கம்யதே
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய꞉ பஷ்யதி ஸ பஷ்யதி
யத் – எது; ஸாங்க்யை: – ஸாங்கிய தத்துவத்தால்; ப்ராப்யதே — அடையப்படுகிறதோ; ஸ்தானம் — நிலை; தத் – அது; யோகை: — பக்தித் தொண்டால்; அபி — கூட; கம்யதே – அடையலாம்; ஏகம் – ஒன்று; ஸாங்க்யம் – ஆய்வறிவு; ச – மேலும்; யோகம் – பக்தியில் செயல்; ச – மேலும்; ய: – எவனொருவன்: பஷ்யதி – காண்கிறானோ; ஸ: – அவனே; பஷ்யதி – உண்மையில் காண்கிறான்.
எவனொருவன், ஸாங்கிய யோகத்தினால் அடையக்கூடிய அதே நிலை பக்தித் தொண்டினாலும் அடையக்கூடியதே என்பதை அறிந்து, ஸாங்கிய யோகத்தையும் பக்தித் தொண்டையும் சமநிலையில் காண்கிறானோ, அவனே உள்ளதை உள்ளபடி காண்பவனாவான்.
ப.கீ 5.6
ஸன்ன்யாஸஸ் து மஹா-பாஹோ து꞉கம் ஆப்தும் அயோகத꞉
யோக-யுக்தோ முனிர் ப்ரஹ்ம ந சிரேணாதிகச்சதி
ஸந்ந்யாஸ: – துறவு வாழ்க்கை; து – ஆனால்; மஹா-பாஹோ – பலம் பொருந்திய புயங்களை உடையவனே; து:கம் – துக்கம்; ஆப்தும் – மிகுந்தது; அயோகத: – பக்தித் தொண்டு இல்லாமல்; யோக-யுக்த: — பக்தித் தொண்டில் ஈடுபட்டவன்; முனி: – சிந்திப்பவன்; ப்ரஹ்ம – பரம்பொருளை; ந சிரேண — தாமதமின்றி; அதிகச்சதி — அடைகின்றான்.
இறைவனின் பக்தித் தொண்டில் ஈடுபடாமல், வெறுமனே எல்லாச் செயல்களையும் துறப்பது ஒருவனை மகிழ்விக்காது. ஆனால் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள சிந்தனையுடைய மனிதன், தாமதமின்றி பரம்பொருளை அடைய முடியும்.
ப.கீ 5.7
யோக-யுக்தோ விஷுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய꞉
ஸர்வ-பூதாத்ம-பூதாத்மா குர்வன்ன் அபி ந லிப்யதே
யோக-யுக்த: — பக்தித் தொண்டில் ஈடுபட்டு; விஷுத்த-ஆத்மா — தூய்மையடைந்த ஆத்மா; விஜித-ஆத்மா – தன்னைக் கட்டுப்படுத்தி; ஜித-இந்த்ரிய — புலன்களைக் கட்டுப்படுத்தி; ஸர்வ-பூத – எல்லா உயிர்வாழிகளுக்கும்; ஆத்ம-பூத-ஆத்மா – கருணையுடைய; குர்வன் அபி – செயலில் ஈடுபட்டிருந்தாலும்; ந – என்றுமில்லை; லிப்யதே – பந்தப்படுவது.
மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்தி பக்தியுடன் செயல்படும் தூய ஆத்மா, அனைவருக்கும் பிரியமானவன், அனைவரும் அவனுக்கு பிரியமானவர்கள், எப்போதும் செயலில் ஈடுபட்டுள்ளபோதிலும், அத்தகு மனிதன் பந்தப்படுவதில்லை.
ப.கீ 5.8 – 5.9
நைவ கிஞ்சித் கரோமீதி
யுக்தோ மன்யேத தத்த்வ-வித்
பஷ்யஞ் ஷ்ருண்வன் ஸ்ப்ருஷஞ் ஜிக்ரன்ன்
அஷ்னன் கச்சன் ஸ்வபன் ஷ்வஸன்
ப்ரலபன் விஸ்ருஜன் க்ருஹ்ணன்ன் உன்மிஷன் நிமிஷன்ன் அபி
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயன்
ந – என்றுமில்லை; ஏவ – நிச்சியமாக; கிஞ்சித் – எதுவுமே; கரோமி – நான் செய்கிறேன்; இதி – என்று; யுக்த: – தெய்வீக உணர்வில் ஈடுபட்டு; மன்யேத – எண்ணுகிறான்; தத்த்வ-வித் – உண்மையை அறிந்தவன்; பஷ்யன் – பார்த்தல்; ஷ்ருண்வன் – கேட்டல்; ஸ்ப்ருஷன் — தொடுதல்; ஜிக்ரன் – நுகர்தல்; அஷ்னன் – உண்ணுதல்; கச்சன் — செல்லுதல்; ஸ்வபன் — கனவு காணல்; ஷ்வஸன் — சுவாசித்தல்; ப்ரலபன் – பேசுதல்; விஸ்ருஜன் – துறத்தல்; க்ரு’ஹ்ணன் – ஏற்றல்; உன்மிஷன் – திறத்தல்; நிமிஷன் — மூடுதல்; அபி – இருப்பினும்; இந்த்ரியாணி – புலன்கள்; இந்த்ரிய-அர்தேஷு — புலனுகர்ச்சியில்; வர்தந்தே – அவர்கள் ஈடுபட்டிருக்கட்டும் என்று; இதி – இவ்வாறாக; தாரயன் – எண்ணுதல்.
தெய்வீக உணர்வில் இருப்பவன், பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்தல், உண்ணுதல், செல்லுதல், உறங்குதல், சுவாசித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பினும், உண்மையில் தான் ஒன்றுமே செய்வதில்லை என்பதை எப்போதும் தனக்குள் அறிந்துள்ளான். ஏனெனில், பேசும்போதும், கழிக்கும்போதும், ஏற்றுக்கொள்ளும் போதும், கண்களை மூடித் திறக்கும்போதும், ஜடப்புலன்களே அவற்றின் விஷயங்களுடன் ஈடுபடுகின்றன என்றும், அவற்றிலிருந்து தான் வேறுபட்டவன் என்றும், அவன் எப்போதும் அறிகின்றான்.
ப.கீ 5.10
ப்ரஹ்மண்-யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய꞉
லிப்யதே ந ஸ பாபேன பத்ம-பத்ரம் இவாம்பஸா
ப்ரஹ்மணி – பரம புருஷ பகவானுக்கு; ஆதாய – சார்ந்து; கர்மாணி – எல்லாச் செயல்களும்; ஸங்கம் – பற்றுதல்; த்யக்த்வா — துறந்து; கரோதி – செய்கிறான்; ய: – எவன்; லிப்யதே — பாதிக்கப்படுதல்; ந – என்றுமில்லை; ஸ: – அவன்; பாபேன் — பாவத்தால்; பத்ம-பத்ரம் – தாமரை இலை; இவ — போல; அம்பஸா — நீரினால்.
பற்றின்றி தனது கடமைகளைச் செய்து, பலன்களை பரம புருஷ பகவானுக்கு அர்ப்பணிப்பவன், தாமரை இலை எவ்வாறு நீரால் தீண்டப்படுவதில்லையோ, அதுபோல அவன் பாவ விளைவுகளால் தீண்டப்படுவதில்லை.
ப.கீ 5.11
காயேன மனஸா புத்த்யா கேவலைர் இந்த்ரியைர் அபி
யோகின꞉ கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்ம-ஷுத்தயே
காயேன – உடலால்; மனஸா – மனதால்; புத்த்யா — புத்தியால்; கேவலை: – தூய்மையுற்று; இந்தரியை: – புலன்களால்; அபி – கூட; யோகின: – கிருஷ்ண உணர்வினர்; கர்ம — செயல்கள்; குர்வந்தி — செய்கின்றனர்; ஸங்கம் – பற்றுதல்; த்யக்த்வா — துறந்து; ஆத்ம – ஆத்மா; ஷுத்தயே – தூய்மைப்படுத்தும் நோக்கத்துடன்.
பற்றுதலைத் துறந்த யோகிகள், தூய்மையடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், உடல், மனம், புத்தி மற்றும் புலன்களால்கூட செயல்படுகின்றனர்.
ப.கீ 5.12
யுக்த꞉ கர்ம-பலம் த்யக்த்வா ஷாந்திம் ஆப்னோதி நைஷ்டிகீம்
அயுக்த꞉ காம-காரேண பலே ஸக்தோ நிபத்யதே
யுக்த: – பக்தித் தொண்டில் ஈடுபட்டவன்; கர்ம-பலம் – எல்லா செயல்களின் பலன்கள்; த்யக்த்வா — துறந்து; ஷாந்திம் – பூரண அமைதி; ஆப்னோதி — அடைகிறான்; நைஷ்டிகீம் – அசைவற்ற; அயுக்த: – கிருஷ்ண உணர்வில் இல்லாதவன்; காம-காரேண – செயலின் பலனை அனுபவிக்க விரும்புவதால்; பலே — பலன்களில்; ஸக்தோ – பற்றுக் கொண்டு; நிபத்யதே – பந்தப்படுகிறான்.
பக்தியில் உறுதியாக உள்ள ஆத்மா, எல்லாச் செயல்களின் பலனையும் எனக்கே அர்ப்பணிப்பதால், பூரண அமைதியை அடைகிறான். ஆனால் தெய்வீகத்துடன் இணையாதவனோ, தனது முயற்சியின் பலனை அனுபவிக்கும் பேராசையால் பந்தப்படுகிறான்.
ப.கீ 5.13
ஸர்வ-கர்மாணி மனஸா ஸன்ன்யஸ்யாஸ்தே ஸுகம் வஷீ
நவ-த்வாரே புரே தேஹீ நைவ குர்வன் ந காரயன்
ஸர்வ – எல்லா; கர்மாணி – செயல்கள்; மனஸா — மனதால்; ஸன்ன்யஸ்ய – துறந்து; ஆஸ்தே — இருக்கிறான்; ஸுகம் — சுகத்தில்; வஷீ – வசப்படுத்தியவன்; நவ-த்வாரே – ஒன்பது கதவுகளைக் கொண்ட இடத்தில்; புரே – நகரில்; தே – உடலையுடைய ஆத்மா; ந – என்றுமில்லை; ஏவ – நிச்சியமாக; குர்வன் – எதையும் செய்வது; ந – இல்லை; காரயன் — நடப்பதற்கு காரணமாவது.
உடலையுடைய ஆத்மா, தனது இயற்கையைக் கட்டுப்படுத்தி, மனதால் எல்லாச் செயல்களையும் துறந்துவிடும்போது, செய்யாமலும் செயலுக்கு காரணமாகாமலும் ஒன்பது கதவுகளைக் கொண்ட நகரில் (பௌதிக உடலில்) இன்பமாக வசிக்கின்றான்.
ப.கீ 5.14
ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு꞉
ந கர்ம-பல-ஸம்யோகம் ஸ்வபாவஸ் து ப்ரவர்ததே
ந – என்றுமில்லை; கர்திரு’த்வம் – உரிமை; ந – இல்லை; கர்மாணி – செயல்கள்; லோகஸ்ய – உலகினரின்; ஸ்ரு’ஜதி – படைத்தல்; ப்ரபு: – உடலெனும் நகரத்தின் நாயகன்; ந – இல்லை; கர்ம-பல – செயல்களின் பலன்கள்; ஸம்யோகம் — இணைப்பு; ஸ்வபாவ: – ஜட இயற்கையின் குணங்கள்; து – ஆனால்; ப்ரவர்ததே – செயல்படுகின்றன
உடல் என்னும் நகரத்தின் நாயகனான ஆத்மா, செயல்களை உண்டாக்குவதில்லை, செயல்படுமாறு மக்களைத் தூண்டுவதுமில்லை, செயல்களின் பலன்களையும் உண்டாக்குவதில்லை. இவையெல்லாம் ஜட இயற்கையின் குணங்களால் செயலாற்றப் படுபவையே.
ப.கீ 5.15
நாதத்தே கஸ்யசித் பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு꞉
அக்ஞானேனாவ்ருதம் க்ஞானம் தேன முஹ்யந்தி ஜந்தவ:
ந – என்றுமில்லை; ஆதத்தே – ஏற்பது; கஸ்யசித் – எவருடைய; பாபம் – பாவத்தையும்; ந – இல்லை; ச – மேலும்; ஏவ – நிச்சியமாக; ஸு-க்ருதம் – புண்ணியச் செயல்கள்; விபு: – பரம புருஷர்; அஜ்ஞானேன – அறியாமையால்; ஆவருதம் – மறைக்கப்பட்டு; ஜ்ஞானம் – ஞானம்; தேன — அதனால்; முஹ்யந்தி – மயங்குகின்றனர்; ஜந்தவ: – உயிர்வாழிகள்.
அச்செயலின் பாவ புண்ணியத்தை பரம புருஷரும் ஏற்பதில்லை. ஜீவனின் உண்மை ஞானம் அறியாமையினால் மறைக்கப்பட்டுள்ளது. இந்த அறியாமையே ஆத்மாவின் மயக்கத்திற்கு காரணமாகும்.
ப.கீ 5.16
க்ஞானேன து தத் அக்ஞானம் யேஷாம் நாஷிதம் ஆத்மன꞉
தேஷாம் ஆதித்ய-வஜ் க்ஞானம் ப்ரகாஷயதி தத் பரம்
ஜ்ஞானேன — ஞானத்தால்; து – ஆனால்; தத் – அது; அஜ்ஞானம் – அஞ்ஞானம்; யேஷாம் – எவரது; நாஷிதம் – அழிக்கப்படுகிறது; ஆத்மன: – ஆத்மாவின்; தேஷாம் — அவற்றின்; ஆதித்ய-வத் — உதயமாகும் சூரியனைப் போல; ஜ்ஞானம் – ஞானம்; ப்ரகாஷயதி — வெளிப்படுத்தப்படுகிறது: தத் பரம் – கிருஷ்ண உணர்வு.
இருப்பினும், அஞ்ஞானத்தை அழிக்கும் ஞானத்தால் ஒருவன் தெளிவடையும்போது, பகல் நேரத்தில் சூரியன் எல்லாவற்றையும் வெளிச்சப்படுத்துவதைப் போல, அவனது ஞானம் எல்லாவற்றையும் வெளிப்படுத்துகின்றது.
ப.கீ 5.17
தத்-புத்தயஸ் தத்-ஆத்மானஸ் தன்-நிஷ்டாஸ் தத்-பராயணா꞉
கச்சந்த்-யபுனர்-ஆவ்ருத்திம் க்ஞான-நிர்தூத-கல்மஷா꞉
தத்-புத்தய: — பரத்தில் புத்தியை நிலைநிறுத்தியவன்; தத்-ஆத்மான: – பரத்தில் மனத்தை நிலைநிறுத்தியவன்; தத்-நிஷ்டா – பரத்தில் மட்டுமே நம்பிக்கை உடையவன்; தத்-பராயணா: – அவரிடம் பூரணமாக சரணடைந்தவன்; கச்சந்தி – செல்கின்றான்; அபுன:-ஆவ்ரு’த்திம் – முக்திக்கு; ஜ்ஞான – ஞானத்தால்; நிர்தூத – தூய்மையடைந்து; கல்மஷா: – களங்கங்கள்.
எப்போது ஒருவனது புத்தி, மனம், நம்பிக்கை, புகலிடம் என அனைத்தும் பரத்தில் நிலைநிறுத்தப்படுகிறதோ, அப்போது, பூரண ஞானத்தினால், அவன் தனது களங்கங்களிலிருந்து முற்றிலும் தூய்மையடைந்து, விடுதலைப் பாதையில் நேராக முன்னேறுகிறான்.
ப.கீ 5.18
வித்யா-வினய-ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி
ஷுனி சைவ ஷ்வ-பாகே ச பண்டிதா꞉ ஸம-தர்ஷின꞉
வித்யா – கல்வி; வினய – அடக்கம்; ஸம்பன்னே – முழுதும் அடங்கிய; ப்ராஹ்மணே – அந்தணனிலும்; கவி – பசு; ஹஸ்தினி – யானை; ஷுனி – நாயில்; ச – கூட; ஏவ – நிச்சயமாக; ஷ்வ-பாகே – நாயைத்தின்னும் மனிதரில்; ச – முறையே; பண்டிதா: – அறிவாளிகள்; ஸ்ம-தர்ஷின: – சம நோக்குடனே காண்கிறார்கள்.
அடக்கமுள்ள பண்டிதர்கள் தங்களது உண்மை ஞானத்தின் வாயிலாக, கற்றறிந்த தன்னடக்கமுள்ள பிராமணன், பசு, யானை, நாய், நாயைத் தின்பவன் (கீழ் ஜாதி) என அனைவரையும் சம நோக்கில் காண்கின்றனர்.
ப.கீ 5.19
இஹைவ தைர் ஜித꞉ ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மன꞉
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா꞉
இஹ – இவ்வாழ்வில்; ஏவ – நிச்சியமாக; தை: – அவர்களால்; ஜித: – வெல்லப்பட்டு; ஸர்க: – பிறப்பும் இறப்பும்; யேஷாம் — அவர்களது; ஸாம்யே – சமநோக்கில்; ஸ்திதம் – நிலைபெற்று; மன: – மனம்; நிர்தோஷம் – தோஷமில்லாத; ஹி – நிச்சியமாக; ஸமம் – சமத்துவத்தில்; ப்ரஹ்ம – பிரம்மனைப் போன்று; தஸ்மாத் – எனவே; ப்ரஹ்மணி – பிரம்மனில்; தே – அவர்கள்; ஸ்திதா: – நிலைபெற்றுள்ளனர்.
ஒருமையிலும் சமத்துவத்திலும் மனதை நிலைநிறுத்தியவர்கள், பிறப்பு இறப்பின் நியதிகளை ஏற்கனவே வென்றுவிட்டனர். பிரம்மனைப் போன்றே தோஷமற்று இருப்பதால், அவர்கள் ஏற்கனவே பிரம்மனில் நிலைபெற்றவர்கள்.
ப.கீ 5.20
ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம்
ஸ்திர-புத்திர் அஸம்மூடோ ப்ரஹ்ம-வித் ப்ரஹ்மணி ஸ்தித꞉
ந – என்றுமில்லை: ப்ரஹ்ருஷ்யேத் – மகிழ்வது; ப்ரியம் – விருப்பமுள்ள; ப்ராப்ய — அடைவதால்; ந – இல்லை; உத்விஜேத் – மனக் கிளர்ச்சியடைவது; ப்ராப்ய — அடைவதால்; ச- மேலும்; அப்ரியம் – விருப்பமில்லாத; ஸ்திர-புத்தி: – ஸ்திர புத்தியுடைய; அஸம்மூட: – மயங்காத; ப்ரஹ்ம-வித் – பிரம்மனைப் பக்குவமாக அறிந்தவன்; ப்ரஹ்மணி – பிரம்மனில்; ஸ்தித: – நிலைபெற்றுள்ளான்.
எவனொருவன் விரும்பியவற்றை அடைவதால் மகிழ்வும் விரும்பாதவற்றை பெறுவதால் துயரமும் அடைவதில்லையோ, எவனொருவன் ஸ்திர புத்தியுடனும், மயங்காமலும், இறை விஞ்ஞானத்தை அறிந்தவனாகவும் உள்ளானோ, அவன் ஏற்கனவே பிரம்மனில் நிலைபெற்றவனாவான்.
ப.கீ 5.21
பாஹ்ய-ஸ்பர்ஷேஷ்-வஸக்தாத்மா விந்தத் யாத்மனி யத் ஸுகம்
ஸ ப்ரஹ்ம-யோக-யுக்தாத்மா ஸுகம் அக்ஷயம் அஷ்னுதே
பாஹ்ய-ஸ்பர்ஷேஷு — புறப் புலனின்பத்தில்; அஸக்த-ஆத்மா — பற்றுதல் கொள்ளாதவன்; விந்ததி — இன்புறுகிறான்; ஆத்மனி – ஆத்மாவில்; யத் – எதுவோ; ஸுகம் — சுகத்தை; ஸ: – அவன்; ப்ரஹ்ம-யோக – பிரம்ம யோகத்தால்; யுக்த-ஆத்மா – தன்னிறைவு கொண்டு; ஸுகம் – சுகம்; அக்ஷயம் – அளவற்ற அஷ்னுதே — அனுபவிக்கிறான்.
இத்தகு முக்திபெற்ற ஆத்மா ஜடப் புலனின்பங்களால் கவரப்படுவதில்லை, ஆனால் (ஸமாதி நிலையில்) எப்போதும் தன்னுள்ளே சுகத்தை அனுபவிக்கின்றான். இவ்விதமாக, பரத்தை தியானிப்பதால் தன்னுணர்வு உடையோன் எல்லையற்ற சுகத்தை அனுபவிக்கின்றான்.
ப.கீ 5.22
யே ஹி ஸம்ஸ்பர்ஷ-ஜா போகா து꞉க-யோனய ஏவ தே
ஆத்-ய்ந்தவந்த꞉ கௌந்தேய ந தேஷு ரமதே புத꞉
யே – அவர்கள்; ஹி – நிச்சயமாக; ஸம்ஸ்பர்ஷ-ஜா: — ஜடப் புலன்களின் தொடர்பினால்; போகா — இன்பம்; து:க – துன்பம்; யோனய: – மூலமான; ஏவ – நிச்சயமாக; தே – அவை; ஆதி – முதல்; அந்த – முடிவு; வந்த: – உட்பட்டவை; கௌந்தேய – குந்தியின் மகனே; ந – என்றுமில்லை; தேஷு – அவற்றில்; ரமதே – மகிழ்வடைவது; புத: – புத்தியுடையோர்.
ஜடப் புலன்களின் தொடர்பினால் வரும் இன்பம், துன்பங்களுக்குக் காரணமாக இருப்பதால், அறிவுடையோன் அதில் பங்கு கொள்வதில்லை. குந்தியின் மகனே, இத்தகு இன்பங்களுக்கு ஆரம்பமும் முடிவும் இருப்பதால், அறிவுடையோன் இவற்றினால் மகிழ்ச்சியடைவதில்லை.
ப.கீ 5.23
ஷக்னோதீஹைவ ய꞉ ஸோடும் ப்ராக் ஷரீர-விமோக்ஷணாத்
காம-க்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த꞉ ஸ ஸுகீ நர꞉
ஷக்னோதி — செய்ய முடியும்; இஹ ஏவ – இந்த உடலில்; ய: – எவனொருவன்; ஸோடும் — பொறுத்துக் கொள்ள; ப்ராக் – முன்; ஷரீர – உடல்; விமோக்ஷணாத் – விடுவதற்கு; காம – காமம்; க்ரோத – கோபம்; உத்பவம் – இருந்து உண்டாகின்ற; வேகம் – உந்துதல்; ஸ: – அவன்; யுக்த: – மெய்மறந்த நிலையில்; ஸ: – அவன்; ஸுகீ — சுகமான; நர: – மனிதன்.
ஒருவனால் தனது தற்போதைய உடலை நீக்கும் முன்பு, ஜடப் புலன்களின் உந்துதல்களை பொறுத்துக் கொள்ளவும், காமத்தையும் கோபத்தையும் கட்டுப்படுத்தவும் முடிந்தால், அவன் நன்கு நிலைபெற்றவனாவான். இவ்வுலகிலேயே அவன் மகிழ்ச்சியுடன் இருப்பான்.
ப.கீ 5.24
யோ (அ)ந்த꞉- ஸுகோ (அ)ந்தர் ஆராமஸ் ததாந்தர்-ஜ்யோதிர் ஏவ ய꞉
ஸ யோகீ ப்ரஹ்ம-நிர்வாணம் ப்ரஹ்ம-பூதோ (அ)திகச்சதி
ய: – எவனொருவன்; அந்த:-ஸுக: – தனக்குள் சுகமாக; அந்த:-ஆராம – தனக்குள் செயல்பட்டு இன்புறுதல்; ததா — கூட; அந்த:-ஜ்யோதி: — தனக்குள் பார்ப்பவன்; ஏவ – நிச்சயமாக; ய: — எவனொருவன்; ஸ: – அவன்; யோகீ – யோகி; ப்ரஹ்ம-நிர்வாணம் – பரத்தில் முக்தி; ப்ரஹ்ம-பூத: – தன்னுணர்ந்த நிலையில்; அதிகச்சதி — அடைகின்றான்.
எவனொருவன் தனக்குள் சுகமாக உள்ளானோ, தனக்குள் செயல்பட்டு இன்புறுகின்றானோ, தனக்குள் பார்வையை செலுத்துகின்றானோ, அவனே உண்மையில் பக்குவமான யோகியாவான். அவன் பரத்தில் முக்தி பெற்று பரத்தையே அடைகின்றான்.
ப.கீ 5.25
லபந்தே ப்ரஹ்ம-நிர்வாணம் ருஷய꞉ க்ஷீண-கல்மஷா꞉
சின்ன-த்வைதா யதாத்மான꞉ ஸர்வ-பூத-ஹிதே ரதா꞉
லபந்தே – அடைகின்றான்; ப்ரஹ்ம-நிர்வாணம் – பரத்தில் முக்தி; ரு’ஷய: – தனக்குள் செயல்படுவோர்; க்ஷீண-கல்மஷா: – எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டவன்; சின்ன — கிழித்தெறிந்து; த்வைதா: – இருமை; யத-ஆத்மான: — தன்னுணர்வில் ஈடுபட்டவன்; ஸர்வ-பூத – எல்லா உயிர்களின்; ஹிதே – நலச் சேவையில்; ரதா: – ஈடுபடுகின்றான்.
யாரெல்லாம் சந்தேகத்தினால் எழும் இருமைகளுக்கு அப்பாற்பட்டுள்ளனரோ, மனதை உள்நோக்கி ஈடுபடுத்தியுள்ளனரோ, மற்ற உயிர்வாழிகளின் நலனிற்காக பாடுபடுவதில் எப்போதும் முனைப்புடன் உள்ளனரோ, எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டுள்ளனரோ, அவர்கள் பரத்தில் முக்தியடைகின்றனர்.
ப.கீ 5.26
காம-க்ரோத -விமுக்தானாம் யதீனாம் யத-சேதஸாம்
அபிதோ ப்ரஹ்ம-நிர்வாணம் வர்ததே விதிதாத்மனாம்
காம – காமத்திலிருந்து; க்ரோத – கோபம்; விமுக்தானாம் — முக்தியடைந்தவர்களில்; யதீனாம் — புனிதமானவர்களில்; யத-சேதஸாம் — மனதை முழுதும் அடக்கியவரில்; அபித: — வெகு விரைவில் உறுதி செய்யப்படுகிறான்; ப்ரஹ்ம-நிர்வாணம் – பரத்தில் முக்தி; வர்ததே – உண்டென்று; விதித-ஆத்மனாம் – தன்னுணர்வை அடைந்தோரில்.
யாரெல்லாம் கோபத்திலிருந்தும் எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் விடுபட்டுள்ளனரோ, தன்னுணர்வும் தன்னொழுக்கமும் நிறைந்து பக்குவத்தை அடைவதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்கின்றனரோ, அவர்கள், கூடிய விரைவில் பரத்தில் முக்தியடைவது உறுதி.
ப.கீ 5.27 – 5.28
ஸ்பர்ஷான் க்ருத்வா பஹிர் பாஹ்யாம்ஷ்
சக்ஷுஷ் சைவாந்தரே ப்ருவோ꞉
ப்ராணாபானௌ ஸமௌ க்ருத்வா
நாஸாப்யந்தர-சாரிணௌ
யதேந்த்ரிய-மனோ-புத்திர் முனிர் மோக்ஷ-பராயண꞉
விகதேச்சா-பய-க்ரோதோ ய꞉ ஸதா முக்த ஏவ ஸ꞉
ஸ்பர்ஷான் – சப்தம் முதலான புலன் விஷயங்கள்; க்ரு’த்வா – வைத்து; பஹி: – வெளியில்; பாஹ்யான் — தேவையற்ற; சக்ஷு: – கண்கள்; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; அந்தரே – மத்தியில்; ப்ருவோ – புருவங்கள்; ப்ராண-அபானெள – மேல்நோக்கி இயங்கும் காற்றும், கீழ்நோக்கி இயங்கும் காற்றும்; ஸமௌ – நிறுத்தலில்; க்ருத்வா — வைத்து; நாஸ-அப்யந்தர — நாசித் துவாரங்களுக்குள்; சாரிணௌ – வீசும்; யத – கட்டுப்படுத்தப்பட்ட; இந்த்ரிய – புலன்கள்; மன: – மனம்; புத்தி: – புத்தி; முனி: – ஆன்மீகவாதி; மோக்ஷ – முக்திக்கு; பராயண: — தீர்மானிக்கப்பட்டு; விகத – விலக்கி; இச்சா – ஆசைகள்; பய – பயம்; க்ரோத — கோபம்; ய: – எவனொருவன்; ஸதா – எப்போதும்; முக்த: – முக்தி பெற்றவன்; ஏவ – நிச்சயமாக; ஸ:- அவன்.
எல்லாப் புறப்புலன் விஷயங்களையும், வெளியே நிறுத்தி, புருவ மத்தியில் கண்களையும், பார்வையையும் நிறுத்தி, நாசிக்குள் உள், வெளி சுவாசங்களை நிறுத்தி, மனம், புலன்கள் அறிவு இவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய முக்தியை விரும்பும் ஆன்மீகவாதி, ஆசை, பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபடுகிறான். எப்போதும் இந்நிலையில் இருப்பவன் நிச்சயமாக முக்தியடைந்தவனே.
ப.கீ 5.29
போக்தாரம் யக்ஞ-தபஸாம் ஸர்வ-லோக-மஹேஷ்வரம்
ஸுஹ்ருதம் ஸர்வ-பூதானாம் க்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி
போக்தாரம் — அனுபவிப்பவன்; யஜ்ஞ – யாகங்கள்; தபஸாம் – தவங்கள்; ஸர்வ-லோக – எல்லா லோகங்களும் அங்குள்ள தேவர்களும்; மஹா-ஈஷ்வரம் – உயர் அதிகாரி; ஸு-ஹ்ரு’தம் – உற்ற நண்பன்; ஸர்வ – எல்லா; பூதானாம் – உயிர்வாழிகள்; ஜ்ஞாத்வா — என்று அறிந்து; மாம் – என்னை (பகவான் கிருஷ்ணர்); ஷாந்திம் – உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை; ருச்சதி – அடைகிறான்.
நானே, எல்லா யாகங்களையும், தவங்களையும், இறுதியில் அனுபவிப்பவன் என்றும், எல்லா லோகங்களையும், தேவர்களையும், கட்டுப்படுத்துபவன் என்றும், எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன் என்றும் அறிந்து, என்னைப் பற்றிய முழு உணர்வில் இருப்பவன், ஜடத் துயரங்களிலிருந்து விடுபட்டு அமைதி அடைகிறான்.