கண்ணன் வருகின்ற நேரம்
பல்லவி
கண்ணன் வருகின்ற
நேரம் – கரையோரம்
தென்றல் கண்டு
கொழித்தது பாரும்
கண்ணன் வருகின்ற
நேரம் – கரையோரம்
தென்றல் கண்டு
கொழித்தது பாரும்
கானத்திடை மோனக்குயில்
ஓசைக்கிணையானத்தரம்
ஆனக் குழலிசை கேளும் போன
ஆவியெல்லாம் கூட மீளும்.
கானத்திடை மோனக்குயில்
ஓசைக்கிணையானத்தரம்
ஆனக் குழலிசை கேளும் போன
ஆவியெல்லாம் கூட மீளும்.
சரணம் 1
சல்லச்சலனமிட்டோடும்
நதி பாடும்
வனம் தங்கி தங்கிச் சுழன்றாடும் –
சல்லச்சலனமிட்டோடும்
நதி பாடும்
வனம் தங்கி தங்கிச் சுழன்றாடும்
நல்ல துதி பாடிடும்
அடியாரவர் மனமானது
இது போல் என
துள்ளி துள்ளிக் குதித்தோடும்
புகழ் சொல்லிச் சொல்லி
இசை பாடும்
நல்ல துதி பாடிடும்
அடியாரவர் மனமானது
இது போல் என
துள்ளி துள்ளிக் குதித்தோடும்
புகழ் சொல்லிச் சொல்லி
இசை பாடும்
கண்ணன் வருகின்ற
நேரம் – கரையோரம்
தென்றல் கண்டு
கொழித்தது பாரும்
சரணம் 2
கண்ணன் நகை
போலும் முல்லை
இணை இல்லை என்று
கண்டதும் வண்டொன்றும் வல்லை
கண்ணன் நகை
போலும் முல்லை
இணை இல்லை என்று
கண்டதும் வண்டொன்றும் வல்லை
இது கனவோ அல்ல நனவோ
எனக் கருதாதிரு மனமே
ஒரு காலமும் பொய்யொன்றும்
சொல்லேன்
எங்கள் கண்ணனன்றி
வேறு இல்லேன்
இது கனவோ அல்ல நனவோ
எனக் கருதாதிரு மனமே
ஒரு காலமும் பொய்யொன்றும்
சொல்லேன்
எங்கள் கண்ணனன்றி
வேறு இல்லேன்
கண்ணன் வருகின்ற
நேரம் – கரையோரம்
தென்றல் கண்டு
கொழித்தது பாரும்
சரணம் 3
தாழை மடல் நீத்து நோக்கும்
முல்லைப்பார்க்கும் என்ன
சௌக்கியமோ என்று கேட்கும்
தாழை மடல் நீத்து நோக்கும்
முல்லைப்பார்க்கும் என்ன
சௌக்கியமோ என்று கேட்கும்
அட மொழி பேசிட எதுவும்
பொழுதெனவே அதோ வரும்
மாதவன் முத்து
முடியினில் சேர்வோம் –
அங்கே மெத்த
மெத்தப்பேசி நேர்வோம்
அட மொழி பேசிட எதுவும்
பொழுதெனவே அதோ வரும்
மாதவன் முத்து
முடியினில் சேர்வோம் –
அங்கே மெத்த
மெத்தப்பேசி நேர்வோம்
கண்ணன் வருகின்ற
நேரம் – கரையோரம்
தென்றல் கண்டு
கொழித்தது பாரும்
** ஹரே கிருஷ்ணா **

