நீலவானம் போலிலங்கி - காவடி சிந்து

(ஊத்துக்காடு வேங்கட கவி)

(1)
நீலவானம் போலிலங்கி
நெற்றியிடைச் சந்தனத்தின்

நீலவானம் போலிலங்கி
நெற்றியிடைச் சந்தனத்தின்

நேர்த்தியாய் திலகம்
ஒளி வீசுதே –
கண்ட நெஞ்சமோடு
அந்தரங்கம் பேசுதே

நீலவானம் போலிலங்கி
நெற்றியிடைச் சந்தனத்தின்
நேர்த்தியாய் திலகம் ஒளி வீசுதே –
கண்ட நெஞ்சமோடு
அந்தரங்கம் பேசுதே

நேசமாய் உரு வாசமாமலர்
ஆசையாய் ப்ரகாசமாகவும்

நேசமாய் உரு வாசமாமலர்
ஆசையாய் ப்ரகாசமாகவும்

நின்று நின்று காண
ஆசையாகுதே –
இந்த நேரம் கூட
ஊழிபோலே தோணுதே

நேசமாய் உரு வாசமாமலர்
ஆசையாய் ப்ரகாசமாகவும்
நின்று நின்று காண
ஆசையாகுதே –
இந்த நேரம் கூட
ஊழிபோலே தோணுதே

(2)
பாதகம் தண்டைக் கொலுசும்
பாதகங்கணச் சிலம்பும்

பாதகம் தண்டைக் கொலுசும்
பாதகங்கணச் சிலம்பும்

பண்ணும்
தவ பேரிகை முழங்குதே –
புகழ் பாடும் நாலு
வேதமும் மயங்குதே
பங்கயத்திரு மங்கையர்க்கொரு
பங்கையிற்றெழிலங்கையிற்றகு

பங்கயத்திரு மங்கையர்க்கொரு
பங்கையிற்றெழிலங்கையிற்றகு
மான சந்தரக் காடென விளங்குதே –
மனம் மங்கி நின்ற ஞானமும் துலங்குதே

(3)
சந்தனப் பேழை புறத்து
சாயலிற்ற தன்மை ஒத்து

சந்தனப் பேழை புறத்து
சாயலிற்ற தன்மை ஒத்து

தக்கநின்ற ஓர சாயக்
கொண்டையும்
தாவி தாவித்தாவி துள்ளும்

விழிக் கெண்டையும்
தந்தனத்தன –
தந்தனத்தன – தந்தனத்தன
தந்தனத்தன – தந்தனத்தன –
தந்தனத்தன – தந்தனத்தன
தந்தனத்தன தான
மீவதான பாதத்
தண்டையும்-கண்டு
தாறுமாறாய்ப்போச்சு
மாயச்சண்டையும்

கண்டு தாறுமாறாய்ப்போச்சு
மாயச்சண்டையும்

கண்டு தாறுமாறாய்ப்போச்சு
மாயச்சண்டையும்

** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare