திருச்சந்தவிருத்தம்
(திருமழிசைப்பிரான்)
ஸர்வ-த⁴ர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஶரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்⁴யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச(ஹ)
உலகு தன்னை, நீ படைத்தி – உள் ஒடுக்கி வைத்தி * மீண்டு
உலகு தன்னுளே பிறத்தி – ஓரிடத்தை அல்லையால் **
உலகு நின்னொடு, ஒன்றி நிற்க – வேறு நிற்றி ஆதலால் *
உலகில் நின்னை உள்ள, சூழல் – யாவர் உள்ள வல்லரே?
உலகில் நின்னை உள்ள, சூழல் – யாவர் உள்ள வல்லரே?
தூய்மை யோகம் ஆயினாய்! – துழாய் அலங்கல் மாலையாய் ! *
ஆமையாகி ஆழ்கடல் துயின்ற – ஆதி தேவ ! ** நின்
நாமதேயம், இன்னகது என்ன – வல்லம் அல்ல ஆகிலும் *
சாம வேத கீதானாய – சக்ரபாணி அல்லையே?.
சாம வேத கீதானாய – சக்ரபாணி அல்லையே?.
அங்கம் ஆறும், வேதம் நான்கும் – ஆகி நின்று அவற்றுளே *
தங்குகின்ற தன்மையாய் ! – தடங்கடல் பணத்தலை **
செங்கண் நாகணைக் கிடந்த – செல்வம் மல்கு சீரினாய்! *
சங்கவண்ணம் அன்ன மேனி – சார்ங்கபாணி அல்லையே?
சங்கவண்ணம் அன்ன மேனி – சார்ங்கபாணி அல்லையே?
கங்கை நீர் பயந்த பாத – பங்கயத்து எம் அண்ணலே ! *
அங்கை ஆழி சங்கு தண்டு – வில்லும் வாளும் ஏந்தினாய்! **
சிங்கமாய தேவதேவ! – தேன் உலாவு மென் மலர் *
மங்கை மன்னி, வாழு மார்ப! – ஆழி மேனி மாயனே!
மங்கை மன்னி, வாழு மார்ப! – ஆழி மேனி மாயனே!
படைத்த பார் இடந்து அளந்து – அதுண்டு உமிழ்ந்து பௌவநீர் *
படைத்து அடைத்து அதிற்கிடந்து – முன்கடைந்த பெற்றியோய்! **
மிடைத்த மாலி மாலிமான் – விலங்கு காலன்-ஊர் புக *
படைக்கலம் விடுத்த – பல்படைத் தடக்கை மாயனே!.
படைக்கலம் விடுத்த – பல்படைத் தடக்கை மாயனே!.
சரங்களைத் துரந்து – வில் வளைத்து இலங்கை மன்னவன் *
சிரங்கள், பத்தறுத்து உதிர்த்த – செல்வர் மன்னு பொன்னிடம் *
பரந்து பொன் நிரந்து நுந்தி – வந்து அலைக்கும் வார்புனல் *
அரங்கம் என்பர் நான்முகத்து – அயன் பணிந்த கோயிலே.
அரங்கம் என்பர் நான்முகத்து – அயன் பணிந்த கோயிலே.
வெற்பு எடுத்து வேலை-நீர் – கலக்கினாய் அது அன்றியும் *
வெற்பு எடுத்து வேலை-நீர் – வரம்பு கட்டி வேலை சூழ் **
வெற்பு எடுத்த இஞ்சிசூழ் – இலங்கை கட்டழித்த நீ *
வெற்பு எடுத்து மாரி காக்து – மேக வண்ணன் அல்லையே?
வெற்பு எடுத்து மாரி காக்து – மேக வண்ணன் அல்லையே?
ஆதி ஆதி ஆதி நீ – ஓர்அண்டம் ஆதி ஆதலால் *
சோதியாத சோதி நீ – அது உண்மையில் விளங்கினாய் **
வேதமாகி வேள்வியாகி – விண்ணினோடு மண்ணுமாய் *
ஆதியாகி ஆயனாய – மாயம் என்ன மாயமே?.
ஆதியாகி ஆயனாய – மாயம் என்ன மாயமே?.
அச்சம் நோயொடு அல்லல், பல் பிறப்பு – ஆய மூப்பு இவை *
வைத்த சிந்தை, வைத்த ஆக்கை – மாற்றி வானில் ஏற்றுவான் **
அச்சுதன் அனந்த கீர்த்தி – ஆதி அந்தம் இல்லவன் *
நச்சு நாகணைக் கிடந்த – நாதன் வேத கீதனே.
நச்சு நாகணைக் கிடந்த – நாதன் வேத கீதனே.
** ஹரே கிருஷ்ணா **

